ஒரு பெரியவர் எல்லாப் பற்றுக்களையும் விட்டுக் காட்டுக்குப் போய்த் தனியாக வாழலாம் என்று எண்ணினர். ஊருக்கு கெடுந்துாரத்தில் இருந்த காட் டுக்குச் சென்று ஒரு குடிசை கட்டிக்கொண்டு, கிடைத்த பழம் கிழங்கு முதலியவற்றை உண்டு வாழலானர். அங்கே போன சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார். பின்பு அவரைத் தேடிக்கொண்டு மக்கள் வரத் தலைப்பட்டார்கள். அவர்களுடன் இனிமை யாகப் பேசி வழியனுப்பினர் பெரியவர். தம்மிடம் இருந்த பழங்களைச் சிலருக்குக் கொடுத்தார். வருகிற வர்கள் எல்லோருக்கும் அப்படிக் கொடுக்க முடியுமா?
ஒரு நாள் அவர் யோசனையில் ஆழ்ந்தார். தம்மை நாடி வருகிறவர்களுக்கு ஏதாவது கொடுக்காமல் சும்மர் இருப்பது அவருக்குச் சரியாகப்படவில்லை. எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமென்ருல் அவரால் முடியாது. இந்தச் சிக்கலைத் தீர்க்க வழி யாதென்று ஆராய்ந்தார். இறுதியில் ஒர் எண்ணம் எழுந்தது. அந்த நாட்டை ஆண்டு வந்த அரசன் நல்லவன்; பெரியவர்களிடம் மதிப்புடையவன். அவனைக் கண்டு தம் நிலையைக் கூறி, வருவோர் போவோருக்கு ஏதேனும் அளித்து உபசரிப்பதற்கு வேண்டிய பொருளேத் தரவேண்டுமென்று கேட்டால், அவன் வழங்குவான் என்று எண்ணினர்.
அரசனே நாடிப் பெரியவர் சென்ருர்; அவன் அரண் மனேயுட் புகுந்தார். அரசன் எங்கே என்று கேட்டபோது பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னர்கள். பெரிய வர் அரசன் இருக்குமிடம் சென்று ஒரு மூலையில் கின்று கவனித்தார். அப்பொழுதுதான் அவன் இறைவனிடம் தன் வேண்டுகோளேச் சொல்லிக்கொண்டிருந்தான்; "எல்லாம் வல்ல பெருமானே, எளியேன் ஏழை; இந்நாட்டைக் காக்கும் பொறுப்பை எனக்கு வழங்கி யிருக்கிருய். அதற்கு ஏற்ற செல்வத்தையும் ஆற்றலேயும் எனக்கு அருள வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான். -
இது பெரியவருடைய காதில் விழுந்தது. அவருக்குப் பெரு வியப்பு உண்டாயிற்று. அட! இது என்ன ஆச்சரியம்! நாம் ஏழை, இவனிடம் பொருள் வாங்கலாம் என்று வந்தால், இவனும் தன்னே ஏழை என்று சொல்லி வேறு ஒருவரிடம் இரக்கிருனே! அவரிடம் இவன் இரந்து நமக்குத் தருவதைப் பெருமல், நாமே அந்தப் பரம்பொருளே நேரே அணுகி வேண்டியதைப் பெறலாமே? என்ற எண்ணம் தோன்றவே, அவர் பேசாமல் காட்டை நோக்கி நடந்தார்.
இவ்வாறு ஒரு கதையை இராமகிருஷ்ண பரம ஹம்ஸர் சொல்லியிருக்கிருர். நமக்குக் குறை இருக் கிறது என்று எண்ணி வேறு ஒருவரை நாடினல், அவரும் குறையுள்ளவராகவே இருக்கிருர். இதுதான் உலக இயல்பு. இந்த உண்மையையே அந்தக் கதை புலப் படுத்துகிறது.
நூறு ரூபாய் சம்பளம் உடையவனுக்குப் பத்து ரூபாய் பற்ருக்குறை உண்டானுல் அவன் ஆயிர ரூபாய் சம்பளம் உடையவனே அணுகிக் கேட்கிருன். ஆயிர ரூபாய் சம்பளக்காரன் பத்து ரூபாய் தந்து விடுவான்; ஆனால் அவனே தன்னேவிடப் பணக்காரனிடம் சென்று தன் பற்ருக்குறையாகிய நூறு ரூபாயைக் கடனுகக் கேட்கிருன். இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ் வேறு வகையில் வெவ்வேறு அளவில் குறை இருந்து வருகிறது. அந்தக் குறையை நீக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. கவலே கொண்டவர்க ளாகிருர்கள்.
பற்ருக்குறையினல் மட்டுமா கவலை உண்டாகிறது? எத்தனையோ விதங்களில் மனிதன் கவலைக்கு ஆளாகிருன். அந்தக் கவலே நீங்க வேண்டுமானுல் அவனுடைய குறைகள் தீரவேண்டும். குறை உடையவன் ஒருவல்ை பிற னுடைய குறையைத் தீர்க்க முடியாது. ஏதோ ஒரு சமயத்தில் ஒரளவில் தீர்க்கலாம். மறுபடி குறை உண் டாகும். குறைவே இல்லாத ஒருவன் பிறனுடைய குறையை நீக்கப் புகுந்தால் முற்றும் நீங்கும். அத்தகைய வன் இறைவன் ஒருவன்தான்.
'குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே'
என்பது திருவாசகம்.
இறைவன் பரிபூரணன்; நிறைவுடையவன்; வேண்டி யவற்றைக் குறைவின்றித் தருபவன். அவனைப் போன்ற வள்ளல் உலகில் யாரும் இருக்க இயலாது. எவ்வளவு சிறந்த வள்ளலாக இருந்தாலும் எப்போதும் எல்லாருக்கும் எல்லாவ்ற்றையும் கொடுப்பதென்பது இயலாது. பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் ஒரு சேர அரசனுடைய வண் மையைப்பற்றி ஒரு புலவர் சொல்கிருர். அவன், "நாம் இதைக் கொடுத்துவிட்டோமே, சிறிது குறைவாகக் கொடுத்திருக்கலாமே' என்று, கொடுத்ததற்காக இரங்க மாட்டாளும். அதைவிடப் பெரிய இயல்பு ஒன்று அவனிடம் உண்டு. இந்த இரவலனுக்கு நாம் கொடுத்தோம்; இது நல்ல காரியம்’ என்று மகிழமாட்டாம்ை. அதையும்விடப் பின்னும் சிறந்த பண்பு அவனிடம் ஒன்று இருந்ததாம். ஒருவன் அவனிடம் வந்து இரந்து பொருள் பெறுகிருன். காலேயில் பெற்றவன் மாலேயில் திரும்பி வருகிருன். அப்போது வள்ளல், காலையில்தானே வாங்கிய்ை? என்று சொல்வது இயல்பு. அப்படிச் சொன்னுல், அவ னளவில் அப்போது இல்லை என்று சொன்னதற்கு ஒப்பானதே அது. சேர மன்னன் அப்படிச் சொல்ல மாட்டானும், எத்தனே முறை வந்தாலும் வண்மையுடைய வகை, முன் வாங்கியதை எண்ணி மறுக்காதவனுக இருப் பானும். இந்த மூன்று பண்பையும் புலவர் சொல்லுகிருர்;
'ஈத்தது இரங்கான்: ஈத்தொறும் மகிழான்;
ஈத்தொறும் மாவள் வளியனே.”
இங்கே, ஈத்தொறும் மாவள்ளியனே' என்ற அடி தான் மிகச் சிறந்த வள்ளன்மையைக் காட்டுகிறது. அந்த வண்மைக்குக்கூட எல்லே. உண்டு.
கர்ணன் ஒரு நாளின் முற்பாதியில்தான் கொடை வழங்குவான் என்று சொல்வார்கள். எப்போதும் அள வின்றி வழங்கும் ஆற்றலே மக்களிடம் காணல் இயலாது; ஏனெனில் மக்கள் யாவரும் குறைந்த ஆற்றலுடைய வர்களே. -
இறைவனே வரம்பில்லாத ஆற்றலுடையவன். எல்லாப் பொருளேயும் உடையவன்; குறைவிலா நிறைவுடையவன். அவனே கொடையில் யாவரினும் சிறந்த வகை இருக்க முடியும்.
இதை அருணகிரிநாதர் திருப்புகழில் சொல்கிரு.ர்.
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
வேண்ட வெருதுதவு பெருமாளே!”
அடியவர்கள் தமக்கு இன்னது வேண்டுமென்று வேண்டுகிருர்கள். அடுத்தடுத்து வேண்டுகிருர்கள். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்றை வேண்டு கிருர்கள். மடைப் பள்ளியிலே தண்ணிர்க்குழாய் இருந் தால், பாத்திரத்தில் பூரித்து வைக்கவேண்டிய அவசிய மின்றி வேண்டிய போதெல்லாம் குழாயைத் திருகித் தண்ணிர் பெறலாம். அதுபோல அடியவர்கள் தங்களுக்கு இவை வேண்டுமென்று வரையறையாக முன்கூட்டியே தொகுத்துச் சொல்லாமல், அவ்வப்போது வேண்டியதைக் கேட்டாலும் வழங்குவான் இறைவன். நச்சுகச்சென்று கேட்டால் எவ்வளவு பணக்காரனுக இருந்தாலும் சலிப் புண்டாகும் தன்னுடைய புதல்வனேயானுலும், 'முன்பே ஒருமிக்க வாங்கி வைத்துக்கொள்வதுதானே?’ என்று தான் சொல்லத் தோன்றும். இறைவனுே அப்படிச் சலித்துக்கொள்வ தில்லையாம். அடியார்கள் வேண்ட வேண்ட வெறுப்புருமல் வேண்டியவற்றைத் தருவானும். வேண்ட வெருது உதவு பெருமாளே! என்பதில் இவன் கேட்கிருனே என்ற வெறுப்பைக் குறிக்கவில்லை. ஒரேயடியாகக் கேட்டுத் தொலைக்காமல் கச்சுகச்சென்று கேட்டுப் பிராணனே வாங்குகிருனே! என்ற சலிப்பைத் தான் குறிக்கிருர், அடியார் வேண்டியபோதெல்லாம் அவர்களுக்கு வேண்டிய போகங்களேக் கொடுப்பான்; வேண்ட வேண்ட அலுப்புச் சலிப்பின்றிக் கொடுப்பான். அப்படிக் கொடுக்க உலகில் வேறு யாராலும் இயலாது.
எனவே, தமக்குக் குறை இருப்பதை எண்ணிக் கவலே அடைபவர்கள், இறைவனே அணுகினல் அந்தக் கவலையை மாற்றிக் கொள்ளலாம். கவலை என்னும் புழு உள்ளத்தை அரித்துக்கொண்டே இருந்தால், ஒருவனுக்கு அமைதியே உண்டாகாது. அவனுடைய கல்வி, ஆற்றல் ஆகியனவெல்லாம் பயனின்றி ஒழியும். அவனிடம் இன்பம் இருக்க நியாயம் இல்லே. கவலை இல்லாதவர்களுக்குத்தான் இன்பம் உண்டாகும்.
"ஒயாதோ என் கவலை, உள்ளேஆ னந்தவெள்ளம்
பாயாதோ, வாய்திறந்து பகராய் பராபரமே”
என்று தாயுமானவர் பாடுகிருர். உள்ளே ஆனந்த வெள்ளம் பாய்ந்து நிரம்ப வேண்டுமானுல் கவலை ஒயவேண்டும். குறையுடைய வரைக்கும் கவலை ஒயப் போவதில்லை. குறை தீர்ப்பாரைக் கண்டால் கவலே தீர வழி பிறக்கும். -
இறைவன் ஒருவனே கவலையைத் தீர்ப்பவன் என்ற உண்மையை அறிந்து அவனே நாடவேண்டும். மனத்திலே தோன்றிய கவலையை மாற்ற அந்த மனத்துக்கே மருந்து ஊட்ட வேண்டும்; இறைவனேத் தியானம் செய்ய வேண்டும்.
குறை தீர்க்க வேறு யாரேனும் உள்ளாரோ என்று ஆராய்ந்தால் யாரும் இல்லே என்ற முடிவுக்குத்தான் வர முடியும். இறைவனேப்போல வேறு யாரேனும் இருந்தால் அவரைச் சார்ந்து குறையைப் போக்கிக் கொள்ளலாம். அப்படி யாரும் இல்லை. இறைவன், ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். ஆதலின் அவனே யன்றி வேறு புகல் இல்லை. அவன் தாளேத் தியானித்து மன அமைதி பெறவேண்டும். இவற்றை யெல்லாம் கினேக்கும்படி அமைந்திருக்கிறது பின்வரும் குறள்:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
(தனக்கு ஒப்பாக வேறு யாரும் இல்லாத இறைவனுடைய . திருவடியைத் தியானிப்பவர்களுக்கு அல்லாமல் மனக்கவலேயை நீக்குதல் இயலாது.)
அரிது என்பது இயலாது என்ற பொருளில் வந்தது. :ாண்டு அருமை இன்மைமேல் கின்றது என்பர் பரிமேலழகர். .
இறைவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லா தவன் என்பதைப் பெரியார்கள் பலரும் சொல்லிப் போந்தனர்.
'நின்னெடு, புரையுநர் இல்லாப் புலமையோய்”
என்பது திருமுருகாற்றுப்படை.
"ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா' என்பது திருவாய்மொழி.
உவமையற்றவகை உள்ள ஆண்டவனே உள் ளத்தால் சிந்தித்துக் கவலையைப் போக்கிக் கொண்ட வர்கள், மேலே காட்டிய திருவாக்குகளேச் சொன்ன பெரியவர்கள். . .
女
மனிதன் இன்ப வாழ்வில் வாழவேண்டுமானல் அவனுக்குப் பொன்னும் பொருளும் ஆற்றலும் கல்வியும் உறவினரும் நண்பர்களும் இருந்தால் மட்டும் போதுவதில்லை. அவன் உள்ளம் அமைதி பெற வேண்டும். பொருள் ஏதும் இன்றி மன அமைதியுடன் வாழ்பவர்கள் இன்ப வாழ்வுடையவர்களே. தனக்கு இது வேண்டும் என்ற கினேப்போ, அதுபற்றிய குறையோ இல்லாமல் வாழும் இளங்குழந்தையைப் பாருங்கள். அது எப்போதும் இன்பத்திலே துள்ளிக் கொண்டிருக்கிறது.
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே அல்கா நல்குரவு அவாஎனப் படுமே”
என்பர் குமரகுருபர முனிவர். சிந்தையின் கிறைவை உடையவனே உண்மையான செல்வன்.
அந்த நிற்ைவு, உள்ளத்திலே கிறைவில்லாத குறைந்த பொருளேப்பற்றிய சிந்தனையை உடையாருக்கு உண்டாகாது. குறைவிலா நிறைவான பரம்பொருளே உள்ளத்தில் வைத்தவருக்கு உண்டாகும்.
இறைவனுடைய அடியார்களின் இயல்பைச் சொல்ல வந்த சேக்கிழார் இந்த நிறைந்த வாழ்வைக் காட்டு கிருர்,
அவர்களுடைய திருவுக்குக் கேடு இல்லை; ஆக்கம் இல்லை. போக்கில்லே; வரவில்லை. உலகத்தார் செல்வம் என்று போற்றும் பொன்னேயும், பயனற்றதென்று கருதும் ஒட்டையும் ஒரு கிலேயில் வைத்துப் பார்ப்பார்கள். 'பொன்னும் ஒடும்’ என்ற முறையில் சொன்னல் ஒட்டையும் மதிப்புடையதாகப் பாதுகாப்பார்களோ என்ற ஐயம் உண்டாகலாம். ஆதலின் ஒட்டை மதிக்காதது போலப் பொன்னேயும் புறக்கணிப்பார் என்பதை உணர்த்த, ஒடும் செம்பொனும்’ என்று ஒட்டை முன்னே வைத்தார். இப்படி இருப்பதற்கு அவர்கள்பால் கூடிய அன்பே காரணம். - - - --
இறைவன் திருவடித் தியானம் உடையவர்கள், "எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன்னுடைய செயலே’ என்ற உணர்வுடன் இருப்பார்கள். அதல்ை யாவுமே இறைவனுடைய கொடை என்ற எண்ணம் மிகும். அது காரணமாக,
'நன்றே செய்வாய் பிழைசெய்வாய் கானே இதற்கு நாயகனே' -
என்ற நடுநிலையுணர்வு பிறக்கும். யாவும் இறைவன் அருளால் விளைவன என்ற எண்ணம் முறுக முறுக அவன் அருள்வது இன்பமே என்ற அநுபவமும் உண்டாகும். ஆகவே அவர்கள் குறைவிலா கிறை வாழ்வைப் பெறுவார்கள். -
"நாமார்க்கும் குடியல்லோம்; நமனே அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; கடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோ மல்லோம்;
இன்பமே எங்காளும் துன்பம் இல்லை.
தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழைஒர் காதிற்
கோமாற்கே யாமென்றும் மீளா ஆளாக்
கொய்மலர்ச்சே வடியிணையே குறுகி னுேமே!’’
என்பது அப்பரின் அநுபவ வாக்கு. இறைவனுடைய கொய்மலர்ச் சேவடியிணேயைக் குறுகியதல்ை அவருக்கு இன்பமே எந்நாளும் உண்டாயிற்று; துன்பமே இல்லாத நிறை வாழ்வு அமைந்தது. இறைவனே யாருக்கும் குடியல்லாத தனிநாயகன்; தனக்கு உவமை யில்லாதவன்; அவனுக்கு மிக்க தலைவனும் இல்லை; அவனே தனித் தலைவன்.
மனிதன் குறையுடையவன். அந்தக் குறையை உலகியற் பொருளேத் தேடியும், அவற்றைத் தருவாரை நாடியும் நிரப்பிக் கொள்ள முடியாது. காலதேச எல்லைக்குள் அடங்கிய ஆற்றல், செல்வம், அறிவு முதலிய வற்றை உடைய மனிதன் தன்னைப்போலவே எல்லேக்குள் , அகப்பட்டவனல் கிறைவு பெற முடியாது. ஆதலின் எல்லேயிறந்த ஒருவனே அடைந்தால் நிறைவு உண்டாகும். அப்படி இருப்பவன் ஒருவன்தான், அவனே இறைவன்.
மனக்கவலை தீர்ந்து நிறைவு பெற வேண்டுமானல் அந்த மனத்திலே இறைவன் திருவடியை நினைக்க வேண்டும். இல்லையானல் வேறு எந்த வகையிலுைம் மனக்கவலே தீராது.-இந்தக் கருத்துக்களேயே,