குடி (24)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு - குறள் 39:1
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 55:9
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு - குறள் 61:4
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்ற கெடும் - குறள் 61:9
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உள் பகை உற்ற குடி - குறள் 89:7
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி - குறள் 89:8
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 96:2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் - குறள் 103:8
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி - குறள் 103:10
முதல்
குடிக்கு (1)
நகை ஈகை இன் சொல் இகழமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 96:3
முதல்
குடிகாத்தல் (1)
வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள் 64:2
முதல்
குடிமை (1)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3
முதல்
குடிமை-கண் (1)
மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8
முதல்
குடிமையும் (1)
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3
குலத்தில் (1)
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9
குலத்தின்-கண் (1)
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 96:8
குலம் (3)
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9
குலன் (1)
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்-கண்ணே உள - குறள் 23:3