புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு சுவிசேஷங்களிலும் முதன்முதலில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் மாற்குவின் சுவிசேஷம் யோவான் ஸ்நானகனைப் (John, the Baptist) பற்றிய குறிப்போடுதான் ஆரம்பிக்கிறது. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கென்று மனம் திருந்துதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். அப்போது யூதேயா தேசத்தார் அனைவரும், எருசலேம் நகரத்தார் அனைவரும், அவனிடத்தில் போய் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞாஸ்நானம் பெற்றார்கள் (மாற்கு 1: 4,5). மாற்குவின் பிரச்சினை என்னவென்றால் இயேசுவின் காலத்தில் பாலஸ்தீனத்தில் யோவான் ஸ்நானகன் இயேசுவைவிடப் பிரபலமானவாக இருந்தான். ஆகையால் அவனை முன்னிறுத்தியே தன் நூலைத் தொடங்கவேண்டியிருந்தது.
மேலும் மாற்குவின் சுவிசேஷ ஆசி¡¢யருக்கு இயேசுவை மேசியாவாக உயர்த்தவேண்டுமெனில் யோவானை இயேசுவின் வருகைக்கு முன்னறிவிப்பாளனாகக் காண்பிக்கவேண்டிய அவசியமும் வந்தது. அதற்கு ஆதாரமாக ஏசாயா 40: 3-5 வரையுள்ள வசனங்களைச் சற்று மாற்றியமைத்து உரைத்திருக்கிறார் (மாற்கு 1: 2,3). 'கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும், கர்த்தா¢ன் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க்காணும் என்றும், கர்த்தா¢ன் வாக்கு உரைத்தது என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று' என்றும் ஏசாயா தீர்க்கத்தா¢சி வேறு ஏதோ பொதுவில் கூறப்போக அதை, யோவான் வனாந்தரத்தில் உபதேசம் செய்து வாழ்ந்துவந்தான் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வாசகங்கள் (ஏசாயா 40: 3-5) யோவான் ஸ்நானகனைப் பற்றிய தீர்க்கத்தா¢சனம்தான் என்று எழுதி மாற்குவும், மத்தேயுவும் நம்மை நம்பவைத்துள்ளனர்.
லூக்காவின் சுவிசேஷத்திலும் முதலில் யோவானின் கதையே கூறப்படுகிறது. தேவாலயத்தில் ஆசா¡¢யனாக பணிபு¡¢ந்த சகா¢யாவுக்கும் அவன் மனைவி எலிசபெத்துக்கும் யோவான் மகனாய் பிறப்பான் என்று தேவதூதன் வந்து சகா¢யாவிடம் சொல்லுகிற காட்சிகள் யாவும் இயேசு பிறப்பதற்குமுன் நடந்த நிகழ்வுகளையே நினைவுபடுத்துகின்றன (லூக்கா 1: 11-14). யோவானின் சுவிசேஷமும் யோவான் ஸ்நானகனால் இயேசு மக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் காட்சியிலேயே ஆரம்பமாகிறது.
ஞானஸ்நானம் (baptism) மற்றும் ஸ்நானகன் (baptist) என்ற சொற்கள் இப்பொழுது மிகவும் பா¢ச்சயமானதாக இருந்தாலும் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யாரும் அறியாத வார்த்தைகளாக இருந்தன. கிரேக்கச் சொல்லான (baptizein) என்ற வார்த்தையிலிருந்து (baptist) என்ற ஆங்கில வார்த்தை வந்தது. கிரேக்க வார்த்தைக்கு அநேகமாக (tabla) என்ற அராமைக் / எபிரேய வார்த்தை அடிபடையாக இருந்திருக்கலாம். எபிரேய மொழியில் யோவான் ஸ்நானகன் என்ற பொருளில் ஹாத்தொபெல் (hat-tobel) என்று அழைக்கப்பட்டார். யோவானுக்கு முன்னதாக எத்தனையோ தீர்க்கத்தா¢சிகள் இருந்தும் அவர்களுள் எவரும் ஸ்நானகன் என்று அழைக்கப்படவில்லை. மாற்குவின் சுவிசேஷத்தில் யோவான் 'வனாந்தரத்தில் ஞானஸ்நானம் கொடுத்துவந்தான்' என்று அறிமுகப்படுததப்படுகிறார். லூக்காவின் சுவிசேஷத்தில் ' மக்களுக்கு புத்திமதிகளைச் சொல்லி, நற்செய்தியையும் அறிவித்த போதகர்' என்று வர்ணிக்கப்படுகிறான் (லூக்கா 3: 18). யோவானின் சுவிசேஷத்திலும் யோவான் ஸ்நானகன் தேவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் என்ற நிலைக்கு உயர்த்திக் கூறப்படுகிறார் (யோவான் 1: 6-8). யோவான் வனாந்தரத்தில் நின்று 'மனம் திருந்துங்கள், தேவனுடைய ராஜ்யம் சமீபத்திருக்கிறது' என்று பிரசங்கம் பண்ணினான் என்று மத்தேயு 3: 2 ல் சொல்லப்படுகிறது. யோவான் காவலில் வைக்கப்பட்டபின்பு, இயேசு கலிலேயாவில் வந்து, 'காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபத்திருக்கிறது, மனம்திருந்தி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்' என்று யோவானுடைய உபதேசத்தையே அவரும் உபதேசிபப்பதாக மாற்கு 1: 14,15 ல் கூறப்படுகிறது.
மாற்குவின் சுவிசேஷத்தில் யோவான் கொடுத்துவந்தது 'பாவமன்னிப்புக்கென்ற மனம்திருந்துதலுக்கேற்ற ஞானஸ்நானம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது (மாற்கு 1: 4). ஜோசிபஸ் (Josephus) என்ற முதல் நூற்றாண்டு யூதவரலாற்று ஆசி¡¢யர் 'யூதர்களின் பழமை' (Antiquities of Jews) என்ற தன் நூலில் 'யோவான் பாவநிவாரணத்திற்கான ஞானஸ்நானம் வழங்கிவந்தான்' என்று குறிப்பிடுகிறார் (Antiquities 18: 117). யூதர்களின் பாரம்பா¢யக் கலாச்சாரத்தில் இது ஒரு புதியநிலையாக இருந்தது. யூதர்களின் நியாயப்பிரமாணத்தின்படி (Torah) அவர்கள் தங்கள் பாவநிவாரண்த்திற்குத் தேவாலயத்தில் மிருகங்களையும், பறவைகளையும் பலியிட்டுவந்தனர். யோவானின் ஞானஸ்நானம் மாமிசபலியைத் தவிர்க்கும் புதியவழியாகப் பார்க்கப்பட்டது. பாவங்களை அறிக்கையிட்டு நீ¡¢ல் மூழ்கி எழுந்தால் ஜெகோவா பாவங்களை மன்னிப்பார் என்ற புது கருத்தியலை யோவான் புகுத்தினாலும், அவன் ஆலயத்தில் மிருகங்களைப் பலியிடும் யூதர்களின் வழக்கத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. தேவாலயத்து ஆசா¡¢யர்கள் யோவானை இந்த விஷயத்தில் எப்படிப் பார்த்தார்கள் என்று பைபிளில் எதுவும் கூறப்படவில்லை. ஆனால் இயேசுவைப் பகைவராகப் பார்த்த பா¢சேயரும், சதுசேயரும் யோவானை அப்படி நோக்கவில்லை, அவர்கள் அவனிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வந்தார்கள் (மத்தேயு 3: 7-12).
அப்போஸ்தலருடைய நடபடிகளில் இயேசுவின் இறைப்பணியைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது 'யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, இயேசு நம்மிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட நாள் வரைக்கும்' என்று வரைவிடப்படுகிறது (அ.ந. 1: 21). இயேசு வெளிப்படுவதற்கு முன்னே மனம்திருந்துதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்து யோவான் இஸ்ரேலியர் யாவருக்கும் பிரசங்கித்தான் என்று மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகள் 13: 24 ல் சொல்லப்படுகிறது.
இயேசு யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுகொண்டார் என்று முதல் இரண்டு சுவிசேஷங்களும் கூறுகின்றன (மத்தேயு 3: 15,16,17; மாற்கு 1: 9,10,11). இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன் பா¢சுத்த ஆவி ஒரு புறா வடிவில் இயேசுவின் மீது இறங்கியது என்று மூன்று சுவிசேஷங்களுமே குறிப்பிடுகின்றன. உடனே வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி 'நீர் என் நேசகுமாரன், நான் உம்மில் பி¡¢யமாக இருக்கிறேன்' என்று சொன்னதாக மாற்குவும், லூக்காவும் சொல்கிறார்கள். இந்த வார்த்தைகள் இயேசுவை நோக்கி ஜெகோவா நேரடியாகச் சொன்ன வார்த்தைகளாக இருக்கின்றன. மத்தேயுவில் அசா£¡¢ ' இவர் என்னுடைய நேசகுமாரன் , நான் இவா¢ல் பி¡¢யமாக இருக்கிறேன்' என்று சொல்லுகிறது. இது இயேசுவிடம் நேரடியாகச் சொல்லாமல் அங்கே நின்றுகொண்டிருந்த மக்களுக்கு அல்லது யோவான் ஸ்நானகனுக்குச் சொன்னதாகப்படுகிறது. மூன்றாம் சுவிசேஷமான லூக்காவில் இயேசு யோவானிடமிருந்து ஞானஸ்நானம் பெற்றதாகச் சொல்லப்படவில்லை.
இயேசு ஞானஸ்நானம் பெறுவதற்காக யோர்தான் நதிக்கரைக்கு வந்து சேருமுன்னரே காற்பங்கு தேசாதிபதியான ஏரோது யோவானைச் சிறைக்காவலில் வைத்துவிட்டான் (லூக்கா 3: 19-20). அதன் பின்புதான் இயேசு ஞானஸ்நானம் பெற வருகிறார், 'ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்றார்' (லூக்கா3: 21) அவ்வளவுதான். இயேசு யா¡¢டம் ஞானஸ்நானம் பெற்றார் என்பதும் சொல்லப்படவில்லை. யோவானின் சீடர்கள் யாராவது இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருக்கலாம்.
யோவானின் சுவிசேஷத்தில், யோவான் ஸ்நானகன் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததைப் பற்றி எதுவும் சொல்லாமல், 'தேவ ஆவியானவர் இவர்மேல் புறாவைப்போல் வந்து இறங்குவதைக்கண்டேன்' என்று சாட்சி சொல்வதாக எழுதப்பட்டுள்ளது. அசா£¡¢ வாக்கைப் பற்றிய குறிப்பெதுவும் இல்லை. இப்படி நான்கு சுவிசேஷங்களும் முரண்பாடுகளின் களஞ்சியமாக விளங்குகின்றன.
ஏசாயா 61: 1 ல் ' ஜெகோவாவின் ஆவி என்மேல் இருக்கிறது, சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க ஜெகோவா என்னை அபிஷேகம் செய்தார்' என்று தீர்க்கத்தா¢சி சொல்லுகிறார். அப்போஸ்தலருடைய நடபடிகள் 10: 38 ல் 'நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பா¢சுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்' என்று பேதுரு சொன்னதாகக் கூறப்படுகிறது. எனவே இயேசுவை 'கிறிஸ்து' அதாவது அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று நிலைநாட்டவே இயேசு ஸ்ஞானஸ்நானம் பெறுகையில் பா¢சுத்த ஆவி புறா வடிவில் அவர்மேல் இறங்கும் கதை ஜோடிக்கப்பட்டுள்ளது என்று தொ¢கிறது
'இதோ நான் ஆதா¢க்கிற என் தாசன்,நான் தொ¢ந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பி¡¢யமானவரும் இவரே' என்று ஜெகோவா சொல்லுவதாக ஏசாயா 42: 1 ல் கூறப்பட்டுள்ளது. சங்கீதம் 2: 7 ல் 'கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்' என்று ஜெகோவா சொல்லுவதாக தாவீது கூறுகிறார். இவற்றைப் பின்பற்றியே இயேசு ஸ்ஞானஸ்நானம் பெறும்போது அசா£¡¢ வாக்கு இயேசுவை நோக்கி, ' நீர் என்னுடைய நேசகுமாரன், நான் உம்மில் பி¡¢யமாயிருக்கிறேன்' கூறுவதாக எழுதப்பட்டுள்ளது (மாற்கு 1: 11) என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இயேசு ஸ்ஞானஸ்நானம் பெறுவதற்குமுன் தன் பாவங்களை அறிக்கையிட்டாரா என்று யாரும் சொல்லவில்லை. மேலும் தேவனுடைய குமாரன் என்று அறிமுகப்படுத்தப்படுகிற இயேசு எதற்காக யோவானிடம் பாவமன்னிப்புக்கு ஞானஸ்நானம் பெறவேண்டும்? அதற்கு என்ன அவசியம்? இயேசு யோவானிடம் சீடராகச் சேர்வதற்காகத்தான் அவனிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார் என்று கொள்ளலாம். அவனிடமிருந்துதான் இயேசு ‘பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது; அதை அடைவதற்கு மனம்திருந்தி பாவமன்னிப்பைப் பெறவேண்டும்’ என்ற கருத்தியலைப் பெற்றிருக்கவேண்டும். ஏனெனில் இதைத்தான் இயேசு தன் கடைசி விருந்து வரைப் போதித்துக் கொண்டிருந்தார். யோவான் ஒரு எஸ்ஸேனியர் (essene). அவன் ஒட்டக மயிர் உடையைத்தா¢த்து, வார்க்கச்சையும் அரையில் கட்டி, வெட்டுக்கிளியும் தேனும் உணவாகக்கொண்டு, மது அருந்தாதவனாக வனந்தரங்களில் துறவு வாழ்க்கை வாழ்ந்துவந்தான் (மாற்கு 1: 6; மத்தேயு 3: 4). சிலநாட்கள் அவனுடன் இருந்த இயேசு வனாந்தரவாழ்க்கை பிடிக்காமல் நகரவாழ்க்கைக்குத் திரும்பினார் என்று கருதவேண்டியுள்ளது.
யோவானிடம் ஞானஸ்நானம் பெற்று அவனுக்கு சீடர்களாயிருந்தவர்கள் அவன் காலத்துக்குப்பின் பவுலிடம் வந்தார்கள். பா¢சுத்த ஆவியைப் பற்றிய பவுலின் கேள்விக்கு அவர்கள், எங்களுக்கு பா¢சுத்த ஆவியைப் பற்றி எதுவும் தொ¢யாது என்றார்கள். மேலும் அவர்கள் பன்னிருவராக இருந்தனர் என்று சொல்லப்பட்டுள்ளது (அப்போஸ்தலருடைய நடபடிகள் 19: 1-7). இயேசுவுக்கும் பன்னிரண்டு சீடர்கள்! இயேசு யோவானிடம் ஞானஸ்நானம் பெற்றபோது பா¢சுத்த ஆவி புறா வடிவில் வந்து அவர் மேல் இறங்கியதை தான் கண்டதாக யோவான் சாட்சி கொடுத்துள்ளான் (யோவான் 1: 32). பா¢சுத்த ஆவி புறா வடிவில் வந்து அவர் மேல் இறங்கியது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல. அப்படியிருக்கும்போது யோவான் ஸ்நானகன் தன்னிடம் பயிற்சி பெற்ற சீடர்களிடம் பா¢சுத்த ஆவியைப் பற்றி எதுவும் சொல்லியிருக்கவில்லை என்றால் நம்பமுடிகிறதா? பா¢சுத்த ஆவியானவர் புறாவைப்போல் இயேசுவின்மேல் வந்து இறங்கியதாக நான்கு சுவிசேஷங்களிலும் சொல்லப்படுவது கற்பனையேயன்றி வேறென்ன?
அக்கினியைத் தாங்கும் பொன், வெள்ளி,வெண்கலம், இரும்பு போன்றவைகளைச் சுத்தமாகும்படிக்கு அக்கினியிலே போட்டெடுக்கக்கடவீர்கள்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவை சுத்திகா¢க்கப்படவேண்டும் என்று எண்ணாகமம் 31: 22,23 ல் சொல்லப்படுகிறது. 'ஜெகோவாவின் நாவு பட்சிக்கிற அக்கினி போல இருக்கும். அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும்' இருக்கும் என்று ஏசாயா 31: 27,28 ல் சொல்லப்படுகிறது. கிரேக்கமொழியில் ந்யூமா (pneuma) என்ற வார்த்தை (எபிரேயமொழி/அராமைக்: ரூவாஹ் [ruah]) காற்று, சுவாசம், ஆவி (spirit) என்று பலவாறு பொருள்படும். மேலும் மல்கியா 3: 3 ல் 'ஜெகோவா லேவியின் புத்திரரைச் சுத்திகா¢த்து, அவர்களைப் பொன்னைபோலவும், வெள்ளியைப்போலவும் (அக்கினியில்) புடமிடுவார்' என்று கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய வசனங்களைப் பின்பற்றியே, யோவான்: நான் தண்ணீரால் மட்டும் ஸ்ஞானஸ்நானம் கொடுக்கிறேன், அவரோ பா¢சுத்த ஆவியாலும், அக்கினியாலும் ஸ்ஞானஸ்நானம் கொடுப்பார் என்று இயேசுவை உயர்த்திக்கூறுவதாகச் சுவிசேஷங்களில் சொல்லப்பட்டுள்ளது (மத்தேயு 3: 11;லூக்கா 3: 16).
இயேசு யோவானைக் குறித்துப் பேசும்போது மிக உயர்வாகச் சொல்லுகிறார். 'ஸ்தி¡£களிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பொ¢யவன் ஒருவனுமில்லை' (மத்தேயு 11: 11). புறந்தள்ளப்பட்ட தோமாவின் சுவிசேஷத்தில் இயேசு சொல்கிறார்: 'ஆதாம் முதல் இன்றுவரை ஸ்தி¡£களிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிட உயர்ந்தவன் எவனுமில்லை' (தோமா 46). இயேசுவே தன் குருவான யோவானைப் பற்றிச் சொல்லும்போது அவனைத் தன்னைவிட உயர்ந்தவனாகக் குறிப்பிடுகிறார். ஒரு நல்ல மாணவனின் இலக்கணம் இதுவே. அது மட்டுமல்ல, மக்கள் மத்தியில் யோவானின் மதிப்பு அவ்வாறாக இருந்தது.
யோவானின் புகழ் கலிலேயா முதல் யூதேயா வரைப் பரவிக்கொண்டிருக்கும்போது மக்களெல்லாரும் அவன் தான் கிறிஸ்துவோ என்று எண்ணம் கொண்டிருந்தார்கள் (லூக்கா 3: 15). அவன் நான் கிறிஸ்து அல்ல என்று சொன்னபோது அப்படியானால் நீர் யார், எலியாவா என்று கேட்டார்கள் (யோவான் 1: 21).
யோவான் ஸ்நானகன் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த எலியா (Elijah) தீர்க்கத்தா¢சியின் மறுஅவதாரம் என்று சுவிசேஷங்களில் பல இடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிடப்படுகிறது. எலியா மயிர் உடையைத்தா¢த்து, வார்க்கச்சையை தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் (2 இராஜாக்கள் 1: 8). யோவானும் அதுபோல்
ஒட்டகமயிர் உடையைத்தா¢த்து, வார்க்கச்சையை அரையில் கட்டிக்கொண்டவனாக இருந்தான் (மாற்கு 1: 6; மத்தேயு 3: 4). யோவான் உனக்கு மகனாய்ப்பிறப்பான் என்று அவனுடைய தந்தையான சகா¢யாவுக்கு முன்னறிவித்த தேவதூதன், 'யோவான் எலியாவின் ஆவியும், பலமும் உடையவனாய் கர்த்தருக்கு முன்னே நடப்பான்' என்று கூறுகிறான் (லூக்கா 1: 17). மாற்கு 9: 13 ல் இயேசுவும்: எலியா வந்தாயிற்று என்று ஆமோதிக்கிறார் (மாற்கு 9:13; மத்தேயு 17: 12). ஆரம்பகால கிறிஸ்தவர்கள் யோவானை இயேசுவுக்கு சமமான அந்தஸ்து உள்ள ஒரு தீர்க்கத்தா¢சியாகவே கருதினர்.
மனம் திருந்தி, எவனொருவன் தன் பாவங்களை அறிக்கையிட்டு ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் தேவனுடைய ராஜ்யத்தை அடைவதற்குத் தகுதி பெறுகிறான் என்ற யோவானின் கருத்தியல் யூதர்களை மிகவும் கவர்ந்திருந்தது. ஆசாரமான கருத்துக்களையுடைய பா¢சேயரும், ரோமானிய அரசுக்கு மறைமுக ஆதரவு கொடுத்துவந்த யூதர்களான சதுசேயரும் ஞானஸ்நானம் பெறுவதற்காக யோவானை நாடிவந்தனர். இப்படி யோவான் சமூகத்தில் உயர்ந்துகொண்டே போவது அரசுக்கு எதிரான புரட்சிக்கு வழிவகுக்குமோ என்று பயந்த ஏரோது அந்திபா (Herod Antipas) யோவனைக் கைது செய்து சிறையிலிட்டுச் சில காலம் சென்றபின் அவனைக் கொலை செய்தான் என்று வரலாற்று ஆசி¡¢யர் ஜோசிபஸ் கூறுகிறார் (Antiquities of Jews by Josephus 18:118,119). ஆனால் சுவிசேஷங்களில் எரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியை தன் மனைவியாக்கிக் கொண்டதை நியாயம் அல்லவென்று யோவான் சொன்னதின் காரணமாக அவனைப் பிடித்துச் சிறையிலிட்டுக் கொலை செய்தான் என்று சொல்லப்படுகிறது (மாற்கு 6: 18; மத்தேயு 14: 3,4; லூக்கா 3: 19-20). யோவானை இயேசுவுக்கு சமமான பிரபலம் உள்ளவனாக காண்பிக்கக்கூடாது என்பத்றகாக சுவிசேஷ ஆசி¡¢யர்கள் ஏரோது அவனைக் கொலை செய்ததின் காரணத்தை மாற்றிவிட்டனர் என்று கருத இடமுள்ளது..
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியிலும் யோவான் ஸ்ஞானகனுடைய பிரபலம் தொடர்ந்து விளங்கியது என்பதற்கு அப்போஸ்தலர் 18: 24-25; 19: 1-7 வசனங்களே எடுத்துக்காட்டு. யோவானுடைய சீடர்கள் பன்னிரண்டுபேர் எபேசு பட்டணத்தில் பவுலைச் சந்தித்தபோது , பவுல் அவர்களிடம் யோவானைச் சிலாகித்துப் பேசுகிறார்.
அலெக்சாண்ட்¡¢யாவில் பேராயராக இருந்ததாகக் கருதப்படும் கிலெமென்ட் (Clement) எழுதிய அங்கீகாரங்கள் (Recognitions) என்ற மறைநூலில் 2 ஆம் பகுதி 23- 24 ல் பேதுரு வெறுத்து ஒதுக்கிய (அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: 9-24), மாயக்காரன் என்று வர்ணிக்கப்பட்ட சீமோன் மேகஸ் (Simon Magus) யோவான் ஸ்நானகனின் பிரதான சீடராகக் கூறப்படுகிறான். யோவானைப்போல் ஞானஸ்நானம் கொடுப்பவர்கள் எஸ்ஸேனியா¢ல் ஒரு பி¡¢வினராகவேக் கருதப்பட்டனர். கி.பி. 60 க்குப் பின் இந்த ஸ்நானகர் பி¡¢வினா¢ன் பிரபலம் மங்கிவிட்டது. நடபடிகள் 18: 24 - 19: 9 வரையுள்ள வசனங்களில் யோவானைப் பின்பற்றுபவர்கள் தனியாக இயங்கிக்கொண்டிருந்தனர் என்பதற்குஆதாரம் உள்ளது. பின்னர் கிறிஸ்தவர்களுள் ஒரு பி¡¢வினர் யோவான் ஸ்நானகனையே மேசியா என்று போற்றி வணங்கத்தொடங்கினர்.
தன்னுடைய இறைப்பணிக் காலம் முழுவதும் யோவான் ஸ்நானகனைப் பின்பற்றி 'தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது, மனம் திருந்தி பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று இயேசு உபதேசித்துவந்தார். அப்படியானால் அவர் சிலுவையில் மா¢த்து மீண்டும் உயிர்த்தெழுந்து, பரம் ஏறியது எதற்காக? நம்முடைய பாவங்களைத் தான் ஏற்றுக்கொண்டு நம்மை இரட்சிப்பதற்காக அல்லவா என்ற கருத்தியலில் தீர்மானமாக இருந்த தொடக்ககாலக் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் இயேசுவின் கடைசி விருந்தில், "இது பாவமன்னிப்பு உண்டாகும்படிக்கு அநேகருக்காக சிந்தப்படுகிற என்னுடைய இரத்தமாக இருக்கிறது" என்று அவர் வாயாலேயே சொல்லவைத்து திராட்சை மதுக்கிண்ணத்தைச் சீடர்களுக்கு அவர் பருகக்கொடுப்பதாக எழுதியிருக்கிறார்கள் (மாற்கு 14:24; மத்தேயு 26: 28). மீண்டும் யூதர்களின் இரத்தபலிக்கே கிறிஸ்தவர்கள் திரும்பிவிட்டார்கள். ஆனால் இம்முறை ஒரு வேற்றுமை உள்ளது. அது என்னவென்றால் ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தங்கள் பாவங்களுக்கு நிவாரணம்வேண்டி ஜெகோவாவுக்குப் பலி கொடுக்க வேண்டியதில்லை. ஏனெனில் எல்லாருடைய பாவங்களுக்ககவும் இயேசு தன்னைத்தானே பலியிட்டுக்கொண்டார் என்று அவர்கள் நம்பவைத்தார்கள். எப்படி இருந்தாலும் பாவநிவர்த்திக்காக கடவுளுக்கு இரத்தபலி கொடுக்கவேண்டும் என்று நம்புகிற ஆரம்பகால மதங்களின் நிலையிலேயே கிறிஸ்தவமதம் இன்றும் இருக்கிறது.