Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி


Guru

Status: Offline
Posts: 7602
Date:
அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி
Permalink  
 


அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி

 

‘எண்’ என்ப, ஏனை ‘எழுத்து’ என்ப, இவ் இரண்டும்
‘கண்’ என்ப, வாழும் உயிர்க்கு.

எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

-திருக்குறள் – பொருட்பால் – அரசு இயல் – கல்வி

நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒருசிறிய Fabrication Industry இல் Quality Control பிரிவில் ஒரு சிறிய உத்தியோகத்தில் பணி புரிந்து வந்தேன். Metals, Materials, Fabrication, Welding, Casting, Defects என பணி இருந்தது .

ஒரு நாள் ஒரு வார்ப்பினை (Casting) Inspection செய்ய வந்த Inspector (Authorized Inspector- Lloyds Register) சொன்னார்:

“ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் ! நாம் இந்தக் காலகட்டத்தில் உலோகவியலில் (Metallurgy ) மகத்தான உயர் ஆய்வுகள் மூலம் வியத்தகு முன்னேன்றங்களை கண்டுள்ளோம் , இருந்தும்கூட Defect free Castings உற்பத்தி பண்ணுவது என்பது பல சமயங்களில் கடினமாக உள்ளது . 12௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சோழர்கால ஐம்பொன் உலோக சிலைகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது . அதன் மீது ஆயிரம் ஆண்டுகளாக மலர்கள் , அபிஷேகத் திரவியங்களை ( பால் , தயிர் , பஞ்சாமிர்தம் தேன் , பலவகையான பழச்சாறுகள் , இளநீர் , நெய் , திருமஞ்சனப் பொடி, திருநீறு , வில்வப்பொடி ) என மேலே கொட்டுகிறோம் .இந்தத் திரவியங்களில் பலவிதமன Acids & Alkalies உள்ளன , ஆனால் ஏதோ ஒன்றிண்டு சிலைகளைத் தவிர , மற்ற எல்லா விக்கிரங்களும் , எந்தக் குறைபாடும் இல்லாமல் (corrosion, erosion , cracks) இன்றளவும் நமது வழிபாட்டில் உள்ளன ! நமது முன்னோர்கள் அறிந்து வைத்த மகத்தான இந்த உலோகவியல் அறிவியலை ( Metallurgy ) என்னவென்று சொல்லுவது ?”

உண்மைதான் !

பாரதத்தின் குறிப்பாக தமிழகப் பண்பாட்டைப் பற்றிய சிறிய அளவில் அறிமுகம் உள்ள ஒரு வெளிநாட்டினர் உடன் நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தால் , உடனடியாக அவர் நினவு கூறுவது நமது கோவில் கட்டிடகலை , கற்சிற்பங்கள் மற்றும் ஐம்பொன் உலோக சிலைகளின் பற்றிதான் . Structural Engineering , Architecture , Geology , Carpentry , Stone- Masonry, Metallurgy போன்ற அறிவியல் துறைகளில் நமது முன்னோர்கள் ஆழ்ந்த படிப்பும் செய்முறைத் திறனும் இல்லை என்றால் , இந்த மகத்தான படைப்புகளை உருவாக்கி இருக்க முடியாது அல்லவா ?

‘ திருமகள் போல ‘என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய முதலாம் ராஜராஜ சோழனை ( Raja Raja I ) ‘ பார்ப்பன அடிமை ‘ என்று வந்தேறிய சமயத்தை தழுவிய ஒரு பிரமுகர் அறிக்கை வெளி இட்டார் . அப்பட்டமான ஓர் இந்து விரோத அறிக்கை அது .

பார்ப்பன அடிமை ‘ என்று இகழப்பட்ட மனனர் தம் காலத்திய அனைத்து சமயங்களையும் ஒன்றாகவே பாவித்து நிவந்தங்கள் கொடுத்தவர் , அது மட்டுமல்ல அந்த பிற்கால சோழ அரசர்கள்தான் இன்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான ஏரிகள் , குளங்கள் , குட்டைகள் அனைத்தையும் உருவாக்கியவர்கள் . இன்றும் கூட அவை வேளாண்மைக்கு உயிர் நாடியாக உள்ளன . ( ஓர் உதாரணம் : தக்கோலப் போரில் ‘ யானை மேல் துஞ்சியத் தேவர் ‘ என பெயர் பெற்ற இளவரசர் ராஜாதித்தர் தம் தந்தை பராந்தகர் – அவருக்கு வீர நாராயணர் என்ற பெயர் உண்டு – அவர் பெயரில் கடல் போன்ற வீர நாரயண ஏரியை – தற்போது – வீராணம் ஏரியை உருவாக்கினார் ) . அதில் இன்று விளைவித்த நெல் – அரசியை கூட மேலே சொன்ன நபர் இன்றும் கூட தின்று கொண்டு இருக்கலாம் . மேலும் , இந்த நீர் ஆதாரங்களை உருவாக்கிட  Gelogy, Earth Sciences, Water Management போன்ற அறிவியல் துறைகளில் நம் முன்னோர் ஏதேனும் ஆதாரக் கல்வி பெற்று இராமல், இந்த மகத்தான நீர் மேலாண்மை திட்டத்தை உருவாக்கி இருக்க முடியுமா?

‘திருமன்னி வளர‘ என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய முதலாம் ராஜேந்திர சோழரின் (Rajendra I) திருவாலங்காட்டு செப்பேடு, அவரது கடல் கடந்து சென்ற படையெடுப்பபு பற்றிக் கூறுகிறது. மேலும் இத்தகு படையெடுப்புகளுக்கு நிலையான ஒரு சோழ ராணுவம் யானைப் படை, குதிரைப்படை இருந்துள்ளது . இதற்கு தேவையான Naval Architecture , Ocean Engineering, Veterinary Sciences போன்ற அறிவியல் துறைகளில் நம் முன்னோர் சிறந்த அறிவு பெற்று இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை

மகாத்மா காந்தி 1931 ஆம் ஆண்டு வட்ட மேஜை மகாநாட்டுக்கு காங்கிரஸ் பிரதிநிதியாக இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு சென்றார் . அந்த ஆண்டு அக்டோபர் 2௦ ஆம் தேதி லண்டனில் ‘ சாத்ஹம் ஹௌசில் ‘ (Saatham House) உள்ள இன்ஸ்டிட்டுஉட் ஆப் இன்டர்நேஷனல் இல் அப்பைர்ஸ் (Institute of International Affairs) ஓர் ஆவேசமிக்க உரை நிகழ்த்தினார் . அதில் பிரிட்டிஷாரின் இந்தியக் காலனிய ஏகாதிபத்திய அணுகுமுறை இந்தியவை பல விஷயங்களில் சீரழிய செய்து விட்டது என்றார். குறிப்பாக பாரதத்தின் பண்டையக் கல்வி முறை பிரிட்டிஷாரின் போக்கால் மாபெரும் பின்னடைவுக்கு உள்ளாகிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார் .

காந்திஜி கூறினார் :

“பிரிட்டிஷ் நிர்வாகிகள் இந்தியாவுக்கு வந்தபோது , இங்கு நிலவிய அமைப்புகளை (கல்வி அமைப்புகளை) புரிந்துகொண்டு அதை வளர்தெடுப்பதற்க்கு பதிலாக அவற்றை அப்புறபடுத்த தொடங்கினார்கள் . மண்ணை தோண்டி வேரை எடுத்து ஆராய்ந்தார்கள் . அதன் பிறகு அந்த வேரை அப்படியே மட்கி வாடும்படி விட்டுவிட்டார்கள் .அந்த அழகிய மரம் அழிந்துவிட்டது”.

டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைச்செயலாளரும் ,ஆக்ஸிலரி கமிட்டி அப் இந்தியன் ஸ்டாச்சுடரி கமிஷன் சேர்மனாகவும் (Auxiliary Committee of Indian Statuary Commission Chairman) பதவிகள் வகித்த சர் பிலிப் ஹெர்டாக் , காந்திஜியின் கூற்றை மறுத்து அவருக்கு கடிதம் எழுதினர் . ‘’ பிரிட்டிஷ் நிர்வாகத்தின் போக்கால் , பாரதத்தில் நிலவிய பண்டைய கல்வி முறை சீரழிந்தது ‘’ என்ற காந்திஜியின் குற்றசாட்டுக்கு ஆதாரங்கள் கேட்டார் . 1931 ஆம் தொடங்கி 1938 ஆம் ஆண்டுவரை சர் பிலிப் ஹெர்டாக் தொடர்ந்து காந்திஜிக்கு கடிதங்களை எழுதி வந்தார் . காந்திஜியினால் ஆதாரங்களை கொடுக்க இயலவில்லை . தான் சொன்னது சரி என்று தனது மனது நம்புவதாகவும் , ஆனால் ஆதாரங்கள் ஏதும் தன்னிடம் இல்லை எனத் தெரிவித்து விட்டார் .

இந்த இடத்தில நாம் ஒன்றை புரிந்து கொள்ளலாம் . மகாத்மா காந்தி அவருக்கே உரித்தான , இயல்பான நமது நாட்டைப் பற்றிய புரிந்துணர்வினாலும் , அவரது உள்ளார்ந்த ஆன்மீகவயமான ஞானத்தாலும் நமது கல்விமுறை பற்றிக் கூறினாலும் , அந்த சமயத்தில் அவரால் ஆதாரங்களை தர இயலவில்லை . ஆனாலும் அவர் சொன்னது சரியே எனப் பின்னர் நடந்த நிகழ்சிகள் தெரிவிகின்றன . ( இந்தப் புரிதல் காந்திஜிக்கும் , மகான் அரவிந்தருக்கும் இருந்தது , ஆனால் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு இல்லை என்பது என்னுடைய அபிப்ராயம்).

ஸ்ரீ தரம்பால் (1922 – 2006) ஒரு காந்திய செயல்பாட்டாளர். அவர் பல ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்தார். 1960 ஆம் ஆண்டு வாக்கில் அவர் சில ஆய்வுகளுக்காக லண்டனில் உள்ள ‘இந்தியா ஹௌசிலும் ‘ ( INDIA HOUSE ) அங்குள்ள பல அருங்காட்சியக நூல்நிலையங்களிலும் 18 – 19 ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் – இந்தியா தொடர்புகள் பற்றி ஆவணங்களை ஆராய்ந்தார் . அப்பொழுது சர் பிலிப் ஹெர்டாக் காந்திஜியிடம் பாரத்தின் பண்டைய கல்வி முறை பற்றி எந்த ஆதாரங்களை கேட்டு அது காந்திஜினால் தர இயலவில்லையோ , அந்த ஆவணங்கள் பிரிட்டிஷ் நூல் நிலையத்தில் இருப்பதைக் கண்ணுற்றார். மிகுந்த சிரமத்தின் பேரில் , அந்த ஆதாரங்களை ஸ்ரீ சீதாராம் கோயலின் உதவியுடன் 1983 ஆம் ஆண்டு ‘ அழகிய மரம் ‘ ( The Beautiful Tree – Indigenous Indian Education in the Eighteenth Century ) என்ற ஒரு நூலாக வெளியிட்டார் .

அந்த நூலின் கருத்துக்கள் என்ன ?

1822 ஆம் ஆண்டு மதராஸ் ப்ர்சடேன்சி (Madras Presidency) ஆளுனர்  சர். தாமஸ் மன்றோ (Sir Thomas Manroe) இந்தியக் கல்வி பற்றிய ஓர் அளவீடு ( Survey ) எடுக்கும்படி வருவாய்த் துறைக்கு (Revenue Board) ஓர் ஆணைப் பிறபித்தார் . வருவாய்தத்துறையின் செயலர் (Revenue Board Secertary) இந்த ஆணையை அவர்கீழ் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் (District Collector) அனுப்பினார் . அன்றைய மதராஸ் ப்ர்சடேன்சி என்பது ஒரிசாவின் சில பகுதிகள், ஆந்திரா , தெலங்கான பகுதிகள் , தமிழ்நாடு , கேரளாவின் சில பகுதிகள் என பரந்து விரிந்த பகுதி சுமார் 25 மாவட்ட ஆட்சியர்கள் கீழ் உள்ள பகுதி . இதேபோன்ற உத்தரவு கொல்கத்தா மற்றும் பஞ்சாப் பகுதிகளுக்கும் சென்றது. எப்படி தகவல்கள் ஒரே மாதிரியாக சேகரித்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு போலி மாதிரிப் படிவம் கூட அனுப்பப் பட்டது (Template – Filled in Format). இந்த அளவீடு செய்து ஆய்வு அறிக்கை தயார் செய்ய கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அனுப்பிய அந்த ஆய்வு அறிக்கையை முழுமையான கோணத்தில் ஆங்கிலேய அரசு பரிசீலனை செய்து பார்த்ததில் ஆட்சியாளர்களே வியந்து போனார்கள் . இந்த ஆய்வு அறிக்கையை படித்த ஸ்ரீ தரம் பாலும் , ஆச்சரியத்தில் உறைந்து போனார் !

ஏனென்றால் , 1931 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தன் ஆன்மீகவயமான உள்ளுணர்வினால் பாரதத்தின் பண்டைய கல்வி முறை பற்றி எந்தவிதமான தரவுகள் இன்றி , லண்டனில் ‘ சாத்ஹம் ஹௌசில் ‘ உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேஷனல் அப்பைர்ஸ் (Institute of International Affairs) பேசியதை நிருபிக்கும் வகையில் அந்த ஆய்வு அறிக்கை இருந்தது .

மேலே குறிப்பிட்ட ஸ்ரீ தரம்பாலின் நூலில் அந்த ஆய்வு அறிக்கையில் ஏராளமான தகவல்கள் இருப்பினும் , இந்தப் பதிவுக்கு சம்பந்தமாக முக்கியமான சில விஷயங்களை கிழே பார்க்கலாம் :

– அடிப்படைக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான கல்லூரிகள் இருந்தன

– சரசரியாக அடிப்படைக் கல்வி புகட்டும் பள்ளிகள் கிராமம் தோறும் இருந்தன

– அடிப்படைக் கல்வி சராசரியாக 1௦ ஆண்டுகள்

– இந்தக் கல்வி முறைக்கான நிதி வசதி என்பது (ஆசிரியர் சம்பளம் முதலியன) அந்த கிராமமோ , சமூகமோ , கல்வி கற்கும் மாணவர்களோ ஏற்றுக் கொண்டார்கள் . பிரிட்டிஷ் அரசு எந்த விதமான உதவியும் செய்யவில்லை .

– இந்தக் கல்வி முறை ‘ எண்ணும் எழுத்தும்கண்எனத்தகும் ‘ என்றும் , ‘ ஆச்சாரிய தேவோ பவ ‘ என்றும் , நமது நீண்ட பாரம்பரியமான அணுகுமுறையில் தான் , கல்வியை – ஒரு வழிபாட்டு மனோ நிலையில்தான் உருவகித்து , மொத்த சமூகமும் இயங்கியது .

– இந்தக் கல்வி முறை பற்றி ‘ தாக்ஷிணாத்திய கலாநிதி ‘ ‘ மகாமஹோஉபாதியாய ‘ ‘ தமிழ்த் தாத்தா’  உ.வே. சாமிநாதையர் அவர்கள் ‘ என் சரித்திரம் ‘ என்ற நூலில் விவரித்துள்ள ‘ இளமைக் கல்வி ‘ என்ற அத்தியாத்தில் காணப்படுவது போல உள்ளது .

மிக முக்கியமான இந்த ஆய்வு அறிக்கையில் ஒரு தகவல் , அது கல்வி கற்கும் மாணவர்களின் சாதி பற்றிய விவரங்கள். மாணவர்களின் சாதி – பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர், பிற சாதியினர் (பட்டியல் சாதி). நான் இந்த மிக நீண்ட பதிவு போடுவதற்கே இந்தத் தகவல் மட்டுமே காரணம் .

ஆம், ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும்அதிகம்.

எனக்கே இந்த அதிர்ச்சி என்றால் ‘சமுக நீதிக் காவலர்கள் / செயல்பாட்டாளர்‘ – இவர்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சி ஏற்படும் ?

‘மனு ஸ்ம்ருதி‘ – இங்கே வேலை செய்யவில்லை போலும் ?

இறுதியாக ,

ஏராளமான தகவல்கள் இந்த ‘ அழகிய மரம் ‘ என்ற நூலில் உள்ளது என்றாலும் , விரிவாக வேறு ஒரு சமயத்தில் விவாதிப்போம் எனக் கூறி – மகாத்மா காந்திக்கும், ஸ்ரீ தரம்பாலுக்கும் நமது நன்றி கலந்த வணக்கத்தை செலுத்துவோம்.

அழகிய மரம் – 18-ம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி
ஆசிரியர்:  தரம்பால், தமிழில்: B.R.மகாதேவன்

வெளியீடு: தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600014
பக்கங்கள் – 520, விலை 450/-

அதிக பிரதிகள் வாங்க 9094569011 அல்லது writermahadevan@gmail.com மூலம் தொடர்பு கொள்ளவும்.

(கட்டுரையாளர் க.கந்தசாமி சைவசமய அறிஞர், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பல விஷ்யங்களையும் குறித்து எழுதி வருகிறார்). 

References :

1. தரம்பால் – அழகிய மரம் – 18 ஆம் நூற்றாண்டு பாரம்பரியக் கல்வி

2. Sahana Singh – The Educational Heritage of Ancient India – How an ecosystem of learning was laid to waste

3. உ வே சாமிநாதய்யர் – என் சரித்திரம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

R Nanjappa on June 17, 2018 at 9:39 pm

“அழகிய மரம்” தரம்பாலின் எழுத்துத் தொகுதியிலிருக்கும் 5 பாகங்களில் ஒரு பாகம்தான். [பாகம் !!!] இன்னும் இதர பாகங்களில் மேலும் அரிய செய்திகள் இருக்கின்றன. முதல் பாகம் 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞான தொழில் நுட்பத்துறையின் உயர்ந்த நிலையை விளக்குகிறது, இதை எப்படி ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அழித்தார்கள் என்பதையும் அறிந்துகொள்கிறோம்.இரண்டாவது பாகம் இந்தியப் பாரம்பரியத்தில் ஒத்துழையாமை போன்ற முயற்சிகள்/இயக்கங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன, அவற்றின் விளைவுகள் என்ன என்பவற்றை விளக்குகிறது.நான்காவது பாகம் நமது கிராம சமுதாயங்கள் எவ்வாறு இயங்கின, சுதந்திரப் போராட்ட காலத்தில் அவற்றைப்பற்றிய நமது எதிர்பார்ப்பு என்ன, சுதந்திரம் வந்தபிறகு அரசியல் அமைப்புச் சட்டம் என்ற பெயரில் நமது கிராம சமுதாயங்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டன என்ற விஷயங்கள் விவரிக்கப்படுகின்றன. அதாவது சுதந்திர இந்தியா என்ற பெயரில் அடிமைத்தனமே தொடர்கிறது/மேலோங்கிவிட்டது.
இந்தியாவின் தனித்தன்மை என்ன, இதன் முக்கிய அம்சங்கள் எவை, இவற்றை எவ்வாறு மீட்டு காலத்திற்கேற்றவாறும், நமது தற்கால லட்சியங்களுக்கு இயைந்தவாறும் அமைத்துக்கொள்வது போன்ற பல அரிய கருத்துக்களை ஐந்தாவது பாகத்தில் விளக்கியிருக்கிறார். இவற்றை சமுதாய அக்கறை கொண்ட ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்கவேண்டும். 

R Nanjappa on June 17, 2018 at 10:11 pm

“அழகிய மரம்” ஸ்ரீ தரம்பாலின் எழுத்துத் தொகுதியின் ஐந்து பாகங்களில் ஒன்றுதான்- மூன்றாவது பாகம். இதர பாகங்களில் மேலும் அரிய விஷயங்களை விளக்கியிருக்கிறார்.
முதல் பாகம் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் பல துறைகளில் நிலவிய உன்னத விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியை விளக்குகிறது.இதை ஆங்கிலேயர்கள் எப்படி திட்டமிட்டு அழித்தார்கள் என்பதையும் அறிந்துகொள்கிறோம்.
இரண்டாவது பகுதி, 18ம் நூற்றாண்டுவரை, இந்தியர்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை போன்ற அரசினர் எதிர்ப்பு முயற்சிகளையும் அவற்றின் விளைவுகளையும் விளக்குகிறது,
நான்காவது பாகம் இந்திய சமுதாய அமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளின் நிலையை விவரிக்கிறது.சுயேச்சையாக, சர்வ பொருளாதார, அரசியல் சுதந்திரங்களுடன் விளங்கிய நமது கிராம சமுதாயங்கள் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டன. நமது கிராம மக்கள் பொருளாதார வளத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் இழந்தனர். ஆனால் சுதந்திர இந்தியாவில் அரசியல் சட்டம் என்ற பெயரில் நம் கிராம சமுதாயங்கள் மீண்டும் வஞ்சிக்கப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு பஞ்சாயத்து ராஜ்யம் போன்ற கோஷங்கள் எழுந்தன, சில போக்குக் காட்டும் முயற்சிகள் நடந்தன. இவை பற்றி இப்பகுதி விளக்குகிறது.
ஐந்தாம் பாகத்தில், நமது இந்திய அரசியல்-சமுதாய பாரம்பர்யத்தின் தனித்தன்மை என்ன, அவற்றின் முக்கிய அம்சங்கள் எவை. அவற்றை எவ்வாறு காலத்திகேற்றவகையிலும், நமது தற்கால லட்சியங்களுக்கு இசைந்தவாறும் மாற்றிக் கொள்வது போன்ற பல விஷயங்களை அலசியிருக்கிறார்.
தற்போது கல்வி என்ற பெயரில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் அவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்களும் இந்த விஷயங்களில் எதையும் அறியார். இப்படி நமது இளைய தலைமுறை உருவாகி வருகிறது. Those who do not know their history are doomed to repeat it என்று சொன்னார் ஜார்ஜ் சான்டயானா.George Santayana. இந்த நிலை நமக்கு நேரக்கூடாது. இயன்றவர்கள் இந்த நூல் தொகுதி முழுவதையும் வாங்கிப் படிக்கவேண்டும்



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
RE: அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி
Permalink  
 


கவுணியன் on June 25, 2018 at 5:18 pm

திரு. தரம்பாலின் நூலைப் படித்த டூலி என்ற ஆய்வாளர், ஆங்கிலேயர் எப்படி (பாரம்பரிய) இந்திய கல்வி முறையின் சில அம்சங்களைக் கையான்டு பிரிட்டன் நாட்டினரின் எழுத்தறிவை உயர்த்தினர், என்பதைப் பற்றி ஒரு நூலை எழுதியுள்ளார்.

இந்நூலைப் பற்றி ஒரு கட்டுரை இதோ:

https://swarajyamag.com/culture/how-india-made-britain-more-literate-the-beautiful-tree-beyond-dharampal

How India Made Britain More Literate: The ‘Beautiful Tree’ Beyond Dharampal

A school in Britain (Matt Cardy/Getty Images)A school in Britain (Matt Cardy/Getty Images)
Snapshot
  • It wasn’t India which improved its schooling system by imitating Britain’s. Rather, it was the other way round.

 

Every Indian learns at some point about how India was educated by the British and how that brought about a cultural renaissance to a degenerated and stagnant India. Linked to this, Indian students also learn how two centuries prior to the colonization of India, Europe had undergone a renaissance and Lutheran reformation. 

This had allowed Europe in general and Britain in particular to assume the role of civilizing the heathen world. How true is this grand narrative of the civilizing mission of the British?

The missing links

Mainstream European historiography has always presented Christianity as a positive influence over Pagan Europe. Thus Constantine is shown relieving the lot of slaves, highlighting his appreciation of allowing Church fathers to free a slave in a Church congregation. 

In reality such a practice of freeing a slave existed not just for clergy but for all slave owners in Pagan Europe and the ceremony happened at Pagan temples. Factually though, religion became an additional chain for slaves and the slaves who escaped to “barbarian” lands resisting conversions had their feet cut off by Constantine. And this is seldom mentioned in such grand narratives.

Latter day praise of the Protestant movement is seen as a continuum of the same humanizing spirit of Christianity. A closer look reveals Protestant movement more as a reaction to the inevitable raise of modernism in Europe. And the modernism which was on the ascent in Europe was principally because of the rediscovery of philosophical traditions long dismissed as ‘pagan’

Thus Martin Luther, the founder of Protestantism, in his infamous tract against the rebellious peasants opposing the crushing taxes of the high-born nobles, stated without mincing words

 

 

If the peasant is in open rebellion, then he is outside the law of God...Therefore, let everyone who can, smite, slay and stab, secretly or openly, remembering that nothing can be more poisonous, hurtful or devilish than a rebel. It is just as when one must kill a mad dog; (3)

 

 

Luther’s advice was religiously followed by the princes and Dukes and Counts who put to sword not less than 5000 peasants at Frankenhausen. And Luther delighted at the massacre of these peasants and declared with pride:

 

 

I, Martin Luther, slew all the peasants; all their blood is on my head for I commanded them to be slaughtered; all their blood is on my neck. But I pass it on to our Lord God, who commanded me to give this order.

 

 

England also fared no better in the treatment of its labour population which was mostly hereditary. Illiteracy of labourers, was intentional and was justified with religious reasons. In 1807, in the House of Commons, a British scientist Davies Gilbert vehemently opposed attempts to school the masses claiming that the education for the labouring classes

 

 

…would in effect be prejudicial to their morals and happiness: it would teach them to despise their lot in life, instead of making them good servants to agriculture and other laborious employments to which their rank in society had destined them….it would enable them to read seditious pamphlets, vicious books and publications against Christianity. (5) 

 

 

Education – as a tool for social control

Even those who supported education for the peasant-labourer community considered it as a means of social control than any means of social emancipation of the toiling masses. Thus Sir James Phillips Kay-Shuttleworth, the First Baronet (1804 –1877), first secretary of the committee formed by the Privy Council to administer the Government grant for the public education in Britain, repeatedly stressed the point that the aim of the schools for the peasants’ children, “was to raise a new race of working people – respectful, cheerful, hard-working, loyal, pacific and religious.” 

Often, education was taken up by churches and bundled with Sunday Bible classes. As such, the educational standards were abysmally low. For example in the strongly Methodist mining districts of Cornwall where more than 40,000 attended their Sunday schools in 1858, the Child Labour Inquiry found only one school teaching writing. 

Data from Nottingham for the same year reveals that of the 22 children who attended only Sunday schools 17 children could not write . However the Sunday schools were praised by the elite Britons for they inculcated into the children of working class “moral restraint” . The educational missionary activity in London’s silk-weaving district of Spitalfields was prompted by need for social control which was felt after the strike in 1844 by coal miners .

The teachers were chosen not by their expertise in the subjects they taught but how well they had “a thorough knowledge of the saving powers of the Gospel of Jesus Christ” . One son of a farmer who attended the village school remembered vividly how the children were taught to be “truthful, honest and obedient” to the authority failing which the children were shown by the teacher “a picture of what was said to be the devil – a dreadful looking person with a pitch fork…would deal with all wicked children and put them in the fire with this fork.” 

 

 

The trends continued well into nineteenth century and the malaise also affected the colonies as we will see later. However, by the first quarter of 19th century there was another wave building up from London and its suburbs. And their origins were from the coasts of India.

Re-discovery of the ‘Beautiful Tree’

The remark by Gandhi at the Royal Institute of International Affairs, London, on 20 October, 1931 about the more literate India is today well-known thanks to the pioneering work done by Dharampal. The metaphor of ‘beautiful tree’ for the Indic educational system has become famous at least among the Indo-philes. Sir Philip Hartog, the vice-chancellor of Dhaka University joined issue with Gandhi. 

He commenced a correspondence with him, spanning almost a decade. Hartog had time and the bureaucratic services of an Empire at his dispense. He meticulously poured through reports and marshaled facts that suited him. Gandhi was at that time in the midst of freedom struggle spending most of his time in British prisons. 

Hartog was invited to give a series of lectures in the University of London in order to allay the rising feeling among Indians that the British systematically destroyed the indigenous education. His lectures were promptly published as a book.

It was only after independence that Dharampal, the off-beat historian, set forth on the road less traveled going beyond the handed down wisdom of colonial frameworks and started going through the archives. The discoveries he made amazed him. 

Reports after reports that the East India Company had made in the early nineteenth century in an exhaustive survey of indigenous education system commissioned by Col. T. Munroe revealed a far decentralized, more egalitarian system of education than the one existing in contemporary England. When Dharampal wished to publish his work the only person who was ready to do it was a Hindu nationalist historian and a publisher, Sitaram Goel.

Dharampal’s book ‘The Beautiful Tree’ contains a 1823 report by Ballari district collector. The collector mentions a curious fact:

 

 

The economy with which children are taught to write in the native schools, and the system by which the more advanced scholars are caused to teach the less advanced and at the same time to confirm their own knowledge is certainly admirable, and well deserved the imitation it has received in England.

 

 

This is the British acknowledgement of Indian system being imitated in Britain. With respect to how the saplings of ‘the beautiful tree’ were transported and transplanted in India Dharampal provides a mention of one Andrew Bell. 

Carrying forward the work of Dharampal

Some decades after Dharampal’s work was published, James Tooley a British educationist was given a copy of “The Beautiful Tree” by an old book vendor in the old city of Hyderabad. That opened up new doors for Tooley who was already working on cost-effective quality education with specific focus on the developing countries. The result is a book titled “The beautiful tree: a personal journey into how the world’s poorest people are educating themselves” (Penguin Books India 2009) 

Tooley started working on how the old educational system in India was financed. He also worked simultaneously on how educational system evolved in Great Britain. He discovered the extent to which the Indian education system was adapted or rather imitated in England. He started with Andrew Bell who was a “reverend”. In the words of Tooley, as he researched on the life of this Rev. Andrew Bell, what he discovered ‘seemed like dynamite’ to him. 

 

 

For they vividly showed how the “economical” method of teaching in the private schools for the poor in India became translated into a method that transformed education in Victorian England and beyond.

 

 

Rev. Bell was in India to work in the asylum for the progeny of British soldiers through native Indian women, whom of course the soldiers abandoned. The imported teachers for these children were not exactly enthusiastic. One day as he was riding along Madras beach he noticed a native school session. He saw “little children writing with their fingers on sand, which after the fashion of such schools, had been strewn before them for that purpose” and he also saw “peer teaching - children learning from one another.” (

Bell had his Eureka moment. He experimented successfully with this method and in 1797 published the description of his “Madras method” in England. Tooley discovered that the new National Society for the Education for the Poor in 1811 adapted this Madras method and by 1821, 300,000 children were being educated by Bell’s principles . 

Meanwhile Jospeh Lancaster has launched his famous Lancastrian schools for furthering education in England. Bell and Lancaster entered into a bitter controversy as to the intellectual property of the particular system of education. But Tooley points out that “it wasn’t invented by either Bell or Lancaster. It was based precisely on what the Rev.Dr.Andrew Bell had observed in India”

Tooley further elaborates:

 

 

the cost-effective teaching methods used in the indigenous private schools of 19th century India were in fact a manifest strength; so much so...they were imitated in Britain , then across Europe and then the world and did so much to raise educational standards.

 

 

What is even more important is the way the funding of education changed in England. James Mill, father of John Stuart Mill observed in 1813, particularly around London the “rapid progress which the love of education” was making among “the lower orders in England”. 

Funding of these schools, Tooley observes, was done through school fees and private schools for the poor were increasing in Victorian England. By 1851 of the 2,144,278 children put in day schools 85 percent were in private schools funded the same way the private schools of early 19th century India were funded. By 1861, 95 percent of the children were in school for an average of nearly six years. The horses of literacy were galloping in England. 

But in India…

In India in 1854, Thomas Babington Macaulay had established his first school in India. Tooley under the appropriate heading “The men who uprooted the beautiful tree” states:

 

 

By 1858 this new system had delivered 452 schools and colleges with a total enrollment of 20,874 in 21 districts of Madras Presidency. But 36 years earlier Munro had found that a total of 11,575 schools and 1094 colleges with 157195 and 5431 students respectively!

 

 

The rate of growth of literacy in India under the British controlled Macaulay education system began to fall way back compared to the rate of growth of literacy in Britain under the Indic method of private school enrolment. The Macaulay system itself needed 60 years to improve upon the enrolment figures of Indian educational system. But even to achieve the kind of literary growth that the British society achieved under the Indic education system transplanted in England, the Macaulay system took seventy one years. Tooley observes wryly:

 

 

If the dynamics of the India private education system had been anything like those of the parallel system in England we would have seen a much larger growth in enrollment than had the British not intervened at all.

 

 

Macaulay system also perpetuated and amplified the social distances among the different occupational groups in India. Tooley states:

 

 

...completely against the committee’s explicit intentions, the new schools were excluding everyone apart from the elite, the Brahmins. Why? One source suggested that the government “was uneasy about low-caste people being admitted to the ...Schools. It was feared that, if they were encouraged the upper classes would show resentment and withdraw their support.” So the new public schools became a vehicle to promote caste privilege, rather than a vehicle for improvement of all. Again it would seem that the indigenous system had unnoticed strengths in promoting education of all including the lowest castes.

 

 

Though Government spoke of the resentment of upper class Indians the fact is that the British educational system in its very nature was elitist and often prevented people form lower strata of the society into echelons of higher education. It was almost a universal phenomenon of colonialism. Economist Clark Kerr points out:

 

 

The British system of higher education until the middle of the nineteenth century was elitist, and largely hereditary elitist. Entry into Oxford and Cambridge was limited by rule to males who were members of the Anglican Church and in fact mostly to sons of the gentry and the upper middle classes. ...Sub-Sahara Africa with its missionary schools and French lycees followed the meritocratic elite system then in effect in Britain and France.

 

 

It should also be noted that while British policy of education to masses was as a means of social control, the indigenous education in India was for empowering and liberating the individuals and the society. Nineteenth century South Travancore, one of the first victim states of colonialism, social stagnation and caste oppression reached the levels of social lunacy. 

But here the most successful social revolutionaries were all (Ayya Vaikundar, Sri Narayana Guru and Ayyan Kali - to name a few) those who studied through native educational system. The cost-effective universal education which gave England its advantages over other European nations, also owes its positive features to that beautiful tree that stood in India, which as Gandhi stated was destroyed by the very British who benefited by it. 

 

 

References:

1. James Sands Elliott , Outlines of Greek and Roman Medicine, BiblioBazaar, LLC, 2008 p.112 (Here the author after depicting Constantine’s appreciation of Christian system in vivid and glowing terms, simply notes, “In pagan times there was a somewhat similar system of a master being able to redeem a slave and register the redemption in one of the temples.” 

2. Entry for “Mutilation of the Body” in Encyclopaedic Dictionary Of Christian Antiquities (Ed. William Smith, Samuel Cheetham), Concept Publishing Company, 2005, p.244

3. Roland Bainton, Here I Stand - A Life of Martin Luther, READ BOOKS, 2007 p.280

4. Martin Luther quoted in Erasmus - The Right to Heresy, (Staffan Z Weig, READ BOOKS, 2008, p.145)

5. Hansard , 13 July 1807, quoted in John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986, p 235

6. R. Johnson, ‘Educational policy and social control in early Victorian England’, Past and Present, no.73, 1976: quoted in John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986, p.246

7. J.G.Rule, “The Labouring Miner in Cornwall circa. 1740-1870: a study in social history’, PhD Thesis, University of Warwick, 1971, pp.324-6

8. P.Gaskell, Artisans and Machinery, 1836, pp.243-4: quoted in R. Johnson, ‘Educational policy and social control in early Victorian England’, Past and Present, no.73, 1976: quoted in John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986 p.248

9. Phillip McCann ,Popular education, socialization and social control : Spitalfields-1812-24, Popular education and socialization in the nineteenth century, Methuen, 1977 pp.1-29

10. John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986 p.249

11. C.T.Trevail, 1927: quoted in John Rule, The Labouring Classes in Early Industrial England 1750-1850: Chapter 10: Education for the labouring classes, Longman 1986 p.249

12. Collector, Bellary To Board Of Revenue:17.8.1823 (Tnsa: Brp: Vol.958 Pro.25.8.1823 Pp.7167-85 Nos.32-33): Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p.190

13. Dharampal, The Beautiful Tree, Other India Press, 1983:2000, p.10

14. James Tooley, The Beautiful Tree: A Personal Journey Into how the World’s Poorest People are Educating Themselves, Cato Institute, 2009, p.229

15. James Tooley, 2009, p.229

16. James Tooley, 2009, p.230

17. James Tooley, 2009, p.230

18. James Tooley, 2009, p.230

19. James Tooley, 2009, p.237

20. James Tooley, 2009, p.235

21. James Tooley, 2009, p.238 22. James Tooley, 2009, p.232

23. Clark Kerr, The Great Transformation in Higher Education, 1960-1980, SUNY Press, 1991,p.8



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

அழகிய மரம்

 

ஆரியப் படையெடுப்பு தொடர்பான பொய்யுரைகளுக்கு அடுத்ததாக இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், அதிக செல்வாக்குடன் திகழும் இன்னொரு கட்டுக்கதை என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளாக எங்களைப் (பிராமணர் அல்லாதவர்களை) படிக்கவே விடவில்லை என்பதுதான். திராவிடக் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்டு, பல்வேறு அரசியல் குழுவினர் இன்றும் நம்பும் அல்லது நம்ப விரும்பும் கற்பிதம் அது. காந்தியவாதியும் வரலாற்று ஆய்வாளருமான தரம்பால், இந்தியக் கல்வி பற்றி ‘அழகிய மரம்’ இந்தப் புத்தகத்தில் முன்வைக்கும் ஆதாரங்களைப் படிப்பவர்கள், ஒன்று தங்களுடைய அந்தப் பிழையான தீர்மானத்தை மாற்றிக்கொள்வார்கள். அல்லது கைவந்த கலையைப் பயன்படுத்தி, புதிய வெறுப்புரைகளைக் கண்டடைவார்கள். (பிழையான அரசியல் கருதுகோளை மாற்றிக்கொள்ளும் நேர்மையெல்லாம் எல்லோருக்கும் எளிதில் வாய்த்துவிடுவதில்லையே). 

1931-ல், லண்டனில் மகாத்மா காந்திஜி ஓர் உரை நிகழ்த்தினார். அதில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த கல்வியின் நிலையைவிட, ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் கல்வி நிலை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷார் அமல்படுத்திய நிர்வாக நடைமுறைகள், இந்தியப் பாரம்பரியக் கல்வி என்ற அழகிய மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது என்று சொன்னார். காந்திஜியின் அந்தக் கூற்று, 18-19-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கல்வி தொடர்பான மிகப்பெரிய விவாதக் கதவுகளைத் திறந்துவிட்டது. அந்த விவாதங்கள் மற்றும் அது தொடர்பான தரவுகளின் முழுமையான தொகுப்பே இந்தப் புத்தகம். அப்படியாக, பிரிட்டிஷாரின் ஆவணங்களின் அடிப்படையில், இந்தியக் கல்வியின் வரலாற்றை இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

உலகில் எல்லா நாடுகளிலுமே, 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கான கல்வி என்ற லட்சியம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் புரட்சிக்குப் பிறகு. உலகில் பொதுவாக, கல்வியானது மத நிறுவனங்களின் பொறுப்பிலேயே விடப்பட்டிருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் இருந்ததைவிட இந்தியாவில் அடிப்படைக் கல்வியானது அனைத்து சாதியினருக்கும் தரப்பட்டிருக்கிறது. தொழில்கல்வி, எல்லா நாடுகளையும்போலவே தொழில் குழுமங்களுக்குள்ளாகவே கைமாற்றித் தரப்பட்டு வந்திருக்கிறது. ஆசிரியர்கள், மன்னர்கள், வணிகர்கள், நில உடமையாளர்கள், எளிய மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்துகொடுத்து, பாரம்பரியக் கல்வி மரத்தை நீரூற்றி, உரமிட்டு, வேலியிட்டுப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். 

பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்ததும், வரி வசூலை அதிகரிக்க என்ன வழி என்று ஆராய்ந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்த நிலங்களில் கணிசமான பங்கு இந்துப் பள்ளிகள், மதரஸாக்கள் போன்றவற்றின் பராமரிப்புக்காக மானியமாகத் தரப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறார்கள். அந்த நிலத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரி கிடைக்க என்ன வழி என்று பார்த்து, அதற்கான சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். அப்படியாக, அரசுக்கு வரி தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும், அதுவரை பள்ளிக்குச் செலவிடப்பட்ட தொகை குறைந்தது. கூடவே பிரிட்டிஷார் பெரிய கட்டடங்கள், முறையான அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள், திறமையான ஆசிரியர்கள், தேர்வுகள் என நவீன கல்வியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார்கள். (பிரிட்டனிலும் அது அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது). அவையெல்லாம் இல்லாத பள்ளிகளை, தயவு தாட்சணியமின்றி மூடினார்கள். அதற்கு முன்பு வரை, பெரிதும் இலவசமாகத் தரப்பட்ட கல்வியானது, பிரிட்டிஷாரின் வருகைக்குப் பிறகு கட்டணம் கட்டிப் படிக்கவேண்டி ஒன்றாக ஆனது. இதனால், கடைநிலை சாதிகளைச் சேர்ந்தவர்கள், கல்வியில் இருந்து அந்நியப்படவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அம்பேத்கர் போன்ற பல கடைநிலைச் சாதியினர், உயர் கல்வி பெறக் காரணமாக இருந்த அதே பிரிட்டிஷ் நிர்வாகம்தான், பெரும்பாலான எளிய கடைநிலைச் சாதியினர் கல்வியில் இருந்து அந்நியப்படவும் காரணமாக இருந்தது, வரலாற்றின் முரண்நகையே. 

இதுபோன்ற பல உண்மைகளை ஆதாரபூர்வமாக முன்வைக்கும் இந்த நூல், ஆங்கிலத்தில் அதர் இந்தியா பிரஸ் (Other India Press, Goa) சார்பில், தி ப்யூட்டிஃபுல் ட்ரீ (The Beautiful Tree) என்ற தலைப்பில் வெளியானது. அதன் அதிகாரபூர்வ மொழியாக்கம் இது. ‘‘இந்தப் புத்தகத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்கள், பெருமளவுக்கு ‘மதராஸ் பிரஸிடென்ஸி இண்டிஜினஸ் எஜுகேஷன் சர்வே’யில் இருந்து எடுக்கப்பட்டவையே. 1966-ல்தான் இதை முதலில் பார்த்தேன். 1831-32-லேயே, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஆவணங்களில் இந்த ஆய்வறிக்கைகளின் சுருக்கம் இடம்பெற்றிருக்கிறது. ஏராளமான ஆய்வாளர்கள், மதராஸ் பிரஸிடென்ஸி மாவட்ட ஆவணங்களிலும், பிரஸிடென்ஸி வருவாய்த் துறை ஆவணங்களிலும் (பிந்தைய அறிக்கைகள் மதராஸிலும் இருக்கின்றன; லண்டனிலும் இருக்கின்றன) இருக்கும் இந்த விரிவான ஆய்வறிக்கைகளைப் பார்த்திருக்கக்கூடும். எனினும், இனம்புரியாத காரணங்களினால் அவை அறிவுப்புலப் பார்வையில் இருந்து தப்பிவிட்டிருக்கின்றன’’ என்று முன்னுரையில் தரப்பால் தெரிவித்திருக்கிறார். இனம் புரியாத காரணங்கள் என்று அவர் நாசூக்காகச் சொல்லியிருக்கிறார். உண்மையில், கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனமே அதற்கான காரணம் என்பதை இந்தத் தொடரைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும். 

சுமார் 430 பக்கங்கள் கொண்ட ஆங்கில நூலின் சாராம்சத்தை, தரம்பால் அதே நூலில் அறிமுக உரையாக சுமார் 80 பக்கங்களில் சுருக்கித் தந்திருக்கிறார். இந்தத் தொடரில், அந்த அறிமுக உரை மட்டுமே இடம்பெற இருக்கிறது. மூல நூலில், அது ஒரே தொடர்ச்சியான உரையாகவே வெளியாகியிருக்கிறது. வாசகர்களின் வசதிக்கு ஏற்ப பல அத்தியாயங்களாக இங்கு பிரித்துத் தரப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

அந்தப் பசுமரம் பட்ட மரம் ஆனது ஏன்? 
பதினெட்டாம் நூற்றாண்டில் நிலவிய உள்நாட்டு இந்தியக் கல்வி 
தரம்பால். 
தமிழாக்கம் : புதுவை ஞானம்



திரு. ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களின் நினைவாக ! இந்தப் பணியில் தொய்வடையாத அக்கறையுடன் வழிகாட்டிய அவரது பெருந்தன்மைக்காக.

“அந்தச் சித்தரிப்பொடு அது முடியவில்லை. எதிர்கால அரசின் கல்வி முறை மனதில் இருக்கிறது. என்னுடைய புள்ளி விவரங்களை நிரூபிக்கும்படி சவால் எழுமே என்ற அச்சமின்றியே இதனைச் சொல்கிறேன். இந்தியா ஐம்பது நூறு ண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அதிக அறியாமையில் உழல்கிறது. பர்மாவும் அதே நிலையில் தான் இருக்கிறது. ஏனெனில் பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபோது, அப்போது இருந்த நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேரறுக்கத் தொடங்கினர். வேரைக் கண்டு பிடிப்பதற்காக மண்ணைப் பறித்தனர். பிறகு, அப்படியே விட்டு விட்டுச் சென்றனர். அந்த அழகிய மரம் ஈரமின்றிப் பட்டுப் போனது.

பிரித்தானிய நிர்வாகத்துக்கு அந்த கிராமத்துப் பள்ளிகள் நல்லவையாகத் தோன்றவில்லை. எனவே தனது திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, ஒவ்வொரு பள்ளிக்கும் குறிப்பிட்ட அளவு கட்டிடம், தட்டுமுட்டுச் சாமான்கள் இருந்தாக வேண்டும். அந்த அளவுகோல் கொண்டு பார்க்கப்போனால் இந்தியப்பள்ளிகள் பள்ளிகளே இல்லை. தாங்கள் ஆய்வு செய்த இடங்கள் பற்றிய புள்ளி விவரங்களை பிரித்தானிய நிர்வாகம் விட்டுச் சென்றிருக்கிறது. அந்தப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் இல்லை என்பதனால் பண்டைய பள்ளிகள் (திண்ணைப் பள்ளிக்கூடங்கள்) வாரியத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்டன. ஐரோப்பிய மாதிரியில் உருவாக்கப்பட்ட பள்ளிகள் மக்களுக்கு அதிகச் செலவு பிடிப்பதாக இருப்பதனால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.

ஒரு நூற்றாண்டுக்குள் கட்டாயத் தொடக்கக் கல்வியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும்படி நான் சவால் விடுகிறேன். இந்த ஏழை நாட்டினால் அத்தகையதொரு செலவு மிக்க கல்வி முறையைத் தாக்குப்பிடிக்க முடியாது. எங்களது அரசு பழைய பள்ளி சிரியரைப் புதுப்பித்து ஒவ்வொரு கிராமத்திலும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு பள்ளியை நிறுவி சீதனமாக அளிப்போம்.”

(மகாத்மா காந்தி இலண்டன் சாத்தம் நிலயத்தில் (Chatham HOUSE) அக்டோபர், 20 ,1931 இல் பேசியது.)


“பிரித்தானியரின் வருகைக்கு முன் கிராமங்களில் நிலவிய கல்விமுறை பற்றிய எனது தேடல் முயற்சியை நான் இன்னும் கைவிட்டு விடவில்லை. பல கல்வியாளர்களுடன் தொடர்ந்து கடிதமூலம் தொடர்பு வைத்துள்ளேன். எனது நிலைக்கு தரவு தெரிவித்து எழுதியவர்கள் தடையமாக/சாஆட்சியமாக ஏற்கத்தக்க வணங்களைத் தரவில்லை. முழுமையற்றதோ கேடுபயக்ககூடியதோ அல்ல எனது நிலைப்பாடு. அவை சாத்தம் நிலையத்தில் நான் பேசியவற்றுடன் இன்னும் ஒட்டிக்கொண்டு/பின்னிக்கொண்டுதான் இருக்கின்றன. ஹரிஜன் பத்திரிக்கையில் விட்டு விட்டு எழுத எனக்கு விருப்பமில்லை. நான் என் மனதில் வைத்திருந்த தடயங்கள் உங்களால் சவாலிக்கிழுக்கப்பட்டன என வெறுமனே நான் சொல்ல விரும்பவில்லை.”

(மகாத்மா காந்தி கஸ்ட்,1939 இல் Sir Philip Hartog அவர்களுக்கு எழுதியது.)


முகவுரை.

இந்தியக் கல்வியின் வரலாறு குறித்து ஏராளமான அறிவார்ந்த பதிப்புகள், குறிப்பாக 1930 களிலும் 1940 களிலும் வெளிவந்திருக்கின்றன. உண்மையில் இந்த விஷயம் பற்றிய எழுத்துக்கள், துவக்கத்தில் பிரித்தானிய அதிகாரிகளும் அறிஞர்களும் எழுதியவை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே வரத்தொடங்கி விட்டன. இருந்தபோதிலும் பெரும்பாலான இந்த வரலாறுகள் பண்டைய காலத்துடன் தொடர்புடையவை, சில சமயங்களில் கி.பி. பத்து அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை தொட்டுச் சென்றவை. மற்றவை பிரித்தானிய ஆட்சிக்காலத்தின் கல்வி வரலாறு பற்றியும் அதன் பின்னரும் பற்றிப் பேசுபவை. நாளந்தா அல்லது தக்ஷசீலா போன்ற குறிப்பிட்ட அமைப்புகள் பற்றிப் பேசும் அறிவார்ந்த படைப்புகள் மட்டுமின்றி,பண்டைய கல்வி பற்றிப் பொதுவாகப் பேசும் A.S.Altekar போன்றோரின் படைப்புகளும் இருந்தன.

அதற்கும் பிந்தைய காலம் பற்றி பல படைப்புகள் இருந்தன. Selections from educational records என்ற இரு தொகுதிகள் கொண்ட பதிப்பு சமீபத்தில் இந்திய அரசாலேயே வெளியிடப்பட்டுள்ளது. இவையன்றி S.Nurullaah மற்றும் J.P.Naik கியோரின் படைப்புகளும் குறிப்பிடத் தகுந்தவை கும். பின்னது இந்த இரு சிரியர்களாலும் (அதன் காலம் மற்றும் மனோநிலையைச் சுட்டிக் காட்டும் விதத்தில்) “கடந்த 160 ண்டுகளில் வெளிவந்த விரிவானதும் தாரபூர்வமானதுமான இந்தியக் கல்வி வரலாறு என்பதோடல்லாமல் இந்தியக் கண்ணோட்டத்தில் விளக்கம் செய்வதான முயற்சியும் கும்”
எனக் குறிப்பிடப்பட்டது.

ஒரு வகையில் கல்விக் கண்ணோட்டத்தில் நிறைவற்றதுவாயினும், 1939 இல் பண்டிட் சுந்தர்லால் அவர்களால் முதலில் பதிப்பிக்கப்பட்ட பெரும் நூலான இது, மிகப் பரவலான வாசகர்களைச் சென்றடைந்தது.( இந்தியில் ‘பாரத் மே அங்க்ரேசி ராஜ்’) என்று அறியப்பட்டதும் 1929 இல் வெளிவந்ததுமான இந்த நூலின் முதல் பதிப்பு ங்கிலேய அரசால் உடனடியாகத் தடை செய்யப்பட்டது. எனினும் 1780 பக்கங்கள் கொண்ட இதன் மறுபதிப்பு 1939 இல் வெளியிடப்பட்டது. 18 மற்றும் 19 ம் நூற்றாண்டில் பிரித்தானிய அரசு வெளியிட்ட தகவல்களை தாரமாகக் கொண்டே எழுதப்பட்ட, ‘பிரித்தானிய அரசு மற்றும் 1860 வரையிலான அதன் பின் விளைவுகள்’ பற்றிய தாரபூர்வமான நூலாக விளங்கியது இது.

பண்டிட் சுந்தர்லாலின் இந்த மகத்தான படைப்பு, அது வெளியிடப்பட்ட ஐம்பது ண்டுகளுக்குப் பிறகும் கூட சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய அரசியல் வாதிகளின் மூத்த தலைமுறையினர், கல்வியாளர்களிடையே பெரும் செல்வாக்கு செலுத்தியது. இந்தப் பிரபலமான படைப்பின் ‘இந்திய உள்நாட்டுக் கல்வியின் சிதைவு’ என்ற 40 பக்கங்கள் கொண்ட 36 வது அத்தியாயம் பல்வேறு பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடிதப் போக்குவரத்திலிருந்து தாரங்களை எடுத்துக் காட்டுகிறது. இவை ஒரு நூற்றாண்டு காலகட்டத்துக்கு நீள்கின்றன. 3, ஜூன்,1814 இல் இங்கிலாந்திலிருந்து இந்திய கவர்னர் ஜெனரலுக்கு வந்த கடிதம் தொடங்கி, மாக்ஸ்முல்லரின் அவதானிப்புகள், 1919 இல் பிரிட்ட்டிஷ் தொழிற்கஆட்சித் தலைவர் Kir Hardie இன் குறிப்புகள் என நீள்கிறது இது.

இருந்த போதிலும், இந்த நூல் எழுதப்பட்ட காலத்தில், அச்சிடப்படாத விரிவான வணங்களைப் பெறுவதில் இருந்த சிரமங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டால், இந்த சிரியர் தனது ஆய்வுகளை அச்சில் வந்த வணங்களைக் கொண்டு மட்டுமே தொடர முடிந்திருப்பது புலனாகும். இருப்பினும், ஒரு அறிமுகம் என்ற வகையில், இந்தியாவில் 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் நிலவிய உள்நாட்டு கல்வி பற்றிய சான்றுகளில் ‘பாரத் மே அங்க்ரேசி ராஜ்’ ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல் கும்.

3ம் நூற்றாண்டிலிருந்து 19 ம் நூற்றாண்டு தொடக்கம் வரையிலான கல்வி நிலவரம் மற்றும் வரலாறு குறித்து அரிதாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஐயத்துக்கிடமின்றி S.M.Jaaffer அவர்கள் இசுலாமியக் கல்வி பற்றி எழுதியது போன்ற சில நூல்கள் உள்ளன. அவற்றுள் சில அத்தியாயங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிலவிய கல்வி வரலாறு பற்றியும் இந்திய உள்நாட்டுக் கல்வியின் சிதைவு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. நசுருல்லாவும் நாயக்கும் தங்களது நூல்களின் மொத்தமுள்ள 643 பக்கங்களின் முதல் 43 பக்கங்களில் 19 ம் நூற்றாண்டில் நிலவிய உள்நாட்டுக் கல்வி நிலையின் இயல்பு மற்றும் அளவு பற்றி விவாதிக்கையில் சில சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க கால உள்நாட்டு இந்தியக் கல்வியின் நிலை பற்றிய விவாதங்களும் மாறுபடும் கருத்துக்களும் தங்களது நிலைபாட்டுக்கு தாரமாக கீழ்க்கண்டவ்ற்றை தார சாதனமாகக் குறிப்பிடுகின்றன. (அ) அதிகம் பேசப்பட்ட முன்னாள் கிருத்துவ பாதிரியாரான Adam Smith அவர்களின் 1835 - 38 ண்டு கல்வி நிலை குறித்த அறிக்கைகள். அவை வங்காளம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களில் நிலவிய சுதேசிக் கல்வி நிலை பற்றிப் பேசின. () 1820 களில் சுதேசிக்கல்வி பற்றி பம்பாய் ராஜதானியில் பிரிட்டிஷ் அதிகாரிகள் நடத்திய ய்வறிக்கைக் குறிப்புகள் மற்றும் (இ) சுதேசிக்கல்வி பற்றி மதராஸ் ராஜதானியில்(வடக்கே கஞ்சம் தொடங்கி தெற்கே திருநெல்வேலி வரையும் ,மேற்கே மலபார் வரையும் 1822 முதல் 25 வரை விரிவாக நடத்தப்பட்ட மற்றொறு ய்வறிக்கையின் பிரசுரிக்கப்பட்ட பகுதிகள். கிட்டத்தட்ட அதே விஷயம் பற்றிய பஞ்சாப் நிலைகுறித்து மிகவும் பின்னால் G.W.Leinter என்பவரால் நடத்தப்பட்ட ய்வறிக்கை.

மேலே சொல்லப்பட்ட தாரங்களுள், முந்தைய அரசு வணங்களை அடிப்படையாகக் கொண்டதும் தனது சொந்த ஆய்வுகளை உள்ளடக்கியதுமான G.W.Leinter அவர்களின் அறிக்கை மிகவும் வெளிப்படையாகவே பஞ்சாபின் சுதேசீயக்கல்வியின் சிதைவுக்கும் அதன் அழிவுக்கும் கூட பிரிட்டிஷ் அதிகாரிகள் தான் காரணம் என விமர்சித்தது. ( Leinter ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ன போதிலும் அவர் ங்கிலேயர் அல்ல என Sir.Philip Hartog குறிப்பிட்டார்.)இருந்த போதிலும், அவ்வளவு வெளிப்படையாக இல்லாமல் பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் கனவான்களின், மனம் புண்படாத நாசூக்கான மொழியில், Adam அவர்களின் அறிக்கையும் சென்னை ராஜதானியின் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அறிக்கையும் தத்தம் பகுதியின் இந்திய சுதேசிக் கல்வி பற்றிப் பேசின.

20,அக்டோபர் 1931 அன்று லண்டனில் ROYAL INSTITUTE OF INTERNATIONAL AFFAIRS கூட்டத்தில் காந்தி நிகழ்த்திய நீண்ட உரையில் கடந்த 51-100 ண்டுகளாக இந்தியாவில் கல்வி அறிவு குறைந்து விட்டது. அதற்கு பிரிட்டிஷார் தான் பொறுப்பு என்ற சில வாக்கியங்கள் Adam மற்றும் Leinter கியோரின் அவதானிப்புகளைக் கூர்மைப்படுத்தி விட்டன. அப்போதுதான், 19ம் நூற்றாண்டின் துவக்க கால சுதேசிக்கல்வி பற்றிய மேற்கண்ட தாரங்கள் மிகப் பெரும் முக்கியத்துவம் பெற்றன. ஒரு தனி நபர் என்ற முறையில் மட்டுமல்லாது, பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதி என்ற முறையிலும் காந்தியை வாதுக்கு இழுத்தவர் Sir.Philip Hartog என்ற , ஒரு காலத்தில் டாக்கா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராயிருந்த இந்திய சட்டக்கமிஷன் துணைக்குழுவின் உதவித்தலைவராகவுமிருந்த ங்கிலேயர் வார். காந்தியின் வாதங்களுக்கு அடிப்படையான அச்சிடப்பட்ட தாரங்களை முன் வைக்குமாறு அவர் கேட்டார். திருப்தியடையாத அவர் நான்காண்டுகள் கழித்து ( இந்த காலகட்டத்தில் காந்தி பெரும்பாலும் சிறையில் இருந்தார்.) லண்டன் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையில் காந்தியின் கூற்றுக்களுக்கு எதிராக மூன்று தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். 1939 இல் மூன்று சொற்பொழிவுகளையும் அவற்றுக்கான குறிப்புகளையும் சேர்த்து புத்தக வடிவில் பதிப்பித்தார்.

காந்தியையும் முந்தைய தாரங்களையும் மறுத்தலில், Sir.Philip Hartog உண்மையில் அசலாக இருக்கவில்லை. பிரிட்டிஷ் சட்டங்களையும் கொள்கைகளையும் பாதுகாக்கும் தேய்ந்த பழகிய பாதையையே பின்பற்றினார் என்பதுதான் உண்மை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ‘விக்டோரியா கால இங்கிலாந்தின் தந்தை’ என பிற்காலத்தில் அறியப்பட்ட William Wilberforce அவர்களால் 125 ண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்ட பாதையைத்தான் தொடர்ந்தார். தனது காலத்திலே கூட இது போன்றதொரு முயற்சியில் அவருக்கு முன்னதாக; “அக்பர் மற்றும் ஜஹாங்கீர் காலத்து பாட்டாளிகளுக்கு இப்போது இருப்பதைவிட அதிகமாகவே உண்பதற்குக் கிடைத்தது” என்று சொன்ன Vincent Smith அவர்களின் கூற்றை மறுத்த W.H.Mooreland இருக்கத்தான் செய்தார். இந்த சவால்தான் மூர்லேண்ட் அவர்களை ஓஆய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரியின் பாத்திரத்திலிருந்து, இந்தியாவின் பொருளாதார வரலாற்றாசிரியர் நிலைக்கு உயர்த்தியது எனத் தோன்றுகிறது.

தற்போதைய தலைமுறைக்கு இவர்களது பாத்திரம் கடந்து போன விஷயம் எனத்தோன்றுவது புரிந்து கொள்ளக்கூடியது தான் எனினும், இவர்களைப் போலல்லாது,1940 வரை இருந்த பிரிட்டிஷார்கள் அர்ப்பணிப்பு உணர்வைச் சுமந்திருந்ததால், இயற்கையாகவே , அவர்களது இருநூறு ண்டு கால ஆட்சியின் போது இந்தியாவிலும் மற்று எங்காயினும் தாங்கள் வேண்டுமென்றே செய்திருப்பினும் வேறு எவ்வாறு செய்திருப்பினும் அவற்றின் மீதான கருத்துக்களையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை.

இந்த நூலில் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கும் வணங்களின் பெரும்பகுதி சென்னை ராஜதானியின் உள் நாட்டுக் கல்வி பற்றிய ஆய்விலிருந்து முதன் முதலாக இதன் சிரியரால் 1966 இல் தரிசிக்கப்பட்டவை. மேலே சொல்லப்பட்ட இந்த ஆய்வின் மேற்கோள்கள் 1831-32 வாக்கிலேயே House of commons Papers இல் சேர்க்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், பல அறிஞர்கள் Madras Presidency district recods மற்றும் Presidency Revenue Records இல் இந்த வணங்களைக் கண்டிருக்கக்கூடுமாயினும் விவரிக்க இயலாத காரணங்களால் அவர்களின் கல்விரீதியிலான கவனத்திற்குத் தப்பியிருக்கிறது. (பின்னது சென்னையிலும் இலண்டனிலும் இருக்கிறது.) சமீப காலத்திய சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ய்வேடுகள் கூட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் பற்றி ஆய்வு செய்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்வி குறித்த சில குறிப்புகளைத் தந்த போதிலும், இந்தத் தரவுகளை முழுமையாகப் பயன்படுத்தவில்லை.

இந்தப் படைப்பு பிரிட்டிஷ் ஆட்சியை கிண்டல் செய்வதற்காக எழுதப்படவில்லை. மாறாக, பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய இந்திய நிகழ்நிலை, அந்த சமுதாயம், அதன் உள்கட்டமைப்பு, அதன் பழக்க வழக்கங்கள் - நிறுவணங்கள், அவற்றின் பலம்- பலவீனம் கியவை பற்றி விரிவாகப் புரிந்து கொள்ளுமுகத்தான், இத்தரவுகளைப் பயன்படுத்த இந்நூலாசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சிகள்தான் இவை. ஏற்கனவே இந்நூலாசிரியர் எழுதிய 18ம் நூற்றாண்டு அறிவியலும் தொழில் நுட்பமும், ஒத்துழையாமை இயக்கம் கிய இரு நூல்களைப்போலவே இதுவும் இந்தியாவின் மற்றொரு அம்சத்தைப் பற்றிப் பேசுகிறது. அதுவுமன்றி முன்னுரையில் அந்த காலகட்டத்தின் உலகளாவிய சுதேசிக்கல்வி நிலை குறித்த செய்திகளை பதிவு செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த நோக்கத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இங்கிலாந்தில் நிலவிய கல்வியின் நிலை குறித்து சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில ண்டுகளில் பல நண்பர்கள் இந்த வணத்தின் மீது ர்வம் செலுத்தி மதிப்பு மிக்க கருத்துகளையும் லோசனைகளையும் வழங்கி இருக்கின்றனர்.அவர்கள் அனைவருக்கும் நன்றி பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களது ஊக்குவிப்பும் தரவும் இன்றி இந்தப் பணி முழுமை அடைந்திருக்காது. பத்தொன்பதாம் ண்டின் துவக்கத்திய கல்வித்துறைகள் பாடத்திட்டங்கள் பற்றிய எனது ஐயங்களுக்கு விடை தேட க்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் பண்டைய வணங்களைப் பார்வையிட அனுமதித்தமைக்கு அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அது போலவே, India Office &Records (IOR) நிறுவணத்துக்கும், காந்தி - ஹார்டாக் இடையே நடைபெற்ற கடிதப் பரிமாற்றத்தை வழங்கியமைக்கு Mr.Mortin Moir அவர்களுக்கும்,1971-72 இல் எனக்கு Sr.Fellowship வழங்கிய Patna, A.N.Sinha Institute of Social Studies, Gandhi Peace Foundation,New Delhi, காந்தி சேவா சங்கம், சேவாகிராமம், மற்றும் Association of Voluntary Agencies for Rural Development , New Delhi அமைப்புகளுக்கும் தேவைப்படும் போதெல்லாம் இந்த முயற்சியில் ர்வமும் அக்கறையும் செலுத்தியமைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

சென்னை ராஜதானி வணங்களை (பின் இணைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது).இதனை நான் முதலில் India office Library இல் பார்த்தேன் என்ற போதும் தமிழ் நாடு வணக்காப்பகத்தில் இருந்து (முன்பு இது மதராஸ் ரெகார்ட்ஸ் பீஸ் என அழைக்கப்பட்டது.) வேலைப்பளுவினைச் சுமந்து கொண்டிருந்த போதிலும் இந்த வசதியை எனக்களித்து அன்பு காட்டிய ஊழியர்களுக்கு என் நன்றி. Alexander Walker அவர்களின் குறிப்பும் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது அது ஸ்காட்லாண்ட்டின் எடின்பர்க் தேசீய நூலகத்தின் Walker of Bowland papers என்ற வணத்தில் இருந்து எடுக்கபட்டது. எனக்கு அனுமதியும் வசதியும் செய்து கொடுத்த அந்த தேசீய நூலகத்துக்கும் ஸ்காட்டிஷ் ரெகார்ட்ஸ் பீஸ் எடின்பர்க் பலகலைக்கழகம், உ.பி. மாநில வணக்காப்பகம், அலஹாபாத் கியோருக்கும் இத்தகைய வசதிகளும் அனுமதியும் அளித்தமைக்கு நன்றி.

இறுதியாக சேவாகிராமம் ஸ்ரம் பிரதிஸ்தானுக்கு, என்னை அழைத்து, இந்த நூலினை சிரமத்தில் வைத்து எழுத வசதி செய்து கொடுத்து, தங்களில் ஒருவனாக கவுரவித்ததற்காக நன்றி. காந்தியின் குடிலுக்கு அருகில் இருந்து இந்தப் பணியை முடித்தது உண்மையிலேயே எனக்குக் கிடைத்த பெரும் கவுரவம்.

இந்த நூலின் தலைப்பு லண்டன் சாத்தம் நிலையத்தில் 20 ,அக்டோபர்,1931இல் காந்தி ற்றிய உறையிலிருந்து எடுக்கப்பட்டது. “பிரித்தானியர் இந்தியாவுக்கு வந்தபோது, அப்போது இருந்த நிலையை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேரறுக்கத் தொடங்கினர். வேரைக் கண்டு பிடிப்பதற்காக மண்ணைப் பறித்தனர். பிறகு, அப்படியே விட்டு விட்டுச் சென்றனர். அந்த அழகிய மரம் ஈரமின்றிப் பட்டுப்போனது.” என்று அவர் பேசினார்.

துணைத் தலைப்புகளும் அவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த நூலின் பெரும்பகுதி சென்னை ராஜதானியில் 1822-25 காலகட்டத்தில் திடட்டப்பட்ட தரவுகளில் இருந்து எடுக்கப்பட்ட போதிலும் இந்தத் தரவுகள் மிகவும் பழங்காலத்திய கல்வி அமைப்பு பற்றியவை கும். 18 ம் நூற்றாண்டுக்குப்பின் கல்வி விரைவாக சீரழியத் தொடங்கிய போதிலும் அது தான் அந்தக்காலம் வரை பிரதான அமைப்பாக இருந்து வந்தது. தம் அவர்களின் அறிக்கை இந்தச் சீரழிவு பற்றி 19 ம் நூற்றாண்டின் நான்காம் பத்தாண்டுகள் பற்றிக் குறிப்பிடுகையில் பேசுகிறது.

தரம்பால்.
19,பிப்ரவரி,1981,
ஆஸ்ரம் பிரதிஸ்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 இந்தியா எப்படி பிரிட்டனை அதிக கல்வியறிவு பெற்றது: தாரம்பலுக்கு அப்பால் உள்ள ‘அழகான மரம்’

வழங்கியவர் அரவிந்தன் நீலகண்டன்

பிரிட்டனைப் பின்பற்றுவதன் மூலம் அதன் பள்ளி முறையை மேம்படுத்தியது இந்தியா அல்ல. மாறாக, அது வேறு வழி.

ஒவ்வொரு இந்தியரும் ஒரு கட்டத்தில் இந்தியா ஆங்கிலேயர்களால் எவ்வாறு கல்வி கற்றார் என்பதையும், சீரழிந்த மற்றும் தேக்கமடைந்த இந்தியாவுக்கு ஒரு கலாச்சார மறுமலர்ச்சியை எவ்வாறு கொண்டு வந்தது என்பதையும் கற்றுக்கொள்கிறார். இதனுடன் இணைக்கப்பட்ட, இந்திய மாணவர்கள் காலனித்துவத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பா எவ்வாறு ஒரு மறுமலர்ச்சி மற்றும் லூத்தரன் சீர்திருத்தத்திற்கு உட்பட்டது என்பதையும் இந்திய மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

இது பொதுவாக ஐரோப்பாவையும் குறிப்பாக பிரிட்டனையும் புறஜாதி உலகத்தை நாகரிகப்படுத்தும் பங்கை ஏற்க அனுமதித்தது. ஆங்கிலேயர்களின் நாகரிக பணியின் இந்த மகத்தான கதை எவ்வளவு உண்மை?

காணாமல் போன இணைப்புகள்

பிரதான ஐரோப்பிய வரலாற்று வரலாறு எப்போதும் கிறிஸ்தவத்தை பாகன் ஐரோப்பாவின் மீது நேர்மறையான செல்வாக்குடன் முன்வைத்துள்ளது. இவ்வாறு கான்ஸ்டன்டைன் ஏராளமான அடிமைகளை விடுவிப்பதாகக் காட்டப்படுகிறது, சர்ச் பிதாக்களை ஒரு சர்ச் சபையில் ஒரு அடிமையை விடுவிக்க அனுமதித்ததைப் பற்றிய அவரது பாராட்டுகளை எடுத்துக்காட்டுகிறது.

உண்மையில், ஒரு அடிமையை விடுவிக்கும் அத்தகைய நடைமுறை மதகுருக்களுக்கு மட்டுமல்ல, பாகன் ஐரோப்பாவில் உள்ள அனைத்து அடிமை உரிமையாளர்களுக்கும் இருந்தது, விழா பேகன் கோவில்களில் நடந்தது. உண்மையில், மதம் அடிமைகளுக்கு ஒரு கூடுதல் சங்கிலியாக மாறியது, மாற்றங்களை எதிர்க்கும் "காட்டுமிராண்டித்தனமான" நிலங்களுக்கு தப்பித்த அடிமைகள் கான்ஸ்டன்டைனால் கால்களை வெட்டினர். இதுபோன்ற மகத்தான கதைகளில் இது அரிதாகவே குறிப்பிடப்படுகிறது.

புராட்டஸ்டன்ட் இயக்கத்தின் பிந்தைய நாள் பாராட்டு கிறிஸ்தவத்தின் அதே மனிதமயமாக்கல் ஆவியின் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. ஐரோப்பாவில் நவீனத்துவத்தின் தவிர்க்கமுடியாத எழுச்சிக்கான எதிர்வினையாக புராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒரு நெருக்கமான பார்வை வெளிப்படுத்துகிறது. ஐரோப்பாவில் ஏறிக்கொண்டிருந்த நவீனத்துவம் முக்கியமாக தத்துவ மரபுகளை மீண்டும் கண்டுபிடித்ததன் காரணமாக ‘பேகன்’ என்று நீண்ட காலமாக நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறு புராட்டஸ்டன்டிசத்தின் நிறுவனர் மார்ட்டின் லூதர், உயர்வான பிரபுக்களின் வரிகளை நசுக்குவதை எதிர்க்கும் கலகக்கார விவசாயிகளுக்கு எதிரான தனது பிரபலமற்ற பாதையில், சொற்களைக் குறைக்காமல் கூறினார்

விவசாயி வெளிப்படையான கிளர்ச்சியில் இருந்தால், அவர் கடவுளின் சட்டத்திற்கு புறம்பானவர் ... ஆகையால், ஒரு கிளர்ச்சியாளரை விட விஷம், புண்படுத்தும் அல்லது பிசாசு எதுவும் இருக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய, ரகசியமாக அல்லது வெளிப்படையாக, அடித்து, கொன்று குத்தக்கூடிய அனைவரையும் அனுமதிக்கட்டும். . ஒரு பைத்தியம் நாயை ஒருவர் எப்போது கொல்ல வேண்டும் என்பது போன்றது; (3)

 லூதரின் ஆலோசனையை மத ரீதியாக இளவரசர்கள் மற்றும் டியூக்ஸ் மற்றும் கவுண்ட்ஸ் ஆகியோர் பின்பற்றினர், அவர்கள் ஃபிராங்கண்ஹவுசனில் 5000 விவசாயிகளுக்கு குறையாதவர்களை வாள் போட்டனர். இந்த விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதில் லூதர் மகிழ்ச்சியடைந்து பெருமையுடன் அறிவித்தார்:

நான், மார்ட்டின் லூதர், எல்லா விவசாயிகளையும் கொன்றேன்; அவர்களைக் கொல்லும்படி நான் கட்டளையிட்டதால் அவர்களுடைய இரத்தமெல்லாம் என் தலையில் இருக்கிறது; அவர்களின் இரத்தம் அனைத்தும் என் கழுத்தில் உள்ளது. ஆனால் இந்த உத்தரவை எனக்குக் கட்டளையிட்ட எங்கள் கர்த்தராகிய கடவுளுக்கு நான் அதை அனுப்புகிறேன்.

 பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக இருந்த அதன் தொழிலாளர் மக்களுக்கு சிகிச்சையளிப்பதில் இங்கிலாந்து சிறந்தது அல்ல. தொழிலாளர்களின் கல்வியறிவு, வேண்டுமென்றே இருந்தது மற்றும் மத காரணங்களால் நியாயப்படுத்தப்பட்டது. 1807 ஆம் ஆண்டில், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற இடத்தில், பிரிட்டிஷ் விஞ்ஞானி டேவிஸ் கில்பர்ட், உழைக்கும் வகுப்புகளுக்கான கல்வி என்று கூறி மக்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை கடுமையாக எதிர்த்தார்.

… இதன் விளைவாக அவர்களின் ஒழுக்கத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பாரபட்சமற்றதாக இருக்கும்: இது அவர்களை விவசாயத்தில் நல்ல ஊழியர்களாக மாற்றுவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் அவர்களின் வெறுப்பை வெறுக்கக் கற்றுக் கொடுக்கும், சமுதாயத்தில் அவர்களின் தரவரிசை அவர்களுக்கு விதிக்கப்பட்ட பிற உழைப்பு வேலைகள்… .இது அவர்களுக்கு உதவும் கிறிஸ்தவத்திற்கு எதிரான தேசத்துரோக துண்டுப்பிரசுரங்கள், தீய புத்தகங்கள் மற்றும் வெளியீடுகளைப் படிக்க. (5)

 கல்வி - சமூக கட்டுப்பாட்டுக்கான ஒரு கருவியாக

உழவர்-தொழிலாளர் சமூகத்திற்கான கல்வியை ஆதரித்தவர்கள் கூட, உழைக்கும் மக்களின் சமூக விடுதலையின் எந்தவொரு வழிமுறையையும் விட இது சமூகக் கட்டுப்பாட்டு வழிமுறையாகக் கருதப்பட்டது. இவ்வாறு பிரிட்டனில் பொதுக் கல்விக்கான அரசாங்க மானியத்தை நிர்வகிக்க பிரிவி கவுன்சில் உருவாக்கிய குழுவின் முதல் செயலாளரான சர் ஜேம்ஸ் பிலிப்ஸ் கே-ஷட்டில்வொர்த் (1804 –1877), பள்ளிகளின் நோக்கம் என்ற புள்ளியை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். விவசாயிகளின் குழந்தைகள், "உழைக்கும் மக்களின் ஒரு புதிய இனத்தை வளர்ப்பது - மரியாதைக்குரிய, மகிழ்ச்சியான, கடின உழைப்பாளி, விசுவாசமான, அமைதியான மற்றும் மத."

பெரும்பாலும், கல்வி தேவாலயங்களால் எடுக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பைபிள் வகுப்புகளுடன் தொகுக்கப்பட்டது. எனவே, கல்வித் தரங்கள் மிகக் குறைவாக இருந்தன. எடுத்துக்காட்டாக, 1858 ஆம் ஆண்டில் 40,000 க்கும் அதிகமானோர் தங்கள் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளில் படித்த கார்ன்வாலின் வலுவான மெதடிஸ்ட் சுரங்க மாவட்டங்களில், குழந்தை தொழிலாளர் விசாரணையில் ஒரு பள்ளி கற்பித்தல் எழுத்து மட்டுமே காணப்பட்டது.

அதே ஆண்டு நாட்டிங்ஹாமில் இருந்து தரவுகள் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளில் மட்டுமே படித்த 22 குழந்தைகளில் 17 குழந்தைகளை எழுத முடியவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. எவ்வாறாயினும், ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் தொழிலாள வர்க்கத்தின் "தார்மீக கட்டுப்பாடு" குழந்தைகளுக்கு கற்பித்ததற்காக உயரடுக்கு பிரிட்டன்களால் பாராட்டப்பட்டன. லண்டனின் பட்டு-நெசவு மாவட்டமான ஸ்பிட்டல்ஃபீல்ட்ஸில் கல்வி மிஷனரி செயல்பாடு சமூக கட்டுப்பாட்டின் தேவையால் தூண்டப்பட்டது, இது 1844 இல் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு உணரப்பட்டது.

ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்கள் கற்பித்த பாடங்களில் அவர்களின் நிபுணத்துவத்தால் அல்ல, ஆனால் “இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் சேமிக்கும் சக்திகளைப் பற்றிய முழுமையான அறிவைக் கொண்டிருந்தார்கள்”. கிராமப் பள்ளியில் படித்த ஒரு விவசாயியின் மகன், குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் காட்டிய அதிகாரம் தோல்வியுற்றதற்கு "உண்மையுள்ள, நேர்மையான மற்றும் கீழ்ப்படிதலுள்ளவர்களாக" கற்பிக்கப்பட்ட விதம் தெளிவாக நினைவுகூரப்பட்டது "பிசாசு என்று கூறப்பட்டவற்றின் படம் - சுருதி முட்கரண்டி கொண்ட ஒரு பயங்கரமான நபர்… எல்லா பொல்லாத குழந்தைகளையும் கையாண்டு அவர்களை இந்த முட்கரண்டி கொண்டு நெருப்பில் வைப்பார். ”

போக்குகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் நன்றாகத் தொடர்ந்தன, மேலும் நோய்கள் காலனிகளையும் பாதித்தன, பின்னர் பார்ப்போம். இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் லண்டன் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து மற்றொரு அலை கட்டப்பட்டது. அவற்றின் தோற்றம் இந்தியாவின் கடற்கரையிலிருந்து வந்தது.

‘அழகான மரத்தின்’ மறு கண்டுபிடிப்பு

அக்டோபர் 20, 1931 அன்று லண்டனின் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் விவகாரத்தில் காந்தி கூறிய கருத்து, அதிக கல்வியறிவுள்ள இந்தியாவைப் பற்றி இன்று தாரம்பால் செய்த முன்னோடி பணிகளுக்கு நன்கு அறியப்பட்ட நன்றி. இந்திய கல்வி முறைக்கு ‘அழகான மரம்’ என்ற உருவகம் குறைந்தபட்சம் இந்தோ-ஃபைல்களிடையே பிரபலமாகிவிட்டது. டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சர் பிலிப் ஹார்டாக் காந்தியுடன் இணைந்தார்.

ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக அவர் அவருடன் ஒரு கடிதத் தொடர்பைத் தொடங்கினார். ஹார்டாக் தனது பேரரசில் நேரம் மற்றும் ஒரு பேரரசின் அதிகாரத்துவ சேவைகளைக் கொண்டிருந்தார். அறிக்கைகள் மூலமாகவும், அவருக்குப் பொருந்தக்கூடிய உண்மைகளை அவர் துல்லியமாகவும் ஊற்றினார். காந்தி அந்த நேரத்தில் சுதந்திரப் போராட்டத்தின் மத்தியில் தனது பெரும்பாலான நேரத்தை பிரிட்டிஷ் சிறைகளில் கழித்தார்.

பிரிட்டிஷ் சுதேச கல்வியை முறையாக அழித்துவிட்டதாக இந்தியர்களிடையே அதிகரித்து வரும் உணர்வைத் தணிக்கும் பொருட்டு லண்டன் பல்கலைக்கழகத்தில் தொடர் சொற்பொழிவுகளை வழங்க ஹார்டாக் அழைக்கப்பட்டார். அவரது சொற்பொழிவுகள் உடனடியாக ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டன.

சுதந்திரத்திற்குப் பிறகுதான், தாரம்பால், ஆஃப்-பீட் வரலாற்றாசிரியர், சாலையில் புறப்பட்டு, காலனித்துவ கட்டமைப்பின் ஞானத்தைத் தாண்டி, பயணக் காப்பகங்களின் வழியாக செல்லத் தொடங்கினார். அவர் செய்த கண்டுபிடிப்புகள் அவரை வியப்பில் ஆழ்த்தின.

கர்னல் டி. மன்ரோவால் நியமிக்கப்பட்ட சுதேச கல்வி முறையின் முழுமையான கணக்கெடுப்பில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிழக்கிந்திய கம்பெனி செய்ததாக வெளியான தகவல்களுக்குப் பின்னர் வந்த அறிக்கைகள் சமகால இங்கிலாந்தில் இருந்ததை விட மிகவும் பரவலாக்கப்பட்ட, சமத்துவமான கல்வி முறையை வெளிப்படுத்தின. தாரம்பால் தனது படைப்பை வெளியிட விரும்பியபோது அதைச் செய்யத் தயாராக இருந்த ஒரே நபர் ஒரு இந்து தேசிய வரலாற்றாசிரியரும், வெளியீட்டாளருமான சீதாராம் கோயல் மட்டுமே.

தரம்பலின் புத்தகமான ‘அழகான மரம்’ பல்லாரி மாவட்ட சேகரிப்பாளரின் 1823 அறிக்கையைக் கொண்டுள்ளது. கலெக்டர் ஒரு ஆர்வமான உண்மையை குறிப்பிடுகிறார்:

பூர்வீக பள்ளிகளில் குழந்தைகள் எழுதக் கற்றுக் கொள்ளப்படும் பொருளாதாரம், மேலும் மேம்பட்ட அறிஞர்கள் குறைந்த மேம்பட்டவர்களையும் அதே நேரத்தில் தங்கள் சொந்த அறிவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் கற்பிக்கும் முறை நிச்சயமாக போற்றத்தக்கது, மேலும் அதைப் பின்பற்றுவதற்கு தகுதியானது இங்கிலாந்தில் பெற்றது.

 பிரிட்டனில் இந்திய முறை பின்பற்றப்படுவது பிரிட்டிஷ் ஒப்புதல். இந்தியாவில் ‘அழகான மரத்தின்’ மரக்கன்றுகள் எவ்வாறு கொண்டு செல்லப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டன என்பது குறித்து தாரம்பால் ஒரு ஆண்ட்ரூ பெல் பற்றிய குறிப்பை வழங்குகிறது.

தரம்பலின் பணிகளை முன்னெடுத்துச் செல்கிறது

தரம்பலின் பணி வெளியிடப்பட்ட சில தசாப்தங்களுக்குப் பிறகு, பிரிட்டிஷ் கல்வியாளரான ஜேம்ஸ் டூலிக்கு பழைய நகரமான ஹைதராபாத்தில் ஒரு பழைய புத்தக விற்பனையாளரால் “அழகான மரத்தின்” நகல் வழங்கப்பட்டது. இது ஏற்கனவே வளரும் நாடுகளில் குறிப்பிட்ட கவனம் செலுத்துவதன் மூலம் செலவு குறைந்த தரமான கல்வியில் பணிபுரிந்த டூலிக்கு புதிய கதவுகளைத் திறந்தது. இதன் விளைவாக “அழகான மரம்: உலகின் ஏழ்மையான மக்கள் எவ்வாறு தங்களை கல்வி கற்கிறார்கள் என்பதற்கான தனிப்பட்ட பயணம்” (பென்குயின் புக்ஸ் இந்தியா 2009)

இந்தியாவில் பழைய கல்வி முறைக்கு எவ்வாறு நிதியளிக்கப்பட்டது என்பது குறித்து டூலி வேலை செய்யத் தொடங்கினார். கிரேட் பிரிட்டனில் கல்வி முறை எவ்வாறு உருவானது என்பதையும் அவர் ஒரே நேரத்தில் பணியாற்றினார். இங்கிலாந்தில் இந்திய கல்வி முறை எந்த அளவிற்கு மாற்றியமைக்கப்பட்டது அல்லது பின்பற்றப்பட்டது என்பதை அவர் கண்டுபிடித்தார். அவர் ஆண்ட்ரூ பெல்லுடன் தொடங்கினார், அவர் ஒரு "பயபக்தியுடன்" இருந்தார். டூலியின் வார்த்தைகளில், இந்த ரெவ். ஆண்ட்ரூ பெல்லின் வாழ்க்கையைப் பற்றி அவர் ஆராய்ச்சி செய்தபோது, ​​அவர் கண்டுபிடித்தது அவருக்கு ‘டைனமைட் போலத் தோன்றியது’.

இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கான தனியார் பள்ளிகளில் கற்பிக்கும் "பொருளாதார" முறை எவ்வாறு விக்டோரியன் இங்கிலாந்திலும் அதற்கு அப்பாலும் கல்வியை மாற்றும் ஒரு முறையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் தெளிவாகக் காட்டினர்.

 ரெவ். பெல் இந்தியாவில் இந்திய வீரர்களின் மூலம் பிரிட்டிஷ் வீரர்களின் சந்ததியினருக்கான புகலிடத்தில் பணியாற்றினார், நிச்சயமாக வீரர்கள் கைவிட்டனர். இந்த குழந்தைகளுக்கான இறக்குமதி செய்யப்பட்ட ஆசிரியர்கள் சரியாக உற்சாகமாக இருக்கவில்லை. ஒரு நாள் அவர் மெட்ராஸ் கடற்கரையில் சவாரி செய்தபோது ஒரு சொந்த பள்ளி அமர்வைக் கவனித்தார். "சிறிய குழந்தைகள் மணலில் விரல்களால் எழுதுவதை அவர் கண்டார், இது அத்தகைய பள்ளிகளின் நாகரிகத்திற்குப் பிறகு, அந்த நோக்கத்திற்காக அவர்களுக்கு முன்னால் மூடப்பட்டிருந்தது", மேலும் "சக போதனை - குழந்தைகள் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வது" என்பதையும் அவர் கண்டார்.

பெல் தனது யுரேகா தருணத்தைக் கொண்டிருந்தார். அவர் இந்த முறையை வெற்றிகரமாக பரிசோதித்தார், 1797 இல் இங்கிலாந்தில் தனது “மெட்ராஸ் முறை” பற்றிய விளக்கத்தை வெளியிட்டார். 1811 ஆம் ஆண்டில் ஏழைகளுக்கான கல்விக்கான புதிய தேசிய சங்கம் இந்த மெட்ராஸ் முறையைத் தழுவி, 1821 வாக்கில், 300,000 குழந்தைகள் பெல்லின் கொள்கைகளால் கல்வி கற்கப்படுவதை டூலி கண்டுபிடித்தார்.

இதற்கிடையில், ஜோஸ்பே லான்காஸ்டர் தனது புகழ்பெற்ற லான்காஸ்ட்ரியன் பள்ளிகளை இங்கிலாந்தில் கல்வியை மேம்படுத்துவதற்காக தொடங்கினார். பெல் மற்றும் லான்காஸ்டர் குறிப்பிட்ட கல்வி முறையின் அறிவுசார் சொத்து குறித்து கடுமையான சர்ச்சையில் சிக்கினர். ஆனால் டூலி சுட்டிக்காட்டுகிறார் “இது பெல் அல்லது லான்காஸ்டர் ஆகியோரால் கண்டுபிடிக்கப்படவில்லை. இது இந்தியாவில் ரெவ்.டி.ஆர். ஆண்ட்ரூ பெல் கவனித்ததை அடிப்படையாகக் கொண்டது ”.

டூலி மேலும் விவரிக்கிறார்:

 19 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் பழங்குடி தனியார் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செலவு குறைந்த கற்பித்தல் முறைகள் உண்மையில் ஒரு வெளிப்படையான பலமாக இருந்தன; இவ்வளவு ... அவர்கள் பிரிட்டனிலும், பின்னர் ஐரோப்பாவிலும், பின்னர் உலகிலும் பின்பற்றப்பட்டனர் மற்றும் கல்வித் தரங்களை உயர்த்துவதற்கு இவ்வளவு செய்தார்கள்.

 இதைவிட முக்கியமானது என்னவென்றால், இங்கிலாந்தில் கல்விக்கான நிதி மாற்றப்பட்ட விதம். ஜான் ஸ்டூவர்ட் மில்லின் தந்தை ஜேம்ஸ் மில், 1813 ஆம் ஆண்டில், குறிப்பாக லண்டனைச் சுற்றி "கல்வியின் அன்பு விரைவான முன்னேற்றம்" "இங்கிலாந்தின் கீழ் கட்டளைகளில்" காணப்படுகிறது.

இந்த பள்ளிகளுக்கான நிதி, பள்ளி கட்டணம் மூலம் செய்யப்பட்டது என்றும் விக்டோரியன் இங்கிலாந்தில் ஏழைகளுக்கான தனியார் பள்ளிகள் அதிகரித்து வருவதாகவும் டூலி கவனிக்கிறார். 1851 வாக்கில், நாள் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 2,144,278 குழந்தைகளில் 85 சதவீதம் தனியார் பள்ளிகளில் இருந்தன, 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவின் தனியார் பள்ளிகளுக்கு நிதியளிக்கப்பட்டதைப் போலவே நிதியளிக்கப்பட்டன. 1861 வாக்கில், 95 சதவீத குழந்தைகள் சராசரியாக ஆறு ஆண்டுகள் பள்ளியில் இருந்தனர். கல்வியறிவின் குதிரைகள் இங்கிலாந்தில் குதித்துக்கொண்டிருந்தன.

ஆனால் இந்தியாவில்…

1854 ஆம் ஆண்டில் இந்தியாவில், தாமஸ் பாபிங்டன் மக்காலே இந்தியாவில் தனது முதல் பள்ளியை நிறுவினார். "அழகான மரத்தை வேரோடு பிடுங்கிய ஆண்கள்" என்ற தலைப்பின் கீழ் டூலி இவ்வாறு கூறுகிறார்:

1858 வாக்கில் இந்த புதிய முறை 452 பள்ளிகளையும் கல்லூரிகளையும் மெட்ராஸ் பிரசிடென்சியின் 21 மாவட்டங்களில் மொத்தம் 20,874 பேர் சேர்த்தது. ஆனால் 36 ஆண்டுகளுக்கு முன்னர் முன்ரோ மொத்தம் 11,575 பள்ளிகளும் 1094 கல்லூரிகளும் முறையே 157195 மற்றும் 5431 மாணவர்களைக் கண்டறிந்தன!

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் உள்ள மக்காலே கல்வி முறையின் கீழ் இந்தியாவில் கல்வியறிவின் வளர்ச்சி விகிதம் தனியார் பள்ளி சேர்க்கைக்கான இந்திய முறையின் கீழ் பிரிட்டனில் கல்வியறிவின் வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்திய கல்வி முறையின் சேர்க்கை புள்ளிவிவரங்களை மேம்படுத்துவதற்கு மக்காலே அமைப்புக்கு 60 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் இடமாற்றம் செய்யப்பட்ட இந்திய கல்வி முறையின் கீழ் பிரிட்டிஷ் சமூகம் அடைந்த இலக்கிய வளர்ச்சியை அடைய கூட, மக்காலே அமைப்பு எழுபத்தி ஒரு ஆண்டுகள் எடுத்தது. டூலி புத்திசாலித்தனமாக கவனிக்கிறார்:

இந்தியாவின் தனியார் கல்வி முறையின் இயக்கவியல் இங்கிலாந்தில் இணையான அமைப்பைப் போலவே இருந்திருந்தால், பிரிட்டிஷ் தலையிடாததை விட, பதிவில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டிருப்போம்.

 மக்காலே அமைப்பு இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில் குழுக்களிடையே சமூக தூரத்தை நிலைநிறுத்தியது மற்றும் பெருக்கியது. டூலி கூறுகிறார்:

... குழுவின் வெளிப்படையான நோக்கங்களுக்கு முற்றிலும் எதிராக, புதிய பள்ளிகள் உயரடுக்கு, பிராமணர்களைத் தவிர அனைவரையும் ஒதுக்கிவைத்தன. ஏன்? ஒரு ஆதாரம் அரசாங்கம் "குறைந்த சாதியினரை ... பள்ளிகளில் சேர்ப்பது குறித்து கவலைப்படவில்லை" என்று பரிந்துரைத்தது. அவர்கள் ஊக்குவிக்கப்பட்டால், உயர் வகுப்புகள் மனக்கசப்பைக் காட்டி, தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள் என்று அஞ்சப்பட்டது. ”ஆகவே, புதிய பொதுப் பள்ளிகள் அனைவரையும் மேம்படுத்துவதற்கான ஒரு வாகனமாக இல்லாமல், சாதி சலுகையை ஊக்குவிக்கும் வாகனமாக மாறியது. தாழ்ந்த சாதிகள் உட்பட அனைவரின் கல்வியையும் ஊக்குவிப்பதில் பூர்வீக அமைப்பு கவனிக்கப்படாத பலங்களைக் கொண்டிருந்தது என்று மீண்டும் தோன்றும்.

 உயர் வர்க்க இந்தியர்களின் மனக்கசப்பைப் பற்றி அரசாங்கம் பேசிய போதிலும், பிரிட்டிஷ் கல்வி முறை அதன் இயல்பிலேயே உயரடுக்காக இருந்தது மற்றும் பெரும்பாலும் சமூகத்தின் கீழ் அடுக்குகளை உயர் கல்வியின் திறமைகளாக உருவாக்குவதைத் தடுக்கிறது. இது கிட்டத்தட்ட காலனித்துவத்தின் உலகளாவிய நிகழ்வு. பொருளாதார நிபுணர் கிளார்க் கெர் சுட்டிக்காட்டுகிறார்:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பிரிட்டிஷ் உயர் கல்வி முறை உயரடுக்கு மற்றும் பெரும்பாலும் பரம்பரை உயரடுக்கு. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜுக்குள் நுழைவது விதிமுறையால் ஆங்கிலிகன் சர்ச்சில் உறுப்பினர்களாக இருந்த ஆண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது, உண்மையில் பெரும்பாலும் ஏஜென்டி மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் மகன்களுக்கு மட்டுமே. ... துணை-சஹாரா ஆபிரிக்கா அதன் மிஷனரி பள்ளிகள் மற்றும் பிரெஞ்சு லைசிகளுடன் பிரிட்டன் மற்றும் பிரான்சில் நடைமுறையில் இருந்த தகுதிவாய்ந்த உயரடுக்கு முறையைப் பின்பற்றியது.

வெகுஜனங்களுக்கான பிரிட்டிஷ் கல்வி கொள்கை சமூக கட்டுப்பாட்டுக்கான ஒரு வழிமுறையாக இருந்தபோதிலும், இந்தியாவில் சுதேச கல்வி என்பது தனிநபர்களையும் சமூகத்தையும் மேம்படுத்துவதற்கும் விடுவிப்பதற்கும் ஆகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டு தென் திருவிதாங்கூர், காலனித்துவம், சமூக தேக்கநிலை மற்றும் சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றின் முதல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும், இது சமூக வெறித்தனத்தின் நிலைகளை அடைந்தது.

ஆனால் இங்கே மிகவும் வெற்றிகரமான சமூக புரட்சியாளர்கள் அனைவரும் (அய்யா வைகுந்தர், ஸ்ரீ நாராயண குரு மற்றும் அய்யன் காளி - ஒரு சிலரின் பெயர்கள்) பூர்வீக கல்வி முறை மூலம் படித்தவர்கள். மற்ற ஐரோப்பிய நாடுகளை விட இங்கிலாந்துக்கு அதன் நன்மைகளை வழங்கிய செலவு குறைந்த உலகளாவிய கல்வி, இந்தியாவில் நின்ற அந்த அழகிய மரத்திற்கும் அதன் நேர்மறையான அம்சங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது, காந்தி கூறியது போல் அதன் பயனடைந்த பிரிட்டிஷாரால் அழிக்கப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

Andrew Bell (educationalist)

From Wikipedia, the free encyclopedia
 
 
Jump to navigationJump to search

Dr Andrew Bell FRSE FRAS (27 March 1753 – 27 January 1832) was a Scottish Episcopalian priest and educationalist who pioneered the Madras System of Education[1] (also known as "mutual instruction" or the monitorial system") in schools and was the founder of Madras College, a secondary school in St. Andrews.

Life and work[edit]

Andrew Bell was born at St. Andrews, in Scotland on 27 March 1753 and attended St. Andrews University where he did well in mathematics and natural philosophy, graduating in 1774.[2]

In 1774 he sailed to Virginia as a private tutor and remained there until 1781 when he left to avoid involvement in the war of independence. He returned to Scotland, surviving a shipwreck on the way, and officiated at the Episcopal Chapel in Leith. He was ordained Deacon in 1784 and Priest in the Church of England in 1785.[2]

In February 1787 he went out to India and went ashore at Madras, where he stayed for 10 years. He became chaplain to a number of British regiments and gave a course of lectures. In 1789 he was appointed superintendent of an orphan asylum for the illegitimate and orphaned sons of officers. He claimed to see some Malabar children teaching others the alphabet by drawing in sand and decided to develop a similar method, putting bright children in charge of those who were less bright. He was opposed to corporal punishment and used a system of rewards.[3]

In Bell's adaption of the Madras, or monitorial system as it later came to be known, a schoolmaster would teach a small group of brighter or older pupils basic lessons, and each of them would then relate the lesson to another group of children.[4]

He was a careful man and accumulated considerable wealth. In August 1796 he left India because of his health and published an account of his system, which started to be introduced into a few English schools from 1798/99, and he devoted himself to spreading and developing the system. He served as a priest in Edinburgh for a short time and married Agnes, daughter of a Dr George Barclay in December 1801. He was then appointed Rector of Swanage in Dorset and established a school there to teach straw-plaiting to girls and also using his system to teach infants. He and his wife adopted the new discovery of vaccination for smallpox and personally successfully vaccinated very many people in the district. However his marriage was unsuccessful and a decree of judicial separation was granted in 1806.[5]

Another educationist, Joseph Lancaster, was promoting a similar but not identical system and their differences developed into a major and continuing dispute. Unlike Bell's schools, those established by Lancaster were not committed to the Church of England.[6]

Bell received powerful support from the Church and his system was adopted in army schools and the Clergy Orphan School. A society was founded in November 1811 which set up schools using Bell's system. This was the National Society for the Education of the Poor in the Principles of the Christian Church. By the time of his death twelve thousand schools had been established in Great Britain and the colonies. The system was also used by the Church Missionary Society and other institutions.[7]

Bell was a fanatical enthusiast for his system and an intolerant man. He was difficult to deal with and hard to work under. Nevertheless, he always got on well with children.[8]

Death[edit]

He retired to Lindsay Cottage in Cheltenham, a wealthy man, at the age of 75 and died at home, aged 78, on 27 January 1832. He was buried in Westminster Abbey with a monument designed and carved by William Behnes.[9] He left substantial sums of money for educational purposes but with what many considered unreasonable conditions attached.[10]

His system did not survive for long after his death. It needed close and enthusiastic supervision and small classes and was only really useful when funds were sparse and teachers in very short supply.[11]

See also[edit]

Notes[edit]

  1. ^ Waterston, Charles D; Macmillan Shearer, A (July 2006). Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002: Biographical Index (PDF)I. Edinburgh: The Royal Society of EdinburghISBN 978-0-902198-84-5. Retrieved 22 December 2011.
  2. Jump up to:a b Blackie 901
  3. ^ Blackie 903
  4. ^ For Bell's early account of his system see: Andrew Bell (1808). The Madras School: Or, Elements of Tuition: Comprising the Analysis of an Experiment in Education. London.
  5. ^ Blackie 904
  6. ^ Blackie 903-4
  7. ^ Blackie 904-5
  8. ^ Blackie 905 & throughout
  9. ^ Dictionary of British Sculptors, 1660-1851, Rupert Gunnis
  10. ^ Blackie 905
  11. ^ cf. Blackie 905

References[edit]

  • Bell, Andrew: An analysis of the experiment in education, made at Egmore, near Madras (London, 1807: Available on Google Books)
  • Bell, Andrew: An Experiment in Education Made At The Male Asylum of Madras. Suggesting A System By Which A School or Family May Teach Itself Under the Superintendance Of The Master Or Parent. By The Rev. Dr.Andrew Bell. 1797- Primary Source Edition [Available on Amazon.com]
  • Bell, Andrew: Mutual Tuition and Moral Discipline: Or, Manual of Instructions from Conducting Schools Through the Agency of the Scholars Themselves: For the Use of Schools and Families. with an Introductory Essay On the Object and Importance of the Madras Sysetem of Education. 1823 Primary Source Edition [Available on Amazon.com]
  • Blackie, Jane. "Bell, Andrew". Oxford Dictionary of National Biography (online ed.). Oxford University Press. doi:10.1093/ref:odnb/1995.(Subscription or UK public library membership required.)
  • Macdonell, George Paul (1885). "Bell, Andrew (1753-1832)" . In Stephen, Leslie (ed.). Dictionary of National Biography4. London: Smith, Elder & Co.
  • Chisholm, Hugh, ed. (1911). "Bell, Andrew" Encyclopædia Britannica3 (11th ed.). Cambridge University Press.

Further reading[edit]



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard