தமிழர் நாகரிகத்தை விளக்குவதே திருக்குறள்; திருக்குறள் கூறுவனவே தமிழர் பண்பு; தமிழர் கலாசாரம்; தமிழர் சமயம்; தமிழர்க்கு வழி காட்டுவன; என்று அனைவரும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது உண்மை; போற்றத்தக்கது; ஒப்புக்கொள்ளத்தக்கது; வாழ்த்தி வரவேற்கத்தக்க து.
சிலர் ஆரியர் நாகரிகம் வேறு; தமிழர் நாகரிகம் வேறு; திருக்குறள் ஆரியர் நாகரிகத்தைக் கண்டிக்கிறது, தமிழர் நாகரிகத்தைப் போற்றுகின்றது; என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்றுக்குத் திருக்குறளில் இடம் உண்டா? திருவள்ளுவரிடத்திலே இத்தகைய விருப்பு வெறுப்பு உண்டோ? இவற்றை ஆராய வேண்டும். திருக்குறளை நடு நிலையிலிருந்து படிப்போர் ஆரியர் தமிழர் வேற்றுமை அவரிடம் இருப்பதாக எண்ண முடியாது.
“செய்யா மொழிக்கும், திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே; - செய்யா
அதற்குரியர் அந்தணர்; ஆராயின், ஏனை
இதற்குஉரியர் அல்லாதார் இல்.”
ஒருவரால் செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும், திருவள்ளுவர் கூறிய பொய்யா மொழியாகிய திருக்குறளுக்கும் பொருள் ஒன்றுதான். வேதத்தைப் படி. ப்பதற்குரியவர் அந்தணர்; திருக்குறளைப் படிக்க உரிமையற்றவர் ஒருவருமே இல்லை, எல்லோரும் படிக்கலாம்.
“ஆரியமும்செந்தமிழும் ஆராய்ந்து, இதனின் இது
சீரியது, என்று ஒன்றைச் செப்பரிதால்; ஆரியம்
வேதம் உடைத்துத்; தமிழ் திருவள்ளுவனார்
ஒது குறட்பா உஉைத்து.”
வடமொழியும் செந்தமிழும் சமமான மொழிகள். அவற்றை ஆராய்ந்தால், வடமொழியைக் காட்டிலும் தமிழ் சிறந்தது என்றோ, தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்றோ சொல்ல முடியாது. வடமொழியிலே வேதம் இருக்கின்றது; தமிழிலே திருவள்ளுவர் கூறிய குறள் இருக்கின்றது.”
இவ் வெண்பாக்கள் திருக்குறளில் கூறப்படும் கொள்கைகளும், வடமொழி வேதத்தில் கூறப்படும் அறங்களும் ஒன்றே கருத்தை வலியுறுத்துகின்றன. முதன் வெண்பா வெள்ளி வீதியார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இரண்டாவது வெண்பா வண்ணக்கஞ் சாத்தனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இவர்கள் பன்னூறாண்டுகளுக்கு முன்னிருந்த புலவர்கள்.
“அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்கள் எல்லாம் அ என்னும் எழுத்தைத் தலைமையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளைத் தலைமையாகக் கொண்டிருக்கின்றது” என்பது முதற் குறள். பின்னும் பற்று அற்றான் (350) உலகு இயற்றியான் (1062) என்று கூறப்பட்டி ருக்கினறன. இவைகளால் திருவள்ளுவர் கடவுள் ஒருவர் உண்டென்று ஒப்புக் கொள்ளுகின்றார் என்பதைக் காணலாம்.
“அறத்துஆறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
அறநெறியிலே நின்றதன் பயன் இதுவென்று வாயினால் சொல்ல வேண்டுவதில்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்கின்றவன்; அதில் ஏறிச் செல்பவன் இவர்களிடையே கண்டு கொள்ளலாம்” (கு. 37). இது நல்வினை தீவினைகளின் பயனை வலியுறுத்தும்
குறள். ஊழ் வினையைப் பற்றி ஒரு தனி அதிகாரமே உண்டு. அதில் உள்ள பத்துக் குறள்களிலும் ஊழின் வலிமையை எடுத்துக் கூறுகிறார் வள்ளுவர்.
மறு பிறப்பு
மறுபிறப்பைத் திருவள்ளுவர் ஓப்புக்கொள்ளுகிறார்.
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
ஒரு பிறப்பிலே தான் கற்ற கல்வியானது ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவி செய்யும் தன்மையுள்ளது.” (ஞே. 399)
“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் மீண்டும் இவ்வுலகில் பிறவாத நிலையையே விரும்ப வேண்டும்; அந்தப் பிறவா நிலை மை அசையற்ற நிலையை விரும்புவதனால்தான் உண்டாகும்.” (ஞூ.362) இவைகளால் மறுபிறப்பு உண்டு என்பதைக் காணலாம்.
சுவர்க்க நரக மோட்சம்
சுவர்க்கம், நரகம் என்பவை தனித்தனி உலகங்கள். சுவர்க்கம் இன்பம் நிறைந்த உலகம்; நரகம் துன்பம் நிறைந்த உலகம். இவ்வுலகிலே நன்னெறியிலே நடப்பவர் இறந்தபின் சுவர்க்கத்தை அடைவர்; இன்பம் துய்ப்பர். இவ்வுலகிலே அறநெறியை மீறி - கடந்து - நடப்போர் இறந்தபின் நரகத்தை நண்ணுவர்; துன்புற்று நலிவார்கள். இது பண்டைக்கால நம்பிக்கை.
பட்டு வந்தன; வேதங்களைக் கற்றவர்கள், வேதநெறியைப் பின்
பற்றியவர்கள், பரப்பியவர்கள், அந்தணர் என்று அமைக்கப்
பட்டனர். இவ்வுண்மையை இக்குறள்கள் எடுத்துக் காட்டுகின்றன.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் , ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று,
நெய் முதலிய பண்டங்களைத் தீயிலே சொரிந்து ஆயிரக்கணக்கான வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும், ஒரு பிராணியின் உயிரை அழித்து அதன் உடம்பை உண்ணாதிருத்தல் சிறந்தது” (ஞ.259). சிலர் இக்குறளை எடுத்துக்கூறி திருவள்ளுவர் யாகத்தைக் கண்டிக்கிறார்; அவர் ஆரிய நாகரிகத்தின் எதிரி; தமிழர் நாகரிகத்தைப் போற்றுகிறார்; என்று கூறுவர். இக்குறள் புலால் உண்ணாமை௰யை வலியுறுத்துவது; வேள்வியைக் கடிவது அன்று. இது, வேள்வி செய்வதைக் காட்டிலும் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாமையே சிறந்தது என்பதைத்தான் கூறிற்று. அதைவிட இது சிறந்தது என்றால், அது கைவிடத்தக்கது என்பது பொருள் அன்று. வேத வேள்வியைவிடப் புலால் உண்ணாமை சிறந்தது. என்று கூறியதாகத் தான் கொள்ள வேண்டும். வள்ளுவர் புலால் உண்ணாமை தான் சிறந்த அறம் என்று கருதியவர். ஆதலால் அவர் காலத்தில் சிறப்பாக மக்கள் கருதி வந்த வேள்வியைவிடப் புலால் உண்ணாமையே சிறந்தது என்று எடுத்துக் காட்டினார்.
இல்லறத்திலே வாழ்கின்றவன் என்று சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்புடைய பிரமச்சாரி, வானப்பிரஸ்தன். சந்நியாசி அகிய மூவர்க்கும் நல்வழியிலே நடப்பதற்கு நிலைத்து நின்ற துணையாவான்” (கு.41). இக்குறள் நால்வகை அஸ்ரம நிலை தமிழகத்தில் இருந்தது என்பதற்கு ஆதரவு. திருவள்ளுவர் இந்த நால்வகை ஆஸ்ரம நிலைகளைப் பற்றித் தனித்தனியே கூறவில்லை. இல்லறம் துறவறம் என்று இரண்டாக வகுத்துக் கொண்டார். இல்லறம் கிரகஸ்தாசிரமம்; துறவறம் சந்நியாச ஆஸ்ரமம், இல்லறத்திலே பிரம்மச்சரியத்தை அடக்கினார்; துறவறத்திலே வானப்பிரஸ்தத்தை அடக்கிக் கூறினார். திருக்குறளைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம்.
குவ ஒழுக்கம்
தவம்புரிதல் தமிழர் நாகரிகம் அன்று; தவத்தைப் பற்றித் திருவள்ளுவர் கூறவில்லை; என்று உரைப்போர் உண்டு. தவம் என்று ஒரு அதிகாரமே திருக்குறளில் இருக்கின்றது, இவ்வதிகாரத்தின் வெண்பாக்களையும் படித்தவர்கள் இவ்வாறு சொல்லத் துணியார்.
தவக்கோலம், உண்மையான தவ ஒழுக்கம் உள்ளவர்க்கே ஏற்றதாகும்; உண்மையான தவம் அற்றவர், அக்கோலத்தை மேற்கொள்ளுவது வீணாகும்.” (ஞு. 262)
இக்குறள்கள் தவத்தின் சிறப்பையும், உண்மைத் தவசிகளே தவக்கோலம் பூணலாம் என்பதையும் எடுத்துக் காட்டின. திருவள்ளுவர், தவம், தவப்பயன் இவற்றை ஒப்புக் கொண்டவர் என்பதற்கு இவ்விரண்டு செய்யுட்களே போதும்.
“தவம் என்பது கண்மூடித் தனித்திருப்பது அன்று? முயற்சியே தவம் அகும். ஆதலால் முயற்சியையே வள்ளுவர் தவம் என்ற சொல்லால் குறிக்கின்றார்” என்போரும் உண்டு. இது பொருந்தாது. திருக்குறள் பொருட்பாலில் ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை என்று நான்கு அதிகாரங்கள் தனியாக இருக்கின்றன. இவற்றை மறந்தவர்களே இவ்வாறு மயங்கி உரைப்பார்கள். அந்த நான்கு அதிகாரங்களும் முயற்சியின் பெருமையையே வலியுறுத்துவன. அதலால் தவம் என்ற அதிகாரம் தவத்தைப் பற்றித்தான் கூறுகிறது என்பது உறுதி.
தென்புலத்தார்
தென்புலத்தாரைப் பிதிரர் என்பர். பிதிர்கள் முன்னோர்கள். முன்னோர்களை வணங்கும் வழக்கம். பண்டை நாகரிகம் பெற்ற பலரிடமும் இருந்தது. எகிப்தியர் நாகரிகம் பழைமை யானது; சீனர் நாகரிகம் பழைமையானது. எகிப்தியர்களும் சீனர்களும் தங்கள் முன்னோர்களை வணங்கி வந்தனர். இறந்தவர்கள் பொருட்டு நினைவுச் சின்னங்கள் அமைத்தனர். இதே வழக்கம் தமிழரிடமும் உண்டு. தமிழர்கள் இறந்தவர் களுக்குக் கல்நாட்டி, வழிபட்டனர். இந்த வழக்கத்திலிருந்து தான் தென்புலத்தார் என்னும் பிதிரர்களைப் போற்றும் வழக்கம் எழுந்தது.
“தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.
பிதிர்க்கள், தேவர்கள், அதிதிகள், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்திலும் செய்ய வேண்டிய காரியங்களைத் தவறாமல் செய்தல் இல்லறத்தில் வாழ்வோனது தலைமையான கடமையாகும்.” (க.43)
முன்னோர்களை வணங்கும் முறையிலே வேற்றுமை இருக்கலாம். அந்தந்த நாட்டின் நிலைமைக்கு ஏற்றபடி மாறுபட்டிருக்கலாம். அனால் முன்னோர்களை வணங்கும் வழக்கம். நாகரிகம் பெற்ற மக்களிடம் நிலைத்திருந்தது.
இதையே வள்ளுவர் எடுத்துக் காட்டினார். இக்கருத்தைச் சங்க இலக்கியங்களிலும் காணலாம்.
தென் திசையிலே வாழும் பிதிர்களுக்கு ஆற்ற வேண்டிய அரிய கடன்களைச் செய்யும், பொன் போன்ற சிறந்த புத்திரர்கள். மேலே காட்டிய அகநாறூற்றுப் பாட்டும், புறநானூற்றுப் பாட்டும் முன்னோர்கள் நல்லுலகம் பெறுவதற்காகப் புத்திரர்கள் வேண்டும் என்று விரும்பினர். புத்திரர்களும் பிதிர்களுக்காகச் சில கடன்களைச் செய்து வந்தனர் என்பதைக் காட்டுகின்றன. இவ்வுண்மையைப் பின்பற்றித்தான் வள்ளுவரும் “தென்புலத்தார்” என்னும் குறளை இல்லறத்தான் கடமையை வலியுறுத்து வதற்காகக் கூறியிருக்கின்றார்.
இத்தகைய சரித்திர உண்மையை மறந்தவர்களே தென்புலத்தார்க்கு அருங்கடன் இறுக்கும் வழக்கம் தமிழர் வழக்கம் அன்று, ஆரியர் வழக்கம்; என்று கூறுவர். இவர்கள் இக்குறளுக்கு, வள்ளுவர் கருத்துக்கும், வரலாற்று உண்மைக்கும் பொருந்தாத பொருள் கூற மண்டையை உடைத்துக் கொள்ளுவார்கள்.
வள்ளுவர் கருத்துப் பொருந்துமா? பொருந்தாதா? என்று முடிவு செய்வது வேறு; அவர் கருத்து என்னவென்று காண்பது வேறாகும். “தென்புலத்தார்” என்பதற்குப் பிதிரர் என்று பொருள் செய்யாமல் வேறு பொருள் கூறுவது பொருந்தாது. அது தமிழர் பண்பையும் , வரலாற்று உண்மையையும் மறந்துரைக்கும் பொருளாகும்.
புராணங்கள்
வள்ளுவர் புராணக் கொள்கைகளையும், கருத்துக்களை யும் மறக்கவில்லை, வள்ளுவர் காலத் தமிழகத்திலே புராண வரலாற்றுகள் வழங்கியிருந்தன; மக்கள் அவ்வரலாறுகளிலே நம்பிக்கை கொண்டிருந்தனர்.
செல்வத்தைத் தருகின்றவள் சீதேவி; வறுமையைச் சேர்ப்பவள் மூதேவி. இருவரும் உடன் பிறந்தவர்கள். இளையவள் சீதேவி - திருமகள்; மூத்தவள் மூதேவி. செய்யவள் தாமரை யினாள் - சீதேவி. தவ்வை, மாமுகடி. - மூதேவி. மேலே காட்டிய இரண்டு குறள்களும் இவ்வுண்மையை உரைத்தன.
பேய், அலகை, தாக்கணங்கு, என்ற பெயர்களும் திருக்குறளிலே காணப்படுகின்றன. இவைகள் வள்ளுவர் காலத்து மக்கள் பேய் பிசாசுகளின் நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதைக் காட்டும்.
மேலே கூறியவைகளிலிருந்த திருவள்ளுவரின் உண்மைக் கருத்துக்களை நாம் உணர்ந்து கொள்ளலாம். அவர் ஆரியர் பண்பு, தமிழர் பண்பு என்ற வேற்றுமை காணாதவர்; கடவுள் நம்பிக்கையுள்ளவர்; நல்வினை தீவினைப் பலன்களிலே நம்பிக்கையுள்ளவர்; மறுபிறப்பிலே நம்பிக்கையுள்ளவர். சுவர்க்கம், நரகம் என்ற கொள்கையுள்ளவர்; மோட்சத்திலே நம்பிக்கை கொண்டவர். வேதங்களையும்” வேதக் கொள்கைகளையும் ஒப்புக் கொண்டவர்; நால்வகை ஆஸ்ரமங்களை ஓப்புக்கொள்ளுகின்றார்; தவத்திலே நம்பிக்கையுள்ளவர்; தென்புலத்தார்க்குரிய கடன்களைச் செய்யவேண்டும் என்பதையும் ஒப்புக்கொண்டவர். புராணக் கொள்கைகளிலும் நம்பிக்கையுள்ளவர்; இவைகளை எல்லாம் திருக்குறளிலே காணக்கிடக்கின்றன. இவைகளை ஆரியர்களோ வடநூல்களோ மறக்கவில்லை. வட நூல்களிலும் இவைகள் கூறப்படுகின்றன. ஆதலால் வள்ளுவர் கூறியிருப்பனவெல்லாம் ஆரியர் தமிழர் என்ற வேற்றுமையில்லாமல் அனைவரும் ஓப்புக்கொள்ளக் கூடியனவே. இத்தகைய பொதுக் கொள்கைகளே திருக்குறளில் காணப்படுகின்றன. பொதுவான இந்த நீதி நூலைக்கொண்டு ஆரியர் தமிழர் வேற்றுமைக்கு வழிகாட்டுவது சிறிதும் பொருந்தாது.