Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மறுபிறப்பு, சிரார்த்தம், சுவர்க்கம்‌-நரகம்‌, மோட்சலோகம்‌ -வள்ளுவர் காட்டிய வைதீகம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
மறுபிறப்பு, சிரார்த்தம், சுவர்க்கம்‌-நரகம்‌, மோட்சலோகம்‌ -வள்ளுவர் காட்டிய வைதீகம்
Permalink  
 


5j.jpg  5n.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
RE: மறுபிறப்பு சிரார்த்தம் -வள்ளுவர் காட்டிய வைதீகம்
Permalink  
 


5o.jpg 5p.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

மறுபிறப்பு

பிறவிப்‌ பெருங்கடல்‌ நீந்துவர்‌, நீந்தார்‌

இறைவன்‌ அடி சேரா தார்‌. (10)

கடவுளின்‌ பாதத்தை அடைந்தவர்‌ பிறப்பு என்னும்‌ பெரிய சமுத்திரத்தைத்‌ தாண்டுவர்‌; கடவுளின்‌ பாதத்தை அடையாதவர்‌ பிறவிக்‌ கடலைத்‌ தாண்டமாட்டார்கள்‌. அடிக்கடி பிறப்பார்கள்‌; இறப்பார்கள்‌.

ஒருமையுள்‌ ஆமைபோல்‌ ஐந்து அடக்கல்‌ ஆற்றின்‌

எழுமையும்‌ ஏமாப்பு உடைத்து. (126)

அமை தனது, கால்கள்‌ தலை ஆகிய ஐந்தையும்‌ தனது உடம்புக்குள்‌ அடக்கிக்‌ கொள்ளுவதுபோல்‌, ஒருவன்‌ ஒரு பிறப்பில்‌ உடம்பு, வாய்‌, கண்‌, மூக்கு, காது என்னும்‌ ஐந்தையும்‌ அடக்குவதற்கு வல்லமை பெறுவானாயின்‌, அவ்வல்லமை அவனுக்கு ஏழு பிறப்பிலும்‌ பாதுகாப்பு அளிக்கும்‌.

ஒரு பிறப்பில்‌ ஒருவன்‌ செய்த கர்மத்தின்‌ பயன்‌ ஏழுபிறப்பு வரையிலும்‌ அவனைத்தொடரும்‌ என்பது இதன்கருத்து.

உறங்குவது போலும்‌ சாக்காடு, உறங்கி

விழிப்பது போலும்‌ பிறப்பு. (339)

ஒருவனுக்குச்‌ சாவு ஏற்படுவது தூக்கம்‌ வருவதைப்‌ போன்றது செத்த பிறகு மீண்டும்‌ பிறப்பது தூங்கி விழிப்பதைப்‌ போன்றது.

பொருள்‌ அல்லவற்றைப்‌ பொருள்‌ என்று உணரும்‌

மருளான்‌ஆம்‌ மாணாப்‌ பிறப்பு. (351)

பொய்ப்பொருளை மெய்ப்பொருள்‌ என்று நினைக்‌ கின்ற அறியாமையால்‌, துன்பத்தைத்‌ தரும்‌ மறு பிறப்பு உண்டாகின்றது.

கற்று ஈண்டு மெய்ப்பொருள்‌ கண்டார்‌ தலைப்படுவர்‌,

மற்று ஈண்டு வாரா நெறி. (356)

தத்துவ சாஸ்திரங்களைக்‌ கற்று இவ்வுலகில்‌ உண்மைப்‌ பொருளைக்‌ கண்டறிந்தவர்களே, மீண்டும்‌ இவ்வுலகில்‌ பிறவாத நெறியை அடைவர்‌.

பிறப்பு என்னும்‌ பேதமை நீங்கச்‌, சிறப்பு என்னும்‌

செம்பொருள்‌ காண்பது அறிவு. (356)

பிறப்புக்குக்‌ காரணமாகிய அறியாமை நீங்கவேண்டுமானால்‌, சிறந்த உண்மைப்‌ பொருளைக்‌ காண்பதுதான்‌ அறிவுடைமை யாகும்‌.

வேண்டுங்கால்‌ வேண்டும்‌ பிறவாமை, மற்றது

வேண்டாமை வேண்ட வரும்‌. (362)

பிறவியினால்‌ வருந்‌ துன்பத்தை அறிந்தவன்‌, தனக்கு ஏதேனும்‌ நன்மைவேண்டுமென்று விரும்புவானாயின்‌ மீண்டும்‌ பிறக்காமலிருப்பதையே வேண்டுவான்‌; ஒன்றிலும்‌ பற்றில்லாமல்‌ இருப்பதை விரும்பினால்‌ பிறவாமை கிடைக்கும்‌.

ஒருமைக்கண்‌ தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும்‌ ஏமாப்பு உடைத்து. (398)

ஒரு பிறப்பில்‌ ஒருவன்‌ படித்த கல்வி அவனுக்கு ஏழு பிறப்பிலும்‌ உதவிசெய்யும்‌.

இம்மைப்‌ பிறப்பில்‌ பிரியலம்‌ என்றேனாக்‌

கண்நிறை நீர்‌ கொண்டனன்‌. (1315)

என்‌ காதலியைப்‌ பார்த்து, இப்பிறப்பில்‌ நாம்‌ பிரிய மாட்டோம்‌ என்றேன்‌. உடனே, மறுபிறப்பில்‌ நாம்‌ பிரிந்து விடுவோம்‌ என்று சொல்லியதாக எண்ணிக்கொண்டாள்‌, அவள்‌ கண்களில்‌ நீர்‌ நிறைந்துவிட்டது.

இப்பாடல்கள்‌ எல்லாம்‌ புனர்ஜென்மம்‌ உண்டு என்ற கொள்கையை ஓப்புக்கொள்கின்றன, மறுபிறப்புக்‌ கொள்கையை ஒப்புக்கொள்ளும்‌ மற்றும்‌ பல பாடல்களும்‌ உண்டு.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

சிரார்த்தம்‌

தென்புலத்தார்‌, தெய்வம்‌.விருந்து, ஒக்கல்‌, தான்‌ என்று ஆக்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல்‌ தலை. (43)

பிதிர்க்கள்‌, தேவர்கள்‌, அதிதிகள்‌, சுற்றத்தார்‌, தான்‌ என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்திலும்‌ செய்யவேண்டிய காரியங்‌களைத்‌ தவறாமல்‌ செய்வது இல்லறத்தில்‌ இருப்பவனது கடமை. பிதிர்க்கள்‌ தென்றிசையில்‌ வாழ்கின்றவர்கள்‌, தெய்வத்‌ தன்மையுடையவர்கள்‌; இல்லறத்தில்‌ உள்ளவன்‌ செய்யும்‌ சிரார்த்தங்களின்‌ மூலமே அவர்கள்‌ திருப்தியடைவார்கள்‌. இன்றேல்‌ அவர்கள்‌ வருந்துவார்கள்‌.

துறந்தார்க்கும்‌, துவ்வாதவர்க்கும்‌, இறந்தார்க்கும்‌

இல்வாழ்வான்‌ என்பான்‌ துணை. (42)

சந்நியாசிகளுக்கும்‌, ஏழைகளுக்கும்‌, இறந்தவர்களுக்கும்‌ இல்லறத்தில்‌ வாழ்பவன்தான்‌ துணையாவான்‌. சந்நியாசிகளுக்கும்‌ ஏழைகளுக்கும்‌ உணவளித்துக்‌ காக்க வேண்டும்‌; இறந்தவர்களுக்கு சிரார்த்தம்‌ செய்வதன்‌ மூலம்‌ அவர்கள்‌ அன்மாவைத்திருப்தி செய்யவேண்டும்‌. மேலே காட்டிய இரண்டு பாடல்களிலும்‌ சிரார்த்தம்‌ ஒப்புக்கொள்ளப்பட்டி ருக்கின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

சுவர்க்கம்‌ நரகம்‌

வையத்துள்‌ வாழ்வாங்கு வாழ்பவன்‌ வான்‌உறையும்‌

தெய்வத்துள்‌ வைக்கப்படும்‌. (50)

இவ்வுலகத்தில்‌ வாழவேண்டிய முறைப்படி இல்லறத்தில்‌ வாழ்பவன்‌, தேவலோகத்தில்‌ வாழ்கின்ற தேவர்களில்‌ ஒருவனாக எண்ணப்படுவான்‌.

செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான்‌,

நல்விருந்து வானத்‌ தவர்க்கு. (86)

வந்த விருந்தினர்களை உபசரித்து, இன்னும்‌ வரும்‌ விருந்தினர்‌ களையும்‌ உபசரிக்க எதிர்பார்த்திருப்பவன்‌, இறந்தபின்‌ தேவலோகத்தில்‌ உள்ளவர்களுக்கு நல்ல விருந்தினனாக இருப்பான்‌.

செய்யாமல்‌ செய்த உதவிக்கு வையகமும்‌

வானகமும்‌ ஆற்றல்‌ அரிது. (101)

முன்பு எந்த உதவியும்‌ செய்யாமலிருக்கும்போது ஒருவன்‌ முன்‌ வந்து செய்த உதவிக்குப்பதிலாக, இவ்வுலகத்தையும்‌, தேவலோகத்தையும்‌ கொடுத்தாலும்‌ அவ்வுதவிக்கு ஈடாகாது.

அடக்கம்‌ அமரர்உள்‌ உய்க்கும்‌, அடங்காமை

ஆர்‌இருள்‌ உய்த்து விடும்‌. (121

மனம்‌, வாக்கு, காயங்கள்‌ கெட்டவழியில்‌ போகாமல்‌ அடக்கிக்கொள்ளும்‌ குணம்‌. அக்குணமுடையவனைச்‌ தேவலோகத்திற்கு அனுப்பி இன்பம்‌ அனுபவிக்கச்செய்யும்‌. அவைகள்‌ அடங்காமல்‌ கெட்டவழியில்‌ செல்லும்‌ குணம்‌ அக்குணம்‌ உடையவனை நிறைந்த இருட்டுலகமாகிய நரகத்திற்குச்‌ செவுத்திவிடும்‌.

நல்‌ஆறு எனினும்‌ கொளல்தீது, மேல்‌ உலகம்‌

இல்‌ எனினும்‌ ஈதலே நன்று. (228)

நன்மையடைவதற்கு வழியாகும்‌ என்றாலும்‌ பிறரிடம்‌ யாசித்தல்‌ தீமையாகும்‌. சுவர்க்கம்‌ அடைதல்‌ இல்லை என்றாலும்‌ வறியோர்க்குக்‌ கொடுப்பதே நல்லது.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை, இருள்சேர்ந்த

இன்னா உலகம்‌ புகல்‌. (243)

கருணை பொருந்திய மனமுடையவர்க்கு இருட்டு நிறைந்த துன்பத்தைத்தருகின்ற நரகலோகத்திற்குள்‌ போகும்‌ நிலைமை இல்லை.

ஒருமைச்‌ செயலாற்றும்‌ பேதை, எழுமையும்‌

தான்புக்கு அழுந்தும்‌ அளறு. (835)

அறிவில்லாதவன்‌, இனிவரும்‌ பிறவிகளிலும்‌ தான்‌ நரகத்தில்புகுந்து அனுபவிப்பதற்கு வேண்டிய பாவங்களை ஒரு பிறப்பிலேயே செய்து முடிப்பான்‌.

மேலே காட்டிய பாடல்களில்‌ சுவர்க்கலோகம்‌, நரகலோகம்‌ காணப்படுகின்றன.மேல்‌ உலகம்‌, வானுலகம்‌, அமரர்‌ வாழ்கின்ற உலகம்‌, வானகம்‌ என்பன சுவர்க்கலோகத்தைக்‌ குறிப்பிடுவன. இருட்டு உலகம்‌, துன்பந்தரும்‌ உலகம்‌, அளறு என்பன நரகலோ கத்தைக்‌ குறிப்பின.

சாஸ்திரங்களில்‌ சொல்லுகின்ற தானதா்மங்களைச்‌ செய்பவன்‌ சுவர்க்கத்தை அடைவான்‌. அங்குள்ள இன்பங்களை அனுபவிப்பான்‌. சாஸ்திரங்களுக்கு விரோதமாக நடப்பவன்‌ நரகத்தையடைவான்‌; துன்பங்களை அனுபவிப்பான்‌. இது புராணீகர்‌ கொள்கை. இதை விளக்கப்‌ பல புராணக்கதைகள்‌ உள்ளன. இத்தகைய புராணக்கொள்கைகளையும்‌ திருவள்ளுவர்‌ ஒப்புக்கொள்ளுகிறார்‌ என்பதற்கு, சுவர்க்க, நரகங்களைப்பற்றி அவர்‌ கூறியிருப்பதே போதுமானதாகும்‌.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

மோட்சலோகம்‌

மலர்மிசை ஏகினான்‌ மாண்‌அடி சேர்ந்தார்‌

நிலமிசை நீடுவாழ்வார்‌. ௫]

தன்னை நினைப்பவர்களின்‌ உள்ளக்கமலத்தில்‌ சென்று வாழும்‌ கடவுளின்‌ சிறந்த பாதங்களை அடைந்தவர்‌, மோட்ச உலகத்தில்‌ நிலைத்து வாழ்வார்‌.

யான்‌ எனது என்னும்‌ செருக்கு அறுப்பான்‌ வானோர்க்கு

உயர்ந்த உலகம்‌ புகும்‌. (346)

நான்‌ என்னும்‌ அகப்பற்றையும்‌ எனது என்னும்‌ புறப்பற்றை யும்‌ ஒழிப்பவன்‌, தேவர்களாலும்‌ அடைய முடியாத உயர்ந்த மோட்சலோகத்தை அடைவான்‌.

ஐயத்தின்‌ நீங்கித்‌ தெளிந்தார்க்கு வையத்தின்‌

வானம்‌ நணியது உடைத்து. (353)

சந்தேகம்‌ இல்லாமல்‌ உண்மைப்பொருளை அறிந்தவர்க்கு இவ்வுலகத்தைவிட மோட்சலோகம்‌ சமீபத்திலிருப்பதாகும்‌.

அவாவென்ப எல்லாவுயிர்க்கும்‌ எஞ்ஞான்றும்‌

தவாப்‌ பிறப்பு ஈனும்‌ வித்து. (361

எல்லாவுயிர்களுக்கும்‌ எப்பொழுதும்‌ நீங்காத பிறப்பைத்‌ தருவதற்கு விதை இகபர அசையென்பார்கள்‌. இகபர அசையற்றவர்களே மோட்சலோகத்தை அடைய முடியும்‌.  

அவா இல்லார்க்கு இல்லாகும்‌ துன்பம்‌, அஃதுஉண்டேல்‌

தவாஅது மேல்மேல்‌ வரும்‌. (368)

அசையற்றவர்க்குப்‌ பிறவித்துன்பம்‌ இல்லை; மோட்ச லோகம்‌ உண்டு. அசையிருந்தால்‌ மேலும்‌ மேலும்‌ தவறாமல்‌ பிறப்பு வந்து கொண்டேயிருக்கும்‌.

ஆராஇயற்கை அவாநீப்பின்‌ அந்நிலையே

பேரா இயற்கை தரும்‌. (370)

முடிவில்லாத தன்மையையுடைய அசையை ஓழிக்கின்ற அந்த நிலையில்தான்‌ ஒருவனுக்கு மீண்டும்‌ பிறக்காத தன்மையுள்ள மோட்சலோகம்‌ கிடைக்கும்‌.

மேலே காட்டிய பாடல்களில்‌ மோட்சலோகம்‌ சுவர்க்க லோகத்தைக்‌ காட்டிலும்‌ உயர்ந்தது; நிலையானது; அழியாதது என்று கூறப்படுகின்றது.

காமியகர்மம்‌ செய்பவர்கள்‌ சுவர்க்கத்தை யடைவார்கள்‌); நிஷ்காம்யகர்மம்‌ செய்பவர்களே மோட்சத்தை அடைவார்கள்‌ என்பது தத்துவம்‌. இதனையே திருவள்ளு வரும்‌ விளக்கியிருக்கிறார்‌. இதனால்‌ மோட்சலோகத்தைத்‌ திருவள்ளுவர்‌ ஒப்புக்கொள்ளுகிறார்‌.

மனிதன்‌ அடையவேண்டிய பயன்‌ தர்மம்‌, அர்த்தம்‌, காமம்‌, மோட்சம்‌ என்னும்‌ நான்காகும்‌. இவற்றைத்‌ தமிழில்‌ அறம்‌, பொருள்‌, இன்பம்‌ வீடு என்பர்‌. இந்நால்வகைப்‌ பொருளையும்‌, திருவள்ளுவர்‌ மூன்று பால்களில்‌ அடக்கிக்‌ கூறியிருப்பது கவனிக்கத்‌ தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
RE: மறுபிறப்பு, சிரார்த்தம், சுவர்க்கம்‌-நரகம்‌, மோட்சலோகம்‌ -வள்ளுவர் காட்டிய வைதீகம்
Permalink  
 


(8)  யாகம்‌

அவி சொரிந்து ஆயிரம்‌ வேட்டலின்‌ ஒன்றன்‌

உயிர்‌ செகுத்து உண்ணாமை நன்று (259)

நெருப்பில்‌ நெய்‌ முதலிய அவிகளைச்‌ சொரிந்து, ஆயிரம்‌ யாகம்‌ செய்வகதைக்காட்டிலும்‌, ஒரு பிராணியின்‌ உயிரைக்‌ கொன்று தின்னாமலிருத்தல்‌ சிறந்தது.

ஆயிரம்‌ யாகம்‌ செய்வதால்‌ வரும்‌ புண்ணியத்தைவிட ஒரு உயிரைக்கொன்று தின்னாமலிருப்பதால்‌ வரும்‌ புண்ணியமே சிறந்தது; இதுவே இந்தப்‌ பாடலின்‌ கருத்து.

இக்குறளில்‌ யாகம்‌ செய்வதால்‌ புண்ணியம்‌ உண்டு என்பதை மறுக்கவில்லை. யாகம்‌ புண்ணிய காரியம்‌ என்பதை ஒப்புக்கொள்ளுகிறார்‌. யாகத்தைக்‌ காட்டிலும்‌ ஒரு உயிரைக்‌ கொன்று அதன்‌ உடலைப்‌ புசியாமவிருப்பதில்‌ அதிக புண்ணியம்‌ உண்டு என்றுதான்‌ கூறுகிறார்‌.

ஜாதி என்னும்‌ பகுதியில்‌ எடுத்துக்காட்டிய

அந்தணர்‌ நூற்கும்‌, அறத்திற்கும்‌, ஆதியாம்‌

நின்றது மன்னவன்‌ கோல்‌.

ஆபயன்‌ குன்றும்‌, அறுதொழிலோர்‌ நூல்மறப்பர்‌,

காவலன்‌ காவான்‌ எனின்‌.

என்ற இரு பாடல்களிலும்‌ திருவள்ளுவர்‌ வேதங்களில்‌ கூறப்படும்‌ வேள்விகளை ஓஒப்புக்கொண்டிருக்கிறார்‌.

“அந்தணர்‌ நூற்கும்‌” என்ற பாடலில்‌ பிராமணர்களின்‌ வேதத்தையும்‌, அந்தவேத சம்பந்தமான ஒழுக்கங்களையும்‌ காப்பாற்ற வேண்டியது அரசன்‌ கடமை என்று கூறப்‌ படுகின்றது.

அபயன்‌ குன்றும்‌” என்ற பாடலில்‌, அரசன்‌ ஒழுங்காக அரசாட்சி செய்யாவிட்டால்‌ பிராமணர்கள்‌ தங்கள்‌ வேதத்தையும்‌, வேதசம்பந்தமான ஒழுக்கங்களையும்‌ மறந்து விடுவார்கள்‌ என்று சொல்லப்படுகின்றது.

வேதங்களில்‌ யாகம்‌ செய்யவேண்டும்‌ என்று கூறப்படுகின்றது. யாகங்களின்‌ மூலம்‌ தேவர்களைத்‌ திருப்தி செய்தால்‌ தான்‌ இவ்வுலகில்‌ மழைபெய்யும்‌; பயிர்கள்‌ வளரும்‌; உணவுப்‌ பொருள்கள்‌ கிடைக்கும்‌; மக்கள்‌ பசி பட்டி னியின்றி வாழ்வார்கள்‌. இவை வேத சாஸ்திரங்களின்‌ கருத்து.

பிராமணர்களுக்குரிய ஓழுக்கங்களில்‌ யாகம்‌ செய்தல்‌ ஒன்று; யாகம்‌ செய்துவைத்தல்‌ ஒன்று. இவ்விரண்டு தொழில்‌ களையும்‌ அவர்கள்‌ தவறாமல்‌ செய்ய வேண்டும்‌. இன்றேல்‌ அவர்கள்‌ “பிறப்பொழுக்கம்‌” குன்றியவர்கள்‌ அவார்கள்‌. இவைகளைச்‌ செய்வதற்கு அரசன்‌ உதவி செய்யவேண்டும்‌.

மேலே காட்டிய பாடல்களைக்கொண்டு திருவள்ளுவர்‌ வேதவேள்வியை நிந்தனை செய்யவில்லை; வந்தனை செய்கிறார்‌ என்றே கொள்ளவேண்டும்‌.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard