Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து


Guru

Status: Offline
Posts: 7602
Date:
திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து
Permalink  
 


 திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து

9k=  images?q=tbn:ANd9GcTS79QyKrqMH8zk5w1vG5W 
குறள் 1: 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
 
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது
 
 36 ‘ சட்ட அறிஞர்-போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ‘ என்று கேட்டார்.37 அவர், ‘ உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும்  உன் இஸ்ரேலின் ஆண்டவராகிய கர்த்தரிடம் அன்பு செலுத்து. ‘ 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. 

பைபிளின் கொள்கை- அதற்கு தனி சிறு எல்லை தெய்வம் கர்த்தர். முழு உலகுக்கு இல்லை

குறள் 2:

 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

 

நற்றாள் தொழாஅர் எனின்.
மு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

 

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
 

கர்த்தர் சொன்னதை செய்தால் கர்த்தரின் கருணை என்ன?

http://pagadhu.blogspot.in/2014/02/blog-post_19.html

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
 இயேசு சீடருக்கு சொன்னது
மத்தேயு10:5 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.கானானியப் பெண்ணிடம் 

 

மத்தேயு15: 24 இயேசு மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடம்  மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் மற்றவ்ர்களுக்கு அல்ல ‘  என்றார். 26 இயேசு  மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.
 

யூதரல்லதோரை நாய் எனக் கேவலாமாய் கீழ்த்தரமாய் விமர்சித்தார் இயேசு.

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
 
மு.வ உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
 மத்தேயு11:18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘ அவன் பேய்பிடித்தவன் ‘ என்கிறார்கள்.19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘ இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ‘ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று. ‘ 
 
இயேசு தன் ஐம்புலன் களை அடக்கவே இல்லை
 
குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
மு.வ உரை:

 

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

 மாற்கு8:17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ‘ நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ‘ நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
மத்தேயு8:19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ‘ போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ‘ என்றார்.20 இயேசு அவரிடம், ‘ நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ‘ என்றார்.21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ‘ ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும் ‘ என்றார்.22 இயேசு அவரைப் பார்த்து, ‘ நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் ‘என்றார்.
 
மாற்கு15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘என்பது அதற்குப் பொருள்.
 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 

இயேசு கடவுளும் இல்லை- நல்லவரும் இல்லை

  குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.’

மு.உரை:அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

 

குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

மு.வரதராசனார்உரை:கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

 

குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

மு.வரதராசனார்உரை:இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller.                                                                                                                                                                                                                              Professor OF New Testament, Union Theological Seminary NewYork                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என                                                                                                                                                                                                                                                                  அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல்                                                                                                                                                                            -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
ஏசு தன் வாள்நாளில் உலகம் அழியும் எனத் தெளிவாக பலமுறை புலம்பினார்.

§  images?q=tbn:ANd9GcShIsulGr1DDZ07cvLIVGy images?q=tbn:ANd9GcQObBQABqHFkr6LI4vY7PD images?q=tbn:ANd9GcRTS17_0P16mDCUy_OCVTF f486d-untitled-bmp.jpg?w=640

Sri Sathya Sai Baba devotees attending the special mass at the Santhome Cathedral during the weekend.

http://ishwarsharan.wordpress.com/parts-2-to-9/madras-mylapore-archdiocese-plans-blockbuster-movie-on-st-thomas-ishwar-sharan/

 

 

ஏசுமிகச்சாதரணமனிதன்மட்டுமே. எபிரேயரானஅவரைப்பற்றிஅவரைபார்க்கவேஇல்லாத நபர்கள் கிரேக்க மொழியில் புனைந்தபுதியஏற்பாட்டின்                                                                                                                                                                                                                                                                   ஒருசிலவசனங்களைமிகைப்படுத்திகடவுளக்குவதுபயனற்றவேலை

 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
RE: திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து
Permalink  
 


திருவள்ளுவர்

image
நான் 51 வயதிலே ரட்சிக்கப்பட்டவன். அதற்க்கு முன்புவரை கடவுள் நம்பிக்கையற்று பெயரளவில் இந்துவாக இருந்தவன். சமுதாய சேவை – நேசமான தொழில் – இலக்கியங்கள் -சாதிப்பற்று என இருந்தவன்.
நேற்று ஒரு இந்து சகோதரர் எனக்கு அனுப்பிய வேண்டுகோள்:
” திருவள்ளுவருக்கு
ஊர்கள்தோறும் கோயில் கட்டுவோம்”

நான் அனுப்பிய பதில்:

திருவள்ளுவரை வாழ்த்துவோம். அவர் புகழை உலகம் அறிய திருக்குறளை பல் மொழியில் மொழி பெயர்ப்போம். இல்லாத மொழி எது என தேடிப்பிடிப்போம்.
இன்டர்நெட்டில் அலங்கரிப்போம்.
சேராத இடத்திற்க்கு அவர் புகழ் சென்று சேரட்டும்.   – Reach the unreach –
யாரையும் விக்ரகமாக ஆக்குவது கடவுளுக்கு  வெறுப்பானது.  கடவுளே தன்னை விக்ரகம் ஆக்குவது நல்ல செயல் அல்ல என்கிறார். போற்றுவோம் கடவுளை! ஆராதிப்போம் கடவுளை!
வாழ்த்திடுவோம் மனிதர்களை. மதித்திடுவோம்.

 கடவுள் தன்னை விக்ரகமாக வைத்து வணங்குவதை விரும்பவில்லை. கடவுள் சித்தம் என்ன என்பதை அறிய வேண்டும். வானத்தையும் பூமியையயும் நீர் ஊற்றுகளையும் மிருகங்களையும் பறவைகளையும் மீன்களையும் படைத்த கடவுளை வணங்குவது அவரை முழுமனதுடன் அன்பு கூறுவது எவ்வளவு உன்னதமானது. அதை விடுத்து அவர் படைத்ததை வணங்குவது எவ்வளவு அறியாமை? மனிதனை மதிக்க வேண்டும். வாழ்த்தனும். அயலானிடத்தில் அன்பு கூற வேண்டும். பிறரிடத்தில் நல்லவைகளை கற்றுக்கொள்ளலாம். ஆனாலும் நாம் நாமாக இருக்கவே கடவுள் விரும்புகிறார். இறைவன் நம்மை நாமாகவே வாழ விரும்புகின்றார். நாம் தேவனோடு இருக்கும்போது நாம் எத்தனை வல்லமையுள்ளவர்களாக இருப்போம் என்ற பரம தரிசனத்தை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க தேவன் நம்மைத் தூண்டுகின்றார். தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கிரயத்தை நாம் செலுத்த ஆயத்தமாக இருக்கும் பட்சத்தில் அவர் நம்மை நம்முடைய ஊழியப்பணிகளிலே நம்மை தமது நாமத்தின் மகிமைக்காக பயன்படுத்த ஆயத்தமுடையவராக இருக்கின்றார்.

திருக்குறள் & பைபிள் –

கடவுள் வாழ்த்து

திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து இறைவனை போற்றி புகழ்கிறது. இந்த பத்து குறள்களோடு பொருந்தும் பைபிள் வசனங்களை இந்த பதிவில் காணலாம். வள்ளுவர் இறைவனை கண்ணோக்கும் விதமும் அதற்கு இணையான பைபிள் வசனங்களும் நிச்சயமாக மெய் சிலிர்க்கச் செய்கின்றன. குறள்களின் விளக்கத்திற்கு சாலமன் பாப்பையா உரையும், மு.வரதராசனார் உரையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாரம் 1: கடவுள் வாழ்த்து 
(அறத்துப்பால், பாயிரவியல்)
குறள் 1: 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; அது போல உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பைபிள் வசனம்:
நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன்.
– வெளிப்படுத்தின விசேசம் 1:8

விளக்கம்:
பைபிளின் இறுதி நூலான வெளிப்படுத்தின விசேசம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. கிரேக்க மொழியின் முதல் எழுத்து அல்பா, இறுதி எழுத்து ஒமெகா. இயேசு தன்னை அல்பா ஒமெகாவோடு ஒப்பிட்டு சிருஷ்டியின் முதலும் முடிவுமாய் தான் இருப்பதை நினைவு கூறுகிறார்.

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

சாலமன் பாப்பையா உரை: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?


பைபிள் வசனம்:

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் – நீதிமொழிகள் 9:10

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

பைபிள் வசனம்:
கர்த்தருக்கு பயப்படுதல் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணும் – நீதிமொழிகள் 10:27

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

சாலமன் பாப்பையா உரை:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

பைபிள் வசனம்:
கர்த்தரை தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது – நீதிமொழிகள் 34:10

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

 

பைபிள் வசனம்:
நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்
– யோவான் 8:12

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மு.வரதராசனார் உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

பைபிள் வசனம்:
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள் – ரோமர் 8:13

விளக்கம்:
பரிசுத்த ஆவியான இறைவனின் துணை கொண்டு சரீரத்தின் இச்சையான செயல்களை அழித்தால் பிழைப்போம். அவ்வாறன்றி, மாம்ச இச்சைகளில் நிலைத்திருந்தால் மரணம் உண்டாகும் என இவ்வசனம் கூறுகிறது.

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

பைபிள் வசனம்:

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் – மத்தேயு 11 :29

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.


பைபிள் வசனம்:
நானே வழியும் சத்தியமும்ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் – யோவான் 14:6

குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

மு.வரதராசனார் உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

பைபிள் வசனம்:
கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும் காதுகளிருந்தும் செவிடராய் இருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள் – ஏசாயா 43:8

விளக்கம்:
கடவுளை அறியாத மக்கள் கண்களுள்ள குருடராகவும், காதுகளுள்ள செவிடராகவும் உள்ளனர் என இவ்வசனம் குறிப்பிடுகிறது.

குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

மு.வரதராசனார் உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. 

பைபிள் வசனம்:

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்
– யோவான் 14: 6



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

*திருக்குறள் ஒர் கிறிஸதவ் நூல்*

திருக்குறளில் நிறைய அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்டுள்ளது, திருக்குறளின் அடிப்படையே கிறிஸ்தவம் தான்.

கிறிஸ்தவத்தின் இறைவனாம் *திரியேக தெய்வமான யெகோவா* வைப் பற்றியே எழுதியுள்ளார்.

20, 21ம் நூற்றாண்டுகளின் பல ஆராய்ச்சி நூல்களில், ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியின் முடிவில் திருக்குறள் ஒர் கிறிஸ்தவ நூல் என்று பிரகடணப்படுத்தியுள்னர் - முனைவர். திரு. யா.தா. பாசுகரதாசு.

*கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்:*

*கடவுள் வாழ்த்தில்* வள்ளுவர் வாழ்த்துவது, *தந்தையாகிய* கடவுளை.

*வான்சிறப்பு அதிகாரத்தில்:*

*வான்சிறப்பில்* வள்ளுவர் வாழ்த்துவது
*பரிசுத்தாவியான* கடவுளை.

*நீர்தார்பெறுமை அதிகாரத்தில்:*

*நீர்த்தார்பெறுமையில்* வள்ளுவர் வாழ்த்துவது *குமாரனாகிய* கடவுளை.

*சென்னை மயிலை பேராயர் டாக்டர் ஆர்ச்பிஷப் அருளப்பா* அவர்கள் *கிறிஸ்தவ அடிப்படையிலான திருக்குறள் புத்தாய்வுரை* என்ற நூலை வெளியிட்டுள்ளார்கள், இதில் *திருக்குறளின் மையக் கருத்து* *இயேசு கிறிஸ்துவினுடைய அறக்கருத்துக்களை* வைத்தே எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள்.

*சாண்று:*

*பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க,*
*நெறிநின்றார் நீடுவாழ் வார்.*(குறள் - 6).

*ஐந்தவித்தான்* என்பது யாரைக்குறிக்கிறது?

ஐந்துப்பொறிகளையுமே அவித்தவன்;
*அவி* என்ற தமிழ் சொல்லுக்கு *பலி* என்றுப் பொருள்.

*குறிப்பாக:*

*தொல்காபியம்* முதற்கொண்டு, இலக்கண நூல்களிலும், சங்க இலக்கிய நூல்களிலும் *அவி* என்ற சொல்லுக்கு *பலி* என்றே பொருள் ஆளப்பட்டிருக்கிறது.

ஆக திருவள்ளுவர் அக்குறளை சொல்லுகின்ற பொழுது,
*ஒரு பொறியில் தன் ஐம்புலன்கள் அடங்கிய இந்த உடலையே பலியாகக் கொடுத்தவர்* அப்போது (பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க,
நெறிநின்றார் நீடுவாழ் வார்). அந்த *பொறி*யதில் தன்னை பலியாகக் கொடுத்தவர் காட்டியிருக்கின்ற, பொய்தீர்ந்த ஒழுக்க நெறியில் யாரெல்லாம் நடக்கிறார்களோ, அதைக் கைக்கொண்டு பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு நீடுவாழ்வு. (நித்திய வாழ்வு).

என்று திருக்குறளில் திருவள்ளுவர் தெளிவாக குறிப்பிடுகிறார்.

தொடரும்...



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:6)

பொழிப்பு (மு வரதராசன்): ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

மணக்குடவர் உரை: மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நெகிழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?
இது சாவில்லையென்றது.

பரிமேலழகர் உரை: பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பஞ்சேந்திரிய ஆசைகள் என்பதே இல்லாத இயல்பினன் பகவான் பொய்த்தல் இல்லாத அந்த இயல்பை உணர்ந்து அதற்கான நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து நடக்கின்றவர்கள் அந்த இயல்பின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரம் ஆவார்கள்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வார்.

பதவுரை: பொறி-ஐம்பொறி (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி); வாயில்-வழி; ஐந்து-ஐந்து (இங்கு ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகிய ஐந்து புலன்களைக் குறிக்கும்); அவித்தான்-பண்படுத்தியவன், பக்குவப்படுத்தியவன், அறுத்தவன், அழித்தவன்; பொய்-மெய் அல்லாதது; தீர்-நீங்கிய; ஒழுக்கநெறி-ஒழுக்கமுறை; நின்றார்-நின்றவர்; நீடு-நெடிது; வாழ்வார்-நன்கு வாழ்வார், நிலைபெற்றிருப்பவர்.


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்::

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்பொறிகளின் வழியாக வரும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐந்தின்கண்ணுஞ் செல்லும் மன நெகிழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே;
பரிதி: சத்த பரிச ரூப ரச சுத்தம் என்கிற பொறியை வழியாக உடையவற்றிற்கு மனசைப் போக்காமல் காக்க வல்லார்;
காலிங்கர்: சுவை,ஒளி, ஊறு,ஓசை, நாற்றம் என்கின்ற ஐம்பொறிகளை நுகர்வதற்கு வழிக்கருவியாகிய மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என்கிற ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன் இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்;
பரிமேலழகர்: மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார்;
பரிமேலழகர் குறிப்புரை: புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல.

'பொறிவாயில் ஐந்தவித்தான்' என்றதற்கு மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தான் என்றபடியே அனைத்து பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஆனால் அவன் யார் என்பதைச் சொல்வதில் இவர்கள் வேறுபடுகின்றனர். மணக்குடவரும், பரிமேலழகரும் ஐந்தவித்தான் என்ற சொல்லுக்குக் கடவுள் எனப் பொருள்படும்படியாக உரை காண்கின்றனர். பரிதி 'புலன்களைக் 'காக்கவல்லார்' என்ற பொருள்படும்படி உரை செய்திருப்பதாலும் காலிங்கர் 'ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன், (கடவுள் கூறிய நல்லொழுக்க நெறியில் நின்றவர்)' என்று மொழிந்ததாலும் இவர்கள் இருவரும் ஐந்தவித்தான் என்பது மனிதர்களைக் குறிப்பதாகிறது. 'மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார்' என்றதற்கு இறைவனது ஒழுக்க நெறியிலே நின்றார் என்று மணக்குடவரும் பரிமேலழகரும் கூறுகின்றனர். காலிங்கர் 'இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐம்புலனையும் அழித்தவனது மெய்ந் நெறியைக் கடைப் பிடித்தவர்', 'ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐவகை அவாவும் அற்றவனது மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர்', 'ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐந்துவகை ஆசைகளும் இயல்பாகவே இல்லாது அடங்கப்பெற்ற கடவுளை யடைதற்குரிய நிலைபெற்ற நல்லொழுக்க முறையைப் பற்றியவர்கள்', 'மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாகவுடைய ஐந்து விருப்பங்களையும் கெடுத்தவனாகிய கடவுளின் பொய்யை நீக்கிய ஒழுக்கவழியின்கண் தவறாது நின்றவர்கள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐவகை அவாவினையும் பக்குவப்படுத்தியவனாகி, மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நீடுவாழ் வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: நெடிது வாழ்வார்.
மணக்குடவர் குறிப்புரை: இது சாவில்லையென்றது.
காலிங்கர்: முத்தராவர். [முத்தர்- வினைக்கட்டிலிருந்து விடுபட்டவர்]
பரிதி: இகபரம் இரண்டிலும் நெறிநின்று அநேக காலம் வாழ்வர் என்றவாறு. [இகபரம்-இம்மை, மறுமை]
பரிமேலழகர்: பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது.

நெடிது வாழ்வார் என்ற பொருளில் மணக்குடவரும் பரிதியாரும் உரை கூறினர். 'இகபரம் இரண்டிலும்' என்றதால் பரிதியார் உரை இம்மை மறுமை இரண்டிலும் அநேக காலம் வாழ்வார் என்றவாறு அமைந்துள்ளது. காலிங்கர் 'முத்தராவர்' என்கிறார். பரிமேலழகர் 'பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்' என்றுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெடுங்காலம் வாழ்வர்', 'நெடிது வாழ்வார்', 'எக்காலத்தும் செவ்விதின் வாழ்வார்கள்', 'எக்காலத்தும் வாழ்வார்கள்', என்ற பொருளில் உரை தந்தனர்.

நெடுங்காலம் நன்கு வாழ்வார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஐம்பொறிகளின் வழியாக எழும் ஐவகை அவாவினைப் பக்குவப்படுத்தியவனாகி, பொய்தீர் ஒழுக்க நெறியில் நிற்பவர், நெடுங்காலம் வாழ்வார் என்பது பாடலின் பொருள்.
'பொய்தீர் ஒழுக்க நெறி' குறிப்பது என்ன?

ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து ஐம்பொறிகளின் வழியாக ஏற்படும் உணர்வுகளைப் பக்குவப்படுத்தியவனாகி, மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர், நெடுங்காலம் இவ்வுலகின்கண் நெடுங்காலம் இனிது இருப்பர்.

பொறிவாயில் ஐந்தவித்தான்
பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது மெய்வாய்‌ கண்‌ மூக்குச்‌ செவி என்னும்‌ ஐம்பொறிகளின்‌ வழியாக வரும்‌ ஊறு, சுவை, ஒளி, நாற்றம்‌, ஒசை என்னும்‌ ஐந்து புலன்களின் இயக்கத்தை முறைப்படுத்தி, நெறிப்படுத்தி வாழ்ந்தவன் எனப் பொருள்படும்.
இக்குறளில் சொல்லப்பட்டுள்ள ஐந்தவித்தான் இறைவனே என்று ஒரு சாராரும் மனிதர்தான் என்று மற்றொரு சாராரும் கூறுவர். ஐந்தவித்தான் என்பதை அடுத்து 'பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார்' என்ற தொடர் வருகிறது. இந்த இரண்டாவது தொடரை விளக்குவதற்காகவே முதலில் உள்ள ஐந்தவித்தான் என்பதற்கு இறைவன் என்று பொருள் கூறினர் எனத் தோன்றுகிறது. இவ்விரண்டையும் இணைத்து இறைவன் சொன்ன நெறிகள் என்று கொண்டு ஐந்தவித்தானாகிய இறைவன் கூறிய நெறிகள் என்று செய்யுள் படைக்கப்பட்டதாகப் பலரும் கூறுவர். இவர்கள் கூற்றுப்படி ஐந்தவித்தான் என்ற சொல் இறைவன் குறித்தது ஆகும். இறைவன் அதாவது கடவுள் என்னும்போது உருவம், அருவம், அருவுருவம் எல்லாவற்றையுங் கடந்தவன்; அவன் பிறப்பிறப்பு இல்லாதவன் என்றே புரிந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட இறைவனுக்கு பொறிகள்-புலன்கள் உண்டா? அவனுக்குப் பொறி/புலன் இருக்க முடியாது. பொறி/புலனேயில்லாத ஒன்றைப் புலனை அவித்தவன் என்று சொல்ல இயலாது. ஐந்தவித்தான் என்பது இறைவனுக்குப் பெருமை சேர்க்கும் சொல் அல்ல; அது எந்தவகையிலும் அவனுக்குப் பொருந்தாது. எனவே ஐந்தவித்தான் என்ற சொல் இறைவனைச் சுட்டுவது அல்ல. வேறு சிலர் அடியார்களின் அவாவை அடக்குகின்ற இறைவன் என்றும் ஐந்துவகை ஆசைகளும் இயல்பாகவே இல்லாது அடங்கப் பெற்ற கடவுள் என்றும் கூறினர். இவையும் இச்சொல்லை விளங்கவைப்பதாக இல்லை.
அடுத்து, ஐந்தவித்தான் என்பது மனிதனாகப் பிறந்து ஐம்பொறிகளையும் அவற்றினால் உண்டாகும் ஐம்புலன்களையும் அவித்துத் தெய்வ நிலையை அடைந்தவர்க்குப் பொருந்தும் என்றனர் சிலர். சமண சமய நம்பிக்கையின்படி ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் உடைய மனிதனாகப் பிறந்து மனிதனாக வளர்ந்து ஐம்புலன்களையும் அடக்கித் தவம் செய்து பிறவித் துன்பத்தை நீக்கி வீடுபேறு என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர் தெய்வமாகக் கருதப்படுவர்; அவர்தான் அருகக் கடவுள் என்றும் தீர்த்தங்கரர் என்றும் கூறப்படுபவர்; இவரைத்தான் பொறிவாயில் ஐந்தவித்தவன் என்று இக்குறள் கூறுகிறது என்பர் சமண சமயத்தைச் சார்ந்தோர். அதுபோலவே, புத்தரும் மனிதனாகப் பிறந்து வளர்ந்து தம்முடைய புலன்கள் ஐந்தையும் அவித்துப் போதி ஞானம் பெற்றுப் புத்த பதவியை அடைந்தவர். ஆகையால் ஐந்தவித்தான் என்பது புத்தரைக் குறித்தது என்பர் புத்த சமயத்தைப் பின்பற்றுபவர்கள்.
வள்ளுவர் எச்சமயத்தையும் உடம்பட்டவர் அல்லர். பொதுமை நூல் இயற்றியவர் சமயங்கள் தோன்றக் காரணமாக இருந்த சான்றோர்களை மனதில் நிறுத்தி கடவுள் வாழ்த்தில் கூறினார் என்பது ஏற்கக் கூடியதே அல்ல.
இறைவன் இல்லை, இறைநிலை பெற்றவர் இல்லை. பின் யார் இந்த ஐந்தவித்தான்? ஐந்தவித்தான் என்பதற்கு ஐம்புலன்களையும் அடக்கிஆளப் பக்குவப்பட்டவன் என்பது பொருள். ஐம்புலன்களை அடக்குவதற்கு அருகன், புத்தன் போன்ற மாமனிதர்களாகத்தாம் இருக்க வேண்டுமென்பதில்லை. ஐந்தடக்கல் மாந்தராகப் பிறந்த அனைவருக்கும் இயலக்கூடியதுதான். ஐந்தவித்தான் என்ற சொல் ஐந்தவித்த மாந்தர் குறித்தது.

பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்
'பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்' என்பது பாடலின் அடுத்த பகுதி. இது மெய்யான ஒழுக்க நெறி நிற்பவர் என்ற பொருள் தருவது.
பொய்தீர் என்ற சொல்லுக்குப் பொய்ம்மை நீங்கிய, பொய்யற்ற, அல்லது பொய்யில்லாத என்பது பொருள். அதாவது மெய்யான ஒழுக்க நெறியே பொய்தீர் ஒழுக்க நெறி. குறளின் சொல்லமைப்பு, ஒழுக்கநெறிகள் பல உள்ளன என்பதாகவும் அவற்றுள் மெய்யான ஒழுக்க நெறி எதுவென்பதைத் தெளிந்து, அந்நெறியில் நின்று ஒழுகுபவர் என்று சொல்வதுபோல் உள்ளது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் என்றதைத் தெளிவுபடுத்தக் காலிங்கரது உரை உதவுகிறது. அவ்வுரை 'ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்கின்ற ஐம்பொறிகளை நுகர்வதற்கு வழிக்கருவியாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐம்பொறிகளையும் அகத்தடக்கியவன் இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கத்தின் கண் வழிப்பட்டு நின்றவர்' என்கிறது. இவ்வுரையின்படி ஐந்தவித்தான் தனிச் சொல்லாகவும் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் தனியாகவும் அமைகின்றன. அதாவது 'ஐந்தவித்தான், இறைவனது ஒழுக்கநெறியின் வழுவாது நிற்பாராயின் அவர்கள் நீடுவாழ்வார்கள்' என்பது காலிங்கர் உரைக்கருத்து. ஐந்தவித்தான் மனிதரைக் குறிப்பது என்கிறார் காலிங்கர். இறைவன் என்றோ உபதேசம் என்றோ இக்குறளில் சொல்லாட்சிகள் இல்லை; அவை இவரது உரையில் வருவித்துத் தரப்பட்டவைதாம். ஆனாலும் காலிங்கர் உரையே இக்குறளுக்குத் திறவாக அமைகிறது. ஆனால் இங்கும் ஒரு தடை உண்டு. ஐந்தவித்தான் என்ற தொடர் ஒருமையையும், 'நின்றார்', 'வாழ்வார்' என்பன பலர்பாலும் உணர்த்துததால் இடர்ப்பாடு நேர்கிறது. காலிங்கர் உரைக்கு மேற்கண்டவாறு பொருள்கொள்வதற்குக் குறள் 'பொறிவாயில் 'ஐந்தவித்தார்' பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்' என இருத்தல் வேண்டும். ஆனால் செய்யுளோ பொறி வாயில் ஐந்தவித்தலை ஒருமையில் 'ஐந்தவித்தான்' என ஒருவர் செயலாகக் கூறுகிறது. இதற்குத் தண்டபாணி தேசிகர் 'ஐந்தவித்தான் ஆகி என ஆண்பால் எழுவாய், ஆகி என்ற வினைஎச்சத்தை ஏற்க, அங்ஙனம் அவித்த பலர் ஒழுக்கநெறி நின்றாராயின் நீடு வாழ்வார் எனச் சில சொல் வருவித்து முடிக்க இவ்விடர்ப்பாடு அகலும்' என்று இலக்கண அமைதி காணமுடியும்' எனச் சொல்லி 'ஐந்தவித்தானது ஒழுக்கநெறி நின்றார்' என்று கொள்ளாமல், 'ஐந்தவித்தான் ஆகி ஒழுக்கநெறி நின்றார்' என உரை கொள்ளலாம் என்வும் கூறுவார்.
எனவே காலிங்கர் உரை ஐந்தவித்தான் என்பது ஐந்தடக்கல் ஆற்றும் மனிதரைக் குறிக்கிறது எனவும் பொய்தீர் ஒழுக்க நெறி என்றது 'இறைவனது உபதேசமுறைமையாகின்ற நல்லொழுக்கம்' பற்றியது எனவும் அறியலாம். இவ்வுரையால் அதிகார இயைபு அமைந்ததோடு குறட்பொருளும் தெளிவு பெறுகிறது. பொய்தீர் ஒழுக்க நெறி என்பது வழிவழியாக உபதேசமுறையான் வருவது; அதுவே நல்லொழுக்கம் பேண உதவுவது; அது தவறுகட்கு இடந்தராதது என்று பின்வந்தவர்கள் காலிங்கர் உரையை வழிமொழிந்தனர்.
இனி, கடவுள் வாழ்த்தில் எஞ்சிய குறட்பாக்களெல்லாம் கடவுளின் குணங்களைக் குறிக்க, இக்குறள் மட்டும் மனிதர் பற்றிப் பேசுவது என்பது பொருந்துமா என்று கேள்வி எழுப்பினர். ஒழுக்க நெறியில் நிற்கும் மாந்தர் இறைவனது வழியில் நிற்கின்றார் என்பது குறள் கூற வரும் செய்தி ஆதலால் இங்கு கடவுள் ஏன் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்பது ஆராயப்பட வேண்டியதில்லை.

நீடு வாழ்வார்:
நீடு வாழ்வார் என்று சொல்லிப் பாடல் முடிகிறது. 'நீடு நிலமிசை வாழ்வார்' என்று இவ்வதிகாரத்து மற்றொரு குறளில் (3) கூறப்பட்டதால் இங்கு 'நீடுவாழ்வார்' என்பதற்கு மண்ணுலகத்திலும் விண்ணுலகத்திலும் நிலைத்து வாழ்வார் என்று பொருள் கூறினர்.
ஐம்பொறிகளையும் அகத்தடக்கி நன்னெறியில் ஒழுகுபவர் நீண்ட நாள் நன்கு வாழ்வர் என்கிறது இக்குறட்பா. கட்டுப்பாடுடைய இவர்கள் உடல் நலமும் உளநலமும் பெற்றவர்களாயிருப்பதால் நெடிய வாழ்வு கொள்வர் என்பதை மருத்துவ அறிவியல் உலகமும் உடன்பட்டுக் கூறும். இவர்கள் கவலை, பிணி, கட்டு, துயர் இன்றி நிலமிசை நீடு வாழ்வார்.

மக்கள் ஐந்தவித்தார் ஆகி ஒழுக்கநெறியின் நிற்பாராயின் நிலமிசை நீடுவாழ்வார் என்னும் உரையே இக்குறட்பாவிற்குச் சிறப்புடையதாகும். முற்குறட்பாக்களில் இறைவனை நினைத்தலும் புகழ்ந்தேத்துதலும் கடவுள் வாழ்த்தாகச் சொல்லப்பட்டன. ஒழுக்கநெறி நிற்றலும் கடவுள்வாழ்த்தாகும் என்பது இக்குறள் வழங்கும் நுண்ணிய கருத்து. இவ்வாறாக, நினைத்தல், வாழ்த்தல், ஒழுக்கநெறி நிற்றல் என்பன மனமொழிமெய்கள் என்னும் மூன்றன் செயல்களைக் கடவுள்வாழ்த்தாகக் குறள் குறிப்பனவாகின்றன.
'ஐந்தவித்தான்' என்பது பேராற்றலையும் ''ஒழுக்கநெறி'' என்பது ஆற்றலை நெறிப்படுத்தும் தூய்மையையும் ஒருங்கு கூட்டி நிற்பக் காண்மின்!! வினையாற்றலும் மனத்தூய்மையும் இக்குறட்கண் வள்ளுவர் உறுத்தும் பிரிவில் இறைக்கூறுகள் அல்லவா? இறைநெறியைப் பலர் உளறுமாப் போல அறிவுக்கு விளங்கா நெறியாக்காது, வாழ்வுக்குப் பின்னெறி யாக்காது, அறிவுநெறியாக, வாழ்க்கைச் செயல் நெறியாக, நன்றாகக் குறிக்கொண்மின் - ஒழுக்கநெறியாகக் காண்பது வள்ளுவ இறைமை. பல்வேறு ஒழுக்கத்துள்ளும் வாய்மை நெறியாக -பொய்தீர் நெறியாகத் துணிவது இறை வள்ளுவம்" என்று இக்குறளுக்குச் சிறந்த விளக்கவுரை தந்துள்ளார் வ சுப மாணிக்கம்.

'பொய்தீர் ஒழுக்க நெறி' குறிப்பது என்ன?

'பொய்தீர் ஒழுக்க நெறி' என்றால் என்ன? ''பொய்தீர் ஒழுக்க நெறி' என்ற தொடர் மெய்யான ஒழுக்கநெறி எனப்பொருள்படும். இத்தொடர்க்குக் 'கடவுளது நெறி, குற்றமற்ற ஒழுக்கநெறி, தவறுகட்கு இடங்கொடாத நெறி, யாங்கணும் பொய்ம்மையில்லாத வழி, 'பொய்த்தல் அறியாத ஒழுங்கான இயல்பை உணர்ந்து அடக்குகிறவர்கள்' என்று பலவாறாக உரை கூறினர். பெரும்பாலான உரையாசிரியர்கள் இத்தொடரின் முன்னால் வரும் ஐந்தவித்தான் என்ற சொல்லுக்கு இறைவன் என்று பொருள் கொண்டவர்கள். இவர்கள் இத்தொடரை அதனுடன் சேர்த்து வாசித்து 'பொய்தீர் ஒழுக்க நெறி' என்றதற்கு இறைவனது ஒழுக்க நெறி என்று பொருள் கூறினர். இக்குறளில் இறைவன் என்ற சொல் இல்லையென்றாலும், அது இறைவனது ஒழுக்க நெறியைக் குறிப்பது எனவே கொண்டனர். 'இறைவனது ஒழுக்க நெறி அல்லது இறைவன் கூறிய ஒழுக்க நெறி' என ஒன்று உள்ளதா? அப்படி ஒன்று இருந்தால் அதை எப்பொழுது யாருக்கு இறைவன் கூறினார்?

மெய்யான ஒழுக்கநெறியை விளக்கப் புகுந்த சில உரையாசிரியர்கள் அது இறைவனால் வகுப்பப்பெற்ற அல்லது இறைவனோடு தொடர்புடைய ஒழுக்கநெறி என்றனர். ஒழுக்கநெறி என்றதால் திருக்குறள் போன்ற அறநூல்களில் கூறப்பட்ட நெறியைக் குறிக்கலாம் என்றும் தொன்மக்கதைகளில் காணப்படும் இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்கநெறியாக இருக்கலாம் என்றும் கூறினர்.
'இறைவனது ஒழுக்க நெறி' என்றவர்கள் அதற்குச் சமயங்கள் கூறும் உபதேசங்கள் என்று பொருள் கூறி, அது சமய நூல்களான நான்குமறைகள் (வைதீகம்), பரமாகமம் (சமணம்) புத்தர் போதனைகள் போன்றவற்றில் சொல்லப்பட்ட ஒழுக்க அறிவுரையாகவும் இருக்கலாம் என்று கூறினர். வெவ்வேறு சமயங்கள் வெவ்வேறு நெறிகளை, இறைவன் பெயரால் அல்லது இறை தொடர்பானவற்றால் கூறி வருகின்றன. இவ்வாறு இறைவனோடு தொடர்புடைய ஒழுக்க நெறியைச் 'சமயம்' என்றும் 'மதம்' என்றும் 'கடவுள் நெறி' என்றும் அழைக்கின்றனர். இதையே குறள் பொய்தீர் ஒழுக்க நெறி என்கிறது என்பது இவர்கள் தரும் விளக்கம்.
இவ்வாறு அறநூல்களும் தொன்மங்களும் சமயங்களும் பலவகையான நெறிகளை வகுத்து வழங்குகின்றன. இன்னும் எவையெல்லாம் வழிவழியாக உபதேசமுறையான் வருவனவோ அவை அனைத்தும் ஒழுக்க நெறிகளாம். இவற்றுள்ளும் பொய்தீர் ஒழுக்க நெறி என்று தெளிவு பெற்றன எவை என அறிந்து அவற்றின்படி ஒழுக வேண்டும் என்கிறார் வள்ளுவர். 'பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண்', 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு' - இவற்றுள் எது மெய்யான உபதேச நெறி? 'பிறப்பாலேயே சிறப்பு', 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' - இவற்றில் எது பொய்தீர் நெறி? என்பதை அறிந்து தெளிதல் வேண்டும் என அவர் உணர்த்துகிறார்.

கடவுளின் இருப்பில் நம்பிக்கை கொண்டு, உலகப் படைப்பின் உட்பொருளை உணர்ந்து ஒழுகும் வாழ்க்கை நெறியைக் 'கடவுள் நெறி' என்று பொதுவாகக் கூறுவது மரபு (க த திருநாவுக்கரசு). பொய்ம்மை தீர்த்த ஒழுக்கநெறியைக் கடைப்பிடித்து வாழ்தலும் கடவுள் வழிபாடுகளில் ஒன்று என்கிறது குறள்.

மக்கள் ஐந்தவித்தான் ஆகி பொய்யற்ற ஒழுக்கநெறியில் வழுவாது நிற்பாராயின் நீடுவாழ்வார் என்பது இக்குறள் கூறும் கருத்து.



அதிகார இயைபு

நல்லொழுக்கம் பேணுதலும் கடவுள் வாழ்த்துவகையில் ஒன்று.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

உலகின் பல்வேறு தேசங்களில் உள்ள அறியாமலிருக்கும் அற்புதங்களைப் பார்த்த நாம், இம்முறை ஒரு மாறுதலுக்காக நம் இந்தியாவைப் பற்றி பார்க்கப் போகிறோம்.  ஒரு புத்தகத்தில் இவ்விதமாய் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
'ஐரோப்பாவில் பெரும்பாகம் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து, தற்காலத்தில் அதிக நாகரீகம் பெற்றவர்கள் என்று எண்ணப்படுகிற ஆங்கிலேயர், ஜெர்மானியர் போன்றவர்கள் எல்லாம் சாக்கினி தேசக் காடுகளில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த அந்த காலத்திலேயே இந்தியாவில் கிறிஸ்துவ மதம் ஸ்தாபிதமாகி இருந்தது.'
 
இந்தக் காலம் அநேகமாக முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டாக இருக்க வேண்டும். யோசிக்கையில் ஆச்சர்யம் தான். முதலாவது நூற்றாண்டிலேயே அப்போஸ்தலர் தோமா மூலம் இந்தியாவில் கிறிஸ்துவம் விதைக்கப்பட்டு விட்டது. இந்திய மக்களில் ஒரு பகுதியினர், குறிப்பாக தென்னிந்தியாவில் ஒரு பகுதியினர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, மெய்யான தேவனை அறிந்துக் கொண்டார்கள் எனலாம். ஒரு அருட்பணியாளர் சொன்னதை போல 'தோமாவின் ஊழியத்தின் விசேஷம் என்னவென்றால், முற்றிலும் அறிந்திராத ஒரு தேசத்தில், வேதாகமமோ அல்லது அது போன்ற வேறு எதுவுமே இல்லாத நிலையில், தன் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள் மூலமாக மட்டிலுமே ஆண்டவரைப் பற்றி அறிவித்திருக்க வேண்டும். இது எத்தனை கடினமான, சவால்கள் நிரம்பின முயற்சியாக இருந்திருக்க வேண்டும் இல்லையா?'
Kerala.jpg
தோமாவின் ஊழியத்திற்கு கனிகள் இருந்ததா? மக்கள் அவர் வார்த்தைகளை, அவர் காட்டின வழியை ஏற்றுக் கொண்டார்களா? ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறிப் போயிருந்திருக்க வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு கிடைக்கிற பதில்கள் சுவாரசியமானவை. மட்டுமல்ல, நம் விசுவாசிகளில் பலரும் அறிந்திராதவை என்றும் கூட சொல்ல முடியும். பலர் நினைத்திருக்கிறபடி தோமாவின் ஊழியத்தால் கேரளக் கரையோரத்தில் உள்ள, சென்னையில் உள்ள பலரும் தான் என்றில்லாமல் (அதுவும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் தான் என்றில்லாமல்) வேறு கூட்ட மக்களும் உண்டு. ஒரு பிரசங்கியார் சொன்னதைப் போல கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் கதையில் வரும் 'சான்றோர்கள்' இப்படியான விசுவாசிகளைத் தான் குறிக்கிறது என்று நாமும் சொல்லாவிட்டாலும் கூட, வித்தியாசமாய் இருந்தார்கள் என்று சொல்ல முடியும். இம்மக்களின் பாடல்களில் அல்லது மற்றவைகளில் ஒருவேளை நேரிடையாக சிலுவை, கிறிஸ்து போன்ற பதங்கள் பிரயோகிக்கப் படாமாலிருக்கக் கூடும். ஆனால் நாம் முன்பாகவே கூறினதைப் போல புதிய ஏற்பாட்டின் நாம் அறிந்திருக்கிற எந்த புத்தகமும் எழுதப்படாததற்கு முன்பாகவே இந்தியா வந்த தோமா ஆண்டவரை மக்களுக்கு வித்தியாசமான வகையில் அடையாளப்படுத்தி அல்லது காட்டி இருந்திருக்கக்கூடும். அது என்னவாக இருந்திருக்கலாம் என்பதை பிறகுப் பார்க்கலாம். 
 
தோமா தமிழகத்தில் ஊழியம் செய்த பொழுது மக்கள், தமிழ் மக்கள் அவரையும், ஆண்டவரையும் ஏற்றுக் கொண்டார்கள். எனில் அவர்கள் யார்? அதில் முக்கியமான, நமக்குத் தெரிந்தவர்கள் இருக்க வாய்ப்புண்டா என்கிற ஆய்வில் நாம் அறிய வருகிற பதில்கள் வியப்பானவை.


m-deivanayagam.jpg
1970களில் தமிழகமெங்கும் 'மெய்பொருள் விழா'க்கள் என்றழைக்கப்படுகிற கூட்டங்கள் நடந்தன. அவைகளில் புலவர் மு.தெய்வநாயகம், "திருக்குறள்" கிறிஸ்த்துவ கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டது என்றும், திருவள்ளுவர் தோமையாரால் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தப் பட்டிருக்க வேண்டும் என்பது பற்றியும் மிகவும் ஆதாரப்பூர்வமாக பேசினார். அவர் கருத்துக்களுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பின பொழுதும், அவர் எழுப்பின கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்களை தர எவரும் முன்வரவில்லை.

சமீபத்தில்  ஒரு மூத்த ஆயருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, தன்னைப் பொறுத்த வரை சமண சமயக் கருத்துக்களை தான் திருக்குறள் பிரதிபலிக்கிறது என்றார். அவர் மட்டுமல்ல, திரு.வி.க,கிறிஸ்துவக் கல்லூரி பேராசிரியரான ச.த.சற்குணன், பேராசிரியர் S.வையாபுரிப் பிள்ளை போன்றவர்களுமே அப்படித்தான் நம்புகிறார்கள். என்றாலுமே இந்தக் கருத்தை அவருடைய 'ஏழு பிறப்பு' என்கிற சிறு நூலில் திட்டமும், தெளிவுமாக மறுக்கிறார் புலவர் மு.தெய்வநாயகம்.

பிறவி சுழற்சிக் கொள்கை, பல பிறப்புகள் போன்ற கொள்கைகளை உள்ளடக்கியது சமண சமயம் என்பது நமக்குத் தெரியும். இவற்றைக் கூறுகிற விதமாய் திருக்குறள்கள் பலவற்றில் வருகிற எழுமை, ஏழு பிறப்பு, பிறப்பறுத்தல், பிறவிப் பெருங்கடல் போன்ற பதங்களை புலவர் எப்படி விளக்குகிறார் என்பதை இப்போது பார்க்கலாம்.


எழுமையையும், ஏழு பிறப்பு என்பதனையும் ஒரே விதமாய் பொருள் கொண்டு, பலர் விரிவுரை எழுதி இருந்தாலும் அவற்றை நுட்பமாய் ஆராய்ந்து இரண்டும் வெவ்வேறு அர்த்தத்தில் வருகிறவை என்கிறார். அதே விதமாக ஏழு பிறப்பு என்பதுமே கூட 'ஏழு' என்பது வேதாகமத்தில் பல இடங்களில் வருகிற 'ஏழு' என்ற எண் எப்படி முழு மைய, நிறைவை அடையாள படுத்துகிறதோ, அதே தன்மையில் தான் குறள்களிலும் வருகின்றனவாம்.


மற்ற இரு பதங்களுமே, அவைகளின் இயல்பான அர்த்தங்களை வைத்து பொருத்திப் பார்க்கிற பொழுது அது சமண சமயக் கொள்கைகளுக்கே அதாவது பிறவி சுழற்சிக் கொள்கைகளுக்கே எதிராக வருவதை தெளிவாக விளக்குகிறார் புலவர்.


(இந்த இடத்தில் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.  ஒரு தமிழ் செய்யுள் பாட விளக்க உரை போல சற்றே கடினமாக நம் கட்டுரை மாறி விடுவதை தவிர்க்கும் பொருட்டு, சுருக்கமான தகவல்களை மட்டும் தந்து கொண்டிருக்கிறோம் என்பதை நம் வாசகர்கள் புரிந்துக் கொள்ள வேண்டுகிறோம்.  என்றும் தமிழ் செய்யுள் பாட சாயல் வருவதை தவிர்க்க இயலவில்லை. மன்னிக்க..!)


இதெல்லாம் சரி, கிறிஸ்துவை அல்லது கிறிஸ்துவக் கோட்பாடுகளை உள்ளடக்கிய நூல் திருக்குறள் என்பதற்கு வேறு ஆதாரம் உண்டோ என்று பார்த்தால், பல உண்டு, குறிப்பாக 'பாயிரத்தை' சுட்டிக் காட்டுகிறார் புலவர்.


பாயிரம் என்றால்? எல்லா இலக்கிய நூல்களின் ஆரம்பத்திலும் 'பாயிரம்' என்று ஒரு பகுதி உண்டு. இது நூல் ஆசிரியர் தாம் வணங்குகிற குருவுக்கோ, பெரியவர்களுக்கோ அஞ்சலி போல எழுதுகிற பகுதி, சமர்ப்பணம் செய்யும் பகுதி என்று சாதாரண மக்கள் விளங்கிக் கொள்வதற்கு ஏதுவாக பொதுவாக இப்படிச் சொல்லலாம்.


திருக்குறளின் 'பாயிரம்' பகுதியில் நான்கு அதிகாரங்கள் உண்டு.

1.கடவுள் வாழ்த்து,
2.வான் சிறப்பு,
3.நீத்தார் பெருமை,
4.அறன் வலியுறுத்தல்  என்று.
இதில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து சரி நமக்குப் புரிகிறது.  அடுத்த
அதிகாரம் வான் சிறப்பு என்றால் மழையின் பெருமை அல்லது சிறப்பு.
                               நீத்தார் பெருமை =உயிர் நீத்தவர்கள்,
அல்லது பெரியோர்கள் பற்றின சிறப்பு என்று இயல்பாய் இருக்கிற அர்த்தத்தில் பொருள் கொள்வோமெனில், ஒரு கேள்வி எழுகிறது. கடவுள் வாழ்த்துக்கு அதாவது கடவுளுக்கு இணையாக மழையையும், உயிர் நீத்தவர்களையும் எப்படிச் சொல்லி இருக்கிறார், ஏன் சொல்லி இருக்கிறார், எதற்காக என்றெல்லாம் கேள்விகள் வருமெனில், வெளி வந்துள்ள பல விளக்கவுரைகளை பார்க்கும் பொழுது பல முரண்பாடுகள் வருவதை தெளிவாக சுட்டிக் காட்டுகிறார் புலவர். ஆனால் ஒரு மாற்றாக,

வான் சிறப்பு = மழை சிறப்பு = பரிசுத்த ஆவியானவரை மழைக்கு அடையாளமாக சொல்லி, (பரிசுத்த ஆவியானவரின் மழைக்கு அடையாளமாக சொல்லி) பரிசுத்த ஆவியானவரின் சிறப்பு என்றும்,


நீத்தார் பெருமை = நீத்தவர்கள் அல்ல, நீத்தவர், நமக்காக உயிர் நீத்தவர் = தேவ குமாரன் பெருமை என்றும் பொருள் கொண்டு பார்க்கும் பொழுது, எழுப்பப் படுகிற அநேக கேள்விகளுக்கு திருப்தியான பதில்கள் கிடைக்கின்றன.


குறிப்பாக குறள்களில்வருகிற, ஐந்துவித்தான், மூவர் யார் என்கிற பதங்களை சரியான தளத்தில், இந்த கோணத்தில் தான் விளங்கிக் கொள்ள பொருத்தமாகிறது என்று ஆணித்தரமாக உரைக்கிறார் புலவர்.


தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்ற மொழிப்பெயர்ப்பாளரும், நாவலாசிரியருமான மறைந்த திரு.க.நா.சு. அவர்கள் எழுதிய சரித்திர நாவல் ஒன்றில் தோமையாருக்கும், திருவள்ளுவருக்கும் இருந்த நட்பு பற்றின தகவல்கள் இந்த நேரத்தில் நினைவுக்கூரத்தக்கது. இதற்கும் திரு.க.நா.சு. அவர்கள் ஒரு கிறிஸ்துவர் அல்ல, வெறும் கற்பனை குதிரையை மட்டும் தட்டிவிட்டு எழுதுபவரும் அல்ல.


திருவள்ளுவர் சரி, அதற்குப் பிறகு வந்த மற்றவர்களில் எவரையாவது சொல்ல முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு வரக்கூடும்.


'சித்தர்கள்' என்று தமிழ் மக்கள் அழைக்கிற அநேகர் (முனிவர்களைப் போன்றவர்கள்) தோமாவின் மூலமாகவும், அதற்குப் பின்பாகவும் ஆண்டவரை அறிந்துக் கொண்டார்கள் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு.


அநேகம் சித்தர் பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். உருவ வழிபாடும், சிலை வழிபாடும், பல தெய்வ வணக்கமும் ஏதேதோ சடங்கு, சாக்கியங்களும், பூஜை புனஸ்காரங்களும் இருந்திருந்த அந்தக் காலத்தில், அந்த சூழலில் இந்தப் பாடல்கள் அதற்கு எதிராக இருக்கின்றன என்பது எத்தனை வியப்பான விஷயம் அல்லவா? உதாரணத்திற்கு ஒரு சில பாடல்களை மட்டும் பார்க்கலாம்.


இதோ 'சிவ வாக்கியார்' எழுதின இரு பாடல்கள்!

"கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குராமரே,
கோயிலும் மனத்துள்ளே குளங்களும் மனத்துள்ளே!
ஆவதும் அழிவதுவும் இல்லை இல்லை இல்லையே...."(30)
"அழுக்கற தினங்குளித்து அழுக்கறத மாந்தரே 
அழுக்கிருந்தது எவ்விடம், அழுக்கில்லாதது எவ்விடம் 
அழுக்கிருந்தது எவ்விடத்து அழுக்கறுக்க வல்லீரேல் 
அழுக்கில்லாத சோதியோடு அணுகி வாழல் ஆகுமே" (201) 
thaayappan1.jpg
new%2Bdoc%2B7_1.jpgஎஸ்.தாயப்பன் என்பவர் எழுதின "சித்தர்கள் கண்ட மெய்ப் பொருள்" என்ற சிறுநூலில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான அகத்தியரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, "அவர் மெய்யான தேவனை உணர்ந்து திருவருள் வயப்பட்டு அவரால் ஆட்கொள்ளப்பட்டு, ஞானம் பெற்று, தான் பெற்ற பேரின்ப ஞானத்தை, கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புரட்டி" என ஔவை கிழவி பாடியதைப் போல் பரம் பொருளான இறைவனே அவரிடம் உரைத்தபடி ('அகத்தியர் ஞானம்') என்று முப்பதே பாடல்களில் சுருக்கிப் பாடியுள்ளார்" என்கிறார்.

இப்பாடல்களில் ஒரு சில பாடல்களைப் பார்க்கலாம், எத்தனை நேர்த்தியாக வேதாகமக் கருத்துக்கள் இப்பாடகளில் தொங்கி நிற்கிறது பாருங்கள்.


அகந்தையில் தேவதூதர் விழுந்து போன கதை நமக்குத் தெரியும். அதைச் சொல்கிறது இப்பாடல். இதை படிக்கும் முன்பாக ஏசாயா 14: 12 - 14 வசனங்களையும், யூதா எழுதின நிருபத்தின் 6 வது வசனத்தையும் ஒரு முறை படிக்கவும்.

"தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்."
அகத்தியர் ஞானம் : பாடல் 9
Agasthiyar.jpg"அலகையது தேவனுக்குச் சரியாய் நின்று,
ஆங்காரம் தானெடுத்து அகந்தையாலே,
நிலை குலைந்து பாதாளக் குழிக்குள் நின்று,
நித்தியமும் மானிடரை மோசம் போக்கி,
பல கலையும் உணர் அறிவை மயக்கித் தங்கள்
பாதாள வீடதிலே பதுங்கச் செய்யும்
நிலையதுவை அறியாமல் போனார் போனார்
நினைத்துப் பார் புலத்தியனே நிசமாய்த்தானே..."
நிச்சயம், இது சித்தர் பாடல் தானா இல்லை சமீபத்தில் எவராவது எழுதியதோவென்று ஒரு கணம் சந்தேகம் வந்து போயிருக்கக்கூடும். அகத்தியரின் இன்னொரு பாடலையும் பார்க்கலாம். தேவன் சகலத்தையும் உண்டாக்கினதில் இருந்து பின் மனு உருவில் வந்ததை சொல்கிறது இது.

அகத்தியர் ஞானம் (15)

"வணங்குவாய் செகசோதி ஒருவனாகி மானிலத்தை
ஒரு நொடியில் வகுத்தே மண்ணில்
குணமான மனிதரையும் படைத்த பின்பு குவலயத்தில்
தான் உதித்துக் குருவாய் வந்து
சனமான சமுசாரம் ஒன்று இல்லாமல் சன்னியாசி போல்
இருந்து தவத்தைக் காட்டி
அன்பான சித்தர்களை இருத்திப் போட்டு அகண்டதவம்
சென்றவரை அண்டுவாயே..."
திரித்துவத்தைப் பற்றி திரி ஏக தேவனைப் பற்றிய பாடல் இது.  பல தெய்வ வணக்கங்கள் உள்ள சூழலில், ஆண் /பெண் தெய்வங்கள் என்றெல்லாம் உள்ள சூழலில்,  இப்பாடலின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

அகத்தியர் ஞானம் பாடல் : 20

220px-AgasthiyarG%2Bsilai.jpg"முச்சுடராம் ஒன்றாம் மும்மூர்த்தியல்ல;
மூவருமே ஆளுயரம் ஒன்றேயாகும்.
அச்சுதா இவர்களுமே ஆண், பெண் அல்ல;
அரனும் அல்ல; இலிங்கம் அல்ல; அநாதியான
சச்சிதானந்தனையே வணக்கம் செய்து
சற்குருவைத் தரிசித்து சரண் பற்றி,
எச்சரிக்கை கொண்டு நட அப்பா! அப்பா
எண்ணிலா முத்திவழி எய்துவாயே."
சரி வேறு சித்தர்களின் பாடல்கள், இவ்விதமான கருத்துக்களோடு உண்டா என்றால் நிறைய உண்டு. அதிலும் சிலவற்றை பற்றி மட்டும் பார்க்கலாம். இதோ குருவின் (கடவுளின், ஆண்டவரின்) பாதம் மட்டுமே பற்றிக் கொள்ள வலியுறுத்தும் பாம்பாட்டி சித்தரின் பாடல்.
Sri%2BPambatti%2BSiddhar.jpg"பொய் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப்
புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும்
மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளிம்பும்
மெய்க் குருவின் பாதம் போற்றி ஆடாய் பாம்பே..."
புராண புருஷர்கள் எல்லாம் வெறும் மனிதர்கள் தாம் என்று சொல்லும் சித்தர் திருமூலரின் பாடல்.
"பல கலைகளோ துவகை நாலுந்தானும்பண்ணியதோர் நால் வேத மாறு சாஸ்திரம் அலையுடனே தத்துவங்கள் தொண்ணுற்றலும் அவைகளிலே பொய் களவு அதர்மஞ்சேரும் மலையரசன் சிவன், பிரம்மா, விஷ்ணு தானும் மாசில்லா நாதருட வழியுங் காணார் நிலை பெருக மோட்ச வழி காணாததாலே நீதியற்ற மனிதரென்று நிகழ்த்தினோமே..."
இன்னொரு சித்தர் பாடல் உக்கிரமாகச் சொல்கிறது
"நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்து றீர்
சுத்தி வந்து முணுமுணுவென்று சொல்லு மந்திரமேதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
சுட்டச் சட்டி சட்டுவங்கறிச் சுவை யறியுமோ?
மாறுபட்ட மணி கிலுக்கி மலரிறைத்து வீணிலே
உறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே
வேறுபட்ட தேவரும் விரும்புகின்ற உண்மையுங்
கூறுபட்டதேது காண் குருக்கள் பூசை பண்ணுகிறீர்"
 
இப்படி சொல்லிக் கொண்டே போகமுடியும். 'சித்தர் பாடல்களும், கிறிஸ்தவமும்' பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் மைக்கேல் பாரடே இன்னும் விவரங்களை தரக்கூடும்.  ஆனால் நம் கட்டுரையின் நேரடியான நோக்கம் அதுவல்ல. தோமாவின் ஊழியத்தின் கனிகளாய் இருந்த இவர்கள் இவர்களைப் போன்றிருந்தவர்கள் என்னவானார்கள் என்பது இன்னொரு கட்டுரை எழுத வேண்டிய அளவிற்கான விஷயம். சாது செல்லப்பா அவர்களின் குறுந்தகடு ஒன்றில் அவர் பேசும்போது இப்படி குறிப்பிடுகிறார், 'சுவாமி விவேகானந்தர் எழுதிய ஞானதீபம் என்ற புத்தகத்திலே நான் படித்தேன், முதல் நூற்றாண்டிலேயே இந்தியாவிலே 33,000 கிறிஸ்துவர்கள், அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தார்களாம்.' என்று.


 
TA006367.jpg
 
அவர்களின் நம்பிக்கைகளில் எப்படி பின்பு வந்த ஆரியர்களின் தலையீடு, பாதிப்பு எல்லாவற்றையும் மாற்றி திசை திருப்பிப் போட்டது பற்றி பல ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன. இது ஒரு பக்கமிருக்கட்டும்.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் எழுப்பின கேள்விகளுக்கு, அதாவது தோமா எப்படியாக ஆண்டவரை பற்றின நற்செய்தியை என்ன விதமாய் வைத்திருக்க முடியும் என்பதை சில பதிவுகளைக் கொண்டு யூகிக்க முற்படலாம்.



 
'தோமா எழுதின சுவிஷேசம்' என்ற புத்தகம் பற்றி நம்மில் ஒரு சிலர் கேள்விப்பட்டிருக்கக் கூடும். முன்பாக இதன் சில பகுதிகள் மட்டுமே ('OXYRHYNCHUS' என்ற தொகுப்பில் இருந்தன)  நமக்கு முன்பாகவே கிடைக்கப் பெற்றிருந்தாலும், 1945ம் வருடம் எகிப்து தேசத்தில் உள்ள நாக் ஹம்மாடி (NAG HAMMADI) யில் தற்செயலாய் கிடைத்த ஒரு பெரிய பானை ஒன்றில் கிடைத்த ஏராளமான பாப்பிரஸ் பிரதிகளில் (PAPYRUS MANUSCRIPTS) இந்த தோமாவின் சுவிஷேசமும் முழு அளவில் கிடைத்தது.


NAG%2Bhammadi.jpg


 
 
oxyrhynchus-map1.jpg
 
பலர், இது மற்ற சுவிசேஷங்களுக்கு முன்பதாகவே எழுதப்பட்டிருக்கக் கூடும் என்று நம்புகிறார்கள், 114 வசனங்களைக் கொண்ட இந்த சுவிஷேசத்தில் பல பகுதிகள், குறிப்பாக உவமைகள், நம்மின் ஒத்திசைவு சுவிசேஷங்களுக்கு இணையாக இருந்தாலுமே நம் வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் வேறு பல்வகை காரணங்களுக்காக சேர்க்கப்படவில்லை. அநேக பண்டிதர்கள் தோமாவின் சுவிசேஷத்தின் பல பகுதிகள், அங்கீகரிக்கப்பட வேண்டிய அளவிற்கு சிறப்பாக இருக்கின்றன என்கிறார்கள்.

தோமாவின் சுவிசேஷத்தையும், யோவானின் சுவிஷேசத்தையும் ஒப்பிட்டு பலர் ஆய்வு செய்துள்ளனர் என்பது இன்னொரு விஷேசம். (ஒப்பிடுதல்) காரணம் என்னவெனில் இரண்டிற்கும் பொதுவான இறையியல் அடிப்படை உண்டு என்பது தான். (வித்தியாசங்கள் உண்டு, வேறு பலவற்றில்)  இதில் நமக்கு பயன்படுகிற ஒன்றை மட்டும் பார்ப்போம்.


இருவருமே ஆண்டவரை வெளிச்சமாக ஒளியாக பார்க்கிறார்கள்.  யோவான் முதலாம் அதிகாரம் 1 - 9 வசனங்களில் இயேசு 'ஒளி'யாக அறிமுகப்படுத்தப் படுகிறார். யோவான் ஸ்நானனைப் பற்றிக் கூறும்பொழுது "அவன் அந்த ஒளியல்ல. அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தவன்" என்கிறார். பின் 9வது வசனத்தில் எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளியே அந்த மெய்யான ஒளி என்கிறார். பிறகு யோவான் 8:12ல் இயேசு ஜனங்களை நோக்கி "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" என்றார். யோவான் 1:3ல் "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" என்கிறது.

51J49VFYlgL._SY344_BO1%252C204%252C203%2
இதே கருத்தை பிரதிபலிப்பதைப் போல தோமா சுவிஷேசத்தின் 77வது வசனம் இப்படியாகச் சொல்கிறது, இயேசு சொல்கிறார்
'எல்லாவற்றின் மேலும் பிரகாசிக்கிற ஒளி நானே. நான் எங்குமிருக்கிறேன். என்னிடமிருந்தே எல்லாம் உண்டானது, என்னிடமே எல்லாம் திரும்பும்...'
coptic77.gif

இவைகளை எல்லாம் நாம் இப்போது எதற்கு பார்க்கிறோம் என்றால், தோமா ஆண்டவரை ஒளியாக, வெளிச்சமாக, அறியாமை, தீமை என்ற இருளிலிருந்து விடுவிக்கிறவராயும் அந்நாட்களில் மக்களுக்கு முன் வைத்திருக்க வேண்டும். இருள் நிறைந்த எல்லாவற்றிலிருந்தும் விடுதலை தருகிறவராய் ஆண்டவரை பற்றி உள்வாங்கிக் கொண்டதாலோ என்னவோ பல சித்தர் பாடல்களில் ஆண்டவரை சோதியாக, ஒளியாக, வெளிச்சமாக உருவகிப்பதைப் பார்க்க முடிகிறது. தங்களை இத்தகைய இருள்களிலிருந்து மீட்டுக் கொள்கிறவராயும், உருவமற்றவராயும் பார்க்க முடிந்திருக்கிறதோ என்று நாம் யூகிக்க இடமிருக்கிறது.


இக்காரியங்கள் நமக்கு திரும்பத் திரும்ப உணர்த்துகிற காரியங்களில் ஒன்று, அவரின் வழிகள் அற்புதமானவைகள், ஆராய்ந்து முடியாதவைகள்.

-எட்வினா ஜோனாஸ் 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard