Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 21. Shabbath - Saturday or Sunday ஒய்வுநாள் சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா?


Guru

Status: Offline
Posts: 7467
Date:
21. Shabbath - Saturday or Sunday ஒய்வுநாள் சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா?
Permalink  
 


ஒய்வுநாள் சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா?

'தேவன் தாம் உண்டாக்கின கி¡¢யைகளையெல்லாம் முடித்தபின்பு, எழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்துப் பா¢சுத்தமாக்கினார்' ( ஆதியாகமம் 2: 2,3).

எபிரேயமொழியில் வாரத்தின் ஏழாம் நாள் (சனிக்கிழமை) 'சபத் ' (sabbath)என்று அழைக்கப்படுகிறது. சபத் என்றால் ஓய்வு என்று பொருள். சபத் என்ற எபிரேயமொழி வார்த்தையின் வேர்ச்சொல்லுக்கு 'முழுமை' என்ற பொருளும் உண்டு. இந்த சபத் என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான 'சப்த' என்பதிலிருந்து செமிடிக் (Semitic) மொழிகளுக்குச் சென்றிருக்க வேண்டும். 'சப்த' என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு ஏழு என்று பொருள். பண்டைக்காலத்து மதங்களில் ஏழு என்ற எண் தனித்தன்மையுடைதாகக் கருதப்பட்டது. பாரதத்திலும் சப்தஸ்வரங்கள், சப்தா¢ஷிகள், சப்தநாடிகள் என்றும்  மற்றும் பலவும் வழங்குகின்றன. புதிய ஏற்பாட்டில் யோவானின் வெளிப்படுத்தின விசேஷத்திலும் ஏழு சபைகள், ஏழு தேவதூதர்கள், ஏழு நட்சத்திரங்கள், ஏழு ஆவிகள், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், ஏழு பொன் குத்துவிளக்குகள் என ஏழின் முக்கியத்துவம் பறைசாற்றப்படுகிறது.

ஆதியாகமத்தில் ஆதாம் என்ற முதல் மனிதனைத் தேவன் எவ்வாறு மண்ணிலிருந்து சிருஷ்டித்தார் என்பதைச் சொல்லுவதற்கு முன்பே ஓய்வுநாளைப் பற்றி விளக்கப்பட்டுள்ளதால், ஆதாம் ஆறுநாட்கள் வேலைசெய்துவிட்டு ஏழாம் நாளிலே ஓய்வெடுக்க வேண்டும் என்ற கருத்து வெளிப்படுத்தப்படவில்லை என்றுதான் கொள்ளவேண்டும். பைபிள் வரலாற்றுப்படி சிருஷ்டி தொடங்கி சுமார் 2500 ஆண்டுகள் வரை ஓய்வுநாளைப் பற்றி பழைய ஏற்பாட்டில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. மோசே எகிப்திலிருந்து தான் மீட்டுவந்த யூதர்களிடம் சினாய் மலையில் ஜெகோவா கொடுத்ததாகச் சொல்லி  பத்துக் கட்டளைகளை அறிவுறுத்தினார். அதில் மூன்றாவது கட்டளையாக ' ஓய்வுநாளைப் பா¢சுத்தமாக ஆசா¢க்க நினைப்பாயாக' என்று கூறுகிறார். இதுதான் ஓய்வுநாளைப்பற்றிய இரண்டாவது குறிப்பு. ஆதாமுக்குப் பின்வந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, நோவா முதலியவர்கள்  காலத்தில் ஓய்வுநாள் ஆசா¢க்கப்பட்டதா என்று தொ¢யவில்லை. இயேசு பிறப்பதற்கு சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு மோசே ஓய்வுநாளை ஆசா¢க்கவேண்டியது கடவுளின் கட்டளை என்று சொன்னபிறகும் , அதன் பின்னர்

சுமார் ஐநூறு வருடங்கள், அதாவது தாவீது அரசனின் காலம் வரை மீண்டும் ஓய்வுநாளைப் பற்றிய குறிப்பு எதுவும் பைபிளில் இல்லை. அது மட்டுமல்லமோசே தொடங்கிவைத்த ஜூபிலி (Jubilee) என்ற ஐம்பதாம் வருடக்கொண்டாட்டம் (லேவியராகமம் 25: 1 -37) அதன் பின்பு கொண்டாடப்பட்டதா என்பது பற்றிய குறிப்புகளும் பைபிளில் இல்லை.

 

ஜூபிலி என்பது யூதர்கள் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கொண்டாட்டம். ஏழு ஏழு வருடங்களாக நாற்பத்தொன்பது வருடங்களை அனுசா¢த்து அதன் பின் வரும் ஐம்பதாம் வருடம் ஜூபிலி வருடமாகப் பா¢சுத்தமாகக் கொண்டாடப் படவேண்டும் என்பது ஜெகோவா மோசேக்குக் கொடுத்த அறிவுறுத்தல் ஆகும். சபத் என்ற ஓய்வுநாளை ஆசா¢க்கவேண்டும் என்பது தனிமனிதனுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. அதேபோல் யூதர்கள் வசிக்கின்ற கானான் தேசமும் ஓய்வை அனுசா¢க்கவேண்டும் என்று ஜெகோவா கட்டளையிட்டார். யூதர்கள் ஆறுவருடங்கள் தங்கள் நிலத்திலும், தோட்டங்களிலும் பயி¡¢டலாம், அறுவடை செய்யலாம். ஏழாம் ஆண்டு நிலத்திலோ, தோட்டங்களிலோ பயி¡¢டக்கூடாது. தங்கள் பணியாட்களையும் வேலையில் ஈடுபடுத்த்க்கூடாது. ஆனால் தங்கள் நிலத்திலும் தோட்டங்களிலும் தானே விளைந்த பயிர்களையும், கனிகளையும் உணவாக்கிக் கொள்ளலாம். இப்படி ஏழு ஏழு வருடங்களாக நாற்பத்தொன்பது வருடங்கள் முடிந்துவரும் ஐம்பதாம் ஆண்டு ஜூபிலி ஆண்டு எனப்படும். அந்த வருடத்தில் யூதர்கள் தங்களிடம் அடிமைகளாக இருப்பவரை விடுதலை செய்யவேண்டும் , வறுமையினால் தங்கள் வீடு மற்றும் சொத்துக்களைத் தங்களிடம் விற்றவர்கள், அடமானம் வைத்தவர்களுக்கு அவற்றைத் திருப்பியளிக்கவேண்டும், கடனாக வாங்கிய தொகைக்கு வட்டி வாங்கக்கூடாது. மேலும் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாத ஏழைகளுக்கு அந்தக் கடனை மன்னித்துவிடவேண்டும். ஆகமொத்தம் ஆண்டான், அடிமைகள் யாவரும் ஜூபிலி ஆண்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அந்த வருடம் கழிந்ததும் அடுத்த ஏழு ஏழு வருடங்கள் தொடரும். ('எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களையும் மன்னியும்' என்று 'கர்த்தா¢ன் ஜெப'த்தில் (Lord’s prayer) வரும் வா¢ ஜூபிலி ஆண்டின் கட்டளைகளில் இருந்து எடுத்ததுதான். தற்போது கிறிஸ்தவர்கள் இந்தவா¢யை 

"எங்களுக்குக் கெடுதல் செய்பவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களையும் மன்னியும்" என்று மாற்றிவிட்டார்கள்.)

 

எகிப்திலிருந்து மீண்டுவந்த யூதர்கள் ஜெகோவா தங்களுக்கு அளித்த கானான் தேசத்தை வந்தடைந்ததும் மகிழ்ச்சியால் ஆர்ப்பா¢த்தார்கள், எக்காளங்களை முழங்கினார்கள். அந்த வருடம் முழுதும் இந்தக் கொண்டாட்டம் நீடித்தது. எகிப்தில் அவர்கள் அடிமைத்தளையில் சுமார் நானூறு ஆண்டுகள் கட்டுண்டு கிடந்து, பின்னர் கர்த்தரால் விடுதலை பெற்றதை நினைவுகூறும்படி ஒவ்வொரு ஐம்பதாம் வருடமும் ஜூபிலி ஆண்டாகக் கொண்டாடவேண்டும் என்று மோசே நியமித்தார். அவர்கள் எகிப்தியா¢டம் அடிமைப்பட்டிருந்ததை நினைவுபடுத்தும் வகையில் தங்கள் அடிமைகளை விடுதலை செய்யவும், தங்கள் கடனாளிகளை மன்னிக்கவும் அறிவுறுத்தினார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
RE: 21. Shabbath - Saturday or Sunday ஒய்வுநாள் சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக்கிழமையா?
Permalink  
 


ஜூபிலி (Jubilee) என்ற ஆங்கில வார்த்தை எபிரேய வார்த்தையான யோபெல்' (yobel) மற்றும் லத்தீன் வார்த்தையான 'ஜுபிலேயஸ்' (jubilaeus) என்ற வார்த்தைகளின் மருவு. யோபெல் என்ற எபிரேயச் சொல்லுக்கு 'விடுதலையின் எக்காள ஒலிஎன்று பொருள். யோபெல் என்றால் இலக்கணபூர்வமாக எபிரேயமொழியில் ஆட்டுக்கிடா என்று பொருள்படும். அக்காலத்தில்

கிடாவின் கொம்புகளிலிருந்து எக்காள வாத்தியம் தயா¡¢க்கப்பட்டது.

 

சபத் என்ற ஓய்வுநாளை எப்படி ஆசா¢க்கவேண்டும் என மோசே தான் எகிப்திலிருந்து மீட்டுவந்த யூதர்களிடம் சொல்லுவதாக யாத்திராகமம் 16: 22,23 ஆம் வசனங்களில் ஒரு கூற்று வருகிறது. வாரத்தின் ஆறாம் நாள் மோசே யூதர்களை நோக்கிநாளைக்கு ஜெகோவாவுக்கு¡¢ய பா¢சுத்த நாளாகிய ஓய்வுநாள்நீங்கள் சுடவேண்டியதைச்சுட்டுவேவிக்கவேண்டியதை வேவித்துமீதியாயிருக்கிறதையெல்லம் நாளைமட்டும் உங்களுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றான். ஓய்வுநாளன்று உணவு சமைத்தல் ஆகாது என்று இதன் மூலம் அறிவுறுத்தப்பட்டது. இதை விட்டால் ஒய்வுநாளைப் பற்றிய எந்தகுறிப்பும் தாவீதின் காலம் வரை பழைய ஏற்பட்டில் இல்லை.

மோசே எகிப்திலிருந்து யூதர்களுக்கு விடுதலை பெற்றுத்தர முயற்சித்துக்கொண்டிருக்கும்போதுஅவர்கள்  மிகவும் கொடுமைப் படுத்தப்பட்டு ஓய்வே இல்லாமல் வாரத்தின் ஏழுநாட்களும் எகிப்தியர் தன் இனத்தா¡¢டம் வேலை வாங்குவதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார். முதலில் இதற்கொரு தீர்வு காணவேண்டும் என்று கருதிமோசே எகிப்திய மன்னரான பரோவாவைச் (Paroah) சந்தித்து அடிமைகளாயிருந்து கடினமாக உழைக்கின்ற இஸ்ரேலியருக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு தருமாறு மிகவும் பணிவோடு வேண்டிக்கொண்டார். பரோவாவும் மோசேயின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எகிப்து மற்றும்யூதர்கள் மிகுதியாக இருந்த கோஷன் (Goshen) பகுதியிலும் அவர்களுக்கு ஆறுநாட்கள் வேலையும்ஏழாம் நாள் ஓய்வும் கொடுக்குமாறு தன் நாட்டுமக்களுக்குக் கட்டளையிட்டார். பரோவாவின் இந்த உத்தரவுக்குப்பின் எகிப்தியர்கள் மற்றும் யூதர்களின் பார்வையில் மோசே மிகவும் உயர்ந்து நின்றார். இதுதான் ஓய்வுநாள் தோன்றிய வரலாறு. இவ்விஷயம் யாஷோ¢ன் புத்தகத்தில் (The Book of Jasher) 70 ஆம் அத்தியாயம் 41 முதல் 51 வரையுள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது.* யாஷோ¢ன் புத்தகம்

-------------------------------------------------------------------------------------------------------

* J.N.Andrews and I.R.Conradi, History of the Sabbath and the First day of the Week,  4th Edition, 1912

 

 

பழைய ஏற்பாட்டில் சேர்க்கப்படாமல் புறந்தள்ளப்பட்ட ஒரு புத்தகம். ஆனால் யாஷோ¢ன் புத்தகத்தைப் பற்றி பைபிளில் யோசுவா 10: 12 மற்றும் 2 சாமுவேல் 1: 18 ஆகிய இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டுஅதிலுள்ள சில வேறு விஷ்யங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

யாஷோ¢ன் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற விவரங்களைப் பார்த்தால் சபத் என்கிற ஓய்வுநாள் மோசேயின் கம்யூனிச சித்தாந்தத்தில் தோன்றியதாகத் தொ¢கிறதேயன்றிசிருஷ்டியை ஆறுநாட்களில் முடித்துவிட்டு ஏழாம் நாள் கர்த்தர் ஓய்வெடுத்தார் என்ற ஆதியாகமக் கதையிலிருந்து வந்ததாகத் தொ¢யவில்லை.

 

எகிப்து தேசத்தில் யூதத்தொழிலாளர்களுக்கு வாரஓய்வு வேண்டும் என்பதற்காக பரோவாவிடம் கேட்டுபெற்ற சபத்யூதர்கள் எகிப்தைவிட்டு புறப்பட்டு சினாய் மலைக்கு வந்து சேர்ந்தபின்பு மோசேயால் மதவிதிமுறைகளுக்குட்படுத்தப்பட்டது. ஓய்வுநாளை ஆசா¢க்கவேண்டும் என மோசே கடுமையான விதிகளை ஏற்படுத்தியிருந்தார்.  ஓய்வுநாள் ஜெகோவாவுக்கு¡¢ய பா¢சுத்தமான நாள் என்றும் அன்று இறைவனைத் துதிப்பதைத் தவிர வேறெந்த பணியும் செய்யக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டது. யூதர்களின் நியாயப்பிரமாணத்தில் ஓய்வுநாளன்று 39 விதமான பணிகளைச் செய்யலாகாது என்று விலக்கப்பட்டுள்ளது. 'ஓய்வுநாளில் வேலை செய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்என யாத்திராகமம் 31: 19 ல் கடுமையான தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

 

இயேசுவின் காலத்தில் பா¢சேயர்கள் சபத் விதிகளை (Sabbath Laws) மிகவும் தீவிரமாகப்

பின்பற்றினார்கள். ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் சீடர்களும் வயலோரமாய் நடந்து சென்றபோதுசீடர்கள் பசி மிகுதியால் கோதுமைக்கதிர்களைக் கொய்துத் தானியங்களை புசிக்கத்தொடங்கினர். அதைக் கண்ணுற்ற பா¢சேயர்  இயேசுவை நோக்கி உம் சீடர்கள் ஓய்வுநாளில் செய்யத்தகாததைச் செய்கின்றார்களே என்று கேட்டார்கள். ஓய்வுநாளில் தனியங்களை அறுவடை செய்தல் கூடாது என்பது விதி. இயேசு அவர்களிடம் 'தாவீது மன்னன் ஒருமுறை பசியாயிருக்கும்போது தேவாலயத்தில் பிரவேசித்துஆசா¡¢யர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வத்துக்கு அர்ப்பணித்த அப்பங்களை எடுத்து தானும் புசித்துத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே . மேலும் மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லைஓய்வுநாள்தான் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது. ஆகையால் ஓய்வுநாளும் மனிதனுக்குக் கட்டுப்பட்டதேஎன்றார் (மாற்கு 2: 23 -28).

 

இயேசு மற்றொரு ஓய்வுநாளில் ஜெப ஆலயத்துள் பிரவேசிக்கும்போது அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான். அவர் ஓய்வுநாளில் அவனைக் குணமாக்கினால் அவர்போ¢ல் குற்றஞ்சாட்டலாமென்று பா¢சேயர் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். அதை உணர்ந்த இயேசு சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி பா¢சேயரைப் பார்த்து : ஓய்வுநாளில் நன்மை செய்வதோதீமை செய்வதோஉயிரைக் காப்பதோ அல்லது அழிப்பதோஎது நியாயம் என்றார். அவ்ர்கள் பேசாமலிருந்தார்கள். இயேசு அவர்கள்மேல் கோபம் கோண்டு அவனை உடனே குணமாக்கினார் (மாற்கு 3: 1-5).

 

மேற்கூறிய இரண்டு ஓய்வுநாள் சம்பவங்களிலும் சபத் விதிகளுக்கு இயேசு அளித்த விளக்கம் பா¢சேயா¢ன் விளக்கத்துக்கு விரோதமாக இருக்கிறது.  ஜெகோவா ஏழாம் நாளில் ஓய்வெடுத்து ஓய்வுநாளை ஆசீர்வதித்ததால்  சனிக்கிழமையைப் பா¢சுத்தநாளாக ஆசா¢க்கவேண்டும் என்பதைவிடஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது என்பதில் இயேசு கண்டிப்பாக இருந்தது தெளிவாகிறது.

 

மற்றொரு ஓய்வுநாளில் இயேசு முப்பத்தெட்டு வருடம் வியாதியுடைய ஒரு மனிதன் எழுந்திருக்க இயலாமல் குளக்கரையில் படுத்திருக்கக் கண்டார். அவர் அவனை நோக்கி : எழுந்திருஉன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். அவன் உடனே குணமானதால் அவ்வாறே செய்தான். யூதர்கள்  இதை அறிந்துஇயேசு ஓய்வுநாளில்  ஒருவனைக் குணப்படுத்தியதுமல்லாமல்அவனை தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கவும் வைத்திருக்கிறார்இது மாபெரும் குற்றம் அல்லவா என்று அவருடன் வாதிட்டனர். (ஓய்வுநாளில் யூதன் ஒருவன் சுமைகளைத் தூக்கிக்கொண்டு போகக்கூடாது. அது நியாயப்பிரமாணத்தில் விதிக்கப்பட்டுள்ள 39 சபத் தடைகளில் ஒன்று. யூதர்கள் ஓய்வுநாளில் சுமைகளைத் தூக்கிகொண்டு போகக்கூடாது என்பது பழைய ஏற்பாட்டில் எரேமியா 17: 21 -25 மற்றும் நெகேமியா 13: 15 திலும் விளக்கப்பட்டுள்ளது).  இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இந்நிமிடம் வரைக்கும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்நானும் என் பணியைச் செய்கிறேன் என்று பதிலிறுத்தார் (யோவான் 5:1 -18). இதிலிருந்து பரமபிதாவுக்கு ஒய்வு என்பதே கிடையாது, 'அவனன்றி அணுவும் அசைவதில்லைஎன்ற கொள்கையே இயேசுவின் கருத்தாக இருந்திருக்கிறது. பரமபிதா ஆறுநாள் சிருஷ்டிக்குப்பின் களைத்துப்போய் ஏழாம்நாள் சனிக்கிழமையன்று ஓய்வெடுத்தார் என்று சொல்வதே இறைவனுக்கு நாம் இழைக்கும் இழுக்கு ஆகும் என்பதை இயேசு மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் தற்போது தங்கள் ஓய்வுநாளை ஏழாம்நாளிலிருந்துவாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றிக்கொண்டார்கள்  என்றாலும்கிறிஸ்தவர்களிடையே இன்னும் யூதர்களைப்போல் சனிக்கிழமையையே ஓய்வுநாளாக வைத்திருக்கும் 'ஏழாம்நாள்  ஆராதிப்பவர்கள்' (Seventh Day Adventists) என்ற பி¡¢வினரும் உள்ளனர்.

 

ரோமானியப் பேரரசன் கான்ஸ்டான்டின் (Constantine) தான் உலகின் முதல் கிறிஸ்தவ மன்னன். அவனுடைய காலத்தில் (நான்காம் நூற்றாண்டில்) ரோமானியப் பேரரசில் சூ¡¢யக்கடவுளை வழிபட்ட பேகன் மதத்தினரே மிகுதியாக இருந்தனர். அரசியல் காரணங்களுக்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய கான்ஸ்டான்டின் கி.பி.325 ல் நைசியா நகரத்தில் கிறிஸ்தவ பேராயர்களின் ஆலோசனை மன்றத்தைக் (Council of Nicea) கூட்டி கிறிஸ்தவமதத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுக்கச்செய்தான். நைசியாவில் முன்னூற்றுப்பதினெட்டு பேராயர்கள் கலந்து கொண்டனர். கான்ஸ்டான்டின் பேகன் மதத்தினரும்கிறிஸ்தவ மதத்தினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என் விரும்பினான். ஏனெனில் அவனுடைய சாம்ராஜ்யம் நிலைக்க வேண்டுமானால் நாட்டுமக்களுடைய ஒற்றுமை அவசியம் என்பதை உணர்ந்தவனாக இருந்தான்.

 

இயேசு கிறிஸ்துவை ரோமானியர் வணங்கிய சூ¡¢யக் கடவுளுக்கு (Sol) ஒப்பிட்டு ஏற்கனவே பைபிளில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன (மல்கியா 4: 2; லூக்கா 1: 79; யோவான் 1: 9; வெளிப்படுத்துதல் 1: 7, 16). ஆகையினால் கிறிஸ்தவர்களின் ஓய்வுநாளை  சனிக்கிழமையிலிருந்து சூ¡¢யனை வழிபடுகின்ற ஞாயிற்றுக்கிழமைக்கு (Venerable Day of the Sun) மாற்றியமைத்தால் இரு மதத்தாரையும் நட்பு வழியில் ஒற்றுமைப்படுத்தலாம் என்று கான்ஸ்டான்டின் நம்பினான். உடனே ஒரு அரசாணையிட்டு ஞாயிற்றுக்கிழமையை (Dies Solis) ஓய்வுநாளாக அறிவித்தான்.

அன்றுமுதல் ரோமப்பேரரசில் ஞயிற்றுக்கிழமை ஓய்வுநாளாயிற்று. அதைக் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொண்டனர். அது மட்டுமல்ல கிறிஸ்து ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுவதால் கிறிஸ்தவர்கள் பிற்காலத்தில் ஞாயிற்றுக்கிழமையை 'ஆண்டவா¢ன் நாள்' (Lord’s Day) என்று அழைக்க ஆரம்பித்தனர். யூதர்கள் சபத் உணவை வெள்ளிக்கிழமை இரவில் உண்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு சபத்  என்கிற சனிக்கிழமை வெள்ளிக்கிழமை மாலையில் தொடங்குகிறது. (யூதர்களின் நாள் மாலையில் தொடங்கி அடுத்தநாள் பிற்பகலில் முடிகிறது). ஆனால் ரோமப்பேரரசில் உலகின் மற்ற பகுதிகளைப்போல ஞாயிற்றுகிழமை காலையில் தொடங்கி இரவில் முடியும். அதற்கும் கிறிஸ்தவர்கள் சங்கீதம் 92: 3 ஆம் வசனத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டார்கள். அவ்வசனம் சொல்லுகிறது: 'காலையிலே உமது கிருபையையும் இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பது நலமாயிருக்கும்'. ஞாயிற்றுக்கிழமைக்குப் பொருத்தமாக இருக்கிறது அல்லவா?



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard