பொருளாதாரத்திலே வலுப்பெற்றிருக்கும் அரசாங்கத் தான் வலிமையுள்ள அரசாங்கமாகும். செல்வமற்ற அரசாங்கம் விரைவில் சீர்குலைந்துவிடும். அது பேரரசு ஆயினும் செல்வம் நிறைந்த சிற்றரசின் செல்வாக்குக் கட்டுப்பட்டுவிடும். முடியாட்சி மறைந்து குடியாட்சி தோன்றி நிலைத்து வரும் இந்நாளிலும் பணப்பஞ்சம் இல்லாத நாடுகளே வல்லரசுகளாக வாழ்கின்றன. பணமற்ற நாடுகள், பணமுள்ள நாடுகளிடம் உதவிபெறும் பல்லைக் காட்டிக் கெஞ்சுகின்றன வள்ளுவர் காலத்திலும் இந்நிலைதான் இருந்தது இந்த உண்மையை வள்ளுவர் மறந்துவிடவில்லை.
ஒரு நாட்டை அளுவோனுக்கு அரசாங்கத்தின் செல்வத் தைப் பாதுகாக்கும் திறமை வேண்டும்; அரசாங்கத்திற்குப் பொருள் வரும்வழிகளைக் கண்டு பிடிக்கும் வரிவாங்குவதைத் தவிர்த்து வேறு துறைகளிலே வருமானந் தேடக் கூடிய அறிவும் அற்றலும் வேண்டும்.
பல துறைகளிலும் கிடைக்கும் வருமானத்தைப் பாழாகாமல் ஓன்று சேர்க்க வேண்டும்; அப்பொருள்களைச் சிதற விடக்கூடாது; அவைகளை ஓரிடத்திலே கொண்டுவந்து சேர்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும்.
இப்படிப் பாதுகாக்கப்பட்ட பொருளைச் செலவு செய்யும் வகையறிந்து செலவு செய்ய வேண்டும்; தாம் என்று வீண் வழிகளிலே அள்ளி யிறைத்து விடக்கூடாது. மக்களுக்குப் பயன் தரும் திட்டங்களை வகுத்து, திறமையுள்ளவர்களைக் கொண்டு அத்திட்டங்கள் வெற்றிபெறும் வகையிலே செலவு செய்ய வேண்டும்; இத்தகைய திறமையுள்ளவனே அரசன் அவான் என்று சொல்லுகிறார்.
“இயற்றலும் ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும் வல்லது அரச”
பொருள் வரும் வழிகளை உண்டாக்குதலும், வந்த பொருள்களை ஒன்று சேர்த்தலும், ஒன்று சேர்த்த பொருளைக் காப்பற்றுதலும், காப்பாற்றிய பொருளைத் திட்டமிட்டுச் செலவு
அரசனுக்கு உரைக்கப்பட்டிருக்கும் இத்தகுதி அளுவோர் அனைவர்க்கும் வேண்டியதாகும். சக்கரம் இல்லாமல் வண்டி ஓடாது; செல்வம் இல்லாமல் அரசாங்கள் நடக்காது. இந்த உண்மை முக்காலத்துக்கும் பொருந்தும்.
“செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக் கீழ்த் தங்கும் உலகு
தன் காது கைக்கும்படி குறை கூறும் சொற்களையும் பொறுத்துக் கொள்ளும் குணமுள்ள அரசனுடைய குடை நிழலிலேதான் உலகம் நிலைத்து நிற்கும்” (ஞ.389)
அளும் உரிமை படைத்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்குப் பொறுமை வேண்டும்; மக்கள் சொல்லும் குறைகளைக் கண்டு சீறி விழக் கூடாது; அவர்கள் சொல்லும் குற்றம் குறைகளை உற்றுக் கேட்க வேண்டும், பொதுமக்களையே நீதிபதிகளாக எண்ணி அவர்கள் எடுத்துரைக்கும் குறைகளுக்குச் செவி சாய்க்க வேண்டும். அவர்கள் சொல்லும் குறைகள் நியாயமானவைகளாயிருந்தால் அவைகளைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு மக்கள் கருத்தறிந்து அளுவோனே நாட்டுக்கு மன்னவனாவான். இதுவும் எக்காலத்திற்கும் ஏற்ற கருத்தாகும்.
“கொடைஅளி செங்கோல் குடிஒம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி
வறியோர்க்குக் கொடுத்தல், அவதிப்படுகின்றவர்கள் பால் அன்பு காட்டுதல், நீதி தவறாமல் ஆட்சி புரிதல், குடிமக்களுக்கு எவ்வித இன்னலும் நேராமல் பாதுகாத்தல், இந்த நான்கு பண்புகளும் அரசனுக்கு அமைந்திருக்க வேண்டும்; அவனே அரசர்களுக்கு விளக்குப் போன்றவன்.” (ஞெ.390) இக்குறள் அளுவோர்க்கு அமைந்திருக்க வேண்டிய பண்புகளை வலியுறுத்தியது.
அளுகின்றவர்களுக்குக் கல்வி அறிவு அவசியம். கல்வியில்லாதவன் உருவத்திலே மனிதனாயிருக்கலாம்; அனால் அவன் மனிதன் அல்லன்; விலங்கு போன்றவன் கல்வியில்லாதவனால் பல சிறந்த செயல்களைச் செய்ய முடியாது. கல்வி மட்டும் போதாது; கற்றவர்களிடமிருந்து பல அரும் பொருள் களைக் கேட்டும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். கல்வியும், கேள்வியும் அளுவோர், அளப்படுவோர் அனைவர்க்கும் வேண்டியனவாம். இதைக் கல்வி, கல்லாமை, கேள்வி என்ற மூன்று அதிகாரங்களிலே முப்பது குறள்களிலே வலியுறுத்தியிருக்கின்றார் வள்ளுவர். அன்றைய முடியாட்சியிலேயே ஆளுகஇன்றவனுக்குக் கல்வி கேள்விகள் அவசியமானவை என்று வள்ளுவர் சொல்லியிருப்பது குறிப்பிடத் தக்கது.
“எவ்வது உறைவது உலகம்; உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு
உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, அவ்வாறு தானும் உலகத்தோடு பொருந்தி நடப்பதே அறிவாகும்.” (ஞ்.426) அளுவோர்க்கு உலக நடப்பை உணர்ந்து கொள்ளும் அறிவு வேண்டும். உலக நடப்போடு இணைந்து நடக்கும் திறமை வேண்டும்; உலகப் போக்கை எதிர்த்து நிற்கும் எந்த அரசும் வாழ முடியாது. உலகப் போக்கு என்பது உலக மக்கள் பெரும்பாலோரின் எண்ணமும், கருத்துமேயாகும் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் தாம் என்று சாதிக்கும் பிடிவாதம் சர்வாதிகார மனப்பான்மை யுள்ளவர்களிடந்தான் இருக்கும். மக்கள் கருத்தை மதித்து நடப்பவர்கள் உலகமக் களின் கருத்தை ஒட்டித்தான் நடப்பார்கள்.
“எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவது ஓர்நோய்”
வரக்கூடிய துன்பத்தை முன்னறிந்து தடுத்துக் கொள்ளும் அறிவு அளுவோர்க்கு வேண்டும்; இவ்வறிவு உள்ளவர்களுக்கு அவர்கள் அஞ்சி நடுங்கும்படி. வரக்கூடிய துன்பம் ஒன்றுமேயில்லை” (கு.429) இக்குறளும் அளுவோர்க்கு அமைந்திருக்க வேண்டிய அறிவைப் பற்றி உரைத்தது.
பொருளாதார அறிவு, அளுந் திறமை, பொறுமை, கல்வி கேள்விகள், உலகத்தோடு ஒட்டி ஒழுகும் பண்பு இவைகள் அளுவோர்க்கு வேண்டிய தகுதிகள். அளுவோர் மன்னர் களாயினும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாயினும் சரி இத்தகுதிகளைப் படைத்தவர்கள் அரசாளத் தகுந்தவர்கள். குடிமக்களால் மதிக்கத் தகுந்தவர்கள். இவ்வுண்மைகளே வள்ளுவர் கருத்து இவற்றை மேலே காட்டிய குறட்பாக்கள் விளக்கின.