Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தெய்வநாயகம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
தெய்வநாயகம்
Permalink  
 


திருதெய்வநாயகம் எழுதிய "மற்ற உரைகள் அனைத்தும் தவறு என தவறானவை என நிலைநாட்டும் -திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்" நூல் வெளியீட்டு விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள ECI கிறிஸ்தவயியல் கல்லூரியில்  திருமாவளவன் 5.11.2021 வெளியிட்டார்.

 நூலாசிரியர் தெய்வநாயகம் இயேசுவின் சீடர் தோமோ சென்னை வந்தபோது கிறிஸ்தவராக மதம் மாறி ஞானஸ்தானம் பெற்ற பின் எழுதிய கிறிஸ்தவ நூலே திருக்குறள் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என திருமா பேசியது பரபரப்பானது.  திருக்குறள் இயற்றப்பட்ட நாள் முதல் இதுவரை வந்த அத்தனை உரைகளுமே தவறு என்பது அட்டையிலேயே சொல்லப்பட்டதை  அதாவது தேவநேயப் பாவாணர், பாரதிதாசன், கருணாநிதி போன்றவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்னும் இந்த நூல் ஆசிரியர் கருத்து என்பது ஆராய்ச்சிக்கு உரியது என திருமா பேசவில்லை.

இந்த நிகழ்ச்சி திரு எஸ்ரா சற்குணம் ECI சர்ச்சில் நடப்பது என்பது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது ஏனென்றால் அவர் தலைமையிலேயே வேறொரு மாநாடு என 2013ல் நடந்தது,  அதில் நீதிபதிகளில் ஒருவரான திரு சக்திவேல் முருகன் என்பவர் கட்டுரைபடிய அது அராஜகமாக எந்த விதமான ஆதாரமும் கொடுக்காமல் முடிந்தது என்பது தெளிவாகிறது திரு எஸ்ரா சற்குணம் அவர்களே இவரிடம் நீங்கள் எப்படித்தான் பொறுமையாக உட்கார்ந்து கேள்வி கேட்கிறீர்கள் என கேட்டார் என்றும், அந்த கருத்தரங்கில் தெய்வநாயகம் தோமோ வருகை என்பது போர்த்துகீசியர் கட்டிய கட்டுக் கதை என்று கூறியதாகவும் பதிவு செய்துள்ளார்.

திருக்குறள் கிறிஸ்தவ நூல் தோமோ வந்தார்,  தோமோ வருகைக்கு பின்னர் இங்கே பக்தி இயக்கம் தோன்றியது என்று என்று எல்லாம் அர்த்தமற்ற கட்டுரைகள் எழுதி மாநாடு நடத்துவது என்பது ஒரு பல கோடி ரூபாய் வர்த்தகம் அதுவும் திமுக ஆட்சி வரும்போதெல்லாம் இது நடக்கும் என்பதை  இலக்கிய விமர்சனம் திரைப்படக் கதாசிரியர் மற்றும் மார்க்சிஸ்ட் விமர்சகரான எழுத்தாளரான ஜெயமோகன் தன் ( தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் August 12, 2008)  கட்டுரையில் எழுதியுள்ளார்.

//தத்துவ வரலாற்றுப் பரிச்சயமே இல்லாமல் , மிக எளிமையான தர்க்கங்களுடன் , கிட்டத்தட்ட கிறுக்குத்தனமாக உருவாக்கபப்ட்டுள்ள இந்த கருத்தமைப்பு குறித்து ஏன் இத்தனை எழுதவெண்டும் என்றால் இதன் பின்னணியில் உள்ள பணம் மற்றும் அமைப்புபலம்தான். ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் மூளையில் உதித்த இந்தக் கரு இப்போது பலகோடி ரூபாய் புரட்டும் சக்தியுடைய ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழ் அறிவுஜீவிகளில் பணத்துக்காகப் பேசாதவர்கள் மிகச்சிலரே.//

 



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

தெய்வநாயகம் பெயரில் கிறிஸ்தவ ஆராய்ச்சி நூல் என்பது 50 ஆண்டுகளுக்கும் மேலாக செய்யப்படும் ஒரு மோசடியின் தொடர்ச்சி என்பதை நாம் காண்போம். 1969ல் முதல் நூல் “திருவள்ளுவர் கிறித்தவரா?” வெளிவருகிறது அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அணிந்துரையோடு.

திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்ற நூலில் பற்றி நூலைப் பற்றி மறைமுகமாக வேறு ஒரு நூலை அறிமுகம் செய்யும் பொழுது தேவநேயப் பாவாணரும் விளம்பரம் தந்து உள்ளார் என தஞ்சாவூர் பல்கலைக்கழக தமிழ்ப் பல்கலைக்கழக இணையதள கட்டுரை காட்டுகிறது.

தெய்வநாயகம் நூலில் கூறப்பட்டுள்ள நச்சுத்தனமான கருத்து “‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்-“வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான்ஆனால் விறுப்புவெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧ 131; “கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல்தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியதுதோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன்தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார்”திருவள்ளுவர் கிறித்தவராபக்௧172 &173

இன்றுவரை எந்த ஒரு கிறிஸ்தவரோ  அல்லது திராவிட நவீன புலவரோ மறுப்பு எழுதியதாகத் தெரியவில்லை.

தெய்வநாயகம் தொடர்ந்து மேலும் ஐந்து நூல்கள் ஐந்தவித்தான் யார்?” வான் எது?, நீத்தார் யார்சான்றோர் யார்?, எழுபிறப்புஎன்ற புத்தகங்கள் வெளியிடப்படுகிறன.

1972இல் சென்னை தேனாம்பேட்டை சர்ச் சர்ச் வளாகத்தில் முரசொலி மற்றும் தினமணி ஸ்பான்சர் தேவநேயப் பாவாணர்  தலைமையில்  ஒரு மாநாடு நடந்தது.  திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்ற நூலை தொடர்ந்து மேலும் ஐந்து நூல்களை தெய்வநாயகம் எழுதினார் தெய்வநாயகத்தின் ஆறு நூல்கள் ஆறு தலைப்பாகக் கொண்டு இரண்டு  நாள் மாநாடு சென்னை தேனாம்பேட்டை சர்ச்சில் நடந்தது

இந்த மாநாட்டில் திருக்குறளில் கிறிஸ்தவம் இல்லை என்ற முடிவு தான் வந்ததாம்.  ஆனால் இந்த மாநாட்டில் முடிவுகளை வெளியில் சொல்ல வேண்டாம் என தேவநேயப் பாவாணரும் மற்றும் விழாக் குழுவினரும் தெளிவாக வலியுறுத்திட, 2005 வரை இது முழுமையாக மறைக்கப்பட்டு இருந்தது.  மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக இருந்தார் புலவர் கலைமணி தன்னுடைய நூலில் இந்த மாநாட்டு விபரங்களை எழுதியதால் நமக்கு இந்த திருக்குறளை கிறிஸ்தவ மாக்கும் மோசடி திட்டத்தின் பின்னணியில் தேவநேயப் பாவாணர் ஆணிவேர் என தேவகலா கூறியதற்கு ஆதாரம் கிடைத்தது

தெய்வநாயகத்தின் ஆய்வு முறை பற்றி நடுநிலை கிறிஸ்தவ அறிஞர்

 1974ல் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் திருக்குறள் கருத்தரங்கு நடந்தது அதில் திருக்குறளும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.ஜே.ராஜமாணிக்கம் எனும் கட்டுரை கொடுத்தார். மிகத் தெளிவாக தெய்வநாயகத்தின் ஆய்வு முறை பற்றி இயேசு சபை பாதிரியார்  எஸ்.ஜே.ராஜமாணிக்கம் கூறியுள்ளது-

 “ நிற்கதற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறிகிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார்மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாதுஎன்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும்அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும்நித்தார் என்பவர் கிறித்து பெருமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோஅவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோநமக்கு மனநிறைவு அளிக்கவில்லைகிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லைகிறித்துபெருமானின்பெயர் கூட வரவில்லை.

 ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றனபக்கம்-92-93- திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974, சுப்பு ரெட்டியார்

1972 மாநாடு திருக்குறளில் கிறிஸ்தவம் இல்லை என்று முடிவுக்கு வந்தது. 1974ல் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தில் திருக்குறள் கருத்தரங்கு நடந்தது அதில் திருக்குறளும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் சென்னை லயோலா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் எஸ்.ஜே.ராஜமாணிக்கம் எனும் இயேசு சபை பாதிரியார் கட்டுரை கொடுத்தார்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் காமாட்சி சீனிவாசன் (கிறிஸ்தவராக மதம் மாறியவர் ) “திருக்குறளும் விவிலியமும் “எழுதியதைத் தொடர்ந்து குறள் கூறும் சமயம்(1979) நூலில்-மு.தெய்வநாயகமும் அவரைச் சேர்ந்தோரும் பல குறள்களுக்கு கொள்ளும் பொருள் ஏனைய உரையாசிரியர் பலரும் கொள்ளும் பொருளுக்கு மாறுபட்டதாகவே யுள்ளது”215 & “மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போதுஅவர் திருக்குறளைச் சரியாகப் புரிந்து கொண்டாரா என்பதுடன் கிறிஸ்தவ சமயவரலாற்றையும் எவ்வளவு தூரம் கற்றரிந்தாரா என்ற ஐயமே ஏற்படுகின்றது”216.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard