Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வித்துவப் பெரியாரபிப்பிராயம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
வித்துவப் பெரியாரபிப்பிராயம்
Permalink  
 



சிவமயம்

வித்துவப் பெரியாரபிப்பிராயம்


ஸ்ரீலஸ்ரீ. சுவாமிநாத பண்டிதரவர்கள்

அபிப்பிராயமிது:-


    தேவாரம்

    "வாழ்க வந்தணர் வானவ ரானினம்
    வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
    ஆழ்க தீயதெல் லாமர னாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே"

திருவாசகம்

    "தேவதேவன் மெய்ச்சேவகன் றென்பெருந் துறை நாயகன்
    மூவராலு மறியொணாமுத லாயவானந் தமூர்த்தியான்
    யாவராயினு மன்பரன்றி யறியொணாமலர்ச் சோதியான்
    தூயமாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னிமன்னித் திகழுமே"

    திருச்சிற்றம்பலத் தெஞ் சிவக்கொழுந்தே! நின்பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்.

    அதுதான் முற்றறிவினாலே முதல்வ! நீ! முன்னர்த்தான் முற்று மறியாததன்று.  யுகதர்மமாகத்தான் கன்மத்திற் கேற்பத்தான், அன்றேதான், அருளினாற்றான் அர! அமைக்கப்பட்டது நின்னாற்றான்; ஆயினும் அறிந்தருளுக.

    திருநெல்வேலி என்னுந் திருப்பதியச் சென்மஸ்தானமாகப் பெற்றவரும், ஸ்ரீமாந். வேதாசலப் பிள்ளையவர்கள் திருநெல்வேலியில் காந்திமதியம்மை கோயின் மண்டபத்திலே, பாண்டி நாட்டார் சைவரல்லர் சமணர்கள் என்றும், சாதி இல்லை என்றும் பிரசங்கஞ் செய்த காலத்தில், எம்மைக்கொண்டு சாத்திர வாயிலாக அவர் பிரசங்கத்தை மறுத்துப் பிரசங்கஞ் செய்வித்து அப்பிரசாரகரால் ஏவப்பட்டு எமது பிரசங்கதிற் குறிப்பெடுத்தற்காகச் சபையில் வந்திருந்த ம-ள-ள-ஸ்ரீ பண்டிதர் சிவராமபிள்ளையவர்களும், அவர் மாணாக்கர் நால்வரும் பிரசங்கத்திற் குறிப்பெடுத்தற் கிடம் பெறாமையால் நாண முற்றுப் பாதிப்பிரசங்கத்தில் சபையைவிட்டோடவும் அது கேட்டறிங்த பிரசாரகரும் நாணி மற்றைத்தினமே  திருநெல்வேலியைவிட்டுப் அம்பாசமுத்திரம் ஓடவும் செய்த பெரியதோருண்மைச் சைவாபிமாந்த்தலைவரும், ந்ன்மை தீமை நிகழ்ச்சிக்கண் மனந்திரியாது திருவருட்சம்மதமென்று கூறுந் திடபத்தியாளரும், அத்தயாமத்தில் காந்திமதியம்மை தரிசனஞ்செய்து போசனம் பண்ணுகின்ற நியம நிலையினரும், சுத்தாத்துவித சைவசித்தாந்த      தாபந்த்தில் விசேட வேணவாவுடையவரும், வேதாகம தூடணந்தினைத்துணையுஞ் சகியாத்வரும், பீ.ஏ. பிள்ளை என்னு நாமத்தைத் தமக்கிடுகுறியாகப் பெற்றவரும், திருமுறைப்பாராயண நியமதுரந்த்ரரும், தமது வைதிக கருமத்திற்குக் காலம் போதாமையால் தமக்குக் கிடைத்த உத்தியோகத்தைத் தாமே பரித்தியாகம் பண்ணின்வரும், எம்மீது வைத்த போன்பால் யாம் பரிசோதித் தச்சிடுவித்த சிவஞான போதமாபாடியம் தேவாரம் என்பன்வற்றில் நூறு புத்தகங்கள் விக்கிரயஞ்செய்து பொருளுபகரித்தவரும், ந்ம்மிடத்துப் போலவே ஸ்ரீலஸ்ரீ, "திருநான்மறை விளக்க வாராய்ச்சி" நூலாசிரியரிடத்தும பேன்புடையவரும், எமதிரு கண்மணியும் எமதன்பைசிகாமணியுமாகிய ஸ்ரீமத், பீ.ஏ. காந்திமதிநாதபிள்ளை யவர்கள் சேட்ட புத்திரரும், கலெக்டர் உத்தியோகத்திற்குக் கற்றற்பொருட்டு இங்கிலாந்து போக முயன்றபோது அப்போக்குத் தமது சம்யாசாரத்திற்கும் குலாசாரத்திற்கும் தக்கதன்றென்க் கருதிய அப்பிதவின் ஆஞ்ஞையால் அம்முயற்சி என்று மின்றாகச் சிவபூசையை மேற்கொண்டவரும் ஆகிய அட்வக்கேட் ஸ்ரீமாந், சுப்பிரமணியபிள்ளை யவர்கள் சைவசாத்திர வரம்பையும், அச்சாத்திரவழி யொழுகி அருள் பெற்ற ஆன்றேர் கொள்கையையும் இகந்து, "வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்------வாழ்நாள் வழியடைக்குங்கல்" என்னும் தேவர் திருக்குறளையுமோராது புதிய கோண் மேற்கொண்டு, கொண்டத்ற் கேற்பப் பிரமாண்மின்மையின், பிரமாணமாக்குதற் பொருட்டு, அருட்பாடலளைப் பிரதிக்கு மாறாக  திரித்தும் { திரித்தவற்றுள் எமது பார்வைக் ககப்பட்ட சிலவற்றை இங்கே தெரிக்கின்றாம்.  இந்நூல் 22-ம் பக்கம், தேவாரம் "உரைக்கடந்தோறும்" என்றும், 26.  "கோதின் மாதவர் குழுவுடன் கேட்ப" என்பதைக் "கோதின் மாதவர் குழுவுடன் கூட" என்றும், 33, 34 பெரிய புராணம்.  "பொருவிறப்ப ஓதினார் புலலிவந்த புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்" என்பதைப் "புகலியர் கோன் செப்பினார் எண்ணிறந்த புனித வேதம்" என்றும், 38, 39.  தேவாரம் "ஆலந்தார் நிழவில்லறம்" என்பதை "ஆலந்தார் நிழலின் அரன்" என்றும், 63. "தொகுத்தவ னருமறை அங்க மாகமம வகுத்தவன்" என்பதைத் "தொகுத்தவ னருமறை ஆறங்கம்" என்றும், 68. தொல்காப்பியம்.  "நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த மறைமொழி" என்பதை "நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்தது மறைமொழி" என்பதை "நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்தது மறைமொழி" என்றும், 109, "சைவ வேடந் தாளிணைத்து" என்றும், 132 பதினொரந்திருமுறை.  "ஆரியப் புத்தகப்பேய்" என்பதை "ஆரியர் புத்தகப் பேய்" என்றும், 186. "ஓதிய் வேத நாவர்" என்பதை "ஓதிய வேத நால்வர்" என்றும், இவை போல்வன பிறவும் திரிக்கப்பட்டிருத்தல் காண்க.} , திரிக்காத சிலவற்றிற்குப் பொருள்கோண் முறை, இலக்கண்த்திற்கும், இலக்கியத்திற்கும், நிகண்டு முத்லிய கோசங்கட்கும், பண்டையுரைகட்கும், அகராதிகட்கும், யுத்திக்கும் முற்றும்  பொருந்தாப்பொருள் {பொருந்தாப் பொருளை இந்நூலுள் பக்கம். 38,39 "கோலம்" "சொல்" "வண்மொழி" பக்கம் 82: "அந்தணர் மறைத்தே" பக்கம் 99. "முது முதல்வன் வாய்போகா தொன்று புரிந்த - லீரிரண்டி னாறுணர்ந்த வொருமுதுநூல்" பக்கம் 77.  "கலித்துறையது பயந்த காமர் காட்சி நல்லானை" என்றற் றொடக்கத்தன பலவற்றிற்கு எழுதிய பொருள்களா லுணர்க.} கூறியும் தமதுநாளை வீழ்நாளாக்கிப் பழி பாவங்கட்கும் அறிஞர்வாய் நகைக்கும் இன்னுமுன்னும் ஆளாகாது சைவப்பயிர் தழைத்தினிதோங்க அவர்தாஞ்செவ்வனே முயலுமாறு திருவருள் புரிகவென்றே.       

        முதற்கண் இவ்வாறு விண்ணப்பஞ் செய்து வேண்டிக் கோடற்குக் காரணம் என்னையெனிற் கூறுதும்:-

"அருளறி வொழுக்க மான மாசாரம் பொறைசீ ரன்பு
தருமநன் னெறிநற் றனஞ் சத்தியந் தவத்தோ டாண்மை
விரதநோன் பிரக்க மீசன் மெய்யருட் பத்தி யுள்ளோர்
ஒருவரை யுலகிற் காண்ப தரிதுகா ணுயர்த வத்தீர்"

என்றிங்ஙனங் கலியுக தருமத்தை நன்கு விளக்கிக் கூறிப் போந்த தென்றமிழ்க் கவியு நன்று நாண, அருளறி வாதிய உத்தமோத்தம குணங்களும், அத்தகைய ஒழுக்கமாதிய செயல்களும் ஒருங்கு குழுமிக் கரசரணாதி யவயவங்களைப் பொருந்தி ஒருருவெடுத்தாற் போன்றவர், பன்னூலாராய்ச்சி வல்லுநர், "ஆராய்ச்சி"யா மாரமிர்தம் ஓயாது பொழியும் அறிவுமாமேகம், "தேருந் தோறு மினிதாந் தமிழ்" என்ற வண்ணம் பழகுந் தோறும் பத்தியு மறிவும் பரத்தில் ஒத்திடும் பண்பினர்க் கெத்திறத்தானு மினிதாந் தன்மையர், வித்துவ சூளாமணி, சைவ சூளாமணியென் றின்னனவாகப் புனைந்துரைத்து மெய்யறிவாளர் போற்றும் ஸ்ரீலஸ்ரீ.திரு.மா.சாம்பசிவபிள்ளையவர்கள் என்னுஞ் சிவஞானச்செல்வப் பெரியார் "திருநான்மறைவிளக்க வாராய்ச்சி" எனப் பெயரிய ஒப்பின் மாபெருமை வாய்ந்த திப்பிய நூலொன்றியற்றி அச்சிடுவித்து, அதில் ஒரு புத்தகம் வெளிப்பாட்டின் முன்னர் எமக்கீந்து நோக்குமாறு செய்தார்கள்.  யாமும் நோக்குமாறு நோக்கி அறியுமாறறிந்த வழி, அஃதெமதுயிர் நண்பர் ஸ்ரீமத். பீ.ஏ.காந்திமதிநாத பிள்ளையவர்கள் குமாரர் ஸ்ரீமாந்.  அட்வக்கேட் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் பொறித்து வெளிப்படுத்திய "திருநான்மறை விளக்க" த்தை ஆயுமாற்றா லாயந்து மறுக்குமாற்றான் மறுத்த தொரு சைவக்களஞ்சிய நூலாக விருத்தலைக்கண்டு உள்ளத்து வகை வெள்ளத்து மூழ்கினேமாயினும், எமது ஆருயீர் நண்பர் புதல்வர் சைவசாத்திர முதலியவற்றிற்கும் ஆன்றோர் கொள்கைக்கும் முற்றும் மாறாக நவீனக் கொள்கைகளை மேற்கொண்டு ஆதாரம் அணுத்துணையுமின்றிப் புந்தி போனவாறே அந்தில் பொறிந்திருக்கும் விந்தையை ஒருகால் இருகாலன்றி முக்காலு நோக்கி எக்காலும் கழிபெருங் கவலைக் கடலுள் ஒருபாலழுந்தி அவர் அக்கையற வெய்தி மெய்மை யோர்ந்து உய்திறனாகச் சைவசமயாபி விருத்தி தமிழ் சமஸ்கிருத பாஷாபி விருத்தி செம்மையே செய்து இம்மை மறுமை வீடு என்னும் மும்மைப் பயனும் தவநனி துய்க்க வேண்டுமென்னும் வேணவாவே அக்காரணமென்று கடைப்பிடிக்க சமஸ்கிருதம் எமக்குமுரிய சிறந்த பாஷையென்பது முன்னர்த் தெரிக்குதுந் தேர்க.

    இனி, "தம்பொரு ளென்பதும் மக்க ளவர் பொருள்- தந்தம் வினையான் வரும்" என்ப; ஆகலின், புதல்வராகிய ஸ்ரீமான். சுப்பிரமணியபிள்ளையவர்கள் செய்யு நல்வினைப் பயன்கள் தந்தையாராகிய ஸ்ரீமத். காந்திமதிநாதபிள்ளையவர்களைச் சென்றடைந்து அவர்கட்கு நன்மை பயக்குமாகலின், அவர் புதல்வர் பழி பாவங்கட்குரிய செயலை யொழித்துப் புகழ் புண்ணியங்கட் கேதுவாகிய சற்கருமங்களைச் செய்து உய்யுமாறு அருள்புரிவான் யாம் எம்மிறையை வேண்டுதல், அவர் சற்கருமபலன், எமது நண்பராகிய அவர் தந்தையார் பாற் சென்று சேர்ந்து அவர்க்கு நன்மை பயக்க வேண்டும் என்னுங் கருத்தால் நட்பின் மிகுதிப்பாடுபற்றிச் செய்யப்பட்டதென மற்றொரு பிரகாரம் காரணங்கோடலும் ஒன்று.  என்னை? "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி - ஒல்லும்வாயூன்று நிலை," "உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே - இடுக்கண் களைவதா நட்பு" என்றா ராகலின்.

    இங்ஙனங் கொள்ளவே தந்தை மைந்தர் இருவரதும் நலமே பெரிது கருதிக் கண்ணுதல் பால் விண்ணப்பஞ் செய்தவாறு பெறப்பட்டமை காண்க.

    இங்கே இடுக்கண் என்னையெனின், "திருநான்மறைவிளக்க"த்தில் சைவசாத்திரத்திற்குஞ் சான்றோர் கொள்கைக்கும் ஒத்ததாய் ஒரு கொள்கை தானுங் காணப்படாமையானும், அத்துணையேயன்றி அடியார் அருளாற் கூறிய வாக்கியங்களையு மருளாற் றிரித்தலானும், சில வாக்கியங்கட்கு உள்பொருளை விடுத்து இல்பொருளைத் தாமாகவே படைத்திட்டுக் கூறுதலானும், பிறவாற்றானும் அவ் "விளக்கம்" சிவபிரான் றிருவுள்ளத்திற்கு முரண்பட்டதொன்றேயாமாகலின், அதுபற்றி அவரால் நிகழும் துன்பமாம்.  அது நிகழாதவண்ணம் வேண்டிக்கோடல் அவர் மாட்டுநட்புடைய வெமக்கு மரபரம்; அதுபற்றி "வேண்டுவார் வேண்டுவதே" ஈயும் விமலன் அருளுமென்பது, மைந்தர் தந்தை இருவர்க்கு முள்ள ஒற்றுமை நயம்பற்றி மைந்தர்க்கு வருவது தந்தையார்க்கும் வருவதுபோலக் கூறப்பட்டது.  அதுநிற்க.

    இனி, "திருநான்மறை விளக்கம்" என்னுஞ் சொற் புணர்ப்பை நுணுகி யுற்று நோக்கி ஆராய்வார்க்கு, "தேவர் குறளுந் திருநான்மறை முடிவும்" என்னும் ஒளவையார் அருளிச்செய்த வெண்பாவுட் போந்த 'திருநான்மறை' என்பது எவ்வாற்றானும் இப்போதுள்ள வடமொழி வேதங்களையே உணர்த்தி நிற்கும் மதுகை மிகுதிப்பாட்டை நன்கிதி னுணர்ந்த "விளக்க" முடையார், அதுதான் தமது கொள்கைக்கு நேரே மாறாயிருத்தலை யுணர்ந்து, அதனைச் சகிக்க லாற்றாவுளத்தராய் அதற்குத் தமிழ் நான்மறை எனப் பொருள் விளக்கக் கருதி, அதன் பின்னர் "விளக்கம்" என்னும் ஒரு சொற் றலைப் பெய்து "திருநான்மறை விளக்கம்" என முகப்பெயரிட்டுக் கொண்டார் என்பத் தெற்றென விளங்கும்.  அவர் அங்ஙனம் விளக்கினும் அது விளக்கும் விளக்காகாது; என்னை? ஒளவையார் தமது காலத்து வழங்கிய தேவர்குறள் முதலியவற்றோடு வழங்காத நான்மறையைச் சேர்த்து ஒன்றாகவைத்தெண்ணி "எல்லாம்  ஒரு வாசகமென்றுணர்" என அருளிச் செய்யாராகலி னென்பது.

    "நான்மறை யறங்க ளோங்க" "நான்மறைச் சைவமோங்கிப் புல்லுக வுலக மெல்லாம்" "வேதவா கமமும் வாழ்க" என்றற் றொடக்கத்தனவுமது. "ஒன்றின முடித்த றன்னின முடித்தல்" என்னும் உத்தியினால் ஆறங்கங்கட்கு மிதுவே கதியென்றுணர்க.

    இன்னும் வேதம் முன்னர்த் தமிழில் இல்லை என்பதும், 'விளக்க' முடையார் கொள்கையை உடம்பட்டு நால்வர் தமிழ் முனிவர் தமிழ் வேதஞ் செய்தாரெனக் கொள்ளினும் அது முதலூலாகாதென்பதும் முன்னர்க் கூறுதும்.

    "தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாயிருத்தல்வேண்டும்" என்று கருதித் தன் மூக்கை அரிந்து கொண்டவன் சீலம் போல, பார்ப்பனரிடஹ்ட்துக் கொண்ட கோபத்தினால் நமது, சமயத்துக்குவரும் ஏதம் நோக்காது வடமொழி வேதாகமங்கள் சிவபிரானால் செய்தருளப்பட்டன வன்றென்று கூறுதல் எவ்வளவோரறியாமை! எந்த மதத்தராயினும் தம்மவர்மீது கொண்ட கோபத்தால் தம்மத நூலைக் கடவுளருளிச் செய்ததன்று, தம்மவர் கட்டின கட்டென்று கூற யாம் இதுகாறுங் கேட்டறிந்திலேம்.  "விளக்க" முடையாரே அங்ஙனம் கூறக் கேட்டறிந்தேம்; அதுவேயுமன்றிப் பத்திரிகையில் எழுதப் பார்த்தும் அறிந்தேம்!! "கண்டன மின்றியாங் கலியின் வண்ணமே"

    இனி ஒளவையார் "திருநான்மறை" எனத் திருவை அடைபுணர்த்தோதியது அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருடார்த்த நான்கினையும் அறிவிப்பன அவையெனத் தெரித்தற் கென்றுணர்க.  என்னை? திரு என்பது பொருட் செல்வம் அருட்செல்வம் இரண்டையும் உணர்த்தும்; உணர்த்தவே, "ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே" என்ப ஆகலின், இனம்பற்றி அறமும் இன்பமும் கொள்ளப்படும்; படவே, "அறம்பொரு ளின்பம்வீ டடைத னூற் பயனே" என்ற வண்ணம் இந்நான்கையும் அவை உணர்த்துமென்றவாறாயிற்று.  இக்கருத்துப் பற்றியன்றே திருமூலநாயனார் திருமந்திரத்துள், "வேதத்தை விட்ட வறமில்லை வேதத்தி - லோதத் தருமற மெல்லா முளதர்க்க - வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற - வேதத்தை யோதியே வீடுபெற்றாரே" என்றருளிச் செய்ததூஉமென்க.

    நான் மறை என்பதற்கு "நான்கு கூறுமாய் மறைந்த பொருளுமுடை" யதெனத் தொல்காப்பியவுரையாசிரியர் கூறினார்.  நான்கு கூறு:- இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்பன, இவை வியாசர் கலந்துகிடந்த வேதங்களைப் பகுத்தகாலத்துப் புனைந்த பெயர்கள், முற்பட்ட காலத்துப் பெயர் தைத்திரியமும் பெளடியமும் தலவகாரமும் சாமமுமாம்.

            மறைந்த பொருளாவது;- ஆகமத்துள் வெளிப்படையாகக் கூறிய பதி, பசு, பாச, மென்னு முப்பொருளையும் "தத்துவமசி" என்னுமகா வாக்கியத்துட் புதைத்துக் கூறுதல், அஃதன்றி ஆகமத்துட் பதி சிவபெருமானே யென்று யாண்டுங் கிளந்தெடுத்துக் கூறுதல் போலாது, வேதத்துள் அன்னமய கோசம் பிரமம் என்றும், பின் பிராணமயகோசம் பிரமம் என்றும், பின் மனோமயகோசம் பிர்மம் என்றும், பின் விஞ்ஞான மயகோசம் பிரமம் என்றும், பின் ஆனந்தமயகோசம் பிர்மம் என்றும்  பிரமன், விண்டு முதளியோர் பிரமம் என்றும், ஐபெரும்பூத முதலியனவும் பிறவும் பிரம்ம என்றும் முன்னர்க் கூறிப் பின்னர் இது பிரமமன்று இது பிரமமன்று என ஒவ்வொன்றாகப் பூர்வ பக்கத்தை மறுத்துச் சிவமே பிரமம் என நுண்ணிதாய்த் தெரித்தவினால் மறுத்தலலயுடையதெனவும் பொருள்படும் மறையென்னுஞ் சொல்.  இக்கருத்துப் பற்றியே "அல்லையீ தல்லையீதென மறைகளு மன்மைச் - சொல்லினாற் றுதித்திளைக்குமிச் சுந்தான்" எனவும், "இதுவென லருமையி னெழுதரு மொழிகளும் - அதுவல வெனுமெனி லெவருனை யறிபவர்." எனவும் முறையே பரஞ்சோதி மாமுனிவரும், குமரகுருபர சுவாமிகளும் கூறியருளிய தூ உமென்க.

    பண்டை ஆசிரியர்கள் இம்மெய்ம்மை யுணர்ந்து கூறிய மெய்ப்பொருட்டுணிவுதேறும் அறிவின் மதுகையும் தவவாற்றலுமில்லாத அபக்குவ நவீனர் சில்லோர் தத்தமக்கு வேண்டியவாறே நவிந்து பொருந்தாப் பொருள் கொண்டு கடைபோகாதிடர்ப்படுவர்.  இது நோக்கியன்றே "உரைப்ப்பாருரைப்பவைக் கெல்லாம் யாமென் செய்வோம்" என்று கூறி அவர் நல்வினை யல்லது நோக்கித் தொல்லை நல்லாசிரியர் அவர் பொருட்டிரங்கியதூ உமென்க.

    வேதோபநிடதங்களை உற்று நோக்கி உண்மை நடைபிடித்த பெரியார் அன்னவர் கூறும் பொருள் பொருளன்றெனத் தேர்ந்து புறக்கணித்தொதுக்குவரென்பதொருதலை.

    இன்னும் வேதம் மறைந்த பொருளை யுடைத்தாயிருப்பினும் ஆகமக் கண்கொண்டு பார்ப்பார்க்கு உண்மைப் பொருள் நன்கு விளங்கும்.  அதுபோல, அதன் சாரமாகிய வேதாந்த சூத்திரப் பொருளும் மாசற்ற ஞானமுடையார்க்கே விளங்கும். ஏனையோர்க்கு எள்ளத்தனையும் விளங்காது.  இக்கருத்துப் பற்றியன்றே.   "மாசறு காட்சியர் - பார்த்துணர் பான்மையிற் பலவ கைப்படச் - சூத்திர மானவுஞ் சொற்று வைகினான்" என்றார் காந்தபுராண நூலுடையாரும்.

    இங்ஙன மிருத்தலால் மறை என்பதற்கு நச்சினார்க்கினியரும் பரஞ்சோதிமாமுனிவரும் குமரகுருபரசுவாமிகளும் கொண்ட பொருள்களே பொருள்களெனப்பட்டு ஏனையோர் பொருள் பொருளன்றெனப்பட்டவாறு காண்க.

    இனி, நான்மறை என்பது வடமொழி வேத்மோ! அன்றோ? என்னும் ஐயப்பாட்டின் கண் வடமொழி நான்மறையன்று; தமிழ்மொழி நான்மறையே என்னும் பூர்வபக்கத்தாரை நியாய வாயிலாக மறுக்கும் சித்தாந்தம் வருமாறு:-

    தமிழ்மறை காணப்படாமையானும், முதற்சங்கத் திறுதியிற் கடல்கோட் பட்டதெனின், பண்டை நூலுரைகளுட் கடல்கோட்பட்டன இவையென நன்கறியுமாறு விளங்கக் கூறியிருத்தல்போலத் தமிழ்நான்மறையும் இருந்து கடல் கொள்ளப்பட்டதெனக் கூறப்படாமையானும், சங்கத்தார் ஆய்ந்த நூல்கள் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல்களே யன்றிச் சமய நூலன்றென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த கருத்தேயா மாகலானும், "உத்தரவேதம்" எனத்திருக்குறட்குப் பெயர் போந்தது வடமொழிப் பூர்வவேதநோக்கியேயாகலானும், வில்லுபுத்தூராழ்வார் "மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே மாபாரதஞ் சொன்னநாள்" எனக்கூறி, வடமொழிப் பாரதத்தை, வடமொழி நான்குவேதத்தோடு சேர்த்து ஐந்தாம் வேதமென நிலைநிற்க வியாசர் கூறினாரென நன்கு விளக்குதலானும், இங்ஙனமே உமாபதிசிவாசாரிய சுவாமிகளும் "இருக்குமுதன் மறைநான்கி னின்றுமுத லாக விதுவுமொரு தமிழ்வேத மைந்தாவ தென்று - கருத்திருத்தி" எனப் பெரிய புராணத்தை இருக்கு முதலிய வடமொழி வேத நான்கனோடு சேர்த்து (தேவார முதலியனவேயன்றி) இதுவும் ஐந்தாவது தமிழ்வேதமெனச் சேக்கிழார்புராணத்துக் கூறியிருத்தலானும், நாமகளும், உக்கிரப்பெருவழுதி முதலிய பற்பல மெய்ப்புலவர்களும் வடமொழி வேதத்தைக் குறித்துப் பல்வாற்றானும் திருவள்ளுவமாலையாகிய சிறப்புப்பாயிரத்துள் விளக்கி அவ்வேத முண்டென நிறீஇப் பேசிப் போந்தமையானும்,

    புறச்சமய நெறிநின்று மகச்சமயம் புக்கும்
        புகன்மிருதி வழியுழன்றும் புகலுமாச் சிரம
    அறத்துறைக ளவையடைந்து மருந்தவங்கள் புரிந்து
        மருங்கலைகள் பலதெரிந்து மாரணங்கள் படித்தும்
    சிறப்புடைய புராணங்க ளுணர்ந்தும் வேத
        சிரப்பொருளை மிகத்தெளிந்துஞ் சென்றாற் சைவத்
    திறத்தடைவ ரிதிற்சரியை கிரியா யோகஞ்
        செலுத்தியபின் ஞானத்தாற் சிவனடியைச் சேர்வர்.

    ஆன்மாக்கள் வினைக்கீடாகப் படிமுறையாற் கீழ்க்கீழ்ச் சமயங்களின் நின்று மேன்மேற் சமயங்களில் வந்து, பின்னர்ப் பிரமசரிய முதலிய நான்காச்சிரம தருமங்களை இயற்றிப் பின்னர்க் கலைகளை யறிந்து, பின்னர்ப் புராணங்களைப் படித்துப், பின் வேதங்களை உணர்ந்து, பின் உபநிடதத்தை நன்றாகத் தெளிந்து, பிறவிதோறு மிவ்வாறு மேற்பட்டுவந்தால் இப்பக்குவ முதிர்ச்சியால் சைவக்கூற்றின் முடிபாகிய சித்தாந்த சைவத்தை யடையவர் எனச் சிவஞான சித்தியாருட் சோபான முறை கூறும் வழி அருங்கலை ஆரணம் புராணம் உபநிடத மெல்லாம் அதற்கு இன்றியமையாதனவாகக் கூறப்படுதலால் அவை என்று மிருத்தல் வேண்டு மாகலானும், அதன்கண் தேய விசேடங் கூறுங்காலும் "நான்மறை பயிலா நாட்டில் விரவுத லொழிந்து தோன்றன் மிக்க புண்ணியந்தானாகும்" எனக் கூறலான், அவ்வேதம் என்றும் உள்ளதென்பது நன்று பெறப்படலானும், சிவபாதவிருதயராகிய தந்தையார் வேள்வி நடாத்துதற்குப் பொருள் வேண்டும் என்று கேட்ட போது திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் சிவபிரானிடத்துப் பொற்கிழிபெற்று,

    "ஆதி மாமறை விதியினா லாறுசூழ் வேணி
    நாத னாரைமுன் னாகவே புரியுநல் வேள்வி
    தீது நீங்கநீர் செய்யவுந் திருக்கழு மலத்து
    வேத வேதிய ரனைவருஞ் செய்யவு மிகுமால்"

    எனத் திருவாய் மலர்ந்தருளிக் கொடுத்தமையானும், தம்மைத் தாமே தேவாரத்துள் பல இடங்களிலும் "முத்தமிழ் வல்லவன்" 'நான்மறை வல்லவன்" என்பன வாதியாகத் தமிழையும் சமஸ்கிருத வேதத்தையும் வேறு பிரித்துச் சிறப்பித்துக் கூறியிருத்தலானும், சுந்தரமூர்த்திநாயனாரும் "நாளு - ஞாலந்தான் பரவப்படுகின்ற நான்மறை யங்கமோதிய நாவன்" எனத் தம்மைத் தாமே சிறப்பித்துப் பாடியதனானும், அதுவேயுமன்றி "அந்தணர் வேள்வியு மருமறைத் துழனியுஞ் - செந் தமிழ்க் கீதமுஞ் சீரினால் வளர்தர" எனவும், "ஆகம சீலர்க் கருணல்கும் பெம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோரமமானே" எனவும், சமஸ்கிருத வேதாகமங்களையும் தமிழையும் வேறு பிரித்து விளக்கிக் கூறினமையானும்,

    அப்பரும் "நால்வேத மோர்ந்தோதிப் பயில்வார்வாழ்தரு மோமாம் புலியூர்" என்றற் றொடக்கத்தனவாகக் கூறியருளினமையானும்,

    "தென்னாட்டமணா சறுத்துத் திருநீறே - அந்நாடு போற்றுவித்தார் வந்தணையும் வார்த்தைகேட் - டெந்நாட் பணிவதென வேற்றெழுந்த மாமறையோர் - முன்னாக வேத முழங்க வெதிர் கொண்டார்" எனப் பன்னிரண்டாந் திருமுறைக்கண் கூறப்படலானும்,

    "வேண்டிய கல்வி யாண்டுமுன் றிறவாது" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்துள் மூன்று என்றது அது என்றும் நீ என்றும் ஆனாய் என்றும் கூறும் மூன்று பதங்களையே யாகலின், அத் "தத்துவமசி" மகாவாக்கியம் வடமொழி வேதத்தின் கண்ண தாகலானும்,

    "மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்
    நீலாங்க மேனி நேரிழை யாளொடு
    மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
    சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே"

    "பெற்றநல் லாகமங் காரணங் காமிகம்
    உற்றநல் வீர முயர்சிந்தம் வாதுளம்
    மற்றவி யாமள மாகுங்கா லோத்தாம்
    துற்றநம் சுப்பிரஞ் சொல்லு மகுடமே"

    "நந்தி யிணையடி நான்றலை மேற்கொண்டு
    புந்தியி லுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
    தந்தி மதிபுனை யரனடி நாடொறும்
    சிந்தைசெய் தாகமஞ் செப்பலுற் றேனே"

    என்றிங்ஙனம் மந்திரத்துள் மாமூலர் கூறியிருளினமையான் அவர் அவற்றைத் தமிழிற் கூறியருள வந்தார் என்பது பெறப்படுதலானும், அவ்வண்ணமே பெரியபுராணம் சான்று பகரலானும்,

    "மாமலர்த் தெரியலான் மணிமிடற் றிடைக்கி டந்த - சாமகீத மற்றுமொன்று சாமி நன்கு பாடினான்" எனவும், "மறையார் வேள்வி மந்திரச் செந்தீ" எனவும் "நரம்புறு தெள்வினி நவின்ற நான்மறை - வரம்பெறு நெறியவர்" எனவும், "வல்ல தெனை யென்னமறை வல்லவன்" எனவும், சீவகசிந்தாமணிக்கண்ணும்,

    "கற்பங் கைசந் தங்கா லெண்கண் - தெற்றே னிருத்தஞ் செவிசிக் கைமூக் - குற்ற வியாகர ணமுகம் பெற்றுச் - சார்பிற்றோன்றா வாரண வேதக் - காதியந்த மில்லை யதுவே நெறியெனும் - வேதிய னுரையின் விதியுங் கேட்டு" என மணிமேகலையினும்,

    "அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் - திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி" எனப் புறநானூற்றினும்,

    "அருமறை நாவி னந்தணர்க் காயினும்" எனச் சிறுபாணாற்றுப்படையினும்,

    "வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்று - மறைகாப்பாளர்" எனப் பெரும்பாணாற்றுப்படையினும்,

    "சிறந்த வேதம் விளங்கப் பாடி"  ***** உறையு மந்தனர்" என மதுரைக்காஞ்சியினும்,

    "நான்மறை யோர்புகழ் பரப்பியும்" எனப் பட்டினப்பாலையினும்,

    "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட" எனச் சிலப்பதிகார மங்கலவாழ்த்துப் பாடற்கண்ணும்,

    "மாட மறுகு மறையோ ரிருக்கையும்" எனவும், "நான்மறை மரபிற் றீமுறை யொருபால்" எனவும் இந்திர விழவூரெடுத்த காதைக்கண்ணும்,

    "முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி" எனக் கட்டுரை காதைக் கண்ணும்,

    "மறையோராக்கிய வாவுதி நறும்புகை" எனவும் "அருமறை யந்தண ராங்குள ராவோர்" எனவும் கால்கோட்காதைக் கண்ணுங் கூறப்படுதலானும்,

    



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

உருத்திரபசுபதிநாயனார் செபித்த உருத்திரமும் வடமொழி வேதத்தின் கண்ணதாகலானும், பரமசிவனே பரம்பொருள் என்பது தேற்ற அரதத்தாசாரியர் கூறிய இருபத்திரண்டேதுக்களுள்ளும் முதற்கண்வைத் தெண்ணப்பட்ட "உயர்காயத்திரிகுரிய பொருளாதலின்" என்னுங் காயத்திரி மந்திரமும் அதன் கண்ணதாகலானும், அவர் செய்த "சதுர் வேத தாற்பரிய சங்கிரகமும்" இப்போதுள்ள அவ்வேதங்களின் தாற்பரியமே யாகலானும், அச் சூத்திரத்திற்குப் பாடியஞ் செய்தாரெல்லாம் தத்தங் கோளை நிறுவ இப்போதுள்ள வேதங்களையும், உபநிடதங்களையும், புராணேதிகாச முதலியவற்றையுமே பிரமாணமாகக் கொண்டமையானும், அப்பதீக்கிதரும் சிவார்க்கமணி தீபிகைக்கு அவற்றையே பிரமாணமாகக் கோடலானும், அவர்க்குப் பிற்காலத் தான்றோரும் அவற்றை உடம்பட்டமையானும்,

    சைமினிமுனிவர் தாஞ் சிவதூடண பரிகாரமாக இயற்றிய தோத்திரம் முதன் மூன்று பாதமும் அவர்வாக்காகவும் நான்காம் பாதம் இப்போதுள்ள வேதமாகவும் நிலவி "வேதபாதஸ்தவம்" என்னும் காரணப்பெயர் பெற்றிருத்தலானும்,

    "பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய, பாமேவு தெய்வப் பழமறையுந் - தேமேவு, நாதமுநா தாந்த முடிவு நவை தீர்ந்த, போதமுங் காணாத போதமாய்," "சூழ்வோர் - வடிக்கும் பழமறைக ளாகமங்கள் யாவும், முடிக்குங் கமல முகமும்," ''மறைமுடிவாஞ் சைவக் கொழுந்தே" எனக் கந்தர்கலிவெண்பாவினும்,

    "பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்" "செழுமறை தெளிய வடித்த தமிழ்ப் பதி கத்தோடே," "தொடுக்குங் கடவுட் பழம்பாடற் றெடையின்பயனே நறைபழுத்த துறைத்தீந் தமிழி னொழுகுநறுஞ் சுவையே" "கலாபேதமென நின்னைக் கலைமறைகள் முறையிடுவ கண்டோ," "ஏடகத் தெழுதாத வேதச் சிரத்திருக்கு மிவள்," "சகலமுந் நின்றிருச் சொரூபமென் றோலிடுஞ் சதுர்மறைப்பொருள் வெளியிட," "துறைத்தமிழொடுந் தொன்மறை தெளிக்குங் கலைக்கொடி," என மீனாக்ஷியம்மைபிள்ளைத் தமிழினும்,

    "மறைபண்ணினாள்," "வடகலை தென்கலை பயிலுமலை" என மீனாக்ஷியம்மைகுறத்தினும்,

    "பொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம் - வழிந்தொழுகுந் தீந்தமிழின் மழலைசெவி மடுத்தனையே" "முதுபாட லெழுதா மறையோடு மிசைமுத் தமிழ் பாட," "வேத முடிவினின் முடிந்து நின்ற வழிக்கய லாகார்," "வடகலை யலபல கலையொடு தமிழ்வள ருங்கூடல்" "வடகலை தென்கலை பலகலை யும்பொலி மதுரை," "கட்புலங் கதுவாச் செவிப்புலம் புக்கு - மனனிடைத் துஞ்சி வாயிடைப்போந்து - செந்நா முற்றத்து நன்னடம் புரியும் - பல்வேறு வன்னத் தொருபரி யுகைத்தோய்," என மதுரைக்கலம்பகத்தினும்,

    "தொன்மறைக் குலங்கண் முன்னிய தியாதெனப் - பன்முறை தெரிப்பினும் பயன்கொள வரிதாற் - றேவரி லொருவ னென்றியாவரு மருளுற - நீயே நின்னிலை நிகழாது மறைத்துக் - கூறிய தாகு மாகலிற் - றேறினர் மறையெனச்  செப்பினர் நன்றே", "எழுதாக் கிளவிநின் மொழியெனப் படுதலின் - நின்பெருந் தன்மை நீயே நிவிற்றுதன் - மன்பெரும் புலமைத் தன்றே யும்பரி - னின்னோ ரன்ன ரின்மையி னின்னிலை - கூறாய் நீயெனிற் றேறுந ரிலராற் - றன்னுடை யாற்றன் முன்னர் முன்னர்த் தற்புகழ் கிளவியுந் தகுமென் றம்ம - நிற்புகழ்ந் திசைந்தனை நீயே யாக - இருடீர் காட்சிப் பொருடுணிந் துணர்த்தா - தியங்கா மரபி னிதுவிது பொருளென - மயங்கக் கூறுதன் மாண்புடைத் தன்றே - அளவில் காட்சியை யையமின் றுணர்த் தவிற் றளரா நிலைமைத் தென்ப வென்றலிற் - றன்னுடை மயக்கந் திசைமேல் வைத்துச் - சென்னெறி பிழைத்தோன் றிசை மயங் கிற்றென - மொழிகுவ தேய்ப்ப முதுக்குறை வின்மையிற் - பழமறை மயங்கிற் றென்னா முழுவதும் - எய்யா திசைக்குதும் போலும்" எனத் திருவாரூர்நான்மணிமாலையினும்,

    "செழுமறைப் பொருளீ னுரைவிரித் துமெனும் வேதா முடித்தலை மோதுகைக் காய்ப்பொடு" "இறைவியென்றுமறை கையெடுத் தார்ப்பவும்" "மறைமுடிவி னின்றுநிறை செல்வன்," "பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள்," "வேதபதி", "வேதபுரி," "இருக்கோ லிடும்பரி புரக்கோலமும்," "நான்மறை முதலி," "மூல மெனக்குல நான்மறை யோலிடு முழுமுதலே," "உயர்மறை நூற்கலை முடிவின் முடித்திடு மொழு கொளி மரகதமே," "கலைமறை யெனுமுரல் வரியளி மொய்த்த மலர்க்காவே," "பழமறை வடித்துத் தெளித்த வார்த்தை யொன்று மொழியும்," "கலைப்பா னிறைந்த முதுக்குறைவிற் கல்விச் செல்வர் கேள்விநலங் கனியக் கனிய வமுதூறுங் கடவுண் மறையு முதற்சங்கத் - தலைப்பா வலர் தீஞ் சுவைக்கனியுந் தண்டே னறையும் வடித்தெடுத்த, சாரங்கனிந் தூற்றிருந்த பசுந்தமிழு நாற," "அகில மறையு மரியு மயனு முற்றுநின் - முடியு மடியு முணர வுரிய முதல்வ," "ஆயிர மறைக்குமொரு பொருளா யிருப்பவன்," "செழுநான் மறையின் செல்வச் செருக்கே," "பழமறை யார்ப்பென வாகுதி வேட்டெழு பண்ணவ ருண்மகிழ," "வடகலை தென்கலை யொடு பயி லுங்கவி வாணர்க ளோடிவா," "பழமறை கட்கொரு முதல்வன் முழக்குக," என முத்துக்குமாரசுவாமிபிள்ளைத் தமிழினும்,

    "நால்வகைப் பொருளு நவையறக் கிளந்த----வேத புருகனு மியாதுநின் நிலையெனத்-----தேறலன் பலவாக் கூறினனென்ப----அதாஅன்று----முன்மைநான் மறையு முறைப்படநிறீஇய மன்னிருஞ் சிறப்பின் வாதரா யணனுங் கையிழந் தனனது பொய்மொழிந் தன்றே," "வனசப் புத்தேண் மணிநாப் பந்திக்------கவனவாம் புரவியிற் காட்டிக் கொடுத்துப்-------பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன்,"  "அருமறை கிளந்தநின், றிருவாக்கிற் பிறந்த ------ அறுபதிற்றாக்கிய வைம்பதிற்று முனிவருள்------ ஒருவனென் றிசைத்த விருபிற்ப் பாள,"  "இருபிறப் பமைந்த வொருபிறப் பெய்து---நான்மறை முனிவர் மூவாயிரவரும்" எனச் சிதம்பரமும்மணிக்கோவையினும்,

    "வேதந் துறைசெய்தான் மெய்துணியான் கைதுணிந்தான்," "கோமுனிவருக்குமரி தாய்முதும றைப்பனுவல் கூறியபரப்பிரமமாம்--ஓமெனுமெ ழுத்தின்வடி வாய்நடந விற்றுபுலி யூரன்," " மறைதங்கு திருமன்று" "இருக்கோலமிட்டு மின்னுமுண் ராது," "நான்மறைக்குந் துறைகண்டார் தோளிழந்தார்," "பலகலையுங் குலமறையும் பயின்றுண்ர்ந்தும் பயன்கொள்ளாது" எனச் சிதம்பரச்செய்யுட்கோவையினும்,

    கூத்தரவர்--பாடுகின்ற வேதமே," "மறைகொண்டு வாழ்த்துவதும் வம்பே," "தொல்--மறைசெய்த வொண்ணு தலை," எனச் சிவகாமியம்மையிரட்டைமணிமாலையினும்,

    "நான்மறை நவின்ற நற்பொருளிவையென--மோனவாசகத்தான் முப்பொருணவிற்றுபு--நன்னலம் புரியும்" "நல்லருட்டிறத்த னம்பிநீயே-- பல்லுயிர்த் தொகுதியும் பயன்கொண் டுய்கெனக்---- குடிலை யென்னுங் தடவய னுப்பண்---அருள்வித்திட்டுக் கருணைநீர் பாய்ச்சி---வேத மென்னும் பாதபம் வளர்த்தனை ---பாதப மதனிற் படுபயன் பலவே--அவற்றுள் ------ இலைகொண் டுவந்தனர் பலரே யிலையொரீஇத் --- தளிர்கொண்டுவந்தனர் பலரே தளிரொரீஇ --அரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை --  விரும்பினர் கொண்டுகொண் டுவுந்தனர் பலரே --- யவ்வா றுறுப்பு மிவ்வாறு பயப்ப -- ஒரும்வா தாந்தமென் றுச்சியிற் பழுத்த ---- ஆராவின்ப வருங்கனி பிழிந்து -- சாரங் கொண்ட சைவசித் தாந்தத் ---  தேனமு தருந்தினர் சிலரே," "நான்மறைக் கிழவ நற்றவ முதல்வ -- நூன்முறை பயின்ற நுண்மைசா லறிஞ --- சொற்சுவை பழுத்த தொகைத் தமிழ்க் கவிஞ" எனப்பண்ட்டாரமும்மணிக்கோவையினும்,

    "உரையாத பழமறையின் முதலெழுத்தி னொண் பொருளை," "அருமறை தெரிய விரித்தனை ****  தமிழ்தெளித்தனை,""அடுத்த நான்மறை முனிவரர் நால்வர்க்க்கு மம்மறைப் பொருள்கூற --- வெடுத்த கோலமாயானந்த வனத்து மெம்மித யத்து மிருப்போனே," "சொல்லாவது மறையே," "தொல்லை---இருக்கோல மிட்டுணராய்,""பண்ணேர் வேதம் பாடிய காசிப் பதியாய்,""தீவளருங் -- கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம் --- அஞ்சக்கரம்," "மறைமுதற் பொருளினிறைசுவையமுதினை,"" ஆன்ந்தவனத் திருப்பாரை யெங்கே காண்பார் --- பண்ணிருக்கு மறைகளுமெண் கண்ணனுங் கண்ணனுமமரர் பலருந் தாமே,"" மறை விரிக்குஞ் சிலம்படியார்," "ஓதியோதியு மிளைப்பர் வேதம துணர்த்து தத்துவமு முணர்கிலா ருணரும்வண்ணமநு பவத்திக்வந்திடுமோ ருண்மைவாசகமு ணர்த்துகேம் - ஏதினாலற மனைத்தினும்பசு வினைப்படுத் தனல்வ ளர்த்திடும் யாகமேயதிக மென்ப தன்பர்த மிறைச்சி மிச்சிலதி லிச்சையா - ராதியாரறிவ ரதுகிடக்கமது வருந்திலப் பொழுதி லேபெறற் கரியதோர்பரம சுகம்விளைத்திடுவ ததுமறுத்த வவையில்லையே" "நகர மாய்மறைச் சிகரமானதால் - அகர மாயினார் நிகரில் காசியே" "உரைத்த நான்மறைச் சிரத்தும்," எனக் காசிக்கலம்பகத்தினும்,

    "வடநூற் கடலுந் - தேக்குஞ் செந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று - காக்குங் கருணைக் கடலே" எனச் சகலகலாவல்லிமாலையினும், குமரகுருபரசுவாமிகள் கூறியருளலானும், "விளங்கிழை பகிரிந்த மெய்யுடை முக்கட் - காரண னுரையெனு மாரண மொழி" என நால்வர் நான்மணிமாலையுட் கூறப்படுதலானும்,

    நான்மறை:- தொல்காப்பியம், இறையனாராகப்பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞான போதம் என்பனவே; வடமொழி வேத மன்று; என்று கூறினார் ஒருவர்.  மற்றொருவர் இக்கொள்கையை உடன்படாமல் தமிழ்வேதம் ஆதியில் வேறிருந்தது; அது கடலாற் கொள்ளப்பட்ட தென்றார்.  ஆதியில் தமிழ் வேத மிருந்தது மெய்யானால் இருவரும் ஒரு பெயரையே கூறல் வேண்டும்.  அங்ஙனமில்லாமையால் தத்தமனம் போனவாறு கூறத் தொடங்கினர்.  முன்னவர் திருக்குறள் திருமுறைகளைத் தமிழ் வேதம் என்றல் சரியே; "மூவா நான்மறை" என்புழி நான்மறை அவற்றைக் குறிக்கும் என்பது பிழை.  "மூவாநான்மறை என்னுஞ் சொற்றொடர் ஆராய்ச்சி" என்னு நூலினால் அது நியாய வாயிலாக மறுக்கப்பட்டது.  தொல்காப்பியம் இறையனாராகப்பொருள் சிவஞானபோதம் என்பன நான்மறை என்றல் அவர் கற்பனையே! என்னை? அங்ஙனம் தொல்லாரிசியர் கூறாமையானும், முறையே அவை வெவ்வேறு பெயர் பெற்று, பெற்றதற்கேற்ற பொருளை விளக்குதலானுமென்க.  இவ்விருவரும் தம்முண் முரணிக் கூறினமையே ஆதியில் தமிழ் நான்மறை இல்லை யென்பதைக் காதலாமலகம்போல விளங்க விளக்குதலானும்.

    ஸ்ரீ தயானந்தசரஸ்வதி என்னும் மகாபண்டிதரும் சைவாகம வுணர்ச்சி யின்மையால் சைவத்துக்கு மாறுபட்டுச் சில கூறினும், தமது "சத்தியார்த்தப்பிரகாச"த்தில் "அறிவுக் களஞ்சியமாயும், தர்மஸ்தானமாயும் விளங்கும் நான்கு வேதங்களையும் தேவவாக்கெனக் கொள்ளுகின்றேன்; இவைகள் சம்ஹிதையும் மந்திர பாகமுமேயாகும்; பிழையின்றி அவைகள் தமக்குத் தாமே பிரமாணமாக இருக்கின்றன.  எனவே, அவைகளை நிறுவ வேறொருநூல் வேண்டியதின்று; சூரியன் சுயம்பிரகாசத்தால் தன்குணங்களையும் பிரபஞ்சத்திலுள்ள சகல பொருள்களின் குணங்களையும் விளக்குதல் போலவே வேதங்களும், சிட்சை, வியாகரணம், சந்தோவிசிதம், நிருத்தம், சோதிடம், கற்பம் என வேதாங்கங்கள் ஆறு, ஆயுர்வேதம், அர்த்தவேதம், தநுர்வேதம், காந்தருவவேதம் என உபவேதங்கள் நான்கு, சாகைகள் ஆயிரத்து நூற்றிருபத்தேழு.  இவைகளெல்லாவற்றையும் துணைப்பிரமாணங்களாகக் கருதுகின்றேன்." எனக் கிளந்தெடுத்துக் கூறலானும்,

    "இவையெல்லா மருமறை யாகமத்தே யடங்கியிடு மவையிரண்டு மானடிக்கீ ழடங்கும்" என்ப, ஆகலான், யாது யாது எங்கெங்கே ஒடுங்கிற்றோ அது அது அங்கங்கே யுற்பத்தியாம் மண்ணிற் கடம் போலும் என்னும் அவிநாபாவத்தால் அரனிடத்தே ஒடுங்கிய வேதாகமங்கள் தோன்றுதலும் அரனிடத்தே யென்பார் "ஆரண மாக மங்க ளருளினை லுருவு கொண்டு-------காரண னருளா னைகிற் கதிப்பவ ரில்லை யாகும்" என்வும், " மறைகளீ சன்சொல்" என்வுங்கூறிப் போந்தார் சகலாகமபண்டிதசிவாசாரியராகலானும்,

    நால்வர் தமிழ் முனிவர் தமிழ் நான்மறை செய்தனரல்லர் என்பது பசுமரத் தாணிபோற் பதித்து நாட்டப்பட்டது.  பிடுங்கவல்லம் என்பார் இழுத்துப்பிடுங்கிப் பார்க்கட்ட்டும் பார்ப்பேம்.

    இங்கே கூறிய வாற்றால் தமிழ்மறை காணப்படாமையால் காட்சி யள்வையாலும், அவிநாபாவமாகிய ஏதுக்காணைமையால் வழியளவையாலும், நூலுரைகளுட் கூறப்படாமையால் உரையளவையாலும் அறியப்படாமையால் ஸ்ரீமாந், சுப்பிரமணிய பிள்ளையவர்கள் அகவெளியிற்றேற்றுவித்த தமிழ் நான்மறை புற வெளித்தாமரையும் புன்முயற் கோடும் ஆமைமயிர்க் கம்பலமும் போல என்றுஞ் சூனியமேயாமென்பது வெளிப்படையாயவாறு காண்க.

    இவ்வுண்மையைப் பெரிதுமுண்ர்ந்த பெரியார், "அரையன்வா யுரைகள் வரைதரு முடங்கலதுவரக் காணின்மற்றவனைள் -- தரையின்வாழ் பவருண் நடுங்கியோர்ந் ததன்வாய்ச் சாற்றிய முறைசெய்வாரென்றால்-------கரையில்பே ரின்பந் தரவெமக் கிறைசொல் கட்டுரை யெனின்வேறென்னை----உரையுள வேதா கமமவ னெனக்கண் டுரைத்தவா புரிகுவ தல்லால்" என்வும், " வேதாகமவழி **** சொலற்கியைந்தேன்" எனவும், "மறைமுடிவின் றெருட்கு" எனவும், "வேத்யந் தனைத்தமிழுருவத் தொளித்தெமக் களித்தவள் ளுவரே" என்வும், இங்ங்அனங்அகிளந்தோதி அவற்றின் றோற்றநிலைக்களனும் மாண்பும் உண்மையும் நன்கனந் தெரித்தார்.

    இங்ஙன மிருந்தவாற்றான், வடமொழிக்கணும்ள்ள வேதாகமங்களே ஆன்மாக்கள் பொருட்டுச் சிருட்டியாரம்ப காலத்தில் கிவபிரானால் திருவாய்மலர்ந் தருளப்பட்ட முதனூல்களென்பது சித்தித்தவறு காண்க.

    இனிப் பிறிதோராற்றா னதன்கட்படு மாராய்ச்சி வருமாறு--- தொல்காப்பியப் பாயிரத்தில், " நான்மறை முற்றிய---அதங்கோட்டாசான்"  என்புழி நான்மறை என்றது வடமொழி வேதமோ அன்றே என்னும் ஐயப்பாட்டின்கண், "தமிழ் இயல் நூலாகிய தொல்காப்பியத்தை ஆய்ந்து அது தக்கநூலென்று முடிவு கட்டுதற்கு நான்மறைப் பயிற்சி வேண்டியதாக யூகிக்கப்படுகின்றது.  ஆதலால் அந் நான்மறை வடமொழி நூல்களென்று கருதப்படா.  தமிழ் நூல்களாமென்பது தெளிவு" என்னும் பூர்வ பக்கத்தார் கொள்கையை நியாயவாயிலாக மறுக்கின்றாம்!

    தமிழ் இயனூலாகிய தொல்காப்பியத்துள் வடமொழி நியாயங்களும் அம்மொழி வேத விஷயங்களும் விரவிக் கூறப்படுதலால் அவற்றைக் கற்றார்க்கன்றி மற்றார்க்கும் அத்தகைய நூலை இயற்றலும், அதனைக் கேட்டு இது தக்கதென முடிவு காண்டலும் சாலாவாகலான், அதங்கோட்டாசானும் தொல்காப்பியரும் அவைகளைக் கற்றவர் என்பதை நன்கிதி னுணர்ந்து தற்கு "நான்மறை முற்றிய" என்றும் "ஐந்திர நிறைந்த" என்றும் விசேடித்தார் பனம்பாரனார்.  அத்துணையேயன்றி வேறன்று.

    இக்கருத்தை ஐந்திரநிறைந்த தொல்காப்பியன் என்றமையே தெளிய உணர்த்தும்; என்னை? அவ்வியல்பினர் வடமொழி வழக்கும் அம்மொழி வேத விடயங்களும் அதனுட் கூறா தொழியாராகலான்.  வடமொழி நியாயங்களும் அதனுட் போந்தமையானன்றோ! இலக்கணக் கொத்தாசிரியரும் வடமொழி நியாயங்கள் "தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவைரார் - மூன்றிலு முழங்கு மாண்டினு மிலையேல் - வடமொழி வெளி பெற வழங்கும்" என்றார்.

    அஃதற்றாயின் "நான்மறை முற்றிய வதங்கோட்டாசான்" என்றதனால் அவர் வியாகரணங் கற்றிலர் என்பதும், "ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்" என்றதனால் அவர் வேத முணர்ந்திலர் என்பதும் பெறப்படலான், இருவரும் முறையே தொல்காப்பியங் கேட்டலும் அதனை இயற்றலும் சாலாதாலெனின், அற்றன்று; "எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான் - மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும் - மொழித்திறத்தின் - முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து - சுட்டறுத்து வீடு பெறும்" என்ப ஆகலின், முதனூற் பொருளுணர்தற்கு வியாகரணம் கருவி யெனப்படுதலான், 'நான்மறை முற்றிய' எனவே, அவற்றை முற்றக் கற்றற்குக் கருவியாகிய இலக்கணமுங் கற்றவர் என்பதூஉம், 'ஐந்திர நிறைந்த' எனவே, அது நிறையக் கற்றல் முதனூல் நிறையக் கற்றற்கேயாகலான் நான்மறை கற்றவர் என்பதூஉம் போதாலான் சாலாமை யாண்டையதென் றொழிக. அற்றன்று; இலக்கணங் கற்றன் மாத்திரையி னமைந்து முதனூல் கல்லாதாரையுங் காண்கின்ற காட்சிப் பிரமாண முண்மையால் தொல்காப்பியரும் 'ஐந்திர நிறைந்து' அவ்வளவி னமைந்தா ரென்னாமோ வெனின், என்னாம்; என்னை? தொல்காப்பியத்துப் பொருளதிகாரத்துள் வேத விஷயம் மிகவும் விரவிக் கூறப்பட்டுக் கிடத்தலா னென்க.

    அல்லதூஉம் கன்னிகா கலியாணம்வரை ஆசிரியனிடத்திலிருந்து வேதமோதலும் விரதங் காத்தலும் அந்தணர் மரபிற் பிரமசரிய நிலையாகலான் அது தடையாகாமையுமறிக.

    இனி, அகத்திய முணர்ந்து தமிழில் உலக வழக்குஞ் செய்யுள் வழக்கும் ஆய்ந்ததுபோல, ஐந்திர முணர்ந்தபடியால் சமஸ்கிருதத்தில் உலக மொழியும் வேதமொழியும் ஆய்ந்தமை தானே பெறப்படுதலுங் காண்க.  வடமொழியில் செய்யுள் வழக்கு வேதம் என்பது மாபாடியம் வல்லார் வாய்க் கேட்டுணர்க.

    இங்கே கூறிய நியாயங்களினால் "அதங்கோட்டாசான் முற்றிய நான்மறை" யும் வடமொழி நான்மறையே என்பது வாயுமுகத் தழியாத வச்சிரமலைபோல நிறுவப்பட்டமை காண்க.

    இனி முதனூலாகிய வேதாகமங்கள் சிருட்டியாரம்பகாலத்தில் சிவபிரானால் திருவாய் மலர்ந்தருளப்படாவாயின், அவை முதனூல்க ளெனப்படா! என்னை? "வினையி னீங்கி விளங்கிய வறிவின் - முனைவன் கண்டது முதனூலாகும்" என்பவாகலான்.  அதுவேயுமன்றிக் கதியடைபவரு மின்றாய்ச் சிவபிரான் செய்த சிருட்டியும் பயப்பாடிலதாய் முடிந்து,

    "உருவருள் குணங்க ளோடு முணர்வரு ளுருவிற் றோன்றுங்
    கருமமு மருள ரன்றன் கரசா ணாதி சாங்கந்
    தருமரு ளுபாங்க மெல்லாந் தானரு டனக்கொன் றின்றி
    அருளுரு வுயிருக் கென்றே யாக்கின னசிந்த னன்றே"

    என்னுஞ் சுருதிக்கு மாறாய்க் கருணைமூர்த்தி யென்னும் பெயருமின்றாய் அதனால் இறைமைக் குணமிலனெனப்படுவன் சிவபெருமான்; ஆகலான், சிருட்டி ஆரம்பகாலத்து அவன் இறைமைக்குணம் லழுவாது உயிர்கள் கதியடையுமாறு வேதாகமங்களை அருளிச்செய்தனன் என்னுங் கருத்துப்பற்றியே "ஆரண மாக மங்க ளருளினா லுருவு கொண்டு - காரணனருளா னாகிற் கதிப்பவ ரில்லை யாகும் - நாரணன் முதலாவுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாஞ் - சீரணி குருசந் தானச் செய்தியுஞ் சென்றிடாவே" என்னுஞ் சுருதி யெழுந்ததூஉ மென்க, "மாலயனிந் திரன்முதற் றேவர்க் கெல்லாங் குரவா வென்னும்" என்ற திருவிசைப்பாவுமது.

    இனி, "முனைவனாற் செய்யப்படுவதோர் நூல் இல்லை யென்பார், அவன் வழித் தோன்றிய நல்லுணர் வுடையார் அவன் பாற் பொருள்கேட்டு முதனூல் செய்தாரெனவும், அம்முனைவன் முன்னர் ஆகமத்துப் பிறந்ததோர் மொழியைப்பற்றி அனைத்துப் பொருளுங்கண்டு பின்னர் அவற்றவற்றுக்கு நூல் செய்தார் அவரெனவும், அவ்வாகமத்தினையே பிற்காலத்தாரும் ஒழுக்கம் வேறுபடுந் தோறும் வேறுபடுத்து வழிநூலுஞ் சார்பு நூலுமெனப் பலவுஞ் செய்தாரெனவுங் கூறுப.  அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்த நூலன்மையின் அவை தேறப்படா.  அல்லதூஉம் அவை தமிழ் நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியில வென்பது.

    முனைவனால் என்பது முதல் ஆராய்ச்சியிலவென்பது வரை 'வினையினீங்கி' என்னுஞ் சூத்திரவுரையின் ஓர் பகுதி.  இதன் முதற்பகுதி கொண்டே "நால்வர் தமிழ்மக்கள் தமிழில் வேதஞ் செய்தற்குமுன் வேதமில்லை" என்று ஸ்ரீமாந். அட்வக்கேட் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் "திருநான்மறை விளக்கத்" துட் கூற நேர்ந்தது.  அக்கூற்றைப் பிற்பாகம் முற்றும் மறுத்தொழித்தமையை உணரவில்லையா! உணர்ந்து வைத்தும் பிறர் இதனை எவ்வாறு காண்பார்கள் என்னுங் கருத்தினாலோ மறுக்கப்பட்ட பூருவபக்கத்தைச் சித்தாந்தமாகக் கொண்டு கூறி "அவ்வளவிலவன் மகிழுக" என்னு நியாய நெறி பற்றி மகிழ்ந்தார். அதுவேயுமன்றிப் "பொய்படு மொன்றோ புனைபுணுங் கையறியாப் - பேதை வினைமேற்கொளின்" என்னும் பொய்யா மொழிக் கெய்து மிலக்கியமாய் அறிஞர் அறிவாம் புனைபூண்டு கொண்டமை உற்றுநோக்கு மொளியுடையார் தெற்றெனவறிவர்.

    மேற்கூறிப்போந்த பேராசிரியர் உரையின் ஈற்றில் 'அல்லதூஉம் அவை தமிழ் நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியில்வென்பது' என்று கூறியிருத்தலால் அம்முதனூல் வடமொழியிலுள்ள தென்பதொரு தலையாதலின் தமிழில் முதனூல் செய்யப்பட்ட தென்னும் மதம் நிலையுதலின்றி அழிந்தொழிந்தது.  இதனாலே ஆதியிலே முதனூலெனப்படுவனவெல்லாம் முதல்வனால் வடமொழிக்க ணியற்றப்பட்டன என்பதூஉம், "களவியற்" றமிழ்நூல் ஒன்றுமே முதல்வன் இடைக்காலத்தில் அருளிச்செய்த தமிழிலக்கண முதனூல் என்பதூஉம் பெற்றாம். "ஒன்றின முடித்த றன்னின முடித்தல்" என்பதனால் வேதாகமங்கட்கு மிஃதொக்கும்; ஆயினும் பேராசிரியர்தாமே கிளந்து காட்டியதும் விளங்கக் காட்டுது முன்னர்.

    இன்னும், "தமிழ் நூலுள்ளும் தமது மதத்திற்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் செய்துகாட்டினும் அவை முற்காலத் திலவென்பது முற்கூறிய வகையான் அறியப்படும்" என்ற பேராசிரியர் கூற்றினாலே நூல்செய்யாது கூறிக் காட்டினும் அவை முற்காலத்திலவென்பது தானே போதரும்.

     இன்னும், "தாமே தலைவராவாரும், அத்தலைவரை வழிபட்டுத் தலைவராயினாரும் பலராகலின், தாமே தலைவராயினார் நூல் செய்யின் முதனூலாவதெனின், அற்றன்று; தாமே தலைவராயினோர் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலர்" என்றதனாலும் வடமொழியிலேயே முதனூல் செய்தனர் என்பது இனிது விளங்கும்.

    இன்னும், "தொகுத்தல் விரித்தல்" என்னுஞ் சூத்திரவுரைக்கண் "வேதப் பொருண்மையும் பற்றித் தமிழ்ப்படுக்குங்கால் அவற்றிற்கு மிதுவே இலக்கண மென்றற்கு மொழி பெயர்த்தலையும் இவற்றுக்கட் கூறினாரென்பது." என்றதனானே முதல்வனாற் செய்யப்பட்ட வேதாகமங்கள் வடமொழிக் கண்ணதன்றித் தென்மொழிக் கண்ணதன் றென்பது பசுமரத்தாணிபோற் பதிந்து நாட்டப்பட்டது.  ஆகலானும் நால்வர் தமிழ்மக்கள் தமிழில் வேதஞ் செய்தார் என்பதூஉம், அவர்கள் செய்தற்கு முன் வேதம் இல்லையென்பதூஉம் கற்பனைக் கூற்றாயவாறு காண்க.

    இன்னும், தமிழியனூலுள் வடமொழி வேதப் பொருண்மை பேசுதற் கோரியை பில்லையெனக் கூறிக் கல்லாரை மயக்கும் நல்லார்க்குப் பேராசிரியரும் பெருங்கூற்றாயவாறு "கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய்" என்னு முதற் சூத்திரவுரைமுகந் துரைத்த வுரை பற்றி யறிந்து கொள்க.  அவ்வுரை வருமாறு:-

    நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த்தினமையால் இது பொருளதிகாரம் என்னும் பெயர்த்தாயிற்று. 

*****பொருள்களாவன:- அறம் பொருளின்பமும், அவற்றது நிலையின்மையும், அவற்றி னீங்கிய வீடுபேறுமாம்.

    பொருளெனப் பொதுப்படக் கூறவே, இவற்றின் பகுதியவாகிய முதல் கரு உரியும், காட்சிப்பொருளும், கருத்துப பொருளும், அவற்றின் பகுதியவாகிய இயங்குதிணையும் நிலைத்திணையும், பிறவும் பொருளாம்.

    அகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளு முணர்த்துப.

                        [இந்நான்கும் வேதத்துட் கூறப்பட்டன.]

    இது வழக்குநூலாதலின், பெரும்பான்மையும் நால்வகை வருணத்தார்க்கு முரிய இல்லறம் உணர்த்திப் பின் துறவறம் சிறுபான்மை கூறுப, அப்பொருள்கள் இவ்வதிலாரத்துட் காண்க.

    பிரிதனிமித்தங் கூறவே, இன்பநிலை கூறி, "காமஞ்சான்ற" என்னுங் கற்பியற் சூத்திரத்தால் துறவறங் கூறினார், வெட்சி முதலாகவாகை யீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். "அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்" என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங் கூறினார், இந்நிலையாமையானும் இவற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார்.

    இங்ங்அனங் கூறவே, இவ்வாசிரியர் பெரிதும் பயன்படுவதோர் இலக்கணமே கூறினாராயிற்று; இதனாற்செய்த புலனெறி வழக்கினை யுணர்ந்தோர் இம்மை மறுமை வழுவாமற் செம்மை நெறியாற் றுறைபோவராகலின்.

    இங்ஙனமே நானுதல் பொருளெல்லாம் நான்முதற் சூத்திரவுரைக்கண் ஆசிரியர் தாம் முன்னர் விரித்தவாறு தொகுத்துரைத்திருக்கும் உரைபற்றியேனும் வேதப் பொருண்மை விரவப்பெற்ற திவ்வியநூலென்னும் பெற்றி தேறாதார் பிறவாறுரைப்பனவற்றிற்கு ஏ ஏ இவாறிவிருந்தவா றிஃதேயோ வென்றெள்ளி நகையாடாநிற்பர் நல்லாசிரியர் மாட்டுத்தொல் காப்பிய முதலிய, நூல்களை வழிபட்டுக் கற்றுண்மை யுணர்ந்த ஒள்ளியா ரென்க.

    "ஒரெழுத் தொருமொழியுணரக்கூறிய - சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பிடில்" எனவும், "எழுத்தறவித்தவனிறைவனாவான்" என்வும், "தந்தை யெனப்படுவான் றன்னுவாத்தியாகும்" என்வும் வருவனவற்றிற்கு மாறாக ஆசிரியனின்றித் "தாங்கற்ற நூலளவேயாகுமா நுண்ணறிவு," அந்தொஅவர் தாமென்செய்வார்!!!

    இங்ஙனம் கூறிய நூலுரையாசிரியர்கள் கருத்தை நோக்காத "திருநான்மறைவிளக்க" முடையார்" நூலே கரக முக்கோன் மமையே" என்னும் இச்சூத்திரத்துட் போந்த நூல் என்னும் பதத்திற்கு ஏடு என்று தம்மனம் போனவாறு பொருந்தாப் பொருள் கொண்டார்.  அதனை விள்க்குதும்:-

    



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

நான்கு வருணத்தில்லறத்தார்க்கும் இவை இவை உரியனவென் றுணர்த்தப் போந்த ஆசிரியர், முதற்கண்வைத் தெண்ணப்படும் அந்தணர்க்குரியன இவை யென்று மேலைச் சூத்திரத்தாற் கூறினார்.  நூல் என்பது "பூணூல்" என முன்பின் முரணாமற் பொருள் கொண்டார் அவ்வாசிரியர்.  அதற்கு அதுவே பொருளாமாறு ஏனை மூன்று வருணத்தார்க்கும் உரியன இவையென்று கூறிய பிற்சூத்திரங்களாலும் இனிது விளங்கும்.

    'விளக்க' முடையார்க்குச் சில அந்தணர்மீது தோன்றிய சீற்றம் அவர் வருக்கமெல்லாந் தாவினமையின், அதுபற்றி எமதிறைவன் நமர்க்கு முரித்தெனத்தந்த வடமொழியினும், அம்மொழி வேதாகமங்களினுந் தாவி அவற்றை வெறுக்கசெய் கொண்ட தமிழிலுள்ள தேவார முதலிய சீரிய தெய்வ நூல்களையும் திரிக்கவும் அவற்றிற்குத்திரிவுப்பொருள் கொள்ளவுஞ் செய்துவிட்டது! அதுமட்டோ! அவர் தம்மால் தமிழில் வேதாகமங்களைச் சிருட்டிக்கவுஞ் செய்துவிட்டது! அது மட்டோ! அவற்றைத் திதிக்க மதுகையிலராகவுஞ் செய்து விட்டது! அதுமட்டோ! சங்காரத்துட் படுத்தியும்விட்டது.  நன்கு விளக்குதற் பொருட்டுச் சங்காரம் வெளிப்படையாகவும் கூறப்பட்டது.

    "அரக்கரோ ரழிவு செய்து கழிவரே லதற்கு வேறோர்
    குரக்கினத் தரசைக் கொல்லமநுநெறி கூறிற் றுண்டோ"!

    என்ற வண்ணம் அந்தணர்மீது கோபம் உண்டானால் நமர்க்கு முரித்தாய வடமொழியிலும் வடமொழி வேதாகமங்களிலும் வெறுப்படைதல் நீதியா? வேதத்தைச் சுரத்தோடோதுதன் மாத்திரைக்கே நமக்கதிகாரமின்று.  அதனால் நமக்குக் குறைவியாது மின்று.  அதனைப் பார்க்கவும் பொருளைக் கேட்கவும் அதனை உணரவும் அதிகாரமுண்டு.  முதன் மூன்று வருணத்துட் பட்டாரும் ஒழுக்கந் தவறின் அவரும் வேதம் ஓதன் முதலியன செய்தற்கு அதிகாரிகளல்லர்.  அது "மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் - பிறப்பொழுக்கங் குன்றக்கெடும்" என்றதனானு நன்கறியலாம்.  அதுபோல வேளாளருள்ளும் ஒழுக்க மில்லாதார் ஒத்தை நோக்கவும், பொருளைக் கேட்கவும், அதனை யுணரவும் அதிகாரிகளல்லர் என்றால் அதனால் நமக்கு ஒத்துரித்தன் றென்பது கருத்தன்று.

    முதல் வருணத்துப் பிறந்தாரும் உபவீதந் தரித்தபின்னரன்றி வேதமோதுதற் கதிகாரிகளல்லர் என் விதிக்கப்பட்டிருத்தல்போல, ஆகம மோதுதற்கண்ணும் சிவதீக்கையின்றி அவர்க்கு மதிலாரமின்று என்ற விதியினால் அவர்க்குக் குறை நேராததுபோலச் சுரத்தோ டோதுதற்கு மாத்திரம் வேளாளர்க் கதிகார மின்றென்பதனால் குறைநேராது.  வருணத்திற்கும், ஆச்சிரமத்திற்கும், ஒழுக்கத்திற்கும் தக்கவாறு சிவபெருமானால் வேதாகமங்களுள் விதிக்கப்பட்டனவும் விலக்கப்பட்டனவும் எவ்வாற்றானும் எவ்வருணத்தார்க்குங் குறைவாகாது; என்னை? இறைவன் ஆன்மாக்களுடைய கன்மத்திற்கும் பரிபாகத்திற்கும் ஏற்பக்கொண்ட திருவுளப் பாங்கவையாகலான்.

    இனி, சிவதருமோத்தாத்திலே "சிவஞானதானவிய" லிலே,

        "பருவ முற்றிய பாவக மோர்ந்துபின்

        உருகியோதுக வோதகு முண்மையை

        மருவி வாய்வரு பாடையின் வல்லவர்க்

        கரிய வாரியத் தானு மறைகவே"

    எனக் கூறப்படுதலால் ஆரியமும் நமக்குரித் தென்பது கண்டு கொள்க.  இன்னும், இலிங்காபட்டிய முதலிய வடநூல்கள் இயற்றினோர் சூத்திரரும், அகத்திய முதலிய தமிழ் நூல்கள் இயற்றினோர் அந்தணருமம்; ஆகலானும் இருதிறத்தார்க்கு மிருபாடையு முரித்தாயவாறு கண்டு கொள்க.

    தற்காலத்து, இந்தியாவிலும் இலங்கையிலும் இங்கிலீஷ் படித்திருப்பவர்கள் அப்பாடைக்கு உரிமையில்லாதவர்கள் என்று யார்தாங் கூறுவர்? இவ்விரு தேயங்களினும் வந்து தமிழ்கற்று விற்பன்னரான் போப்பு, பேஷ்வல் முதலான் பாதிரிமார்களைத் தமிழிற்கு உரிமையில்லாதவர் என் யாவர்தாஞ்சொல்லுவர்!

    தமிழிற் கெல்லை அது வழக்கமில் காலத்து மறுபடுதல், "நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமும்-தமிழ் வரம்படுத்த தண்பனனாடு" என்னுஞ் சிலப்பதிகார வேனிற் காதிச் செய்யுளுரையானும் பெறுதும்; அங்ங்அன்மே தமிழ்ப் பாடை கற்று அதன் வழக்கறியாரையும் தமிழ்க் குரியரல்லர் என்றும், சமஸ்கிருதங் கற்று அதன் வழக்கறியாரை அதற்குரியரல்லர் என்றும், அவற்றைக் கற்பாரை அவற்றிற்குரிய ரென்றும் கூறுதல் மரபேயாமென்க.

    வடதேயத்தில் ஆரியரல்லாரும் வடமொழியாளராயும் தென்றேய்த்தில் ஆரியரும் தென்மொழியாளராயுமிருப்பக் கண்கூடாகக் காண்கின்றேம்.  அங்ங்அன மிருப்பார்க் கவை எங்ங்அனம் உரித்தன்றென மொழிய்வியலும்!

    இங்கிலீஷ்காரர் தமிழ் நிலத்திலிருத்தல் பற்றித் தமிழ்ரெனப்படவில்லை; தெலுங்கர், கன்னடர், துலுக்கர் முதலிய பலரும் வசித்தலால் அவர் அப்பெயர் பெறவில்லை, அவ்வப் பாடைபாள ராக வழங்கவுங் காண்கின்றேம்.  ஆகலான், பாடைகள் தம்மைக் கற்றுப் பயின்று வரவல்லாரைப் பெறின், அவர்க்குத் தம்பெயரை ஈயவல்லன; அத்துணையேயன்றிப் பிறிகின்று; ஆகலான் ஆரியபாடை தமக்குரித்தன்றெனவும் ஆரியர்க்கே உரித்தெனவும் நாமே கருதிக்கொண்டு ஆரியபாடையை இகழுதலும், அப்பாடையிலுள்ள நமது சமய முதனூல்களாகிய வேதாகமங்களை இகழுதலும் நமக்கே குறைவைத் தருமன்றி ஆரியர்க்கு ஒருபோதும் குறைவைத் தராது.

    ஞான நூல்களாகிய வேத சிவாகமங்களைப் பதினெட்டுப் பாடையிலும் பிறவற்றிலும் வல்ல பக்குவர் பத்தி முதலியன அறிந்து அவ்வப் பாடையில் அவ்வவர்க்குப் போதிக்குமாறும், ஆரியத்தில் வல்லார்க்கு அதனாற் போதிக்குமாறும் கடமுனிவரற்குக் கந்தமுருகன் சுந்தரமாகத் திருவாய்மலர்ந்தருளிய பொருளையுடைய "சிவதருமோத்தரத்தையும்" விளக்கமுடையார் எஓக்கித் தாமும் வடமொழிக்கும் அம்மொழி நூற்கும் உரியர் என்பது கடைப்பிடித்து எமதண்டவன் உமாதேவியார்க்கு உபதேசித்த சமத்துவமுடைய இருபாடையுள் ஒன்றாகிய அவ்வடமொழியையும் அந்நூல்களையும் இகழ்ந்து சிவபிரான் செற்றத்திற் கிலக்காகாமல் இனியேனும் விலகி யுய்யுமாறு எமது நண்பர் சேட்ட புதல்வராகிய அவர்க்குத் தெரிக்கின்றாம்.

    முதற்சூத்திரவுறைக்கண் " அரசர் வணிகர்க்கும் உரிய நூலினை ஈண்டு வரைந்தோதின தென்னையெனின், ஒருகோலுடையான் நூல்களைவானாகலின், அவனும் சிறுபான்மை அந்தணனெனப்படுமென்பது கோடற்கும், கரகமும் மணையும் உடையனென்றற்கு மென்பது.  நூலினை முற்கூறினான் பிறப்பு முறையானுஞ்சிறப்பு முஜ்றையானு மன்பது."  என்று கூறியிருத்தலானும் ஏடு என்ப் பொருள் கோடல் முன்னொடு பின் முரணிப் பொருந்தாமை நன்னர்த் தெளிக.

    " திருநான்மறை விளக்கம்" முற்றும் விபரீதப் பொருள் களையே தன்னுட் பொதிந்து காட்டும். "அறிஞர்க ணாடியேயவற்றைக் காண்கவே" யாம் "தாலிபுலாக நியாய" மாமச்சிலவற்றை ஈண்டெடுத்துக்காட்டுதல் "திருநான்மறைவிளக்கவாராய்ச்சி" யென்னு நூலைநோக்கப் புகுவார்க்கு அதன்கண் ஊக்கமுண்டாக்குதற் பொருட்டேயாம்.  என்னைகொல் ஊக்கமாமாறெனின், னூலியல் இத்தகைந்தெனநூன்முகத்திற்றெரிக்கின் அத்தகை நூலினை முற்று நோக்கல் வேண்டுமென்னும் வேணவா வுண்டாகும்; அது உண்டாகவேஉள்ளஞ்சோராது மேன்மேற் கிளருமென்க.

    தமிழ்ச்சொற் பொருள் கோடற்குக் கருவி இவை! வடசொற் பொருள் கோடற்குக் கருவி இவை! யென அவ்வப் பாடைவல்ல ஆசிரியர் மாட்டு வழிபடுமுறையின் வைத்து வழி பட்டுக் கற்றாயினும் கேட்டாயினும் அறியாதார்கூறும் அவலப் பொருள், அங்ங்அனங் கற்றுங் கேட்டும் வல்ல அறிஞர் அவைக் களத் தேறாதென்ப தொருதலையாகத் தேறுக.

    "சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய

    யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப

    கானக நாடன் சுனை"

    இப்புலனெறிவழக்குட் போந்த பதங்கட்கு அவை நின்ற நெறியே நெறியாகப் பொருள் கொண்டால் அப் பொருள் பொருத்தமுறு பொருளாகுமா?  இலக்கண நூலை முறைபிறழாது நல்லாசிரியர் மாட்டுக் கற்றுவல்லார் அங்ங்அனம் பொருள் கொள்வாரா? கொள்ளார்! இலக்கண மறியாதார் பொருள்கோண்முறை யறியா ராகலான், அவன் பொருந்தாப் பொருள் கொள்வர்: அது இலக்கணப்புலவர் முன் நிலையுதலின்றிக் கெட்டொழியு மென்னுங் கருத்துப்பற்றியே "எழுத்தறியார் கல்விப் பெருக்க மனைத்தும்- எழுத்தறிவார்க் காணினிலையாம்" என்றார் அறிவானார்ற பெரியாரும்.

    இங்ஙனம் வருவனவற்றிற்குப் பொருத்தப் பொருள் கோடற்கன்றே "ஏற்ற பொருளுக் கிசையு மொழிகளை - மாற்றியோரடியுள் வழங்கன் மொழிமாற்றே" எனவும், " அகன்று பொருள் கிடப்பினு மணுடிய நிலையினு - மியன்றுபொருண் முடியத் தந்தன ருணர்த்தன் - மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்" என்வும் இலக்கணச் சூத்திரங்க லெழுந்தனவென்க.

    மற்றென்று :- அண்னை, தமுதி, அவாய்நிலை முதலியன பற்றியே ஒரு நூற்குப் பொருள் கோடல் வேண்டும்.  அங்ங்அன்ங் லொள்ளாக்கால் முன்னொடு பின் மலைவாய்ப் பயப்பாடின்றி அழிந்தொழிதலோடமையாது அக்கொள்லார்க்குப் பெரும் பேதையார் என்னும் பெயருஞ் சூட்டி யொழியு மென்க.

    "நூலே கரக முக்கோன் மணையே

    ஆயுங் காலை யந்தணர்க் குரிய"

என்புழி, நூல் என்னும் பதத்திற்கு "ஏடு" எனப் பொருள் கொண்டது அண்மை பற்றியா? தகுதிபற்றியா? அவாய்நிலைபற்றியா? அதிகாரம்பற்றியா? சூத்திரம்பற்றியா? யாதுமின்று, இவ்வாறு பொருள் கோண்முறை யறியாது ஏடு என்று பொருள் கொண்டது,

"கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தாற்
 பெற்றதாம் பேதையோர் சூத்திரம் - மற்றதனை
 நல்லா ரிடைப்புக்கு நாணாமே சொல்லித்தன்
புல்லறிவு காட்டி விடும்"

என்னும் வெண்பாவிற் கிலக்கியமாக்கிவிட்டது.  அது கிடக்க,

    இனி, "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்"    என்புழி அறுவகைப்பட்ட என்பதனைப் பக்கம் என்பதனோடு அன்னு வயித்துப் பொருள் கொள்ளாவிடின் நூலாசிரியர் கோத்து வைத்த பொருட்கோவை குலைந்து மலைந்து உலைந்து பொருள் பயலாது வறிதாம்.  அதுபற்றியே அங்ஙனம் அன்னுவயித்துப் பொருள் கொண்டார் பேராசிரியர்;  அது 'பக்கம்' என்பதற்கு உரைத்துப் போகும் உரைப் போக்கினாலும் இனிது விளங்கும்.  அஃதுணரு மறிவாற்ற லின்றி 'அறுவகைப்பட்ட' என்பதனைப் பார்ப்பனர் என்பதனோடு அன்னுவயித்து அறுவகைச் சைவர் எனப் பொருள் கொண்டார் "விளக்க" முடையார்.  அறுவகைச்சைவர் யாண்டு கூறப்பட்டனரோ அறிகிலம்! சைவ சாத்திரங்களெல்லாம் எழுவகைச்சைவர் என்றே கூறும்.  இங்ஙனம் வாயில் வந்தன வந்தனகூற யாண்டுக்கற்றனரோ?  அங்ஙனம் பொருள் கொண்டார் 'ஐவகை மரபி னரசர் பக்கமும்" என்புழி 'ஐவகை' என்பதனை அரசரோடு அன்னுவயித்து ஐவகைச் சைவர் எனல் வேண்டும்.  அதுமட்டோ "இரு மூன்று வகையி னேனோர் பக்கமும்" என்புழியும் 'இருமூன்று' என்பதனை ஏனோரோடு அன்னுவயித்து அவரையும் அறுவகைச் சைவர் எனல் வேண்டும்.  வேண்டவே, ஆதிக்கண் அறுவகைச் சைவர் என அவர் கொண்ட எண்ணுமுறை பிறழ்ந்து பதினெழுவகைச் சைவர் என்னு மெண்ணுமுறை தோன்றும்; தோன்றவே, சைவரெனப்படுவார் யாவரையு மொன்றாக வைத்துச் பதினெழுவகைப் பார்ப்பனர் என ஒத்துட் சூத்திரஞ் செய்யாது வேறு வேறு தொகையாகவைத்து அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம், ஐவகைமாபி ரைசர் பக்கம், இருமூன்றுமரபி னே னோர் பக்கம் எனத் தொல்காப்பியர் சூத்திரஞ் செய்தமை பிழையெனப்படும், அதுமட்டோ! பார்ப்பனர் அரசர் ஏனோர் என்பனவற்றிற்குச் சைவர் எனப் பொருள் கோடற்கு நூற்பிரமாணம் வேண்டும், அதுமட்டோ! பக்கங்கள் எல்லாம் நின்று வற்றும், அதுமட்டோ! "மறுவில் செய்தி" என்பது முதலாகப் பின்னர்க் சூறப்பட்டவற்றேடு சைவர் என்னும் பொருள் சம்பந்த மின்மையால் வாகைத் திணைக்கிலக்கண மாகாது, ஆகலான், "விளக்க" மடையார் தாங்கொண்ட பொருட் கேற்பச் சூத்திரம் பிறிதொன்று செய்து கொண்டு அப்பொருள் சூறல் வேண்டும், இச்சூத்திரம் அவர் சூறும் பொருட்குச் சிறிதும் இடங்கொடாதென்றுணர்க.

    இனி, "நால்வர்க் கொளிநெறி காட்டினை" என்னுந் திருஞான் சம்பந்தமூர்த்தி நாயனார் திருவாய்மலர்ந்தருளிய திருவெழுகூற்றிருக்கைத் துணுக்கை நால்வர் தமிழ்மக்கள் தமிழில் வேதஞ்செய்தார் என்பதற்கு ஆதாரம் என்றார்.

    அத்துணுக்கையில் "நால்வர் தமிழ்மக்கள் தமிழில்வேதஞ் செய்தார்" என்ற பதங்கள் காணப்படவில்லை என்பது யாவரும் எக்காலமும் பார்த்தறியலாம்.

    சனகராதி முனிவர் நால்வரும் முன்னர் ஆலின்கீழ் ஒரு முறை வேதப்பொருளைக் கேட்டுப் பின்னர் ஒருமுறை ஆகமப் பொருளைக் கேட்டார்கள்.  அது,

 

    "மற்றது போழ்து தன்னின் மறைப்பொருள்

                வடத்தின் பாங்கர்ப்

    பெற்றிடு சனக னாதி முனிவரர்

                பின்னும் பன்னாள்

    அற்றமி றவஞ்செய் தெந்தை யருளினாற்

                கயிலை நண்ணி"

 

    "இருட்பெருங் கடலுள் யாமத் தெறிமருத்

                திடைப்பட் டாங்குப்

    பொருட்பெருங் கடலாம் வேதம் புடைதொறு

                மலைப்ப விந்நாள்

     அருட்பெருங் கடலே யெய்த்தே மமைந்தில

                துணர்வு யாங்கள்'

    மருட்பெருங் கடலி னீங்கும் வண்ணமொன்

                றருடி யென்றார்." 

 

    "நவையறு தவங்க ளாற்றி நல்லருள்,

                படைத்த நல்லோர்

    இவர்புகன் றிடலுமன்பர்க் கெளிவருங்

                கருணை வள்ளல்

    அவர்முகந் தெரிந்து நுங்க ளறிவமைந்

                தடங்கு மாறு

    தவலருஞ் சிறப்பி னன்னூல் சாற்றுது

                மிருத்தி ரென்றான்."

 

    "நந்துமுற் கடையைப் போற்ற ஞானனா

                யசனா மண்ணல்

    முந்துறை சனக னாதி முனிவார்

                தொழுது கேட்ப

    அந்தமி லாக மத்தி னரும்பத

                மூன்றுங் கூறப்

    புந்திய தொடுங்கு ஞான போதகம்

                போதி யென்றார்."

என்னுங் கந்தபுராணச் செய்யுட்களால் நன்கறியலாம்.  சைவசமய குரவர் நால்வரும் தேவார திருவாசகங்களுள் சனகராதிமுனிவரர் நால்வரும் ஒருமுறை ஆலின்கீழ் வேதப் பொருள் தெஷிணாமூர்த்திபாற் கேட்டதனையும் மற்றொரு முறை ஆகமப் பொருள் கேட்டதனையும் செய்யுளியைபுக்குத் தக்கவாறு திருவரு ளுணர்த்திய வண்ணம் அவைத்துப் பாடி யருளினர்.  இவ்வுண்மை உணராதார் ஆலின்கீழ்ச் சனகராதியர் கேட்டது வேதப் பொருள் மாத்திரமே யென்று கொண்டு தேவார திருவாசகங்கட்கு உண்மைப்பொருள் காணமாட்டாது மலைவர்.

    திருவெழுகூற்றிருக்கையுட் கூறியது ஆகமப் பொருள் கேட்டதனையேயாம். "அந்தமி லாகமத்தி னரும்பத மூன்றுங் கூறப்--புந்திய தொடுங்கு ஞான போதகம் போதி யென்றார்"  என்றதனாலும் அது நன்குவிளங்கும்.  இவ்வுண்மை உணரமாட்டாது "நால்வர்க் கொளிநெறி காட்டினை" என்னும் அத்துணுக்கை, நால்வர் தமிழ்மக்கள் தமிழில் வேதஞ் செய்தார் என்பதற்கு ஆதாரம் என்றும்,"இருட்பெருங் கடலுள்" என்னுங் கந்தபுராணச் செய்யுட்கு வேதம் என்னும் பொதுப் பொருளே கொள்ள வேண்டும் என்றும் கூறினமையால்,

    "பாடமே யோதிப் பயன்றெரித றேற்றாத

    மூடர் முனிதக்க சொல்லுங்கால்---கேடருஞ்சீர்ச்

    சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை

    ஈன்றாட் சிறப்பப் பரிந்து"

    என்னு நாலகிக் கிலக்கரயினமை பற்றியாம் பரிவுறுகின்றாம்.  ஞானம் பொற்றுத் தமிழ்வேதஞ் செய்தார் என்றன் முதலியன எட்டுணையும் பொருந்தாமை மேலுரைத்தாம்.  கடைப்பிடிக்க.

    நால்வர்க்கு ஒள்நெறி காட்டினை' என்றதனானே "இறைவன் முனிவர்க்குத் தத்துவங்களைக் கூறி உரையிறந்தபொருளை உணர்த்துங் காலத்து மோன முத்திரை யத்தனாய்த் தானாயேயிருந்து காட்ட ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்த மயமான ஒள் அம்முனிவராகிய மாணாக்கர்க்கு நிJறைதலின், அதற்குரிய மோனமுத்திரை கூறி" யதாயிற்று. இக்கருத்துப்பற்றியே "தன்னையுன்னி யென்னை யாக்கியபோழ்தேயானவ னாயினேன்" என்றார் பிறரும். இன்னும் இதனை,

    "இருவரு முணரா வண்ண லேனவெள் ளெயிறி யாமை

    சிரநிரை யனந்த கோடி திளைத்திடு முரத்திற் சீர்கொள்

    காதலமொன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி

    ஒருகணஞ் செயலொன் றின்றியோகுசெய் வாரி னுற்றான்"

    "இனையதோர் தன்மை நாட்டி யெம்பிரானுணர்த்தக் கண்டு

    சனகனே முதலா வுள்ளீர் தவலரு ஞான தோதம்

    பனுவலி னளவன் றென்னும் பான்மையைத் தெர்ந்து முக்கட்

    புனிதன தருளாற் றத்தம் புந்தியி னெடுக்கம் பெற்றார்."

   "தத்தமுள் ளொடுங்கல் பெற்ற தாபத கணத்தர் யாரும்

    முத்தொழில் புரியும் மூவா முதல்வனா முக்கண் மூர்த்தி

    மெய்த்தவ வடிவ முனி மேவினர் சூழ்ச்சி மேலோன்

    சித்திரம் புணர்த்த பாவை செயலற விருக்கு மாபோல்."

என்னுங் கந்தபுராணத் திருவிருக்தங்களாற் செவ்விதினுணர்க.

    



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

நக்கீரதேவர் தெருமுரு காற்றுப்படையுள் "மார்பொடு விளங்க வொருகை" என்வும், குமரகுருவப சுவாமிகள் கந்தர் கலிவெண்பாவுள் "மார்பகத்தில் வைத்த காதலமும்." என்வுங் கூறியருளினமையின், இலிங்கபுராணம் வாயுசங்கிதை முதலியவற்றுட் கூறப்பட்ட வண்ணம் கலியுக முடிவுதோறும் நன்னான்கு இருடிகள் வெவ்வேறு பெயர்களோடு வருவர், அவர்களுக்குச் சிவபெருமான் வெவ்வேறுருக்கொண்டு அவற்றிற்கியைய வெவ்வேறு திருநாமக் தரித்துக் குருமூர்த்தியாக வெளிபட்டு வேதாகமங்களின் பொருள்களை உணர்த்துமாற்றாலுணர்த்துவர் என்பது சித்தித்தவாறு காண்க, என்னை? மோன முத்திரைக்கை முருகக்கடவுள் துருமார்பைவிட்டு நீங்காமையான் என்க.

    மற்றுப் புறமதத்தர் சைவசாத்திர வுண்மையுணராமையால் புராணத்தைப் பொய்யென்று புகலல்போலச் சைவருள்ளும் அங்ங்அனங் கூறுவாருளரேல் அவர்கட்குச் சித்தாந்தசாத்திரங்களும் திருமுறைகளும் பொய்யெனப்பட்டுச் சமயசாத்திரமு மின்றாய்ச் சைவசமயமு மின்றாய் முடியும், என்னை?

"நாயகன் கண்ணயப்ப நாயகி புதைப்ப வெங்கும்

பாயிருளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித்

தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பிற்

றேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார்."        

 

"கண்ணுத லியோகி ருப்பக் காமனின் றிடவேட் கைக்கு

விண்ணுறு தேவ ராதி மெலிந்தமை யோரார் மாறான்

எண்ணிவேண் மதலை யேவ வெரிவிழித் திமவான் பெற்ற

பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப் பேரின்ப மளித்த தோரார்."     

 

"அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மறம தாகும்

பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும்

வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி

நரரினிற் பாலன் செய்த பாதக நன்மை யாய்த்தே."       

 

"பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்

காலனையன் றேவிக் கராங்கோண்ட -- பாலன்

மரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தங்

கரணக்போ லல்லாமை காண்."

 

"வரங்கடருஞ் செய்ய வயிரவர்க்குத் தங்கள்

கரங்களினா லன்றுகறி யாக்க --விரங்காதே

கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவJற்றை

வல்வினையே யென்றதுநா மற்று."

 

"பாதக மென்னும் பழியென்றும் பாராதே

தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் -- சேதிப்பக்

கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே

சண்டீசர் தன்செயலாற் றான்."

என்றர் றொடக்கத்தனவாகச் சிவஞானசித்தியார் துருக்களிற்றுப்படியார் முதலிய சைவசித்தாந்த சாத்திரங்களுட் புராண சரிதமே அநுபவப் பயனுக்கும் பிறவற்றிற்கும் பலப் பல இடங்களிலும் கூறப்படுதலானும், பன்னிரு துருமுறையுல் முழுதும் புராண சரிதங்களே கூறப்படுதலானும், "உயர்காயத்திரிக் குரியபொருளாதலின்" என்னுஞ் செய்யுளிற் போந்த இருபத்திரண்டேதுக்களுட் காயத்திரியை ஒழித்தொழித்த இருபத்தோரே துக்களும் புராண சரிதங்களே யாகலானும் சித்தாந்த சாத்திரங்களும் திருமுறைகளும் பொய்யெனப்பட்டுச் சமயசேத்திரமின்றாய் முடியும், முடியவே, அச்சாத்திரத்தால் உணர்த்தப்படும் சைவசமயமும் பொய்யாய் முடியு மாகலான் என்றுணர்க.

    இனி, "காது பொத்தரைக்கின்னார்" என்னுஞ் சுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்தில், "கோல வானிழற் கீழறம் பகர -- வேதஞ் செய்தவ ரெய்திய வின்பம்" என்புழி ஏதம் செய்தவர் என்று பிரித்தலோ! எது சரி? எது பிழை? என்னும் ஐயப்பாட்டின் கண், வேதஞ் செய்தவர் எனப் பிரித்தலே சரி யென்னும் பூர்வ பக்கத்தார் கொள்கையை நியாயவாயிலாக மறுக்கின்றாம்

    வேதம் செய்தவர் எனப்பிரித்தால் மோனையின்மைக் குற்றமும், பொருட்பொருத்த மின்மைக் குற்றமும் பற்றும்; ஆகலான், அங்ங்அனம் பிரித்தல் பிழை.  ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு எனப் பிரித்தால் ஒரடியுட் பல மோனை வருதற் சிறப்பும், குற்றஞ் செய்தவர் பெற்ற இன்பத்தை யானும் கேட்டு எனப் பொருட் பொருத்தச் சிறப்பும் ஒருங்கு பற்றும்; ஆகலான், ஏதம் செய்தவர் எனப்பிரித்தலே சரி.

    ஏதம் செய்தவர் யார்? ஏதம் என்னை? இன்பம் என்னை? அவற்றை அJறியுங் கூதூகல முடையேம் என்பீராயின் கூறுதும்:-

    சிவபிரான் கல்லானிழற்கீழ் யோகத் திருந்த காலத்துப் பிரமதேவர் மன்மதனை நோக்கி அப்பெருமான் யோகி னீங்கிப் போகியாகிப் புதல்வனைப் பெற்று எம்மைக் காத்தற் பொருட்டுப் புட்பபாணம் அவர்மீது போக்குதற்குக் கைலை செல்கவெனக் காரணங்கூறி அவனை ஏவியபோது அவன் ஏனைத் தேவரிடத்துப்போல என் பாணம் அவரிடத்துக் காமத்தைப் பயவாதெனக் காரணங் கூறி மறுத்து, "இங்கெனக் கடுத்ததொன்றியம்பு செய்வ லென்றனன்."

"என்னும்வேலை யமாரோ டிருந்தவேந்தன் முனிவுறா
 நன்னயந் தழீஇ யுரைத்த நமது சொன் மறுத்தியால்
அன்னபான்மை புரியினுய்தி யல்லதே லுனக்கியாந்
துன்னுசாப மிடுதும்யாது துணிவுசொல்லு கென்றனன்"

"வெய்யசாப மிடுதுமென்று வெகுளியான் மொழிந்தகேட்
டையமேனி மதனவே லழுங்கிவெய் துயிர்த்தினிச்
செய்யலாவ தென்னெனத் தெரிந்துசிந்தை தேற்றியே
வையகம் படைத்தவண்ணல் வதனநோக்கி யுரைசெய்வான்"

"கேளிதொன்று ரைப்பல்வேத கேடுசூழ் நினதுவாய்ச்
சூளின்மேலை யியல்பகன்று துன்புழந்து படுதலிற்
காளகண்டன் முன்புசென்று கடியவெய்ய கணைகடூஉய்
மாளினுஞ்சி றந்ததம்ம மற்றுமுய்ய லாகுமே"

என்று கூறிக் கைலை சென்று சிவபிரான்மீது பூம்பாணம் பெய்து ஏத மியற்றியபோது தாம் காமவயத்த ரல்லாத "உலகருள் காரணன்" என்பது உணர்த்துதற்பொருட்டு நெற்றிநாட்டத்ஹான் மதனை நீறாக்கி, வேண்டாமை யில்லா விமலனென்ப துணர்த்துதற் பொருட்டு மீளமதனை எழுப்பித் தொன்மைபோல அரசுரிமை முதலியன கொடுத்தின்பஞ் செய்தமையானும்,

    தேவர் மதனை ஏவினமாத்திரையி னமையாது தங்கருத்து முற்றுவித்தற் பொருட்டு அவன்பின்னர்க் கைலை சென்றமை,

    "பணிந்த சொல்லனாகிநாம் பணித்தவா புரிந்திடத், துணிந்தவாறு நன்று நன்று சூலிபாலி னுனைவிடாத், தணந்திடேந் தொடர்ந்து பின்பு சார்துமஞ்சல் போகெனா, உணர்ந்து கூறி மாரவேளை யோவிலன்பொ டேவினான்"  "மாரவே ளீண்டுநிற்ப மனோவதி நகரின் மேய, ஆரண முதல்வன்றன்னை யமரர்கோன் யன்னான், போரிய லுணர்வானங்கட் போதரல் வேண்டு மென்றான்."  "சதமக னினைய கூறத் தண்மலர்க் கடவு ணேராக், கதுமென வெழுந்து வானோர் கணத்துட னனையான் போற்றப், பொதிதரு கயிலை யந்தண் பொருப்பின்மே லொருசார் போகி, மதனிய றெரிந்து முக்கண் வள்ளலை வழுத்தி நின்றார்" என்னுங் கந்தபுராணச் செய்யுட்களாற் புலப்பட்டது; அத்தகைய ஏதஞ்செய்த வேதன் இந்திரன் முதலிய தேவர்க்கும் சூரனாகி யசுரரால் போந்த இடுக்கணை நீக்கிச் சத்தியலோகமும் வானாடும் அரசுரிமை முதலியனவும் கொடுத்தின்பஞ் செய்தமையானும் 'ஏதஞ் செய்தவ ரெய்திய வின்பம் யானுங் கேட்டு" என்றார்.  இங்கே கூறியவாற்றான் ஏதஞ் செய்தவர் மன்மதனும், பிரமா இந்திரன் முதலிய தேவரும் என்பதூஉம், ஏதம் மன்மதன் பூம்பாணஞ் செலுத்தி யோகத்தை நிலைகுலைக்க முயன்றதும், தேவர் அங்ஙனஞ் செய்யும்படி அவனை ஏவியதும் என்பதூஉம், இன்பம், இரதி பொருட்டு இறந்தமதனை எழுப்பியதும் அரசு கொடுத்ததும், தேவர் பொருட்டு அசுரரைக் கொன்றதும் அவரவர் பதமும் அரசு முதலியன கொடுத்ததும் என்பதூஉம் போந்தவாறு காண்க.

    இங்ஙனம் மெய்ப்பொருள் காணப்படுதலால், வேதஞ் செய்தவர் எனப் பிரித்தலும் பொருந்தாப் பொருள் கோடலும் பிழையேயாம்.

    தமிழில் நால்வர் தமிழ்மக்கள் வேதஞ் செய்தார் அதனைக் கடல்கொண்டு போயதென்று கூறின் இழுக்கென்னையெனின், அது, மேலே பல்லாற்றானும் விரித்துக் கூறியிருத்தலானும், வேத வழக்கோடும் ஆகம வழக்கோடும் மாறுகொள்வார் இக்காலத் தங்ஙனங் கூறினும் இறந்தகாலத்துப் பிறபாசண்டரும், மூவகைச் சங்கத்து நான்கு வருணத் தொடுபட்ட சான்றோரும், சங்ககாலத்துக்குப் பிற்பட்ட காலத்துத் திருஞான சம்பந்தமூர்த்திநாயனார் முதலிய சைவசமய குரவரும், மெய்கண்ட தேவர் முதலிய சந்தானகுரவரும், அவர்க்குப் பிற்பட்டகாலத்துச் சைவமடத்துப் பெரியாரும் அங்ஙனம் கூறினாரில்லை யென்பது, என்னை?' அவர் மெய்ம்மை கடைப்பிடித்த விழுமியோராகலானும், வீடு காதலித்த சேடராகலானும், பிறரும் அங்ஙனங் கூறிக் கரிபோக்கினா ராகலானு மென்க.

    இன்னும் ஆழ்வாராகிய பெரியாரும், அவர்கள் காலத்துக்குப் பிற்பட்ட இராமாநுஜாசாரியரும், மத்துவாசாரியரும், அவர்கட்குப் பிற்பட்ட வைணவ மடத்துப் பெரியாரும், மாத்துவமடத்துப் பெரியாரும் தாந்தா மியற்றியருளிய திருவாய் மோழியிலும், பாஷியத்திலும், பிறவற்றிலும் அங்ஙனம் கூறாமையும் உற்றுநோக்கற்பாலது.

    மடங்களினொப்பு நோக்கியும், தமிழ்வேத ஒப்பு நோக்கியும் இவர் சிறப்புந் தோன்ற வேறு பிரித்துக் கிளந்து கூறினாம்.

    கந்தபுராணத்தும் திருமுறையிலும் சனகராதி நால்வரைப் பற்றிப் பேசியிருத்தலே யன்றி நால்வர் தமிழ்மக்களைப் பற்றிப் பேசப்படவில்லை.  அவர்கள் "விளக்க" முடையாரால் சிருட்டிக்கப்பட்டு எவர்க்கும் எக்காலத்தும் தோன்றாத அற்புதமுடையர் போலும், அதனாற்றான் நூல்கள் அவரைப்பற்றி யாதும் பேசாதொழிந்தன.  "விளக்க" முடையார் இவரைச் சிருட்டித்தமையால் பிரமா நாணமும் மகிழ்ச்சியும் கவலையும் ஒருங்கடைவர்; என்னை?  தஞ்சிருட்டி கட்புலப்படுதலானும் இவர் சிருட்டி கட்புலப்படாமையானும், தமக்கு அதிக வேலையின்மையானும், இவர் சிருட்டிவிசேட நோக்கிச் சிவபெருமான் சிருட்டித்தொழின் முழுதும் இவர்க்கே கொடுத்துவிடுவாரோ என்னும் ஐயப்பாட்டினாலுமென்க.  அது நிற்க.

    பிறிதொன்று:- "எல்லாவற்றுள்ளுஞ் சிறந்த உஅ சைவ நூல்களையும் தென்றமிழ் நாட்டு மகேந்திரமலையில் சிவபெருமான் அருளியதாகத் தெரிதலானும்" என்றார்.

    "விளக்க" முடையார்கு அங்ஙனம் தெரியவந்தது எங்ஙனமென ஆராய்வார்க்கு "மன்னு மாமலை மகேந்திர மதனிற் - சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்" என்பதற்குத் திருவாசக வுரையாசிரியர்கள் எழுதிய கூரைகளைத் திரித்துணர்ந்தமைபற்றியே என்பது தெற்றெனப் புலப்படும்.

    தென்றமிழ்நாட்டு மகேந்திரமலையில் சிவபிரான் ஆகமங்களை அருளிச்செய்தாரென அவ்வுரையாசிரியர்கள் யாண்டு மெழுதவில்லையென்ப தாண்டுக் காண்க.  அதுநிற்க.

    மகேந்திர மெனப் பெயரிய மலையொன்றுளதெனச் சிவதருமோத்தரத்தும், கந்தபுராணத்தும் கூறப்படினும், அது, ஒரு சிவஸ்தலமென்றும், அதன்கண் சிவபிரானுக்குத் திருக்கோயில் உண்டென்றும் அவற்றுட் கூறப்படவில்லை.  மற்றென்னை கூறப்பட்டவாறெனின், எழுமலைகளைச் சொல்லுமிடத்து இதுவும் அவற்று ளொன்றெனச் சொல்லப்பட்ட அத்தனையா மென்றறிக.

    இங்ஙன மிருத்தலால் திருவாசகத்தும் திருவிளைப்பாவகத்தும் கூறப்பட்ட மகேந்திரம் மேலே சுட்டிய மகேந்திர மன்று; "திருநான்மறைவிளக்க வாராய்ச்சி"  நூலாசிரியப் பெரியார் அதனகத்துக் கூறியவண்ணம் திருக்கைலாசமலையேயென்று பலப்பல எதுக்களால் நன்கு விளங்குகின்றது.  அவற்றைக் கூறுதும்; கடைப்பிடிக்க.

    பாரதத்தில், "எம்பிரா னிமவான் றந்த - புரிகுழ லோடும் வைகும் புண்ணியப் பொருப்பைச் சேர்ந்தான்"

    "உருகிய வெள்ளி போல வுயர்முழை
        தோறும் வீழும்
     அருவிநீர் புனிதன் வேணி யமருமா
        நதியிற் றோன்ற
    உருகிய பனிவான் குன்றி லொண்பனிக்
        கடவுள் வந்து
    மருவிய தென்னத் தோன்றும் வருண * மால்
        வரையின் றென்பால்"

* - பனிக்கடவுள் வந்து மருவிய தென்னத் தோன்றும் வருணம் - வெண்மை, வெண்மையையுடைய மால்வரை - கைலாசமலை.

    "விசயன் பூண்ட பெருந்தவத்தி னிலைசிலர்க்குப் பேசலாமோ" எனக் கூறப்படுதலான், அருச்சுனன் பாசுபதாஸ்த்திரத்தின் பொருட்டுத் தவஞ்செய்த தானம் கைலைத் தென்றிசைச் சாரலென்பது பெறப்பட்டது.

    "நனைமலர் சிதறித் தொழுநுமுன் நின்ற
        நந்திமே னயனம்வைத் தருளி
    வினைபடு கேழல் வேட்டைநா மின்றே
        வேடராயாடுதல் வேண்டும்
    நினைவுற வெமது கணத்தொடிக் கணத்தே
        நீயுமவ் வுருக்கொளு கென்று
    மனைவியுந் தானுங் கிராதர்தங் குலத்து
        மகிழ்நனும் வனிதையு மானார்."

"ஓரெனந் தனைத்தேட வொளித்தருளு மிருபாதத்
    தொருவ னந்தப்
போரெனந் தனைத்தேடிக் கணங்களுடன் புறப்பட்டான்
    புனங்க ளெல்லாம்
 சீரேனல் விளைகிரிக்குத் தேவதையாங் குழவியையுஞ்
    செங்கை யேந்திப்
பாரேனை யுலகனைத்தும் பணிவுடனே புகழ்ந்திடத்தன்
    பதிபின் வந்தாள்"

"அனந்தவே தமுமிறைவ னேவலினான் ஞாளிகளா
    யருகு சூழ
அனந்தகோ டியிற்கோடி கணநாதர் வேட்டுவரா
    யருகு போத
அனந்தனா லினித்தரிக்க வரிதரிதிப் பூதலமென்
    றமரர் கூற
அனந்தமா முகமாகி யடிச்சுவடு நோக்கினா
    னடவி யெல்லாம்."

"முகதா னவனிவன்மேன் முந்தியுயிர் கவருமெனுஞ்
    சிந்தை யானப்
பாகசா தனிதவஞ்செய் பாக்கியபூ மியைநோக்கிப்
    பரிவி னோடும்
ஏகசா பமும்வணக்கி யேகினா னோகுதலு
    மிலங்கு வெண்ணீற்
றாகனா னோக்கப்பட் டணுகியதா லருந்தவன்மே
    லந்த வேனம்."

"அதிர்ந்துவரு கேழலைக்கண் டருந்தவத்தை யழிக்குமென
    வஞ்சி நாளும்
உதிர்ந்தசரு குணவொழிய வுணவிலான் விரைவினிற்றன்
    னொருவில் வாங்கி
முதிர்ந்தசினத் துடனெய்தான் முகம்புதைய வக்கணைக்கு
    முன்னே யண்டம்
பிதிர்ந்திடவின் னாணெறிந்து வேடனத னபராங்கம்
    பிளக்க வெய்தான்."

எனக் கூறப்படலானும், சிவபிரான் வேட்டுவக்கோலங் கொண்டு வேட்டுவக்கணஞ் சூழ வேத ஞாளிகள் புடைபோத உமையாகிய வேடிச்சிக்கு முன்னும் பன்றிப் பின்னுஞ் சென்று விசயனுடன் பொருத இடம் கைலைச் சாரல் என்பது பெறப்பட்டது.

    இப் பெறப்பட்ட பொருள்களையே திருமாளிகைத் தேவர் "உறவாகிய யோகமும்" என்னுந் திருவிசைப்பாத்திருப்பதிகத்தின் மத்தியின் "சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்" என்னும் வனப்பமைய,

"வண்டார் குழலுமை நங்கை முன்னே
    மகேந்திரச் சாரல் வராகத் தின்பின்
கண்டார் கவலவில் லாடி வேடர்
    கடிநா யுடன்கை வளைந்தா யென்னும்"

என்ற திருப்பாட்டின் வைத்து விளங்கப்பாடி, அதனால் அப்பதிகமுழுதிலும் மகேந்திர மென்றது வெள்ளியங்கிரியையெனத் தெள்ளிதின் விளக்கிவிட்டார்.  அதுவேயுமன்றிப் பதினொராந்திருப்பாட்டில் சோதி மகேந்திர மென விசேடித்தும் விளக்கினார்.  சோதி-வெண்மையொளி; எனவே சோதி மகேந்திரம் வெண்மையாகிய கைலாசம் என்றவாறாம்.  மகா இந்திரம் மகேந்திரம்; மிகமேலாகிய பெருமையையுடையது கைலையாதலின் மகேந்திரம் எனப்பட்டது.  அத்துணைப்பெருமை என்னையெனின், அது ஊழிக்காலத்துப்பிரளய வெள்ளத்தழுந்தாது அதன் மேல்வளர்ந் தோங்குதலும், அழியாதிருத்தலும், பதமுத்தித் தானமாயிருத்தலும் பக்குவராயகணங்கட்குத் தக்க வின்பங் கொடுத்துப் பரமசிவன் ஸ்ரீகண்ட சரீரசரீரியா யெழுந்தருளியிருக்கும் செம்பொற்றிருக் கோயிலைத்தன்னகத்துக் கொண்டிருத்தலும் முதலியவன,

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 திருவாதவூரடிகளும் இக்கருத்துப்பற்றியே,

"தூவெள்ளைநீறணி யெம்பெருமான்
    சோதிமகேந்திர நாதன்வந்து
தேவர்தொழும்பதம் வைத்தவீசன்"

என்று திருவாசகத்துள் அருளிச் செய்தார்.  ஆண்டவன் திருக்கைலையினின்று ஆசாரியமூர்த்தமா யெழுந்தருளி வந்தமையை அடிக்கடி அடிகள் கூறுதலைத் திருவாசக்த்துட் பரக்கக்காணலாம்.  ஈண்டுஞ்சோதி யென்ற அடைதானே மகேந்திரம் கைலை என்பதை நன்கு விளங்குகிற்று.

    இங்ஙனமே ஓரோரிடத்துப் பொதுவாகக் கூறிப் போந்தவற்றை அடைமுதலியவற்றாற் சிறப்பாக உணர்த்திப் போதல் ஆசிரியர்வழக்காறாதலை நல்லாசிரியரிடத்துப் பயின்ற இலக்கிய விலக்கணப்பயிற்சியுடையார் நன்கறிவர்.

    கைலைக்கு நொடித்தான்மலை என்னும் ஒருபெயர் காரணத்தா லெய்தியது போல,

    "ஊழிதொறூழி முற்று முயர்பொன் னொடித்தான் மலை"

    "நிலவு மெண்ணி றலங்களு நீடொளி
    இலகு தண்டளி ராக வெழுந்ததோர்
    உலக மென்னு மொளிமணி வல்லிமேல்
    மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை"

    என்றற் றொடக்கத்தனவாக வெண்ணிகந்த பெருமை இலக்கியங்களுட்கூறப்படலால், அப்பெருமை காரணமாக மகேந்திரமெனவும் ஒரு பெயர் பண்பாகு பெயராய்ப் போந்தவாறுகண்டுகொள்க.  மகா - பெருமை, மிகுதி முதலியவற்றை விளக்கும் உபசர்க்கம்.  இந்திரம் - மேன்மை.

    இன்னும் அடிகள்,

"வேடுரு வாகி மகேந்தி ரத்து
    மிகுகுறை வானவர் வந்து தன்னைத்
தேட விருந்த சிவபெருமான்
    சிந்தனை செய்தடி யோங்க ளுய்ய
ஆட லமர்ந்த பரிமா வேறி
    யையன் பெருந்துறை யாதி யந்நாள்
ஏடர்களை யெங்கு மாண்டு கொண்ட
    வியல்பறி வாரெம் பிரானா வாரே"

    என்னுந் திருவாசகத்தானும் மகேந்திரம் கைலை யென்பதை நன்கு விளக்கியவாறு காண்க.  என்னை?  தேவர் குறைநேரின் கைலைக்கு வந்து சிவபிரானைத் தரிசித்துத் தங்குறை கிளந்து அநுக்கிரகம் பெறுதல் இயல்பு.  அருச்சுனன் பொருட்டு வேடுருக்கொண்டு கையிலையிலிருந்த ஞான்று 'மிகுகுறை வானவர்' வந்து, காளகண்டம் மான்மழுச் சதுர் புயங்களோடு சீகண்ட சரீரியாய் என்றும்போல இறைவரிருக்கக் காணாமையின் எம்பெருமான் எங்கே போயினரோவென் றெண்ணித் தேடும்படி யிருந்தமையால் என்க.  அக்கைலாசபதியே தமக்காகப் பாண்டியனுக்குப் பரிமாக் கொணர்ந்தவரென்பார் தேடவிருந்த சிவபெருமான், ஐயன், பெருந்துறை ஆகி அடியேங்களுய்யச் சிந்தனை செய்து அந்நாள் ஆடலமர்ந்த பரிமா ஏறி ஏடர்களை எங்கும் ஆண்டு கொண்ட என்றார்.  ஏடர் - அன்பர். தம்மோடு அரிமர்த்தனபாண்டியன், வந்தியாகிய பிட்டுவாணிச்சி என்னும் இருவரையுஞ் சேர்த்து ஏடர்களை யெனப் பன்மையாற் கூறினாரென் றுணர்க.

அஃதற்றாக,

"மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"

என்பதன் பொருளுணர்த்து முகத்தானும் மகேந்திரங் கைலையெனத் தேற்றல் வேண்டுமென்பீராயிற் றேற்றுதும்:-

ஒரு காலத்துத் தேவர்கள் சிவபிரானை நோக்கித் தொழுது துதிக்க, அதற்கு மகிழ்ந்து அவர் பிரசன்னமாக, அவர்கள் அன்போ டவ்வாண்டவனைப் பூசனைபுரிதல் வேண்டுமென்ன, பெருமான் சூரியமண்டலத்தூடு விளங்கும் நான்முகத்தோடு தோன்ற, அத்தேவர் விதிப்படி பூசைபுரிந்தனர்.  அது செய்யத் திருவுள மகிழ்ந்து தேவர்கட்கு ஆகமம் இருபத்தெட்டையும் கொடுத்து மறைந்தனர்.  கொடுத்த வாகமம் பலநெடுங் காலங்கழிய இறந்துபோதலும் உமாதேவியார் அவற்றை மீளவுந் தோற்றுவிக்கவேண்டுமென்று இறைவற்கு விண்ணப்பஞ் செய்ய அவர் தோற்றுவித்தார்.  அது-

"தொழுதனர் துதிப்பக் கொன்றைவே ணியனு
    மகிழ்ந்தனந் துதித்ததற் கென்ன
உழுவலன் போடு பூசனை புரிய
    வேண்டுமா லென்னலு மொளிரும்
மழகதி ரிரவி மண்டலத் தூடு
    வயங்குநான் முகத்தோடு தோன்றப்
பழுதறு தேவ ரருக்கிய முதவிப்
    பாற்படப் பூசனை புரிந்தார்."

"பூசனை புரியவுளமிக மகிழ்ந்து பொன்னுல
    குறைபவர் தமக்கு
மாசற விரிந்த வாகம முழுதும்
    வழங்குபு மறைதலு மற்றை
ஏசலொன் றில்லா வாகம நோக்கி
    மறையவ ரெழின்முடி யாசர்
ஆசிலா வணிகர்* பூசனை புரிதற்
    குரியரென் றறைந்துபோ யினரால்."


* வேளாளர்க்கும் வணிகர்க்கும் வேள்வி வழிபாடொழிந்த தொழிலெல்லாம் ஒத்தலின், வேளாளரை வேறு கூறாது வணிகருளடக்கிக் கூறினார்.  இக்கருத்துப் பற்றியே தொல்காப்பியரும் "இருமூன்று திறத்தி னேனோர் பக்கமும்" என்று வணிகரையும் வேளாளரையும் வேறுபிரித்துக் கூறாது ஒன்றாகக் கூறியதூஉ மென்க.  இங்ஙனஞ் சாத்திரவரம்பிற் கேற்ற சமாதானங்காணமாட்டாத வேளாளருளொருசாரார் சாதி வரம்பழித்துத் தாமும் புலையராய் நிரயம் புகுத முயன்று,

    "சாதிநான் கிழந்த னந்தஞ் சாங்கர சாதி பல்கி" எனவும், "விதிநிலை முறைவ ரம்பு விடுத்தழிந் தெவரு மொன்றாய்ப் - பதினறு வயதின் மூப்புப் பழுத்துமாய்ந் தொழிவ ரன்றே" எனவும் போந்த இலக்கியங் கட் கிலக்கணம் புதுக்குதல் "கலியின் வண்ண" மே காண்மின் காண்மின்!!


கொடுத்தவா கமந்தா னாள்பல கழிய
    விறத்தலுங் கொங்கலர் கூந்தல்
மடத்தகை யுமையா ளிறைவனை நோக்கி
    மாய்ந்தவா கமமெலா மெடுத்து
நடத்திட வேண்டு மென்னலு மைத்த
    நள்ளிரு ணடுவணின் றாடும்
விடைக்கொடி யுயர்தோ னாகம முழுது
    முன்புபோல் விளங்கிட விரித்தான்.

என்னும் வாயுசங்கிதையால் இனிது விளங்கும்.

    இனி அத்திருவாசக அடிகட்குப் பொருள் கோண்முறை யாமாறு: - சொன்ன ஆகமம் - (மாய்ந்த வாகமமெலாம் எடுத்து நடத்திட வேண்டுமென்று" இறைவி) விண்ணப்பஞ் செய்யப்பெற்ற ஆகமங்களெலாவற்றையும், - மன்னும் - ஊழிக்காலத்தும் அழியாது நிலைபெறும், - மாமலை மகேந்திரம் அதனில் - கைலாசமலையாகிய மகேந்திரமலையில், - தோற்று வித்தருளியும் - வெளிப்படுத்தியருளியும் என்க.

    கைலாசமலை,

"கீணி லாவுறு முலகெலா நீங்கியே கீழ்போய்ச்
சேணி லாவுறு பதமெலா முருவிமீச் சென்று
மாணி லாவுறு மண்டத்தி னடிமுடி மருவத்
தாணு வாயுல கிறுதியி னிற்பதச் சயிலம்"

    என்ப வாகலின், மாமலை யெனப்பட்டது.  உலகிலுள்ள மலைகளெலாவற்றுள்ளும் பெரியமலை என்றபடி.  மாமலை மகேந்திரம் என்பது இருபெயரொட்டுப்பண்புத்தொகை. "மாமலையின் றென்பால்" என்புழியும், மாமலை கைலாசமெனப்பட்டது காண்க.

    இன்னும், கீர்த்தித்திருவகவலின் "தில்லை மூதூ ராடிய திருவடி" என்று ஆரம்பித்து, அடுத்ததல மகேந்திரமாகக் கூறினர்.  முடிக்கும் பொழுதும் அம்முறையே "பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்" எனவும், "ஒலிதரு கயிலை யுயர்கிழ வோனே" எனவும் கூறித் தில்லைக்கும் புலியூர்க்கும் மகேந்திரத்திற்கும் கைலைக்கும் சம்பந்தந் தெரித்து இரண்டும் ஒன்றென விளங்கவைத்த வாறுங் கண்டுகொள்க.

    இன்னும் இவ்வகவலுள் "மந்திர மாமலை மகேந்திர வெற்பன்" எனவும் போற்றித்திருவகவலுள்" மந்திர மாமலை மேயாய் போற்றி" எனவுங் கூறி மகேந்திரங் கைலாசமென விளக்கினார். என்னை?

    மந்திரம் - கோயில், கைலாசமலையில் நவரத்தினகசிதமான செம்பொற்றிருக் கோயி லொன்று தேவரு மருளுமாறு பேரழ கோடுள்ளது.  அக்கோயில் பொருந்திய கைலாசம் என்பது பொருளாகலான் என்க, அதனை,

"அன்னதோர் கைலை நாப்ப ணம்பொனின்
    சுடர்மேல் கொண்ட
நன்னெடுஞ் சிமயத் தோந்த னவையொரீஇ
    நண்ணிற் றென்னக்
கன்னியங் காப்பு மேவிக் கதிர்மணிக்
    கற்றை சுற்றிப்
பொன்னெடுங் கோயி லொன்று பொலிவொடும்
    பொருந்திற் றன்றே"

"திணிகதி ராரந் தன்னிற் சிறந்தவச்
    சிரத்திற் செக்கர்
மணிதனின் முழுநீ லத்தின் மற்றைய
    வெறுக்கை தன்னிற்
பணிபட வருளாற் றானே பலித்திடு
    சிகர மாதி
அணியினுக் கணியாய் வைகு மாலயச்
    சூழ லெங்கும்"

"என்றுமீ றென்ப தின்றி யிருந்திடுங்
    கைலை வெற்பிற்
பொன்றிகழ் நகரந் தன்னுட் பொருவிலாக்
    கோளு நாளும்
துன்றிய தன்மைத் தென்னத் தூமணிக்
    கதிர்கள் சூழ
 மன்றம ருறையு ளொன்று வனப்பொடு
    வைகிற் றன்றே"

என்னுங் கந்த புராணத்திருவிருத்தங்களாற் றேர்க.

    மந்திரம் செம்பொற்றிருக்கோயில், இனி மந்திரமெனப் பொருள் கொண்டால் அது ஆகுபெயராய்ச் சாமானியசுருதி பிரபல சுருதிகளை யுணர்த்து மெனக்கொண்டு அச்சுருதிகளை வெளிப்படுத்துதற்கு முக்கிய ஸ்தானமாகிய கைலை என்றலுமாம்.

    இனி, சிவபெருமான் சதாசிவதத்துவ புவனத்திருந்து சத்தி சதாசிவன் முதலாயினார்க்குச் சொல்லியருளிய ஆகமங்களைத் திருநந்திதேவர் சனகராதி முனிவர் பொருட்டு மகேந்திரமாகிய கையிலையில் வெளிப்படுத்தினார் என்றலுமொன்று, அது,

    "சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
    உவமா மகேச ருருத்திர தேவர்
    தவமால் பிரமீசர் தம்மிற்றாம் பெற்ற
    நவவா கமமெங்க ணந்திபெற் றானே"

என்னுந் திருமந்திரத்தானு முணர்க.

அஃதொக்குமன்னாயினும்,

    "கேவேட ராகிக் கெளிறது படுத்து
    மாவேட் டாகிய வாகமம் வாங்கியும்
    மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து
    உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்"

என்னுஞ் சொற்றொடர்ப் பொருள்கோளானும் மகேந்திரங் கைலையாதலையறிய வெஃகினோம் என்பீராயின் அதனையும் கூறுதும்:-

    கேடவேடர் ஆகி - வலைவாணராகி, - மா வேட்டு ஆகிய - மகா லக்குமியெனக் கூறி வேதம் போற்றும் உமையாகிய இறைவியைத் தாம் மணத்தல் நிகழும்படி; கெளிறு அது படுத்து - அறவேற்றை வலையகப்படுத்து, - ஆகமம் வாங்கியும் - அது சிரத்திடத்துக் கொண்டிருந்த ஆகமங்களைத் தாம் எடுத்தும், - மற்று அவை தம்மை - அவ்வாகமங்களை, மகேந்திரத்து இருந்து - கைலாசமலையில் எழுந்தருளி யிருந்து, - உற்ற ஐமுகங்களால் பணித்தருளியும் - அவ்வாகமங்கள் முன்னரே இருந்து வெளிப்பட்ட ஐந்து திருமுகங்களாலும் இறைவிக்கு உபதேசித்தருளியும் என்க.

    கெளிறது என்பதில் அது பகுதிப்பொருளது.  படுத்தல் வலையகத் தகப்படச்செய்தல்.  மா- மகாலக்குமியாகிய உமை, வேட்டல் வேட்டு என முதனிலையாய் நின்றது.  ஆகிய என்பது செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  வாங்குதல் - எடுத்தல், உம்மை எண்ணும்மை.  இனி "மிக்கோரிகழ் பற்றொன்றினு முண்மை - கற்றார்தொழு மருணாசலம்" என்புழிப்போல எதிர்மறை யும்மை என்றலுமாம்; வாங்காமலும் பணித்து வாங்கியும் பணித் தென்க.   மற்று அசை, தமமும் அசை உற்ற ஐம்முகம் ஆகமங்கள் பொருந்தித் தோன்றுதற்கிடமாகிய ஐந்து முகம்.  பணித்தருளல் ஒருசொல்லிவிழுக்காடு; உபதேசித்தல் என்றபடி, இனம் பற்றிச்சுறவேறு கெளி றெனப்பட்டது; "இமைய வில்வாங்கிய வீசன்" என்புழி மேரு இனம்பற்றி இமயம் எனப்பட்டாற் போல.

    இனி, (ஆகிய - தமதாஞ்ஞையால்) உண்டாக்கிய, - கெளிறது - திருநந்தி தேவராகிய கெளிற்றை, - படுத்து - வலையகப்படுத்தி, - ஆகமம் வாங்கியும் - (அதன் சிரத் துற்ற) ஆகமங்களை எடுத்துக்கொண்ட சிவபிரானும், - மா வெட்டு - மகா லக்குமியாகிய உமையை மணந்து, என்றலுமாம்.  இப்பொருட்கு வாங்கி பெயர்.  "தோற்றிய திதியே யொடுங்கி" என் புழி ஒடுங்கி போல, உம்மை உயர்வு சிறப்பு.

    எவ்வெம் முகத்தில் எவ்வெவ்வாகமங்கள் தோன்றினவோ அவ்வம் முகத்தால் அத்தோற்ற முறைப்படி அவ்வவ்வாகமங்களை உபதேசித்தார் என்பது விளக்கிய உற்றவைம் முகங்களாற் பணித்தருளியும் என்றார்.

    ஆலவாயடிகள் இறைவியை நோக்கி வலைஞர் மகளாகப் போந்திரு; நாம் வந்து வதுவை அயர்ந்து வருகுதுமெனப் பண்டு வழங்கிய திருவாக் கொருவாதவண்ணம் ஓர் வலைஞராய் வலைச்சேரி வந்தாராக, அவர்வடிவழகு கண்ட சேர்ப்பன் "நம்பிநீ யாரை யென்ன" அதற்கவர் "தனிவலையுழவனல்ல ** மைந்தன் யானென்ன"

"தொண்டுறை மனத்துக் கானற் றுறைமக னஃதே லிந்தத்

தண்டுறை யிடத்தோர் வன்மீன் றழலெனக் கரந்து சீற்றங்

கொண்டுறை கின்ற தைய குறித்தது பிடித்தி யேலென்

வண்டமர் கோதை மாதை மணஞ்செய்து தருவ லென்றான்"

    ஆகலான், அதற்கியையக் கேவேடராடி மாவேட்டு ஆகிய கெளிறது படுத்து என்றருளிற் றடிகள், செய்யுளாதலின் முறை பிறழ்த்திக் கூறிற்று,

    சுறவிடத்து வாங்கிய ஆகமங்களை உத்தரகோசமங்கையில் உபதேசித்தார் என்னும் புராணவசனாஹ்தோடு கைலையில் உபதேசித்தார் என்றால் மறுதலைப்படுகின்றதீ யெனின், அற்றன்று; என்னை? உத்தரகோசமங்கையில் ஒரு முகத்தோடிருந்து உபதேசித்த வாகமங்களையே ஐம்முகத்தோடிருந்து தோற்ற முறைப்படி உபதேசித்தருளால் வேண்டுமென்றம்மை இரப்ப இறைவன் அங்ஙனஞ் செய்தான் என்பது,

"வெள்ளி மால்வரைக் கைலையில் வீற்றிருந் தருளித்

துள்ளு வார்புனல் வேணியா ரருள்செயத் தொழுது

தெள்ளு வாய்மையி னாகமத் திறனெலாந் தெரிய

உள்ள வாறுகேட் டருளினா ளுலகையாளுடையாள்"

    என்னும் பெரியபுராணத்தால் நன்கு விளங்கக் கிடத்தாலானென்க,

    இன்னும் சிவபெருமான் வேதாகமங்களைப் பக்குவராகிய சனகராதிமுனிவர்க்கும் பிறர்க்கும் வேண்டிய வேண்டிய போதெல்லாம் உபதேசித்தற்கு முக்கியஸ்தானமாகக் கொண்டு விரும்பி எழுந்தருளியிருக்கும் திவ்விய ஸ்தலம் திருக்கைலாச மலையேயாமென்பது,

"இமையகிரி வடகுணபர லிமையவர்க டொழுதேத்த

உமையுடனே பசுபதிதா னுறைவனொரு கிரிமிசையில்

தமையுணர்ந்த தபோதனருந் தங்குவரச் சயிலத்தில்

கமையுடியா ரதன்பெயரைக் கைலையெனக் கழறுவரே"

"ஆகமங்க ளனைத்தினையு மருமறைக ளொருநான்கும்

மோகமற முனிவர்க்கு மொழிந்தருள வொழிந்தனவும்

மாகருமோ மாலயனு மலர்தூவித் தலைவணங்க

ஏகனிறையதன்மிசையு மிருக்கவிரும் பினனினிதே,"

    என்னுஞ் சிவதருமோத்தாத் திருவிருத்தங்களானு மறிக,

    பசுபதி யுறைவ னென்னாது உமையிடனே பசுபதிதானுறைவன் எனவும், மாகரும் மாலயனும் மலர்தூவி வணங்க இருப்பன் எனவும் உடன் புணர்த்திக் கூறினமையின் உமை, மாகர், மால், அயன் முதலாயினார்க்கும் ஒவ்வோர் காரணம்பற்றி வேதாகமங்களை ஒவ்வோர் காலத்து ஆண்டே உபதேசிபார் என்பது செவ்விதிற் றெரிந்து கொள்க,

    இங்கே எடுத்துக் காட்டிய அதிப்பிரபலப்பிரணங்களாலே, மகேந்திரங் கைலாசமலைதான் என்பது நிறுவப் பட்டது; படவே, ம-m-m-ஸ்ரீ, சுப்பிரமணியபிள்ளையவர்கள் தமிழ்நாட்டுட்பட்ட மகேந்திரமலையில் சிவபிரான் ஆகமங்களைத் தமிழிற் கூறியருளினார் என்னுங் கற்பனை கழிக்கரைப் புலம்பலும், கானகத்துப்புலம்பலு மாயவாறு கண்டுகொள்க.

    நிலவுலகத் துயிரோம்பு நீதிமன்னன் இவையிவை செய்யலாம் இவையிவை செய்யலாகா வென மக்கட்டுத் தெரிக்கும் நீதிநூலை அவர்கட்குக் கொடுத்து, அதின்படி ஒழுகுவோர்க்கு நன்மையும் ஒழுகாதார்க்குத்தண்டமுஞ் செய்து காப்பான். அதுபோல, ஈரேழு பதினான்குலகிற்கும் இறைவராகிய நடராச வள்ளலும் விதி விலக்காகிய புண்ணிய பாவங்களைத் தெரிக்கும் முதனூலாகிய வேதாகமங்களைத்தேவர் மக்கண் முதலியோர்க்குக் கொடுத்து அவற்றின்படி ஒழுகுபவர்க்கு இன்பமும் ஒழுகாதவர்களுக்குத் துன்பமும் கொடுத்து ஒம்புவார், அது,

"ஆணையா லவனி மன்ன னருமறை முறைசெய் யாரை

ஆணையிற் ற்ண்டஞ் செய்து மருஞ்சிறை யிட்டும் வைப்பன்

ஆணையின் வழிசெல் வோருக் கரும்பதி செல்வ நல்கி

ஆணையும் வைப்ப னெங்கு மாணையே யாணையே காண்"

"மறைகளீ சன்சொ லச்சொல் வழிவாரா
    வுயிரை வைக்கும்
சிறைகண்மா நிரய மிட்ட பணிசெய்வோர்
    செல்வத் தோடும்
உறையுமா பதிக ளும்ப ருலகங்கள்
    யோனிக் கெல்லாம்
இறைவனா ணையினா லின்பத் துன்பங்க
    ளியைவ தாகும்"

என்னுஞ் சிவஞானசித்தித் திருவிருத்தங்களினா லறிக.

    இவ்வாறு அரசன் முறையின் வைத்து இறைஅவன் முறை உணர்த்திய சித்தாந்த சாத்திரத்தைச் சிறிதுமோராது, சைவ சமயிகளாகிய நாமெல்லாம், இறைஅன் நம் பொருட்டிரங்கித் தந்த வேதாகமங்களை விடுத்தொழித்து வெறுங்கையோடு வீதியினின்று தவிக்குமாறு செய்யக் கருதி, வேதங்கள் ஆரியர் கட்டின கட்டு என்றும், சைவர்கட்கு அவை பிரமாண நூல்களன்றென்றும், சிவபெருமான் தமிழில் வேதஞ் செய்தருளினார் என்றும் உலகந் தோன்றிய நாண்முதல் இதுகாறும் ஒருவருஞ் சொல்லாத நவீனக் கற்பனையாகிய ஒஆரடிநிலை பாரித்தார் "திருநான்மறைவிளக்க" முடையார்.

    இவரது பெலமற்ற வடிநிலை யாமெடுத்துக் காட்டிய இரும்பெரும் வச்சிரக் காட்டாகிய ஊழிப் பெருவெள்ளத்தான் மோதுண்டு இருந்தவிடமுந் தெரியாமற் கரைந்து போயிற்று.

    ஆகலான் மெய்ம்மைச் சைவசமயிகளே! இப்போதுள்ள வடமொழி வேதாகமங்களே இறைவன் சிருட்டியாரம்பகாலத்தில் நம்பொருட்டு அருளிச்செய்த முதனூல்களென்றும், "விளக்கமுடையார் கூறியபடி தமிழில் முதனூல் இறைவன் செய்திலன் என்றும், அதனால் கடல்கொண்டு போயதென்றது அவரது கட்டுவார்த்தை என்றும், நன்றாகத் தேறி அவரை வேதாகம விரோதியெனக்கொண்டு புறப்புறத்தினும் புறப்புறச் சமயத்தவராக வெண்ணி, அவர் சொற் கேட்பின் ஆன்மலாபமிழந்து நரகத் தெய்துதல் ஒருதலையெனத் துணிந்து, அவர் சொற் கேணாது வேதாகம வழி யொழுகி விமல னருள் பெறு நிலைமையை விடாதுபற்றிச் செவ்வனே உய்தி பெறுவீராக.

    எமதன்பர் குமாரர் ஸ்ரீமத். சுப்பிரமணியபிள்ளையவர்களும் இவ்வுண்மையை ஒர்ந்து "கொடிறும் பேதையுங் கொண்டது விடாது" என்னுந் திருவாசகக் கூற்றிற்குச் சரியான விலக்கியமாகாது, உண்மை கண்டுழியும் அவ்வனவிலமையாது வெற்றுரை பேசித் தமதறியாமையை மேலும் மேலும் வெளிப்படுத்தும் பிறர் போலாது அமைந்து நன்மை பெறுவாராக.

    



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இனி, சுந்தரமூர்த்திநாயனார் கைலைக் கெழுந்தருளிய போது வழியிடைத் தாமருளிச்செய்த "தானெனை முன் படைத்தான்" என்பதை முதலாகவுடைய நொடித்தான்மலைத் திருப்பதிகத்தை, அஞ்சைக்களத்தப்பர் சந்நிதி வரயிலாக உஅலகிற் கறிவுறுத்துமாறு ஆழிநீரரசனாகிய வருணனிடம் கொடுத்தார் என்பது,

"ஊழிதொறூழி முற்று முயர்பொன் னொடித்தான் மலையைச்

சூழிசை யிகரும் பின்சுவை நாவல வூரன் சொன்ன

ஏழிசை யின்றமி ழாலிசைந் தேத்திய பத்தினையும்

ஆழி கடலரை யாவஞ் சையப் பர்க்கறி விப்பதே"

    என்னும் அப்பதிகத் திறுதித் தேவாரமாகிய அவர் திருவாக்கானும்,

"வாழி மாதவ ராலால சுந்தரர்

    வழியிடை யருள்செய்த

ஏழி சைத்திருப் பதிகவிவ் வுலகினி

    லேற்றிட வெறிமுந்நீர்

ஆழி வேந்தனாம் வருணனுக் களித்திட

    வருணனு மருள்சூடி

ஊழி யிற்றனி யொருவர்தந் திருவஞ்சைக்

    களத்தினுய்த் துணர்வித்தான்"

    என்னும் பன்னிரண்டாந் திருமுறைத் திருவிருத்தமாகிய சேக்கிழார் நாயனார் திருவாக்கானும் பெறுதும்.

    சேரமான் பெருமாணாயனார் வழியிடை அருளிச்செய்த திருக்கைலாசஞானவுலாவை அன்று மனத்திற் கொண்டு திருப்பிடவூரில் வெளிப்படக் கூறியருளி உலகத்தில் நிலைபெறச் செய்தார் என்பது,

"சேரர் காவலர் விண்ணப்பஞ் செய்தவத்

    திருவுலாப் புறமன்று

சாரல் வெள்ளியங் கயிலையிற் கோட்டமா

    சாத்தனார் தரித்திந்தப்

பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில்

    வெளிப்படப் ப்0அகர்ந்தெங்கும்

நார வேலைசூ ழுலகினில் விளங்கிட

    நாட்டினர் நலத்தாலே"

    என்னும் பெரியபுராணத் திருவிருத்தமாகிய சேக்கிழார் நாயனார் திருவாக்காற் பெறுதும்.

    வழியிடை யருளிச்செய்த இவ்வொரு பதிகமும். இவ்வோருலாவும் புவியிடைப்போந்து பயன்படவேண்டி இங்ங்அனம் இவர் வாயிலாக அஞ்சைக்களத்தும் பிடவூரகத்தும் அறிவுறுத்துவித்தருளிய பொருங்கருணையாளனாகிய இறைவன் "ஆரணமாகமங்கள" இல்லையேற் "கதிப்பவரில்லையாகும்" ஆகலான், தமிழிலிருந்த வேதாகமங்களைக் கடல்கொண்டு பொந்த ஞான்று தொட்டின்றுகாறும் வெளிப்படுத்திப் பயன்படச் செய்து உயிர்களைப் புரந்து கதிப்பாற் படுத்தாது வாளாவிருத்தல் அவன் கருணைக் கிழுக்காம்பிறவெனின், அற்றன்று; என்னை? தமிழில் அவை செய்யப்பட்டிருந்து, கடல்கோட்படினன்றோ! அம்முதல்வன் அங்ங்அனஞ் செய்வன். அந்நிகழ்ச்சிகள் யாவும் எக்காலத்தும் இன்மையான் அது செய்திலன் என்க, அதற்கொரு சான்று சோமுகன் கவர்ந்து சென்று கடலிடை மறைந்த வேதத்தை விண்டுவைக்கொண்டு விமலன் வெளிப்படுத்துவித்த சரிதமும் அன்னபிறவு மாம்; ஆகலான் இழுக்கு யாண்டையதென்றொழிக.

    இன்னும் கடல்கோட்பட்ட விடத்துள்ள தமிழ் ஆகமமுறையாகிய தானி தான்றன்றானத்தொடு அதன் கட்பட்ட தெனினும் தமிழ் நாட்டில் மற்றைய இடங்களிலிருந்த தமிழ் ஆகம முறைகள் எங்கே போயினவோ? தமிழ் நாட்டுச் சிவஸ்தல முதலியவற்றில் சிவபிரான் முதலிய கடவுளர்க்கு அவையின்றிச் "சிறப்பொடு பூசனை" சென்றதெங்ஙனம்? வடநாட்டுத் தலங்களிலுள்ள சிவாலாய முதலியவற்றில் "சிறப்பொடுபூசனை" யின்றோ? என்னை? அங்குள்ளார் தமிழாகம முணரமாட்டா ராகலான், நித்தியமேனு நடைபெறாதவாலயங்கள் இருந்தும் பயனின்றாகலின், அங்குள்ள ஆலயங்கட்காக வடமொழி ஆகமமும் உண்டாக்கினார் என்பராயின், குறை யென்னை? தமிழ் வேதாகமம் கடல் கோட்பட்டால் கடல் கோட்படாத சமஸ்டிருதாகம வேதங்களைக்கொண்டு தமிழ் நாட்டிற் சிவாலயங்களில் நித்திய நைமித்திகங்கள் நடப்பிக்கலாமே. அவற்றைத் தள்ளிவிட்டு "அரசனை நம்பிப் புருஷனை யிழந்தவள்" சீலமாக இல்லாத தமிழ் வேதாகமங்களை நம்பி, இருக்கிற சமஸ்கிருத வேதாகமங்களைவிட்டுச் சந்தியில் நின்று நாம் தவிக்கவேண்டிய தெற்றிற்கென்று திருவாளர் சுப்பிரமணிய பிள்ளையவர்கள் சற்றே தயைகூர்ந்து சிந்த்திது உண்மையில் தமது மனத்தை நிலையுற வூன்றி நன்மை கடைப்பிடித்துச் செம்மையாக வாழ்க சிவா.

    இனி, "பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்-சிறப்பர்" எனத் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்துள் ஓதியருளுதலினால், வேள்விக்கட் பசுவேட்டலை விதித்தவேதம் கொலையைக் கூறலால் நன்மை பயவாது போலுமென மலையற்க; என்னை? கொலை;களவு, காமம், பொய், என்னுஞ் சொற்கேட்டுத் கொலை தீதென்பதூஉம், கனவென்னுஞ் சொற் கேட்டுக் களவு தீதென்பதூஉம், பொய் யென்னுஞ் சொற் கேட்டுப் பொய் தீதென்பதூஉ மன்று; மற்றவை நல்லவாமாறு முண்டு; என்னை? ஒருவன் ஒருகுடும்பத்துப் பத்துமக்களிடத்துக் கொண்ட கோபத்தால் அவர்கள் துயிலும்போது அவர்களை இடைதெரிந்து கொல்லக்கருதி ஆயுதபாணியாகச் சேறலை ஓராற்றானறிந்த மற்றை அருளுடையா னொருவன், பத்து மக்களையும் இவன் கோறல் புரியாமை அவரைக் காப்பேனெனக் கண்ணி அவனைத் தனது சூழ்ச்சியாற் கொண்றிட்டான், அதனால் அவர்களும் சாக்காடு நீங்கினார்கள், அவன் அக்கொலையினான் அவர்களை உய்யக் கொண்டமையான் நல்லுழிச் செல்லு மென்பது, மற்று மிதுபோல்வன கொலையாகா நன்மை பயக்கு மென்பது.

    இனி, களவு நன்றாமாறு:- "ஒரு மெண்டாட்டி தமரொடு கலாய்த்து நஞ்சுண்டு சாவல் என்னுமுள்ளத்தளாய் நஞ்சுகூட்டிவைத்து, விலக்குவா ரில்லாதபோழ்து உண்பலென்று நிண்ற விடத்து, அருளுடையா ளொருத்தி அதனைக் கண்டு இவனிதனை யுண்டு சாவாமற் கொண்டுபோ யுகுப்ப லென்று அவளைக் காணாமே கொண்டுபோ யுகுத்திட்டான். அவளும் சனநீக்கத்துக் கண் நஞ்சுண்டு சாவான் சென்று அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள்; அவ்வரு ளுடையான் அக்களவினான் அவனை உய்யக் கொண்டமையான் நல்லுழித் செல்லுமென்பது, மற்று மிதுபோல்வன களவாகா நன்மை பயக்குமென்பது."

    இனி, நாமம் நன்றாமாறு :- "சுவர்க்கத்தின்கட் சென்று போகந்துய்ப்ப லென்றும், உத்தாகுருவின்கட் சென்று போகந் துய்ப்ப லென்றும், நன் ஞானங் கற்று வீடுபெறுவலென்றும், தெய்வத்தை வழிபடுவ லென்றும் எழுந்த காமங் கண்டாயன்றே! மேன்மக்களானும் புகழ்ப்பட்டு மறுமைக்கு முறுதி பயக்கு மாதலின், இக்காமம் பெரிது முறுதியுடைத்தென்பது."

    இனி, பொய் நன்றாமாறு :- ஊரிடையிட்டுச் சென்று தன்மருமமுற்றி மீள்வா னோர்மகனைச் சில்லோர் வழியிடையிட்டுக் கொலைபுரிந்து அவன் கைப்பொருளைப்பற்ற நின்றவிடத்து, அதனை ஆங்கறிந்து போதரு நன்மகனாவானோர் பதிகன், அம்மீள்வான்றனக்கு அதனைத் தெரிப்ப, அவன் ஆண்டோர் குடிசையில் வசிபானோர் கருணையாளனுழை இது சமயம் என்னைக் காவாய் என்று சாண்புக, அவனும் உளமுருகி அது செய்வல் அஞ்சற்கவென் றமைத்த காத்தினனாய் மறைத்துவைத் தாங்கே விளிப்போந்து நின்றானிடை அவ்வாறலைப்பான் போந்து நின்ற மறமாக்கள் புக்குத் தாழ்த்த தலையும் தண்ணிய மொழியு முடையராய்த் தன்கைப் பொருளுடையா னொருவ னெம்மினமகன் பொருள் காரணமாகத் தனிவாலஞ்சி ஈண்டுழிதந்தானென அறிந்து அவனைக் காத்துக் கொடுபோதரப் பலர்குழீஇவந்தனம்; அருளுடைப் பொரும! அத்தகையானை நீர் கண்டீர்கொல்லோவென ஐயமவனுறாது கையுமனத்தராய் வினவ, அத்தகையா னொருவன் இச்சதுக்கத்துநின்று நாற்றிசையு நோக்கி உழிதந்து நின்றான்.முன்னர் அதுகண்டுவைத்துக்குடிசையுட் போந்து பின்வந்து நோக்கினேற்கு முன்போற் காணப்பட்டிலன் என்றான். அவரும் அது கேட்டு மெய்யெனக் கொண்டு தம்முழிப் போந்தார். அதனான் அவனை யுய்யக் கொண்டமையின் அது நன்மைபயந்த தென்பது, மற்று மிது போல்வன பொய்யாகா நன்மைபயக்கு மென்பது. இக்கருத்துக் கண்ணியன்றே,

"பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த

நன்மை பயக்கு மெனின்"

என்றார் வள்ளுவ தேவரும்.

    அஃதங்ஙனமாகுக; பாசமய கோளரியாகிய பிள்ளையார், பாண்டியன் சபையிற் சமணரோ டொட்டிச் சமயவாதஞ் செய்து வென்றகாலத்துக் குலச்சிறைநாயனார் சமணரைக் கழுவேற்றியது தீமைபயக்கு மன்றோவெனின், அறியாது கூறினாய்; மற்றென்னைகொல் நன்மை பயக்கு மாறெனின் நன்றே கூறுதும்:-

    பதினாறாயிரவரைக் கொல்ல முயன்ற எண்ணாயிரவரை அரசன் கோறல் புண்ணிய  மாகலானும், ஒட்டியவாறே அவரைக் கழுவேற்றினமை அவர் செய்த சிவதூடணத்தின் பொருட்டு நரகவேதனை அளப்பிலகாலம் அநுபவியாது ஒருசிறுபோழ்துள் நீங்கினமையானும், பினும் பின்னும் பிறரும் இவ்வாறு செய்து நரகத் துன்பமும் பிறவித்துன்ப்fஅமும் எய்தா துய்தற்குக் காரணமாகலானும் அது பெருங்கருணையின் பாலதாய்ப் பெரிது நன்மை பயந்தவாற்றிக. இத்துணைச் சுருக்கமாக அத்துனைப் பொருநன்மை பயக்கு மாற்றைச் சைவசாத்திர முறைகொண்டன்றிப் பிறிதொன்றினான் எக்காலத்து மொவருமறிய வல்லு நராகார்.

    இம்மையிலே பாவஞ்செய்தோர் அரசனாலே தண்டிக்கப் பட்டால் மறுமையிலே அவர்க்கு நரகவேதனை யின்று; அரசன் அறிந்து தண்டிக்கப்படாத பாவங்கட்குத்தான் மறுமையில் யமதண்டமுண்டு. ஆகலான், அரசன் தண்ட மெல்லாம் மறக்கருணையாய்ப் பெருநன்மை பயப்பனவரம், சமணரைக்கழு வேற்றினமையும் அத்தகைய மறக்கருணையே யாமென்பது. அதனை,-

"அரசனுஞ் செய்வ தீச னருள்வழி யரும்பா வங்கள்

தரையுளோர் செய்யிற் றீய தண்டலின வைத்துத் தண்டத்

துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்

நிரயமுஞ் சேரா ரந்த நிரயமுன் னீர்மை யீதாம்"

"அருளினா லுரைத்த நூலின் வழிவாரா ததன்மஷ் செய்யின்

இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்

பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியக் தீர்ப்பன்

மருளுலா மலங்க டீர்க்கு மருந்திவை வயித்திய நாதன்"

    என்னுஞ் சிவஞானசித்தி திருவிருத்தங்களினா லறிக.

    இனி, அறுபத்து மூவருள் சிறுத்தொண்டநாயனார், எறிபத்தநாயனார், கோட்புலிநாயனார், இயற்பகைநாயனார் முதலாயினோர்; புதல்வர், யானைப்பாகர், கற்றத்தார் முதலாயினோரைக் கொன்றமையும் திடபத்தியாற் செய்தமையானும், மீட்டுஞ் சிவபிரான் றிருவருளால் உயிபெற்றெழுந்தமையால்னும், சுவர்காதி பதங்கலைப் பெற் றின்புற்றமையானும் நன்மைபயந்தவாறு காண்க. இவ்வுண்மை நோக்கியன்றே "வாளான் மகவரிந் தூட்டவல் லேனல்லன்" எனப் பட்டினத் தடிகள் கூJறியருளியதூஉ மென்க, இவை போல்வன பிறவுமன்ன.

    இனி, பிறவுயிரை அது நின்ற வுடம்பி னின்று நீக்குமாறு போலத் தமதுடலினின்று தம்மைத் தாம் நீக்குதலும் பாவமென்றும், அங்ஙனஞ் செய்வோர் சக்கரவாளகிரிக்குப் புறத்திலுள்ள இருட்பூமியிலே கிடந்து எண்ணில்லாத காலம் வருந்துவார்கள் என்றும் ஆகமத்துள் கூறிய விதி ததீசிமுனிவர் முதலாயினார் மாட்டுச் செல்லாமை,

"என்று மாதவ னியம்ப வும்பர்கோன்
ஒன்றும் வானவர் தம்மொ டொல்லெனச்
சென்று மாயையின் செயலை நோன்பினால்
வென்ற மாதவ னிருக்கை மேவினான்."

வேறு

"அடிகணீர் மறாததொன் றதனை வேண்டியிம்
முடிகொள்வா னவரொடு முந்தி னேனது
செடிகொள் காருட லவுணர்த் தேய்த்தெமர்
குடியெலாம் புரப்பதோர் கொள்கைத் தாயது"

"யாதெனி னினையதுன் யாக்கை யுள்ளதென்
றோதலும் யாவையு முணர்ந்த மாதவன்
ஆதவற் கண்டதா மரையி னானனப்
போதலர்ந் தின்னன புகல்வ தாயினான்"

"நாய்நம தெனநரி நமதெ னப்பிதா
தாய்தம தெனநமன் றனதெ னப்பிணி
பேய்நம தெனமன மதிக்கும் பெற்றிபோ
லாய்நம தெனப்படும் யாக்கை யாரதே."

"விடம்பயி லெயிற்றர வுரியும் வீநுழை
குடம்பையுந் தானெனுங் கொள்கைத் தேகொலாம்
நடம்பயில் கூத்தரி னடிக்கு மைவர்வாழ்
உடம்பையும் யானென வுரைக்கற் பாலதோ"

"நடுத்தயா விலார்தமை நலியத் துன்பநோய்
அடுத்தயா வருந்திரு வடைய யாக்கையைக்
கொடுத்தயா வறம்புகழ் கொள்வ னேயெனின்
எடுத்தயாக் கையின்பய னிதனின் யாவதே"

வேறு
 

"என்றனன் கரண மொன்றி யெழுகருத் தறிவை யீர்ப்ப
நின்றனன் பிரம நாடி நெறிக்கொடு கபாலங் கீண்டு
சென்றனன் விமான மேறிச் சேர்ந்தன னுலகை நோன்பால்
வென்றனன் துறக்கம் புக்கு வீற்றினி திருந்தா னம்மா"

என்னுந் திருவிளையாடற் புராணத்தானறியக்கிடத்தலின் அதுகடாவன் றென விடுக்க.

    அஃதொக்குமன்னாயினும், வேள்விக்கட் படுத்த பசுவைப் பின்னர் எழுப்பிவிடுதல் நியதமின்மை விருத்திரன் யாகபசுவாக வந்த காலத்து இந்திரன் படுத்து யாகஞ் செய்து பின்னெழுப்பாமையின்வைத் துணரப்படுமாலோவெனின், அற்றன்று;

"மேவரும் வலனெனு மவுணன் மேலைநாண்
மூவரின் விளங்கிய முக்கண் மூர்த்திசெஞ்
சேவடி யருச்சனைத் தவத்தின் செய்தியால்
யாவது வேண்டுமென் றிறைவன் கூறலும்."

"தாழ்ந்துநின் றியம்புவான் சமரில் யாரினும்
போழ்ந்திற வாவரம் புரிதி யூழ்வினை
சூழ்ந்திறந் தாலென்மெய் துறந்த மாந்தரும்
வீழ்ந்திட நவமணி யாதல் வேண்டுமால்"

"என்றுவேண் டலும்வர மீச னல்கினான்" ஆகலான் அவ்வரத்தின்படி அவன் மெய் நவரத்தின்மாயிற் றாகலானும், "மாய்த்தனர் மாய்ந்த வள்ளல் வலனுமந் தார மாரி - தூர்த்திட விமான மேறித் தொல்விதி யுலகஞ் சேர்ந்தான்" ஆகலானும் அதுகடாவன்று.

    ஈங்கிவைபோல வேள்விக் கொலையும் தீங்குபயவாது நன்மை பயக்குமென்க.  நன்மை பயக்குமா றென்னையெனின், நன்றே கூறுதும்:- வேள்வியிற் கொலையுண்ணும் உயிர் மேலுலகத்துச் சென்று இன்பந் துய்க்கும் ஆகலானும், ஈண்டும் கொன்றுவபை எடுத்த பின்னர் எழுப்பப்படுமென்பது "புன்மைபோ லெழுப்பு மாறு சுருதி சொற்ற வாறுபோல்" என்னுங் கந்தபுராணத் திருவிருத்தத்தாற் பெறப்படலானும், யாகாதி பதி சிவனே யாதலால் அவர்க் கவிக்கு நேர்ந்த வபைக்குரிய வுயிரிந்த அபுத்திபூர்வ சிவபுண்ணியத்தால் மறுமைக்கண் புத்தி பூருவ சிவபுண்ணியஞ் செய்து சிவஞான முற்று அத்துவித முத்தியெய்து மாகலானும், இக்கொலை சீரிய நன்மை பயக்குமென்பது.  வேதத்துட் கூறப்படும் சோமபான முதலியனவு மதுவே.

    இனி இக்காலத்து மீண்டு யாகபசுவை எழுப்புஞ் சத்தியில்லாதார் யாகபசுவைக் கொன்று யாகஞ் செய்யலாகாதென்பது, அப்பதீக்ஷிதர் தமது காலத்து யாகமொன்றியற்றி ஈற்றின் யாகபசுவை யெழுப்ப அது எழவில்லை.  அவ்வமையத்துத் தீஷிதசுவாமிகள் வேதத்தை நோக்கிச் சுருதியே உன்னை நம்பி இப்பசுவைப்படுத்தேன். இது எழாதாயின் எனதுயிரைப் படுப்பல் இது நிச்சயம்; என்சொல்லுதியென்று கூறும் உறுதி மொழியை வேதபுருடன் கேட்டு வெளிப்பட்டு நிவாய்மைப் பத்தியின் பொருட்டு இப்பசு எழுந்துவிடும். இனி இக்கொடுங்கலியில் பசுப்படுத்து யாகஞ் செய்யாதொழிக. படுப்பின் எழாது என்று சொல்லி மறைந்தனன் என்னுஞ் சரிதத்தின் வைத்துணர்க.

    உகங்கள் தோறும் விதிகள் சில மாறுபடு மாற்றை, "அந்த யுகந் தோறுமடி தீண்டியருச் சிக்கைதகு-மிந்தக் கலியுகத்தே யாது" என்பதனா லறிக.

    யாகத்தில் கொலை புரிந்த யாகபசுவை எழுப்பவல்லுநர் "யாகஞ் செய்யா தொழியின் செறபுடையந்தணரெனப்பட மாட்டார்; கில்வாழந்தணர் படுத்த பசுவை எழுப்பவல்லராதலின் வேள்வியாற்றித் தமக்கும் யாகபசுவிற்கும் பிறர்க்கும் நன்மை பயக்குநெறி வழுவா தொழுகிச் சிறப்படைந்தார் என்பார் "பசு வேட்டெரியோம்புஞ் சிறப்பர்" என்றருளிச் செய்தார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

    அந்தணர் வேதமோதாமை வேள்வி செய்யாமை முதலியன பெருங் குற்றமென்பார், புராணத்துட் கலியுககருமங் கூறும் வழி,

"அந்தணர் வேத மோதா ரருஞ்சிவ

    பூசை செய்யார்

செந்தழல் வேள்வி யாற்றார் செயத்தகு

    நியமஞ் செய்யார்

மந்திர நவிற்றா ரன்பு வளரருண்

    மனத்து வையார்

வெந்தொழில் வினைமேற் கொள்வார் விரதநோன்

    பினைவி டுப்பார்"

என்றிங்ஙனம் கூறினார் ஆசிரியர் பிறரும்.

    இதனாலே அந்தணர்க்கு வேதவேள்வி முதலியன இன்றியமையாத சற்கருமங்கள் என்பது நன்கு விளங்கும், தில்லை வாழந்தணர் அவற்றை உயிரினுமோம்பிச் சிறந்தார் என்பது அவற்றைக் கண்கூடாகக் கண்ட முத்தமிழ் விரகர் தமது தேவாரத்துள் "பறப்பைப் படுத்தெங்கும் பசுவேடெரியோம்புஞ் சிறப்பர்" என்று சிறப்பித்ததனால் செவ்வனே தெரிகின்றது. இது அநுவாதம்.

    இருந்தவாற்றால் வேள்வியிற் கொலை அவ்வுயிர்க்கு நன்மை பயத்தலால் கொலை யன்றென்பதூஉம், வேதம் ஏனையிடத்துச் செய்யும் கொலையை விலக்கும் என்பதூஉம் அதற்கு மாராகக் கொலை முதலியன செய்வோர் செயலை வேதத்திலேற்றிக் குறைகூறல் அறிவின்மை என்பதூஉம் அறிந்துகொள்க.

    



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இனி நமது நூல்கள் பெரும்பாலும் செம்பொருளும், ஒரோரிடத்துக் குறிப்புப் பொருளும் கூறுவனவாம். அது:-

"நூலெனப் படுவது நுதலிய பொருளை

ஆதிக் கண்ணே யறியச் சுட்டி

ஒத்துமுறை நிறுத்துச் சூத்திர நிரைஇ

முதல்வழி சார்பென மூவகை மரபிற்

றொகைவகை விரியின் வசையறத் தெரிந்து

ஞாபகஞ் செம்பொரு ள்fஆயிரு வகையிற்

பாவமைந் தொழுகும் பண்பிற் றாகிப்

புணர்ச்சியி னமைந்து பொருளகத் தடக்கித்

தனக்குவரம் பாகித் தான்முடி வதுவே."

    என்னும் இலக்கணச் சூத்திரத்தா லறிக, ஆயினும் திருக்கோவையார் முழுதும் செம்பொருள் குறிப்புப் பொருள் இரண்டும் கூறு நூலாம் என்பது,:-

"திருவாத வூர்மகிழ் செழுமறை முனிவர்

ஐம்பொறி கையிகந் தறிவா யறியாச்

செம்புலச் செல்வ ராயின ராதலின்

அறிவனூற் பொருளு முலகநூல் வழக்குமென

இருபொரு ணுதலி யெடுத்துக் கொண்டனர்

ஆங்கவ் விரண்டனுள்

ஆகமநூல் வழியி னுதலிய ஞான

யோகநுண் பொருளை யுணர்த்து தற்கரி

துலக நூல் வழியி னுதலிய பொருளெனும்

அலகி றீம்பாற் பரவைக் கண்ணெம்

புலனெனுங் கொள்கலன் முகந்த வகைசிறி

துலையா மரபி னுரைக்கற் பாற்று."

    என அதற் குரைசெய்வான் புக்க பேராசிரியர் உரைச் சூத்திரத்தானும்,

"ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய ராகமத்தின்

காரணங் காணென்பர் காமுகர் காமநன் னூலதென்பர்

ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப ரின்புலவோர்

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."

    என்னும் ஆன்றோர் கலித்துறை யானும், "திருக்கோவை யாருண்மை" என்னும் உரை நூலானும் நன்குணர்க.

    வேதத்துட் கூறும் வேள்விக்கண் பசுப்படுத்தல் என்பதற்குக் குறிப்புப் பொருள் செம்பொருள் இரண்டுங் கொள்ளுமாறு சிறிது விளக்குதும்:-

    பசு-ஆன்மபோடஹ்ம், படுத்தல்-அப்போதம் முனைக்காமற் செய்தல், மீட்டு எழுப்புதல்-சிவபோதமாகச் சீவிக்கச் செய்தல், இதனை,:-

"உள்ளமெனுங் கூடத்தி லூக்கமொனுந் தறிநிறுவி

    யுறுதி யாகத்

தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைபடுத்தித்

    தறுகட் பாசக்

கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு

    கருணை யென்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்துவரு

    வினைக டீர்ப்பாம்."

என்னுஞ் செய்யுளுமறிவுறுத்துமாறு உற்று நோக்கி யுணர்க.  இங்ஙனம் பாவிக்கும் அகத்து வேள்விக்கு நாபித் தானமே குண்டமும்,  ஆண்டுறும் அங்கியே யாகாக்கினியும், விந்துத் தானத்தமிழ்தே செய்யும், இடை பிங்கலைகளே சுருக்குச்சுருவமுமாகக் கொள்ளப்படும் என்ப.

    புறத்துச் செய்யப்படும் வேள்விக்குப் பசு - ஆட்டுக்கிடாய்.  ஏனைய வெளிப்படை.  இப்புறத்து வேள்வி அகத்து வேள்விக்குக் காரணம்.  இக்காரணமின்றி அக்காரியம் சித்தியாது.  ஆகலான் அது செய்தற்குரியார் தப்பாமற் செய்தல் வேண்டும்.

    அகவேள்வி செய்யும் ஆற்றுலுடையார் யோகியும் ஞானியும், அவரும் உலகர் பொருட்டுப் புறவேள்வி செய்யினுஞ் செய்வர்.  "உறங்கினோன்கை வெறும்பாக்கென"  அவரறியாது அஃதவரை விட்டு நழுவினும் நழுவும்.  எங்ஙனமாயினு மவர்க்கது குற்றமன்று.  எமக்கு யோக ஞானம் வந்துவிட்டதென முனைப்புக்கொண்டு தாமே விடுவாராயின் குற்றமாம்.

    ஒருசாரார் யாகத்துக் கொலை கூறப்படுதலால் சீவகருணையற்ற செயலைக்கூறும் நூல் கடவுள் சொன்னதன் றென்பார் பிறரெனக்கருதிக் குறிப்புப் பொருள் ஒன்றே கொள்வர்.  அது கூடாதென்பது மேலே விளக்கினாம்; கடைப்பிடிக்க.

    கந்தபுராணத்திலே வள்ளியம்மை திருமணப்படலத்திலே,

"அன்னதொரு காலை யறுமா முகக்கடவுள்
முன்னொருசார் வந்து முதுகளிற்றின் கோடொற்றப்
பின்னொருசார் வந்து பிடியின் மருப்பூன்ற
இந்நடுவே நின்றா னெறுழ்வயிரத் தூணேபோல்"

    என்புழிப் பிரணவமந்திரத்தை உபதேசித்துப் பரிசுதீக்ஷை பண்ணியதென்னுங் குறிப்பு மாத்திரையே கொள்ளற்பாலது.  அறுமுகக்கடவுள் மூத்தபிள்ளையாரை நோக்கித் தேவரீர் வருதலால் "புந்தி மயல் தீர்ந்தேன் புனையிழையுஞ் சேர்ந்தனளால்" என்றதும் அக்கருத்துப்பற்றியே யென்றுணர்க.  மயல் - பிரணவத்தை யுபதேசிக்கவேண்டும் என்னுமாசை.  சேர்தல் - பரிசதீக்கை.

    'முன்னொருசார் வந்து முதுகளிற்றின் கோடொற்ற' என்றதனால் பிரணவ மந்திரோபதேசமும், 'பின்னொருசார் வந்து பிடியின் மருப்பூன்ற' என்றதனான் பரிசதீக்கையும் பெறப்பட்டது.  அங்ஙனம் பெறப்பட்டனவற்றையே முருகக் கடவுள் பின்னர் எடுத்துக்கூறினது அநுவாதமென்றோர்க; "கூறியது கூறல்" என்னுங் குற்றமாகாது.  இதுகொண்டு ஏனையவும் உய்த்துணர்க.  விரிப்பிற் பெருகும்.

    இன்னும் இப்படலத்தினால் ஆலவாயவிர்சடைக்கடவுள் அருளிச்செய்த இறையனாரகப் பொருளெனுங் களவியற் பொருளை நமக்குக்காட்டு முகத்தால் அது வீட்டுக்கு நிமித்த மாமாறு உணர்த்தினமை தெற்றெனத்தெளிக.

    அறுமுகக்கடவுள் களவுங் கற்பு நடாத்திக்காட்டின்மை உலகர் வீடுபேற்றினிமித்தமன்றித் தம்பொருட்டன்று என்பதை நம்மனோர் தெளிந்துய்தற்கன்றே அவர் அந்தணர் முதலிய உயர்ந்த வருணத்தார் உருக்கொண்டுவாராது புள்ளும்மாவும் படுக்கும் வேட்டுவவடிவங்கொண்டு வந்ததூஉமென்க.  என்னை? தாம் "பொறிவாயிலைந்தவித்தான்" ஆகலான், ஐம்புலப்புட்படுத்தவர் அல்லது ஐம்புலக்களிலு படுத்தவர் என்பதுணர்த்தித் தமக்கு ஐபுலநுகர்ச்சியின்றென்பது தெரித்தற் கவ்வுருக்கொண்டாராகலான்.  எனவே, அவர்களவுங் கற்பும் நடாத்தினமை காமத்தின் பொருட்டன்று என்பது சித்தித்தவாறு காண்க.  கந்தபுராண நூலாசிரியரும் இக்கருத்துப்பற்றியே, "கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலிற் றோன்றி - அலைப்படு நீர்மைத் தன்றோ வறுமுக னாட லெல்லாம்" எனவும், "குமரற் கீறு திருவிளை யாடல் போலாம்" எனவும் கூறி யொழிந்தார்.  இப்பொருளை,

"தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ" எனவும்,

"போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரித லோரார்" எனவும்,

"இடப்பாக மாத ராளோ டிசைந்துயிர்க் கின்ப மென்றும் அடைப்பானா மதுவும்" எனவும்,

"சத்தியுஞ் சிவமு மாய தன்மையிவ் வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா வாணும் பெண்ணு முணர்குண குணியு மாகி
வைத்தன னவளால் வந்த வாக்கமிவ் வாழ்க்கை யெல்லாம்
இத்தையு மறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார்"

எனவும் போந்த திருவாசகமுஞ் சித்தியாரும் நன்கு விளக்கும்.  இவற்றை யூகிக்குமாறு ஊகியா மாந்தர்க்கு உண்மை விளங்காது.

    வேட்டுவர் புட்படுத்தலை "தவமறைந் தல்லவை செய்தல் வேட்டுவன் - புதன்மறைந்து புட்சிமிழ்த் தற்று" என்பதனாலு மறிக.  அது நிற்க.

"கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கலித்துறை யதுபயந்த காமர் காட்சி
நல்லானை நல்லா ளொருபாக மாகியஞானத் தானை
எல்லாரு மேத்தத் தகுவானை யெஞ்ஞான்றும்
சொல்லாடா ருக்கெல்லாந் துயரல்ல தில்லை கண்டீர்."

என்னும் இப்பாட்டில் 'கலித்துறை' என்பது "பாவகையைக் குறிப்பதாகக் கொள்ளின், அப்பாவ்கையினால் நால்வர் செய்த நான்மறைகள் அமைந்திருத்தல் கூடுமென்று கருதுதற்கு இடமுண்டு" என்றார் "விளக்க" முடையார்.

    கொள்ளின் என்றாரே அங்ஙனம் கொண்டவர் யார்? கொள்ளச் சொன்னவர் யார்? என்னை? நல்லாசிரியரிடத்துக் கற்றறி மாண்புலவர் "ஏற்புழிக்கோடல்" என்னும் உத்தியை மேற்கொண்டு இடமறிந்து பொருள்கொள்வரன்றி அஃதொழிந்து பொருள் கொள்ளாராகலான்.

    மாண்புலவர் கொள்ளார் எனவே, அங்ஙனங் கொள்பவர் "விளக்க" முடையார்தாமே யென்பது பெறப்பட்டது.  அவர் கொள்கைபற்றி நமக்காவதியாதுமின்று; என்னை? அவர் தாம் வேதாகம வழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் முற்றும் மாறு பட்டோராகலான்.

    அங்ஙனம் கொள்ளினும் கலித்துறாஇயது பயந்த நல்லான் என நேரே முடிதலை அறியு மிலக்கண மறியாது நல்லாரல்லாத நால்வரைத் தாம் வலிந்துகொணர்ந்து அவர்கள் பயந்த கலித்துறையென முடிவு காண்டல் விந்தையினும் விந்தையே, முடிப்பினும் முடியாதென்பது நன்னூல் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த நல்லோர் அறிவர், இவர் அறிந்தென்? அறியா தொழிந்தென்?

    மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் அச்சிட்ட தோல்காப்பிய உரையுள் "கல்வித்துறை பயந்த" என்ற பாடங்காணப்படுகின்றது. அதனைமேற்கொண்டு "ஆராய்ச்சி" ஆசிரியர் அதற்கு வேதம் என்று பொருள் கண்டார், அதுவேசரி.

    கலித்துறை என்பதில் கலி-ஒலி, துறை-நூல், எனவே ஒலித்தலையுடைய நூல் என்றபடி, ஒலி உதாத்த அநுதாத்த சுவரிதம், என்றதனால் வேதம் என்பது பெறப்பட்டவாறு காண்க.

    கல்வித்துறை என்பதில் கல்வி-அறிவு, துறை-நூல், எனவே, பதி பசு பாசங்களை அறிதற்குக் கருவியாகிய நூல் என்க-எனவே, வேதம் என்றபடி; என்னை? வேதம் என்னும் பதத்திற்கும் பொருள் அதுவே யாகலான்.

    இங்ஙனம் இடத்திற்கேற்ற உண்மைப் பொருள் நன்மை பயந்திருப்ப, அது காணமாட்டாது தம்மனம் போனவாறே திரிபு பொருள்கொண்ட இவர் தாம் பயனிழந்து பிறரையும் இழபித்தலால் வரும்பயன் தென்றிசைக் கோன்றன்னகத்ததேயன்றிப் பிறிதுயாதுமின்றே! "தூங்கானை மாடச்சுடர்க் கொழுந்தே"!! இவர்க்கு நல்லறிவுச் சுடர்கொளுத்தி உய்விக்குமாறு இங்கும் வேண்டுகின்றேன்.

    இக்கருத்து பற்றியே சிவதருமோத்தரத்துள்,

"ஒப்பிலி யநாதி முத்தனோதிய வேத மாதிக்

கொப்புயர் வுரைப்போர் நிந்தை யுரைப்பவ ருன்னு வாரும்

வெப்பெரி நிரயம் வீழ்ந்துவெந் துருகி வீயார்

எப்பொழு தேறு வாமென் றிளைத்திளைத் தேங்கு வாரே."

    என்று அறுமுக நிருமலர் அகத்திய முனிவரர்க் கருளிச் செய்த பொருளையுடைய இத்திருப்பாட்டெழுந்ததூஉமென்க,

    மாயூரத்திற் கூடிய "சைவசித்தாந்த மகாசமாசத்தில்" யாம் அக்கிராசனாதிபதியாக விருந்து பொருந்தா விஷயங்களைக் கண்டித்தபோது ஸ்ரீமான். செல்வச் சிரஞ்சீவி கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் பன்னூற்றுக்கணக்கான அறிஞர் கேட்க எம்மைத் தாம் பிதாஸ்தானத்தில் வைத்திருப்பதாகவும், யாம் கண்டித்து உண்மையை நாட்டுதல் தமக்குச் சந்தோஷமே என்றும் சபையிற் கூறியது சத்தியமேயானால் இவ்விஷயத்திலும் உண்மை கடைப்பிடித்து மகிழ்மீக்கூர்ந்து தற்கால நிலைமைக் கேற்ப உண்டாகும் கோபத்தை அறவே நீக்கி உறவேகொண்டு வாழ்வாரென்பதொருதலை, ஒருகால் கோபமுண்டானுலும், "வாழ்வெனு மையல்விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித்-தாழ்வெனுந் தன்மையோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரும்-ஊழ்பெறலரிது" என்னுஞ் சித்தியாரைச் சிந்தித்துத் தெளியின் அது உடனே நீங்கும். நீங்கவே, மெய்ம்மையான ரெனப்பட்டு நன்மையாளராவார். அதுநிற்க.

    இனி, மூவகை நூலே யன்Jறி ஒருசார் ஆசிரியர் எதிர்நூலென வொன்று சேர்த்து நூல் நால்வகைப்படும் என்பர்.

    "எதிர்நூலாவது:-முதனூலின் முடிந்தபொருளை ஒருவன் யாதானு மொருகாரணத்தாற் பிறழவைத்தால் அதனை உலகம் மெய்யெனக்கொண்டு மயங்காமைப்பொருட்டுக் கருவியாற் றிரிவுகாட்டி அவன்கோள் மறுத்து, முதனூற்பொருளையே தன்கோளாக நிறுவி ஒருவாமை வைத்தற்கு ஒள்ளியானொருபுலவனால் உரைக்கப்படுவது." என்னை?

"தன்கோ ணிறீஇப் பிறன்கோண் மறுப்ப

தெதிர்நூ லென்ப வொருசா ரோரெ."

என்பதோத்தாகலின்.

    இவ்விதியை ஒருவாற்றா னொருவாது மோற்கொண்டு "திருநான்மறை விளக்கவாராய்ச்சி" என்னுமிந்நூலை "எதிர்நூல்" என்று கூறுதலே பொருத்தமுடைத்தென்பது எமதபிப்பிராயம். என்னை? இதுவும், முதனூலையும் முன்னூலின் முடிந்த பொருளையும் அந்தணர்மீதுகொண்ட கோபத்தால் செல்வச் சிரஞ்சீவி ம-m-m-ஸ்ரீ கா. சுப்பிரமணியபிள்ளையவர்கள் பிறழ வைத்தியற்றிய "திருநான்மறாஇ விளக்கத்தை" உலகம் மெய்யெனக்கொண்டு மயங்காமைப்பொருட்டுக் கருவியாற் றிரிவு காட்டி அவர்கோண் மறுத்து முன்னூற்பொருளையே தங்கோளாக நிறுவி ஒள்ளிய புலவர் திலகராகிய ஸ்ரீலஸ்ரீ. திரு.மா. சாம்பசிவபிள்ளையவர்களாற் செவ்விதிற் செய்யப்பட்டதாகலான்,இ

    இஃதென் சொல்லியவாறே வெனின், இவ்வாராய்சி நூல் "எதிர்நூல்" இலக்கணம் பெற்றிருத்தலின் இதனை நால்வகை நூலுளொன்றாகிய அந்நூலென வழங்கன் மரபென்ற வாறாம். அதுநிற்க.

    இனி, "திநான்மறைவிளக்கம்" என்பது முற்றும் அப்பிரமாணவிடயமாகலான், அதன்கண் ஆராய்ச்சி அநாவசியகமென்று காலத்தைப் பொருளாகக் கருதும் மேதக்கோர் ஒருகால் எண்ணவுங் கூடும். அஃதவாறிவிற்குக் கண்ணியமேயாயினும், அவ் "விளக்கம்" அப்பிரமாணவிடய மென்பதை அறியு மறிவு தலைப்படாதாரெல்லாம் அதனை மெய்யெனக் கருதி வேதாகமங்களைப் புறக்கண்த்து, இறைவனருள்பெறும் வழியைத் தெரிக்குநூல் வேற்ன்மையால் அவ் வழியுணரமாட்டாது அறன்கடைவழியிற் சென்று புருடார்த்த நான்கையும் அறவே இழந்து மக்கட்பிறப்பின் பயனெய்தா துழிதருவராகலான், "அரவின்குட்டி சிறிதாயினும் பெருங்கோல் கொண்டடித்தல் வேண்டும்" என்னும் பழமொழிப்படி, அப்பிரமாணவிடயமென் றதனைப் பராமுகப்படுத்தாது செப்பமாகிய "எதிர்நூல்" ஒன்றியற்றி அம்மக்கட் புரத்தன் மாண்பார்பேரறமேயாம்.

    அதனைப் பண்டைத்தவத்தா னன்கிதி னுணர்ந்த போறிவாளராகலான் "ஆராய்ச்சி" ஆசிரியர் அவ்விளக்கத்தை அங்கிங் கசைய வொட்டாது முழுதும் பிரமாணசகிதம் மறுப்பதோர் "எதிர்நூல்" இயற்றிச் சைவமக்கட் தீந்துபகரித்தமை "செய்யாமற் செய்த வுதவி" யும், "காலத்தினாற் செய்த நன்றி", யும், "பயன்றூக்காது செய்த வுதவி"யு மாம் என்ப தொருதலை.

    எல்லாநூல்களும் எல்லாருக்கும் பயன்படுவனவன்று. பக்குவபேதம்பற்றி ஒரோவொன்றுஞ் சிலவும் ஓரொருவர்க்கும் சிலர்க்கும் பயன்படுவனவாம், இக்கருத்துப்பற்றியே சிவஞான சித்தியுடையாரும் மக்களை; சாமுசித்தர், வைநைகர், பிராகிருதர் என மூவடையினராகப் பிரித்துக்கொண்டு.

"பண்டைநற் றவத்தாற் றோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்

தொண்டரைத் தானே தூய கதியினிற் றொகுப்பன் மார்க்கர்

கண்டதூ லோதி வீடு காதலிப் பவர்கட் கீசன்

புண்டரி கத்தான் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்."

என்றருளிச்செய்தார்.

   



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

மூவகை மக்களுள் முதற்கண்வைத்தெண்ணப்படும் சாமுசித்தராவார்:- கழிந்த பிறப்புக்களில் சரியை கிரியை முதலிய சாதனங்கள் நன்கனம் முற்றுப்பெற்று, இப்பிறப்பில் பிரபஞ்சத்தை நோக்காது வீடுகாதலித்து அன்புமாத்திரையானே முதல்வனை வழிபடுவோர். அவர்க்கு நூல் கருவியாகச் செய்யப்படும் மழிபாடுகளெல்லாம் முன்னரே முற்றுப் பெற்றபடியால் இப்போது நூல் வேண்டாம். முதல்வன்றானே பரகதியிற் சேர்ப்பன். கண்ணப்பர் முதலாயினார் சாமுசித்தர்.

    இறுதிக்கண்வைத் தெண்ணப்படும் பிராகிருதராவார்:- காணப்படும் பிரபஞ்சமே யன்றி வேறுபொருளுண்டெனலறியாது அப்பிரபஞ்சவின்பத்தில் அழுந்தி நிற்கும்பேதையர். அவர் நூலறிவைக் கொடுப்பினுங் கொள்ளமாட்டார்; ஆகலான் அவர்க்கும் நூல் வேண்டாம்.

    இடைக்கண்வைத் தெண்ணப்படும் வைகைகராவார்:-நித்தியாநித்தியவஸ்துவிவேகம் பிறத்தலால், அநித்தியப்பொருளாகிய பிரபஞ்சத்தைவிடுத்து நித்தியப் பொருளாகிய சிவத்தைத் தேடும் சற்கருமர், அவர், நூல், வழிகாட்ட அதன் வழிநடந்து சிவத்தைப் பெற முயல்வோராகலின், அவர்க்கு அத்தகைய நூல் வேண்டும். அருணந்திசிவாசாரியர் முதலியோர் வைநைகர்.

    இங்ஙனம் சிவஞானசித்தியுட் கூறப்படுதலால் மாந்தர்க்குத் தீமைகுறித்த நூல்கள் எழுந்தோறும், பட்டுவர்க்கு நன்மை குறித்த எதிர்நூலும் அவ்வப்போழ்தெழுதல் போறமாதல் தெற்றெனவுணர்க.

    எவராயினும் வேதாகம மார்க்கத்தை மறுத்துத் தமது கொள்கையை நிறுத்த வந்தால் அவரவலக் கொள்கையை மறுத்து வேதாகம செறியை நிறுத்த வல்லவர் அது செய்யாராயின், பெருங் குற்றம் என்பது,

"நிறுத்திடவ லானமல னூனெறியை யென்றும்

மறுத்திடவ லானவல மார்க்கமய லுற்றே

நிறுத்திலன் மறுத்தில னெனிற்கரிச னேசம்

அறுத்தவனை மாகைகரி சல்லவற மாமே."

என்னுஞ் சிவதருமோத்தரச் செய்யுளா னறிக.

"நிகர றுநற் சிவதரும சிவஞானத்தை

    நிறுத்துடுலோ னிலுமுயர்ந்தோ னிலத்தி னில்லை

பகர்பரம சிவயோகி யவனே யாகும்

    பரிவினிறுத் திடுமாற்றல் படைத்து முய்தி

அகலுமய லானிறுத்தா தொழிந்தோன் யோகி

    யாயினுமீ சுரப்பிரிய னல்ல னன்னான்

புகருறுதீ நரகினிடை வீழ்ந்து புன்கண்

    பொருந்திடுவ னெனமறைகள் புகலு மன்றே."

என்னும் அபியுக்தராகிய ஆன்றோர் செய்யுளும் ஈண்டே சிந்திக்கற்பாலது.

    சிவதருமம்:-"மறைக ணிந்தனை சைவ நிந்தனை பொறாமனமும்" என்று திருநந்திதேவர் வேண்டியவண்ணம் வேதாகம தூடணங்கேட்டுச்சகியாது தூடணஞ் செய்தோரைக் கண்டித்தல், ஞானதானம், திருக்கோயில் கட்டுதல், புதுக்கல் என்றற்றொடக்கத்தன.

    சிவஞானம்-சிவாகமம், அதனை நிறுத்தல்:-இருதிறப்படும், ஒன்று அதிற் கூறப்படும் பதிபசுபாசம் என்னும் முப்பொருளையுந் தாபித்தல். மற்றொன்று அவற்றை நிறுத்துதற்கு அவற்றைத் தெரிக்கு நூலில்வழி அது செய்யவியலாதாகலான், அவ்வாகமத்தைப் பல்லாற்றானும் பாதுகாத்தல். சிவஞானம் சிவாகம மென்பது:- "உயர்ஞான மிரண்டா மாறா மலமகலவகலாத மன்னு போதத்-திருவருளொன் றொன்றதனைத்தெளிய வோதுஞ் சிவாகமமென் றுலகறியச் செப்பு நூலே" என்னுஞ் சிவப்பிரகாசத் திருவிருத்தத்தானறிக.

    "அறமொழி விரும்பிக் கேளா தறமலா தறையுந் தீய-மறமொழி விரும்பிக் கேட்கும்" "இப்பெருங் கொடிய பாவவிருங்கலி"யில் தினைத்துணைச் சிவபுண்ணியம் பனைத்துணைப் பயன்றரு மென்பது,

"ஆன்றநற் சனக னாதி நால்வரு மான்மு கத்தை

மூன்றரைக் கோடி கற்ப நோக்கிப்பின் முத்தரானார்

தோன்றிநின் றழியு மிந்தத் தொடுகடற் புவியி னுள்ளார்

ஊன்றியோர் கணம தேனு நோக்குறி னுறுவர் முத்தி."

    என்னும் வள்ளலார் சாத்திரத்தானரியக் கிடத்தலின் திருநான்மறைவிளக்க வாராய்ச்சி" என்னும் எதிர்நூலியற்றுத்லாகிய பனைத்துணைப்புண்ணியம் மலைத்துணைப் பயனை ஆக்கியோருக்களிக்கு மென்க.

    இத்துணை விசிட்ட எதிர்நூல் இதுகாறும் யாருஞ் செய்திலர். அதற்குக் காரணம் இத்துணை அப்பிரமாண நூல் இது காறும் எழாமையே. விளக்கத்திலுள்ள அப்பிரமாணமாகிய போலிக்கொள்கையில் ஒவ்வொன்றாக அநுவதித்துக் காட்டி,

அவ்வவற்றின் போலித்தன்மை இஃதிஃதென்று விளங்க விரித்துக்காட்டிக் காண்டல் கருதலுரை என்னு மூன்று பிராமாணங்கட்கு மொவ்வாமையைத் தேற்றிப் பன்னூற் பிரமாணங்களால் "விளக்க" முடையாராதக் கோள்களை மறுத்துத் தமது கோனை நாட்டியிருக்கும் மதுகை எத்திறத்தறிஞரு மெச்சு மியல்பிற்று.

    அவ்விளக்கத்தை ஒருகூறு இருஉறு முக்கூறு நாற்கூறு படுத்திவிடல் ஆசிரியர் தமக்கு இலகு.   அங்ஙனமாகவும் விளக்கத்தை எடுத்துப் பார்ப்போர் புரட்டிப்பார்த்தெறிதற்கு மிக இலகுவினு மிலகுவாக அறுபத்தொரு கூறு செய்து, செய்தவற்றை நூன் முகப்பிற் றுலங்கவைத்திருத்தல் நூலினுள் மிக விரித்திருக்கும் விஷயங்களை முன்னரே இலகுவாகத் தெரிக்கும் பாயிரம் வைத்திருத்தலைப் போன்றிருக்கும் அழகு பாராட்டற் பாலது.

    "விளக்க" முடையார் எந்தெந்த நூலிலிருந்து தமது கொள்கைக்குப் பிரமாணங் காட்டினாரோ! அந்தந்தப் பிரமாணம் அவர் கொள்கையைச்சாதிக்கு மாற்றலின்றித் தமது கொள்கையைச்சாதிக்கும் ஆற்றன் மிகுதிப்பாட்டை "ஆராய்ச்சி" நூலாசிரியர், அழகுபெற விளக்கிக் காட்டிய புத்தி நுட்பம் புலவர் போற்றற் பாலது.

"ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுண்டோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்"

என்று கூறுவார் கூறுக.

திருநான் மறைவிளக்க வாராய்ச்சி தேரின்
பெருநா னிலத்துப் பிறங்கு - மிருடீர்
பகலவன்போ லுள்ளிருளைப் பாற்றலாம் பாரோர்
சகலகலா வல்லுநராய்த் தாம்.

    என்றிதனையேயாம் மிகுத்துக் கூறாநிற்பேம்.  என்னை? திருக்குறள் ஒருவர் வாக்காய் ஒருநூலாயிருத்தலானும், இது சங்கப்புலவர் அற்புதஞ் செய்து சைவசமயஸ்தாபனஞ் செய்த அருளாளர் வாக்காயவனேக நூல் குழுமப் பெற்றிருத்தலானும், அது, சென்னைச் "சைவ நூற்பதிப்புக் கழகத்தா" ரால் "ஆபயனகுன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்" என்னும் பாட்டு "ஆபயன் குன்று மறிதொழிலோர் நூன்மறப்பர்" என்று வழுவுறத் திருத்தப்பட்டிருத்தலானும்.  இது அவ்வாறு தன்னகத்துச் செய்யுள் திருத்தப்படமாட்டா தாகலானும், அஃதறிந்தோர் ஒரு நூலறிந்தவராவா ராகலானும், இஃதறிந்தோர் பன்னூலறிந் தோராவராகலானும், அஃதறிந்தோர் பொதுவறிவுவராகலானும், இஃதறிந்தோர் சிறப்பறிவுறுவராகலானும், அஃதறிந்தோர் மும்மூர்த்திகளையறிவ ராகலானும் இஃதறிந்தோர் மும்மூர்த்திகளையும் "மூவர்கோனாய் நின்ற முதல்வனையுஞ்" சேர்த்து நான்கு மூர்த்திகளை யறிவராகலானும், அஃது ஆசிரியர்மூல மரிதினுணரற் பால தாகலானும், இஃது ஆசிரியரின்றி எளிதினுணரற்பால தாகலானும், இன்னோரன்ன பிறவற்றானு மென்க.

    "அறிதொழிலோர்" என்பது எழுத்துப்பிழை யென்பரேல் "திருநான்மறை விளக்கத்தைக்" கொண்டு அன்றென நன்று மறுப்பேம்.  பாடபேதம் என்பாராயின், அப்போது யாம் கூட்டும் வித்துவசபையில் அப்பாடத்தையுடைய பழைய ஏட்டுப் பிரதியைக் கொணர்ந்து காட்டி உண்மையை நாட்டல் வேண்டும்.  அதுமட்டோ; அக்குறளுக்கு முன்னும் பின்னுமுள்ள, அதிகாரங்களோடும் செய்யுட்களோடும் முரணாமற் சிறப்புறு பொருள் செய்தூங்காட்டல்வேண்டும்  கலிகிதவ மூஉப்பாடங் காணப்படின், அதன்பொருள் விளங்காதபோது பாடபேதமாகப் பதிப்பித்தன் மாத்திரையே சால்புடைத்து.  அஃதன்றி அறிவானான்ற பெரியார் முன்பின் விரோதமறப் பொருடரும் பாடம் இஃதென் றறிந்து மேற்கொண்டு உரையும் பொருத்தமுறக்கண்ட அப்பாடத்தை நீக்கிப் பொருத்தமில் பாடத்தை மேற் கோடல்,

"குலந்தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
விலங்காம லெய்தியக் கண்ணும் - நலஞ்சான்ற
மயது தொல்சீ ருலக மறியாமை
நெய்யிலாப் பாற்சோற்றி னேர்."

என்னு நாலடிக் கிலக்காக்கிவிடும்.

    உலகம் - உயர்ந்தோர்.  என்னை? "உலகமென்ப துயர்ந்தோர் மாட்டே" என்ப; ஆகலான். ஈண்டுக் கருத்தாவாகு பெயராய் அவர் ஒழுகலாற்றை உணர்த்தி நின்றது.

    "அறிதொழிலோர்" என்னும் பாடத்திற்கு முன்னதிகாரம் பின்னதி காரங்கட்கும் முற்செய்யுள் பிற் செய்யுள்கட்கும் முரணாமல் பொருள் கூறற்கு ஒரு முகனாய்வந்து திருக்குறள் செய்தருளிப் பின்மறைந்து நான்முகனாய் பிரமா மீட்டு ஐமுகனாய் வரினு முடியாது.

    ஆகலாற் கழகத்தார் சைவசமயநூல்களை மனம் போனவாறு திருத்தி நூல்வரம் பழித்து அதன் சொருபத்தைக் கெடுத்து மெய்ப் பொருள் தோன்றாதவாறு செய்து சைவர்கட்கு ஏதஞ் செய்யாமல், பழையவித்துவான்கள் எல்லாவாற்றாலும் பொருத்தமுறு பொருளுடைய பாடத்தை அறிந்து கரலிகித வழூஉக் களைந்து நூல்களை அச்சிட்டது போல, அச்சிடல் வேண்டும் என்பதைச் சம்பந்த நேர்ந்தவழித் தெரித்தாம்.  அதனால் எமது கடப்பாட்டை யாம் குறிக்கொண்டு செய்தே மாயினேம்; எமக்கொரு குறையு மின்று.  அவர் அதுசெய்யாராயின் குற்றத்துட்பட்டுத் துன்பமுறுவர்.  அது நிற்க.

    மற்றுத் திருக்குறள் அதிகாரங்கள் தனித்தனி படிக்கப்படும் போது அதுஅது சிறந்ததாகத் தோன்றுமாறுபோல, ஆராய்ச்சி எதிர்நூலின்கணுள்ள அறுபத்தொரு பகுதிகளும் தனித்தனி படிக்கும்போது அதுஅது சிறந்ததாகத் தோன்றும் மாட்சி அத்தியற்புதமாயிருக்கின்றது.

    ஆயினும் ஐபத்தொன்பதாம் பகுதியில் "மறை, நான்மறை, அந்தணர், பார்ப்பார் என்னுஞ் சொற்களின் வழக்கைப் பின்னுமோர் முறையிற் சிறப்புவகையாய் ஆராய்ந்து சித்தாந்தஞ்செய்வாம்"  என்று கூறப்பட்டிருத்தலைக் கண்டு அதன்கண் வேணவாக்கொண்டு அதனை நாமுஞ் சிறப்புவகையா னோக்க வேண்டுமென்று கருதி அவ்வாறே நோக்கினோம்.  அவ்வழிச், "சிறப்புவாகியாய் ஆராய்ந்து" என்பது மிக்கபிழையெனச் சித்தாந்தஞ் செய்தேம்.  என்னை? அவை சிறப்பினும் அதிசிறப்பாய் ஆராய்ந்திருத்தலா னென்க.

    ஆதலால் அப்பகுதியைப் பன்முறை பார்வையிட்டு உன்னரு மகிழ்சிமீக் கூர்ந்து ஆசிரியரது "நுண்மாணுழை புல" நோக்கி எண்மாண்ட விறும்பூ தெய்தினேம்.

    இந்தப் பகுதியை எம்மைப் போலவே யாவரும் பன்முறை பார்த்து உண்மை யோர்ந்து ஆசிரியர் வன்மை தேர்ந்து, "யான்பெற்ற வின்பம் பெறுகவிவ் வையகம்" என்று திருமூல நாயனார் திருவாய் மலர்ந்தருளியதுபோல யாம் பெற்ற வின்பம் பெறுமாறு விரும்புகின்றேம்.

    முக்கியமாகிய அறுபத்தொரு பகுதிகளும் நியாய வாயிலாக மறுக்கப்படவே, அமுக்கியமென்று ஒதுக்கிவிடப்பட்டனவும் மறுக்கப்பட்டமை தானே போதரு மென்றுணர்க.

சத்துக் கொளுஞ்சைவ சித்தாந்த சாத்திரச் சார்பிலதாய்ப்
பித்துக் கொளுத்திப் பிரியா நிரயப் பிணியுதவிச்
சித்துக் கெடுத்துத் திரிக்குந் திருநாள் மறைவிளக்கஞ்
செத்துக் கிடக்குது சாம்ப சிவநேசன் றெம்முனைக்கே.

"தழங்குரன் முரசிற் சாற்றித் தத்துவந் தழுவல் வேண்டிச்
செழுங்களி யாளர் முன்ன ரிருளறச் செப்பி னாலும்
முழங்கழ னாகின் மூழ்கு முயற்சிய ராகி நின்ற
கொழுங்களி யுணர்வி னாரைக் குணவதங் கொளுத்த லாமோ"

    சைவசித்தாந்தசாத்திர வுண்மைப் பொரு ளறியாத பேதை மக்கட்குப் பெருங்கேடு விளைக்குந் "திருநான்மறை விளக்கத்" தைப் பாற்றிச் சிறந்த நன்மை விளைக்குந் "திருநான்மறை விளக்கவாராய்ச்சி" என்னும் சீரிய "எதிர்நூல்" இயற்றிய உபகரித்த வள்ளலாகிய சிவஞானச் செல்வர் ஸ்ரீலஸ்ரீ சாம்பசிவ நேசரவர்கள் செய்த நன்றியை மறவாது "எழுமை எழுபிறப்பு முள்ளுவர் தங்கண் - விழுமந் துடைத்தவர் நட்பு' என்ற வண்ணம்.  அவர்கள் நட்பை என்றும் உள்ளி, அவர்கட்குப் பூரணசுகவாழ்வும், பூரணவாயுளும் கொடுத்து மீட்டும் மீட்டும் வீட்டிற் கேதுவாய நூல்களைச் செய்து வஞ்சக நூலாற் கெடுவார் கெடாமல் அவர்க்குய்தி பயக்குமாறு அளவில் கிருபை யுளமகிழ்ந் தருளும் வண்ணம் "தேவதேவன் மாதேவன் சிறப்புடை யீசனெங்கோன் - மூவரின் முதல்வ னென்று" முதுமறை முழங்கும் ஒண்ணுதல் பாகக் கண்ணுதற் பரசிவன் கழலடியிணைமலர் நெஞ்சகப் போதினிறுவி வேண்டுதலும். சுபம்.

    இந்நூ லிருப திருப திருபத்தொன்
    றென்னும் பகுதி யிவையுணர்ந்த - பின்ன்ரெங்குங்
    கல்லாத நூலில்லை கற்றவர்க்குஞ் சொல்வரெல்லாம்
    பல்லாரு மேத்தப் பணிந்து.

    இனி இத்தகைய பெருமை வாய்ந்த பன்னூற்களஞ்சியமாகிய "திருநான்மறை விளக்கவாராய்ச்சி" என்னு மிவ் "வெதிநூலை" வெளிப்படுத்தினவர் இயற்றிய ஆசிரியரவர்களோ! அச்சிடுவித்து முடித்த S.I.Ry ஜனரல் டிராபிக் மானேஜர் ஆபீசு ஹெட் கிளர்க்கு ஸ்ரீமாந். A.குழந்தைவேலுப் பிள்ளையவர்களோ! என்னும் ஐயப்பாட்டின்கண் எமது அபிப்பிராயம் இஃதெனத் தெரிக்கின்றாம்.

    ஆசிரியரவர்கள், சிவபெரு மானால் "நீரோ பெரிய சிறுத்தொண்ட" ரெனத் திருவாய்மலர்ந்தருளப் பெற்ற சிறுத்தொண்ட நாயனாரைப் போல யாவர்க்குந் தம்மைச் சிறியராகக் காட்டி ஒழுகும் ஒழுகலாறுடையராயினும், ஆக்கையானும், ஆயுளானும், அறிவானும், அனேகநூ லாராய்ச்சியானும், அனேக "எதிர்நூல்கள்" ஆக்கலானும், இன்னோரன்னபிறவற்றானும் பெரியராய்க் கோலூன்று பருவக் கோலத்த ராயினமையின், தாமியற்றிய நூலை அச்சிடுவித்தற் பொருட்டு அச்சியந்திரசாலைக்குப் போக்கு வரவு செய்யத் தமக்கியலாத நிலைமையை யுற்றுநோக்கித், தமக்கதிப்பிரிய நண்பராகிய ஸ்ரீமாந். A.குழந்தைவேலுப்பிள்ளையவர்களிடம் அவ்வேலையை ஒப்பித்துவிட்டார்கள்.

    அப்பிள்ளையவர்களும் சிவபத்தி, சிவனடியார்பத்தி, சிவாலயவழிபாடு, விபூதி உருத்திராக்க விசுவாசம், அறிஞர்மாட்டன்பு, பொதுநலப்பிரியம், உற்றவிடத்துதவல் முதலிய நலப்பாட்டிற் சிறாந்த்வர்களாகலான், இது தமக்கு வாய்ப்புடைத் தாயதோர் சிவபுண்ணிய கைங்கரியமெனக் கருதி அதற்குடன்பட்டுத் தமது இல்லத்து வேலைகளையும் பராமுகப்படுத்தி ஒன்பது திங்கள் ஓயாது யந்திரசாலைக்குப் போதல், வருதல் புறூப் (proof) பார்த்தல் முதலிய பல வேலைகளையுஞ் செய்து அச்சிடுவித்துப் பூர்த்தி பண்ணினார்கள்.

    நிகழ்ந்தவண்ணம் இவ்வண்ண தொழிந்தால் ஆசிரியவர்கள் அச்சிட்டு வெளிப்படுத்த லின்று.  ஆசிரியரவர்கள் நூல் செய்யாவிடின் இவர்கள் அச்சிட்டு வெளிப்படுத்துதலுமின்றாகலான்.

"வெவ்விச யப்படை வீட்டிடும் வாளிச்
செவ்விசை தேர்விசை நாடினர் செவ்வேள்
கைவிசை யேர்நெடுங் கால்விசை தானோ
எவ்விசை யோவிசை யென்றனர் வானோர்"

    சுப்பிரமணியக்கடவுள் சூரபன்மனோடு செய்த யுத்தத்திலே அவனது படையை வீட்டச் செலுத்திய பாணவேகத்தையும், வாயுதேவன் செலுத்திய தேர்வேகத்தியையும் தேவர்கள் பார்த்து அக்கடவுள் சரவேகமோ! வாயுவின்கைவேகமோ! மிக்கதென்று சொல்லமுடியாமல் நின்றாற் போலவும்.

"தார்கெழுவு வேற்படை தடக்கையுடை யோனும்
சூரனுமி வாறம ரியற்று தொழில்காணா
வீரமட மாதுளம் வியந்திவர் தமக்குள்
ஆரிடை நடத்துமென வையமொடு நின்றாள்."
 

    வீரலக்குமி சுப்பிரமணியக்கடவுளும் சூரபன்மனும் போர்த்தொழில் புரியும் விசேட சமத்துவ வேக மதுகையைப் பார்த்து இவ்விருவருள் யாரிடத்து யாம் செல்லுவே மென்று ஐயமுற்று நின்றாற் போலவும், யாமும் இவ்விருவர் தம்முள் இன்னார் வெளிப்படுத்தினாரென்று சொல்ல முடியாமையான் ஐயமுற்று.

    "பாத்தினு மேதகு பண்ணவன் வார்விற்
    கரத்தினை யும்விரை வாற்கரந் தூண்டும்
    சாத்தினை யுந்தடந் தேரினை யுங்கால்
    உரத்தினை யும்புகழ் வார்புடை யுள்ளோர்"

    சுப்பிரமணியக்கடவுள் மருங்கு நின்ற தேவர் முதலாயினோர் அவர் கரவேகத்தையும், வாயுதேவன் தூண்டும் தேர்வேகத்தையும், மனோவேகத்தினும் விரைவாக வத்தேரைத் தூண்டும் அவன் கரவேகத்தையும் நோக்கி இன்னதினும் இன்னது மிக்க வேகத்ததென அறியமாட்டாதவர்களாய் அவற்றை ஒருங்கே புகழ்ந்தாற் போல.

    கலிவலிமிக்க விக்காலத்திலே இவர்களைப்போல மற்றெவர்களும் சைவசமயாபிமானத்தாலும், சிவபத்தியாலும், நிலையிற் பிரியாமையாலும், உண்மை நிலைமையாலும் மேம்பட்டு இன்னோரன்ன பயன்படு நன்முயற்சிகளைச் செய்யமாட்டார்க ளென்று இருவரையும் ஒருங்கே புகழ்கின்றாம்.

    இத்தகைய சிவபுண்ணிய கைங்கரியத்தின் மேம்பட்ட உத்தம புருஷர்கள் இருவரும் "இருதலைப்புள்ளி னோருயிர் போல" அரோக திடகாத்திரர்களாய்ப் பூரணாயுளுடன் எக்குறையுமின்றி இன்பப் பெருவாழ் வெய்தி இன்னு மின்னும் நன்னர் "எதிர்நூல்" பல ஒருவரியற்றிடவும், ஒருவர் அவற்றை அச்சுவாகனமேற்றவும், அதனால் யாவரும் ஆன்மலாபமடையும் பெருங் கருணை பாலிக்குமாறு அகண்டாகார நித்தவியாபக சச்சிதானந்தப் பிழம்பாகிய சிவ சங்கர நாமத் தனிமுதல் வன்றிருவடிக்கமல மெமதொரு முடிக்கமலமாகக் கொண்டு முப்போதும் முக்கரணங்களானும் மூவித வழிபாடுஞ் செய்கின்றாம்.

சீர்பூத்த கருவிநூ லுணர்ச்சி தேங்கச்
    சிவம்பூத்த நிகமாக மங்க ளோங்கப்
பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப்
    பரம்பூத்த சைவநிலை பாரோர் தாங்கப்
பேர்பூத்த சடைமவுலிப் பிரானார் செய்ய
    பிறங்கொளிசேர் நலங்குலவு கமலம் போலும்
வார்பூத்த கழலடியை மனத்து நிறீஇ
    மறவாம லனுதினமு மதித்து வாழ்வாம்.

சமயகுரவர் சந்தானகுரவர் திருவடிகளே சரணம்.

 

அக்ஷய வருஷம்                                            இங்ஙனம்,
ஆவணி மீ உஎஉ                                        சுவாமிநாத பண்டிதர்.


    நூல் ஆக்கியோன் குறிப்பு:- மேலே அச்சிடப்பட்டிருக்கின்ற அபிப்பிராயங்கள் எமக்குக் கிடைத்த காலக்கிரமத்தானே வைக்கப்பட்டு அச்சிடப்பட்டன.

    எமது வேண்டுகோட்கிணங்கி அவரவர்கட்குரிய அரிய பெரிய இன்றியமையா வேலைகளுடன் சைவவுலகு உண்மையைக் கைக்கொள்ளு நிமித்தம் அபிப்பிராயம் எழுதி உபகரித்த வித்துவப் பெரியார்கட்குத் திரிகரணசுத்தியோடு வந்தனஞ் சமர்ப்பிக்கின்றோம்.

    விசேடக்குறிப்பு:- மேற்காட்டிய பெருமக்கள் அபிப்பிராயங்களில் புழுத்த நாயினுங்கடையனாகிய அடியேனைப் பலவாறு பெருமைப்படுத்தி யெழுதியிருக்கின்றார்கள்.  அது வேண்டாவெனப் பன்முறைப் பிரார்த்தித்துக் கேட்டுகொள்ளவும் அவர்கள் உடன்படாததானால், அவர்கள் ஆணையை மறுக்க அஞ்சி அவர்கள் எழுதியவாறே அச்சிடப்பட்டன.  பெரியோர்கள் பொறுத்தருளுவாராக.

                                                                திரு.மா.சா.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard