Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: முற்கால இளவரசி சாருதேவி குணபாண்டியம் பிராகிருத செப்பேடுகள் (கி.பி 350)


Guru

Status: Offline
Posts: 7602
Date:
முற்கால இளவரசி சாருதேவி குணபாண்டியம் பிராகிருத செப்பேடுகள் (கி.பி 350)
Permalink  
 


நில தானம் செய்துள்ள முதல் பெண் - பல்லவ இளவரசி சாருதேவி

--------------------------------------------------------
முற்கால பல்லவ இளவரசன் விஜய புத்தவர்மனுடைய மனைவி சாருதேவியினுடைய குணபாண்டியம் செப்பேடுகள் (கி.பி 350)British Museum plates of Chaarudhevi / சாருதேவியின் பிரிட்டிஷ் அருங்காட்சியகத் தகடுகள்
தமிழக வரலாற்றில் பெண்களின் பங்கு அலாதியானது, சோழ அரசி செம்பியன் மாதேவி, லோகமாதேவி, குந்தவை நாச்சியார் போன்று பல அரச குல பெண்கள், தானங்களை சாதரண குடிமகன் தொடங்கி, மிகப்பெரிய கோவில்கள் வரை தானங்கள் வழங்கி யுள்ளனர்.
இவற்றை தமிழகமெங்கும் உள்ள கல்வெட்டுகளும், பலசெப்பேடுகளும் பகர்கின்றன. இவ்வகையில் காலத்தால் முற்பட்டது, முற்கால பல்லவ இளவரசன் விஜய புத்தவர்மனுடைய மனைவி சாருதேவியினுடையது (கி.பி 350).
இந்த செப்பேடு இன்றைய தெலுங்கானா விலுள்ள குண்டூர் அருகேயுள்ற குணப தேயம் எனும் ஊரில் கிடைத்ததால் குணேபதயம் செப்பேடு எனப்படுகின்றது. குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த பிராகிருதக் கல்வெட்டு, சிவஸ்கந்த வர்மனின் தந்தையாக இருந்த சிம்ம வர்மனைக் குறிப்பிடுகிறது. இந்த சிவஸ்கந்தவர்மனுக்கு புத்தவர்மன் என்ற மகன் இருந்தான், அவனுக்கு சாருதேவி என்ற அரசிக்கு புத்தியங்குரா என்ற மகன் பிறந்தான் என குறிப்பிடுகிறது.
பிராகிருதத்தில் உள்ள இந்த சாருதேவி யின் மானியம், கோவில்களுக்கான கொடை, ஆரம்பகால பல்லவரைக் குறிப்பிடுகிறது!
குணபாண்டியம் தகடு செப்பேட்டினை இணைக்கும் வளையம் இதில் பல்லவர்களின் சின்னமான காளையின் உருவம் உள்ளதாய் குறிப்புகள் உள்ளன. மொத்தம் மூன்று ஏடுகளில் பதினாரு வரியில் பிராகிருத மற்றும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ள இந்த செப்பேடு, தற்போது இலண்டன் அருங் காட்சியத்தை அலங்கரித்து கொண்டுள்ளது.
குணபாண்டியம் பட்டயம் செப்பேட்டின் தகவல்கள்
ஸ்ரீ விஜயஸ்கந்தவர்மனுடைய ஆட்சியில் இதனை முதலிரண்டு மயிதவோலு, ஹீரஹடஹள்ளி சாசனங்களுக்குக் காலத்தால் பிற்பட்டது எனச் சொல்லலாம் என்பர்.
சாருதேவியினுடைய குணபாண்டிய செப்பேடுகள் பகவானுக்கு நிலம் அளித்தது குறித்து இயம்புகிறது.
சாருதேவி தனித்துவமானவர்.
அவள் ஒரு சுயாதீனமானவள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சாருதேவி (கட்டளையிடுகிறாள் )
வரி 4 : ( விஜய ) ராஜ தடாகத்தின் அருகில் குடிநீர்க் கிணற்றின் வடபுறம் ஆதுகன் என்பான் பயிரிடும் நிலத்தில் தாலூரில் உள்ள கூளி மஹாதரகர் கோயிலில் பகவான் நாராயணனுக்கு நம்முடைய ஆயுள் வலிமை வளர்ச்சியைச் செய்வதற்காக நான்கு அளிக்கப்பட்டது. நிவர்த்தனம் நிலம் நம்மால்
வரி 10 :
இதை அறிந்து ஊராரும் ஆயுக்தர்களும் எல்லா விலக்குகளும் அடையும்படி விலக்க வேண்டியது ; விலக்கச் செய்ய வேண்டியது .
சுலோகம் 2.
தான் அளித்ததோ பிறர் அளித்ததோ எதுவாயினும் பூமியை அபகரித்தவன் நூறாயிரம் பசுக்களைக் கொன்ற கொடுஞ் செயலைச் செய்தவன் ஆவான்” என்று அமைகிறது.
யுவமகராஜனும், பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்த பல்லவர் வம்சத்தை சேர்ந்த ஸ்ரீ விஜய புத்தவர்மனுடைய மனைவியின் சாருதேவியின் கட்டளை ராஜ தாடாகத்தின் அருகேயுள்ள குடிநீர் கிணற்றின் வலதுபுறம் தற்போது பயிரிட்டு கொண்டிருக்கும் நிலத்தை மஹாதரகம் எனும் ஊரில் உள்ள தேவகுலத்தின் (ஆலயம்) பகவான் நாரயணுக்கு என்னுடைய ஆயுள், வலிமை, வளர்ச்சிகாக நிலம் தானாமாய் கொடுக்கப்படுகின்றது .
இந்த விவரத்தை அனைத்து அரசு அதிகாரிகளும் அறிந்து, அனைத்து வரி விலக்குகளும் பெற்று தரவேண்டும். இதுதான் செப்பேட்டின் தகவல்.
மேலும் இருதியில் உள்ள சமஸ்கிருத வரிகள் நிலம் தானம் கொடுப்பதின் நன்மைகளையும், அந்நிலத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகளையும் கூறுகின்றது.
மேலும் தமிழக்தின் இருண்ட காலம் எனக்கருதப்பட்ட காலத்தில் இருந்த பெண்களின் நிலையைக்கூறுகின்றது.
இந்தச் செப்பேட்டின் மூலம் ஸ்ரீ விஜய ஸ்கந்த வர்மன் ஆட்சி செய்தமை தெரிகிறது.
பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவனும் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவனு மான யுவமகாராஜன் ஸ்ரீ விஜய புத்தவர்மனுடைய தேவியும் அங்குரன் என்று முடியும் பெயரைக் கொண்ட ஒருவனுடைய தாயுமான சாருதேவி, ஏதோ ஓர் ஊரில் உள்ள ராஜ தடாகத்தின் அருகில் குடி நீர்க் கிணற்றின் வடபுறம் ஆதுகன் என்பான் பயிரிட்டு வந்த நிலத்தில் நாலு நிவர்த்தனம் பூமியைத் தாலூரம் என்னுமிடத்தில் கூளி மஹாதரகம் தேவகுலத்தில் (தேவகுலம் - கோயில்) எழுந்தருளியிருக்கும் பகவன் நாராயணனுக்குத் தன்னுடைய ஆயுள் பலம் ஆகியவற்றின் அபிவிருத்திக்காக எல்லாப் பரிகாரங்களுடன் அளித்த செய்தியைக் கூறுகிறது என்கின்ற செய்தி தெரியவருகிறது.
இங்குக் காஞ்சியிலிருந்து வெளியிடப் பட்டது என்ற செய்தி இல்லை. விசய ஸ்கந்த வர்மன், புத்தியங்குரன் எங்கு இருந்தனர் என்பதும் விளக்கம் பெற வில்லை. எனினும் பிராகிருத மொழிச் செப்பேடாக இது இருக்கும் நிலை, பின்னர் பிராகிருத மொழிச் செப்பேடுகள் பல்லவர்களால் வெளியிடப்பட்டதாகத் தெரியாத நிலை, இங்குக் குறிப்பிடப்படும் இப்பல்லவனைப் பற்றிய குறிப்புகள், ஸ்ரீ விஜயஸ்கந்த வர்மனுடைய (ஆட்சி) ஆண்டு, பாரத்வாஜ கோத்திரம், பல்லவர் வம்சம் எனத் குறிப்பிடும் நிலை இவனும், காஞ்சியிலேயே இருந்து இதனை வெளியிட்டிருக்கலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன.
------------------------------------------
Ep. Ind., Vol. VIII, p. 143
காஞ்சிபுரம் ( கி.பி. 6 - ஆம் நூற்றாண்டிற்கு முன் ) முனைவர் கு . பகவதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES, Chennai


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard