Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளும் வானோர் -திருவள்ளுவர்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
திருக்குறளும் வானோர் -திருவள்ளுவர்
Permalink  
 


தொல்காப்பியத்திலும் அறக்கடவுள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது .

     அறன் அழித்துரைத்தல் ஆங்கு நெஞ்சு அழிதல் (தொல். பொருள்: 270)

என்பதில் அறக் கடவுளைப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

புறநானூற்றிலும் அறக்கடவுள் பற்றிய செய்தி உள்ளது.
வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர் கிள்ளிவளவன் என்னும்
மன்னனை அறக்கடவுள் போல், நீதி வழங்குவாயாக என்று
வேண்டுவதாக ஒரு பாடல் இடம் பெற்று உள்ளது.

    அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து (புறம்: 35)

(அன்ன = போல, நாட்டத்து =ஆராய்ந்தால்)

என்ற பாடல் வரி இதை மெய்ப்பிக்கிறது. வள்ளுவரும் அறத்தை
இறைவனாக உருவகப்படுத்தியுள்ளார்.

 

என்பி லதனை வெயில்போலக் காயுமே 


அன்பி லதன அறம்
. (77)

 

'எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து வருத்துவதைப்போல, அன்பு இல்லாத உயிரை அறக் கடவுள் வருத்தும் என்பது பொருள்.
 
கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி 
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130).
அறக் கடவுள் யாரிடம் சேரலாம் என்று ஏங்கி நிற்கிறதாம். எவன் சினத்தை அடக்கினவனே, எவன் நன்கு கற்று அடக்கத்திற் சிறந்து நிற்கிருனே அவன் வருகிருன் என்று தெரிந்து, அவன் வரும் வழியில் காலம் பார்த்து நிற்குமாம்.
 
மறந்தும் பிறன்கேடு சூழற்க; குழின் 
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)
தீவினை அச்சம் என்னும் அதிகாரத்தில் வருவது இக் குறள். ஒருவன் பிறனுக்குக் கேடு உண்டாக்கும் காரியத்தை மறந்தாவது எண்ணக் கூடாது; அப்படி எண்ணினால் அவனுக்குத் தீங்கு உண்டாக்கும் காரியத்தை அறக்கடவுள் எண்ணும்' என்பது இதன் பொருள். . . .
 
பருவரலும் பைதலும் காணுன்கொல் காமன்
ஒருவர்கண் நின்ருெழுகு வான். 
இது தோழியை நோக்கித் தலேவி கூறியது. தலைவ னுடைய பிரிவினுல் துன்புற்ற தலைவி சொல்கிருள்; என் காதலருடைய பிரிவினல் நான் துன்புறுகிறேன். அவர் துன்புறுவதில்லே போலும்! என்னிடம் காமத்தை உண் டாக்கி இந்தத் துன்பத்தைத் தருபவன் காமன். அவன் என் காதலர்பாலும் இத்தகைய துன்பத்தை உண் டாக்காமல் பட்சபாதத்துடன் இருக்கிருன். அவருக்கும் துன்பம் உண்டானல் என்னேப் பிரிந்திருப்பதை விட்டு வந்து சேர்வார். 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard