Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 006 - வாழ்க்கைத் துணைநலம்


Guru

Status: Offline
Posts: 7602
Date:
006 - வாழ்க்கைத் துணைநலம்
Permalink  
 


 வாழ்க்கைத் துணைநலம்

பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.

குறள் 51:

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

மணக்குடவர் உரை:
தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.

பரிமேலழகர் உரை:
மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை. (நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

கலைஞர் உரை:
இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.

சாலமன் பாப்பையா உரை:
பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கையை அமைப்பவளே மனைவி.

Translation:
As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.

Explanation:
She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.

குறள் 52:

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

மணக்குடவர் உரை:
குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

பரிமேலழகர் உரை:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.).

மு. வரதராசன் உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

கலைஞர் உரை:
நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

Translation:
If household excellence be wanting in the wife, Howe'er with splendour lived, all worthless is the life.

Explanation:
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.

குறள் 53:

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.

மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?.

பரிமேலழகர் உரை:
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.

கலைஞர் உரை:
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?

Translation:
There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.

Explanation:
If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?.

குறள் 54:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

மணக்குடவர் உரை:
பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.

பரிமேலழகர் உரை:
பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?.

கலைஞர் உரை:
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.

சாலமன் பாப்பையா உரை:
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.

Translation:
If woman might of chastity retain, What choicer treasure doth the world contain? .

Explanation:
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?.

குறள் 55:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

மணக்குடவர் உரை:
தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதி, அவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.

பரிமேலழகர் உரை:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் 'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும் என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.

கலைஞர் உரை:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

சாலமன் பாப்பையா உரை:
பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

Translation:
No God adoring, low she bends before her lord; Then rising, serves: the rain falls instant at her word!.

Explanation:
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.

குறள் 56:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

மணக்குடவர் உரை:
தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.

பரிமேலழகர் உரை:
தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

கலைஞர் உரை:
கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

சாலமன் பாப்பையா உரை:
உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.

Translation:
Who guards herself, for husband's comfort cares, her household's fame, In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.

Explanation:
She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.

குறள் 57:

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.

மணக்குடவர் உரை:
மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.

பரிமேலழகர் உரை:
மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

மு. வரதராசன் உரை:
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது.

கலைஞர் உரை:
தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல் காப்பதில் பயன் என்ன? பெண்கள் தங்களைத் தாங்களே மன அடக்கத்தால் காக்கும் காவலே முதன்மையானது.

Translation:
Of what avail is watch and ward? Honour's woman's safest guard.

Explanation:
What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.

குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

மணக்குடவர் உரை:
பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.

பரிமேலழகர் உரை:
பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால் பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.

கலைஞர் உரை:
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.

Translation:
If wife be wholly true to him who gained her as his bride, Great glory gains she in the world where gods bliss abide.

Explanation:
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.




__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

குறள் 59:

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

மணக்குடவர் உரை:
புகழ்பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு இல்லையாம்: தம்மை யிகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல நடக்கும் மேம்பட்ட நடை. ஏறு நடை- அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.

பரிமேலழகர் உரை:
புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல் பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச் சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்' என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.

கலைஞர் உரை:
புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய் நடக்கும் பெருமித நடை இல்லை.

Translation:
Who have not spouses that in virtue's praise delight, They lion-like can never walk in scorner's sight.

Explanation:
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.

குறள் 60:

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு அழகென்று சொல்லுப, மனையாள் ஒழுக்கமுடையாளாதலை: அவ்வழகின்மேலே நல்ல அணிகலனென்று சொல்லுப, நல்ல புதல்வரைப் பெறுதலை.

பரிமேலழகர் உரை:
மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப) நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம் என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை. ('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

கலைஞர் உரை:
குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற அணிகலன்கள் நல்ல பிள்ளைகளைப் பெறுவதே.

Translation:
The house's 'blessing', men pronounce the house-wife excellent; The gain of blessed children is its goodly ornament.

Explanation:
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.


இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள் (௫௰௧)
இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது (௫௰௨)
இல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள் சிறந்தவள் அல்லாதபோது உள்ளதுதான் என்ன? (௫௰௩)
கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப் பெருமை மிக்கவை உலகில் யாவை உள்? ஒன்றுமில்லை (௫௰௪)
தெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுநனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் ‘பெய்’ என்றால், மழையும் பெய்யும் (௫௰௫)
தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண் (௫௰௬)
சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர், ‘நிறை’ என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும் (௫௰௭)
பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள் (௫௰௮)
புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை (௫௰௯)
மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும் (௬௰)




__________________


Guru

Status: Offline
Posts: 7602
Date:
Permalink  
 

 6. வாடிநக்கைத் துணைநலம்

இல்வாடிநடிநடிநடிநடிநவுக்குத் துணையாகிய மனையாளின் நல்ல பண்புகள்.
1. மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித் தன்கொண்டான்
வளத்தக்காள் வாடிநடிநடிநடிநடிநக்கைத் துணை.
(ப-உ) மனைத்தக்க- குடும்ப வாடிநவுக்குத் தகுந்த. மாண்பு
உடையள் ஆகி- சிறந்த குணங்களை உடையவளாடீநு. தன்
கொண்டான்- தன்னை மணந்துகொண்ட கணவனது. வளம்
தக்காள்- செல்வத்துக்குத் தக்கவாறு செலவு செடீநுபவள்.
வாடிநக்கைத் துணை- மனைவியாவாள்.
(க-து) கணவனது செல்வத்துக்குத் தக்கவாறு செலவு
செடீநுபவளே மனைவியாவாள்.
2. மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாடிநடிநடிநடிநடிநக்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
(ப-உ) மனைமாட்சி - இல்லறத்துக்குத் தகுந்த சிறந்த
குணங்கள். இல்லாள்கண் - மனைவியிடம். இல் ஆயின்- இல்லை
யானால். வாடிநக்கை - அந்த இல்வாடிநக்கை. எனை- எவ்வளவு.
மாட்சித்து ஆயினும் - சிறந்த செல்வத்தையுடையதாயினும். இல்அதனால்
பெருமையில்லை.
(க-து) மனைவியிடம் நற்குணம் இல்லாவிட்டால், அக்
குடும்பத்துக்குப் பெருமையில்லை.
3. இல்லதுஎன் இல்லவள் மாண்புஆனால்; உள்ளதுஎன்
இல்லவள் மாணாக் கடை.
(ப-உ) இல்லவள்- மனைவி. மாண்பு ஆனால்- சிறந்த
குணங்களை உடையவளாயிருந்தால். இல்லது என்- அவனுக்கு
இல்லாத செல்வம் யாது? இல்லவள்- மனையாள். மாணாக்
கடை- சிறப்பற்றவளாயிருந்தால். உள்ளது என்- அவனுக்கு
உள்ள செல்வந்தான் யாது?
(க-து) சிறந்த குணமுள்ள மனைவியே ஒருவனுக்குச்
செல்வம் ஆவாள்.
7. இயல்பினான் இல்வாடிநடிநடிநடிநடிநக்கை வாடிநடிநடிநடிநடிநபவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
(ப-உ) இயல்பினான்- இல்லறத்திற்குரிய தன்மையுடன்.
இல்வாடிநக்கை- இல்லறத்திலே வாடிநபவன். என்பான்- வாடிந
கின்றவன் என்பவனே. முயல்வாருள் எல்லாம்- நன்மைபெற
முயல்கின்றவர்கள் எல்லாருள்ளும். தலை- சிறந்தவன் ஆவான்.
(க-து) தருமநெறியிலே இல்வாடிநக்கையில் வாடிநகின்றவனே
சிறந்தவன் ஆவான்.
8. ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாடிநடிநடிநடிநடிநக்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
(ப-உ) ஆற்றின்- பிறரையும் நல்வழியிலே. ஒழுக்கி- நடக்கச்
செடீநுது. அறன் இழுக்கா- தானும் அறநெறியில் தவறாமல்
வாடிநகின்ற. இல்வாடிநக்கை- இல்லற வாடிநவே. நோற்பாரின்-
தவஞ் செடீநுகின்றவர்களின் வாடிநக்கையைவிட. நோன்மை
உடைத்து- சிறப்புடையதாகும்.
(க-து) அறநெறிப்படி இல்வாடிநக்கை நடத்துகின்றவன்
வாடிநவு தவத்தைவிடச் சிறந்ததாகும்.
9. அறன்எனப் பட்டதே இல்வாடிநடிநடிநடிநடிநக்கை; அஃதும்
பிறன்பழிப்பது இல்ஆயின் நன்று.
(ப-உ) அறன் எனப்பட்டது- நூல்களால் அறம் என்று
பெருமையாகச் சொல்லப்பட்டது. இல்வாடிநக்கை - இல்லற
மேயாகும். அஃதும்- அதுவும். பிறன் பழிப்பது- பிறனால்
பழிக்கப்படும் தன்மை. இல்ஆயின்- இல்லாமலிருந்தால். நன்றுசிற
ந்ததாகும்.
(க-து) பிறரால் பழிக்கப்படாமல் இல்லறம் நடத்துவதே
சிறந்தது; உயர்ந்த தர்மம்.
10. வையத்துள் வாடிநடிநடிநடிநடிநவாங்கு வாடிநடிநடிநடிநடிநபவன் வான்உறையும்
தெடீநுடீநுடீநுடீநுடீநுவத்துள் வைக்கப்படும்.
(ப-உ) வையத்துள்- இவ்வுலகிலே. வாடிநவு ஆங்கு- வாழும்
முறைப்படி. வாடிநபவன்- இல்லறத்தில் வாடிநபவன். வான்
உறையும்- விண்ணுலகில் இருக்கின்ற. தெடீநுவத்துள்- தேவருள்
ஒருவனாக. வைக்கப்படும்- எண்ணப்படுவான்.
24 சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 4 திருக்குறள் பொருள் விளக்கம் 25
(க-து) பெண்கள் தம் கற்பைத் தாமே காத்துக்கொள்வது
தான் சிறந்தது. அவர்கள் கற்பைக் காவல் வைத்துக் காப்பதால்
பயன் இல்லை.
8. பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெரும்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
(ப-உ) பெற்றான்- தம்மை மனைவியாகப் பெற்ற
கணவனை. பெறின்- வணங்குந் தன்மையைப் பெறுவாராயின்.
பெண்டிர்- அப்பெண்கள். புத்தேளிர்- தேவர்கள். வாழும் உலகுவாடிந
கின்ற உலகத்தில். பெரும் சிறப்பு- பெரிய சிறப்பை. பெறுவர்
- அடைவார்கள்.
(க-து) கணவனை வணங்கி வாழும் மனைவியர் தேவருலகில்
தேவர்களால் போற்றப்படுவார்கள்.
9. புகடிநடிநடிநடிநடிநபுரிந்த இல்இலோர்க்கு இல்லை இகடிநடிநடிநடிநடிநவார்முன்
ஏறுபோல் பீடு நடை.
(ப-உ) புகடிந- கீர்த்தியை. புரிந்த- விரும்பிய. இல் இல்லோர்க்குமனைவி
இல்லாதவர்க்கு. இகடிநவார் முன்- தம்மை இகடிநந்து
பேசும் பகைவர் முன். ஏறுபோல்- ஆண்சிங்கம் போல். பீடு நடைகெ
ம்பீரமாக நடக்கும் நடை. இல்லை- உண்டாகாது.
(க-து) மனைவி கற்பில்லாதவளாயின், பகைவர் முன்
தலைநிமிர்ந்து நடக்க முடியாது.
10. மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கள் பேறு.
(ப-உ) மனைமாட்சி- மனைவியின் சிறந்த குணங்களே.
மங்கலம் என்ப- நன்மை என்று சொல்வர். நன் மக்கள் பேறுநல்ல
மக்களைப் பெறுதல். மற்றுஅதன்- அந்த நன்மையின்.
நன்கலம்- நல்ல ஆபரணமாகும்.
(க-து) மனைவியின் சிறந்த குணங்களே நன்மை. அந்
நன்மையின் ஆபரணம் மக்களைப் பெறுதல்.


6. வாழ்க்கைத் துணைநலம்

1.மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
⁠வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
ஒரு நல்ல மனைவி இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகளையும், தன் கணவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையையும் உடையவளாய் இருத்தல் வேண்டும். அத்தகைய மனைவி இல்லற வாழ்க்கைக்கு ஒரு சிறந்த துணையாவாள்.51

2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
⁠எனைமாட்சித் தாயினும் இல்.

இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகள் ஒரு மனையாளிடத்தில் அமைந்திருத்தல் வேண்டும். இல்லையானால் அந்த இல்லற வாழ்க்கை எப்படிப்பட்ட பெருமையை உடையதானாலும் பயனற்றதாகும்.52

3.இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென்
⁠இல்லவள் மாணாக் கடை?

நற்குண நற்செய்கைகளையுடைய மனைவியைப் பெற்ற கணவனிடத்து இல்லாத செல்வம் இல்லை. மனைவினிடத்து நற்குண நற் செய்கைகள் இல்லையானால் கணவனிடத்து எந்தச் செல்வமும் இருப்பதாகக் கொள்ள முடியாது.

இல்லது - இல்லாத பொருள்; இல்லவள்-வீட்டிற்கு உரியவள் (மனைவி); உள்ளது-இருக்கின்ற பொருள்; மாணாக்கடை-நற்குண நற்செய்கைகளால் பெருமையடையாத போது.53

4.பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
⁠திண்மைஉண் டாகப் பெறின்?

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினையும் அடைவதற்குத் துணையாய் இருப்பவள் கற்புடைய மனைவி. ஒருவன் அடையக் கூடிய பொருள்களுள் அப்படிப்பட்ட கற்புடைய மனைவியினும் உயர்வாகிய பொருள் வேறு ஒன்றும் இல்லை.

பெருந்தக்க-பெரிய தகுதியினையுடைய பொருள்கள்; யா-எவை: திண்மை-கலங்கா நிலைமை.54
5.தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
⁠பெய்யெனப் பெய்யும் மழை.

ஒரு மனைவி கடவுளை வழிபடா விட்டாலும் எல்லாத் தெய்வமும் தன் கணவனே என்று கருதி அவனை முறை தவறாது வழிபடுவாளாயின், அவள், பெய்” என்று சொல்ல மழை பெய்யும்.

மழை மட்டுமல்லாமல் பிற இயற்கைப் பொருள்களும் அவள் சொல்வழிப் பணியாற்றும் என்றும் கூறுவர்.55

6. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
⁠சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

கற்பினின்றும் வழுவாமல் தன்னைத் தானே காத்துக் கொள்வது ஒரு மனைவியின் கடமை. தன்னை மனைவியாகக் கொண்ட கணவனை உணவு முதலியவற்றால் உபசரிப்பது அவளது இயல்பு. தன்னிடத்தும் தன் கண்வனிடத்தும் நன்கமைந்த புகழ் தம்மை விட்டு நீங்காத வகையில் நற்குண நற்செயல்களை மறவாது இல்வாழ்க்கை நடத்துதல் அவளது பெருமை. இத்தகைய இயல்புகள் வாய்ந்தவளே பெண்.

பேணுதல்-உபசரித்தல்; தகைசான்ற-நன்மையமைந்த; சொல்-புகழ்; சோர்வு-மறத்தல்.56

7.சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்; மகளிர்
⁠நிறைகாக்கும் காப்பே தலை.

மதில், வாயிற் காவல் முதலியவற்றால் பெண்களைக் காவல் செய்வது என்ன பயனைத் தரும்? அவர்கள் தமது நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தித் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காவலே மேலான காவலாகும்.

சிறை-மதிற் காவல், வாயிற் காவல் முதலியன; நிறை- நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துதல்; தலை-மேன்மையுடையது.57

8.பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
⁠புத்தேளிர் வாழும் உலகு.

தம் கணவரை முறையோடு உபசரிக்கும் இயல்பினைப் பெற்ற மனைவியர் தேவர்கள் வாழ்கின்ற உலகத்திலே இருப்பதாகக் கூறப்படும் பெரிய சிறப்புக்களையும் இவ்வுலகத்திலேயே பெறுவர்.

பெற்றான்- (மனைவியாகப்) பெற்றவன், கணவன்; பெறின்-(உபசரிக்கும் இயல்பைப்) பெற்றால்; புத்தேளிர்- தேவர்கள். இக்குறட்பாவினுக்குக் "கணவரை உபசரிக்கும் மனைவியர் தேவருலகத்தில் தேவர்களால் மிக்க சிறப்புச் செய்யப்படுவர்" என்றும் பொருள் கூறுவர்.58

9.புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
⁠ஏறுபோல் பீறு நடை.

புகழை விரும்புகின்ற மனைவியைப் பெறாதவர்கள் தம்மை இகழும் தம் பகைவர் முன்னே சிங்க ஏறு போலப் பெருமிதத்தோடு நடக்க முடியாது.

புரிந்த-விரும்பிய; இல்-மனைவி; ஏறு-ஆண் சிங்கம்; பீடு-பெருமை.59

10.மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன்
⁠நன்கலம் நன்மக்கட் பேறு.

ஒரு கணவனுக்கு அவனுடைய மனைவியின் நற்குண நற்செய்கைகளே நன்மை தருவன என்பர். அந்த நற்செய்கைகளுக்கு அழகு செய்யும் அணியாவது நல்ல புதல்வரைப் பெறுதல்.

மங்கலம்-நன்மை; மனை-மனைவி; மாட்சி-பெருமையைத் தரும் நற்குண நற்செயல்கள்; கலம். அணி.60



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard