Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!


Guru

Status: Offline
Posts: 7602
Date:
இயேசு- தேவ குமாரனா?- இல்லையே!
Permalink  
 


 பொ.கா.முதல் நூற்றாண்டில் ரோமன் ஆட்சி இஸ்ரேலை அடிமைப்படுத்தி ஆண்டுவந்தபோது, ஆட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சி செவோருக்கு த்ரப்படும் தூக்குமரத்தில் தொஙும் தண்டனையால் இறந்த்தானவர் இயேசு எனப்படும்- கிறிஸ்துவ மதக் கதைகளின் நாயகர். இவர் காலகட்டத்தை ஒட்டி வாழ்ந்த யூத, ரோமன், எகிப்திய ஆசிரியர்கள் எழுதிய நூல்கள் எதிலும் இவர் பெயர்- இயக்கம் பற்றி குறிப்பிடப்படவில்லை.முதல் நூற்றாண்டு இறுதியில் ரோமன் எழுதிய குறிப்புகள் என்று இன்று காட்டுபவை ஏது வெரும் இடைசெருகள்கள் எனத் தெளிவாக்கப்பட்டவையே ஆகும்.

 

சுவிசேஷங்கள் தரும் கதைப்படி- ரோமன் கவர்னர் விசாரணைக்குப்பின் தன் கைப்பட நிருபிக்கப்பட்ட குற்றத்தை குற்ற அட்டையில் எழுதி தொங்கவிட்டர்-" நசரேயன் இயேசு- யூதர்களின் ராஜா" என.

 

இறந்த ஏசு தன்னை - கிறிஸ்து என்னும் யூதர்களின் ராஜா என்பதாக சொல்லிக் கொண்டார். சுவிசேஷங்கள் முழுதும் இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனப் பார்த்தார். இயேசுவை நேரில் அறியாத பவுலும், இறந்த ஏசு உயிர்த்து காட்சி தர மதம் மாறியதாக கதை. இவர் இரண்டாவது வருகை தன் வாழ்நாளில்- உலகம் அழியும் என்றே மதம் ஆரம்பித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 

 அடுத்து வரும் புனையல் 

யோவான்1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

 

வேறொரு மொழிபெயர்ப்பு

யோவான்1:18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். 

மூல கிரேக்கச் சொல் மோனோகெனஸ்-monogenus

Greek is 'monogenus'. Mono means 'one' and genus means 'species' or 'type' or 'kind'. It is worth noting that the word is monogenus, notmonogenesis (which would mean came from one source, rather than of a unique kind). 

 

 ஒரு தன்மையிலான, அல்லது தனிதன்மையிலான என்பதான சொல்லே யோவான் சுவி பயன்படுத்தியுள்ளது.

 

 

 

5ம் நூற்றாண்டில் ஜெரோம் லத்தீன் வல்காத்து மொழிபெயர்ப்பில் மாற்றித் தவறாக மொழி பெயர்த்ததே - "ஒன்ல்ய் பெகொட்டென்"; மோனோகெனஸ் எனில் லத்தீனில் யுனீக் என ஆகும் ஆனல் அவர் யுனிகஸ் எனத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இதே மோனோகெனஸ் மேலும் பல இடங்களில் புதிய ஏற்பாட்டில் வரும்போது சரியான பொருள் தரும்படியாக மொழிபெயர்க்கின்றனர்.

 

 

 

மூல கிரேக்கத்தில் "ஒரேபேறான " இல்லவே இல்லை.

 


 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

இதை பல்வேறு பைபிள் கலைகளஞ்சியங்கள், அகராதிகள் துணையோடு எழுதுகிறோம்.

 

1. ஆன்கர் பைபிள் டிக்சனரி

2. நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம்

3. இன்டர்பிரட்டர் பைபிள் டிக்சனரி

 

சரி மத்தேயு- லூக்காவின் முதல் அத்தியாயங்கள் தன்மை என்ன?

 

மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

மத்தேயு 13:54 தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். 

?55 இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?56 இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? 

மாற்கு 3: 20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.


http://home.sprynet.com/~pabco/djhbas.htm



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 பவுல் - இயேசுவை தாவிதின் பரம்பரையில் வந்தவர் எனத் தெளிவாகச் சொல்கிறார்.

 

ரோமன் 1: 3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்

கலாத்தியர் 4:.4 ஆனால் காலம் நிறைவேறியபோது நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் நியாயப் பிராமணங்களுக்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

 

 நியாயப் பிராமணங்களில் எங்கும் கடவுள் மனிதனாகப் பிறத்தல் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் மோசேயின் 10 கற்பனை என யாவே தந்ததில் என் பெயரை வீணில் உச்சரிக்க வேண்டாம்.

கடவுளை அனாவசியமாக பெயரைக் கூடச் சொல்லக் கூடாது. அவர் மனிதனாகப் பிறத்தல் கிடையாது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

உலகம் அழியப் போகிறது- அழியுமுன் கடைசி தலைமுறையில் சிறு தெய்வம் யாவே-கர்த்தர் தேர்ந்தெடுத்த நாடான இஸ்ரேலை தேர்ந்தெடுத்த மக்களில் ஆட்சி உரிமை உள்ள யூதா ஜாதியில் தாவீது வாரிசு மகன் ஆட்சியை மீட்டு கணக்கெடுப்பு நாளில் இஸ்ரேலியரின் 12 கோத்திரத்தாரையும் தலைமை தாங்கி வழி நடத்துவார் என்பது- மேசியா கிறிஸ்து என்னும் நம்ப்பிக்கையாளரின் ஊகக் கோட்பாடு.

இயேசு இதை நம்பினார், ரோமன் ஆட்சியில் தூக்குமரத்தில் தொங்கியபோது கடைசியான வாக்கு மூலம் -அலறல்

மாற்கு:15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.

 

இது மட்டுமே ஏசு மரணத்தின் 40 வருடம் பின்பு முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிசேஷம் சொல்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 கிறிஸ்து எனில் யூதர்களின் ராஜா- தாவீது பரம்பரையின் மகன் மட்டுமே. இதனை மேலுமாக நீட்டி தெய்வீகர் என புனைந்து யூதரல்லாதோரிடம் சென்று காசு பார்த்தார் பவுல். முதலில் எழுதிய மாற்கு சுவி கதையில் ஏசு பிறப்பு கிடையாது, மாற்கு சுவி அடிப்படையை அப்படியே ஏற்று புனைந்தவை மத்தேயுவும் லூக்காவும், இவைகளில் ஏசு பிறப்பு அதில் அதிசயம், அதாவது திருமணத்திற்கு முன்பே ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரி கன்னியான நிலையில் கர்ப்பமானதாகக் கதை. கடைசியில் சர்ச் பாரம்பரியம்படியே பொ.கா.98ல் டிராஜன் ரோமன் மன்னனாபின் எழுதிய யோவான் சுவியில் கன்னி கருத்தரித்தல் கிடையாது.

 

சுவிசேஷக் கதாசிரியர்கள் நடந்ததை உண்மையாக எழுதினார்களா?

 மாற்கு ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கிறார். 40 நாள் உபவாசம் எனச்செல்ல, உடனே யோவான் கைதாக கலிலேயா வந்து அங்கே சீடர்களை தேர்ந்தெடுத்து இயக்கம் ஆரம்பிக்கின்றார். சீடர்களோடு கலீலேயாவில் மட்டும் இயங்க, அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு, கதைப்படி எபிரேயர்களின் முதல் குழந்தைகளை மட்டும் கர்த்தர் கொன்றதற்கு நன்றியாக வருடாவருடம் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான யூதேயாவின் ஜெருசலேம் ஆலயத்தில் ஆடு கொலை செய்து பலிதர வந்தொபோது கைதாகி மரண தண்டனையில் இறந்தார்.

அதாவது இயேசு சீடர்களோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு, முதல் பஸ்கா பண்டிகைக்கு வந்த பின் பாவமன்னிப்பு திருமுழுக்கு பெற்றிருந்தால் - ஒரு வருடத்திற்கு ஒன்றிரண்டு நாள் குறைவு. அதிலும் க்டைசி வாரம் செவ்வாய்கிழமை தான் யூதேயவிற்குள் நுழைகிறார், வியாழன் இரவு கைதாகி வெள்ளி அன்று மரண தண்டனை என்கிறார். யூதேயா ரோமன் ஆட்சி, கலிலேயா - ஏரோது ஆட்சி. 

 

ஆனால் நான்காம் சுவி- 3 பஸ்கா பண்டிகைகளையும் அதற்கு ஏசு ஜெருசலேம் செல்வதாகவும் கதை சொல்கிறார். அதிலிம் கடைசி ஆண்டில் எபிரேயர்களின் 3 பண்டிகைகளுக்கும், கூடாரம், மறுஅர்ப்பணிப்பு, மற்றும் பஸ்கா அதாவது செப்டெம்பர் மாதம் முதல் ஏப்ரல் வரை கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் எனத் தெளிவாகச் சொல்கிறார். அதே போலா ஏசுவைக் கைது செய்தது ரோமன் படைத்தலைவர்ம் ரோமன் படைவீரர்களும் என்கிறார்.

 

மாற்கு வேண்டுமென்றே இவற்றை விட்டுள்ளார். அல்லது யோவன் சுவிசேஷம் பொய். எனவே சுவிசேஷங்களை நம்பிக்கைகு ஏற்றது இல்லை எனலாம். ஆனாலும் சுவிசேஷ அடிப்படையிலேயே ஏசு தெய்வீகமானவரா எனப் பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

இயேசு சொன்னார், வானத்திலிருந்து கர்த்தரு தந்ததான மன்னாவை சாப்பிட்டவர்கள் மரணமடைந்தார்கள். என்னை உண்பவர்களுக்கு மரணமில்லையென.

யோவான் -அதிகாரம் 6

31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசு அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்
49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.51 ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.


இயேசு கதைப்படி உயிர்த்தெழுந்த பின்பு பற்றி கூறி உள்ளதாக  இரண்டாம் நுற்றாண்டில் புனையப்பட்டதான யோவன் சுவியின் கடைசி வாசகங்கள். அதாவது அப்பொழுதும் உலகம் அழியும் என்னும் நம்பிக்கை தொடர்ந்தது.
யோவான்21:20பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

யோபு 25 :4. இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி 5. சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 6. புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.

 

ஆதாமின் பாவம் காரணமாக மரணமாம். பூமியில் மரணத்திற்கு காரணமான ஆதி பாவம் நீங்கியது என்றால் யாரும் மரணம் அடையக் கூடாது. தண்டனைக்கு உரிய அபராதம் கட்டிவிட்டால் விடுதலை தானே?

 

உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

சுவிசேஷக் கதாசிரியர்கள் இயேசு சீடர்களொடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை. இவற்றை மறைக்கும் சர்ச் மிகவும் விளம்பரம் செய்யும் கதை- இயேசுவின் தாய் கன்னி என்னும் நிலையில் கர்ப்பமாகி இயேசுவை பெற்றெடுத்தார் என்னும் கதை.



 மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்
 லூக்கா விருப்பப்படியான            சுவிசேஷம்                  
2:1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்.
2: 1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
  1:16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
 3:23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்
 1:19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்
1: 26 ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார்.footnote.jpg29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்

Mother-Mary-and-Angel-02-225x300.jpg
 மேலுள்ளதில் உள்ள சிறு விவரத்தை ஆராய்வோம்.
மாற்கு சிவிசேஷத்தில், முதலில் புனையப்பட்டது; பேதுருவின் சீடருக்கு இது தெரியாது. இயேசுவின் அன்புச் சீடர் எனப்படும் யோவான் சுவிப் புனையலிலும் கன்னி பிறப்பு இல்லை.

பேதுருவின் மரணத்திற்குப் பின் 64-67க்குப் பின் மாற்கு; ரோம் மன்னன் ட்ராஜான் (பதவி ஏற்பு- 98) ஆட்சியில் வரையப்பட்டது யோவான் சுவி.

சீடர்களிடம் இக்கதை இல்லை என்பதை தெளிவாக உணர்த்தும்.

மத்தேயு கதையில் யாக்கோபு மகன் பெத்லஹெம் ஜோசப் கனவில்.

லூக்காவிலோ ஏலி மகன் நாசரேத் வாழ் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மரியாளிடம் நேரில்


சர்ச் பாரம்பரியப்படி தந்தை ஜோசப் பொ.கா. 20 வாக்கிலும், தாய் மேரி 48லும் மரணம். 67 ல் மரணம் அடைந்த பேதுரு  ல் மரணம் அடைந்த சீடன் மாற்கு மற்றும் 110ல்யோவானுக்கு தெரியாத இந்தக் கதை கதாசிரியர்களுக்கு சொன்னது?

யாக்கோபு மகன் பெத்லஹெம் வாழ் ஜோசப்பா -  ஏலி மகன் நாசரேத் வாழ் ஜோசப்பா என்பதே தெரியாத சுவி கதாசிரியர்கள் சொல்வதை நியாயமாக நடுநிலை பைபிள் அறிஞர்கள் கூட ஏற்க வில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 நியு கத்தொலிக்க கலைகளஞ்சியம் சொல்வது என்ன்வெனில்

 

மத்தேயு, லூக்கா சுவிசேஷங்களின் முதல் அத்தியாயங்கள் "குழந்தைப் புனையல்கள்" எனப்படும் இவை- சர்ச் பாரம்பரியப்படியான செவிவழி மூலக் கதை-  ஏசு ஞானஸ்நான யோவான் யூதேயா வனாந்தரத்தில் பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானம் பெருதலில் தொடங்கி ஈஸ்டர் ஞாயிறு அன்றே உயிர்த்து எழுந்து வானுலகம் எடுத்துக் கொள்ளப்பட்டார் என்பது மட்டுமே, இவை எல்லாம் பிற்சேர்க்கை.

 

அதே போல ஏசுவின் சகோதரர்கள்- சகோதரிகள் என்பதற்கு பயன்படுத்தியுள்ள மூலச் சொல் - ரத்த முறையில் உடன் பிறந்த உறவைகளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லே கூறியுள்ளார். மூல கிரேக்கத்தில் படித்தவர்கள் அப்படித்தான் உணர்ந்திருப்பர்.

மேலும் இயேசு சீடர்கள், ஜெருசலேமில் அமைத்த சர்ச்சிற்கு உடன் பிறந்த சகோதரர் யாக்கோபு தான் தலைமை ஏற்றார். அவரைத் தொஅடர்ந்து இரண்டாம் நூற்றாண்டுவரை அப்படியே தொடந்த்தது. இவர்களை எபோனியர் என அழைக்கின்றனர். கிறிஸ்து என்னும் கடைசி தலைமுறை தாவிது வாரிசு- மகன் அக்குடும்பத்தில் தான் எனத் தலைமை அவர் சகோதரர் சந்ததியிடம் இருந்தது.

 

எபோனியர்கள் கன்னிபிறப்பை ஏற்கவில்லை. இயேசுவை ஒரு தீர்க்கர் என்றே ஏற்றனர்.

 

 Mary=Joseph                                   Cleopas=Mary
     |                                                |
     |______________________________________          |
          |     |     |     |      |      |           Simeon
          |     |     |     |      |      |           d. 106
    Jesus James Joses Simon Sister Sister Jude
          d.62                             |
            |                            Menahem
          Jude                           ____|____
            |                            |        |
         Elzasus                       James     Zoker
            |                                 ?
          Nascien                             |
                                             Bishop Judah Kyriakos
                                         fl.c.148-149.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 நாம் மேலே பார்த்தவை முழுதும் மூல புதிய ஏற்பாட்டில் தான், அதிலும் கூட 

 

யோவான்8: 41 நீங்கள் உங்கள் தந்தையைப் போலச் செயல்படுகிறீர்கள் ' என்றார். அவர்கள், ' நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு;

யோவான்8: 41. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்கு உண்டு.

 

இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை

 

Prof: A.C.Bouquet-Cambridge Professor of History and comparitive Religions in his book -"Comparitive Religion"

 

"It is now plain from the analysis of the documents that even during his life-time there was never a point when it could be said with certainity that the Gospel was purely announcement made by Jesus, and not also announcement about Jesus."- page 233.

The development of a malicious Jewish report that Jesus was the illegitimate son of Mary and a Roman Soldier appears about at the same time.... there may be covert reference to it in the fourth gospel (8:41) which is a debate about A.D.100. page- 237

 

இந்த வசனம் இயேசுவின் தாய் முறையாகப் பெறவில்லை காண்கிறோம் 

 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாறு மற்றும் மதங்கள் பேராசிரியர் பௌக்கட் சொல்கிறார்.

 

நற்செய்தி என்பது கிறிஸ்துவ பைபிள்படியே இயேசுவின் இயக்கத்தின் போது ஒரு சமயத்தில் கூட இயேசு ச்றிவித்தது என்றோ, ஏன் நற்செய்தி என்பது ஏசுவைக்குறித்தான அறிவிப்பு எனக் கொள்ளவோ வழி இல்லை.

யூதர்களிடம் மேரி ஒரு ரோம வீரனிடம் முறையற்று பெற்ற மகன் என்னும் குறிப்புகள் அதே சமயத்தில் தோன்றின- இவற்றின் எதிரொலி நாம் 100 வாக்கில் வரையப்பட்ட யோவான்8: 41 காண்கிறோம் என்கிறார்.

 

நாம் மேலும் ஆராய்ந்தால், மேரி ஓர் இருளில் ரோம் வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம் வீரன் பெயர் பேந்தர் என பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி யூதர்களால் எழுதப்படும் "புனித தாலுமூது" தெரிவிக்கின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 

நாம் மேலும் ஆராய்ந்தால், மேரி ஓர் இருளில் ரோம் வீரனால் கற்பழிக்கப்பட கர்ப்பமானாள். இருட்டில் அதை செய்தது ரோம் வீரன் பெயர் பேந்தர் என பழைய ஏற்பாடு பாரம்பரியப்படி யூதர்களால் எழுதப்படும் "புனித தாலுமூது" தெரிவிக்கின்றது.

 

இவ்விவரங்களோடு மத்தேயுவை ஆராய்ந்தால்

மத்தேயு 1: 18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.(18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.)

25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். 

 

மரியாவின் கர்ப்பத்தை அறிந்த ஜோசப் மணநிச்சய முறிவுக்கு முயன்றார், ஆனால் லேவியர் சட்டப்படி மேரி கல்லால் அடித்து கொல்ல்ப்பட்டிருக்க வேண்டும். எனவே சிறு பெண் வாழ்வின் துயரம் என ஏற்ற நல்லவர்,   எனத்  தெரிகிறது. மேலும் மத்தேயு பட்டியலில் நான்கு பெண்கள் பெயர் வர்கிறது.

மத்தேயு 1:3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; 

5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு;

 போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது

6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.

யூதா தன் மருமகள் தாமார் செக்ஸ் உறவு.

இராகாபு முதலில் ஒரு விபச்சாரி

போவாசு- ரூத் திருமணத்திற்கு முன்பே  செக்ஸ் உறவில் இணைந்தது/

தாவீது அரசந் தன் வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் குளிக்கையில் பார்த்துசெக்ஸ் உறவு கொண்டு, பின் வீரன் உரியாவைக் கொலை செய்து, உரியா மனைவியிடம் பெற்ற மகன் சாலமோன் ஞானி.

இப்படி நான்கு பெண்கள் பெயரை மத்தேயு சேர்த்தது மேரியின் துயரமான முறை கர்ப்பமே, முன்பு இது போன்றவை கர்த்தரால் ஏற்கப்பட்டது எனக் காட்டவே- ஆனால் பின்னர்- கிரேக்க கதைகளில் பெரும் கதாநாயகர்கள் எல்லாம் கன்னி மகன்கள் என்னும் நடையில் புனையல் கதை வந்தது.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard