Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒரு காதல் காவியம் - பறையர் குல திவ்யா சக்கிலியர் குல இளவரசன்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
ஒரு காதல் காவியம் - பறையர் குல திவ்யா சக்கிலியர் குல இளவரசன்
Permalink  
 


 

ஒரு காதல் காவியம்

நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்த பறையர் குலத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும்  என்ற பையனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. விஷயம் தெரிந்ததும் பறையர் குலத்தினர் ஆத்திரம் கொள்கிறார்கள்.

நாங்க எங்க புள்ளைங்களுக்கு பாலும் பழமும் கொடுத்து கண்ணுக்குள்ள வெச்சுப் பாத்துக்கறோம்... நீங்க என்னடானா ஒன்றரையணா கூலிங் கிளாஸும் துவைக்காத ஜீன்ஸும் போட்டுக்கிட்டு நாடகக் காதலாடா பண்றீங்க என்று கொதிக்கிறார்கள்.

எங்க கிட்ட சரக்கு இருக்கு...மிடுக்கு இருக்கு... உங்க பொண்ணுங்கள உங்களால திருப்திப்படுத்த முடியலை. தான் எங்க கிட்ட வர்றாங்க என்று சக்கிலியர் தலைவர் ஒருவர் பேசுகிறார்.
இதைக் கேட்டதும் ரவிக்குமார் தலைமையில் ஒரு கும்பல் கிளம்பி இளவரசனைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.

இளவரசன் அவர்களிடமிருந்து தப்பித்து பாளையங்கோட்டைக்குப் போய்விடுகிறான்.
பறையர் குலப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கிறார்கள். திருமணத்துக்கு முந்தின நாள் இரவில் அந்தப் பெண் தன் தோழியின் உதவியுடன் ஆம்பூருக்குத் தப்பிச் சென்றுவிடுகிறாள்.

சில வாரங்கள் கழிகின்றன. காதலன் போன் செய்து காதலியை பாளையங்கோட்டைக்கு வரச் சொல்கிறான். என்ன விஷயம் என்று கேட்கிறாள். உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. சீக்கிரம் வா என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிடுகிறான்.

பாளையங்கோட்டைக்கு வந்த காதலியைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த காதலனுக்கு வேறொரு அதிர்ச்சி ஏற்படுகிறது. காரில் இருந்து அமீர் இறங்குகிறார். பின்னால் திவ்யா பர்தா அணிந்தபடி இறங்குகிறார். காதலியின் தோழி அமீரின் உறவினர்.

இந்து மதம் உலகத்திலேயே மோசமானது. இஸ்லாம்தான் அதி உன்னதமான மதம். அமைதி மார்க்கம் அது. யாரையும் ஜாதிபார்த்து ஒதுக்காது. திவ்யாவும் இளவரசனும் இருவரும் இஸ்லாமுக்கு மதம் மாறித் திருமணம் செய்துகொண்டால் யாரும் எதிர்க்க முடியாது என்று சொல்லி அவளை இஸ்லாமுக்கு மாற்றியிருக்கிறார்.

திவ்யாவும், இளவரசனைப் பார்த்து, ‘நீங்களும் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள். நம்மை அங்கு யாரும் பிரிக்க முடியாது’ என்று சொல்கிறாள்.
இளவரசனோ தடுமாறுகிறான். என்ன விஷயமென்றால் பாளையங்கோட்டையில் இருந்த அவனது நண்பர்கள் ஜெகத் கஸ்பருக்கு உறவினர்கள். அவர் இதே யோசனையைச் சொல்லி அவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார்.

உலகிலேயே உன்னதமான மதம் கிறிஸ்தவம் தான். அன்பே உருவான மார்க்கம். சனாதன பிராமண இந்து மதம் மிக மிக மோசமானது. மலச்சிக்கல் முதல் திருமணச் சிக்கல் வரை அனைத்துக்குமான ஒரே தீர்வு கிறீஸ்தவத்துக்கு மாறுவதுதான் என்று சொல்லி இளவரசனை சார்லஸாக ஆக்கியிருப்பார்.
பறையருக்கும் சக்கிலியருக்கும் இடையிலான சண்டை கிறிஸ்தவருக்கும் இஸ்லாமியருக்கும் இடையிலானதாக மாறுகிறது.

ஜெகத் கஸ்பர் மென்மையாக அமீரைப் பார்த்துச் சொல்கிறார்: கணவன் எந்த மதத்துல இருக்காரோ அந்த மதத்துக்குத்தான் மனைவியும் வரணும். அதனால திவ்யாவை தெரேசான்னு பெயர் மாத்தி நாங்க ரட்சிக்கறோம். சார்லஸ்-தெரேசா என்ற இந்த தம்பதியை ஆசீர்வதியுங்கள் அமீர் பாய். கல்யாணத்துக்கு மட்டன் பிரியாணி காண்ட்ரக்ட் கூட நீங்களே எடுத்துக்கோங்க. ஆனா விட்ல வளர்க்கற ஆடு மட்டும் வேண்டாம் என்று தோளில் கை போட்டபடியே சொல்கிறார்.

அது தோளில் வேடிக்கையாக, அன்பாகப் போடப்பட்ட கை அல்ல; கழுத்தை நெரிக்கும் கை என்பது அமீருக்குப் புரியவருகிறது. சட்டென்று அந்தக் கையைத் தட்டிவிடுகிறார்.

அதெல்லாம் வேண்டாம்; திவ்யா இஸ்லாமுக்கு மாறியாச்சு. அதனால குலாம் முஹம்மதுவை எங்க கிட்ட ஒப்படைங்க என்கிறார்.

பேச்சு வார்த்தையில் மெள்ள குரல் உயர்கிறது. தடித்த பிரயோகங்கள் வருகின்றன. ஃப்ளோல கெட்ட வார்த்தைகளும் வருகின்றன. அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும் அங்கிகளைக் கழட்டிப் போட்டு தெருவில் புரள ஆரம்பிக்கின்றன. பேச்சு பேச்சா இருக்கணும் என்று எத்தனையோ தடவை சொன்ன பிறகும் யாரும் கேட்காமல் துப்பாக்கிகள், வெடி குண்டுகள் என வீசப்படுகின்றன.

இளவரசனும் திவ்யாவும் இவர்களிடமிருந்தும் தப்பித்து ஓடுகிறார்கள்.

ஜெகத் கஸ்பரும் அமீரும் அவர்கள் ஓடுவதைப் பார்த்ததும், உங்களுக்காக நாங்க களமாடிக் கொண்டிருக்கிறோம். நீங்க தப்பிச்சு ஓடறீங்களா என்று அவர்களைத் துரத்துகிறார்கள். இங்குமங்கும் ஓடியவர்கள் ஒரு முட்டுச் சந்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

கஸ்பரும் அமீரும் வாருங்கள்... எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று துப்பாக்கியால் குறிவைத்து அழைக்கிறார்கள். அமீர் பக்கம் போனால் ஜெகத் கஸ்பர் கையில் இருக்கும் இதாலியன் மேக் துப்பாக்கி வெடிக்கும். ஜெகத் கஸ்பர் பக்கம் போனால் அமீர் கையில் இருக்கும் ஐ.எஸ். துப்பாக்கி வெடிக்கும். இரண்டு துப்பாக்கிகளின் கூட்டல் புள்ளியின் மையத்தில் சிக்கிய இளவரசனும் திவ்யாவும் ஒடுங்கியபடியே ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக்கொள்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு இருவரும் ஒன்றாக உயிரை விடத் தயாராகும்போது ஒரு வேல் கம்பு அவர்கள் முன்னால் சர்ர்ரென்று பாய்ந்து வந்து நிலத்தில் குத்தி நிற்கிறது.

அதைப் பார்த்ததும் கஸ்பரும் அமீரும் ஒரு அடி பின்னால் செல்வார்கள். வேறொரு ஈட்டி சர்ரென்று பின்னால் வந்து பாயும். இடது பக்கம் நகர முயற்சி செய்வார்கள். அங்கும் ஒரு வேல் கம்பு வந்து விழும். வலது பக்கம் நகரப் பார்ப்பார்கள் அங்கும் இன்னொரு வேல் கம்பு வந்து விழும்.

இளவரசன் அவன் முன்னால் விழுந்த வேல் கம்பை எடுத்து தரையில் ஊன்றி நிற்பான். கஸ்பரும் அமீரும் வேல்களால் சிறைப்படுத்தப்பட்டு பயந்துபோய் நிற்பார்கள். தூரத்தில் புலிக் கொடி பறக்க சீமான் காளையில் புழுதி பறக்க ஸ்லோமோஷனில் பாய்ந்து வருவார்.

இளவரசனையும் திவ்யாவையும் பார்த்து என் பக்கம் வாங்க என்று அழைப்பார். அந்தக் குரலில் அன்பும் ஆறுதலும் பொங்கிப் பிரவகிக்கும்.
தன்னுடன் கொண்டு வந்த இன்னொரு காளை மீது அவர்களை ஏறிக் கொள்ளச் சொல்வார்.

நாம் தமிழர்கள்... நம்மை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. இந்துத்துவம் எக்காலத்திலும் இங்கு காலூன்ற முடியாது. தாமரை இங்கு மலரவே மலராது என்று முஷ்டியை மூடிக் கொண்டு கையை வீராவேசத்துடன் உயர்த்துவார்.

திவ்யாவும் இளவரசனும் இங்கே இந்துத்துவம் எங்கே வந்தது என்று முழித்தபடியே அவரைப் பார்ப்பார்கள்.

வேல் சிறைக்குள் மாட்டிக்கொண்ட கஸ்பரும் அமீரும், அழைச்சிட்டுப் போங்க... அழைச்சிட்டுப் போங்க என்று செபாஸ்டியனைப் பார்த்து பவ்யமாகக் கை காட்டுவார்கள்.

தூரத்தில் தெரியுது பார் ஒரு மலைக்கோவில். அங்கு போவோம். உங்கள் திருமணம் அங்கு நடக்கும் என்று சொல்லியபடியே வழிகாட்டிச் செல்வார் சீமான். அவருடைய காளை பல திருப்பங்கள் வழியாகச் சென்று இறுதியில் மலையடிவாரப் பாதையை வந்தடையும். மலை உச்சி நோக்கிய அந்தப் பாதை செல்பவர் யாரும் திரும்ப முடியாதபடி மிகவும் குறுகலாக ஒற்றையடிப் பாதையாக இருக்கும். வளைந்து வளைந்து செல்லும் அந்தப் பாதையின் இறுதியில் ஒரு மலைக் கோவில் இருக்கும். அதை நெருங்கிய பின்னரே அது கோவில் அல்ல; ஒரு சர்ச் என்பது தெரியவரும். சீமான் கையில் இருந்த வேல் கம்பும் இப்போது சிலுவையாக மாறியிருக்கும். பின்னால் திரும்பவும் முடியாது. இரு பக்கம் அதல பாதாளம் வேறு.

காளையில் இருந்து இறங்கி, தயங்கியபடியே நிற்கும் இளவரசனையும் திவ்யாவையும் வாங்க என்று அழைப்பார். இப்போது அந்தக் குரல் அதிகார தொனியில் இருக்கும்.

இளவரசனும் திவ்யாவும் தலை குனிந்தபடியே சர்ச் நோக்கி நடப்பார்கள். பிரமாண்ட காண்டாமணி ஓங்கி ஒலிக்கும். அந்தச் சத்தம் கேட்டதும் மரங்களில் இருந்த பறவைகள் எல்லாம் அலறி அடித்து திசை தெரியாமல் பதறிப் பறக்கும்.

சீமான் அவர்களை அங்கிருக்கும் சிறிய சுனைக்கு அழைத்துச் செல்வார். பாதிரியார் ஒருவர் இவர்கள் இருவரையும் மூழ்கி எழுந்திருக்கச் சொல்வார். பயந்தபடியே இருவரும் ஸ்நானம் செய்வார்கள்.

நாங்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் இந்துக்கள் அல்ல நாங்கள் இந்துக்கள் அல்ல என்று மூன்று முறை சொல்லிச் சொல்லி மூழ்கி எந்திரிக்கச் சொல்வார்.

பிதா, சுதன், பாதிரி இந்த மூன்று பேரே இனி எங்களுக்கு எல்லாமும் என்று சொல்லுங்கள் என்று அதட்டுகிறார்.

குல தெய்வங்களை இனி கும்பிடமாட்டேன் என்று சொல்லுங்கள் என்று மிரட்டுவார்.
இளவரசனும் திவ்யாவும் பயந்தபடியே அனைத்தையும் செய்வார்கள்.

சர்ச்சுக்குள் அழைத்துச் சென்று ஒரு மோதிரத்தைக் கொடுப்பார்.

திவ்யா கண்களில் நீர் கோர்க்க, அருகில் நிற்கும் செபாஸ்டினைப் பார்த்துக் கேட்பார்: நாம தமிழர்னு தான சொன்னீங்க. மோதிரம் மாத்தறது நம்ம பழக்கம் இல்லையே.

இப்ப புதுசா சேர்த்திருக்காங்கம்மா என்று சொல்லியபடியே தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்ப்பார்.
பாதிரியாரும் விழுந்து விழுந்து சிரிப்பார்.

அப்போது சர்ச் சுவரில் விழும் அவர்களுடைய உருவங்களின் தலைக்கு மேலே இரண்டு கொம்புகள் முளைக்கும்.

இளவரசனும் திவ்யாவும் என்ன அதிசயம் என்று அதைப் பார்ப்பார்கள். செபாஸ்டியனும் பாதிரியும் கூட அதை ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். என்ன விஷயமென்றால் சர்ச் வாசலில் இரண்டு காளைகள் ஆக்ரோஷமாக வந்து நின்றுகொண்டிருக்கும்.

செபாஸ்டியன் அதைப் பார்த்து சிரித்தபடியே, கல்யாண விருந்துக்கு காளை ரெடி என்று சொல்லியபடியே சத்தம்போட்டுச் சிரிப்பார். அதைக் கேட்டதும் காளைகளுக்கு மேலும் ஆத்திரம் ஏற்படும். நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து வந்து பாதிரியையும் செபாஸ்டினையும் ஒரே குத்தாகக் குத்தி தூக்கி எறியும்.

இருவருடைய உடம்பும் சுவரில் மோதி ரத்தக் கோடு வரைந்தபடி கீழே விழும். சுவரில் தெரியும் சிலுவையின் நிழலின் மேல் இவர்கள் இருவருடைய ரத்தம் வழிந்த கோடு இரு பக்கமும் வழிவது திரிசூலம் போல் காட்சியளிக்கும்.

காளை ஆத்திரம் தணிந்து காதல் ஜோடியின் முன் பவ்யமாக வந்து நிற்கும். இளவரசன் காளையின் கூர்மையான கொம்பில் தன் கட்டைவிரலைக் கீறி வழியும் ரத்தத்தை திவ்யாவின் நெற்றியில் இட்டுவிடுவான். இருவரும் காளைகளின் மேல் ஏறிக் கொண்டு தாய் நிலம் திரும்புவார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
RE: ஒரு காதல் காவியம் - பறையர் குல திவ்யா சக்கிலியர் குல இளவரசன்
Permalink  
 


திருவள்ளுவரும் இயேசுவும்:
---------------------------------------------

திருவள்ளுவரின் பெருமைகளைக் கேள்விப்பட்ட இயேசு தமிழகம் நோக்கிப் பயணம் கொண்டான். மயிலையில் திருவள்ளுவரையும் சந்தித்தான். அங்கே திருவள்ளுவர், "கனி இருப்பக் காய் கவர்ந்தற்று" என்ற குறளின் உபன்யாஸம் செய்துகொண்டிருந்தார். அன்றுவரை, தன் வழி நடக்காதவர்களை "நாய்" என்றும் "பன்றி" என்றும் பழித்துக்கொண்டிருந்த இயேசுவிற்கு, "கனி இருப்பக் காய் கவர்ந்தற்று" என்ற ஹிதோபதேஸம் ஆச்சரியமாக இருந்தது. அத்துடன் தன் விவிலிய போதனைகளை ஒப்பிடும்போது தன்னைப்பற்றியே அவமானமாகவும் இருந்தது. இயேசுவின் கண்களில் கண்ணீர் மல்கியது. அவன் வெட்கித் தலை குனிந்து, திருவள்ளுவரின் பாதம் பற்றி, "அருட்தந்தையே, நெஞ்சில் நிரம்பிக் கிடந்த வன்மத்தால் தகாத சொற்கள் சொல்லித்திரிந்த வீணன் எம்மை மன்னித்து இரட்சித்து அருள்வீராக!" என்று கதறினான்.

திருவள்ளுவரும், "இயேசு, உன் வெறுப்புக்கு ஆளானாலும் அதையும் தாங்கிக்கொண்டு பெருந்தன்மையோடு வாழ்பவர்ளை மனதில் கொண்டுதான் 'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை' என்று ஒரு குறளில் சொல்லியிருக்கிறேன். அதாவது தன்னையே வெட்டுபவர்களாயினும் அவர்களையும் விழுந்துவிடாமல் தாங்கியிருக்கும் பெருந்தன்மையுடையவள் நில அன்னை. நீயோ, இழிசொற்களால் உன்னை தாழ்த்திக்கொண்டதோடு மட்டுமின்றி மற்றவர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரமும் செய்தாய். ஆனால், உன் வெறுப்புக்கு ஆளானவர்கள், பதிலுக்கு வன்மம் காட்டாமல், பெருந்தன்மையுடன் நில அன்னையைப்போல உன்னைத் தாங்கினார்கள். அதனால்தான் நீ வீழ்ச்சியடைந்து அழியவில்லை. நீயும் அவர்கள் வழி நடந்தால் உன் மனதிலிருக்கும் வன்மம் நீங்கி உயர்ச்சி பெறுவாய்" என்று அறிவுறுத்தினார்.

இயேசுவுக்கும் ஏதோ புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது. எதற்கும் மண்டையை ஆட்டிவைத்தான்.

திருவள்ளுவரும், "ஒரு குறளில், 'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து' என்று சொல்லியிருக்கிறேன். அதாவது, ஆமை தனது ஐந்து அங்கங்களைக் கூட்டுக்குள் அடக்குவது போல எவன் ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கப் பழகுகிறானோ அவனே ஏழு பிறவிகளிலும் அறவழி நடந்து மோக்ஷ வீடு பெறுவான் என்று அதன் பொருள். பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர், "यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वश: इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता" என்று சொன்ன வாக்கியத்தைத்தான் நான் குறளாக வடிவமைத்தேன். நீயும் இன்றுமுதல் ஐம்புலன்களை அடக்கப் பழகு. ஏழு பிறவிகள் கடந்தபின் மோக்ஷ பாக்கியம் பெறுவாய். ஐம்புலன்களையும் அடக்குவதைவிடப் பெரிய இரட்சிப்பு ஏதுமில்லை!" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

இயேசுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், கேள்வி கேட்கவும் பயம். அவனுடைய நல்ல நேரம், அருகிலேயே கோனார் ஜி அமர்ந்திருந்தார். அவர் இயேசுவைப் பார்த்து, 'அப்புறம் புரிய வைக்கிறேன்!' என்று சைகை மொழியில் சொன்னார். மரமண்டைகளுக்கு வள்ளுவ வாக்கைப் புரியவைக்க உரை பதிப்பிப்பதுதான் கோனார் ஜி அவர்களுடைய தொழில். வள்ளுவரின் உபன்யாஸம் முடிந்தவுடன் கோனார் ஜி-யும் இயேசுவும் ஒரு ஆல மர நிழலில் அமர்ந்தார்கள்.

"கோனார் ஜி, திருவள்ளுவர் ஆம, ஐம்புலன், மோக்ஷம் அப்படினலாம் சொன்னது எனக்கு ஒரு எழவும் புரியல" என்று இயேசு முறையிட்டான். ரொம்பவே குழம்பியிருந்தான்.

கோனார் ஜி அவனுக்குப் புரியவைத்தார், "அது வேற ஒண்ணும் இல்லடா இயேசு. உன்ன 'மூடிட்டு இரு' அப்பிடின்னு திருவள்ளுவர் சொல்லிருக்காரு. அதாவது, விஷயம் புரியற வரைக்கும் ஒருத்தன் வாயத் திறந்து உளரக் கூடாதாம். இதுக்கு ஒரு குறள்ல உதாரணம் சொல்லிருப்பாரு: 'கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.' இதுக்கு 'ஒரு முட்டாப்பய படிச்சவங்க இருக்குற அவையில அவசரப்பட்டுப் பேசறது என்பது முலைகள் வளராத ஒரு பெண் அவசரப்பட்டு ஒரு வயசுக்கு வந்த பெண் போல காம ஆசை கொள்வது' அப்பிடின்னு அர்த்தம். நீ அவசரப்படாம பொறுமையா மூடிட்டு இருக்கணும். புரிஞ்சுதா?"

இயேசுவுக்கு ஏதோ புரிந்தாற்போல இருந்தது. சற்று நேரம் கண்களை மூடி யோசித்தான். பிறகு, கண்களைத் திறந்து கேட்டான், "கோனார் ஜி, திருவள்ளுவர் சொன்ன மாதிரி நானும் மூடிட்டு இருந்தா எனக்கும் முலைகள் வளருமா?"

பி.கு.: இது நான் எழுதிக்கொண்டிருக்கும் "வௌவால் இயேசப்பன் கதை" என்ற நூலில் இடம்பெறும் ஒரு அத்தியாயம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

ஜி, கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடறது
மாதிரியான விஷயங்களை நாம கையாளற விதம்தான் தப்புன்னு தோணுது. அவங்களைக் கண்டு ரொம்பவே பயப்படறோம்னு தோணுதுஜி.

எப்படிச் சொல்ற?

ஏன்னா, இது இப்ப ஆரம்பிச்ச விஷயம் இல்லை. என்னிக்கு கிறிஸ்தவம் இந்தியாவுக்குள்ள காலெடுத்து வெச்சதோ அப்பவே ஆரம்பிச்சதுதான். உலகம் பூரா கன்னி மேரின்னு சொல்லப்பட்ட உருவம் இந்தியவுக்குள்ள மேரி மாதா, மரிய அன்னை அப்படின்னுதான் நுழைஞ்சிருக்கு. தாய் தெய்வ வழிபாட்டுல வேர் ஊன்றி நிக்கற இந்துக்களை மாதான்னு சொல்லித்தான் நெருங்க முடிஞ்சிருக்கு. உள்ள நுழைஞ்ச 15-16-ம் நூற்றாண்டுகள்லயே காவி உடையை பாதிரிகள் அணிவது, கோவில்ல நாம வெச்சிருக்கறமாதிரியான மணியை சர்ச்சுக்குப் பயன்படுத்தறதுன்னு ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப சர்ச்சுக்கு யானையைக் கொண்டு போறது வரை வந்தாச்சு.

கன்னி மேரியை மேரி மாதாவா ஆக்கினப்பவே தடுத்திருந்தா இது எதுவும் நடந்திருக்காதுல்ல.

அப்படி இல்லைஜி. இப்படிச் செஞ்சதை அவங்களோட வெற்றியாவும் நம்மளோட தோல்வியாவும் எப்படிப் பாக்கறீங்க?

நம்மளோட கலாசார அடையாளங்கள், சடங்குகள், விழாக்கள் இதையெல்லாம் திருடறதை நம்மளோட தோல்வியா இழப்பாத்தான பாக்கணும். இந்தியால இருக்கற கிறிஸ்தவ அதிகார மையங்கள் எல்லாமே இந்துக்களுக்கு எதிரா நிக்கறதைப் பார்த்தாலே தெரியலையா அது எவ்வளவு பெரிய அபாயமா மாறியிருக்குன்னு.

அப்படி இல்லைஜி. அது ஒருவகையில நம்மளோட வெற்றிதான். கிறிஸ்தவம் தன்னோட மேற்கத்திய அடையாளத்தை இழந்து இந்துமயமாகறதைத்தான் அது காட்டுது. கிறிஸ்தவத்துக்கு மாற்றப்பட்டவங்களை, மாத்தின அவங்களே தாய்மதம் திரும்பச் செய்யறமாதிரித்தான் இருக்கு. இன்னும் சொல்லப்போனா இந்த நடைமுறைகள் எல்லாம் இத்தாலிய அமெரிக்க பேபல் அமைப்புகளை மீறி நடக்கறவிஷயம். நம்ம ஆளுங்க நடத்தற விஷயம். அதுனால இது வரவேற்கப்படவேண்டியதுதான். கிறிஸ்தவர்கள் சர்ச்ல பொங்கல் கொண்டாடறாங்கன்னா நாமளும் போய் நின்னு பிரசாதம் வாங்கிட்டு வர்றதுதான் சரி.

அப்படியே கொஞ்சம் உள்ள வந்து மண்டிபோடு. அழுகின திராட்சை ரசத்துல முக்கின அப்பம் தர்றேன்னு சொல்லுவான். அதையும் தொட்டு நக்கிட்டு வந்தா இன்னும் நல்லா இருக்கும்ல.

இல்லைஜி... நீங்க கொஞ்சம் கோபமா இருக்கீங்க போல இருக்கு.

பின்ன கோபப்படாம என்ன செய்யச் சொல்ற. நம்மளோட கலாசார அடையாளங்கள், சடங்குகள், விழாக்கள் அவை சொல்ற நல்ல விஷயங்களையோ அவற்றோட ஆன்மாவையோ எடுத்துக்காம வெறுமனே புற அடையாளங்களை அதுவும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவுபடுத்தி ஏத்துக்கறதை எப்படி சம்மதிக்கமுடியும். பொங்கல் கொண்டாடறானுங்கன்னு சொல்றியே, பாதிரி வேட்டி கட்டி, விபூதி குங்குமம் பூசிக்கிட்டு அதைச் செஞ்சா ஓரளவுக்கு ஏத்துக்கலாம். ஷூவைக்கூடக் கழட்டாம, சர்ச்சுக்கு வெளில குப்பை போடற இடத்துல நின்னு அண்டாக்கு முன்னால நீன்னு போஸ்கொடுக்கறானுங்க... அது எப்படிப் பொறுத்துக்க முடியும். அது திருட்டுகூட இல்லை. நம்ம கலாசாரத்தை இழிவுபடுத்தற வேலைதான்.

இல்லைஜி... நான் என்ன சொல்லவர்றேன்னா, நம்மளோட அடையாளங்களை அவங்க எப்படி அதனோட தனித்தன்மையை, புனிதத்தை அவனுங்க இப்படி கேவலப்படுத்தறாங்கன்னா நாமளே ஏன் அதை முறையா செய்ய உதவக்கூடாது. இதை நான் பாதிரிகளோட கிறிஸ்தவ அதிகாரசக்திகளோட செயலாப் பாக்கலை. அங்க போனதுக்கு அப்பறமும் இந்துவா இருக்க விரும்பற நேற்றைய நம்ம இந்து சகோதரகளோட வெற்றியாத்தான் பாக்கறேன். அவங்க நாளைக்கு கலாசார இந்துவாவே மாறி நம்ம பக்கம் வர்றதுக்கான வழியா பாக்கறேன். அவங்க மனசுல இருக்கற அந்த உணர்வை மதிச்சு நாமளே நம்மளோட கொண்டாட்டங்கள் எல்லாத்தையும் அவங்க கூட சேர்ந்து கொண்டாடணும். நினைச்சுப் பாருங்க, நம்ம ஸ்வாமிஜி ஒருத்தர் சர்ச்சுக்குப் போய் அங்க இருக்கற கிறிஸ்தவர்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து வெறுங்கால்ல, சூரியனைப் பார்த்தபடி, விபூதி குங்குமம் வெச்ச பானைல பொங்கல் வெச்சு, குலவை இட்டுக் கொண்டாடறதுல என்ன தப்பு?

எந்தப் பாதிரி இதுக்கு சம்மதிப்பான்?

நாம கேட்டுப் பாத்திருக்கோமா... ஏன் சர்ச்சுக்கு பட்டு வேட்டி, பட்டுப் புடவை கட்டிட்டு நெற்றி நிறைய குங்குமமும், பூவும் வெச்சுக்கிட்டு எந்த ஜாதில இருந்து கிறிஸ்தவத்துக்கு போயிருக்காங்களோ அதே ஜாதியைச் சேர்ந்த இந்துக்கள் அந்த சர்ச்சுல இந்து அடையாளங்களோடப் போய் நின்னா வேண்டாம்னு சொல்லிடமுடியுமா..? போப் அங்க இருந்துகிட்டு வேண்டாம்னு சொன்னா, யார் கேப்பாங்கன்னு நினைக்கறீங்க. கிறிஸ்தவ நாடாருக்கும் இந்து நாடாருக்கும் உள்ள பந்தம்தான் வலுவானது. ஜாதி அவங்களை ஒண்ணு சேக்கும். போப் சொல்றதை யாரும் கேக்கமாட்டாங்க. இந்து முறைப்படிப் பொங்கலை முறையா கொண்டாடவருவாங்க எல்லா கிறிஸ்தவரும். இதுதான் உண்மை. நாம செய்யற பெரிய தப்பு அவங்களை பாதிரிகிட்ட விட்டுட்டு ஒதுங்கி நிக்கறதுதான். இந்துப் பண்டிகைகளை கிறிஸ்தவர்களை இந்து அடையாளங்களோட கொண்டாடவைக்கற மாதிரியே, கிறிஸ்தவ பண்டிகைகளையும் நாம கொண்டாட ஆரம்பிக்கணும். உங்க வார்த்தைல சொல்றதுன்னா அவற்றையும் நாம கைப்பற்றியாகணும். மதம் பிடிச்சு அலையற யானையை கும்கி யானையை அனுப்பி வழிக்குக் கொண்டுவர்றதில்லையா அது மாதிரிச் செய்யணும்.

அது எதுக்கு..?

அந்த பண்டிகைகளோட ஒற்றைபடைத் தன்மையை, ஏகாதிபத்தியத்தை நாம சிதைச்சாகணும். சாண்டா க்ளாஸ்னு ஒரு பொம்மைக்கு செவப்பு வெள்ளைங்கற நிறத்தை எப்படி ஒரு பிராண்டா மாத்திவெச்சிருக்கான் பாருங்க. உலகத்துல எங்க அந்த சிவப்பு-வெள்ளையைப் பார்த்தாலும் உடனே அது கிறிஸ்தவ சிம்பலா மாறியிருக்குல்ல. இதை தகர்க்கணும். நாம காவி, மஞ்சள், பச்சை, நீலம், கருப்புன்னு எல்லா நிறத்துலயும் சாண்டா க்ளாஸை வடிவமைக்கணும்.

அப்பறம்...

ஒருவேளை அந்த பொம்மை பிடிக்கலைன்னா நம்மகிட்ட இருக்கற ஏதாவது ஒரு நபரை வெச்சு அதைச் செய்யலாம். திருவள்ளுவர் வேடத்துல நாம வேஷம் போட்டுக்கிட்டு குழந்தைங்க கிட்ட போய் அவங்களுக்கு ஆசிகள் தரலாம். பரிசுகள் தரலாம். இல்லைன்னா, குழந்தைகளுக்குப் பிடிச்ச அனுமன், விநாயகர் வேடத்துல போகலாம்.

சிவப்பு வெள்ளை டிரஸ்ல இல்லையா..?

ஆமாம். இல்லைன்னா நமக்கு ஆடை சார்ந்தும் எந்த கட்டுப்பாடு கிடையாதே . கிறிஸ்துமஸை டிசம்பர் 25 கொண்டாடறாங்கள்ல, 2000 வருஷத்துக்கு முன்னால கிறிஸ்து என்னிக்குப் பிறந்ததா சொல்லப்படுதோ அந்த நாளை நட்சத்திரத்தை வெச்சு நாம நம்ம கிறிஸ்தவர்கள் கூட கிறிஸ்மஸ் கொண்டாடணும். டிசம்பர் 25க்கு இருக்கற மொனாபொலியை மாத்தணும். அவங்க வீடு முழுசும் நட்சத்திரத்தைக் கட்டித் தொங்கவிட்டா நாம சூரியன், சந்திரன், அகல் விளக்குன்னு, குத்து விளக்குன்னு நம்ம விழா நாட்கள்ல பலூன்ல செஞ்சு மின்சாரத்துல எரியவிடணும். அவங்க கிறிஸ்மஸ் ட்ரீயை பிராண்டா மாத்தினா நாம நம்மளோட ஆலமரம் ஒண்ணை அதுமாதிரு பிராண்டா மாத்தி கொண்டாடனும். நம்ம கோவில்கள்ல பாவ மன்னிப்புக்கு ஒரு சித்திரகுப்தன் சன்னதியை ஏற்பாடு செய்யணும். நம்ம பூசாரிகள், பட்டர்கள், , தீட்சிதர்கள், சிவாச்சாரியார்களே அவரவர் முறைப்படி ஸ்லோகம் சொல்லி பாவ விமோசனம் கேட்டு இறைவன் கிட்ட பிரார்த்தனை செய்யணும்.

அப்படியே மாரியம்மாவுக்கு மேரியம்மன் அலங்காரமும் செய்யணும் இல்லையா.

அதை அப்படிச் செய்யவேண்டாம். அனாஅ மேரியம்மனுக்குன்னு ஒரு தனி சன்னதி கட்டி கும்பிடலாம்.

சுத்தம். நம்ம கோவில்ல மேரியமனைக் கும்பிடறவங்க அப்படியே கொஞ்ச நாள்ல நேராவே மேரியம்மனைக் கும்பிட சர்ச்சுக்குப் போயிடலாம் இல்லையா..?

அப்படி ஏன் நினைக்கறீங்க... இந்துமதத்துல இருந்து மதம் மாறிப் போனவங்க நம்ம கோவிலுக்கு வந்து அந்த மேரியம்மனைக் கும்பிட ஆரம்பிச்சு அப்படியே அவங்களோட குல தெய்வத்தைக் கும்பிட ஆரம்பிக்கவும் செய்வாங்கள்ல.

அது நடக்கவே செய்யாது. ஆனா நீ சொல்றது எப்படி இருக்குன்னா ஒருத்தன் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம்... எதுக்கு கெளரவமான வார்த்தை... கற்பழிச்சான்னா பதிலுக்கு அந்தப் பொண்ணும் அவனைக் கற்பழிச்சுப் பழிவாங்கணும்னு சொல்ற மாதிரி இருக்கு.

உங்க உதாரணம் தப்புஜி. ஒரு நதி இன்னொரு நதியோட கலக்கறபோது இரண்டோட நீரும் கலந்து புது நதி உருவாற மாதிரிதான் இது.

ரெண்டுமே நல்ல தண்ணி நதியா இருந்தாப் பரவாயில்லை. ஒண்ணு கடல்... இன்னொன்னு நல்ல தண்ணி. கடல் தண்ணி கலந்தா ஆத்துத் தண்ணி பூரா உப்பாகிடும். அதனால ரெண்டும் தனித்தனியா இருக்கறதுதான் நல்லது. ஆத்துத் தண்ணியை அணி கட்டி சேமிச்சு வெச்சு கடலோட சேரவிடாம செஞ்சாத்தான் வயல்களுக்கு நல்லது. இரண்டு வெவ்வேறு அம்சங்கள் கலந்து புதுசாக ஒண்ணு உருவாறதுல தப்பில்லை. ஒண்ணு இன்னொன்னை அழிக்கறதுதான் தப்பு. கிறிஸ்தவம் நம்ம கிட்ட இருக்கற நல்லது எதையும் எடுத்துக்காது. அது அவங்க நோக்கமும் இல்லை. அழிக்கறதுதான் நோக்கம். அதனால நம்ம சடங்குகள், அடையாளங்கள், விழாக்களை அவங்க கொண்டாடறதை நாம எதிர்த்துத்தான் ஆகணும். உண்மைல நாம நம்ம பாரம்பரியத்துல இருந்து நாமளாவே நிறைய விலகி வந்ததுனாலதான் இது அவங்களுக்கு சாத்தியமாகுது. சல்லிக்கட்டுங்கறது கோவில் விழா. பங்கெடுக்கற அவ்வளவுபேரும் கோவில்ல சாமி கும்பிட்டு விபூதி குங்குமம் இட்டுக்கொண்டுதான் களம் இறங்கணும். இத்தனை வருஷமும் அப்படித்தான் இருந்தாங்க. இப்பத்தான் வெறும் ஜட்டி பனியன் போட்டுக்கிட்டு விளையாட்டு காட்டறானுங்க. ஒருத்தர் நெத்தியிலயாவது விபூதி குங்குமம் இருக்கா... இதை நாளைக்கே சர்ச் முன்னால கூட இந்தப் போட்டியை நடத்துவான். சல்லிக்கட்டு இந்து விழாங்கறதை தமிழர் விழான்னு சொல்லி தமிழர் அடையாளமான விபூதி குங்குமம் இல்லாம ஆக்கி கிறிஸ்தவர் கிட்ட கொடுக்கற சங்கதிதான் இது. கொஞ்ச வருஷத்துல சர்ச்சும் இந்தப் போட்டியை நடத்தறதை கைவிட்டிரும். வேணும்னா கார்ப்பரேட் ஸ்பான்ஷர்ஷிப்போட பாக்கவர்றவனுக்கும் கட்டணம் வெச்சு, ஸ்டேடியத்துல நடத்துவான். ஆனா அந்தப் போட்டிய நடத்தின அம்மன் கோவில் யாரும் இல்லாம அநாதையா போகும். கார்ப்பரேட் பணத்துல சர்ச் மட்டும் பிரமாண்டமா எழுந்து நிக்கும். அதனாலதான் இந்த அடையாள, கலாசார திருட்டை தடுக்கணும்னு சொல்றோம். நீ என்னடான்னா அவன மாதிரியே நாமளும் செய்யணும்னு சொல்ற. அது அவன் வேலையை ஈஸியாக்கித் தருமே தவிர நமக்கு எந்தவகையிலயும் பயன்படாது.

நீங்க சொல்றது சரிதான். ஆனா, இந்துமதத்துல இருந்து மாற்றப்பட்டிருக்கறவங்களை எப்படியாவது இந்து-இந்திய நலன் பக்கம் கொண்டுவரணும்னா அவங்க கூட ஏதாவது ஒருவகைல நமக்குத் தொடர்பு, நட்பு இருந்தாகணும். விழாக்கள் எல்லாம் அதுக்கான கருவிகள். காவி ஆடை உடுத்தி மேரி மாதா கோவிலுக்கு பாத யாத்திரை போறாங்கன்னா நாமளும் அந்த யாத்திரைக்குப் போகலாம். சர்ச்சுக்குள்ள போய் தேங்காய் உடைச்சு, தீபாராதனைகாட்டி கும்பிட்டுட்டு வரலாம். இல்லைன்னா அந்த யாத்திரைக்குப் போற கிறிஸ்தவர்களுக்கு பாதம் அலம்பி, விபூதி-குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து வழியனுப்பலாம். அவங்களோட பாதயாத்திரைப் பயண வழியில நீர்மோர், பானகம் கொடுக்கலாம். வழியில் தென்படும் முருகன் கோவில்களுக்கு வந்து வணங்கிவிட்டுப் போலச் செய்யலாம். அந்த கிறிஸ்தவர்கள் கையில முருகரோட வேல் ஒன்றைக் கொடுக்கலாம். நான் சொல்லவர்றது என்னன்னா, நம்முடைய தனித்தன்மையைத் தக்கவைப்பது அவசியம் தான். ஆனால், அது முடியாத நிலையில் மற்றவர்களின் ஒற்றைப்படைத்தன்மையை அகற்றுவது அதை விட மிக மிக அவசியம். அந்த ஒற்றைப்படைத்தன்மைதான் பேபல் கும்பலின் உலகளாவிய அதிகாரக் குவிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, கிறிஸ்தவர்கள் சர்ச்சுல பொங்கல் கொண்டாடறாங்களா கொண்டாடட்டும். நாமளும் சைவ, வைணவ அடையாளங்களோட அதுல பங்குபெற்று அதை உண்மையான இந்து-தமிழர் விழாவா ஆக்குவோம். சர்ச் ஜன்னல்கள் பூரா சந்தனம் தெளிச்சு குங்குமம் இட்டு விடற நாள் என்னிக்கோ அன்னிக்குத்தான் நம்ம நாடு உண்மையான மத நல்லிணக்க நாடா ஆகும். அவங்க எங்கல்லாம் நம்ம அடையாளங்களை பின்பற்றறாங்களோ அங்க போய் அவங்க விட்டு வெச்சிருக்கற மீதி இந்து அடையாளங்களை நாம இட்டு நிரப்பணும். இதை அந்த மதத்துல உள்ள அதிகார சக்திகளுக்கான பதிலடியா மட்டுமில்லை; அங்க இருக்கற நம்ம சகோதரர்களோட ஒரு நட்புறவை உருவாக்கற நோக்கத்துலயும்தான் செய்யச் சொல்றேன்.

(இடமும் வலமும் அலையும் சிறு சுடர்- நாவலில் இருந்து)



__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

*திரைப்படத்துறையில் என்னமோ கிறிஸ்தவ மதமாற்றம்* *இப்போதுதான் நடப்பது போலவும் அதை இந்த வருமானவரி துறையினர் தான் கண்டுபிடித்தது போலவும் செய்திகள் அடிபடுகிறது.*

ஆனால் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பே
*ஏவிஎம் ராஜன்*
என்னும் முருக பக்தரை *கிறிஸ்தவத்துக்கு மதம் மாற வைத்தனர்*.
அவர் குணமாக கிறிஸ்தவ பிரச்சாரமும் ஆனால் அது முழுதாக வெற்றியடையவில்லை.
மக்களும் நம்பவில்லை.
அதன்பின் பாலைய்யாவின் மகன் *ஜூனியர் பாலைய்யா கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்*
அதன்பின் அவரை வைத்தும் மதப் பிரச்சாரம் நடைபெற்றது.

அப்பொழுதும் பெரிதாக மாற்றங்கள் நடைபெறவில்லை. அதன்பின் நகைச்சுவை
*நடிகர் குமரிமுத்தவை மதம் மாற்றினார்கள்*
குமரிமுத்துவை வைத்து நடிகர் சங்கத்தில் பிரச்சினைகளை உருவாக்க வைத்தனர்.
அதன்பின் நகைச்சுவை நடிகர் *செந்திலை* மதம் மாற்றினார்கள்.

இப்போது மதமாற்றிகளின் அடுத்த டார்கெட் *சின்னத்திரை நடிக நடிகர்கள்*
அதனால்தான் இப்போது நகைச்சுவை நடிகர் செந்தில் *ராசாத்தி* தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு நடுவில் பல கிறிஸ்தவ நடிகர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் படம் எடுத்தார்கள். நடித்தார்கள்.
ஆனால் அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருந்தார்கள். காங்கிரஸ் ஆட்சியின்போது *கிறிஸ்தவ சோனியா* தலைமையிலான *ஜோஷ்வா* ப்ராஜெக்ட் மூலம் முழுக்க முழுக்க இந்திய சினிமா துறை பாலிவுட்டையும் ஆக்டோபஸ் போல ஆக்கிரமிக்க திட்டமிட்டு நடத்தப்படுகிறது.
இந்த மத மாற்றம் முன்னரெல்லாம் திரைப்படங்கள் போடும் முன் *லட்சுமி பிலிம்ஸ், வெங்கடேஸ்வரா பிலிம்ஸ், தேனாண்டாள் பிலிம்ஸ் என்று நமது தெய்வங்களின் படம் சார்ந்து *லட்சுமி படம்* வைத்து பூஜை செய்வார்கள். அதை நாம் படம் தொடங்குவதற்கு முன் பார்த்திருக்கலாம். ஆனால் *இப்போது அந்த முறை முற்றிலுமாக அழிந்து விட்டது.* திரைப்படத்துறை இருபது முப்பது வருடங்களுக்கு முன்பே *கிறிஸ்தவ சமூக சீர்திருத்தம்* என்ற ஆக்டோபஸ் மூலம் கபளீகரம் செய்யத் தொடங்கிவிட்டது.
இது பலரும் அறியாதது. அதனால்தான் சமூக கருத்துக்கள் என்ற பெயரில் பலபேர் படங்களில் *கோயில்களில் கலவரம் நடப்பது போலவும், ஜாதி பிரச்சனைகள் நடப்பது போலவும் சீர்திருத்தத் திருமணம் போலவும்* தனது படங்களில் கருத்தை வலியுறுத்தி இருப்பார்கள்.
அப்படி வலியுறுத்தியவர்கள் அனைவரும் ஒன்று *ஈவேராவின்* கருத்துகளின் அடிப்படையிலும் மற்றும் *கிறிஸ்தவம்* ஆதிக்கத்தின் அடிப்படையிலும் தனது படங்களில் காட்சிகளை அமைத்திருப்பார்கள். மேலும் *தேவாலயங்கள் அனைத்திலும் பாதிரியார்கள் புனிதர்கள் போலவும் பிராமணர்கள் மற்றும் ஊர் நாட்டாமைகள் இவர்கள் எல்லாம் அநியாய வாதிகள் அதாவது வில்லன் என்பதை போலவும்* தனது காட்சியின் மூலம் காட்டியிருப்பார்கள்.
மக்கள் வெறும் கதைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த *போலி படைப்பாளிகள் மற்றும் மிஷினரிகளின் ஏமாற்று வேலையை* அவர்கள் அறியவில்லை.
மேலும் எவன் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன என்ற தொலைநோக்குப் பார்வையும் கூட😁.
பல படங்கள் வந்து வெற்றியும் பெற்றன🙄.
இப்போது தான் *நடுநிலைநக்கி இந்துக்களுக்குதெரிகிறதோ கிறிஸ்தவத்தின் கோரமுகம்.* *இதற்கு மேலும் இந்து மக்கள் திருந்த வில்லை என்றால் நாளை ஒவ்வொருத்தர் வீட்டிலும் கிறிஸ்தவர்கள் வந்து குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுவார்கள்...* அப்போதும் காவல்துறையும் மற்ற ஊடகத்துறையும் கேடுகெட்ட அவர்களுக்கு வக்காலத்து வாங்கும்.
இது எப்படி இருக்கும் தெரியுமா? ஒருவன் வீட்டில் திருடன் நுழைந்து திருடி விட்டான் திருடன் யார் என்று மக்களும் பிடித்துக் கொடுத்து விட்டனர், *ஆனால் காவல் துறை கேட்கும் நீ ஏன் திருடன் வந்து திருடும் அளவிற்கு உன் வீட்டில் பொருட்களை வைத்திருக்கிறாய். என்று கேட்கும்.*
இது எப்படி தெரியுமா (ஒருவன் தவறு செய்ததைவிட தவறு செய்ய தூண்டியவனுக்கு அதிக தண்டனை என்ற சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை நியாயமாக பேசி சட்டம் தன் கடமையை செய்யும்) *😁அதற்கு என்ன பதில் சொல்லும் இந்த இந்து சமூகம்? யோசியுங்கள் இந்து மக்களே! மாற்றத்திற்கான நேரம் சிந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது!!!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard