Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அருள்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
அருள்
Permalink  
 


அருள் (16)
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
  பொல்லாத சூழ கெடும் - குறள் 18:6
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
  பூரியார்-கண்ணும் உள - குறள் 25:1
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
  தேரினும் அஃதே துணை - குறள் 25:2
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
  இன்னா உலகம் புகல் - குறள் 25:3
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
  தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
  மல்லல் மா ஞாலம் கரி - குறள் 25:5
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
  அல்லவை செய்து ஒழுகுவார் - குறள் 25:6
அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
  இ உலகம் இல்லாகி ஆங்கு - குறள் 25:7
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
  அற்றார் மற்று ஆதல் அரிது - குறள் 25:8
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
  எங்ஙனம் ஆளும் அருள் - குறள் 26:1
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
  ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு - குறள் 26:2
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
  பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள் 26:4
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
  பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் - குறள் 29:5
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
  செல்வ செவிலியால் உண்டு - குறள் 76:7
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
  ஆயும் அறிவினவர் - குறள் 92:4
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
  அல்லல் உழப்பிக்கும் சூது - குறள் 94:8

 முதல்

 
 அருளாதான் (1)
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்
  அருளாதான் செய்யும் அறம் - குறள் 25:9

 முதல்

 
 அருளொடும் (1)
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
  புல்லார் புரள விடல் - குறள் 76:5


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard