திருவள்ளுவமாலை - அசரீரி - 1 Thiruvalluva Maalai – Divine Voice -1 உடம்பிலி (அசரீரி) - விளக்கம் திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு உருத்தகு நல்பலகை ஒக்க - இருக்க உருத்திரசன்மர் என உரைத்து வானில் ஒருக்க ஓ என்றது ஓர் சொல் கருத்துரை ‘அருள்திரு’ என்று அழைக்கப்படும் தகுதியுடைய (அதாவது தெய்வம் என்பதாம்) தெய்வத் திருவள்ளுவரோடு, சங்கப்பலகையில் உருத்திரசன்மர் ஒருவரே ஏறியிருந்திடுக என்று ஓர் சொல், வானத்திலிருந்து ‘ஓ’ என்று இரைத்து (ஆரவாரத்தோடு) எழுந்து ஒலித்தது. (பொழிப்புரை) உருத்திரசர்மன் கழகப் பலகையிடத்துத் திருவள்ளுவருடன் ஒக்கவிருக்க வென்று வானில் ஓர் உரையெழுந்த்து. Freehand Translation* Auspicious divine thiruval luvar comparable to almighty himself - so said a voice thundering from the sky பல இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளுக்கிடையே மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவர் தம் முப்பாலை(திருக்குறளுக்கு ஆசிரியர் இட்டபெயர்) அரங்கேற்றினார். அரங்கேற்றத்தின் முடிவில் வானத்திலிருந்து ஓர் அசரீரிச்சொல் பாராட்டி எழுந்தது. அதுகுறித்து எழுந்த பாடலே இது.
திருவள்ளுவமாலை - நாமகள் - 2 நாடா முதல் நான்மறை நான்முகன் நாவில் பாடா இடைப் பாரதம் பகர்ந்தேன் - கூடாரை எள்ளிய வென்றி இலங்கு இலை வேல் மாற பின் வள்ளுவன் வாயது என் வாக்கு கருத்துரை மாறனே(பாண்டிய மன்னனே) படைப்புக்கால முதலிலே நான், நான்முகனுடைய நாவில் இருந்து நான்மறைகளை- நான்குவேதங்களை- பாடினேன். பின் இடைக்காலத்திலே பாரதம் எனும் ஐந்தாம் வேதத்தினை அருளினேன். அதன்பின் கடைசியாக இப்பொழுது தமிழ்வேதமாகிய திருக்குறளை வள்ளுவனின் வாய்மொழி மூலம் என்வாக்காக (வேதவாக்காக) உலகுக்கு நான் உரைத்தேன். இதுவே இறுதிவேதம் என்பதுகுறிப்பு; அதாவது இதுவே முழுமைபெற்ற வேதம் என்பதாம். முதல், இடை என்பதை நோக்குக. Hey pandya ever victorious over foes; Before, I manifested as Brahman mouthed Vedas Then I came down as Bharatham Here stand I, as Valluvan’s work Pandya king is regarded as someone who could laugh at his foes strength - implying his prowess * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Naamagal, yet! நாமகள் என்பது சரசுவதியைக்குறிக்கும். அந்த நாமகளே- சரசுவதியே- கல்விக்கடவுளே திருக்குறளின் சிறப்பை உரைக்கின்றாள். மூலம் நாடா முதனான் மறைநான் முகனாவிற் பாடா விடைப்பார தம்பகர்ந்தேன்- கூடாரை யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாறபின் வள்ளுவன் வாயதென் வாக்கு (02)
திருவள்ளுவமாலை - இறையனார் - 3 Iraiyanar (Lord Shiva) என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும் நின்று அலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம் மன் புலவன் வள்ளுவன் வாய்ச் சொல் கருத்துரை இறையனார் (சிவபெருமான்) கூறிய பாடல். இங்குத் தெய்வப்புலவரின் பாடலைக் கற்பகமரத்தின் தெய்வமலர் என்று அதனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார். கற்பகப்பூ என்றும் வாடாதது;அதுபோல் அவர் வாய்ச்சொல்லான திருக்குறளும் என்றும் வாடாதது,அதாவது புதியது, புத்தழகு உடையது. நெடுங்காலம் சென்றாலும் கற்பகப்பூ தன்னழகு கெடாது நின்று மலர்ந்து தேன் சொரியும் தன்மையை உடையது. திருக்குறளும் காலத்தால் அழியாதது; தன்னழகு கெடாதது என்றும் பொருந்தும் கருத்துக்களை உடையது; இனிய சுவையான மருந்தனைய கருத்துக்களைத்தரும் தன்மைகொண்டது. குறையில்லாத சிவந்த தளி்ர்களை(கொழுந்துகளை) உடையது கற்பகத்தரு (தரு=மரம்)அதுபோல் செஞ்சொற்களைக்கொண்டது திருக்குறள். கற்பகமலர் தெய்வத்திருமலர். திருக்குறளும் தெய்வத் திருக்குறள். Ever untainted, with fleeting time an eternal superflous blossom - alike unfallen flower from the tree of elixir is poet valuvan’s words. * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Iraiyanar, yet!
என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்- குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல் (03)
திருவள்ளுவமாலை - உக்கிரப் பெருவழுதியார் - 4 நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல்நெஞ்சம் சிந்திக்க கேட்க செவி கருத்துரை இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார். நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின் பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கட்டும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும். The Four-faced (Brahma), disguising himself as Valluvar, has imparted the truths of the four Vēdas in the three parts of the Cural, which is therefore to be adored by the head, praised by the mouth, pondered by the mind, and heard by the ears. [Emphasis in original] ‘Fourfaced One’ cloaking himself as Valluvan gave the four vedas in under three Cantos - Let that thirukkural Be Workshipped, praised through mouths, contemplated with good minds and heard with ears * note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Ukkira Peruvaluthiyar, yet! The lord himself is saying what the best can the senses do; the reason to have the eyes, ears and mouth remains to be contemplating on thirukkural, for thirukkural is the essense of everthing.
திருவள்ளுவமாலை - கபிலர் - 5 Thiruvalluva Maalai - Kapilar - 5 தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி (௫) (அளகு= பறவை; வள்ளை= பெண்கள், நெல் குற்றும்போது பாடும் உலக்கைப்பாட்டு வள்ளைப்பாட்டு; வெள்ளை- வெண்பா) கருத்துரை வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள் அவ்வீட்டாரின் வள்ளைப்பாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்கும் வளம்மிக்க நாட்டையுடைய மன்னனே. வள்ளுவரின் குறள்வெண்பா அளவிற் சிறியது அதனு்ள் அடங்கியுள்ளபொருளோ மிகப்பெரியது. அந்தப் பெரியபொருள் இந்தச்சிறிய குறள் வெண்பாட்டில் எப்படி அடங்கியது? என்றால், தினையரிசி அளவினுக்கும் போதாத சிறிய புல்லின் நுனியிலுள்ள பனி நீர்த்துளி, அருகிலிருக்கும் உயர்ந்த பனையினது சாயையை -தோற்றத்தைத்- தன்னுள் அடக்கிக் காட்டுவதுபோலாம் என்க. (பொ-ரை) வீட்டுப் பறவைகள் வள்ளைப்பாட்டிற் குறங்கும் வளநாட்டரசே! திருவள்ளுவர் திருக்குறளின் சொற்சுருக்கப் பொருட்பெருக்கம். புல்நுனிப் பனித்துளி பனைவடிவைத் தன்னுள்ளடக்கிக் காட்டினாற் போலும். Just as the droplet on a blade of grass houses the reflection of tall palm - Hey king, hailing from kingdom where pet birds doze upon the maiden’s lullaby; So is Valluvan’s Kural pa upon decompression Implying that the mere two stanzas work the magic of holding greater truths So fertile was the land and agriculture that the maids of the palaces and places used work in processing the crops and produce through manual methods using machinary like ulakkai which creates an unintermittent tune to which the household birds retire into slumber.
திருவள்ளுவமாலை - பரணர் - 6 Thiruvalluva Maalai - Paranar - 6 மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாண் அடியால் ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வால் அறிவின் வள்ளுவரும் தம் குறள் வெண்பா அடியால் வையத்தார் உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து கருத்துரை இப்பாடலில் வள்ளுவப்பெருமானைக் காக்குங்கடவுளாகிய திருமால் எனக்கூறுகின்றார் பரணர். திருமால் வாமனாவதாரத்தில், திரிவிக்கிரமாவதாரத்தில் குறளனாய்த் தோன்றிப் பின் வளர்ந்து தன்னுடைய திருவடிகள் இரண்டால், இந்த உலகம் எல்லாவற்றையும் அளந்தான். அதேபோல் வள்ளுவரும் தன்னுடைய மெய்யறிவினால், தம் குறள்வெண்பா அடிகள் இரண்டைக்கொண்டு இந்த உலகத்தாரால் நினைக்கப் பட்டவற்றையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்; அதாவது அதுபற்றித்தெளிவான கருத்தை விளக்கமாகக் கூறியருளினார் என்பதாம். இங்கு வள்ளுவப்பெருமானைக் காக்கும் கடவுளாகிய திருமால் என்றும், அவரை அவதாரம் என்றும் கூறுகின்றார். பரணர் - விளக்கம் (பொ-ரை ) திருமால் குறளாய்த் தோன்றித்தன் இருபேரடியால் உலகனைத்தையும் அளந்தான்; ஆனால் திருவள்ளுவர் தம்குறளின் இரு சிற்றடியால் மாந்தர் கருத்தனைத்தையும் அளந்தார்.
Growing into a dwarf Maal(Thirumaal) came; with two steps measured the entire world - Knowledgeous Valluvan with his two stanzas measured the thoughts of the masses(upon research). * note: the above translation will do no justice to the original thiruvalluva maalai work from Paranar, yet! Māl (Vishnu) in his Cural (or dwarfish incarnation) measured the whole earth with his two expanded feet; but Valluvar has measured the thoughts of all mankind with his (stanza of) two short feet. மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால் ஞால முழுதும் நயந்தளந்தான்- வாலறிவின் வள்ளுவரும் தங்குறள்வெண் பாவடியால் வையத்தா ருள்ளுவவெல் லாமளந்தா ரோர்ந்து (06)
திருவள்ளுவமாலை - நக்கீரர் - 7 Thiruvalluva Maalai - Nakkeerar - 7 தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால் ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோர்க்கு ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும் வாழிஉலகு என்ஆற்றும் மற்று (தண்=குளிர்ச்சி; வெண்குறள்=குறள்வெண்பா; ஆனா=நீங்காத/விட்டுப் பிரியாத; நான்கு= அறம் பொருள் இன்பம் வீடு; ஏனோர்=அறியாத பிறர்; ஊழ்=முறை; ஒண்ணீர்= ஒள்ளிய நீரை; முகில்= மேகம்; என்ஆற்றும்= என்ன செய்யும், பிரதியுபகாரமாக.) கருத்துரை: தாமே எல்லாவற்றையும் அறிந்து, குளிர்ந்த தமிழால் ஆன குறள் வெண்பாவினால் நீங்காத அறம் முதலான நான்கினையும்- அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கினையும்- அதனை அறியாதார்க்கு முறையாக உரைத்த வள்ளுவப் பேராசானுக்கும், உயிர்காக்கும் நீரை மழையாகப் பொழியும் மேகத்திற்கும் இந்த உலகம் என்ன கைம்மாறினைச் செய்யமுடியும், எதுவும் செய்ய முடியாது. ஆகையால், அவரும் அம்மேகமும் இந்த உலகும் வாழ்க எனவாழ்த்தி வணங்குவோம்! நக்கீரர் - விளக்கம் (பொ-ரை) தாமே எல்லாவற்றையும் அறிந்து நாற்பொருளையுங் குறள் வெண்பாவால் எல்லார்க்கும் எளிதாயறிவித்த திருவள்ளுவர்க்கும் மழைபொழியும் முகிலுக்கும் உலகம் என்ன கைம்மாறு செய்யவல்லதாம் ? He realized and gave with soothing venbas, ‘the Four’ inclusive of virtue - Even for layman ‘The kural’; and the spectral clouds showering rain; Hail thee both unparalleled. தானே முழுதுணர்ந்து தண்டமிழின் வெண்குறளா லானா வறமுதலா வந்நான்கு- மேனோர்க் கூழி னுரைத்தாற்கு மொண்ணீர் முகிலுக்கும் வாழியுல கென்னாற்று மற்று (07)