Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 29 Pornography and Vulgarity in Bible


Guru

Status: Offline
Posts: 7602
Date:
29 Pornography and Vulgarity in Bible
Permalink  
 


பா¢சுத்த வேதாகமத்தில் பாலியல் வக்கிரங்களும், பகிரமுடியாத கீழ்மைகளும்

 

பா¢சுத்த வேதாகமம் என்று அழைக்கப்படும் பைபிளின் பலபகுதிகளைப் பாதி¡¢களும் , ஆயர்களும் தங்கள் பிரசங்கத்தில் வராதபடிப் பார்த்துக்கொள்வர். சாதாரணக் கிறிஸ்தவர்களும் பைபிளின் அந்தப் பகுதிகளை முக்கியமற்றவையாகக் கருதி தங்கள் கவனத்தில் கொண்டுவருவதில்லை. அவற்றைக் கூர்ந்து வாசித்தால் எத்தகைய பாலியல் வக்கிரங்களையும் (pornography), ஒருவருக்கொருவர் பேச்சிலோ அல்லது எழுத்திலோ பகிர்ந்துகொள்ளமுடியாத கீழ்மையான எண்ணங்களையும் (vulgarity), விஷயங்களையும் எழுதிவைத்துள்ளார்கள் என்பது தொ¢யவரும். அதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் அவற்றில் தொண்ணூறு விழுக்காடு ஜெகோவா என்று அழைக்கப்படும் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான பரமபிதாவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்பதுதான். இன்று பல பெற்றோர்கள் இணையதளங்களில் பரவலாக உள்ள பாலியல் வக்கிரங்களைப் பார்த்து தங்கள் குழந்தைகள் கெட்டுப்போவார்கள் என்று கணினிகளையும், கைபேசிகளையும் குழந்தைகள் தனிமையில் இருக்கும்போது  பயன்படுத்தத் தடை விதிக்கின்றனர். அல்லது தங்கள் குழந்தைகள் பாலியல் வக்கிரங்கள் நிறைந்த இணையதளங்களைத் திறப்பதற்குத் தடைசெய்யும்  செயலிகளைப் (applications) கணினிகளில்  பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவப் பெற்றோர்கள் தங்கள் வேதாகமத்தில் உள்ள பாலியல் வக்கிரங்களையும். தரக்குறைவான விஷயங்களையும் அறிந்துகொண்டார்கள் என்றால் தங்கள் குழந்தைகள் தனிமையில் பைபிள் வாசிக்கத் தடைவிதிப்பர். அவ்வளவு மோசமான விஷயங்கள் உள்ளன.

 

"அவர்கள் எகிப்திலே தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம் பண்ணினார்கள். அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள்  அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது" (எசேக்கியேல் 23: 3).

 

"அவள் எகிப்து தேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் இளமையின் நாட்களை எண்ணி தன் வேசித்தனங்களை அதிகா¢த்துக் கொண்டாள். கழுதையின் ஆணுறுப்பைப் போன்ற ஆணுறுப்பும், குதிரையின் இந்தி¡¢யமும் உள்ள தன் முறையற்ற காதலர்களை மோகித்து அவர்களோடு காமசுகம் பெற விரும்பினாள். எகிப்தியர்கள் உன் இளமையில் உன் முலை மொட்டுகளை வருடிய காலத்தை  நினைத்து அந்த விரகசுகத்துக்காக ஏங்குகிறாய்” (எசேக்கியேல் 23: 19-21). புதிய அகில உலக ஆங்கில பைபிள் (New International Edition) தொகுப்பில் கழுதையின் பிறப்புறுப்பு (their genitals were like that of donkeys), குதிரையின் இந்தி¡¢ய வீச்சு (whose emission was like that of horses) என்றிருக்கிறது.

 

ஜெகோவா (கர்த்தர்) இரண்டு வேசி சகோதா¢களின் கதையைத் தீர்க்கத்தா¢சிக்குச் சொல்லுகிறார். அகோலா மற்றும் அகோலிபா என்ற அந்த இரு வேசிகளின் கதையும் வேசித்தனம் செய்கிற பெண்களுக்கு ஒருபாடமாக அமையலாம். ஆனால் எதற்காகக் கர்த்தர் அவர்களுடைய காமவிகாரங்களையும், பாலியல் வக்கிரங்களையும் பட்டியலிடவேண்டும்? வேதாகமக் கடவுளுக்கு பாலியல் வக்கிரங்களை விளக்குவதில் தனிபட்ட ஆர்வம் உள்ளதா என்ன? எசேக்கியேல் 23 ஆம் அதிகாரத்தில் எகிப்திய ஆண்களின் ஜனன உறுப்பை கழுதையின் ஜனன உறுப்பிற்கும், இந்தி¡¢ய வீச்சை குதிரையின் இந்தி¡¢ய வீச்சிற்கும் ஒப்பிட்டிருப்பதைத் (வசனம்20) தங்கள் குழந்தைகள் வாசித்து ரசிப்பதை எந்த தாய் தந்தையால் பொறுத்துக்கொள்ள முடியும்?

 

ஆதியாகமம் 19 ஆம் அதிகாரத்தில் லோத் என்பவனுடைய கதை கூறப்பட்டுள்ளது. "லோத்தும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள்.அவர்கள் மலைலிருந்த ஒரு குகையில் குடியிருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம் தந்தை முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறையின்படி நம்மைத் திருமணம் செய்துகொள்ள இங்கே ஒரு புருஷனும் இல்லை. நம்முடைய தகப்பனாலே சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவு தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்ககொடுத்தார்கள்.  மூத்தவள் போய் தன் தப்பனோடே சயனித்தாள். அதை அவன் உணராதிருந்தான். மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: இன்று ராத்தி¡¢யும் மதுவைக் குடிக்ககொடுப்போம், நீ போய் அவரோடே சயனி என்றாள். அப்படியே அன்று ராத்தி¡¢யும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்ககொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் அவனோடே சயனித்தாள். இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் கர்ப்பவதிகள் ஆனார்கள்" (19: 30-36).

 

தங்கள் தந்தைக்கு ஆண்வா¡¢சு உண்டாவதற்காக அவருடைய இரு பெண்களும் எடுத்துக்கொண்ட முயற்சியை என்ன சொல்வது? இந்த முறைதவறிய காமம் (incest) மற்றும் பெண்கள் ஆணை வன்புணர்வு (reverse rape) செய்வது போன்ற வர்ணனைகள் நவீன இணையதள பாலியல் வன்மங்களையும் மிஞ்சிநிற்கிறது.

 

"இதோ நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகம் மட்டும் தூக்கிபிடித்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், ராஜ்யங்களுக்கு உன் அந்தரங்கத்தையும் (ஜனன உறுப்பை) காட்டுவேன். உன்மேல் அசிங்கத்தை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கைப்பொருளாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" (நாகூம் 3: 5-6).

 

வேசித்தனத்தில் மூழ்கிக்கிடந்த நினவே பட்டணத்தைக் குறித்து சொல்லப்பட்ட வார்த்தைகளேயன்றி தனிப்பட்ட ஒருவரைப் பற்றியல்ல என்றாலும், கர்த்தருடைய இந்த வார்த்தைகளில் எவ்வளவு வக்கிரமும், கீழ்த்தரமான வெறுப்பும் மலிந்துகிடக்கிறது பாருங்கள். இங்கே அசிங்கம் என்று சொன்னது சாணி!  மல்கியா 2: 2-3 வசனங்களில் " உங்கள் வழித்தோன்றல்களை அழித்து, (நீங்கள்) பண்டிகை(களில் பலியிடும் மிருகங்களின்) சாணியை   உங்கள் முகத்தில் வீசியடிப்பேன்என்று சொல்லுகிறார். கர்த்தா¢ன் இந்தக் கூற்று  வேண்டாத கட்சித்தலைவா¢ன் போஸ்டர் மீது சாணியடிக்கும் படிப்பறிவற்ற, பண்பாடற்ற தெருப்பையன்களின் செயலைப் பிரதிபலிக்கிறது.

 

மீண்டும் கர்த்தர் எருசலேம் நகரத்தின்மேல் கோபம் கொண்டு சொல்லுகிறார்: "உன் மானம் (அந்தரங்க உறுப்புகள்) காணப்பட, நான் உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டமாக எடுத்துப் போடுவேன்" (எரேமியா 13: 26). இவற்றைப்படித்தால் எவ்வளவு கீழ்த்தரமான பண்பாட்டை கர்த்தா¢ன் வசனங்களிலிருந்து நம் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் என்று எண்ணிப்பாருங்கள்!

 

ஜெகோவா சிருஷ்டித்த முதல் மனிதர்களான ஆதாமுக்கும், ஏவாளுக்கும், காயீன் மற்றும் ஏபெல் என்று  இரண்டு பையன்கள் இருந்தார்கள். காயீன் நிலத்தைப் பண்படுத்தி பயி¡¢ட்டான். ஏபெல் ஆடுகளைப் பேணி மேய்த்துவந்தான். கர்த்தர் இருவரையும் பாரபட்சமாக நடத்தி  ஏபெலின் காணிக்கையை அங்கீகா¢த்து காயீனின் காணிக்கையை நிராகா¢த்தார். ஆகையால் ஏபெல் மீது பொறாமை கொண்டு காயீன் அவனைக் கொன்றுவிட்டான். பின்னர் "காயீன் தன் மனைவியை அறிந்தான், அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்" (ஆதியாகமம் 4: 17).

 

காயீனின் மனைவி யார் என்று சொல்லப்படவில்லை. கர்த்தர் அவனுக்காக ஒரு பெண்ணைச் சிருஷ்டித்துக் கொடுத்தாரா என்றும் தெளிவுபடுத்தவில்லை. அச்சமயத்தில் இருப்பதே மூன்று மனிதர்கள்தாம், ஆதாம், ஏவாள் மற்றும் அவர்களுடைய மகன் காயீன். இதில் காயீனுக்கு மனைவி எங்கிருந்து வந்தாள்? எனவே காயீன் தன் தாய் அல்லது கதையில் தொ¢விக்கப்படாத தன் தங்கையுடன் முறைதவறிய உறவு (incest) கொண்டுதான் ஏனோக் என்ற மகனைப் பெற்றிருக்கவேண்டும். யூதர்களின் வம்சத்தலைவரும், ஜெகோவாவிற்கு நெருக்கமானவருமான ஆபிரகாமும் தன் தந்தையின் மற்றொரு மனைவியின் (சித்தியின்) மகளான, தன் தந்தைக்குப் பிறந்த தன் சகோதா¢யான சாராவைத்தான் மணம் செய்திருந்தார் (ஆதியாகமம் 20: 12).

 

கிராமங்களில் சாமியாடிகள் தங்கள் மீது கிராமதேவதைகள் இறங்கி எதிர்காலம் குறித்து முன்னறிவிப்பு செய்வதாகப் பாவனை செய்துகொண்டு மக்கள் முன்னிலையில் அருள்வாக்கு கூறுவதுபோல் பலவாறு பிதற்றுவார்கள். அப்போது அவர்களுடைய எழுத்தறிவு, வளர்ந்தவிதம், பண்பாடு இவற்றுக்கு ஏற்றவாறு வார்த்தைகள் வெளிப்படும். அதுபோலவே பைபிளிலும் தீர்க்கத்தா¢சிகள் என்போர் கர்த்தர் தங்கள் மூலமாக அரசர்களுக்கும், மக்களுக்கும் அறிவுரைகள் கூறுவதாகவும், கோபத்தை வெளிப்படுத்தி எச்சா¢ப்பதாகவும் பாவனை செய்யும்பொழுது அவர்களது குணநலன்களும் அவர்கள் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.  பழைய ஏற்பாட்டிலுள்ள 1 இராஜக்கள் மற்றும் 2 இராஜாக்கள் என்ற புத்தகங்களில் இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.

 

கர்த்தர் : "இதோ ஜெரொபெயாமின் வீட்டின்மேல் தீங்கை வரப்பண்ணி, அவனுக்குச் சுவர்மேல் மூத்திரம் பெய்யும் ஒரு நாய் கூட இராதபடிக்கு, இஸ்ரேலிலே அடைபட்டவனையும், விடுபட்டவனையும் சங்காரம் செய்து, சாணியை அள்ளிப்போடுவதுபோல ஜெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடு அற்றுப்போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்" (1 இராஜாக்கள் 14: 10).

 

"அவன் இராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் அமர்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான். அவன் இனத்தாரையாகிலும்,அவன் சினேகிதரையாகிலும், சுவர்மேல் மூத்திரம் பெய்யும் ஒரு நாயையாகிலும் அவன் உயிரோடே வைக்கவில்லை" (1 இராஜாக்கள் 16: 11).

 

"நான் உன்மேல் தீங்கு வரச்செய்து, உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவர்மேல் மூத்திரம் பெய்யும் ஒரு நாய் கூட இராதபடிக்கு இஸ்ரேலில் அடைபட்டவனையும், விடுபட்டவனையும் சங்கா¢ப்பேன்" (1 இராஜாக்கள் 21: 21).

 

"ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படிக்கு, நான் ஆகாபுக்குச் சுவர்மேல் மூத்திரம் பெய்யும் ஒரு நாய் கூட இராதபடிக்கு இஸ்ரேலில் அவனுடையவர்களில் அடைபட்டவனையும், விடுபட்டவனையும் கருவறுப்பேன்" (2 இராஜாக்கள் 9: 8).

 

"கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற ஆடையை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக கழற்று என்றார். அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும்,வெறுங்காலுமாய் நடந்தான்.அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும், எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் கா¡¢யங்களுக்கு அடையாளமும், குறிப்புமாக என் ஊழியக்காரனகிய ஏசாயா நிர்வாணமாய் நடக்கிறதுபோல, அசீ¡¢ய ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும் வஸ்திரமில்லாமலும், வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, பிருஷ்டம் (பின்புறம்)  மூடப்படாதவராய்க் கொண்டுபோவான் என்றார்" (ஏசாயா 20: 2-4).

 

எகிப்தியரையும், எத்தியோப்பியரையும் நிர்வாணமாக்கி அவர்கள் வெட்கப்படும்படி பின்புறம்  (buttocks) மூடப்படாமல் நடக்கவைப்பதை ஒரு கேவலமான தண்டனையாகக் கருதும் கர்த்தர், தன் ஊழியக்காரனும், தீர்க்கத்தா¢சியுமான ஏசாயாவை மூன்று வருடங்கள் நிர்வாணமாக நடக்கவைத்திருப்பது எதற்காக? அப்படிப்பட்ட ஒரு தண்டனைக்கு அவன் என்ன பாவம் செய்தான்?

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

மீகா என்னும் மற்றொரு தீர்க்கத்தா¢சி: "நான் புலம்பி அலறுவேன்பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்நான் ஓ¡¢களைப்போல் (கிழ நா¢) ஊளையிட்டு ஆந்தைகளைப்போல் அலறுவேன்" என்று கூறுகிறார் (மீகா 1: 8). இதையெல்லாம் வாசிக்கும்போது பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கர்த்தருடைய மக்கள் தொடர்பாளராக விளங்கிய  தீர்க்கத்தா¢சிகளின் மனநிலையைச் சந்தேகிக்கத்தோன்றுகிறது. இப்படி அடிக்கடி ஆடைகளை அவிழ்த்துப்போட்டுவிட்டு நிர்வாணமாக நடப்பதும்ஊளையிடுவதும்மனதில் தோன்றியதையெல்லாம் பாலியல் வக்கிரம் கலந்த கெட்டவார்த்தைகளோடு பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்று நினைக்கவைக்கிறது.

 

பழைய ஏற்பாட்டில் உன்னதப்பாட்டு என்று அழைக்கப்படும் சாலமனின் பாடல்கள் என்ற புத்தகத்தில் 8 ஆம் அதிகாரத்தில் 1-3 வசனங்களில் கீழ்க்கண்டவாறு ஒரு காமக்காட்சி வர்ணிக்கப்படுகிறது. "ஆ! நீர் என் தாயின் பால்குடித்த சகோதரனைப் போலிருந்தீரானால் நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்என்னை நிந்திக்கவுமாட்டார்கள். நான் உம்மை என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்நீர் என்னை போதிப்பீர்கந்தவர்க்கமிட்ட திராட்சைமதுவையும்என் மாதுளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்ககொடுப்பேன். அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும்அவர் வலதுகை என்னை அணைக்கும்".

 

ஒரு பெண் அந்நிய ஆண்மகனிடம்: நீர் என் தாயிடம் பால்குடித்த என் சகோதரனைப்போல் தோற்றமுடையவராக இருப்பீரானால் உம்மை வெளியிலே பலர் முன்னிலையில் முத்தமிடுவேன்யாரும் சந்தேகிக்கமாட்டார்கள்நிந்திக்கவுமாட்டார்கள், (என் சகோதரன் என்றே நினைத்துகொள்வார்கள்,) நான் உம்மைத் ¨தா¢யமாக என் தாயின் வீட்டுக்கு அழைத்துச் செல்வேன்அங்கு நாம் உல்லாசமாக இருப்போம் என்று சொல்லுகிறாள். எவ்வளவு கள்ளத்தனமும்வேசித்தனமும் அவள் வார்த்தைகளில் இழையோடுகிறது பாருங்கள். விபச்சாரத்துக்குக் கொலைத்தண்டனை நியமத்தில் இருந்த காலத்தில் ஒரு பெண் ஆணைக் கள்ளத்தனமாய் விபச்சாரத்துக்கு அழைக்கும் காட்சியை ஒரு மறைநூலில் விவா¢த்திருப்பது விவேகம்தானா? 'என் மாதுளம்பழரசத்தை உமக்குக் குடிக்ககொடுப்பேன்என்று சொல்லுவதின் பொருளை இங்கே விளக்க இயலாது.

 

"அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும்அழகான வரையாடும் போலிருப்பாளாகஅவளுடைய ஸ்தனங்களே எப்போழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக" (நீதிமொழிகள் 5: 19). எப்பேர்பட்ட நீதிமொழி!

 

"உன் இரண்டு ஸ்தனங்களும் லீலி புஷ்பங்களில் மேயும் வெளிமான் குட்டிகளுக்கு சமம்.

என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்என் சகோதா¢யே! என் மணமகளே! உன் கண்களொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்நதுகொண்டாய். உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது என் சகோதா¢யே! என் மணமகளே! திராட்சைமதுவைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது. என் மணமகளே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறதுஉன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கின்றன" (உன்னதப்பட்டு 4: 5, 9-10).

 

சகோதா¢யுடன் சம்போகம் செய்தால் இருவருக்கும் மரணதண்டனை என்று லேவியராகமம் 20: 17 ல் சொல்லப்பட்டுள்ளது. அதே பைபிளில் சகோதா¢யை மணமகளாகக் கருதிச் செய்யும் காமக்களியாட்டங்கள் ரசித்து எழுதப்பட்டுள்ளது.  உன்னதப்பாட்டு என்ற இப்புத்தகம் முழுவதும் சாலமன் அரசனின் அநாகா¢கமான காமப்பிதற்றல்களால் நிறைந்திருக்கிறது.

 

தாவீது இராஜா பைபிளில் மிக முக்கியமான ஒரு வரலாற்றுப் புள்ளி. கர்த்தரால் ஜனிப்பிக்கப்பட்டவன் (Begotten Son of God) என்று பைபிள் கூறுகிறது (சங்கீதம் 2: 7). புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் இயேசு கிறிஸ்து 'தாவீதின் குமாரன்என்று அழைக்கப்படுகிறார். தாவீதின் நட்சத்திரம் என்று அழைக்கப்படும் ஐந்துமுக நட்சத்திரமேகிறிஸ்தவர்களுக்கு சிலுவை போல யூதர்களுக்கு தெய்வீக அடையாளமாகத் திகழ்கிறது. அப்படிப்பட்ட தாவீது என்னென்ன பாலியல்வன்மங்கள் செய்தார் என்று பைபிளில் விலாவா¡¢யாக விளக்கப்பட்டுள்ளது!

 

"ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது அரண்மனை உப்பா¢கையின்மேல் உலாவிக்கொண்டிருந்தபோதுஸ்நானம்பண்ணுகிற ஒரு பெண்ணை உப்பா¢கையின் மேலிருந்து கண்டான். அவள் வெகு சௌந்தர்யவதியாயிருந்தாள். தாவீது அந்தப் பெண் யாரென்று விசா¡¢க்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும்படைவீரனான உ¡¢யாவின் மனைவியுமான பெத்சேபா என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவ்ளை அழைத்துவரச்செய்தான். அவள் வந்தபோது அவளோடே சயனித்தான். சிலநாட்கள் சென்றபின் அவள் கர்ப்பம் தா¢த்திருந்ததை அறிந்துதான் கர்ப்பவதியாயிருக்கிறேன் என்று தாவீதுக்குச் செய்தி அனுப்பினாள் " (2 சாமுவேல் 11: 2-5). பின்னர் தாவீது அவள் கணவனைச் சதி செய்து கொன்றுவிட்டுஅவளைத் தன் மனைவியாக்கிக்கொண்டான்.  தாவீது ராஜாவுக்கும் பெத்சேபாவுக்கும் முறையற்ற உறவில் பிறந்த சாலமன் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவன் என்பதை இயேசுவின் வம்சாவழிப் பட்டியலிலிருந்து தொ¢யவருகிறது (மத்தேயு 1: 6).

 

ஒருவன் மற்றொருவனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால்பிறன் மனைவியோடே விபச்சாரம் செய்த அந்த விபச்சாரனும்அந்த விபச்சா¡¢யும் கொலைசெய்யப்படக்கடவர்கள் என்று லேவியராகமம் 20: 10 ல் சொல்லப்பட்டுள்ளது. இந்த சட்டம் அரசனாகிய தாவீதுக்குத் தொ¢யாதாஇந்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தாவீது கர்த்தருக்கு வேண்டப்பட்டவன். மக்கள் மத்தியில் பிரபலமான மன்னன். இயேசு இந்த தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்ற பெருமை வேறு. அப்படியானால் வலிமையுள்ளவனுக்கு ஒரு நீதிஎளியவனுக்கு மற்றொரு நீதி என்று போதிக்கும் இந்த வேதாகமத்திலிருந்து என்ன ஒழுக்கத்தையும்ஞானத்தையும் கற்றுக்கொள்ளப்போகிறோம்?

 

1 இராஜாக்கள் 1: 1-4 வரையுள்ள வசனங்களில் தாவீது சம்பந்தமாக மற்றொரு பாலியல்வக்கிரம் சொல்லப்பட்டுள்ளது. தாவீது இராஜாவுக்கு வயது முதிர்ந்து விருத்தனானபோது அவனுக்கு குளிருண்டாகி போர்வைகளால் மூடினாலும் அவனுக்கு உஷ்ணம் உண்டாகவில்லை. அப்போது அவனுடைய பணியாள்ர் அவன் மடியில் படுத்து அவனுக்கு சூடு உண்டாக்க கன்னிகையான ஒரு சிறு பெண்ணைத்தேடிசூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். அந்தப்பெண் மிக அழகாயிருந்தாள். அவள் அரசனுக்குப் பணிவிடை செய்தாள். ஆயினும் அரசன் அவளை அறியவில்லை (வயதுமுதிர்ந்து இயலாமையால் அவளோடு உடலுறவு கொள்ளவில்லை!).

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

யூதர்களின் வழக்கப்படி ஒரு குடும்பத்தில் மூத்தமகன் இளம்வயதில் வா¡¢சில்லாமல் இறந்துவிட்டால்அவனுடைய விதவையை இரண்டாவதுமகன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் அல்லது அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கவேண்டும். அவனும் இறந்துவிட்டால் மூன்றாவதுமகன் தன் கடமையைச் செய்யவேண்டும். யூதா என்பவனுக்கு மூன்று ஆண்மக்கள்மூத்தமகன் பெயர் ஏர்இரண்டாவதுமகன் ஓனான்மூன்றாவது சேலா. யூதா தன் மூத்தமகனாகிய ஏர் என்பவனுக்கு தாமார் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தான். அவன் கர்த்தா¢ன் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்தபடியால்கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். அப்பொழுது யூதா ஓனானை நோக்கி நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்துஉன் தமையனுக்கு சந்ததியை உண்டாக்கு என்றான். அந்த சந்ததி தன் சந்ததியாயிராதுதன் தமையனுடைய வா¡¢சாகத்தான் கருதப்படும் என்று ஓனான் அறிந்தபடியினாலேஅவன் தன் தமையன் மனைவியைச்சேரும்போதுதன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் இந்தி¡¢யத்தை தரையில் விழவிட்டுக் கெடுத்தான். அவன் செய்தது கர்த்தா¢ன் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால்அவனையும் அவர் அழித்துப்போட்டார்!

 

தன் மூத்த இரு மகன்களுக்கும் நேர்ந்தகதியே சேலாவுக்கும் ஏற்படும் என்று அஞ்சியதாலும்அவன் வயதில் இளைஞனாக இருந்ததாலும்யூதா தன் மருமகள் தாமாரை நோக்கி: சேலா பொ¢யவனாகுமட்டும் நீ உன் தகப்பன் வீட்டிலே போய் தங்கியிரு என்று சொல்லி அவளை அனுப்பிவிட்டான்.

 

சில ஆண்டுகள் சென்றபின்னர்தன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்கத்தா¢க்கத் திம்னாவுக்குக் கொண்டுபோகிறார் என்று தந்தை வீட்டிலிருந்த தாமார் தொ¢ந்துகொண்டாள். சேலா பொ¢யவனாகியும் தனக்கு அவன் கணவனாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால் (காமசுகத்திற்கு ஏங்கியபடியால்)முக்காடிட்டு தன்னை மூடிக்கொண்டுதிம்னாவுக்குப் போகிற வழியில் நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக்கண்டுஅவள் தன் முகத்தை மூடிக்கொண்டிருந்தபடியால்அவளை ஒரு வேசி என்று நினைத்துஅவளிடத்தில் போய் அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னோடு சேரும்படிக்கு என்னோடு வருவாயா என்றான். அதற்கு அவள்: நீர் எனக்கு என்ன தருவீர் என்று கேட்டாள். யூதா: நான் மந்தையிலிருந்து  ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடமானம் கொடுப்பீரா என்றாள். அடமானமாக அவனுடைய முத்திரை மோதிரம்ஆரம்கைக்கோல் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டாள். அவன் அவைகளைக்கொடுத்து அவளிடத்தில் சேர்ந்தான். அவள் மாமனாருடன் சேர்ந்து கர்ப்பவதியானாள் (ஆதியாகமம் 38: 1-19). மாமனா¡¢டத்தில் தன் விரகதாபத்தைத் தணித்துக்கொண்ட தாமாருக்கு பெரேஸ்ஜாரா என்று இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.  தாமாருக்கும் அவளுடைய மாமனாருக்கும் முறையற்ற உறவில் பிறந்த மகனாகிய பெரேஸ் என்பவன் இயேசு கிறிஸ்துவின் முன்னோர்களில் ஒருவன் என்றுஅவருடைய வம்சத்தினர் பட்டியலிலிருந்து தொ¢ந்துகொள்கிறோம் (மத்தேயு 1: 3).

 

பைபிளில் வரும் கதாபாத்திரங்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதிலும் சளைத்தவர்களில்லை. பாலஸ்தீனத்தில் எபிரேயமொழியில் தூதாயிம் (Dudayim) என்று அழைக்கப்படுகிற ஒரு செடியின் கனிகள் போதையைத்தரவல்லது. ஆங்கில பைபிளில் மான்ட்றேக் (Mandrake) என்று மொழிபெயர்த்துள்ளார்கள். சமஸ்கிருதத்திலும்தாவரவியலிலும் இது மந்திரகோரை என்று அழைக்கப்படுகிறது. மந்திரகோரையின் வேர்கள்தாம் போதையளிக்கும் குணமுள்ளது. ஆனால் பைபிளில் கூறப்படும் தூதாயிம் செடியில் அதன் கனிகளே பயன்படுத்தப்படுகிறது.

 

"கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய்தூதாயிம் கனிகளைக் கண்டெடுத்துஅவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான்.அப்பொழுது அவளுடைய சகோதா¢யான ராகேல் உன் குமாரன் கொண்டுவந்த தூதாயிம் கனிகளில் எனக்கும் சிலவற்றைத் தா என்று கேட்டாள். அதற்கு லேயாள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகா¡¢யமாஎன் குமாரனுடைய தூதாயிம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள். அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயிம் கனிகளுக்கு ஈடாக இன்றிரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்." (ஆதியாகமம் 30: 14-15).

 

யாக்கோபின் இரண்டாவது மனைவியாகிய ராகேல் தன் தமக்கையும்யாக்கோபின் முதல் மனைவியுமான லேயாளிடத்தில் போதைதரும் கனிகளைப் பெற்றுக்கொண்டு தான் கவர்ந்துவைத்திருக்கும் யாக்கோபை ஒரு இரவுக்குமட்டும் அவளுக்கு விட்டுக்கொடுக்கும் காட்சி இங்கே சித்தா¢க்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை மறைநூல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது!

 

"அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்திராட்சைக்கொடி துளிர்த்து அதன் பூ மலர்ந்ததோ என்றும்மாதுளஞ்செடிகள் பூத்ததோ என்றும் பார்ப்போம்அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன். தூதாயிம் பழவாசனை வீசும்நமது வாசல்களண்டையிலே புதியவைகளும்பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளும் உண்டு. என் நேசரே! அவைகளை உமக்காக வைத்திருக்கிறேன்" (உன்னதப்பாட்டு 7: 12-13).

 

காதலர்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் அதிகாலையில் தொடங்கி தூதாயிம் பழங்கள் போன்ற போதைப்பொருட்கள் அவர்களுக்குத் தேவைப்படும் என்பது இந்த வசனங்களில் தொ¢கிறது. மறைக்கப்படவேண்டிய போதைப்பழக்கங்களை மக்களிடையே அங்கீகா¢க்கப்பட்ட கலாச்சாரமாக பைபிள் காட்டுகிறது.

 

ஒருசமயம் "சமா¡¢யாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும்புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை மக்கள் முற்றுகையிட்டார்கள். இஸ்ரேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில் ஒரு ஸ்தி¡£ அவனைப்பார்த்துக் கூப்பிட்டுராஜாவாகிய என் ஆண்டவனேஇரட்சியும் என்றாள். இராஜா  அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்தி¡£ என்னை நோக்கி: உன் மகனைத் தாஅவனை இன்று சமைத்துத் தின்போம்நாளக்கு என் மகனைத் தின்போம் என்றாள். அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்மறுநாளில் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்அவள் தன் மகனை ஒளித்து வைத்துவிட்டாள்." நீதி வழங்குங்கள் என்றாள் (2 இராஜாக்கள் 6: 25-29).

 

பிள்ளைகளுக்காகத் தன் உயிரையும் விடத்துணியும் தாய்மாரை அறிந்திருக்கிறோம். ஆனால்

என்னதான் கொடிய பஞ்சமென்றாலும்தன் பிள்ளைகளைத் தானே சமைத்துத் தின்று  பசிதீர்க்கும் கொடிய தாய்மாரைப் பற்றி பைபிள் தவிர வேறு எந்த புத்தகத்திலும் காணமுடியாது.

 

"நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தியா¢ன் எ¡¢பந்தமான பருக்களினாலும்மூலவியாதினாலும்சொறியினாலும்சிரங்கினாலும் வாதிப்பார். பெண்ணை உனக்கு நியமிப்பாய் (உனக்கென்று ஒரு பெண்ணை திருமணத்துக்கு நிச்சயிப்பாய்ஆனால்)வேறொருவன் அவளோடே சயனிப்பான். உன் குமாரரும்குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்குகர்த்தர் உன்னை முழங்கால்களிலும்தொடைகளிலும் கொடிய எ¡¢பந்தமான பருக்களினாலே வாதிப்பார்" (உபாகமம் 28: 27-35).  தன்னை வணங்காததன் கட்டளைகளைப் பின்பற்றாத மக்களை எப்படியெல்லாம் கேவலமாகத்  தண்டிப்பேன் என்று சர்வ வல்லமையுடைய தேவன் என்று போற்றபடுகிற கர்த்தர்கிராமத்து தேவதை தன்மேல் இறங்கியதாகப் பாவனை செய்துகொண்டு மக்களைப் பயமுறுத்தும் பூசா¡¢போல் பயமுறுத்துகிறார். பழைய ஏற்பாட்டுப் புத்தகங்கள் அனைத்திலும் கர்த்தா¢ன் இம்மாதி¡¢யான  பயமுறுத்துதல்களுக்குப் பஞ்சமேயில்லை.

 

"அதை (உணவை) வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாகஅது மனுஷனிலிருந்து கழிந்த மலத்தோடு அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக. இஸ்ரேல் புத்திரர் நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே.தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்" (எசேக்கியேல் 4: 12-13).

 

கர்த்தருக்குக் கோபம் வந்தால் தன்னால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான இஸ்ரேல் புத்திரரை'க்கூட எப்படிப்பட்ட கேவலமான உணவை சாப்பிட வற்புறுத்துகிறார் பாருங்கள். தமிழ் பைபிளின் மொழிபெயர்ப்பாளர் 'மனுஷனிலிருந்து கழிந்த மலத்தோடு சுடப்படுவதாக'  என்பதைச் சற்று கௌரவமாக 'மலத்தின் வறட்டிகளால் சுடப்படுவதாகஎன்று மொழிபெயர்த்திருக்கிறார். அதாவது மனுஷமலத்தை அடையாகச் சுட்டு சாப்பிடச் சொல்லவில்லைமனுஷமலத்தின் வறட்டிகளை எ¡¢பொருளாகவைத்து (வாற்கோதுமை) அடைகளைச் சுட்டுச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார் என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார். சில ஆங்கில பதிப்புகளிலும் அவ்வாறே இருக்கிறது. ஆனால் மூலநூலான எபிரேயமொழி பழைய ஏற்பாட்டிலும், KJV பழைய ஆங்கிலமொழிபெயர்ப்பிலும் 'மலத்தோடு சுடப்படுவதாகஎன்றுதான் உள்ளது.

 

"அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும்,தங்கள் மூத்திரத்தைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனிதா¢டத்து அல்லாமல்உன் எஜமானா¢டத்தும்உன்னிடத்தும் என் எஜமானர் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொன்னான்" (2 இராஜாக்கள் 18: 27; ஏசாயா 36: 12).

 

மனிதர்கள் தங்கள் மலத்தை உண்பதும்தங்கள் மூத்திரத்தைக் குடிப்பதுமான கேவலமான விஷயங்களை ஒரு மறைநூலில் எழுதக்கூடாது என்று எழுதியவர்களுக்குத் தொ¢யவில்லை என்றாலும்பொ¢யவர்கள் இதிலிருந்து என்ன நல்ல கருத்தைத் தொ¢ந்துகொண்டார்களோ இல்லையோசிறுவர்கள் இதை வாசித்தால் அவர்கள் பண்பாட்டு வளர்ச்சி என்ன ஆகும்?

 

''உன் ஆயுதங்களோடே ஒரு சிரு கோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது. நீ மலஜலம் கழிக்கப் போகும்போதுஅதனால் மண்ணைத் தோண்டிமலஜலம் கழித்துஉன்னிடமிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய். உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும்உன் சத்துருக்களை உன்னிடத்தில் ஒப்புவிக்கவும் உன் பாளயத்துக்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்ஆகையால் அவர் உன்னிடத்தில் அசுசியான கா¡¢யத்தைக்கண்டுஉன்னைவிட்டுப் போகாதபடிக்குஉன் பாளயம் சுத்தமாயிருக்ககடவது" (உபாகமம் 23: 13-14).

 

வெட்டவெளியில் படைவீடு அமைத்திருக்கும்போது படைவீரர்கள் கடைப்பிடிக்கவேண்டிய சுகாதாரம் சம்பந்தமான ஒரு நல்ல பழக்கத்தை இந்த வசனங்கள் போதிக்கின்றன என்றாலும்கடவுள் தன்னுடைய படைவீரர்களைப் பார்வையிட ஒரு மனிதனைப்போலஅதுவும் வெறுங்காலுடன் தரையில் உலாவிக்கொண்டிருப்பார் என்பது எவ்வளவு ஆச்சா¢யம்!

 

"மோவாபிற்காக என் குடல்களும்கிரோரெசுக்காக என் உள் உறுப்புகளும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கின்றன" என்று தீர்க்கத்தா¢சி கூறுகிறார் (ஏசாயா 16: 11).

 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பாலஸ்தீனத்தில் யாழ் போன்றதொரு தந்தி வாத்தியம் சுரமண்டலம் (Harp) என்ற பெயா¢ல் இருந்ததாக பைபிளில் சொல்லப்படுகிறது. ஏசாயா தீர்க்கத்தா¢சி தன் குடல்களிலிருந்து வெளியேறும் கழிவுக்காற்றின் ஓசையை அந்த சுரமண்டலத்தின் இனிய இசையோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். தீர்க்கத்தா¢சிக்குத்தான்

என்னவொரு ரசனைஇசைஞானம்கவிதைநயம் பாருங்கள்! பா¢சுத்த வேதாகமத்தின் அத்தனை வாசகங்களும் தேவனுடைய வசனங்கள் என்று வாதிடும் கிறிஸ்தவர்கள் இம்மாதி¡¢யான வசனங்களுக்கு என்ன சொல்வர்கள் என்று தொ¢யவில்லை. தமிழ் பைபிளில் உள் உறுப்புகள்என்ற வார்த்தைகள் 'உள்ளம்" என்று மாற்றி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. KJV ஆங்கில பைபிளிலும்மூல நூலான எபிரேய மொழி பழைய ஏற்பாட்டிலும் 'உள் உறுப்புகள்' (inward parts) -(அதாவது குடல்கள்’) என்றே இருக்கிறது.

 

"விதையடிக்கப்பட்டவனும்கோசம் அறுபட்டவனும் (ஆண்குறி துண்டிக்கப்பட்டவன்) கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.பத்தாம் தலைமுறையானாலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது" (உபாகமம் 23: 1-3).

 

வெளிப்பார்வைக்குக் கருணையைப் போதிக்கும் கிறிஸ்தவமதத்தில் உள்ளே சென்று பார்த்தால் வன்முறையும்முட்டாள்தனமான கொடூரமுமே காணப்படுகிறது. ஒருவன் விபத்தில் தன் விதைகள் மற்றும் ஆணுறுப்பு காயமுற்று அகற்றப்பட்டிருந்தாலும்அல்லது திருநங்கையாக இருந்தாலும் அல்லது விபத்துக்குட்பட்டோபுற்றுநோய்க்கு ஆளாகி ஆணுறுப்பு அகற்றப்பட்டிருந்தாலோஅவன் நீதிமானாக இருந்தாலும்தீவிர மதப்பற்று உள்ளவனாக இருந்தாலும்  ஆலயத்தில் அனுமதிக்கப்படலாகாது என்று மறைநூல் சொல்லுகிறது. தாய் வேசியாக இருந்தால் அவள் பிள்ளை என்ன தவறு செய்ததுமேலும் பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டுஅதனால் கர்ப்பமுற்ற ஒரு அபலைப்பெண்ணின் பிள்ளை (illegitimate child) என்ன தவறு செய்ததுஅதிலும் அவன் மட்டுமல்ல அவனுடைய பத்து தலைமுறை வா¡¢சுகளும் தேவாலயத்தில் அனுமதிக்கப்படக்கூடாது. தந்தை லோத்துக்கு அவருடைய இரு மகள்களும் மது ஊற்றிக்கொடுத்து அவர் மயக்கத்திலிருக்கும்போது அவரோடு உறவுகொண்டு பெற்றெடுத்த பிள்ளைகள்தாம் மோவாப் மற்றும் பென்னம்மி (அம்மோன்) என்பவர்கள். அவர்களுடைய சந்ததியினர் என்றைக்கும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்று பைபிள் கூறுகிறது. ஆனால் அதே பைபிளில் மோவாபின் சந்ததியில் வந்த ரூத் என்ற விதவைப்பெண்ணை மிகவும் சிலாகித்து அவளுடைய கதையைச் சொல்வதற்காகமட்டும் தனியாக 'ரூத்என்ற ஒரு புத்தகத்தையே ஒதுக்கியிருக்கிறார்கள்! போவாஸ் என்பவன் உறங்கிக்கொண்டிருக்கும்போது அவளே வலியச்சென்று அவன் போர்வைக்குள் ரகசியமாக நுழைந்து படுத்துக்கொண்டுஅவன் விழித்தவுடன் தன்னை அனுபவிக்கக் கொடுத்துபின் அவனுக்கு மனைவியான அவளுக்குப் பிறந்த ஓபேத் என்பவன் இயேசு கிறிஸ்துவின் வம்சவழிப்பட்டியலில் அவருடைய ஒரு முன்னோராகக் குறிப்பிடப்பட்டிருப்பதாலா? (மத்தேயு 1: 5). இத்தகைய  குளறுபடிகளும்பாலியல் வக்கிரங்களும் பைபிள் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard