Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: களப்பிரர் தமிழகம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
களப்பிரர் தமிழகம்
Permalink  
 


களப்பிரர் ஆண்ட தமிழகம் | பகுதி 1 | வந்தார்கள் வென்றார்கள் | #தமிழ்பாரம்பர்யமாதம்

 

"வரலாறு எனப்படுவது மக்களால் ஒப்புக்கொள்ள முடிவு செய்யப்பட்ட கடந்தகாலத்தின் தொகுப்பே” -நெப்போலியன் பொனபார்ட்

கடந்து செல்லும் ஒவ்வொரு காலத்துளியும் வரலாறு எனும் பெருங்குளத்தையே அடைகின்றன. ஆனால் வெற்றி பெற்று நிலைகொண்ட மாந்தர்களே அவ்வரலாற்றை வருங்காலத்துக்கு பாய்ச்சுகின்றனர். தம் புகழுக்கு அணிசெய்பவை காக்கப்படும், அல்லாதவை அழிக்கப்படும். உலகவரலாற்றின் அநேக பக்கங்கள் வெற்றியால் விளைந்தவை. இப்பிரமானத்திற்கு எவரும் விதிவிலக்கல்ல. “கலைகளை போற்றி காருண்யம் போதித்தானாம் நம் மறத்தமிழன்” என மார்தட்டிக்கொள்ளும் எவரும் தம் வரலாற்றின் காரிருள் படிந்த பக்கங்கள் குறித்து அறிய முற்படுவதில்லை. ஆவண வரலாறு அமையாத காலத்தை நாம் காரிருள் காலம் என்பது தகும். ஆனால் முன்னும்,பின்னும் செழிப்பான வரலாறு அமைந்திருக்க ஒரு இடையீட்டுக்கலாம் மட்டும் கறுத்திருப்பதை கண்டும் அதை வினவாமல் இருப்பது முறையல்ல.  உற்றுநோக்கினால் உணரலாம் அவை காரிருள் பக்கங்கள் அல்ல, கயவர்கள் எரித்தழித்த பக்கங்களின் கரியும் சாம்பலும் என. சங்கம் அமைத்து தமிழ்வளர்த்த நம் வரலாறு முந்நூறாண்டுகள் மூடிக்கிடந்து திடீரென பல்லவர்களுக்கு திறந்து விடப்பட்டது போல தொடர்வது வாதத்திற்குரியது.

‘தமிழ்த்தேசியம்’, ‘தமிழர் நாடு’, ‘தமிழ் ஆட்சி’ சமகாலத்தில் சமூகவலைத்தளங்கள் தொட்டு சட்டங்கள் இயலும் பாராளுமன்றம் வரை பேசப்பட்டு வரும் ஒரு பொதுவான தலைப்பு. தமிழன் என்ற வகையில் நம்மில் பலருக்கும் இத்தகைய சுதந்திர கருத்துக்களை செவியுறும் போதெல்லாம் உள்ளூர ஒரு கர்வமும், பெருமையும், அச்சமும், ஆர்வமும் உண்டாகும். காரணம் நாம் கண்முன் கண்ட வரலாறு. நாம் செவியுற்ற வரலாறு. தமிழ் என்ற வரையறைக்குள் நிற்கும் போதெல்லாம் நம் பெருமைக்கு சான்றாக நாம் முன்னிறுத்திக்கொள்வது நம் வரலாறு.

“லெமூரியா ஆண்ட தமிழன், சங்கம் வளர்த்த தமிழன், கங்கை முதல் கடாரம் வரை ஆண்டு வந்த தமிழன், முப்பதாண்டுகளாய் வீரப்போர் செய்து சுயம் காத்த தமிழன்” என ஒரு குறுகிய வட்டத்தினுள் நின்ற வண்ணம் புகழ்ப்பாடிக்கொண்டு இருக்கிறோம். எது பிறரால் விரும்பி கேட்கப்படுகிறதோ, எது நமக்கு புகழை சேர்க்கிறதோ அதுவே நம் மனங்களில் நின்று விடுகின்றன. மற்றவை எல்லாம் ஆற்றில் கரைத்த புளிக்கு சமானம். கற்களில் காவியம் பாடிய பல்லவர்களும், காவியத்தில் புது உலகம் சமைத்த சேரர்களும் நம் மனங்களை விட்டு அகன்று விட்டனர். வெற்றிடத்தை நிரப்ப வேற்றுநாட்டில் இருந்து சேகுவாராவும், ஹிட்லரும் வந்து விட்டனர்.

“கடந்தகாலத்தை கொண்டு நிகழ்காலத்தை திட்டமிடுவதன் மூலம் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ள முடியும். நம் வரலாற்றை மறந்து செயற்படுவது அத்திவாரம் இல்லாத கட்டடத்திற்கு நிகர்த்தது” - பண்டித். ஜவஹர்லால் நேரு

அத்திவாரங்களின் அழகானது என்றும் வலிமை மட்டுமே, அதன் புறதோற்றம் இல்லை. ஆனால் நம்வரலாறு என்னவோ பெரும் அலங்காரங்களுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நம் கைகளுக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் அவைகள் நமக்கு பெரிய விடயமாக இல்லை. அவ்வாறே எவரேனும் அதை கண்டறிய விளைந்தாலும் நாம் அலட்டிக்கொள்வதில்லை. அண்மையில் கீழடி ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நேரம் உருவான பரபரப்பு சிறிதே நாட்களில் flying kiss அடித்து ட்ரெண்டிங் ஆன ஒரு ட்ரைலரால் மறைந்து போனது. வீரதமிழன் என பெயர்பெற்ற நாம் என்று வாட்ஸாப் தமிழர்கள் ஆனோமோ அன்றே நம் வரலாறு ‘sharing’ எனும் வட்டத்துக்குள் முடக்கப்பட்டு விட்டது. நம்மூதாதைகள் நமக்கென விட்டுச்சென்றதுடன் மாத்திரம் வாழப்பழகிவிடாமல், காலத்துக்கு உவக்காதென அவர்கள் மறைத்து சென்றதையும் தேடியாக வேண்டும். நம்முடைய வரலாறு நமது அத்திவாரம் என்பதை நாம் உணரத்தலைப்பட ஆரம்பித்தால் அன்றி நம்சமூகம் என்ற கட்டிடம் சரிவதை நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க இயலும்.

  • சங்கம் எங்ஙனம் மருவிப்போனது?
  • மூவேந்தர்கள் மூன்னூறாண்டாய் எங்கு சென்றனர்?
  • எவர் ஆட்சி நிலவியது அப்போது?
  • ஏன் அந்தக் காலம், தமிழகத்தின் இருளான பக்கங்களானது?

தமிழக வரலாற்றை ஒரு வாசகன் என்ற ரீதியில் அணுகும் போது இவற்றை நான் வினவிக்கொண்டேன். விடைத்தெரியாத வினவல்கள் தரும் ஆர்வம் அளப்பரியது. என் ஆர்வத்துக்கு உயிரளித்தது போல இந்த ஆக்கத்தை அமைத்தேன். இருண்ட காலம் என அறியப்பட்ட சங்கம் மருவியகாலத்தின் முற்காலத்தையும், பிற்காலத்தையும், சமகாத்தில் நிலவிய மாற்றரசுகளின் ஆதாரங்களையும் கொண்டு இந்த படைப்பு உருவாக்கப்படுகிறது.

ஒளிக்கீற்று

கணினி மாந்தர்களாக மாறிப்போன நம்மில் ஒருவரின் கேரக்டர் ஐ தெரிந்துகொள்ள வேண்டுமெனில் முன்னரைப்போல அக்கம் பக்கத்தாரிடம் வினவவேண்டியதில்லை. அவர்களின் கைப்பேசியே போதும், காலத்திற்கும் அவர்கள் செய்தது, செய்வது, செய்யப்போவது என அனைத்தையும் தெரிந்துகொள்ளலாம். எனினும் எவர் அதனை கையளிப்பார் பிறரிடம்? வீட்டின் சாவியைக்கூட தந்துவிடுவார்கள், ஆனால் கைப்பேசியை கட்டிய மனைவியை போல பிறர் தீண்டா வண்ணம் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வார்கள். கைபேசி கிடைக்காவிட்டால் என்ன, சமூகவலைதங்கள் தான் மலிந்து போய் உள்ளனவே. ஏதோ ஒரு செயலியை தெரிவு செய்து நாம் அறியவிரும்பும் அன்பரின் பெயரை தட்டிவிட்டால் போதும். திறம்பட அவர்களை பற்றி அறிந்துகொள்ளலாம். ஒன்றில்லை இல்லையெனில் இன்னொன்றென ஏதோ ஒரு வலைதளத்தில் சிக்காமல் போக எவராலும் இயலாது. ஒரு தனிமனிதன் குறித்து அறிவதற்கே இத்தினத்தில் நம்மிடம் இத்தனை வசதிகள் இருக்க, வரலாற்றின் இருண்ட பக்கங்களை அலசிக்கொள்வதற்கு தகுந்த ஊடகங்கள் இன்றளவும் நம் கைகளுக்கு கிடைக்கவில்லை.

தமிழகத்தின் வரலாற்றின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் காலமானது மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரையே ஆகும். இம்முந்நூறு ஆண்டுகள் பற்றி நமக்கு கிடைக்கும் வரலாற்று ஆதாரங்கள் மிகவும் சொற்பம். இதன் நிமித்தமே இக்காலப்பகுதி தமிழக வரலாற்றின் இருண்ட பகுதி என பொதுவாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் இப்பெயரிடலுக்கு பின்புறம் இன்னொரு காழ்ப்புணர்ச்சி மிக்க வரலாறும் அடங்கியுள்ளது என்பதை பின்பு நோக்கலாம். இருண்டகாலமான இந்த பெருங்குகையை ஊடறுத்துச்செல்ல சில ஒளிக்கீற்றுக்களே உறுதுணை செய்கின்றன. அவற்றுள்ளும் பெருவாரியானவை ஊகங்களை அடிப்படியாகக்கொண்டதும், கவித்துவம் மிக்கதும், பிறநாட்டு வரலாறுகளுடனும் தொடர்புடையதே ஆகும்.

ஒரு வரலாறு குறித்து அறிந்துகொள்ள இருவகையான மூலங்கள் பயன்படும். உள்வாரி மூலங்கள் (ஒருவரின் கைபேசியை போல) மற்றையது வெளிவாரி மூலங்கள் (சமூகவலைதளங்கள் போல). இவை இரண்டில் உள்ளக மூலங்களே பிரதானமானதும், பெரிதும் விரும்பப்படுவதும் ஆகும். ஆனால் இருண்ட காலத்தில் இத்தகைய உள்வாரி மூலங்கள் மிகவும் குறைந்த அளவே கிடைக்கின்றன.

  • 1979 இல் கண்டுபிடிக்கப்பட்ட பூலங்குறிச்சி (பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர்)கல்வெட்டுகள் சங்கம் மருவிய காலத்தை அறிந்து கொள்ளப்பயன்படும் மிகப்பிரதான மூலாதாரம்.
  • கொங்குநாடு(அரசலூரில்) கண்டறியப்பட்ட கற்பலகை
  • கரூர் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட வட்டப்பாறை கல்வெட்டு
  • புத்ததத்தர் எழுதிய அபிதாமாவதாரம்
  • வச்சிரதந்தி அமைத்த திரமிளசங்கம்
  • ரோமநாணயங்கள், மட்பாண்ட சிதைவுகள்

வெளிவாரி மூலங்கள் என நோக்கும் போது சமகாலத்தில் கிடைக்கும் பிறநாட்டு ஆதாரங்களும், பிற்காலத்தில் கிடைக்கும் உள்நாட்டு ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அவை

  • வேள்விக்குடி செப்பேடுகள். இவையே சங்கம் மருவிய காலத்தை குறித்து முதன்முதலில் குறிப்பிடும் வரலாற்று ஆதாரம்.
  • திருஞானசம்பந்தரின் திருவையாற்றுப்பதிகம்
  • கால்லாடம், யாபெருங்கோல் விருத்தி, சில தனிப்பாடல்கள்
  • பெரியபுராணப்பாடல்கள்
  • சாதவாகன கல்வெட்டுக்கள்
  • சின்னமனூர் செப்பேடு
  • பல்லவர்கால செப்பேடுகள்
  • அபிச்சத்திரா, மதுரா, பிருந்தாவனம், புத்தகயா, வாரணாசி ஆகிய பகுதிகளில் கிடைத்த அகழாய்வு படிமங்கள்

இங்ஙனம் இந்தியா முழுவதும் கிடைத்துள்ள ஆதரங்களைக்கொண்டு மு.அருணாசலம் உள்ளிட்டோர் சங்கம் மருவிய காலம் தொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதுவும் இருண்டகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள மிகவும் உதவுகிறது. சீவகசிந்தாமணி, மணிமேகலை ஆகிய காவியங்களை ஆதரமாகக்கொண்டு சங்கமருவிய காலம் குறித்த வாழ்க்கை முறைகளை ஒருவாறு ஊகிக்கவும் முடியும். கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை பயன்படுத்தி ஒரு எடுகோள் ரீதியான ஆக்கமாக இது உருவாக்கப்படுகிறது. ‘பேக் கிரௌண்ட்’ தெரியாமல் எந்த விடயத்தை ஆய்வு செய்தாலும் முழுமையான விளக்கம் கிடைக்காது. எனவே மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னரான சங்ககாலத்தில் நிலவிய பேக் கிரௌண்ட் குறித்து முதலில் காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

கங்கை - வைகை

வேதகாலம் என அறியப்பட்ட காலத்தில் இருந்தே ஆரியர்களின் குடிபெயர்வுகள் வட இந்தியா முழுவதும் நடைபெற்ற வண்ணம் இருந்தன. ஆரிய பிராமணர்கள் உள்நுழையும் இடங்கள் யாவும் ஆரியமயப்ப்டுத்தபட்டன. சுதேச வழிபாட்டு முறைகளை ஆரியத்துடன் இணைத்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களை வைதீக கோட்பாடுகளுக்கு உட்படுத்தி பிராமணர்கள் வயிறு வளர்த்தனர் என்பது பொதுவான வரலாற்று கருத்து. வைதீக கோட்பாடு, வர்ணாசிரம பிரிவு என்ற அடித்தளத்தில் அமைக்கப்பட்டது. கடுமையான சாதிப்பாகுபாடும், அடக்குமுறைகளும் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் விளைவாக பௌத்தம், சமணம் ஆகிய வேத எதிர்ப்பு(நாஸ்திக) மதங்கள் தோன்றி மக்களின் ஆதரவை பெற்றன. அதிகாரம் மிக்க பிராமண சமூகத்துக்கு எதிராக உருவான இந்த தன்மை ஒரு தாழ்த்தப்பட்ட ஹீரோ அதிகாரம் நிறைந்த வில்லனை எதிர்க்கும் தற்கால மசாலப்படம் போன்றது இல்லை. மாறாக கருணையற்ற வில்லனை கொண்ட கொரிய பேய்ப்படங்கள் போல இருந்தன. ஒன்றை ஒன்றும் விஞ்சும் போது சிலவேளைகளில் மனிதத்தின் எல்லைக்கோடுகள் மறக்கப்பட்டன.

கடலோரங்களில் வாழும் ஒரு புல் குறித்து நாம் பெரிதும் கேள்வியுற்றிருப்போம். ராவணன் மீசை. ஒரு இடத்தில் தன்னை நிலையாக பற்றிக்கொண்ட பின்பு தன் ஓடி வேர்களை ஒட்டி, கரைகளை முழுவதுமாய் கட்டிவிடும். ஒரு இடத்தில் தான் அழிந்தாலும் பிறிதிடத்தில் தன்னை வளர்த்துக்கொண்டே போகும். அங்ஙனமே பிராமண சமூகமும் தனக்கு வரப்போகும் ஆபத்தை முன்பே உணர்ந்தாற்போல் பாரதம் முழுவதும் தங்களை பரப்பிக்கொண்டனர். கங்கையின் கரைகளில் இருந்த பிராமண மீசை, வைகையின் கரைகள் வரை வேர்களை ஒட்டியது.

தோற்றுவாய்

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மூவேந்தர்களின் ஆட்சி தமிழகத்தில் நிலவிய காலமது. மக்கள் இயற்கையில் இறைவனை கண்ட காலம். பாலைமக்கள் கொற்றவையையும், குறிஞ்சிமக்கள் குமரனையும், நெய்தல்மக்கள் வாலியையும், முல்லைமக்கள் மாயோனையும், மருதநில மக்கள் வஞ்சிக்கோவையும் வழிப்பட்டகாலம். ஈஸ்வரனும்,நாராயணனும் தமிழகத்தில் உள்நுழையாத காலம். அக்காலத்தில் தமிழகம் தன்னிறைவான பொருளாதார முறைமையை கொண்டிருந்தது. தம்முடைய தேவை போக எஞ்சியது அரசுக்கு வரியானது. சங்ககாலத்தில் சிற்றரசர்களின் வகிபாகம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அவர்களின் ஆதரவு இல்லாமல் இன்னொரு பெருநாட்டை போரில் வெல்ல இயலாத நிலை காணப்பட்டது. போர்களின் மூலம் போதுமான செல்வங்களை திரட்டிக்கொண்ட அரசுகள், அச்செல்வங்களை தன் சிற்றரசுகளுடன் பகிர்ந்து கொண்டது.பரதவர்கள் ஆழியை ஆட்சி புரிந்தனர்.  திறைகடல் ஓடி திரவியம் தேடிய வணிகர்கள் அரசுக்கு முதுகெலும்பென உதவி நல்கினார்கள்.

வடநாடுகளுடன் ஏற்பட்ட பொருளாதார தொடர்பு என்ற இழையை பற்றிய படி வேதியர்கள் தமிழகம் அடைந்து தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர். வேதியர்களின் ஆதிக்கத்தால் அரசன், வணிகன், வேளிர் என்ற பிரிவினை மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. வடநாட்டில் உருவான சாதிய அடக்குமுறைகள் போன்ற ஒரு சம்பவம் மெல்ல மெல்ல தமிழகத்தில் உருவாக ஆரம்பித்தது. அசோகர் காலத்தில் பௌத்தமும், சமணமும் கூட தமிழகத்தை அடைந்து அமைதியாக தம் வழியில் சென்றுகொண்டிருந்தன. இந்த நாஸ்திக(வேத எதிர்ப்பு)மதங்கள் மக்கள் மத்தியில் நல்ல அபிமானத்தை பெற்றிருந்தன.

யாதும் ஊரே யாவரும் கேளீர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என கனியன் பூங்குன்றனார் பாடியதில் சமணம் மற்றும் பௌத்தத்தின் தாக்கத்தை உணரக்கூடியதாக இருந்தது. பூம்புகார், காஞ்சி ஆகிய இடங்களில் விகாரைகள் மெல்ல முளைத்தெழுந்தன. மீண்டுமொரு வைதீக எதிர்ப்பு போராட்டத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. ‘இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழப்பழகு’ என்பது எப்போதும் வாய்மொழியுடனே கடந்து போகிறது. ஏதோ ஒன்று நம்மில் இருந்து வேறுபட்டு, கவரும் வண்ணம், உயர்ந்தது உள்ளது போல மனதின் ஒரு மூலையில் தோன்றிவிட்டால் போதும். அது உடனே நம்மிடையே ட்ரெண்டிங் ஆகிவிடும். சிறிது நாளில் ஃபாஷான் ஆகிப்போகும். பின்னர் நம் லைஃப் ஸ்டைல் என்றாகி நீண்ட இடைவெளியில் நம் கலாசாரமும் ஆகிப்போகும். நமக்கு இந்த பரந்த மனம் உருவாகிப்போக காரணம் நம்மூதாதைகள் காட்டிச்சென்ற வழி தான். தனித்தன்மையுடன் விளங்கிய ஆதித்தமிழ் மரபுகளை மறந்து வெள்ளைத்தோல் ஆரியர்கள் கடைப்பிடித்தவற்றை நம்மவரும் கைக்கொண்டனர்.

தமிழர்கள் தெய்வமான கொற்றவையும், குமரனும் வைதீகர்களின் பூசனைகளில் இடம்பெற்றனர். மக்களின் ஆதரவு வைதீகத்தை சேர்ந்தது. பார்ப்பனர்கள் தம்முடைய வேத வேள்விகள் குறித்து மன்னர்களுக்கு தெளிவுபடுத்த ஆரம்பித்தனர். போர்களில் வெல்வதற்காக யாகங்களை செய்யுமாறு மன்னனுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

வேத வேள்விகளை பிராமணர்கள் மட்டுமே செய்யவேண்டும் எனவும், வேதத்தை பிறர் கற்பது மஹாபாவம் எனவும் மக்களை நம்பசெய்தனர். வடக்கே பௌத்தமும், சமணமும் சமாதானத்தை போற்றி மக்களின் மனதை வென்றமையால் வேதவேள்விகள் மங்கிப்போயின. எனினும் தமிழகம் அப்போது தான் அதை கைக்கொள்ள தொடங்கியது.  போர்களுக்கு முன்னராக வேள்விகள் ஆற்றும் வழக்கத்தை மன்னர்கள் கைக்கொள்ள தொடங்கினார்கள். ராஜசூயம் வெட்ட பெருநற்கிள்ளி, பலயாகசாலை முதுகுடுமி பெருவழுதி ஆகிய மன்னர்கள் அதீத எண்ணிக்கையில் வேத வேள்விகளை செய்தனர்.

அவர்களின் பெயர்களே அதற்கு சான்று பகர்ந்து நிற்கிறது.  வேள்விகளை தொடர்ந்து போர்கள் வெற்றி பெறுமாயின் அவ்வேள்வியை நடாத்தி தந்த பிராமணர்களுக்கு பிரம்மதேயம் என்ற பெயர்களில் நிலங்கள் வழங்கப்பட்டன. சிலநேரங்களில் கிராமங்களும், கிராமத்தொகுதிகளும் கூட இத்தகைய தானங்களாக்கப்பட்டன. அந்நிலங்களில் வேளாளர்களை பணிக்கமர்த்தி விளைச்சலை பெற்று சுகபோகமான வாழ்க்கையை பிராமணர்கள் வாழத்தொடங்கினார்கள். போர்களில் படை தந்து உதவிய குறுநில மன்னர்களை காட்டிலும் பிராமணர்கள் உயர் அந்தஸ்த்தை பெற்றனர். மேலும் வேளாளரின் உழைப்பை கொண்டு வாழ்க்கை நடாத்தும் பிராமணர்கள் வேளாளரை சமூகத்தின் கீழ்நிலை பிரிவாக கண்ணுற்றனர். இந்நிலையால் சிற்றரசர்களுக்கும் மன்னர்களுக்கும் இடையிலே பிணக்கம் ஏற்பட ஆரம்பமானது. 

வந்தார்கள் வென்றார்கள்

வெறுமனே வேதங்களை ஒப்புவிப்பதற்கு விலையாக வளமான நிலங்களை பெற்று சுகபோக வாழ்க்கை நடாத்தும் பிராமணர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவு தந்த மூவேந்தர்களுக்கும் மக்கள் மத்தியில் இருந்த நற்பெயரும் கௌரவமும் சரிந்தவண்ணம் சென்றன. இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தென் கர்நாடக பகுதியை சேர்ந்த ஒரு குலத்தை சேர்ந்த சிலர் மூவேந்தர்களை வென்று தென்னகத்தில் வலுவான ஒரு ராஜ்யத்தை அமைத்தனர். அவர்கள் களப்பிரர் என அறியப்பட்டனர். சங்ககாலத்தில் போர்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த சிற்றரசர்கள் மூவேந்தர்களுக்கு எதிராக களப்பிரருக்கு படையுதவிகளை செய்தனர். மக்களின் ஆதரவும் மூவேந்தர்களுக்கு சாதகமாக அமையாது போனதால் களப்பிரர்களின் வெற்றி மிகவும் எளிதாகிப்போனது. அண்ணளவாக கி.பி 250 இல் ஸ்தாபிக்கப்பட்ட களப்பிரர் அரசானது மூன்று நூற்றாண்டுகளாக கி.பி 550 இல் சிம்மவிஷ்ணு பல்லவரால் படையெடுக்கப்படுவது வரை தென்னிலம் முழுவதும் ஆட்சி செய்தது.

தமிழ்மன்னர்கள் வைதீகத்தை ஏத்திப்பிடித்து தங்களின் சுயத்தை இழந்து போன வேளையில். களப்பிரர் தங்களின் சுயமான தாய் மொழியை விடுத்து, தமிழை தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு மான்புடன் செயலாற்றினர். கல்வியும், கலைகளும், ஆட்சியும் புத்தாகம் பெற்றுவந்தன. எதிர்ப்புகளை ஒடுக்கிவிட்டு தம்பால் ஆதரவு நல்கிய மக்களுக்காகவும், குறுநில வேந்தர்களுக்காகவும் முடிந்த மட்டும் நலன்களை செய்து முடித்தனர். அவர்கள் நிகழ்த்திய புத்தாக்க மறுமலர்ச்சி தமிழகத்தில் நிலையான ஒரு மாற்றத்தினை உண்டு பண்ணியது. மூவேந்தரால் முடியாத எதனை இவர்கள் செய்தனர் என்பதை காண்போம் இனி.

பகுதி 2 | வாழ்வியலும் கலையும்

பகுதி 3 | இருண்டது காலம்

ஆதாரங்கள்.

  • சமூக ஆய்வுவட்டம், வரலாற்று பேராசிரியர் பத்மாவதியின் உரை

http://samoogaaaivuvattam.blogspot.com/2014/12/30-11-2014.html?m=1

  • இந்திய வரலாறு : டாக்டர் ந. சுப்ரமணியன்
  • பாண்டியர் காலச்செப்பேடுகள் : டாக்டர் மு. ராஜேந்திரன்
  • முகப்புப் படம் : https://twitter.com/JJayCreation


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பகுதி 2 | வாழ்வியலும் கலையும்

கோன்(ண்)மை

தென் கருநாடாகத்தின் மைசூருக்கு அருகே ஒரு சிறு இனக்குழுவாக வாழ்ந்துவந்த களப்பிரர் தக்கதருணம் பார்த்து தென்னகத்தை தங்கள் ஆளுமையின் கீழ் கொனர்ந்தனர். களப்பிரர்கள் வைதீகத்திற்கு எதிரான நாத்திக வாதங்களான பௌத்தம் மற்றும் சமணத்தை பின்பற்றியவர்களாக இருந்தனர். அவர்களின் பேச்சுவழக்கானது பாலி மற்றும் பிராகிருத மொழிகளை கொண்டே அமையப்பட்டு இருந்தது. தமிழகத்தில் தாங்கள் மைனோரிட்டி ஆட்சியை நிகழ்த்துவது சிறந்த முடிவாக அமையாது என்பதை நன்கு உணர்ந்தனர். வேற்று மொழியுடனும், மதத்துடனும் ஒரு நாட்டை ஆள்வது கொதிக்கும் எண்ணெய்யில் தண்ணீர் விழுவது போன்றது என்பதை புரிந்துகொண்ட களப்பிரர்கள் தனியாட்சி முறையை கைவிட்டு, முடிமன்னர்களை எதிர்த்த சிற்றரசர்கள், புலவர்கள், எண்பேராய மற்றும் ஐம்பெருங்குழு உறுப்பினர்களை இணைத்து ஒரு கூட்டாட்சியை உருவாக்கினார்கள். இவர்களில் பின்வரும் சிற்றரசர்கள் முக்கியமானவர்கள்.

  • தஞ்சாவூரை ஆண்ட முத்தரையர்
  • கொடும்பாளூர் இருக்கு வேளிர்கள்
  • பழுவூர் பழுவேட்டரையர்
  • களக்குடி நாட்டு அரையர்கள்
  • குண்டூர் சிற்றரசர்கள்

இருண்டகாலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் குறித்து பெரிதாக ஒன்றும் தெரிவதில்லை.  கி.பி 470 இல் வச்சிரதந்தி தன்னுடைய அபிதாமாவதாரம் நூலை பூம்புகாரில் இயற்றும் போது உறையூரை தலைநகராக கொண்டு அச்சுதன் (அச்சுதக்களப்பாளன்) என்பவன் ஆட்சி செய்ததாக கூறுகிறார். பெரிய புராணத்தில் கூறப்படும் கூற்றுவ நாயனார் ஒரு களப்பிர அரசர் ஆவார். கூற்றுவர் சோழர்களின் மணிமுடியை அணிந்து சோழநாட்டை ஆட்சி செய்வதற்கு எண்ணி மணிமுடியை வேண்டினார். சோழர்களின் மணிமுடியானது தில்லைவாழ் அந்தணர்களிடம் காலம்காலமாக பாதுகாக்கப்பட்டு வந்தது. கூற்றுவன் சோழநாட்டின் அரசனாக இருந்தாலும் ஒரு வந்தேறி என்பதால் சோழமணிமுடியை மன்னனிடம் தரமறுத்தனர். சிறிது காலத்தின் பின்னர் அவ்வந்தணர்கள் சேரதேசம் சென்றுவிடவே கூற்றுவன் சோழமணிமுடியை குறித்தான தன் எண்ணத்தை கைவிட்டான்.

களப்பிரர்கள் பாண்டியர்களின் இரட்டை கயல் சின்னம், சோழர்களின் வேங்கை சின்னம், சேரர்களின் விற்ச்சின்னம் ஆகியவற்றையே தங்களின் சின்னங்களாக ஏற்று நாட்டை ஆட்சி செய்தனர். பூம்புகார், மதுரை உக்கிரன் கோட்டை ஆகிய நகரங்கள் தலைமை நகரங்களாக விளங்கின. மேலும் விஜயமங்கை, புல்லமங்கை, பூதமங்கை ஆகிய நகரங்கள் முக்கிய  ஸ்டார்ட்டேஜிக் சென்டர்களாக அமைந்தன. முக்கியமான படைப்பிரிவுகள், அரசநிறுவனங்கள் என்பன இங்கேயே அமைந்திருக்க வேண்டும். நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருந்த காஞ்சிபுரம் களப்பிரர்கள் ஆட்சியின் மணிமுடியென ஒளிவீசியது. முதன்முதலில் தமிழ் வட்டெழுத்து கொண்ட கல்வெட்டுக்களை உருவாக்கி தந்தவர்கள் களப்பிரர்களே. அதுவரை இருந்த தமிழ்பிராமி எழுத்துக்கள் வழக்கொழிந்து தமிழ் வட்டெழுத்துக்கள் உருவானது. இவ்வட்டெழுத்துக்களே தற்போது தமிழ் எழுத்துக்களுக்கான அடிப்படையாக உள்ளது. இவர்களின் கல்வெட்டு முறையை அடியொட்டியே பல்லவர்களுக்கு, பாண்டியர்களும், சோழர்களும் தங்கள் கல்வெட்டுக்களை அமைத்துக்கொண்டனர்.

அத்தி கோசம் யானைப்படையும், நாற்பாத்தினைஉள்முனையர்வலைஞ்சியர் ஆகிய காலாட்படைகளும் களப்பிர அரசில் விளைந்த வீரப்படைகளாகும். கடாரம் கொண்ட சோழர்களுக்கு முன்னோடியாகவும், சங்ககால வழக்கத்தை தொடரும் வண்ணமாகவும் வலுவான கடற்படையை களப்பாள அரசு பேணிவந்தது. களப்பிரரின் ஆட்சிக்காலத்தில் நாடிழந்த பாண்டிய அரசர்கள் சில கிளர்ச்சிகளை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். எனினும் அவற்றை களப்பிர அரசு வெற்றிகரமாக முறியடித்து. சோழ அரசர்கள் தங்கள் முடியை தில்லைவாழ் அந்தணர்களிடம் ஒப்படைத்துவிட்டு பதுங்கிவாழ தங்களை பழக்கப்படுத்தி கொண்டனர். சங்ககாலத்தில் பிரம்மதேயங்கள் என்ற பெயரில் மக்களின் விளைநிலங்களையும் குடித்தன பூமியையும் கையகப்படுத்தி வாழ்ந்துவந்த பிராமணர்களின் பிரம்மதேயங்களை பறிமுதல் செய்து மீண்டும் மக்களின் பாவனைக்கு வழங்கினார்கள். இந்தியா முழுவதும் அக்காலத்தில் பரவியிருந்த பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிரான புரட்சிகரமான செயலாக இது அமைந்தது. வெள்ளைத்தோல் பிராமணர்களை எதிர்த்து களப்பிரர்கள் மேற்கொண்ட இந்த ஹீரோயிசம் மக்களை அவர்கள் பால் ஈர்த்துக்கொண்டது. மக்களின் மத்தியில் களப்பிரரின் கோன்மை புகழ் பெற்ற அதேவேளையில், பார்பனரின் பார்வையில் இது மிலேச்சனின் கோண்மை என ஆனது.யானைக்கொரு காலம் பூனைக்கொரு காலம்  என வஞ்சம் தீர்த்துக்கொள்ள ஒரு காலத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

வாழ்வியல்

மக்களின் வாழ்வு முறைகளில் பெரும் மாற்றங்கள் என எதுவும் நிகழவில்லை. தன்னிறைவான பொருளாதார முறை தொடர்ந்துவந்த நிலை இருந்தது. வைதீக மதத்தின் வீச்சம் சோபையற்று போக பௌத்தமும், சமணமும் அதை நிரப்பலாகின. வர்ணாசிரம முறையை உட்புகுத்துவதன் மூலம் தங்களின் இருப்பை உறுதிப்படுத்த திட்டமிட்ட பிராமண சித்தாந்தத்தால் அதிருப்தி கொண்டிருந்த தென்னகத்தோரை, யாவரும் சமம் என்ற நோக்கும் எளிமையும் நிரம்பியிருந்த பௌத்தமும் சமணமும் அதிகமாக கவர்ந்தன. எனினும் பெண்களின் நிலை பெரிதாக மாற்றம் பெறவில்லை. குடும்பப்பெண்கள் வெறுமனே குழந்தைகள், கணவன் ஆகிய நிலைகளோடு இருந்து விட்டனர்.  மனைவியரிடம் மனம் நிறையாத ஆண்கள் விலைமகளிரை அணுகும் பழக்கமும் தொடர்ந்தது.

தற்காலத்தை போல மஜெஸ்டரேட் நீதிமன்றாகளோ, காவல் நிலையங்களோ அக்காலத்தில் இருக்கவில்லை. அரசனே நீதியின் காவலனாக இருந்தான். ஆனால் அவர் சுப்ரீம் கோர்ட், தொட்டதற்கெல்லாம் சுப்ரீம் கோர்ட் செல்ல முடியாது என்பதால் கிராமங்கள் ரீதியாக பஞ்சாயத்து சபைகள் இருந்தன. பெரிய ஆலமரம், வெற்றிலையை குதப்பிக்கொண்டிருக்கும் முறுக்கு மீசை நாட்டாமை, நாட்டாமைக்கு ஒரு செம்புதூக்கி, நாலு பெரியமனுஷர்கள், இரண்டு வழக்காடிகள், இருநூறு வெட்டிப்பயலுகள் என பாரதிராஜா படத்துக்கு நிகராக கற்பனை செய்வது பொருந்தாது. பஞ்சாயத்து இடங்கள் கிராமத்தில் அமைந்த கோவில்களே. அவைகள் சபை எனப்படும், சபையின் தலைமையாக கிராம தேவதையே நின்றது. சங்ககாலத்தில் சாஸ்தா எனப்பட்ட ஐயனார் சபாபதியாக சேவையாற்றினார். களப்பிரர் ஆட்சியில் சாஸ்தாவுக்கு சப்போர்ட்டாக தாரா தேவி என்றொரு தெய்வம் வந்தது. இவ்வாறு கிராமங்கள் தோறும் சபைகள் செயல்பட்டு வந்தது.

கடல் வணிகத்தை பொறுத்தமட்டும் பௌத்தர்களே அதிகம் ஈடுபடலாயினர். கிழக்கே சீனதேசம் முதல் மேற்கே ரோமானிய சாம்ராஜ்யம் ஈறாக அனைத்து அரசுகளுடனும் விரிவான வணிகம் நடைபெற்றது. மட்பாண்டங்களும், மதுக்குடுவைகளும் களப்பாளர் நாட்டிற்க்கு இறக்குமதியாயின. சமணத்தின் கோட்பாட்டின் படி கடல் தாண்டுவது பாதகம் என்பதால் தரைவழி வணிகத்தில் சமணர்கள் செழிப்புற்றனர். சமகாலத்தில் நிலவிய சாதவாகன பேரரசு நாத்திக கொள்கைகளை ஆதரித்தமையால் தரைவழி வணிகர்களான சமணர்களால் அதிகம் லாபத்தை காணமுடிந்தது.

நாத்திகம்

நாஸ்திகம் (नास्तिक) என்ற சமஸ்கிருத சொல்லின் பொருளானது ‘வேத எதிர்ப்பு’ என்பதாகும். வைதீக கொள்கைகளால் கட்டுண்டு துன்புற்ற சமூகத்தை விடுவிக்கும் நோக்குடன் சித்தார்த்த கௌதமரால் பௌத்தமும், இருபத்து நான்கு தீர்த்தங்கர்களின் வழியே சமணமும் நிறுவப்பட்டன. களப்பிரர்கள் ஆட்சியில் இவை தென்னகம் முழுவது மிகவும் சிறப்புற்றன. சமணத்தை காட்டிலும் பௌத்தம் அதிக செல்வாக்குடன் திகழ்ந்தது. தியானத்தையே அடிப்படையாக கொண்ட தேரவாத பௌத்தம் ஆரம்பகாலத்தில் வேகமாக பரவியபோதும், பிற்காலத்தில் தெய்வம் இல்லாத ஒரு மார்க்கத்தை பின்பற்ற மக்கள் தயக்கம் காட்டினர். எனவே புத்தருக்கான சிலைகளும், போதிசத்துவர் சிலைகளும் ஆசியாமுழுவதும் தோற்றம் பெற்றன. இவ்வுருவ வழிபாடு மகாயானம் எனப்பட்டது.  மகாயான பௌத்தம் தமிழகத்தில் தலைதூக்கியதும் இந்நாட்களிலேயே. அக்காலத்தில் தமிழகத்தில் அமையப்பெற்ற விகாரைகள் ‘தேவகுலம்’ என அறியப்பட்டன. புத்தர் அல்லது அவரது முக்கிய சீடர்களின் அஸ்தியின் மீது விகாரைகளை கட்டுவதே பௌத்த மரபாக இருந்தது. களப்பிர ஆட்சியில் விளங்கிய விகாரைகளில் சிறப்புற்றன சில

  • பூலாங்குறிச்சி தேவகுலம், இது களப்பிரரின் கடற்படை தலைவனால் உண்டாக்கப்பட்டது.
  • கரூர் அருகில் அமைக்கப்பட்ட தேவகுலம்
  • கொங்குநாட்டின் முத்தூற்றுகூட்டம் அமைந்த தேவகுலம்
  • மதுரை நகரில் அமைந்த தேவகுலம்
  • சங்ககால தேவகுலமான புகார் தேவகுலம்
  • நாகைப்பட்டினம் சூடாமணி விகாரம்

சமணர்கள் பெரும்பாலும் மலைஉச்சிகளில் வாழ்வதையே நெறியாக கொண்டவர்கள். அவர்களின் வானியல் ஆய்வு, கருத்தாக்கம், மருத்துவம் ஆகிய தேடல்களுக்கு மலைகள் தேவையானது. எனவே சமணர்கள் இருப்பிடங்கள் மலைகளில் அமைந்தன.

  • மதுரைக்கு வடக்கே உள்ள அரிட்டாப்பட்டி மலை, இங்கு சமண தீர்த்தங்கர்களில் ஒருவரான அரிட்டநேமி(நேமிநாதர்) தங்கியதாக நம்பிக்கை
  • தூத்துக்குடி அருகே வெட்டுவான் கோயில் பகுதியில் அமைந்த மலைக்குன்று.
  • ஆனைமலை
  • மதுரை அழகர் மலை, தற்கால கள்ளழகர் கோவில்
  • பரங்குன்றம், தற்கால திருப்பரங்குன்றம்
  • கழுகு மலை
  • தமிழகத்தின் எல்லோரா என வர்ணிக்கப்படும் சித்தன்னவாசல்

ஆகிய பகுதிகள் களப்பிரர் காலத்தில் சமணர்களின் முக்கிய மையங்களாக திகழ்ந்தன. கி.பி 470 இல் வச்சிரதந்தி என்ற சமணர் திரமிளசங்கம் அமைத்தது தமிழகத்தில் சமணத்தின் எழுச்சியை உண்டாக்கியது.

கல்வி:கேள்வி:கலை

பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கும் போது, முன்னைய அரசின் திட்டங்கள் கைவிடப்பட்டு அவற்றுக்கு பிரதியீடாக வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். வெறும்5 ஆண்டு ஆட்சியிலேயே திட்டங்கள் புதிது புதிதாக தோன்றும் போது, நிலையான ஒரு அரசை உருவாக்கிய களப்பிரர்கள் பல மாற்றங்களை உருவாக்கிச் சென்றது இயல்பே.  களப்பிரர்கள் ஆட்சியில் மதுரையில் கொழுவீற்றுரிந்த கடைச்சங்கம் பொலிவிழந்து போகலானது. பாண்டியர்களின் குலஉரிமை போன்றான சங்கத்தை களப்பிரர்கள் கைவிட்டது ஆச்சரியத்துக்குரியது அல்ல. களப்பிரர் தாய் மொழி பிராகிருதம் அல்லது பாலி மொழியாக இருந்தது. எனினும் களப்பிரர் ஆட்சியில் தமிழ் மொழியும்,தமிழ் கலைகளும் புனர்ஜென்மம் பெற்றன. கல்விக்கண் திறந்தனர் களப்பிர அரசர்கள். தமிழை தங்கள் தாய்மொழியாக ஏற்றனர்.

‘எழுதறிவித்தான் இறைவனாவான்’ என்ற வாக்கு மெய்யெனில் களப்பாளர் அனைவரும் மக்களின் கண்கண்ட தெய்வங்களே. சங்கம் வளர்த்து மூவேந்தர்கள் தமிழ்வளர்த்த போதும் மக்களிடையே நிலவிய கல்வியறிவு எத்தகையது என்பது வரையறைப்பதற்கு கூடியதாக இல்லை. ஆனால் களப்பிரர் ஆட்சியில் இந்நிலை மாறி அனைவருக்கும் கல்வி கிடைக்குமாறு வகைசெய்யப்பட்டது. இதற்கான பிரதான உந்துதல் களப்பிரர் கைக்கொண்ட பௌத்தமும் சமணமுமே. கருத்தியல், வாதம், வானியல், வைத்தியம் என அனைத்து துறைகளிலும் பௌத்த பிக்குகளும், சமண துறவிகளும் அறிவும் ஆர்வமும் கொண்டிருந்தனர். பௌத்த பிக்குகள் கடல்வழி பிரயாணம் மூலம் கிழக்கு தேசங்களுக்கு சென்று புதிய சித்தாந்தங்களையும், அறிவியலையும் கோணர்ந்த வண்ணம் இருந்தனர். சமணர்கள் தம்மிடையே இருந்தவண்ணம் ஆலோசனைகள் கூட்டி புதிய கண்டுபிடிப்புகளில் மூழ்கினார்கள். கச்சி என அறியப்பட்ட காஞ்சிமாநகர் கல்வியின் உச்சமாக திகழ்ந்தது. பௌத்த ஆராமைகளும், சமணப்பள்ளிகளும் காணும் திசையெங்கும் விரிந்தவண்ணம் சென்றன. வாதமும், ஞானமும், கலைகளும், கல்வியும் செழிப்புற்றன. காஞ்சிக்கடிகை நிகரில்லா செல்வாக்குடன் திகழ்ந்த பௌத்த கல்விக்கூடமாக இருந்தது. தற்கால யூனிவேர்சிட்டி, கேம்பஸ் ஆகியவற்றுக்கு திறமையின் அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவது போல நாடளாவிய ரீதியில் திறம் மிக்க மாணவர்கள் அனைவரும் கடிகைக்கு அனுமதி பெற்றனர். களப்பிர அரசின் ஆலோசனைக்கூடமாக திகழ்ந்த இது, பிற்காலத்தில் பல்லவர்களின் வாரிசுரிமையை தீர்மானிக்கும் அளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டது. தற்கால ஆட்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிப்பது போல, அக்காலத்தில் கல்விமான்கள் தெரிவு செய்தனர் போலும்.  உலகப்புகழ் பெற்ற குங்-ஃபூ தமிழனான போதிதர்மர் வாழ்ந்து சீனதேசம் சென்றதும் இக்காலத்தில் நடைபெற்றதே. தின்னனார், தர்மபாலர், சூனியவாதத்தின் ஸ்தாபகரான நாகர்ஜுனர் ஆகியோரும் காஞ்சியில் தங்கி போதனைகளை செய்தனர்.

தமிழ்த்தாய் சிலம்பை மட்டும் அணிந்திருக்கையில் அவளுக்கு மேகலையும், சிந்தாமணியும் சூட்டி அழகுபார்த்தவர்கள் களப்பிரர்கள். இரட்டை காப்பியங்கள் என அறியப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் பிந்தையது களப்பிரர் ஆட்சியில் எழுதப்பட்டது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவகசிந்தாமணியும் இக்கால சமணர்களின் கைவண்ணமாக உதித்ததே. மேலும் எலிவிருத்தம், கிளிவிருத்தம், நரிவிருத்தம், பெருங்கதை ஆகிய இலக்கியங்கள் சமைக்கப்பட்டதும் இந்நாட்களிலேயே. கி.பி 407 இல் புத்ததத்தர் எனும் பிக்கு கூத்தமங்களத்தில் இருந்து அபிநயவிதாரம், புகாரில் இருந்து அபிதாம அவதாரம் ஆகிய இரு இலக்கண நூல்களை வடித்தார். நந்ததத்தம், காக்கைபாடனியம், பல்காப்பியம், பல்காயம் ஆகிய இலக்கண நூல்களும் எழுதப்பட்டது. விருத்தம்தாளிசைதுறை ஆகிய செய்யுள் வடிவங்களை தந்து தமிழ் மொழியை புதியபாதைக்கு இட்டுச்சென்றவர்களும் இவர்களே.

கலைமகள் நிச்சயம் களைப்பிரர் ஆட்சியில் களிகூர்ந்திருப்பாள். காணும் திசையெல்லாம் கானமும், ஆடலும் நிறைந்து மக்களின் மனதை நிரப்பியது. பரத்தையர்கள் என அறியப்பட்ட விலைமகளிரே நடனம் முதல் பாடல் வரை தேர்ச்சிபெற்றிருந்தனர். எனவே குலப்பெண்கள் நடனமும் கானமும் கற்பதற்கு தடை விதிக்கப்படலானது. பிற்காலத்தில் சம்பந்தர் தன் பதிகத்தில் திருவையாறின் ஒவ்வொரு வீட்டிலும் சதங்கை ஒலியும், பாடலொலியும் கேட்கும் விந்தைக்குறித்து பாடலானர். அங்ஙனம் திருவையாறு தென்னக கலைகள் கருவறையாக மாறியதற்கான அடித்தளம் களப்பிரர்கள் இட்டுச்சென்றதே. கொங்குநாட்டின் (அரசலூர்) பகுதிகளில் ஆடப்படும் கூத்துவடிவங்களின் சொற்கட்டுகளில் ஒன்றான “தா-தை” என்ற கட்டு, மணிவக்கன் தேவன் சாத்தான் என்றவாரல் ஆக்கப்பட்டது. இதுதவிர்த்து இன்னும் சிலக்கூத்து வடிவங்களும் எழலாகின.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

பகுதி 3 | இருண்டது காலம்

‘என்னை வாழவைத்த தெய்வங்களே! நீங்கள் இல்லாமல் நானிங்கு இல்லை’ ‘மக்களின் சேவையே மகேசனுக்கான சேவை’ ‘உயிரைக்கொடுத்தேனும் மக்களின் துயர்துடைப்பேன்’ ‘ஊழல் இல்லாத தேசத்தை உண்டுபண்ணுவோம்’ என பற்பல நம்பிக்கை வார்த்தைகூறி ஓட்டுக்களை வெல்லும் அரசியல்வாதிகள், பதவியேற்றதும் தன்குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே முனைப்புடன் இறங்குவார்கள். உண்மையிலேயே மக்களின் நலனுக்காக ஒரு தலைவர் பாடுபட்டாலும் கூட அவருக்கு பின்வருவோர் ‘ஒற்றை ரூபாய் போதும்’ சபதம் செய்துவிட்டு கோடியில் புரண்டுகொண்டிருப்பார்கள். இதே போன்றதொரு நிலைமை எளிமையின் வடிவமாய் திகழ்ந்து வந்த புத்தபிக்குகளிடமும் உண்டாகியபோது களப்பிரர் தம் ஆட்சியை முடித்துக்கொள்வதற்கு காலம் வந்துவிட்டது என்பதை முன்னறிவித்தது.

களப்பிரர் ஆட்சியை தென்னகம் ஏற்றதற்கு பிரதான காரணமாக அமைந்தது பிராமணர்களின் போக்கு. வேள்விகளுக்காக விலைநிலங்களுடன் கூடிய கிராமங்களை பிரம்மதேயமாக பிராமணர்கள் பெற்று மக்களின் உழைப்பை சுரண்டியது மன்னர்க்கும், மக்களுக்குமான தொடர்பையே அறுத்தது. வேளாளரும் வணிகரும் வியர்வை சிந்தியுழைத்ததை, விரயம் செய்யும் விஷமிகளை களப்பிரர்கள் எதிர்த்தது, மக்களின் மனதை கவர்ந்தது. காலப்போக்கில் களப்பிரர்கள் ஆட்சியும் அதே அவலத்தை மீண்டும் நிகழ்த்திகாட்டியது மக்களின் முகத்தை சுளிக்கவைத்தது.

சமணர்கள் புறஉலகில் இருந்து தங்களை விடுத்துக்கொண்ட அளவுக்கு பௌத்தர்கள் செய்யவில்லை. தாங்கள் வேரூன்றும் நாடுகளில் தங்களை அசைக்கமுடியாத சக்திகளாக மாறும் உத்தியை அவர்களின் மூளை கொண்டிருந்தது.

சாணக்கியர் தன்னுடைய அர்த்தசாஸ்திரம் என்ற புகழ்பெற்ற நூலில் பௌத்தர்களை கூறியதாவது

‘அரசே! பௌத்தர்களை நாட்டிற்கு வெளியே உள்ள புறம்பாடிகளில் மாத்திரமே தங்குவதற்கு அனுமதி வழங்கு. அவர்கள் தங்கும் விகாரைகளில் சொத்துக்களை சேரவிடாதே. அவ்வாறு சொத்துக்கள் சேருமெனில் அவற்றை நீ பறிமுதல் செய்துகொள்’  காரணம் இல்லாமல் இங்ஙனம் கூறுவதற்கு வாய்ப்பில்லை. பௌத்தர்கள் குறித்து அவர் ஏதோ ஒன்றை அறிந்தமையாலேயே அரசனை எச்சரித்துள்ளார். களப்பிரர் ஆட்சியில் அந்த எதிர்வுகூறல் உண்மையானது. ‘மழைக்காலங்களில் ஒதுங்குவதற்காக விகாரைகளை கட்டிக்கொள்ளுங்கள்’ என கௌதம புத்தர் கூறிச்சென்றார். அவரின் காலத்துக்கு பின்னர் விகாரைகள் அரசின் நிலவுடைமை நிறுவனங்களாகின. அளவில்லா செல்வமும், படைகளும், அதிகாரமும் விகாரைகளை நிரப்பின. மன்னரும் கையேந்தும் அளவுக்கு விகாரைகள் நுணுக்கமாகவும், செல்வசெழிப்புடனும் விளங்கின. பூலங்குறிச்சியில் அமைந்த விகாரைக்கு பாண்டிநாட்டில் இருந்தும், கொங்குநாட்டில் இருந்தும் திரட்டப்பட்ட மொத்த வரியும் சென்று சேர்ந்தன. பிரம்மதேய நிலங்களை பறித்து மக்களிடம் ஒப்படைத்து போலவே விகாரைகளுக்கும் நிலங்களை வழங்கினார்கள்.

மனம் எனும் மாயக்குரங்கு மீண்டும் பழைய கிளைக்கே தாவிற்று. எளிமையின் மறுவுருவமாக வெளியே காட்டிக்கொண்டு, உள்ளே நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியுடனும், செல்வத்துடனும் நடந்த தன்மை மக்களின் மனதிலும், சிற்றரசர்கள் மத்தியிலும் மீண்டும் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. ‘புறத்தியான் ஒருவன் நம்செல்வங்களை இங்ஙனம் உரிமைகொண்டாடுவதற்கு, நம்மன்னர்களே ஆண்டுவிட்டு போகட்டும்’ என நினைக்கலாயினர் குடிகள்.

இயல்புடன் தம் தெய்வங்களை வழிப்பட்டுவந்த பழந்தமிழரால் ஈர்க்கப்பட்டு களப்பிர அரசர்கள் கந்தனையும், கொற்றவையையும் வழிபடலாயினர். தங்களின் நாணயங்களின் ஒரு புறம் குமரனை பதிக்கவும் செய்தனர். இது பௌத்த பிக்குகள் விரும்பவில்லை. மேலும் இயல்புவழிப்பாட்டில் இருந்து நிறுவனமயப்படுத்தப்பட்ட வழிபாட்டு முறையை களப்பிரர்கள் உட்புகுத்தியதால் மக்கள் மனதில் அச்சத்துடன் கூடிய எதிர்ப்பு ஒன்று உருவானது. இது களப்பிர அரசின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.

சனாதன சீர்திருத்தம்

வடக்கிலும்,தக்காணத்திலும் பௌத்தமும் சமணமும் பல அரசுகளால் போஷிக்கப்பட்டன. கி.மு 4ம் நூற்றாண்டு முதலே அசோகரின் ஆதரவால் முன்பு எப்போதும் இல்லாத பெருமையை பௌத்தம் அடைந்தது. இலங்கையிலும், சீனத்திலும் பௌத்தம் வைரஸ் காய்ச்சல் போல வேகமாக பரவியது. பௌத்தத்தின் கொள்கைகளுக்கு நிகரான கொள்கைகளையும், ஆகம முறைகளையும் கொண்டிருந்த சமணமும் மிகவேகமாக பரவியது. இதன் விளைவால் வைதீகம் தன்னை தானே புனருத்தாரனம் செய்துகொண்டது.

வேதகாலத்தில் ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்த தருணத்தில் இமாலய பழங்குடிகளுடன் பலபோர்கள் நிகழ்ந்தன. இந்த இமாலய பழங்குடிகள் தங்கள்மீது சாம்பலை பூசிக்கொண்டும், மிருகத்தோலை உடுத்திக்கொண்டும், சடைமுடியுடனும் இருந்த மூர்க்கர்கள் என்று வேதங்கள் கூறுகின்றன. இவர்களின் இறைவனே சிவன். பொதுவான எதிரியொருவன் தோன்றும் போது பிறர் அனைவரும் கூட்டுசேர்ந்துக்கொள்வது இயல்பே. அதன் பிரகாரம்  வைதீக கடவுள்களான இந்திரனும் அக்னியும், வருணனும் தம் புகழை இழக்க இமாலயபழங்குடி மக்களின் தலைவரான சிவனும், வேத நாயகர்களாக உருவாக்கப்பட்ட நாராயணனும், பிரம்மனும் முதன்மை பெறலாகினர். பௌத்தமும் சமணமும் போற்றிய ஜீவகாருண்யமும், சாத்வீகமும் புதிய சனாதன மதத்தின் அடிப்படை கொள்கைகளாயின. திருவிழாக்கள், உருவ வழிபாடு, பக்தி இயக்கம் என மக்களுக்காக தன்னை எளிமையாக்கிக்கொண்டது வைதீகம். சிவனுக்கென பலியாக்கப்பட்ட உயர்தர காளைகள் சிவனின் வாகனமாக்கப்பட்டது. அந்த அளவுக்கு சனாதன மார்க்கம் தன்னை சீர்திருத்திக்கொண்டது.

இவ்வாறு வேததர்மம் தன்னை சனாதன தர்மமாக சீர்திருத்திக்கொண்ட சமயத்தில் பௌத்தர்கள் கலையில் மறுமலர்ச்சி செய்த  குஷணர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. பலமான பௌத்த அரசு வீழ்ச்சியடைந்தது பிராமணர்களுக்கு வசதியானது. குஷணர்களை தொடர்ந்து ஆட்சியமைத்த பாரசிவர்கள்,வாகடகர்கள் ஆகியோர் சிவனை ஏற்றுக்கொண்டு தீவிரமாக சைவத்தை பின்பற்றினார்கள். வடக்கே மெல்லமெல்ல நாத்திக கோட்பாடுகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தன. கி.பி இரண்டாம் நூற்றாண்டில் லகுலீசார் என்பவரால் உருவாக்கப்பட்ட பாசுபதம் என்ற சைவப்பிரிவு சமணர்களையும், பௌத்தர்களையும் அழிப்பதையே நோக்காக கொண்டு செயற்பட்டன. லகுலீசரின் சீடர்கள் காளாமுகம்கபாலிகம் என மேலும் இரண்டு பிரிவுகளை உருவாக்கி நாத்திக வாதங்களை அறுத்தனர்.

களப்பிரர்கள் தமிழகத்தில் ஆட்சியமைத்த வேளையில் வடக்கே இந்தியாவின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் பார்ப்பனிய ஆட்சியான குப்தர்கள் காலம் தொடங்கியது. ‘வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு’ என்றது களப்பிரர் வரலாற்றில் உண்மை. களப்பிரர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஏதோ ஒரு வகையில் துணைசெய்த குப்தர்களும், களப்பிரர் ஆட்சி உருவான அதே காலத்தில் உருவானவர்களே. வலுமிக்க குப்த அரசர்களால் சனாதன தர்மம் தழைத்தத்து. மேலும் களப்பிரர்கள் ஆட்சியமைத்த நூறு ஆண்டுகளுக்கும் மேலான பின்னர் (கி.பி 4ம் நூற்றாண்டின் இறுதி) பல்லவர்கள் என்ற புதிய மன்னர்குலம் தோற்றம் பெற்று வளர்ந்தது. நெல்லூர் பகுதியில் ஆட்சியமைத்த இவர்களில் மூத்தவரான ஸ்கந்தவர்மர் களப்பிரர்களின் மணிமுடியென விளங்கிய காஞ்சிநகரை கைப்பற்றினார். கல்வியில் சிறந்த காஞ்சியை இழந்தமையே களப்பிரர் அரசின் முதல் சரிவாக அமைந்தது. எனினும் பிற்காலத்தில் களப்பிரர் மீண்டும் காஞ்சியை கைப்பற்றினர். காஞ்சி ஒரு இழுபறிநிலையில் இருந்தது. பல்லவர் விஷ்ணுகோபர் காஞ்சியை ஆண்ட வேளையில், 1ம் சமுத்திரகுப்தர் காஞ்சியை தாக்கி வெற்றிக்கொண்டார்.

குப்தர்களின் ஆதிக்கம் இந்தியா முழுவதும் உயர்ந்தது. தமிழகத்திலும் நாத்திகவாதிகளான களப்பிரர்களுக்கு எதிரான ஒரு மனோநிலை உருவாகி வலுப்பெற்றது. நிலவிய சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு பல்லவர்கள் தலைவரான சிம்மவிஷ்ணு களப்பிரர் ஆட்சியில் இருந்த வடக்கு தமிழகம், சோழநாடு ஆகியவற்றை தாக்கினார். களப்பிரர் ஆட்சியால் மனக்கலக்கம் கொண்ட சிற்றரசர்கள் தஞ்சாவூர் முத்தரையர் தலைமையில் பாண்டிய அரசன் கடுங்கோனின் படைகளுடன் அணிவகுத்து பாண்டியநாட்டையும் அதன் சுற்றுவட்டத்தையும் விடுவித்தனர். பல்லாண்டு வஞ்சத்தை தீர்க்கும் வண்ணமாக களப்பிரர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். ஆனால் அழிக்கப்படவில்லை. காவேரிக்கரையில் ஒரு சிற்றரசென வாழுமாறு பாண்டியர்களும், பல்லவர்களுக்கு விட்டுச்சென்றனர். எண்ணம் தோன்றும் போதெல்லாம் அவர்களை தாக்கி மகிழ்வுறுவதற்கு போலும். மரணத்தை காட்டிலும் கொடுமையானது உரிமைகளும், கௌரவமும் பறிக்கப்படுவது. அத்தகைய குரூரநிலையை நம்மன்னர்கள் களப்பிரருக்கு விட்டுச்சென்றனர்.

வஞ்சம் தீர்த்தல்

களப்பிரர் ஆட்சியில் ஒடுக்கப்பட்டிருந்த பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்ததும் களப்பிரர் புகழ்ப்பாடிய அனைத்து கட்டிடங்களும் தரைமட்டமாகின. பூலங்குறிச்சியில் அமைந்த விகாரை தடம் தெரியாது அழிக்கப்பட்டது. புத்தசிலைகள் உடைத்தெரியப்பட்டன. சமணம், பௌத்தம் ஆகியவற்றால் அதிகம் பாதிப்புற்ற பிராமணர்களின் கைங்கரியமாகவே இவைகள் நிகழ்த்தப்பட்டன. காஞ்சி பல்லவர்கள் ஆட்சிக்குள் வந்த பின்னும் அங்கு இருந்த பௌத்த விகாரைகள், கடிகைகள் எல்லாம் தன்னியல்புடன் செயற்பட்டன. எனினும் அவற்றிடையே புதிய வேத கல்விக்கூடங்களும், சமஸ்கிருத மொழி கடிகைகளும் தோற்றம் பெற்றுவந்தன. காஞ்சிக்கடிகையில் பிராமணர்களும், பல்லவ அரசகுடியில் பிறந்த பீமவர்மரின் வாரிசுகளும் உறுப்பினர்களாயினர். மெல்ல மெல்ல பௌத்தவாதம் நீக்கப்பட்ட வண்ணம் சென்றது.

களப்பிரர்களால் நிலம் இழந்த பிராமணர்கலின் வாரிசுகள் பலர் பிற்கால பாண்டிய பல்லவர்களிடம் முறையிட்டு வேண்டி அந்நிலங்களை மீண்டும் வசப்படுத்திக்கொண்டனர். இந்நிலங்களை மீட்டு பிராமணர்களுக்கு ஒப்படைப்பது பெரும் புண்ணியமாக கருதினர் மன்னர்கள். ஐடில வர்மன் என்ற பாண்டியன், காமாக்கினி நற்சிங்கன் எனும் பிராமணனுக்கு பிரம்மதேயத்தை மீட்டளித்ததன் முகமாக வேள்விக்குடி செப்பேடுகளை வெளியிட்டான். தமிழக வரலாற்றில் இது இன்னும் முதன்மை செப்பேடாக உள்ளது. தொடர்ச்சியாக பல பாண்டிய அரசர்கள் இங்ஙனம் பிரம்மதேயங்களை மீட்டு பிராமணர்களுக்கு கொடுத்தவண்ணம் சென்றனர். களப்பிரர் ஆட்சியில் ஸ்டராடெஜிக் மையங்களாக விளங்கிய கூதமங்கை, புல்லமங்கை, விஜயமங்கை ஆகிய ஊர்கள் முழுவதும் பிராமணர்களுக்கு சமர்ப்பணமாகின. அதைதொடர்ந்தே அவ்வூர்கள் மங்களம் என்ற புதிய சேர்க்கையுடன் கூதமங்களம், விஜயமங்களம் என பெயர் மாற்றம் பெற்றன. சமணர்களும் பௌத்தர்களும் தங்கிய மடங்கள் கோவில்களாக்கப்பட்டன. அழகர்மலையை விஷ்ணுவும், பரங்குன்றதை முருகனும், அரிட்டாபட்டியை சிவனும் பங்கிட்டுக்கொண்டனர்.

சிற்றரசர்களாக சிறுமையுடன் வாழ்ந்த களப்பிரர் தம் எழுச்சிக்காக குண்டலகேசி, வளையாபதி உள்ளிட்ட காவியங்களை உருவாக்கினர். எனினும் அவ்வெழுச்சியை முளையிலேயே கிள்ளி எறிந்தாற்போல் அக்காவியங்களுடன் சேர்த்து களப்பிர படைகளும் அழிக்கப்பட்டது. ஈழத்தில் நடந்த இனப்படுக்கொலைகள் பற்றிப்பேசும் நம்மவர்கள் ஒரு விடயத்தை அறிந்திருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மதத்தின் பெயரால் நடந்த படுகொலைகள். இவற்றின் உச்சகட்டமாக 7ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கம் மதச்சுத்திகரிப்பை தமிழகத்தில் உண்டுபண்ணியது. நாவுக்கரசரால் பல்லவன் 1ம் மகேந்திர வர்மரும், சம்பந்தரால் நின்றசீர் நெடுமாறனும் சைவ சமயத்தை தழுவினர். இதன் விளைவாக தமிழகத்தில் எஞ்சிய சமணமும், பௌத்தமும் கூட நலிந்து போனது. நன்னூல் எழுதி தமிழ்வளர்த்த சமணர்கள் எண்ணாயிரம் பேர் கழுவேற்றி கொலைசெய்யப்பட்டனர் நின்றசீர் நெடுமாறனின் ஆட்சியில் அதுவும் உமையாளிடம் பாலுண்ட சம்பந்தரின் கண் முன்னே!

இருண்டது காலம்

களப்பிரர்; சங்கத்துடன் சுருங்கிப்போன தமிழ்த்தாய்க்கு ஐம்பெருங்காப்பியம் என அணிசெய்து அழகு பார்த்தவர்கள். நன்னூல் என இலக்கணம் அமைத்து தமிழை காத்தவர்கள். எண்ணில்லா தமிழ் பொக்கிஷங்களைக்கொண்டு தமிழ்க்கருவூலத்தை நிறைந்தவர்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்திப்பாசுரம் பாட இசைக்களத்தை வலுவூட்டிவிட்டு சென்றவர்கள். கல்விக்கண் திறந்து அறிவை போற்றியவர்கள். முடியுடை மூவேந்தரையும் ஒற்றைக்களத்தில் வென்றவர்கள். மக்களின் நிலங்கள் மக்களையே சாரும் என முழக்கமிட்டு கூறியவர்கள். சாதிப்பாகுபாடு என்ற சாத்தானை அழித்தவர்கள். அட்டைகள் போல தான் உழைக்காமல் பிறரின் உழைப்பில் வயிறுவளர்த்த கயவர்களுக்கு பாடம் புகட்டியவர்கள். சங்ககால மன்னர்களை முதன்முறை வென்ற புறதேசத்தவர்கள். தாய்மொழி வேறாகினும் தமிழ்வளர்த்த மாந்தர்கள். கைக்கொண்டது வேற்று மதம் என்ற போதும் பிறதை ஒறுக்காத தன்மைகொண்டவர்கள்.

வரலாறு தோறும் வென்றவர்கள் தோற்றவர்களின் பெருமையை அழிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் களப்பிரர் வரலாற்றுக்கு இணையாக இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறு உலகில் மிகச்சொற்பமே. களப்பிரர் எழுதிய காவியங்கள் எரியூட்டப்பட்டும், கட்டிடங்கள் தகர்க்கப்பட்டும், வழிபாட்டுதளங்கள் தடம் மாற்றப்பட்டும் போனது. பல்லவ பாண்டிய வெற்றி எனும் வேள்வியில் பார்ப்பனியத்தால் களப்பிரர் வரலாறு ஆகுதியாக்கப்பட்டது. அதன் கரிப்புகை அவர்களின் ஆட்சியை இன்றளவும் இருண்ட காலம் என்ற பெயரை தாங்கவைத்துவிட்டது. வைதீகத்தை அவர்கள் போற்றியிருந்தால் இந்நேரம் தமிழக வரலாற்றின் பொற்காலமாக அறியப்பட்டு இருப்பார்களோ என்னவோ?

முடிவாக…

எந்த ஒரு விடயத்தையும் நாம் நேசிக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லையுண்டு. எல்லையற்று நாம் செய்யும் அன்பும், பற்றும் நிச்சயம் பிரிதை அழிக்கும். தமிழ் மீது தமிழர்களாக நாம் வைத்திருக்கும் அளவற்ற பற்று சோழர்களையும், பாண்டியர்களையும், சேரர்களையும் மீறி நம் வரலாற்றை பார்ப்பதற்கு விடுவதில்லை. பல்லவர்கள் நம் வரலாற்றுக்கு செய்துவிட்டு போனதையே நாம் அலட்டிக்கொள்ளாத போது களப்பிரரை கண்டுகொள்ளாதது வியப்பில்லை. சமகாலத்தில் பல அறிஞர்கள் தமிழக வரலாற்றின் இருண்ட பக்கங்களை ஒளியூட்டுவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் முயற்சி வெற்றி பெற்றால் தமிழர் வரலாற்றின் மெய்யான சிறப்பு இலகுவில் விளங்கும்.

வரலாறு என்ற தலைப்பை நாம் அணுகும் போதும் நடுநிலையும், நேர்மையும் நிச்சயமாக அவசியம். அப்போதே திருத்தமான வரலாற்றை அறிய இயலும். ஏனெனில் வரலாறு ஒரு சமூகத்தின் அத்திவாரங்கள். https://roar.media/tamil/main/history/histoy-of-kalabhra-dynasty-in-tamil-nadu-part-3

 ஆதாரங்கள்.

  • சமூக ஆய்வுவட்டம், வரலாற்று பேராசிரியர் பத்மாவதியின் உரை

http://samoogaaaivuvattam.blogspot.com/2014/12/30-11-2014.html?m=1

  • இந்திய வரலாறு : டாக்டர் ந. சுப்ரமணியன்
  • பாண்டியர் காலச்செப்பேடுகள் : டாக்டர் மு. ராஜேந்திரன்


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

களப்பிரர் 
https://mukkulamannargal.weebly.com/21-296529952986302129863007299229923021-299729922994300629933009.html

களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

இனக்குழுமம்
தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். வேறு சிலர் மேற்குக் கங்கர்களுக்கும், களப்பாளர்களுக்கும் தொடர்பு காட்ட முயன்றுள்ளனர். பிற்காலத்தில் வட தமிழகத்தில் குறுநில மன்னர்களாக இருந்த முத்தரையர் குலத்தவன் ஒருவன், கல்வெட்டொன்றில், களவன் கள்வன் எனக் குறித்திருப்பதைக் கொண்டு, களப்பிரர்களுக்கும் முத்தரையர்களுக்கும் தொடர்பு காண்பவர்களும் உள்ளனர். கர்நாடகத்தில் கிடைத்த கல்வெட்டுக்கள் சிலவற்றில் கலிகுலன்கலிதேவன் போன்ற பெயர்க் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாலும், களப்பிரர்களும் கலியரசர்கள் எனப்பட்டதற்குச் சான்றுகள் இருப்பதாலும் களப்பிரர் கர்நாடகத் தொடர்பு உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது[1]. மேலும் இவர்கள் கோசர்கள் வழி வந்தவர் என்றும்[2], உழவர்கள் வழி வந்தவர்கள் என்றும் கருத்துகள் நிலவுகிறது.(கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பிரர் என்று மறுவியது)

மொழி
களப்பிரர்களின் மொழிக் கொள்கைகள் பற்றி தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. "அவர்கள் வெளியிடுள்ள காசுகளில் ஒரு பக்கத்தில் பிராகிருதமொழியிலும் மறுபக்கம் தமிழிலும் பெயர் பொறித்துள்ளனர் என்பதனால், களப்பிரர்கள் ஒருவகையான பிராகிருதத்தையே தங்களது பரிமாற்ற மொழியாகப் பயன்படுத்தியிருக்கலாம்."[3]அதே வேளை இக் காலத்தில் தமிழ் மொழி தேக்கம் அடையவில்லை என்றாலும் அவர்கள் தமிழுக்கு ஆக்கம் அளித்தாகவும் தெரியவில்லை என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுகிறார்.

இக் காலத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பெரும்பாலான கல்வெடுக்கள் தமிழ் மொழியில் இருப்பதால், அரச மொழியாக தமிழ் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. எனினும், களப்பிரர்கள் ஆதரித்த பெளத்த சமய நூல்களும் பிற பல நூல்களும் பாலி மொழியிலேயே பெரும்பாலும் எழுதப்பட்டன

சமயம்
களப்பிரர்கள் வைதீக எதிர்ப்புச் சமயமாகிய பெளத்த சமயத்தவர்களாக இருந்தார்கள்.[7] இதர வைதீக எதிர்ப்புச் சமயமாகிய சமண சமயமும் இக் காலத்தில் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்று இருந்தது. எனினும் இவர்கள் வைதீக சமயங்களை எதிர்த்தார்களா என்பது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உண்டு.[8] வரலாற்றாளர் அலைசு ஜஸ்டினா தினகரன் அவர்கள் இந்து சைவர்கள், சமணர் அல்லது பௌத்த சமயத்தினராக இவர்கள் இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்.

காவேரிப்பட்டிணத்திலிருந்து ஆண்ட பிற்கால களப்பிரர்கள் கந்தன் அல்லது முருகனை வழிபட்டதாக அறியப்படுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட தங்களது காசுகளில் மயிலில் அமர்ந்த முருகனின் படிமத்தை பொறித்திருந்தார்கள்

களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)
சங்ககாலத்தின் இறுதியில் தமிழக வரலாற்றில் ஒருவித இருள் சூழ்ந்து கொண்டது. தொன்றுதொட்டு தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர, சோழ, பாண்டியரை களப்பிரர் என்ற ஒரு கூட்டத்தினர் வென்று தங்களது ஆட்சியை நிலை நிறுத்தினர். தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகள் தமிழகத்தை தடுமாறச் செய்த களப்பிரர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே வண்டிவண்டியாக கருத்து வேற்றுமை உண்டு.
ஆனால் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.
களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.
பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.


ஆதவன் தீட்சண்யா - 26.06.2010
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை (25.06.2010), எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ( except Sun & kalaignar TV ? ) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இருபதுக்கும் மேற்பட்ட கட்சித்தலைவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கிய பின் கருத்தரங்கத்தின் தலைவர் கருணாநிதி நிறைவுரை ஆற்றினார். ஆற்றினார் ஆற்றினார், ஆறிப் பழங்கஞ்சாகி சில்லிட்டுப் போகும்வரை ஆற்றினார். தமிழ்மொழியின் நிலையை வரலாற்றுப்பூர்வமாக விவரித்துப் பேசப்புகுந்த கருணாநிதி, “இடையிலே களப்பிரர் ஆட்சி வந்தது. அவர்கள் பாலி மொழிக்கு முன்னுரிமை தந்ததால் தமிழ் பின்னுக்குப் போனது. அதுவொரு இருண்டகாலம்... “ என்று போகிறபோக்கில் சொல்லிப்போனார். களப்பிரர் காலம் பற்றிய கருணாநிதியின் இந்தக்கருத்து எந்தளவிற்கு உண்மையானது?

களப்பிரர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? இங்கிருந்த மூவேந்தர்களையும் வென்று மூன்று நூற்றாண்டுகள் அரசோச்சியது எவ்வாறு என்பவை குறித்து ஒருமித்தக் கருத்து இதுகாறும் எட்டப்படவில்லை. “கி.பி.3ஆம் நூற்றாண்டில்தான் கர்நாடகாவில் நந்திமலையைச் சுற்றி வாழ்ந்த களப்பிரர் என்ற முரட்டுக்குடியினர் மூவேந்தர்களையும் வென்று சுமார் மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்... என்று ஒரு கருத்துள்ளது” ( தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து/ பக்கம்- 7 )

“மதுரையைச் சிறிதுகாலம் ஆண்டுவந்த கருநாடகரே களப்பிரர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது... வேங்கடத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த களப்பிரர்கள் திடீரென்று குடிபெயர்ந்து தெற்கு நோக்கிப் பாய்ந்து பல்லவரையும் சோழரையும் பாண்டியரையும் ஒடுக்கி...” என்கிறார் கே.கே.பிள்ளை ( தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும்/ பக்கம் 184, 185 )

இப்படி களப்பிரர்களை வெளியேயிருந்து வந்தவர்கள் என்று நீலகண்டசாஸ்திரி, ஒளைவை துரைசாமிப்பிள்ளை, மு.அருணாசலம்பிள்ளை, என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்க, களப்பிரர்களின் தோற்றுவாய் குறித்து பர்டெயின் ஸ்டெயின் வேறுவகையாக சொல்வதை தனது பொற்காலங்களும் இருண்டகாலங்களும் என்ற கட்டுரையில் கவனப்படுத்துகிறார் பொ.வேல்சாமி ( தலித் கலை இலக்கியம் அரசியல்- பக்கம் 154-160).

அதாவது, மூவேந்தர்களையும் வீழ்த்துமளவுக்கு அண்டைப்பகுதிகளில் பெரும் படைபலத்துடன் அரசப் பாரம்பரியங்கள் ஏதும் அப்போது இருந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பர்டன் ஸ்டெயின், “களப்பிரர்கள் மையங்களில் உரு'வாகும் அரசு ஆதிக்கங்கள்,மேலும்மேலும் விளிம்புகளிலுள்ள இனக்குழு சமூகங்களை தமது விவசாய விரிவாக்கத்திற்குள் கொண்டு வந்து அவர்களிடமிருந்து உபரிகளை உறிஞ்சுவதென்பது நடைமுறையாகின்றது. பார்ப்பனர்களுக்கு தானமாக அவர்களது நிலங்களும், அரசனுக்கு வரியாக அவர்களது வியர்வையின் விளைபொருள்களும் வன்முறையாக கைப்பற்றப்பட்டன. இதற்கு எதிரான எதிர்ப்பு என்பது தொடர்ந்து விளிம்புகளிலிருந்த அடித்தட்டு மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தது. அரச மையங்களின் விவசாய மயமாக்கலுக்கு எதிரான இனக்குழு மக்களின் இந்த எதிர்ப்பின் உச்சக்கட்டமே களப்பிரர் காலம்...” என்கிறார். பர்டன் ஸ்டெயின் கூற்றுப்படி களப்பிரர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள். அவர்கள் தமிழர்கள்தான் என்று க.ப. அறவாணன் போன்றவர்களும் தெரிவிப்பதாக பொ.வேல்சாமி பதிவு செய்கிறார்.

சரி, களப்பிரர்கள் வெளியிலிருந்து வந்தவர்களா இங்கிருந்தே கிளர்ந்தவர்களா என்பது குறித்து வரலாற்றாய்வாளர்கள் அவரவர் முடிவுகளை சொல்லிக்கொண்டிருக்கட்டும். இதில் களப்பிரர் காலம் இருண்டகாலம் என்ற வசை ஏன் வருகிறது? இருண்டகாலம் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிடுமளவுக்கு அப்படி களப்பிரர்கள் என்னதான் செய்தார்கள்? ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து எரிந்துகொண்டிருந்த விளக்குகளையெல்லாம் ஃப்பூ என்று ஊதிஊதி அணைத்துவிட்டார்களா? அல்லது அப்போதும் ஆற்காடு வீராசாமியே மின்துறை அமைச்சராயிருந்து பவர்கட் செய்து நாட்டையே இருட்டில் மூழ்கடித்தாரா? எதற்கிந்த வசை?

இங்கேதான் இந்திய வரலாற்றை எழுதியவர்களின் சாதிய சாய்மானங்கள் அவர்கள் எழுதிய வரலாறுகளுக்குள் பதுங்கியிருப்பதைக் காண வேண்டியுள்ளது. தமது பார்ப்பன மற்றும் வேளாள சாதிகளுக்கு அனுசரணையாக இருந்த ஆட்சிகள் இருந்த காலத்தையெல்லாம் பொற்காலம் என்றும் தமது சுரண்டும் நலன்களுக்கு எதிராக இருந்த ஆட்சிகளின் காலங்களையெல்லாம் இருண்டகாலம் என்று அவர்கள் மோசடியாக எழுதிவைத்துள்ளார்கள். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளமாமலே கருணாநிதி உள்ளிட்ட பலரும் பிதற்றித்திரிவதுதான் வாடிக்கை. சரி, இருண்டகாலம் என்று இந்த ஆதிக்கசாதியினர் களப்பிரர்கள் மீது காழ்ப்பு கொண்டு சொல்வதற்கு காரணங்கள்தான் யாவை?

அடிப்படையில் களப்பிரர்கள் அவைதீக மரபைச் சார்ந்தவர்கள். தொடக்கத்தில் பௌத்தத்தையும் பின் சமணத்தையும் ஆதரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் பார்ப்பனர்களுக்கு பிரமதேயம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டிருந்த தானங்களை ரத்து செய்துள்ளனர். அந்த நிலங்கள் பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பார்ப்பனர்களுக்கு சமூகத்தில் இருந்த முற்றுரிமைகளை ரத்து செய்கின்றனர். மக்கள் மற்றும் அரசர்களின் செல்வத்தை கபடமாகப் பறிக்கும் பார்ப்பனர்களின் சடங்குகள், வேள்விகள் தடை செய்யப்பட்டன. இதற்கு அடிப்படையாக இருந்து உதவிய கிராமப்புற கட்டமைப்பினை பயன்படுத்தி வந்த வேளாளர்களின் தனித்த ஆதிக்கமும் கட்டுக்குள் நிறுத்தப்பட்டன, அல்லது மறுக்கப்பட்டன. இது போதாதா இந்த பார்ப்பனர்களும் வேளாளர்களுமாகிய வரலாற்றாய்வாளர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று வர்ணித்து வசை தூற்ற?

“களப்பிரர் காலம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாக இல்லாமல் அதன் பின்புலத்தில் சில சமுதாய மாற்றங்கள் இருந்திருக்கின்ற காரணத்தால்தான் அவர்களது ஆட்சி, அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று வந்த அந்தக்காலத்திலேயே முந்நூறு ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறது” என்கிறார் பேரா.அருணன் ( பொங்குமாங்கடல்- பக்கம் 17 ) இந்த எளிய உண்மையை மயிலை சீனி வேங்கடசாமி போன்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.

பார்ப்பன, வேளாள ஆய்வாளர்களால் இருண்டகாலம் என்று குற்றம் சாட்டப்பட்ட களப்பிரர் காலத்தில் தமிழில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை குறித்து மயிலை சீனி வேங்கடசாமி கூறுவதைப் பாருங்கள். “அபிநயம், காக்கைப்பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காயம் முதலிய இலக்கண நூல்கள், நரி விருத்தம், எலி விருத்தம், கிளி விருத்தம், சீவக சிந்தாமணி, பெருங்கதை முதலிய இலக்கிய நூல்கள், விளக்கத்தார் உத்து என்னும் கூத்துநூல், கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், எலாதி போன்ற கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை, இறையனார் களவியல் உரை முதலியன களப்பிரர் காலத்தில் தோன்றிய சில நூல்கள். தமி எழுத்து பிராமியிலிருந்து வட்டெழுத்தாக மாறியது களப்பிரர் காலத்தில்தான். ஆசிரிய, வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்கு வகைகளுக்குள் தமிழ்ப்பாக்கள் மடங்கிக் கிடந்தது தளர்ந்து தாழிகை, துறை, விருத்தம் என புதிய பா வகைகள் தோன்றியது இந்த இருண்டகாலகட்டத்தில்தான்...” ( முன் குறிப்பிட்ட பொ.வேல்சாமியின் கட்டுரை)

களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று கூறுகிற கே.கே.பிள்ளை கூட ‘’பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிர நந்தி என்பார் மதுரையில் திராவிட சங்கம் ( திரமிள சங்கம் ) ஒன்றை நிறுவினார் ( கி.பி.470.) ... பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பல இச்சங்க காலத்தில் இயற்றப் பெற்றவையாம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இக்காலத்தில் எழுந்தவையெனத் தோன்றுகின்றன. நீலகேசி, குண்டலகேசி, யசோதர காவியம், சீவக சிந்தாமணி ஆகிய காவியங்கள் தமிழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததும் இத்திராவிடச் சங்கத்தின் தொண்டே காரணமாகும்.... “ என்கிறார் ( முன்சொன்ன நூல், பக்கம்- 186 )

‘’புத்த மதமும், சமண மதமும் ஏற்றம் பெற்றிருந்த இந்த இருண்டகாலத்தில்தான் தமிழகத்தில் சிறப்பானதொரு இலக்கிய வாழ்வு நடைபெற்றிருக்கிறது. பதினெண் கீழ்க்கணக்கு என்பதன் கீழ் வரும் பல நூல்கள் இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்தக்காலத்தில் எழுதப்பட்டவைதான்” என்று இருண்டகால கண்டுபிடிப்பாளர் நீலகண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பேரா.அருணன், பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்துப்படி இதே காலத்தில்தான் திருக்குறளும் எழுதப்பட்டது என்கிறார். அதுமட்டுமல்லாது பௌத்த, சமண மதத்திற்கு ஆதரவான களப்பிரர்கள் சிவபெருமான் திருவந்தாதி, ஆசாரக்கோவை, இறையனார் களவியல் போன்ற பிறசமயங்களின் நூல்கள் வெளிவருவதற்கும் அனுசரணையாகவே இருந்திருக்கின்றனர். ஆக, களப்பிரர்கள் பாலி மொழிக்கு முக்கியத்துவம் தந்து தமிழை வீழ்ச்சியடைய வைத்து இருண்டகாலத்தை உருவாக்கினார்கள் என்கிற கருணாநிதியின் கருத்து வரலாற்றுண்மைக்குக்குப் புறம்பானது.

இப்போது ஒரு பார்ப்பனர்களின் மாநாடோ அல்லது வேளாளர்களின் சைவ சித்தாந்த மாநாடோ நடந்து அந்த மாநாட்டுக்கு கருணாநிதி தலைவராயிருந்து களப்பிரர்களின் காலம் இருண்டகாலம் என்று சொல்லியிருப்பாராயின் அவரது குமைச்சலையும் குற்றச்சாட்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நடப்பதோ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. அதில், களப்பிரர் காலத்தில் தமிழ் மொழி வளர்ச்சியடைந்ததா முடக்கப்பட்டதா? அப்போது இலக்கிய, இலக்கண நூல்கள் எதுவும் வெளியானதா இல்லையா என்கிற ரீதியில் மட்டுமே பரிசீலிப்பதை விடுத்து இப்படி யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததை மன்றத்தில் வாசிக்கிறார் கருணாநிதி. கற்றறிந்த ஆன்றோர்கள் கூடியிருப்பதாக நம்பப்படுகிற ஒரு சபையில் இப்படியொரு பொய்யை அவர் சொல்லிப்போயிருக்கிறார்.

“காலப்பறையர் என்பதே களப்பிரர் என மருவியது, ஆகவே நாங்களும் ஆண்ட பரம்பரைதான்” என்ற தமாஷை சீரியஸாகப் பேசுகிற- கருணாநிதிக்கு நெருக்கமான- தலித் அறிவுஜீவிகளோ அல்லது வரலாற்றாசிரியர்களோ அவரை நல்வழிப்படுத்தவேண்டும். தான் மிகுதியும் கொண்டாடி மாநாட்டு இலச்சினையில் பொறித்துள்ள அய்யன் வள்ளுவரையும் அவரது திருக்குறளையும் இந்த வையத்திற்கு தந்தது களப்பிரர்கள் காலம்தான் என்று கருணாநிதி இனியேனும் உணருவாரேயானால், பார்ப்பன வேளாள கருத்துருவாக்கவாதிகள் சொல்லித் தந்த வரலாற்றுப் பொய்களை வாந்தியெடுக்காமல் இருக்கும் வாய்ப்புண்டு.




__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

1.0 பாட முன்னுரை
சங்க காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முடிவுற்றது. தமிழகத்தை மூவேந்தர்கள் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்த சங்க காலத்தில், தமிழகத்திற்கு வடக்கே சாதவாகனப் பேரரசர்களின் ஆட்சி (கி.மு.230-கி.பி.225) நடந்து வந்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர்கள் என்பவர்கள் சாதவாகனப் பேரரசர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்து, திறை செலுத்தித் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தனர். கி.பி. 225இல் சாதவாகனர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.

சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர்த் தமிழக அரசியலில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன. தொண்டை மண்டலத்தின் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் பல்லவர்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு வரலாயினர். இதே நேரத்தில் தமிழகத்திற்கு வடக்கிலும், வடமேற்கிலும் உள்ள பகுதிகளில் வாழ்ந்திருந்த களப்பிரர் என்னும் வேற்றுமொழி இனத்தவர் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர். தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தபடியால் களப்பிரர் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முடியவில்லை. எனவே அவர்கள் தமிழகத்தின் தெற்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றனர். அப்போது தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டு வந்த மூவேந்தர்கள் வலிமை குன்றியும், தங்களுக்குள் ஒற்றுமை இன்றியும் இருந்தனர். களப்பிரர் முதலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர். பின்பு சேர, சோழ நாடுகளைக் கைப்பற்றினர். கி.பி. 250 முதல் 575 வரை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் பெரும்பகுதிகளைக் களப்பிரர் ஆட்சி செய்தனர். களப்பிரர் ஆட்சி செய்த இக்காலமே தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் எனப்படுகிறது.

களப்பிரர் காலத்தில் தமிழகத்தை ஆண்டு வந்த களப்பிர மன்னர்கள் யார் யார் என்பது பற்றியும், அவர்களது ஆட்சி முறை பற்றியும், அவர்கள் காலச் சமுதாய நிலை பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே களப்பிரர் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் (Dark Age) என்றும் கூறப்படுகிறது.

இப்பாடத்தில் களப்பிரர் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. களப்பிரர் யார் என்பது பற்றியும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும் கூறப்படும் பல்வேறு கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன. தமிழகத்தை ஆண்ட களப்பிர மன்னர்கள் பற்றித் தெரியவரும் செய்திகள் காட்டப்படுகின்றன. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சமுதாய நிலை, சமய நிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பது விளக்கிக் கூறப்படுகிறது. களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும் நல்லதொரு இலக்கிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்பது விளக்கிக் காட்டப்படுகின்றது.

1.1 
களப்பிரர் வரலாற்றுச் சான்றுகள்

சங்க கால வரலாற்றை அறிய அக்காலத்தில் தோன்றிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் இலக்கிய நூல்கள் பெரிதும் துணைபுரிகின்றன. சங்க காலத்தைப் போலவே களப்பிரர் காலத்திலும் நல்ல பல இலக்கிய நூல்கள் தோன்றின. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலான நூல்கள்,திருமூலரின் திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, முதல் ஆழ்வார்கள் எனக் கூறப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவர் பாடிய திருவந்தாதி நூல்கள்மற்றும் முத்தொள்ளாயிரம் ஆகியவை களப்பிரர் காலத்தில் தோன்றியவை ஆகும். இந்நூல்களில் களப்பிரரைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை. ஆனால் கி.பி. நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்த புத்ததத்தர் என்னும் பௌத்தத் துறவி பாலி மொழியில் எழுதியஅபிதம்மாவதாரம் என்னும் நூலில் களப்பிர மன்னன் ஒருவனைப் பற்றிய ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. இந்த ஒன்று மட்டுமே களப்பிரரைப் பற்றி அறிய உதவும் சமகாலச் சான்று ஆகும்.

ஆனால் களப்பிரரைப் பற்றிய குறிப்புகள் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிய, இலக்கண நூல்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும்மிகுதியாகக் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றியகல்லாடம்பெரிய புராணம் என்னும் இலக்கிய நூல்களிலும்,யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூல்களிலும் களப்பிரர் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. பல்லவர் மற்றும் முற்காலப் பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடு, வேலூர்ப்பாளையம் செப்பேடு, காசக்குடிச் செப்பேடு, தளவாய்புரம் செப்பேடு, வைகுந்தப் பெருமாள்கோயில் கல்வெட்டு ஆகியவற்றிலும் களப்பிரர் பற்றிய சில செய்திகள் இடம்பெறுகின்றன. மேலும் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கருதப்படும் தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலிலும் களப்பிரர் பற்றிய குறிப்பு இடம்பெறுகிறது.

1.2. களப்பிரர் யார்?
தமிழக வரலாற்றாசிரியர்கள் மேலே கூறிய களப்பிரர் பற்றிய வரலாற்றுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டு வந்த களப்பிரர் யார் என்பது பற்றியும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும் பலவகையான கருத்துகளைக் கூறியுள்ளனர். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக ஈண்டுக் காண்போம்.

1.2.1 களப்பிரர் வேங்கடத்திலிருந்து வந்தவர்கள்
தமிழகத்தின் வட எல்லையான வேங்கடத்தையும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்த கள்வர் அல்லது களவர் இனத்தவரே களப்பிரர் என்று வரலாற்று ஆசிரியர்கள் ஒரு சிலர் கூறுகின்றனர். சங்க காலத்தில் வேங்கடமலைப் பகுதியைப் புல்லி என்ற அரசன் ஆண்டு வந்தான் என்பதைமாமூலனார் என்ற புலவர் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்


(அகநானூறு, 61:11-13)

இவ்வடிகளில் மாமூலனார் புல்லியைக் கள்வர் கோமான்(கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டைப் பணியச் செய்தவன் என்றும், திருவிழாக்களை உடைய மிகச் சிறப்புவாய்ந்த வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன்கள்வர் இனத்தவன் என்பது பெறப்படும். இக்கள்வர் இனத்தவர் அண்டை நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று, ஆங்குள்ள ஆநிரைகளைக் கவர்ந்து வரும் களவுத் தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் ஆவர்.

புல்லி ஆண்டு வந்த வேங்கட மலைப்பகுதியில் வேற்றுமொழி வழங்கியதாக மாமூலனார் மற்றோர் அகநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகிறார்.

புடையல்அம் கழல்கால் புல்லி குன்றத்து….
மொழிபெயர் தேஎம்


(அகநானூறு, 295:11.15)

(புடையல் – ஒலிக்கின்ற; அம் – அழகிய; கழல் – வீரக்கழல்; குன்றம் – வேங்கடமலை; மொழிபெயர் தேஎம் – வேற்றுமொழி வழங்கும் நாடு; தேஎம் – தேயம், தேசம், நாடு.)

வேங்கட மலைப்பகுதியை ஆண்டு வந்த புல்லியின் கள்வர் இனத்தவர் தெற்கு நோக்கிப் படையெடுத்து வந்து தமிழ்நாடடின் பல பகுதிகளைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றி ஆண்டனர். அக்கள்வர் இனத்தவரே களப்பிரர் ஆவர் என்று கருதுகின்றனர். கள்வர் என்ற சொல் தமிழில்களவர் (களவு செய்பவர்கள்) என்றும் வழங்கும். களவர் என்பது வடமொழியில் களப்ரா என வழங்கும். அதுவே தமிழில் களப்பிரர் என்று வழங்கியது என்று கூறுகின்றனர்.

1.2.2 களப்பிரர் முத்தரையரின் மூதாதையர்
கி.பி. 650 முதல் கி.பி. 860 வரை முத்தரையர் என்போர் சோழ நாட்டில் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியைச்செந்தலை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். செந்தலை என்னும் ஊர் தற்போது, தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊருக்கு அருகில் ஒரு சிற்றூராக உள்ளது. இம்முத்தரையர் மேலே குறிப்பிட்ட களவர் இனத்தவராகிய களப்பிரர் குலத்தின் வழி வந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.

கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்துக் கொண்டனர். களப்பிரர் முத்தரையரின் மூதாதையர் என்பதை வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.

முத்தரையர்களில் குறிப்பிடத்தக்கவன் பெரும்பிடுகு முத்தரையன்(கி.பி. 655 – 680) என்பவன் ஆவான். இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று ஸ்ரீ கள்வர கள்வன் என்பதாகும். இதனைச் செந்தலை மற்றும் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. எனவே கள்வர கள்வர் எனப்படும் முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே எனலாம்.

மேலே கூறியவற்றால் களப்பிரர் வேங்கடமலைப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதும், அவர்கள் களவர் இனத்தவர் என்பதும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டளவில் சேர, சோழ, பாண்டிய நாடுகள் மூன்றையும் கைப்பற்றி ஆண்டனர் என்பதும், அதனால் தங்களை முத்தரையர் என அழைத்துக் கொண்டனர் என்பதும் புலனாகும்.

1.2.3 களப்பிரர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்
சோழ நாட்டில் களப்பாள் என்ற ஊர் இருந்தது. இவ்வூரில் முற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன்களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப்பெற்றான். அவன் வழியினரேகளப்பாளர் எனவும், களப்பராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வந்தனர். பாண்டிய நாட்டைக் கைப்பற்றியவர்களை வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூற, தளவாய்புரச் செப்பேடு களப்பாளர் என்று குறிப்பிடுகிறது. எனவே சோழ நாட்டில் வாழ்ந்து வந்த களப்பாளரே களப்பிரர் ஆவர் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.

1.2.4 களப்பிரரும் கங்கரும் ஒருவரே
கங்கபாடியை ஆண்டுவந்த கங்கர்களும், களப்பிரர்களும் ஒருவரே என்று சிலர் கூறுகின்றனர். இவர்கள் இருவருடைய இலச்சினையிலும் (Emblem) யானையின் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் வலிமையின்மையைப் பயன்படுத்திக்கொண்டு கங்கர்கள் பாண்டிய நாட்டில் ஊடுருவினர் என்றும், அக்கங்கர்களே களப்பிரர்கள் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இக்கருத்துப் பொருந்தாது. ஏனெனில் கங்கர்களைச் சிலப்பதிகாரமும், பல்லவர் காலத்தில் தோன்றிய செப்பேடுகளும், கல்வெட்டுகளும் கங்கர் என்றே குறிப்பிடுகின்றன. எந்த ஒரு இடத்திலும் அவர்களைக் களப்பிரர் என்று குறிப்பிடவில்லை.

கொங்கணர், கலிங்கர், கொடுங்கரு நாடர்,
பங்களர், கங்கர், பல்வேல் கட்டியர்


(சிலப்பதிகாரம், காட்சிக் காதை:156-157)

1.2.5 களப்பிரர் கர்நாடகத்தில் இருந்து வந்தவர்கள்
களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படையெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். பெரியபுராணமும், கல்லாடமும் கருநாட மன்னன் ஒருவன் பெரும்படையுடன் வந்து பாண்டிய நாட்டைக் கவர்ந்து அரசாண்டான் எனக் குறிப்பிடுகின்றன.வேள்விக்குடிச் செப்பேடு களப்பரன் என்னும் கொடிய அரசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

களப்பிரர் காலம் குறித்து இன்று நாம் அறிவது என்ன?

தேமொழி

Dec 22, 2018

Share
 
 
 
 

Thamizhaga-Varalatril-Kalapirar-Kaalam-Book-Cover

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், பகதூர்கான் திப்பு சுல்தான், மாமன்னர் அக்பர் போன்ற வரலாற்று நூல்களை எழுதியுள்ள டி.கே.இரவீந்திரன், களப்பிரர் காலம் குறித்து எழுதியுள்ள நூல் விகடன் பிரசுரம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்’ என்ற நூல். இதழியல் பின்புலம் கொண்டவராக வரலாற்று நூல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட டி.கே.இரவீந்திரன் இந்த நூலில் பொதுவாக தமிழக வரலாறு குறித்த அறிமுகத்துடன் துவங்கி, களப்பிரர் வருகை, அவர்களது ஆட்சிக்காலம் என விவரித்து இறுதியில் களப்பிரர் வீழ்ச்சி வரை 30 அத்தியாயங்களில் 230 பக்கங்களில் எளிய நடையில் எழுதியுள்ளார்.

களப்பிரர்கள் காலம் இருண்டகாலம்:

ஆம், இவ்வாறுதான் நாம் பள்ளியில் படித்துள்ளோம். தமிழகத்தை ஆட்சி செய்த முடியுடை மூவேந்தர்களை வீழ்த்தி அன்னியரான இவர்கள் தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் ஆட்சிக்காலம் பற்றிய தொல்லியல் தடயங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் போன்ற தரவுகள் இல்லாமையால் வரலாற்று ஆசிரியர்கள், சங்கம் மருவிய காலம் முதல் மீண்டும் பல்லவரும் பாண்டியரும் தமிழக ஆட்சியை மீட்டெடுக்கும் வரையில் உள்ள இடைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளை இருண்டகாலம் எனக் குறிப்பிட்டனர். கிபி 250 – 550 வரையில் களப்பிரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்தது என்பதும், அவர்கள் இன்றைய மைசூர் பகுதிக்கு அண்மையில் இருக்கும் நந்தி மலைப்பகுதியில் இருந்த ஓர் இனத்தவர் என்பதால் வடுக கருநாடர் என்று இலக்கியக் குறிப்புகள் கூறுகிறது என்பதுவும் இன்று பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளும் கருத்தாக இருக்கிறது. ஆகவே, வரலாற்றாசிரியர்கள் கருத்தின்படி இவர்கள் ஆரியருமல்லர் தமிழருமல்லர் ஆனால் திராவிட இனத்தவர், குறிப்பாகக் கன்னட வடுகர்.

சிரவணபெலகுளா பகுதி களப்பப்பு நாடு என அறியப்பட்டதாகக் கன்னட நூல் மற்றும் அப்பகுதி கல்வெட்டுகள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆட்சி துறந்து சமணமுனிவர் பத்ரபாகுவுடன் தென்னகம் வந்த மௌரியப்பேரரசரான அசோகரின் பாட்டனார் சந்திர குப்தர், தென்னகம் வந்து களபப்பு நாட்டிலுள்ள களபப்பு மலையில் தங்கினார் என ‘வட்டாராதென’ என்ற சமண இலக்கியம் குறிப்பிடுகிறது. களப்பிரர் வாழ்ந்த பகுதி அது எனச் சுட்டப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் இன்றைய ஓசூருக்கு வடபகுதி களப்பிரர் பிறப்பிடம். அவ்வழியாக வந்து அன்றைய மழநாடு பகுதியை (இன்றைய தருமபுரி, சேலம்) வென்று (கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வளத்திய மாவளர் புல்லி – அகநானூறு: 61 மற்றும் 295 – என்பது இலக்கியம் தரும் செய்தி) தமிழகத்தில் புகுந்தனர்.

முதன்முதலில் சற்றொற்ப நூறாண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கிடைத்த (இன்று இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் இருக்கும்) வேள்விக்குடிச் செப்பேடு கொடுத்த தகவலே களப்பிரர் குறித்துக் கிடைத்த முதல் தொல்லியல் சான்று. பின்னர் களப்ரர், களப்பிரர், களப்பரர், களப்பாளர், களப்பாழர், கள்வன், கலியரசர் எனப் பலவேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் களப்பிரர்கள். இவர்கள் காலத்தை ஒரு பறவைப்பார்வையில் அறிய உதவும் வகையில், களப்பிரர்கள் குறித்த பற்பல செய்திகளை விரிவாக, பல களப்பிரர் வரலாறும் கூறும் நூல்களின் உதவியுடன் ஆய்வு செய்து தொகுத்து அளித்த முறையில் வெளிப்படும் நூலாசிரியரின் ஈடுபாடு பாராட்டிற்குரியது.

களப்பிரர் குறித்து இன்று நாம் அறிவது:

களப்பிரர் ஆட்சிக் காலகட்டத்தை அவர் வாழ்ந்த வரலாற்றுக்காலத்துடன் பொருத்தி அறிந்துகொள்ள நூலாசிரியர் மேலும் சில சிறப்புச் செய்திகள் தருகிறார், அவை; இறையனார் அகப்பொருளைக் குறித்த விளக்கப் பகுதி, மூவேந்தரையும் வென்ற அச்சுதக் களப்பாளனையும் பின்னர் வென்ற களத்தூர் பூசல குல நல்லவன் என்ற ஒருவன் மீதான தனிப்பாடல் ஒன்று, களப்பிரர் ஆட்சியில் சமணசமயத் தலைவர் வச்சிரநந்தி கி.பி. 470 ஆம் ஆண்டு மதுரையில் உருவாக்கிய திரமிள சங்கம் என்னும் திராவிடத் தமிழ்ச் சங்கம், இக்காலத்தில் எழுதப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விளக்கமான பகுதி, களப்பிரர் கால சைவ இலக்கியங்கள், களப்பிரர் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் கொடும்பாளூர் வட்டாரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்களான இருக்குவேள் அரசர்கள், கொங்கு சோழர்கள், களப்பிரர் காலத்தில் இலங்கையின் அரசியல் சூழல், இரேணாட்டுச் சோழர்கள் பற்றிய சில செய்திகள்.

தமிழ் வளர்ச்சியின் நிலை என்று அணுகினால்; பண்டைய இலக்கியங்கள் வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா ஆகிய நான்குவகை யாப்புகளைக் கொண்டு தொல்காப்பிய இலக்கண அடிப்படையில் அமைந்திருக்க, பின்னர் களப்பிரர் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் கொண்ட புதிய பாவினங்களும் உருவானதும், கல்வெட்டுகளில் காணப்பெறும் பழைய தமிழி பிராமி ஓலைகளில் எழுதும் நிலைக்கேற்ப வட்டெழுத்தாக வடிவம் பெற்றதும் களப்பிரர் காலமே.

களப்பிரரின் சமயச் சார்பு குறித்து இலக்கிய ஆய்வுகள் கூறுவது:

களப்பிரர் சமண பெளத்த ஆதரவாளர்கள் என்பதும் அதனால் வேத மதம் இடருற்றது என்பது போன்ற அனுமான அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் இந்நாள் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சமணம் களப்பிரர் காலத்திற்கு முன்னரே தமிழகத்தின் தென்பகுதிகளில் சிறந்திருந்தது என்பதற்குப் பல தொல்லியல் சான்றுகள் இருப்பதே இதற்குக் காரணம். களப்பிர மன்னர்களின் பெயர் அச்சுதன் என்பது போல வைணவப் பெயர்களாக இருப்பதும், அவர்கள் திருமாலை வணங்கி அருள்பெற்றார்கள் என்று கூறும் யாப்பருங்கலப் பாடல் வரிகள் களப்பிரர் வைணவர் என்றும் கருதச் செய்யும்.

ஐந்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டின் புகாரிலும் பூதமங்கலத்திலும் வாழ்ந்து அபிதம்மாவதாரம் என்ற நூலை எழுதிய ஆச்சாரிய புத்ததத்த தேரர் என்பவர் அரசன் அச்சுதக் களப்பாளன் பற்றி தம் நூலில் குறிப்பிடுகிறார். களப்பிரர் காலத்தில் சோழ மண்டலத்தில் பெளத்த துறவிகள் ஆதரிக்கப்பட்டுள்ளார்கள், பாண்டிய மண்டலத்தில் சமணர்களும் ஆதரிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. இக்கால எல்லையில்தான் சோழன் கோச்செங்கண்ணான் பல சைவ வைணவ மாடக்கோயில்களை எழுப்பினான். அவற்றுக்கு எந்த ஊறும் நேரவில்லை. சைவ வைணவ இலக்கியங்களும் காரைக்கால் அம்மையார் மற்றும் ஆழ்வார்கள் போன்றவர்களால் எழுதப்பட்டு வந்தன. கூற்றுவ நாயனார் என்ற களப்பிர மன்னன் சைவம் சார்ந்தவராகவும், திருமங்கை ஆழ்வார் என்ற மன்னர் வைணவராகவும் இருந்ததை இலக்கியங்கள் கூறுகின்றன என்று பல கோணங்களில் ஆராயும் ஆய்வாளர்கள், களப்பிரர்கள் எந்தச் சமயத்தை சார்ந்தவர் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்றாலும், அவர்கள் பிற சமய வளர்ச்சிக்கு இடையூறாக இல்லை என்றும் முடிவு செய்கிறார்கள்.

ஆகவே, வேள்விக்குடிச் செப்பேட்டு செய்தியின் மூலம் பார்ப்பனருக்கு அளிக்கப்பட்ட கொடையை களப்பிர மன்னன் ஏன் மீட்டான் என்பதை மறுபரிசீலனை செய்யத் தேவையுள்ளது. அதன் அடிப்படையில் வேதமதங்களின் எதிரிகள் களப்பிரர் என்று தீர்மானிப்பது அனுமானம் என்பதைச் சுட்டுகிறார் நூலாசிரியர். தொல்லியல் தடயங்களாக களப்பிரர்கள் வெளியிட்ட மயில் மீதமர்ந்திருக்கும் முருகன் படம் அச்சிடப்பட்ட காசும் கூடக் கிடைத்துள்ளது. மேலும் கல்லாடம், பெரியபுராணம் போன்ற நூல்கள் களப்பிரர் ஆண்ட காலத்திற்கும் பிறகு சில நூற்றாண்டுகள் கழித்தே அக்காலத்தைக் குறித்து கூறும் பிற்கால நூல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டால் களப்பிரர் குறித்து வைதீக சமய எதிரிகள் என முன்வைக்கப்படும் கருத்துகள் அனுமானங்கள் என்பது தெளிவாகும்.

களப்பிரர் குறித்து தொல்லியல் ஆய்வுகள் கூறுவது:

முதலில் மாற்றுக்கோணத்தில் மயிலை சீனி வேங்கடசாமி ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்ற தனது நூலில் கிடைக்கும் இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடு தழைத்தோங்கிய காலகட்டம் களப்பிரர் காலம், அது இருண்ட காலமல்ல என்று நிறுவினார். இன்றைய களப்பிரர் குறித்த ஆய்வுகளுக்கு இதுவே துவக்கப் புள்ளியாகவும் அமைந்துள்ளது.

வேள்விக்குடிச் செப்பேடு, களப்பிரர் காலம் என்ற ஒரு வரலாற்றுத் தகவலை அளித்த சிறப்புப் பெற்ற செப்பேடு, களப்ரனென்னும் கலிஅரைசன் என்று குறிக்கிறது. இதுவே களப்பிரர் குறித்த செய்தி கிடைத்த துவக்கம். வேள்விக்குடிச் செப்பேட்டுக்குப் பிறகு தொடர்ந்து கிடைத்த தளவாய்புரச் செப்பேடு (களப்பாழர்) களப்பிரர் குறித்த தகவலை உறுதிப்படுத்தியது.

கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படுவது பூலாங்குறிச்சிக் கல்வெட்டு. இது இது 1979 ஆண்டு தமிழக தொல்லியல் துறையினரால் புதுக்கோட்டையருகே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு. களப்பிர கோச்சேந்தன் கூற்றன் என்ற மன்னரைப்பற்றிக் குறிப்பிடுகிறது. தமிழ் பிராமி வட்டெழுத்தாக மாறும் எழுத்தமைதி கொண்ட காலத்தை இது காட்டுகிறது.

கோக்கண்டன் இரவி என்ற களப்பிர மன்னரைக் குறிக்கும் பொன்னிவாடிக் கல்வெட்டு, வெள்ளலூர் கல்வெட்டுகள் ஆகியனவும் களப்பிரர்கள் குறித்த தகவல் தருகின்றன. பள்ளன் கோயில் செப்பேடு, வேலூர் பாளையம் செப்பேடு, சின்னமனூர் செப்பேடுகள் எனக் களப்பிரர் குறித்த தகவல்கள் பல கிடைத்த வண்ணமே உள்ளன, அவையும் களப்பிரர் கால கட்டம் குறித்த புதிய செய்திகளைத் தந்த வண்ணமே உள்ளன.  காசக்குடி செப்பேடு, பல்லவர் காலச் செப்பேடுகளான கூரம் செப்பேடு, வேலஞ்சேரி செப்பேடு மற்றும் பட்டத்தான் மங்கலம் செப்பேடுகள் போன்றவை பல்லவ மன்னர்கள் களப்பிர மன்னர்களை வென்றதையும் குறிக்கின்றன.

களப்பிரர்கள் என்ன ஆனார்கள்?

தொல்லியல் இலக்கியக் குறிப்புகள் மூலம் களப்பிரர்கள் 9 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செலுத்தி வந்ததும், கொங்குப் பகுதியில் பரவலாக ஆட்சி செய்ததையும், இவர்கள் தங்களை சந்திராதித்ய (சந்திரசூரிய) குலம் என்றுக் கூறிக் கொள்வதையும், வைதீக சமயத்தின் ஆதரவாளர்களாகவும் இருந்துள்ளார்களென்ற செய்திகளும் பெற முடிகிறது.  கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு, தக்காணப் பகுதியில் பேரரசாக இருந்த சாதவாகனர் ஆட்சிமறையும்பொழுது, தன்னாட்சி அறிவித்து அரசாளத் தலைப்பட்ட வடுக கருநாட மற்றும் வடுக வேங்கட இனத்தவர்கள் முறையே களப்பிரரும் பல்லவரும் என உருவாயினர் என்பது ஒரு பொதுவான புரிதல் (வடுகர் என்பது வடபகுதி மக்கள் என்றபொருள் தரும்.) இவர்கள் ஆரியரன்று. ஆரியத் தாக்கத்திற்குட்பட்ட தக்காண மக்கள்.

ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி (கி.பி. 575) கடுங்கோன் களப்பிரரை வென்றான். சற்றொப்ப அதே சமயம் வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணு சோழ நிலத்தையாண்ட களப்பிர அரசனை வென்று பல்லவ ஆட்சியை நிலை நிறுத்தினான். ஆட்சியிழந்த சிற்றரசர்கள், வலுவிழந்த ஊர்த்தலைவர்கள், நிர்வாகம் செய்யும் அரசுஅதிகாரிகள் எனப் பல்வேறு நிலைகளில் தமிழருடன் தமிழராய்க் கலந்து விட்ட நிலையே களப்பிரர் நிலையாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. இடைக்காலச்சோழர் காலக் கல்வெட்டுகளில் இருந்து கிருஷ்ணதேவராயர் காலத்துக் கல்வெட்டுவரை களப்பிரர் சிற்றரசர் முதல் அரசு அதிகாரிகள் என்ற நிலை வரையில் இருந்து கொடை அளித்த கல்வெட்டுச் சான்றுகள் மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதும் இதனை உறுதி செய்கிறது.

நூல் குறித்த பார்வை:

நூலாக்கத்திற்கு உதவிய தொல்லியல் ஆய்வாளர் இலக்கிய ஆய்வாளர்கள் நூல்களின் பட்டியலில் மா. இராசமாணிக்கனார் கோணம் கொடுக்கப்படாதது மட்டுமல்ல, களப்பிரர் குறித்து ஆய்வு செய்து எழுதிவரும் சமகால தொல்லியல் ஆய்வாளர்களான இரா. கலைக்கோவன், ஆ. பத்மாவதி, காசியல் அறிஞர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி போன்றோர் பெயர்களைக் காணமுடியாதது சற்று ஏமாற்றமே அளிக்கிறது.

குறிப்பாக, அத்தியாயம் 27 னை, ‘களப்பிரர் காலத்து கலை வளர்ச்சி’ என்பது குறித்த செய்திகளுக்காக நூலாசிரியர் ஒதுக்கியுள்ளார். களப்பிரர்கள் “தாங்கள் ஆட்சிபுரிந்த கால அளவில் வாழ்வியலுடன் ஒட்டிய நுண்கலை வளர்ச்சிக்குப் போதிய ஊக்கம் அளித்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஏனைய தகவல் போலவே இதற்கும் சரியான சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி” (பக்கம் 204) என்று டி.கே.இரவீந்திரன் குறிப்பிடுகிறார். இந்த நூலின் முதற்பதிப்பு வெளியான காலம் மே 2016. அதே ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி 2016) , “இருண்டகாலமா”, என்ற தனது நூலில், களப்பிரர் காலம் கலை இலக்கியங்களில் சிறந்த காலம் என்பதை வரலாற்று ஆய்வின் மூலம் மீட்ருவாக்கலாம் என்று கூறி இரா.கலைக்கோவன் தனது ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒப்பாய்வு மூலம் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் இசைக்கருவிகள் எவை, பின்னர் பக்தி இயக்கம் காலத்தில் தேவாரத் திருமுறைகளில் இடம் பெரும் கருவிகள் எவையெவை, இடைப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் இசைக்கருவிகளின் ஏற்பட்ட மாற்றம், புதிய இசைக்கருவிகளின் பெயர் தேவாரப்பாடல்களில் இடம் பெறுவது, நரம்பிசைக்கருவியான யாழ் என்ற கருவி வீணையாக வளர்ந்தது குறித்து சுட்டிக்காட்டுவார். இது போன்ற புதிய இசைக்கருவிகள் வளர்ச்சிகள் நிகழ்ந்தது இடைப்பட்ட களப்பிரர் காலத்தில், அத்துடன் இது போன்ற மாற்றங்கள் ஒரே நாளில் ஏற்பட வாய்ப்பில்லை என்பார். இவ்வாறாக நுண்கலைகளான ஆடல் பாடல் ஆகியனவற்றுக்குச் சிலப்பதிகார இலக்கியம், சிற்பக்கலைகள் கோவில் கட்டுமானங்களை பற்றிய மீள்பார்வைக்கு பிள்ளையார்பட்டிக் குடைவரைக் கோயில் குறித்த தடயங்கள் என்று இயல் இசை நாடகம், சிற்பம் ஓவியம் கட்டிடம் என்ற கலைகள் தடையேதுமின்றியே களப்பிரர் காலத்தில் வளர்ந்தன என நிறுவுவார். நூலாசிரியர் தமது மறுபதிப்பில் களப்பிரர் காலத்துக் கலை வளர்ச்சி என்ற பகுதியில் இந்த ஆய்வுகளையும் இணைத்து விரிவாக்குவார் என்று நம்புவோம்.

நூலாசிரியர் நூல் முடிவில் குறிப்பிடுவது போல “இனிவரும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி முடிவுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் அந்த வரலாற்றுச் சுவடுகள் மீது வெளிச்சம் வீசுகையில் புதிய உண்மைகள் உலகிடை வீசும். அவற்றின் வழி அறியாமற்போன அவர்தம் வரலாற்றை அறிவோம்” என்ற கூறுகிறார். இது உண்மையே. டி.கே.இரவீந்திரன் களப்பிரர்களின் நாணயம் (அத்தியாயம் 21, பக்கம் 166-168) பகுதியில் உள்ள நாணயங்கள் தகவலைத் தவிர்த்து, இந்நூல் வெளியான பிறகு, மார்ச்  2017 இல் தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட யானையின் படத்தை முகப்பில் கொண்ட களப்பிர நாணயமும் வெளிவந்துள்ளது. நூலாசிரியரின் கூற்றிற்கு இணங்கக் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று கூறி வந்த வழக்கை மாற்றுவதைப் போல மேலும் ஆய்வின் முடிவுகள் வெளிவந்த வண்ணம்தான் உள்ளன.

இந்நூலின் மூலமும் பிற வரலாற்று ஆய்வாளர்களின் மூலமும் நாம் அறிவது: முன்னர் கருதியது போல ‘களப்பிரர்கள் நீண்ட காலம் தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லை’(இரா.கிருஷ்ணமூர்த்தி); களப்பிரர்கள் தமிழகம் முழுவதையும் கைப்பற்றி ஆளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆண்டிருக்கிறார்கள் (இரா. கலைக்கோவன்); களப்பிரர்கள் ஆட்சி இந்த மண்ணின் மொழிக்கு எவ்விதத்தானும் இடையூறாக இல்லை என்பது அவ் ஆட்சிக்காலத்தே இங்குப் பொறிக்கப்பட்டிருக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளால் விளங்கும் (பேராசிரியர் சுப்பராயலு); இக்காலகட்டத்தில் கிடைத்த ரோமாபுரி காசுகள் மூலம், களப்பிரர் காலமாகக் கருதப்படும் இருண்டகாலத்தில் வெளிநாடுகளுடனான வணிகம் செழித்திருந்தமை உணரப்படுவதோடு, அயலக அரசர்களான களப்பிரர்கள் தமிழ்நாட்டு வணிகத்திற்கு இடையூறாக இல்லை என்பதையும் அறியமுடிகிறது (இரா.கிருஷ்ணமூர்த்தி); பிற்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட பல்துறை வளர்ச்சிக்கு வித்திட்டு சங்க கால வாழ்க்கை முறையிலிருந்து மாறி வந்த காலம்தான் களப்பிரர் காலம் (இரா. கலைக்கோவன்).

வேள்விக்குடிச் செப்பேட்டின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு கடந்த நூற்றாண்டிலும், குறிப்பாகக் கடந்த கால் நூற்றாண்டிலும் களப்பிரரின் இருண்ட காலம் என்ற கருத்தாக்கத்தின் மீது ஒளியேற்றும் பல ஆய்வுச் சுடர்கள் மூலம் ஒளிக்காட்டப்பட்டு உண்மைகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னமும் வரும். அப்பொழுது தென்பெண்ணைக்குத் தென்புற தமிழகப் பகுதியில் ஆண்ட களப்பிர மன்னர் யார் யார், எத்தனைக் காலம் எந்தெந்தப் பகுதியில் ஆண்டார்கள், தமிழகத்தில் அவர்கள் ஆட்சியின் தாக்கம் என்ன, களப்பிரர் காலத்துத் தமிழ்நாட்டில் நிலவிய கலை, பண்பாட்டுக் கூறுகள் எனப் பலவும் வெளிச்சத்திற்கு வரும்.

தமிழக வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் எவரும் ஒருமுறையேனும் படிக்கவேண்டிய நூலாக டி.கே.இரவீந்திரன் எழுதியுள்ள தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் நூலைக் கருதலாம்.

நூல் குறித்து:

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

நூலாசிரியர்: டி.கே.இரவீந்திரன்

பதிப்பகம்: விகடன் பிரசுரம்

பதிப்பாண்டு: 2016

விலை: ₹ 145.00

http://siragu.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

களப்பிரர் யார் - 1

' http://www.tskrishnan.in/2017/08/1.html
ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற பிரபலமான தமிழ்திரைப்படக் காமெடி வசனம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, வரலாறு என்ற பெயரில் இப்போதெல்லாம் இணையத்தில் எழுதிக்குவிப்போருக்குப் பொருந்தும். அதமபட்சம் சாண்டில்யன் நாவல்களில் வரும் அளவு கூட வரலாற்றுக் குறிப்புகள் இல்லாமல் எழுதப்பட்ட பல கட்டுரைகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றன. அஜெண்டா வைத்துக்கொண்டு எழுதும்போது ஆய்வுகள் எதற்கு என்ற நோக்கில் எழுதப்படும் இவ்வகைக் கட்டுரைகளுக்கு எதிர்வினை எழுத வேண்டுமா என்று யோசித்தாலும், இதுவே வரலாறு என்று நிலைநிறுத்தப்படும் அபாயம் இருப்பதால், அப்படி எழுதப்பட்ட களப்பிரரைப் பற்றிய கட்டுரைக்கு ஒரு பதில்.

Spsc.png

 
களப்பிரர் காலத்தைப் பற்றிய சரியான தகவலோடு தொடங்கும் (பொயு 2 - 5ம் நூற்றாண்டு) இக்கட்டுரை இரண்டாவது பத்தியில் சறுக்கிவிடுகிறது. தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் பொயு 1ம் நூற்றாண்டிலிருந்து படைக்கப்பட்டதாகச் சொல்கிறது.  பொயுமு 10ம் நூற்றாண்டிலேயே இயற்றப்பட்டதாக சிலரால் குறிப்பிடப்படும் தொல்காப்பியத்தின் காலத்தை, பொயுமு 1ம் நூற்றாண்டிற்குப் பின்னால் கொண்டு செல்லமுடியாது என்பதே மாமூலனாரின் காலத்தை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்த ராசமாணிக்கனார் போன்ற பல வரலாற்றாசிரியர்களின் கருத்து. இது போலத்தான் திருக்குறளின் காலமும் பொயுமு 3ம் நூற்றாண்டிலிருந்து பொயுமு 1ம் நூற்றாண்டு வரை என்பது ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட ஒன்று. சிலம்பும் மணிமேகலையும் இயற்றப்பட்டது சங்கம் மருவிய காலமான பொயு 1ம் நூற்றாண்டு, இவை இயற்றப்பட்டது களப்பிரர் வருகை தந்த பொயு 2ம் நூற்றாண்டிற்கு முன்னால். சோழன், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் ஆகிய அரசர்களைப் பற்றிப் பேசும் சிலம்பு, களப்பிர மன்னர்களைப் பற்றி, அப்படி ஒரு இனம் இருந்ததைப் பற்றியே எந்தக் குறிப்பையும் தராததை நாம் இங்கு நினைவுகூரவேண்டும். 
 
இப்படி இலக்கியத்தைப் பற்றி எல்லாக்கணக்கையும் களப்பிரர் காலத்தில் எழுதியதை, போனால் போகிறது என்று மேலே சென்றால் திடுக்கிடும் தகவல் ஒன்றைத் தருகிறார் ஆசிரியர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும், ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் குடித்தலைவர்களால் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று கூறுகிறார். ஏதோ தமிழ்வாணன் நாவலைப் படித்துவிட்டு தூங்காமல் தவித்த இரவில் இதை அவர் எழுதியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் பல்யாக சாலை முதுகுடுமியைப் பற்றிப் பார்ப்போம். ஆய்வாளர்களால் கடைச்சங்க காலத்திற்கு முற்பட்டவராகக் குறிப்பிடப்படுகிறார் இவர். புறநானூற்றின் இப்பாண்டிய மன்னனைப் பற்றி ஐந்து பாடல்கள் உள்ளன. (புறம் 6,9, 12,15, 64). இதில் 
 
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவினெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே (புறம் - 9) 

 என்று நெட்டிமையார் பாடுகிறார். குமரிகண்டத்தில் ஓடிய பஃறுளி ஆற்றின் மணலைக் காட்டிலும் பலகாலம் வாழிய என்று பெருவழுதியை அவர் வாழ்த்துகிறார். பஃறுளி ஆற்றைப் பற்றிய இந்தக் குறிப்பை வைத்து  அவர் கடைச்சங்க காலத்திற்கு முந்தியவர் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுவர். தவிர கடைச்சங்கப் பாண்டிய மன்னர்களின் புகழ்பெற்றவனான தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனின் புகழைப் பாடும் மதுரைக் காஞ்சி பல்யாகசாலை முதுகுடுமியை நெடுஞ்செழியனின் முன்னோன் என்று குறிக்கிறது 
 
பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறை போக்கிய
தொல்லாணை நல் ஆசிரியர்  (மதுரைக் காஞ்சி)
 
பல்சாலை முதுகுடுமியைக் களப்பிரர் படுகொலை செய்த பிறகு பெருவீரனான நெடுஞ்செழியன் எப்படி  மதுரையை ஆண்டான் என்பது கட்டுரை ஆசிரியருக்கே வெளிச்சம். ஏதோ யாகம் செய்தான் என்பதற்காக ஒரு பெருவீரனான தமிழ் மன்னனை ஆசிரியர் படுகொலை செய்துவிட்டார் பாவம். 
 
இப்போது ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கு வருவோம். கடைச்சங்ககாலத்திற்கு மூத்தவரான பல்சாலை முதுகுடுமிக்கு நேரெதிராக, கடைச்சங்ககாலத்தின் இறுதியில் ஆண்ட மன்னன் இவன். புறம் 367ல் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி ஆகியோரோடு இணைந்து ஔவையாரால் பாடப்படும் மன்னன் இவன். இவனை யாரோ கொன்றதாக எந்த ஆதாரத்தை வைத்து ஆசிரியர் சொன்னாரோ தெரியவில்லை. சோழ வம்சம் இவனுக்குப் பின்னும் தொடர்ந்தது. முற்காலச் சோழவம்சத்தின் இறுதியில் ஆண்ட மன்னன் கோச்செங்கணான். புறநானூறும் ஒட்டக்கூத்தரின் மூவருலாவும் இதைப் பற்றிக்குறிக்கின்றன. இவனுடைய காலம் பொயு முதல் நூற்றாண்டு.  சேரன் கணைக்கால் இரும்பொறையைப் போரில் வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணானை பொய்கையார் களவழி நாற்பது பாடி விடுவித்தார் என்பது வரலாறு. இந்தக் களவழி நாற்பது என்பது பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. ஆக, முதுகுடுமியையும் பெருநற்கிள்ளியையும் கொன்று விட்டு களப்பிரர் ஆட்சியைப் பிடித்தார்கள் என்ற கூற்றில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். 
 
அடுத்து மகாவம்சத்தைக் குறிப்பிட்டு பல மன்னர்களின் பட்டியலை ஆசிரியர் அடுக்குகிறார். இவர்கள் எல்லாரும் களப்பிரர் என்பதற்கு என்ன ஆதாரம் என்பது தெரியவில்லை. இதில் எருமையூர், கர்நாடகாவின் நடுப்பகுதி வரைக்கும் தமிழர் பகுதியாக தடாலடியாக அறிவிக்கிறார். தமிழ்நாட்டின் எல்லையும் நாட்டில் அடங்கிய பகுதிகளும் தெளிவாக வகுக்கப்பட்டதை அவர் ஏனோ அறியவில்லை. 
 
'தென்பாண்டி, குட்டம், குடம், கற்கா, வேண்பூழி, பன்றி, அருவா, அதன் வடக்கு, நன்றாய சீத மலாடு, புனல் நாடு என்று பன்னிரண்டு பிரிவாக தமிழகம் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தமிழ் நிலத்தை சூழ்ந்த இடங்களாக கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம் போன்ற பகுதிகள் நன்னூல் குறிக்கிறது. ஆக கன்னடம் தமிழகத்தின் பகுதி என்று கூறுவது தவறான வாதம். அங்கிருந்து வந்த களப்பிரர் தமிழர்களே அல்ல. 
 
கட்டுரையை அவர் எப்படி முடிக்கிறார் என்று பார்ப்போம். 
 
//மகேந்திரபல்லவன் எல்லா களப்பிரப் பகுதிகளையும் கைப்பற்றி பல்லவ சாம்ராச்சியத்தை உருவாக்கினான். இந்தப் பல்லவர்களும் முதலில் பௌத்த மதத்தைப் பின்பற்றினாலும் மகேந்திர பல்லவன் காலத்தில் சைவ சமயத்திற்கு மாறினார், ஞான சம்பந்தர் என்ற பார்ப்பனர் மூலம்//
 
வரலாறு சொல்வது 
 
- களப்பிரர்களை வென்றவர்கள் பாண்டியர்கள் (ஆதாரம் வேள்விக்குடிச் செப்பேடுகள்) பல்லவ மன்னனான சிம்ம விஷ்ணு வடபகுதியில் ஆண்ட சில களப்பிரச் சிற்றரசர்களை வென்றார். மகேந்திரன் களப்பிரர்களோடு போர் புரியவேயில்லை. சாளுக்கியப் புலிகேசியோடு பொருதுவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. 
 
- பல்லவ அரசைத் தோற்றுவித்தவன், 'சிவஸ்கந்த வர்மன்'. அடுத்து வந்த அரசர்களில் ஸ்கந்தவர்மன், விஷ்ணுகோபன் ஆகியோர் உண்டு. இவர்கள் எப்படி பௌத்த மதத்தவர் ஆனார்கள்? சிம்மவிஷ்ணு விஷ்ணுவின் சிறந்த பக்தர் என்று உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மகேந்திரவர்மனும் முதலில் சார்ந்திருந்தது சமண சமயத்தை. அவனைச் சைவத்திற்கு மாற்றியது நாவுக்கரசர் என்ற வேளாளர். 
 
ஆக உண்மை என்பதை பூதக்கண்ணாடி வைத்துத் தேடவேண்டியிருந்த இந்தக் கட்டுரையை விடுத்து, களப்பிரர் என்பவர்கள் யார், தமிழக வரலாற்றின் அவர்கள் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.
 
 (அடுத்து) 


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

களப்பிரர் யார் - 2

களப்பிரர் யார் என்பதை அறிய, பொயு இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் நிலையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தில் மூவேந்தர்களும், வேளிர்களும் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் அது. இந்த வேளிர்கள்  சில சமயம் மூவேந்தர்களின் சிற்றரசர்களாகவும், சில சமயம் தனித்தும் ஆட்சி செய்துகொண்டிருந்தனர். இவர்கள் வடநாட்டிலிருந்து குடிபுகுந்தவர்கள். முதலில் கொண்காணம், ஒளிநாடு, முத்தூற்கூற்றம், பொதிகைநாடு, மிழலைக் கூற்றம், குண்டூர்க்கூற்றம், வீரை, துளுநாடு ஆகிய இடங்களில் ஆட்சி செய்துகொண்டிருந்த வேளிர், சிறிது சிறிதாக தமிழகத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் துவங்கினர் என்பது வரலாறு. ஆய், பாரி, நன்னன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேளிர் அரசர்கள். இப்படிப் பல பகுதிகளாகப் பிரிந்து கிடந்த காரணத்தால், மூவேந்தர்களுக்குள் அவ்வப்போது பெருவீரர்கள் தோன்றியபோதிலும், தமிழகத்தில் ஒரு பேரரசு உருவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே சமயம், மத்திய இந்தியாவில் சாதவாகனப் பேரரசு வலிமை இழக்க ஆரம்பித்தது. அதன் சிற்றரசர்களாக ஆந்திராவின் வடபகுதியை (தற்போதைய விஜயவாடாவைச் சுற்றியுள்ள பகுதிகள்) ஆட்சி செய்துகொண்டிருந்த பல்லவர்களும், கர்நாடகாவின் வடபகுதியை ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியர்களும் தங்கள் அரசை விரிவு படுத்த ஆரம்பித்தனர். இதனால் நெருக்கப்பட்ட கர்நாடகாவின் தென்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அரச மரபினர் தெற்குநோக்கிக் குடிபுகுந்தனர். இவர்கள்தான் களப்பிரர்.

கர்நாடக மாநிலம் நந்தி மலையைத் தலைமையிடமாகக் கொண்டு இவர்கள் முதலில் ஆட்சி புரிந்துவந்தனர் என்பதை,

அருளுடை பெரும்புகழ் அச்சுதர் கோவே
இணையை ஆதலின் பனிமதி தவழும் 
நந்தி மாமலைச் சிலம்ப
நந்திநிற் பரவுதல் நாவலர் கரிதே  

என்கிறது அமிர்தசாகரனார் எழுதிய யாப்பெருங்கலம் என்னும் இலக்கண நூலின் விருத்தியுரை மேற்கோள் காட்டும் ஒரு செய்யுள் (அச்சுதன் எனும் களப்பிர அரசனைப் பற்றி நான்கு செய்யுள்கள் இதில் உள்ளன). இந்த நந்தி மலையைச் சுற்றிய பகுதிகள் களவர நாடு என்று அழைக்கப்பட்டது. இதை அருகிலுள்ள சிக்கபல்லபூரில் கிடைத்துள்ள ஒரு கல்வெட்டு

"நிகரில சோழ மண்டலத்துக் களவர நாட்டு நந்திமலை மேல்மஹா நந்தீஸ்வரம் உதயமகாதேவருக்கு" என்று உறுதி செய்கிறது (Epigraphic Carnatica Vol 10 - Chikballpur Inscription no. 21) 

பொயு பதினோராம் நூற்றாண்டின் நூலான கல்லாடம் "படைநான்கு உடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநாட வேந்தன் (கல்லாடம் - 56) என்றும்,   பெரிய புராணம், மூர்த்தி நாயனார் புராணத்தில்  "கானக்கடி சூழ் வடுகக் கருநாடர் காவல் மானப்படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்"  என்றும் களப்பிரர் வடுகர்கள் என்றும் கர்நாடகாவிலிருந்தே வந்தனர் என்றும் கூறுகின்றன.

தமிழகத்தில் ஏற்கனவே ஆட்சி புரிந்துகொண்டிருந்த அரசர்களை அகற்றி இவர்கள் ஆட்சியைப் பிடித்தனர் என்பதை வேள்விக்குடிச் செப்பேடுகள்

அளவரிய ஆதிராசரை நீக்கி அகலிடத்தைக்
களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்  (வேள்விக்குடிச் செப்பேடு பாடல் வரி 39)

என்று குறிப்பிடுகின்றன. களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்பதை, தளவாய்புரச் செப்பேடுகள்

...தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் கடிஞாறு கவினலங்காற் களப்பாழர் குலங்களைந்தும்

என்று உறுதிசெய்கின்றன.

இப்படி வடக்கிலிருந்து வந்த களப்பிரர் ஏறக்குறைய மூன்று நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆண்டனர்.  இவர்கள் சமண சமயத்தையும் (கர்நாடகாவில் அப்போது பெருமளவில் பரவி இருந்த சமயம்), பௌத்த சமயத்தையும் (உறையூரை ஆண்ட அச்சுதக் களப்பாளன் பௌத்தத் துறவியான புத்ததத்தரை ஆதரித்ததைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்) பின்பற்றியதோடு மட்டுமல்லாமல் சைவ, வைணவ சமயக் கடவுளர்களையும் வழிபட்டனர்.  நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் களப்பிரரே என்பதை திருத்தொண்டர் திருவந்தாதி 'கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே' என்று கூறுவதிலிருந்து அறிய முடிகிறது.  ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் களப்பிர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கலியன், கலிகன்றி என்ற அவருடைய அடைமொழிகளால் அறியலாம்.தவிர


'இருளறு திகிரியோடு வலம்புரித் தடக்கை ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்திமால்வரை சிலம்பு நத்தி'  எனும் யாப்பெருங்கலத்தின் பாடல் வரிகள் திருமாலை வழிபட்டு பெருநிலத்தைக் களப்பிரர் பெற்றதாகக் கூறுகிறது.

களப்பிரர்களின் மொழியைப் பொருத்தவரை, பிராகிருதத்தின் ஒரு பிரிவான சூரசேனி என்ற மொழியையே அவர்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். ஆனாலும், தமிழ் மொழியின் வளர்ச்சியை அவர்கள் தடுக்கவில்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை இவர்கள் காலத்தில்தான் படைக்கப்பட்டன. ஐம்பெரும் காப்பியங்களில் சீவக சிந்தாமணி எழுதப்பட்டது இக்காலகட்டத்தில்தான். பொயு 6ம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோன் இவர்களது ஆட்சியை நீக்கியதை

..களப்ரனெனுங் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கியபின் படுகடன் முளைத்த பரிதிபோல் பாண்ட்யாதி ராஜன் வெளிற்பட்டு விடுகதி ரவிரொளி விலக வீற்றிருந்து   என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இது போலவே பல்லவன் சிம்மவிஷ்ணுவும் சோழ நாட்டில் ஆட்சி புரிந்த களப்பிரர்களை வென்றான். அதன்பின், தமிழகத்தின் சில பகுதிகளில் பாண்டிய, பல்லவர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாக களப்பிரர் ஆண்டனர். தமிழர்களோடு ஒன்றாகக் கலந்தும் விட்டனர்.

களப்பிரர் காலத்தை 'இருண்ட காலம்' என்று குறிப்பிடுவது, அவர்களைப் பற்றிய இலக்கிய, கல்வெட்டு, நாணய ஆதாரங்கள் பல நாட்களுக்குக் கிடைக்காததால்தான். சொல்லப்போனால், சங்க இலக்கியங்கள் கிடைக்காதவரை அதற்கு முந்தைய காலம் பற்றிய தகவல்களும் அறியப்படாமல்தான் இருந்தது. தற்போது கிடைக்கப்பட்ட பல இலக்கிய ஆதாரங்களாலும், அண்மையில் பூலாங்குறிச்சி, பொன்னிவாடி ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளாலும் களப்பிரர் காலத்தில் வெளிச்சம் பாய ஆரம்பித்திருக்கிறது.  ஒரு இடத்தை மன்னன் ஒருவன் கைப்பற்றி ஆட்சி புரிவதும், அவனை வேறொரு மன்னன் வென்று அந்த இடத்தைக் கைப்பற்றிக்கொள்வதும் அவனை வேறொருவன் வெல்வதும் வரலாற்றில் எப்போதும் நடக்கும் நிகழ்வுதான். தமிழகத்தில் முதலில் மூவேந்தர்கள் ஆண்டார்கள், அவர்களைக் களப்பிரர் வென்றார்கள், அவர்களுக்குப் பின் பாண்டியர்களும் பல்லவர்களும், அதன்பின் சோழர்கள் என்று இப்படிச் செல்லும் வரலாற்றுக்கண்ணியில் களப்பிரர்களும் ஒரு கண்ணி என்பதே நாம் அறியவேண்டிய செய்தி. அவர்களின் புகழை யாரும் குறைக்கவும் இல்லை கூட்டவும் இல்லை. தமிழகத்தை ஆண்ட அரசர்களில் அவர்களுக்கும் ஒரு இடம் உண்டு. வருங்காலத்தில் மேலும் ஆதாரங்கள் கண்டறியப்பட்டால், அவர்களுடைய வரலாறும் செறிவடையக்கூடும்.


உசாத்துணைகள்

1. புறம் 9 -  http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=9&file=l12803c0.htm
2. புறம் 367 - http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=367&file=l1280374.htm
3. The Chronology of Early Tamils - by K N Sivaraja Pillai - Page 128 onwards
4. The History of South India - K A Nilakanta Sastri - Page 121
5. களப்பிரர் - நடனகாசிநாதன், தமிழக அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு
6. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் - டி. கே. இரவீந்திரன் (விகடன் பிரசுரம்)
7. பாண்டியர் செப்பேடுகள் - டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப


__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

HISTORY VIGNETTES

How the Dravidianists Invented Kalabhras and Poisoned Tamil Public Discourse

 

 

 

Sandeep Balakrishna
19, 9:38 AM

 

For a backgrounder, read the following essays:

How the Dravidianists Ravaged the Tamil Heritage and Gifted Tamil Nadu to the Global Church

An Encounter with a 55 BCE Lemurian alias Dravidian alias Periyarist

Among the enduring myths in which the Dravidianists repose supreme faith, the story of the Evil Kalabhras stands foremost. So who were the Kalabhras? The answer emanating from the “pure” Dravidian scholarship is this: the Kalabhras were a vile race who robbed everything that belonged to the Tamils including their very Tamil-ness (Tamil identity).

But when Dr. B G L Swamy asked the “pure Tamils” and “warrior-Tamils” of his time who these Kalabhras were, the answer was unanimous: “They were not Tamils. They were extremely wicked and absolute murderers.”

Next question: “So where did they hail from?”

“No idea. But there’s no doubt that they came from outside Tamil Nadu.”

“Any knowledge as to their customs, language, dress, and behaviour?”

“It appears that they had Sanskrit and Prakrit as their mother tongue. They destroyed us Tamils.”

“But you claim that they had occupied Tamil Nadu for about 300-350 years? And so, during such a long spell, have you discovered any remnants they must have left behind?”

“Perhaps they have left something behind. But none of those remains have been spotted.”

“Have they been washed away by the sea?”

“That’s true! Why not?”

Dr. BGL Swamy notes how the (mythical) invasion and subsequent occupation of Tamil Nadu by the Kalabhras provided a very convenient handle to the Dravidianists. The following is a sample of how this sort of spurious theorising worked worked.

Let’s assume you asked the Dravidianists whether a certain positive facet of life or quality of nobility or philosophy existed in Tamil literature or culture. Pat comes the stock reply: Of course! The principle, philosophy etc that you mention definitely existed. But those Kalabhras invaded us and annihilated everything including this. “Indeed, it was they who destroyed our Last Sangam!”

Dr. BGL Swamy notes how the Dravidianists carefully preserved and perpetuated this myth in both the academia and in mainstream public discourse, writing how

“they used the invasion of the Kalabhras as the sturdy bridge that connected the Sangam Era with the Tevara Era. They have also concocted a stunning terminology for this: ‘Kalabhra Interregnum.’ The pronunciation of this term morphed as ‘kaLappira indargerram,’ ‘kaLappArar inter gennam,’ and variants thereof.”

The Kalabhara myth became pervasive throughout Tamil Nadu from “babies” to the aged and the infirm. Morbid tales of Kalabhra cruelty and atrocities were prescribed in the textbooks for middle and high school students. College students studied the Kalabhra Mythology in greater depth. And as Dr. Swamy writes, the “MPhil and PhD students were completely absolved of the difficulty of searching for problems and topics for writing their theses.

The Kalabhra fantasy was truly multidisciplinary in nature. From students of literature, economics, history, sociology, psychology, the Kalabhra problem was akin to an infant easily accessible to everyone. “Every student twists and chokes it and according to his strength and ability, delivers a few blows striking it, and painting its horrible monstrosity in lurid hues. The student gets his degree without a murmur of criticism from the teachers and professors,” notes Dr. Swamy.

A student named Iravanan enrolled for Dr. Swamy’s classes. He took eight years to complete his three-year BSc in the third class. Dr. Swamy adds a disclaimer about this:

Please don’t judge all my students by Iravanan’s example. That’s doing me injustice. There are hundreds of my students who are far more intelligent and learned than me. They have also gone on to earn renown both in society and have occupied genuinely eminent positions. But none of them have earned a place in history like Iravanan.

Iravanan’s ardent desire to pursue his MSc in Botany was never fulfilled, meaning he didn’t qualify for admission. So he enrolled for an M.A in Tamil and graduated swiftly. For his dissertation topic, he chose the topic, “The Administrative Policy of the Kalabhras” and submitted it for evaluation and presently emerged as “Dr. Iravanan.”

When he came for the convocation, he purposely met Dr. BGL Swamy. Knowing that Dr. Swamy was keenly interested in the subject, he showed him his thesis “beaming with great pride.” Dr. Swamy agreed to read it and asked him to return the next day. Here are a few extracts that Dr Swamy quotes from the said thesis:

Words fail us to describe the kind of atrocities that the Kalabhras inflicted upon the Tamils. It is possible to realize them only through personal experience. When I was studying Botany for my BSc course, I underwent a complete experience of this at the hands of a Kalabhra descendant.

Dr. Iravanan visited Dr. Swamy the following day and collected his thesis. He sought Dr. Swamy’s opinion on it. Here is how the conversation went.

“How is it Ayya (Sir)?”

“It’s good. So, even you have concluded that there was something called a Kalabhra regime?”

“Where’s the doubt in that fact, Ayya? Hasn’t everyone concluded the same?Won’t I look insane if I claim the opposite?”

“I don’t mean to say that. But if you write that the Kalabhras ruled Tamil Nadu for three hundred years, shouldn’t you also list the names of at least two or three kings belonging to the dynasty?”

“What you say is correct Shaar (Sir), but no evidence supporting it has been found. But why Shaar, don’t you believe that the rule of Kalabhras existed?”

“All I’m saying is that there’s no evidence to support such a claim.”

“But of course! Why would you admit the atrocities committed by your own ancestors? You, and people of your ilk will obviously deny it!” he said suggestively, and left the place.

A Pandya Copperplate Inscription

There exists a copperplate grant of the 9th Century Pandya ruler named Parantaka Chediyan or Jatilavarma (Nedunchediyan). It is also well-known as the VeLvikuDi grant (Epigraphia Indica 1923/4, 17: Pp 291-309). Expounding on this grant, Dr. BGL Swamy writes as follows:

The mention of the Kalabhras come to light for the first time in this grant. Although brilliant scholars and researchers like Fleet, Venkayya, Hoskote Krishna Sastri and Krishnaswami Aiyangar have written about this grant, there appears to be a significant shortcoming. It struck me that the meaning of some of the words used in the grant have not been understood in the context in which they are used. They interpreted the phrase, “kaLappiyaranennum kaliyarashan,” to mean “A wicked king of the Kalabhras.” From this, the interpretation that the Kalabhras were a wicked race was drawn rather easily!

I suggested that the word “kali” in this context means “warrior” and further showed the etymology of the word “Kalabhra” as follows: kaLabha>kaLabhabhru>kaLabhru> kaLabhra (in Tamil, it becomes “kaLappira”).

I also pointed out the fact that among the royal dynasties of South India, the Western Gangas sported the kaLabha (baby elephant) as their royal insignia. Sripurusha who hailed from this dynasty was a contemporary of Rajasimha I, the father of Nedunchediyan, who commissioned the veLvikuDi grant. In that period, the southern part of GangavaDi [the region encompassing the present-day Malnad, Hassan, Mysore, Mandya, Chamarajanagar, Tumkur, Bangalore, Kolar] and the northern part of the Pandya dominion were neighbouring regions.

Using inscriptional evidence, I showed that Sripurusha led an expedition into the Pandya country and that Rajasimha I repelled I it, and that the period of the Ganga occupation of the Pandya country was minimal (perhaps only four or five years). With my research, I further concluded that the Ganga-occupied territory in the northern part of the Pandya country was tiny. I emphasised the fact that there was absolutely no historical evidence to claim that the Kalabhras (Gangas in reality) had occupied the entire Chera, Chola and Pandya countries. Therefore, given this tiny geography and the very short period of occupation, it was impossible for the Gangas to either annihilate or vanquish an already-existing culture and literature.

Thus, in my essay, I concluded that adding unnecessary colour and wings to a really insignificant historical incident and then giving it a weighty title like “The Kalabhra Interregnum” was a figment of imagination.

The Aftermath

Dr. BGL Swamy comprehensively demolished the Kalabhra myth by showing that there was really no “dark age” in the history, language, culture, society, and politics of Tamil Nadu. Perchance there was such a dark age, it was definitely not caused by the so-called Kalabhras. Dr. Swamy’s paper is titled, Kalabhra Interregnum—A Retrospect and Prospect.

Two things happened after Dr. Swamy’s paper was published. On the one hand, he received letters which “gave me kisses with flowers.” On the other were letters which “pierced him with sharp spikes.” A warrior-Tamil named Arunachalam stood on the speaker’s pedestal and thundered, “I am ready to condemn every single word that Dr. Chaamy [Swamy] has written!” But Arunachalam never followed up on that condemnation. Other “warrior” Tamil litterateurs and historians from the colleges in neighbouring districts gathered in an assembly and unanimously passed an “order” whose text is given below:

About 120 years ago, a wicked race named the Kalabhras raided our Tamil country and inflicted severe mayhem upon the peaceful Tamils living there. This Dark Age came to an end and peace reigned once more. But now, wicked, alien people like Pi. Ci. La. Chaamy [B G L Swamy] are raising the tidal waves of poison in our Tamil history. Such people are shaking the very roots of our deeply held beliefs. They are denying the facts that existed! Sons of the proud heritage of Tamil Supremacy! Tamil Brothers and Sisters! Wake up! Beware! Arise!

On 12 July 1976, this speech was published in the Tamil daily, Kanal.

 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard