தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம்.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
மணக்குடவர் உரை:நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது. Translation: Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share. Explanation: Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்வதைவிட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்லது. இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்வதைவிட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்லது. இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251 மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். குறள் 260 மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).