நெகனூர்ப்பட்டி
வடதமிழ்நாட்டில் செஞ்சி வட்டத்தில் நெகனூர்பட்டி உள்ளது. இங்கு அடுக்கன் கல் என்ற இயற்கைக் குகைத்தள உண்டு. இதன் வெளிப்புறத்தில் தென்திசை நோக்கிய பகுதியில் தமிழி கல்வெட்டு உள்ளது. கல்வெட்டு 27:1
சுற்றிலும் சதுரக்கட்டம் வெட்டப்பட்டு நான்கு வரிகளில் அமைந்து உள்ளது. எல்லா மெய் எழுத்துகளும் புள்ளி பெற்று உள்ளன. வ 1. பெரும் பொகழ் வ 2. சேக்கந்தி தாயியரு
வ 3. சேக்கந்தண்ணி செ வ 4. யி வித்த பள்ளி பெரும் பொகழ் என்னும் ஊர் வாழ் சேக்கந்தி என்பானுடைய தாயார் சேக்கந்த அண்ணி என்பாள் சமண துறவிக்கு செய்வித்த கற்படுக்கை என்பது இதன் பொருள். தாயியரு என்ற சொல் வழக்கு கருநாடக தமிழ் பலுக்கலுக்கு ஒப்பாக உள்ளது. கந்தன் என்ற அன் ஈறு பெற்ற பெயர் சில போது இகர ஈறு பெற்று கந்தி எனவும் வழங்கும்.