Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதி பகவன் முதற்றே உலகு


Guru

Status: Offline
Posts: 7602
Date:
ஆதி பகவன் முதற்றே உலகு
Permalink  
 


அகர முதல எழுத்தெல்லாம ஆதி
பகவன் முதற்றே உலகு (குறள்.1)

என்றார் அதாவது, எழுத்துகளுக்கெல்லாம் அகரம் முதன்மையாகவும் காரணமாகவும் இருத்தல் போல, கடவுள் உலகிற்கு முதன்மையாகவும் அடிப்படையாகவும் உள்ளார் என்கிறார். ஓர் அதிகாரம் முழுமையும் கடவுளின் பண்பையும், அவனை வழிபடுவதால் அடையும் பயனையும் வள்ளுவம் முனைப்புடன் அறிவுறுத்துகிறது. கடவுளைச் சிறிதும் ஏற்காத பௌத்தத்திற்கு இது முற்றிலும் மாறானது. மேலும், தொடக்கக் காலப் பௌத்தமான ஈனயானம் புலாலை மறுக்கவில்லை. தாமே ஓர் உயிரைக் கொன்று உண்ணக் கூடாதேயன்றிப் பிறர் கொன்ற விலங்கின் இறைச்சியை உண்ணலாம் என்பது அதன் கொள்கை. ஆனால் வள்ளுவமோ இதற்கு மாறானது.

உயிர்களுக்குக் கன்மங்கள் தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்) பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக் கீழுள்ள குறட்பாக்களினால் நன்கு உணரலாம்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

‘வகுத்தான் வகுத்த வகையல்லர்”
என்றும் கூறியிருப்பதால் ஊழை வகுப்பவன் இறைவன் என்பதே அவர் கருத்தாகும். வகுத்தான்| என்பது ஊழைக் குறிப்பதாயினும் ஈங்கு இறைவன் என்று பொருள் கொள்வதே ஏற்புடைத்து.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு – 4 என்றும்,
இருள்சேர் இருவினையும் சேரா – 5 என்றும்,

அறவாழி அந்தணன் தாள் சோந்தார்க் கல்லால் – 8 என்றும்,
பிறவிப் பெருங்கடல் நீத்துவர் – 10 என்றும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை – 350 என்றும்,
திரும்பத்திரும்ப எல்லாவற்றிற்கும் மூலமுதல்வன் இறைவன் எனறே அவர் கூறுவதால், இங்கு வகுத்தான்| என்று கூறியிருப்பதை இறைவன் என்று பொருள் கோடலே ஏற்றது. வினையை வகுத்து ஊட்டும் முதல்வன் இறைவனேயென்று வள்ளுவம் கூறுவது

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். குறள் 1062: இரவச்சம்
மணக்குடவர் உரை:துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். குறள் 333:
மணக்குடவர் உரை:நில்லாத வியல்பை யுடைத்துச் செல்வம்; அதனைப் பெற்றால் அப்பொழுதே நிற்பனவாகிய அறங்களைச் செய்க. நிலையாமை மூன்று வகைப்படும்: செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. குறள் 345: துறவு
மணக்குடவர் உரை:பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். குறள் 346:
மணக்குடவர் உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. குறள் 350:
மணக்குடவர் உரை:பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும். குறள் 373: ஊழ்
மணக்குடவர் உரை:நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும் தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும். மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. குறள் 372:
மணக்குடவர் உரை:கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. குறள் 375:
மணக்குடவர் உரை:செல்வம் உண்டாக்குவதற்குத் தனக்குமுன்பு தீதாயிருந்தனவெல்லாம் நன்றாம்: அச்செல்வத்தை யில்லை யாக்குவதற்கு முன்பு நன்றாய் இருந்தனவெல்லாம் தீதாம்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. குறள் 377:
மணக்குடவர் உரை: விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து. இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். குறள் 380:
மணக்குடவர் உரை:ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல்
மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். குறள் 362:
மணக்குடவர் உரை:வேண்டுங்கால் பிறவாமையை விரும்புதல் வேண்டும்: அப்பிறவாமை பொருளை விரும்பாமையை விரும்பத் தானே வரும். இது பிறவாமையும் இதனாலே வருமென்றது.


தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். குறள் 364:
மணக்குடவர் உரை:ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று.
மு. வரதராசன் உரை: தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. குறள் 366:
மணக்குடவர் உரை:ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம். வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.
மு. வரதராசன் உரை: ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். குறள் 367:
மணக்குடவர் உரை:ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.
மு. வரதராசன் உரை: ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். குறள் 368:
மணக்குடவர் உரை:ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.
சாலமன் பாப்பையா உரை: ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மணக்குடவர் உரை:பொருளல்லாதவற்றைப் பொருளாகக் கொள்கின்ற மயக்கத்தினாலே உண்டாம்; மாட்சிமையில்லாத பிறப்பு. இது மெய்யுணருங்கால் மயக்கங் காண்பானாயின் பிறப்புண்டாமென்றது.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. குறள் 352:
மணக்குடவர் உரை:மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.
மு. வரதராசன் உரை: மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.குறள் 353:
மணக்குடவர் உரை:மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.
மு. வரதராசன் உரை:ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354:
மணக்குடவர் உரை:மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு.
மு. வரதராசன் உரை:மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
மு. கருணாநிதி உரை:உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:
மணக்குடவர் உரை:இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
மு. வரதராசன் உரை:கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
சாலமன் பாப்பையா உரை:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. குறள் 357:
மணக்குடவர் உரை:உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக. மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.
மு. வரதராசன் உரை:ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:
மணக்குடவர் உரை:பிறப்பாகிய அறியாமையினின்று நீங்கப் பிறவாமை யாகிய செவ்விய பொருளைக் காண்பது அறிவாம். பிறவாமை சிறந்ததாதலின், சிறப்பு என்னப்பட்டது. தான் பிறந்தானாகவும் செத்தானாகவும் கருதுகின்ற அறியாமையை விட்டுத் தனக்குச் சாவில்லையாகவும் பிறப்பில்லையாகவும் தான் நிற்கின்ற நிலைமையைக் காணவேண்டுமென்றவாறாயிற்று.
மு. வரதராசன் உரை:பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். குறள் 359:
மணக்குடவர் உரை:தன்னைச் சார்வனவற்றையறிந்து அவையிற்றின் சார்வுகெட ஒழுகுவானாயின் அவ்வொழுக்கத்தினையழித்துச் சார்தலைச் செய்யா: சாரக்கடவனவாய துன்பங்கள். சார்பு - வினைச்சார்பு. கெட ஒழுகல் - காமம், வெகுளி, மயக்கமின்றி மெய்யுணர்ச்சியான் ஒழுகுதல். இஃது உண்மையைக் கண்டு அக்காட்சியைத் தப்பாமல் முடிய நிற்பனாயின் சாரக்கடவதாய் நிற்கின்ற வினை சாராதே விட்டுப் போமென்றது.
சாலமன் பாப்பையா உரை: எல்லாப் பொருள்களுக்கும் இடமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து பற்றின்றி வாழ்ந்தால், பற்ற வரும் துன்பங்கள் ஒழுக்க உணர்வை அழி்த்துப் பற்ற மாட்டா.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:294)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால், அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

மணக்குடவர் உரை: தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான்.
இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. குறள் 331: நிலையாமை
மு. வரதராசன் உரை:நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.
மு. கருணாநிதி உரை:நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். குறள் 334:
மணக்குடவர் உரை: நாளென்பது இன்பந் தருவ தொன்று போலக் காட்டி, உயிரையீர்வதொரு வாளாம்: அதனை யறிவாரைப் பெறின். இஃது உயிரீரும் என்றமையால் இளமை நிலையாமை கூறிற்று.
மு. வரதராசன் உரை:வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.
மு. கருணாநிதி உரை:வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். குறள் 335: நிலையாமை
மணக்குடவர் உரை: நாவழங்காமற் செறுத்து விக்குளானது மீதூர்ந்து வருவதன் முன்னே, நல்வினையை மேல் விழுந்து செய்ய வேண்டும். இஃது உயிரானது கழிவதன்முன்னே நல்வினையைச் செய்யவேண்டு மென்றது.
மு. வரதராசன் உரை:நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
மு. கருணாநிதி உரை:வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. குறள் 336: நிலையாமை
மணக்குடவர் உரை:ஒருவன் நேற்றுளனாயிருந்தான், இன்றில்லையாயினா னென்று சொல்லும் பெருமையை இவ்வுலகம் உடைத்து. இது யாக்கை நிலையாமை கூறிற்று.
மு. வரதராசன் உரை:நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
மு. கருணாநிதி உரை:இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாக் கொண்டதாகும்.
சாலமன் பாப்பையா உரை:நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. குறள் 338:
மணக்குடவர் உரை:கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
மு. வரதராசன் உரை:உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
மு. கருணாநிதி உரை:உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா உரை:உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339:
மணக்குடவர் உரை:உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று.
மு. வரதராசன் உரை:இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.
மு. கருணாநிதி உரை:நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.
சாலமன் பாப்பையா உரை:உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. குறள் 340:
மணக்குடவர் உரை:தனதல்லாத உடம்பினுள்ளே ஒதுக்குக்குடியாக விருந்த உயிர்க்குப் போயிருப்பதற்கிடம் அமைந்ததில்லையோ? அமைந்ததாயின் இதனுள் இராது. புக்கில் என்பது முத்தி ஸ்தானம் இது மேற்கூறியவற்றால் உயிர் மாறிப் பிறந்து வரினும் ஓரிடத்தே தவறுமென்பது கூறிற்று.
மு. வரதராசன் உரை: (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ.
மு. கருணாநிதி உரை:உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.
சாலமன் பாப்பையா உரை:உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. குறள் 34: அறன்வலியுறுத்தல்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். குறள் 35:

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36:
மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
மு. வரதராசன் உரை:இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
கலைஞர் உரை: பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். குறள் 38:
மணக்குடவர் உரை: ஒருவன் ஒரு நாளிடைவிடாமல் நன்மையைச் செய்வானாயின் அச்செயல் அவனது பிறப்பும் இறப்புமாகிய நாள் வருகின்ற வழியை யடைப்பதொரு கல்லாம். இது வீடு தருமென்றது.
மு. வரதராசன் உரை:ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
சாலமன் பாப்பையா உரை:அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2: கடவுள் வாழ்த்து
மணக்குடவர் உரை:மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.
மு. வரதராசன் உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
கலைஞர் உரை:தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். குறள் 10:
மணக்குடவர் உரை:பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்
மு. வரதராசன் உரை:இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.


கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்:
முதல் குறள் உலகம் ஆதிபகவனை முதலாக உடையது என கடவுள் இயல்பையும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பையும் கூறுகிறது.
2 ஆம்குறள் என்ன கற்றிருந்தாலும் இறைவனை நினையாமல் இருக்கக் கூடாது என அறிவுறுத்துவது.
3 ஆம்குறள் கடவுளின் திருவடியை நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர் என்கிறது.
4 ஆம்குறள் சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார் என்பதைச் சொல்வது.
5 ஆம்குறள் கடவுளின் பெருமை அறிந்து வாழ்த்துபவருக்கு நல்வினை தீவினை எதுவுமே தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது.
6 ஆம்குறள் ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க என அறிவுறுத்துவது.
7 ஆம்குறள் எல்லாம்வல்ல இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றல் தர முடியும் என்று சொல்கிறது.
8 ஆம்குறள் அருள் வடிவினனான இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீள வழியுண்டு எனச் சொல்வது.
9 ஆம்குறள் இறைவனை திருவடியை வணங்காதவர் தலை இருந்தும் இல்லாதது போல்தான் எனக் கூறுகிறது.
10 ஆவதுகுறள் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும் என்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. குறள் 124: அடக்கமுடைமை
மணக்குடவர் உரை:தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.
மு. வரதராசன் உரை:தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
மு. கருணாநிதி உரை:உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரை:தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. குறள் 126:
மணக்குடவர் உரை:ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து
மு. வரதராசன் உரை:ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

மு. கருணாநிதி உரை:உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. குறள் 130:
மணக்குடவர் உரை:வெகுளியும் அடக்கிக் கல்வியுமுடையனாய் அதனால் வரும் பெருமிதமும் அடக்கவல்லவன்மாட்டு, அறமானது நெறியானே வருந்தித் தானே வருதற்குக் காலம் பார்க்கும். இஃது அடக்கமுடையார்க்கு அறமுண்டாமென்றது.
மு. வரதராசன் உரை:சினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.
மு. கருணாநிதி உரை:கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. குறள் 425: அறிவுடைமை
மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது.
மு. வரதராசன் உரை:உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.
மு. கருணாநிதி உரை:உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு.

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. குறள் 426:
மணக்குடவர் உரை:யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
மு. வரதராசன் உரை:உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
மு. கருணாநிதி உரை:உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.
சாலமன் பாப்பையா உரை:உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

திருக்குறள் ஆதிபகவன் முதற்றே உலகு இன கடவுள் தான் இந்த உலகைப் படைத்தார் எனத் தொடங்குகிறது. இந்த உலகில் நாம் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பெருங்கடலை நீந்திக் கடக்க இறைவன் திருவடியைப் பற்றினால் மட்டுமெ முடியும் என்பார். அசனாலும் ஒரு சில குறட்பாக்களை கொண்டு வள்ளுவரை உலகாயுதர் - அல்லது நாத்திகத்தை ஏற்றவர் எனச் சிலர் வரட்டு வாதம் செய்வதை ஆராய்வோம்.

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:619)
மணக்குடவர் உரை: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்.
இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

நாம் சங்க இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் கடவுள் -இறைவன்- தெய்வம் என்ற சொற்கள்; இறைவன், வாழ்வாங்கு வாழ்ந்தவர், வீரர்கள், விதி, ஊழ், இயற்கை நியதி எனப் பல பொருளில் ஆளப்பட்டிருக்கும்.

அதிகாரம் - ஆள்வினையுடைமை என தளர்வற்ற சுய முயற்சியை வலியுறுத்தும் அதிகாரம்.
இந்தக் குறளின் தெய்வம் என்ற சொல் விதி அல்லது இயற்கை நியதி என வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இதற்கு அடுத்த குறளில் ஊழின் வலைமையையும் முயற்சியால் வெல்லலாம் என்கையில் மிகத் தெளிவாய் இங்கு விதி அல்லது இயற்கை நியதி என வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். குறள் 620:

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். குறள் 1062: இரவச்சம்
மு.வரதராசனார் உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
மணக்குடவர் உரை: துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.
இது ஒரு கவிஞனாய் வள்ளுவம் இவ்வுலகில் சிலர் பிச்சை எடுக்கும் நிலையை கண்டிக்கிறார், இந்த குறளைக் கொண்டு வள்ளுவர் உலகாயுதர் என்பதோ நாத்தீகர் என்பதோ அபத்தம்

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். குறள் 214:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2: கடவுள் வாழ்த்து
மு. வரதராசன் உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மு. வரதராசன் உரை: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:
மு. வரதராசன் உரை: கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:
மு. வரதராசன் உரை: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. குறள் 841: புல்லறிவாண்மை
மு. வரதராசன் உரை: அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850 புல்லறிவாண்மை
மு. வரதராசன் உரை: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். குறள் 834:பேதைமை
மு. வரதராசன் உரை: நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. குறள் 452:சிற்றினஞ்சேராமை
மு. வரதராசன் உரை:சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.குறள் 454:
மு. வரதராசன் உரை:ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். குறள் 455:
மு. வரதராசன் உரை:மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. குறள் 459:
சாலமன் பாப்பையா உரை:ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். குறள் 460:
சாலமன் பாப்பையா உரை:ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794:நட்பாராய்தல்
மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
மு. கருணாநிதி உரை:பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. குறள் 1019: நாணுடைமை
மு. வரதராசன் உரை: ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: ஒருவன் ஒழுக்கம் கெட்டால் அவன் குடும்பப் பிறப்பு கெடும்; அவனே நாணம் இல்லாது நின்றால் அவன் நலம் எல்லாம் கெடும்.

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. குறள் 1012
மு. வரதராசன் உரை: உணவும் உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை ; மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.
மு. கருணாநிதி உரை:உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைகின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.
சாலமன் பாப்பையா உரை:உணவு, உடை இன்னும் பிற சிறப்புகள், எல்லா மனிதர்க்கும் ஒன்றே; நல்ல மனிதர்க்குச் சிறப்பாவது நாண் உடைமையே.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. குறள் 815:தீ நட்பு
மு. கருணாநிதி உரை:கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. குறள் 819:
மு. வரதராசன் உரை:செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். குறள் 822:
மணக்குடவர் உரை:நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க. இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது
பரிமேலழகர் உரை: இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.).



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். குறள் 935:
கலைஞர் மு.கருணாநிதி உரை:சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். குறள் 937:
கலைஞர் மு.கருணாநிதி உரை:சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். குறள் 822: கூடாநட்பு
மு.வரதராசனார் உரை:இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. குறள் 823:
மு.வரதராசனார் உரை:பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. குறள் 825:

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். குறள் 827:

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. குறள் 819:தீ நட்பு
கலைஞர் மு.கருணாநிதி உரை:சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. குறள் 791: நட்பாராய்தல்
கலைஞர் மு.கருணாநிதி உரை:ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793:
கலைஞர் மு.கருணாநிதி உரை:குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794:
கலைஞர் மு.கருணாநிதி உரை:பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. குறள் 425: அறிவுடைமை
பரிமேலழகர் உரை:உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம்.
('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.).

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. குறள் 426:

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 212: ஒப்புரவறிதல்

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். குறள் 214:

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351:மெய்யுணர்தல்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:

றப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. குறள் 841: புல்லறிவாண்மை

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். குறள் 850:

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. குறள் 25:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். குறள் 28:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். குறள் 30:



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.  குறள் 1:  கடவுள் வாழ்த்து

 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.            குறள் 2:

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.             குறள் 10:

 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.            குறள் 8:

 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.       குறள் 5:

 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.                  குறள் 6:



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

வள்ளுவனின் கருத்தியல் தொகுப்பு

அறம் என்னும் பாட்டன் வீட்டு சொத்து

உலகப் பொதுமறை திருக்குறள், இரண்டு வரிகளுக்குள் அடங்கி விடும் வார்த்தைத் தொகுப்பு அல்ல. வாழ்வின் எந்த சூழ்நிலையில் இருக்கும்போது படித்தாலும், அந்த சூழ்நிலைக்கேற்ற விடையைத் தரும் அட்சய பாத்திரம். உலகப் பொதுமறை என்றாலும் அது என் பாட்டன் வீட்டு சொத்து என்ற உரிமையில் திருக்குறள் உலகத்துக்குள் நுழைய முற்படுகிறேன். திருக்குறளின் மையக்கருத்து எது என்று நாம் மேடை போட்டுச் சொல்ல வேண்டியதில்லை. மூன்றாம் வகுப்பில் முதன்முதலாகத் திருக்குறளைப் படிக்கத் துவங்கிய காலத்திலிருந்தே எல்லோருடைய காதிலும் அறம் என்ற வார்த்தை ஆற்று வெள்ளம் போல பாய்ந்திருக்கும், அந்த அறம்தான் திருக்குறளின் மையம். அறம் என்ற வார்த்தையை நாம் அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை. நாம் பயன்படுத்தும் சொல்லிலிருந்து, அறம் என்ற சொல்லுக்குப் பொருள் கூற முனைந்தால், நீதி என்று தோராயமாக சொல்லலாம். ஆனால் அறம் நீதியை விட மிகவும் மேம்பட்ட சொல். நீதி தமிழ் சொல் கிடையாது. ஆகையால் அறம் என்ற சொல்லுக்குப் பிற மொழியில் விடை தேடுவதை நிறுத்தி வள்ளுவரிடம் சரணடைவோம்.

இரண்டு வரிக் குறளில் அறத்தை விளக்கி விட முடியுமா? என்றால் இல்லை.  ஆனால் வள்ளுவர் ஒரே வரியில் விடை தருகிறார். அறம் என்ற சொல்லுக்கு, அதை விட உலகில் வேறு எவரும் விளக்கம் தர முடியாது. அறம் என்றால் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்”. இந்த ஒற்றை வரியில் அறத்தின் ஒட்டுமொத்த விளக்கமும் வந்து விடுகிறது. குற்றம் செய்யாதவர்கள் எல்லாம் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. குற்றம் செய்யப் பயப்படுதல் என்பது வேறு, குற்றம் செய்ய சந்தர்ப்பம் வரும்போதும் அதைத் தவிர்த்தல் என்பது வேறு. நாம் வாழும் வாழ்க்கைக்கு  நம் மனம் மட்டுமே சாட்சி. உலகில் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் நம் மனதுக்குத் தெரியும் நாம் குற்றவாளியா இல்லையா என்று. மனசாட்சியை விட பெரிய சாட்சி உலகில் இல்லை. ஆகையால் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பதே அறம். மனதாரக் குற்றம் செய்யாமல் வாழும் வாழ்க்கைதான் அறம்.

வள்ளுவர் மனோதத்துவ நிபுணரோ என்ற சந்தேகம் திருக்குறள் படிக்கும் அனைவருக்கும் வரும். அதை நிரூபிக்க “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்று மனதை சாட்சியாக வைத்த அடுத்தக் குறளில் மனதில் வரும் மாசுகள் எவை என்று பட்டியலிடுகிறார். அறத்தின் வழி வாழ, அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (கோபம்),  இன்னாச்சொல் (கடுஞ்சொற்கள்) ஆகிய நான்கையும் ஒதுக்க வேண்டும். எவை நம் மனதில் புகுந்தால் அறம் தவறுமோ, அந்த நான்கையும்,  அறம் எது என்று விளக்கியபின் பட்டியலிட்டது ஒரு கைதேர்ந்த மனோதத்துவ நிபுணர் மட்டுமே செய்யக்கூடிய செயல். அறம் என்ற சொல்லுக்கு மனதை சாட்சியாகத் தந்த நமது பாட்டையா வள்ளுவரின் திருக்குறளை ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். சில குறள்களை எடுத்துக்கொண்டு அவற்றின் பொருளை மட்டும் பார்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை. நமது வாழ்வின் நெறிமுறைகளுக்கு வள்ளுவரின் விடை 1330 குறள்களிலும் பரவிக்கிடக்கிறது. நாம் தேடும் தகவலுக்கு திருக்குறளின் பல அதிகாரங்களைத் தொகுத்து விடைகாண வேண்டியது நமது கடமை. திருக்குறள் என்னும் கடலுக்குள் நுழைவோம் வாருங்கள்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. (குறள்: 34)

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். (குறள்: 35)

 

கடவுளில் ஏன் ஒருமை

திருக்குறளின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து, ஆனால் கடவுள் என்ற வார்த்தை, கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பைத் தவிர திருக்குறளில் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளில் வேறு எந்த ஒரு அதிகாரத் தலைப்பை எடுத்துக்கொண்டாலும் அந்தத் தலைப்பில் வரும் வார்த்தை அந்த அதிகாரத்தின் கீழ் வரும் குறள்களில் கட்டாயம் பயன்படுத்தப்பட்டிருக்கும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தைத் தவிர. கடவுள் என்ற வார்த்தையை ஏன் வள்ளுவர் ஒரு இடத்தில் கூட பயன்படுத்தவில்லை? காரணம் என்னவென்றால், பல உருவங்களில் வணங்கினாலும் கடவுள் ஒருவன்தான் என்பது தமிழர்கள் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வலியுறுத்தவே கடவுள் என்ற பதம் வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் தெய்வம் என்ற வார்த்தை பல இடங்களில் வருகிறது. யார் தெய்வம் என்பதற்கும் வள்ளுவர் விடை தருகிறார், அதையும் நாம் வள்ளுவர் வாய்மொழியிலே கேட்போம்.

கடவுள் வாழ்த்து என்று தலைப்பிலே ஒரு செய்தியை சொல்லும் வள்ளுவர், கடவுள் வாழ்த்துக் குறள்களில் ஒரு குறளில் கூடக் கடவுளின் பெயரைக் குறிப்பிடவில்லை. கடவுளின் பெயர்கள் எல்லாம் உவமையாக மட்டுமே கூறப்பட்டுள்ளன. பெயர் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, எல்லா உவமைகளும் ஒருமையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்” என்ற குறளில் தீமை செய்தவரைக் கூட அவர், இவர் என்று மரியாதையாகக் குறிப்பிடும் வள்ளுவர்  கடவுள் வாழ்த்தில் கடவுளுக்குக் கூறப்படும் உவமைகள் அனைத்தையும் ஏன்  ஒருமையில் பயன்படுத்துகிறார்? வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான் என்று அனைத்து உவமைகளும் ஒருமையில்தான் கூறப்பட்டிருக்கிறது.  

கடவுளைப் பற்றிய உவமைகள் ஒருமையில் கூறப்பட்டதும் கடவுள் ஒருவன் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான். ஒருவேளை மரியாதைக்காக “ர்” விகுதி சேர்த்து, அது பன்மையாகப் பார்க்கப்பட்டு, பல கடவுள்கள் உண்டு என்று திரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் கடவுளின் உவமைகள் அனைத்தும் ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி, கடவுள் வாழ்த்தில் கடவுளின் பெயர் ஒன்றுமே இல்லையென்பதால், திருக்குறளில் எங்குமே கடவுள் பெயர் இல்லையென்ற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். திருக்குறளில் ஒரே ஒரு குறளில் மட்டும் இந்திரன் என்ற கடவுள் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறள் 25ல் இந்திரன் என்ற பெயர் வருகிறது. இந்திரன் என்ற சொல், கடவுளைக் குறிக்கவில்லை, இந்திரன் என்பதற்கு மேகம் என்ற பொருளும் உண்டு என்று வாதாடும் உரையாசிரியர்களும் உண்டு. ஆனால், வள்ளுவர் “விசும்புளார் கோமான்” என்று தெளிவாகவேக்  குறிப்பிடுகிறார். ஆகையால் வள்ளுவர் இந்திரன் என்று குறிப்பிடுவது கடவுளின் பெயர்தான். இறைவனை  அங்கங்கே திட்டினாலும் வள்ளுவரை கடவுள் மறுப்பாளர் என்று சொல்லிவிட முடியாது.

 

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.” (குறள்:2)

“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.” (குறள்: 3)

“வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.” (குறள்: 4)

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.” (குறள்: 6)

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.” (குறள்:

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.” (குறள்: 9)

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.” (குறள்: 25)


கடவுள் மறுப்பாளர்கள்

கடவுள் மறுப்பாளர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தார்களா? என்ற கேள்விக்கு வள்ளுவர் கடவுள் வாழ்த்திலேயே  விடை கூறியிருக்கிறார் என்றால் சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அதுதான் உண்மை. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், பத்தில் ஐந்து குறள் கடவுள் மறுப்பாளர்களைப் பற்றிப் பேசுகிறதென்றால் நம்ப முடிகிறதா? கடவுள் வாழ்த்தில், கடவுள் மறுப்பாளர்களுக்கும்  50 சதவிகித இட   ஒதுக்கீடு அளித்திருக்கும் வள்ளுவரின் தாராள குணத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பாராட்டியது போதும், விடையைச் சொல்லுங்கள் என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோபப்படுவது புரிகிறது. 

கடவுள் வாழ்த்தில் 5 குறள்கள், “தொழாஅர்”, “சேர்ந்தார்க் கல்லால்” “வணங்காத் தலை”, “அடி சேராதார்” என்று கடவுளின் காலடிகளைத் தொழாதவர்களை எச்சரிக்கும் விதமாக எதிர்மறையாக அமைக்கப்பட்டுள்ளது. தெய்வத்தின் காலடிகளைத் தொழ வேண்டும் என்று நேரிடையாக செய்தியைச் சொல்லாமல், எதிர்மறையாக “தொழா விட்டால் என்ன பயன்” என்று சொல்லும்போதே, கடவுளைத் தொழாதவர்கள் அன்றும் வாழ்ந்தார்கள் என்று நிரூபணமாகிறதல்லவா. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல வள்ளுவர் கடவுள் மறுப்பாளர் இல்லை, ஆனால் கடவுள் மறுப்பாளர்களையும் அணைத்துக்கொள்ளும் சமதளப் பார்வை கொண்டவர் என்பது விளங்கும்.

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.” (குறள்: 2)

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.” (குறள்: 7)

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.” (குறள்: 8)

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.” (குறள்: 9)

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.” (குறள்: 10)

யார் தெய்வம்?

கடவுள் ஒருவன்தான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர், தெய்வம் என்ற வார்த்தையை மொத்தம் 6 குறள்களில் கையாண்டிருக்கிறார். ஆகையால் கடவுள் என்ற வார்த்தையைப் போலல்லாமல் தெய்வம் என்ற வார்த்தையைப் பல இடங்களில் கையாண்டதிலிருந்து, தெய்வங்களில் பன்மையை ஏற்றுக் கொள்கிறார் என்ற முடிவுக்கு வரலாம். தெய்வம் என்ற வார்த்தை 6 இடங்களில் இடம்பெற்றாலும், யார் தெய்வம் என்ற கேள்விக்கு இரண்டு குறள்களில் தெளிவாக விடை கூறப்பட்டிருக்கிறது

ஐம்பதாவது குறள் யார் தெய்வம் என்று தெளிவாக வரையறுக்கிறது. அறம் பிறழாது, மண்ணில் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள் தெய்வமாக மதிக்கப்படுவார்கள் என்கிறது அந்தக் குறள். அது வள்ளுவரின் குரல். அதன்படி ஆராய்ந்தால் தெய்வம் என்பது நமது முன்னோர்கள்தான். முன்னோர் வழிபாட்டை வலியுறுத்தும் இடமாகவே இந்தக் குறள் அமைக்கப்பட்டிருக்கிறது.

குறள் 702, யார் தெய்வம் என்று சுட்டிக்காட்டுகிறது. மற்றொருவர் மனதின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் ஆற்றலுடைய ஒருவர் தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்படுவார் என்கிறார் வள்ளுவர். மனதை அறிந்து கொள்ளுதல் என்பது தவத்தின் பலனால் வரும் அறிவு. சித்தர் நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று. 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தர்களை நாம் தெய்வமாக வழிபட்டிருக்கிறோம் என்பதற்கு திருக்குறளே சாட்சி.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)

“ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.” (குறள்: 702)

உலகிலேயே பெரியவர் யார்

பெண்களுக்காகக் குரல் கொடுத்த முதல் மனிதர் என்ற பெருமையை நாம் வள்ளுவருக்குத் தயங்காமல் கொடுக்கலாம். பெண்ணின் பெருமையைக் கூறும் குறள்கள் பல இருந்தாலும், குறிப்பாக இரண்டு குறள்களை மட்டும் விளக்குவதற்கு விழைகிறேன். அந்த இரண்டு குறள்களிலுமே “பெருந்தக்க” என்பது நாம் குறித்துவைத்துக் கொள்ள வேண்டிய சொல். “பெருந்தக்க” என்ற சொல்லை அந்த இரண்டு குறள்களைத் தவிர வள்ளுவர் வேறு எங்கும் பயன்படுத்தவில்லை. பெருந்தக்க என்ற சொல்லுக்கு உலகிலேயே பெரியது என்று பொருள். இரண்டு குறள்களிலுமே, உலகிலேயே பெரியவள் என்று பெண்ணைத்தான் குறிப்பிடுகிறார். எல்லாப் பெண்களையும் பெரியவர்கள் என்று சொல்லவில்லை, அதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதிக்கிறார். குறள் 54, கற்புள்ளப் பெண்களைப் போல உலகில் பெரியது எதுவும் இல்லை என்று பெண்ணுக்குப் பெருமை சேர்க்கிறது. குறித்துக் கொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால் “கற்பென்னும் திண்மை” என்ற வார்த்தை. திண்மை என்றால் மனவுறுதி என்று அர்த்தம். நாம் தற்காலத்தில் கற்பு என்ற சொல்லை மனவுறுதி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை. மனவுறுதி கொண்ட பெண்ணை விட உலகில் எதுவும் பெரிதில்லை என்று பெண்மையை உயர்த்தியது வள்ளுவர்தான். 

பெருந்தக்க என்ற சொல் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது இடம் குறள் 1137. குறள் 54ல் கற்பு என்னும் கட்டுப்பாடு விதித்தது போல், குறள் 1137ல் மடல் ஏறக்கூடாது என்ற கட்டுப்பாடு. அது என்ன மடல்? நமக்கு மடல் என்றால் கடிதம் என்றுதான் அர்த்தம் தெரியும். ஆனால் மடல் என்றால் கடிதம் என்று அர்த்தமல்ல. ஒருதலையாகக் காதலிக்கும் ஒருவர், தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி விடும் மிரட்டல்தான் மடலேறுவது. தன்மீது சாம்பலைப் பூசிக்கொண்டு, எருக்கம்பூவைச் சூடி, காதலித்தவரின் பெயரையோ, படத்தையோ வரைந்து கழுத்தில் மாட்டிக்கொண்டு, குதிரை போல் செய்யப்பட்ட பனைமட்டையில்  அமர்ந்து ஊரை வலம் வருவதற்கு மடலேறுதல் அல்லது மடலூர்தல் என்று பெயர். பொதுவாக பெண்கள் மடலேறுவதில்லை. மடலேறுதல் என்பது ஐந்திணை ஒழுக்கத்தில் வராது, அது ஒருதலைக் காதலைச் சொல்லும் கைக்கிளை அல்லது பெருந்திணையில் வரும். மடலேறுதல் ஐந்திணை ஒழுக்கத்தில் சேராததால், மடலேறாதப் பெண்களை உலகத்தில் உயர்ந்தவர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.

“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.” (குறள்:54)

“கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்” (குறள்:1137)

வள்ளுவர் கூறும் அறிவு

அறிவுக்கு வள்ளுவரைப் போன்று உலகில் யாரும் விளக்கம் கூறியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. அறிவு என்ற சொல் திருக்குறளில் 25 முறைக்கு மேல் கையாளப்பட்டிருக்கிறது. வள்ளுவர் கூறும் அறிவைப் பற்றி அறிவோம். முதலில் நாம் காணும் பொருட்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதைப் பற்றி குறள் 355ல் குறிப்பிடுகிறார். அது உலகில் நாம் காணும் பொருட்கள் பற்றிய அறிவியல் பற்றி பேசும் அறிவு. குறள் 423, “யார் யார் வாய்க் கேட்பினும்” என்று ஒருவர் சொல்லிய வார்த்தையின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் உளவியல் பற்றிய அறிவு. வள்ளுவர் “யார்” என்ற சொல்லை ஒருமுறை சொல்லியிருந்தால் அந்த குறளின் ஆழம் புரிந்திருக்காது. மிகக் கவனமாக இரண்டு முறை “யார்” என்ற சொல்லை  உபயோகப்படுத்தியிருக்கிறார். நண்பர், பகைவர் என்று செய்தியைச் சொன்னது யாராக இருப்பினும் அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமென்று பகுத்தறிவின் உச்சத்தைத் தொடுகிறது இந்த இரண்டு குறள்களும். அறிவியல், உளவியல் என்று இரண்டு பிரிவின் ஆழத்தைத் தொடும் குறள்கள் அவை.

மேலும் 424ம் குறளில் இன்னும் மிக நுட்பமாக, எது அறிவு என்று சொல்லப்படுகிறது. ஒருவர் கூறும் நுட்பமான தகல்வல்களைக் கூட தெளிவாகப் புரிந்து கொள்வதும், தான் புரிந்து கொண்டதை மற்றவர்களுக்கு எளிமையாகப் புரிய வைப்பதும் அறிவு என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆசிரியர், விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர் என்று அனைவருக்கும் பொருத்தமான செய்தி இரண்டு வரிகளில் இதைவிடத் தெளிவாக வள்ளுவரைத் தவிர யாரால் சொல்ல முடியும்.

அறிவைப் பற்றி இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்யும் வள்ளுவர், அறிவுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார். விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது அறிவின் வளர்ச்சியாக இருந்தாலும் அது அழிவுக்கும் வழிவகுக்கக் கூடுமென்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் எவ்வாறு கணித்தார் என்பது ஆச்சர்யம்தான். அணுகுண்டை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தது மிகப்பெரிய அறிவுதான், ஆனால் ஹிரோஷிமா, நாகசாகியில் பல இலட்சம் கொல்வதற்கு உதவியபோது அந்த அறிவால் என்ன பயன்? அறிவுக்குள் மறைந்து கிடைக்கும் அழிவைக் கணக்கில் கொண்டு, நல்லவற்றுக்குப் பயன்படுவது மட்டுமே அறிவு என்று எச்சரிக்கை செய்யும் குறள் 422.

வெறும் எச்சரிக்கையோடு விட்டிருந்தால் பரவாயில்லை. வேறொரு குறளில் அறிவினால் என்ன பயன் என்று சற்றுக் கடுமையாக ஒரு கேள்வியை முன் வைக்கிறார். அறிவுக்கு இவ்வளவு முதன்மைத்துவம் அளிக்கும் வள்ளுவர், “அறிவினால் ஆகுவதுண்டோ” என்று கோபப்படும்போது, நாம் அந்தக் கோபத்தின் காரணத்தை அவரிடம் கேட்டே ஆக வேண்டும். இதற்கான விளக்கம் குறள் 315ல் இருக்கிறது. இன்னொரு உயிர் படும் துன்பத்தை தன்னுடைய துன்பமாகக் கருதி வருந்தவில்லையென்றால் அறிவினால் என்ன பயன்? ஒரு சமுதாயம் எவ்வளவு அறிவு வளர்ச்சியை எட்டினாலும், அந்த அறிவினால் எந்த வித தீங்கும் நேராமல் இருக்க வேண்டும், மற்றவரின் துன்பங்களை தன்னுடைய துன்பமாக உணர்ந்து அவற்றைப் போக்க வேண்டும், இவை இல்லாத அறிவு அறிவல்ல என்பது வள்ளுவர் காட்டும் வாழ்வியல் நெறிமுறை.

“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள்: 355)

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.” (குறள்: 423)

“எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.” (குறள்: 424)

“சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.” (குறள்: 422)

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை” (குறள்:315)



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 

ஆரிய எதிர்ப்பு

குறள் 30ல் அறத்தின் வழி வாழ்கிற அனைவருமே அந்தணர் என்று  தனது சாதி எதிர்ப்பை வள்ளுவர் முதலில் பதிவு செய்கிறார் என்று கருதுகிறேன். வள்ளுவர் காலத்தில் வேளாண்மை செய்யும் உழவர்கள் நான்காம் வர்ணம் என்றும், சூத்திரன் என்றும் வர்ணாசிர தருமம் என்ற பெயரால் ஒதுக்கப்பட்டார்கள். வர்ணாசிரம தருமம் என்ற கருமத்தில், நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்ட உழவனை முதலில் இடத்தில் வைத்தார் வள்ளுவர். குறள் 47ல் இல்வாழ்க்கை வாழும் உழவன்தான் எல்லோரையும் விட தலை சிறந்தவன் என்று கூறுவதிலும் மறைந்திருப்பது ஆரிய சாதி எதிர்ப்புதான். 47வது குறளில் குறிப்பிடப்படும் முயல்வார் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. தவம் செய்ய முயல்வார், பதவியைக் கைப்பற்ற முயல்வார், பொருள் ஈட்ட முயல்வார் என்று, பிராமணர், சத்திரியர், வைசியர் என்ற மூன்று வர்ணத்தவரையும் குறிக்கும் ஒற்றைச்சொல் முயல்வார் என்ற சொல். அந்த மூன்று வர்ணத்தவரையும் விட இல்வாழ்க்கை வாழும் உழவனே உயர்ந்தவன் என்ற சாட்சிதான் குறள் 47.

இல்வாழ்க்கை வாழ்பவன்தான்  உழவன் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரா என்று நமக்கு சந்தேகம் வரலாம். அதற்கான விடையை வள்ளுவர் குறள் 81ல் கூறியிருக்கிறார். குறள் 81ல் இல்வாழ்க்கை வாழ்பவன் உழவன் என்று உறுதி செய்யும் வள்ளுவர், வர்ணாசிர தருமத்தை உடைத்தெறியும் இடம் பின்னால் வருகிறது. குறள் 972ல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொல்லும் இடத்தில் வர்ணாசிர தருமம் குப்பையில் போடப்படுகிறது. அதன் பின்னரும் குறள் 1031ல் உழவனைச்  சுற்றிதான் உலகமே சுழல்கிறதென்று, உழவனை உலகின் உச்சத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறார். மேலோட்டமாக உழவின் பெருமையைச் சொன்னாலும் இவை அனைத்திலும் இழையோடியிருப்பது ஆரிய எதிர்ப்புதான்.

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.” (குறள்: 30) 

“இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.” (குறள்: 47)

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு .” (குறள்: 81)

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள்: 972)  

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.” (குறள்:1031)

வேள்வி எதிர்ப்பு

ஆரிய எதிர்ப்பு என்பது சில குறள்களோடு முடிந்துவிட வில்லை, அது வேள்வித்தீயாக இன்னும் பல குறள்களில் பற்றி எரியத்தான் செய்கிறது. தீயை வழிபடுவது ஆரியர்கள் மரபு. ஆரியர்கள் கொண்டு வந்ததுதான் வேள்வி என்னும் யாகம். வேள்வி என்பதே ஆரியக் குறியீடுதான். திருக்குறளில் இரண்டு இடங்களில் வேள்வி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில்தான் வேள்வி என்ற வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது. குறள் 87 மற்றும் 88 இரண்டுமே வேள்வியை விட விருந்தோம்பல்தான் சிறந்தது என்று கூறும் குறள்கள். வீணாக வேள்வி வளர்ப்பதை விட்டுவிட்டு, விருந்தோம்பலில் ஈடுபடுங்கள், அதைவிட சிறந்த வேள்வி ஏதுமில்லை என்று உணர்த்தும் குறள்கள் அவை. வேள்வி எதிர்ப்பு என்பதும் ஆரிய எதிர்ப்புதான். 

வேள்வி குறித்த மற்றொரு குறள் “புலான்மறுத்தல்” என்ற அதிகாரத்தில் வருகிறது. புலால் உண்ணாமை தொடர்பான அதிகாரத்தில் வேள்வி தொடர்பான தகவல்கள் ஏன் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய வேண்டியது நமது கடமை. ரிக் வேதத்தில் ஆரியர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டது குறித்துப் பல பாடல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. ரிக் வேதத்தில் மாட்டுக்கறி, , ஆட்டுக்கறி, குதிரைக்கறி ஆகியவற்றை வேள்வித்தீயில் போட்டு உண்டதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன, அவற்றில் சில பாடல்கள்  தொடர்பான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ரிக் வேதப் பாடல்கள் முழுமையாக இணையத்தில் கிடைக்கிறது, அவற்றின் இணையதளமும் பின்னிணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

ரிக் வேதம் மண்டலம் 4 / பாசுரம் 1 / பாடல் 6
ரிக் வேதம் மண்டலம் 10 / பாசுரம் 85 / பாடல் 13
ரிக் வேதம் மண்டலம் 10 / பாசுரம் 86 / பாடல் 14
ரிக் வேதம் மண்டலம் 10 / பாசுரம் 91 / பாடல் 14 

மேலே கொடுக்கப்பட்டுள்ள ரிக் வேதப் பாடல்கள் எல்லாம் ஆரியர்கள் மாட்டுக்கறி உண்டது பற்றிய செய்திகளைத் தருகின்றன. ஆரியர்கள் மாட்டுக்கறி உண்டதைப் பற்றி வள்ளுவர் கூறியிருக்கிறாரா என்றால், ஆம் குறள் 259ல் கூறியிருக்கிறார். குறள் 259ல் வேட்டல் என்ற வார்த்தை வருகிறது. வேட்டல் என்றால் வேள்வி என்றுதான் அர்த்தம். அந்தக் குறளில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு வார்த்தை முதன்மையானது, அது அவிஸ் என்ற வார்த்தை. “அவிஸ் (ஹவிஸ்)” என்ற வார்த்தைக்கு யாகத்தில் பயன்படுத்தப்படும் பொருள் என்று அர்த்தம். யாகத்தில் எவற்றையெல்லாம் ஹவிஸாகப் பயன்படுத்தலாம் என்று ஆரியர்கள் ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள். ஹவிஸ் பட்டியலில் 5 பொருட்கள் இருக்கின்றன.

1. பால்
2. நெய்
3. மாடு, ஆடு, குதிரை போன்ற விலங்குகள்
4. சோம பானம் அல்லது சாராயம்
5. செடி கொடிகள்

ஹவிஸ் என்பது இந்த ஐந்தில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆரியர்கள் ஹவிஸாக பெரும்பாலும் பயன்படுத்தியது மாடுகள். மாட்டை வெட்டி வேள்வித்தீயில் போட்டுத் தின்று விடுவதுதான் வேள்வியின் முதன்மையான நோக்கம். இதன் பின்னணியில்தான் நாம் குறள் 259ஐ அணுக வேண்டும். ஆடுகள், மாடுகள் போன்ற உயிரனங்களைக் கொன்று வேள்வி செய்வதை எதிர்த்து எழுதப்பட்டதுதான் அந்தக் குறள். வேள்வி எதிப்பு என்பதன் வாயிலாக முன்வைக்கப்பட்டது ஆரிய எதிர்ப்பன்றி வேறில்லை.


“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.” (குறள்: 87)

“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.” (குறள்: 88)

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.” (குறள்: 259)

 

வள்ளுவரின் கோபம்

 

பொறையுடைமை என்று பொறுமைக்காகத் தனி அதிகாரமே அளித்த வள்ளுவர் எங்கெங்கெல்லாம் கோபப்படுகிறார் என்று நாம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். அழுக்காறாமை அதிகாரத்தில் “கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.” என்று எச்சரிக்கைக் குரல் எழுப்பித் தனது கோபத்தை மென்மையாகப் பதிவு செய்த வள்ளுவர், முதன்முதலில் குறள் 183ல்தான், புறங்கூறுவதை விட செத்துப்போ என்று தனது குரலை உயர்த்திக் கோபப்படுகிறார் என்று நினைக்கிறேன். மீண்டும் ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் குறள் 214ல், ஊரோடு ஒத்து வாழாதவன் செத்ததற்கு சமம் என்று மீண்டும் கோபப்படுவது தெரிகிறது. 

வள்ளுவர் கோபப்படும் இடங்கள் நிறைய உண்டு. ஆனால் இரண்டு இடங்கள் சிறப்பானவை என்று கருதுகிறேன். ஒருவன் மிகவும் வறுமையில் வாடுகிறான். அவன் வறுமை நிலையைப் பார்த்த பிறகும்,  பெற்ற தாயே அவனை மாற்றானைப் பார்ப்பது போல் ஏளனமாகப் பார்ப்பதாக குறள் 1047 கூறுகிறது. வறுமையில் வாடுகிற மகனுக்கு ஈன்ற தாய் கூட துணை நிற்காமல் மாற்றானைப்போல் நோக்குவதன் காரணம் என்ன? காரணம் என்னவென்றால், அவனுக்கு வறுமை நிலை அறத்தின் வழியாக வரவில்லை. வறுமையே வந்தாலும் அதுவும் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவரின் வாதம். சான்றோன் எனக் கேட்டபோது பெற்றெடுத்தத் தருணத்தை விட மகிழும் தாய், மகன் அறம் தவறி விட்டான் என்றால் அவனை மாற்றான் போல நோக்குவாள் என்பது குறளின் பொருள். 

வள்ளுவர் எந்த இடத்தில் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்றால், சந்தேகமேயின்றி குறள் 1062ஐ சொல்லலாம். நான் முன்பே கூறியபடி, வள்ளுவர் கடவுளைத் திட்டும் இடமும் இதுதான். கடவுளின் மீது வள்ளுவருக்கு எவ்வளவு கடுமையான கோபமென்றால், கடவுளையே பிச்சைக்காரன் போல் அலைந்து திரி என்று சாபம் விடும் அளவுக்குக்  கோபம். ஏன் இந்த மிதமிஞ்சிய கோபம்? இந்த உலகில் ஒருவனுக்குப் பிச்சையெடுத்துதான் உண்ண வேண்டுமென்ற நிலை வருமானால் கடவுளும் அவனோடு சேர்ந்து பிச்சைக்காரன் போல் அலைந்து திரியட்டும் என்று  சாபம் கொடுக்கிறார் வள்ளுவர். தனிமனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி சொன்னது இந்தக் குறளின் எதிரொலிதான் என்று நினைக்கிறேன். ஒருவேளை கடவுள் என்று ஒருவர் இருந்தால், வள்ளுவரின் சாபத்துக்கு ஆளான கடவுள், கட்டாயம் இன்று எங்கோ சாலைகளில்தான் அலைந்து திரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். 


“புறம்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம்கூறும் ஆக்கம் தரும்”. (குறள்: 183)

“ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.” (குறள்: 214)

“அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.” (குறள்: 1047)

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.” (குறள்:1062)

சார்புநிலை

 

வள்ளுவரின் சிறப்புகளில் ஒன்று சார்புநிலை என்று தயங்காமல் சொல்லலாம். உதாரணமாக வாய்மை, அறிவு போன்றவை நம் வாழ்வின் சூழ்நிலைக்கேற்ப மாறும் என்ற வாதம்தான் சார்புநிலை. “ஏற்பது இகழ்ச்சி” என்று சொன்ன ஒளவை, அடுத்த வரியிலேயே “ஐயமிட்டு உண்” என்று பாடினார். பிச்சை எடுக்கும் ஒருவர் ஆத்திச்சூடி படிக்கும் வாய்ப்பு மிகக்குறைவு, ஆகையால் பிச்சை எடுக்காதே என்று நம்மை வலியுறுத்தும் ஒளவைப்பாட்டி, பிச்சையிட்ட பின் சாப்பிடு என்று கட்டளையும் இடுகிறாள். இரண்டு அறிவுரைகளுமே நமக்குதான் பொருந்துமே தவிர பிச்சையெடுக்கும் நபருக்கு அல்ல. அறம், வாய்மை, அறிவு அனைத்துமே சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது, இதற்கு சார்புநிலைத் தத்துவம் என்று பெயர். ஒளவையின் சார்புநிலைத் தத்துவத்துக்கு திருக்குறள் கூட மூலமாக இருந்திருக்கலாம்.

குறள் 300, வாய்மைதான் உலகிலேயே சிறந்தது என்று கூறுகிறது. தான் கண்டவற்றில் வாய்மையை விட சிறந்தது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவரே வந்து சாட்சி சொல்லும் குறள் இது. வாய்மைக்கு தானே வந்து சாட்சி சொல்லும் வள்ளுவர், 323ம் குறளில் கொல்லாமைதான் சிறந்தது சான்றிதழ் தருகிறார். கொல்லாமைக்கு சான்றிதழ் தருவதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. கொல்லாமைக்குப் பின் சிறந்த இடத்தை பொய்யாமைக்கு வழங்கி விடுகிறார். இப்போது வாய்மை மூன்றாம் இடத்துக்கு வந்து விடுகிறது. தானே சாட்சி சொல்லி வாய்மைதான் சிறந்து என்று பட்டம் கொடுத்த வள்ளுவர், கொல்லாமைக்கும், பொய்யாமைக்கும் பின் வாய்மையை வைத்ததன் காரணம் என்ன?

இதறகான விடையை 292ம் குறளிலேயே வள்ளுவர் கூறி விட்டார். நாம் சொல்லும் பொய் ஒரு உயிரைக் காக்குமானால், அந்தப் பொய் உண்மை என்றே மதிக்கப்படும். ஏனென்றால் நாம் சொன்ன ஒரு பொய், ஒரு உயிரைக் காப்பாற்றி விட்டது. வாய்மை சிறந்ததுதான், ஆனால் ஒருவர் உயிருக்கு ஆபத்து வரும் வேளையில், நான் அரிச்சந்திரன் பரம்பரையில் வந்தவன், பொண்டாட்டி, பிள்ளைகளை விற்றாலும் தவறில்லை ஆனால் பொய் சொன்னால் மிகப்பெரிய தவறு என்ற உன்னதமான கொள்கைகளைக் கொண்டவன், நீ தேடி வந்த ஆள் இங்குதான் ஒளிந்திருக்கிறார் , வந்து கொன்று விட்டுப்போ என்று உண்மை பேசினால் வள்ளுவரிடம் அரிச்சந்திரன் போன்றோர் அடிவாங்குவதை யாராலும் தடுக்க முடியாது. ஒருவேளை அரிச்சந்திர புராணத்தைப் படிக்கும் முன்னர், காந்தி திருக்குறளைப் படித்திருந்தால், அரிச்சந்திரன் காந்தியின் கதாநாயகன் ஆகியிருக்க மாட்டார். திருக்குறளைப் படித்திருந்தால், அரிச்சந்திரனும் மனைவியையும், மகனையும் விற்றிருக்க மாட்டார்.

சார்புநிலை திருக்குறளில் பல இடங்களில் தென்பட்டாலும், அறிவு பற்றிய குறள் சிறப்பானது என்று கருதுகிறேன். ஏனென்றால், அறிவில் சார்புநிலை என்பது நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்காதது. “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று அறிவை உச்சத்தில் வைத்த வள்ளுவர், குறள் 315ல் அறிவினால் ஆகுவதுண்டோ என்று அறிவு பயனற்றது என்பது போன்ற விளக்கத்தைத் தருகிறார். அறிவு பயனுள்ளதுதான், அறிவிருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதும் உண்மைதான், ஆனால் பிறர் அனுபவிக்கும் துன்பத்தைத் தனக்கு நேர்ந்த துன்பம் போல உணர முடியாதவருக்கு அறிவு இருந்தும் பயனில்லை என்பதுதான் அறிவின் சார்புநிலை.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.” (குறள்: 300)

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 

நன்மை பயக்கும் எனின்.” (குறள்: 292)

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.” (குறள்: 323)  

“அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.” (குறள்:430)

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை” (குறள்:315)

 

 உள்ளங்கையில் அள்ளி வந்த கடல்நீர்

ஒருவர் “அகர முதல எழுதெல்ல்லாம்” என்ற முதல் குறளுக்கு 400 பக்கத்தில் விளக்கம் எழுதியிருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, திருக்குறளில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இன்னும் கடல் அளவு இருக்கிறதென்று புரிந்தது. இந்த கட்டுரை, கடலில் இருந்து உள்ளங்கையில் அள்ளி வந்த நீர்தான். அகத்தியர் போல கடலைக் குடிக்க ஆசைதான். திருக்குறள் என்னும் கடலைக் கடக்க வாழ்நாள் போதாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. இருப்பினும், திருக்குறள் சொல்லும் சார்புநிலை போல, திருக்குறளைப் படிக்கும் மனிதர்களைப் பொருத்து அதன் கருத்துக்களும் பல்வேறு பரிமாணங்களைக் காட்டும். அப்படியொரு பரிமாணம்தான் இந்தக் கட்டுரையும். இது துவக்கம்தான், தொட்டனைத் தூறும் மணற்கேணி போல திருக்குறள் கட்டுரைகளும் தொடர்ந்து ஊற்றெடுக்கும்.

பின்னிணைப்புகள்

  1. குறள் வானம் – அறத்துப்பால். சுப.வீரபாண்டியன்.
  2. https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_4/Hymn_1
  3. https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_85
  4. https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_86
  5. https://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_91
  6. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
  7. http://periyavaamandali.org/Deivathin%20Kural%20Vol%202.pdf
  8. http://www.hindupedia.com/en/Havis


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

C.V.Rajan, எனது தாய் மொழியும், பிரியத்துக்கு உரிய மொழியும் தமிழே

11 அக்டோபர், 2019 அன்று புதுப்பிக்கப்பட்டது

 

திருக்குறளில் உள்ள ஆதிபகவன், எண்குணத்தான், பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான் -- இவையெல்லாம் ...

 

புத்தரைக் குறிப்பவை -- இப்படிக்கு பௌத்தர்கள்.

மகாவீரரைக் குறிப்பவை -- இப்படிக்கு சமணர்கள்.

விஷ்ணுவைக் குறிப்பவை -- இப்படிக்கு வைஷ்ணவர்கள்.

சிவனைக் குறிப்பவை -- இப்படிக்கு சைவர்கள்.

பரமபிதாவைக் குறிப்பவை -- இப்படிக்கு கிறித்தவர்கள்.

ஆதிபகவன் என்னும் மூத்த தமிழ்க்குடிமகனைக் குறிப்பவை -- இப்படிக்கு ஆதி திராவிடர்கள்

சனாதன மதத்தின் (பார்பனர்களால் கொண்டாடப்படும்) வேத புராணங்களில் கூறியுள்ள கடவுளைத் தான் இவை குறிக்கின்றன -- இப்படிக்குப் பெரியார்!

என்ன? கடைசி வரியைப் படித்துத் திகைத்து விட்டீர்களா? அவர் நேரடியாக அப்படியொன்றும் கூறவில்லை! ஆனால் அவர் கூறுவது இதுதான்:

 

"வள்ளுவனை எடுத்துக்கிட்டியானா பாப்பான்களோட அண்ணன் அவன்! வேற விதியில்லாமே அவனெத் தொங்கிகிட்டுத் திரியிறோம்; அவனுக்கு மோட்சமில்லையா, நரகம் இல்லையா, பாப்பான் இல்லையா, வேதமில்லையா, எது இல்லை அவனுக்கு? அவன் எந்தக் கதையை விட்டான்? எந்தக் கடவுளை விட்டான்? ஏதோ பிள்ளையிலாதவன் ஊர்ப்புள்ளைய வெச்சுக்கிட்டு அழுவுறான்கிர மாதிரி, குறளை வெச்சுக்கிட்டு அழுகிறோம்! வேற நாதியில்ல நமக்கு; ஏன்? கடவுளை அத்தனை போற்றி வெச்சிருக்கோம்; .... எவன் வந்து எதைச் சொன்னாலும், அதில் கடவுள், மதம், பாப்பான், ஜாதி இல்லாமே ஆதாரமே இல்லையே ஒண்ணுகூட?" -- இந்த வரிகள் கீழ்க்கண்ட பெரியார் பேச்சிலிருந்து எடுத்து எழுதப் பட்டவை.

 

'சரி, இந்த பதிலிலிருந்து நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்?' என்று என்னைக் கேட்கிறீர்களா?

 

அது இதுதான்:

 

2000 ஆண்டுகளுக்கும் முன்னரே தமிழில் இருந்த ஓர் மிகப்பெரும் சமுதாய, தார்மீக, ஆன்மீகச் சிந்தனை நூலான திருக்குறளின் மேன்மையை உணர்ந்த பல தரப்பினரும் "அது எம்மைச் சார்ந்த நூல்" என்று உரிமை கொண்டாடுகிறார்கள். அதில் ஒரு குறுகிய புத்தி இருந்தாலும், குறளின் மேன்மைக்குக் கிடைத்துள்ள ஓர் அங்கீகாரம் என அதைக் கொள்ளமுடியும்.

அந்த நூலை நன்கு படித்துவிட்டு, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் மிகப் பெருமளவில் சனாதன தர்மத்தின் தார்மீகக் கோட்பாடுகளே என்பதை சரியாகப் புரிந்துகொண்டவர்களுள் ஒருவர் பெரியார்.

ஆனால், அவரது (பிராமண எதிர்ப்பு, சனாதன தர்ம எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு என்று திரிந்த பாலாகிவிட்ட) "பகுத்தறிவு"க் கொள்கையை வைத்துக்கொண்டு, குறளில் சொல்லியிருப்பதெல்லாம் காட்டுமிராண்டிகளின் கருத்துகளே, அவற்றை ஏற்றுக் கொண்டாடும் தமிழர்களெல்லாம் காட்டுமிராண்டிகளே என்று தீர்ப்பு சொல்லுகிறார் பெரியார்! அதாவது எல்லாரும் சொந்தம் கொண்டாடும் பன்னீர், அவரைப் பொறுத்தவரை சாக்கடை நீர்!



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று

  தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
  திறன் அறிந்து ஆங்கே திரு - குறள் 18:9
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
  பேர் அறிவாளன் திரு - குறள் 22:5
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
  தெள்ளியர் ஆதலும் வேறு - குறள் 38:4
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
  கல்லார்-கண் பட்ட திரு - குறள் 41:8
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
  நினைப்பானை நீங்கும் திரு - குறள் 52:9
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
  சீறின் சிறுகும் திரு - குறள் 57:8
இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
  திரு நீக்கப்பட்டார் தொடர்பு - குறள் 92:10
கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
  நல்லவர் நாணு பிற - குறள் 102:1
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
  நெஞ்சத்து அவலம் இலர் - குறள் 108:2
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
  திரு_நுதற்கு இல்லை இடம் - குறள் 113:3


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

செய்யவள் (1)
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
  தவ்வையை காட்டி விடும் - குறள் 17:7
செய்யாள் (1)
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
  நல் விருந்து ஓம்புவான் இல் - குறள் 9:4
 செய்வல் (1)
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
  மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
தாமரைக்கண்ணான்_உலகு (1)
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
  தாமரைக்கண்ணான்_உலகு - குறள் 111:3
 தாமரையினாள் (1)
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
  தாள் உளான் தாமரையினாள் - குறள் 62:7
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
  மேவன செய்து ஒழுகலான் - குறள் 108:3
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
  மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் - குறள் 108:6
புத்தேள் (5)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
  நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள் 133:3
   புத்தேளிர் (1)
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
  புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
  தாஅயது எல்லாம் ஒருங்கு - குறள் 61:10
நயத்தக்க (1)
பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
  நாகரிகம் வேண்டுபவர் - குறள் 58:10
நல்லாள் (2)
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
  பேணா பெரும் குற்றத்தார்க்கு - குறள் 93:4
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
  நிலம் என்னும் நல்லாள் நகும் - குறள் 104:10
காமன் (1)
பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
  ஒருவர்-கண் நின்று ஒழுகுவான் - குறள் 120:7



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

கூற்றத்தை (1)
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
  ஆற்றாதார் இன்னா செயல் - குறள் 90:4

 முதல்

 
 கூற்றம் (1)
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
  ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9

 முதல்

 
 கூற்றமோ (1)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
  நோக்கம் இ மூன்றும் உடைத்து - குறள் 109:5

 முதல்

 
 கூற்று (4)
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6
கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
  ஆற்றலதுவே படை - குறள் 77:5
துப்புரவு இல்லார் துவர துறவாமை
  உப்பிற்கும் காடிக்கும் கூற்று - குறள் 105:10
பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
  பெண் தகையான் பேர் அமர் கட்டு - குறள் 109:3


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
  திங்களை பாம்பு கொண்டு அற்று - குறள் 115:6

இந்திரனே (1)
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
  இந்திரனே சாலும் கரி - குறள் 3:5


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

Kural%2BiRaimai%2B01.png

Kural%2BiRaimai%2B02.png



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

Kural%2BiRaimai%2B03.png

Kural%2BiRaimai%2B04.png



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard