உலகிலேயே அதிகமான மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுவதில் முதன்மை வகிப்பது கிறிஸ்தவர்களின் மறைநூலாகிய பைபிள். பதினாறாம் நூற்றாண்டுவரை சாமானியக் கிறிஸ்தவர்கள் இந்நூலைப்படிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது எனினும் கடந்த இருநூறு ஆண்டுகால இடைவெளியில் 600 கோடி பைபிள்கள் பல மொழிகளிலும் அச்சிடப்பட்டு விற்கப்பட்டுள்ளன அல்லது விநியோகிக்கப்பட்டுள்ளன. பா¢சுத்த ஆவியினால் தூண்டப்பட்டு மனிதர்களால் இந்நூல் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவ சமுதாயம் நம்புகிறது.எனினும் இந்நூலில் பல்வேறு குழறுபடிகள் காணப்படுகின்றன.அதன் விளைவாக மக்களிடையே பல்வேறு ஏற்றதாழ்வுகள் விதைக்கப்பட்டு சமய யுத்தங்களும் தோற்றுவிக்கப்பட்டு உலகமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பெருந்துயா¢ல் ஆழ்ந்துள்ளது.
பைபிளின் மூலநூற்களில் கடவுளராக யகோவா, அடனோய், எலோகிம், எல் சடாய் முதலிய பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்பெயர்கள் பல்வேறு கடவுளர்களைக் குறிப்பதாக இருக்கக்கூடும். ஆனால் தமிழில் மொழிபெயர்ப்பட்டுள்ள பைபிளில், இப்பெயர்கள் அனைத்தும் கர்த்தர் என்று ஒட்டுமொத்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்த்தரை நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு முகத்துக்கு நேர் பார்த்துப் பேசிய மகான் நோவா என்பவர். அத்தகைய மகான்தான் மனித இனத்தை உடல் நிறத்தைக்கொண்டு பல்வேறு இனங்களாக பி¡¢த்த பெருமை மிக்கவர். வெண்மை நிறத்தவர் உலகையாளப்பிறந்தவர் என்றும், கானானியர் மற்றும் கறுப்பர்கள் அடிமை வேலைக்கே உகந்தவர்கள் என்றும் பைபிளில் பல்வேறாக எழுதிவைத்துள்ளனர் (ஆதியாகமம் 9: 24,25; 1 சாமுவேல் 16: 12; உன்னதப்பாட்டு 5: 9,10). அதன் பிரகாரம் வெள்ளையர்கள் தங்கள் மேலாண்மையை நிலைநிறுத்திட வெள்ளையர்களால் வெள்ளையர் நாட்டில் - ரோமாபு¡¢யில் எழுதப்பட்டதே பைபிளின் புதிய ஏற்பாடு. இச்சதித்திட்டத்திற்கு கருவியாக இயேசு பெருமான் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. பைபிளில் பல இடங்களில் ' நான் உனக்கு நீ நடாத திராட்சைத் தோட்டத்தையும், நீ கட்டாத வீட்டையும், அமைக்காத நகரங்களையும் தருவேன்' (யோசுவா 24: 13) என்றும், ' கர்த்தரை நம்புகிறவனே செழிப்பான்' (நீதிமொழிகள் 28: 25) என்றும் கர்த்தர் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிறர் செல்வத்தையும், நாடுகளையும் கைபற்றுவதற்கு தங்களுக்குத் தார்மீக உ¡¢மை இருப்பதாக அனைத்து வெள்ளையர்களும் நம்புகின்றனர்.ஞானஸ்நானம் பெற்றது முதல் கறுப்பர்களும், வெள்ளையர்களைப் போன்றே தங்களுக்கும் பைபிளில் கூறப்பட்டுள்ள அதிகாரங்கள் கிடைத்துவிட்டது என்று உறுதியாக நம்புகின்றனர். எனவே கிறிஸ்தவம் ஒரு மதமாக பா¢ணமிப்பதற்குப் பதிலாக, அடுத்தவர்களின் நாடு, நகரங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றத் துடிக்கும் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது. இதன் எதிரொலியை இன்றும் பாலஸ்தீனத்திலும், மேற்காசிய நாடுகளிலும், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலும் காணலாம். இந்தியாவைக் கைப்பற்ற இவர்கள் செய்யும் முயற்சிக்கு அளவே இல்லை.
கத்தோலிக்க கிறிஸ்தவம் மனிதத்துயரங்களைப் பெருமைப்படுத்துகின்றது. இயேசுவின் சிலுவைப்பாடுகளை இதற்கான கருவியாகப் பயன்படுத்துகின்றது. புரோடஸ்டன்ட் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள், தங்கள் சமயத்தில் சேர்ந்தால் மட்டுமே ஒருவன் செல்வந்தன் ஆகமுடியும் என்ற கொள்கையைப் பிரபலப்படுத்துகின்றனர். இதன்பொருட்டு 'கர்த்தரை நம்புகிறவனே செழிப்பான்' என்ற வசனத்தை கருவியாகப் பயன்படுத்துகின்றனர். இவ்விரு சமயப்பி¡¢வுகளிலும் இறைவனின் பாதாரவிந்தங்களைச் சேருவதே மனிதப்பிறவியின் நோக்கம் என்பதைக் கூறுவதை விடுத்து உலகசம்பந்தமான வேறு பலவித விஷயங்களைப் பேசியும் நடத்தியும் காட்டுகிறார்கள். பி¡¢த்தாளும் கொள்கையைப் பின்பற்றி நாட்டுமக்களிடயே பி¡¢வினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஊக்குவித்துவருகிறார்கள். இதனை நாம், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் கண்கூடாகக் காண்கிறோம்.
பாரதநாட்டைச் சிதறடித்திட இவர்கள் என்னவிலையும் கொடுத்திடத் தயாராய் உள்ளனர். அதற்குத் தங்கள் ஆதார சுருதியாக பைபிளைக் கொண்டுள்ளனர். பைபிளில் நாம் கண்ணுறும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளும், ஆண்டான் அடிமை தத்துவமும், வெள்ளையன் கறுப்பன் என்னும் நிறவேறுபாடும், தங்கள் சமயத்தில் இணைவதால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாகமுடியும் என்ற போலி பொருளாதாரக்கொள்கையும் தோற்கடிக்கப்படவேண்டும். இதன் பொருட்டு பைபிள் கூறும் தி¡¢புவாத தத்துவ நியாயங்கள் மக்கள்முன் திறந்து காண்பிக்கப்படவேண்டும்.இப்பணியினை எளிதாக்கும்பொருட்டு பல்வேறு மூலநூற்களை ஆராய்ந்து பைபிள் மீதான கூர் ஆய்வினை (critical analysis) 'கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும்’ எனும் நூல் மூலம் நமக்கு வழங்கியுள்ளார் ஜெயக்கொடியோன் அவர்கள். அன்னா¡¢ன் சிறந்த ஆய்வுப்பணியின் காரணமாக கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவரல்லாதாரும் நினைத்துப்பர்க்காத பல உண்மைகள் இந்த நூலில் வெளிவந்துள்ளன.
ஆங்கிலத்தில் இதுபோன்ற நூல்கள், பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன. எனினும், தமிழில் இதுவே முதலில் வெளிவரும் பைபிள் மீதான கூர் ஆய்வுநூல். இந்நூலின் மூலம் பைபிள் ஒரு ஆன்மீக மறைநூல் அல்ல என்பதும், மாறாக அது நாடுபிடிக்கும் கொள்கையைக்கொண்ட ஒரு அரசியல் தத்துவநூல் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நமது வருங்காலச் சந்ததிகள், இத்தகைய சமயக் கூர் ஆய்வினைத் தங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டு நெறியாகக் கொள்வர் என்பதில் சற்றும் ஐயமில்லை. இதுபோன்று இன்னும் பல
நூல்கள் வெளிவந்து தமிழ் பெருமக்களுக்கு நல்வழி காட்டிடவேண்டும். அதுவே நமது விருப்பம்.