Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கற்பு மணவாழ்வு


Guru

Status: Offline
Posts: 7602
Date:
கற்பு மணவாழ்வு
Permalink  
 


கற்பு மணவாழ்வு

காதலனும்‌ காதலியும்‌ சேர்ந்து இல்லறம்‌ நடத்துவதே கற்பு மணவாழ்வு. அவர்கள்‌ இருவரும்‌ கணவனும்‌ மனைவியும்‌ என்பதை ஊரார்‌ உணர்ந்து கொள்ளுவதே கற்புமணம்‌. களவு மணத்திற்குப்‌ பிறகுதான்‌ இந்தக்‌ கற்பு மணவாழ்வு நடைபெறும்‌...

அவர்களுடைய களவொழுக்கம்‌ ஊரார்க்குத்‌ தெரியும்‌ முன்பே அவர்கள்‌ கற்பு மணத்‌ தம்பதிகளாகி விடலாம்‌. அவர்கள்‌ களவு வெளிப்பட்ட பின்பும்‌ கற்புமணத்‌ கற்புமணத்‌ தம்பதிகளா கலாம்‌? பெண்கள்‌ தங்கள்‌ களவு வாழ்க்கை நீடித்திருப்பதை விரும்புவதில்லை; அது அம்பலமாவதற்கு முன்பே கற்பு மணம்‌ நடந்து விட வேண்டும்‌ என்றே விரும்பினர்‌.

களவிலும்‌ பிரிவு உண்டு. கற்பிலும்‌ பிரிவுண்டு. கனவிலே, தன்‌ காதலியை மணந்து கொள்ளுவதற்காகக்‌ காதலன்‌ பொருள்‌ தேடப்‌ போவான்‌. அப்பொழுது காதலி தன்‌ காதலன்‌ இன்னும்‌ வந்து தன்னை மணந்து கொள்ளவில்லையே என்று வருந்தியிருப்பாள்‌. மணம்‌ புரிந்துகொண்ட பின்னும்‌ கணவன்‌ பொருள்‌ தேடப்பிரிந்து செல்வான்‌. அப்பொழுதும்‌ மனைவி, கணவன்‌ வரவை எதிர்பார்த்து வருந்தியிருப்பாள்‌. திருவள்ளுவர்‌ மணந்தபின்‌ காதலன்‌ பிரிந்து செல்லும்‌ பிரிவைப்‌ பற்றியே குறிப்பிடுகின்றார்‌.

கற்பியலிலே அமைந்திருக்கும்‌ பதினெட்டு அதிகாரங்களில்‌ பதினைந்து அதிகாரங்கள்‌ பெரும்பாலும்‌ பிரிவைப்‌ பற்றியே உரைக்கின்றன. ஐந்து அதிகாரங்கள்‌ தாம்‌ அவர்கள்‌ சேர்ந்து வாழும்‌ நிலையைப்‌ பற்றிக்‌ கூறுகின்றன; அவ்வதிகாரங்களும்‌, காதலன்‌ காதலிகளுக்குள்‌ நிகழும்‌ ஊடலைப்‌ பற்றியும்‌, கூடலைப்‌ பற்றியுமே கூறுகின்றன.

அன்பின்‌ சிறப்பு

பிரிவைப்‌ பற்றிக்‌ கூறும்‌ பகுதிகளில்‌ காதலியின்‌ துன்பமே விளக்கப்படுகின்றது. சிறுபான்மையே கணவன்‌ துயரம்‌ கூறப்படுகின்றது. காதலன்‌ பிரிவால்‌ பெரும்பாலும்‌ பெண்கள்‌ தாம்‌ மிகுதியாக வருந்துவார்கள்‌. அண்களுக்கு அவ்வளவு துயரம்‌ இருப்பதில்லை; இந்த இயற்கை உண்மையைக்‌ கற்பியல்‌ அதிகாரங்கள்‌ காட்டுகின்றன.

“செல்லாமை உண்டேல்‌ எனக்குஉரை, மற்றுநின்‌

வல்வரவு வாழ்வார்க்கு உரை.

நீ என்னை விட்டுப்‌ பிரிந்து செல்லாமலிருப்பதானால்‌ அதைப்‌ பற்றி எனக்குச்‌ சொல்‌. இதல்லாமல்‌ பிரிந்து சென்று விரைவில்‌ வருவதைப்‌ பற்றிக்‌ கூறுவதானால்‌ நீ வருமவரையிலும்‌ உயிரோடு வாழ்கின்றவர்களிடம்‌ சொல்‌” (க.1157)

பொருள்‌ தேடப்‌ பிரிந்து போக முடிவு செய்தான்‌ தலைவன்‌. அவன்‌ தன்‌ கருத்தைத்‌ தலைவியிடம்‌ உரைத்தான்‌. அப்பொழுது அவள்‌ வெடுக்கென்று இவ்வாறு பதில்‌ இறுத்‌தாள்‌. இதனால்‌ அவள்‌ தன்‌ கணவன்‌ மேல்‌ கொண்டிருந்த அன்பின்‌ மிகுதியை அறியலாம்‌.

பொருள்‌ தேடப்‌ பிரிதல்‌ என்னும்‌ அகத்துறையைக்‌ கொண்டு நாம்‌ மற்றொரு உண்மையையும்‌ உணரலாம்‌. தந்தையின்‌ செல்வம்‌ மகனுக்குரியது என்னும்‌ கொள்கை வலுப்படாத காலத்தில்தான்‌ பொருள்‌ தேடப்‌ போதல்‌ என்னும்‌ வழக்கம்‌ இருந்தது. ஓவ்வொரு மக்களும்‌ உழைத்துப்‌ பொருள்‌ தேடி உயிர்‌ வாழ வேண்டும்‌ என்ற கொள்கை நிலைத்திருந்த காலம்‌ அது ஆதலால்தான்‌, காதலன்‌ தன்‌ காதலியை மணப்பதற்கு முன்போ, மணந்தோ பின்போ பொருள்‌ தேடச்‌ செல்லும்‌ வழக்கத்தை மேற்கொண்டி ருந்தான்‌. பொருள்‌ தேடுவதற்காக என்று இல்லாமல்‌ நாட்டைப்‌ பாதுகாப்பதற்காகப்‌ போர்க்களத்திற்குச்‌ செல்வதும்‌ பிரிவு என்னும்‌ பகுதியிலே அடங்கும்‌.

காதலன்‌ பிரிந்திருக்கும்போது காதலி அடையும்‌ துன்பத்‌ தைப்‌ பற்றி வள்ளுவர்‌ எடுத்துரைப்பன அப்படியே இயற்கையாக அமைந்திருக்கின்றன. பெண்களின்‌ மனப்பான்மையை நன்றாக உணர்ந்தவரே அவர்கள்‌ மனப்‌ பண்பை அப்படியே சொல்ல முடியும்‌. 

“வீழ்வாரின்‌ இன்சொல்‌ பெறாஅது உலகத்து

வாழ்வாரின்‌ வன்கனார்‌ இல்‌.

தம்மால்‌ விரும்பப்படும்‌ காதலரின்‌ இன்‌ சொல்லை எப்பொழுதும்‌ கேட்டு இணைந்து வாழ்வதே இன்பமாகும்‌; இப்படியில்லாமல்‌ அவர்கள்‌ பிரிந்து வாழ்வார்களானால்‌ அவர்களைப்போல கடுஞ்‌ சித்தம்‌ கொண்டவர்கள்‌ இவ்வுலகில்‌ ஒருவரும்‌ இல்லை. (கு.1195)

காதலியானாலும்‌ சரி, காதலன்‌ ஆயினும்‌ சரி, அவர்கள்‌ தனித்திருந்து வாழ்வார்களானால்‌ அவர்கள்‌ நெஞ்சம்‌ கல்‌ நெஞ்சமாகத்தான்‌ இருக்க வேண்டும்‌. உண்மைக்‌ காதலர்கள்‌ பிரிவைப்‌ பொறுக்க மாட்டார்கள்‌. இவ்வுண்மையைக்‌ கூறிற்று இக்குறள்‌. சில நிகழ்ச்சிகளை எடுத்துக்‌ காட்டிக்‌ காதலன்‌ காதலி களின்‌ அன்பின்‌ சிறப்பை விளக்குகிறார்‌ வள்ளுவர்‌ அந்நிகழ்ச்சி கள்‌ பண்டைத்‌ தமிழ்‌ மக்களின்‌ நம்பிக்கைகளையும்‌, பழக்க வழக்கங்களையும்‌ காட்டுகின்றன. இந்நதம்பிக்கை வள்ளுவர்‌ காலத்திலும்‌ தமிழகத்தில்‌ இருந்தன.

காதலன்‌ பிரிந்து போய்விட்டான்‌ காதலி எப்பொழுதும்‌ அவனைப்‌ பற்றியே எண்ணி ஏங்கிக்‌ கொண்டிருக்கிறாள்‌. அந்நாளில்‌ ஒரு சமயம்‌ அவளுக்குத்‌ தும்மல்‌ எழுந்தது. அனால்‌ அத்‌ தும்மல்‌ வெளிப்படவில்லை. தும்மல்‌ வருவது போன்ற உணர்ச்சி தோன்றி உடனே மறைந்துவிட்டது. அப்பொழுது அவன்‌ கூறியதாக அமைந்திருக்கிறது ஒரு குறள்‌.

“நினைப்பவர்‌ போன்று நினையார்கொல்‌; தும்மல்‌

சினைப்பது போன்று கெடும்‌.

அவர்‌ என்னைப்‌ பற்றி நினைப்பதுபோலக்‌ காட்டிப்‌ பிறகு நினைக்காமல்‌ விட்டு விட்டார்போல்‌ தெரிகின்றது. தும்மல்‌ வருவதுபோல்‌ காணப்பட்டுப்‌ பிறகு மறைந்துவிட்ட து.(கு.120.3)

இக்குறளால்‌ காதலியின்‌ அன்பைக்‌ காணலாம்‌. தும்மலுக்‌குக்‌ காரணம்‌ உண்டென்பது முன்னோர்‌ நம்பிக்கை. நம்மைப்‌ பற்றி யாரேனும்‌ உறளவினர்கள்‌ நினைத்தால்‌ தான்‌ தும்மல்‌ வரும்‌ என்று நம்பினர்‌. நீர்க்கோவையால்‌ எழும்‌ தும்மல்‌ இதற்கு விலக்கு உண்ணும்போதும்‌, சும்மா இருக்கும்‌ போதும்‌ வரும்‌ தும்மலைப்பற்றியே இவ்வாறு எண்ணுகின்றனர்‌.

கனவிலும்‌ காதலர்கள்‌ ஒருவரை ஒருவர்‌ மறப்பதில்லை. கனவிலேயும்‌ ஒருவரை ஒருவர்‌ கண்ணால்‌ காண்பார்கள்‌. நனவிலே நடந்த நிகழ்ச்சிகளை யெல்லாம்‌ கனவிலும்‌ அனுபவிப்‌பார்கள்‌. இத்தகைய மறவாத அன்பினராயிருந்தனர்‌ காதலர்கள்‌. 

“நனவினால்‌ நல்காதவரைக்‌ கனவினால்‌

காண்டலின்‌ உண்டு என்‌ உயிர்‌.

நனவிலே வந்து என்னிடம்‌ அன்பு காட்டாதவரைக்‌ கனவிலே காண்கிறேன்‌ அதனால்தான்‌ என்‌ உயிர்‌ நிலைத்து நிற்கின்றது” (கு.1213)

காதலி, கனவிலும்‌ தன்‌ காதலனை மறக்கவில்லை என்ற உண்மையை உரைத்தது இக்குறள்‌. காதலனுக்கும்‌ இத்தன்மை உண்டு. நினைவுதான்‌ கனவுக்குக்‌ காரணம்‌ என்பதையும்‌ இக்‌குறளால்‌ காணலாம்‌. இவ்விரண்டு குறட்‌்பாக்களும்‌, கணவனைப்‌ பிரிந்திருக்கும்‌ காதலியின்‌ தவிப்பையும்‌ அன்பையும்‌ அறிவித்தன.

ஊடலுக்குக்‌ காரணம்‌

காதலனும்‌ காதலியும்‌ சேர்ந்திருக்கும்பொழுது அவர்‌ களுக்குள்‌ ஊடல்‌ தோன்றுகிறது. முதலில்‌ ஊடுகின்றவன்‌ மனைவி தான்‌. கணவனுடைய நடத்தை காரணமாகத்தான்‌ மனைவியின்‌ பால்‌ ஊடல்‌ உண்டாகின்றது. ஊடல்‌ தோன்று வதற்கு முதல்‌ காரணம்‌. தன்‌ காதலன்‌, தன்னைத்தவிர பிற பெண்களையும்‌ விரும்புகிறான்‌ என்பதுதான்‌.

வள்ளுவர்‌ பல தார மணத்தையோ, பரத்தையரோடு உறவு வைத்துக்‌ கொள்ளுவதையோ விரும்பவில்லை. ஆயினும்‌, அவர்‌ காலத்திலே தமிழகத்திலே பலதார மணமும்‌ இருந்தது. பரத்தையரை நாடித்‌ திரியும்‌ வழக்கமும்‌ அண்களிடம்‌ இருந்தது. இதைக்‌ காமத்துப்பாலிலே காணலாம்‌. இவற்றை அவர்‌ விரும்பா விட்டாலும்‌ வழக்கத்தை மறைக்காமல்‌ கூறவேண்டியதாயிற்று.

“பெண்‌இயலார்‌ எல்லாரும்‌ கண்ணின்‌ பொதுஉண்பர்‌;

நண்ணேன்‌ பரத்த நின்மார்பு.

பரத்தமையுள்ளவனே பெண்‌ தண்மையுள்ளவர்கள்‌ எல்லோரும்‌ தம்‌ கண்களால்‌ பொதுப்‌ பொருளாகக்‌ கொண்டு நுகர்கின்றனர்‌; அதலால்‌ உன்‌ மார்பைக்‌ பொருந்தமாட்டேன்‌.” (ஞூ. 131)

தன்‌ கணவன்‌ பரத்தையர்‌ நேசமுள்ளவன்‌ என்று எண்ணிய காதலி சினத்துடன்‌ கூறியது இது. இதனால்‌ பரத்தையரை நேசிக்கும்‌ தன்மை வள்ளுவர்‌ காலத்திலும்‌ தமிழகத்தில்‌ இருந்தது என்பதைச்‌ காணலாம்‌.

காதலி ஊடியிருக்கிறாள்‌; அவள்‌ வாய்திறந்து ஒன்றும்‌ பேசவில்லை. அவளைப்‌ பேசவைப்பதற்குக்‌ கணவன்‌ ஒரு தந்திரம்‌ செய்தான்‌. அன்புள்ளவர்‌ தும்மினால்‌, அண்டையிலிருப்பவர்‌ நீடு வாழ்க என்று வாழ்த்த வேண்டும்‌; அதன்‌ மூலம்‌ ஊடல்‌ நீங்கவேண்டும்‌ என்று எண்ணினான்‌. உடனே ஒரு பொய்த்‌ தும்மல்‌ போட்டான்‌. காதலியும்‌ “நீடு வாழ்க” என்று வாழ்த்தினாள்‌. ஊடலும்‌ ஓழிந்தது. இருவரும்‌ கூடி. மகிழ்ந்தனர்‌.

“ஊடி இருந்தேமாத்‌ தும்மினார்‌, யாம்‌ தம்மை

நீடுவாழ்‌ கென்பாக்கு அறிந்து.

யாம்‌ அவரோடு பிணங்கியிருந்தோம்‌. அப்பொழுது பொரய்யாகத்‌ தும்மினார்‌. நாம்‌ அவரை நீடு வாழ்க என்று வாழ்த்துவோம்‌ என்று எண்ணி இப்படித்‌ தும்மினார்‌' (ஞூ.1312) இந்த நிகழ்ச்சியைக்‌ காதலியே சொல்வதாக அமைந்திருக்‌கின்றது இக்குறள்‌.

பெண்‌ மனம்‌

பொருள்‌ தேடப்‌ போயிருந்த காதலன்‌ திரும்பி வந்தான்‌. காதலி அவனைக்‌ கண்டு அகமகிழ்ந்தாள்‌. நகை முகத்துடன்‌ வரவேற்றாள்‌. அவனும்‌ உளம்‌ களித்தான்‌. தன்‌ அன்பை வெளிப்‌படுத்த “நான்‌ சென்ற இடத்தில்‌ உன்னைத்தான்‌ நினைத்தேன்‌” என்றான்‌. உடனே அவளுக்கு ஆத்திரம்‌ வந்து விட்டது. “ஏன்‌ என்னை மறந்தீர்‌? மறந்தால்‌ தானே மீண்டும்‌ நினைக்க வேண்டும்‌?”

என்று ஊடினாள்‌. அவனைத்‌ தழுவிக்கொள்ள வந்தவள்‌ தழுவிக்கொள்ளாமல்‌ அப்படியே நின்று விட்டாள்‌. இதைக்‌ கண்ட காதலன்‌ திகைத்துப்‌ போனான்‌.

“உள்ளினேன்‌ என்றேன்‌ மற்றுஎன்மறந்தீர்‌ என்று என்னைப்‌

புல்லாள்‌ புலத்தக்க வள்‌

“பரிரிந்த காலத்தில்‌ உன்னை நினைத்தேன்‌” என்றேன்‌. மறந்தால்‌ அன்றோ நினைக்க வேண்டும்‌? மறப்பதற்குக்‌ காரணம்‌ என்ன?” என்று சொல்லி என்னைத்‌ தழுவிக்‌ கொள்ளாமல்‌ ஊடினாள்‌.” ( ஞு.1311))

ஒரு சமயத்தில்‌ காதலனுக்குத்‌ தும்மல்‌ வந்நது. அப்பொழுது காதலியும்‌ அவனுடன்‌ இருக்கிறாள்‌. அவன்‌ தன்‌ தும்மலை அடக்கிக்‌ கொண்டான்‌. அதைக்‌ கண்டதும்‌ காதலி வாய்விட்டு அமுதுவிட்டாள்‌. “நான்‌ என்ன குற்றம்‌ செய்தேன்‌” ஏன்‌ அழுகின்றாய்‌?” என்றான்‌ அவன்‌. உன்மீது அன்புள்ள வேறு யாரோ உம்மை நினைக்கிறார்‌. அதனால்‌ தான்‌ தும்மல்‌ எழுந்தது. அதை யாம்‌ அறியாமல்‌ மறைக்க வேண்டும்‌ என்பதற்காகவே வந்த தும்மலை அடக்கி விட்டீர்‌” என்றாள்‌ அவள்‌. இச்செய்தி யைக்‌ காதலனே சொல்லுவதாக அமைந்திருக்கிறது ஒரு குறள்‌.

“தும்முச்‌ செறுப்ப அழுதாள்‌; நுமர்உளல்‌

எம்மை மறைத்‌ திரோ?

என்று அவள்‌ ஊடலுக்கு அஞ்சி நான்‌ தும்மலை அடக்கினேன்‌; உம்மைச்‌ சேர்ந்தவர்‌ உம்மை நினைப்பதை நான்‌ அறியாமல்‌ மறைக்கின்றீரோ” என்று கேட்டு அழுதாள்‌. (க.1318)

ஒரு சமயம்‌ காதலன்‌, தன்‌ காதலியுடன்‌ அன்புடன்‌ உரையாடிக்‌ கொண்டிருந்தான்‌. அப்பொழுது அவன்‌, காதல்‌ மிகுதியால்‌ சில சொற்களைக்‌ கூறினான்‌. இப்பிறப்பிலே நாம்‌ பிரியமாட்டோம்‌. இருவரும்‌ ஒருயிரும்‌ ஈருடம்புமாக இணைந்து வாழ்வோம்‌. நம்மை யாரும்‌ பிரித்துவிட முடியாது” என்று அன்பு தோன்றக்‌ கூறினான்‌. உடனே காதலியின்‌ கண்களிலே நீர்‌ நிரம்பிவிட்டது. அவள்‌ கண்கள்‌ கலங்கியதைக்‌ கண்டவுடன்‌ அவன்‌ உண்மையினை உணர்ந்து கொண்டான்‌ “மறு பிறப்பிலே பிரிந்து விடுவோமோ” என்று நினைத்தே அவள்‌ கலங்கினாள்‌; என்பதே அவன்‌ அறிந்த உண்மை. தன்‌ சொல்லில்‌ உள்ள குற்றத்தை உணர்ந்து அவன்‌ வருந்தினான்‌. இந்த நிகழ்ச்சியை அவனே சொல்லுவதாக அமைந்திருக்கின்றது ஒரு குறள்‌.

“இம்மைப்‌ பிறப்பில்பிரியலம்‌, என்றேனாக்‌,

கண்நிறை நீர்‌ கொண்‌ டளள்‌.

“இப்பிறப்பில்‌ நாம்‌ பிரியமாட்டோம்‌” என்றேன்‌ உடனே மறு பிறப்பில்‌ பிரிவோமோ என்று எண்ணித்‌ தன்‌ கண்கள்‌ நிறைய நீரைக்‌ கொண்டான்‌.” (ஞக.1315)

இக்குறள்‌ மனைவி தன்‌ காதலன்‌ மேல்‌ கொண்டிருந்த பேரன்பை விளக்குகின்றது.

கற்பியலில்‌ உள்ள 150 வெண்பாக்களும்‌ இவ்வாறே காதலன்‌ காதலிகளிடையே அன்பின்‌ மிகுதியையே விளக்குகின்றன. காதலன்‌ காதலிகளுக்கிடையே பிரிக்க முடியாத அன்பு நிலவினால்‌ தான்‌ இல்லறம்‌ இனிது நடைபெறும்‌; அணும்‌ பெண்ணும்‌ மகிழ்ந்து வாழ்வதற்கு அன்பும்‌, காதலுமே அடிப்படை; இந்த உண்மையையே காமத்துப்பாலில்‌ விரித்து விளக்கினார்‌ வள்ளுவர்‌.

திருக்குறளின்‌ காமத்துப்பால்‌ ஒரு நாடகம்போல்‌ அமைந்‌திருக்கின்றது. இதை ஒரு நாடகமாக நடத்திக்‌ காட்ட முடியும்‌.

கணவன்‌ மனைவிகளாக வாழ முடிவு செய்து கொண்ட வர்கள்‌ என்றும்‌ பிரியாது வாழவேண்டும்‌; என்றும்‌ அன்புடன்‌ வாழவேண்டும்‌; அன்பே இன்பம்‌ அடைவதற்கு வழி. காதலி ஊடடனாலும்‌, பிணங்கினாலும்‌, அவளைச்‌ சமாதானப்படுத்துவது காதலன்‌ கடமை; தொட்டதற்கெல்லாம்‌ முணுக்கென்று கோபம்‌ வருவது பெண்கள்‌ இயல்பு; அதலால்‌ கணவன்தான்‌ பொறுத்துப்‌ போக வேண்டும்‌ இந்த உண்மைகளை யெல்லாம்‌ காமத்துப்பாலிலே காணலாம்‌. இவ்வுண்மைகளை உணர்த்த வேண்டும்‌ என்னும்‌ கருத்துடன்தான்‌ வள்ளுவர்‌ காமத்துப்பாலை 250 குறட்பாக்களில்‌ விளக்கமாகச்‌ சொல்லியிருக்கின்றார்‌. 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard