இன்றைய அறிவியல் வளர்ச்சி மற்றும் மக்களின் சிந்திக்கும் மற்றும் கேள்வி கேட்கும் திறணை எதிர் கொள்ள மதங்கள் திணறியே வருகின்றன, இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு இல்லை. மரபணு பற்றி இன்றைக்கு மிகவும் பேசப்படுவதால் இவற்றை மதங்களின் கருத்துகள் எவ்வாறு முடிந்து கொள்கின்றன என்று பார்ப்போம்
******
மரபணு இல்லாமல் ஆதாம் ஏவாள் பிறந்திருக்க முடியுமா ? என்ற கேள்விக்கு ஒரு கிறிஸ்துவ இணைய தளம், ஆம் என்கிறது, களிமண்ணால் படைக்கப்பட்டதாக நம்பம்ப்படும் ஆதம் ஏவாளுக்கு தாய் வழி இயற்கையான பிறப்பு அமையாததால் கருவரையில் இருந்து பிறக்கும் அடையாளமாக தொப்புள் இருக்காது என்பதுடன் மரபணுவும் இருக்காது என்கிறார்கள், நான் பார்த்த வரையில் ஆதாம் ஏவாள் படங்களில் தொப்புளும் சேர்ந்தே வரையப்பட்டுள்ளது இதற்கு முரணாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மரபணு இல்லாமல் படைக்கப்பட்ட ஒருவரின் வாரிசுகளுக்கு மரபணு எப்படி ஏற்படும் ? இன்றைய க்ளோனிங்க் போல் நகலெடுக்கும் உருவமாக ஆதமின் வார்சிகள் ஆதாமைப் போல் தான் இருந்திருப்பார்கள், இவர்களுக்குள் (வாரிசுக்குள்) அண்ணன் தங்கையை திருமணம் செய்வது தவிர்க்க முடியாது என்றாலும் மரபணு குறைபாடுகளுடன் குழந்தைப் பிறக்காதா என்கிற கேள்வியை அவர்களே கேட்டு பதிலும் சொல்லி உள்ளனர்.
கேள்வி: காயீனின் மனைவி யார்? காயீனின் மனைவி அவனது சகோதரியா?
பதில்: காயீனின் மனைவி யாரென்பதை வேதாகமம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அவனது சகோதரியோ, மருமகளோ அல்லது பேத்தியோ போன்றவர்தாம் காயீனின் மனைவியாக இருந்திருக்க முடியும் என்ற ஒரே பதில்தான் இங்கு சாத்தியம். காயின் ஆபேலைக் கொலை செய்தபோது (ஆதியாகமம் 4:8) அவனது வயது என்ன என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை. இருவரும் விவசாயிகள் என்பதனால் இருவரும் வயது வந்தவர்கள் எனலாம். சொந்தக் குடும்பமும் இருந்திருக்கலாம். ஆபேல் கொலை செய்யப்பட்டபோது, காயீனையும் அபேலையும் தவிர ஆதாமுக்கும் ஏவாளுக்கும் வேறு குழந்தைகளும் இருந்தார்கள் என்பது தெளிவு. நிச்சயமாகவே பின்பு இன்னும் பல குழந்தைகளைப் பெற்றார்கள் (ஆதியாகமம் 5:4). ஆபேலைக் கொலை செய்தபின் காயீன் தன் உயிருக்குப் பயந்திருந்தான் (ஆதியாகமம் 4:14) என்னும் உண்மை அப்பொழுதே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மேலும் பல குழந்தைகள் இருந்திருப்பார்கள், சொல்லப்போனால் பேரக்குழந்தைகளும் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. காயீனின் மனைவி (ஆதியாகமம் 4:17) ஆதாம் ஏவாளுடைய மகளோ அல்லது பேத்தியோதான்.
(அந்தரத்தில் தாடியோடு இருப்பவர் கடவுள், அவரைச் சுற்றி இருப்பவர்கள் தேவ தூதர்கள்)