Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வினை


Guru

Status: Offline
Posts: 7602
Date:
வினை
Permalink  
 


வினை (45)
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை
  வீயாது பின் சென்று அடும் - குறள் 21:7
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
  தன் உயிர் அஞ்சும் வினை - குறள் 25:4
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
  பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
  இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
  மேற்சென்று செய்யப்படும் - குறள் 34:5
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
  தான் வேண்டும் ஆற்றான் வரும் - குறள் 37:7
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
  நன்றி பயவா வினை - குறள் 44:9
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
  இல்லை நன்று ஆகா வினை - குறள் 46:6
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
  ஊக்கார் அறிவுடையார் - குறள் 47:3
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
  துணை வலியும் தூக்கி செயல் - குறள் 48:1
அரு வினை என்ப உளவோ கருவியான்
  காலம் அறிந்து செயின் - குறள் 49:3
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
  ஆராய்வான் செய்க வினை - குறள் 52:2
எனை வகையான் தேறிய-கண்ணும் வினை வகையான்
  வேறு ஆகும் மாந்தர் பலர் - குறள் 52:4
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
  சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று - குறள் 52:5
செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு
  எய்த உணர்ந்து செயல் - குறள் 52:6
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
  கோடாமை கோடாது உலகு - குறள் 52:10
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
  அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4
வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
  துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - குறள் 62:5
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
  வேண்டிய எல்லாம் தரும் - குறள் 66:1
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
  நன்றி பயவா வினை - குறள் 66:2
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
  சான்றோர் பழிக்கும் வினை - குறள் 66:6
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
  மற்றைய எல்லாம் பிற - குறள் 67:1
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
  ஊறு எய்தி உள்ளப்படும் - குறள் 67:5
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
  இன்பம் பயக்கும் வினை - குறள் 67:9
எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள் 67:10
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
  தாழ்ச்சியுள் செய்யும் வினை - குறள் 68:1
தூங்குக தூங்கி செயல்-பால தூங்கற்க
  தூங்காது செய்யும் வினை - குறள் 68:2
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையும்-கால்
  தீ எச்சம் போல தெறும் - குறள் 68:4
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
  இருள் தீர எண்ணி செயல் - குறள் 68:5
செய்வினை செய்வான் செயல் முறை அ வினை
  உள் அறிவான் உள்ளம் கொளல் - குறள் 68:7
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
  யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
  வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3
வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
  கேட்பினும் சொல்லா விடல் - குறள் 70:7
முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
  வீறு எய்தி மாண்டது அரண் - குறள் 75:9
எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி
  இல்லார்-கண் இல்லது அரண் - குறள் 75:10
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
  உண்டாக செய்வான் வினை - குறள் 76:8
கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
  சொல் வேறு பட்டார் தொடர்பு - குறள் 82:9
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
  பேதை வினை மேற்கொளின் - குறள் 84:6
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
  வேண்டா பொருளும் அது - குறள் 91:1
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
  வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - குறள் 91:4
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
  மாலை அயர்கம் விருந்து - குறள் 127:8

 முதல்

 
 வினை-கண் (3)
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
  தூக்கம் கடிந்து செயல் - குறள் 67:8

 முதல்

 
 வினைக்கு (3)
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
  அதற்கு உரியன் ஆக செயல் - குறள் 52:8
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
  செறிவு உடையான் செல்க வினைக்கு - குறள் 69:4
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
  வினைக்கு அரிய யா உள காப்பு - குறள் 79:1

 முதல்

 
 வினைபடு (1)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
  வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9

 முதல்

 
 வினையர் (2)
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
  புன்மை தெரிவார் அகத்து - குறள் 33:9

 முதல்

 
 வினையான் (3)
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
  தம்தம் வினையான் வரும் - குறள் 7:3
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
  யானையால் யானை யாத்து அற்று - குறள் 68:8
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
  நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2

 முதல்

 
 வினையும் (4)
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
  பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - குறள் 1:5
தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்
  இடம் கண்ட பின் அல்லது - குறள் 50:1
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9

 முதல்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard