வள்ளுவர் காலத்திற்கு முன்பே பெருநிலத் தவைர்கள் இந்நாட்டிலே வாழ்ந்து வந்தனர். உழவனுக்கே நிலத்தில் உரிமை என்ற நிலைமை மாறி விட்டது. உழுவோர், உழுவித்துண்போர் என்ற முறை வந்து விட்டது. உழுவோர் விவசாயிகள். உமழுவித்துண்போர் நிலத் தலைவர்கள். இதற்குச் சங்க இலக்கியங்களே சான்று. சிற்றரசர்களும், வள்ளல்களும் பெரும்பாலும் நிலத்தலைவர்களாகவே யிருந்தனர். அவர்கள் அதரவிலே புலவர்கள் வாழ்ந்தனர்; கலைஞர்கள் வாழ்ந்தனர்; கலைகள் வளர்ந்தன.
வள்ளுவர் காலத்திலே உழவர்களை நசுக்கிப் பிழியும் நிலக்கிழவர்களும் இருந்தனர். நிலமெல்லாம் ஒரு சிலர் கையிலே அடங்கி விட்டால் உழுவோர்பாடு திண்டாட்டந்தான் என்பதை வள்ளுவர் கண்டறிந்தார். அகையால் நிலம் உழவனுக்கே உரிமையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினார். இதனை ழவு என்னும் அதிகாரத்திலே தெளிவாகச் சொல்லி விட்டார்.
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்
உழந்தும் உழவே தலை.
உலகம் பலவேறு தொழில்களிலே சுழன்று கொண்டிருந்தாலும், இறுதியில் உழவுத் தொழிலை நம்பித்தான் வாழும். அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே உயர்ந்த தொழிலாகும்.” (கு.1031.)
இவ்வாறு முதலில் உழவித் தொழிலே உயர்ந்த தொழில்-சிறந்த தொழில் - அவசியமான தொழில் - என்று குறித்தார். உழவுத் தொழிலே உலகை உயிருடன் வாழ வைக்கும் தொழில். உழவுத் தொழில் குறைந்தால் - விளைவுப் பொருள்கள் குறைந்தால் - உலகம் வாழ முடியாது. வேறு எத் தொழில்களும் நடைபெறமாட்டா) உணவின்றி மக்கள் பட்டினி கிடக்க நேர்ந்தால் உலகம் பாழாகும். இது என்றும் உள்ள உண்மை. இதைத்தான் வள்ளுவர் எடுத்துக் காட்டினார்.
இதன் பின் மூன்று குறள்களிலே நிலம் உழுபவனுக்கே உரிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிடுகிறார். ஒரு காலத்திலே நிலம் யாருக்கும் சொந்தமில்லை; பொதுவாக இருந்தது. நிலத்திலே பயிர் செய்தவர்கள் பலன் பெற்று வந்தனர். பின்னர் உழவர்கள் தம்மால் உழுது பயிர் செய்வதற்கு முடிந்த அளவு நிலத்தைத் தமக்கே உரிமையாக வைத்துக் கொண்டனர்.
இதன் பின்னர் வலுத்தவர்கள் சிலர் பரந்த நிலப்பகுதியைத் தம்முடைய தாக்கிக் கொண்டனர். உழவர்களைக் கொண்டு வேலை வாங்கினர். அவர்களுக்கு ஒரு பங்கைக் கொடுத்து விட்டு மீதத்தைத் தாமே எடுத்துக் கொண்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் உழுதுண்போர், உழுவித்து உண்போர் என்று பிரிவு ஏற்பட்டது.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
உழவுத்தொழில் செய்து அதனால் கிடைக்கும் உணவை உண்டு வாழ்கின்ற மக்களே உரிமையுடன் வாழ்கின்றவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பிறரைத் தொழுது, அவர் கொடுக்கும் உணவை வாங்கி உண்டு அவர் பின்னே அலையும் அடிமைகள் ஆவார்.” (ஞ.1033).
இது உழவுத் தொழிலே அடிமையற்ற சுதந்தரமுள்ள தொழில் என்பதை உணர்த்திற்று. நிலம் உழவனுக்குச் சொந்த மானால் தான் இச்சுதந்திரம் உண்டு.
“செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
நிலத்திற்கு உரியவன், தான் பயிர் செய்த நிலத்தை நிலத்தில் உள்ள பயிரை - நாள் தோறும் சென்று பார்க்காமலவிருந்தால், அந்த நிலம் நல்ல பயனைத் தராது; தலைவன் பிரிவால் வருந்தியிருக்கும் மனைவியைப் போல அவனை வெறுக்கும்; அவனோடு பிணங்கி விடும்.” (ஞ.70.39).
இக்குறளும் பயிர் செய்பவனுக்கே நிலம் உரிமையுள்ளது என்ற கருத்தைக் கொண்டது. நேரிடையாக நிலத்திலே உழுகின்றவன் ஓரளவு நிலத்தைத்தான் உழமுடியும். அவன்தான் நாள்தோறும் அந்நிலத்தைப் போய்ப் பார்த்துப் பயிருக்குச் சேதம் உண்டாகாமல் பாதுகாக்கவும் முடியும். நூற்றுக்கணக்கான கல்லுகளுக்கு அப்பால் இருப்பவன் நிலம் தனக்கென்று உரிமை கொண்டாடுவானாயின் அவன் நாள்தோறும் நிலத்தைப் பார்ப்பது எப்படி? பார்க்கவே முடியாது. தம் ஆற்றலுக்கு மீறிய நிலத்தை வளைத்துக் கொணடிருக்கும் உழுவித்துண்போரும் ஒவ்வொரு நாளும் பயிரிட்ட நிலத்தைத் தாமே சென்று பார்க்க முடியாது. அதலால் நிலத்தை நேரடியாக உழுது பயிர் செய்கின்ற உழவனுக்குக் கூறிய குறள் தான் இது.
“இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லாள் நகும்.
எம்மிடம் ஒன்றும் இல்லையே; என் செய்வது என்று எண்ணிக்கொண்டு சோம்பி யிருப்பாரைக் கண்டால் நிலம் என்னும் பெண் மகள் சிரிப்பாள்.” (ஞ.1040). லத்திலே பாடுபடுகின்றவன் வறுமையால் வாட வேண்டிய நிலத்தி டுபடுகின்ற று டில்லை; பாடுபட்டால் பலன் உண்டு) ் உண்மையை தி டு டு; இந்த ச்சோம்பே யவில்லையே; என் னைச் லமகள் அ அ த்து! சிரிப்பாளாம். ஒருவன் மற்றொருவனுடைய நிலத்திலே பாடுபட்டால் அவன் பாட்டுக்கேற்ற பலனைப் பெறமுடியாது. யாருக்கும் உரிமையற்ற பொது நிலத்திலோ, அல்லது தனக்கு உரிமையுள்ள நிலத்திலோ பாடுபட்டால் தான் பலன் முழுவதை யும் பெற முடியும். இவ்வுண்மை இக் குறளிலே அடங்கியிருக்கின்றது.
நில உரிமை பற்றிய திருவள்ளுவரின் இக்கருத்துப் புரட்சிகரமானது. நிலத்தலைமை வேரோடியிருந்தகாலத்திலே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். வள்ளுவருடைய இக்கருத்தை உலகம் என்றும் போற்றும். இன்றும் அறிஞர்கள் இக்கருத்தையே ஒப்புக்கொள்ளுகின்றனர்.
உழவனுக்கு நிலத்திலே உரிமையிருந்தால் தான் அவன் ஊக்கத்துடன் உழைப்பா; உற்பத்தியைப் பெருக்குவான். ஆயிரக்கணக்கான அண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறிய இக்கருத்து - அவருக்கு முன்னிருந்த முறையை எதிர்த்துக் கூறிய கருத்து- அவர் காலத்திலிருந்த முறைக்கு முரணாகக் கூறிய கருத்து. இன்று உலக மக்கள் போற்றும் உயர்ந்த கொள்கையாக விளங்குகின்றது.
வள்ளுவர் காலத்திலே ஒருவர் ஆதிக்கத்திலும் இல்லாத உழுநிலங்களும் ஏராளமாக இருந்தன. அவைகளிலே யார் வேண்டுமானாலும் பயிர் செய்து பலன் பெறலாம். தமிழகத்திலே இந்த நிலைமை இருந்தது. இச்செய்தியை மேற்கண்ட குறள்களால் அறியலாம்.
உழவுத் தொழிலே சிறந்த தொழில். உமழுகின்றவன் ஒவ்வொரு நாளும் நிலத்தை நேரில் போய் காணவேண்டும. அடிமையற்ற தொழில் உழவுத் தொழில்தான். நிலம் உழவனுக்கு உரிமையாக இருக்க வேண்டும். இவைகளே வள்ளுவர் கொள்கை என்பதை அறியலாம்.