Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிறவிப் பெருங்கடல்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
பிறவிப் பெருங்கடல்
Permalink  
 


பிறவிப் பெருங்கடல்

பிறவி ஒன்றன்பின் ஒன்ருகத் தொடர்ந்து வருவது என்பது, இந்த நாட்டிலுள்ள எல்லாச் சமயத்தினரும் உடம் பட்ட கொள்கை. ஒரே பிறவிதான் உயிருக்கு உண்டு; அப்பால் சொர்க்கமோ நரகமோ கிடைக்கும் என்ற கொள்கை இந்த காட்டுச் சமயத்தினரிடம் இல்லை. பிறவி தொடர்ந்து வருவதாயினும் அதற்குத் தொடக்கம் எங்கே, முடிவு எங்கே என்று சொல்ல முடிவதில்லே. ஒரு பிறவியில் செய்த செயல்களின் பயணுக மறுபிறவி கிடைக்கிறது; அந்தப் பிறவியிலும் நல்வினே தீவினைகளைப் புரிவதனுல் மீட்டும் பிறவி வருகிறது.

ஓரறிவுயிராகிய மரம் செடி கொடி முதல் ஆறறிவுயி ராகிய மனிதன் வரையில் உள்ள வகைகளே எண்ணிக் கணக்கிட முடியாது. புழுக்களேப் பார்த்தாலே எத்தனேயோ வகைகள் இருக்கின்றன. இப்போது நுண்ணுடியினலே பல புதிய புதிய நுண்புழுக்களே விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிருர்கள். இன்னும் காணுதவை எத்தனையோ இருக்கக்கூடும். படைப்பில் உயிரினங்களின் வகைகள் எல்லேயில்லாமல் பரந்துள்ளன என்பதை முன்பு இருந்த மெய்ஞ்ஞானிகளும் சொன்னர்கள்; இன்றுள்ள விஞ்ஞானி களும் சொல்கிருர்கள். -

கணக்குக்கு அடங்காவிட்டாலும் உடம்போடுள்ள உயிர்க்கூட்டங்களுக்கு ஏதோ ஒரு வகையில் கணக்கு அமைத்துக்கொண்டு, அதைச் சொல்வதை மரபாக வைத்துக்கொண் டிருக்கின்றனர். உயிரினங்கள் ஏழு வகைப்படுமென்றும், எண்பத்து நான்கு லட்சம் வேறு பாட்டை உடையன என்றும் சொல்வர். உரை சேரும் எண்பத்து நான்கு நூருயிரமாம் யோனிபேதம்’ என்பது தேவாரம்.

ஏழு வகையான உயிரினங்கள் ஊர்வன, மானிடம், நீர்வாழ்வன, பறவை, நாற்காலன, தேவர், தாவரம் என்பவை. பிறப்பு ஏழு வகை என்பதைப் பல இடங்களில் திருவள்ளுவர் குறித்திருக்கிருர்,

எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழியிறங்காப் பண்புடை மக்கட் பெறின். - (62) எழுமை எழுபிறப்பும் உள்ளுவர், தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. (107)

அவர் எழுபிறப்பு என்று குறிக்கும் இடங்களில் ஏழு வகையான பிறப்பு என்றே பொருள் கொள்ளுவர் பரி. மேலழகர். எழுமை என்றும் பல இடங்களில் வள்ளுவர். சொல்கிருர். அதற்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்கள் என்று பொருள் கூறுவார் உரையாசிரியர். எழுமை என்ப தும் எழுபிறப்பு என்பதும் ஒன்றே என்று கொள்வதற்கு இல்லை. இரண்டும் வெவ்வேறு பொருளை உடையன என்பதை, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்” என்ற தொடர் காட்டும். - * - ... "

எழுமை என்பது ஏழன் தன்மை என்ற பொருண் உடையது என்று கொள்வர் சிலர். மை என்பது தனியே பிறப்பைக் குறிக்காவிட்டாலும் அடையோடு, சேர்ந்து பிறப்பைக் குறிக்க வரும். இம்மை, அம்மை, மறுமை, ஒருமை என்பவற்றில் மை என்பது பிறவியைக் குறித்து கிற்றல் காண்க. ஆதலின் எழுமை என்ப தும் அச்சொற்களைப் போலவே ஏழு பிறப்புக்கள் என்ற பொருளே உடையதாயிற்று. பலவற்றைக் குறிக்கும்போது ஏழு என்று சொல்வது ஒரு வழக்கு. ஆகவே திருக்குற ளில் எழுமை என்று ஏழு பிறப்பைக் குறித்தாலும் தொடர்ந்து வரும் பல பிறப்பையே அது குறிக்கிறது என்று கொள்ளவேண்டும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து - (126) ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு ".. எழுமையும் ஏமாப் புடைத்து (398) புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யா திகழ்ந்தார்க் கெழுமையும் இல் (538) ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. (836)

என்று வரும் குறள்களில் ஒரு பிறப்பில் செய்த செயலின் விளைவு தொடர்ந்து ஏழு பிறப்புக்களில் வந்து கூடும் என்ற பொதுவான கருத்து இருக்கிறது. பிறவிகளும் அவற்றிற் செய்த வினைப்பயன்களும் தொடர்ந்து வரும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டவை இந்தக் குறள்கள். -

இவ்வாறு வரும் பிறவியில் இன்பமும் துன்பமும் கலந்தே வருகின்றன. புண்ணியத்தின் பயனகிய இன்பத்தையே அநுபவிக்கும் பிறவி தேவர்களின் பிறவி என்றும், பாவத்தின் பயனகிய துன்பத்தையே நுகரும் பிறவி விலங்குப் பிறப்பு என்றும், புண்ணிய பாவங்களாகிய கலப்பு வினைகளின் பயனுகிய இன்ப துன்பக் கலப்பை நுகர்வது மனிதப் பிறவி என்றும் கூறுவர். நமக்கு மனிதப் பிறவியைப்பற்றி நன்ருகத் தெரியும். தொடர்ந்து துன்பத்தையே அடைவோரும், தொடர்ச்சியாக இன்பத்தையே அடைவோரும் யாரும் இல்லை. அந்த இரண்டும் கலந்தே வாழ்க்கையில் வருகின்றன.

இத்தகைய பிறவி வேண்டுமா, வேண்டாமா? நாம் வேண்டுவதல்ை வருவது அன்று பிறப்பு என்று சொல்லலாம். ஆயினும் பிறப்புக்கு மூலமாகிய வினைகள் ஒழிந்தால் பிறப்பும் அறும் என்ற கியதி ஒன்று இருக்கிறது.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் (349)

என்பது வள்ளுவர் வாக்கு. ஆகவே பிறப்பு வராமல் இருக்கும் வழி உண்டு என்பது தெளிவாகிறது. பிறப்புப் பல பெற்று உலகில் வந்து வாழ்வது உயிருக்கு நன்ரு, அல்லது பிறப்பின்றி வாழ்தல் நன்ரு? இக் கேள்விக்கு ஒரு விடைதான் உண்டு. அந்த விடையில் இந்த நாட்டுச் சமயங்களுக்குள் வேறுபாடு இல்லை. பிறப்பினின்றும் விடுபடும்போதுதான் உயிர் உண்மையான இன்பத்தை அடைகிறது. அந்த இன்பமே விடு. அந்த இன்பம் எத்தகையது, அதில் உயிரின் கிலே என்ன, உயிருக்கும் இறைவனுக்கும் எத்தகைய தொடர்பு அப்போது இருக்கும் என்பவற்றில் அவ்வச் சமயத்துக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஆயினும் பிறப்பை அறுக்க வேண்டும் என்பது யாவருக்கும் உடம்பாடு; அது சமயம் பலவற்றிற்கும் பொதுவான கொள்கை. -

இந்தக் கொள்கையைப் பொதுநூல் செய்த வள்ளுவர் பல்வேறு வகையில் சொல்லியிருக்கிரு.ர். 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது வேண்டாமை வேண்ட வரும் (362).

என்பதில் இதைச் சொல்கிருர். பிறப்புத் துன்பமாதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமை வேண்டும்; அப் பிறவாமைதான் ஒரு பொருளேயும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம் என்று இதற்குப் பரிமேலழகர் உரை எழுதுகிருர். பிறவாமையே நமக்கு லட்சியம்; அதை அடைய அவர் அறுத்தலே வழி.

ஒர்த்துள்ளம் உள்ள துனரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (357)

என்னும் குறளும், மெய்ப்பொருளே ஒருமைப்பாட்டுடன் தியானம் செய்தால் மீட்டும் பிறப்பு வரும் என்ற கினவே வேண்டாம் என்ற கருத்தைச் சொல்கிறது.

மறுபடியும் வந்து பிறவாத நெறியை, மற்றீண்டு வாரா நெறி' என்று கூறுவர் திருவள்ளுவர். இங்கு வந்து பிறவாமையாகிய லட்சியத்தைப் பெற்ற வழியை, தக்கவாறு கல்வி கற்று மெய்ப்பொருளேக் கண்டவர்கள் மேற்கொள்வாராம்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர். மற்றீண்டு வாரா நெறி. (366)

அறத்தின் பெருமையைக் கூற வந்தவர் அது வீடுபேற்றையும் தரும் என்கிருர். வீடு என்று சொல்லாமல் வாழ்நாள் வழியை அடைத்தல் என்று கூறுகிருர். அதனே அடைக்கும் கல்லாக அறம் பயன் படும். 

வீழ்நாள் படா.அமை நன்ருற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழி அடைக்கும் கல்.’ (38) மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்ருர்க் குடம்பும் மிகை (345)

என்னும் இடத்திலும் பிறப்புறுத்தலேப் பற்றிய செய்தி வருகிறது.

இத்தனே குறளாலும் பிறப்பை அறுப்பதே உயிரின் முடிந்த முடிபாகிய லட்சியம் என்ற கருத்தை உணரலாம். அதனே அறுக்க அவாவையும் பற்றையும் சார்பையும் ஒழிக்கவேண்டும். பற்று அற்ற கண்ணே பிறப்பறுக்கும்" என்ற குறளில் அது தெளிவாக இருக்கிறது. அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்று நம்மாழ்வாரும் இதையே சொல்கிரு.ர்.

பிறவாமை வேண்டுமானுல் பற்று அறவேண்டும் என்பதை உணர்ந்தோம். அந்தப் பற்றை அறுப்பது எப்படி? அதற்கும் வழி சொல்கிரும் திருவள்ளுவர்.

சேற்றிலே அழுந்தினவன் ஒருவன் தன் முயற்சியினலே சேற்றினின்றும் மீள முடியாது. ஒரு கால் புதைய, அதனே மேலே எடுக்க மற்ருெரு கால அழுத்தினுல்

1. செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின், அச்செயல் அவன் யாக்கையோடு கூடும் காள் வரும் வழியை வாராமல் அடைக்கும் கல்லாம்’ என்பது பரிமேலழகர் உரை.

2. பிறப்பறுத்தலே மேற்கொண்டாருக்கு அதற்குக் கருவி யாகிய உடம்பும் மிகையாம்; ஆனபின் அதற்கு மேலே இயைபில்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னும்?பரிமேலழகர் உரை. 

இரண்டு காலும் புதையுமே அன்றி மேலெழ இயலாது. கையை ஊன்றிக் காலே எடுக்கலாம் எனிலோ கையும் புதையுமேயன்றி வேறு இல்லை. அருகில் சேற்றில் புதைந்து நிற்பவனைப் பற்றிக் கொண்டு கரையேறலாம் என்பதும் நடக்கிற காரியம் அன்று. ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு பின்னும் ஆழவேண்டியதுதான். கரையில் இருக்கிறவன் ஒருவனுடைய பிடிப்பைக் கொண்டு சேற்றில் ஆழாமல் தப்பலாம். இதுதான் தக்க வழி.

பற்று என்னும் சேற்றில் ஆழ்ந்த ஒருவன் அதனி னின்றும் விடுபடவேண்டுமாயின் பற்றே இல்லாத ஒரு வனப் பற்றிக்கொள்ள வேண்டும். கரையில் இருப்பவனைப் பற்றிக் கொள்ளும் அளவுக்கு நமக்குக் கை நீளவேண்டும்; அல்லது நம்மைப் பற்றிக்கொள்ளும் வகையில் கரையில் இருப்பவனுக்கு நெடுங்கையாக இருக்க வேண்டும். கரையில் கின்று தன் நெடுங்கையை நீட்டுபவன்தான் இறைவன். அவனேப் பற்றிக்கொண்டால் நாம் பற்றி னின்றும் விடுபடலாம். இதை ஒரு குறளில் திருவள்ளுவர் சொல்கிருர்.

பற்றுக பற்றற்ருன் பற்றினே; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (350)

பற்றெல்லாம் ஒழிந்த பிறகே இறைவன் திருவடி சேரவேண்டும் என்கிருர்களே! பற்று உள்ளபொழுதே அவனைப் பற்றுவது எப்படி? என்று எழும் ஐயத்துக்கு விடையாக, நீ பற்றினின்றும் விடுபடுவதற்காகவே அவன் பற்றைப் பற்றவேண்டும் என்று சொல்கிருர், சேற்றில் இருந்தபடியே கரையில் இருப்பவன் கையைப் பற்றினல் தான் கரைசேர முடியும். பற்றில் அழுந்திய நாம் இறைவனுடைய தியானத்தைப் பற்றில்ை முதலில் மேலும் சேற்றில் அழுந்தாத கிலே வரும்; பிறகு அழுந்தும் செயல் மாறி எழும் செயல் உண்டாகும்; மெல்ல மெல்லச் சேற்றினின்றும் விடுபட்டுக் கரை சேரும் இறுதி கிலே பிறகு கிடைக்கும்.

'பிரபஞ்சமென்னும், சேற்றைக் கழிய வழிவிட்டவா!' என்று அருணகிரிநாதர் பாடுகிரு.ர்.

பிறவியைப் போக்கி வீடு பெறுவது நமக்கு உரிய லட்சியம் என்றும், அதனை அடையப் பற்று அறுத்தலே வழி என்றும், அந்த வழியை அடைய இறைவனிடம் உள்ள அன்பே துணே என்றும் இதுகாறும் சொன்ன வற்ருல் அறிந்து கொண்டோம். ஆகவே இறைவன்பால் உள்ள அன்பு, இறைவனைப் பற்றுக் கோடாகக் கொள்ளும் முயற்சி, கம்பாலுள்ள பற்றைப் போக்கி வீடுபேற்றை அடையச் செய்வதற்கு ஏதுவானது என்று தெரியவரும். இதையே கடவுள் வாழ்த்தின் இறுதிக் குறளில் திருவள்ளுவர் சொல்கிருர்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார். - (10) இறைவன் அடியைச் சேர்ந்தவர்கள் பிறவியாகிய பெரிய கடலை ந்ேதுவர் என்பதையும், அவ்வாறு சேராதவர் நீந்த மாட்டார் என்பதையும் ஒருங்கே இந்தக் குறளில் சொன்னர். .

பிறவி என்பது எல்லையில்லாமல் தொடர்ந்து வருவதனால் அதனேக் கடலாக உருவகம் செய்தார்.'

1. காரிய காரணத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வரு தலின், பிறவிப் பெருங்கடல் என்ருர்’ என்று பரிமேலழகர் விளக்குவார். .  

பிறவியென்னும் கடலில் அழுத்தினவாகிய உயிர்கள் முத்தியென்னும் கரையைச் சேரவேண்டும். கடலேக் கடப்பதற்கு உரிய கருவிகள் தெப்பம், ஒடம், தோணி, கப்பல் முதலியன. இறைவனுடைய திருவருள் தெப்பம் முதலியவற்றைப் போலப் பிறவிக் கடலைக் கடக்கப் பயன்படும்.

'புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே’’ என்பது திருவாய்மொழி. அடியார்பால், இணேயில் பவங்கிளர் கடல்கள் இகந்திட இருதாளின் புனேயருள் அங்கணர்’ என்பது பெரிய புராணம். -

கடலில் உள்ள தெப்பத்தைப் பற்றிக்கொள்ளாதவர் கடலுக்குள்ளே ஆழ்ந்து போவார்கள். சேராதார் நீந்தார்’ என்பதற்கு, அதனைச் சேராதார் நீந்த மாட்டாராய் அதனுள் அழுந்துவர் என்று பரிமேலழகர் உரை எழுதினர்.

ஆகவே, பிறவிக் கடலாக உருவகம் செய்ததற்கு ஏற்ப வீடுபேற்றைக் கரையாகவும், இறைவன் திருவடியைப் புனேயாகவும் கொள்ள வேண்டும். உயிர்க் கூட்டங்களில் புணேயைப் பற்ருமல் ஆழ்கிறவர்கள் ஒரு வகை; புனையின் உதவியால் கரைசேர்ந்தார் ஒரு வகை. புணே அல்லது கப்பலிலே ஏறிக்கொண்டவர்கள் நிச்சயமாகக் கரையை அடைவார்கள். அவர்களுக்குக் கடலில் இருக்கும் போதும் அச்சம் தோன்ருது. நல்ல கப்பலில் ஏறிக்கொண்ட வருக்குக் கப்பற்பயணம் மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருக்கும்.

இறைவன் திருவடியை இறுகப் பற்றியவர்கள் இந்த உலகில் வாழ்ந்தாலும் அச்சமின்றி வாழ்வார்கள்; துன்ப மின்றி இன்பத்தை நுகர்வார்கள்.

"நாமார்க்கும் குடியல்லோம், நமனே அஞ்சோம்:

நரகத்தில் இடர்ப்படோம்; நடலே இல்லோம்;

ஏமாப்போம் பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;

இன்பமே எங்காளும்; துன்பம் இல்லே.

தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மை யான

சங்கரன் நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே பாம்என்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச்சே வடியினேயே குறுகி ைேமே”

என்னும் அப்பர் சுவாமிகள் திருவாக்கினுல் இந்த உண்மை தெளிவாகப் புலனுகிறது. பற்றற்றவணுகிய, தான் ஆர்க்கும் குடியல்லாத நிலையுள்ள, இறைவனுடைய திருவடியிணேயைப் பற்றிக்கொண்டவர் அவர். அதனல் இந்தப் பிறவிலேயே நமனே அஞ்சா நிலையும், நடலே இல்லா நிலையும் பெற்ருர். பிறவிக் கடலில் ஆழ்கிறவர் களுக்குத் துன்பமயமாய்த் தோன்றும் வாழ்க்கை அவ ருக்குத் துன்பம் இல்லாத இன்ப வாழ்வாக அமைந்தது. இப்பிறவி நீங்கியபின் வீடு பேறு கிடைப்பது உறுதி. அதனுேடு இப்பிறவியிலேயே துன்பமும் அச்சமும் இல்லாத இன்பமும் கிடைக்கும்.

ஆதலின் இறைவனடி சேர்வதனல் எப்போதோ பயன் உண்டு என்று எண்ணக்கூடாது. செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் ஆல்ை, இப்போதைக்கு என்ன பயன்?’ என்று கேட்டால், 'இப்போதே துன்பத்தில் ஆழாமல் வாழலாம்' என்று உறுதியாகச் சொல்லலாம். இறைவனடியை எந்தக் கணத்தில் பற்றிக்கொண்டாலும் அதுமுதல் அவனிடம் துன்பத்தில் ஆழும் செயல் கின்று விடுகிறது. கப்பலில் தடுமாருமல் தக்க இடத்தைத் தேடிக்கொண்டு அமர்ந்தவனுக்குக் கடலின் அலேயாலோ, சுருமீனுலோ, ஆழத்தாலோ துன்பம் உண்டாகாது. இறைவன் திருவடிப்பற்றை உறுதியாகக் கொண்டவன்,  இந்த உலகில் வாழ்ந்தாலும் உலகியல் கவலைகளும் துன்பங் களும் அவனேச் சாரா.

ஆதவின் இந்த வாழ்விலே இறைவனடி சேர்வார் இந்தப் பிறவியையும் இன்பப் பிறவியாக்கிக் கொள்ளலாம்;

இதன் பின் மற்றீண்டு வாரா இன்ப வாழ்வையும் அடையலாம். இந்தக் கருத்தை உள்ளடக்கியது,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார்

என்னும் குறள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard