Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழர் மெய்யியல்- திருக்குறள் பாயிரம்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
தமிழர் மெய்யியல்- திருக்குறள் பாயிரம்
Permalink  
 


அறத்துப்பாலில் முதல் நான்கு அதிகாரங்கள் பாயிரம் என அமைக்கப்பட்டது.   நூலில் பாயும் பொருளைக் கூறுவது பாயிரம். நூலில் பதிந்துள்ள பொருளைக் கூறுவது பதிகம்.

பாட்டியல் நூல்கள் குறிப்பிடும் நூல் வகைகளில் ஒன்று பதிகம்.

”முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்” – நன்னூல்- 1

முகவுரை, பதிகம் என்பவை பாயிரத்துக்கு உரிய வேறு பெயர்களாகும். நூலின் பெருமைகளை அந்நூலுக்கு அணிவித்து விளக்குவது அணிந்துரை எனப்படும். நூலைப்பற்றிப் புனைந்து கூறுவது புனைந்துரை ஆகும். புறவுரை என்பது அந்நூலில் கூறப்படாத பொருளைப்பற்றிக் கூறுவது என்றும் தந்துரை என்பது நூலில் சொல்லப்பட்டுள்ள பொருள் அல்லாதவற்றைத் தந்து விளக்குவது என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

பாயிரங்கள் இரண்டு வகைகளாக உள்ளன. இவை,

பொதுப் பாயிரம்

சிறப்புப் பாயிரம்

என்பன. பொதுப் பாயிரம் பொதுவாக எல்லா நூல்களுக்குமே உரிய இலக்கணங்களைக் கூறுவது. சிறப்புப் பாயிரம் அது இடம்பெறும் நூலுக்கு உரிய இலக்கணங்களைக் கூறி அமைவது. எல்லா நூல்களிலும் இருவகைப் பாயிரங்களும் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாகத்  தொல்காப்பியத்தில் பொதுப் பாயிரம் இல்லை. சிறப்புப் பாயிரம் மட்டுமே உள்ளது. நன்னூலில் இரண்டு வகைப் பாயிரங்களும் காணப்படுகின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
RE: தமிழர் மெய்யியல்- திருக்குறள்
Permalink  
 


அதிகாரம் எண்அதிகாரம்மணக்குடவர் - அதிகார உரைபரிமேலழகர் - அதிகார உரை
1கடவுள் வாழ்த்துகடவுள் வாழ்த்தாவது, கடவுளை வாழ்த்துதல்.[அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.]

 

அதிகாரம் எண்அதிகாரம்மணக்குடவர் - அதிகார உரைபரிமேலழகர் - அதிகார உரை
2வான் சிறப்புவான் சிறப்பாவது மழையினது தலைமை கூறுதல். இது கடவுட் செய்கைத்தாதலான் அதன்பிற் கூறப்பட்டது. இஃதீண்டுக் கூறியதென்னையெனின், பின்னுரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமுமினிது நடப்பது மழையுண்டாயினென்றற்குப் போலும்; அன்றியும், காலத்தின் பொருட்டுக் கூறினாரெனினும் அமையும்.இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

 

அதிகாரம் எண்அதிகாரம்மணக்குடவர் - அதிகார உரைபரிமேலழகர் - அதிகார உரை
3நீத்தார் பெருமைநீத்தார் பெருமையாவது, துறந்த முனிவரது பெருமையைக் கூறல். இது, கடவுளரை வணங்கினாற்போல் முனிவரையும் வணங்கவேண்டும் என்பதனாலும், அவர் அதை அடையத்தக்கவர் என்ற கருத்தினாலும், அவையிற்றின் பின் கூறப்பட்டது.[அஃதாவது ,முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவர் ஆகலின், இது வான் சிறப்பின்பின் வைக்கப்பட்டது.]

 

அதிகாரம் எண்அதிகாரம்மணக்குடவர் - அதிகார உரைபரிமேலழகர் - அதிகார உரை
4அறன் வலியுறுத்தல்அறன் வலியுறுத்தலாவது அறன் வலிமையுடைத்து என்பதனை அறிவித்தல். இதனானே அறத்துப்பால் முற்கூறுதற்குக் காரணம் சொன்னாருமாம். இது மேற்கூறிய முனிவரால் கொண்டு உய்க்கப்படுதலின் பிற்கூறப்பட்டது.[அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். 'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'(புறநா.31) என்றார் பிறரும்.)


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

பாயிரம் நூலுக்கு முன்னுரைதிருக்குறளின் 1) கடவுள் வாழ்த்து 2) வான் சிறப்பு 3) நீத்தார் பெருமை 4) அறன் வலியுறுத்தல் என்ற முதல் நான்கு அதிகாரங்களில் உள்ள நாற்பது குறட்பாக்களே பாயிரம் என்று அழைக்கப்படுகின்றன,
பாயிர அதிகார அமைப்பு முறை
 ஐயன் திருவள்ளுவரின், இறைவன் பற்றிய கருத்துக்கள் பெரும்பாலானவற்றைப் பாயிரத்தின் முதல் அதிகாரத்தில் மட்டுமே காணலாம், பாயிர அதிகார அமைப்பு முறையில் கடவுள் வாழ்த்திற்குப் பின் இரண்டாம் அதிகாரமாக வான் சிறப்பும்.  மூன்றாம் அதிகாரமாக நீத்தார் பெருமையும். நான்காம் அதிகாரமாக அறன் வலியுறுத்தலும் கூறப்பட்டுள்ளது,  இந்த அதிகார அமைப்பு முறையை ஆராயாத அறிஞர்களே இல்லை எனலாம்,
முதல் அதிகாரமாகக் கடவுள்வாழ்த்தும், இரண்டாம் அதிகாரமாக வான் சிறப்பும்,  மூன்றாம் அதிகாரமாக நீத்தார் பெருமையும், நான்காம் அதிகாரமாக அறன் வலியுறுத்தலும் பாடப் பெற்றதன் காரணம் இதுநாள் வரை ​தெளிவாக அறியப்பட வில்லை, 
 
இவ்வாறான பாயிர அமைப்புமுறை தமிழ் மொழியின் பிறநூல்கள் எதிலும் காணப்பட வில்லை,  பிறநாட்டு நூல்களிலும் மற்ற பிறமொழி நூல்களிலும் இம் முறை இல்லை,
பாயிர அமைப்பு முறைபற்றி அறிஞர்களின் கருத்து1) கொடிநிலை. கந்தழி. வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன ஸ்ரீன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – என்ற தொல்காப்பிய இலக்கணத்துடன் ஒப்பிட்டும்
2) நன்னூல் கூறும் பாயிர இலக்கணத்திற்கு ஒப்ப திருக்குறள் பாயிரம் அமைக்கப்படவில்லை எனவும்.
3) கடவுள் வாழ்த்து என்பது அருக சரணம்
   வான் சிறப்பு என்பது சித்த சரணம்
   நீத்தார் பெருமை என்பது சாது சரணம்
   அறன் வலியுறுத்தல் என்பது தர்ம சரணம்
 என்றும்
4) "பாயிரமல்லது பனுவலன்று்" - பாயிரம் இல்லாதவை நூல்களே அல்ல என்பதால்  திருக்குறளுக்குப் பிற்சேர்க்கையாக இப்பாயிரம் சேர்க்கப்பட்டது என்றும்
5) பாயிரத்தைச் சைனசமய வழிபாட்டுடன் ஒப்பிட்டும் பொருள் கண்டுள்ளனர்,

முதல் முப்பது குறள்களும்  திருவள்ளுவர் இயற்றியதே அல்ல.  பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன என்ற ஒரு கருத்தும் கப்பலோட்டிய தமிழன் வ,உ,சி, யிடம் இருந்தது,
 
மேலே குறிப்பிடப்பெற்றுள்ள எதிர்மறைக் கருத்துகள் அனைத்தும் அப்படியே ஏற்பதற்கல்ல என்று தக்க சான்றுகளுடன் அறிஞர் பெருமக்கள் நிறுவியுள்ளனர்,
 
 
மெய்ப்பொருள் காண்பதே ஆய்வு
 
பாயிரவியல்
கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
அறன்வலியுறுத்தல்
 
திருவள்ளுவர் திருக்குறள், பாயிர ஆராய்ச்சி -- வ. உ. சிதம்பரம் பிள்ளை
 
I
பாயிர ஆராய்ச்சி, திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்களும் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல (பக்கம்-233) என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து.   தமிழ்ப் பொழில் (5/6), பக்கம்: 232-237.
 
II
பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. 'வழிபடு கடவுள் வாழ்த்து' (நூலாசிரியர் கடவுளை  வணங்கி வேண்டுதல்), 'ஏற்புடைக் கடவுள் வாழ்த்து' (நூலை வாசிப்பவர் கடவுளை வணங்குவதற்காக எழுதப்படுவது) என இருவகைப்படும். திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் வள்ளுவரால் எழுதப்பட்டதல்ல . தமிழ்ப் பொழில் (5/9&10), பக்கம்: 329-334.
 
III
பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து. தொல்காப்பிய இலக்கணத்தைப்  பின்பற்றிய வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் காணப்படுவது போன்று மெய்ப்பொருளை உயர்திணை ஆண்பாலாகக் குறிப்பிட வழியில்லை.  மெய்ப்பொருளை மனித உருவாக, அது தாள் முதலியவற்றை கொண்டதாகக் காட்டுவதும் பொருந்தவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம் கொண்ட இக்குறட்பாக்களை வள்ளுவர் இயற்றினார் என்று கூறுவது, வள்ளுவரைப் புலவரல்லர் என்று கூறுவதற்கு ஒப்பாகும். தமிழ்ப் பொழில் (5/11&12), பக்கம்: 447-455.
 
IV
பாயிர ஆராய்ச்சி, கடவுள் வாழ்த்து; வேண்டுதல் வேண்டாமை குணநலன்கள் இல்லாதிருப்பது கடவுளின் இலக்கணமா?  அல்லது துறவியின் இலக்கணமா?  சொற்குற்றம் பொருட்குற்றம் கொண்ட "வேண்டுதல் வேண்டாமை"   குறளை வள்ளுவர் எழுதியிருக்க வழியில்லை.  அவ்வாறே, "இருள் சேர் இருவினையும் சேரா", "பொறி வாயில் ஐந்தவித்தான்"  ஆகிய குறள்கள் இறைவனைக் குறிக்கவில்லை, துறவியைக் குறிக்கின்றன  என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து. தமிழ்ப் பொழில் (6/11&12), பக்கம்: 456-462.


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

  1. மனக்கண்ணில் வரும் இறைவன், வள்ளுவர் பார்வை முதல் அதிகாரம்
  2. மன்னுயிரைக் காக்கும் மழையிறைவன் இரண்டாவது அதிகாரம்.
  3. தனிமனிதனை வழிநடத்தும் நீத்தார் மூன்றாவது அதிகாரம்.
  4. ஒட்டுமொத்த மாந்தரை வாழச்செய்யும் அறநெறி நான்காவது அதிகாரம்


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

ஆத்திகம் என்பது கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று சொல்வது. நாத்திகம் என்பது கடவுள் என்று ஒருவர் இல்லை. அப்படி ஒன்றை இருப்பதாகக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை என்று சொல்வது. ஆத்திக நெறிகள் உலகில் ஏராளம். அவை எல்லாமுமே ஒரு விஷயத்தில் ஒப்பி உடன்படும் என்றால் அது நாத்திகத்தை எதிர்ப்பது என்னும் விஷயத்தில்தான். 
 
தாய், தந்தை, பெரியவர்கள், சுற்றம், உற்றார், ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசர், என்று சிறுவயது முதற்கொண்டே ஒவ்வொரு மானிடரும் அச்சம், பயம், கீழ்ப்படிதல், கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ளுதல், பெரியவர்களுக்கு சந்தோஷம் தர வேண்டி தனக்கு ஒவ்வாத கருத்துகளையும், முடிவுகளையும் ஏற்றல், குட் பாய் அல்லது குட் கேர்ல் என்று பாராட்டு வாங்க வேண்டிய மனோபாவத்தில் பழகுதல் என்று இப்படிக் குனிந்து போகும் பண்பாட்டில் பழகிவிட்ட பெரும்பான்மைக்கு கடவுள் என்பது மிக இயல்பாக ஏற்க வேண்டிய அல்லது மறுக்கக் கூடாத ஒரு கருதுகோளாகத்தான் படுகிறது. யாரேனும் அந்த ‘கடவுள்’ என்ற கருத்தை மறுப்பார்களேயானால் அது மிகவும் கவலைப் படவேண்டிய, கவனம் கொள்ள வேண்டிய ஒரு முறைதவறிய பார்வை, தவறிப்போன அணுகுமுறை என்றபடிதான் பலராலும் கொள்ளப் படுகிறது. 
 
ஒரு சிறுபன்மையினர் அதை வாக்குவாதத்திற்கு உரிய பொருளாகக் கருதிப் பார்க்கத் துணிந்தாலும், ‘கடவுள் வாழ்க்கைக்குத் தேவையில்லாத ஒரு கருத்து’ என்ற தீர்மானமான நிலைப்பாடு அவர்களாலும் ஒப்ப முடியுமா என்பது சந்தேகமே. 
 
அப்படி ஓர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நிலைப்பாடுதான் நாத்திகமா? அல்லது உண்மையில் ஆத்திகம் என்று பரவலாகக் கொள்ளப்படும் பல நிலைப்பாடுகளை விட நாத்திகம் என்பது ஆன்மிக நல்லுணர்வு என்பதற்கு மிகவும் உதவி செய்யக் கூடிய ஓர் எதிர்மறையான, தூய்மை படுத்தும் நன்னோக்கு என்று சொல்ல முடியுமா? 
 
பொதுவான வர்த்தை என்று பார்த்தால் ‘சார்! ஆத்திகம் என்று சொல்லிக்கொண்டு திரியவரும் பல மாதிரிகளை விட நாத்திகம் எவ்வளவோ மேல். உத்தமம்.’ என்று சொல்வதையும் கேட்டிருக்கிறோம். 
 
அதேபோல், ‘என்ன சார் நாத்திகம்? வழிவழியாக வரும் பண்பாட்டு விழுமியங்களை எல்லாம் தொலைத்து வாழ்க்கையையே பொசுக்கிச் சுடுகாடாக ஆக்கிவிடும் எதற்கெடுத்தாலும் மறுப்புக் கொள்கை என்றபடி எதிர்போகும் வாதம்தான் நாத்திகம். கடவுளை மறுப்பவன் வழிவழியான பண்பட்டை மறுக்கிறான். பண்பாட்டை மறுப்பவன் மனித குல விழுமியங்களின் வரவையே மறுக்கிறான்; மனித குல விழுமியங்களை மறுப்பவன் மக்களையே மறுக்கிறான்; எல்லாவற்றையும் மறுத்து அந்த வெற்றிடத்தில் எதையும் கட்ட முடியாமல் வெறுமனே கேலி பேசும் நிலைப்பாடாகத்தான் நாத்திகம் போய்விடுகிறது.’ - இவ்வாறு சொல்வதையும் கேட்கிறோம்.
 
உண்மையில் வெறுமனே கண்டிக்கப்பட வேண்டியதுதானா நாத்திகம்? நாத்திகத்தின் ஆக்க பூர்வமான பயன் என்ன? ஏன் மனித நல்வாழ்விற்கு மிக மிக அவசியமானது நாத்திகம் என்று சொல்ல முடியாதா? ஆத்திகம்தான் பரவ வேண்டுமா? நாத்திகம் பரவுவதால் நன்மை என்ன? 
 
 
 
பல ஆயிரக் கணக்கான வருஷங்களாகவே நாத்திகத்தை எப்படிச் சமாளிப்பது என்று ஆத்திகம் அக்கறை கொண்டுதான் வந்திருக்கிறது. எனவே நாத்திகம் கேட்கும் பல கேள்விகளை உள்வாங்கியபடி ஆத்திகத்தின் தன் நிலைப்பாடு மொழிதல்கள் மாறிக்கொண்டு வந்திருக்கின்றன. முதலில் யாரும் பெரிதாக கேள்வி எழுப்பவில்லை என்னும் போது ஆத்திகம் துணிந்து கடவுள் என்றால் இவர்தான், அவர்தான், இங்கிருக்கிறார், அங்கிருக்கிறார், இப்படி இருக்கிறார் என்றெல்லாம் சொல்லும். பிறகு நாத்திகம் கேள்விகள் எழுப்ப எழுப்ப, அந்தக் கேள்விகளை உள்வாங்கிய காரணத்தால் அடுத்து வரும் கடவுள் சித்திரங்கள் ‘அவர் இப்படி இருக்கிறார் அப்படி இருக்கிறார், இங்கிருக்கிறார் அங்கிருக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. அவர் எங்கும் இருக்கிறார். எல்லாவிதத்திலும் இருக்கிறார். அவரை இல்லை என்று நாத்திகர் சொல்லும் சொல்லிலும் இருக்கிறார் என்று பாதுகாப்பாக வர்ணனைகளைப் போட்டுக் கடவுள் சித்திரத்தைக் காட்டுகிறது. 
 
அதாவது ஒரு விதத்தில் பார்த்தால் கடவுள் சித்திரங்கள் வர்ணனைகள் இவற்றை ஒரு நிரலாகத் தொகுத்தால் படிப்படியாக வர்ணனையின் அம்சங்கள் கூடி, மாறி, நுணுக்கம் எய்தியபடி இருக்கும், காலத்திற்குக் காலம். கூடவே நாத்திகத்தின் கேல்விகளையும் காலத்திற்குக் காலம் நிரல்பண்ணிக்கொண்டு வந்தால் நமக்கு நன்றாக ஒன்ரு தெரியவரும். நாத்திகம் என்பது மறைமுகமாக ஆத்திகத்தைக் கருத்தின் நுண்மை கொண்டதுவாய் ஆக்கிக் கொண்டு வந்திருக்கிரது என்பது புரியும். ஒரு வேளை நாத்திகம் இருந்திருக்கவில்லையேல் ஆத்திகம் வெருமனே ஆதிகால டோடமிஸம் என்னும் நிலையிலேயே இருந்திருக்குமோ என்று கூடத் தோன்ரும். காரணம் ஆத்திகத்தில் வழிபாடு என்ற அம்சம் ஓங்கிவிடுவதால் அது மனித சிந்தனை என்பதை முழு அளவில் இயங்க விடுவதில்லை. 
 
நாத்திகம் = pain in the neck 
 
நாத்திகம் =  எதையம் நம்பாமல் "நொச்"  "நொச்" என்று கேள்விகள் கேட்பது.
 
இவர்கள் கேட்கும் கேள்விகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இவர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என்று அவர்களைப் பொதுமைப்படுத்தித்  தாக்க ஒரு கூட்டமே காத்திருக்கிறது.
 
நை..நை.. என்று கேள்வி கேட்டால் நாத்திகம், லிபரல், கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் போன்ற பலவகைப்  பெயர்களையும் நேரத்திற்கு ஏற்றவாறு வைத்து அழைத்து, அவர்களனைவரையும் ஒட்டு மொத்தமாக ஒரு சோளக் கொள்ளை பொம்மையாக்கி (straw man, i .e ., Logical Fallacy: Straw Man) தாக்குவார்கள் இந்தக் கலாச்சாரக் காவலர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள்.
 
கொடுமை என்னவென்றால் இந்தக் கேள்வி  கேட்டு நச்சரிப்பவர்கள் வாளா இருக்காமல், அந்தக் கோட்பாடும் சரியா என்று கேள்வி எழுப்பி வதை செய்வார்கள்.  
 
கேள்வி கேட்பவர்களால்  விளைந்த நன்மை மக்கள் சிந்திக்கத் துவங்கியதுதான்.
 
நான் /நானே/நான் மட்டுமே கடவுள் அறிவாய்  >>> நான் கடவுளின் அவதாரம் >>> நான் கடவுளின் மகன் >>> நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு செய்தி சொல்ல அனுப்பப்பட்ட சிறப்புத் தூதுவன் என்ற வகையில் பரிணாம வளர்ச்சி இறையியலில் 
 
இக்காலத்தில் பலரும் "நான் கடவுள்" என்று மக்களை ஏமாற்ற வழி யின்றி போனது கேள்வி கேட்பவர்களால் விளைந்த காலத்தின் கட்டாயம் 
 
 
 
நாத்திகமும், ஆத்திகமும் நிறுவனபடுத்தபடுகையில் பிற்போக்கு சக்திகள் ஆகிவிடுகின்றன. பர்சனலாக தனிமனித/குடும்ப அளவில் நிற்கையில் அவற்றில் நன்மையே விளைகிறது.
 
நேற்று வந்த செய்தி சீனாவில் பல்கலைகழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் ரம்ஜான் நோன்பு இருப்பதை தடுக்க மாணவர்கள் அனைவரும் மதிய உணவை பேராசியர்களுடன் உண்ணவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கபட்டுள்ளது. நாத்திகம் நிறூவனமயமானால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு சான்று. நாத்திகம் பரவினால் பெரிய புரட்சிவரும், மாற்றம் வரும் என்ற நம்பிக்கை தவறு என்பதற்கும் இதுவே சான்று.
 
கடவுள் உண்டா, இல்லையா என்பது வேறு விஷயம். கடவுள் உண்டு/இல்லை என நம்புவதால் மனித சமூகத்துக்கு என்ன விளைவுகள் உண்டாகின்றன என பார்த்தால் கடவுள் நம்பிக்கையே திருமணம், குடும்பம், கலாசாரம், பண்பாடு அனைத்துக்கும் ஆணிவேராக இருப்பதை காணலாம். சரியோ, தவறோ கத்தோலிக்க மதம் விவாகரத்தை தடுத்தது. திருமணத்துக்கு முந்தைய உறவை தடுத்தது. அபார்ஷனை தடுத்து பலகோடி சிசுக்கள் உயிரை காப்பாற்றியது.
 
கெட்டது என பார்த்தால் சிலுவை போர்களை நிகழ்த்தியது என கூறலாம். ஆனால் இது "தான் கொன்ட கொள்கை மேலானது, உயர்ந்தது" எனும் நம்பிக்கையால் நிகழ்ந்த தவறுகள். சீனாவில் இஸ்லாமிய மதத்தை தடுக்க முனையும் நாத்திகர்களும் அதே நம்பிக்கை தான் கொன்டுள்ளார்கள். மதவாதிகளின் பிடியில் இருந்து மாணவர்களை காப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். பழங்குடியினரை கிறிஸ்தவ மதத்தில் சேர்த்து எரிநரகிலிருந்து அவர்களை காக்க முனைந்ததாக தான் கிறிஸ்துவர்களும் நம்புகிறார்கள். ஆக இது எல்லாம் தவறு எனினும், செய்தவர்கள் கண்ணோட்டத்தில் நன்மையை கருதி செய்ததாக தான் கருதுகிறார்கள்.
 
ஆத்திகத்தின் மேல் ஆயிரம் குற்ரசாட்டுக்களை சொல்ல முடியும். அது அத்தனை ஆயிரம் ஆண்டு பழமையான அமைப்பு. நீண்ட நெடிய வரலாறு கொண்ட அமைப்பு. கடந்த நூறு ஆண்டுகளில் நிறுவனமயமான நாத்திகம் ஆத்திகத்தின் அனைத்து தீமைகளையும் கொன்டல்லவா இருக்கிறது? ஆத்திகத்தின் நன்மை என கலாசாரங்கள் நாகரிகங்கள், பண்பாட்டு சின்னங்களை சுட்டிகாட்டலாம். நாத்திகத்தின் நன்மை என எதை சொல்ல முடியும்? மானுட சமூகத்துக்கு அதனால் நிகழ்ந்த நன்மை என்ன? மானுட விடுதலைக்கு குரலை எதிர்த்து போராட்டம் நடத்திய லிங்கன், காந்தி, மார்ட்டின் லூதர் கிங், ஜார்ஜ் வாஷிங்க்டன் அனைவரும் ஆத்திகராகவே உள்ளார்கள். நாத்திகர்கள் பின்னாளில் இவர்கள் உருவாக்கிய அமைப்புகளையும், கோரிக்கைகளையும் கைப்பற்றி கொண்டவர்களாகவே காணபடுகிறார்கள். இன்றைய நவீன பெண்ணிய இயக்கத்தை துவக்கி, பெண்களுக்கு முதல்முதலாக ஓட்டுரிமை வாங்கிகொடுத்தவர்கள் அனைவரும் கன்சர்வேடிவ் ரிபப்ளிக்கன்கள். அந்த வண்டியில் ஏறி இன்று பெண்ணீய இயக்கத்தை நாத்திகர்கள் ஹைஜாக் செய்து விட்டார்கள்.
 
அதனால் நாத்திகம் ஆத்திகத்தை விட மேலானது என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை.
 
 
கடவுள் நம்பிக்கை மனிதனின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கிறது. சில விஷயங்களை செய்யவேண்டாம் என தடுக்கிறது. சில விஷயங்களை செய்யவேண்டும் என கூறுகிறது. அதாவது மனிதனை மதம் கட்டுபடுத்துகிறது.
 
மனிதனை கட்டுபடுத்தும் இன்னொரு அமைப்பு சட்டம். ஆனால் சட்டம் எதை செய்யகூடாது என மட்டும் சொல்லுகிறதே ஒழிய, எதை செய்யவேண்டும் என கூறுவதே இல்லை. "திருடாதே, கொள்ளை அடிக்காதே" என்பதுடன் சட்டம் நின்றுவிடுகிறது. "தானதருமம் செய், ஏழைக்கு உதவு" என சட்டம் கூறூவது இல்லை.
 
சட்டபடி பல தவறுகளை இழைக்க முடியும். உதாரணமாக ஒன்பது மாத சிசுவை சட்டப்படி கலிப்போர்னியாவில் கலைத்துக்கொள்ள முடியும். பல பெண்கள் அப்படி செய்யவும் செய்கிறார்கள். சட்டபடி விவாகரத்து செய்து வாழ்க்கைதுணையை நட்டாற்றில் விட முடியும்.
 
இதை எல்லாம் செய்யவேண்டாம் என தடுக்கும் சக்தி எது? ஆத்திகமே. அதனால் முழுமையாக இதை எல்லாம் தடுக்க முடியாவிடினும், ஒன்பது மாத சிசுவை கலைக்கும் பெண் தன்  மதம் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியில் அத்தகைய செயலை செய்யுமுன் சிக்கி தவிக்கிறாள். ஆக ஆன்மிகம் சட்டத்தை தாண்டிய ஒரு உயர்ந்த எல்லைகோட்டை மனிதனுக்கு வைக்கிறது. மனிதனை மேலும் உயரத்துக்கு அடைய தூண்டுகிறது.
 
ஆன்மிகத்தை அகற்றினால் அந்த வெற்றிடத்தை எது நிரப்ப போகிறது? நாத்திகமா? இங்கர்சாலோ, பெரியாரோ சொல்வது வேதம் அல்லவே? "நான் சொன்னேன் என்பதற்காக எதையும் செய்யாதே. அலசி ஆராய்ந்து செய்" என தானே அவர்கள் அறிவுரை கூறினார்கள். அப்புறம் அவர்கள் சொன்ன தீண்டாமை ஒழிப்பு, பெண் முன்னேற்றம் மாதிரி எக்கருத்துக்களையும் கேட்டு நடக்கும் நிர்ப்பந்தம் மற்ற நாத்திகர்களுக்கு கிடையாதே? நாத்திகன் அதனால் சட்டம் தடுக்காத எச்செயலையும் தன் அறிவுக்கு சரி என பட்டால் செய்யலாம் என தானே ஆகிறது?
 
அதனால் தான் ஸ்டாலின் சர்ச்சுகளை இடித்தார். அவரளவில் அவர் தன் மக்களுக்கு நல்லதுதான் செய்தார். புரட்சி செய்த உக்ரேனியர்களை கொன்றார். அதுக்கும் சமணர் கழுவேற்றத்துக்கும், கிருமிகண்ட சோழன் கோவிந்தராஜர் சிலையை கடலில் போட்டதுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அடிப்படையில் மனிதனின் அற உணர்ச்சியையும், குற்ற உணர்வுகளையும் அதீத மத நம்பிக்கை மூழ்கடிக்கும். " என் கடவுளுக்காக இறைமறுப்பாளனை கொல்கிறேன்" என சொல்லி கொன்று அக்குற்ற உணர்ச்சியை போக்கி கொள்ள அதீத மத நம்பிக்கை உதவும். ஒன்பது மாத சிசுவை கொல்லும் பெண்ணுக்கும் அக்குற்ற உணர்ச்சியை போக்கிகொள்ள "இது பெண்ணீயம், ஆணாதிக்கத்துக்கு எதிரான அடக்குமுறை போர்" என்ற நம்பிக்கை தேவைபடுகிறது. சிசுக்கொலை குற்றம் என்பதில் இருந்து அது ஒரு புரட்சி என நினைக்க துவங்கி விடுகிறார்கள்.
 
ஆக ஆத்திகத்தின் அனைத்து தீமைகளும் நாத்திகத்திலும் காணப்படுகின்றன. ஆனால் ஆத்திகத்தின் நன்மைகளை நாத்திகத்தில் காணோம். அடித்தளத்தை உருவி புதிய அடித்தளம் அமைக்கும் முயற்சி "நாத்திகம் பரவ வேண்டும்" என்பது. கட்டிடத்துக்கு சேதமின்றி அடித்தளத்தை மாற்ற முடியுமா?


__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து என்ற தலைப்பு பொருத்தமானதா?

ஆச்சாரி

Sep 1, 2013

Share
 
 
 
 

உலகப்பொதுமறை என்று பாராட்டப்படுகின்ற ஒரு தலையாய இலக்கியம், திருக்குறள். திருக்குறளின் பகுப்புமுறை, அதிகாரங்களுக்குத் தலைப்புத் தந்துள்ள முறை போன்றவை யாரால் எப்பொழுது செய்யப்பட்டவை என்பதெல்லாம் சரிவரத் தெளிவாகவில்லை. இப்பொழுது நாம் காணும் அதிகாரப் பகுப்பு, அதிகாரத் தலைப்புகள், இயல் பகுப்பு போன்றவை எல்லாம் திருவள்ளுவரே செய்ததாகத் தோன்றவில்லை. சான்றாக, திருக்குறளின் முதல் நான்கு இயல்களைப் பாயிரம் என்று பகுத்துள்ளனர் சில ஆசிரியர்கள். பரிமேலழகர் போன்ற செல்வாக்குள்ள உரையா சிரியரும் இதனை ஏற்றுக் கடைப்பிடிப்பதால் இது பெரும்பாலும் ஏற்கக்கூடிய கருத்தாகி விட்டது. இப்பகுப்பு சரியானது என நிறுவப்படவில்லை. இயல்பகுப்பு உரையாசிரியருக்கு உரையாசிரியர் மாறுபடுகிறது. அதிகாரத்தலைப்புகளும் அவ்வாறே. மணக்குடவர் மக்கட்பேறு எனக்கூறும் அதிகாரத்தைக் காலத்தால் பிற்பட்டவராகிய பரிமேலழகர் புதல்வரைப் பெறுதல் என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.
இவற்றையெல்லாம் இங்கு நினைவுகூறக் காரணம், திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதன் தலைப்பே பொருத்தமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்டத்தான். பொதுவாக, திருக்குறளில், அதிகாரத் தலைப்பாக அமைந்த சொல், பெரும்பாலும் அந்த அதிகாரத்திலுள்ள ஓரிரு குறட்பாக்களிலேனும் இடம் பெறுவது வழக்கம். இதற்கு மிகச்சில விதிவிலக்குகளே உண்டு. அந்த விதிவிலக்குகளில் ஒன்று, கடவுள் வாழ்த்து. கடவுள் என்ற சொல்லோ, வாழ்த்து என்ற சொல்லோ கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் எங்கும் இடம்பெறவேயில்லை.
இந்தச் சொற்களை முக்கியமாக ஆராய்வதற்குக் காரணம் உண்டு. ஏனென்றால் கடவுள் என்ற கருத்தும், வாழ்த்துதல் என்ற கருத்தும் திருவள்ளுவருக்கு உடன் பாடானவை என்று தோன்றவில்லை. இன்று இறைவன், தெய்வம், கடவுள் என்ற மூன்று சொற்களும் ஏறத்தாழ ஒரே அர்த்தத்தில் கையாளப்படுகின்றன. ஆனால் திருவள்ளுவருடைய ஆளுகையில் இம்மூன்று சொற்களுக்கும் பொருள் வேறு. கடவுள் என்ற சொல்லை அவர் திருக்குறளில் கையாளவே இல்லை. கட+உள் என்று இச்சொல்லைப் பிரித்து நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நமக்கு உள்ளும் நம்மைக் கடந்தும்(அப்பாலும்) இருக்கிறது என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறுவர். அல்லது கடவுதல் (இயக்குதல், செலுத்துதல்) என்ற சொல் அடியாகப் பிறந்தது இச் சொல் என்ற கருத்தும் உண்டு. உயிர்களுக்கெல்லாம் அப்பால் நின்று ஒரு சக்தி அவற்றைக் கடவுகின்றது என்ற கருத்து இதில் இருக்கிறது. இப்படிப்பட்ட, உயிர்களுக்கும் மனிதருக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தியில்(transcendent force) திருவள்ளுவருக்கு நம்பிக்கை இல்லாததனால்தான் அவர் இச்சொல்லைத் தமது நூலில் எங்குமே பயன்படுத்தவில்லை என்று கருதமுடியும்.
பழங்காலத்தில் வைதிக சமயத்தினர் தமக்கு அப்பாற்பட்ட சக்தியான கடவுள் ஒன்றில் நம்பிக்கைகொண்டவர்கள். வைதிகசமயத்தினர்க்கு மாறான சார்வாகர், சாங் கியர், பௌத்தர், சமணர் போன்ற மரபுகளைச் சார்ந்தவர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை அற்றவர்கள். திருக்குறளை ஆழ்ந்து நோக்கும்போது திருவள்ளுவர் சமணராக இருந்திருக்கக்கூடும் என்பதை நாம் உணரமுடியும்.
இறைவன்-தெய்வம் என்ற சொற்கள் கடவுள் என்ற கருத்துக்கு மாறானவை. தேவன் அல்லது தேவ என்ற சொல்தான் தெய்வம் என்ற வடிவத்தில் தமிழில் வழங்குகிறது. இச்சொல்லுக்கு மனிதனைவிட உயர்உலகம் ஒன்றில் வாழும் (மனிதனைவிட அதிகமான, ஆனால் எல்லைக்குட்பட்ட சக்தியுடைய) உயர்பிறவிகள் என்பது அர்த்தம். வள்ளுவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று சொல்கிறார். மனிதர்கள் தங்கள் நிலையில் உயரும்போது தெய்வம் ஆகிறார்கள்.
இறை என்ற சொல் ஆதி என்ற சொல்லுக்கு எதிரானது. மனிதனால் ஆதி (யாவற்றிற்கும் முற்பட்ட நிலை)யையும் சிந்திக்க முடிவதில்லை, அந்தம் (இறை, இறுதி) என்ற நிலையையும் சிந்திக்க முடிவதில்லை. இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற அர்த்தத்தில்தான் வள்ளுவர் மிகுதியும் பயன்படுத்தியுள்ளார். ஏனென்றால், மனிதர்களுக்குள் இறுதியான தலைமைநிலையில் இருப்பவன் அரசன்தான். இறு (வேர்ச்சொல் ‘இற்’) என்ற சொல்லிலிருந்துதான் இறையன், இறைவன், இறுதி, இற்றுப் போதல், இறுத்தல், இறப்பு போன்ற சொற்கள் உருவாகின்றன. இறத்தல் என்பதற்கு ஒரு எல்லையைக் (இங்கே மனித வாழ்க்கை எல்லை) கடந்து செல்லுதல் என்று பொருள். எனவே இறைவன் என்பது கடவுளைக் குறிக்கும் சொல்லன்று.
கடவுள் என்ற சொல் திருக்குறளில் எங்கும் இடம்பெறவேயில்லை என்ப தையும், காரணம் அது நமக்கு அப்பாற்பட்ட அதீத சக்தியைக் குறிக்கின்ற ஒன்று என்பதையும் முன்பே கூறினோம். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் இறைவனைக் குறிப்பதாக இடம் பெறும் சொற்கள் அனைத்தும் மனிதநிலையிலிருந்து உயர்ந்த சான்றோர்களைக் (இவர்களை நாம் சமண முன்னோரான துறவிகளாகக் கொள்ள வாய்ப்பு உண்டு) குறிப்பவைதான்.
மனிதநிலைக்கு அப்பாற்பட்ட ஒரு கடவுளைக் கருத்தில் ஏற்றுக்கொள்ளாததால் திருவள்ளுவருக்கு அத்தகைய கடவுளை வாழ்த்துவது என்ற எண்ணமும் தோன்றவில்லை. திருக்குறள் கடவுள் வாழ்த்தின் பத்துச் செய்யுட்களையும் நன்கு கவனித்துப் பாருங்கள் – எந்தச் செய்யுளாவது, கடவுளை வாழ்த்துவதாக அமைந் துள்ளதா? எல்லாச் செய்யுட்களுமே – பத்துக்குறட்பாக்களுமே உயர்ந்த மானிடர்களின் பத்து இயல்புகளைக் குறிப்பிடுவனவாகத்தான் அமைந்துள்ளன. நம் சிந்தனையையும் மனத்தையும் கடந்த ஒன்றிற்கு இயல்புகளைச் சொல்வது எப்படி?
முதல் குறட்பாவைப் பார்ப்போம். அகரமுதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு என்பது குறள். இது சொல்வது என்ன? எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டிருப்பதுபோல, இந்த உலகம் ஆதிபகவனை முதலாகக் கொண்டிருக்கிறது என்பதுதானே? இதில் உள்ள இரு பகுதிகளும் நாம் கவனிக்க வேண்டியவை.
ஒன்று, எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாக உடையவை.
இரண்டு, (அதுபோல) உலகம் ஆதிபகவனை முதலாக உடையது.
முதல் பகுதியைக் கவனிப்போம். எழுத்துகள் அகரத்தை முதலாக உடையன என்றால் என்ன? இறைவன் உயிர்களை ஆக்குவது போல, எல்லா எழுத்துகளையும் (உயிர், மெய்) அகரம் ஆக்குகிறது, படைக்கிறது என்றா அர்த்தம்? முதல் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. மண்ணிலிருந்து குடம் ஆகிறது என்றால் மண் காரண முதல் என்போம். குயவனால் குடம் ஆகியது என்றால் குயவனைக் கர்த்தா முதல் என்போம். இந்த அர்த்தங்கள் எதுவும் இங்கு இல்லை.
பெரும்பாலான மொழிகளில் அகரம் முதல் எழுத்து. பிறகு மற்ற எழுத்துகளின் வரிசை தொடர்கிறது. ஒரு கியூ வரிசையில் முதலில் நிற்கும் ஆள், கியூவை உண்டாக்குபவரா? அதாவது காரணமுதலா? கர்த்தா முதலா? இரண்டும் அல்ல, அவர் வரிசை முதல். அவ்வளவுதான். அதுபோல எழுத்துகள் வரிசையில் அகரம் முதன்மையாக நிற்கிறது. வரிசை முதல். அதுபோல உயிர்களின் வரிசையில் ஆதிபகவன் முதலில் நிற்கிறார். அவ்வளவுதான். ஆதி என்றசொல்லும் குணங்களில் முதன்மையானவர் என்பதைத்தான் குறிக்கிறது.
இரண்டாவது, பகவன் என்ற சொல்லைப் பார்ப்போம். இது பகவான் என்ற வட சொல் அடிப்படையிலானது அல்ல. தமிழில் முற்றும் துறந்த முனிவர்களை-மனிதர்களை பகவன் என்று கூறினார்கள். கலித்தொகையில் ஒரு செவிலித்தாய் தலைவனுடன் போய் விட்ட தன் மகளைத் தேடிவருகிறாள். அவளுக்கு முக்கோல் பகவர்கள் (அதாவது திரிதண்டம் என்னும் கோலை உடைய பகவர்கள் சிலர்) ஆறுதல் சொல்கிறார்கள். இங்கு முக்கோல் பகவன் என்ற சொல்லுக்கு கடவுள், பகவான் என்றா அர்த்தம்? முனிவன் என்பதுதான் பொருள். அதே பொருளில் – அதாவது முற்றும் துறந்த முனிவன் என்ற பொருளில்தான் பகவன் என்ற சொல்லை இங்கும் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். ஆனால் இவர் நீண்ட காலத்துக்கு முன்னாலிருந் தவர் (ஒருவேளை அருகதேவராக இருக்கலாம்). அதனால் ஆதி பகவன்.
எனவே இந்த முதற்குறள் கூறுவது என்ன? மனித வரிசையிலே குணங்களால் உயர்ந்த, காலவரிசையில் முற்பட்ட ஒரு முனிவர் – ஆதி பகவன் – அவரை உதாரணமாகக் கொண்டது இவ்வுலகு என்பதுதான்.
இனி வரும் குறட்பாக்களும் அந்த ஆதி பகவனின் – அதாவது மனிதராக இருந்து உயர்ந்த நிலை அடைந்த – வள்ளுவர் வாக்கில், தெய்வநிலை அடைந்தவர் களின் பண்புகளைப் பற்றித்தான் பேசுகின்றன. இரண்டாவது குறட்பாவில் ‘வால் அறிவன்’ என்கிறார். அதாவது  தூய்மையான அறிவுடையவன். மூன்றாவது குறட்பா இன்னும் தெளிவானது. மலர்மிசை ஏகினான். இது புலனறிவைக் கடந்த கடவுளைக் குறிக்கும் சொல்லே அன்று என்பது மிக வெளிப்படை. மலரின்மீது நடந்தவன். இங்கு மலர் என்பது உருவகமாக பூமியைக் குறிக்கிறது. (மலர் தலை உலகம் என்று வருணிப்பதை நோக்குக). எனவே இந்தப் பூமியின்மீது வாழ்ந்த ஒரு தெய்வப் பண்புடைய ஒருவன் என்பது இச்சொல்லின் பொருள்.
அடுத்த குறள் வேண்டுதல் வேண்டாமை இலான் என்கிறது. அதாவது அந்த நிலைகளைக் கடந்தவன். அதற்கடுத்த குறளில் இறைவன் என்றசொல் வருகிறது. அதாவது நாம் அடையவேண்டிய இறுதிநிலையாக இருப்பவன், அல்லது அந்த இறுதிநிலையை அடைந்தவன். பத்தாம் குறளும் இறைவன் என்ற சொல்லையே பயன்படுத்துகிறது. (இறைவன் அடி சேராதார், பிறவிப்பெருங்கடல் நீந்தார்).
அடுத்த குறள் இன்னும் தெளிவானது. பொறிவாயில் ஐந்து அவித்தான். எல்லாவற்றையும் கடந்த கடவுளுக்குப் பொறிவாயில்கள் (அதாவது புலன்நுகர்ச்சி உறுப்புகள் – கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) என்பன ஏது? இப்பொறிவாயில்கள் ஒருவனுக்கு உண்டு, அவற்றை அவித்தவன் (கட்டுப்படுத்தியவன்) என்றாலே கடவுள் என்ற அர்த்தமா வருகிறது? எந்தக் கடவுளும் புலன்களை அவிக்கத் தேவையில்லை. சாதாரண மனிதநிலையில் இருந்து, புலனுணர்வுகளைக் கட்டுப்படுத்தி, தெய்வ நிலையை அடைந்த சான்றோன் என்னும் பொருள் அல்லவா இந்தச் சொல்லுக்கு வருகிறது? அப்படிப்பட்ட சான்றோனுடைய பொய்தீர் ஒழுக்கநெறியில் நின்றவர்கள் நீடுவாழ்வார் என்பதில் கடவுளுக்கு எங்கே இடம்?
அடுத்த குறளில் வரும் சொல் தனக்குவமை இல்லாதான். பொறிவாயில் அவித்த ஒருவனுக்கு உலகிலுள்ள சுகபோகங்களில் ஈடுபட்ட யாரை அல்லது எதை உவமை சொல்ல முடியும்? அடுத்த சொல் அறவாழி அந்தணன் அறக்கடலாக விளங்குகின்ற அந்தணன். அந்தணன் என்பது பார்ப்பனச் சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. அந்தணர் என்போர் அறவோர் – திருவள்ளுவரைப் பொறுத்தமட்டில். அறவோனாக இருப்பவன் அந்தணன். அறக்கடலாகவே விளங்கும் முதன்மையான அந்தணன் இந்த பகவன்.
ஒன்பதாம் திருக்குறள் மிகமிக முக்கியமானது. ஏனென்றால் இதுவரை இறைவனுடைய பண்புகளாகக் குறிப்பிட்டவற்றைத் தொகுத்துரைக்கிறது. கோளில் பொறியில் குணம் இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. எண்குணத்தான் என்ற சொல்லுக்கு நம் மனங்களில் எண்ணப்படுகின்ற நல்ல குணங்களையெல்லாம் உடையவன் என்று சமத்காரமாகப் பொருள்சொல்லலாம். எட்டு குணங்களை உடையவன் என்பதும் பொருள். அதாவது, இதற்கு முன்னுள்ள எட்டுகுறட்பாக்களில் சொல்லப்பட்ட எட்டு குணங்களையும் உடையவன். அதனால் தான் பத்தாம் குறளில் வேறு எந்தப் பண்பையும் புதிதாகச் சேர்க்காமல், ஐந்தாம் குறட்பாவில் ஆண்ட இறைவன் என்ற சொல்லையே திரும்பவும் பயன்படுத்தி விடுகிறார்.
இக்காலத்தில் தமிழ் இலக்கியம் படிப்போர் சொற்களுக்கு இக்காலப் பொருளையே கொண்டுவிடுகின்றனர் என்பது ஒரு குறைதான். அது சிலவித இலக்கிய ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியதே என்றாலும், மிகப் பழங்கால இலக்கியங்களைப் படிக்கும்போது ஒரு சொல்லைக் கண்டால் அது அக்காலத்தில் எப்பொருளில் பயன்பட்டிருக்கும் என்று ஓரளவேனும் ஆராய்ந்தே பொருள்கொள்ளவேண்டும். அவ்வாறில்லாவிட்டால் குழப்பம்தான் ஏற்படும். பரிமேலழகர் போன்ற உரையாசிரி யர்களிடம் உள்ள குறைபாடு, அவர்கள் அவ்வக்காலத்திற்கேற்ற பொருளைக் கொண்டமையே ஆகும். அதனால் சமணசமயம் மேலோங்கியிருந்த – நீதி இலக்கிய காலத்தில், அறச்சிந்தனைக் காலத்தில் இயற்றப்பட்ட திருக்குறளுக்குச் சைவசித்தாந்த, வைணவசித்தாந்தப் பொருள் கூறி இடர்ப்பட்டனர். சான்றாக எண் குணத்தான் என்றசொல்லுக்குச் சைவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது, வைணவம் என்ன அர்த்தங்களைத் தருகிறது என்றெல்லாம் குறித்துள்ளனர். மாறாக, சமணசமயத்தில் எண்குணம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று நோக்கினால் பொருத்தமாக இருக்கும்.
எனவே திருவள்ளுவர் பாடிய கடவுள் வாழ்த்து கடவுளைப் பற்றியதும் அல்ல, அது வாழ்த்தாக அமைந்ததும் அல்ல என்று சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
RE: தமிழர் மெய்யியல்- திருக்குறள் பாயிரம்
Permalink  
 


கடவுள் தத்துவம்

Posted by nareshkumarjayachandran in Uncategorized

கடவுள் தத்துவம் உருவானது ஏன்?

 

கடவுள் யார் அல்லது எது ? பிரபஞ்சம் எப்படி உருவானது? கடவுள் ஏன் பிரபஞ்சத்தை உருவாக்கினார் ?மனிதன்யார் ?

கடவுள் மனிதன முக்தி
இம்மூன்றின் தொடர்பு என்ன ?
முக்தி என்று உண்டா ?முக்தி என்றால் என்ன ? முக்தியின் குறிக்கோள் .என்ன ? முக்தியில் பல நிலைகள் உள்ளாதா ? முக்தி அடையும் வழி எது ? இந்த அடிப்படை கேள்விகளுக்கு விடைகாணமுயன்றேன்..

முக்திபற்றி சித்தர்களிடம் நான் கேட்டேன் . அதற்கு அவர்கள் சொன்னதை சொல்கிறேன்
முக்தி பற்றி அறிவதற்கு முன் கடவுள் பற்றியும் , மனிதன் பற்றியும் அறியவேண்டும்

.1 கடவுள் கொள்கை .
**********************

கடவுள் உண்டது என்பார் உண்டு . இல்லை என்பாரும் உண்டு .

1.1 கடவுள் தத்துவம் உருவானது ஏன்?
பார்க்கும் அழகில் இன்பம் . கேட்கும் இசையில் இன்பம். நுகரும் நறுமணத்தில் இன்பம் . உண்பவற்றில் சுவையில் இன்பம் உடல் தொடுகையில் இன்பம் . இவை புலன் இன்பம் .ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட புலனுணர்வு சேர்ந்து தருவதில் அதிக இன்பம் பெறுகிறோம் ..

இவை ஐந்தும் சேர்ந்து தரும் பெண் இன்பம் அல்லது ஆணின்பம் உச்சமானது .

இதை திருவள்ளுவர்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐயம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள .
திருக்குறள் 1101 .என்றார்

புற தூண்டலால் கிடைக்கும், ஐந்தும் சேர்ந்த இன்பத்தில் கிடைக்கும் உணர்வு என்பது சுக அனுபவம் . நாம் பெற்ற இந்த சுக அனுபவம், மனத்தால் நினைத்தாலே கிடைத்துவிடுகிறது . ஆனால் இது நிலைத்து நிற்பது இல்லை. எனவே சக்தி இருக்கும் வரை மீண்டும் மீண்டும் இந்த புற தூண்டலை தேடுகிறோம் .

மிருகங்களும் இதை செய்கின்றன .
இதுவே உயிர்கள் நிலைத்து இருக்க ஆதாரம் . இதை காம சுகம் அல்லது சிற்றின்பம் என்றனர் சித்தர்கள் இதுவே மனிதயினம் பெருகவும் நிலைத்து இருக்கவும் ஆதாரம் .. .

ஐந்து புலன்களால் இன்பம?் பெறுவது போல் துன்பமும் உயிர்கள் பெறுகின்றன . உயிர்கள் அடையும் துன்பத்தில் பெரும் துன்பம் மரணம் .. உயிர்கள் அனைத்தும் மரணம் உள்பட துன்பத்தை தவிர்த்து இன்பத்தை தேடுகின்றன … ஆனால் இயற்க்கை சீற்ற துன்பம் , பிற உயிரினங்கள் கொடுத்த இன்னல் , சக மனிதர்கள் உண்டாக்கிய துன்பங்கள் ஆகியவற்றை மனித சக்தியால் .தடுக்க முடியவில்லை .

இதன் காரணத்தை அறிய முற்பட்டான் மனிதன் அதற்க்கு முதற்படியாக இயற்கையை ஆராய்ந்தான் . மரணத்திற்கு முன்னும் மரணித்தபின்னும் நடப்பது பற்றி அறிய முற்பட்டான். .

அப்பொழுது அவன் அறிந்தது.,புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிலைகள் உண்டு .
அதை புலன்களால் மட்டுமே அறிய முடியாது .. மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்க சக்தி என்று ஒன்று உள்ளது என்று உணர்ந்தான் . மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டான்
..அந்த சக்தி மனிதனை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் என்று நம்பினான் . மேலும் அதை வணங்கினால் அவனுக்கு துன்பம் நீக்கி இன்பம் தரும் என்று நம்பினான் .. இந்த நம்பிக்கை இன்றுவரை உள்ளது . மரண பயமும் துன்பங்களும், இன்பம் பெறவேண்டும் என்ற ஆசையும் கடவுள் தத்துவத்தை உருவாக்கியவை .. . பயமும் ஆசையும் கடவுள் என்ற தத்துவம் உருவாக காரணம் .

1..2 கடவுள் யார்?

கடவள் பற்றி அடிப்படை உண்மைகள்
மனிதன் தனது விஞ்ஞானமய கோசத்தால் துன்பம் தவிர்த்து நீடித்த நிலையான இன்பம் மட்டும் பெற வழி முறைகள் தேடினான் .. . அப்பொழுது அவன் கண்ட தீர்வு கடவுள் .

இப்பிரபஞ்சம . தோன்றுவதற்குமுன் எது அல்லது யார் இருந்தாரோ அவர் கடவுள் .

எங்கெல்லாம் மனித சக்தி செயல் படுத்த முடியாமல் . இயக்கங்கள் சுயமாக நடை பெறுகிறதோ அங்கு செயல்படுகிற சக்தி இறை சக்தி. .. அல்லது இயற்கை சக்தி அல்லது கடவுள் என்று முடிவு செய்தான் .

கடவுள் சக்தி நேரடியாக செயல் படாமல் பிரபஞ்சம் மூலம் செயல்படுகிறது என்று உணர்ந்தான் .

இப்பிரபஞ்சம இன்பமும் தரும் துன்பமும் தரும் . இன்ப துன்பங்களுக்கு காரணம் அவர் அவர் செயல்கள் . ஆயினும் தீமை செயாதவருக்கும் தவிர்க்க முடியாத துன்பம் வருகிறது . துன்பத்தில் இருந்து விடுபட மனிதனுக்கு கிடைக்கும் ஆறுதல் கடவுள் .

கடவுள் சக்தி அல்லது இயற்கை சக்தி இப்பிரபஞ்சத்தின் மூலம் உயிர்களுக்கு கொடுக்கும் துன்பங்களுள் தவிர்க்க முடியாத பெரும் துன்பம் மரணம் .

கடவுளை உணரும் பொருட்டும் தேடும் பொருட்டும மரணத்தை கொடுத்தான் இறைவன் .
..கடவுளை நாடி மரண துன்பத்தையும் நீக்க முடியும் … துன்பம் நீங்கி பேர்இன்பம் பெற முடியும் .

தவிர்க்க முடியாத துன்பங்கள், அடைய துடிக்கும் உலக இன்பங்கள், . பேரின்பம் ஆகியவை கடவுள் கொள்கை உருவாக முக்கிய காரணங்கள் .

1.3 கடவுள் கொள்கைகள

உருவாககும் கேள்விகள்
கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கினாரா?அ
ல்லது கடவுளே பிரபஞ்சமா?.கடவு
ள்பிரபஞ்சத்தை தோற்றுவித்த நோக்கம் என்ன ? அவசியம் என்ன .? இக்கேள்விகள் நெடுங்காலமாக கேட்கப்படுபவை

“இப்பிரபஞ்சம . தோன்றுவதற்குமுன் எது அல்லது யார் இருந்தாரோ அவர் கடவுள்” அப்படிஎன்றால் யாரும் பார்த்தறியாத கடவுளுக்கு பிரபபஞ்சத்தை உருவாக்க நோக்கமும் அவசியமும் கூறுவது யாராலும் முடியாது. .
பிரபஞ்சத்தை அவர் உருவாக்கினாரா அல்லது அவரே பிரபஞ்சமா?என்பதையும் யாராலும் சொல்லமுடியாது .

இதை மாணிக்கவாசகர் திரு வாசகத்தில்
” எண்ணுதற்கு எட்டாத எழிலார் கழல் இறைஞ்சி” என்றார் ..

1.4 பிரபபஞ்சம உருவானது . எப்படி ? மனிதன் யார் ? கடவுள் – பிரபஞ்சம்-மனிதன் ஆகியவற்றின் தொடர்பு. என்ன ?

விஞ்ஞானமய கோசம் உள்ள மனிதன் , அறிந்ததில் இருந்து அறியாததை உணர்ந்து சொல்லும் வல்லமை கொண்டவன் . கடவுள் பற்றி ; சித்தர்களும் ஞானிகளும்.? ரிஷிகளும் , இறை தூதர்களும் தங்களது ஆன்ம சக்தியால் உணர்ந்து சொன்னார்கள் .

இதற்க்கு பத்தாம் அறிவு வேண்டும் என்கிறார் திரு மூலர்
இக்கேள்விகளுக்கு திருமூலர் திரு மந்திரத்தில் முதல் பாடலில் தெளிவான பதில் சொல்லி உள்ளார் .

ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருன் தாணுணர்ந் தெட்டே
திருமூலர் திருமந்திரம் பாடல் 1

பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த ஒன்றுதான் கடவுள் .
அவனது அருளின் காரணமாக . ஓம் என்ற பெருவெடிப்பில் அகாரம் என்ற எதிர்மறை சக்தி துகள்களாகவும் மற்றும் நேர்மறை சக்தி துகள்களாக இரண்டு சக்தி நிலையாக மாறினான் . இதை பிரபஞ்சவாலை என்கிறார் போகர் . இதை காயத்திரி சக்தி என்கிறார் விசுவாமித்திரர் .
(பார்க்க காயத்திரி மந்திரம் வாலை தியானம் பதிவு ) இதை ஆம் ஊம் என்றார் கருஊரார், இந்த சக்தி துகள்கள் மகாரம் என்ற நடுநிலை துகளாக மூன்றானது . நாதவிந்து என்ற நான்காம் உயிர் துகள் ஆனது? . நாதவிந்து என்ற உயிர் துகள் நேர்மரை உயிர்துகள் எதிர்மறை உயிர்த்துகள் ஆக பிரிந்தது .

எனவே அகார,உகார , மகார நாதவிந்து ஆகிய ஐந்து அடிப்படை துகள்கள் உருவாகின . இந்த ஐந்தை பஞ்சவிதது என்கிறார் அகத்தியர் . , இந்த பசஞ்ச? வித்துக்களே பஞ்ச பூதமாகின( மண் ,நீர் , நெருப்பு , காற்று ,ஆகாயம் ) .. இந்த பஞ்ச பூதங்கள் பிரபஞ்சமாக உயிர்களாக உருவானது . இந்த உயிர்கள் நால்வகை யோனிகளில் ( பிறப்புவழி ) எழுவகை உயிர்களாக பிறந்தன .இந்த உயிர்களில் ஆறு ஆதாரங்களுடன் 96 தத்துவங்களுடன் ஆதிமனிதன் உருவானான் . . இந்த ஆறு ஆதாரம் பெற்ற மனிதன் இதன் மூலம் கடவுள் கொள்கை உருவாக்கினான். கடவுளை உணர்ந்தான் .

.கடவுளை உணர்தபின் கடவுளை தொடர்பு கொள்ள முயன்றான் அப்பொழுது அவன் ஏழாவது நிராதாரமாகிய சகஸ்ராரம் என்ற ஆதாரத்திற்கு சென்றான் , அஷ்டாங்க யோகத்தில் எட்டாவது நிலை ஆகிய சமாதி நிலையில் தன்னை இறைவனின் ஒருபகுதி என உணர்ந்து இறைவனுடன் கலந்து இறைவனாகிநான் . முக்தி பெற்றான் இறைவன் மனிதனாக உரு மாறினான் மனிதன் இறைவனாகி சுயஉரு பெற்றான் . ..

இப்பாடல் சொல்லும் தத்துவங்கள்.
.பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த ஒன்றுதான் கடவுள் இதற்கு உருவமோ, பெயரோ இல்லை . இது ஓர் இறை கொள்கை.

கடவுளை ஒ என்றும் ஓங்காரம் அல்லது ஓம் என்றும் சித்தர்கள் சொல்கிறார்கள் . .. ஓம் பெருவெடிப்பாகியது இதுவே விரிவு அடைந்து அகார உகார, மகார நாத , விந்து ஆகி , பின்பு பஞ்ச பூதமாகி பிரபஞ்சம் உருவானது. இது சித்தர்கொள்கை
வேதங்களும் புராணங்களும் இதை சொல்கின்றன . ஓம் என்ற பெருவெடிப்பில் பிரபஞ்சம் உருவானது என்கிறார் அகத்தியர் .

இன்று பூமி உருவாக்கும் ஓசை ஓம் என்று அறிவியலார் சொல்கிறார்கள்
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் “ ஓர் உருவம் ஒர்நாமம் இல்லானை ஆயிரம் நாமம் சொல்லி தெல்லேலம் கொட்டாமோ “என்றார்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றேபுகும் கதி இல்லை நுஞ்சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே
திரு மூலர் திருமந்திரம் பாடல் 2104

“ஒருவன் என்றே தெய்வத்தை வணங்கவேண்டும்”
அகத்தியர் ஞானம் 9 பாடல் 4

இந்தஓர்இறை கொள்கையை? .கிறித்துவமும் , இஸ்லாமியமும் சொல்கின்றன .

ஆயினும் மனிதன் வேறு இறைவன் வேறு என்கின்றது . . இது துவைதத கொள்கை ..பக்த்தியோக நிலையில் கடைபிடிப்பது .

.கடவுள் தனது அருளால் தனது ஒரு அம்சத்தை (சக்தியை) பிரபஞ்சமாக விரிவடைய செய்தார் ..
( இறைவனின் மாறுபட்ட தோற்றம் மனிதன் )பிரபஞ்சதின் உயர் அங்கம் மனிதன் . . பிரபஞ்ச மறைப்பில் இருந்து மனிதன் விடுபட்டு மீண்டும் இறை வனாகிறான் .

பிரபஞ்ச மறைப்பு அல்லது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் தடை மாயை? என்கிறார்கள் வேதாந்திகள் .. உலக மாயையில் இருந்து விடுபட்டு மனிதன் இறைவனாகிறான் . இது அத்வைதம் மற்றும் வசிஷ்டா அத்வைத கொள்கைகள் .

இக்கருத்தை வேதங்கழும் சொல்கின்றன (ரிக்வேதம் புருஷ சூக்தம் 10:8 90 )

“இப்பிரபன்ச்சம் முழுவதும் எனது ஒரு அம்சத்தால் வியாபித்து உள்ளேன் “ கீதை 10.24

பிரபஞ்ச உற்பத்தியில் பரிணாம வளர்ச்சியே மனிதன் . கடவுள் நேரடியாக மனிதனை படைக்கவில்லை . அனைத்து சித்தர்களும் இதை சொல்லி உள்ளார்கள் இன்றைய அறவியல் இதை உறுதி செய்கிறது
இக்கருத்துகளை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சொல்லியுள்ளார்

“புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
. கல்லாய் மனிதராய் “ என்றார் .

தன்னை கடவுளின் ஒரு அம்சம் என்று உணர்ந்த மனிதன் யோகா வழியில் கடவுளை ஒளிவடிவில் தன்னுள் காண்கிறான் . தன்னுள் கண்ட கடவுளை நோக்கி பயணித்து பல படித்தரங்களை தாண்டி இறைவனுடன் ஒன்றி தானே இறைவன் என்ற நிலை அடைகிறான். இது சித்தர் கொள்கை .

இதை சிதர்கள் “ தான் அவன் ஆதல் “ என்றனர் “நான் சிவனானேன் “ என்கிறார் திரு மூலர்
வேதங்கள் இதை உறுதி செய்கின்றன.

யஜூர்வேதம் ஸ்ரீ ருத்ரம் (8. 1) சொல்வது “நம: சிவாய சிவதராய “ சிவம் தன்னை அடைந்தவனை சிவமாக “சிவதரன் “ ஆக மாற்றுகிறது.

“சிவோகம் “ என்றால் நான் சிவன் என்ற பொருள்தரும் .

இக்கருத்துகளை வேதங்கள் மகாவாக்கியங்களா
க சொல்கின்றன .

ப்ரஜ்ஞானம ப்ரஹம்ம ( ரிக்வேதம் )? =இறைவன் ஞானத்தால் அறியப்படுபவன் .

அஹம் ப்ரஹமாஸ்மி ( யசுர் வேதம் ) நான் இறைவனாய் இருக்கிறேன் . .

தத் த்வம் அஸி (சாம வேதம் ) நீ அதுவாய் ( கடவுளாய் ) இருக்கிறாய்

அயமாத்மா பரம்மா ( அதர்வண வேதம் )

தனது ஆத்மாவே இறைவன்
ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம்.
கடலில் இருந்து ஒருபகுதி நீர் ஆவியாகி மழையாகி பல நிலைகளை
கடந்து மீண்டும் கடலுக்கு வருகிறது .

அது போன்று இறைசக்தியின் ஒரு பகுதி தூண்டுதல் இன்றி பிரபஞ்சமாக விரிகிறது .பின்பு அப்பிரபஞ்சம் மீண்டும் இறைசக்தியில் ஒடுங்குகிறது இது இறைசக்தியின் தன்மையால் தானே நிகழ்கிறது .இதற்க்கு நோக்கமோ குறிகோளோ இல்லை,இதை நைமித்திக பிரளயம் என்கிறது வேதம்.?

மனிதனுள் இருக்கும் இறைசக்தி எங்கிருந்து வந்ததோ அந்த இடத்தை தேடி பயணப்படுகிறது . இது முக்திபயணம்.முட
ிவாக இறைவனை அடைகிறது . அதுவே முக்தி என்று சித்தர்கள் சொல்கிறார்கள் . வேதங்களும் உறுதி செய்கிறது . இது? ஆதஅந்திய பிரளயம் ஆகும் .

இன்றைய அறிவியல் ( Stephen Hawkings ஹாகின்ஸ் )இந்த கோட்பாட்டை சிங்குலாரிட்டி என்று சொல்கிறது . பிரபஞ்சம ஒரு புள்ளியில் இருந்து விரிந்து உருவாகிறது . மீண்டும் சுருங்கி அப்புள்ளியாக மாறுகிறது

1.5 மனித பிறவியின் குறிக்கோள் எது?

பெறுதற்கறிய பிறவியை பெற்றும?்
பெறுதற்கரிய பிரானடி பேணார்
பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே
திரு மூலர் திருமந்திரம் பாடல் 2109

பெறுதற்கறிய பிறவியை பெற்று உள்ளவன் மனிதன்.
.மனிதன் மட்டுமே
பெறுதற்கறிய இறைவன?் திருவடியை முயன்று அடயமுடியும் . அப்படி செய்யாத மனிதர் மற்றும் மிருகங்கள் , பெறுதற்கறியஇறைவனின் திருவடி சேரும் முக்தி என்பதை இழந்துவிடுவார்கள் . .

மனிதபிறவியின் குறிக்கோள் . முக்தி . எங்கு இருந்து வந்தோமோ அங்கு செல்வது…
. முக்தி . எங்கு இருந்து வந்தோமோ அங்கு செல்வது..

1.6 கடவுளின் நிலைகள் .
கடவுள்—மனிதன் (பிரபஞ்சம)—முக்தி தொடர்பு .

தோன்றிய தொம்பதம் தற்பதஞ்சூழ்தர
அசிபதம் ஏன்ற அசிபதம் இம்மூண்றோ டேய்தினோன்
ஆன்ற பராபரமாகும் பிறப்பற
வேன்றனன் மானச் சிவமா யிருக்குமே
திரு மூலர் திருமந்திரம் பாடல் 2437

தானவ னாகிய தற்பரந் தாங்கினன்
ஆனவை மாற்றிப் பரமத்தடைந்திடும்
ஏனை யுயிர் வினைக கெய்து மிடஞ்சென்றும
வானும் நிலனும் புகுந்து வருந்துமே
திரு மூலர் திருமந்திரம் பாடல் 2134

பிரபஞ்சமாக உருவாகும் முன் இருந்த இறைவன் ஒருவன் . இந்த நிலையில் அவன் தொம்பதம் அல்லாது தொம்பரம் / பரம் / பரமாத்துமன் / ஆதி/ சிவம் அல்லது ஆதி சிவம்/விஷ்ணு/ பரமபிதா அல்லது கர்த்தர் /அல்லா என்று பலவாறாக அழைக்க படுகிறான் .

அவனின் ஒரு அம்சம் உருவமுள்ள பிரபஞ்சமாக மாறும்முன் சக்தி நிலையில் (Energy status) இருக்கிறான் எதிர்மறை சக்திதுகள்( அகாரம்), நேர்மறை சக்தி துகள்(உகாரம்) , மறை ஏற்றம் இல்லா நடுநிலை சக்திதுகல்கள் (மகாரம் ) நேர்மறை உயிர் சக்திதுகள் (நாதம் ) எதிர்மறை உயிர் சக்திதுகள் (விந்து ) என பஞ்ச வித்து நிலையில் உருவற்ற இறைவனாக உள்ளான் அல்லது .

இந்த பஞ்ச வித்துகள் என்ற சக்தி நிலையில் கடவுள் நிற்குணபிரம்மம் என்று அழைக்கப்படுகிறான். இதுவே ஆதி சக்தி அல்லது காயத்திரி அல்லது பிரபஞ்சவாலை என்று அழைக்கப்படுகிறது .

அவன் பிரபஞ்சமாக மாறி 96 தத்துவங்களாக மனிதனாக உருவானபின் அவனுள் இருக்கும் இறைவன் தம்பதம் ,/தற்பரம்/ வாலை/ என்று அழைக்க படுகிறான் ..

மனிதனின் உடல் அகாரம் உகாரம் மகாரம் என்ற சக்தி துகள்களால் உருவம் பெறுகிறது . நாத விந்து என்ற உயிர்சக்தி, மனிதனுள் உயிர்ஆக உள்ளது .இது ஜீவன் அல்லது உயிர் . உடலையும் உயிரையும் இணைக்கும் சக்தி தற்பரம் என்ற இறைவன் அல்லது சிவம் . இந்த தற்பரம என்ற வாலை ஒளிவடிவில் ஆனந்த மய கோசத்தில் மனிதனிடம் உள்ளது . இதை ஆத்மா என்று சொல்கிறார்கள் .

உயிர் +உடல்+ தற்பரம் (இறைவன் ) ஆகிய மூன்றின் சேர்கை = மனிதன் அல்லது நான் . உடலும் உயிரும் சேர்ந்த ஜீவன் ஆத்மாவுடன் சேர்ந்து ஜீவஆத்மா என்ற மனிதனாகிறான் .

தன்னுள் இருக்கும் இறைவனை மனிதன் உணராமல் இருக்கக்காரணம் மனிதனின் பிற நான்கு கோசங்கள் . அதாவது அன்னமய கோசம் , பிராணமய கோசம் ,மனோமய கோசம் ஆகியவை . இவற்றை கடந்து உள்முகமாக சென்று ஆனந்தமய கோசத்தில் தற்பர தரிசினம் செய்யவேண்டும் .

தன்னுள் இருக்கும் தற்பரம் என்ற இறைசக்தியை யோகவழியில் பரவெளியில் இருக்கும் தொம்பதம் என்ற இறைவனுடன் ஒன்றசெய்வது, அசிபதம் என்று அழைக்க படுகிறது .

இது தான் அவன் ஆதல் என்றநிலை. தொம்பதம் , தற்பதம் அசிபதம் ஆகிய மூன்று நிலைகளை அடைந்தவனுக்கு பிறப்பு இறப்பு இல்லை . அவன் சிவம் ஆவான் . இது நிலைத்த நிலை யாகும் .. இதுவே முக்தி .
இந்த நிலைகளை தேடி அடைய வெட்கபட வேண்டாம்.

யோக வழியில் மரணத்தை மாற்றி மரணம் இல்லாமல் தானவனாகி இறை நிலை அடைந்தவர்கள் முக்தர்கள் .

1.6 முக்தி அடையாத மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் மரணத்திற்கு பின் என்னவாகிறார்கள் ?

திரு மூலர் சொல்கிறார்.
தானவ னாகிய தர்பரந் தாங்கினன்
ஆனவை மாற்றிப் பரமத்தடைந்திடும்
ஏனை யுயிர் வினைக கெய்து மிடஞ்சென்றும
வானும் நிலனும் புகுந்து வருந்துமே .
திரு மூலர் திருமந்திரம் பாடல் 2134

அவர்கள் உடல் அகார உகாரா மகார சக்தி துகளகளாக மாறும் .
உயிர் நாத விந்து என்ற உயிர்சக்தி துகள்களாக மாறும் .
இவை இரண்டும் பிரபஞ்சத்தில் இருக்கும் பஞ்ச வித்துக்களில் சேரும் . . .. உடலையும் உயிரையும் இணைககும் தற்பரம் அல்லது இறை அம்சம் அல்லது ஜீவவானுடன் இருக்கும் ஆத்மா .
பரத்துடன் சேரும். மரணித்த மனிதன் அகார உகாரா மகார நாத விந்து வாக மாறி , மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறான் .

அதாவது பிரபஞ்சத்தில் இருந்து விடுபடாது பிறவி சுழற்ச்சியில் முக்தி அடையும் வரை சுழன்றுகொண்டு துயர் அடைந்துகொண்டு இருப்பான் .

1.7 அசிபதம் என்ற முக்தியை பெறுவது எப்படி ?

தொம்பத மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பாறை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்னு நண்ணுமவ் வாக்கியம்
உம்பர் உரைதொந்தத் தசி வாசி யாமே
திரு மூலர் திருமந்திரம் பாடல் 2432

தொம்பதம் தனது மாயா சக்த்தியால் பிரபன்ச்சமாகி மனிதனாகி . தற்பதமாக தோன்றியது . மனிதனுள் இருக்கும் தற்பதம் தொம்பதத்தொடு இணைவதால் உருவாகுவது

Thanks

அக்குஹீலர் பரணிதர்,சேலம்



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 36. மெய்யுணர்தல்

அஃதாவது, கடவுள், உயிர், தளை ஆகிய மூன்றன் இயல்புகளையும், உயிருக்குக் கடவுளொடும் உலகத்தொடுமுள்ள தொடர்பு வகைகளையும், ஐம்பூதக் கூறுபாடுகளையும், உடலின் அமைப்பையும், பிறப்பும் வீடும் ஆகிய நிலைமைகளையும், இறைவன் திருவருளாலும் ஓகத்தாலும் உண்மையாக உள்ளபடி யுணர்தல், இது, சமயக் கொண்முடிபு ( சித்தாந்தம் ) கண்டவர் தாமாகவுணர்தலும், பிறர் அவர் உணர்ந்ததை யுணர்தலும், என இரு திறப்படும்.

ஆராய்ந்து கண்ட ஒவ்வோர் உண்மைப் பொருளும் மெய்ப்பொருள் ( தத்துவம்) எனப்படும். இறைவனுண்மையை நம்பாத சாங்கியமதம், ஆத மெய்ப்பொருள் ( ஆன்ம தத்துவம்) இருபத்து நாலொடு ஆதனை ( புருடனை)ச் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தைந்தெனக் கூறும். திருமாலியம் ( வைணவம் ) அவற்றொடு பரவாசுதேவன் என்னும் இறைவனைச் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தாறெனக் கூறும், ஆரியச் சார்பான இற்றைச் சிவனியம், ஆதமெய்ப் பொருளொடு சிவமெய்ப் பொருளென்று ஐந்தும், அறிவுமெய்ப்பொருள் ( வித்தியா தத்துவம் ) என்று ஏழும் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் முப்பத்தாறெனக் கொள்ளும். உலகிலுள்ள நம்பு (ஆத்திக ) மதங்களெல்லாவற்றிற்கும் பொதுவான மெய்ப்பொருள்கள் , பூத மெய்ப்பொருள்கள் இருபதுடன் உயிர் மனம் மதி இறைவன் என்னும் நான்குஞ் சேர்ந்த இருபத்து நான்காகவே முடியும். சமணம், பவுத்தம் முதலிய நம்பா ( நாத்திக ) மதங்களைப் பற்றி இங்கு ஆராய்ச்சியில்லை.

திருவள்ளுவர் ஆரியர் வகுத்த முத்திருமேனி ( திருமூர்த்தி )க் கொள்கையைக் கொண்டவரல்லர். அவர் காலத்தில் அது தோன்றியிருக்கலாம். பிற்காலத்திலேயே அது வேரூன்றியதாக,

"தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக"

(கலி. 2)

 

"உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்"

(கலி. 6)

 

முதலிய கடைக்கழக இலக்கியச் சான்றுகளால் தெரியவருகின்றது. இறைவன் முத்தொழிலையும் முறையே பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் மூவரைக் கொண்டு செய்விக்காமல், தானே செய்கின்றான் என்பதே திருவள்ளுவர் கொள்கை. இனி, இறைவனை அவர் ஐங்கூறாகப் பகுத்திருக்கவும் முடியாது. இதன் விரிவையும் விளக்கத்தையம் என் 'தமிழர் மதம்' என்னும் நூலுட் கண்டு கொள்க. சிவன் என்பதும் திருமால் ( மாயோன் ) என்பதும் இருசார்த் தமிழர் இறைவனுக்கு இட்ட பெயர்களே.

ஓகத்தின் ( யோகத்தின் ) எண்ணுறுப்புக்களாவன : -

(1) தன்னடக்கம் ( இயமம் ) -பொய், கொலை, களவு, காமம், பொருளாசை ஆகிய ஐந்தையுங் கடிதல்.

(2) தவம் ( நியமம்) - உடலை வருத்துதல், உள்ளத் தூய்மை, மெய்ப் பொருளாராய்ச்சி, பொந்திகை ( திருப்தி), கடவுள் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ளல்.

(3) இருக்கை (ஆசனம் ) - மங்கலம் ( சுவஸ்திக ), கோமுகம் ( கோமுக), தாமரை ( பத்ம ), மறம், ( வீர ) , மடங்கல் ( கேசரி), வீறு (பத்திர) , முத்தம் (முக்த), மயில் (மயூர) ஏமம் (சுக) முதலிய 108 இருக்கை வகைகள்.

(4) வளிநிலை (பிராணாயாமம்) - இழுக்கை ( பூரகம்) , விடுகை ( இரேசகம்), நிறுத்தம் ( கும்பகம்) என்னும் மூவகையால் மூச்சையடக்கி யாள்கை.

(5) ஒருக்கம் (பிரத்தியாகாரம்) - மனத்தைப் புலன்கள் மேற் செல்லாவாறு மடக்குதல்.

(6) நிறை (தாரணை) - மனத்தை ஒருவழி நிறுத்துகை.

(7) ஊழ்கம் (தியானம்) - மனத்தை இறைவன் மேற் செலுத்துகை.

(8) ஒன்றுகை (சமாதி) - மனம் இறைவனொடு ஒன்றாகப் பொருந்துகை.

ஒருக்கம், நிறை, ஊழ்கம் என்னும் மூன்றும் முறையே தொகைநிலை, பொறைநிலை, நினைவு என்னும் சொல்லாலும் குறிக்கப்பெறும்.

இருவகைப் பற்றையுந் துறந்தபின் இறைவன் பற்றையே இறுகப்பற்றல் வேண்டுமாதலின், இம்மெய்யுணர்தல் துறவின் பின் வைக்கப்பட்டது. இது பற்றியே, துறவதிகாரத்தின் இறுதியிலும் 'பற்றற்றான் பற்றினைப் பற்றுக' என்று இதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

 

l2100tn3.gifl2100tn5.gifl2100tn1.gif
பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு.

 

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான்-மெய்ப்பொரு ளல்லாதவற்றை மெய்ப்பொருளென்றுணரும் மயக்கவுணர்வினால்; மாணாப் பிறப்பு ஆம்-சிறந்த வீடு பேறின்றி இழிந்த பிறவியே உண்டாம்.

மயக்க வுணர்வாவது, இறைவனில்லை யென்றும், உலகம் தானாக இயங்குகின்ற தென்றும், நற்காட்சி, நல்லோதி ( நன்ஞானம்) நல்லொழுக்கம் என்னும் மூன்றும் வீடுபேற்றிற்குக் கரணகம் (காரணம்) என்றும், உருவம், நுகர்ச்சி, குறிப்பு, எண்ணம், அறிவு என்னும் ஐங்கந்தமும் கெடுவதே வீடுபேறென்றும், தம் மனம்போனவாறு பிறழவுணரும் திரிபுணர்ச்சியாம். வீட்டையளிப்பவன் இறைவனே யாதலின், அவனருளின்றி எவனும் வீடுபெற வியலாதென்பதாம். வீடுபெறாவிடத்து நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறவிவகுப்பில் முன்போலுழலுவதே திண்ணம். அப்பிறப்புத் துன்பமேயாதலின் 'மாணாப்பிறப்பு' என்றார். இதனால் திரிபுணர்ச்சி பிறப்பிற்குக் கரணகமாதல் கூறப்பட்டது



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

 

வாய்மை 
சொல் தூய்மை
குறள் திறன்-0291 குறள் திறன்-0292 குறள் திறன்-0293 குறள் திறன்-0294 குறள் திறன்-0295
குறள் திறன்-0296 குறள் திறன்-0297 குறள் திறன்-0298 குறள் திறன்-0299 குறள் திறன்-300

openQuotes.jpgநிகழ்ந்தவற்றுள் தன் நெஞ்சு அறிந்ததும் பிறர்க்கு தீமை அற்றதுமாய சொல் வாய்மையாம் என வரையறுத்த பொய்யில் புலவர், நூலோர் அதிரும்படி நிகழாத நற்பொய்யும் வாய்மைப்பாலது என்று உலகம் வாழப் புரட்சிப் புத்தறம் நட்டவர்.
- வ சுப மாணிக்கம்

 

வாய்மை என்பது பொய்சொல்லாமையைக் குறிக்கும். எதுவாய் இருந்தாலும் தீமை இல்லாதது வாய்மை; குற்றமற்ற நன்மை பயக்குமேல் பொய்யும் வாய்மையே என்பன வாய்மைக்கு வள்ளுவர் தரும் வரையறைகள். விதி விலக்கின்றி கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பொய்யாமையும் கொல்லாமையும் ஆகிய இரண்டும் ஆகும்; அவற்றில் பொய்யாமையை அறங்களெல்லா வற்றுள்ளும் நல்லது என்று கூறுகிறார் அவர். வாய்மையைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை. ஒருவர் வாய்மையின் வழியில் தவறாமல் செல்வாரேயானால் ஏனைய நன்மை எதையும் செய்ய வேண்டாம். ஏனென்றால் மற்றவை எல்லாம் அதனுள் அடங்கும் என்பது வள்ளுவரது வாய்மை மொழி.

வாய்மை

அறங்களெல்லாவற்றுள்ளும் நல்லது எதுவென ஆராய்ந்து அறிந்த வள்ளுவர் 'வாய்மையே தாம் மெய்யாக் கண்டவற்றுள் நல்லது; பிற அல்ல' என்று துணிகிறார்.
ஒரு சிறிதும் யார்க்கும் தீமை இல்லாதவற்றைச் சொல்லுதலே வாய்மையாகும் என்கிறார். வாய்மை என்பது மனங்கலந்து வரும் அகச்சொல்; ஆகவே நடந்த நிகழ்ச்சிகள் என்றாலும், பிறர் சொல்லியவை என்றாலும், உட்பண்பு அழியாதபடி வெளிப்படுதுதலே 'யாதொன்றும் தீமையிலாத சொலல்' ஆம். 'கண்டதைச் சொன்னேன்; உண்மையைச் சொன்னேன்' என்பதல்ல வாய்மை. மேலும் குற்றமற்ற நன்மை தருமானால் பொய்கூட உண்மையாகும் என்றும் சொல்லுகிறது குறள்.

உண்மை என்ற சொல் வாய்மை, மெய்ம்மை என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுள் சிறு சிறு வேறுபாடுகள் உண்டு, மனம் சொல் மெய்யால் பொய்யின்றி இருப்பதை முறையே உண்மை வாய்மை மெய்ம்மை எனக் கூறுவர்.
சோமசுந்தர பாரதியார் 'மெய்ம்மை எனப்படுவது-உண்மையுரைத்தலும், உளதாந்தன்மையுமாம். மெய்ம்மை, வாய்மை, உண்மை என்பன தமிழில் ஒருபொருட் பன்மொழிகளாக வழங்கப்படுகின்றன; எனினும் உற்றுநோக்கில் இவைதம்முட் சிறிது பொருள் வேற்றுமையும் இனிது விளங்கும். உண்மை-உளதாயிருப்பது; வாய்மை-என்றும் யாண்டும் நன்றுபடப் பேசுவது; மெய்ம்மை-நிலைத்த உண்மைத் தன்மையாம்' என விளக்குவார்.
'வாய்மையாவது சொல்லில் தூய்மையை உணர்த்துவது. மனத்தூய்மை செய்வினை தூய்மையாகிய இரண்டும் உண்மை, மெய்ம்மை எனப் பெயர் பெற்று, முன் பின்னாக நின்று வாய்மை வழி நிற்றலின் வாய்மை கூறி அவ்விரண்டனையும் உள்ளடக்கினார். ஒருவனது செயலும் மனமும் இடைநின்ற சொற்கருவியால் உணரப்படுதலின் வாய்மை கருவியாக மனிதனது உள்ளத் தூய்மையையும் செயல் தூய்மையையும் அறியத் துணை செய்வது இவ்வதிகாரம். அன்றியும், செயலும் நினைவும் எல்லா உயிர்க்கும் பொதுவாயும், சொல்லே மனிதனுக்குச் சிறப்பாகவும் பெற்ற பேறு ஆதலால், சொல் தூய்மையை உணர்த்தும் வாய்மையை மனிதனுக்கே உரிய ஒழுக்கச் சிறப்பில் தலைமையாக வைத்துக் கூறுகிறார்' என்பது இவ்வதிகாரம் பற்றி ஜி வரதராஜன் தரும் விளக்கம்.
உள்ளத்தில் உண்மை, வாயில் வாய்மை, மெய்யால் செய்யும் செயலில் மெய்ம்மை என வாழும் வாழ்வே ஒருவருக்கும் தீங்கு இல்லாமல் வாழும் சிறந்த வாய்மை ஒழுக்கமாகும்.

இவ்வதிகாரத்துள் மெய், உண்மை என்ற சொற்கள் ஆளப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது- வாய்மை பொய்யாமை என்ற சொற்களே பயின்று வந்துள்ளன. யாமெய்யாக் கண்டவற்றுள் என்று அவர் கூறுவதால் வாய்மையின் வேறாகவே மெய்யைப் பயன்படுத்துகிறார் என அறியாலாம்.

வாய்மை அதிகாரம் இல்லறத்தார் துறவறத்தார் இருவருக்குமே பொருந்தக் கூடியது. இது ஏன் துறவறவியலில் வைக்கப்பட்டது என்பது புரிபடவில்லை,

வாய்மை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 291 ஆம்குறள் வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால் எதுவாயினும் தீமை பயவாதவற்றைச் சொல்லுதல் என வரையறை செய்கிறது.
  • 292 ஆம்குறள் குற்றம் நீங்கிய நன்மை தரும் என்றால் பொய்யாகச் சொல்லப்படுவதும் மெய்ம்மையாக வைத்து எண்ணப்படும் என்கிறது.
  • 293 ஆம்குறள் தன் மனம் அறிந்ததைப் பொய்யாது சொல்லுக; பொய் கூறின் தன் மனச்சான்றே தன்னை ஒறுக்கும் என்கிறது.
  • 294 ஆம்குறள் மனமறியப் பொய் சொல்லாமல் வாழ்வானாயின் அவன் உலகோர் உள்ளத்துள் எல்லாம் இருப்பான் என்று சொல்கிறது.
  • 295 ஆம்குறள் ஒருவன் தன்உள்ளத்தோடு பொருந்த மெய் சொல்வானாயின் அவன் தவமுடையார் தானம்செய்வார் இவர்களை விட மேலானவன் என்கிறது.
  • 296 ஆம்குறள் இவன் பொய்சொல்லான் எனப்படுவதுபோல புகழ் வேறொன்றில்லை; பொய்யாமை அவன் அறியாமலே எல்லா அறங்களின் நன்மைகளையும் கொடுக்கும் எனச் சொல்கிறது.
  • 297 ஆம்குறள் பொய்யாமையைப் பொய்யாமல் ஒழுகுவானாயின்; வேறுஅறம் செய்யாதிருப்பினும் நன்று என்கிறது.
  • 298 ஆம்குறள் ஒருவனுக்கு வெளிஉடம்பின் தூய்மை நீரால் உண்டாகும்; மனந்தூய்மை பொய் சொல்லாமையால் அறியப்படும் எனக் கூறுகிறது.
  • 299 ஆம்குறள் எல்லாம் ஒளியும் விளக்கம் அல்ல, சான்றோர்க்கு பொய்யாமையினால் உண்டாகும் ஒளியே விளக்காகும் எனக் கூறுகிறது.
  • 300 ஆவதுகுறள் நான் மெய்யாக அறிந்தவரையில் வாய்மையினும் நல்ல பொருள் வேறு எதுவும் இல்லை என்கிறது.

 

வாய்மை அதிகாரச் சிறப்பியல்புகள்

உண்மை என்பது உளதாந்தன்மை அதாவது உள்ளதைச் சொல்வது, அதில் சொல்வதால் விளையும் நன்மை, தீமை பற்றி சொல்பவர் எண்ணுவதில்லை. வாய்மை என்னும் பொழுது காட்சியொடு, கருத்தும் ஆராயப்பட்டுச் சொல்லப்படுகிறது. வள்ளுவர் தனது தனித்த கோட்பாடாக வாய்மை என்பதற்கு ஓர் இலக்கணம் வகுத்து ஓர் அதிகாராமாக அதை விளக்குகிறார்.

வாய்மைக்குப் புதுமையான இலக்கணம் வகுத்த வள்ளுவர் அதைத் தீமை பயவாததைச் சொல்லுதல் எனக் குறிக்கின்றார். மேலும் குற்றமில்லாத நன்மை உண்டாகுமாயின் பொய்ம்மையும் வாய்மையாகவே எண்ணப்படும் என்றும் கூறுகிறார்: வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்(291), பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் (292) என்பன குறள்கள்.

தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்(293), உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்(294), மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம்செய் வாரின் தலை(295) என்னும் குறட்பாக்கள் மனச்சான்றுக்கு மாறாகப் பொய் சொல்லுதல் கூடாது என்பதை வலியுறுத்தி அதன் உயர்வையும் சொல்கின்றன.

பொய்யாமை புகழ் தருவது மட்டுமன்றி பிற அறங்கள் தரும் நன்மைகளையெல்லாம் தரும் என வாய்மையின் சிறப்பை பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை எல்லா அறமும் தரும்(296), பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று(297) என்ற இரு குறள்களும் கூறுகின்றன.

பொய்சொல்லாமைதான் நீதி வழங்கும் பொறுப்பிலுள்ள பெரியார்க்கு வழிகாட்டும் விளக்கு என்று எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு (299) எனச் சொல்கிறது.

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) என்று தம்மை முன்னிலைப்படுத்திப் பெருமிதத்துடன் வாய்மை யொழுக்கம் போன்ற நல்லது வேறெதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

அதிகாரத் தேர்வு:
 கடவுள் வாழ்த்து வான் சிறப்பு நீத்தார் பெருமை  அறன் வலியுறுத்தல் இல்வாழ்க்கை  வாழ்க்கைத் துணைநலம்  புதல்வரைப் பெறுதல அன்புடைமை  விருந்தோம்பல்  இனியவை கூறல்  செய்ந்நன்றி அறிதல்  நடுவுநிலைமை  அடக்கமுடைமை  ஒழுக்கமுடைமை  பிறனில் விழையாமை  பொறையுடைமை  அழுக்காறாமை  வெஃகாமை  புறங்கூறாமை  பயனில சொல்லாமை  தீவினையச்சம்  ஒப்புரவறிதல்  ஈகை  புகழ்  அருளுடைமை  புலால் மறுத்தல்  தவம்  கூடாவொழுக்கம்  கள்ளாமை  வாய்மை  வெகுளாமை  இன்னா செய்யாமை  கொல்லாமை நிலையாமை   துறவு  மெய்யுணர்தல்  அவா அறுத்தல்  ஊழ்  இறைமாட்சி கல்வி  கல்லாமை  கேள்வி  அறிவுடைமை  குற்றங்கடிதல்  பெரியாரைத் துணைக்கோடல்  சிற்றினஞ் சேராமை  தெரிந்து செயல்வகை  வலியறிதல்  காலமறிதல்  இடனறிதல்  தெரிந்து தெளிதல்  தெரிந்து வினையாடல்  சுற்றந்தழால்  பொச்சாவாமை  செங்கோன்மை  கொடுங்கோன்மை  வெருவந்த செய்யாமை  கண்ணோட்டம்  ஒற்றாடல்  ஊக்கமுடைமை  மடிஇன்மை  ஆள்வினை உடைமை  இடுக்கண் அழியாமை  அமைச்சு  சொல்வன்மை  வினைத்துய்மை  வினைத்திட்பம்  வினைசெயல்வகை  தூது  மன்னரைச் சேர்ந்து ஒழுகல்  குறிப்பு அறிதல்  அவை அறிதல்  அவை அஞ்சாமை  நாடு  அரண்  பொருள் செயல் வகை  படை மாட்சி  படைச் செருக்கு  நட்பு  நட்பு ஆராய்தல்  பழைமை  தீ நட்பு  கூடா நட்பு  பேதைமை  புல்லறிவாண்மை  இகல்  பகை மாட்சி  பகைத்திறம் தெரிதல்  உட்பகை  பெரியாரைப் பிழையாமை  பெண்வழிச் சேறல்  வரைவின் மகளிர்  கள் உண்ணாமை  சூது  மருந்து  குடிமை  மானம்  பெருமை  சான்றாண்மை  பண்பு உடைமை  நன்றியில் செல்வம்  நாண் உடைமை  குடி செயல்வகை  உழவு  நல்குரவு  இரவு  இரவு அச்சம்  கயமை  தகை அணங்கு உறுத்தல்  குறிப்பறிதல்  புணர்ச்சி மகிழ்தல்  நலம் புனைந்து உரைத்தல்  காதற் சிறப்பு உரைத்தல்  நாணுத்துறவு உரைத்தல்  அலர் அறிவுறுத்தல்  பிரிவு ஆற்றாமை  படர் மெலிந்து இரங்கல்  கண் விதுப்பு அழிதல்  பசப்புறு பருவரல்  தனிப்படர் மிகுதி  நினைந்தவர் புலம்பல்  கனவுநிலை உரைத்தல்  பொழுதுகண்டு இரங்கல்  உறுப்பு நலன் அழிதல்  நெஞ்சொடு கிளத்தல்  நிறை அழிதல்  அவர்வயின் விதும்பல்  குறிப்பு அறிவுறுத்தல்  புணர்ச்சி விதும்பல்  நெஞ்சொடு புலத்தல்  புலவி  புலவி நுணுக்கம்  ஊடல் உவகை  

அதிகார விளக்க உரை

அதிகாரம் எண்அதிகாரம்மணக்குடவர் - அதிகார உரைபரிமேலழகர் - அதிகார உரை
36மெய்யுணர்தல்மெய்யுணர்தலாவது எக்காலத்தினும் எவ்விடத்தினும் அழியாதுநிற்கும் பொருள் இதுவென உணர்தல். இது பற்றறத் துறந்தாரது உள்ள நிகழ்ச்சியாதலான், அதன்பின் கூறப்பட்டது.[அஃதாவது,பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களானன்றி உண்மையான் உணர்தல். இதனை வடநூலார் 'தத்துவ ஞானம்' என்ப. இதுவும் பற்றற்றான் பற்றினைப் பற்றியவாறு உளதாவது ஆகலின்,அக்காரண ஒற்றுமைபற்றித் துறவின்பின் வைக்கப்பட்டது.]



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard