நுழைவாயில் – பைபிள் தொன்ம களம்
பைபிள் தொன்மக் கதைகள் இஸ்ரேல் எனும் சிறு நாட்டை சுற்றியே முக்கியத்துவம் பெற்றதோ, அதனுள் ஜெருசலேம் (சீயோன் மலை) மட்டுமே, அதுவே யாவே கடவுள் வீடு எனவும் கூறுகிறது. கதைப்படி ஏசு யூதனாய் பிறந்து யூத மதத் தொன்மக் கட்டளைபடி இஸ்ரேலின் தெய்வம் யாவே இருக்கும் ஒரே இடமான[ii] ஜெருசலேம் ஆலயம் வந்து ஆடு கொலைபலி தரும் பஸ்கா பண்டிகை போது ரோமன் கவர்னரின் படைத் தலைவரால் கைது செய்யப்பட்டு, ரோமன் மரணதண்டனை தூக்குமரத்தில் தொங்கும் மரண தண்டனையில் கொல்லப்பட்டார்.
எபிரேய விவிலியத்தில் ஜெருசலேமின் முக்கியம் பற்றிய வசனம் காண்போம்.[iii]
சங்கீத: 48 :1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.
2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.
யூதருக்காக மட்டும் என்ற ஏசுவை நேரில் பார்க்காது ஆனால் யூதர் அல்லாதவர்களிடம் கிறிஸ்துவத்தை பரப்பி அதை தொழிலாய் காசு சம்பாதித்த தூய.பவுல் பழைய ஏற்பாடு வசனம் வழியே கிறிஸ்து சீயோனிலிருந்து வருபவர் யாக்கோபின் வாரிசுகளினுள் உள்ள கெட்டவைகளை நீக்குவார்[iv] என்றார்.
கலிலேயரான ஏசு ஜெருசலேம் செல்லும் வழியில் சமாரிய கெர்சிம் மலையருகே ஒரு சமாரியப் பெண்ணோடான உரையாடலில், அப்பெண் நம் முன்னோர்கள் வழக்கப்படி இந்த கெர்சிம் மலையில் சமாரியர் கர்த்தரை வணங்குகிறோம், யூதர்கள் ஜெருசலேமில் வணங்க வேண்டும் என்கிறீரார்கள் என்றிட ஏசு சமாரியர்கள் அறியாததை வணங்குவதாய் இழிவாய் பேசினார்[v].
யூதர்களின் மிக முக்கியமான ஜெருசலேம் சீயோன் எப்படி எப்போது யூதர் கீழ் வந்தது?
பழைய ஏற்பாடுபடி எபிரேயர்கள் அன்னியர்கள், வந்தேறிகள்[vi], கல்தேயர் தேச ஆபிரகாம் வாரிசுகள், எகிப்திலிருந்து வந்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை- இன அழிப்பு செய்து இஸ்ரேலில் குடியேறியவர்கள்[vii]. அந்தப் படுகொலைகளை இன அழிப்பை சொல்வது யோசுவா நூல், அவர் காலத்திலேயே ஜெருசலேமும் எபிரேயர் கீழ் வந்ததாம்.
யூதா–ஜெருசலேமில் வாழ்ந்தவர்கள் எமோரியர்கள், வென்றது யோசுவா[viii]; இவர் காலத்திற்கு 200 வருடம் பின்பு கானானியர்கள் ஆள இப்போது தான் வென்றனர். ஜெருசலேமில் வாழ்ந்தவர் கானானியர்கள், வென்றது யூதா கோத்திர மனிதர்கள். [ix] இல்லை மேலும் 200 வருடம் பின்பு ஜெருசலேமில் வாழ்ந்தவர் எபூசியர்கள் வென்றது தாவீது ராஜா[x].
தாவீது ராஜா அவர் மகன் சாலமோன் ஜெருசலேமில் செல்வ செழிப்பு செய்திகள்
தாவீது ராஜா இஸ்ரேலின் கடவுளுக்கு ஆலயம் கட்ட 3,750 டன் தங்கம்,[xi] 37,500 டன் வெள்ளி, நிறுத்துv பார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும், மரமும் கற்களும் என எல்லாம் சேர்த்து தன் மகன் சாலமோன் கட்ட கொடுத்தாராம். இவரைவிடவும் சாலமோன் மேலும் பல வெற்றி பெற தங்கம் வெள்ளி[xii] கொட்டியதாம், வெள்ளி தெருவில் உள்ள கல் போலேவாம் எனக் கதை சொல்கிறது.
தாவீது ராஜா ஒரு சென்சஸ் எடுக்க யூதேயாவில் 5 லட்சம், இஸ்ரேலில் 14 லட்சம் போர் வீரர்கள் இருந்தார்களாம், இதிலும் 2 கோத்திரம் கணக்கில் எடுக்காமல், அதாவது 14+ 2 கோத்திரம் + போரிட முடியாத மற்ற ஆண்கள் (ஊனமுற்றோர் போலே) அதாவது நாம் 20 லட்சம் எனக் கொண்டால் (ஒரு குடும்பம் 5 பேர் மனைவி, 2 குழந்தை பெற்றோர்) எனில் யூதேயா -இஸ்ரேலில் தாவீது காலத்தில் மக்கள் தொகை கிட்டத் தட்ட ஒரு கோடி என்கிறது கதை.
இந்த நாட்டில் சாலமோன் ராஜா இஸ்ரேஇலின் கடவுள் சொன்னபடி உருவத்தில் ஆலயம் கட்டினார், அதைத் தான் ஏசு அப்பெண்ணிடம் யூதர் அறிந்ததை வழிபடுவது என்றது.
சமாரியர் யார்?
சமாரியா என்பது இஸ்ரேலிற்கும் யூதேயாவிற்கும் இடைப்பட்ட பகுதி, பைபிள் கதைப்படி 12 கோத்திரங்களில் பிரிக்கப்பட்ட எபிரேயர் தான்.
சமாரியர் யூதரில் ஒரு பிரிவினர். ஆனால் போரில் கிரேக்கரோடு இணைந்தனர் என அரசியல் ரீதியில் ஒதுக்கினர். சமாரியா என்பது இஸ்ரேலிற்கும் யூதேயாவிற்கும் இடைப்பட்ட பகுதி, பைபிள் கதைப்படி 12 கோத்திரங்களில் பிரிக்கப்பட்ட எபிரேயர் தான், இவர்கள் கிரேக்கள் யூதேயாவில் ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தை காலத்தில் கெர்சிம் மலை ஜூபிடர் ஏசு ஜெருசலேம் ஆலய மறு அற்பணிப்பு பண்டிகக்கு வந்தார் என்கிறது, இது பொமு167ல் கிரேக்க மன்னன் அந்தியோச்சு யாவே கர்த்தரின் ஜெருசலேம் ஆலயத்தில் கிரெக்க ஒலிம்பச்[xiii] கடவுள் சிலையும், கெர்சிம் மலை யாவே ஆலயத்தில் ஜூபிடர் கடவுள் சிலையும் வைத்தனர் என்கிறது, அதை நிக்கி யூதர் வசம் வந்ததே இப்பண்டிகை. இதன்பின் யூதா ஹிர்கானஸ் எனும் மன்னன் போரில் சமாரியர் யாவே கர்த்தர் ஆலயம் அழிக்கப்பட்டது யூதர்களால் பொமு110ல். அதன் பின் எபிரேயர்கள் சமாரியா செல்லக் கூடாது, சமாரியர் ஜெருசலேம் வரக்க் கூடாது.
சமாரியர் யூதரிடமிருந்து பிரிந்தபோது, பழைய ஏற்பாட்டில் நியாயப் பிரமாணங்கள் எனப்படும் முத 5 நூல்கள் மட்டுமே உருவாகியிருந்தமையால், சட்டங்கள் எனும் டோரா(தௌராத்) மட்டுமே சமாரிய விவிலியம்.
தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் தெளிவாக உரைப்பது; ஜெருசலேம் 300 -400 குடும்பம் மட்டுமே கொண்ட மிகச் சறிய கிராமம், சாலமன் காலத்திற்கு 200 வருடங்கள் கழித்தும், ஆனாலும் நாம் பைபிள் கதைகளைப் பார்ப்போம்