அவி (2)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து - குறள் 42:3
முதல்
அவித்தான் (2)
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் - குறள் 1:6
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
இந்திரனே சாலும் கரி - குறள் 3:5
முதல்
அவித்து (1)
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து - குறள் 70:4
முதல்
அவியினும் (1)
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் - குறள் 42:10
முதல்
அவிர் (1)
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து - குறள் 112:7