Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாய்மை


Guru

Status: Offline
Posts: 7468
Date:
வாய்மை
Permalink  
 


வாய்மை (7)
ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை/காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி - நற் 55/1,2
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே - நற் 283/8
நகையினும் பொய்யா வாய்மை பகைவர் - பதி 70/12
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த - பரி 2/54
கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ - பரி 3/64
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே - கலி 35/25
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ - கலி 135/11

 மேல்
 
    வாய்மைக்கு (1)
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப - நற் 393/9

 மேல்
 
    வாய்மையன் (2)
கல்லா வாய்மையன் இவன் என தத்தம் - பதி 48/7
அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் - பரி 5/33

 மேல்
 
    வாய்மையால் (1)
வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் - பரி 17/28
வாய்மையின் (1)
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி - குறி 210

 மேல்
 
    வாய்மையும் (1)
நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் - கலி 130/1

 மேல்
 
    வாய்மொழி (23)
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப - மது 774
வரை போல் யானை வாய்மொழி முடியன் - நற் 390/9
காலை அன்ன சீர் சால் வாய்மொழி/உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/4,5
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த - பதி 37/2
நகை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் - பதி 55/12
வாய்மொழி புலவ நின் தாள் நிழல் தொழுதே - பரி 1/68
மாயா வாய்மொழி உரைதர வலந்து - பரி 3/11
வாய்மொழி ஓடை மலர்ந்த - பரி 3/12
வாய்மொழி மகனொடு மலர்ந்த - பரி 3/93
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது - பரி 9/13
வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல் - பரி 13/45
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி/இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை - பரி 15/63,64
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே - கலி 26/25
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்று - அகம் 78/16
கூட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி - அகம் 142/11
மாய பரத்தன் வாய்மொழி நம்பி - அகம் 146/9
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி/நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய - அகம் 162/16,17
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை - அகம் 205/8
வாய்மொழி தந்தையை கண் களைந்து அருளாது - அகம் 262/5
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் - புறம் 221/10
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன - புறம் 348/5
வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் - புறம் 388/9
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் - புறம் 398/8

 மேல்
 
    வாய்மொழியால் (1)
பொய் அறியா வாய்மொழியால்/புகழ் நிறைந்த நன் மாந்தரொடு - மது 19,20


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard