1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும்.
2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும்.
3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும்.
4.வள்ளுவத்தின் அடிப்படையான மெய்பொருள் கண்டு மீண்டும் பிறவா நிலை அடையும் வழியை முழுமையாய் மனதார ஏற்று பொருள் காண வேண்டும்
5.கல்வி கற்பதே இறைவனின் திருவடி பற்றவே, அறிவு என்பதே மீண்டும் மீண்டும் பிறக்கும் அறியாமை எனும் பேதைமையை விலக்கிட இறை எனும் செம்பொருளும், உலகின் உச்சமான பிறப்பற்ற வீட்டையும் அடைய முயல்வதே, கசடு இன்றி கற்று மெய்யறிவு- மீண்டும் பிறவாதிருக்கும் நெறியை அடையவே
6.திருக்குறள் சங்க இலக்கியங்கள்- பத்துப்பாட்டு &எட்டுத் தொகை நூல்கள், அதன் பின்பு எழுந்த தொல்காப்பியம் அடுத்து இயற்றப்பட்டது, இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறளிற்கு பின்பானது. வள்ளுவர் காலத்திற்கு முந்தைய நூல்களில் உள்ள சொல்லை அதே பொருளில் மட்டுமே வள்ளுவர் கையாண்டு இருப்பார், வேறு மாற்று பொருளில் எழுதுவது இலக்கிய- இலக்கண மரபு அன்று.
7.வள்ளுவரின் நடை அமைவு -மரபு இவற்றை மேல் சொன்னவையோடு ஒத்து அமைக்க வேண்டும்.
8.மேற்கத்திய சுய-நல நுகர்ச்சி தன்மை நம்பிக்கைகளையோ, நீங்கள் முற்போக்கு என நம்புவபற்றை மற்றும் 20ம் நூற்றாண்டின் அறிவியல் அடிப்படை வள்ளுவரின் மீது திணிக்கக் கூடாது