Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ்த் தொகை அழகு


Guru

Status: Offline
Posts: 7602
Date:
தமிழ்த் தொகை அழகு
Permalink  
 


தமிழ்த் தொகை அழகு

 
தமிழ்த் தொகை அழகு
ஒருமை - இறையுணர்வு
மலைநாட்டு சிவாலயம் - திருவஞ்சைக்களம்

இரண்டு
அயனம் - தட்சணாயனம், உத்ராயனம்
அறம் - இல்லறம், துறவறம்
ஆன்மா - ஜீவான்மா, பரமான்மா
இடம் - செய்யுளிடம், வழக்கிடம்
இதிகாசம் - பாரதம், இராமாயணம்
முதுகுரவர் - தாய், தந்தை
இருமை - இம்மை, மருமை
உலகம் - இகலோகம், பரலோகம்
எச்சம் - பெயரெச்சம், வினையெச்சம்
எழுத்து - உயிரெழுத்து, மெய்யெழுத்து
கலை - சூரியகலை, சந்திரகலை
கந்தம் - நற்கந்தம், துர்கந்தம்
கிரகணம் - சூரிய கிரகணம், சந்திரகிரகணம்
சுடர் - சூரியன், சந்திரன்
திணை - உயர்திணை, அஃறிணை
போது - பகல், இரவு
மரபு - தாய் மரபு, தந்தை மரபு
வினை - நல்வினை, தீவினை

மூன்று
அரசர் - சேர, சோழ, பாண்டியர்
இடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
உயிரிலுள்ள b - உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ
உலகம் - பூலோகம், பரலோகம், பாதாளம்
கடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி
காலம் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு
குணம் - சாத்வீகம், இராஜசகுணம், தாமச குணம்
குற்றம் - காமம், வெகுளி, மயக்கம்
சக்தி - இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி
சாத்திரம் - சாங்கியம், பதஞ்சலியம், வேதாந்தம்
சீவதேகம் - தூலம், சூக்குமம், காரணம்
சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி
தமிழ் - இயல், இசை, நாடகம்
b - அகவனீயம், தக்கிணாக்கிளீயம், காருகபத்யம்
தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல்
நூல் - முதல், வழி, சார்பு
பொறி - மனம், வாக்கு, காயம்
மலம் - ஆணவம்மலம், கன்மமலம், மாயாமலம்
முக்கனி - மா, பலா, வாழை
பொருள் - பதி, பசு, பாசம்.
நான்கு
அரண் - மலை, காடு, மதில், கடல்
அளவு - எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்
அழகை - இளிவு, இழவு, அசைவு, வறுமை
ஆச்சிரமம் - பிரமசரியம், இல்வாழ்க்கை, வானப்பிரத்தம், சந்நியாசம்
இழிச்சொல் - குறளை, பொள், கடுஞ்சொல், பயனில் சொல்
உண்டி - உண்டல், தின்னல், நக்கல், பருகல்
உபாயம் - சாமம், தானம், பேதம், தண்டம்
உரை - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை
கதி - தேவகதி, மக்கள்கதி, விலங்குகதி, நாகர்கதி
கணக்குவகை - தொகை, பிரிவு, பெருக்கு, கழிவு
கவிகள் - ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி
சதுரங்கம் - தேர், கரி, பரி, காலாள்
சொல்வகை - பெயர், வினை, இடை, உரி
தோற்றம் - பை, முட்டை, நிலம், வியர்வை
நிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி
பதவி - சாலோகம், சாமீபம், சாருபம், சாயுச்சியம்
பா - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
பூ - கொடிப்பூ, கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதர்ப்பூ
பொருள் - அறம், பொருள், இன்பம், வீடு
பொன்வகை - ஆடகம், கிளிச்சிறை, சாதகம், சாம்பூநதம்
பெண் குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
மார்க்கம் - சரியை, கிரியை, யோகம், ஞானம்
யுகங்கள் - கிரிதம், திரேதம், துவாபரம், கலியுகம்
ஐந்து
அகிற்கூட்டு - சந்தனம், கற்பூரம், எரிகாசு, தேன், ஏலம்
அங்கம் - FF, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்
அரசர்க்குழு - மந்திரி, புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர்
அவத்தை - சாக்கிரம், சொப்பனம், துருத்தி, துரியம், துரியாதீதம்
இலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஈஸ்வரன்முகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம்
உலோகம் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்
ஐங்காயம் - கடுகு, ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்
ஐம்புலநுகர்ச்சியில்
இறப்பன - மீன், வண்டு, யானை, அகணம், விட்டில்
கன்னிகை - அகலிகை, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி
குரவர் - அரசன், உபாத்தியாயன், தந்தை, தேசிகன், மூத்தோன்
குற்றம் - கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, மூச்சிடல், அலமரல்
சத்தி - இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞானசத்தி, பராசத்தி, ஆதிசத்தி
திருமால் ஆயுதம் - சக்கரம், தனு, வாள், தண்டு, சங்கம்
தேவர் - பிரமன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்
புலன் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்
யாகம் - பிரமம், தெய்வம், பூதம், பிதிர், மானுடம்
வண்ணம் - வெண்மை, கருமை, செம்மை, பசுமை
வாசம் - இலவங்கம், ஏலம, கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம்
விரை - கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம்
சுத்தி - ஆன்மசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி
முடிஅழகு - கொண்டை, பனிச்சை, குழல், முடி, சுருள்


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

ஆறு
அங்கம் - படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்
அந்தணர் தொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
ஆதாரம் - மூலம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை
உட்பகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்
சக்கரவர்த்திகள் - அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புருகுச்சன், புரூரவன், கார்த்தவீரியன்
சுவை, - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கைப்பு
தானை - தேர், பரி, கரி, ஆள், வேல், வில்
பருவகாலம் - கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
ஏழு
அகத்தினை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை,
பெருந்திணை
இசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
இடைஏழு
வள்ளல்கள் - அக்குறன், சந்திமான், அந்திமான், சிசுபாலன்,
தந்த வக்கிரன், கர்ணன், சந்தன்
உலகம் - பூலோகம், புவலோகம், மகாலோகம், சனலோகம்,
தவலோகம், சத்தியலோகம்
கடல் - உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன்
கடைஏழு
வள்ளல்கள் - எழினி, ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன், மலையன்
உலோகம் - செம்பொன், வெண்பொன், இரும்பு, ஈயம், வெங்கலம், தரா
முதல் ஏழு
வள்ளல்கள் - குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி
கீழ்ஏழ் உலகம் - அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்
சப்தவிடத்தலம் - திருவாரூர், நாகப்பட்டினணம், திருநள்ளாறு, திருமறைக்காடு, திருக்காறாயில் திருவாய்மூர், திருக்குவளை
சீரஞ்சீவியர் - அசுவத்தாமன், மகாபலி, வியாசன், அனுமான், வீடணன், மார்க்கண்டன், பரசுராமன்
நதி - கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, குமரி, கோதாவரி
தாதுக்கள் - இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்
தாளம் - துருவம், மட்டியல், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம்,
ஏகதாளம்
பாதகம் - ஆங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப்பிரியம், காய்தல், சோம்பல்
பிறப்பு - தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, நிற்பன
மோட்ச புரி - காஞ்சி, காசி, அவந்திகை, துவாரகை, மதுரை, அயோத்தி,மாயை
பெண்கள் பருவம் - பேதை, பெதும்மை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,
பேரிளம்பெண்
மண்டலம் - வாயு, வருணன், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்னி, திரிசங்கு
மாதர் - அபிராபி, மகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி
முனிவர் - அத்திரி, குச்சன், கௌதமன், பிருகு, காசிபன், அங்கிரா, வசிட்டன்
வித்யா தத்துவம் - காலம், நியதிகலை, வித்தை, கிராகம், புருடன், மாயை
எட்டு
அட்டவீரட்டம் - கண்டியூர், திருக்கடவூர், திருஅதிகை, வழுவூர், திருப்பறியலூர், திருக்கோவலூர், திருக்குறுக்கை, திருவிற்குடி
அளவை - காட்சி, அனுமானம், ஆகமம், அருத்தாபத்தி, உபமானம்,
அபாவம், சம்பவம், ஐதீகம்
அஷ்டபந்தனம் - சுக்கான்கல், ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமைவெண்ணெய், குங்கிலியம், நற்காவி, கொம்பரக்கு
எட்டுத்தொகை - நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
எண்சுவைத்தமிழ் - சிங்காரம், வீரியம், பெருநகை, கருணை, ரவுத்திரம், குற்சை, அற்புதம், பயம்
எண்வகைவிடை - சுட்டு, மறை, நேர், ஏவல், வினா, உற்றுதுரைத்தல், உறுவதுகூறல், இனமொழி
ஐஸ்வரியம் - தனம், தானியம், GF, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம்
சித்தி - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி, பிராகமியம், வசித்துவம்
மெய்ப்பாடு - நகை, அழுகை, அச்சம், இளிவரல், மருட்கை, பெருமிதம்,
வெகுளி, உவகை


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

ஒன்பது
நவ GF - சங்கம்பதுமம்மகாபதுமம்மகரம்கச்சபம்முகுந்தம்குந்தம்நீலம்வரம்
ராட்சதகணம் - கார்த்திகைஅயில்யம்மகம்சித்திரைவிசாகம்கேட்டம்,
மூலம்அவிட்டம்சதயம்
நவமணி - கோமேதகம்நீலம்பவளம்புஷ்பராகம்வைடூரியம்மரகதம்மாணிக்கம்முத்துவைரம்,

ஒரெழுத்து ஒருமொழி
ஆ - பசுகோ - தலைவன்ஈ - கொடுபூ - மலர்,
நா - நாக்குகா - காப்பாற்றுமா - பெரியஐ - சளி,
சா - மடிசே - எருதுபா - பாடல்கை - கரம்தை - மாதம்


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 


 

கீதை,சம்ஸ்கிருதம்,ஸ்மிருதிகள்

அன்புள்ள ஜெ,

கீதை குறித்தக் கட்டுரையைப் படித்தேன். ஒரு புறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வேதனையும் வந்தது. என்னுடைய காலம் காலமான நம்பிக்கைகளை, மற்றும் புரிதல்களையும்,  தத்துவார்த்தமாக எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியது மகிழ்ச்சி. ஆனால்,  மாபெரும் முதிர்வுத் தத்துவங்களுக்கு அரிச்சுவடி நிலையில் இருந்து ஆரம்பித்து மறுப்பு தெரிவிக்கும் எழுத்துக்களுக்கு எல்லாம் நீங்கள் விளக்கம் கொடுக்க நேர்ந்தது வேதனை.

எந்த ஒரு அதீதமான நுகர்ச்சியையும் நம் நாட்டில் ‘apologetic’  ஆகவே கருதுவதை நான் சிறு வயதில் இருந்தே பார்க்கிறேன். நவீன வாதம் என்பது இதற்கு எதிரானது- இந்த மாதிரி சுய அடக்கம் எல்லாம் தேவையில்லை என்று யாராவது வாதிட்டால், பதட்டத்தில் என் நாக்கு அடங்கி விடும். பதிலே வராது. சமீபத்தில் ந்யூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஞாயிறு மலரில் மன நல அறிவுரை (கவுன்சிலிங்)  ஒன்றில் ஒரு பெண் மருத்துவர், அடிக்கடி சுய இன்பம் அனுபவிக்க அந்த கேட்டப் பெண்ணுக்கு அறிவுரை கூறினார். தாழ்வு மனப்பான்மையை இது தகர்க்கும என்று வேறு சொன்னார்.

ஆசை ஒரு பெருந்தீனிக்காரன் என்று கண்ணன் சொன்னதை நாம் எந்த தளத்தில் இருந்து விளக்க முடியும்?  “இல்லையே ! அதோ பார் வெள்ளையர் சமுகத்தை. அவர்கள் தீனி, குடி, பெண் என்று அனைத்திலும் பெரும் நாட்டம் உடையவராக இருந்தும் அவர்கள் நிம்மதியாய்த் தானே உள்ளனர்?” என்று பதில் கேள்வி வந்தால் நம் பதில்கள் சப்பையாகவேப் போய் விடும்.

இந்த நிலையில் உங்களது கட்டுரை ஒரு கலங்கரை விளக்கம். தமிழில் இது போல நிறையத் தேவை.

வேங்கடசுப்ரமணியன்

அன்புள்ள வேங்கடசுப்ரமணியம்,

நம் சூழல், பல்லாயிரம் வருடம் தத்துவ விவாத மரபுள்ள சூழல் அல்ல. அது நடுவே அறுபட்டு விட்டது. இன்றுள்ளது வேறு. இது பத்தொன்பதாம் நூற்றாண்டு வெள்ளையர்களால் உருவாக்கப் பட்டது. இந்த மரபை நாம் இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவில்லை. விவாதத்திற்கு நமக்கு உள்ள மரபை [நியாயம், மீமாம்சம்] நாம் அறியோம். மேலை மரபை [கிரேக்க தர்க்கவியல்] நாம் கற்கவில்லை

ஆக எல்லாவற்றையும் ஆதியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இன்று விவாதம் மூலம் உண்மையை நெருங்குவ்தல்ல, விவாதக் களத்தை உருவாக்குவதே முதல் சவாலாக உள்ளது

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 அன்புள்ள ஜெ!

நலமா..! மிக சமீபத்தில் நீங்கள் எழுதிய தாய்மொழி, செம்மொழி வாசித்தேன். எனக்குச் சில சந்தேகங்கள். நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட விதிகளில் ஒன்றான “மொழி இன்னொரு மொழியில் இருந்து பிரிந்து, வளர்ந்து உருவானதாக இருக்கலாகாது. அதற்கான சொற்களஞ்சியம் மூலத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்” என்கிற விதி சம்ஸ்கிருதத்திற்கு முற்றாக பொருந்துமா..! பழைய பாலி, பிராகிருத மொழிகளின் சொற்களஞ்சியத்தில் இருந்து பெறப் பட்டதல்லவா சமஸ்கிருதத்தின் சொற்களஞ்சியம்? விளக்கவும்

அன்புடன்
சக்திவேல் சென்னை

அன்புள்ள சக்திவேல்,

நான் அறிந்தவரை சம்ஸ்கிருதம் மூல மொழியே. அதன் இலக்கியம், சொற்களஞ்சியம் இரண்டும் அசலானவை. சம்ஸ்கிருதம் இன்றைய முழு மொழியாவதற்கு முன்னால் ஒரு உரை வடிவம் [டைலக்ட்] மட்டுமாக இருந்த நிலையில் இயற்றப் பட்ட ரிக்வேதம் நமக்கு இன்று கிடைக்கிறது.  உலகச் செம்மொழிகளில் கிடைக்கும் மிகத் தொன்மையான மூலநூல்களில் ஒன்று ரிக்வேதம்.

சம்ஸ்கிருதத்தில் பின்னாளில் உருவான  இலக்கணங்களோ, சொற்களோ இல்லாத அதிபுராதனமான மொழி ரிக் வேதத்தில் உள்ளது. அதன் பழைய பாடல்களில் எழுவாய், பயனிலை அமைப்பு கூட உருவாகியிருக்கவில்லை என மோனியர் வில்லியம்ஸ் சொல்கிறார். அதில் ஒரே சொல் பல அர்த்தங்களில் பயன்படுத்தப் படுகிறது. பல சொற்களுக்கு வேர்ச் சொல் மட்டுமே உள்ளது. ஒரு மொழி குழந்தையாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி அது உள்ளது.

உதாரணமாக சங்க இலக்கிய காலகட்டத்து தமிழ் மொழியில் செய்வினை,செயப்பாட்டு வினை பிரிவினை இல்லை. கொன்ற, கொல்லப் பட்ட இரண்டுமே கொன்ற என்றே சொல்லப் படும். பின்னாளில் அது உருவாகி வந்தது. இவ்வாறு தமிழுக்கு மூன்று அடுக்குகள் உள்ளன. நவீனத் தமிழ், சங்க காலம் வரையிலான தமிழ், சங்க காலத் தமிழ் என பிரித்துச் சொல்லலாம். அதே போல சம்ஸ்கிருதத்திற்கு குறைந்தது ஐந்து அடுக்குகள் உள்ளன. ரிக் வேதம் ஆகக் கடைசியில் உள்ள ஐந்தாவது அடுக்கைச் சேர்ந்தது.

அந்த ஐந்தாவது அடித்தளத்தில் இருந்து பின்னாளைய சம்ஸ்கிருதம் உருவாகி வந்தது.  அந்த தொல்மொழியில் இருந்து எழுந்து பின்னர் முறைப் படுத்தப் பட்ட மொழியை இலக்கண ஆசிரியர்கள் செம்மையாகச் செய்யப் பட்டது என்ற பொருளில் சம்ஸ்கிருதம் என்று பெயர்ச் சூட்டிக் குறிப்பிட்டனர். அவ்வாறு செம்மை செய்யப் படாமல் அப்படியே பல இடங்களில் புழங்கிய மொழியே பிராகிருதம். பிராகிருதத்திற்கும் புராதன சித்தியன், முண்டா துணை மொழிகளுக்குமான ஊடாட்டத்தில் பிறந்தது பாலி. இம்மூன்று மொழிகளில் இருந்தும் கிளைத்த மொழிகள் அபப்பிரம்ஸ மொழிகள் எனப் பட்டன.

தமிழில் சம்ஸ்கிருதம் பற்றி நிறைய அரைவேக்காட்டுத்தனங்கள் வெறும் மொழிக் காழ்ப்பினால் எழுதப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்றே சம்ஸ்கிருதம் என்று பெயர் இருப்பதனால் அது பழைய மொழி இல்லை, பிற மொழிகளில் இருந்து பின்னாளில் உருவாக்கப் பட்டது என்பது. சமீபத்தி ல்கூட ஒருவர் எச்சில்தெறிக்க மக்கள் டிவியில் கத்திக் கொண்டிருந்தார்.   அவற்றை நம்பி வாசிக்கும் போது நாம், நம் வரலாற்றுணர்வை இழக்கிறோம். இந்த விஷயங்களெல்லாம் சாதாரணமாக எவரும் வாசிக்கக் கூடிய நூல்களில் கிடைப்பனவே.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 அன்பிற்கினிய ஜெ,

“இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்” படித்து கொண்டிருந்த போது சில கேள்விகள் எழுந்தன.

நம்மிடையே உள்ள கலாச்சார  ஒழுக்க விதிகளுக்கும் ஞானத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா?  அப்படியென்றால் முக்காலத்திற்கும் சாஸ்வதமாக ஒழுக்க விதிகள் உள்ளதா? ஞானிகளுக்கு எல்லாம் ஒன்று என்று அறிந்துள்ளேன். அப்படி என்றால் விதி மீறல்கள் குற்றங்கள் என வகுக்கப் பட்டுள்ளவை அனைத்தும் ஒரு தரிசனத்தில் காணாமல் போய் விடுமா? கட்டுக் கோப்பான வாழ்க்கைக்கு அர்த்தம் கிடையாதா? விளக்கம் தேவை.

கண்ணன் கெ கெ

*

அன்புள்ள கண்ணன்,

இந்த விஷயத்தில் நான் என் ஆசிரியர்களின் கூற்றையே என் கூற்றாகக் கொள்கிறேன்

பெருமதங்கள் உறுதியான கட்டுப்பாட்டால் நிலை நிறுத்தப் படுபவை. ஆகவே அவை மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே ஒழுக்க நெறிகளையும் ஆக்கி விடுகின்றன. சைவம், வைணவம் ஆகியவை ஒழுக்கத்தை ஆன்மீகத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகவே காண்கின்றன. பௌத்தமும், சமணமும், கிறித்தவமும் அப்படியே. குர் ஆன் என்பது நான் அறிந்தவரை ’செய்-செய்யாதே’க்கள் அடங்கிய ஒரு நெறி நூல்.

ஆனால் இந்திய ஞான மரபை பார்த்தால் ஒரு பிரிவினை உள்ளது ஸ்மிருதிகள்- ஸ்ருதிகள்.  நெறிநூல்கள், ஞானநூல்கள் என தமிழாக்கம் செய்யலாம். ஸ்மிருதிகள் காலம் தோறும் மாறக் கூடியவை என்றும் அவற்றை மாறியாக வேண்டும் என்றும் அவை ஞானத்துக்கான வழிகாட்டுதல்களோ, நிபந்தனைகளோ அல்ல என்றும் நம் மரபு கூறுகிறது. சுருதிகள் என்றும் அழியா விவேகங்களையும், மெய்ஞானத்தையும் பேசக்கூடியவை. ஆகவே அவை மாற்றமில்லாதவை.

நம் மரபில் பல ஸ்மிருதிகள் உள்ளன. நாரத ஸ்மிருதி, யம ஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி, சங்கர ஸ்மிருதி என. அவற்றில் ஒன்றே மனு ஸ்மிருதி. எந்த ஸ்மிருதியும், ஒரு காலத்திலும் இந்து மரபு முழுமைக்கும், விதியாக இருந்ததில்லை.  இடத்துக்கு ஒரு ஸ்மிருதி இருந்துள்ளது. காலத்துக்கு ஒரு ஸ்மிருதி மாறியுள்ளது.

ஆகவே ஞான நூல்கள் செய்-செய்யாதே என்ற கட்டளைகளை இடுவதில்லை. அவை பிரபஞ்சம், மனிதன், பிரபஞ்ச காரணம் குறித்த அடிப்படை வினாக்களை எழுப்பி அவற்றை விவாதிக்கின்றன, வழி காட்டுகின்றன. கற்பனை, அறிவு, தியானம் மூலம் நாம் முழுமை நோக்கிச் செல்ல வழி காட்டுகின்றன.

இந்தப் பிரிவினையை பௌத்த மெய்ஞானத்திலும் காணலாம். சுத்த பிடகம், வினய பிடகம் என அது பௌத்த உபதேசங்களை பிரிக்கிறது. தூய கூடை, பண்வின் கூடை என தமிழாக்கம். தூய கூடை தூய மெய் ஞானம் பற்றியது.  பண்வின் கூடை நடத்தை நெறிகள் பற்றியது. வினய பிடகம் பௌத்தநெறிகளில் எப்போதும் இரண்டாம் தரத்திலேயே வைக்கப் பட்டது

ஆகவே இந்திய மெய்ஞான மரபை பொறுத்தவரை ஒழுக்க நெறிகள் மட்டும் அல்ல அறநெறிகளும் கூட கால-இட எல்லைக்கு உட்பட்டவை. நிரந்தரம் அற்றவை. மெய் ஞானம் கால, இட அடையாளம் அற்றது. அழிவற்றது, மாற்றமற்றது.

ஞானிகள் மெய்ஞானத்தின் முழுமை நிலையில் நின்று கீழே பார்க்கிறார்கள். நாம் பிள்ளைகள் விளையாடுவதை பார்க்கிறோம். அவர்கள் செய்யும் பிழைகள் எல்லாம் நமக்கு பிரியத்துக்குரியச் சின்ன விஷயங்களாகவேப் படுகின்றன. நம் வாழ்க்கையை ஞானிகள் பிள்ளை விளையாட்டாகவேப் பார்க்கிறார்கள். நம்முடைய பிழைகளும், மீறல்களும் எல்லாமே அவர்களுக்கு ஒரு பொருட்டாக படுவதில்லை

கட்டுக் கோப்பான வாழ்க்கை என்பது ஒரு சூழலில் நாம், நம் அகத் திறன் சிதறிப் போகாமல் திரளவும், நம் செய்கையால் பிறரது வாழ்க்கையில் தீங்கு விளையாமல் இருக்கவும், நாம் மேலான சமூகமாக ஒருங்கு திரண்டு வாழவும் தேவையான நெறிகளால் ஆனது. அது அவசியம். அதில் இருந்தே நாம் அடுத்த படிகளில் ஏற முடியும். ஆனால் ஏறும் படிகள் முழுக்க அதனால் ஆனது அல்ல.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் யோகம் செய்வதற்கான ஆரம்பக் கட்ட நிலைகளில் யமம்-நியமம் என்று சொல்லப் படுகிறது. அகம் சார் கட்டுப்பாடுகள், உடல் சார் கட்டுப்பாடுகள். அவை யோகத்துக்கான அகத் திறனையும் உடல்த் திறனையும் வளர்க்கும். ஆனால் யோகம் அறியத் தரும் ஞானம் என்பது அந்த ஒழுக்கத்தாலானதல்ல.

ஜெ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard