Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வள்ளுவர்‌ கால அரசியல்‌


Guru

Status: Offline
Posts: 7467
Date:
வள்ளுவர்‌ கால அரசியல்‌
Permalink  
 


வள்ளுவர்‌ கால அரசியல்‌

திருவள்ளுவர்‌ காலத்தில்‌ மக்கள்‌ ஆட்சி இருந்ததில்லை. மக்களால்‌ தேோர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள்‌ தாம்‌ நாட்டை ஆளவேண்டும்‌ என்ற கொள்கை அக்காலத்தில்‌ இல்லை.

அவருக்கு முன்னும்‌ இக்கொள்கை இல்லை. அரசனைத்‌ தெய்வத்தின்‌ அவதாரமாக நம்பியிருந்த காலந்தான்‌ அது. அக்காலத்தில்‌ அரசர்களுக்குத்தான்‌ எல்லா அதிகாரங்்‌களும்‌ இருந்தன. அவர்கள்‌ பரம்பரையாக அளும்‌ உரிமை பெற்றவர்கள்‌; அளப்‌ பிறந்த குடியினரே அரசாட்சி புரிந்து வந்தனர்‌. தந்தையின்‌ அரசுரிமை மகனுக்கு என்பதே அக்காலக்‌ கொள்கை. திருவள்ளுவரும்‌ இக்கொள்கையை ஒப்புக்கொண்ட வர்தான்‌; இந்த அடிப்படையின்‌ மேல்தான்‌ அரசியல்‌ நீதிகளைக்‌ கூறுகின்றார்‌.

 

ஆயினும்‌ மக்கள்‌ கருத்துக்கு மாறாக நடக்கும்‌ மன்னவன்‌ அளத்தகுதியற்றவன்‌; அவன்‌ ஆட்சி நிலைக்காது; அந்த ஆட்சி யை மக்கள்‌ மதிக்க மாட்டார்கள்‌ இது வள்ளுவர்‌ கருத்து. இக்‌கருத்தை அவர்‌ அழுத்தமாக வலியுறுத்திச்‌ சொல்லவியிருக்கின்றார்‌.

படை ,குடிகூழ்‌, அமைச்சு, நட்பு,அரண்‌ ஆறும்‌

உடையான்‌ அரசருள்‌ ஏறு.

உள்நாட்டு அமைதியைப்‌ பாதுகாக்கவும்‌, வெளிநாட்டுப்‌ படையெடுப்பை எதிர்க்கவும்‌ போதுமான படைகள்‌ ஆட்‌ சிக்கு அடங்கி நடக்கும்‌ குடிமக்கள்‌; நாட்டிற்குப்‌ போதுமான உணவு அறிவும்‌ திறமையும்‌ உள்ள அமைச்சர்கள்‌ பக்கத்து நாடுகளுடன்‌ நட்பு; நாட்டில்‌ அந்நியர்‌ நுழையாதபடி தடுக்கும்‌, காடு, மலை போன்ற இயற்கை அரண்கள்‌; இந்த ஆறு உறுப்புக்களையும்‌ கொண்டிருப்பவனே அரசர்க்குள்‌ அண்‌ சிங்கம்‌ போன்றவன்‌” (ஞ.51)

“முறைசெய்து காப்பாற்றும்‌ மன்னவன்‌ மக்கட்கு

இறையென்று வைக்கப்படும்‌”

நீதிமுறை செய்து குடிகளைக்‌ காக்கும்‌ அரசன்‌, பிறப்‌பினால்‌ மனிதனாக இருந்தாலும்‌, செய்கையால்‌ மக்களுக்குக்‌ கடவுள்‌ அவான்‌ என்று சிறப்பித்துத்‌ தனியாக வைத்து மதிக்கப்படுவான்‌” (388).

“மடியிலா மன்னவன்‌ எய்தும்‌ அடிஅளந்தான்‌

தா அயது எவ்வாம்‌ ஒருங்கு”

சோம்பல்‌ இல்லாத அரசன்‌, திருமால்‌ ஓரடியால்‌ அளந்த இம்‌ மண்ணுலகம்‌ முழுவதையும்‌ தனக்கு உரிமையாக பெறுவான்‌” (கு.670)

இக்குறள்கள்‌ தனி மனிதனுடைய ஆட்சியையே எடுத்துக்‌ காட்டுகின்றன. அளப்பிறந்த அரசனுக்கு வேண்டிய தகுதிகளையே அறிவிக்கின்றன.

அரசன்‌ தன்‌ ஆட்சி நிலைப்பதற்கான சரியான பாதுகாப்புக்களைத்‌ தேடிக்‌ கொள்ளவேண்டும்‌. ஒழுங்குமுறை தவறாமல்‌ குடிகளைக்‌ காப்பற்ற வேண்டும்‌. குடிகளைக்‌ காப்பதற்கு அரசன்தான்‌ பொறுப்பாளி. சோம்பல்‌ இல்லாத மன்னவன்‌ மாநில முழுவதையும்‌ அள்வான்‌. இக்கருத்துக்களையே மேலே காட்டிய செய்யுட்கள்‌ கூறின; வள்ளுவர்‌ தன்‌ காலத்துக்கு முன்னிருந்த அரசு முறையை ஒப்புக்‌ கொண்டுதான்‌ இவ்வாறு சொன்னார்‌. அரசன்‌ தான்‌ ஆளப்பிறந்தவன்‌; அவன்‌ தெய்வீகத்‌ தன்மையுள்ளவன்‌; என்ற முன்னோர்‌ கருத்தை அவர்‌ மறுக்கவில்லை.

அளும்‌ உரிமை பெற்றவன்‌ அரசனாயிருந்தாலும்‌ அவன்‌ குடிமக்களின்‌ மனங்கோணாமல்‌ நடக்கவெண்டும்‌. சர்வாதிகாரியாக இல்லாமல்‌ அறிஞர்களின்‌ ஆலோசனைப்‌ படி நடக்க வேண்டும; கடுமையான அடக்கு முறைகளைக்‌ கையாளக்‌ கூடாது; குடிமக்களால்‌ தாங்கமுடியாத வரிச்சுமைகளை அவர்கள்‌ தலையிலே சுமத்தக்கூடாது. கொடுங்கோலன்‌ என்று மக்கள்‌ பழிக்கும்படி, ஆட்சி புரியக்‌ கூடாது, குடிமக்களின்‌ நல்வாழ்வைக்‌ கருதி ஆட்சி புரியாத அரசன்‌ ஆட்சிபீடத்திலிருந்து மக்களால்‌ விரட்டியடிக்கப்படுவான்‌; அவன்‌ ஆளுவதற்குத்‌ தகுதியற்றவன்‌; அவனுடைய ஆட்சியிலே நாடு நிலைத்து நிற்காது; இவ்வுண்மைகளைத்‌ தெளிவாகக்‌ கூறியிருக்கின்றார்‌ வள்ளுவர்‌. அரசனுக்கென்று வள்ளுவர்‌ வகுத்துச்‌ சொல்லியிருக்கும்‌ அறம்‌ புகட்டும்‌ நீதி - அளுவோர்‌ அனைவர்க்கும்‌ பொருந்தும்‌; மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செலுத்து வோர்க்கும்‌ பொருந்தும்‌. முடிவேந்தர்களுக்கு வள்ளுவர்‌ சொல்லும்‌ அறம்‌ இன்றைய குடியாட்சிக்கும்‌ ஏற்றதாயிருப்பது வியத்தற்குரியது திருக்குறள்‌ ஒரு உயிர்‌ உள்ள இலக்கியமாக இயங்குவதற்கு இத்தகைய சிறந்த கருத்துக்களே அடிப்படையாகும்‌.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard