தாழ்த்தப்பட்டவர் சரித்திரம் http://maruppukalam.blogspot.com/2013/06/blog-post_10.html?m=1
தமிழ் இலக்கிய வரலாற்றின் துவக்க காலத்தில் இருப்பது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் அகத்திணையியல், மரபியல் இரண்டும் ஜாதி அமைப்புக் குறித்த சில செய்திகளைத் தெரிவிக்கின்றன. பிரிவு பற்றிப் பேச வந்த அகத்திணையியல் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவினரைச் சுட்டுகின்றது. இந்நால்வரும் "ஏவல் மரபினர்" (தொல் அகத்திணையியல்.26) என்றும் குறிக்கப்படுகின்றனர். அதாவது "பிறரை ஏவிக்கொள்ளும் தொழில் தமக்குளதாகிய தன்மையை உடையவர்கள்" என்று இதற்கு நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். இதிலிருந்து நான்கு குலத்தினரின் ஏவலுக்குக் கீழ்ப்பட்டுக் குற்றேவல் செய்த ஒரு பிரிவினர் சமுதாயத்தில் இருந்தனர் என்பது புலனாகிறது. அவர் யார்?
மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவினர்்ான மரபும் தொழிலும் வரையறுத்த மரபியல், அதனை அடுத்து, `அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை' (தொல்.மரபியல்:84) என்கிறது. இங்கு `இழிந்தோர் என்பதற்கு "நான்கு குலத்தினும் இழிந்த மாந்தர்" என இளம்பூரணர் உரை எழுதுகிறார். இந்த இழிந்த மக்கள் யார்?
நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்களைப் பற்றிக் கூறிய பிறகு, அதன் புறத்தவாகிய கைக்கிளை, பெருந்~ திணைக்குரிய மக்களைப் பற்றி அகத்திணையியலில் பேசப்படுகிறது. "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரையில புறத்து என்மனார் புலவர்"
இதை முன்னெழுப்பிய இரு கேள்விகளுக்கான ஐயங்களுக்~ கான விடையாகக் கொள்வோம். இங்கு அடியோர் என்பவரைப் பிறருக்குக் குற்றவேல் செய்வோர் ' எனவும், வினை~ வலர் என்பவரைப் `பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோர் எனவும் நச்சினார்க்கினியர் விளக்கி உரைக்கிறார். இவர்கள் ஏன் அதனைந்திணைக்கு உரியர் அல்லர் என்பதற்கு இளம்பூரணர் நீண்டதொரு விளக்கம் தருகிறார்; அகத்திணையாவன அறத்தின் வழாமலும், பொருளின் வழாமலும், இன்பத்தின் வழாமலும் இயலல்வேண்டும். அவையெல்லாம் பிறருக்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும் அவர் நாணுக்குறைபாடு உடையவர் ஆகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிய நடத்துவார் பிறர் ஏவல் செய்யாதார் என்பதனாலும் இவர் புறப்பொருட்டு உரியர் ஆயினார்" என்கிறார். இது பிறருக்குக் குற்றேவல் செய்வோரின் சமூகப் பொருளாதார நிலையை விளக்குவதோடு அன்றைய இலக்கியங்கள் மேட்டுக்குடியினரின் இலக்கியங்களே என்ற உண்மையையும் தெளிவுபடுத்துிறது. ஆக, பொருளாதார ஆதிக்கமும் சமூக மதிப்பும் கொண்டோர் ஒரு பக்கம்; அவர்களுக்கு அடித்தொழில் செய்தோர் ஒரு பக்கம் என்்று அன்றையச்சமூகம் பிளவு பட்டுக்கிடந்தது என்பது புலனாகிறது. அடிமை, இழிந்தோர் என்ற சொற்ள் குற்றேவல் செய்தோரின் சமூக இழி நிலையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
சங்க இலக்கியங்களில் துடியர் பறையர் என்போர் பேச்படுகின்றனர். துடி, பறை என்னும் தோல் கருவிகளை இயக்குபவர்கள் இவர்கள். இவர்கள் "இழிசினர் "என்றும் "இழி பிறப்பாளர்"என்றும் இலக்கியங்களில் இழித்துரைக்கப்படுகின்றனர்.
"துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின" (புறம்: 287)
"பூக்கோல் இன்று என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே" (புறம்: 289)
"இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி' (புறம்:170)
"கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று (புறம்: 82) 65 இழிசினர் என்றும் இழிபிறப்பாளர் என்றும் அழைக்கப்படும் இவர்களின் தொழில் பறை மற்றும் துடியறைதல், தோல் பொருட்களைப் பழுதுபார்த்தல் என்று தோல்தொழிலோடு ஒட்டியதாகத் தெரிகிறது.
புலையன் என்பது ஏசத்தக்க இழிசொல்லாக இலக்கியத்தில் சில இடங்களில் கையாளப்படுகிறது. (கலி:72:4; 311:2) பறையர் துடியர் பாணர் ஆகியோரும் புலையர் என அழைக்கப்படுகின்றனர்.
...... புலையன் பேழ்வாய்த் தண்ணைமை இடந்தொட்டன்ன அருவி இழிதரும் பெருவரை நாடன் (நற்றிணை: 345:5-7)
"மலையமா ஊர்ந்து போகிப் புலையன் பெருந்துடி கறங்கப் பிறபுலம் புக்கவர்" (நற்றிணை77:1-2)
"புதுவன ஈகை வளம்பாடிக் காலின் பிரியாக் கவிதைப் புலையன்தன் யாழின்" (கலித்: 95:9-10)
இவர்கள் மட்டுமின்றி இழிதொழிலைச் செய்யும் வேறு சிலரும். உதாரணமாக சுடுகாடு காக்கும் வெட்டியான் துணி வெளுக்கும் வண்ணான் ஆகியோரும் புலையன் புலைத்தி என்ற பொதுப் பெயராகலேயே அழைக்கப்படுகின்றனர். "கள்ளி போகிய களரி மருங்கின வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்திட்ட சில்லவிழ் வல்சி புலையனேவப் புல்மேல் அமர்ந்துண்டு அழல்வாய்ப் புக்க முன்னும் பலர்வாய்த்திராஅர் பகுத்துண்டோரே" (ுறம்:360:16-2) 66 "அடியியல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையின் பெருங்கை தூவா வறனில் புலைத்தி எல்லின் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்" (நற்.90:1-4)
ஆக, அன்றைச் சமூக அமைப்பில் பறையர்,துடியர், பாணர், வண்ணார், வெட்டியான் போன்ற வேலைப் பிரிவினர் இழி~ நிலைச் சாதியினராகக் கருதப்பட்டனர் எனக்கொள்ளலாம். அன்றைய விவசாயத் தொழில் சாதியினராக விளங்கியவர்~ கள் இவர்களா? இது பற்றி உறுதியாகக் கூறமுடியாவிடினும் சில யூகங்களை முன்வைக்கச் சங்க இலக்கியம் இடமளிக்கிறது. நெல்கதிரை அறுவடை செய்யும் மக்கள் பறையை முழக்கிக் கொண்டே அறுவடை செய்ததாக இலக்கியங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.
"வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇக் கண்மடல் கொண்ட தீந்தேன் இரிய" (புறம்:348)
"வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரிய" (புறம்:350)
"வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்" (அகம்: 204)
"வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செங்கண் எருமை இனம்பிரி பொருத்தல்" (மலைபடு:471-2)
"ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன்மைவினைநர் அரிபறை" (மதுரை.காஞ்: 261-62) பறையறைவர்கள் இழிந்தவர்கள், புலையர்கள் என்னும் போது, இங்கு அறுவடைத் தொழிலில் ஈடுபட்டவர்களும் இழிநிலை மக்களாக இருக்க வேண்டும். 67 மதுரைக்காஞ்சியில் வன்கைவினைஞர் (அதாவது வலிய கை~ யினால் தொழில் செய்பவர்கள் என்ற பொருளில்) எனச் சுட்டப்படுவது போல வேறு சில இடங்களில் நெல் வயல் களின் களை பறிப்பவர்களும் அவ்வாறே சுட்டப்படுகின்றனர். அத்தோடு கடைசியர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
"கைவினை மாக்கள்தம் செய்வினை முடிமார் சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட நீடின வரம்பின் வாடிய விடினும் கொடியரோ நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும். (குறுந்:309)
"கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் மலங்குமிளிர் செருவில் தனம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூரக்கண் துணியல் புது நெல்வெண்சோற்றுக்கண்ணுறையாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் வன்கை வினைஞர் " (புறம்:61)
"கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்தீ தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச் செங்கண் நெடுங்கயல் சின்மொழிக் கடைசியர் வெங்கண தொலைச்சிய விருந்தின் பாணி" (சிலம்பு10:127-131) இவை முன்குறிப்பிட்ட யூகத்தை வலியுறுத்துவனவாக அமைகின்றன. அதாவது விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்ளின் `கடைநிலை' மக்களே என்பது "கடைசியர்" என்று சொல்லால் புலனாகிறது. சங்க காலத்தில் பண்ணை அடிமைகள் இருந்தனரா என்பதற்கான 68 தற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லையெனினும், இக் கடைசியர் தங்கள் சமூக நிலையில் அடிமைகளின்று பெரிதும் வேறுபட்டிருக்கவில்லை எனக் கொள்ள இடமுண்டு" என்கிறார் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி!
இலக்கியங்கள் சுட்டும் `உழவர் ' என்ற சொல்லுக்கு உரியவர்களாக விவசாயத் தொழிலில் நேரடி உடல் உழைப்பில் ஈடுபடும் இக்கீழ் மக்களைக் கருத இடமில்லை. மருத நிலங்களில் வாழும், உழுதுண்பாராகிய சிறுநிலை உடைமையாளர்களே 'உழவர் ' என்று சுட்டப்படும் சொல்லுக்கு உரியவர் களாகத் தெரிகிறார்கள்.
"வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான் வீழ்குடி உழவன் வித்துண்டாங்கு" (புறம் :230:12-13)
"ஈரச் செவ்வி உதவின வாயினும் பல்லெருத்துள்ளும் நல்லேருது நோக்கி வீறுவீறாயும் உழவன் போல" (புறம்:289:1-3)
"வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை இனைச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்குழவர்" (அகம்:41:1-6)
நிலம், ஏர், எருது ஆகிய உற்பத்திச் சாதனங்களை உழவர் உடைமையாகக் கொண்டிருந்தனர். இதனடிப்படையில் விவசாய உற்பத்தியல் உடல் உழைப்பில் ஈடுபட்ட `கடை நிலை' மக்கள் நிலஉடைமையற்றவர்களாக இருந்தனர் எனவும் கொள்ளலாம். 69 சங்க இலக்கியங்களில் புலையர், பறையர், கடைசியர் என்று சுட்டிச் சொல்லப்பட்டவர்கள் தாழ்ந்த சாதியினரே; நில உடைமையற்ற விவசாயக் கூலிகளே; இன்றைய பள்ளர் பறையர் சாதியினரின் முன்னோர்களே என்ற முடிவுக்கு வருவதற்கான ஆதாரங்கள் இடைக்கால இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.