Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட மு


Guru

Status: Offline
Posts: 7602
Date:
கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட மு
Permalink  
 


இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட முடியுமா…?

இப்படித்தான் துவங்குகிறது ….

மோயாறு என்கிற ஒரு ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில், நீலகிரியில் – மசினகுடி – ஊட்டி வழியில் , முதுமலை அருகே உற்பத்தியாகிறது.

இந்த ஆற்றின் போக்கு பற்றி அண்மையில் வெளியாகியுள்ள ஒரு தகவல், இந்த விஷயத்தை விவரமாக கவனிக்கத் தூண்டுகிறது.

நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் ஒரு செய்திக்குறிப்பை எனக்கு அனுப்பி இருந்தார். ( ttp://tamil.nativeplanet.com/travel-
guide/do-you-know-about-moyar-river-001082.html#slide12286 )

அதன் சாராம்சம் வருமாறு –

—————————-

தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு பாயும் மோயாறு ஆற்றை வழிமறித்து, ஊட்டியில் ஒரு அணை கட்டினால், தமிழகத்தின் தண்ணீர் தேவைகளுக்கு கர்நாடகாவை எதிர்பார்க்க வேண்டாம்…..!!!

————

இந்த தகவல் நான் இதுவரை கேள்விப்படாத ஒன்று… என்பதால், இதனைப்பற்றி நிறைய மேலதிக தகவல்களை சேகரித்தேன்….

கிடைத்த தகவல்களையும், புகைப்படங்களையும் கீழே தந்திருக்கிறேன்….

முக்குருத்தியில் மோயாறு

 

எம்.ஜி.ஆர். வாட்ச் டவர், முதுலை சரணாலயத்திலிருந்து மோயாறு நீர் வீழ்ச்சியின் தோற்றம்

மேற்கு தொடர்ச்சி மலையில், முதுமலை அருகே உருவாகும் மோயாறு, ஒரு காட்டாறாக, தேக்கமாக, தெப்பக்காடு அருகே பொங்கும் நீர்வீழ்ச்சியாக – மோயாறு அருவி என்று – பல உருவங்கள் எடுத்து, பெரிய ஆறாக ஓடத்துவங்கி,

முதுமலை வனவிலங்கு சரணாலயம் வழியாக பாய்ந்து, கர்நாடகாவின் பந்திப்பூர் தேசிய வனவிலங்கு பூங்கா அருகே இரண்டாகப் பிரிந்து,

ஒரு பிரிவு தென் கிழக்கு நோக்கி பாயத்துவங்கி, சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் துணை ஆறாக, பவானி அணைக்கட்டில் சங்கமமாகிறது.

அதன் இன்னொரு பிரிவு, வட மேற்கே திரும்பி, கர்நாடகாவிற்குள் நுழைந்து, பந்திப்பூர் ஊடாகப் பாய்ந்து, நூகு, கபினி நதிகளுடன் இணைந்து, கர்நாடகாவின் கபினி அணையில் சங்கமமாகிறது.

தமிழ்நாட்டை பொருத்தவரை, பவானி ஆற்றின் துணை ஆறாக மோயாறு குறிப்பிடப்படுகிறது….

ஆனால், கர்நாடகாவை பொருத்த வரை, நிறைய இடங்களில் தேடிப்பார்த்து விட்டேன் – எங்குமே கபினியின் துணை ஆறாக குறிப்பிடப்படவில்லை. கர்நாடகாவில் அதன் போக்கு, நீர் வரத்து பற்றிய விவரங்களும் தெளிவாக
கிடைக்கவில்லை.

மோயாறு ஓடும் பாதை லேசாக லைட் ப்ளூ கலரில் காட்டப்பட்டுள்ளது

லைட் ப்ளூ கலரில் கீழே பவானி சாகர் அணை மேலே கபினி அணை

—————

TOP 10 Amazing Wilderness Resorts of Kabini (Nagarhole) & Bandipur
என்று பந்திப்பூர் சரணாலத்தின் ரிசார்ட் குறித்து பேசும் ஒரு வெப்சைட்… இதில் –

The park is flanked by the Kabini river in the north and the Moyar river in the south. The Nugu river runs
through the park.

என்று குறிப்பிடப்படுகிறது.

——————–

ஆக மொத்தம், மோயாற்றின் ஒரு பிரிவு தமிழ்நாட்டிற்குள்ளிருந்து – கர்நாடகாவின் கபினி அணைக்கு நீர் கொண்டு போய்ச்சேர்க்கிறது என்பது உண்மையே….

மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாவதால், ஆண்டில் குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்காவது இதில் நல்ல நீரோட்டம் இருக்கும்என்பதும் உண்மையே…

இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில், கர்நாடகாவிற்குள் – எந்த வழியில், எவ்வளவு உயரத்தில் பாய்கிறது, இதில் தோராயமாக எவ்வளவு தண்ணீர் கபினி அணைக்கு போய்ச்சேருகிறது என்கிற தகவல்கள் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறைக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்…. இருந்தாலும், இது குறித்த எந்த தகவல்களும் இதுவரை
வெளியே வந்ததாகத் தெரியவில்லை….

இந்த மோயாறின் குறுக்கே, தமிழ்நாட்டின் எல்லைக்குள் எதாவது ஒரு இடத்தில் அணை கட்டி, நீரை தமிழ்நாட்டின் பக்கமே திருப்பி விட முடியுமா என்பது குறித்த சாத்தியக்கூறுகள் எதாவது இதுவரை பரிசீலிக்கப்பட்டனவா என்பதும் தெரியவில்லை.

தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில், தங்களுக்கு தோன்றுகிற அத்தனை விதங்களில் தண்ணீரை உறிஞ்சி / தடுத்து,
தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரைக் கூட விட மறுக்கும் கர்நாடகாவிற்கு தமிழ்நாட்டின் எல்லைக்குள் உற்பத்தியாகும் ஒரு ஆற்றின் நீர் எதற்காக போக வேண்டும் என்பது நியாயமான ஒரு கேள்வி.

பெரிய அளவிற்கு நம் எதிர்பார்ப்பை தீர்த்து விடாது என்றாலும், ஆண்டிற்கு ஒரு 40 – 50 டிஎம்சி தண்ணீராவது
இதன் மூலம் கூடுதலாக கிடைக்கும் என்றால் அதுவே பெரிய விஷயம் தான்.

எனவே, தமிழக பொதுப்பணித்துறை சீக்கிரமாக இது குறித்து ஒரு விவரமான சர்வே நிகழ்த்தி, விவரங்களை வெளியிட வேண்டும். தமிழக அரசு, தமிழகத்தின் நலன் கருதி, மோயாற்றிலிருந்து அதிக பட்சம் தமிழ்நாட்டிற்கு பலன் கிடைக்கும் வண்ணம் திட்டங்களை உருவாக்கி, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் …..

இது தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு, கோரிக்கை.

நமது வலைத்தள நண்பர்கள் யாரிடமாவது இது குறித்து கூடுதல் தகவல்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை
இங்கே பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
RE: கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட
Permalink  
 


False WhatsApp message on Moyar triggers confusion

 

DECCAN CHRONICLE | B Ravichandran

Published on: April 24, 2017 | Updated on: April 24, 2017
 
 
 
 

People should stop posting incorrect information in the social media: Dr P. Sankar.

Ooty: Ill-informed messages circulated via ‘WhatsApp’ social network on the Moyar river, which originates in Nilgiris, entering Karnataka has triggered a controversy in the last couple of days, giving rise to an unwarranted clamour that the water flow to the upper riparian state should be stopped by constructing check dams in the hills.

However, green activists and the Nilgiris district administration have sought to quash this misinformation campaign, by clarifying that Moyar that flows down along the Nilgiris border and empties at Bhavanisagar reservoir in Erode district, is a Tamil Nadu state river and not an inter-state river to spark any controversy now.

S. Jayachandran, joint secretary of Tamil Nadu Green Movement, said that Moyar originates in Nilakottai and Gudalur regions in Nilgiris, runs through the Mudumalai Tiger Reserve (MTR) and Thengumarahada in the foothill region and finally empties in the Bhavanisagar reservoir.  It is a tributary of river Bhavani, he noted. "Moyar river flows down the slopes in the wooded zones along the Nilgiris border with Karnataka on the other side. It doesn’t enter the Karnataka side and re-enter Tamil Nadu as claimed by some WhatsApp messages" he noted.

Dr P. Sankar, collector of Nilgiris, while speaking to DC, asked when all these years the Moyar river has been a TN river, why there is sudden controversy over it?

"I also heard about the WhatsApp messages on Moyar river.  This is absolutely unwarranted.  It seems somebody is trying to confuse the society with some ulterior motive by triggering controversy.  It is a well-known fact that Moyar river runs along the Nilgiris border on the north and Northeastern side of the hills. People should stop posting incorrect information in the social media," he added.

https://www.deccanchronicle.com/nation/current-affairs/240417/false-whatsapp-message-on-moyar-triggers-confusion.html 



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

ஊட்டியில் அணைக் கட்டினால் காவிரி பிரச்சனை தீருமா ?

பரவிய செய்தி

கர்நாடகாவிற்கு தலைவலி ஆரம்பம் ! ஊட்டியில் அணைக்கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..! தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..! நாம் ஊட்டியில் இருந்து செல்லும் தண்ணீரின் வழித்தடத்தை மறித்து அணையைக் கட்டினால் போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இது தான். ஊட்டியில் அணைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இனியாவது தமிழக அரசு புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். இதை தயவு செய்து பகிருங்கள்… காட்டுத் தீயாக பரவட்டும்.

மதிப்பீடு

 

சுருக்கம்

நீலகிரியில் பாய்ந்தோடும் மோயாறு, கர்நாடகா எல்லையோரப் பகுதியில் பாய்ந்து மீண்டும் தமிழகத்திற்குள்ளேயே திரும்பி பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் சேர்கின்றது.

விளக்கம்

தமிழகத்தின் நீலகிரி மலைபகுதியில் உருவாகும் மோயாற்றின் ஒரு பகுதி பைக்காரா அணை பகுதிக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிற்கு சென்று மீண்டும் ஒகேனக்கல் வழியாக தமிழகம் வருகிறது. எனவே, காவிரி ஆற்றின் நீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஊட்டில் அணைக் கட்டி கர்நாடகாவிற்கு செல்லும் தமிழக ஆற்றின் நீரை தடுக்க வேண்டும் என்று செய்திகள் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் வைரலாகி வருகின்றது.

ஊட்டியில் அணைக் கட்ட வேண்டும் என்று பரவி வரும் செய்திகள் குறித்து Tamil nadu Green Movement துணை செயலாளர் எஸ்.ஜெயச்சந்திரன் கூறுகையில், “ மோயாறு நீலகிரியின் நிலக்கோட்டை மற்றும் கூடலூர் பகுதியில் தொடங்கி, முதுமலை புலிகள் வனப்பகுதியில் ஒதுங்கி, தெங்குமரஹாடா அடிவாரத்தில் பாய்ந்து இறுதியாக பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் நிறைவடைகிறது. 

மோயாறு பவானி ஆற்றின் கிளை நதியாகும். மரங்களடர்ந்த பகுதியில் இருந்து கீழே பாயும் மோயாறு நீலகிரியின் எல்லைப்பகுதியிலும், கர்நாடகாவின் எல்லையோரப் பகுதியிலும் பாய்கிறது. ஆனாலும், மோயாறு கர்நாடகா பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் தமிழகத்திற்குள்ளேயே திரும்பி பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் வந்தடைகிறது என்று கூறியுள்ளார். 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் கூறியதாவது, “ மோயாறு பற்றி சமூக வலைத்தளத்தில் பரவிய செய்திகளை கேள்விப்பட்டேன், யாரோ ஒருவர் சர்ச்சையான நேரத்தில் தவறான நோக்கத்துடன் திசைத் திருப்பி சமூகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர். மோயாறு நீலகிரி எல்லையின் வடக்கு மற்றும் வடகிழக்கு மலைப்பகுதியில் பாய்கின்றது என்று நன்றாகவே அறிவோம். எனவே, மக்கள் இது போன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஊட்டியில் அணைக்கட்ட வேண்டும் என்று பரவும் செய்திகள் வதந்தி.! இது பூலோக அமைப்புக்கு பொருந்தாத செய்தி என்று இயற்கை ஆர்வலர் பியுஷ் மனுஷ் கூறியுள்ளார்.

மோயாறு கர்நாடகாவின் எல்லைப்பகுதியில் பாய்ந்து மீண்டும் தமிழகத்தின் பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் வந்தடைவதை கூகுள் வரைப்படத்தில் காணலாம். எனவே, மீண்டும் இச்செய்தியை மக்கள் பகிராமல் இருக்க அனைவரிடமும் இப்பதிவை கொண்டு செல்ல உதவுங்கள்.

காவிரி ஆற்றின் நீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு பற்றிய தகவல்களை காண- காவிரி நீர் விவகாரம் வரலாறு இறுதி தீர்ப்பும் 

https://youturn.in/factcheck/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2.html



__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 

தமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியில் மோயாற்றின் மீது அணை கட்டத் தேவையா?

தேமொழி

Apr 29, 2017

http://siragu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be/

“ஊட்டியின் மோயாற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், அதன் வடக்குப் பகுதி கர்நாடக எல்லையிலும் பாய்கிறது. கர்நாடகாவில் பாயும் நீரானது கபினி மற்றும் நுகு அணைகளைச் சென்றடைகிறது. பின்னர் இரு அணையிலிருந்தும் வெளியேறும் நீரானது ஒன்றாக இணைந்து, டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியுடன் இணைந்து, மீண்டும் தமிழகத்திற்குள் நுழைகிறது. அதன்பிறகு ஒகேனக்கல் வழியாகத் தமிழகத்திற்குள் பாய்கிறது.”

கடந்த சில நாட்களாகத் தமிழக உழவர்களுக்கு உதவும் வகையில் சிந்தித்த சிலர் வெளியிட்டுள்ள தகவல் இது. இவ்வாறு கர்நாடகாவில் பாயும் மோயாற்றின் வழியாக கர்நாடகா பலன் அடைவதாகவும், இதனால் அவர்களுக்கே நாம் தான் நீர் தருகிறோம் என்றும், அதை அவர்கள் தமிழகத்திற்குத் தரமறுக்கிறார்கள் என்றும், நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்துக் கொண்டுள்ளது என்றும், மோயாற்றின் மீது நாம் ஓர் அணையைக் கட்டிவிட்டோம் என்றால் கர்நாடகா நீருக்காக நம்மைக் கெஞ்சும் நிலை உருவாகிவிடும் என்றும், இந்த உண்மை தெரிந்தும் அரசியல்வாதிகள் தங்கள் தன்னலத்தின் காரணமாக இத்தீர்வை எடுக்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை என்றும் பலமான கருத்துப் பரப்புரை சமூக வலைத்தளங்களிலும் மாறி மாறிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இணையத்தின் சில “செய்தித் தளங்களும்” கூட இவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்களாகத் தெரியவில்லை. ஆனால் இது உண்மையா, இதனால் தீர்வு கிடைக்குமா என்று ஒருவரும் அக்கறை இன்றி வரும் செய்திக்கு கருத்துப் பகிர்வதும் தொடர்கிறது என்பதுதான் வியப்புக்குரியது. இத்தகைய போக்கிற்கு நன்கு கற்றவர்களும் விதிவிலக்கல்ல.

மோயாறும் அது பாயுமிடங்களும்:

Siragu Moyar River2

நீலகிரியின் வடக்குப் பகுதியில் துவங்கி காடுகளின் வழியேமட்டும் பாயும் மோயாற்றின் நீளம் 100 கிமீ.க்கும் குறைவானது. இதில் சுமார் 25 கிமீ. கர்நாடகா எல்லைக்குள் பாய்கிறது. முதுமலைக் காட்டின் வழியாகப் பாயும் இந்த மோயாறுதான் அப்பகுதியின் வனவிலங்குகளின் வாழ்வாதாரம். மோயாற்றுக்குக் கிளையாறுகள் எதுவும் கிடையாது.   இவ்வாறு நீலகிரியின் வடபகுதியில் பாயும் மோயாறும், நீலகிரியின் தென்பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியே பாயும் பவானி ஆறும் பவானிசாகர் நீர்த்தேக்கத்தைத் தங்கள் நீரால் நிரப்புகின்றன. இதற்காக சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் பவானி திட்டம் மூலம் பவானிசாகர் அணையும் கட்டப்பட்டு 33 கோடி கன அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

மோயாற்றின் பள்ளத்தாக்கில், மோயாற்றின் வடகரை சத்தியமங்கலம், தலைமலை, தாளவாடி பகுதிகளை உள்ளடக்கிய காட்டுப் பகுதியும்; தென்கரை கொடநாட்டுப் பகுதியும் வெவ்வேறு விலங்குகளின் இருப்பிடங்களாகத் திகழ்கின்றன. சோலைக் காடுகளைக் கொண்ட குளிர் பிரதேசமான கொடநாட்டுப் பகுதியில் வாழும் கருமந்தி, இருவாச்சிப் பறவைகள், பழுப்பு மரநாய், ஈ பிடிப்பான் பறவை ஆகியன, மோயாற்றின் வடக்கில் புதர் காடுகளைக் கொண்ட வெப்பப் பிரதேசமான சத்தியமங்கலம் பகுதியில் கிடையாது. இதுவே இப்பகுதி இயற்கைச் சூழலின் தனிச்சிறப்பு ஆகும். இருகரையின் காட்டுவிலங்குகளும் மோயாற்றினை நம்பியே வாழ்கின்றன. யானைகள், புலிகள், கழுதைப் புலி, வெளிமான் ஆகிய நான்கு விலங்குகளும் வாழும் உலகின் ஒரே இடம் மோயாற்றின் பள்ளத்தாக்கு. இது மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையும் காட்டுப்பகுதிகளில் ஒன்று.

மோயாற்றின் கிளையாறு வழியாக கபினி ஆற்றிற்கு நீர் கிடைக்கிறதா என்பதில் கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் வாழும் மக்களுக்கே சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்தி கிடைக்கும் பொழுது அது உண்மைதானா என ஆராய்ந்து பார்க்க அதே இணையமும் நமக்குப் பலவழிகளில் உதவுகிறது. கூகுள் இணையத்தேடலும், கூகுள் புவிவரைபடமும் ஒரு சொடுக்கில் கணினித் திரையில் தரவுகளை அள்ளித்தருகிறது.

கூகுள் புவிவரைபடத்தில் மோயாற்றின் பாயும் தடத்தைத் தொடர்ந்து சென்றால் மோயாற்றுக்குக் கிளையாறு இல்லை என்பதும், இல்லாத ஒரு கிளையாற்றின் வழியாக கபினியாறும் நீர் பெறவில்லை என்பதும், மோயாற்றில் அணைகட்டுவதால் கர்நாடகாவை நாம் அடிபணியவைக்கமுடியாது என்பதும் தெளிவாகிறது. கொடுக்கப்பட்டுள்ள படங்கள் வழி உண்மை அறியலாம்.

கட்டுரைக்கான தகவல் தந்து உதவிய தளங்கள்:

[1] Moyar River — https://en.wikipedia.org/wiki/Moyar_River

[2] மோயாற்றின் — https://ta.wikipedia.org/s/h7k

[3] ஒரு நதியின் வாக்குமூலம்: சத்தி, கொடநாடு வனங்களின் ஆதாரம் மோயாற்றின்! [தி இந்து தமிழ் நாளிதழ்] — http://tamil.thehindu.com/opinion/columns/ஒரு-நதியின்-வாக்குமூலம்-சத்தி-கொடநாடு-வனங்களின்-ஆதாரம்-மோயாற்றின்/article7312241.ece

[4] கருவூலம்: ஈரோடு மாவட்டம்! [தினமணி] — http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/feb/18/கருவூலம்-ஈரோடு-மாவட்டம்-2651269.html

***

பொய்த்தகவல் வெளிவந்த இணையத்தளங்கள்:

[1] மோயாற்றில் அணை கட்டி, கர்நாடகாவுக்கு ஆப்பு வைக்கலாம்! — http://www.channel42.in/tamil/tamilnadu-will-build-dam-in-moyar-river

 [2] ஊட்டியில் அணை கட்டினால் போதும் கர்நாடகா நம்மிடம் கையேந்தும் தண்ணீருக்காக..! — http://www.manithan.com/news/20170406126217?ref=youmaylike1%7Cஊட்டியில்

[3] தமிழக விவசாயிகள் தண்ணீர், குடிநீர் பிரச்சனை தீர: கட்டப்படுமா மோயாற்றின் அணை ? — http://tamilvarthamaani.in/2017/04/தமிழக-விவசாயிகள்-தண்ணீர்/

[4] இந்த எடத்துல அணைய போட்டா கர்நாடகா நம்மகிட்ட தண்ணிக்கு கெஞ்சும் இனி! — http://tamil.nativeplanet.com/travel-guide/do-you-know-about-moyar-river-001082.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard