Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்
Permalink  
 


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  

செய்தொழில் வேற்றுமை யான்.             (குறள் 972: பெருமை)                            பிறப்பு ஒக்கும் – இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான்
எல்லா உயிர்க்கும் – யாவர்க்கும்
சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது
செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள
வேற்றுமையான் – வேற்றுமைகளால்
எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக இருக்காது .
PiRappu%2BOkkum%2B01.pngPiRappu%2BOkkum%2B01.png


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

PiRappu%2BOkkum%2B03.png 

PiRappu%2BOkkum%2B04.pngPiRappu%2BOkkum%2B05.png



-- Edited by admin on Sunday 17th of May 2020 12:18:49 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

Sirappu%2Bovva%2B01.png Sirappu%2Bovva%2B02.png



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 Sirappu%2Bovva%2B03.png Sirappu%2Bovva%2B03.png



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 Sirappu%2Bovva%2B04.png Sirappu%2Bovva%2B04.png



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

Sirappu%2Bovva%2B05.png Sirappu%2Bovva%2B06.png



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

Sirappu%2Bovva%2B07.png Sirappu%2Bovva%2B08.png

Sirappu%2Bovva%2B09.png



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம்.

6.jpg


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  

செய்தொழில் வேற்றுமை யான்.             (குறள் 972: பெருமை)                            பிறப்பு ஒக்கும் – இயல்பு என்பது பிறப்பால் ஒன்றுதான்
எல்லா உயிர்க்கும் – யாவர்க்கும்
சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது
செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள
வேற்றுமையான் – வேற்றுமைகளால்
எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக இருக்காது .

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –( கணியன் பூங்குன்றனார்) எனும் கோட்பாடு படி  ஒருவன் செய்யும் செயல் அதில் உள்ள அறத்தின் பலன்(புண்ணியமே) உன் நிலையை தீர்மானிக்கும். வள்ளுவர் நீ இப்பிறவியில் செய்யும் அறத்தின் பயன் உன் அடுத்து எழும் பிறவிகளில் நல்லது செய்யும் என்பார்.

 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.             குறள்.36 அறன்வலியுறுத்தல்
பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழிந்த பின்பும் மறுமையில் அழியா துணையாகும்.

வள்ளுவர் ஒரு அரசன் தன் நாட்டை ஆளும் செங்கோல் பிராமணர்களின் வேதங்கள் மற்றும் அறநூல்களுக்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் என்பார்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் 
நின்றது மன்னவன் கோல்.                குறள்.543   செங்கோன்மை
நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள்- அறநூல்களை மறப்பர்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.             குறள் 560  கொடுங்கோன்மை
ஒரு பெரும் சமுதாயத்தில் பணிக்கு ஏற்ப சட்டங்கள் அமையும்,  அஹிம்சையையும், புலால் மறுத்தலையும் போற்றி துறவரவியலில் கூறிய வள்ளுவர்.

சட்டம் - ஒழுக்கு என வருகையில் அது அவரவர் தொழில், தன்மைக்கு ஏற்ப மாறும் இதை நாம் திருக்குறளிலேயே காணலாம். அஹிம்சை, புலால் மறுத்தலை வலியுறுத்தும் வள்ளுவர் கொடியோரை (பாழ் செய்யும் உட்பகை இல்லாதபடிக்கு) - வயலைல் களை பிடுங்க் எரிதல் போலே மொழி - இனம் எனப் பிரிவினை தூண்டும் கொடியோரை வேரோடு அழிக்க வேணும் என்பார்

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.                 செங்கோன்மை குறள் 550
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.                      ஒற்றாடல்  குறள் 582
எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்                    ஒழுக்கமுடைமை குறள் 134:
பிராமணன் தினமும் கூறும் வேதங்களை மறந்தாலும் மீண்டும் நினைவில் கொணரலாம், ஆனால்  தன் குடிப்பிறப்பு  ஆசாரத்தில்  குன்றினால் கெடு்ம்.

தமிழருள் பகைமூட்ட கிறிஸ்துவ நச்சுப் பரப்பல் செய்த தேவநேயப் பாவாணனைப் போலும், காலனி ஆதிக்க சர்ச் அடிமைகள் தமிழை காட்டிமிராண்டி எனப் பழித்த ஈ.வெ.ராமாசாமி வழி தமிழின் எதிரிகளும்
அற நூல் எழுதிய வள்ளுவரை வைத்து - இந்தக் குறள் மூலம் தமிழர் மெய்யியல் மரபை நிராகரிக்கிறார் என பிதற்றுவர்.

பொய்யான உரைகள்.
 சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான்.    என்பதை செய்யும் தொழிலால் வரும் வேறுபாட்டு சிறப்புகளும் பொருந்தாது என கதைக்கின்றனர்.

சிறப்பு ஒவ்வா உள்ள ஒவ்வா வேறோர் குறளிலும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்.

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண் ஒவ்வேம் என்று.                   குறள் 1114:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். 

 ஒவ்வாக-  ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா
சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான் -   செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
வள்ளுவர் மிகத் தெளிவய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.               குறள் 528    சுற்றந்தழால்
 அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யோரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-

.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.          குறள் 508:  தெரிந்துதெளிதல்
ஒருவரை  ஆராய்ந்து பார்க்காமல்  துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
 
இனத்தியல்ப தாகும் அறிவு.          குறள் 452:  சிற்றினஞ்சேராமை
 நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்
 மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு 
இனநலம் ஏமாப் புடைத்து.        சிற்றினஞ்சேராமை குறள் 458
நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும்  நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை அமையும் 
 
கிறிஸ்துவ மதமாற்ற வேசித்தனத்தால் தமிழரை ஆரியர் - திராவிடர் என பொய்யான மோசடி நச்சு பரப்புவோரோடு பழகும் தமிழறிஞர்கள் வள்ளுவத்தினை சிதைக்கும் உரை தவறான கூட்டு தான். 
நச்சு கிறிஸ்துவமும், தமிழை காட்டு மிராண்டி பாஷை; தமிழை அழிக்கவே திராவிடம் என சொல்லியோர் கூட்டத்தில் இணைவோர் திருக்குறளை இழிவு செய்கின்றனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

00%2BMelpirawthaar.png00%2BNilai%2Bkural%2B124.png00%2BParppan%2BPirappu%2Bozukkam.png



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

தீண்டாமையும் பிராமணர்களும் - 1

இந்து மதத்தில் தீண்டாமை உள்ளது என்னும் கருத்தியலுக்கு எதிராக பல ஆதாரங்களை கொடுத்தாகி விட்டது.

ஆங்கிலேயர்கள் இந்த மண்ணை அடிமைப்படுத்தும் வரை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மன்னர்களுக்கு தளபதிகளாக இருந்துள்ளனர்.

நாட்டில் முதன்மையான அதிகாரம் படைத்தவர் மன்னர். மன்னர் செயல்பட முடியாத நிலையில் அல்லது நாட்டில் இல்லாத நேரத்தில் மன்னருக்கான அதிகாரத்தை மகா மந்திரி கையிலெடுப்பார்.

ஆனால் நாட்டிற்கு ஒரு ஆபத்து, அன்னிய படையெடுப்பு எனில் மன்னர், மகா மந்திரி இருவரும் தளபதியின் கட்டுப்பாட்டிற்குள் தான் வர வேண்டும். மன்னரே அங்கு செல்லாக்காசு தான்.

இந்திய மண்ணில் தீண்டாமை இருந்தது எனில் எப்படி மன்னர்கள் தங்களையே கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட தளபதி பதவிக்கு தாழ்த்தப்பட்டவர்களை நியமித்தார்கள்... ?

இதைப்போல நிறைய கேள்விகள் உண்டு. ஆனால் கால்டு வெல் மகன்களிடமும், அரேபிய வாரிசுகளிடமும், தந்தை தடியார் பேரன்களிடமும் இதற்கு பதில் வராது.

வாய்க்கு வக்கனையாக ஒரு கருத்தியலை முன் வைக்கின்றனர். இந்து மத்த்தில் தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் மதம் மாறினார்களாம். மதம் மாறியதால் அவர்களின் ஜாதி இழிவு அகன்று விட்டதாம்.

--------------------

முதலில் தீண்டாமை என்பதற்கு விளக்கம் என்ன.... ?

தனிப்பட்ட நபர், குழு, கூட்டம், சமூகம், தெரு, ஊர், நாடு இவற்றிலிருந்து ஏதோ ஒரு அடிப்படையில் அவர்களிடமிருந்து விலகியிருப்பது.

அடுத்தவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்வது எந்த விதத்தில் தவறு என்று யாராவது சொன்னால் நல்லது.

புரியும்படியாகவே சொல்கிறேன்...

இவர்கள் சொல்லும் பார்ப்பணன் யாரும் சேரிக்கு வலுவில் சென்று என்னை யாரும் தொடக்கூடாது என்று சொல்லவில்லை.

பிராமணன் அவனது வீட்டில், அவனது இடத்தில் அமர்ந்து கொண்டு சிலரிடம் இருந்து விலகியிருக்கிறான். இதனால் பிறருக்கு என்ன பாதிப்பு... ? எதை இழந்தார்கள்.... ? அவனவன் தான் எப்படி இருக்க வேண்டும் என முடிவெடுப்பது அவரவர்கள் தனிப்பட்ட உரிமை. பிராமணன் அப்படி சிலரிடம் இருந்து விலகியிருக்கிறான்.

அவனவன் செய்யும் தொழில், சூழ்நிலை, வாழ்க்கை முறை இவைகளை வைத்து அவனவன் எடுக்கக் கூடிய முடிவுகள் இது. அந்த முடிவுகள் அடுத்தவனை பாதிக்காத வரை, பொது மக்களை தொந்தரவு செய்யாதவரை எதுவும் சரியே.

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நான் என்னை தனிமைப்படுத்திக் கொள்வதும், யாராவது என் அருகில் வந்தால் வராதே என்பதற்கும் தொடாதே என்பதற்கும் எனக்கு முழு உரிமை உள்ளது. அதைத்தானே பிராமணர்கள் செய்கின்றனர். இதில் என்ன தவறு கண்டனர்.... ?

---------------

அடுத்த பஞ்சாயத்து.., கோவில் கருவறையில் பார்ப்பணர் தாழ்த்தப்பட்ட சாதியினரை விடுவதில்லை.

இது தான் முக்கியமான வாதம். இதைத்தான் செல்தட்டி நடிகன், கோயில் சிலையை செதுக்கும் சிற்பி அதை பிரதிஷ்டை செய்த பின் தொட அவனுக்கு உரிமை இல்லை என்றார்.

மேலோட்டமாக பார்ப்பதற்கு புத்திசாலித்தனமாக இந்த வாதம் தோன்றும். ஆனால் கொஞ்சம் ஆராய்ந்தால் அதில் ஈரோடு பெரிய வெங்காயம் பல்லை இளிப்பார்.

கட்டழகி மணியம்மையை தள்ளாத வயதில் மூத்திர சட்டியை ஒரு கையில் ஏந்திக் கொண்டு திருமணம் செய்த ஈரோடு பெரிய வெங்காயத்தை, வளர்த்த மகளையே திருமணம் செய்தான் என்று உலகமே காறி துப்பியது.

ஆனால் ஈரோடு பெரிய வெங்காயம் இதற்கெல்லாம் கவலைப்படவும் இல்லை, கலங்கவும் இல்லை. கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அனைத்திற்கும் பதிலாக ஒரு தத்துவ முத்தை உதிர்த்தான். அது....

" நான் ஒரு மரத்தை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்தேன். அதில் காய்க்கும் கனியை எடுத்து சாப்பிட எனக்கு
உரிமை இல்லாமல் போய் விடுமா... ? "

செல்தட்டி சொன்ன சிற்பி கதையையும், ஈரோடு பெரிய வெங்காயத்தின் கதையையும் ஒப்பிட்டு பாருங்கள் செல்தட்டியின் கருத்து எங்கிருந்து வந்தது என்று புரியும்.

ஈரோடு பெரிய வெங்காயத்தின் கருத்தியல் படி பார்த்தால் ஜோதிகா என்னும் கனியை சாப்பிட அவளின் பெற்ற அப்பனுக்கு உரிமை உண்டு.

செல்தட்டி கருத்தியல் படி, ஜோதிகாவினை செதுக்கிய சிற்பியான அவளின் தகப்பன் படுக்கையறையில் மகளை தொட்டு தழுவ உரிமை உண்டு.

நடிகையின் அப்பன் வந்தால் அவள் கணவன் விளக்கு பிடித்து நிற்பான். செல்தட்டி வாசலில் வெண்ணீருடன் காத்திருப்பான் போலும்.

நாம் காறித்துப்ப வேண்டியது செல்தட்டி குடும்பத்தையா... அல்லது தந்தை தடியார் எருமைகளையா... ?

-----------------

பார்ப்பான் கோவிலுக்கு வர விடாமல் தடுத்தான்...., பார்ப்பான் கோவிலுக்குள் விடவில்லை....

இது என்ன பைத்தியக் காரத்தனமான கூச்சல் என்று தெரியவில்லை.

அன்று முதல் இன்று வரை பிராமணர்களுக்கு கோவில்களில் வேதம் ஓதவும், வேதம் ஓதி பூஜைகள் செய்யவும், நைவேத்தியம் படைக்கவும், மக்களுக்காக இறைவனிடம் அர்ச்சனை செய்வதற்குமான அதிகாரம் மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேல் இன்னார் வரவேண்டும், இவர்கள் வரக் கூடாது என்று தடுப்பதற்கான, தடை செய்வதறகான அதிகாரங்கள் எந்தக் காலத்திலும் கிடையாது.

பின்னர் கோவில்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது என்று தடுத்தவர்கள் யார்.... ?

அங்கு தான் டுவிஸ்ட் உள்ளது. கோவில்கள் அந்தந்த தேசங்களின் சொத்து. தேசங்களின் தலைவன் அரசன். கோவில்கள் மீதான அரசு ஆணையை மன்னர் தான் பிறப்பிக்க முடியுமே தவிர கோவிலில் அர்ச்சனை செய்யும் பிராமணன் எப்படி தாழ்த்தப்பட்ட வர்களை விலக்கி வைத்து உத்தரவிட முடியும்... ?

சரி, அந்த மன்னர்கள் எல்லாம் பிராமணர்களா என்று பார்த்தால் ஒரு பாரப்பண மன்னர்களை கூட வரலாற்றில் பார்க்க முடியவில்லை. அப்படியென்றால் அந்த மன்னர்களின் சாதி எது... ?

மன்னர்களின் சாதியை கண்டுபிடிக்க ரொம்பவே கஷ்டப்பட வேண்டாம். பிராமணர்களை தவிர தேவர், கவுண்டர், முதலியார் சாதியில் இருந்து முத்தரையர், பள்ளர், பறையர் வரை இந்த மண்ணை குறிப்பிட்ட காலம் ஆண்டுள்ளனர். வீர வம்சம், ஆண்ட வம்சம் என்று வருடா வருடம் தங்கள் சாதி மன்னர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.

ஆக தமிழகத்தில் தீண்டாமை வளர காரணம் தமிழகத்தை ஆண்ட அத்தனை சாதி ஆண்ட வம்சமும் தான்.

இன்றைக்கு சாதியை ஒழிப்பதாக சொல்லி கிளம்பியுள்ள பகுத்தறிவு வாதிகள் ஓசி சோறு வீரமணியின் கோனார் சாதி, சுப.வீரபாண்டியனின் செட்டியார் சாதி, புலவன் வைர முத்துவின் தேவர் சாதி, நடிகர் சத்தியராஜின் கவுண்டர் சாதி மன்னர்கள் எல்லாரும் சேர்ந்து தான் தீண்டாமையை வளர்த்துள்ளனர். இவ்வளவு ஏன் திருமாவளவனின் பறையர் சாதி மன்னர் கூட தன் சாதி மக்களையே தங்கள் நாட்டு கோவிலுக்குள் நுழைய விடாமல் வைத்துள்ளனர் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டி வரும். அல்லது தாங்கள் ஆண்ட வம்சம் என்று சொல்வது தவறு என ஒத்துக் கொள்ள வேண்டி வரும்.

குறைந்த பட்சம் இன்றைய சாதி ஒழிப்பு தலைவர்கள் அனைவரும் தங்கள் முன்னோரகள் தீண்டாமையை கடைபிடித்தார்கள் என்பதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டி வரும்.

இதற்கும் சில முரட்டு சொறியாரிஸ்ட்டுகள், மன்னர்கள் பார்ப்பான்களுக்கு அடிமையாக இருந்தனர், அவர்களின் பேச்சைக் கேட்டு இப்படி தவறான முடிவுகளை எடுத்தனர் என்பார்கள்.

அந்த லாஜிக்படி பார்த்தாலும் கூட தமிழகத்தை ஆண்ட எந்த மன்னனுக்கும் அறிவு என்பதே இல்லை, பார்ப்பானுக்கு மட்டும் தான் அறிவு இருந்தது என்று ஒப்புக் கொள்ள வேண்டி வரும். இதன் நீட்சியாக இன்றைக்கு ஆண்ட வம்சம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் எந்த சாதிக்கும் அறிவு கிடையாது என்ற முடிவை ஏற்பார்களா... ?

பிராமணர்களையும், இந்துக்களின் கோவில்களையும் சுடலையும், திருமாவளவனும் பேசாத அவதூறா... ? ஆபாசமா.. ? ஆனால் அவர்கள் கோவிலுக்கு போனாலும் வரவேற்று அவரகளுக்கான மரியாதையை பிராமணர்கள் செய்வது எப்படி... ? கோவில் சம்பந்தமாக அவர்களுக்கான அதிகாரம், அரசு உத்தரவு அது தான். யாராக இருந்தாலும் வரவேற்று அவர்களுக்கு மரியாதை செய்து, இறைவனுக்கு அவர்களுக்காக வேத மந்திரங்கள் ஓதுவது அவர்கள் கடமை. அவர்களின் அதிகார எல்லை அத்துடன் முடிந்து விடுகிறது. அந்தக் காலத்தில் இருந்து இன்றைய வரையில் கோவில்களில் பிராமணர்களின் செல்வாக்கு இது தான்.

நிலமை இப்படியிருக்க பிராமணன் தீண்டாமையை கடைபிடிக்கிறான் என்பது சுத்த பைத்தியக் காரத்தனம். இதையும் நம்பி ஒரு கூட்டம் பிராமணர்களை இதுவரை வசை பாடி வருகின்றது.

இதில் ஒரு கொடுமையான விசயம் என்னென்றால் திராவிட நாதாரிகள் பிராமணர்கள் தீண்டாமையை கடைபிடிக்கின்றனர் என்று சொல்லிச் சொல்லியே அந்த சமூகத்தையே தீண்டத்தகாத சமூகமாக்கி விட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அடுத்த பதிவில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் நடக்கும் தீண்டாமையை விட பெரிய கொடுமையை எழுதுகிறேன்.

தொடரும் - 1

------------- Bommaiyah Selvarajan.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்ண்
பலர்காணும் பூ வொக்கும் என்று.                 குறள் 1112: நலம்புனைந்துரைத்தல். 

மணக்குடவர் உரை:அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள்.
பரிமேலழகர் உரை:(இடந்தலைப்பாட்டின்கண் சொல்லியது.) நெஞ்சே - நெஞ்சே; இவள் கண் பலர்காணும் பூ ஒக்கும் என்று - யானே காணப்பெற்ற இவள் கண்களைப் பலரானும் காணப்படும் பூக்கள் ஒக்கும் என்று கருதி; மலர் காணின் மையாத்தி - தாமரை குவளை நீலம் முதலிய மலர்களைக் கண்டால் மயங்கா நின்றாய், நின்அறிவு இருந்தவாறென்? (மையாத்தல்: ஈண்டு ஒவ்வாதவற்றை ஒக்கும் எனக் கோடல்; இறுமாத்தல் செம்மாத்தல் என்பன போல ஒரு சொல். இயற்கைப் புணர்ச்சி நீக்கம் முதலாகத் தலைமகள் கண்களைக் காணப் பெறாமையின் அவற்றோடு ஒருபுடையொக்கும் மலர்களைக் கண்டுழியெல்லாம் அவற்றின்கண் காதல் செய்து போந்தான், இது பொழுது அக்கண்களின் நலம் முழுதும் தானே தமியாளை இடத்தெதிர்ப்பட்டு அனுபவித்தானாகலின், அம்மலர்கள் ஒவ்வாமை கண்டு, ஒப்புமை கருதிய நெஞ்சை இகழ்ந்து கூறியவாறு.).
மு. வரதராசன் உரை:நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்.
மு. கருணாநிதி உரை:மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்; பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.
சாலமன் பாப்பையா உரை:நெஞ்சே நான் ஒருவனே காணும் என் மனைவியின் கண்கள், பலருங் காணும் பூக்களைப் போல் இருக்கும் என்று எண்ணி மலர்களைக் கண்டு மயங்குகிறாயே! (இதோ பார்).
Translation:
You deemed, as you saw the flowers, her eyes were as flowers, my soul,
That many may see; it was surely some folly that over you stole!.
Explanation:O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:505)
பொழிப்பு (மு வரதராசன்): (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
மணக்குடவர் உரை: ஒருவனைப் பெரியனாக்குதற்கும் மற்றைச் சிறியனாக்குதற்கும் வேறு தேறவேண்டா; அவரவர் செய்யவல்ல கருமந்தானே அதற்குத்தக ஆக்கும் படிக்கல்லாம்.
இஃது ஒருவனை ஒரு காரியத்திலே முற்படவிட்டு, அவன் செய்யவல்ல அளவுங் கண்டு பின்னைப் பெரியனாக்க அமையுமென்றது. இது குற்றங்கூறாமை பலவற்றிற்கு முள்ள வேறுபாடென்று கொள்ளப்படும்.
பரிமேலழகர் உரை: பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,பிறிதில்லை.
(இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.)
குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவருடைய பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர் செய்யும் செயல்களே உரைகல். ஒவ்வொருவரும் வேறு பிறவற்றால் சிறப்புடையார் போலத் தோன்றினாலும் உண்மையில் அவர்களுடைய பெருமையை அல்லது கீழ்மையை எடுத்துக்காட்டுவது அவர்களுடைய செயல்களே என்பது கருத்து.
பொருள்கோள் வரிஅமைப்பு:பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக் கல் தத்தம் கருமமே.
பதவுரை: பெருமைக்கும்-சிறப்புக்கும், நிறைகுணத்திற்கும்; ஏனை-மற்றும்; சிறுமைக்கும்-குறைபாட்டிற்கும், குறைவிற்கும்; கருமமே-செயலே, செய்திறனே. செயற்பாங்கே; கட்டளைக்கல்-உரைகல்; தத்தம்-தங்கள் தங்களது, அவரவர்.

திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல் -நாம் மேலும் ஆராயுமுன்பு குறள் காட்டும் வாழ்க்கை வழிமுறையை காண வேணும், இவ்வுலகில் வாழும் அனிவரும் நட்பு தேவை

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். குறள் 508: தெரிந்துதெளிதல்
மு.வரதராசனார் உரை: மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை
பரிமேலழகர் உரை:மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409:
கலைஞர் மு.கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
Translation:Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.
Explanation:The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 96:8

சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையார்-கண்ணே உள - குறள் 23:3

மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் - குறள் 46:5

மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 46:7

மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 46:8

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6

மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் - குறள் 46:3

நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல் - குறள் 46:10

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2

மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது
மு.வரதராசனார் உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
சாலமன் பாப்பையா உரை:நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்
கலைஞர் மு.கருணாநிதி உரை: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
மு.வரதராசனார் உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. குறள் 503: தெரிந்துதெளிதல்
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. குறள் 502: தெரிந்துதெளிதல்
மு.வரதராசனார் உரை: நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். குறள் 462: தெரிந்துசெயல்வகை
மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. குறள் 469: தெரிந்துசெயல்வகை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
மு.வரதராசனார் உரை:அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். குறள் 466: தெரிந்துசெயல்வகை
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். அதை மெய்ப்பாட்டியல் சூத்திரம் (25) “பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோடு / உருவு நிறுத்த காம வாயில் / நிறையே அருளே உணர்வொடு திருவென / முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்பதைக் கூறி இதில் பிறப்பு என்பதற்கு “பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர் . . . என்றாற்போல் வருங் குலம். குடிமையாவது, அக்குலத்திலுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் ‘குடிமை’ என்றார்” என்று சொல்கிறார்

ஆகவே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” எனப் பிறரும் குலத்தின் கண்ணே சிறப்பென்பது ஒன்று உண்டென்று கூறினராகலின்” என்கிறார். குலம் என்பது பிறப்பினால் வரக்கூடியது எனில், “குலத்தின் கண்ணே சிறப்புண்டு” எனும்போது அது பிறப்பின் வழியே வந்த சிறப்பு என்றாகிறது. இப்படியான நிலையில் “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதற்கு என்ன பொருள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.
சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஜ என்பதற்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்பதற்கும் வேறுபாடே இல்லை

இவர்கள் கீதையிலும் குறளிலும் முதல் வரியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்
நான்: சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஜ என்பதற்கும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்பதற்கும் வேறுபாடே இல்லை

இவர்கள் கீதையிலும் குறளிலும் முதல் வரியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்
சௌம்யநாராயணன்: சரிதான்
நான்: நால் வருணங்களும் என்னால் படைக்கப்பட்டன, இயல்புகள் செயல்களின் அடிப்படையில் – கீதை [பிறப்பால் அல்ல]
பிறப்பு எல்லா உயிர்களுக்கும் சமம் .ஆனால் செய்யும் செயல்களால் சிறப்புகள் வேறுபடுகின்றன- குறள்
அதாவது உயிர்கள் சமம் அல்ல, செயல்மூலம் அவற்றின் தரம் மாறுபடுகிறது
சௌம்யநாராயணன்: இல்லை செய்தொழில் வேற்றுமையான் என்பதைக் கொண்டு அவ்வாறு சொல்லிவிட முடியாது… குறளைப் பொறுத்தவரையிலும் பிறப்பினால் ஒத்த அந்தணர்களுள் அல்லது அரசர்களுள் அல்லது வைசியர்களுள் தங்களின் செயலினால் மாறுபடுவோரைக் குறிப்பதாக நான் கருதுகிறேன்
காரணம், மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்ற குறளையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது.
எனை வகையான் தேறிய பின்பும் வினைவகையான் வேறாகும் மாந்தர் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.
எடுத்துக்காட்டாக, ஒரு அந்தணர் அந்தணர்க்குரிய தொழில்கள் என வரையறுக்கப்பட்டவற்றையல்லாது வேறொன்றைச் செய்வாராயின் அவர் கீழாகவே கருதப்படுவார் என்பதுதான்.
நான்: அந்தக் குறளில், அல்லது அந்த அத்தியாயத்தில் அப்படி இல்லை. அது நீங்கள் கொள்ளும் பொருள். குறளுக்கு அது எழுதப்பட்டுக் குறைந்தது 500 வருடம் கழித்து பரிமேலழகர் அளித்த உரை அதற்கான முகாந்திரமாக அமையலாம். ஆனால் அது ஒருபோதும் கடைசிப்பொருள் அல்ல. வழிகாட்டுப்பொருளும் அல்ல.
சௌம்யநாராயணன்: பரிமேலழகர் அளித்த உரையில் நான் கூறியதெதுவும் இல்லை
நான்: இல்லை- பரிமேலழகர் அந்த குறளுக்குச் சம்பந்தமே இல்லாமல் வருணத்தை எடுத்துகொண்டு வருகிறார். வருணந்தோறும் தொழிற்பாகுபாடுகள் வேறுபாடு பற்றி அந்த வரியில் சொல்கிறார்
சௌம்யநாராயணன்: அந்த வரிகளில் இல்லை என்பது இருக்கலாம்.. ஆனால், அவர் அதை மனதில் கொண்டிருந்தார் என்பதற்குத்தான், “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்” என்று சொல்லி இருப்பதாகத் தோன்றுகிறது.
நான்: குறளின் அந்தவரிகளில் வருணம் பற்றி ஏதும் இல்லை.
சௌம்யநாராயணன்: மீண்டும் பார்க்கிறேன்..
நான் அதனால்தான் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரைக் குறிப்பிட்டிருந்தேன்
மேலும் வாராததனான் வந்தது உணர்தல் என்ற தொல்காப்பிய நூல் உத்தியை அடிப்படையாகக் கொண்டு குறளைப் பார்த்தேன்
நான்: பார்ப்பான் பிறப்பொழுக்கம் என்பது அக்காலத்தைய நம்பிக்கைகளில் ஒன்று. அது அவரவர் வர்ணத்து வேலையை அவரவர் செய்யாவிட்டால் தப்பு என்பதல்ல.
அன்றைய நோக்கில் பார்ப்பாருடையது தொழில் அல்ல, நெறி,தவம். ஒருவேளை உணவுண்டு, உறுதொழிலென ஏதும்செய்யாது, மூன்று தீ வளர்த்து மட்டுமே வாழவேண்டிய கடும் நெறி அது. அதைச் செய்யாதவர்கள் பிராமணர்களே அல்ல, அவர்களால் நாடு கெடும் என்ற நம்பிக்கையை சங்ககாலம் முதலே காணலாம். எங்கெல்லாம் பார்ப்பான் குறிப்பிடப்படுகிறானோ அங்கெல்லாம் அவனைத் தவசீலன், மெலிந்தவன், பசலை படிந்தவன், தீ கர்மம் செய்பவன் என்றே தமிழிலக்கியம் சொல்கிறது. அங்கே சொல்லப்படும் பிறப்பொழுக்கம் அதுவே.
சௌம்யநாராயணன்: அது சரிதான்… வேளாப் பார்ப்பான் என்ற ஒரு குறிப்பும் உள்ளது. அவர்கள் சற்று கீழாகவே கருதப்பட்டனர்
ஆனால், இதே பார்ப்பனர்கள் வாயில்களாகவும் இருந்துள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது
நான்: வள்ளுவரின் காலகட்டத்தில்- அதவாது சிலம்பின் காலகட்டத்தில் – வேள்விநெறியை நிராகரிக்கும் பார்ப்பார்கள் இருந்தனர். சிலம்பில் கோவலனின் மதுரைப் பயணத்தில் சந்திக்கிறான்.
குறள் வருண நெறியை இறுக்கமான ஒரு நியதியாக முன்வைக்கிறதென்பதற்கு ஆதாரங்களேதும் இல்லை. ஆனால் அது வருண சாதிக்கு நேர் எதிரான கலகக்குரலை எழுப்பவும் இல்லை.
சௌம்யநாராயணன்: வேள்வி நெறியை நிராகரிக்கும் என்று சொல்வதைவிட… பார்ப்பனர்களுக்கென்று ஒத்துக்கப்பட்டிருந்த தொழில் என்பதாகக் கொண்டு பார்க்கையில் கோயில் வழிபாடுகளில் பூசாரிகளாக இருந்தவர்களை எங்கே பொருத்துவது என்பது வினாவாகிவிடும்..
குறள் எந்த கலகக் குரலையும் எழுப்பவில்லை என்பது உண்மை..
ஆனால், அது சமத்துவத்தைப் போதிப்பதாக, அதுதான் தமிழ் நெறி என்பதாக ஒரு உருவேற்றம் நிகழ்ந்துள்ளது. அது சரியல்ல
அரச குலத்தவர்களில் மகுட தியாகிகள் என்றொரு பிரிவினர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.. அவர்களை அரச வர்ணத்தில் அல்லாது வேறிடத்தில் வைக்க முடியாது…
நான்: கோயில்களில் பார்ப்பார் பூஜைசெய்ய ஆரம்பித்ததெல்லாம் 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், பல்லவ சோழ காலகட்டத்தில். முற்காலத்தில் அவர்களுக்கும் கோயில்களுக்கும் சம்பந்தமில்லை. அவர்கள் வைதிகர்கள். வேத வேள்விசெய்பவர்கள்…ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னால் கோயில்களில் வள்ளுவர் [பறையர்ப்பிரிவினர்] கூடப் பூசை செய்துள்ளனர். உவச்சர்கள் பூசை செய்துள்ளனர். தென்னகக் கோயில்களில் 17 ஆம் நூற்றாண்டுவரைகூட அப்படித்தான்
வேதவேள்வியும் ஆலயவழிபாடும் ஆகமங்கள் மூலம் இணைக்கப்பட்ட காலகட்டம் மிக மிகப் பிந்தையது. அதுவே சைவ வைணவ பெருந்தெய்வ உருவாக்கக் காலகட்டம்…….. புராணங்கள் உருவான காலகட்டம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

குடியானவர்

குடியானவர் - குடி என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான சொல். சாதி என்ற சொல்லால் சாதியைக் குறிக்கும் முன்னரே குடி என்ற சொல்லே பயன்பட்டு வந்துள்ளது. தொல்காப்பியம், திருக்குறள் எல்லாவற்றிலும் ஜாதியை குடி என்றே சொல்லியிருக்கிறார்கள். குடியானவர் என்ற சொல்லின் மேன்மையும் தொன்மையும் விளங்கியிருக்கும். நாடோடி/பழங்குடி வாழ்க்கைக்கு மேம்பட்டவர் குடியானவர். குடியானவர் என்றால் நாடோடி வாழ்க்கையில் இருந்து ஓரிடத்தில் நின்று நிலைத்து வாழ்வதற்கான வாழ்வாதாராங்களை, தனக்கும் தன்னை அண்டி வாழும் பிற சாதிகளுக்கும் உருவாக்கி, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளோடு வாழும் வெள்ளாளர். குடியானவர் என்ற சொல்லிற்கு விவசாயி; குடிகளைக் காப்பவர்; நாட்டின் பிரஜை என்று பல்வேறு பொருள்களில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கொத்துக்காரர், மணியக்காரர், பட்டக்காரர் என்று ஒருவன் எந்த பதவி வகிக்கவும் அடிப்படையில் அவன் குடியானவராக இருத்தல் வேண்டும். கொங்கதேச வரலாறு முழுக்கவே குடியானவர்கள் பட்டக்காரர் பதவி பெற்ற வரலாற்றைப் பல இடங்களில் காண முடியும். கவுண்டன், வெள்ளாளன், காராளன் என்பதுபோல குடியானவர் என்பதும் நம்மை குறிக்கும் ஒரு சொல்.

தொல்காப்பியம்:

""பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யாருளே உணர்வொடு திருவென
முறையுறுக் கிளந்த ஒப்பினது வகையே""

மேற்கண்ட பாடல் அன்றி பல இடங்களிலும் குடி என்று குலம் குறிக்கப்பட்டுள்ளது.

திருக்குறளில் ஜாதியை (குடி) பற்றிய குறள்கள் - குடி செயல்வகை, குடிமை என்ற அதிகாரங்களே உண்டு.

இவை மட்டுமின்றி ஏராளமான சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் ஜாதியை குறிக்க குடி என்ற சொல்லே பெரும்பாலும் பயன்பட்டுள்ளது. அக்காலத்து டிக்ஷனரியான பிங்கள நிகண்டும் குடியை குலம், இனம், ஜாதி என்று உறுதி செய்கிறது. தீய பழக்கங்களால் ஜாதியை அழிக்கப்பவர்கள் குடிக்கேடி என்றும் குடிக்கேடன் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். அவ்வளவு ஏன், ஜாதிப் பெருமைக்கு பழைய பெயர் குடிச்செருக்கு என்பதேயாகும். மேலும் குடி என்னும் சொல், பல இடங்களில் வசிப்பிடம், ஊர், கிராமம் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. குடிக்கூலி (குடக்கூலி என்று திரிந்தது) என்பதும் ஓரிடத்தில் வசித்ததற்கான வாடகை. குடிக்காணம் என்பது வீட்டு வரி. குடிக்காசு என்பது கிராம வரியும், குடிக்காவல் (பாடிகாவல் என்றும் சொல்லப்படுவது) ஊர்க்காவலையும் குறிக்கும்.

குடியானவன் என்ற சொல் வெள்ளாளர் (விவசாயி) என்றும் பிரஜை என்றும் ஓரிடத்தில் நின்று வாழ்பவன் என்ற பொருளிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

குடியானவன், குடி என்ற சொற்களின் மேன்மையும், தொன்மையும் விளங்கியிருக்கும்.

மேலே கண்ட இலக்கிய மேற்கோள்கள் மூலமே, ஜாதி-ஊர்-விவசாயம்-வசிப்பிடம் போன்றவற்றின் இடையே உள்ள ஒற்றுமை ஓரளவு விளங்கியிருக்க வேண்டும். ஆதியில் மனிதன் உணவு சேகரிப்பவனாகவும், ஓரிடத்தில் நிலைபெறாது இடப்பெயர்ச்சிக்கு ஆட்பட்டவனாக, நாடோடியாக இருந்தான். அடிப்படைத் தேவைகள், வாழ்விடம் எதுவும் உறுதியில்லை என்ற நிலையற்ற வாழ்க்கைச் சூழலால் அவனது வாழ்க்கை முறை இப்படித்தான் என்று வரையறுத்துக் கொள்ள இயலவில்லை.

ஓரிடத்தில் நின்று வாழ அடிப்படைத் தேவைகளாக உணவும் நீரும் வேண்டும். உணவை உற்பத்தி செய்யவும், நீரை முறையாக தேக்கி பயன்படுத்தும் பாசன முறைகளும் வெள்ளாளர்கள் கைத்திறன் ஆதலால், ஊர் அமைப்பை நிறுவி நின்று வாழும் முறையை கொண்டு வந்தவன் விவசாயியான வெள்ளாளன். ஊர் அமைப்பு உருவான பின்னர்தான் நிலையான வாழ்க்கை முறை, பிற தேவைகளுக்கான ஜாதிகளை (18 கட்டுக்கண்ணி சாதிகள்) சேர்த்தது, ஒருவருக்கொருவர் பின்பற்றவேண்டிய சட்டம், சமூக கொள்கைகள், வாழ்க்கைமுறையின் அடிப்படையில் பண்பாடுகள், வழக்கங்கள் அனைத்தும் தோன்றின. சமூகங்கள் இப்படித்தான் உருவாயின. இப்படி நின்ருவாழும் சாதிய சமூக வட்டத்துக்குள் வராதவர்கள், சமூக வாழ்க்கைக்கு விரோதமாக செயல்பட்டு விலக்கப்பட்டவர்கள், OutCaste ஆவர்.

ஆக, குடியானவன் என்றால் சமூக வாழ்க்கைமுறைக்கு வந்தவன் என்றும், ஓரிடத்தில் நின்று வாழ்பவன் என்றும், இந்த பண்பட்ட வாழ்க்கைமுறைக்கு தேவையான அடிப்படைகளை அனைத்து சாதிகளுக்கும் உருவாக்க காரணமான வெள்ளாளர் குடியானவர் என்றும் முதன்மையாக அழைக்கப்பட்டார்.

பின்னர்தான் இந்த பெயரின் பெருமையை எண்ணி, இதே சமூக வாழ்க்கை முறைக்கு வந்த பிற சாதிகளும் பின்பற்ற துவங்கின. ஆனால் இன்றளவும் குடியானவர் என்றால் விவசாயம் செய்பவர் வெள்ளாளர் என்ற பொருளே அனைவர் மனதிலும் தோன்றும்.

ஓரிடத்தில் நின்று வாழ்வது சாதாரணமான காரியம் அல்ல. நாடோடி வாழ்க்கையில் உணவு சேகரிப்போடு வேலை முடிந்தது; ஆனால் குடியான வாழ்க்கையில் உற்பத்தியும் செய்து, சேகரித்து, பாதுகாத்து, உற்பத்திக்கான துணை சாதிகளையும் ஆதரித்து, சமூக சட்டங்களை காத்து, ஒருங்கிணைத்து செல்லவேண்டும். அதனால் தான் குடியானவர் என்றாலே, அதிக பொறுப்போடு இருக்க வேண்டியவர், கடினமாக உழைக்கக் கூடியவர், ஒழுக்கமாக இருக்க வேண்டியவர் என்று சொல்கிறார்கள்.

சிறிது நேரம் அதிகமாக தூங்கினாலும்கூட,

"குடியான பையன் இந்நேரம் வரைக்கும் தூங்கறதா??"

என்பார்கள். இந்த வார்த்தையை கேட்காத கவுண்டன் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இல்லை என்று சொல்பவன் நிச்சயம் கவுண்டராக இருக்க வாய்ப்பு குறைவு.

அரசர, பிராமணர், வியாபாரிகள் என்று சமுதாயத்தில் யாருக்கு என்ன தேவை என்றாலும் பாதிப்பு, நஷ்டம் என்றாலும் அதை இறுதியாக தாங்குவது குடியானவர்களே. இதை கம்பரும் தனது ஏர் எழுபது நூலில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அதே கருத்து, மிக எளிமையாக ஒரு பழமொழியாகவும் உண்டு,

"செட்டி நட்டம் குடியானவன் தலையில்"

அதாவது ஒரு செட்டியார் தனது வியாபாரத்தில் நொடிந்தாலும் அதை குடியானவரிடம் விலை குறைக்கச் சொல்லி பேரம் பேசித்தான் சமன்செய்து கொள்ளவேண்டும்.

குடியான பொறுப்புணர்ச்சிக்கு உதாரணமாக,
"குடியான பிள்ள வெளையாட போனாலும் ஒரு கத்த வெறகோட வரும்"

என்ற பழமொழி சொல்வார்கள்.

கேலிக்குகூட ஏதாவது முறையற்ற பேச்சுக்கள் பேசினாலும்,

"குடியானவன் பேசற பேச்சா இது?"

குடியானவர் நீதியுணர்ச்சிக்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேண்டாம். இது கொங்குப் பகுதியில் சேலம் வட்டத்தில் உலவும் சேகரிக்கப்பட்ட பழமொழி.
"தாய் தந்தை செத்தா பொழைக்கலாம்
நாணயம் செத்தா பொழைக்கலாமா?"

இன்றும் பெரும்பாலான பகுதிகளில் கவுண்டர்கள் அல்லது பிற வெள்ளாள ஜாதியினர் வாழும் பகுதிகளை குடித்தெரு, குடியான தெரு என்று சொல்வார்கள்.

வெள்ளாளர் அனைவரது ஆதி பாட்டனான மரபாளன் தனது பல பேர்கள் பற்றி வெள்ளாளர்களின் ஆதி குருவான ஸ்ரீ போதாயன மகரிஷியிடம் கேட்டபோது, போதாயனர் குடியானவன் என்பது மரபாளனின் பெயர் என்று கூறி, குடியானவன் என்பதற்கு விளக்கம் கொடுத்தது கீழே உள்ள புகைப்படம் கொடுக்கப்பட்டுள்ளது.,

அண்ணமார் சாமிகள் கதையில் நல்லதங்காள் தங்கள் குடும்பத்தை குடியானவர் என்று சோழப் பிரதானியிடம் சொல்லும் வாசகம்,

"உத்தமியாள் நல்லதங்கை ஏது சொல்வாள் அந்நேரம்
நாங்கள் பட்டிக்காட்டு குடியானவர் எங்களுக்கு பல கறியும் சிக்காது
ஐந்தாறு கறி நினைத்து அண்ணா உண்ணுமினிச் சாதமென்று"

ஆக குடியானவர் என்பது ஒரு சமூகவியல் சொல்லாகும். இந்த சமூகவியல் சொல்லோடு கொத்துக்காரர், மணியக்காரர், பட்டக்காரர் போன்ற நிர்வாகவியலைக் கலந்து குழப்பிக் கொள்வது தகாது. அந்த நிர்வாகப் பதவிப் பேர்கள் குடும்ப உறவுகளுக்குள் புகுந்த கொங்குப்பகுதிகளில், அன்று முதல் இன்றளவும் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இதுபோன்ற குழப்பங்கள் கொங்கில் வேறு எங்கும் காணவியலாது. குடியானவர் என்பது வெள்ளாளர், காராளர், குவளைமார்பன், கங்கா குலத்தோர் என்பதுபோல வெள்ளாளர்களுக்கான பெருமைமிகு பொதுப்பேராகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133: ஒழுக்கம் உடைமை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
மு.வரதராசனார் உரை:ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

நல்லகுடிமக்கள் நாட்டில் சிறந்து விளங்கினால் வழிவழியாக அந்தப் பண்பாடு சிறந்து விளக்கமுற்று வளர்ந்துவரும். திருக்குறளுக்குச் சாதிமுறை உடன்பாடன்று. ச்ாதிமுறை அயல்வழக்கு சாதி முறையில் பிறப்பே ஆட்சி செய்யும். பிறப்பே சாதிமுறையை உறுதிப்படுத்தும். அந்நெறியல்லா முறைப்படி இழிவாகப் பிறந்தவனானாலும் அவன் கல்வி கேள்விகளால் மாறி வளரும் வளர்ச்சியைச் சாதிமுறை ஏற்பதில்லை; இல்லை. அங்ங்ணம் பிறந்தவர்கள் கல்வி கேள்வி பெறுவதற்குரிய உரிமையும் பெறமாட்டார்கள். இந்தக் கொடுமையான, வள்ளுவத்திற்கு முரணான சாதி முறைகள் தாம் பிற்காலத் தமிழகத்தை நிலை அழியச் செய்தன; இன்றும் அழித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சாதிமுறைகள் வள்ளுவத்திற்கு முற்றாக உடன்பாடில்லை. ஆனால் குடி, குலம் ஆகியவற்றில் வள்ளுவம் நம்பிக்கை கொண்டிருக்கிறது இன்றைய மனிதஇயல் விஞ்ஞான நுண்ணறிவும்கூட குடி, குலம் ஆகியவற்றின் வழி இயல்பில் அமையும் சில திறன்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் இது தேக்கமுடைய மனப்போக்கு அல்ல. வளர்ச்சிக்குச் சில தலைமுறைகள் ஆகும் என்பதே இந்த விஞ்ஞானக் கருத்தின் முடிவு. சிறந்த பெற்றோர்களுக்குப் பிறந்து சிறந்து சுற்றச் சூழலில் வளரும் குழந்தைகள் சில நல்வியல்புகளை எளிதில் பெறுவர். இது குல அமைப்பு. 會彎 ... பெறுதற்கரியதம் குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்" கம்ப நாட்டு 38 என்று கம்பனும் கூறுவான். குடி அதனினும் விரிந்தது. அதுமொழிவழிப்பட்ட ஒரு நாட்டு வழிப்பட்ட சூழலைக் குறிப்பது. அக் குடிமக்களின் சீலங்கள் எளிதில் அடுத்த தலைமுறையினருக்குக் கிடைக்கும் என்ற படிப்பினையைக் குடிமை என்ற அதிகாரத்தில் திருக்குறள் விரித்துக்கூறுகிறது.

பிரிவு: உலக மாந்தர் அனைவருக்கும் பிரிவு என்பது நிகழக்கூடிய ஒன்று. அவ்வகையான பிரிவுகள் நிலத் தன்மையின் அடிப்படையிலும் மக்கள் வாழ்க்கை முறையின் அடிப்படையிலும் அமைந்தாலும், பெரும்பான்மை சில அடிப்படைத் தேவைகளின் பொருட்டே அமைகின்றன. இத்தகைய தேவைகள் அல்லது கடமைகள் உலகப் பொதுவாக இருப்பதைத் தொல்காப்பியர் சுட்டுகிறார். இக்காரணங்களை,

''ஓதல் பகையே தூதுஇவை பிரிவே
என்று சுட்டுகிறார்''இதோடு, (தொல்.971)
''பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே
உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான்'' (தொல்.979)

என்பதையும் இணைக்கிறார். இங்கு ஓதல், பகை, தூது, பொருள் என்ற நான்கும் பிரிவிற்குக் காரணங்களாக அமைவதைக் காணமுடிகிறது. இன்றைய நிலையிலும் இந்நான்கு கூறுகளுமே உலகின் பெரும்பான்மை பிரிவிற்கு மூலமாக அமைவதை உணரலாம்.

பண்புகள்: அறம் பொருள் இன்பங்களில் வழுவாமல் வாழும் உயர் நெறியே இல்லற நெறி. அந்த இல்லற நெறி எல்லோராலும் போற்றப்படும் செம்மை நெறியாக, வழுவில் நெறியாக, வையகத்து வழிகாட்டு நெறியாக அமைய\தலைமக்களிடையே இருக்கவேண்டிய பண்புகள் இவை இவை எனப் பட்டியலிடுகிறார் தொல்காப்பியர். இவற்றை

''பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவி நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே''(தொல்.1219)

என்கிறது நூற்பா. தோன்றிய குடிநிலை, குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம், வினை ஆளும் தன்மை, வயது, வடிவம், நிலைத்த காதல், மனஅடக்கம், பரிவுணர்வு, அறிவு, செல்வம் இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் தலைமக்களுக்கு அமைய வேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்பட்ட தமிழின் வாழ்க்கையையும், தொலைநோக்குச் சிந்தனையின் வளத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.

உயிர்களின் இன்பம்: உயிர்களின் இன்பம் பற்றிக் கூறுமிடத்து உலகப் பொதுவானதொரு சிந்தனையை முன்வைக்கிறார் தொல்காப்பியர். மனதின் தன்மையைப் பொறுத்தே இன்பத்தின் தன்மையும் அமையும் என்கிறார். இது மனித உயிர்க்கு மட்டுமல்லாது எல்லா உயிர்க்கும் பொருந்தும் என்பது அவரின் தொலைநோக்கு. இதனை,

''எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்''. (தொல்.1169)
என்ற நூற்பா உணர்த்துகிறது.

முதுமையில் கடமை: இல்லற வாழ்க்கையில் இன்பத்திற்கும், பொது வாழ்க்கையில் புகழுக்கும், தனிமனித ஒழுக்கத்துக்கும், தலைமைக்குத் தேவையான தன்மைக்கும் இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அதற்கெல்லாம் மேலே சென்று இவ்வகையான வாழ்க்கை முறையினை வாழ்ந்து முடித்து, முதுமையினை எய்தியோருக்கும் வாழ்க்கை முறையினை வகுக்கிறார்.

''காமம் சான்ற கடைக் கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே''(தொல்-1138)

என்ற முதுமையின் பயனைச் சுட்டுகிறார், இல்லற வாழ்வின் பயனை இது வலியுறுத்துகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பண்டைய தமிழ்ச் சமூகம் நில வரையறை அடிப்படையில் ஐந்து பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது.
1. குறிஞ்சி – தலைமக்கள் இருவரும் சேர்ந்து புணரும் இடத்தைக்குறிப்பது
2. பாலை – காதலால் கூடிப் பிரிந்த இருவரது பிரிவைக் குறிப்பது
3. முல்லை – தலைவனது பிரிவை எண்ணி தலைவி ஆற்றாது வருந்துவது
4. மருதம் – தலைமக்கள் தங்களுக்குள்ளே பிணக்குற்று ஊடல்கொள்வது
5. நெய்தல் – தலைமகனை எண்ணி, தலைமகள் இரக்கம் கொள்வது.

இந்த ஐவகை நிலத்தின்கண் வாழும் மக்கள் தங்களுக்குரிய திணை நிலைப் பெயராலேயே அழைக்கப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உதாரணமாக,

குறிஞ்சி – குறவன் , குறத்தி
முல்லை - ஆயர் , ஆய்ச்சியர்
மருதம் - உழவர் , உழத்தியர்
நெய்தல் - நுளையர் , நுளைச்சியர்
பாலை - எயினர் , எயிற்றியர் என்று அழைக்கப்பட்டனர். இத்திணைநிலைப் பெயர்களே பின்னாளில் முறையே நரிக்குறவர் சமுதாயமாகவும், கள்ளர் இனத்தவராகவும், குடியானவர்களாகவும், செம்படவர் கூட்டமாகவும், நிரை மேய்ப்பவர்களாகவும் பிரிந்து அவரவர் நிலத்திற்கு ஏற்ற வேலைகளைச் செய்யலாயினர்.

நிலவுடைமைச் சமூகம் தோன்றிய பிறகு நால்வருணப் பாகுபாடு(குல வேறுபாடு) மேலோங்கியது. பரந்து விரிந்த பெரிய நிலப்பரப்பை ஆட்சி செய்பவர் ’அரசர்’ எனவும், அரசருக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் ’அந்தணர்’களும், நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த வாணிபம் செய்ய ’வணிகர்’களும் , வாணிபத்திற்குத் தேவையான பொருளை ஈட்டித் தர ’வேளாளர்’ மரபினரும் வாழ்ந்து வந்தனர்.
அரசருக்கு உரியவையாக படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர், தார், முடி, ஆரம், கழல் முதலியவை வகுக்கப்பட்டன.
அந்தணர்கள் ஈதல், வேட்டல், வேட்பித்தல், ஓதல் எனும் தொழிலை உடையவர்களாக கருதப்பட்டனர்.
வைசியர் என்று கூறப்படும் வணிகர்கள் ’எண்வகை உணவு’ என்று சொல்லப்படும் பயறும் உளுந்தும் ; கடுகும் கடலையும்; எள்ளும் கொள்ளும்; அவரையும் துவரையும் தங்கள் வாணிபத் தொழிலில் பயன்படுத்தி வந்துள்ளனர்.
வேளாளர் எனப்படும் ’வேளாண் மாந்தர்’ உழுதுண்டு வாழ்தலே அவர்களது தலையாயத் தொழிலாக இருந்து வந்துள்ளது.
மேலும் ’விவசாயம்’ முறையாகக் காலூன்றத் தொடங்கிய பின் தொழில் அடிப்படையிலான பிரிவுகள் தோன்றலாயின. இன்று சாதி வாரியான சமூகம் தோன்ற விவசாயம் முக்கிய அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதை மறுக்க இயலாது.
விவசாய நிலத்தைப் பண்படுத்த ’கலப்பை’ எனும் கருவி தேவைப்பட்டது. அதை வடிவமைக்க ஒரு ’தச்சர்’ தேவைப்பட்டார்.
நிலத்தில் குழிதோண்ட கடப்பாரை, ஆப்பு முதலியவை செய்ய ஒரு ’கொல்லர்’ தேவைப்பட்டார்.
பண்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயம் செழிக்க பூமிபூசை செய்ய ஒரு ,அந்தணர்’ தேவைப்பட்டார்.
நிலத்தில் வேலை செய்யவும், வேலையைப் பகிர்வதற்கும் ’குடியானவன்’ குடும்பங்கள் தேவைப்பட்டன.
பாடுபட்ட நிலத்திலிருந்து வரும் தானியங்களைச் சேமித்து வைக்க பெரிய மட்கலங்கள் செய்ய ’குயவர்’ தேவைப்பட்டார்.
உழைத்துக் களைத்து வியர்வை பட்ட துணியை வெளுத்தடுக்க ஒரு ’வண்ணார்’ தேவைப்பட்டார்.
உழைத்து சேர்த்த பணத்தில் பொன்னும், மணியும் செய்து அழகு பார்க்க ஒரு ’தட்டார்’ தேவைப்பட்டார்.
உழைத்த களைப்பு தெரியாமல் இருக்க தேர் , திருவிழா என்று களிப்பூட்டும் நிகழ்வுக்கு ஒரு பறை அடிப்பவன் தேவைப்பட்டான்.

இவ்வாறாக அவரவர் தொழிலில் நின்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொழிலைச் செவ்வனே செய்து தாமும் மற்றவரும் கூடி வாழ்ந்து இன்புற்றிருந்தனர். நாளடைவில் இத்தொழிற்பிரிவினரிடையே பாகுபாடு ஏற்பட்டு பல்வேறு சாதிகளாகவும், இனக்குழுக்களாகவும் பிளவுற்றன. மக்களின் இன்பவாழ்வு குலையத் தொடங்கியது. அவரவர் வேலையை அவரவரே செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் கூட்டுமுயற்சி தோல்வியுற்றது. குலத்தொழில்கள் நசியத் தொடங்கின. ’விவசாயம்’ இன்று வெறும்சாயமாக மாறிவிட்டது. விவசாயம் நலிவடைய இத்தொழிற்பிரிவுகளில் ஏற்பட்ட வீண் பிணக்குகளே காரணமாகி விட்டன.

அத்துடன் நில்லாது, ”ஒரு ஊருக்கு பல வழி என்பது போல” ஒரு ஊருக்குள் பல சாதி என்றாகிவிட்டது. தொழில் தெரிந்தவன் வேலை செய்ய மறுக்கிறான். இதனால் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வுகள் ….. விலைவாசி உயர்வுகள் ….. சரியான வடிவமைப்பின்மை ….. கால விரயங்கள்….. இன்னும் பல்வேறு இன்னல்கள் அடுக்கடுக்காக நம் வாயிலில் காத்துக் கொண்டுதான் உள்ளன.

இன்று தம் குலத்தொழிலைச் செய்ய மறுக்கும் சமத்துவப்பிரியர்கள் யாவரும் தங்கள் சாதிக்கென சலுகைகள் ஏதேனும் தரப்படுமாயின் அதை வாங்க முன்வரிசைக்கு வந்து விடுகின்றனர். இன்று கல்விக் கூடங்களில் சாதியின் பெயரால் தரப்படும் பல்வேறு சலுகைகள் எல்லாம் அச்சமூகம் பின்தங்கியவர்களுக்குக் கிடைத்தால் பரவாயில்லை. அச்சமூகத்தில் முன்னேறியவரும் அந்த உதவித் தொகைகளைப் பெற முந்தும் அவலம் நம் நாட்டில் ஏராளமாகவும் அதிலும் தாராளமாகவும் உள்ளது. அதைவிட முன்னேறிய சமூகத்தில் உள்ள ஏழைக்கு அத்தகை உதவித் தொகை கிடைப்பதில்லை. காரணம் சட்டம். சட்டத்தின் இருட்டறைக்குள் ஏழை பணக்காரணாகவும் , பணக்காரனை ஏழையாகவும் காட்டும் மந்திர வித்தை வேலை செய்கிறது. உதாரணமாக, முன்னேற்றம் அடையாத சமூகத்தில் ஒருவர் சலுகை அடிப்படையிலோ அல்லது தன் கடின உழைப்பின் காரணமாகவோ நல்ல வேலையில் அமர்ந்து விடுகிறார். ஆனால் அவர் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை, கல்விக் கட்டணத்தில் சலுகை, தேர்வு விண்ணப்பக் கட்டணங்கள் குறைவு, தேர்வில் மதிப்பெண் சலுகை, இட ஒதுக்கீடு, குறைவான தகுதி மதிப்பெண், வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அனைத்துமே சலுகையில் பெற்றவர், அவரது ஊதியத்தில் மட்டும் எந்தச் சலுகையும் குறையாது முழுமையாக பெற்றுக் கொள்கிறார். ஆனால் இதே போன்ற சலுகைகளை முன்னேறிய சமூகமாகக் கருதப்படும் ஒன்றில் வாழும் ஏழைக்குக் கிடைப்பதில்லை. சாதி வாரியான மதிப்பெண் நிர்ணயத்தால் 0.1 மதிப்பெண்ணில் வேலை இழந்தோர் எத்தனை இலட்சம் பேர் இருப்பர்? இதை எண்ணிப் பார்த்தால் சமத்துவம் என்பது சாதியில் இல்லை. வாழும் வாழ்வில் உண்டு என்பது திண்ணம்.

அனைவருக்கும் சமமான கல்விச் சலுகைகள் தரப்படாத வரை சாதி எனும் ஆணிவேரை சமத்துவம் எனும் புயல் பிடுங்க இயலாது.

முத்துராமலிங்க தேவரை முத்துராமலிங்கராக்கியது சமச்சீர் கல்வி
வ.உ.சிதம்பரம் பிள்ளையை வ.உ.சிதம்பரனாராக்கியது சமச்சீர் கல்வி
உ.வே.சாமிநாத ஐயரை உ.வே.சாமிநாதராக்கியது சமச்சீர் கல்வி
அண்ணாமலைச்செட்டியாரைஅண்ணாமலையாராக்கியதுசமச்சீர்கல்வி
சரோஜினி நாயுடுவை சரோஜினி அம்மையாராக்கியது சமச்சீர் கல்வி

இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்களுக்கு சாதிப் பெயர்களை நீக்கி சமத்துவக்கல்வி தந்து ’சாதியற்ற பாடநூல்’ என்று சான்றளித்து விட்டு பாடநூலை பயிலும் மாணாக்கரிடம் சாதிச்சான்றிதழ் கேட்பது முறையோ? இது தகுமோ?

”சாதி என்னும் சனி தொலைந்தால் தான்
சமத்துவம் என்னும் ஞாயிறு பிறக்கும்” - கலைஞர்.

”சாதி என்னும் சான்றிதழ் தொலைந்தால் தான்
சமத்துவம் என்னும் சான்றாண்மை பிறக்கும்”
என்றென்றும் பாடசாலைக்காக
ப.சரவணன்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

தொகுப்பு நதியா பரமதாஸ்-கலைப்பீடம் யாழ்பல்கலைக்கழகம்
```````````````````````````````````````````
சாதி என்பது தொழில், பொருளாதார வசதி, இனம், போன்றவற்றின் அடிப்படையிலான சமூக தரப்படுத்தல்கள் ஆகும். சாதி மரபு மற்றும் பிறப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதோடு பொது வழக்கு அல்லது சட்டம் மூலம் பாதுகாக்கப்டுகிறது.

பொருளடக்கம்:1. சாதியின் தோற்றம்2. இந்திய சாதி அமைப்பு3. இலங்கை சாதி அமைப்பு4. இவற்றையும் பார்க்கவும்5. மேற்கோள்கள்6. வெளி இணைப்புக்கள்1. சாதியின் தோற்றம்சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் மானிடவியல் கோட்பாடுகள் [1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்த பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாக கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:1. மரபுக் கோட்பாடு (traditional theory)2. தொழிற் கோட்பாடு (occupational theory)3. சமயக் கோட்பாடு (religious theory)4. அரசியற் கோட்பாடு (political theory)5. இனக் கோட்பாடு (racial theory)6. படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)1. 1. மரபுக் கோட்பாடுசாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும். ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது என குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.1. 2. தொழிற் கோட்பாடுசாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.1. 3. சமயக் கோட்பாடுசாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையை தோற்றுவித்தது.1. 4. அரசியற் கோட்பாடுஉயர் சாதியினர் தமது சலுகைகளை தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துகொண்ட அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.1. 5. இனக் கோட்பாடுஆரியர்கள் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டை காட்டத் தொடங்கினர்." [2]1. 6. படிமலர்ச்சிக் கோட்பாடு2. இந்திய சாதி அமைப்புஇந்திய துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைப்பெற்றுள்ளன.தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத் தெரியவில்லை.3. இலங்கை சாதி அமைப்புஇலங்கையில் பாடசாலைக் கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு, பாரளுமன்ற ஆசன ஒதுக்கீடு போன்ற வற்றுக்கு சாதி சார்பான இட ஒதுக்கீடுகள் கிடையாது. திருமணச் சட்டங்களிலும் சாதி இடம்பெறவில்லை. எனினும் இலங்கையில் வாழ்கின்ற தமிழர், சிங்களவர் ஆகிய தேசிய இனங்கள் வலுவான சாதிப் படிநிலை அமைப்பை தம்மகத்தே கொண்டிருக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 சாதி என்பது தமிழர்கள் செய்தொழிலால் அமைந்த பிரிவுகளுக்கு வைத்த பெயர். சாதிப்போர் சாதியோர் என்று அவர்கள் மேற்கொண்ட் தொழிலில் சாதிப்போர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சொல் என்று கூறுகிறார் அயோத்திதாசர்

ஆங்கில சமூகவியல் அறிஞர்கள் போர்த்துக்கீசிய மொழியில் இருந்து எடுத்தாளப்பட்ட காஸ்டஸ் என்ற சொல் அடிப்படையில் சமஸ்கிரிதத்தில் ஜாதி என்றழைக்கப்பட்டது வாழும் இடம் சார்ந்ததென்று கருதினர். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பிறந்து கூடி வாழ்ந்த பிரிவினரைக் குறிக்க சேரி என்ற பெயரும் அங்கு வாழ்ந்தவர்களை அடையாளப்படுத்த சாதியையும் குறித்தனர் என்பது சமூகவியலாரின் கருத்து
சாதி தமிழ்ச்சொல்.இலக்கண,இலக்கியங்களில்பயின்றசொல்.தமிழ்ச்சொற்களைச்சங்கதமாக்கச்சிலசித்துவேலைகள்.தானம்-ஸ்தானம்.திரம்-ஸ்திரம்.பெண்சாதிக்குஇணையானசொல்,நல்லசாதிமாடு\ நல்லசாதிமரம்

ஜாதி என்ற சொல் சாதி என்று தமிழில் பழங்காலத்தில் இருந்து உபயோகத்தில் உள்ளது.
வடமொழிகளின் இலக்கியங்களில் ஜாதி என்னும் சொல் பயனாவது போலவே,
அங்கிருந்து தமிழில் தருவிக்கப்பட்டு சாதி (< ஜாதி) என தற்பவமாகப் பயன்படுகிறது.

உ-ம்: இந்தியாவில் மூன்று முதலைச் சாதிகள் உள்ளன.
இடங்கர், கராம் என்பவை - புறநானூறு 37:
கராஅம் கலித்த குண்டுகண் அகழி
இடங்கரும் குட்டத்து உடன்தொக்கு ஓடி
இடங்கர்/விடங்கர் Gharial
கராம் - sea water crocodile (karai = seashore)

மலைபடுகடாம், குறிஞ்சிப்பாட்டு - இவற்றில் முதலைகளில் மூவகைச் சாதிகள் என்று
நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். இன்றும் அது இந்தியாவில் முதலைகளுக்குப் பொருத்தம் தான்.
(1) மகரம் - Mugger crocodile living in fresh waters. Mugger (english) < Makara (sanskrit, tamil).
(2) இடங்கர்/விடங்கர் Gharial
(3) கராம் - sea water crocodile (karai = seashore)
groups.google.com/forum/#!topic/houstontamil/lC7RRAFRb7c

தெலுங்கு ஜாதி, கன்னட ஜாதி, பிராமண ஜாதி, வேளாள ஜாதி - பாரதியார் போன்றோர் பயன்படுத்தி உள்ளனர்.

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

இக் குறளில் பிறப்பு என்னும் சொல் ஜாதி என்னும் பொருளில் ஆண்டுள்ளார் திருவள்ளுவர்.
மறை ஓதும் பிராமணர் ஜாதிப் பிறப்பு ஆனது ஒழுக்கம் குன்றினால் கெடும் என்கிறார் திருவள்ளுவ தேவர்.

ஜாதி என்ற வடசொல்லை ‘பிறப்பு’ என்று மொழிபெயர்த்தவர் தொல்காப்பியர்.
நால் வருணம் = நாற்பால் என மொழிபெயர்த்தவர் பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் சங்ககால மன்னன்.

பிறப்பே குடிமை - தொல்காப்பியம்
www.tamilvu.org/slet/l0143/l0143ine.jsp?x=274&txt=%F0%A4
”பிறப்பாவது : குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான் அமைந்த
அந்தணர் முதலிய நாற்குலம். "நலத்தின்கண் நாரின்மை தோன்றின்
அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்" என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி
விளங்குதல் புலனாகும்.”

சாதி&sup6; cāti, n. < jāti. 1. Family, clan, race; குலம். (பிங்.). 2. Hindu caste. See வருணம். சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டு (திருவாச. 31, 5). 3. Birth; பிறப்பு. (தொல். பொ. 307, உரை.) 4. Attribute common to a class; ஓரினப்பொருள்களிற் பொதுவாகிய தன்மை. (சி. போ. பா. அவை. பக். 13, சுவாமிநா.) 5. Kind, class, species; இனம். ஆன் சாதிகளே முதல விலங்கு (கூர்மபு. பலவ. 8). 6. That which is superior, genuine; தன்மையிற் சிறந்தது. சாதிமாணிக்க மென்கோ (திவ். திருவாய். 3, 4, 4). 7. Group, multitude; திரள். பறவைச்சாதியன்ன (பெரும்பாண். 229). 8. See சாதிமல்லிகை. 9. Ilangilang. See சிறுசண்பகம். 10. Nutmeg. See சாதிக்காய் கற்பூரஞ் சாதியோ டைந்து (சிலப். 5, 26, உரை). 11. (Mus.) Element of time-measure which specifies the different sub-divisions in accordance with the variety of laku, of five kinds, viz., caturaciram, tiriciram, miciram, kaṇṭam, caṅkīraṇam, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; தாளப்பிரணம் பத்தனுள் ஒன்று. (பரத. தாள. 47.) 12. (Log.) Futile answer; போலியுத்தரம். ஏத்துவாபாச சலம்விளங்குஞ் சாதி (பிரபோத. 42, 5).

சாதி ‘species, Indian caste' < ஜாதி. சாதித்தல் < ஸாதித்தல் என்னும் வடசொல். ஜ, ஸ இரண்டும் ச என்றாகும் தமிழில்.
ஜாதி என்னும் வடமொழிச்சொல்லுக்கான பொருள்கள் மானியர்-வில்லியம்ஸ் வடமொழி அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளதைக் கீழே பதிவு செய்கிறேன்.
जाति=மோனியர்-வில்லியம்ஸ் பேரகராதி ஜாதி என்னும் வடசொல்லுக்கு தரும் எல்லாப் பொருள்களிலும் 2000 ஆண்டுக் காலமாக தமிழ் இலக்கியங்களும்
பயன்படுத்துகின்றன. அதாவது, தொல்காப்பியம், திருக்குறளில் இருந்து சிற்சில சான்றுகள் அளித்துள்ளேன்.
பஞ்சமர்கள் பற்றிப் பழைய தமிழில் சொல்லும் முதல் பாடல் என்ன? இவ்விழையில் பார்ப்போம். உபநிஷதத்தில் பஞ்சமர் என்பதைக் குறிக்கும் சொல்.
நா. கணேசன்

जाति [L=19518] Jāti, is, f. birth, production; the form of existence, whether as a man or animal, which is fixed by birth; position assigned by birth; rank; family, race, lineage; kind, sort, genus, species, class, tribe, caste; the character or peculiarities of a species, the genuine or true state of anything; reduction of fractions to a common denominator; false generalization; a futile answer, a self-confuting reply; a particular figure of speech in rhetoric; a class of metres; a manner of singing; a fire-place; N. of several plants, = Jas-minum Grandiflorum; Emblica Officinalis; mace, nutmeg; [cf. antya-jāti, eka-jāti, dvi-jāti; cf. also Lat. gens; Lith. pri-gentis.]

tamizhtharakai.wordpress.com/ -- தாரகை



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

r-%2Bfraud%2Bmohanrasu.jpg

பெரும் குறள் ஆய்வு பேராசிரியர்(மோகனராசு) திராவிட கொள்கை கொண்டவர் - சர்ச் அடிமைகளாய் தமிழர் மெய்யியலைப் பழிக்கும் திராவிட மலவழியில் (தமிழ் சனியன் தமிழை அழிக்கவே திராவிடம் என்றும், திருக்குறளை மலம், கொளுத்தவேண்டும் என்ற ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் வழி) அவர் நூலில் ஒவ்வா என்பதை - இன்றைய ஒவ்வாமை எனும் பொருளைக் கொண்டு பொருந்தாது என கீழ்த்தரமாய் ஆய்வு கட்டுரை தருகிறார், இது காலணிக்கு பொருத்த காலை வெட்டும் முறை, இதை தான் கால்டுவெல் - பாவணர் என தமிழர் விரோத கிறிஸ்துவ மதவெறியர்கள் செய்தனர். இதற்கு துணையாக தற்கால முறையற்ற 500க்கும் மேற்பட்ட உரையில் ப்ரொஉந்துவதை எடுத்து மேற்கோள், எல்லாமே தமிழ் மரபிற்கு விரோதமாய் வள்லுவம் சொன்னதை மாற்றியும் சொல்லாததை சொன்னதாக் காட்டும் வெறியே ஆகும்



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் (அதிகாரம்:பெருமை குறள் எண்:972)
பொருள் காண - எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் & செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு ஒவ்வா ; ஒக்கும்-நிகர்க்கும்
எல்லா உயிர்க்கும் –என்கையில் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் என ஆகும் (தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327:)செய்தொழில் வேற்றுமையான் என்கையில் இந்தக் குறளில் உயிர் என்பது மனிதர்களை மட்டும் என பொருளாகும்

பிறப்பு ஒக்கும் -தாய் கரு சுமந்து தாய் வயிற்றில் இருந்து பிறக்கிறோம், அனைவரின் பிறப்பும் ஒரே மாதிரி அமைகிறது
செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு ஒவ்வா செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் கிடைக்கும் புகழ் ஒத்திருப்பதில்லை
(ஒவ்வா- எனில் ஒப்பாக - ஒரே மாதிரி அமைவது இல்லை நாம் இதே ஒவ்வா என்பதன் மாற்று வடிவில் ஒவ்வேம் என வள்ளுவர் குறள் 1114ல் பயன்படுத்தியதில் அறியலாம்)
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை

பரிமேலழகர் உரை:மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409:
கலைஞர் மு.கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
Translation:Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.
Explanation:The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
உயிர் என்கையில் எல்லாவித உயிரையும் வள்ளுவர் பல்வேறு குறளில் சொல்லி உள்ளார்.
வள்ளுவர் எழுபிறப்பு என ஏழுவகைப் பிறப்பு எனவும் குறிப்பிட்டுள்ளும் உள்ளார்(எழு பிறப்பு -தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி) - எழுபிறப்பு என ஏழுவகைப் பிறப்பு எனவும் குறிப்பிட்டுள்ளும் உள்ளார் இதில் முழுமையாய் அறத்தை செய்து வாழ்ந்தால் மேலுலகம் செல்ல முடியும் என்பதை வள்ளுவர் ஏற்கிறார், அதன் பின்னும் மீண்டும் மனிதனாகப் பிறக்கிறான், அற வாழ்க்கையோடு உலகைப் படைத்த ஈரைவன் திருவடி பற்றிக் கொண்டால் பிறவியற்ற நல்லாறு அடைய இயலும் என்பது வள்ளுவர் பல்வேறு குறளில் காட்டி உள்ளார்.
பிறப்பு ஒக்கும் என்கையில், பிறப்பு வகையில் வேறுபாடுகள்பிறப்பு வேறுபாடுகள் 4விதம் என்பது மெய்யியல் மரபு

1.அண்டகம் - முட்டையில் குஞ்சு பொரிக்கும் பறவை இனம். (பறப்பன)
2.வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் கொசு முதலியவை
3.சிராயுசம் வகையில் - பாலூட்டிகள் தாய் கர்ப்பப்பையில் சுமந்து யோனி வழியில் பிறப்பு
4. உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன- செடி-கொடி தாவரங்கள்.

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்றவர்- தொழில் வேற்றுமையான் என்கையில் இது மனிதப் பிறப்பை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகும். மேலுள்ள வரியின் பொருள் - பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கர்ப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – பிறப்பு இயல்பு என்பது ஒரே மாதிரியாக அமைகிறது.

செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா
– யாவர்க்கும்
செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள
வேற்றுமையான் – வேற்றுமைகளால்
சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது(ஒத்து இருக்காது)* ஒவ்வாக- ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா
எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக ஒத்து இருக்காது.

பெருமை எனும் இதே அதிகாரத்தில் வள்ளுவரின் அடுத்த குறள்
மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்: கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழஅல் லவர் (குறள் 973: பெருமை)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* (ஒவ்வா வேறோர் குறளிலும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்-காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண் ஒவ்வேம் என்று. குறள் 1114:குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். )
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்றவர்- தொழில் வேற்றுமையான் என்கையில் இது மனிதப் பிறப்பை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகும். மேலுள்ள வரியின் பொருள் - பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கரிப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது

தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி;
எல்லா உயிர்க்கும் என வள்ளுவர் கூறுவது உலகின் அனைத்து உயிர்களையுமே குறிக்கும் என்கையில் அனைத்து உயிர்களை குறிக்கும் என்றாலும் செய்யும் தொழிலால் என்பதால் இது மனிதனையே குறிக்கும் என்பது தெளிவாகும்.

திருவள்ளுவர் மிகவும் தெளிவானவர் - முந்தைய முன்னோர் மரபைப் போற்றுபவர், அவர் கல்வியின் அவசியம் சொன்னவரே கசட அற கற்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். முன்னோர் மரபை ஏற்றால் உம் தமிழரிடம் வழக்கில் இருந்த கொடிய தீய வழக்கங்கள் ஆன புலால் உண்னல், மது - ஏசுவின் ரத்தம் அருந்தல், பலதார மணம், பரத்தை தொடர்பு - இவற்றை வன்மையாய் கண்டித்தார். இறை நம்பிக்கை ஏற்காதோரை பேய் என்பார்

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் -

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133: ஒழுக்கம் உடைமை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
மு.வரதராசனார் உரை:ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

'பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவி நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருஎன
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே''(தொல்.1219)
என்கிறது நூற்பா. தோன்றிய குடிநிலை, குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம், வினை ஆளும் தன்மை, வயது, வடிவம், நிலைத்த காதல், மனஅடக்கம், பரிவுணர்வு, அறிவு, செல்வம் இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் தலைமக்களுக்கு அமைய வேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்பட்ட தமிழின் வாழ்க்கையையும், தொலைநோக்குச் சிந்தனையின் வளத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

குறள் காட்டும் வாழ்க்கை வழிமுறையை காண வேணும், இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் நட்பு தேவை

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல்
மணக்குடவர் உரை: ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794:
மணக்குடவர் உரை:மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும்.

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். குறள் 822: கூடாநட்பு
மணக்குடவர் உரை: நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. குறள் 823:
மணக்குடவர் உரை: நல்லவாகிய பல நூல்களைக் கற்றவிடத்தும், மனம் நல்லாராகுதல் மாட்சியில்லார்க்கு அரிது. இது கல்வியால் அறிதல் அரிதென்றது.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. குறள் 819: தீ நட்பு
மணக்குடவர் உரை: செய்யுந்தொழில் வேறாகச் சொல்லுங்கூற்று வேறாக, ஒழுகுவாரது நட்பு, பயன்படும் நனவின்கண்ணேயன்றிக் கனவின் கண்ணும் இன்னாது. இது பொய்கூறுவார் நட்புத் தீதென்றது.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். குறள் 508: தெரிந்துதெளிதல்
மணக்குடவர் உரை: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும். இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.  நல்ல குடியில் பிறதோர் இழிவான செயலை செய்ய மாட்டார்கள்

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை
மணக்குடவர் உரை: வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 958 குடிமை
மு.வரதராசனார் உரை:ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 956 குடிமை
மணக்குடவர் உரை: பொய்யைச் சார்ந்து அமைவில்லாதன செய்யார், குற்றமற்ற குலத்தைச் சார்ந்து உயிர்வாழ்வோ மென்று கருதுவார். இது சான்றாண்மை விடார் என்றது.
மு.வரதராசனார் உரை: மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957:குடிமை
மணக்குடவர் உரை: உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 960குடிமை
மணக்குடவர் உரை: ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக. இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
சாலமன் பாப்பையா உரை:ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9 நாணுடைமை
மணக்குடவர் உரை:ஒழுக்கம் தப்புமாயின் அத்தப்புதல் குலத்தினைச் சுடும்: அதுபோல நாணின்மை நிற்குமாயின் தமது நலத்தினைச் சுடும். இது நலமில்லையா மென்றது.
சாலமன் பாப்பையா உரை:ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையார்-கண்ணே உள - குறள் 23:3 ஈகை
மணக்குடவர் உரை:இரந்துவந்தார்க்கு இலனென்னா நின்ற துன்பத்தைக் கூறாது ஈதலும் குடிப்பிறந்தான்மாட்டே யுளதாம். இது கொடுக்குங்கால் மாறாது கொடுக்க வேண்டுமென்றது.
மு.வரதராசனார் உரை: யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

மனுவில் குறிக்கப்பட்டு இன்று வழக்கிலுள்ள சாதி முறை வேதங்களின் மிகப் பழமையான சமயத் தத்துவங்களில் இடம் பெறுகிறதா? "இல்லை" என்ற ஒரேசொல்லில் நாம் அதை அழுத்தமாக மறுட்துவிடலாம். பெருஞ்சிக்கல் வாய்ந்த சாதி அமைப்பு முறைத் திட்டத்துக்கு வேத சூக்தங்களில் எத்தகைய தரமும் இல்லை. அது போலவே சூத்திரரின் இழிதகை நிலைமைக்கு தாரமோ; பல்வேறு வகுப்பினர் ஒருங்கே குழுமி வாழ, ஒருங்கே உண்ணப் பருகத் தடை விதிக்கும் எந்தச் சட்டமோ; பல்வேறு சாதியினர் தம்முள் ஒருவருக்கொருவர் மண உறவு கொள்வதைத் தடுக்கும் முறைமையோ; அத்தகைய மண உறவால் வரும் பிள்ளைகளுக்கு விலக்க முடியாத தீக்குறியிட்டுட் தீண்ல்த்தகாதவராக ஒதுக்கி வைக்கும் கட்டுப்பாடோ; எதுவும் அவற்றில் இல்லை. அத்துடன் சிவன், காளி கியவர்களின் அச்சந் தரும் செயல் முறைகளைப் பற்றீயோ; கண்ணனின் சிற்றின்பக் களியாட்டம் பற்றியோ; .. ... வேத்த்தில் ஒரு சுவடு கூடக் கிடையாது. கடவுளுக்குரிய மதிப்பைத் தமெதெனக் கொண்டு பழிசூழும் ஒரு குருமார் குழுவின் வீம்புரிமைகள், மனித இனத்தின் இல்லங்களை விலங்கினங்களினும் கிழாக இழிவு படுத்தும் முறை கியவற்றை தரிக்கும் எந்தச் சட்டமும் அவற்றில் இல்லை. குழந்தை மணத்திற்கு தரவோ, குழந்தை விதவைகள் மணத்தைத் தடைசெய்யவோ கணவன் பிணத்துடன் உயிருள்ள கைம்பெண்ணின் உடலையும் வைத்தெரிக்கும் பொல்லாப் பழக்கத்தை தரிவிக்கவோ அதில் ஒரு வாசகங் கூடக் கிடையாது. இவை யாவும் வேதத்தின் சொல்லுக்கும் பொருளுக்குமே மாறுபட்டவை." Quote frm Maxmuler “இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு”- கில்பர்ட் சிலேட்டர், தமிழ் கா.அப்பாதுரை. பக்கம் 40,41.

காலக்கணக்குச் சார்ந்த கணக்கு பல இன்றளவும் சமஸ் கிரதத்தில்தான் உள்ளன. தமிழ் இலக்கணம் ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கணம் அறிந்த தொல்காப்பியரால் எழுதப்பட்டது. அதில் வடமொழி பற்றியும் அந்த மொழிச்சொற்களை தமிழில் எப்படி எடுத்தாள்வது என்றும் எழுதியுள்ளார். மேலும் வடமொழி மனுநூல் போன்ற பலதர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட நால் வகை வர்ணம் அவர்கள் தொழில்முறை எண்வகை மணம் இப்படி பல வட மொழியில் கூறப்பட்டவைகளை அப்படியே எடுத்து இலக்கணம் செய்துள்ளார் அதன்படி பார்த்தால் வடமொழியும் தமிழ்மொழியும் நகமும் சதையும்" போல் பிரிக்க முடியாது வழங்கிவந்தது வருகிறது வரும். என்பதை புரிந்துகொண்டால் தமிழறிந்தவராவார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது
மு.வரதராசனார் உரை: அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
சாலமன் பாப்பையா உரை:நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல்
கலைஞர் மு.கருணாநிதி உரை: அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
மு.வரதராசனார் உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. குறள் 503: தெரிந்துதெளிதல்
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. குறள் 502: தெரிந்துதெளிதல்
மு.வரதராசனார் உரை: நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். குறள் 462: தெரிந்துசெயல்வகை
மு.வரதராசனார் உரை: ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. குறள் 469: தெரிந்துசெயல்வகை
கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.
மு.வரதராசனார் உரை:அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். குறள் 466: தெரிந்துசெயல்வகை
செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. குறள் 974: பெருமை
கலைஞர் மு.கருணாநிதி உரை: தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.

இதைப்போன்ற ஏராளமான குறள்களைக் காட்டலாம். மேலே சொன்னவை உதாரணங்களுக்கு மட்டும். இதன்மூலம் சொல்லவருவது, பண்டைய பாரதம் ஜாதிகளை சமூக அமைப்பாக அங்கீகரித்தது என்பதையும், அந்த ஜாதிகள் அனைவருக்கும் ஒழுக்கத்தையும், நன்மையையும் ஏற்படுத்தியது என்பதையுமே. மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நல்லொழுக்கங்களையும் எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு உரைத்து தமிழ் வேதம் என்ற பெயர் பெற்ற வள்ளுவர் ஜாதிகள், குடி, குலம் போன்றவற்றை அங்கீகரித்துள்ளார் என்றால் அதில் நன்மை இல்லாமலா, என்பது சிந்திக்க வேண்டியதாகும். ஜாதி அமைப்பால் பாரதம் சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாசார ரீதியாக, இயற்கை பாதுகாப்பு ரீதியாக ஏராளமான நன்மைகளை அடைந்துள்ளது. அன்நன்மைகளை ஒழித்து பாரதத்தை சுரண்டிக் கொழுக்க நினைக்கும் அந்நிய மதமாற்ற மற்றும் சூழ்ச்சிக்கார சக்திகள் கடந்த நூற்றாண்டு முழுக்கவே பல்வேறு துரோகிகளை வளர்த்து விட்டு அவர்கள் மூலம் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து சிந்தனா ரீதியாக தேசத்தை தவறான பாதைக்கு திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு விசிமுங்க, வள்ளுவரு வேதத்த எதுத்தவரு... அவரு சமண மதத்துக்காரரு னு நெறையா பேரு புளுகுரானுங்க.. திருக்குறளு ல இருக்கற வேத-வேதாந்த செய்திகள இந்த லிங்க் ல இருக்கற கட்டுரைகள் ல படிச்சிக்கோங்க மாப்ளைகளா...

இறுதியாக, ஜாதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லும் திருவள்ளுரின் குறள்.
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (அதிகாரம்:பெருமை குறள் எண்:972)
பொருள் காண - எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் & செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு ஒவ்வா ; ஒக்கும்-நிகர்க்கும்
எல்லா உயிர்க்கும் –என்கையில் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் என ஆகும்
(தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327:)
பிறப்பு ஒக்கும், ஈன்றாள் வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் முறை அனைவர்க்கும் ஒரே மாதிரியானது, செய்யும் தொழிலால் சிறப்பு ஒன்றாக இருப்பது இல்லை என்பதே பொருள். ஆன்னல் மெய்ஞானம் ஏற்காமல் வள்ளுவத்தை சிறுமைப் படுத்தும் அர்த்தமற்றவைகள் இங்கு தேவையா

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. குறள் 984: சான்றாண்மை
மு.வரதராசனார் உரை:தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

குறள் 993: பண்புடைமை
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால்
மணக்குடவர் உரை: அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. குறள் 34: அறன்வலியுறுத்தல்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் குறள் 35:அறன்வலியுறுத்தல்
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. குறள் 181:புறங்கூறாமை

திருவள்ளுவர் மெய்யியல் மரபு புலவர் திருவள்ளுவர் சொன்னதை ஏற்காது; சொல்லாததவற்றை அவர் பெயரால் கூறுவதால் தாங்கள் எந்த அளவிற்கு கீழிறங்கி செல்வீர்கள் என்பதற்கு ஒரு ஆதாரமாக உள்ளீர்கள்
குறள்1146 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று; ராகு கேது பாம்புகள் சந்திரனை விழுங்கியதால் கிரகணம் என திருவள்ளுவர் அந்தக் கதையை காட்டுவார். அதேபோல திருக்குறள் 1197 காமன் இயக்கத்தைப் பற்றி கூறுகிறார்.
திருவள்ளுவர் கூறுவது ஏற்க இயலவில்லை; அவர் கூறியவற்றிற்கு தமிழ் மரபிற்கு மாறாக பொருள் கொள்வதும் இதற்கு துணையாக் திராவிடவியாதிகள் 20ம் நூற்றாண்டு உரைகளால் எந்தவித பயனும் இல்லை, நீங்கள் தமிழ் மரபை ஏற்கவில்லை என்பதை ஆணித்தரமாய் நிருபிக்கின்றீர்.
உயிர், உடல், மெய்யியல், இறைவழிபாடு எல்லாமே பிறப்பு என்பதோடு தொடர்புடையது; நான் இன்னும் சற்று விரிவாக்க எழுத வேண்டும் என்பதால் சற்றே பொறுக்கவும்
வள்ளுவத்தின் அடிப்படை - அன்புடைமை, இகல் பாராமை- தமிழ் மெய்யியல் மரபு போற்றுதல் -இவைற்றின் அடிப்படையிலே தான் கருத்து, பொருள் கூற வேண்டும்
மு.வரதராசனார் உரை: ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
செய்தொழில் வேற்றுமையான் என்கையில் இந்தக் குறளில் உயிர் என்பது மனிதர்களை மட்டும் என பொருளாகும்
பிறப்பு ஒக்கும் -தாய் கரு சுமந்து தாய் வயிற்றில் இருந்து பிறக்கிறோம், அனைவரின் பிறப்பும் ஒரே மாதிரி அமைகிறது
தமிழர் மரபிற்கு மாற்றாக திருக்குறள் சிறுமைப் படுத்தவும் பொய்யான உரை வைத்து தமிழரின் வேரை சிதைக்கவும் இம்மாதிரி கயமை உரையாளர்களைத் தான் வள்ளுவர் உணர்ந்தே கூறி உள்ளார்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. குறள் 452: சிற்றினஞ்சேராமை
சார்ந்து வாழும் குழு- சார்தி - சாதி என்பது தெளிவான தமிழ் சொல், தமிழில் மிகப் பழமையான இலக்கியங்கள் (பொமு200 பொஆ 700 இடைய்லானது, தொல்காப்பியம் பொஆ 700 8ம் நூற்றாண்டிலானது, திருக்குறள் 9ம் நூற்றாண்டிலானது, சாதி இல்ல்லாத தமிழ் இலக்கியம் ஏதுமே இல்லை. இன்னும் வடமொழியிலோ இந்தியாவின் எந்த நூலில் இல்லாதபடி தமிழில் மெல் பிறந்தார், கீழ் பிறந்தார் எனப் பிறப்பால் சாதி/குலம் பேசப்படும். சாதி என்பது சமுதாயப் பிரிவாகத் தான் இருந்தது,
செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு ஒவ்வா செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் கிடைக்கும் புகழ் ஒத்திருப்பதில்லை
(ஒவ்வா- எனில் ஒப்பாக - ஒரே மாதிரி அமைவது இல்லை நாம் இதே ஒவ்வா என்பதன் மாற்று வடிவில் ஒவ்வேம் என வள்ளுவர் குறள் 1114ல் பயன்படுத்தியதில் அறியலாம்)
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் -
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
உயிர் என்கையில் எல்லாவித உயிரையும் வள்ளுவர் பல்வேறு குறளில் சொல்லி உள்ளார்.
பிறப்பு ஒக்கும் என்கையில், பிறப்பு வகையில் வேறுபாடுகள்பிறப்பு வேறுபாடுகள் 4விதம் என்பது மெய்யியல் மரபு
அண்டகம் - முட்டையில் குஞ்சு பொரிக்கும் பறவை இனம். (பறப்பன)
வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் கொசு முதலியவை
சிராயுசம் வகையில் - பாலூட்டிகள் தாய் கர்ப்பப்பையில் சுமந்து யோனி வழியில் பிறப்பு
உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன- செடி-கொடி தாவரங்கள்.
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்றவர்- தொழில் வேற்றுமையான் என்கையில் இது மனிதப் பிறப்பை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகும். மேலுள்ள வரியின் பொருள் - பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கரிப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பிறக்கும் (1)
இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும் - குறள் 1044

பிறங்கா (1)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 62
பிறங்கிற்று (1)
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 23
பிறத்தல் (3)
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் - குறள் 303
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 681
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 992
பிறந்த (2)
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 603
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கி கொளல் - குறள் 1026
பிறந்தார் (4)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 409
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 952
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் - குறள் 954
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959
பிறந்தார்-கண் (2)
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 951
குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 957
பிறந்து (2)
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 502
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 794
பிறந்தும் (1)
மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 409
பிறப்பில் (1)
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் - குறள் 1315
பிறப்பு (11)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 133
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 134
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு - குறள் 339
மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை - குறள் 345
பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
நிலையாமை காணப்படும் - குறள் 349
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 351
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு - குறள் 357
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம் பொருள் காண்பது அறிவு - குறள் 358
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து - குறள் 361
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான் - குறள் 972
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு - குறள் 1002
பிறப்பும் (2)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 62
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 107



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா

- செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பு ஒத்திருப்பதில்லை.
மக்கள் பெருமை என்பது செய்யும் தொழில், அதில் அவர் திறமை இரண்டுமே தீர்மானிக்கும்
இக்குறள் உள்ள அதிகாரம் பெருமை. ஒருவன் பெருமை பெறக் காரணம் என்ன? பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:505) ஒருவருடைய பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர் செய்யும் செயல்களே உரைகல். ஒவ்வொருவரும் வேறு பிறவற்றால் சிறப்புடையார் போலத் தோன்றினாலும் உண்மையில் அவர்களுடைய பெருமையை அல்லது கீழ்மையை எடுத்துக்காட்டுவது அவர்களுடைய செயல்களே.

திருவள்ளுவர் அனைவரும் சமம் என எங்காவது வலியுறுத்தி உள்ளாரா?
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. குறள் 993 பண்புடைமை
உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும். பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்
(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:0528)
அரசன் எல்லாரையும் சமனாகப் பொதுநோக்கு நோக்காமல் அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழ்பவர்கள் பலராவர்.
நாம் இவ்வுலகில் பொருள் ஈட்ட செல்கையில் தொழில் தொடர்பு - நட்பு, எனப் பலரோடு பழகும்போது எதற்கு முக்கியம் தரவேண்டும்
அரசன் தன்னுடைய முக்கியமான பணிகளுக்கு சரியான மக்களை தேர்ந்தெடுக்க வள்ளுவர் காட்டும் தகுதிகள் என்ன

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல் ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: நட்பாராய்தல்
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல் ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: நட்பாராய்தல்
உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681:தூது அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.

செய்யும் தொழிலால் பிரிவு என்பது வர்ண வேறுபாடு, ஆனால் திருக்குறள், ஏன் இதற்கு முன்பான சங்க இலக்கியத்திலும் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதபடி பிறப்பில்- மேல் & கீழ் எனச் சொல்லப் படுகிறது
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409: கல்லாமை
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் குறளின் அதே அதிகாரத்தின் அடுத்த குறள்
மேலும் விளக்கம் நாளை
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். குறள் 973: பெருமை

பணக்காரன், ஏழை போன்ற வேறுபாடுகள். ..மேலிருந்து. ..கீழிருந்து என்பதன் பொருள். மேல்..கீழ் -என்பன சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள். படிப்பறிவுள்ளவர்கள். .படிக்காதவர்கள். ஏழை, பணக்காரன்.

லத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 958
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 956
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 960
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள் 1019
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையார்-கண்ணே உள - குறள் 223

தமிழர் - இந்திய ஞான மரபை சிதைக்க திண்ணை பள்ளி முறையை இங்கே சிதைத்து பயன் இல்லா ஆங்கில குமாஸ்தா கல்வி கொணர்ந்து இங்கிலாந்தில் திண்ணை கல்வி கொண்டுபோனர் எனில் புரியும்

அந்தணர் வாழ்க்கை முறை எப்படி என சங்கம், திருக்குறள், சிலப்பதிகாரம் வழியில் பெரும் செல்வம் இன்றி அறம்- கல்வியை பிரதானமாக வாழ்வோரே பெரும்பாலோனோர்
மேலும் விளக்கம் நாளை

வள்ளுவர்- செய்யும் தொழில் முறையால் ஜாதியினரை குறிக்கும் குறள்கள்
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. குறள் 329: கொல்லாமை
மாமிசம் உண்ண கொலையை அன்றாடம் செய்யும் புலைத்தொழிலுடையவர் சான்றோர் உள்ளம், இழிந்த பிறவிகளாகவே கருதுவர். (இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்-மணக்குடவர்)

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. குறள் 274: கூடாவொழுக்கம்
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. குறள்228:பொழுதுகண்டிரங்கல்
முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. குறள் 964: மானம்
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. தெரிந்துதெளிதல் குறள் 502:
மு.வரதராசனார் உரை: நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். குறள் 507:
மு.வரதராசனார் உரை: அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். குறள் 508:தெரிந்துதெளிதல்
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, தன் நிர்வாக பணிக்கு அமர்த்தினால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. குறள் 964: மானம்
சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். குறள் 952: குடிமை

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. குறள் 957:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். குறள் 958: குடிமை

வள்ளுவர் செய்தொழில் வேற்றுமையான் - என்கையில் செய்யும் தொழிலால் பிரிவுகள் - வர்ணம் என்றவர் நாண்கு வர்ணத்திற்கும் தனித் தனியான அறத்தையும் கூறி உள்ளார் -பார்ப்போம்

அரசர்க்கு மட்டுமேயான ஷத்திரிய அறங்கள் கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். குறள் 550: செங்கோன்மை

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் 582: ஒற்றாடல்

வாணிகர்/உழவர் பற்றியதானது வைசிய அறங்கள்

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. குறள் 449: பெரியாரைத் துணைக்கோடல்

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். குறள் 463: தெரிந்துசெயல்வகை

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். குறள் 120: நடுவு நிலை

வர்ண தர்மம் உடன்பாடு என திருவள்ளுவர் காட்டும் மிக முக்கியமான குறள்
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். குறள் 134: ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று
இங்கு அவர் குடிக்கான பிறப்பு ஒழுக்கம் என்ற சொல்லை பயன்படுத்துவார், இங்கே பார்ப்பான் என்ற சொல்லைப் போட்டவர் - கொடுங்கோன்மையில் அறுதொழிலோர் என்ற பதம் சொல்லுவார், சென்கோன்மையில் அந்தணர் நூல்-அறம் என்பார்.

 திருமுருகாற்றுப்படை  4. திரு ஏரகம் (சுவாமிமலை)

அந்தணர்:
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை . . .180

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல,
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ,
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்துஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று,

இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். குறள் 857: இகல்
மனத்தாலே பகை உணர்வை (இகல்) கொண்டு நோக்கும் வேறுபாடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் அறவழி நீதிநூற் பொருளை அறியமாட்டார்.

சங்க காலத்தில் வாழ்ந்த அறம்புரி அந்தணர்கள் வாழ்வு - கல்விமுறை பற்றி 4. Thiru Ērakam (Swamimalai)
The Twice Born
The twice-born, who perform the six duties
without fail, respected, born to ancient, traditional
families on both sides, who spend forty eight years of
their young age on the righteous path with
principles of uttering truths, who tend three
sacred fires which is their wealth, chant.

Meanings: இரு மூன்று எய்திய – perform the 6 duties, இயல்பினின் வழாஅது – not faulting, இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி – born to ancient traditional families on both sides and respected, அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய – spend 48 years and their youth on the path, அறன் நவில் கொள்கை – principle of uttering virtue/truth, மூன்று வகைக் குறித்த – three kinds indicated, முத்தீச் செல்வத்து – wealth is tending three fires, இரு பிறப்பாளர் பொழுது அறிந்து நுவல – the twice-born know the time and chant

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரை உறு நறுமலர் ஏற்றி பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று (183 – 189)

They wear three strands with three fine threads
in each and wet clothing that dry when
worn. They worship holding their palms above,
praising him, uttering the six-syllabled secret
name, and scatter fragrant flowers happily to the
one who resides in Ērakam. He is not just there.

Meanings: ஒன்பது கொண்ட – having nine, மூன்று புரி நுண் ஞாண் – three strands with three fine threads twisted together, புலராக் காழகம் – not dried clothing, புலர உடீஇ – wear it to dry, உச்சிக் கூப்பிய கையினர் – those worshipping with their hands above, தற்புகழ்ந்து – praising him, ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி – Vedic rituals with six letters, நா இயல் மருங்கில் நவிலப் பாடி – sing with their tongues learning well, விரைஉறு நறுமலர் ஏற்றி – throw many kinds of fragrant flowers, பெரிது உவந்து – greatly happy, ஏரகத்து உறைதலும் உரியன் – the one who resides in Ērakam, அதாஅன்று – not only there
From Prof.Vaidehi Herbert website
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறுநான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை 180
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து 185
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி
விரையுறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று

ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
(பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை
(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும், 180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து, 185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
(அதிகாரம்:பெருமை குறள் எண்:972)
பொழிப்பு: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை
மணக்குடவர் உரை: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.
எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
பரிமேலழகர் உரை: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான்.
(வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: எல்லா மனிதர்களும் பிறப்பால் ஒரே மாதிரியானவர்களே. ஆனால் அவரவர்கள் காரியம் செய்யும் திறமை வேறுபடுவதனால் சிறப்புக்கள் ஒரே மாதிரியாக அடைய முடியாது.

பொருள்கோள் வரிஅமைப்பு:எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும். செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா.
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்:பதவுரை: பிறப்பு-தோற்றம்; ஒக்கும்-நிகர்க்கும்; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிருக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை;
பரிப்பெருமாள்:எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை;
பரிதி: மனிதர் எல்லோரும் சனனத்தால் ஒப்பர்;
காலிங்கர்: மக்கள் ஆகிய அனைவர்க்கும் பிறப்பின்கண் ஒரு வேற்றுமை இல்லை;
பரிமேலழகர்: எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்;
பரிமேலழகர் குறிப்புரை: வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும் (கூறினார்).

பிறக்கு ஒக்கும் என்பதற்கு பிறப்பின்கண் வேறுபாடில்லை என்ற கருத்தில் உரையாசிரியர்கள் பொருள் கூறினர். பரிமேலழகர் 'முந்தையவினைப் பயனால் உடல் எடுத்து அதன்படிச் செயல்பட்டு அதன் விளைவுகளை அனுபவித்தல் எல்லா வருணத்தாருக்கும் சமம்' என்று மயங்க வைக்கும் பொருளில் 'பிறப்பொக்கும்' என்பதற்கு சமயக்கருத்து கலந்ததான விளக்க உரை தருகிறார். எல்லா உயிர்க்கும் என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் குறளில் கண்டபடியே எல்லா உயிர்க்கும் எனப் பொருள் கூற மற்றவர்கள் 'மக்கள் உயிர்க்கும்' எனக் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும்', 'பிறப்பால் ஒக்கும் ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும்', 'எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும்', 'எல்லா உயிர்கட்கும் பிறப்பு இயல்பு ஒக்கும்; உயிரென்றது மக்களுயிரை' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் வேறுபாடில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் :
பதவுரை: சிறப்பு-பொது அல்லாதது; ஒவ்வா-நிகர்க்கமாட்டா; செய்-செய்யும்; தொழில்-தொழில்; வேற்றுமையான்-வேறுபாட்டினால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.
மணக்குடவர் குறிப்புரை: எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
பரிப்பெருமாள்: ஆயினும் தத்தம் செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
பரிதி: ஆசாரத்தினாலே நற்குலத்தராவர் என்றவாறு.
பரிதி குறிப்புரை: நற்குலத்தவாராவர் என்றதால் இழிதொழிலாலே இழிகுலமாவார் என்பதாம்.
காலிங்கர்: அம்மக்கட்குச் சிறப்பு ஒவ்வாது என்பது என்னையோ எனில், இயல்பு நீங்கிய இழிவு தொழில் ஒருவர்க்கு உளதாயின் இவர் சாலச் சிறியர் என்றும், தமக்கு இயல்பாகிய பேரொழுக்கத்தின்கண் பிழையாது ஒழுகின் இவர் சாலப் பெரியார் என்றும், இங்ஙனம் வழங்கி வருதலால் யாவர்க்கும் சிறப்பு ஒவ்வாது என்பதனைத் தெரிந்துகொள்ளப்படும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: சிறப்பு என்பது பெருமை.
பரிமேலழகர்: பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான்.
வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.

இப்பகுதிக்கு உரை காண்பதில் பழைய உரையாசிரியர்கள் வேறுபட்டு நிற்கின்றனர். மணக்குடவர் பெருமை என்பது செய்யும் தொழிலால் மாறுபடும் என்று பொழிப்புரையில் கூறி விளக்க உரையில் 'பெருமையாவது குலத்தினால் அறியப்படாது' என்று அழுந்தத் தெரிவிக்கிறார். பரிதியார் இழிதொழில் செய்தால் இழிகுலத்தார் என்று கூறுகிறார். காலிங்கரும் இதே கருத்தினரே. பரிமேலழகர், சமயச் சார்புடன், வருணத்தையும் பிறவிச் சுழற்சியையும் காட்டி அதனாலேயே ஏற்றத் தாழ்வுகள் உண்டு என்கிறார். எல்லா உயிருக்கும் பிறப்பு சமானமானதே என்றாலும் செய்யும் தொழில்கள் வரையறுக்கப்பட்டிருப்பதனால் (வருணாசிரமம்) அவை சிறப்பு அடிப்படையில் சமானமல்ல என்று இக்குறள் சொல்வதாகப் பரிமேலழகர் கருத்துரைக்கிறார். மணக்குடவர் குலத்திற்கும் சிறப்புக்கும் தொடர்பில்லை என்று கூற பரிமேலழகர் அதற்கு மாறாக வருணவேறுபாடு பற்றிப் பேசுகிறார். ‘தொழில் சார்ந்த இழிவும் சிறப்பும் இருப்பதனால் மனிதருள் பெருமை வேறுபடும்’ என்று தொல்லாசிரியர்களால் இப்பகுதி விளக்கப்பட்டது தெரிகிறது. எவை இழிதொழில் என இவர்களில் ஒருவரும் குறிக்கவில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'செயல் வேற்றுமையால் சிறப்பு வேறுபடும்', 'செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் சிறப்புக்கள் ஒவ்வா', 'அவைகள் செய்கின்ற தொழில் வேறுபாட்டினால் பெருமை ஒத்திருப்பது இல்லை', 'செய்யப்படுகின்ற தொழில்களின் வேறுபாட்டால் சிறப்பு இயல்புகள் ஒவ்வா-அவரவர்கள் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பு ஒவ்வாமை-ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதலாம். எல்லா மக்களும் பிறப்பினால் ஒரு தன்மையினரே. செய்யும் தொழிலுக்குத் தக்கவாறு பெரியார் சிறியார் என்னும் பெயர் பெறுகின்றனர். அவ்வாறு மதிக்கப்படுகின்றனர் என்பதாம். 26-ம் குறளைப் பார்க்க', என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே; செய்யும் தொழிலின் வேறுபாட்டால் சிறப்பு ஒத்தவையாகா.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது பாடலின் பொருள்.
'பிறப்பொக்கும்' குறிப்பது என்ன?
பிறப்பு ஒக்கும் என்ற தொடர்க்கு பிறப்பு ஒத்துள்ளது என்பது பொருள்.
எல்லா உயிர்க்கும் என்ற தொடர் அனைத்து உயிர்களுக்கும் என்ற பொருள் தரும்.
சிறப்பு ஒவ்வா என்ற தொடர்க்கு பெருமையென்பது ஒத்திருக்காது என்று பொருள்.
செய்தொழில் என்ற தொடர் செய்கின்ற தொழில்கள் என்ற பொருளது.
வேற்றுமையான் என்ற சொல் வேற்றுமைகளால் என்ற பொருள் தருவது.

பிறப்பால் சிறப்பு உண்டாவதில்லை; செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுவதுண்டு.

பிறப்பில் அதாவது பிறக்கும்பொழுது எல்லோரும் சமம். பிறப்பில் அனைவரும் ஒன்றும் அறியப்படாத குழந்தைகளே அதாவது இன்ன பெருமைக்குரியதாகப் போகிறது என்றோ இந்தத் தொழில் செய்யப்போகிறது என்றோ அப்பொழுது தெரிவதில்லை. நீரின்றி அமையாது உலகு என்பது போன்றதோர் இந்த அடிப்படை உயிரியல் உண்மையைத் திரிவுபடாமல் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று உரைக்கிறார் வள்ளுவர். இதை எல்லா உயிர்கட்கும் பிறப்பு இயல்பு ஒக்கும், உயிர்கள் பிறப்பிலே ஒத்த உரிமையுடையன என்று சிலர் விளக்குவர்.
பிறப்பினால் பெருமையோ இழிவோ உண்டாவதில்லை என்கிறது பாடல். அருளுடையவன் அந்தணன்; அருளற்றவன் இழிந்தோன்; ஒழுக்கமுடையவன் உயர்ந்தோன்; ஒழுக்கமற்றவன் தாழ்ந்தோன்; தொழில்திறன் கொண்டவன் மேலானவன்; தொழில்திறன் குறைபாடுடையவன் கீழானவன்; இவ்வாறு அறத்தாலும், ஒழுக்கத்தாலும், தொழில் செய்திறனாலும் பெருமை மக்களுக்கு உண்டேயன்றிப் பிறப்பால் உயர்ச்சியோ தாழ்ச்சியோ இல்லை என்ற வள்ளுவரின் உறுதியான கோட்பாட்டைக் குறள் நெடுகக் காணலாம். இங்கும் அது தெளிவுறுத்தப்படுகிறது.

குறளின் இரண்டாவது பகுதியான 'சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்றதற்கு 'அவர் அவர் செய்யும் தொழில் வேற்றுமை காரணமாகச் சிறப்புநிலைகள் வேறுபடும்' என விளக்கம் தந்தார் வ சுப மாணிக்கம். மேலும் அவர் 'ஒரு தாய் வயிற்று மக்களுக்குள்ளும் செயல் வேற்றுமையால் சிறப்பு வேறுபடும்' என்று கருத்தையும் மொழிந்தார். இரா சாரங்கபாணியும் இதே நோக்குடையவரே. இவர்கள் உரை உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே; பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும், சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும் (புறநானூறு 183: பொருள்: ஓரூறுபாடு உற்றவிடத்து அதுதீர்த்தற்கு வந்து உதவியும் மிக்க பொருளைக் கொடுத்தும் வழிபாட்டுநிலைமையை வெறாது கற்றல் ஒருவற்கு அழகிது; பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும் கல்வியின் சிறப்பால் தாயும் மனம் வேறுபடும்) என்ற புறநானூற்றுப் பாடலைத் தழுவியது.
தண்டபாணி தேசிகர் 'பெருமை சிறுமைகள் பிறரால் மதிக்கப்படுவனவே அன்றித் தாமே கருதுவனவல்ல. ஆதலால் தொழிலின் உயர்வினைக் கொண்டே பெருமையும் மதிக்கப்படுகிறது எனப் பெருமையிலும் உயர்வும் தாழ்வுமுண்டு என்பதை உணர்த்துவதே இக்குறளின் நோக்கம். பெருமையை மதிப்பீடு செய்வதே பெருமை என்னும் இவ்வதிகாரத்தின் பொருணோக்கிற்கும் ஏற்றதாகும்' என்று சொல்லி 'ஆதலால், மக்களுக்கு மட்டும் என்ன? பிறப்பால் ஒத்த எல்லாவுயிர்கட்குமே செய்தொழிலால் பெருமை ஒப்பாதல் இல்லை என்பதனைப் பட்டத்துயானையையும் படையானையையும் சுமைதூக்கும்யானையையும் கொண்டே துணியலாம்' என்று எடுத்துக்காட்டுடன் விளக்கம் செய்வார்.
"நல்ல தொழில் செய்கின்றவர்கள் குற்றமான தொழில் செய்கின்றவர்களை விட மேலானவர்கள். அரிய பெரிய தொழில் செய்கின்றவர்கள் சிறு சிறு தொழில்களைச் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்கள்" என்று மு வ செய்தொழிலுக்கும் சிறப்பு நிலைகளுக்கும் உள்ள தொடர்பை விளக்குவார்.
தேவநேயப் பாவாணர் கூறும் தொழில் வேறுபாடுகளும் சிறப்புநிலை வேறுபாடுகளும்: "அதிகாரமுள்ளது, அதிகாரமில்லது ; வருமானம் மிக்கது; வருமானங் குறைந்தது; தற்சார்பானது, மற்சார்பானது; நிழலிற் செய்வது, வெயிலிற் செய்வது; மனவுழைப்புள்ளது; உடலுழைப்புள்ளது; துப்புரவானது,துப்புர வற்றது; ஒழுக்கக் கேட்டிற் கிடமுள்ளது, ஒழுக்கக் கேட்டிற் கிடமில்லது; இன்றியமையாதது. இன்றியமையாத தல்லாதது; பிறரை இன்புறுத்துவது பிறரை இன்புறுத்தாதது; நல்லது தீயது என்பன. இவற்றுள் ஒவ்வோரிணைக்கும் இடைப்பட்ட நிலைமையுமுண்டு. தொழில்வேறுபாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் உயர்வு, தாழ்வு, இடைநிகர்வு, மிகவுயர்வு, மிகத்தாழ்வு என்பன".
தொழிலால் சிறப்பு வேறுபடும் என்பதற்கு உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் (உழவு 1033) என்று உழவுத்தொழிலைப் பெருமைப்படுத்திய வள்ளுவரின் குறளே சான்றாகிறது.
சிலர், செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுகிறது என்ற உரையை வளப்படுத்தும் நோக்கில், செய்தொழில் வேற்றுமையால் என்பதை 'தொழில் செய் வேற்றுமை'யால் என வாசித்து, 'பிறப்பில் அனைவரும் சமம்; அவர்கள் செய்யும் தொழில்களிலும் ஏற்றத் தாழ்வுகள் இல்லை; அவர்கள் செய்யும் தொழில் திறமையில்தான் வேறுபாடுகள் உண்டு; அவையே ஒருவரது பெருமை-சிறுமைக்குக் காரணம்' என்று இக்குறளுக்கு உரை வரைவர். தொழில் என்ற இடத்தில் தொழில் செய்திறன் எனக் கூறி 'உயிர்கள் தொழில் செய்யும் ஆற்றலினால் சிறப்பும் சிறப்பின்மையும் சேர்கின்றன' எனச் சிலர் பொருள் உரைத்தனர். தொழில் என்பதற்குச் செயல் எனப் பொருள் கொண்டு, நல்ல செயல்கள் தீய செயல்களால் வேறுபாடுகள் அமைகின்றன என்றவகையிலும் உரைகள் உள.

மனித உரிமைகள் மனிதகுலம் தோன்றியதிலிருந்து உணரப்பட்டு வந்தன; வளர்ந்த நாகரீக நாடுகள் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிலைநாட்டப் போராடி வெற்றி கண்டன. தமிழ்நாட்டில் 'வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்' என மேற்பால் கீழ்ப்பால் எனப் பிரித்துக் காணும் போக்கு சங்க காலத்திலேயே இருந்தது என்றாலும் அதை எதிர்க்கும் குரல்களும் இருந்தன. இனம், குலம், பிறப்பென்னும் சுழிப்படாமல், உறுதியாக, மனிதர்களில் பிறப்பால் உயர்வு தாழ்வு கூறும் நூல்களை மறுத்து, எல்லா உயிர்களும் பிறப்பால் ஒக்கும் என்றும் அவரவர்களின் செயல்களாலேயே பெருமை உண்டு என்றும் இக்குறள் மூலம் அதை இன்னும் ஓங்கி உரைத்தார் வள்ளுவர். பிறப்பு ஒருவனின் சிறப்புக்கு காரணமாய் அமைவதில்லை என்று சொல்லி, வேறுவேறுமக்களிடம் நடைமுறையில் காணப்பட்ட பெருமை நிலை வேறுபாடுகளை விளக்க, 'சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்ற வாழ்வியலை உறுதிபடச் சொல்கிறார் வள்ளுவர்.
சம வாய்ப்பு (Equal opportunity), வாழ்க்கைத்தொழிலைத் தேர்வு செய்வதில் கட்டாயமின்மை, எப்பணியிலும் ஈடுபடும் உரிமை (Freedom to choose an occupation and right to engage in work) போன்ற அடிப்படை உரிமைகள் உள்ள சமுதாயத்தில் எந்தச் சிறப்பையும் யாரும் பெறமுடியும். இவை மறுக்கப்பட்ட சமூகத்தில் கோணல் கோட்பாடுகள் கோலோச்சிக் குழப்பங்களை விளைவிக்கும். அப்படிப்பட்ட சமூக அமைப்பு வள்ளுவர்க்கு ஏற்புடையது ஆகாது. இயற்கையில் அமைந்த மனித குலத்தின் உரிமைகளை அரசியல் வழியோ, சமய அமைப்புகளின் மூலமோ, புன்மையான சாதி குல அமைப்புகளின் மூலமோ பறிக்க எவர்க்கும் உரிமையில்லை. இவையும் இக்குறட்பாவில் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.

'பிறப்பொக்கும்' குறிப்பது என்ன?

அதிகாரம் பெருமை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பிறப்பில் பெருமை அனைவருக்கும் ஒத்தது என்று சொல்கிறார் வள்ளுவர். இது அதிகார இயைபுடைய நேரான கூற்றே. ஆனால் இக்குறள் உயிர்களுக்கிடையே உள்ள பெருமை நிலை வேறுபாடுகள் ஏன் உண்டாகின்றன என்பது பற்றி ஆராய வந்தது மட்டுமல்லாமல், இப்படிச் சொன்னதற்கு வேறு காரணங்களும் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் எண்ணினர். அடிமை முறையின் பண்பு கொண்ட பிறப்பு அடிப்படையிலான சாதிப்பிரிவினை இந்தியப் பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியிருந்தது; தொல்காப்பியத்தில் காணப்படும் நான்கு பிரிவுகளையோ, மனு வகுத்த நான்கு வருணங்களையோ, சமூகவியல் பகுப்பாகவோ-மேலிருந்து கீழாக அவை தரவரிசைப்படுத்தப்பட்டதையோ வள்ளுவர் ஒப்பவில்ல என்பதை அறிவிக்கவே இக்குறள் யாத்தார் என்றனர் இவர்கள். மணக்குடவர் 'இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று' என இக்குறட்பாவின் உட்கருத்தைத் தெளிவுபடுத்தினார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் சொல்ல வந்ததற்குத் தேவை என்ன என்பதைச் சொல்ல மற்றவர்களும் மிகுந்த சிரமம் கொள்ளத் தேவையில்லாமல் இருந்தது. அவர்கள் மனு தரும நூலில் உரைக்கப்பட்டதையும், கீதையில் சொல்லப்பட்ட உபதேசங்களயும் எடுத்துக்காட்டினர். “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணாத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்" என்ற மனுவின் கருத்துக்களையும் "நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை; அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வருணதர்மம் படைத்த என்னால்கூட முடியாது' என்று பகவான் கிருஷ்ணனே கூறும் கீதையின் சுலோகங்களையும் மேற்கோள் காட்டி இவற்றை மறுப்பதற்காகவே வள்ளுவர் இவ்வாறு பாடினார் என்று கடிதில் விளக்கம் தந்தனர்.

வருணாசிரமம் என்றது மாந்தர் உரிமைகளுக்கு எதிரான மனித வரலாற்றின் மிகப் பெரிய மோசடியாகும். இது இங்குள்ள சிந்தனைப் போக்கைச் சிதறடித்து சமூக அமைப்பைச் சீர்குலைத்தது. வருணாசிரமம் என்பது பிறப்பால் உயர்வும் இழிவான தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறாது என்று சொல்லி நால்வேறு வகையில் வாழ்க்கையுரிமை வகுத்துக் கொடுத்து சாதிக்கொரு நீதி விதித்தது. கல்வி போன்றவை குலத்துக்கொரு நீதி முறையில், பெரும்பாலோர்க்கு அவற்றை விரும்பினாலும் குற்றமாகும் என்று சொல்லப்பட்டது; இவ்வாறு சம வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அறமற்ற முறையில், ஒரு சாரார்க்குமட்டும் தனி ஒதுக்கீடு வழங்கும் முறை செயலாக்கப்பட்டது. இந்தக் கோட்பாட்டை மறுத்து எழுதப்பட்டதே ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் முழக்கம். பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்ட இந்தியச் சமூகச் சூழலில் வள்ளுவர் முன்வைத்த பிறப்பொக்கும் என்ற கருத்து ஒரு பெரிய புரட்சிக் கருத்தாகும். பிறப்பு ஒப்புமையைத் திருவள்ளுவர் ஓர் வாழ்வியல் விழுமியமாக மொழிந்தார்.
இக்குறட்பா வள்ளுவரை ஒரு சமுதாயப் புரட்சியாளராகவும் அடையாளம் காட்டுகிறது. வடமொழி நூல்களில் வழங்கி வந்த சாதி வேற்றுமைகளையும் ஆசாரங்களையும் மறுப்பது இது. வருணம் சார்ந்த சொல்லாட்சியோ பொருள் ஆளுமையோ குறளில் எங்கும் காணப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகப் பிளவுகளை ஏற்கமறுத்த வள்ளுவர், போராட்டக் குணம்கொண்டு, அறம் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில், பிற்போக்கான அந்த அநீதிக்கு, இக்குறள் மூலம் பதிலடி கொடுத்தார்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் வேறுபாடில்லை; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது இக்குறட்கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று (அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1114)
பொழிப்பு (மு வரதராசன்): குவளை மலர்கள் காணும் தன்மைபெற்றுக் கண்டால், "இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே" என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
மணக்குடவர் உரை: குவளைமலர் காணவற்றாயின் மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று நாணி, கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.
பரிமேலழகர் உரை: (பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது.) குவளை - குவளைப் பூக்கள் தாமும்; காணின் - காண்டல் தொழிலையுடையவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும் - மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும்.
(பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்'என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.)
நாமக்கல் இராமலிங்கம் உரை: குவளை மலர் என் காதலியைப் பார்த்தால் சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ள அவளுடைய கண்களுக்குத் தாம் இணையாக இல்லாமைக்கு வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டு நிலத்தைப் பார்க்கும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:குவளை காணின் மாணிழை கண்ணொவ்வேம் என்று கவிழ்ந்து நிலன்நோக்கும்.

பதவுரை: காணின்-கண்டால், காணும் ஆற்றல் இருந்தால்; குவளை-குவளை மலர்; கவிழ்ந்து-தலை குனிந்து; நிலன்-நிலம்; நோக்கும்-பார்க்கும்; மாண்-சிறந்த; இழை-அணிகலம் (அணீந்தவள்); கண்-விழி; ஒவ்வேம்-நிகர்க்க மாட்டோம்; என்று-என்பதாக.
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குவளைமலர் காணவற்றாயின் கவிழ்ந்து நாணி,நிலத்தை நோக்கும்.
பரிப்பெருமாள்: குவளைமலர் காணவற்றாயின் கவிழ்ந்து நாணி,நிலத்தை நோக்கும்.
பரிதி: குவளைப்பூக்கள் தாமும் காண்டகத் தொழிலுடையவாய் அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! யான் அழகுடையேன் என்று இங்ஙனம் தன்னை மதித்து வான் நோக்கிச் செவ்விதமாய் நிற்கும் குவளை, நாணிக் கவிழ்ந்து நிலம் நோக்கி நிற்கும்
பரிமேலழகர்: (பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது.) குவளைப் பூக்கள் தாமும் காண்டல் தொழிலையுடையவாயின்; அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும். [சார்தலுறுவான்-தலைமகளைக் கூடும் தலைவன்]

'குவளை மலர்க்கு காணும் ஆற்றல் இருந்தால் நாண் கொண்டு தலை கவிழ்ந்து நிலத்தினை நோக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அவள் கண்களைப் பார்ப்பதாற்கு முன் யான் அழகுடையேன் என்று செறுக்குற்று வான் நோக்கிச் செவ்விதமாய் நின்றது' என்று நயமுரைத்தார். இதைத்தழுவி பரிமேலழகரும் 'காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின' என்று தமது உரையில் இணைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குவளைகள் இவள் கண்னைக் காண நேர்ந்தால் தலைசாய்த்துக் குனியும்', 'குவளை மலர் காணும் தன்மையைப் பெற்று நாணித் தலைசாய்த்து நிலத்தை நோக்கும்', 'குவளைப் பூக்களுக்குப் பார்க்கக்கூடிய வலியிருக்குமானால், வெட்கித் தலை குனிந்து இப்போது வானத்தை நோக்குவது போல் மேல்நோக்காது நிலத்தையே நோக்கும்', 'குவளைப் பூக்கள் இவளைக் கண்டால், நாணத்தால் முகம் கவிழ்ந்து நிலத்தைப் பார்க்கும்' என்றபடி உரை தந்தனர்.
குவளை மலர்கள் என் காதலியைக் கண்டால் நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும் என்பது இத்தொடரின் பொருள்.

மாணிழை கண்ணொவ்வேம் என்று:
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று.
மணக்குடவர் குறிப்புரை: இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.
பரிப்பெருமாள்: மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வடிவுதானும் ஒவ்வாதென்றது.
பரிதி: மாண்ட இழையினையுடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி.
காலிங்கர்: மற்றதுவும் நம் மாணிழையாள் கண்ணுக்கு உவமை ஒவ்வேம் என்று இதற்குக் காரணம் என்றான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி.
பரிமேலழகர் விரிவுரை: பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்'என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம். [செம்மாந்து-இறுமாப்படைந்து]

'மாணிழையாளது கண்னை யாம் ஒவ்வோம் என்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உவமையாகோம் என்று', 'சிறந்த அணிபூண்ட மங்கையின் கண்களைக் கண்டால், நாம் அவற்றுக்கு ஒப்பாக மாட்டோம் என்று', 'சிறந்த அணியை உடைய இவளது கண்களுக்கு ஒப்பாக மாட்டோம் என்று', 'மாட்சிமை உடைய அணிகலன்களை உடைய இவள் கண்களுக்கு ஒப்பாக மாட்டோம் என்று கருதி' என்றபடி பொருள் உரைத்தனர்.
சிறந்த அணியை உடையவளது கண்களுக்கு யாம் இணையாக மாட்டோம் என்று என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:குவளை மலர்கள் என் காதலியைக் கண்டால், சிறந்த அணியை உடையவளது கண்களுக்கு யாம் இணையாக மாட்டோம் என்று, நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும் என்பது பாடலின் பொருள்.
குவளை மலர் ஏன் உவமையாகச் சொல்லப்பட்டது?

மலரை மிஞ்சியது தன் காதலியின் கண் அழகு என்று தலைவன் பெருமைப்படுகிறான்.
குவளை மலர்கள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகளைப் பூண்டுள்ள என் காதலியைக் கண்டால், ‘அவளது கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம்’ என்று தலையைக் கவிழ்த்து நிலத்தை நோக்குமே என எண்ணுகிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் இருந்து மெய்யுறு புணர்ச்சி கொண்டும் பழகுகின்றனர். காதலியைக் கூடிப் பெற்ற இன்பத்தை நினைந்து நினைந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான் அவன். அவளது தோள், நிறம்தளிர், பல் அழகு, உடம்பின்மணம் இவற்றின் நலம் புனைந்துரைத்துக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:இங்கு அவளது கண் அழகு பற்றி புனைகிறான். காதலியை காணச் செல்லும் வழியில் அவன் குளத்தில் பூத்திருக்கும் குவளை மலர்களைக் காண்கிறான். அப்போது, இயல்பாக அவளது கண்கள் நினைவுக்கு வந்து அம்மலர்களுடன் அவளது கண்களை ஒப்பிட்டு நோக்க மனம் தூண்டுகிறது. காதலியின் கண்களின் அழகு குவளை மலரில் இல்லை என்று உணர்கிறான். மலர் நேரே வான் நோக்கிப் பூத்திருக்கும் இயல்புடையது. அந்த மலர் அப்படி நிமிர்ந்திருப்பது அது இன்னும் என் காதலியைப் பார்க்காததனால்தான் என்று எண்ணுகிறான். 'தலைநிமிர்ந்து காட்சி அளிக்கும் அம்மலர்கள், என் காதலியின் கண்களைக் காணும் ஆற்றலைப் பெற்றிருந்தால், அவற்றுக்கு யாம் ஒப்பமாட்டோம் என்று வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலம் நோக்கும்' என்று சொல்கிறான். அதாவது அவளது கண் குவளை மலரையே வெட்கப்படச் செய்வது என்கிறான். தலை குனிதலும், நிலம் நோக்கலும் நாணத்தினால் என இட்டுக்கட்டிச் சொல்கிறான்.
'மலர்ந்து செம்மாந்து நிற்கும் குவளை மலரை என் தலைவி காணப்பெற்றால், அந்நோக்கினை எதிர்கொள்ள இயலாத குவளைமலர், இத்தலைவியின் (குவளை மலரினும்) மிக்கசாயல் படைத்து கண்ணின் எழிலுக்கு முன்னால் நம்முடைய எழில் எம்மாத்திரம் என்று கருதி நாணமுற்று அதன் கரணியமாகத் தலைவி காணாதவாறு தலைகவிழ்ந்து நிலம் நோக்கும்' எனக் 'காண்டலை'த் பூவின் மேலன்றித் தலைவியின் மேல் ஏற்றிக் கூறப்பட்ட உரையும் உளது.
மாணிழை என்ற தொடர் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகளைப் பூண்டவள் என்ற பொருள் தரும்.

இக்குறட் கற்பனையை ஒட்டிக் கம்பர் தலைவியின் முக அழகைப் பாராட்டும் பாடல் ஒன்று உளது:
தள்ளி ஓடி அலைதடு மாறலால்
தெள்ளு நீரிடை மூழ்குசெந் தாமரை
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது
உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே. (கம்பராமாயாணம் நீர்விளையாட்டுப் படலம் 29)
(பொருள்: நீராடலால் தம் நிலையிலிருந்து தள்ளப்படுதலால், பரந்து சென்று அலைகள் தடுமாறுவதால், தெளிந்த அலை எழுந்தாடுதலால், பூத்த தாமரை மலர்கள் நீரிடை மூழ்குகின்றன. துள்ளித் திரியும் புள்ளிமானை ஒத்த மகளிர் முகப்பொலிவிற்கு நாம் ஒப்ப மாட்டோம் என்றெண்ணி நீரிடை மூழ்கின எனப் புனைந்தார் கம்பர். குறளின் குவளைப்புனைவு கம்பர் பாடலில் தாமரைப்புனைவாக மாறியது.

குவளை மலர் ஏன் உவமையாகச் சொல்லப்பட்டது?
பெண்களின் கண்ணைக் குளிர்ச்சியும் அழகும் பொருந்திய குவளை மலரோடு ஒப்பிட்டுக் கூறுவது புலவர் மரபு. பழம் இலக்கியங்களில் பெண்களின் கண்ணுக்கு உவமையாகக் குவளை கூறப்பட்டது. இப்பூ பெண்களின் கண்ணை நினைவூட்டக்கூடிய தன்மையது. இது குளத்தில் பூப்பது. நீல நிறமானது. நீலஅல்லி என்றும் கூறுவர். தலைவியின் கண்கள் நீலநிறமாக இருந்திருக்கும் போலும். மலர்கள் பலவற்றுள்ளும் குவளையின் வடிவமும் பெண்கள் கண்ணோடு மிக நெருக்கமானது. வள்ளுவரும் குவளை மலரின் அழகில் ஈடுபட்டு அதைத் தலைவியின் கண்ணுக்கு உவமையாக்கினார். இம்மலர் மிகுதியான இதழ்களை உடையதாதலால் அதைப் ‘பல்லிதழ்’ என்று அழைத்தனர்.
கண்கள் குவளை மலர்களைப் போல் உள்ளது என்றுதான் சொல்வார்கள். ஆனால் குவளை மலரை விட அழகான கண்கள் என்றும் அம்மலர்க்கு பார்க்கும் திறம் இருந்தால், ஒருமுறை கண்டாலும் போதும். உடனே காதலியின் கண்களின் அழகுக்குத் தோற்று வெட்கத்தால் நிலத்தை நோக்கிக் கவிழும் என்றும் தலைவன் தன் காதலியின் கண்களை உவமித்துப் பாராட்டுகின்றான்.

குவளை மலர்கள் என் காதலியைக் கண்டால், சிறந்த அணியை உடையவளது கண்களுக்கு யாம் இணையாக மாட்டோம் என்று, நாணித் தலை கவிழ்ந்து நிலம் நோக்கும் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு =குவளைமலரைத் தாழ்வு அடையச் செய்யும் கண்ணின் நலம்புனைந்துரைத்தல்.
பொழிப்புகுவளை மலர் சிறந்த அணிபூண்ட காதலியின் கண்களைக் கண்டால், தான் அவற்றுக்கு ஒப்பாக மாட்டோம் என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 409 கல்லாமை
மணக்குடவர் உரை:கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. குறள் 951: குடிமை
மு. வரதராசன் உரை:நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 952 குடிமை
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் - குறள் 954 குடிமை
மு. வரதராசன் உரை:பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை
மு. கருணாநிதி உரை:விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சாலமன் பாப்பையா உரை:நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 957 குடிமை
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2 தெரிந்துதெளிதல்
மு. வரதராசன் உரை:நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
மு. கருணாநிதி உரை:குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 794 நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
மு. கருணாநிதி உரை:பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.

மேல் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9 கல்லாமை
மு. வரதராசன் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.
மு. கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 14:3 ஒழுக்கமுடைமை
மு. வரதராசன் உரை:ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4 ஒழுக்கமுடைமை
மணக்குடவர் உரை:பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று
சாலமன் பாப்பையா உரை:பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1 தூது
மு. வரதராசன் உரை: அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 100:2 பண்புடைமை
மு. வரதராசன் உரை:அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ்விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.
மு. கருணாநிதி உரை:அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாண பெரிது - குறள் 13:4 அடக்கமுடைமை
மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.
மு. வரதராசன் உரை: தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த-கடை - குறள் 964 மானம்
மு. வரதராசன் உரை:மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் - குறள் 453 சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை: மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. குறள் 454: சிற்றினஞ்சேராமை
மு. கருணாநிதி உரை:ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்.

தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை
செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 446 பெரியாரைத் துணைக்கோடல்
மணக்குடவர் உரை:தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை. இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.
மு. வரதராசன் உரை:தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

மன தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இன தூய்மை தூவா வரும் - குறள் 455 சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை:மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் - குறள் 457 சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை:மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து - குறள் 458 சிற்றினஞ்சேராமை
சாலமன் பாப்பையா உரை:மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து - குறள் 459 சிற்றினஞ்சேராமை
சாலமன் பாப்பையா உரை:ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். குறள் 460: சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை:நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
மு. கருணாநிதி உரை:நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.

இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியொடு ஒழுகப்படும் - குறள் 698 மன்னரைச் சேர்ந்தொழுதல்
மு. வரதராசன் உரை அரசனை) "எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன் உடையார்-கண்ணே உள - குறள் 223 ஈகை
மு. வரதராசன் உரை:யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.
மு. கருணாநிதி உரை:தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 959 குடிமை
மு. வரதராசன் உரை: இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 958 குடிமை
மு. வரதராசன் உரை:ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
மு. கருணாநிதி உரை:என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்

சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 956 குடிமை
மு. வரதராசன் உரை:மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைகொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார்.

நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 960 குடிமை
மு. வரதராசன் உரை:ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை - குறள் 1019 நாணுடைமை
மு. வரதராசன் உரை:ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 898 பெரியாரைப் பிழையாமை
சாலமன் பாப்பையா உரை: மலை ஒத்த ஆற்றல் உடைய பெரியவர், ஒருவரை அழிக்க எண்ணிவிட்டால், அவர் எண்ணிய அளவிலேயே இப்பூமியில் நிலைபெற்று வாழ்பவர் போன்றோரும், தம் குடியோடும்கூட அழிவர்.

மடியை மடியா ஒழுகல் குடியை
குடியாக வேண்டுபவர் - குறள் 602 மடியின்மை
மு. கருணாநிதி உரை:குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மு. வரதராசன் உரை: மலைபோன்ற பெரியார் கெட நினைத்தால், உலகில் அழியாமல் நிலைபெற்றாற்போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 793 நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.

மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் - குறள் 608 மடியின்மை
மு. கருணாநிதி உரை: பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் - குறள் 133
மு. வரதராசன் உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

நகை ஈகை இன் சொல் இகழமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 953 குடிமை
மு. வரதராசன் உரை: உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி

குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
சாலமன் பாப்பையா உரை: பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.

குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
மு.வரதராசனார் உரை:நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய
அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே
பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 681 தூது
மு. வரதராசன் உரை: அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 794 நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.

செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உள் பகை உற்ற குடி - குறள் 887 உட்பகை
சாலமன் பாப்பையா உரை:செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.

அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி - குறள் 888 உட்பகை
சாலமன் பாப்பையா உரை: அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்‌பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் - குறள் 952 குடிமை
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் - குறள் 954 குடிமை
மு. வரதராசன் உரை:பலகோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்குக் காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து - குறள் 957 குடிமை
மு. வரதராசன் உரை:உயர்குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு - குறள் 992  பண்புடைமை
மு. கருணாநிதி உரை: அன்புடையவராக இருப்பதும், உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பதும்தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்
சாலமன் பாப்பையா உரை:எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்

பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 681 தூது
மு. வரதராசன் உரை: அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.

குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 794 நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை
பரிமேலழகர் உரை: மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.


மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409: கல்லாமை
மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்  (அதிகாரம்:பெருமை குறள்:972)
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற  வேறுவேறு தொழில்களால் கிடைக்கும் பெருமை ஒத்து ருப்பதில்லை
 
பொருள் கொள்ள வரிஅமைப்பு:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும்.
செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா.
பதவுரை: பிறப்பு-தோற்றம்; ஒக்கும்-ஒத்து அமைகிறது; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிருக்கும். சிறப்பு- பெருமை ஒவ்வா-  ஒப்பாகாது - ஈடாகாது- இணையாகாது; செய்-செய்யும்; தொழில்-தொழில்; வேற்றுமையான்-வேறுபாட்டினால்.
6.jpg
எளிமையான இந்தக் குறளை வைத்து நவீன தமிழ் மெய்யியல் மரபை ஏற்காத நவீன புலவர்கள் பிரிவினை மூட்டி திருக்குறளை சிறுமை செய்வதால் நாம் விரிவாகக் காண வேண்டி உள்ளது.

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் 

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (327: கொல்லாமை)
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.  (251:புலான்மறுத்தல்)
உயிர் என்கையில் எல்லாவித உயிரையும் வள்ளுவர் பல்வேறு குறளில் சொல்லி உள்ளார்.
வள்ளுவர் எழுபிறப்பு என ஏழுவகைப் பிறப்பு எனவும் குறிப்பிட்டுள்ளும் உள்ளார்(எழு பிறப்பு -தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி) -  இதில் முழுமையாய் அறத்தை செய்து வாழ்ந்தால் மேலுலகம் செல்ல முடியும் என்பதை வள்ளுவர் ஏற்கிறார், அதன் பின்னும் மீண்டும் மனிதனாகப் பிறக்கிறான், அற வாழ்க்கையோடு உலகைப் படைத்த றைவன் திருவடி பற்றிக் கொண்டால் பிறவியற்ற நல்லாறு அடைய இயலும் என்பது வள்ளுவர் பல்வேறு குறளில் காட்டி உள்ளார்.
பிறப்பு ஒக்கும் என்கையில், பிறப்பு வகையில் வேறுபாடுகள்பிறப்பு வேறுபாடுகள் 4விதம் என்பது மெய்யியல் மரபு
1.அண்டகம் - முட்டையில் குஞ்சு பொரிக்கும் பறவை இனம். (பறப்பன)
2.வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் கொசு முதலியவை
3.சிராயுசம் வகையில் - பாலூட்டிகள் தாய் கர்ப்பப்பையில் சுமந்து யோனி வழியில் பிறப்பு
4. உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன- செடி-கொடி தாவரங்கள்.
 
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்றவர்- தொழில் வேற்றுமையான் என்கையில் இது மனிதப் பிறப்பை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகும்.  
 
ஒக்கும் -இச்சொல்லை வள்ளுவர் இன்னுமொரு குறளிலும் பயன்படுத்து உள்ளார்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. குறள் 1112நலம் புனைந்துரைத்தல்.
'இவளது கண் பலரால் காணப்படும் பூவையொக்கும் என்று, நெஞ்சே! மலர்களைக் கண்டால் மயங்குகின்றாய்'
தலைவியின் கண்ணையும் பூவின் மலரையும் ஒப்பீடு, ஆனால் இரண்டு வேறு; எனவே பார்வைக்கு ஒன்று போலே ஆனால் வெவ்வேறு எனவே அமைந்துள்ளது.
 
பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கர்ப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது.எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – பிறப்பு இயல்பு என்பது ஒரே மாதிரியாக அமைகிறது.
 
செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா. 
சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் -செய்கின்ற தொழில் வேறுபாட்டினால் பெருமை ஒத்திருப்பது இல்லை
ஒவ்வா எனும் சொல்லினை வைத்தும் பல கயமை காண்பதால வள்ளுவரின் வழியே காண்போம்
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண் ஒவ்வேம் என்று.                   குறள் 1114: நலம் புனைந்துரைத்தல்
குவளை மலர்கள் காண முடிந்தால், தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். 
 
ஒவ்வேம் என்பது ஒவ்வா என மேலுள்ள குறள் போலே எதிர்மறையிலே தான் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்
 ஒவ்வேம் -தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே 
செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் கிடைக்கும் பெருமை ஒன்றாக இருக்காது என்பது இப்பகுதியின் பொருள். 
 
அதிகாரத்தோடே பொருள் காண்பது 
வள்ளுவர் எந்த அதிர்காரத்தில் ஒரு குறளை இயற்றி உள்ளாரோ - அந்த அதிகாரத்தின் தலைப்போடேயே தான் பொருள் காண்பது தமிழ் இலக்கண மரபு
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -குறள் பெருமை அதிகாரத்தில் உள்ளது
6%2Ba.jpg
பெருமை அதிகாரத்தில் குறள்972 -  பிறப்பு ஒக்கும் என்றவர் அடுத்த குறளிலேயே
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.       ( 973:பெருமை)
மு. வரதராசன் உரை: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.
ள்ளுவர் கல்வியும் நற்பண்புகளில் ஒருவன் உயர் நிலை அடைய முடியும் என்கையிலேயே-நாம் வள்ளுவர் மேல் கீழ் என்பதை பிறப்பால் எனவும் கூறுவதைக் காணலாம்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
கற்றார் அனைத்திலர் பாடு. (409: கல்லாமை
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 நல்ல குடியில் பிறந்தவனிடனிடமே நல்ல  பண்புகள் இருக்கும் 

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.(குறள் 958:குடிமை)
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959: குடிமை)
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின்  இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.
 

 

எல்லோரையும் ஒன்றாகப் பார்க்கவேணுமா 
வள்ளுவர் மிகத் தெளிவாய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.

 

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர் 528:சுற்றந்தழால்)
அரசன் எல்லாரையும் சமனாகப் பொதுநோக்கு நோக்காமல் அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு நோக்கி அவனை விடாது (விரும்பிச் சுற்றமாக) வாழ்பவர்கள் பலராவர்.
 

 

இவ்வுலக வாழ்விற்கு வள்ளுவர் காட்டும் வழி

 

வள்ளுவர் தன்மனிதன் நட்பு தேர்ந்தெடுக்க கூறு வழி
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. (793:  நட்பாராய்தல்)
மு. வரதராசன் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.    (794:  நட்பாராய்தல்)
மு. வரதராசன் உரை: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
அரசன் தன் சார்பாக தூது அனுப்ப்வோரை தேர்ந்தெடுக்க வள்ளுவர் வழி
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.  ( 681: தூது)
அன்புடையவனாதல், உயர்ந்த குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.
 
வள்ளுவத்தின் அடிப்படை வழிகாட்டல் 
ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவனிலிருந்து தொடக்கம் முழுமுதல் கடவுளை உலகைப் படைத்த இறைமை (பிரம்மத்தை) கூறி தொடங்கினார்.
கல்வி கற்பதன் பயனே இறைவனின் திருவடியைப் பற்றி கொள்ளவே என்றவர்; இறைவன் திருவடி சேராதாரோல் மீண்டும் மீண்டும் பிறக்கும் பெரும் கடலை நீந்த  (முக்தி- மோட்சம் அடைதல்)இயலாது என்கிறார்.
 
திருக்குறளிற்கு வள்ளுவர் தரும் முகவுரை அறன் வலியுறுத்தல் அதிகாரம் முதல் பாடலிலேயே
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. (31:அறன்வலியுறுத்தல்)
மணக்குடவர் உரை: முத்தியும் தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கம்  உண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
 
வள்ளுவத்தின் அடிப்படை- இறை நம்பிக்கை, இறைவன் திருவடியைப்  பற்றி இவ்வுலகில் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் வகையில் அறத்தை செய்து இறைவனை அடையும் வழி நாடவேண்டும்
 
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
.      (குறள் 38:அறன்வலியுறுத்தல்)
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (குறள் 36:அறன்வலியுறுத்தல்) 
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (356:மெய்யுணர்தல்)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு  (339 :நிலையாமை)

இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். ( 362: அவாவறுத்தல்)
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. ( 361: அவாவறுத்தல்)
 
திருவள்ளூவர் அறத்தை வலியுறுத்த உத்தி
1. முந்தைய நூல்கள் மீது ஏற்றி வலியுறுத்துவார்- இது வள்ளுவர் பண்டைய மெய்யியல் மரபினை வலியுறுத்துபவர் என்பதை உறுதி செய்யும். 
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும். 183:
காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்டவிடத்துப் பொய்செய்து உயிரோடு வாழ்தலின் புறங்கூறாதிருந்து நல்குரவினாற் சாதல் அறநூல்(தர்ம சாஸ்திரங்கள்) சொல்லுகின்ற ஆக்க மெல்லாந் தரும்.
Ulaku.jpg
2. உலகின் மீது ஏற்றி கூறுதல் - மரபு வழியே வாழும் சான்றோர்கள் ஏற்பதே உலகின் மீது ஏற்றி கூறுவது ஆகும்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.   140:ஒழுக்கமுடைமை.
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.
 
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.   (34: அறன்வலியுறுத்தல்.)
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (குறள் 35:அறன்வலியுறுத்தல்.)
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு. 735: நாடு. 
சாலமன் பாப்பையா உரை: சாதி, சமய, அரசியல், கருத்து முரண்பாடுகளால் வளரும் பல்வேறு குழுக்கள், கூட இருந்தே குழி பறிக்கும் சொந்தக் கட்சியினர், அரசை நெரக்கடிக்கு உள்ளாக்கும் சிறு கலகக்காரர்கள் (ரௌடிகள், தாதாக்கள், வட்டாரப் போக்கிரிகள்) ஆகியோர் இல்லாது இருப்பதே நாடு
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.  181: புறங்கூறாமை.
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது. 
 

 

 

 

திருக்குறளில் தெய்வப் புலவரே தெளிவாய் யாரோடு சேர வேண்டும் - தவறான மோசடியாளரோடு இணைந்தால் கேடு என்பதை-

 

.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.          குறள் 508:  தெரிந்துதெளிதல்
ஒருவரை  ஆராய்ந்து பார்க்காமல்  துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் தனக்கு மட்டும் அல்லாமல் அவரால் வருங்காலத் சந்ததியினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்
சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டம் அவரை தவறாய் வழிகாட்டும்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு 
 
இனத்தியல்ப தாகும் அறிவு.          குறள் 452:  சிற்றினஞ்சேராமை
 நீர் தான் பாயும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப அந்நிலத்தின் தன்மையோடு திரிந்து விடும், மக்களுடைய அறிவும் அவர்கள் சேர்ந்துள்ள கூட்டத்தின் தன்மையை பெற்றுவிடும்
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு 
இனநலம் ஏமாப் புடைத்து.        சிற்றினஞ்சேராமை குறள் 458
நிறைகுணம் பெற்றவராக இருந்தாலும்  நன்கு கற்ற சான்றோர் ஆயினும் அவர் சேர்ந்துள்ள கூட்டத்தினரைப் பொருத்தே  வலிமை அமையும் 
 
வள்ளுவர் காலம் தொட்டு அடுத்த ஆயிரம் ஆண்டுகள் பொஆ1800 வரையிலும் கூட ஆசிரியர் வீட்டில் அவரோடே வசித்து குருகுஅல அமைப்பில் படிப்பது தான் வழி, எனவே இவை பெரும்பாலும் அவரவர் குடிக்கான கல்வியை கற்கும் சூழல்


 

 

 


 


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.                              (543-செங்கோன்மை)
அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.
   
“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)
வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.                                   (8-கடவுள் வாழ்த்து)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.                   (30-நீத்தார் பெருமை)

 



 

இந்தக் குறளினை வைத்து தாங்கள் முற்போக்கு என நம்பிக்கைகளை வள்ளுவம் மேல் ஏற்றுவோர் தமிழிற்கு சிறுமை செய்கின்றனர், இதே வழியில் தொடர்புள்ள இன்னுமொரு குறள்

 

 

 

நீத்தார் என இவ்வுலக பற்றுக்களை நீத்து துறவறம் பூண்டோரைக் குறிப்பது
 
 
 
 
மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.
 
பரிமேலழகர் உரை: எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை: எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
கலைஞர் உரை: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
 
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (505 : தெரிந்து தெளிதல்)
ஒருவரது சிறப்புக்கும் குறைபாட்டிற்கும் அவரவர் செயல்களே  (செயலின் செம்மை) ஒருவர்க்குச் சிறப்பு தரும்.
 

 

 
 

 

 

 

ஒவ்வாக-  ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா
சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான் -   செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

 

 

 

திருக்குறளின் அடிப்படை இறை நம்பிக்கையோடு முக்தியை தேடுதல் என்பது அதைவிடுத்து திருவள்ளுவர் சொல்லாததை திருவள்ளுவர் சொன்னதாகக் கூறி பிரிவினை வாதம் செய்வதை வள்ளுவர் ஏற்கமாட்டார் நாடு எனும் அதிகாரத்தில் அவர் கூறும் அதேபோல அருகிலேயே மிக முக்கியமான ஆழம் என்ன எனில் வள்ளுவர் கூறி உள்ளது எனவே பொய்யாக வள்ளுவத்தில் இல்லாததை வைத்துக்கொண்டு நாத்திகம் ஆத்திகம் இடையே பொருள் கூறுகிறேன் என்றும் தேவையற்ற விதத்தில் சிறிய விஷயத்தை பெரிது படுத்தி தமிழர் மெய்யியல் மரபு செய்வோர் திருக்குறளை சிறுமைப்படுத்தும் திருக்குறள் துரோகிகள் என பெண்களை அழைத்துக்கொண்டு பணி செய்யலாம்

 

 

 

நிறையுரை:எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே; செய்யும் தொழிலின் வேறுபாட்டால் சிறப்பு ஒத்தவையாகா.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; செய்யும் தொழிலின் வேற்றுமையால் சிறப்பு ஒன்றாக இருக்காது என்பது பாடலின் பொருள்.

 

'பிறப்பொக்கும்' குறிப்பது என்ன?

 

பிறப்பு ஒக்கும் என்ற தொடர்க்கு பிறப்பு ஒத்துள்ளது என்பது பொருள்.

 

எல்லா உயிர்க்கும் என்ற தொடர் அனைத்து உயிர்களுக்கும் என்ற பொருள் தரும்.

 

சிறப்பு ஒவ்வா என்ற தொடர்க்கு பெருமையென்பது ஒத்திருக்காது என்று பொருள்.

 

செய்தொழில் என்ற தொடர் செய்கின்ற தொழில்கள் என்ற பொருளது.

 

வேற்றுமையான் என்ற சொல் வேற்றுமைகளால் என்ற பொருள் தருவது.

 

 

 

பிறப்பால் சிறப்பு உண்டாவதில்லை; செய்யும் தொழிலால் பெருமை வேறுபடுவதுண்டு.

 

 

 

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard