யோவான் 19:9 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ‘ நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ‘ என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ‘ ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ‘ யூதரின் அரசன் நான் ‘ என்று இயேசு சொல்லிக் கொண்டதாக எழுதும் ‘ என்று கேட்டுக்கொண்டார்கள்.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ‘ நான் எழுதியது எழுதியதே ‘ என்றான். |
குற்ற அட்டையை பிலாத்து கைப்பட எழுதினார், எனில் தண்டனை முழுமையாய் ரோமினுடையதே – கைது செய்தது யார்?
யோவான் 18:3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.12 ரோமன் படைப்பிரிவினரும் ரோமன் படைஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார். |
மாற்கு14:43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ‘ ரபி ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார் |
முதலில் புனைந்த மாற்கு சுவி கைதினை செய்தது யூத தலைமைப் பாதிரி தலைமையில் மதகுருமார்கள் என்கிறார். பஸ்கா பண்டிகைக்கு ஆடுகளை கர்த்தருக்கு கொலை செய்து பலி தர லட்சக்கணக்கானோர் கூடி உள்ள போது அதை விட்டு நிச்ச்யமாய் யூத தலைமைப் பாதிரி தலைமையில் மதகுருமார்கள் வந்திருக்க முடியாது. யூத தேவாலயத்தினை நடத்துவதே அவர்கள் பொறுப்பு.
\
இறந்த ஏசுவை, உயிர்த்தார் எனவும், மீண்டும் வெகு சீக்கிரமாக உலகம் அழிய, தீர்ப்பு தரும் நீதிபதியாக வருவார் எனவும் நம்பி மதம் மாறியோரால் புனையப்பட்டதே சுவிசேஷங்கள்.
நாம் ஏசு சீடர்களிடம் பேசியதாக உள்ளதைக் கொண்டு சற்றே இயேசுவை ஆராய்வோம்.
மத்தேயு10:11 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள். 23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன். |
மத்தேயு15:24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளான யூதர்களுக்கு மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் தவிர மற்றவருக்கு அல்ல‘ என்றார். |
மாற்கு7:27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார் |
மத்தேயு7:6தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும். |