Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 009 - விருந்தோம்பல்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
009 - விருந்தோம்பல்
Permalink  
 


விருந்தோம்பல்
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல்.

குறள் 81:

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

மணக்குடவர் உரை:
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

பரிமேலழகர் உரை:
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

மு. கருணாநிதி உரை:
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

Translation:
All household cares and course of daily life have this in view.
Guests to receive with courtesy, and kindly acts to do.

Explanation:
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

குறள் 82:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

மணக்குடவர் உரை:
விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல், சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.

பரிமேலழகர் உரை:
சாவா மருந்து எனினும் - உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் ; விருந்து புறத்ததாத் தானுண்டல் - தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்; வேண்டற்பாற்று அன்று - விரும்புதல் முறைமையுடைத்து அன்று.(சாவா மருந்து : சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

மு. கருணாநிதி உரை:
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.

Translation:
Though food of immortality should crown the board,
Feasting alone, the guests without unfed, is thing abhorred.

Explanation:
It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

குறள் 83:

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

மணக்குடவர் உரை:
நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம், வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.

பரிமேலழகர் உரை:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை - தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; பருவந்து பாழ்படுதல் இன்று - நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. (நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.).

மு. வரதராசன் உரை:
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

மு. கருணாநிதி உரை:
விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

Translation:
Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share.

Explanation:
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.

குறள் 84:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

மணக்குடவர் உரை:
திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.

பரிமேலழகர் உரை:
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.).

மு. வரதராசன் உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

மு. கருணாநிதி உரை:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

Translation:
With smiling face he entertains each virtuous guest,
'Fortune' with gladsome mind shall in his dwelling rest.

Explanation:
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.

குறள் 85:

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

மணக்குடவர் உரை:
விருந்தினரை ஊட்டி மிக்க வுணவை யுண்ணுமவன் புலத்தின் கண், விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ? பொருள் வருவாயாக இயற்றுமிடம் நன்றாகப் பயன்படுமென்றவாறு.

பரிமேலழகர் உரை:
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

மு. கருணாநிதி உரை:
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

சாலமன் பாப்பையா உரை:
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?

Translation:
Who first regales his guest, and then himself supplies,
O'er all his fields, unsown, shall plenteous harvests rise.

Explanation:
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?

குறள் 86:

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

மணக்குடவர் உரை:
வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.

பரிமேலழகர் உரை:
செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

மு. கருணாநிதி உரை:
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

சாலமன் பாப்பையா உரை:
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

Translation:
The guest arrived he tends, the coming guest expects to see;
To those in heavenly homes that dwell a welcome guest is he.

Explanation:
He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.

குறள் 87:

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

மணக்குடவர் உரை:
விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.

பரிமேலழகர் உரை:
வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. (ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

மு. கருணாநிதி உரை:
விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தினரின் தகுதி அளவுதான் நன்மையின் அளவாகும்.

Translation:
To reckon up the fruit of kindly deeds were all in vain;
Their worth is as the worth of guests you entertain.

Explanation:
The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.

குறள் 88:

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

மணக்குடவர் உரை:
விருந்தினரைப் போற்றி உபசரிக்க மாட்டாதார், வருந்தியுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றோமென் றிரப்பர்.

பரிமேலழகர் உரை:
பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் - நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இது பொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர்; விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் - அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப் பயனை எய்தும் பொறியிலாதார். ("ஈட்டிய ஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் (நாலடி.280) "ஆகலின், 'பரிந்து ஓம்பி' என்றார். 'வேள்வி' ஆகுபெயர்.).

மு. வரதராசன் உரை:
விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

மு. கருணாநிதி உரை:
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தினரைப் பேணி, அந்த யாகத்தின் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

Translation:
With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry,
Who cherish not their guests, nor kindly help supply.

Explanation:
Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."




__________________


Guru

Status: Offline
Posts: 7467
Date:
Permalink  
 

குறள் 89:

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

மணக்குடவர் உரை:
உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.

பரிமேலழகர் உரை:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

மு. கருணாநிதி உரை:
விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

Translation:
To turn from guests is penury, though worldly goods abound;
'Tis senseless folly, only with the senseless found.

Explanation:
That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.

குறள் 90:

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

மணக்குடவர் உரை:
எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது: விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர். இது முகம்நோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
அனிச்சம் மோப்பக் குழையும் - அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக்குழையும் - விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர். (அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

மு. கருணாநிதி உரை:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

Translation:
The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.

Explanation:
As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.

இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும் (௮௰௧)
விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத் தக்கது அன்று (௮௰௨)
நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும் (௮௰௩)
முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள் (௮௰௪)
விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ? (௮௰௫)
செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர்பார்த்திருப்பவன், வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான் (௮௰௬)
விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று; அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும் (௮௰௭)
பொருளை வருத்தத்தோடு காத்து, அது போய்விட்டபோது ‘தாம் பற்றில்லாதவர்’ என்பவர்கள், விருந்தைப் பேணி அந்த வேள்வியில் ஈடுபடாதவரே யாவர்! (௮௰௮)
பொருள் உடைமையுள்ளும் ‘இல்லாமை’ என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும் (௮௰௯)
அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்; முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள் (௯௰)

9. விருந்தோம்பல்



1.இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
⁠வேளாண்மை செய்தற் பொருட்டு.

மனைவி மக்களோடு வீட்டில் இருந்து, பொருள் சம்பாதித்து நாம் வாழ்ந்து வருவது எதற்காக எனில் நம் வீட்டிற்குப் புதிதாக வருகின்றவர்களைப் பெருமைப்படுத்தி அவர்கட்கு வேண்டிய உதவிகளைப் புரிதற் பொருட்டே ஆகும்.

ஓம்புதல்-பாதுகாத்தல்; விருந்து-நமக்கு முன் பின் தெரியாத அயலார்; வேளாண்மை-உதவி.81
2விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
⁠மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

⁠புதிதாக நம்மை நோக்கி வந்த ஒருவர் நம் வீட்டின் வெளிப்புறத்திலே பசியோடிருக்க, நாம் உண்ணும் உணவு என்றும் இறவாமலிருக்கச் செய்யும் தேவாமிர்தமாக இருந்தாலும் விரும்பத்தக்கது அன்று.82

3.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
⁠பருவந்து பாழ்படுதல் இன்று.

தன்னை நாடி வருகின்ற விருந்தினர்களை நாள் தோறும் வரவேற்று, அவர்கட்கு வேண்டுவன அளித்து, அவர்களைப் போற்றி வரும் இயல்புடையவனின் இல்வாழ்க்கை எந்தக் காலத்திலும் வறுமையால் வருந்திக் கெடுவதில்லை.83
4.அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
⁠நல்விருந் தோம்புவான் இல்.

நல்ல விருந்தினர்களை முகமலர்ச்சியோடு உபசரிக்கும் இயல்புடையவனின் இல்லத்தில் திருமகள் உள்ளம் மகிழ்ந்து தங்கியிருப்பாள்.

அகன் அமர்ந்து-மனத்தில் மகிழ்ச்சி பொருந்தி.84
5.வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
⁠மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினரை உண்ணும்படி செய்து உபசரித்து அவர் உண்டு மிகுந்ததைத் தானும் தன் குடும்பத்தாரும் உண்ணும் இயல்புடையவன் நிலத்துக்கு விதை விதைத்தலும் வேண்டுமோ? (வேண்டுவதில்லை; தானே விளையும்.)85
6.செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
⁠நல்விருந்து வானத் தவர்க்கு.

தன்னிடத்து வந்து செல்லும் விருந்தினர்களை உபசரித்து அவர்களை வழி கூட்டி அனுப்பி விட்டு, மேலும் வரக் கூடிய விருந்தினருக்காக எதிர்பார்க்கும் இயல்புடையவனை மேலுலகத்திலுள்ள இந்திரன் முதலிய தேவர்கள் ஒரு விருந்தினனாகப் பாவித்து அவனுக்கு மதிப்புத் தந்து அவனைப் போற்றிப் புகழ்வார்கள்.86

7.இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
⁠துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தினரை உபசரித்தலால் ஆகிய பயன் இன்ன அளவினது என்று அளவிட்டுச் சொல்வதற்கில்லை. அவ்விருந்தினரின் குண நலன்களுக்குத் தக்கபடி அந்தப் பயன் விளையும்.

இனைத்துணைத்து - இன்ன அளவினை யுடையது; துணை-அளவு; துணைத்துணை-(குணநலன்களின் அல்லது தகுதியின்) அளவே அளவாகும்; வேள்வி-உதவி.87

8.பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
⁠வேள்வி தலைப்படா தார்.

விருந்தினரை உபசரித்து, அதனால் ஆகிய பலனை அடைய முயலாதவர்கள் வருந்தித் தேடிப் பாதுகாத்த தம் பொருளை இழந்து, "எத்தகைய ஆதரவும் இல்லாதவராய் இருக்கின்றோம்" என்று சொல்லி வருந்தக்கூடிய நிலையில் இருப்பர்.

பற்றற்றேம்-ஆதரவற்ற நிலையில் இருக்கின்றோம்; விருந்தினருக்கு உதவாத பொருள் தம்மாலும் அனுபவிக்கப் படாமல் தொலைந்து போகும் என்பது கருத்து.88
9.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
⁠மடமை மடவார்கண் உண்டு.

விருந்தினரை உபசரியாமல் இருக்கும் அறியாமையை உடைய ஒருவன் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் அச்செல்வம் அவனிடத்து இல்லாமைக்குச் சமமாகும். விருந்தினரை உபசரியாமல் இருக்கும் பேதைமையான செயல் அறிவில்லாதவர்களிடத்திலே இருக்கும்.89
10.மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
⁠நோக்கக் குழையும் விருந்து.

அனிச்ச மலரானது மோந்தால்தான் வாடிப் போகும். விருந்தினரின் முகமாகிய மலரோ, முகம் வேறுபாட்டோடு ஒருமுறை நோக்கிய உடனே வாடிப் போய் விடும்.

விருந்தினர் அனிச்ச மலரினும் மென்மையான உள்ளழ் வாய்ந்தவர் என்பது பொருள்.90

32 சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 4 திருக்குறள் பொருள் விளக்கம் 33
(ப-உ) வேள்விப் பயன்- விருந்தினரை உபசரிக்கும்
வேள்வியின் பயன். இனைத்துணைத்து- இவ்வளவு தான்.
என்பது ஒன்று இல்லை- என்பதாகிய அளவு ஒன்றும் இல்லை.
விருந்தின்- விருந்தினரின். துணை- தகுதியாகிய அளவே. துணைஅளவாகு
ம்.
(க-து) விருந்தே வேள்வி. அதன் பயனை அளவிட
முடியாது. விருந்தினர் தகுதியே அதன் அளவாகும்.
8. பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர், விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.
(ப-உ) விருந்து ஓம்பி- விருந்தினரை உபசரித்து. வேள்விஅ
ந்த யாகத்தில். தலைப்படாதார்- ஈடுபடாதவர். பரிந்து ஓம்பிபொருள்களை
வருந்திப் பாதுகாத்து பின்பு அதை இழந்தபின்.
பற்று அற்றேம்- ஆசையற்றோம். என்பர்- என்று கூறி வருந்துவர்.
(க-து) விருந்தினரை உபசரிக்காதவர்கள், செல்வத்தை
இழந்தபின், செல்வத்தில் எங்களுக்கு ஆசையில்லை என்பர்.
9. உடைமையுள் இன்மை, விருந்தோம்பல் ஓம்பா
மடமை; மடவார்கண் உண்டு.
(ப-உ) உடைமையுள்- செல்வம் உள்ள காலத்தில். இன்மை
- வறுமையாவது. விருந்து ஓம்பல்- விருந்தினரை உபசரிப்பதை.
ஓம்பா- விரும்பாத. மடமை- அறியாமையாகும். மடவார்கண்-
அறிவில்லாதவரிடமே. உண்டு- அம் மடமை உண்டு.
(க-து) செல்வத்துள் வறுமை விருந்தினரை இகடிநதல்;
அறிவற்றவரிடமே இச்செயல் உண்டு.
10. மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
(ப-உ) அனிச்சம்- அனிச்சப்பூ. மோப்ப - முகர்ந்தவுடன்.
குழையும்- வாடிப்போகும்; அதுபோல். முகம் திரிந்து- முகம்
வேறுபட்டு. நோக்க - பார்த்தவுடன். விருந்து- விருந்தினர் உள்ளம்.
குழையும்- வாடிப் போகும்.
(க-து) முகர்ந்தால்தான் அனிச்சப்பூ வாடும்; அன்பின்றிப்
பார்த்தாலே விருந்தினர் உள்ளம் வருந்தும்.
(ப-உ) வருவிருந்து- தன்னிடம் வரும் விருந்தினரை.
வைகலும்- தினந்தோறும். ஓம்புவான்- உபசரிப்பவனுடைய.
வாடிநக்கை- வாடிநவானது. பருவந்து- வருந்தி. பாடிநபடுதல் இன்று
- கெடுவதில்லை.
(க-து) விருந்தினரைக் காப்பாற்றுவோன் வறுமையால்
அழியமாட்டான்.
4. அகன்அமர்ந்து செடீநுடீநுடீநுடீநுடீநுயாள் உறையும், முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
(ப-உ) முகன் அமர்ந்து- முகத்தால் விரும்பி. நல்விருந்துநல்ல
விருந்தினரை. ஓம்புவான்- காப்பாற்றுகின்றவனுடைய.
இல்- வீட்டில். அகன் அமர்ந்து- மன விருப்பத்துடன். செடீநுயாள்இலக்
குமி. உறையும்- வாடிநவாள்.
(க-து) விருந்தினரை மகிடிநச்சியுடன் உபசரிப்பவன்
வீட்டிலேதான் செல்வம் நிறைந்திருக்கும்.
5. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ? விருந்துஓம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
(ப-உ) விருந்து ஓம்பி- விருந்தினரை உபசரித்த பின்.
மிச்சில்- மீதமானதை. மிசைவான்- உண்பவனுடைய. புலம்-
விளைநிலத்திலே. வித்தும்- விதையும். இடல் வேண்டும் கொல்ஓபோடவே
ண்டுமோ? (வேண்டுவதில்லை.)
(க-து) விருந்தினரை உபசரிப்பவனது விளை நிலம் தானே
விளையும்.
6. செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான்,
நல்விருந்து வானத் தவர்க்கு.
(ப-உ) செல்விருந்து- வந்த விருந்தினரை. ஓம்பி- உபசரித்து.
வருவிருந்து- வருகின்ற விருந்தினரையும். பார்த்து இருப்பான்-
எதிர்பார்த்துக்கொண்டிருப்பவன். வானத்தவர்க்கு- வானத்தில்
உள்ள தேவர்களுக்கு. நல்விருந்து- நல்ல விருந்தினன் ஆவான்.
(க-து) விருந்தினரை உபசரிப்பவன் தேவர்களுக்குச் சிறந்த
விருந்தினனாகச் செல்வான்.
7. இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை, விருந்தின்
துணைத்துணை, வேள்விப் பயன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard