ஒருநூலைப்படிக்கும்போதுஅவ்வாசிரியரின்உண்மைகருத்தைஉணர வேண்டும்.இக்காலத்திற்குஏற்றகருத்தைஏற்றுக் கொள்ள வேண்டும், ஏலாத கருத்தை விட்டுவிடவேண்டும். தமதுகொள்கைக்குஏற்பஒருவருடையகருத்தைமாற்றிபொருள்கொள்வதுமுறையல்ல. இம்முறைஅந்தநூலாசிரியர்க்கு பெருமை அளிப்பதல்ல.இதுவேஎனதுகருத்து
இந்தமுறையில்பழையநூல்கள்ஆராய்ச்சிசெய்வதுதான்பழங்காலத்துமக்களின்நாகரீகத்தைஅறிந்துகொள்வதற்குஇடம்தரும்சரித்திரஆராய்ச்சிக்கும் துணை செய்யும்.
திருக்குறள் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல் அக்காலத்தில் தமிழர் அடைந்திருந்த நாகரீகத்தையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த நாகரீகத்திலும் பழக்க வழக்கங்களிலும் சீர்திருத்தத்தை உண்டாக்க வேண்டித் திருக்குறள் ஆசிரியர் செய்த முயற்சியே குறள் ஒரு நூலாக உருவாயிற்று. பழங்காலத்தில் இருந்த ஒரு அறிவாளி அவர் காலத்து மக்களிடம் அவர் கண்ட பழக்க வழக்கங்களை ஆராய்ந்து அவருக்கு நல்லவை என்று தோன்றியவற்றை சிறப்பித்து கெட்டவை என்று தோன்றியவை கண்டித்தும் குறள் இயற்றினார்.
குறள் ஆசிரியரின் சொல் வன்மையைப் பற்றியும் புத்தி நுட்பத்தை பற்றியும் தமது முன்னோர் என்ற முறையில் ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளலாம் குறலில் வருத்தப்பட்ட பல ஒழுக்கங்கள் இன்றும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் நல்லொழுக்கங்களை கருதப்படுவது தமிழ் மக்களுக்கும் பெருமை கொடுக்கத் தக்கது
இக்காலத்தில் குறளாசிரியர் வாழ்ந்து குறைந்தபட்சம் ஒரு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாவது கழிந்த பிறகு குறளை படிப்பவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் மனித சரித்திரத்தில் இந்த பன்னெடுங்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பல புரட்சிகளையும் மனதில் நிறுத்தி படிக்க வேண்டும்
அப்படி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு குறளிலும் சில குற்றங்கள் தோன்றத்தான் செய்யும். இது இயற்கை. ஒரு ஆயிரத்து ஐந்நூறு வருஷத்தில் மனித சமூகம் எவ்வளவோ மாறுதல்களை அடைந்துவிட்டது. ஒரு பெண்
இறந்த தன் கணவனின் பிணத்தோடு கொளுத்தப்பட வேண்டும் என்பது ஒரு நூறு வருஷத்திற்கு முன்பு சிறந்த ஒழுக்கம் என வற்புறுத்தப்பட்டது. இன்று அப்படி செய்யப்பட்ட செயலுக்கு உடந்தையாக இருப்பவர்கள் குற்றவாளிகள் என தண்டிக்கப்படுவர். உலகத்தில் எல்லா தேசத்தினரும் தங்கள் பழக்க வழக்கங்களிலும் அந்த பழக்க வழக்கங்களுக்குக் காரணமாக உள்ள ஒழுக்கம் நன்மை தீமை என்ற எண்ணங்களும் கொள்கைகளிலும் தீவிர மாறுதல்கள் செய்து கொண்டிருக்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சியாலும் வளர்ச்சியினாலும் போக்குவரத்து சாதனங்கள் மிகுந்தபடியாலும் பல தேசத்து மக்கள் நெருங்கிப் பழக சவுகரியம் ஏற்பட்டபடியாலும் மனிதர்கள் தங்கள் எண்ணங்களிலும் தேவைகளிலும் ஒருவரைப் பார்த்து ஒருவர் அனேக மாறுதல்களைச் செய்து கொண்டனர்.
ஒவ்வொரு தேசத்திலும் காலத்திற்கு ஏற்ப அறிவாளிகளினால் இயற்றப்பட்ட நூல்கள் அந்தந்தக் கால தேச மாறுபாடுகளை குறிக்கின்றன. இங்கிலாந்தில் சாசர் காலத்து உண்மை ஒழுக்கம் வேறு, ஷேக்ஸ்பியர் காலத்து உண்மை ஒழுக்கம் வேறு, பெர்னாட்ஷா காலத்து உண்மை ஒழுக்கம் வேறு; இந்த கால வேறுபாட்டினால் சாசருடைய பெருமையோ ஷேக்ஸ்பியருடைய பெருமையோ குறைந்து விடவில்லை.
அதுமாதிரியே குறள் ஆசிரியர் காலத்து உண்மையும் ஒழுக்கமும் வேறு, இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழும் தமிழரின் உண்மை ஒழுக்கம் வேறு. இந்த வேற்றுமையால் குறளாசிரியரின் பெருமை எள்ளளவும் குறைந்தபாடில்லை. குறளில் கண்டது முழுவதும் இன்றைக்கும் உண்மையாய் இருக்குமானால் குறள் ஆசிரியர் மனிதனாய் இருக்க முடியாது, தேவனாய் இருந்து தீர்க்க தரிசனம் பெற்று இருக்க வேண்டும். தெய்வீகத் தன்மையிலும் தீர்க்கதரிசனத்திலும் நம்பிக்கை இல்லாமல் மனித அறிவை பிரதானமாகக் கொண்டவர்கள் குறளாசிரியரைத் தெய்வமாக வணங்க மாட்டார்கள் ஷேக்ஸ்பியர் போன்ற ஒரு அறிவாளி என்றே கொண்டாடுவார்கள். குறளில் உள்ள வாக்கியங்களைரைத் பண்டைத் தமிழரின் நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வார்களே ஒழிய இன்றைய காலத்து நவீனத் தமிழரின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டியாகக் கொள்ள மாட்டார்
ஒரு மனிதனை மனிதனாக பாவித்தால் தான் அந்த மனிதனுடைய பெருமை அவரைச் சாரும். அவனை தெய்வமாக வணங்க ஆரம்பித்தால் அவனுடைய பெருமை முழுதும் அவனை சாராமல் ரூபம் இல்லாத உணர்ச்சி இல்லாத தெய்வம் என்ற ஒரு வஸ்துவை சாரும். உலக மக்களுக்கு நன்மை செய்வதில் தங்களுடைய வாழ்க்கையைத் தியாகம் செய்த பல அறிவாளிகள் இந்த ஆபத்தில் சிக்கித் தெய்வம் ஆக்கப்பட்டு விட்டார்கள். இவ்வித ஆபத்து திருவள்ளுவர்க்கு ஏற்பட்டு இருப்பதைக் கண்டு துயரப்பட்ட காரணத்தினாலேயே நண்பர் சிதம்பரனார் திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இச்சிறு நூலை எழுதினார்.
சமஸ்கிருத பாஷையில் உள்ள சுருதி ஸ்மிருதிகளின் சாராம்சத்தை குறளில் திரட்டி கூறப்பட்டிருக்கிறது. ஜாதிபேதம், நால்வகை ஆசிரம தர்மம், பெண்ணடிமை, பிறவியால் ஏற்பட்ட குல விசேஷம், சுவர்க்கம், நரகம், கர்மம், மறுபிறப்பு எனப்பட்ட கொள்கைகள் இக்காலத்திற்கு ஒவ்வாதவை. ஆனால் வள்ளுவரால் ஆமோதிக்கப்பட்டவை. இதனால் வள்ளுவரின் பெருமை குன்றாது. ஜாதிபேதம் கூடாது என்பது வள்ளுவருக்குப் பிற்காலத்தில் தோன்றிய கொள்கை. கர்மம், மறுபிறப்பு என்னும் கொள்கைகளை விட்டு பகவான் புத்தராலேயே மீற முடியவில்லை. ரயில் வண்டியையும் ஆகாய விமானத்தையும் எப்படி குறள் ஆசிரியர் எதிர்பார்க்கவில்லையோ, அப்படியே மேலே சொல்லப்பட்ட பல கொள்கைகளைப் பிற்காலத்து மக்கள் உதறித் தள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை
குறளாசிரியர் மாமிச போஜனத்தையும் மதுவருந்துகளையும் கூடா ஒழுக்கம் எனக் கூறுகிறார். வள்ளுவர் காலத்தில் தமிழரிடம் புகையிலைப் பழக்கம் இல்லை, இருந்திருக்குமானால் சுருட்டு, சிகரெட், பீடி, மூக்குப்பொடி முதலியவைகளைக் கண்டித்து ஒரு அதிகாரமாவது எழுதி இருப்பார். நவீன உலகத்தில் இவற்றை கண்டிப்பவரும் உண்டு, போற்றுபவரும் உண்டு. வயிறார உண்பதற்கு ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாத கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் இந்நாட்டில், மீன் மாமிசம் போன்ற சத்துள்ள மலிந்து உணவுப் பதார்த்தங்களை நீக்கினால் பஞ்சமும் நோயும் பயங்கரமாகப் பரவும் என்பதில் ஐயமில்லை. மாமிசம் நீக்கப்படாத இக்காலத்திலேயே வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டியிருக்கையில் மாமிச பகிஷ்காரம் செய்வது எங்கனம்?
மதுவிலக்கு ஒரு தடவை அமெரிக்காவில் கையாளப்பட்டு, அதனால் கள்ள விற்பனையும் பலாத்காரக் குற்றங்களும் அதிகப்பட்டுப் பொதுமக்களின் ஒழுக்கம் கெட்டுவிடுவதாக அனுபோகத்தில் கண்டுபிடித்த பிறகு கைவிடப்பட்டது. அதே மதுவிலக்குக் கொள்கை சுதந்திர இந்தியாவிலும் பல இடங்களிலும் கையாளப்படுவதால் அமெரிக்காவில் அனுபோகத்தில் ஏற்பட்ட பலவித தீமைகளும் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் நடந்தது போலவே இந்தியாவிலும் மதுவிலக்குக் கொள்கையை கைவிடப்படலாம்.
வேதகாலத்து ஆரியர் யாகம் என்ற பெயரால் மாமிசத்தை நெருப்பிலிட்டு வாட்டி சோமா என்னும் மதுபானத்தை அருந்திக் களிப்புற்றனர். இவ்வித யாகமே ஆரியர்களின் முக்கிய கடமையாக வேதத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது. பழங்காலத்து தமிழ் மக்களும் வேடர்களாய்க் காட்டிலுள்ள பிராணிகளை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தைப் புசித்து, கள்ளுண்டு களிப்பதே அவர்களின் பெருமை தங்கிய பழக்கம் எனப் பழந்தமிழ் நூல்களில் காணப்படுகிறது. குறளாசிரியர் கோரிய இந்த இரண்டு சீர்திருத்தங்களும் மனித இயற்கைக்கு விரோதமாய் இருப்பதால், அவை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் நிறைவேறவில்லை.
இப்படி அனுபோகத்துக்கு ஒத்துவராததும் அனுபவத்துக் கூடா ஒழுக்கம் என நீக்கப்பட்டதுமான பல விஷயங்கள் குறளில் காணப்படுவதை இச்சிறிய ஆராய்ச்சி நூலின் விளக்கப் பட்டிருக்கின்றன. இவைகளிலிருந்து குறள் எனப்படுவது தெய்வ வாக்கல்ல, ஒரு உயர்ந்த அறிவுள்ள தமிழ் மகனால் எழுதப்பட்டது என்பது புலப்படுகின்றது. தெய்வ சிருஷ்டியினால் மனிதன் தன் அறிவால் அதை ஆராய்ச்சி செய்ய முடியாது. ஆரியவேதமும் கிறிஸ்துவ பைபிளும் இஸ்லாமிய குரானும் தெய்வ வாக்கானபடியால் அவை மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டவையாகும். அவற்றை வைத்து வணங்கி, அவற்றில் உள்ளவைகளை அப்படியே ஒப்புக் கொள்வது தான் மனிதன் கடமையாகும். ஆனால் குறளை அம்மாதிரி தலைவணங்கி அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழன் குறளைக் கண்டு மிரளாமல் தன் சுய சிந்தனையால் அதனை அலசி ஆராய்ந்து பார்த்து பழங்காலத்துத் தமிழன் என்னென்ன எண்ணங்களை எண்ணினான், என்னென்ன பழக்கங்களைக் கையாண்டு எவ்வித வாழ்க்கை நடத்தினான், அவன் முன்னேற்றம் அடைய எந்த மாதிரியான சீர்தீர்த்தங்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டான் என்ற உண்மைகளைச் சித்திரத்தில் காண்பதைப் போல குறளில் கண்டு ஆனந்திப்பான். இம் முறையினாலேயே தமிழன் பண்டைப் பெருமையும் குறளாசிரியரின் உன்னத நிலைமையும் பிரகாசிக்கும்
திருக்குறள் ஒரு நீதிநூல். இதை இயற்றியவர் திருவள்ளுவர். அவர் வாழ்ந்த காலத்தில் எவை எவை மக்கள் அநுசரிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என்று கருதப் பட்டனவோ அவைகளை, அவர் தமது நூவில் திரட்டிக் கூறியிருக்கிறார்: எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் வேதம், உபநிஷதம், புராணம், ஸ்மிருதி ஆகியவைகளில் சொல்லப்படும் எல்லா தர்மங்களும் திருக்குறளில் இருக்கின்றன. திருக்குறளில் இல்லாத விஷயங்கள் ஒன்றும் அந்த வேத உபநிஷத புராண ஸ்மிருதிகளில் இல்லை.
பல சாஸ்திரங்களும், வேதங்களும் கூறியிருக்கின்ற பொருள்களை யெல்லாம் எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி. மூன்று பகுதியாக வகுத்துக் கூறிய திருவள்ளுவரைப் போன்ற புலவர்கள் யாருமே இல்லை.
எல்லா விஷயங்களையும் எல்லோரும் அறிந்து கொள்ளும்படி சொல்லியிருக்கின்ற திருவள்ளுவருடைய திருக்குறளுக்கு பாரதம், ராமாயணம், மனுதர்ம சாஸ்திரம், வேதங்கள் இவை களையே ஒத்த நூல்களாகக் கூறலாம். இவைகளைத் தவிர வேறு ஒன்றையும் திருக்குறளுக்குச் சமமாகக் கூற முடியாது.
இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும் முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்கு உள்ள அரிதென்று அவை வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள்.
முற்காலத்திலே, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு விஷயங்களைப் பற்றியும் விளக்கமாகக் கூறியிருக்கின்ற சமஸ்கிருத வேதத்தைப் பொது ஜனங்கள் படித்துத் தெரிந்து கொள்ள முடியாதென்பதைத் திருவள்ளுவர் உணர்ந்து, அவ்வேதத்தில் உள்ள விஷயங்களை எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி. திருக்குறளாக எழுதினார்.
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார் ஓத வழுக்கற்றது உலகு.
வேதத்தில் கூறப்பட்ட சிறந்த விஷயங்களைத் இருவள்ளுவர் திருக்குறள் மூலம் சொல்லி யிருப்பதனால் உலகத்தாரின் ஒழுக்கம் கெடாமல் காப்பாற்றப்பட்டது.
வேதப் பெருளை விரகால் விரித்து உலகோர் ஓதத் தமிழால் உரை செய்தார்.
வேதத்தில் உள்ள விஷயங்களை உலகத்தார் படித்துத் தெரிந்து கொள்ளும்படி,, திறமையுடன் விரிவாகத் தமிழில் எழுதினார் திருவள்ளுவர்.
மேலே காட்டிய பாடல்கள் எல்லாம் பழந்தமிழ்ப் பாடல்கள். திருக்குறளையும் திருவள்ளுவரையும் பாராட்டிக் கூறப்பட்டவை. இவை திருவள்ளுவமாலை என்னும் நூலில் காணப்படுபவை.
தேவர் குறளும் திருநான் மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர்.
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், வேதங்களின் முடிவு களைக் கூறும் உபநிஷதங்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரர் இம்மூவரும் பாடிய தேவாரங்கள் வேதாந்த சூத்திரம் என்று சொல்லப்படும் வியாச சூத்திரம், திருக்கோவையார், திருவாசகம், திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம் ஆகிய இவைகள் எல்லாம் ஒரே விஷயத்தைக் கூறும் நூல்கள் என்று தெரிந்து கொள்ளுக.
இப்பாட்டு அவ்வையார் பாடியதாக வழங்குகிறது. இன்றும் பள்ளிக்கூடப் பிள்ளைகள் இப்பாட்டைப் படித்து வருகின்றனர்.
இப்பாடல்களிலிருந்து திருவள்ளுவர் வேத சாஸ்திரங்களை நன்றாகக் கற்றறிந்தவர், வடமொழியிலிருந்த வேதானுஷ்டானங்்களைத் தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என்னும் அவலுடனேயே திருக்குறளை இயற்றினார் என்னும் உண்மையை உணரலாம்.
திருவள்ளுவர் முன்னோர்களின் கொள்கைக்கு மாறாக எதுவும் சொல்லவில்லை, பல நூல்களில் உள்ள விஷயங்களைப் பலருக்கும் புரியும்படி. திரட்டித் தெளிவாகக் கூறியிருக்கிறார். இக்காரணத்தாலேயே இவரை இவர் காலத்துப் புலவர்கள் “தெய்வப் புலவர்” என்று புகழ்ந்தனர்.
திருவள்ளுவர் திருக்குறளை எழுதிய காலத்தில் வடமொழி யிலே யிருப்பது போன்ற ஸ்மிருதிகளும் நீதிநூல்களும் தமிழிலே இல்லை. மக்கள் இம்மாதிரிதான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று கட்டளையிடும் நூல்களுக்கு ஸ்மிருதிகள் என்று பெயர். ஸ்மிருதிகள் வடமொழியில்தான் எழுதப்பட்டி ருக்கின்றன. இத்தகைய ஸ்மிருதிகள் தமிழிலே இல்லை.
இத்தகைய காலத்தில்தான் திருக்குறள் எழுதப்பட்டது. இது மக்களுக்கு நீதி புகட்டும் முறையில் புதிதாகத் தமிழில் எழுதப்பட்டமையால் அக்காலப் புலவர்கள் திருக்குறளைத் தமிழ் வேதம் என்று கொண்டாடினர். திருவள்ளுவரைப் பிரம்ம தேவன் அவதாரம் என்றும் கூறினர்.
இக்காலத்தில் திராவிடர் கலாச்சாரம் வேறு ஆரியர் கலாச்சாரம் வேறு என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற சிலர் “திருக்குறளில் திராவிடர் கலாச்சாரத்தைக் காணலாம்; திருக்குறள் திராவிடர் கலாசாரத்தை விளக்கும் நூல்; திருக்குறள் திராவிடர் கலாச்சாரத்தை வளர்க்க வழிகாட்டும்” என்று கூறுகின்றனர். இந்தக் கூற்றுக்குத் திருக்குறளில் அதாரமேயில்லை.
ஆரியர் என்று சொல்லப்படுகிறவர்கள், வேதம், அதை யொட்டிய புராண ஸ்மிருதிகளில் எந்த அச்சார அனுஷ்டானங்்களை விளக்கி யிருக்கிறார்களோ, அவற்றையே தமிழில் திருக்குறள் அசிரியர் விளக்கி யிருக்கிறார். திருக்குறளில் காணப்படும் எல்லா விஷயங் களையும் சமஸ்கிருத நூல்களாகிய வேத புராண ஸ்மிருதி களிலும் காணலாம்.
சிலர் தமிழிலிருந்துதான் பல விஷயங்களை வடநூலார் கடன் வாங்கினர் என்கின்றனர்; சிலர் வடமொழியிலிருந்து தான் பல விஷயங்களைத் தமிழ் நூலார் கடன் வாங்கினர் என்கின்றனர். இவர்கள் கூறுவதன் உண்மை எப்படி யிருந்தாலும், இரண்டு மொழி நூல்களிலும் சொல்லப்படும் ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம் ஒன்றேதான். இதற்குத் திருக்குறளே தகுந்த அத்தாட்சி.
திருக்குறளில் உள்ள மொத்த பாடல்கள் 1330. பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு அதிகாரம். மொத்தம் 133 அதிகாரம். ஓவ்வொரு அதிகாரத்திற்கும் தனித் தனித் தலைப்பெயர் உண்டு.
திருக்குறள் மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டி ருக்கிறது. முதல் பகுதி அறத்துப் பால், இரண்டாவது பகுதி பொருட் பால், மூன்றாவது பகுதி காமத்துப்பால்.
அறத்துப் பாலில் இல்லறவியல் துறவறவியல் என்று இரண்டு பிரிவுண்டு.இல்லறவியலில் கிரகஸ்தாஸ்ரமத்தில் இருப்பவன் செய்ய வேண்டிய கடமைகள் சொல்லப்படுகின்றன. துறவியலில் சந்நியாச ஆஸ்ரமத்தில் இருப்பவன் செய்யவேண்டிய கடமைகள் கூறப்படுகின்றன.
திருவள்ளுவர் பல பாடல்களில் என்ப என்ற சொல்லை உயர்திணைப் பன்மையில் உபயோகித்திருக்கிறார். என்ப என்றால், என்பார்கள், என்று சொல்லுவார்கள் என்று பொருள். “முந்திய நூலோர்கள் இவ்வாறு சொல்லுவார்கள்” “பெரியோர்கள் இவ்வாறு சொல்லுவார்கள்” என்ற கருத்திலேயே பழய தமிழ் நூல்களில் என்ப என்னும் சொல் வழங்கப்பட்டு வருகின்றது.
திருவள்ளுவர்க்குள்ள சிறப்பெல்லாம் தமிழில் பல நூல்களின் சாரங்களையும் திரட்டி ஒழுங்குபடுத்தித் தெளிவாகக் கூறியிருப்பது ஒன்றுதான். இதேபோன்ற நூல் வேறு ஒன்றும் இவ்வளவு அழகாக சுருக்கமாகத் தமிழில் எழுதப்படவில்லை என்பது உண்மை.
திருவள்ளுவர் கூறியிருப்பவைகள் வேத புராண ஸ்மிருதி களின் சாரங்கள்தாம் என்பதை விளக்குவதற்குத் திருக்குறளிவிருந்தே சில பாகங்களை எடுத்துக் காட்டு கிறோம். அவற்றைப் படித்தாலே திருவள்ளுவரின் நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
பொருட்பாலில் அரசியல், அங்கவியல், ஒழிபியல் என்று மூன்று பிரிவுகள் உண்டு. அரசனுடைய கடமைகளைப் பற்றியும், அரசாட்சி செய்யவேண்டிய முறைகளைப்பற்றியும் கூறுவது அரசியல், அரசாட்சிக்கு வேண்டிய அங்கங்களைப் பற்றியும், அந்த அங்கங்களின் ஒழுங்கு பற்றியும் கூறப்படுவது அங்கவியல், இவைகளில் விட்டுப்போன விஷயங்களைப் பற்றிக் கூறுவது ஒழிபியல்.
காமத்துப்பாலில் களவியல், கற்பியல் என்று இரண்டு பிரிவு. களவியலில் வயது வந்த ஒரு அடவனும், வயது வந்த ஒரு பெண்ணும் இரகசியமாக ஒருவரை ஒருவர் காதலித்து வாழும் நடப்பு முறை கூறப்படுகிறது. கற்பியலில் அவர்கள் வெளிப்படை யாக மணம் செய்துகொண்டு வாழும் முறை சொல்லப்படுகிறது.
வேண்டுதல் வேண்டாமை யிலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. (4)
அசையும் வெறுப்பும் அற்றவனாகிய கடவுளின் பாதங்களை அடைந்தவர்க்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை.
பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கம் நெறிநின்றார் நீடுவாழ்வார். (6)
மெய், வாய், கண், மூக்கு, காது என்னும் ஐந்து பொறிகளின் மூலம் உண்டாகின்ற ஐந்து வகையான ஆசைகளையும் ஒழித்தவனாகிய கடவுளின் உண்மையான ஓழுக்கம் நெறியைப் பின்பற்றி நடப்பவர்கள் நிலைத்து வாழ்வார்கள்.
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. (7
ஒப்பற்ற கடவுளின் பாதத்தை அடைந்தவர்கள் தாம் மனக்கவலை யில்லாமல் வாழ்வார்கள், மற்றவர்களால் மனக்கவலை யில்லாமல் வாழ முடியாது.
திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. முதல் பாட்டு “அகரமுதல எழுத்தெல்லாம்” என்று தொடங்குவது. கடவுள் இல்லாமல் உலகம் இல்லை என்று கூறுகிறது.
உலகைப் படைத்தவர் கடவுள், அவரை வணங்குவது மக்கள் கடமை, கடவுளை வணங்குகிறவர்கள் தாம் சுகமடைவார்கள், மனக் கவலையின்றி வாழ்வார்கள், வணங்காதவர்கள் துன்பம் அடைவார்கள். என்ற விஷயங்களை மேலே எடுத்துக் காட்டிய பாடல்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.