Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகம்‌ போற்றும்‌ உண்மைகள்‌


Guru

Status: Offline
Posts: 7602
Date:
உலகம்‌ போற்றும்‌ உண்மைகள்‌
Permalink  
 


உலகம்‌ போற்றும்‌ உண்மைகள்‌

எந்நாட்டினரும்‌, எக்காலத்திலும்‌ போற்றக்கூடிய பல உண்மைகளை உரைப்பவர்களே உயர்ந்த புலவர்கள்‌. ஒரு நாட்டில்‌ உள்ள உயர்ந்த அறிஞர்களின்‌ கருத்து. பல நாட்டு அறிஞர்களின்‌ கருத்துக்களோடு ஒத்திருப்பது இயற்கை. இச்‌சிறப்பைத்‌ திருவள்ளுவரிடம்‌ காணலாம்‌.

அறிவுக்கு மதிப்பு

அறிவுக்குப்‌ பெருமை யளித்த புலவர்களிலே வள்ளுவர்‌ தலை சிறந்தவர்‌. அறிவைப்‌ பற்றி அவர்‌ கூறியிருப்பதே அவர்‌ எந்த மதத்தையும்‌ சார்ந்தவர்‌ அல்லர்‌ என்பதைக்‌ குறிக்கும்‌. சில நம்பிக்கைகளை அடிப்படைகளாகக்‌ கொண்டதே மதம்‌. வள்ளுவர்‌ நம்பிக்கையை முதன்மையாகக்‌ கொள்ளவில்லை. அறிவையே முதன்மையாகக்‌ கொண்டிருக்கிறார்‌. அறிவையே முதன்மையாகக்‌ கொள்ள வேண்டும்‌ என்றும்‌ வற்புறுத்துகின்றார்‌.

“எப்பொருள்‌ யார்‌ யார்‌ வாய்க்‌ கேட்பினும்‌ அப்பொருள்‌

மெய்ப்பொருள்‌ காண்பது அறிவு.

எப்பொருளை யார்‌ யார்‌ சொல்லக்‌ கேட்டாலும்‌ அப்‌பொருளை அப்படியே நம்பிவிடாமல்‌, அதன்‌ உண்மைப்‌ பொருளை உணர்வதே அறிவாகும்‌.” (கு.423) நன்மை தஇமைகளைப்‌ பகுத்தறிவும்‌ அறிவு வேண்டும்‌; உண்மை பொய்மைகளத்‌ கண்டுணரும்‌ அறிவு வேண்டும்‌. இத்தன்மையுள்ளவர்களே அறிவுள்ளவர்கள்‌. இவ்வுண்மையை எடுத்துரைத்தது இக்குறள்‌.

“எப்பொருள்‌ எத்தன்மைத்து ஆயினும்‌ அப்பொருள்‌

மெய்ப்பொருள்‌ காண்பது அறிவு.

எப்பொருள்‌ எத்தன்மையுள்ளதாய்த்‌ தோன்றினாலும்‌ அப்பொருளின்‌ உண்மைத்‌ தன்மையை உணர்வதே உணர்‌வாகும்‌.” (355) முதற்‌ குறள்‌ அரசியலில்‌ ஈடுபட்டோர்க்குக்‌ கூறப்பட்டது.

இரண்டாவது குறள்‌ துறவிகளுக்குக்‌ கூறப்பட்டது. இவ்விரண்டு

குறள்களின்‌ கருத்துக்களும்‌ வெவ்வேறு. ஒன்று, பிறர்‌ கூறுவதில்‌

உள்ள உண்மைகளைக்‌ கண்டறிவது. (423) மற்றொன்று

கண்ணால்‌ காணும்‌ பொருள்களின்‌ தன்மைகளைக்‌ கண்டறிவது.

இவ்விரண்டு தன்மைகளும்‌ உடையவர்களே அறிஞர்கள்‌.

“எவ்வது உறைவது உலகம்‌, உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு.

உலகம்‌ எவ்வாறு நடைபெறுகின்றதோ அவ்வாறு உலகத்‌

தோடு ஓட்டி வாழ்வதே அறிவாகும்‌”. (ஞு.456)

உலகத்தைப்‌ பகைத்துக்‌ கொள்பவன்‌ வாழ முடியாது.

உலகத்தோடு ஓத்து நடக்காதவன்‌ யாராயிருந்தாலும்‌ ஒதுக்கப்‌

படுவான்‌.

“எண்பொருளவாகச்‌ செலச்சொல்லித்‌ தான்‌ பிறர்வாய்‌

நுண்பொருள்‌ காண்பது அறிவு.

தான்‌ சொல்லுவனவற்றை, எளிய பொருளாகக்‌, கேட்‌

போர்‌ உள்ளத்திலே பதியும்படி, உரைத்துப்‌, பிறர்‌ வாயிலிருந்து

 

வரும்‌ அரிய பொருளைத்‌ தான்‌ அறிந்து கொள்வதே அறிவாகும்‌.”

(424)

 

“ அறிவுடையார்‌ ஆவது அறிவார்‌; அறிவில்லார்‌

அஃது அறிவில்லாதவர்‌.

எதிர்கால நிகழ்ச்சிகளை அறிகின்றவர்களே அறிவுடை

யவர்கள்‌; அவைகளை அறிந்துகெள்ள முடியாதவர்கள்‌

அறிவற்றவர்கள்‌.”(கு.4.27)

இவைகள்‌ அறிவுடைமையின்‌ இன்றியமையாமையைப்‌

பற்றி எடுத்துரைத்தன. அறிவுடைமை என்று ஓரு தனி

அதிகாரமும்‌ உண்டு. அதில்‌ உள்ள பத்து வெண்பாக்களும்‌ ஒவ்வொருவரும்‌ உள்ளத்திலே பதியவைத்துக்‌ கொள்ள வேண்டியவை.

கல்வியின்‌ கருத்து

கல்வியின்‌ அவசியத்தை வள்ளுவர்‌ வலியுறுத்தும்‌ முறை சிறந்தது. கல்வியினால்‌ மனித சமுதாயத்தில்‌ உள்ள உயர்வு தாழ்வுகளை ஓழிக்க முடியும்‌ என்று கூறுகின்றார்‌

“கண்‌ உடையார்‌ என்பவர்‌ கற்றோர்‌; முகத்து இரண்டு

புண்உடையார்‌ கல்லா தவர்‌.

கற்றவர்களே உண்மையிலே காணக்‌ கூடிய கண்களை உடையவர்கள்‌ என்று கூறப்படுவர்‌. கல்லாதவர்களின்‌ முகத்திலே உள்ள கண்கள்‌ பார்வை மங்காமல்‌ இருந்தாலும்‌ அவைகள்‌ கண்கள்‌ அல்ல; வெறும்‌ புண்கள்‌ தாம்‌. (ஞ..393)

“யாதானும்‌ நாடுஆம்‌ஆல்‌ ஊர்‌ஆம்‌ஆல்‌ என்‌ ஒருவன்‌

சாந்துணையும்‌ கல்லாதவாறு

கல்வி கற்றவனுக்கு எந்நாடும்‌ தன்னாடு தான்‌; எவ்வூரும்‌ தன்னூர்தான்‌; இவ்வாறாயின்‌ ஒருவன்‌ தான்‌ சாகும்‌ வரையிலும்‌ கல்வி கற்காமலிருப்பது ஏன்‌?” (ஞ.397)

இந்த இரண்டு குறள்களும்‌ ஆழ்ந்த கருத்துன்ளவை கல்வி கற்றவர்கள்‌ தாம்‌ உண்மைகளைக்‌ காண முடியும்‌. இன்று கண்ணெதிரே நடக்கும்‌ நிகழ்ச்சிகளை மட்டும்‌ அல்ல; வேற்று நாடுகளில்‌ நடைபெறும்‌ நிகழ்ச்சிகளையும்‌ காண முடியும்‌. கடந்த காலத்தில்‌ உலகில்‌ நடந்த நிகழ்ச்சிகளையும்‌ கற்றவர்கள்‌ காண்பர்‌. இன்று நடக்கும்‌ நிகழ்ச்சிகளைக்‌ கொண்டு எதிர்‌ காலத்தில்‌ என்ன நடக்கும்‌ என்பதையும்‌ எண்ணி உணர்வர்‌. 

அன்றியும்‌ கற்றவர்களால்‌ தான்‌ உலக ஒற்றுமை உண்டாக முடியும்‌. கற்றவர்கள்‌ எவ்வினத்தவராயினும்‌, எல்லா இனத்தினராலும்‌ எல்லா நாட்டினராலும்‌ போற்றப்படுவார்கள்‌. இந்த உண்மைகளை மேற்‌ காட்டிய குறள்கள்‌ விளக்கின.

தீமையிலும்‌ நன்மை

“கேட்டினும்‌ உண்டு ஓர்‌ உறுதி; கிளைஞரை

நீட்டி அளப்பது ஒர்‌ கோல்‌.

கேடு வந்தால்‌ அதனாலும்‌ ஒரு நன்மையுண்டு. அக்கேடு யார்‌ நமக்கு உண்மையான நட்பினர்கள்‌ என்பதை நீட்டி அளந்து பார்க்கும்‌ ஓர்‌ அளவுகோலாகும்‌.”(கு.796.)

தஇமையைக்‌ கண்டு கலங்க வேண்டாம்‌. அச்சமயத்தில்‌ அஞ்சாமலிருந்தது உண்மையான நண்பார்கள்‌ யார்‌; உண்மை யான உறவினர்கள்‌ யார்‌? என்பதைக்‌ கணக்கெடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. இக்குறளின்‌ கருத்தை ஒப்புக்‌ கொள்ளாத மக்கள்‌ உலகில்‌ இல்லை.

“வெண்மை எனப்படுவது யாதுஎனின்‌, ஒண்மை

உடையம்யாம்‌ என்னும்‌ செருக்கு.

அறியாமை என்று பழித்துக்‌ கூறப்படுவது யாதென்றால்‌, “நாம்‌ சிறந்த அறிவுள்ளோம்‌” என்று தம்மைத்‌ தாமே மதிக்கும்‌ செருக்காம்‌.” (கு.844)

இத்தகைய செருக்குள்ளவர்கள்‌ எவர்‌ சொல்லையும்‌ கேட்க மாட்டார்கள்‌; எதையும்‌ எண்ணிப்‌ பார்க்க மாட்டார்கள்‌. இவர்களுக்கு எவரும்‌ உதவி செய்யவும்‌ மாட்டார்கள்‌; செருக்கே இவர்களைச்‌ சீர்குலைத்து விடும்‌. இவ்வுண்மையை உலகில்‌ உள்ள அறிஞர்கள்‌ அனைவரும்‌ ஒப்புக்‌ கொள்ளுவார்கள்‌.

“உற்றான்‌ அளவும்‌, பிணி அளவும்‌, காலமும்‌

கற்றான்‌ கருதிச்‌ செயல்‌.

மருத்துவ நூலைக்‌ கற்றவன்‌, நோயாளியின்‌ அளவையும்‌, நோயின்‌ அளவையும்‌, மருத்துவம்‌ செய்வதற்குரிய காலத்தையும்‌ ஆராய்ந்து வயித்தியம்‌ செய்ய வேண்டும்‌” (கு.949) இவை இரண்டு குறள்களும்‌ மருத்துவர்களுக்கு அறிவுரை கூறின. இவைகள்‌ கூறும்‌ அறிவுரையை மறுக்கும்‌ மருத்துவர்கள்‌ எந்‌ நாட்டிலும்‌ இல்லை.

“உற்றவன்‌, தீர்ப்பான்‌, மருந்து, உழைச்செல்வான்‌ என்று

அப்பால்‌ நால்கூற்றே மருந்து,

மருத்துவ முறையாவது நோயாளி மறைக்காமல்‌, மருத்து வனிடம்‌ சொல்ல வேண்டும்‌; மருத்துவர்‌ கூறுகின்றபடி. நடந்து கொள்ள வேண்டும்‌; மருந்துண்ண வேண்டும்‌. மருத்துவன்‌ அனுபவமும்‌ அறிவும்‌ அமைந்தவனாயிருக்க வேண்டும்‌.

மருந்து நோய்க்கேற்றதாவும்‌, நோயாளி விரும்பி உண்ணக்‌ கூடியதாகவும்‌ இருக்க வேண்டும்‌. நோயாளியின்‌ பக்கத்திலிருந்து பார்த்துக்‌ கொள்கிறவன்‌ கருத்துடன்‌ இருக்க வேண்டும்‌; காலாகாலத்தில்‌ மருந்து கொடுக்க வேண்டும்‌; பத்தியந்‌ தவறாமல்‌ நோயாளியைப்‌ பாதுகாக்க வேண்டும்‌. இத்தகைய அமைப்பே சிறந்த மருத்துவ முறையாகும்‌. இவ்வாறு மருத்துவத்தைப்‌ பற்றி வள்ளுவர்‌ சொல்லி யிருக்கும்‌ உண்மைகள்‌ எக்காலத்திற்கும்‌ எந்நாட்டிற்கும்‌ ஏற்றனவாயிருக்கின்றன.

வியாபாரம்‌

“வாணிகம்‌ செய்வார்க்கு வாணிகம்‌; பேணிப்‌

பிறவும்‌ தம்போல்‌ செயின்‌.

பிறர்‌ பொருளையும்‌ தம்‌ பொருளைப்‌ போல்‌ பாதுகாத்துச்‌ செய்தால்‌ வாணிகம்‌ செய்வார்க்கு அதுவே சிறந்த வாணிகமாம்‌.” (மூ..1.20) உள்நாட்டு வணிகர்க்கும்‌ வெளிநாட்டு வணிகர்க்கும்‌ நேர்மையே அடிப்படை. திருட்டுப்‌ புரட்டுச்‌ செய்யும்‌ அடிப்‌படை. திருட்டுப்‌ புரட்டுச்‌ செய்யும்‌ வணிகர்களின்‌ வியாபாரம்‌ நீண்ட நாளைக்கு ஓடாது. அவர்கள்‌ மோசடி. வெளிப்பட்ட பின்‌ வியாபாரம்‌ படுத்துப்போகும்‌. நேர்மையுள்ள வியாபாரம்‌ எப்‌பொழுதும்‌ படுக்காது. மேலும்‌ மேலும்‌ வளர்ந்து பெருகும்‌. இவ்வுண்மையை உரைத்தது இக்குறள்‌.

நோயற்ற வாழ்வு

வயித்தியர்களுக்கு மருத்துவர்களுக்கு வள்ளுவர்‌ காட்டும்‌ வழி எந்நாட்டினராலும்‌ ஏற்றுக்‌ கொள்ளக்‌ கூடியது. மருந்து என்ற அதிகாரத்தில்‌ உள்ள பத்துக்‌ குறள்களையும்‌ மறக்காமல்‌ அவற்றைப்‌ பின்பற்றி நடந்தால்‌ போதும்‌; எல்லோரும்‌ நோயற்ற வாழ்வு வாழ முடியும்‌.

“மருந்து எனவேண்டா ஆம்யாக்கைக்கு: அருந்தியது

அற்றது போற்றி உணின்‌.

முன்‌ உண்ட உணவு செரித்ததை அறிந்து, பிறகு அளவோடு உண்டால்‌ உடம்புக்கு மருந்து என்று வேறு ஒன்றும்‌ வேண்டுவதில்லை.” (ஞ.94.2).

“அற்றால்‌ அளவறிந்து உண்க; அஃது உடம்பு

பெற்றான்‌ நெடிது உய்க்கும்‌ ஆறு.

உண்ட உணவு செரித்த பின்‌, செரிக்கும்‌ அளவறிந்து உண்ண வேண்டும்‌. இதுவே உடம்பைப்‌ பெற்றவன்‌ அதை நீண்ட காலம்‌ வைத்துக்‌ காப்பாற்றும்‌ வழி”. (ஞ.943) இவ்விரண்டு குறள்களும்‌, பொது மக்கள்‌ பிணியின்றி வாழ வழி கூறின.

“நோய்‌ நாடி நோய்‌ முதல்‌ நாடி, அது தணிக்கும்‌

வாய்நாடி வாய்ப்பச்‌ செயல்‌.

முதலில்‌ நோய்‌ இன்னதென்பதைத்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌; பின்னர்‌ அந்த நோய்வந்த காரணத்தைக்‌ கண்டறிய வேண்டும்‌; பிறகு அந்‌ நோயைத்‌ தீர்க்கும்‌ வழியைத்‌ தெரிந்து கொள்ள வேண்டும்‌. அதன்‌ பின்‌ நோயாளியின்‌ உடல்‌ நிலைக்குத்‌ தக்கவாறு - நோயின்‌ வன்மை மென்மைக்குத்‌ தக்கவாறு வைத்தியம்‌ பண்ண வேண்டும்‌. (க..948).

பேச்சுத்‌ திறமை

சொல்வன்மை ஒரு கலையாகும்‌. இக்காலத்தில்‌ இக்கலை பொது மக்களிடம்‌ செல்வாக்குப்‌ பெற்று வருகின்றது. எக்காலத்‌திலும்‌ சொல்‌ வன்மை படைத்தவனுக்கு மனித சமுதாயத்திலே மதிப்புண்டு இதைப்‌ பற்றி வள்ளுவர்‌ சொல்வன்மை என்ற அதிகாரத்தில்‌ வலியுறுத்தியிருக்கின்றார்‌.

“ஆக்கமும்‌ கேடும்‌ அதனால்‌ வருதலால்‌

காத்துஒம்பல்‌ சொல்லின்கண்‌ சோர்வு.

அவதற்கும்‌ அழிவதற்கும்‌ சொல்தான்‌ காரணம்‌; அதலால்‌ ஒவ்வொருவரும்‌ தம்‌ சொல்லிலே தவறு உண்டாகாமல்‌ காத்துக்‌ கொள்ள வேண்டும்‌” (ஞ.642). எதையும்‌ திறம்படச்‌ சொல்லத்‌ தெரியாதவன்‌. காரியத்‌ திலே வெற்றியடையமாட்டான்‌. அவன்‌ மற்றவர்களால்‌ ஏமாற்றப்‌ படுவான்‌. உண்மையிலே - அவனுக்குக்‌ கிடைக்கவேண்டிய வெற்றி கூடத்‌ தோல்வியாக முடிந்துவிடும்‌. இது மறுக்க முடியாத உண்மை.

“விரைந்து தொழில்‌ கேட்கும்‌ ஞாலம்‌ நிரந்து இனிது

சொல்லுதல்‌ வல்லார்ப்‌ பெறின்‌.

தான்‌ சொல்லக்‌ கருதியவற்றை அனைவர்க்கும்‌ புரியும்படி தொடர்ச்சியாகக்‌ கூறும்‌ வல்லமை யுள்ளவர்களைப்‌ பெற்றால்‌, இவ்வுலகம்‌ விரைவில்‌ அவர்‌ கூறும்‌ வழியிலே நிற்கும்‌' (கு.648) இக்குறள்‌ பேச்சிலே வல்லவர்களால்‌ இவ்வுலகத்தையே அடக்கி அள முடியும்‌ என்று கூறிற்று. எத்தகைய பேச்சுத்‌ திறமையுள்ளவர்கள்‌ மக்களால்‌ மதிக்கப்படுவார்‌ என்பதை மற்றொரு குறள்‌ தெளிவாக எடுத்துரைக்கின்றது.

“பல சொல்லக்‌ காமுறுவர்‌ மன்ற மாசற்ற

சில சொல்லல்‌ தேற்றாதவர்‌.

நிலைத்து நிற்கும்‌ குற்றமற்ற சில சொற்களைக்‌ கூறுவதற்கு அறியாதவர்களே, பல சொற்களைப்‌ பேசுவதற்கு விரும்புவார்கள்‌. (ஞு.649) பேச்சாளர்கள்‌ எப்பொழுதும்‌ இக்‌ குறளை மனதிலே மறவாமல்‌ வைத்துக்‌ கொள்ளுவார்களானால்‌ அவர்கள்‌ சிறந்த பேச்சாளர்களாக மதிக்கப்படுவார்கள்‌. இந்தப்‌ பேச்சு வன்மை சொற்பொழிவாற்றுவோருக்கும்‌ பொருந்தும்‌. இது உலகம்‌ ஒப்புக்கொள்ளும்‌ கருத்து.

மேலே சொல்லப்பட்டவைகள்‌ எல்லாம்‌ எக்காலத்திலும்‌ மாறாமல்‌ நிற்கும்‌ உண்மைகள்‌. அவைகள்‌ எந்தாட்டினராலும்‌ எவ்வினத்தினராலும்‌, எம்மொழியினராலும்‌ ஒப்புக்‌ கொள்ளத்‌ தக்க உண்மைகள்‌. இவை போன்ற உலகம்‌ போற்றும்‌ உண்மைகள்‌ திருக்குறளிலே நிறைந்திருக்கின்றன. இதனாலேயே வள்ளுவர்‌ இன்று உலகப்‌ புலவர்‌ என்று போற்றப்படுகிறார்‌.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard