பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972: பெருமை)
எல்லா உயிர்க்கும் – உயிர்கள் அனைத்திற்கும் பிறப்புஒக்கும் – பிறப்பின் தன்மை செய்தொழில்வேற்றுமையான் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள வேற்றுமைகளால் சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது
எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக இருக்காது .
யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –( கணியன் பூங்குன்றனார்) எனும் கோட்பாடு படி ஒருவன் செய்யும் செயல் அதில் உள்ள அறத்தின் பலன்(புண்ணியமே) உன் நிலையை தீர்மானிக்கும். வள்ளுவர் நீ இப்பிறவியில் செய்யும் அறத்தின் பயன் உன் அடுத்து எழும் பிறவிகளில் நல்லது செய்யும் என்பார்.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள்.36 அறன்வலியுறுத்தல் பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழிந்த பின்பும் மறுமையில் அழியா துணையாகும்.
வள்ளுவர் ஒரு அரசன் தன் நாட்டை ஆளும் செங்கோல் பிராமணர்களின் வேதங்கள் மற்றும் அறநூல்களுக்கு அடிப்படையாய் இருக்க வேண்டும் என்பார். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். குறள்.543 செங்கோன்மை நாட்டைக் காக்கும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள்- அறநூல்களை மறப்பர். ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். குறள் 560 கொடுங்கோன்மை ஒரு பெரும் சமுதாயத்தில் பணிக்கு ஏற்ப சட்டங்கள் அமையும், அஹிம்சையையும், புலால் மறுத்தலையும் போற்றி துறவரவியலில் கூறிய வள்ளுவர்.
சட்டம் - ஒழுக்கு என வருகையில் அது அவரவர் தொழில், தன்மைக்கு ஏற்ப மாறும் இதை நாம் திருக்குறளிலேயே காணலாம். அஹிம்சை, புலால் மறுத்தலை வலியுறுத்தும் வள்ளுவர் கொடியோரை (பாழ் செய்யும் உட்பகை இல்லாதபடிக்கு) - வயலைல் களை பிடுங்க் எரிதல் போலே மொழி - இனம் எனப் பிரிவினை தூண்டும் கொடியோரை வேரோடு அழிக்க வேணும் என்பார்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். ஒற்றாடல் குறள் 582 எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் ஒழுக்கமுடைமை குறள் 134: பிராமணன் தினமும் கூறும் வேதங்களை மறந்தாலும் மீண்டும் நினைவில் கொணரலாம், ஆனால் தன் குடிப்பிறப்பு ஆசாரத்தில் குன்றினால் கெடு்ம்.
தமிழருள் பகைமூட்ட கிறிஸ்துவ நச்சுப் பரப்பல் செய்த தேவநேயப் பாவாணனைப் போலும், காலனி ஆதிக்க சர்ச் அடிமைகள் தமிழை காட்டிமிராண்டி எனப் பழித்த ஈ.வெ.ராமாசாமி வழி தமிழின் எதிரிகளும் அற நூல் எழுதிய வள்ளுவரை வைத்து - இந்தக் குறள் மூலம் தமிழர் மெய்யியல் மரபை நிராகரிக்கிறார் என பிதற்றுவர்.
பொய்யான உரைகள். சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான். என்பதை செய்யும் தொழிலால் வரும் வேறுபாட்டு சிறப்புகளும் பொருந்தாது என கதைக்கின்றனர்.
சிறப்பு ஒவ்வா உள்ள ஒவ்வா வேறோர் குறளிலும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்.
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண் ஒவ்வேம் என்று. குறள் 1114: குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
ஒவ்வாக- ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் - செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. திருக்குறள், பொருட்பால், ஒழிபியலில், பெருமை எனும் அதிகாரத்தில் வருகின்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” (972) என்ற குறளுக்கு தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், பொருளதிகாரம், களவியல், நூற்பா எண். 90 – “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோனாயினுங் கடிவரை இன்றே” என்ற நூற்பாவில் வருகின்ற ‘ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப’ என்பதற்கு, ஒப்பு பத்துவகைப் படும் என்று கூறுகிறார். அதை மெய்ப்பாட்டியல் சூத்திரம் (25) “பிறப்பே குடிமை ஆண்மை, ஆண்டோடு / உருவு நிறுத்த காம வாயில் / நிறையே அருளே உணர்வொடு திருவென / முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” என்பதைக் கூறி இதில் பிறப்பு என்பதற்கு “பிறப்பாவது அந்தணர், அரசர், வணிகர் . . . என்றாற்போல் வருங் குலம். குடிமையாவது, அக்குலத்திலுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் ‘குடிமை’ என்றார்” என்று சொல்கிறார்
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (அதிகாரம்:பெருமை குறள் எண்:972) பொருள் காண - எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் & செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு ஒவ்வா ; ஒக்கும்-நிகர்க்கும் எல்லா உயிர்க்கும் –என்கையில் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் என ஆகும் (தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327:)செய்தொழில் வேற்றுமையான் என்கையில் இந்தக் குறளில் உயிர் என்பது மனிதர்களை மட்டும் என பொருளாகும்
பிறப்பு ஒக்கும் -தாய் கரு சுமந்து தாய் வயிற்றில் இருந்து பிறக்கிறோம், அனைவரின் பிறப்பும் ஒரே மாதிரி அமைகிறது செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு ஒவ்வா செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் கிடைக்கும் புகழ் ஒத்திருப்பதில்லை (ஒவ்வா- எனில் ஒப்பாக - ஒரே மாதிரி அமைவது இல்லை நாம் இதே ஒவ்வா என்பதன் மாற்று வடிவில் ஒவ்வேம் என வள்ளுவர் குறள் 1114ல் பயன்படுத்தியதில் அறியலாம்) மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை
பரிமேலழகர் உரை:மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409: கலைஞர் மு.கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது. Translation:Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace. Explanation:The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
பிறப்பு ஒக்கும் எனும் குறளை கொண்டு மிகவும் கீழ்த்தரமாக கயமை செய்து மக்களிடம் நச்சு பரப்பப் படும் நிலையில் நாம் உணர வேண்டியது -வள்ளுவர் திருக்குறளை மக்கள் பின்பற்றும் அறங்களை வலியுறுத்தும் நூல், செயற்கை போதனை நூல் அல்ல. வள்ளுவர் ஒரு அர்சன் தன் நிர்வாகத்தில் ஆள் சேர்க்கும் போது வலியுறுத்துவது
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர் (அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:0528) அரசன் எல்லாரையும் சமனாகப் பொதுநோக்கு நோக்காமல் அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழ்பவர்கள் பலராவர். நாம் இவ்வுலகில் பொருள் ஈட்ட செல்கையில் தொழில் தொடர்பு - நட்பு, எனப் பலரோடு பழகும்போது எதற்கு முக்கியம் தரவேண்டும் அரசன் தன்னுடைய முக்கியமான பணிகளுக்கு சரியான மக்களை தேர்ந்தெடுக்க வள்ளுவர் காட்டும் தகுதிகள் என்ன
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: நட்பாராய்தல் ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும். குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: நட்பாராய்தல் உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வருகின்றப் பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்பு கொள்ளவேண்டும்.
செய்தொழில் வேற்றுமை யான் (அதிகாரம்:பெருமை குறள் எண்:972) பொருள் காண - எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் & செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு ஒவ்வா ; ஒக்கும்-நிகர்க்கும் எல்லா உயிர்க்கும் –என்கையில் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் என ஆகும் (தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327:)செய்தொழில் வேற்றுமையான் என்கையில் இந்தக் குறளில் உயிர் என்பது மனிதர்களை மட்டும் என பொருளாகும்
பிறப்பு ஒக்கும் -தாய் கரு சுமந்து தாய் வயிற்றில் இருந்து பிறக்கிறோம், அனைவரின் பிறப்பும் ஒரே மாதிரி அமைகிறது செய்தொழில் வேற்றுமை யான் சிறப்பு ஒவ்வா செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் கிடைக்கும் புகழ் ஒத்திருப்பதில்லை (ஒவ்வா- எனில் ஒப்பாக - ஒரே மாதிரி அமைவது இல்லை நாம் இதே ஒவ்வா என்பதன் மாற்று வடிவில் ஒவ்வேம் என வள்ளுவர் குறள் 1114ல் பயன்படுத்தியதில் அறியலாம்) மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை
பரிமேலழகர் உரை:மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409: கலைஞர் மு.கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர்.(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது. Translation:Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace. Explanation:The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251 உயிர் என்கையில் எல்லாவித உயிரையும் வள்ளுவர் பல்வேறு குறளில் சொல்லி உள்ளார். வள்ளுவர் எழுபிறப்பு என ஏழுவகைப் பிறப்பு எனவும் குறிப்பிட்டுள்ளும் உள்ளார்(எழு பிறப்பு -தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி) - எழுபிறப்பு என ஏழுவகைப் பிறப்பு எனவும் குறிப்பிட்டுள்ளும் உள்ளார் இதில் முழுமையாய் அறத்தை செய்து வாழ்ந்தால் மேலுலகம் செல்ல முடியும் என்பதை வள்ளுவர் ஏற்கிறார், அதன் பின்னும் மீண்டும் மனிதனாகப் பிறக்கிறான், அற வாழ்க்கையோடு உலகைப் படைத்த ஈரைவன் திருவடி பற்றிக் கொண்டால் பிறவியற்ற நல்லாறு அடைய இயலும் என்பது வள்ளுவர் பல்வேறு குறளில் காட்டி உள்ளார். பிறப்பு ஒக்கும் என்கையில், பிறப்பு வகையில் வேறுபாடுகள்பிறப்பு வேறுபாடுகள் 4விதம் என்பது மெய்யியல் மரபு
1.அண்டகம் - முட்டையில் குஞ்சு பொரிக்கும் பறவை இனம். (பறப்பன) 2.வேர்வையிலிருந்து தோன்றுவதான சுவேதசம் வகையில் கொசு முதலியவை 3.சிராயுசம் வகையில் - பாலூட்டிகள் தாய் கர்ப்பப்பையில் சுமந்து யோனி வழியில் பிறப்பு 4. உற்பிச்சம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளை மேற் பிளந்து தோன்றுவன- செடி-கொடி தாவரங்கள்.
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்றவர்- தொழில் வேற்றுமையான் என்கையில் இது மனிதப் பிறப்பை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகும். மேலுள்ள வரியின் பொருள் - பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கர்ப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் – பிறப்பு இயல்பு என்பது ஒரே மாதிரியாக அமைகிறது.
செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா – யாவர்க்கும் செய்தொழில் – அவரவர் செய்கின்ற தொழில்களில் உள்ள வேற்றுமையான் – வேற்றுமைகளால் சிறப்பு ஒவ்வா – பெருமையென்பதோ அவ்வாறு எல்லோருக்கும் ஒவ்வாது(ஒத்து இருக்காது)* ஒவ்வாக- ஒப்பாக -சமமாக - ஈடாக- இணையா எல்லா உயிர்களுக்கும் பிறப்பால் ஒரே தன்மையுடையது; செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக ஒத்து இருக்காது.
பெருமை எனும் இதே அதிகாரத்தில் வள்ளுவரின் அடுத்த குறள் மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்: கீழ்இருந்தும் கீழ்அல்லார் கீழஅல் லவர் (குறள் 973: பெருமை) ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- * (ஒவ்வா வேறோர் குறளிலும் வள்ளுவர் பயன் படுத்தி உள்ளார்-காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண் ஒவ்வேம் என்று. குறள் 1114:குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும். ) எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்றவர்- தொழில் வேற்றுமையான் என்கையில் இது மனிதப் பிறப்பை மட்டுமே குறிக்கும் என்பது தெளிவாகும். மேலுள்ள வரியின் பொருள் - பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கரிப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது
தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் ஆகிய ஏழு வகையான பிறவி; எல்லா உயிர்க்கும் என வள்ளுவர் கூறுவது உலகின் அனைத்து உயிர்களையுமே குறிக்கும் என்கையில் அனைத்து உயிர்களை குறிக்கும் என்றாலும் செய்யும் தொழிலால் என்பதால் இது மனிதனையே குறிக்கும் என்பது தெளிவாகும்.
திருவள்ளுவர் மிகவும் தெளிவானவர் - முந்தைய முன்னோர் மரபைப் போற்றுபவர், அவர் கல்வியின் அவசியம் சொன்னவரே கசட அற கற்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். முன்னோர் மரபை ஏற்றால் உம் தமிழரிடம் வழக்கில் இருந்த கொடிய தீய வழக்கங்கள் ஆன புலால் உண்னல், மது - ஏசுவின் ரத்தம் அருந்தல், பலதார மணம், பரத்தை தொடர்பு - இவற்றை வன்மையாய் கண்டித்தார். இறை நம்பிக்கை ஏற்காதோரை பேய் என்பார்
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் -
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். குறள் 133: ஒழுக்கம் உடைமை கலைஞர் மு.கருணாநிதி உரை: ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக் காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர். மு.வரதராசனார் உரை:ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.
'பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவி நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருஎன முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே''(தொல்.1219) என்கிறது நூற்பா. தோன்றிய குடிநிலை, குடிக்குத் தக ஒழுகும் ஒழுக்கம், வினை ஆளும் தன்மை, வயது, வடிவம், நிலைத்த காதல், மனஅடக்கம், பரிவுணர்வு, அறிவு, செல்வம் இவை பொருந்தி இருத்தல் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவிக்கு மட்டுமல்ல, உலக மாந்தர் அனைவருக்கும் அமைய வேண்டிய பண்புகளாகும். நாள், கோள், சாதி போன்ற பொருத்தங்கள் தலைமக்களுக்கு அமைய வேண்டும் எனக் கூறாமல், இத்தகைய பத்து ஒப்புமைகளைக் கூறுவது பண்பட்ட தமிழின் வாழ்க்கையையும், தொலைநோக்குச் சிந்தனையின் வளத்தையும் வெளிக்காட்டுவதாக அமைகிறது.