நாம் இயேசுவின் கதையைச் சொல்லும் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் இயேசுவா கிறிஸ்து ஆக முடியுமா? எனப் பார்ப்போம்.
“இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்ற மரண ஓலத்துடன் இறந்தவர் இயேசு. ஒரு சிறிய குழுவைச் சேர்த்துக்கொன்டு இயக்கம் நடத்திய கலிலேயாவை சேர்ந்த இயேசுவை ரோமன் ஆட்சியினர் கைது செய்து, ரோமன் தண்டனைமுறையில் ஆட்சிக்கு எதிரான புரட்சிபோராளிக்கு உரிய தூக்கு மரத்தில் தொங்கும் முறையில் கொல்லப்பட்டவர், நிருபிக்கப்பட்ட குற்ற அட்டை-ரோமன் கவர்னர் பிலாத்து கைப்பட எழுதியது -நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்.
இரந்த இயேசுவை நேரில் அறியாத பவுல் என்பவர் -இயக்க காலம் முழுமையும் தீவீர யூதரிடம் மட்டுமே இயங்கிய இயேசுவை- கிரேக்கர்களிடம்- தெய்வீகமானவர் என எழுதிய கடிதங்களே புதிய ஏற்பாட்டின் முதல் எழுத்துக்கள்.
பவுலின் கடிதங்களில் 6 மட்டுமே அவர் வரைந்தது அதில் பழமையானது
1தெசலோனிக்கர் 1:10– நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.
1தெசலோனிக்கர் 4: 1313 சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.
7 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.
2 கொரிந்தியர் 1: 14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.
கலாத்தியர் 1: 4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.
பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்
ரோமன் 8”:1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.
18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள்வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
கலாத்தியர்4: 4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
ரோமன்1: .3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்(Greek Spherma Greek )
இஸ்ரேல் நாட்டு எபிரேய புராணக் கதைகளில் வீரன் தாவிது கீழ்தாந் பெரும்பகுதி ஆட்சி இருந்தது- மேலும் கதைப்படி எக்பிதின் நைல் நதி முதல் எபிராய்த்து நதி வரை உள்ள நிலத்தின் அரச்ச்ட்சி அன்னியர் ஆபிரகாம் வாரிசு என்பதே பழைய ஏற்பாட்டின் அடிப்படை, அதில் புனையப்பட்டுள்ள கதைப்படியே பெரும் பகுதியை ஆண்ட ஒரே அரசன் தாவீது மட்டுமே, அவனுக்கு இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் தாவீதின் வழி மகன்களுக்கு தடையில்லாமல் இறுதிகாலம் வரை ஆட்சி உரிமை வழங்கினார். அந்த ஆட்சியை மீட்க வரவேண்டியவனே மேசியா-கிறிஸ்து, மேசியா காலத்தோடு உலகம் அழியும்- மேசியாஉடனுள்ளோருக்கு சொர்க்கம்-மற்றவர்க்கு நரகம்.
இதை பவுல் நீட்டி மேசியாவைத் தேய்வீகர் எனப் புனைந்து- மேசியா மரணத்தினால் பூமியில் மனிதன் மறணத்திற்கு காரணம் ஆதாமின் பாவம்- ஆதாமின் பாவம் இயேசுவின் மரணத்தினால் நீங்கியது- இயேசு பெயலில் சேருவோர்க்கு சொர்க்கம் என கதை சொன்னர்-இயெசுவை- மேசியா வாழ்நாளில் என்பதை இரண்டாவது வருகையில் என நம்பி மதம் பரப்பினார்.