Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குற்றம்‌ உணர்தல்‌


Guru

Status: Offline
Posts: 7602
Date:
குற்றம்‌ உணர்தல்‌
Permalink  
 


குற்றம்‌ உணர்தல்‌

பலர்‌ தம்‌ குற்றத்தைப்‌ பற்றிக்‌ கவலைப்படுவதில்லை; தம்மிடம்‌ குற்றங்கள்‌ உண்டா என்றுஎண்ணிப்‌ பார்ப்பது கூட இல்லை. தம்மைப்பற்றி, யாரேனும்‌ குறை கூறினால்‌ பொறுக்க மாட்டார்கள்‌; அவர்கள்‌ மேல்‌ காய்ந்து விழுவார்‌. தம்மைப்‌ பற்றிக்‌ குறை சொல்லுவதற்கான காரணம்‌ உண்டா இல்லையா என்று சிந்திக்கவே மாட்டார்கள்‌. இதுவே பல மக்களிடம்‌ காணப்படும்‌ பண்டு.

பிறரிடம்‌ குற்றம்‌ காண்பது எளிது; அக்குற்றத்தை எடுத்துச்‌ சொல்லுவதும்‌ எளிது. தன்‌ குற்றத்தை மறந்து பிறர்‌ குற்றம்‌ காண்பதே பெரும்பாலான மக்கள்‌ இயற்கை. மருந்துக்குக்கூட நல்ல குணம்‌ இல்லாதவர்களும்‌ பிறரைப்‌ பழிப்பதற்குப்‌ பின்‌ வாங்குவதில்லை.

முதலில்‌ தன்னிடம்‌ உள்ள குற்றத்தைத்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌; அக்‌ குற்றத்தை விட்டொழிக்க வேண்டும்‌. தம்மால்‌ எக்குற்றமும்‌ இல்லாமல்‌ பாதுகாத்துக்‌ கொள்ளுகின்றவர்களே சிறந்த மனிதர்கள்‌; உயர்ந்த ஓழுக்கமுள்ளவர்கள்‌; தெளிந்த அறிவுள்ளவர்கள்‌. ஆட்சி பீடத்திலே அமர்ந்திருப்பவர்கள்‌ யாராயினும்‌ அவர்கள்‌ மற்றவர்களுக்கு வழி காட்டிகளாக விளங்க வேண்டும்‌; நல்ல வழியிலே நடந்து கொள்ள வேண்டும்‌ தாம்‌ செய்வனவற்றை நன்றாக ஆராய்ந்து செய்ய வேண்டும்‌; அவர்கள்‌ குற்றமற்ற காரியங்களையே செய்பவர்களாயிருந்தால்‌ அவர்களை யாரும்‌ பழிக்க மாட்டார்கள்‌.

பொதுப்‌ பணியிலே ஈடுபட்டி ர௬ுப்போர்‌ - பொது மக்களை நடத்திச்‌ செல்லும்‌ தலைவர்களாக விளங்குவோர்‌- அசிரியர்கள்‌ - எழுத்தாளர்கள்‌ - கலைஞர்கள்‌ - கவிஞர்கள்‌ அனைவரும்‌ தூய நெறியிலே நடந்து கொள்ள வேண்டும்‌. இவர்கள்‌ தம்மிடம்‌ குற்றங்குறைகள்‌ சொல்வதற்கு இடமின்றிச்‌ செயலாற்ற வேண்டும்‌. அப்பொழுதுதான்‌ அவர்கள்‌ மக்களால்‌ புகழப்படுவார்கள்‌ அவர்கள்‌ சொற்களுக்குச்‌ செல்வாக்குண்டாகும்‌.

மற்றவர்களைக்‌ காட்டிலும்‌ அரசியல்‌ கட்சித்‌ தலைவர்‌ களுக்கு பொதுப்‌ பணியிலே ஈடுபட்டி ருப்பவர்களுக்கு ஆட்சிப்‌ பொறுப்பை ஏற்றுக்‌ கொண்டிருப்பவர்களுக்கு - தம்மிடம்‌ குறையில்லாமல்‌ பாதுகாத்துக்‌ கொள்ள வேண்டியது தலை சிறந்த கடமையாகும்‌. இவ்வுண்மையை வள்ளுவர்‌ பல அதிகாரங்களிலே வலியுறுத்திக்‌ கூறியிருக்கின்றார்‌.

“தன்‌ குற்றம்‌ நீக்கிப்‌ பிறர்‌ குற்றம்‌ காண்கின்பின்‌

என்‌ குற்றம்‌ ஆகும்‌ இறைக்கு

முதலில்‌ தன்‌ குற்றத்தைக்‌ கண்டறிந்து அதைக்‌ களைந்து, பின்னர்ப்‌ பிறருடைய குற்றங்களைக்‌ கண்டறிய வல்லவனா யிருந்தால்‌ அந்த அரசனிடம்‌ எந்தக்‌ குற்றந்தான்‌ உண்டாகும்‌? ஒரு குற்றமும்‌ அணுகாது.” (கு.346) இக்குறள்‌ எல்லா மக்கள்‌ மனத்திலும்‌ பதிந்திருக்க வேண்டிய குறள்‌. இதைப்‌ பின்பற்றி நடப்போர்‌ எவரும்‌, எதிலும்‌ வெற்றி பெறுவார்கள்‌.

“இவறலும்‌ மாண்பு இறந்த மானமும்‌, மாணா

உவகையும்‌ ஏதம்‌ இறைக்கு”

கருமித்தனமும்‌, பெருமையற்ற மானமும்‌, தகுதியற்ற மகிழ்ச்சியும்‌ அரசனாக இருப்பவனுக்கு ஏற்றவையல்ல; குற்றங்‌ களாகும்‌” (கு.432)

அளுவோர்‌ நல்ல காரியங்களைச்‌ செய்வதில்‌ கஞ்சத்தனம்‌ காட்டுதல்‌ தவறு; அட்சியை நடத்தி வைப்போர்‌ பொறுப்‌புள்ள உத்தியோகஸ்தர்கள்‌; அவர்களிடம்‌ கருமித்தனம்‌ காட்டினால்‌ காரியங்கள்‌ மெதுவாகத்‌ தான்‌ நடக்கும்‌. பெருமையற்ற செயல்களை உயார்வாக நினைத்துச்‌ செருக்கடையக்‌ கூடாது.

தாம்‌ செய்த சிறிய செயல்களை வைத்துக்‌ கொண்டு, பெரிய காரியங்களை யெல்லாம்‌ சாதித்து விட்டதாகச்‌ சொல்லி மகிழ்ச்சிடையக்‌ கூடாது. இவ்வறங்களை யெல்லாம்‌ எடுத்துக்‌ காட்டிற்றுஇக்குறள்‌.

“வியவற்க எஞ்ஞான்றும்‌ தன்னை ; நயவற்க

நன்றி பயவா விளை.

எக்காலத்திலும்‌ தன்னைக்‌ தானே உயார்வாக எண்ணிப்‌ புகழ்ந்து கொள்ளக்கூடாது; நன்மை தராத செயல்களை நெஞ்சத்தால்‌ நினைத்தலும்‌ கூடாது” (ஞ.439)  

இதுவும்‌ எல்லோர்‌ உள்ளத்திலும்‌ எப்பொழுதும்‌ ஒளி விட்டுக்‌ கொண்டிருக்க வேண்டிய உயர்ந்த குறள்‌. தற்புகழ்ச்சி யற்றவர்களே தன்‌ குற்றத்தைக்‌ காண முடியும்‌. தம்மைத்‌ தாமே பெரிதாகப்‌ பாராட்டிக்‌ கொண்டி ருப்பவர்களால்‌ தம்‌ குற்றத்தை உணர முடியாது. உணரமாட்டார்கள்‌. இவ்வுண்மையே இக்‌குறள்‌ உரைத்தது. இவர்களைப்‌ பிறர்‌ எளிதிலே ஏமாற்றி விடலாம்‌.

“இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்‌

கெடுப்பார்‌ இலானும்‌ கெடும்‌.”

இடித்துப்‌ புத்தி புகட்டும்‌ பெரியோரைத்‌ துணை கொள்ளாத அரசன்‌ பாதுகாப்பு அற்றவன்‌; அவனைக்‌ கெடுக்கப்‌ பகைவர்‌ வேண்டுவதில்லை; அவனாகவே அழிந்து போவான்‌.” (கு.448)

“நல்லினத்தின்‌ ஊங்கும்‌ துணையில்லை; தீயினத்தின்‌

அல்லல்‌ படுப்பஊதூம்‌ இல்‌.

நல்ல இனத்தோடு சேர்ந்திருப்பதைவிடச்‌ சிறந்த துணையும்‌ இல்லை; தீய இனத்தோடு சேர்ந்திருப்பதைவிடத்‌ துன்பப்‌ படுத்தும்‌ பகையும்‌ இல்லை.” (க.460)

பெரியார்களைத்‌ துணையாகக்‌ கொள்ளுவது; தஇயோர்‌ கூட்டுறவின்றி நல்லவர்களுடன்‌ சேர்ந்து வாழ்வது; இவைகளே குற்றம்‌ புரியாமல்‌ வாழ்வதற்கான வழி. இவ்வுண்மையையே மேலே காட்டிய வெண்பாக்கள்‌ விளக்கின.

தான்‌ குற்றவாளியாகக்‌ கூடாது என்பதிலே கவலையுள்ளவார்கள்‌ எப்பொழுதும்‌ நல்ல அறிஞர்களையே துணையாகக்‌ கொண்டி ருப்பார்கள்‌; தவறு செய்யும்‌ போது சிறிதும்‌ பின்‌ வாங்காமல்‌ அதைக்‌ கண்டித்துப்‌ புத்தி புகட்டுகின்றவர்களின்‌ நட்பைக்‌ கைவிட மாட்டார்கள்‌. அன்றியும்‌ நன்னெறியில்‌ நடக்கும்‌ கூட்டத்துடனேயே என்றும்‌ இணைந்து வாழ்வார்கள்‌; கெட்டவர்களுடன்‌ - தீமை செய்கின்றவர்களிடம்‌- ஒரு பொழுதும்‌ தொடர்பு வைத்துக்‌ கொள்ளவே மாட்டார்கள்‌.

எந்தச்‌ செயலையும்‌ ஆத்திரப்பட்டு அராயாமல்‌ செய்யக்‌ கூடாது. பொறுமையுடன்‌ அராய்ந்த பின்பே எச்செயலையும்‌ தொடங்க வேண்டும்‌. இவ்வாறு எண்ணித்‌ துணிகின்றவர்கள்‌ தாம்‌ தொட்ட காரியத்திலே வெற்றி பெறுவார்கள்‌.

ஒரு அரசாங்கம்‌ பொது மக்கள்‌ நன்மைக்கான பெரிய காரியங்களைச்‌ செய்யத்‌ தொடங்கும்போது திடீர்‌ என்று தொடங்கி விடக்கூடாது. அத்துறைகளிலே தேர்ந்த அறிஞர்‌களைக்‌ கொண்டு ஆராய்ச்சி நடத்த வேண்டும்‌; அதன்‌ பின்‌, அவற்றை எப்படிச்‌ செய்வது? எவ்வளவு செலவில்‌ செய்வது? என்று திட்டமிட வேண்டும்‌. இவ்வாறு திட்ட மிட்ட பின்‌ பொது மக்களின்‌ அதரவையும்‌ பெறவேண்டும்‌. இப்படிச்‌ செய்யப்படும்‌ காரியங்கள்‌ தான்‌ வெற்றி பெறும்‌. இம்முறைதான்‌ அளுவோர்‌ தம்மிடம்‌ குற்றங்குறைகள்‌ உண்டாகாமல்‌ பாதுகாத்துக்‌ கொள்ளும்‌ சிறந்த முறையாகும்‌.

“எண்ணித்‌ துணிக கருமம்‌ துணிந்தபின்‌

எண்ணுவம்‌ என்பது இழுக்கு.

செய்ய தகுந்த செயலையும்‌, அதைச்‌ செய்து முடிக்கு வழித்‌துறைகளையும்‌, ஆராய்ந்த பிறகு தான்‌ அதைச்‌ செய்யத்‌ துணிய வேண்டும்‌; காரியத்தை தொடங்கி விடுவோம்‌; தொடங்கிய பின்‌ அதைப்‌ பற்றி எண்ணிப்‌ பார்ப்போம்‌; என்று தொடங்குவது குற்றமாகும்‌.” (ஞ..407)

அராயாமல்‌ அவசரப்பட்டு ஒரு காரியத்தைத்‌ தொடங்குவது பெருங்குற்றம்‌; அதனால்‌ பொருட்கேடு தான்‌ உண்டாகும்‌; காரியமும்‌ கை கூடுவது அரிது; என்ற கருத்துள்ளதே இக்குறள்‌. ஒவ்வொரு அரசாங்க மாளிகையின்‌ முகப்பினும்‌ எழுதி வைக்க வேண்டிய குறள்களில்‌ இது ஒன்று.

“காதன்மை கந்தா, அறிவு அறியார்த்தேறுதல்‌

பேதைமை எல்லாந்தரும்‌.

அறிய வேண்டியவைகளை அறியாதவர்களை அன்புடைமை காரணமாக காரியம்‌ செய்தற்கு ஏற்றவர்‌ என்று நம்பித்‌ தெளிவது தவறு; அவ்வாறு தெளிவது, அறியாமையால்‌ வரும்‌ துன்பம்‌ எவ்வளவு உண்டோ அவ்வளவையும்‌ கொடுக்கும்‌.” (ஞு.5027)

இக்குறளும்‌ குறிப்பிடத்‌ தகுந்த சிறந்த குறள்‌. ஆளுவோர்‌ வகுக்கும்‌ திட்டங்கள்‌ வெற்றி பெறவேண்டுமானால்‌, அத்‌திட்டங்களை நிறைவேற்றும்‌ அறிவும்‌ திறமையும்‌ நேர்மையும்‌ உள்ளவர்களிடமே அவைகளை ஓப்படைக்க வேண்டும்‌. இப்படி யில்லாமல்‌, அளுவோரிடம்‌ அன்புள்ளவர்கள்‌ - அளுவோர்‌  கட்சியை ஆதரிப்பவர்கள்‌ - அளுவோருக்கு உறவினர்கள்‌ - என்ற

காரணம்‌ பற்றிச்‌ சிறந்த திட்டங்களை நிறைவேற்றும்படி. அறிவும்‌, திறமையும்‌ அற்றவர்களிடம்‌ ஒப்படைப்பது தவறு; இப்படி ஒப்படைக்கப்படும்‌ திட்டங்கள்‌ பாழாகும்‌. அளுவோர்‌ மக்களுடைய ஆத்திரத்திற்கும்‌ - பழிப்புக்கும்‌ உள்ளவார்கள்‌. தகுதியையும்‌, திறமையையும்‌ அடி. ப்படையாக்‌ கொள்ளாமல்‌, சாதி, மத இனங்களை அடிப்படையாகக்‌ கொண்டு சலுகை வழங்குவது தவறு. இத்தகைய ஆட்சியிலே அளவற்ற ஊழல்கள்‌ மலிந்துவிடும்‌; அரசாங்கத்‌ திட்டங்கள்‌ வெற்றியுடன்‌ நடைபெற மாட்டா; இக்கருத்தும்‌ மேற்கண்ட குறளிலே அடங்கியிருக்‌கின்றது.

“வினைக்குரிமை நாடிய பின்றை, அவனை

அதற்கு உரியன்‌ ஆகச்செயல்‌.

ஒருவன்‌ ஒரு தொழிலைச்‌ செய்வதற்குத்‌ தகுதியுடையவன்‌ என்று அராய்நீது தெரிந்தெடுக்கப்பட்டபின்‌, அவனை அத்‌தொழிலுக்கு உரியவனாக்கி, அவனிடம்‌ பொறுப்பை ஓப்படைத்து விடவேண்டும்‌.” (ஞ.578)

ஆட்சியாளர்‌ அறிந்திருக்க வேண்டிய உண்மைகளிலே இக்குறளும்‌ ஒன்றாகும்‌. உத்தியோகஸ்தர்கள்‌ ஓவ்வொரு வரையும்‌, தங்கள்‌ பொறுப்பை உணரும்படி செய்ய வேண்டியது அளுவோர்‌ கடமை.

ஒரு திட்டம்‌ வெற்றியுடன்‌ முடியவேண்டுமானால்‌, முதலில்‌ அத்திட்டத்தை நடத்துவதற்குத்‌ தகுதியும்‌ திறமையும்‌ உள்ள வரைத்‌ தேர்ந்தெடுக்க வேண்டும்‌; அவரிடம்‌ அத்திட்டத்தை நடத்தும்‌ பொறுப்பு முழுவதையும்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

அத்திட்டத்தின்‌ வெற்றி தோல்விக்கு அவரையே முழுப்‌ பொறுப்‌பாளியாக்கிவிடவேண்டும்‌. இவ்வாறு செய்து விட்டால்‌ அவர்‌ ஊக்கமுடன்‌ உழைப்பார்‌. திட்டத்தை வெற்றியுடன்‌ முடித்துப்‌ பொது மக்கள்‌ பாராட்டைப்‌ பெறவேண்டும்‌ என்ற அவலுடன்‌ வேலை செய்வார்‌. அறிஞர்களின்‌ அலோசனைகளையும்‌, பொது மக்கள்‌ ஒத்துழைப்பையும்‌ பெற்றுத்‌ தன்‌ பொறுப்பை நிறை வேற்றுவார்‌. இவ்வுண்மையைக்‌ கூறுவதே மேற்‌ காட்டிய குறள்‌.

தம்‌ குற்றத்தைத்‌ தாமே உணர்தல்‌; தற்புகழ்ச்சியின்மை/அறிவுள்ளவார்களையும்‌, நல்லவர்களையும்‌ துணையாகக்‌ கொள்ளுவது; எந்தக்‌ காரியங்களையும்‌ எண்ணிப்‌ பார்த்தபின்‌ செய்வது; தன்‌ வலிமை, காலம்‌, இடம்‌ இவைகளை அறிந்து ஒரு காரியத்தைச்‌ செய்தல்‌; தகுதியும்‌, திறமையும்‌ உள்ளவர்களிடம்‌ பொறுப்பை ஒப்புவித்தல்‌; அவர்களிடம்‌ பொறுப்பு முழுவதையும்‌ சுமத்துதல்‌; இவைகள்‌ அளுவோர்‌ பின்‌ பற்ற வேண்டிய சிறந்த கடமைகள்‌); தம்மைப்பற்றிப்‌ பிறர்‌ குறை சொல்ல இடமில்லாமல்‌ நடந்துகொள்ளும்‌ முறை; தாழும்‌ குற்றங்‌ குறைகளுக்கு அளாகாமல்‌ வாழும்‌ வழி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard