1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும்.
2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும்.
3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும்.
4.வள்ளுவத்தின் அடிப்படையான மெய்பொருள் கண்டு மீண்டும் பிறவா நிலை அடையும் வழியை முழுமையாய் மனதார ஏற்று பொருள் காண வேண்டும்
5.கல்வி கற்பதே இறைவனின் திருவடி பற்றவே, அறிவு என்பதே மீண்டும் மீண்டும் பிறக்கும் அறியாமை எனும் பேதைமையை விலக்கிட இறை எனும் செம்பொருளும், உலகின் உச்சமான பிறப்பற்ற வீட்டையும் அடைய முயல்வதே, கசடு இன்றி கற்று மெய்யறிவு- மீண்டும் பிறவாதிருக்கும் நெறியை அடையவே
6.திருக்குறள் சங்க இலக்கியங்கள்- பத்துப்பாட்டு &எட்டுத் தொகை நூல்கள், அதன் பின்பு எழுந்த தொல்காப்பியம் அடுத்து இயற்றப்பட்டது, இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறளிற்கு பின்பானது. வள்ளுவர் காலத்திற்கு முந்தைய நூல்களில் உள்ள சொல்லை அதே பொருளில் மட்டுமே வள்ளுவர் கையாண்டு இருப்பார், வேறு மாற்று பொருளில் எழுதுவது இலக்கிய- இலக்கண மரபு அன்று.
7.வள்ளுவரின் நடை அமைவு -மரபு இவற்றை மேல் சொன்னவையோடு ஒத்து அமைக்க வேண்டும்.
8.மேற்கத்திய சுய-நல நுகர்ச்சி தன்மை நம்பிக்கைகளையோ, நீங்கள் முற்போக்கு என நம்புவபற்றை மற்றும் 20ம் நூற்றாண்டின் அறிவியல் அடிப்படை 1200 வருடம் முன்பான வள்ளுவரின் மீது திணிக்கக் கூடாது.
நாம் எளிமையாக முதல் அதிகாரத்தில் உள்ள "முதல்" சொல்லை எப்படி எல்லாம் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் எனப் பார்ப்போம்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - குறள் 1கடவுள் வாழ்த்து
நாம் முதல் குறளில் வரும் முதல என்பதை தொடக்கம், இந்த உலகம் இறைவனிடம் இருந்து தொடங்கியது, பிரம்மம் எனும் இறைமை இவ்வுலகைப் படைத்தார்
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை வியாபாரத்தில் போடும் மூலதனம் என பயன்படுத்தி உள்ளார்.
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 449 பெரியாரைத் துணைக்கோடல்
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார் - குறள் 463 தெரிந்துசெயல்வகை
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை. நோய் வரும் காரணம் என்ன எனும் பொருளில் பயன்படுத்தி உள்ளார்.
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 948 மருந்து
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-கொடியில் அடியிலே என செடியின் தொடக்கம் எனும் பொருளில்
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று - குறள் 1304 புலவி
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-முதலான எண்ணப்பட்ட மூன்றும் எனும் பொருளில்
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941 - மருந்து
திருக்குறள் இயற்றி ஒரு நூறு ஆண்டிற்குள் எழுந்த உரை தமிழ் சமணர் மணக்குடவர் உரை, அதை தொடந்து மேலும் பல உரைகள். ஆனால் 19ம் நூற்றாண்டிற்குபின் காலனி ஆதிக்க நச்சு பொய்களின் அடிமையாக தமிழ் மெய்யியலை ஏற்காத கயமை புலவர் உரைகள் எல்லாம் மறையக் காரணம் வள்ளுவம் சொல்வதை சிறுமைப் படுத்தலே
திருக்குறள் முழுமையான ஆஸ்திக நூல்
வள்ளுவர் இந்த உலகமே இவனால் இறைவனிடமிருந்து தொடங்குகிறது என்பதை அகரமுதல என்று அதிலும் அறிவுபூர்வமாக விளக்குவார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு உலகத்தில் உள்ள சகல அறிவும் அவனிடம் இருந்து வந்தது என்பதை சொல்ல வாலறிவன் சர்வக்ஞர் என்ற சொல்லினை பயன்படுத்தியுள்ளார். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
மனிதனின் அறிவை மேம்படுத்துவது கல்வி. கருவியின் மூலம் இறைவனை காட்டும் வழி. மனிதன் இந்த உலகில் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இறந்து ஏனோ வாழும் பிறவிப் பெருங்கடலில் இருந்து நீந்தி கடக்க தன்னிகர் இல்லாத படைத்த கடவுளை பற்றி கொள்ள வேண்டும் என்கிறார். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
திருவள்ளுவர் அறிவை சாதாரணமான அறிவு, ஐயறிவு, தெளிவு பெற்ற மெய்யறிவு மிகத் தெளிவாக உரைக்கிறார். மெய்யறிவு கண்டோர் மீண்டும் இப்பிறவியில் இப்பூமியில் பிறக்கும் நிலையை தவிர்க்கவே முயல்வர் என்கிறார்.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:356) இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர் உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (அதிகாரம்:நிலையாமை குறள் எண்:339) இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:362)
முழுமையான ஆஸ்திகராய் வைதீக மெய்யியல் மரபைப் போற்றும் வள்ளுவத்தை நாத்திகம் என்றோ, ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே என யாரும் பொருள் செய்கிறேன் என்பது கயமையின் உச்சம்.
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. குறள் 671: வினைசெயல்வகை.
மு. கருணாநிதி உரை: ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும். சாலமன் பாப்பையா உரை: ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725: அவையஞ்சாமை.
மு. வரதராசன் உரை:அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும். மு. கருணாநிதி உரை:அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. குறள் 477: வலியறிதல்.
மு. வரதராசன் உரை:தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும். மு. கருணாநிதி உரை:வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும். சாலமன் பாப்பையா உரை: எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.
சாலமன் பாப்பையா உரை: காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை: மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
அடக்கமுடைமை. குறள் 130:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
கல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறக்கடவுளே அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். குறள் 50: இல்வாழ்க்கை. மணக்குடவர் உரை:இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு. பரிமேலழகர் உரை:வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்; வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்- வையத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின் தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், 'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான் இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப் பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.(அதி.24.புகழ்). மு. வரதராசன் உரை:உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான். கலைஞர் உரை:தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான். சாலமன் பாப்பையா உரை: மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். குறள் 121: அடக்கமுடைமை. மணக்குடவர் உரை:மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார். பரிமேலழகர் உரை:அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.). மு. வரதராசன் உரை:அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும். மு. கருணாநிதி உரை:அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும். சாலமன் பாப்பையா உரை:அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. குறள் 86: விருந்தோம்பல். மணக்குடவர் உரை:வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை. பரிமேலழகர் உரை:செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.). மு. வரதராசன் உரை:வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான். மு. கருணாநிதி உரை:வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர். சாலமன் பாப்பையா உரை:வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. குறள் 58: வாழ்க்கைத் துணைநலம். மணக்குடவர் உரை: பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர். பரிமேலழகர் உரை:பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.). மு. வரதராசன் உரை:கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர். கலைஞர் உரை:நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும். சாலமன் பாப்பையா உரை:பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.