திருவள்ளுவர் தெய்வப் புலமை படைத்தவர்; அவர் உரைப்பவைகள் எல்லாம் அவராலேயே ஆராய்ந்து சொல்லப் பட்டவை, எந்த நூல்களிலிருந்தும் எந்த அறங்களையும் அவர் எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக வடமொழி நூல்களுக்கும் அவருக்கும் தொடர்பேயில்லை. வேறு எந்த இலக்கியங்களையும் அவர் பார்த்தவரும் அல்லர்; படித்தவரும் அல்லர்; என்போர் சிலர் உண்டு.
இப்படிக் கூறுவது ஒரு மூட நம்பிக்கை. பழைய புலவர்கள் பலரைப்பற்றி இவ்வாறு கதை பேசுவது உண்டு. கலைமகள் நாவில் எழுதினாள்; புலவர் ஆனார். காளிதேவி வரந் தந்தாள்; கவிஞன் அனான்; என்ற பல கதைகள் உண்டு. கம்பனைப்பற்றி இத்தகைய கதைகள் வழங்குகின்றன. மக்களிடம் தெய்வநம்பிக்கை மிகுதியாகக் குடி கொண்டிருந்த காலத்தில் இத்தகைய கதைகள் வழங்குகின்றன. மக்களிடம் தெய்வ நம்பிக்கை மிகுதியாகக் குடிகொண்டிருந்த காலத்தில் இத்தகைய கதைகள் பிறந்தன. தெய்வத்தின் அருளால் புலவர் ஆனார் என்றால் தான் மக்கள் அப்புலவர் எழுதிய நூல்களைப் படிப்பார்கள். இப்படி ஒரு காலத்தில் இருந்தது. இத்தகைய காலத்தில்தான் புலவர்களைப் பற்றிய கட்டுக் கதைகள் பிறந்தன. திருவள்ளுவரைப் பற்றிய கதைகூட இத்தகைய காலத்தில்தான் பிறந்திருக்க வேண்டும்.
நான்முகனே திருவள்ளுவராகப் பிறந்தார்; தமிழ் வேத மாகிய திருக்குறளைத் தந்தார்; என்று வழங்கும் கதையும் இத்தகைய மூட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட கதைதான். படிக்காத புலவர்கள்-நூலாசிரியர்கள்- ஒருவருமேயில்லை. எல்லாப் புலவர்களும் நூலாசிரியர்களும் படித்தவர்கள்தான். திருவள்ளுவர், கம்பர் போன்றவர்களின் நூல்களைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம்.
பல நூல்களைப் படித்தவர்
முன்னோர் நூல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் பெரும் புலவர்கள் அரும் பெரும் நூல்களை ஆக்குவார்கள். திருவள்ளுவரும் முன்னோர் கருத்துக்கள் பல வற்றைத் திருக்குறளிலே எடுத்துக் காட்டி யிருக்கின்றார். காமத்துப்பால் முன் னோர் முறையைப் பின்பற்றி எழுதப் பட்டதுதான். அறம், பொருள், இன்பங்களைப் பற்றிக் கூறப்படும் நூலே சிறந்த நூல் என்பது பழந்தமிழர் கொள்கை. இக்கொள்கையைப் பின்பற்றியே திருக்குறளிலே முப்பால்கள் கூறப்பட்டி ருக்கின்றன.
திருவள்ளுவர், பல பாடல்களிலே என்ப என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இது உயர்திணைப் பலர்பால் சொல்லாக வழங்கியிருக்கின்றது. என்ப என்னும் சொல்லுக்கு என்பார்கள், என்று சொல்லுவார்கள் என்று பொருள். முன்னைய நூலோர் இவ்வாறு மொழிவார்கள்; அறிஞர்கள் இவ்வாறு கூறுவார்கள்; புலவர்கள் இவ்வாறு புகல்வார்கள்; என்ற பொருளிலேயே என்ப என்னும் சொல் பழந்தமிழ் நூல்களிலே வழங்கப்பட்டு வருகின்றது. இச்சொல் திருக்குறளில் வழங்குவதைக் கொண்டே அவர் முன்னோர் கருத்துக்கள் பலவற்றைத் தழுவிக் கொண்டார் என்பதை அறியலாம்.
பண்டை நூலோர் கூறிய அறம் இது என்பதை வெளிப்படையாகவும் வள்ளுவர் வழங்கியிருக்கிறார்.
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
நல்லொழுக்கத்திலே நின்று துறந்தவர்களின் பெருமை யைச் சிறப்பாகப் புகழ்ந்துரைப்பதே நூல்களின் முடிவாகும்.” (கு. 21)
“பகுத்துண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
பலருக்கும் பகுத்துக் கொடுத்துத், தானும் உண்டு, பல உயிர்களையும் காப்பாற்றுவதே அற நூலோர் தொகுத்துக் கூறிய தர்மங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறமாகும்.” (கு. 32.2)
“மிகினும் குறையினும் நோய் செய்யும், நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று
மருத்துவ நூலோரால் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று எண்ணப்பட்ட மூன்றும், அளவில் மிகுந்தாலும், குறைந்தாலும் நோயைத்தரும்.” (ஞூ. 942)
திருவள்ளுவர் பல நூல்களையும் படித்துத்தான் திருக்குறளை இயற்றினார். பல அற நூல்களிலும், வேதங்களிலும் கூறப்பட்டிருக்கும் பொருள்களையெல்லாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே திருக்குறளை இயற்றினார்; என்ற கருத்துக்கள் திருவள்ளுவமாலைப் பாடல் களிலும் காணப்படுகின்றன.
“சாற்றிய பல்கலையும், தப்பா அருமறையும்
போற்றி உரைத்த பொருள் எல்லாம் - தோற்றவே,
முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார்
எப்பா வலரினும் இல்”
அறிஞர்களால் கூறப்பட்ட நூல்களும், தவறில்லாத சிறந்த வேதங்களும், வெளிப்படையாக விளங்காமல் பாதுகாத்துக் கூறியிருக்கும் பல அரும் பொருள்களையும், வெளிப்படையாக விளங்கும்படி. மூன்று பகுதிகளாகப் பிரிந்துரைத்தார் திருவள்ளுவர். இவ்வாறு மொழிந்த வள்ளுவரே முதன்மையான கவிஞர் ஆவார்; இவரைப் போன்ற கவிஞரை வேறு எம்மொழிக் கவிஞர்களிலும் காணமுடியாது. இது திருவள்ளுவ மாலைலையில் உள்ள ஒரு பாட்டு; ஆசிரியர் நல்லந்துவனார் என்ற புலவர் பெயரால் காணப் படும் வெண்பா.
வேத விழுப்பொருளை வெண்குறளால்; வள்ளுவனார்
ஒத,வழுக்கற்றது உலகு, (கோவூர் கிழார்
வேதப் பொருளை விரகால் விரித்து உலகோர்
ஒதத் தமிழால் உரை செய்தார். (செயலூர் கொடுங்செங் கண்ணனார்)
என்ற குறளிலே மேற்கூறிய மநுவின் கருத்தைக் காணலாம். “பெண்களுக்குப் பஞ்ச மகா எக்ஞம், உபவாசம் விரதம், இவை முதலிய தருமங்கள் தனியாக இல்லை; கணவனுக்குப் பணிவிடை செய்வதனாலேயே சுவர்க்கத்தில் பெருமை பெறுகிறார்கள்” (755. அத். 4)
“தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை”
என்ற குறளிலே மேற்கண்ட மனுவின் கருத்து அடங்கியிருப்பதைக் காணலாம்.
“எவன் காரியத்தின் உண்மையை அறிந்திருந்தாலும், மற்றொருவனுக்குத் தீங்கு வராமல் இருப்பதற்காக. வேறுவிதமாகச் சொல்லுகிறானோ அவன் சுவர்க்க லோகத்திலிருந்து நழுவமாட்டான் என்று தேவர்கள் சொன்னதாகச் சொல்லுகிறார்கள்.” (மது. 103 அத்.5)
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்” என்ற குறளில் மேற்கண்ட மநு நீதியைக் காணலாம்.
“மாதர்கள் தங்களைத் தாமே காத்துக் கொள்ள வேண்டும்; அதுவே அவர்களுக்கு நல்ல காப்பாகும்; நல்ல காவலரை வைத்து வெளியில் போகவொட்டாமல் வீட்டிலே
நிறைகாக்கும் காப்பே தலை” இக்குறளிலே மேற்கண்ட மநுநீதி அடங்கிக் கிடக்கின்றது.
இவை போன்ற வட நூற்கருத்துக்களும் திருக்குறளில் அடங்கியிருக்கின்றன.
இவைகளால் வள்ளுவரை வகுப்புவாதியாக - மொழி ஹெறுப்பாளராகக் காட்ட முயற்சிப்போர் கூற்றுக்கள் பொருத்தம் அற்றவை; பொய்யானவை; என்பதை அறியலாம். வள்ளுவர் மொழி வெறுப்பற்றவர். வட நூற்பொருள்களையும் வடசொற்களையும் வெறுக்காதவர். மேற்காட்டியவைகளே இவ்வுண்மையை மெய்ப்பிக்கும்.