Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயகத் தத்துவம்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயகத் தத்துவம்
Permalink  
 


மதுரை மாநகரில் அமைந்த (கடவுட் பள்ளியைத்) தெய்வத் இருக்கோயில்களைக் குறிப்பிடும் நிலையில் அத்திருக்கோயில்' களில் எழுந்தருளியுள்ள தெய்வங்கட் கெல்லாந் தலைமையுடைய தெய்வமாகவும் நிலம் $ நீர் வளி விசும்பு என்னும் ஐம்பெரும் பூதங்களாலியன்ற உலகினை முதன்முதற் படைத்தருளிய முழு முதற்கடவுளாகவும் மழுவாகிய வாட்படையினையுடைய சவபெருமானைச் இறப்பித்துப் போற்றியுள்ளார்.

“தீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போ டைந்துட ஸனியற்றிய _
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக
மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சுடர்
வாடாப்பூவின் இமையாநாட்டத்து
நாற்ற வுணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபின் உயர்பல் கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்க” (மதுரைக். 453-460)
எனவரும் மதுரைக் காஞ்சித்தொடர், மதுரை மாநகரில் உள்ள திருக்கோயில்களின் மாலைவழிபாட்டினைக் - குறிப்பதாகும். “தஇக்குக்களையுடைய ஆகாயத்துடனே காற்றும் நெருப்பும் நீரும் நிலமும் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும் சேரப்படைத்த மழுவாகிய வாட்படையினை யுடைய பெரியோன் (மகாதேவன்) ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு தீர்த்தமாடிய வடிவினை யுடையராய்த் தெய்வத்தன்மையாற் சூழ்ந்த ஒளியுடைய வாடாத பூக்களையும் இதழ்குவியாத கண்ணினையும் அவியாகிய உணவினையும் உடைய அச்சம் பொருந்திய மாயோன் முருகன் முதலாகிய தெய்வங்கட்கு விலக்குதற்கு அரிய முறைமை யினையுடைய அந்திக் காலத்துக்கு முன்னாக எடுத்த விழாவிலே தூ ரியம் (பலவகை வாத்தியம்) ஒலிக்க” என்பது மேற்காட்டிய தொடரின் பொருள்.

மதுரை மாநகரிலே மழுப்படையினையேந்திய சிவபெருமானைத் தலைமைக் கடவுளாகக் கொண்டு மாயோன் சேயோன் முதலிய தெய்வங்கள் எழுந்தருளிய
328 சைவ சித்தாந்த சத்திர வரலாறு

இருக்கோயிலிலே பலவகை வாத்தியங்களும் முழங்கத் தொடங்கப் பெற்ற தஇருவிழாவிலே மாலைக் காலத்தில் மனைவாழ் மங்கல மகளிர் தாம் பெற்ற மழலைச் செல்வங்களாகிய குழந்தைகளோடும் தம் கணவரையும் உடனமழைத்துக் கொண்டு வயகின் முதிர்ந்தோராகிய பேரிளம் பெண்டிர் கடவுட் பூசைக்கு இன்றியமையாத பூவும் நறும்புகையும் ஏஎந்தக்கொண்டு இறைவனைத் தொழுது போற்றிப் பாதுகாத்து உடன்வரத் திருக்கோயிலில் இறைவனை வழிபடச் சென்ற. அன்பின் இறத்இனை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

“திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை
ஓம்பினர்க் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போது பிடித்தாங்குத்
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச
சிறந்து புறங் காக்குங் கடவுட் பள்ளியம்'' (மதுரைக். 461-468) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடராகும்.

“மகவீன்ற மகளிர் இண்ணிய ஒளியினையுடைய பதக்கம் அணிந்த ஒண்மைவாய்ந்த இளங்குழந்தைகளைத் தாது சேர்ந்த செவ்வித்தாமரைப் பூவைப் பிடித்தாற்போலத் கழுவியெடுத்துக் கொண்டு தாமும் கணவரும் தம்குழந்தை களும் சோச் லமுடையராகச்.சறந்து விளங்கப் பெரு விருப்பமும். அழகுமுடையராய்த் திகழும் செம்முது அபெண்டிராகய பேரிளம் பெண்கள் கடவுட். பூசைக்கு வேண்டும் பூவினையுடையராய் நறும்புகையினையுடையராய் (ு அறைவனை மிகுத்துத் துதித்துப் பாதுகாத்து நடத்தும் அகய்வத் ிருக்கோயில்களும்” என்பது மேற்குறித்த தொடரில் பொருளாகும்.

தொடரிற் சுடப்பட்ட “கடவுட் பள்ளி் என்பதற்கு நச்சினார்க்கினியருரையிற் “பெளத்தப்பள்ளி” அப் பொருள் வரையப்பெற்றுளது. “நீரும் நிலனும் ஐயும் வளியும், மாகவிசும்போடு ஐந்து உட ன் இயற்றிய மழுவாள்
நெடியோன் தலைவனாக........ 42-22 உருகெழு பெரியோர்க்கு உயர்பலி தருமார் அந்திவிழாவில் தூரியம் கறங்க” என்ற தொடரில் உள்ள “கறங்க' என்னும் செயவென் வாய்பாட்.டு வினையெச்சம், “இறந்து புறங்காக்கும்” எனப் பின்வரும் தொடரில் அமைந்த *“புறங்காக்கும்' என்னும் பெயரெச்சத்தின் பகுதியாய்ப் “புறங்காத்தல்” என்னும் பிற வினைமுதல் வினைகொண்டு முடியக் “காக்கும்” என்னும் அப்பெயரெச்சம் “கடவுட் பள்ளி” என்னும் பெயர்கொண்டு முடிந்தது, ஆகவே கடவுட் பள்ளி என்ற இத்தொடரிலுள்ள “கடவுள்” என்றது முதற்குறித்த மழுவாள் நெடியோன் ஆகிய திவபெருமானைத் தலைவனாகக் கொண்ட தெய்வங் - களையே குறித்தல் கெளிவு. இதற்குமாறாகப் புத்தரைக் குறித்ததென்று கொள்ளுதற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும் இக்கடவுட். பள்ளியையடுத்துச் சிறந்த வேதம் விளங்கப்பாடும் அந்தணர்பள்ளி கூறப்பட்டிருத்தலும் இங்குச் சிந்இத்தற்குரியதாகும். மாங்குடி மருதனார் காலத்தில் மதுரை மாநகரில் பெளத்தப்பள்ளி தனியே எடுத்துக் கூறும் முறையிற் சிறப்பிடம் பெற்றிருக்குமானால் அமணர்பள்ளியினை விதந்தெடுத்துக் கூறினாற்போன்று பெளத்தப் பள்ளியையும் தனியே விதந்து கூறியிருப்பர்.
அவ்வாறன்றி,
“வண்டுடடப் பழுநிய தேனார் தோற்றத்துப்
ப பூவும் புகையுஞ் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்றிவட் டோன்றிய வொழுக்கமொடு நன்குணர்ந்து
வானமும் நிலனும் தாமுழுதுணருஞ்
சான்ற கொள்கை சாயாயாக்கை
ஆன்றடங்கறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந்தன இட்டுவாய்க் கரண்டைப்
பல்பொறிச் சிமிலி நாற்றி நல்குவரக்
கயங்கண்டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பியன்றன்ன செஞ்சுவர் புனைந்து
நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந்த தோங்க
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும் ' (மதுரைக். 475-488)
என அமண்சமயச் சான்றோர்களையும் அவர்களது விரதக் கோலத்திளையும் விரித்துக்கூறிய ஆசிரியர் “இறும்பூது சான்ற நறும்பூஞ்சேக்கை” என்பதனால் பெளத்தப் பள்ளியையும் குறிப்பாகச் சுட்டியுள்ளார் என்றே கருத வேண்டியுளது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
RE: சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயகத் தத்துவம்
Permalink  
 


இனி, மதுரைக் காஞ்சியில் கடவுட் பள்ளி என்பதற்கு நச்சினார்க்கினியர் “பெளத்தப் பள்ளி என உரை வரைகதற்குரிய காரணம் யாது என்பதும் இங்குச் சந்தித்தற் குரியதாகும். தொல்காப்பியம், சங்கவிலக்கியம் ,இிருக்குறள் முதலிய பழந்தமிழ்த் தொன்னூல்களில் “பள்ளி” என்ற சொல் “இடம்” என்ற பொதுப்பொருளிலும் துயிலுமிடம், படுக்கை, சிற்றூர், அறவோர் இருப்பிடம், கல்விபயிலும் இடம் என்ற சிறப்புப் பொருள்களிலும் பயின்று வழங்கக் காண்கின்றோம்.
“அறவோர் பள்ளி' (லப். இந்திர. 179) எனவரும்
சிலப்பதிகாரத் தொடர்க்கு “அருகர்பள்ளி, புத்தர்பள்ளி” என அடியார்க்கு. நல்லார் உரைவரைந்துள்ளார். “அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளி: (சலப். ஊர்காண். 11) எனவரும் சிலப்பதிகாரத்தொடர் அருகர்பள்ளி, புத்தர்பள்ளி என்னும் புறச் சமயத்தார்க்குரிய பள்ளிகள் இரண்டினையும் பொதுப்படச் சுட்டி நிற்றல் காணலாம். புத்தநோன்பிகள் வாழும் இடத்தினை “மாதவர்பள்ளி” (மணி. 18:8) எனக் குறிப்பிடுவர் சாத்தனார். “பள்ளி” என்னும் இச்சொல் நாயன்மார் ஆழ்வார் காலங்களில் புத்தர் சமணர் என்னும் புறச்சமயத்தார் தங்குமிடம் என்ற சிறப்புப் பொருளிலும் வழங்கப்பெறுவதாயிற்று.

“பொங்கு போதியும் பிண்டியும் உடைப்புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை” (இவ்ய. பெரிய. 2.5) எனப் பெரிய திருமொழியிலும், “பள்ளிகள் மேலும் மாடு பயில மண் பாழிமேலும்” (பெரிய. சம்பந்தர். 682) எனப் பெரிய புராணத்திலும் இவ்வழக்கு இடம்பெற்றுள்ளமை காணலாம். முதலாம் இராசராச சோழன் ஆடீ சியில் நாகப் பட் டினத்தில் கட்.ட.ப்பட்_ட. புத்த விகாரம் “இராசராசப்பெரும்பள்ளி் எனப் பெயரிடப்பட்டுள்ளமை இச்சொல் வழக்கினை மேலும் வலியுறுத்துவதாகும். இவ்வாறு தம்காலத்தில்

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயக் தத்துவ. . 051

பள்ளியென்னும் சொல் புத்தநோன்பியர் தங்கி வழிபடும் பெளத்தப் பள்ளிக்குச் சிறப்பு முறையில் வழங்குவதனையறிந்த நச்சினார்க்கினியர், மதுரைக்காஞ்சியில் சிவன் மாயோன் முதலிய தெய்வங்களுக்கு உரியதாகவமைந்த தொடருடன் இணைந்த “கடவுட்பள்ளி' என்பதனைத் தனியே பிரித்துப் “பெளத்தப்பள்ளி” எனப் பொருள் வரைந்தார் எனக் கருத வேண்டியுளது.

எனினும், “பள்ளி” என்னும் சொல், தமிழ்த் தொன்னூல்களில் “இடம்” என்ற பொதுப்பொருளிலன்றிப் புறச்சமயத்தார்க்குரிய இடம்” என்ற சிறப்புப் பொருளில் வழங்கப்படாமையானும், பின்னர் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை என்ற காப்பியங்களிலும் “அறவோர் வாழும் இடம்” என்ற பொதுமையின் நீங்காது புத்தர் சமணர் தங்குமிடங்களுக்குச் சிறப்பாக வழங்கப் பெற்றிருத்தலையும் நாயன்மார் ஆழ்வார் காலங்களில் பள்ளி என்னும் இச்சொல் சக்கரப்பள்ளி, மயேந்திரப்பள்ளி, அகத்தியான்பள்ளி எனச் சைவத் இருக்கோயில்களையும், பார்த்தன்பள்ளி என வைணவத் இருக்கோயிலையும் குறித்து வழங்கப் பெற்றிருத்தலையும் கூர்ந்து நோக்குங்கால், - மதுரைக்காஞ்சியில் கடவுட்பள்ளி, அந்தணர்பள்ளி எனவரும் தொடர்களிலுள்ள பள்ளி என்னும் சொல் “இடம்” என்ற பொதுப் பொருளிலேயே வழங்கப்பெற்றதென்பதும், எனவே “கடவுட்பள்ளி' என்ற தொடர்க்குத் “தெய்வம் உறையும் கோயில்” எனப் பொருள் கொள்வதன்றிப் 'பெளத்தப்பள்ளி' எனப் பொருளுரைத்தல் சிறிதும் பொருந்தாதென்பதும் நன்கு புலனாகும்.

மதுரைக் காஞ்சியிற் கடவுள்பள்ளியையொட்்.டி அந்தணர் பள்ளி குறிக்கப்பெற்றுள து. சங்ககாலத்தில் தெய்வங்கொள்கையாகிய சிவவழிபாட்டு நெறியினளைச் சார்பாகக்கொண்டு வேதநெறியாகிய வைதிகம் தமிழகத்தில் வேரூன்றி நிலைபெற்ற திறத்தினைப் புலப்படுத்தும் முறையிற் கடவுட் பள்ளியையடுத்து அந்தணர் பள்ளியமைந்துள்ள இடத்தொடர்பு குறிப்பிற் புலப்படுத்தல் காணலாம். வேதம் என்பது தோற்றமில் காலமாக நிலைபெற்றுள்ள தொன்மை
2322 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

வாய்ந்த நூலென்றும் அஃது ஒருவராலும் இயற்றப்படாதது (அபெளருஷேயம்) என்றும் கூறுவர் வேதவாகதுிகள். இக்கொள்கை,

“கற்பங்கை, சந்தங்கால், எண்கண்,
தெற்றெ ஸனிருத்தஞ்செவி, சிக்கை மூக்கு,
உற்றவியாசாணம் முகம் பெற்றுச்
சார்பிற் றோன்று ஆரண வேதக்கு
ஆதியந்தம் இல்லை அது நெறியெனும்
வேதியன் உரையின் விதியுங்கேட்டு'”” (மணி. சமயக். 100-105)

என மணிமேகலையாசிரியர் சாத்தனார் கொண்டெடுத்து மொழியும் வேதவாதியில் உரையில் இடம் பெற்றிருத்தல் அறியத் தகுவதாகும். இத்தொடரில் “சார்பில்தோன்றா” என்றது, நூலாிரியர் ஒருவர் வாயிலாகத் தோன்றாத தானே தோன்றிய என்னும் பொருளில் வழங்கப் பெற்றது. எனவே ஒருவராலும் செய்யப்படாத நூல் வேதம் என்பது வேதவாஇயர் கொள்கையாதல் நன்கு தெதளிப்படும்.
“செய்யாமொழிக்கும் இருவள்ளுவர் மொழிக்கும்” (42)
எனவரும் தஇருவள்ளுவமாலைப் பாடலும் இதனை வலியுறுத்துவதாகும். . வடநாட்டில் தோன்றிய சமண பெளத்த சமய வாதிகளால் வேத வேள்விகள் எதிர்க்கப் பட்டுச் இதைவுறும் இழிநிலையேற்பட்டபோது, தென் னாட்டில் வாழ்ந்த வேதநெறியாளராகிய அந்தணர்கள் கடவுட். கொள்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டு, “முழுமுதற் கடவுளாகிய முதல்வனால்அருளிச் செய்யப் பெற்றனவே ஆறங்கங்களால் உணர்தற்கரிய அருமறையாகிய வேதங்கள்” எனவும் உலகியல் ஒழுக்கமாகிய வேதத்தை அருளிச் செய்த இறைவனை வேதமுதல்வன் எனவும் தெளிவுபட எடுத்துக் கூறிப் புத்தம் சமணம் முதலிய புறச்சமய வாதிகளை உறழ்ந்து வாதில்வென்று, இந்நாட்டின் கொன்லயவலாய்ந்த தெய்வங்கொள்கையைச் சார்பாகக் கொண்டு மன்னர்களும் முத்து ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வேதவேள்விகளைச் இறப்புடன் செய்து வைதிக நெறியினை நன்கு வளர்த்து வந்தனர். இச்செய்தி,
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் ததீதுவ. . ௦ 2௦௮

“நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்யன்ன பொய்யுணர்ந்து
பொய்யோராது மெய்கொளீ இ
மூவேழ்துறையும் முட்டின்றுபோகிய
உரைசால் சிறப்பின் உரவோர்மருக” (புறம். 166)
எனச் சோணாட்டுப் பூஞ்சாற்றூப் பார்ப்பான் கெளணியன் விஷ்ணந்தாயனை ஆவூர்மூலங்கிழார் பாடிய புறப்பாடழ் பகுதியால் இனிது விளங்கும்.

“பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினை யுடைய பழையோனாகிய இறைவனது (சிவபெருமானது)
வாக்கை விட்டு நீங்காது அறம் ஒன்றையே மேவிய நான்கு பகுதகளையுடையதாய் ஆறு அங்கங்களாலும் உணர்தற்குரிய ஒரு பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைச் செய்தாராகிய புத்தர் முதலிய புறச் சமயத்தோரது மிகுதி யாகிய செருக்கனை அடக்குதல் வேண்டி அவரது மெய் போன்ற பொய்யினை உளப்பட்டுணர்ந்து அப்பொய்யை மெய்யென்று எண்ணாது உண்மைப்பொருளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்து, இருபத்தொரு வேள்வி களையும் குறைவின்றிச் செய்து முடித்த புகழமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபில் உள்ளோனே” எனக் கெளணியன் விண்ணந்தாயனையும் அம்மறையோன் புத்தன் முதலிய புறச்சமயத்தாரை வாதில் வென்று அவர்களைத் தன்வழிப்படுத்தி வேதவேள்விகளைத் இறம்பெற நிகழ்த்திய அவனது €ர்த்தியையும் சிறப்பித்துப் பாராட்டும் முறையிற் பார்ப்பனவாகை என்னுந் துறையிற் பாடற்பெற்றது மேற்குறித்த புறநானூற்றுப் பாடலாகும்.

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழக அந்தணர்கள் திவநெறியுடன் தொடர்புடைய வை௫க நெறியினராய் ஒழுகினர் என்பது இப்புறப்பாடலால் இனிது விளங்கும்.
22.4 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

இங்ஙனம் சிவநெறியும் வேதநெறியும் தம்முட் பிரிவின்றி ஒருநெறியாய் விரவி வளரும் நிலையிற் சங்க காலத்தில் வாழ்ந்த பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் விண்ணந்தாயன் தோன்றிய மரபாகிய கெளணிய கோத்திரத்தில் இற்றைக்கு ஆயிரத்து முந்நூறாண்டுகட் குமுன் காழிப்பதியில் சிவபாத விருதயர்க்கும் பகவஇியார்க்கும் மகவாகத் தோன்றியவரே சைவ சமய குரவர் நால்வருள் முதலாமவராகப் போற்றப்பெறும் தமிழ் ஞான சம்பந்தர் என்பது இங்கு நினைவுகூரத் தகுவதாகும்.

முற்காலத்தில் பேரூர்கள் தோறும் இறைவனை வழிபடுதற்கும் மக்கள் பலரும் கூட்டமாகத் தங்கியிருத்தற்கும் ஏற்றவண்ணம் பொதியில் எனப்படும் அம்பலங்கள் ஊரின் நடுவே அமைக்கப் பெற்றிருந்தன. அவ்வம்பலத்தின் கண்ணே மக்கள் பலரும் அன்பினால் ஒருங்குகூடி _இன்னவுரு இன்னநிறம் என்று அறியவொண்ணாத இறைவனை மலர்தூவி வழிபடுதற்குரிய முறையில் “கந்து” எனப் பெயரிய தெய்வம் உறையும் தூாணொன்று நடுவே நாட்டப்பட்டிருந்த து. 'அவ்வம்பலத்தின் அருகே தெய்வத்தை வழிபடுதற்கு வருவோர் நீராடித் தூய்மையுடையராகச் செல்லுதற்கு ஏற்றவாறு தீர்த்தக்குளம் அமைக்கப்பெற்றிருந்தது. போர்க்காலத்திற் பகைவரது நாட்டினின்றும் சிறைபிடித்துக் கொணரப்பட்்ட மகளிர் பலரும் அங்குள்ள திருக்குளத்தில் நீராடிப் பொதியிலாகிய அம்பலத்தில் இருவலகிடுதல் மெழுகுதல் முதலிய திருப்பணிகளைச் செய்து மாலைக் காலத்திலே திருவிளக்கு ஏற்றி வழிபட்_டனர். ஊர்மக்கள் அங்குக்கூடித் தெய்வம் உறையும் தூணாகிய கந்தினை மலர் தூவி வழிபாடு செய்தனர். ஊர்க்குப் புதியராய் வந்தோர் பலரும் அங்குத் தங்கியிருந்தனர். இச்செய்து,
“கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்” (பட்டினப். 246-249)
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ, . . 22

எனவரும் பட்டினப்பாலையடிகளிற் குறிக்கப்பெற்றுள்ளமை கூர்ந்து நோக்கற்பாலதாகும். “பகைவர் மனைவியராய்ப் போரிற் சிறைப்பிடித்து வந்த மகளிர் பலரும் நீருண்ணுந் துறையினையுடைய குளத்திலே மூழ்கி அலூட்டு மெழுகிய மெழுக்கத்தினையும் அந்திக் காலத்திலே கொளுத்தின அவியாத விளக்கினையும் உடையதாய் மக்கள் பலரும் சென்று மலர்தூவித் தொழுவதற்குரிய தெய்வம் உறையும் தூணினைக் தன்னகத்தேயடையதாய்ப் புதியவர்கள் தங்குதற்கு இடமாகிய அம்பலம்” என்பது மேற்காட்டிய பட்டினப்பாலைத் தொடரின் பொருளாகும்.

கொண்டி மகளிராவார் பகைவர் மனைவியராய்ப் போரிற் சிறைப்பிடித்துக் கொணரப்பட்் ட பெண்கள், பிறர்க்குரியராய அம்மகளிரை அவர்தம் கற்பியல் வாழ்வுக்கு இடர் நேராதவாறு மதித்து அவர்கள் தாம் விரும்பிய தெய்வவழிபாட்்டில் உரிமையுடன் ஈடுபட்டு அமைதியாக வாழும்படி செய்த தமிழ் முன்னோரது அரசியலுணர்வும் நாகரிகப் பண்பாடும் யாவராலும் புகழ்ந்து போற்றத் தக்கனவாகும். “பொதியிலை மெழுகி விளக்கும் இட்டி ருக்க வம்பமகளிரை வைத்தார். அதனால் தமக்குப் புகழுளதா . மென்று கருதி” என நச்சினார்க்கினியர் தரும் உரைவிளக்கம் இக்கருத்தினை நன்கு வலியுறுத்துவதாகும்.

கந்து - தெய்வம் உறையும் தறி, தூண் இன்னஉரு இன்னநிறம் என ஒருவருலும் உணர்தற்கு அரிய கடவுளை நிலையுடைய கந்தின் (தூணின்) உருவில் நாட்டடி வழிபடுதல் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்றுவரும் வழிபாட்டு முறையாகும். இத்தகைய தூணின் வடிவில் அமைந்ததே சிவநெறிச் செல்வர்களால் நெடுங்காலமாக வழிபடப்பெற்று வரும் சிவலிங்கத் இருமேனியாகும். இந்நுட்_பம் காஞ்சியிற் கோயில் கொண்டருளிய இறைவனுக்குக் “கம்பன்” என வழங்கும் காரணப் பெயராலும். “கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே”
“மழபாடி வயிரத்தூ ணே என்றென்றே
நான் அரற்றி நைகின்றேனே” எனவரும் அப்பர் அருள்மொழிகளாலும் சிவபெருமானுக் குரிய ஸ்தாணு என்னும் வடமொழிப் பெயர் வழக்காலும் நன்கு புல ராதல் காணலாம்



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

பத்துப்பாட்டு, எட்டுத்தொகையாகிய சங்கச் செய்யுட் களில் சவபெருமானைக் குறித்தனவாகப் பின்வரும் தொடர்கள் இடம் பெற்றுள்ளன : -

அந்திப் பசுங்கட். கடவுள், அருந்தவமுதல்வன், ஆதிரையான், ஆதிரைமுதல்வன், ஆல்கெழுகடவுள், ஆலமர்கடவுள், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியோன், இமைய வில்வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்,
இறை, ஈசன்,. எரியுமிழ்கணிச்சியோன், ஏற்றூர்தியான், ஐந்தலையுயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை யொருவன், கடவுள், காரியுண்டிக் கடவுள், காலக்கடவுள், கொலைவன், கொன்றையலங்கலந்தெரியலான், சலதாரி, £றருமுன்பினோன், செல்விடைப்பாகள், தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோன், நீர் சடைக்கரந்தோன், நீலமணிமிடற்றொருவன், நீலமேனி வாலிழைபாகத் தொருவன், புங்கவம் ஊர்வோன், புதுத்திங்கட். கண்ணியான், பெரும்பெயர்க் கணிச்சியோன், பைங்கட் பார்ப்பான், மணிமிடற்றண்ணல், மணிமிட_.ற்றந்தணன், மணிமிடற்றெண்கையான், மணிமிடற்றோன், மழுவாள் நெடி.யோன், மறுமிடற்றண்ணல், _ முக்கட் செல்வன், முக்கணான், மூவெயில் முருக்கிய முரண்மிகுசெல்வன் . எனவரும் இத்தொடர்கள், சவபெருமானது திருமேனி வடிவினையும் வண்ணத்தினையும், அம்முதல்வனுக்குரிய ஊர்தி, கொடி, படை முதலியவற்றையும் மன்னுயிர்களைக் காத்தல் வேண்டி அவ்இறைவன் செய்தருளிய அருட். செயல்களையும் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ. . . ச

பத்துப்பாட் டுள் முதற்கண்ணதாகிய திருமுருகாற்றுப்படையள்,
““வெள்ளேறு
வலவயின் உ.பரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையாமுக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்” (151-154)
எனச் சிவபெருமானை நக்கீரர் போற்றிப் பரவியுள்ளார்.
“வெள்ளைநிறம் வாய்ந்த எருதினை எழுதிய கொடியினை வெற்றியுடன் உயர்த்தப் பலரும் புகழும்
திணிந்த தோள்களையும் ஒருபாகத்தே உமையமர்ந்து விளங்கும் தருவுருவினையும் இதழ் குவியாத மூன்று கண்களையும் உடைய முப்புரங்களை யெரித்த வலிமை மிக்க செல்வனாகிய இறைவன்” என்பது இத்தொடரின் பொருளாகும். இடபக்கொடி சிவபெருமானுக்குரிய கொடியென்பதும் அம்முதல்வன் மூன்று கண்களையுடையவனாய் உமாதேவியாரை ஒருபாகத்திற்கொண்டவன் என்பதும் முப்புரங்களை அழித்தவன் என்பதும் மேற்காட்டிய தொடரிற் சுட்டப்பெற்றுள்ளமை காணலாம்.
சை. ௪.சா. வ. 22 224 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

நீண்டுயர்ந்த பெரிய இமயமலையின் உச்சியிலே நீலநிறத்தையுடைய தருப்பை வளர்ந்த சரவணப் பொய்கையிலே விசும்பும் வளியும் இயும் நீரும் நிலனுமாகிய ஐவருள் த தன் அகங்கையிலே ஏற்ப முனிவர் எழுவர் மனைவியருள் அருந்ததி யொழிந்த ஏனைய அறுவராலே பெறப்பட்ட. ஆறுவடிவு பொருந்திய செல்வனே, கல்லாலின் கீழிருந்த கடவுளினுடைய புதல்வனே, பெருமையையுடைய மலையாகிய இமயமலையரையன்மகளாகிய உமையின் மகனே என முருகப் பெருமானைப் போற்றும் முறையில் அமைந்தது,
“நெடும் பெருஞ்சிமையத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கையேற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழுகடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே”' (திருமுருகு. 253-257) எனவரும் கஇிருமுருகாற்றுப்படைத் தொடராகும். இதன்கண்
“ஐவருள் ஒருவன்” என்றது ஐம்பெரும்பூதங்களுள் ஒன்றாகிய தக்கடவுளை, அவன் அங்கையேற்ப என்றது, சிவபெருமான் உமாதேவியுடன் கூடியிருந்த நிலையில் சிவபெருமானிடத்தினின்றும் இந்திரன் இரந்து வாங்கிக்கொண்டு தன் வச்சிரப்படையால் சிதைத்த கருவினைத் தவத்திற் சிறந்த முனிவர் எழுவரும் பெற்றுத் தமக்குத் தரிக்கவியலாமையின் இறைவன் கூறாகிய முத்தக் குண்டத்திலே பெய்ததனைக் கூறிற்று. அறுவர் பயந்த ஆறமர் செல்வ என்றது, அவ்வாறு வேள்விக் குண்டத்திற்பெய்து சத்தி குறைந்த கருப்பத்தை அம்முனிவர் எழுவரும் தம் மனைவர்க்குக் கொடுக்க அவருள் அருந்ததி நீங்கலாகவுள்ள அறுவரும் அக்கருவினை விழுங்கச் சூல் முதிரிந்து சரவணப்பொய்கையிற் பதுமப்பாயலிலே பெற்ற நிலையில் முருகப் பெருமான் ஆறு குழந்தை வடிவாக வளர்ந்தமை கூறிற்று. முருகப்பெருமானது தோற்றம் பற்றிய இப்புராண வரலாறு பாயிரும் பனிக்கடல் எனத் தொடங்கும் ஐந்தாம் பரிபாடலில் விரித்துரைக்கப்பெற்றமை முன்னர் விளக்கப்பெற்றது. முருகவேட்டுத் தந்தையாகிய சிவபெருமான் கல்லால மரத்தின் &ழமர்ந்து முனிவர்க்கு அருமறைப் பொருளை அறிவுறுத்திய செய்து,“ஆல்கெழு கடவுட் புதல்வ' எனவரும் இத்திருமுருகாற்றுப்படைத் தொடராலும், “ஆலமர் செல்வன் அணிசால்மகன்? (கலி. 83) எனவரும்: கலித்தொகைத் தொடராலும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த
வள்ளல் எழுவருள் ஒருவனும் வெற்றி தரும் விற்படை யின்னும் யார்கண்ணும் ஆர்வ மொழி யுடையவனுமாகிய ஆய் என்பான், பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தினையுடைய ஆடையினை ஆலின் &ழமர்ந்து அறமுரைத்தருளிய நாயனாராகிய தென்முகக் கடவுள் திருமேனிக்கு நெஞ்சுமகிழ்ந்து கொடுத்தனன். இச்செய்து,

“நிழல்திகழ்
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும் (சிறுபாண். 94-99)
எனவரும் சிறுபாணாற்றுப் படைத் தொடரால் இனிது விளங்கும். இதனால் சிவபெருமானுக்குரியனவாக வைத்து வழிபடப்பெறும் பல்வேறு திருவுருவங்களில் ஆலின் கழறமுரைத்த நாயனாராகிய தென்முகக் கடவுள் (தட். சிணாமூர்த்தி) திருவுருவம் மிகவும் தொன்மை வாய்ந்ததென்பது நன்கு புலனாம்.
சங்களிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ. . . 829

“தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற்
றொன்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தா முருவிப் பொருப்பிற் பொருந”
ப (மதுரைக். 40-42)
எனவரும் மதுரைக் காஞ்சித் தொடருக்கு, “இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கின கிட்டுதற்கு அரிய வலியினைய௩டய பக்க மலையிலே விழுகின்ற அருவியினை யுடைய பொதியின் மலையிலிருக்கும் அகத்தியன் பின்னே எண்ணப்பட்டுச் சான்றோனாயிருத்தற்கு மேவின ஒப்பற்றவனே” எனப் பொருள் வரைந்த நச்சினார்க்கினியர், “இராவணன் தென்றிசையாண்டமை பற்றித் தென்னவன் என்றார், இப்பெயர் பாண்டியற்கும் கூற்றுவற்கும் ஏற்று நின்றாற்போல அகத்தியனைத் தெதன்றிசையுயர்ந்த நொய்ம்மை போக இறைவனுக்குச் €ரொப்ப இருந்தான் . என்பது பற்றிக் கடவுள் என்றார். இராவணன் ஆளுதல் பாயிரச் சூத்திரத்து உரையாசிரியர் கூறிய உரையானும் உ லண்ரி க வைவவை இதனால் அகத்தியனுடன் தலைச்சங்கத்துப் ப்ாண்டியன் இருந்து தமிழாராய்ந்த சிறப்புக் கூறினார்” என விளக்கமும் வரைந்துள்ளார். இத்தொடரில் “தென்னவன் என்றது இராவணனை” என நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளமை ஏற்புடையதேயாகும். எனினும் இங்குத் “தென்னவற் பெயரிய தொன்முதுகடவுள்' என்றது,
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளாகிய ஓவபெருமானை என்பது நச்சினார்க்கினியர்க்கு முற்பட்ட பழைய உரையாசிரியர்கள் கருத்தென்பது, “கூற்றுவனை யுதைத்த கடவுள் என்று இறைவனாக்கி “அவன் பின்னர்” என்றது அகத்தியனையென்று பொருள்கூறின், இறைவனுக்குத் தம்பியென்றல் சாலாமையானும், அப்பொருள் (தம்பியென்றபொருள்) தருங்காலத்து, முன்னவன் பின்னவன், முன்னோன் பின்னோன் என்றல்லது அச்சொல் நில்லாமையானும் அது பொருந்தாது” என
240 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

நச்சினார்க்கினியர் அவ்வுரையை மறுத்தலால் உய்த்துணரப் படும். தென்னவன் என்ற சொல் இராவணன் என்ற பொருளிலும் தென்றிசைக்கோளாகிய கூற்றுவன் என்ற பொருளிலும் ஒப்ப வழங்குதலால் தென்னவன் என்பதனை இராவணன் எனக்கொண்டு இராவணன் கயிலாயமலையைப் பெயர்த்தெடுத்த காலத்து அவனைத் தன் திருவடிப் பெருவிரலொன்றினால் அழுத்தி மலைக்&ழடர்த்தருளிய இவபெருமான் செயலைக் குறிப்பதே “தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற் றொன்முது கடவுள்” எனவரும் இம்மதுரைக் காஞ்சித்தொடர் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.
“தென்னவன் மலையெடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலாலூ ன்ற மணிமுடி நெரிய வாயால்
கன்னலின் கீதம்பாடக் கேட்டவர்.” (4-43-]10)
எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும். தொன்முது கடவுளாகிய சிவபெருமான் வடஇசையிற் கயிலாய மலையிற் கோயில் கொண்டி ருப்பது போன்று தென்றிசையிலுள்ள பொதியில் மலையிலும் எழுந்தருளியுள்ளார் என்பது,
“பொதியில்மேய புராணனை”” (4-15-10)
எனவரும் அப்பர் அருள்மொழயால் நன்கு தெளியப்படும்.

தமிழகத்து முடியுடைவேந்தராகிய சேர சோழ பாண்டியர்களுள் தங்கள் மரபினராகிய பாண்டியர் மரபில்
அங்கயற்கண்ணியம்மை தோன்றினமையால் அம்மரபு அம்மையப்பனாகிய சிவபெருமானது தொடர்பு பெற்ற
மரபாயிற்று என்பது திருவிளையாடற் புராண நிகழ்ச்சிகளால் உய்த் துணரப்படும். நம்பி இருவிளையாடல், பரஞ்சோதி இருவிளையாடல் முதலிய புராணங்கள் காலத்தாற் பிற்பட் டவையாயினும் அவற்றுட். கூறப்படும் இறைவன் திருவிளையாடல்கள் அறுபத்து நான்கினுள் கடல் சுவறவேல்விட்_ டது, இந்திரன் ஆரம்தாங்கியது, மேகத்தைச் சிறைப்படுத்தியது, இந்திரன் முடிமேல் வளையெறிந்தது முதலிய சில திருவிளையாடல்களுக்குரிய மரபுவழிச் செய்திகள் சல சங்க இலக்கியத்திலும் சிலப்பதுகாரத்திலும் இடம் பெற்றுள்ளன என எண்ணுதற்கு இடமுண்டு.
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ. . . 247

“அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேலெறிந்த வான்பகை பொறாது
பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இம௰முங்கொண்டு
தென்றிசையாண்ட தென்னவன் வாழி
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
- செங்கணா யிரத்தோன் திறல்விளங்கு ஆரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன்வாழி
முடிவளையுடைத்தோன் முதல்வன் சென்னியென்
றிடியுடைப் பெருமழை யெய்தாதேகப்

பிழையா விளையுட் பெருவளஞ்சுரப்ப
மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதீர் சிறப்பிற் றென்னனை வாழ்த்தி” (சிலப். காடுகாண். 17-29)

எனவரும் சிலப்பதிகாரத் தொடரில் திருவிளையாடற் புராணச் செய்இகள் சிலவற்றுக்குரிய மூலங்கள் இடம் பெற்றுள்ளமை காணலாம். பாண்டியர் மரபு சிவபெருமா னொடு தொடர்புடையதாய்த் தெய்வநலம் பெற்றுத் திகழுந் இறத்தினைச் சேர முனிவராகிய இளங்கோவடிகள்,
“£மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன்” (சிலப். வேட்டுவவரி)
எனவரும் தொடரில் தெளிவாகக் குறித்துள்ளார். இத்தொடர்ப் பொருளை விளக்க வந்த அரும்பத வுரையாஇிரியர், “மறைமுது முதல்வன் - மாதேவன், இவன் பின்னர் அகத்தியராகியகடவுள், பொருப்பன் - பாண்டியன்” எனப் பொருள் வரைந்துள்ளார். இங்குள்ள பின்னர் என்னும் இடப்பெயர் “வழிமுறை” என்ற பொருளைத் தருவதன்றிப் பின்வந்தவன் என்ற பொருளில் அகத்திய முனிவரைக் குறித்தல் இயலாது. எனவே “மறைமுது முதல்வன் பின்னர்
242 சைவசித்தஃத்த சாத்திர வரலாறு

மேயபொருப்பன்: என்றது, “மாதேவனாகிய பெருமான் அருள் மரபில் வந்த பாண்டியன்” என்ற பொருவில் வழங்கப் பெற்றதெனவே கொள்ள வேண்டியுளது. ' “மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொஇயிற் பொருப்பன்” எனவரும் இளங்கோவடிகள் வாய்மொழி,
“தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற்
றொன்முது கடவுட் பின்னர்மேய
வரைதாழருவிப் பெருப்பிற்பொருந”
(மதுரைக் காஞ்சி 40-42)
எனவரும் மாங்குடி மருதனார் வாய்மொழியினை அடியொற்றி அமைந்திருத்தலால் “தொன்முது கடவுள்? என மாங்குடி மருதனாராலும் “மறைமுது முதல்வன்” என இளங்கோவடிகளாலும் குறிக்கப்பெற்றவர் சிவபெருமானே என்பதும் அம்முதல்வனது அருள்வழியமைந்த து பாண்டியர் மரபென்பதும் நன்கு துணியப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

நஞ்சுண்டுகண்டங்கறுத்தமை
உண்டவர்கட்குச் சாவாமையினையும் மூவாமை யினையும் தரும் அமிழ்தத்தைப் பெறுதல் வேண்டித் தேவர்களும் ' அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபொழுது உலகவுயிர்கள் நடுங்கும்படி தோன்றிய ஆலகால நஞ்சினைத் தேவர்கள் வேண்டிக்கொண்ட வண்ணம் சிவபெருமான் உட்கொண்டு புறம் போகாமல் கண்டத்தில் அடக்கிக்கொண்டு மன்னுயிர்களைக் காத்தருளினார். அதனால் காரியுண்டிக் கடவுள் என்பது அவர்க்குரிய இருப்பெயராயிற்று. காரி - கருமை நிறமுடைய நஞ்சு. நஞ்சுண்ட பெருமானாகிய அவரது மிடறு அகத்தே நஞ்சக்கறை பொருந்தியிருத்தலால் கறைமிடறு எனவும் மறுமிட.று எனவும் புறத்தே நீலமணி போலும் நிறத்தினைப் பெற்று ஒளிர்தலால் திருநீல கண்டம் எனவும் மணிமிடறு எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. நஞ்சுண்ட கண்டனாதிய சிவபெருமானைக் காரியுண்டிக் கடவுள், கறைமிடற்றண்ணல், நீலமணிமிடற்றொருவன், மணிமிடற்றண்ணல், மணிமிடற்றந்தணன், மணிமிடற்று எண்கையான் எனச் சங்க இலக்கியங்கள் பரவிப் போற்றுகின்றன. சங்ககாலத்தில் நன்னன்சேய் நன்னன் என்னும் குறுநில மன்னனது ஆட் சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் அமைந்திருந்ததும் இக்காலத்தில் வடவார்க்காடு மாவட்டத்தில் திரிசூலகிரியென்னும் பெயருடன் விளங்குவதும் ஆகிய பெரும்புகழ் வாய்ந்த நவிரமலையின் உச்சியிலே காரியுண்டிக் கடவுளாகிய சிவபெருமானுக்குச் சறப்புடைத்தாகிய இருக்கோயில் அமைக்கப்பெற்றிருந்ததென்ப து,
“பேரிசை நவிரம் மேஎயுறையும்
காரியுண்டிக் கடவுள தியற்கையும்'” (மலைபடு. 81-82)
எனப் பெருங்குன் றூர்ப் பெருங்கெளசிகளார் என்னும் புலவர் பெருமான் அத்திருக்கோயிலைச் சறந்தெடுத்துக் கூறுதலால் இனிது விளங்கும்.
நவிரமலையிற் கோயில் : கொண்டருளிய சிவபெருமான் அவனருளாலன்றி உயிர்களது அறிவால் உணர்ந்து பரவுதற்கு அரிய முறைமையினையுடைய முழுமுதற்கடவுள் என்பதனை அறிவுறுத்தும் நிலையிற்
“பராவரு மரபிற் கடவுள்” (மலைபடு. 280) என்றார்.
சந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் மக்களால் உணர்ந்து பரவுதற்கு அரிய முறைமையினையுடைய கடவுள் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.

யாழின் நரம்போசையுடன் இயைந்து பாடுதற்குரிய இனிய குரலினையுடைய விறலியர்கள் தொன்றுதொட்டு ஒழுகும் முறைமையாகிய தம் இயல்பில் வழுவாமல் (பிறர் யாவராலும்) பொறுத்தற்கு இயலாத பேராற்றல் வாய்ந்த முழுமுதற் கடவுளை முதற்கண் வாழ்த்தின பின்னரே தாம் இசையரங்கிற் பாடுதற்குரிய புதிய இசைப் பாடல்களைப் பாடுதல் மரபு. இம்மரபு,
.. “கடவதறிந்த இன்குரல் விறலியர்
தொன்றொழுகு மரபின் தம்மியல் வழா அது
அருந்திறம் கடவுட் பழிச்சிய பின்றை
விருந்திற் பாணி கழிப்பி” (மலைபடு. 536-538) என மலைபடுகடாத்கில் விரித்துரைக்கப்பெற்றது.

எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் தொகை நூல்கள் நான்கினுக்கும் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல் சிவபெருமானைப் போற்றுவனவே. இவற்றுள் கலித்தொகைக்கு அமைந்த கடவுள் வாழ்த்து நெய்தற்கலி பாடிய ஆசிரியர் நல்லந்துவனாராற் பாடப்பெற்றதாகும். ஏனைய மூன்றும் பாரதம் பாடிய பெருந்தேவளாராற் பாடப் பெற்றனவாகும்: பதிற்றுப்பத்து என்னும் தொகை நூல் முன்னுள்ள முதலாம் பத்தும் இறுதியிலுள்ள பத்தாம் பத்தும் கிடைக்காமையால் அதன் முன்னுள்ள கடவுள் வாழ்த்தும் கஇடைத்திலது. தொல்காப்பியம் புறத்திணையியல் 26ஆம் சூத்திரவுரையில் கடவுள் வாழ்த்துக்கு உதாரணமாக நச்சினார்க்கினியர் காட்டிய பாடல்,
“எரியெள்ளுவன்ன நிறத்தன் விரியிணா்க்
கொன்றையம் பைந்தார் அகலத்தன் பொன்றார்
எயில் எரியூட்டிய வில்லன் பயிலிருட்
காடமர்ந்தாடிய ஆடலன் நீடிப்
புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து
வெண்மணியார்க்கும் விழவினன் நுண்ணூற்
சிரந்தை யிரட்டும் விரலன் இரண்டுருவாய்
ஈரணிபெற்ற எழிற்றகையனேரும்
இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி
மாறேற்கும் பண்பின் மணிமிடற்றன் தேறிய
சூலம் பிடித்த சுடர்ப்படைக் உ ௩ ட 99
காலக்கடவுட் குயர்கமா வலனே
என்பதாகும். இது பதிற்றுப்பத்து என்னும் தொகை நூலுக்குரிய கடவுள்வாழ்த்துப் பாடலாக இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் சிலரது கருத்தாகும். இப்பாடலைப் பாடியவர் சங்கத்தொகை நூல்கள் பலவற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனாராக இருத்தல் கூடும் எனக்கருதுவர் சிலர். பாடியோர் யாவராயினும் இப்பாடல் சங்ககாலச் செய்யுள் நடையிளனை அடியொற்றியதென்பதனை அறிஞர் பலரும் உடன்படுவர் என்பதில் ஐயமில்லை.

சுடர்விட்டொலிரும் நமின் நிறத்தினையும் ஒவ்வாதென்று இகழ்ந்தாலொத்த செந்நிறவொளி வாய்ந்த இருமேனியையுடையான், விரிந்த கொத்துக்களையுடைய அழகிய கொன்றை மலர்மாலையை அணிந்த மார்பினை யுடையான், உலகவுயிர்கட்கு இடர்விளைக்கும் பகைவராகிுய அவுணர்கள் வாழ்ந்த முப்புரங்களையும் நக்கு இரையாக்கிய (மேரு மலையாகிய) வில்லினை ஏந்தியவன், செறிந்த நள்ளிருளிலே.. சுடுகாட்டினையே அரங்காக விரும்பி ஆடும் கூத்தினை
யுடையான், தொடையளவும் சார்ந்து ஒலித்து வெள்ளிய மணி
ஆரவாரிக்கும் விழாவினையுடையான், நுண்ணிய கயிற்றாற்
- பிணிக்கப்பட்ட உடுக்கையினை இரட்டூறவொலிக்கும்
விரலினையுடையான், (வலப்பக்கம் ஆணுருவும் இடப்பக்கம் பெண்ணுருவும் என) இரண்டுூருவும் ஒருங்கியைந்த அம்மையப்பர் உருவுடையனாய் அவ்விரண்டுூருவிற்கேற்ற இருவகையணிகளையும் பெற்ற அழடுனை யுடையான், ஒத்த இளம் பிறை சேர்ந்து விளங்கும் நெற்றி பினையுடையான், 'களாக்கனியொடூ நிறத்தால் உறழும் நீலகண்டத்தையுடையான், (மன்னுயிர்களின் மும்மலப் பிணிப்பினைக் களைவது எனத்) தெளிந்த மூவிலைச் சூலமாகிய சுடர்விட்டொளிரும் படை யினை ஏந்திய காலத்தைக் கடந்த கடவுளாக இறைவனுக்கு வெற்றி மேன்மேல் உயர்வதாகுக” என்பது மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடலின் .பொருளாகும். இப்பாடல் சிவபெருமான் திருமேனியின் எழில் வண்ணத்தினையும் அம்முதல்வன் அருட் செயல்களையும் பரவிப் போற்றும் முறையில் அமைந்துள்ளமை அறியத்தகுவதாகும்

இனி, சிவபெருமானைக் குறித்துப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள்
மூன்றினையும் தொகுத்து நோக்குவோமாக. அம் மூன்றனுள் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தாக அமைந்தது,
“நீலமேனி வாலிழை பாகத்
தொருவன் இருதாள் நிழற்கீழ்
மூவகையுலகும் முகிழ்த்தன முறையே”
எனவரும் பாடலாகும். “நீலநிறம் வாய்ந்த திருமேனி யினையும் தூய அணிகலங்களையும் உடைய உமாதேவியாரை ஒருபாகத்திற் கொண்ட ஒப்பற்ற முதல்வனாகிய சிவபெருமானுடைய திருவடி நீழலின்கண்ணே மேல், &ழ், நடுவென்னும் மூவகையுலகங்களும் முறையே தோன்றின” என்பது இதன்பொருளாகும்.

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
மார்பினவஃதே மையினுண்ஞாண்
நுதல நிமையா நாட்டம் இகலட்டுக்
கையது கணிச்சியொடு மழுவே மூவாய்
வேலு முண்டத் தோலா தோற்கே
ஊர்ந்ததேறே சேர்ந்தோள் உமையே
செவ்வா னன்னமேனி யவ்வான் -
இலங்கு பிறையன்ன விலங்குவால் வையெயிற்
ஹரியகைந் தன்ன வவிர்ந்து விளங்கு புரிசடை
முதிராத் திஙகளொடு சுடருஞ்சென்னி
மூவா வமரரும் முனிவரும் பிறரும்
யாவரு மநியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமா னுரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற்றந்தணன்
தாவில் தாணிழல் தவிர்ந்தன்றால் உலகே”. என்பது அகநானஞூற்றுக் கடவுள் வாழ்த்தாகும்.
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ, . . 247
கார் காலத்து மலரும் கொன்றையின் பொன்போலும் பூக்களால் இயன்ற (தோளில் அணிந்த) தாரினையும் (மார்பில் அணிந்த) மாலையினளையும். (முடியிற்சூடி_ய) கண்ணியினையும் உடையான் குற்றம் இல்லாத நுண்ணிய புரிநால் அவன் மார்பின் கண்ணது. இமையாத கண் . (மூன்றனுள் ஒன்று) அவன் நெற்றியின் கண்ணது) குந்தாலியொடு மழுப்படை பகையினையழித்து அவன் - கையின் கண் உள்ளது, யாவர்க்குந் தோலாதானாகிய அவனுக்கு முத்தலைச் சூலப்படையும் உண்டு. அவன் ஊர்தியாகக் கொண்டு செலுத்துவது ஆனேறு ஆகும். அவனைச் சேசர்ந்து பிரிவின்றி விளங்கும் தேவியாவாள் உமையம்மையே, மாலைக் காலத்துச் செவ்வானத்தை யொத்து விளங்கும் அவனது திருமேனியின்௧ண அத்தகைய - வானிடத்தே விளங்கும் வெள்ளிய பிறையினைப் போன்று குறுக்கிட்டு விளங்கும் கூரிய பன்றிக் கொம்பினையும்
தீயானது சுடர்விட்டு எரிந்தாலொத்து விளங்கும் செஞ்சடையினையும் (அத்தகைய சடைமீது அணியப்பெற்ற) மூவாத இளம்பிறையுடன் திகழும் சென்னியினையும், என்றும் முதுமையடையாத தேவர்களும் முனிவர்களும் பிறரும் ஆகிய யாவராலும் அறிய வொண்ணாத தொன்மை வாய்ந்த இறைடைத் தன்மையினையும் உடையனாய் - வரிகளோடு தோன்றும் வலிய புலியின் தோலையுடுத்த, யாழிசை போலும் இனிய குரலும் நீலமணி போலும் நிறமும் ஒளியும் வாய்ந்த எவ்வுயிர்க்கும் அழகிய தண்ணளியைப் புரிவோனாகிய சிவபெருமானது வருத்தமில்லாத வலிய திருவடி நிழலின் கண்ணே இவ்வுலகம் தங்கியுள்ளது” என்பது இப்பாடலின் பொருளாகும்.
“இசை திரிந் திசைப்பினும் இயையுமன் பொருளே
அசை திரிந் திசையா என்மனார் புலவர்”
(தொல். பொருளியல் 1)
எனவரும் தொல்காப்பியச் சூத்திரவுரையில், “சொல்லொடு சொல் தொடர்வுபடும் வாய்பாட் டால் தொடராது பிறிதோர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயின் பொருள் இயையும். அவ்வழி அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படும்” என்பதற்கு இப்பாடலை உதாரணமாகக் காட்டுவர் இளம்பூரணர்.

இதற்குக் “கொன்றையாலமைந்த தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய் நுண்ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலினனாய்க் கணிச்சியும் மழுவும் மூவாய்வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குந் தோலா தோனுமாய் ஏற்றினையும் ஊர்ந்து உமையாளையுஸஞ்சேர்ந்து செவ்வான்ஏ அன்ன மேனியையும் பிறையபோன்ற எயிற்றினையும். எரி போன்ற சடையினையும் தஇங்களொடு சுட௪ருஞ்சென்னியையும் உடையனாய் மூவா அமரர் முதலிய யாவரும் அறியாத்தொன்முறை மரபினனாய்ப் புலியதளையும் உடுத்த யாழ்கெழு மணிமிடற்று அந்தணன து சிவானுபூகியிற் பேருலகம் தங்கிற்று் எனப் பொருள் உரைத்தார் இளம்பூரணர். |

யாழ்கெழு மணிமிடற்று அந்தணனாகிய சிவபெருமானது திருவடித் துணையே மன்னுயிர்கட்குப் பிறவியாகிய “பவெப்பத்இனை நீக்கி வீடுபோறாகிய தண்ணிழலைத் தந்தருளும் என்பது தோன்றத் “தாள்நிழல்” என்றார். தவிர்ந்தன்று தங்கியது தாள்நிழல் என்பதற்குச் சிவானுபூபதி எனவும் உலகு என்றது உயர்ந்தோராகிய சிவஞானிகளைக் குறிக்கும் என்பது தோன்றப் பேருலகம் எனவும் இளம்பூரணர் உரைவரைந்துள்ளார். இவரது உரை விளக்கம், நலம் புரிகொள்கைப்புலம் பிரிந்துறையும் செலவு
(திருமுருகு. 63) எனவரும் திருமுருகாற்றுப்படைத்
தொடரையும் இறைவன் இருவடியே மன்னுயிர்கட்கு
வீடுபேறாயிருக்கும் என்ற கருத்தமையத் “தென்னன்
பெருந்துறையான் . ... .. தாட்டாமரை காட்டித் தன்
கருணைத் தேன்காட்டி (இருவாசகம், இருவம்மானை) என
வரும் திருவாசகத் தொடரையும் நினைவு கூரும் முறையில்
அமைந்துள்ளமை இங்கு மனங்கொளத் தகுவதாகும்.
“கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பில் தாரும் கொன்றை
ஊர்திவால் வெள்ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறென்ப -
கறைமிடறணியலும் அணிந்தன்று, அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு வொருதிறனாகின்று, அவ்வுருத்
தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்கும்
பிறை நுதல்வண்ணமாகின்று, அப்பிறை
பதினெண் கணனும் எத்தவும்படுமே
எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே” என்பது புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தாகும்.

எவ்வகைப் பட்ட உயிர்களுக்கும் காவலாகிய நீர்தொலைவறியாக் குண்டிகையாலும் தாழ்ந்த இருச்சடையாலும் பொலிவு பெற்றுத் தோன்றும் செய்தற்கு அரிய தவத்தையுடையோனாகிய இறைவனுக்கு “இருமுடி மேற் சூடப்படுங்கண்ணி கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ, அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ) ் ஏறப்படுவது தூயவெளிய ஆனேறு, மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ் ஆனேறென்று சொல்லுவர், நஞ்சினது கறுப்பு தஇருமிடற்றை அழகு செய்தலுஞ் செய்தது,
அக்கறுப்பு, தான் மறுவாயிருந்தும் தேவர்களை உய்யக்
கொண்டமையால் வேதத்தைப் பயிலும் அந்தணர்களாற்
புகழவும் படும். பெண் வடிவு ஒருபக்கம் (இடப்பக்கம்)
ஆயிற்று, ஆகிய அவ்வடிவுதான் (ஊழிக்காலத்தில்)
தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்,
பிறையானது திருநுதலுக்கு அழகாகியது. அப்பிறைதான்
பெரியோன் சூடுதலால் பதினெண் கணங்களாலும் புகழவும் படும் என்பது இதன் பொருள். “தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்பதற்கு, ஒரு பாலாய அப்பெண் வடிவுதான் உலகம் எல்லாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தில் இறைவன் வடிவினுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும் எனப்பொருள் கொண் பழைய வுரையாசிரியர் “தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்" என்பதற்கு இறைவனது ஒரு கூற்றில் தோன் றும் அப்பெண் வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளேயடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும்: என்று உரைப்பினும் அமையும் என்று மீண்டும் கூறிய பொருள் மிகவும் பொருத்தமுடையதாகும். “எல்லா வுயிர்க்கும் ஏமமாதிய அருந்தவத்தோன்் எனச் சிவபெருமானைக் கூறுதலால் எல்லாவுயிர்கட்கும் சார்பாயுள்ளவன் செம்பொருளாகிய அவ்விறைவனே என்பது நன்கு புலனாதல் காணலாம்.

சிவபெருமானைப் போற்றிப் பெருந்தேவனார் பாடிய. மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் மூன்றிலும் இறைவனாகிய சிவபெருமான் ஒருவனே ஆணும் பெண்ணும் என இருவடிவினையும் ஒருங்கே பெற்றுப் பிரிவின்றி விளங்கும் திறமும் அவனது இருவடியினை ஆதாரமாகக் கொண்டு உலகம் தோன்றி நிலைபெற்று ஒடுங்கும் முறையம் கொன்றை மலர் மாலை அம்முதல்வனுக்குரிய அடையாள மாலையாதலும் அந்தணனாகிய அவன் மார்பில் நுண்ணூல் இகழ்தலும் நெற்றிக் கண்ணினையுடைய அம்முதல்வன் கணிச்சி, மழு. மூவாய்வேல் ஆகிய படைக்கலங்களை யேந்தியுள்ளமையும் சிவபெருமான் வெள்ளைநிறம் வாய்ந்த ஆனேறாகிய இடபத்தினை ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்டுள்ளமையும் செம்மேனியம்மானாகிய அவன் தன் சடையில் பிறைத்திங்களையணிந்துள்ளளமையும் நஞ்சக்
கறை பொருந்திய திருநீலகண்டத்தையுடையனாதலும் புலித்தோலை உடையாகவுடுத்துள்ளமையும் நீர்குறைத லறியாத: குண்டிகையைத் தாங்கிய அரிய தவக்கோலத்தினை யுடைய அம்முதல்வன் எல்லாவுயிர்கட்கும் பாதுகாவலாய் விளங்கும் அருளின் திறமும் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம். இங்ஙனம் உலகம் தோன்றி நின்று ஒடுங்குதற்கும் மன்னுயிர்கள் :துன்பந்தவிர்ந்து “இன்பமே எந்நாளுந் துன்பமில்லை' என அமைதியான பேரின்ப வாழ்வைப் பெறுதற்கும் காரணமாகிய இறைவன் திருவடிகள் மனமொழி மெய்களால் வணங்குவார்க்கு அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினையும் பயக்கும் என்பது இக்கடவுள் வாழ்த்துப் பாடல்களின் கருத்தாகும்.

உமையொரு பாகன்
உலகுயிர்களை இயக்கியருளும் ஒப்பற்ற பேரறிவுப் பொருளாகிய முழுமுதற் அதர் ஒன்றே என்பது தமிழ் முன்னோர் கொள்கையாகும்... “ஒருவனே தேவனும்” எனவரும் திருமூலர் வாய்மொழுயிம், “ஒருவன். என்னும் ஒருவன் காண்க” (இருவாசகம்) எனவரும் திருவாதவூரட்கள் வாய்மொழியும் தமிழரது ஒரு தெய்வக்கோட் பாட்டினை நன்கு வலியுறுத்துதல் இங்கு நினைக்கத் தகுவதாகும்.காண்டற்கரிய கடவுளாகிய அவ்வொருபொருளே, உலகுயிர்களில் தோய்வின்றித் தானே தஇகழொளியாய்த் தனித்து நிற்கும் நிலையிற் “சிவம் எனவும், அதுவே உலகெலாமாகிவேறாய் உடனுமாய் இவ்வாறு மன்னுயிர் களின் பொருட்டு அருளாய் விரிந்து உலகுயிர்களுடன் இரண்டறக் கலந்து நின்று உயிர்களை உய்வித்தருளும் நிலையிற் “சத்து” எனவும் இருநிலையில் வைத்துப் போற்றப் பெறுகின்றது. உலகப் பொருளை விளக்கும் ஞாயிறு ஒன்றே தன்னிலையில் தனித்து விளங்குந்திறத்திற் கதிரவன் எனவும் உலகப் பொருள்கள் தோறும் இரண்டறக் கலந்து நிற்குந் திறத்திற் “கதிர்' எனவும் இருதிறமாகப் பிரித்துப் பேசப்படுதல் போன்று முழுமுதற் பொருள் ஒன்றுதானே தனித்து நிற்குந் தன்னிலையிற் சிவம் எனவும், உலகுயிர்களுட ன் விரவி நிற்கும் நிலையிற் சத்தி எனவும் இருதிறமாகப் பகுத்துப் பேசப்படுவதாயிற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன்றையே சத்தியும் சிவனும் என இரு நிலைமையதாக வைத்து எண்ணிப் - போற்றுதல் நம் நாட்டில் தொன்றுதொட்்.டு நிலவிவரும் கடவுள் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மை மரபு, *நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்' என ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், “சேர்ந்தோள் உமையே” என அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும் “பெண்ணுருவொரு இறனாகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” எனப் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும் இடம் பெற்றுள்ளமை காணலாம். இம்மரபினையடி யொற்றியதே திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் :ஆதுபகவன்' என்னும் தருப்பெயராகும். உயிர்ப் பொருள் - உயிரல் பொருள் ஆகிய எவ்வகைப் பொருள்களிலும் .. நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி, அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ்சிவமுமாய்ப் - பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கியருள் புரிகின்றான் என்பது “நீல மேனிவாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்&ழ் மூவகையுலகும் முறையே முகிழ்த்தன' என உலகத் தோற்றத்தைப் பற்றியும், “யாழ்கெழு மணிமிடற்று அந்தணன், தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே் என உலகின்நிலை பேறுபற்றியும், “பெண்ணுரு வொருதிற னாகின்ற அவ்வுருத் தன்னுள் அடக்கிக்_கரக்கினும்” என உலகின் ஒடுக்கம் பற்றியும் பெருந்தேவனார் குறிப்பிடுதலால் இனிது விளங்கும்.

தனிமுதலாகிய இறைவன், தனது ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மையப்பராகத் தோன்றி உயிர்கட்.கு அருள்புரியுந்தொன்மைத் திருக்கோலத்தின் இயல்பினை இறையருளால் உணரப்பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள், “அம்மையே அப்பா ஒப்பிலாமணியே” என அகங்குழைந் து போற்றிய துடன் தாம் கண்ட தெய்வக்காட்டுயை ஏனையோரும் உணர்ந்து போற்றுதல் வேண்டும் என்னும் பெருவேட்_கையுடன், ப
“தோலுந் துகிலும் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் டைங்கிளியும்
சூலமுந் தொக்க வளையும் உடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூ தாய் கோத்தும்பீ” (திருக்கோத்தும்பி)
எனவரும் திருப்படலிற் புனைந்து போற்றியுள்ளமையும், சீகாழிப்பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு நீரில் முழுகும் தந்தையாரைக் காணாத நிலையில் இருத்தோணிச் சிகரம் பார்த்து “அம்மே அப்பா” என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்குத் தோணிண புரத்து இறைவன் தோடுடைய செவியனாகி (அம்மையப்பராகி) விடைமேல் தோன்றிச் சிவஞானப்பால் அருத்தியருளிய திருவருட்_செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் அடியார் பலர்க்கும் அம்மையப்பனாக விடைமேல் தோன்றி . அருள் புரிந்த நிகழ்ச்சிகளும் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும். 

திரிபுரம் எரித்தது
வானிட.த்தே பறந்து கரியும் இயல்பினவாய்ப் பொன், வெள்ளி, இரும்பு என்பவற்றால் இயன்ற மதில்களையுடைய நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அவுணர்கள், தாம் வாழும் நகருடன் விசும்பிற் பறந்து தேவர் முதலியோர்க்கு இடர்விளைத்தனர். திரியும் முப்புரத்து அவுணர்களால் இடருற்று வருந்திய தேவர்கள் வேண்ட அவர்களுடைய துன்பங்களைப் போக்கத் தஇருவுளங் கொண்ட சிவபெருமான், பூமியைத் தேராகவும், வேதங்களைத் தேரிற்பூட்டும் குதிரைகளாகவும், நான்முகளைத் தேர்ப்பாகனாகவும், இமயமலையை வில்லாகவும், வாசுகியென்னும் பாம்பினை வில்லின் நாணாகவும், காற்று, த, இருமால் ஆகியோரை ஓர்
அம்பாகவும் கொண்டு இரியும் முப்புரங்களையும் தம் புன் சிரிப்பினால் எரித்தருளினார் எனப் புராணம் கூறும்
இப்புராணச்செய்து,
“ ஆதியந்தணன் அறிந்து பரிகொளுவ
வேதமாபூண் வையத்தேர் ஊர்ந்து
நாகம் நாணா மலை வில்லாக
மூவகை, ஆரெயில் ஓர் அழல் அம்பின் முளிய
மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்” (பரி. 5. 22-27)
என ஐந்தாம் பரிபாடலில் விரித்துரைக்கப்பெற்ற து.

“நான்முகனாகிய பாகன் தேரைச் செலுத்தும் நெறியறிந்து செலுக்த, வேதங்களாகிய குதிரை பூண்ட
தேரையேறி, வாசுகியென்னும் பாம்பு நாணாகவும் இமயமலை வில்லாகவும் கொண்டு பொன், வெள்ளி, இரும்பு என்னும் மூவகைப்பட்_ட. அழித்தற்கரிய மதில்களைத் ஒயோகிய ஓர் அம்பினாலே வெந்து நீறாகத் இசைகள் வெதும்ப எய்து அழித்து அமரர்க்குச் செய்யும் வேள்விக் கண்ணே அவிப்பாகத்தையுண்டட. பசிய இடப்பாகத்தையுடைய ஈசன்” என்பது மேற்குறித்த பரிபாடற் பகுதியின் பொருள். இரிபுரம் எரித்த இச்செய்து,

அன வனக க கைடப வவ கசைவகை யய ௯. (33
ஓங்குமலைப் பெருவிற் பாம்பநாண் கொளீ இ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த
கறைமிடற் றண்ணல்'”' (புறநானூறு 55)
எனப் புறநானூற்றிற் கூறப்பெற்றது. உயர்ந்த மலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக்கொளுவி, ஒப்பில்லாததோர் அம்பை வாங்கி மூன்று மதிலையும் எய்து பெரிய வலியையுடைய தேவர்க்கு வெற்றியைக் கொடுத்த கரிய திருமிடற்றையுடைய இறைவன் என்பது இப்புறப் பாடற்பகுதியின் பொருளாகும்
“தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்து””
எனக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும்,
“ அயந்திகழ் நறுஙகொன்றையலங் கலந்தெரியலான்
இயங்கு எயில் எ(ய்)யப் பிறந்த எரிபோல எவ்வாயு%
கனைகதிர்தெறுதலின்”” (கலித்தொகை 150)
என நெய்தற் கலியிலும் இச்செய்தி குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். பாலை நிலத்தில் கதிரவல் தெறுதலால் மூங்கில் ஒன்றோடொன்று உராய்தலாற்றோன்றி விசும்பளவும் ஓங்கிப் பரந்தெரியு: ; இயினுக்கு, இறைவன் இரிபுரத்தை எய்கையினாலே தோன்றி முழங்கும் வெம்மையையுடைய பெருந்தீ இங்கு உவமையாகக் கூறப்பட்ட து.

கதிரவன் வெப்பத்தால் மலைகள் பிளந்து இதர்ந்து கிடக்கும் நிலைக்கு, முக்கட். பெருமானாகிய சவபெருமானது சினத்தால் முப்புரங்களும் நீறாகிச் இதர்ந்து வீழ்ந்த நிகழ்ச்சியினை உவமையாக எடுத்துக் காட்டும் முறையில் அமைந்தது,
“தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்
சீறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்
அகவதுவக துய.
ஏறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந்து, இயங்குநர்
ஆறுகெட விலங்கிய அழலவிர் வெஞ்சுரம்” (கலித். 1) எனவரும் பாலைக்கலியாகும்.

“இறைவன் உலகுகளைப் படைக்கக் கருதிய இடத்தே அப்படைத்தற்றொழிலைச் செய்தற்கு உரியனாய்த் தோன்றிய முதியவனாகிய பிரமன் முதலாகவுள்ள தேவர்கள் வந்து இரந்து வேண்டிக் கொண்டமையாலே, தமக்குரிய எல்லையளவில் அடங்கி நடவாத அவுணருடைய வலிமையைக் கெடுத்தற்கு கூற்றுவனைப் போன்று சினந்து, வஞ்சனையாளராகிய அவ்வவுணரை வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் வலியுடனே மூன்று கண்களையுடைய சிவபெருமான் முப்புரங்களையும் வெகுண்டுநோக்க, அவ்விறைவனுடைய முகம் பகைவரைத் தேறுமாறுபோல
ஒளி தங்கிய கதிரவன் சுடுகையினாலே மலைகள் பிளவுபட்டுப் பிறராற் €றுதற்கரிய மழுப்படையினையுடைய அம்முதல்வன் வெகுளுதலால் முப்புரங்களும் அழித்தலைப் பெற்றுப் பொடியாய் உதிர்வனபோல, வழிபோவார்க்கு வழி யில்லாதபடி வீழ்ந்து குறுக்கிட்டுக் கிடந்த வெம்மை விளங்கும் அரிய வழியிடத்தே” என்பது மேற்காட்டிய பாலைக்கலியின் பொருளாகும். இதன்கண் கதிரவனது வெப்பத்தால் வானுறவுயர்ந்த மலைகள் பிளந்து கொடியாய்ச் சிதர்ந்து &ழே கிடக்கும் தோற்றத்திற்கு, விசும்பிலே கிரியும் இயல்பினவாகிய முப்புரங்களும் முக்கண்ணனாகிய இறைவன து வெகுளியாற் சுடப்பட்டுப் பொடியாகச் சிதர்ந்து வீழ்ந்து கடக்கும் தோற்றத்தினைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ என்னும் புலவர் பெருமான் உவமையாக எடுத்துக்காட்டி விளக்கியுள்ளமை இப்புராணச் செய்தியின் தொன்மையைப் புலப்படுத் துவதாகும்.

தனக்கு மேலாகத் தொழப்படுந் தெய்வமில்லாத சிறப்பினையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் திரிபுரத்தை எரித்த காலத்து இமயமலையாகிய வில்லின் நாணாக அமைந்து புகழப்படும் தொல்புகழைத் தந்தது வாசுகியென்னும் பாம்பே என்பது,
“பணிவில் சீர்
செல்விடைப் பாகன் திரிபுரஞ் செற்றுழிக்
கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித் ப
தொல்புகழ் தந்தாரும் தாம்” (பரிபாடல் திரட்டு 1) எனவரும் பரிபாடற் பகுதியால் இனிது விளங்கும்

கங்கையைச் சடையிற் கரந்தது
ப&ரதன் என்பான் தன்குலத்து இறந்த முன்னோர்கள் நற்கதி பெறுதல் வேண்டிக் கடுந்தவம் புரிந்து கொணர்ந்த ஆகாய கங்கையானது, நிலவுலகு தாங்காத பெருவெள்ள மாய்ப். பெருக்கெடுத்து வந்த காலத்துச் சிவபெருமான் அப்பெருவெள்ளத்தைத் தமது செஞ்சடையிற் கரந்தருளினார் எனப் புராணம் கூறும். இச்செய்தி,
் “எரிமலர்த் தாமரையிறை வீழ்த்த பெருவாரி
தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
மணிமிடற்றண்ணல்”” (பரி. 9. 4-7)
எனவரும் பரிபாடலிற் குறிக்கப்பெற்றது. “அயனால் வீழ்த்தப்பட்ட ஆகாய கங்கையை மலர்ந்து விழும் பூவை யொப்ப வேகந்தணியச் சடைப்பாரத்தின்்கண தாங்கிய ஒப்பில்லாத நிலைமையையுடைய சலதாரியாகிய மணிமிடற்றண்ணல்” என்பது இத்தொடரின் பொருளாகும்: சலதாரி - (கங்கை நகியாகிய) சலத்தைத் தரிக்கும் இயல்புடையவன்.

“இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடையந்தணன்” (குறிஞ்சிக். கலி 1) எனக் கபிலரும், “பிறங்குநீர் சடைக் கரந்தான்” (நெய்தற்கலி 33) என நல்லந்துவனாரும் சவபெருமான் கங்கையைச் சடையில் தரித்துள்ள அருட் செயலைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும்.
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ. , . ஒத

கூற்றுவனை உதைத்தது
சிவபெருமான் தன்னை அன்புடன் பூசனை புரிந்த அந்தணாளன் ஆகிய மார்க்கண்டேயரது உயிரைக் கவர வந்த கூற்றுவனையுதைத்து மார்க்கண்டேயனாரைச் சாவாது மூவாகிருக்கும்படி உய்வித்தருளினார் என்பது நெடுங்கால மாக நம்நாட்டில் வழங்கி வரும் புராணச் செய்தியாகும்.

காற்றென விரைந்த கரிய எருதினை அதன்வன்மை கெடத்தழுவி நின்ற ஆயனது அழகிய பெருமிதத் தோற்றத் திற்கு, எருமையேற்றினை ஊர்ந்து வந்த கூற்றுவனது மார்பினைக் காலின் விளிம்பிலே தாக்கி யுதைத்து உயிர்கவர்ந்த சிவபெருமானது தோற்றப் பொலிவினை உவமையாகக் கூறும் முறையில் அமைந்தது,
“காற்றுப் போல்வந்த காழ்விடைக் காரியை
யூற்றுக் களத்தே மடங்கக்கொண் டட்டதன்
மேற்றொன்றி நின்ற பொதுவன் தகைகண்டை
ஏற்றொருமை நெஞ்சும் வடிம்பின் இடந்திட்டுச்
சீற்றமோ டாருயிர் கொண்டஞான்று இன்னன்கொல்
கூற்றென வுட்கிற்றென் னெஞ்சு” (கலி. 103) எனவரும் முல்லைக்கலியாகும்.

“காற்றின் விசைபோல ஓடிவந்த விரைந்த ஏறாகிய கரிய காளையினைப் பலரும் வந்து சேர்தற்குரிய களத்திலே வலியடங்கத்தழுவி வருத்தி அதன்மேலே தோன்றி நின்ற ஆயனாகிய வீரனது அழகைப் பாராய், ஏறாகிய எருமைக் கிடாயை ஊர்ந்த கூற்றுவனுடைய மார்பினைத் தன்காலின் விளிம்பாலே தாக்கிப் பிளந்து வீழ்த்திச் சினத்துடனே அவனது அரிய உயிரை வாங்கின அந்நாளில் இறைவன் இத்தன்மையை உடையவனாக இருப்பானோ? என என் நெஞ்சு நடுக்கமுற்றது” எனத் தோழி தலைமகளை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாடற் பகுதியாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

சுடர் விரிந்தாற்போன்ற நெற்றிச்சுட்டியையுடைய கரிய காளையொன்று தன்னைத் தழுவிப் பிடிக்க வந்த ஆயனாகிய வீரனைக் குடர் சரியக்குத்துத் தன் கொம்பிலே கொண்டு வருத்தும் தோற்றம், பல்லுயிரும் வருத்தத்தை யணிகின்ற ஊழிமுடிவிலே ப௫ய நிறத்தைத் தன் இடப்பாகத்தேயுடைய சிவபெருமான், வருத்தத்தைச் செய்த ஏறாகிய எருமையை யூர்தியாகவுடைய கூற்றுவ னுடைய மார்பைப்பிளந்து அவன் குடரைக் கூளிகளாகிய பேய்க்கு இட்டு அவற்றின் வயிற்றை நிறைவித்தாற்போலும் எனக் காலகாலனாகிய இறைவன் ஊழி முடிவிலே கூற்றுவனைக் கொள்ற செயலை உவமையாகக் காட்டும் நிலையில் அமைந்தது.

“சுடர் விரிந்தன்ன சுரிநெற்றிக் காரி
விடரியஙகண்ணிப் பொதுவனைச் சாடிக்
குடர்சொரியக் குத்திக் குலைப்பதன் எரரவகனள்
படரணியந்திப் பசுங்கட் கடவுள்
இடரிய ஏற்றெருமை நெஞ்சிடந்திட்டுக்
குடர் கூளிக் கார்த்துவான் போன்ம்'' (கலி, 101)
எனவரும் கலித்தொகைப் பகுதியாகும். “மதிவிரிந்தாற் போன்ற சுட்டியை நெற்றியிலேயுடைய கரிய எருது முழைஞ்சினையுடைய மலையிற் பூவாற்செய்த அழகை யுடைய முடி மாலையையணிந்த ஆயனாகிய வீரனைக் காலால் துகைத்துக் குடர்சரியும்படி குத்திக் கொம்பி னிடத்தே கொண்டு குலைப்பதன் தோற்றத்தைக் காண்பாயாக, பல்லுயிரும் வருத்தத்தை அணிகின்ற ஊழிமுடிவிலே பசிய நிறத்தைத். தன் (இடப்) பாகத்தே யுடைய சிவபெருமான், வருத்தத்தைச் செய்த காளையாகிய எருமையை யூர்தியாகவுடைய கூற்றுவனது மார்பைப் பிளந்து வீழ்த்தி அவன் உயிரைப் பேய்ச்சுற்றத்திற்கு இட்டு அவற்றின் வயிற்றை நிறைவிக்கின்ற வினையபோலும்” என்பது இதன்பொருள். இங்கு எருமையென்றது எருமையை யூர்தியாகவுடைய கூற்றுவனைக் குறித்தது, ஆகுபெயர்.


பிறையணிந்தது
தக்கன் புதல்வியராகிய விண்மீன்கள் இருபத்தெழுவரையும் மணந்துகொண்ட சந்திரன், அவருள் உரோடுணியின்பால் மட்டுமே பேரன்பு செலுத்துபவனாய் ஏனையோரைப் புறக்கணித்து ஒழுகினான். அதனையறிந்த தக்கன் “நீ . நாளும் ஒவ்வொரு கலையினையிழந்து தேய்ந்தொழிவாயாக': எனச் சந்திரனைச் சபித்துரைத்தான். அச்சாபத்தால் கலைகளையிழந்து தேய்ந்து நலிவுற்ற சந்திரன் சிவபெருமானைச் சரணடைந்தான். அவனது இடரைப் போக்கத் தருவுளங்கொண்ட சிவபெருமான் பிறையாகிய அவன் தோயாதவாறு தனது சடையில் தரித்தருளினார் எனப் புராணம் கூறும்.
“முதிராத் திஙகளொடு சுடருஞ்சென்னி' (அகம். கட. வா.)
“புதுத்திஙகட் கண்ணியான்' (கலித்.)
“பிறைநுதல் வண்ணமாகின்று, அப்பிறை
பதினெண்கணனும் ஏத்தவும்படுமே' (புறம். கட. வா.)
“கொலைவன் சூடிய குழவித்திங்கள்போல்' (கலி. 103)
*எரிகதிர்க் கணிச்சியோன் சூடிய பிறை” (கலி.) ப 42
எனவரும் தொடர்கள் இறைவன் பிறையினைச் சடைக்
கணிந்த தோற்றத்தைப் புலப்படுத் துவன.

ஆலின் கீழமர்ந்து அறமுரைத்தது
சிவபெருமான், தாழ்சடைப்பொலிந்த அருந்தவக் கோலமுடையனாய் நீர்மலி கரகம் கொண்டு மோன முத்திரைக்கையினனாய் ஆலின் &ழமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வர்க்கு அறம் முதலிய நாற்பொருள்களை அறிவுறுத்தியருளினான் எனப் புராணம் கூறும். ஆலின் $ழமர்ந்து தென்திசை நோக்கி முனிவர்க்கு அறமுறைச் தருளிய திருக்கோலம் சங்கநூல்களில் “ஆலமர்செல்வன் என்ற இருப்பெயராற் போற்றப்பெறுகின்ற து.
“ஆல்கெழு கடவுட் புதல்வ' (திருமுருகு.)
“நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
ஆர்வ நன்மொழி ஆயும்” (சிறுபாண்.)
“ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்' (கலி. 81)
“ஆலமர் செல்வன் அணிசால் மகன்” (கலி. 83)
960 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
“ஆலமர் கடவுளன்ன நின்செல்வம்' (புறம். 198)
“கடவுளாலத்துத் தடவுச் சினைப்பல்பழம்' (புறம். 199)
“சீர்மிகு சிறப்பினோன் மரமுதற்கைசேர்த்த
நீர் மலி கரகம்” (கலி.)
எனவரும் தொடர்கள் இப்பெயர் வழக்கிளை வலியுறுத்துவன. இறைவனுக்கு அருளுருவம் உண்டென் பதும் குருவாக எழுந்தருளி அம்முதல்வன் உயிர்கட்கு மெய்ப்பொருளை அறிவுறுத்தியருள்வன் என்பதும் இறைவன் குருமேனி தரித்து மெய்ப்பொருளை உபதேசித்தலாலே உலகில் குருவின் வழிமுறை தொடர்ந்து நிலைபெற்று வருகின்றதென்பதும் ஆகியசைவ சமய வுண்மையினை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது, ஆலமர் செல்வன் திருவுருவமாகும்.

கயிலைக்கடவுள்
செம்மேனியம்மானாகிய சிவபெருமான் வடவிமயத்து உச்சியாதிய திருக்கயிலாய. மலையில் மலையரையன் மகளாகிய உமாதேவியுடன் எழுந்தருளியுள்ளான் என்பது சைவ சமயச் சான்றோர் துணிபாகும். கடவுள் என்ற சொல் தெய்வம் என்னும் பொதுப் பொருளில் வழங்குமாயினும் எல்லாவற்றையும் இயக்குவது என்னும் அப்பெயர்க் காரணத்தை நோக்கும் வழி எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனையே குறிப்பதாகும். “குவியிணர்ப் புல்லிலையெருக்கமாயினும் கடவுள் பேணேம் என்னா?” (புறம். 106) எனவும், “ஆல்கெழு கடவுட் புதல்வ' (இருமுருகு.) எனவும் வரும் தொடர்களில் கடவுள் என்னும் சொல் முழுமுதற் பொருளாகிய சிவபெருமானைக் குறித்து வழங்கப் பெற்றுள்ளமை காணலாம்.

“கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை
வடதிசையெல்லை இமயமாக”: (பதிற். 43)
எனவரும் பகிற்றுப்பத்துப்பாடலில், “கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை: என்றது, சிவபெருமான் எழுந்தருளிய திருக்கயிலாய மலையினையேயெனக் கொள்ளுதல் பெரிதும் பொருத்தமுடையதாகும். 'கயிலாயத்துச்சியுள்ளான்' என அப்பரடிகளும் “மானக். கயிலை மலையாய் போற்றி' என வாதவூரடிகளும் அருளிய வாய்மொழிகள் இங்கு ஒப்புநோக்கற் பாலனவாகும்.

இராவணனை அடர்த்தருளியது
. இலங்கை வேந்தனாகிய இராவணன், தேரூர்ந்து வடதிசையிற் செல்லுங்கால் அவனது தேர் செல்ல வொண்ணாதபடி இறைவன் எழுந்தருளிய கயிலாய மலை தடையாயிருத்தலைப் பொறாது தன்னுடைய இருபது கைகளாலும் அம்மலையைப் பெயர்த்தெடுக்க முற்பட்ட போது கயிலைப்பெருமானாகிய இறைவன் தன் திருவடிப் பெருவிரலொன்றினால் சிறிதேயழுத்த மலையிற்சிக்குண்டு அலறியமுது பின்னர் இறைவனுக்கு உவப்பாகச் சாம வேதத்தினை இசையுடன் பாடிப்போற்றினானாக அதுகண்டு உளமிரங்கிய இறைவன் அவனுக்கு முக்கோடி வாழ்நாளும் பகைவரைக் கொல்லும் கோலவாளும் கொடுத்தருளினார் என்பது, இராமாயணத்தும் புராணங்களிலும் சைவக் தஇிருமுறைகளிலும் காணப்படும் செய்தியாகும். திருக்கயிலாயம் இறைவன் எழுந்தருளிய இருமலை என்பதனைச் இறிதும் மதியாத இராவணன், அம்மலையினைதக் தன்னுடைய கைகளால் அடியோடு பெயர்த்தெடுக்கத் தொடங்கி அம்மலைக் &ழகப்பட்டு அதனை எடுக்கலாற்றாது உழன்ற இடர்நிலையை மதயானையொன்றின் செயலுக்கு உவமையாக எடுத்துக் காட்டும் முறையில் அமைந்தது.
“ இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமையமர்ந்துயர் மலையிருந்தனனாக
ஐயிருதலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத்தம்மலை
எடுக்கல் செல்லா துழப்பவன்போல
உறுபுலி யுருவேவய்ப்பப் பூத்தவேங்கையைக்
கறுவு கொண்டதன் முதற்குத்திய மதயானை
நீடிரு விடரகஞ் சிலம்பக் கூய்த்தன்
கோடு புய்க்கல்லா துழக்கும்'” (கலி, 8) எனவரும் குறிஞ்சிக் கலியாகும்.

“இமயமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையழித்த, கங்கையால் ஈரத்தையபுடையதாகிய சடையினையுடைய இறைவன், உமையம்மையோடு உயர்ந்த கயிலாய மலையிலே அமர்ந்திருந் தானாக, அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையையுடைய இராவணன் மலையை எடுத்தற்குக் கையைக் &ழே செருஇத் தொடி (வீரவளை) பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்கலாற்றாது வருந்துகின்றவனைப் போல,ன்மை மிகுதியையுடைய புலியினது வடிவையொப்பப் பூத்த வேங்கை மரத்தைப் புலியென மாறுபட. எண்ணி அதன் அடி.யிலே குத்திய மதயானை, நீண்ட மலையின் முழைஞ்சிடமெல்லாம் ஒலிக்கும்படி கூப்பிட்டு பசிய மரத்தில் அழுந்திய தன்கொம்பை மீட்டு இழுக்க முடியாமல் வருந்தும்” என்பது இதன் பொருளாகும்.

ஆதிரைமுதல்வன் சிவன்
திருவாதிரை நாளுக்குரிய தலைவனளனாகச் சிவபெருமானையும் தருவோண் நாளுக்குரிய தலைவனாகத் திருமாலையும் போற்றுதல் இந்நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இருபெருந்தெய்வத் தொடர்புடைமை பற்றியே இருபத்தேழு விண்மீன்களுள் ஆதிரை ஓணம் என்னும் இரண்டும் :*இரு' என்னும். அடைமொழி பெற்று வழங்கப்பெறுகின்றன. ஆகுரை விண்மீன்கூட்டம் அஆடவல்லானாகிய கூத்தப் பெருமானது திருவுருவினைப் போன்று விண்ணில் ஒளிர்தலால் அத்திருமேனியிற் காட்சி நல்கும் சிவபெருமானை ஆதிரை முதல்வன் எனச் சங்கநூல்களும் ஆகிரைநாயகன் எனத் இருமுறைகளும் போற்றிப் பரவுகின்றன. மதிநிறை நாளாகிய உவாநாளுடன் தொடர்புடையதாய் வருவது மார்கழித் ஒருவாதிரையாகும். எனவே மார்கழித் திருவாதிரை நாளில் ஏிவபெருமானுக்குச் இறப்புடைய திருவிழா தொன்று தொட்டு நிகழ்த்தப்பெற்று வருகின்றது. திருநாவுக்கரசர் காலத்தில் திருவாரூரில் இருவாதிரைத் திருவிழாச் சிறப்பாக நிகழ்ந்த திறத்தை நேரிற்கண்டு மகிழ்ந்த திருநாவுக்கரசர் அதன் சிறப்பினைத் திருஞான சம்பந்தப் பிள்ளையார்க்கு எடுத்துரைக்கும் முறையிற் பாடப்பெற்றது “முத்துவிதான மணிப் பொற்கவரி' எனத் தொடங்கும் இருவாதிரைத் இருப்பதிகமாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

திருவாதிரைத் திருவிழாவும் அம்பா ஆடலும்
மக்களால் ஓராண்டு என வரையறுக்கப்படும் காலம் தேவர்கட்கு ஒருநாளாகும். ஆடி முதல் மார்கழி முடிய வுள்ள ஆறு திங்களும் வானோர்க்கு இரவுப்பொழுது, தை முதல் ஆனி முடிய ஆறு திங்களும் அவர்கட்குப் பகற் பொழுது. இவ்வகையில் நோக்கும்போது மார்கழித் திங்கள் வானளனோர்க்குரிய வைகறைப் பொழுதாகக் கருதப்படும். கூத்தப் பெருமான் திருவுருப்போன்று ஒளிரும் செம்மீனாகிய இருவாதிரையானது, நிறைமதியுடன் கூடி விளங்கும் சிறப்புடைய திருநாளாகத் திகழ்வது மார்கழித் திங்களில் ஆதலின் மார்கழித் திருவாதிரைத் திருநாள் சிவபெருமானுக்குரிய சிறப்புடைய திருவிழா நாளாகக் கொண்டாடப்பெற்று வருகிறது. இத்திருவிழாவின் சிறப்பினைப் பதினோராம் பரிபாடலில் ஆசிரியர் நல்லந்துவனார் பின்வருமாறு விரித்துக் கூறுகின்றார் :-
“கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப்பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந்திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பாதாக வியனில வரைப்பென
அம்பா வாடலின் ஆய்தொடிக் கன்னியா
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடிப் ப(ருமண லருவியின்
ஊதை யூர்தர வுறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பிற்
றையல் மகளிர் ஈரணி புலர்த்தர
வையை நினக்கு மடை வாய்த்தன்று ' (பரி. 11, 74-87) என்பது அப்பரிபாடற் பகுதியாகும்.

“மேகம் பெய்யும் பருவத்து மழைபெய்து. முடித்தமையால் தனது கடுங்குரல் நீங்கப் பனிமிகுதலால் குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப் பருவத்து, வெயில் கடுமையாகக் காயாத மழையின் கடைப் பகுகியாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் கலை முழுவதும் நிறைந்து மறுவுடன் விளங்கும் பூரணை நாளாகிய திருவாதிரை நாளின்கண் (பதி பசு பாசம் என்னும் முப்பொருளுண்மை யினையும்) விரித்துரைக்கும் நூல்களாகிய ஆகமங்களைக் கற்று வல்ல அந்தணர்கள் ஆதிரை முதல்வனாகிய சிவபெருமானுக்குத் திருவிழாவைத் தொடங்கி நிகழ்த்த, முப்புரிநூலஸஊிந்த வேதியர்கள் மக்கள் தானமாகத் தரும் பொன்னாலாகிய அணிகலங்களை ஏற்றுமகிழ, வளையலை யணிந்தகன்னிப் பெண்கள் “இவ்வுலகம் வெயிலாலும் பனியாலும் வெதும்பாது மழையாற் குளிர்வதாகுக' என உலகம் ஈன்ற அன்னையாகிய இறைவியை வேண்டி அம்பாவாடலாகிய நோன்பினை மேற்கொண்டு தவமுது மகளிர் அறிவுறுத்த நெறியிலே நின்று, பனிபெய்யும் விடியற் காலத்திலேயே பருமணலையுடைய வையையாற்று நீரிலே முழுகியெழுந்து, குளிர்ந்த வாடைக்காற்று வீசுதலால் வையையாற்றின் கரைக்கண் வேகியர் வளர்த்த வேள்வித்தயைப் பேணிய சிறப்புடனே தமது ஈரவுடையினையும் புலரும்படி. செய்ய, அவ்வந்தணர் தம் வேள்விக் கண்ணே தரும் அவியுணவையே உனக்குரிய திருவமுதாயிற்று” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ. . . 265
“மையோலை பிடித்த இளைய புலமையாளராகிய மாணவர்களது கல்விப் பயிற்சியாகிய விளையாட்டிற்கு மாறாக (எதிராக) விடியற்காலத்திலேயே துயிலெழுந்து காமக் குறிப்பில்லாத விளையாட்டினைச் செய்கின்ற ஆயத்தினராய கன்னி மகளிர் நீரின்கண் புலன்கள் அடக்கிச் செய்யுந் தவத்தினை முன்னைப் பிறப்புக்களில் அடுத்தடுத்துச் செய்ததன் பயன்தானோ தம்தாயின் அருகே நின்று தவமாகிய தைந்நீராடல் நோன்பினை நின்கண் செய்யப்பெற்றனர்? வையையே கூறுவாயாக” என வையையாற்றை நோக்கி வினவுவதாக அமைந்தது,
“மையாட லாடல் மழபுலவர் மாறெழுந்து
பொய்யாட லாடும் புணர்ப்பினவர வர்
தீயெரிப்பாலுஞ் செறிதவமுன் பற்றியோ
தாயருகா நின்று தவத்தைந் நீராடுதல்
நீயுரைத்தி வையைந்தி'' பேரி. 11 : 88-92)எனவரும் பரிபாடற் பகுதியாகும்.

இங்கு எடுத்துக்காட்டிய பதினோராம் பரிபாடற் பகுதி மார்கழி மாதத்துத் திருவாதிரைத் திருவிழாவையொட்டி நிகழும் மகளிர் நோன்பாகிய அம்பாவாடலின் நிகழ்ச்சியை விரித்துரைப்பதாகும். . இப்பாடலில் “குளம்” என்றது, மார்கழி மாதத்தை. திருவாதிரை நிறைமகு நாளாங்கால் ஆதித்தன் (ஞாயிறு) பூந்தடத்தின்க௧ண் (புனர்பூசத்தின்) நிற்குமாதலின் அதனையுடைய மார்கழி மாதம் “குளம்' எனப்பட்டது என்பர் பரிமேலழகர்.

மார்கழித் திருவாதிரையில் தொடங்கி நிகழும் மகளிர் நோன்பாகிய அம்பாவாடல் தைத் இங்களில் நிறைவு
பெறுதலின் தைந்நீராடல் எனவும் வழங்கப்படும். தாயருகாநின்று இளமகளிர் ஆடுதலின் அம்பா ஆடல்
எனப்பட்டது. “அம்பா ஆடல் என்று தைதந்நீராடற்குப் பெயராயிற்று, தாயோடு ஆடப்படுதலின்'” என்பர்
பரிமேலழகர். அம்பா - தாய், “தாயருகாநின்று தவத்தைந்நீராடலின்' என்பர் நல்லந்துவனார். இத் தொடரில்
“தாய்' என்றது, உலகம் ஈன்ற தாயாகிய பராசத்தியை எனக் கொள்ளுதல் கன்னி மகளிர் பராசத்தியை வழிபட்டு நோற்கும் நீராடல் நோன்பிற்கு மிகவும் பொருத்த முடையதாகும். சிவபெருமானுக்குரிய திருவிழாவை யொட்டி உமையம்மையை வழிபட்டு நோற்கும் நீராடல் நோன்பு நிகழ்வது அம்மையப்பர் வழிபாட்டின் ஒற்றுமைத் திறத்தை நன்கு புலப்படுத் துவதாகும்.

மார்கழித் திருவாதிரை விழாவில் தொடங்கித் தைத்திங்களில் நிறைவுபெறும் மகளிர் நோன்பானது சங்ககாலத்தில் தைந்நீராடல் எனவும் பிற்காலத்தில் மார்கழி நீராடல் எனவும் வழங்கப் பெற்றுள்ளது. இதனைத் திருவாதவூரடிகளாகிய மணிவாசகப் பெருமானும் திருமாலடியாராகிய நாச்சியாரும் மார்கழி நீராடல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். இந்நோன்பின் நிறைவு தைத்தங்களில் முற்றுப்பெறுதல் கருதிச் சங்கச் செய்யுட்களில் தைந்நீராடல் எனவும் மார்கழித் இருவாஇுரையினை யொட்டித் தொடங்குதல் பற்றி திருவெம்பாவையிலும், திருப்பாவையிலும் மார்கழி நீராடல் எனவும் வழங்கப் பெறினும் இவை இரண்டும் ஒரு நோன்பினையே குறித்த பெயர்கள் என்பது பதினோராம் பரிபாடலுக்குப் பரிமேலழகர் எழுதியவுரையால் நன்கு துணியப்படும். இந்நோன்பின்௧கண் கன்னிப்பெண்கள் ஈரமணலால் சத்திவடி வாகிய பாவையை அமைத்துச் செய்யும் சடங்கு உண்மைகருதி “அம்பாவையாடல்” என்பது மருவி “அம்பாவாடல்' எனப் பெயரெய்கியது எனக் கருதுதற்கும் இட முண்டு.

“வையத்து வாழ்வீர்கள் நாமும் நம்பாவைக்குச
செய்யும் கிரிசைகள் கேளீரோ” (திருப்பாவை)
“நாங்கள் நம்பாவைக்குச சாற்றி நீராடினால்” (திருப்பாவை”
“பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்'. (திருப்பாவை)
எனவரும் துருப்பாவைத் தொடர்களால் இந்நீராடல் நோன்பில் அழகிய பாவைக்குச் செய்யும் சடங்குண்மை
நன்கு புலனாகும். இங்ஙனம் கன்னிப் பெண்கள் நீராடி நோன்பு நோற்றலின் நோக்கம், நாடுமலியமழை பெய்து நோயும் துன்பமும் நீங்கி இவ்வுலகம் இன்புறுதல் வேண்டும் என இறைவனது அருள்வடிவாகிய அம்மையை வழிபட்டு நலம் பெறுதலே எனபதனை,
“வெம்பாதாக வியனில வரைப்பென
அம்பாவாடலின் ஆய்தொடிக் கன்னியர்”. எனவரும் தொடரில் ஆரியர் நல்லந்துவனார் இறப்பாகக் குறித்துள்ளமை காணலாம்.

சிவநெறியும் வேதநெறியும்
விரிநூலந்தணர் இருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்கு விழாவைத் தொடங்கி நிகழ்த்தினர் எனவும் அவ்விழாவில் மக்கள் தானப்பொருள்களைப் புரிநூலந்தணர் ஏற்றனர் எனவும் ஆசிரியர் நல்லந்துவனார் பதினோராம் பரிபாடலிற் குறிப்பிடுதலால் அவர் வாழ்ந்த காலமாகிய சங்க காலத் தமிழகத்தில் இருவகை யந்தணர் களும் வாழ்ந்தனர் என்பது நன்கு புலனாகும். அவ்விரு திறத்தாருள்_ விரிநூலந்தணர் எனப்படுவார் ஆகமங்களையுணர்ந்த பூசகர் என்பர் பரிமேலழகர். எனவே கோயிற் பூசகராகிய சிவாசாரியரின் வேறாகக் கூறப்படும் புரிநூலந்தணர் என்போர் வேதங்களை யோதும் வேகடஇியர் என்பதுதானே விளங்கும். ஆகமங்கள் கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருள்களின் இயல்பினை விரித்துரைக்கும் நூல்களாதலின் விரிநூல் எனப்பெற்றன. ஆகமவிதிகளை நன்குணர்ந்து திருக்கோயில்களில் சவபெருமானுக்குப் பூசனையும் திருவிழாவும் நிகழ்த்தும் விரிநூல் அந்தணர்கள் சங்ககாலத்தில் இருந்தனர். எனவே அவர்களால் ஓதியுணரப் பட்_டுக் கற்றவண்ணம் ஒழுகும் முறையினை அறிவுறுத்தும் சிவாகமங்களும் அவர் காலத்தில் தமிழகத்தில் வழங்கினமை நன்கு பெறப்படும். விரிநூலந்தணராகிய சிவநெறிச் செல்வர் தொடங்கி நிகழ்த்தும் திருவாதிரை விழாவிற் புரிநூலந்தணராகிய வேதியர்களும் கலந்து கொண்டமை கூறப்படுதலால் சங்க காலத்தில் சைவமும் வைதிகமும் ஆகிய இருவகை நெறிகளும் முறையே சிறப்பும் பொதுவுமாகக் கலந்து தமிழக மக்களாற் பேணப்பட்டு வளர்ந்தமை உய்த்துணரப்படும்.
268 சைவசித்தாந்த சாத்திர வரலாறு

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் வேந்தர் பெருமான் சிவமுனிவர்களால்
வழிபடப்பெறும் முக்கட் செல்வராகிய சவபெருமானை வழிபடும் சிறப்புடைய சிவநெறியினை மேற்கொண்டு, நான் மறைவல்ல வைகிக முனிவர்களை ஆதரித்து அவர்களது நல்வாழ்த்துடன் உலகியலொழுக்கமாகிய வேதநெறியினை வளர்த்தனன். இச்செய்தியினை,
“பணியியரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர் வலஞ்செயற்கே
இறைஞ்சுக பெரும நின்சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகையெதிரே'” (புறம். 6)
என அம்மன்னனைக் காரிகிழார் என்னும் புலவர் பெருமான் உளமுவந்து வாழ்த்திய புறநானூற்றுப் பாடற்பகுதியால் நன்குணரலாம். “நினது கொற்றக்குடை முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருதற்குத் தாழ்க. பெரும நினது முடி மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடுவாழ்க என்று எடுத்த கையின்முன்னே வணங்குக” என்பது இவ்வடிகளின் பொருளாகும். முக்கட் பெருமான் திருக்கோயிலின்றிப் பிற இடங்களிற் பணியாத குடையினை யுடைய இப்பாண்டியன், நான்மறைவல்ல அந்தணர்களாகிய வேதியர்கள் உளமுவந்து வாழ்த்தும் வண்ணம் வேத நெறிப்படி பலவகை வேள்விகளையும் ல்ல நிறை வேற்றியவன் என்பது,
“பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித்து£ற போகிய” . (மதுரைக். 759, 760)
எனவரும் மதுரைக் காஞ்சியடி களாலும், “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என இவ்வேந்தனுக்கு வழங்கும் சிறப்புப் பெயராலும் நன்குதெளியப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

ஆடவல்லான்
சிவபெருமான் மன்னுயிர்கள் உய்ய வேண்டி உலகங்களையெல்லாம் படைத்தும் காத்தும் ஒடுக்இயும்
ஆட வல்லகூத்தப் பெருமானாகத் திகழ்பவன் என்பதும் அவன் ஆடியருளும் கூத்தினை அவனுடன் பிரியாதிருந்து கண்டு உயிர்களுக்கு நலஞ்செய்பவள் அவனின் வேறல்லாத இருவருட் சத்தியாகிய உமையம்மையென்பதும் சைவ நூல்களின் துணிபாகும். உமையம்மை காண ஆடியருளும் இறைவனை முன்னிலையாக்கிப் பரவிப் போற்றுவதாக அமைந்தது, (தரவு)
'ஆறறியந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீ மடுத்துக்
கூறாமற் குறித்ததன் மேற்சொல்லுங் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற் ் றெண்கையாய் கேளினி,
தோழிசை)
டு வ்பம்பப்பன்னினுவ்பொலர்ற்துதி
கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குல்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ
மண்டமர் பலகடந்து மதுகையா னீறணிந்து
பண்டரங்க மாடுங்காற் பணையெழிலணை மென்றோள
ட தத்த்லைங்த ழ் வற்கடத் டது தினா
கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார்
ந்த்
தலையங்கை கொண்டு நீ காபால மாடுங்கால்
முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ
(தனிச்சொல்)
எனவாங்கு,
(சுரிதகம்)
பாணியுந் தூக்குஞ் சீருமென்றிவை
வாணமில் பொருளெமக் கமர்ந்தனையாடி' '௫௪
எனவரும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்.

“அறு அங்கங்களையும் அறியும் அந்தணர்கள : 0) பனிவர்கட்.கு. அரியவாகிய வேதங்கள். பலவற் உ. ப
அருளிச் செய்து, தெளிந்த நீர்ப்பெருக்கையுடைய கங்கையின் வேகத்தைத் தன் சடையின் ஒரு கூற்றிலே யடக்கி, முப்புரத்திலே தயைச்செலுத்தி, வாக்காற் கூறப் படாமல் மனத்தால் குறித்த அப்பொருட்கும் எட்டாமல் நிற்கும் கடிதாகிய கூளியினது முகுகிடாத போரினையும் நீலமணிபோலும் மிடற்றினையும் எட்டுக் கைகளையும் உடைய இறைவனே! (இப்பொழுது என் கட்புலனாகத் தோன்றி நின்று) யான் கூறுகின்றதனைக் கேட்_பாயாக.
(நின்கையில்) ஒலிக்கின்ற பறை பலவாச்சியங்களை யும் ஒலியா நிற்பக் கட்.புலனாய்ப் பலவடிவுகளையும் மீண்டு நின்னிடத்தே ஒடுக்கிக் கொண்டு கொடி தாகிய “கொட்டி ' என்னும் கூத்தை நீ ஆடுகின்ற காலத்துப் பக்கம் அகன்ற குறியினையுடைய கொடியினையொத்த இடையினையுடைய உமையம்மையோ தாளத்தின் முடிந்த காலத்தனைத் தன்னிடத்தே கொண்ட “ர்” என்னும் தாளத்தைத் தருபவள்? (அங்கு அவளைத் தவிரப் பிறர் இல்லையே?)

மிக்குச் செல்கின்ற போர்களிற் பலவாகிய முப்புரங்களை வென்று அந்த வன்மையாலே அவ்வவுணர்கள்
வெந்து வீழ்ந்த சாம்பராகிய நீற்றினை அணிதலாலே பாண்டரங்கம் என்னும் பெயர் பெற்ற கூத்தினை நீ ஆடுகின்ற ஃலத்து, மூங்கிலினது அழகையுடைத்தாகிய அணை போன்ற மெல்லிய தோள்களையும் வண்டுகள் ஒலிக்குங் கூந்தலையும் உடையாளாகிய பராசத்தியோ தாளத்தின் இடை நிகழுங்காலக் கூறாகிய தூக்களைத் தருவாள்? (அவ்விடத்து அவளன்றிப் பிறரில்லையே!)

கொலைத் தொழிலையுடைய புலியைக்கொன்று அதன்தோலை உடுத்துக் கொன்றைப்பூமாலை தோளிலே கிடந்தசைய அயனுடைய தலையினை அகங்கையிலே ஏந்துதலாலே காபாலம் என்று பெயர் பெற்ற கூத்தை நீ ஆடுங்காலத்து, முல்லையரும்பினையொத்த எயிற்றினை யுடைய மலைமகளோ தாளத்தின் முதலெடுக்குங் காலத்தினையுடைய பாணியைத் தருவாள்? (அவ்விடத்து அவளன்றிப் பிறர் இல்லையே!)
என்று சொல்லும்படியாக அழித்தற்றொழிலை நிகழ்த்து கின்ற காலங்களிலே (தாளத்தின் தொடங்கும் காலமாகிய) பாணியும், (இடை நிகழுங் காலமாகிய) தூக்கும், (முடியுங் காலமாகிய) சீரும் என்று கூறப்படும் இவற்றை மாட். சுமைப் பட்ட அணிகலங்களையுடைய உமாதேவி உடனிருந்து காப்ப ஆடல்புரிந்து, காத்தற்றொழிலை நிகழ்த்துகின்ற இக்காலத்தே ஒருவடிவைக் கொண்டு தோன்றி அன்பில்லாத பொருளாகிய எங்களுக்குப் பொருந்திக் காட்டு நல்கினாய். . இவ்வாறு யாவராலும் காணுதற்கு அரிய கடவுளாகிய நீ, ஆணம் (அன்பு) இல்லாத உயிர்ப்பொரு ளாகிய எமக்கு எளியனாய்த் தோன்றி யருளுதற்கு எம்மிடடத்து எதனையும் எகிர்பாராத நினது பேரருளே காரணமாகும்” என்பது இக் கடவுள் வாழ்த்துப் பாடலின் பொருளாகும். ப

வேதங்களை முனிவர்க்கு அருளிச்செய்தது, கங்கையைச் சடையிற்கரந்தருளியது, திரிபுரங்களை யெரித்தது, நஞ்சினையுண்டு நீலமணிமிடற்றன் ஆனது ஆகிய சிவனுடைய அருட். செயல்கள் இக்கலியின் தரவில் தொகுத்துரைக்கப்பெற்றன.
“கூறாமற் குறித்ததன் மேற்செல்லும் .................
எண்கையாய்” என்ற தொடர் இறைவனது சொரூப
லக்கணம் எனப்படும் சிறப்பிலக்கணத்திளைப் புலப்படுத்தி நின்றது. “வாக்காற் கூறப்படடாமல் மனத்தாற் குறித்த அப்பொருட்கும் எட்டாமல் மாற்றம் மனம் கழிய நின்ற இறைவன், அன்பினால் வழிபடுவோரது உள்ளத்தின்௧ண் எண் தோள்வீசி நின்று ஆடும்பிரானாகத் தோன்றி அருள்புரிகின்றான்” என்பது, இக்கலித்தொகைத் தொடரால் உணர்த்தப்படும் இறைவனது சிறப்பிலக்கணமாகும்.

இங்ஙனம் உயிர்களின் சுட்டறிவினால் ஆராய்ந்து காணுதற்கரிய தன்மையும் அன்புடையாரது நினைவினின்றும் என்றும் நீங்காது நிலைபெறும் அருளின் “நீர்மையும் இறைவனுக்குரிய சிறப்பிலக்கணமாதலைக்
'காணாமரப நீயா நினைவ' (பரிபாடல் 3) எனத் இருமாலைப் பரவிப்போற்றும் தொடரில் கடுவன் இளவெயினனார் புலப்படுத்தியுள்ளமை இங்கு நினைவு கூர்தற்குரியது.

கடவுளாகிய முழுமுதற் பொருள், மன்னுயிர்களின் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாத நிலையினதாய் இப்பொருள் போன்று எவ்வகையாலும் புலப்படாது போயினும் தனது அருளே கண்ணாகக் கொண்டு காணும் மெய்யன்புடைய அடியார்கட்.கு உள்ளத்தினுள்ளே அகலாது வெளிப்பட்டுத் தோன்றி இன்னருள் சுரக்கும் உள்பொருளேயாம் என்பதனை வற்புறுத்தும் முறையில் அமைந்தது, “மணிமிடற்று எண்கையாய்' எனவரும் தொடராகும். “இது திருமேனி கொண்டு நின்றாய் ஆயினும் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாய் என்றது” என இக்தொடர்ப்பொருளை விளக்குவர் நச்சினார்க்கினியர்.

“கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் ................
எண்கையாய்” என்னும் இக்கலித்தொகைத் தொடரையும், “காண்ட.ற்கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய்” எனவும், “என் புந்தவட்டத் திடைப்புக்கு நின்றானையும் பொய்யென்பனோ” எனவும், “மாற்றமனங்கழிய நின்ற மறையோனே” எனவும் வரும் திருமுறைத் தொடர்களையும் அடியொற்றிய நிலையில் சத்து, அசத்து என்பவற்றை வரையறை செய்து உணர்த்துவது, ப
“உணருரு வசத்தெனின் உணராதின்மையின்
இருதிற னல்லது சிவசத்தாமென :
இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே”
எனவரும் சிவஞானபோத ஆறாஞ் சூத்திரமாகும்.

“உணர் உருஎனின் அசத்து - (மேலைச்சூத்திரத்துற் கூறப்பட்ட தம்முணர்வின் தமியாகிய முழுமுதற்பொருள்) காட்சி, கருதல், உரை என்னும் அளவைகளால் அறியப்படும் இயல்பினது என்றால், அவ்வாறு நம்மால் . இனவ அறியப்படும் அப்பொருள் உலகத்துப் பொருள்கள் போல அழியுமியல்பின தாகிய அசத்து எனப்படும், உணராது எனின் - (பதிப் பொருளாகிய அது) எவ்வகையாலும் நம்மால் அறியப்படாத பொருள் என்றால் அது முயற்கோடு போல இல்பொருளாய் (சூனியமாய்) விடும். இருதிறன் அல்லது (ஆதலால்) அசத்து, சூனியம் எனப்படும் இவ்விரு பகுதியுமன்றி, இரண்டு வகையின் சவசத்தாம் என மன்னுலகு இசைக்கும் - பாசஞான பசுஞானங்களால் உணரப்படாமையும் பகுஞாளத்தாலே உணரப்படுதலும் ஆகிய இரண்டுவகையாலும் சிவசத்தாம் என்று மெய்யுணர்வின்' நிலைபெற்றோர் அதன் சிறப்பிலக்கணம் கூறுவர் - என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். கலையறிவாகிய .பாசஞானத்தாலும் உயிருணர்வாகிய பசு ஞானத்காலும் உணரப்படாத தூய்மையும் என்றும் ஒரு தன்மையதாய் பதிஞானத்தால் அறியப்படும் உள்பொருளாந்தன் மையும் பற்றிக் கடவுளைச் சிவசத்து என்றார். இங்ஙனம் குறையுணர்வாகிய பசு அறிவாலும் பாச .இறிவாலும் அறியப்படாத முதல்வனை அவனது திருவடி. ஞானத்தால் தன்னறிவின் கண்ணே ஆராய்ந்து தெளிக” என அறிவுறுத்துவது,  (47 ச க ச ச
ஊன ககண।' பாசம் உ ௨ணாராப பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி'” (சிவஞானபோதம், சூ. 9)
எனவரும் சிவஞானபோத ஒன்பதாஞ் சூத்திரமாகும்.

இனி, “ஆறறியந்தணர்' என்புழி “ஆறு' என்னும் எண்ணுப்பெயர் ஆகுபெயராய் ஆறு அங்கங்களையும் உணர்த்தியது. ஆறங்கமாவன : நிருத்தம், வியாகரணம், கற்பம், கணிதம், பிரமம், சந்தம் என்பன. ஆறங்கங்களாலும் அரியமறைப்பொருளை அறிய வல்லார் என்பார் “ஆறறி யந்தணர்' என்றார். “அந்தத்தை அணவுவார் அந்தணர், என்றது, வேதாந்தத்தையே மேற்கொண்டு பார்ப்பார் என்றவாறு” என்பர் நச்சினார்க்கினியர். அழகிய தண்ணளியையுடைய அறவோர் எனினும் அமையும்.

இக்கலிப்பாட.லின் மூன்று தாழிசைகளிலும் முறையே கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் எனச் சிவபெருமான் ஆடிய மூன்று திருக்கூத்துக்களும், அவற்றுக்குச் இறப்புரிமையுடைய ர், தூக்கு, பாணி என்னும் தாளக் கூறுபாடுகளும் பற்றிய செய்திகள் விரித்துரைக்கப் பெற்றன. ட்ட்க

அவற்றுள் கொடுகொட்டி என்பது, பதினோராடலுள் ஒன்று, சிவபெருமான் ஆடியது, இறைவன்
எல்லாவுலகங்களையும் அழித்து நின்றாடுதலின் கொடுங் கொட்டி என்னும் பெயர்த்தாயிற்று. “கொடுங்கொட்டி கொடுகொட்டியென விகாரமாயிற்று. எல்லாவற்றையும் அழித்து நின்றாடுதலின் கொடுங்கொட்டி என்றார்.
““கொட்டியாடற்கேற்றம் ஒட்டிய
உமையவள் ஒருபாலாக ஒருபால்
இமையா நாட்டத் திறைவனாகி
அமையா உட்கும் வியப்பும் விழைவும்
பொலிவும் பொருந்த நோக்கிய தொக்க
அவுணர் இன்னுயிர் இழப்ப அக்களம்
பொலிய ஆடினன் என்ப மற்றதன்
விருத்தங் காத்தற் பொருளொடு கூடிப்
பொருத்த வரூஉம் பொருந்திய பாடல் .
- கிருத்தகு மரபிற்றெய்வத் துதிப்பே'' இதனான் உணர்க” என நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டிய விளக்கமும் உரைச் சூத்திரமும் கொடுகொட்டி யாடலின் இயல்பிளைப். புலப்படுத்தல் காணலாம்.

தேவர்கள் இரிபுரம் எரிய வேண்டுதலால் வடவைத் தயைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல்கேட்ட அளவிலே (சுட்ட அளவிலே) அப்புரத்தில் அவுணர்வெந்து வீழ்ந்த வெண்பலிக்குவையாகிய பாரதியரங்கத்திலே (சுடுகாட்டிலே) உமையவள் ஒருபாகத்தினளாய் நின்று பாணி, தூக்கு €ர் என்னும் தாளங்களைச் செலுத்த எல்லாத் தேவரினும் உயர்ந்த மகாதேவனாகிய இறைவன் வற்றிக்களிப்பாற் கைகொட்டி நின்று ஆடியது அகாடுகொட்டி என்னும் ஆடலாகும். இதனியல்பினை,
'பாரதியாடிய பாரதியரங்கத்துத்
திரிபுரமெரியத் தேவர்வேண்ட
- எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறனாக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி யாடலும்'' (சிலப். கடலாடு. 39-43)
என்ற தொடரால் இளங்கோவடிகள் விரித்துக் கூறியுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். “இரிபுரம்
தமடுத்து எரியக்கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடுதலின் கொடுகொட்டியென்று பெயர் கூறினார்” என்பர் அடியார்க்கு நல்லார்.

பண்டரங்கம் என்றது, பாண்டரங்கம் என்னும் ஆடலை. இதன் இயல்பினை,
“தேர்முன் நின்ற திசைமுகன்காணப்
பாரதியாடிய வியன்பாண்டரங்கமும்'”
் (சிலப். கடலாடு. 44, 45) என்ற தொடராற் குறித்தார் இளங்கோவடிகள். “வானோராகிய தேரில் நான்மறைக் கடும்பரிபூட்டி. நெடும்புற மறைத்து வார்துகில் முடித்துக். கூர்முட். பிடித்துத் தேர்முன் நின்ற இசைமுகன் காணும்படி பாரதி வடிவாகிய இறைவன் வெண்ணீற்றையணிந்தாடிய பாண்டரங்கக் கூத்தும்” என இத்தொடர்க்கு உரைவரைந்தார் அடியார்க்கு நல்லார். முப்புரங்களைவென்று அந்த வலியாலே முப்புரத்து அவுணர்கள் வெந்து வீழ்ந்த நீற்றை அணிந்து இறைவன் ஆடுதலினாலே .இக்கூத்து பாண்டரங்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனவும் பாண்டரங்கம் என்பதே பண்டரங்கமென விகாரமாயிற்று எனவும் கருதுவர் நச்சினார்க்கினியர்.
“ஏறமர் கடவுள் மூவெயில் எய்வுழிக்
கூறுகூறாகக் கொடியொடும் படையொடும்
வேறுவேறுருவின் விண்மிசைப் பரந்தனர்
அவ்வழி ஒளியொடும் உருவொடுந் தோன்றித்
பவி வய மிமெழவி யமம் ப்பமய பம் ப யல்ட வெல்வெய்வ மமலில்வட் யி் மமமெலலைைமையவை வைய வைைவவை யவை வை வைகையை அவலை அ யணவைவைகைவைவைகவைகைவைகைகைவாகைகைைவையை வைய வமைய யய கட்டட ப ிய்கிம் ப மவைதுவவைவைவல்.
தேர்முன் நின்று திசைதலை பனிப்பச
சுவையும் குறிப்பும் ஒழிவில தோன்றி
அவையவை யவ்வழி ஆடினன் ஆட
மைந்தரு மகளிரும் தந்நிலையழிய
மெய்ப்படு சுவையொடு கைப்படை மறப்பக்
கூடியகாலக் காற்றென ஏற்றவன்
படிநிலை திரியாப் பாண்டரங்கம்மே''
என நச்சினார்க்கினியர் உரையிற் காட்டிய மேற்கோட் சூத்திரம், இக்கூத்தின் இயல்பினை விரித் துரைப்பதாகும்.
““மண்டமர் பலகடந்து மதுகையான் நீறணிந்து
பண்டரர் ௪ ஆடு ல்்
எனவரும் கலித்தொகைத் தொடரில் இறைவன் முப்புரத்தவுணர்கள் வெந்து வீழ்ந்து வெண்எீற்றினையணிந் து ஆடிய செய்தி குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். பாரதி (பைரவி) வடிவாகிய இறைவன் அ-னிந்த வெண்ணீறு 'பராவணமாகிய திருநீறு எனச் வநெறியாளர்களால் அணியப்பெறும் தொன்மையுடைய சைவ. சமய அடையாளம் என்பது இத்தொடரால் இனிது விளங்கும்.

இனி. காபாலம் என்பது, சிவபெருமான் புலித் தோலை யுடுத்துக் கொன்றை மலர்மாலை தோளிலே
அசையப் பிரமனது தலையை அகங்கயில் ஏந்தி ஆடிய கூத்தாகும். அயனது தலையோட..ஈ₹ !! பிரமகபாலத்தைக் கையில் ஏந்தியாடுதலின் இது ஈபாலம் என்னும் பெயருடைய தாயிற்று.

கொடுகொட்டி , பாண்டார். .ம், காபாலம் என்னும் இம்மூன் று கூத்துக்களும் சி௨ /பருமான் அழித்தற் 'ழாழிலை நிகழ்த்துங் காலத்தில் -. : ப்பெறுவன என்பது,
“பல்லுருவம் பெயர்த்து £ ௦- கொட்டியாடுங்கால்''
மண்டமர் பலகடந்து மதுஎ * ஈன நீறணிந்து பண்டரங்கம்
ஆடுர் ல் “தலை அங்கை கெ.ண்டு ந காபாலம் ஆடுங்கால்”
எனவரும் ஈலித்தொகைத் தொடர்களாலும், “அழித்தற்றொழிலை ந்கழ்த்து ன்ற காலங்களிலே பாணியுந் தூக்குஞ்ரும் என்று சொல்லப்பட்ட (௮வையிற்றை மாட். சிமைப் பட்ட அணியினையுடைய உமாதேவி காப்ப ஆடி” எளவரும் நச்சினார்க்கினயர் உரையாலும் நனகு புலனாம்.

சிவபெருமான், தன்கையில் ஒலிக்கின்ற துடியென்னும் பறையானது, பலவலை வாத்திய ஒலிகளையும் ஒலியா நிற்க, (தட. னால் தோற்றுவிக்கப்பட்.: -) கட்புலனாய பவவடிவுகளையும் மீட்டுத் தன்னிடத்தே ஒடுக்கிக் கெண்டு, உமாதேவியா . தன் ஒரு பாகத்திலேயடங். , ஊழி முடிவிலே கொடுகொட்டி என்னும் கூத்தினை ஆடியருள்வன் என்பது, “படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ, கொடுகொட்டி ஆடுங்கால்” என ஆசிரியர் சவபெருமானை முன்னி௨ லப்படுத்துப் போற்றுந் தொடரால் அறிவுறுத்தப் பட்டது. இத்தொடர்ப் பொருளைக் கூர்ந்து இந்திக்குங்கால், பல் வறு உலகங்களையும் முதன் முதற் படைத்த முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானே பேரூழி முடிவில அவ்வுலகங்களை யெல்ல ம் மீட்டுத் தன்கண் ஒடுங்கச் செய்பவன் என்பதும், எனவே மகா சங்கார காரணனாகிய இறைவனே உலகங்களைத் தோற்றுவிக்கும் நிமித்த காரணன் என்பதும் இக்கடவுள் வாழ்த்தினைப் பாடிய ஆசிரியர் நல்லுந்துவனார் கொண்ட தத்துவக்கொள்கை என்பது இனிது விளங்கும். சிவ நெறிபற்றி இவ்வா௫ிரியர் அறிவுறுத்திய இக்கொள்கை, இவ்வாசிரியர் பாடிய நெய்தற்கலி பன்னிரண்டாம் பாடலிலும் நன்கு விளக்கப்பெற்றுள்ளமை காணலாம்.
கஇரவன் நாட். காலையிலே தன் கதிர்க்கற்றைகளை உலகிற் பலவிடங்களிலும் பரப்பிப் பகல் முடிவிலே தன்கதிர்களையெல்லாம் மீட்டுத் தன்பால் ஒடுக்கிக் கொள்ளுதலாகிய செயலுக்கு, உலகினைப் படைத்த புதல்வன் ஊழி முடிவில் அவ்வுலகங்களை 3யல்லாம் மீட்டுத் தன்பால் ட் கொள்ளுதலாகிய செயலினை உவமையாக எடுத்துக்காட்டி விளக்கும் முறையில் அமைந்தது,
“தொல்லூ ழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தாற்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான் கட்பெயர்ப்பான் போல்
எல்லுறு தெறுகதிர் மடங்கித் தன் கதிர்மாய'” (கலித். 129)
எனவரும் நெய்தற்கலியாகும். “பழையதாகிய ஊழித் தொடக்கத்திலே பலவிடங்களிலும் பரவிவாழ உடம்போடு உயிர்களைத் தடுமாறி மீட்டும் தன்னிடத்தே வந்து ஓடுங்குதலை விரும்பும் ஊழிமுடிவிலே பலவடிவுகளையும் தன்னிடத்தே மீட்டு ஒடுக்கிக் கொள்கின்றவனைப் போலே, கதிரவன் தன்னிடத்தினின்றும் தோன்றிப் புறத்தே பரவிப் பகற்பொழுதில் தெறுகின்ற தன் ஒளிக்ககிர்களைத் தன்னிடத்தே மீட்டுக்கொண்டு மறைய” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும்.

அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இவ்வாறு அவயவப் பகுப்புடையதாய்ச் சுட்டியுணரப்படும் உலகத்தொகுதியானது தோன்றுதல் நிலைபெறுதல் அழிதல் என்னும் முத்தொழிற்படுதலால் அஃது ஒருவினை முதலால் கோற்றுவிக்கப்பட்ட உள்பொருளே எனவும், அதுதான் மலம் நீங்காமையால் அது நீங்குதற்பொருட்டுத் தான் ஒடுங்குதற்கு ஏதுவாயிருந்த கடவுளால் மீளவும் உளதாம் எனவும், எனவே ஒடுக்குதலாகிய சங்காரத் தொழிலைச் செய்யும் கடவுளே உலவய்கு சொதத்கடடககம் எனவும் அறிவுறுத்துவது,
“அவன் அவள் அதுவெனும் அவை வுைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கிமலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்”
எனவரும் சவஞான போத முதற்சூத்திரமாகும். இந்நூலின் ஆசிரியராகிய மெய்கண்ட தேவர், “இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், சங்கார காரணனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம் என்பது
உணர்த்துதல் நுதலிற்று” என இம்முதற் சூத்திரத்திற்குக் கருத்துரை வரைந்துள்ளார். ஆசிரியர் மெய்கண்டார் சிவஞான போத முதற்சூத்திரத்தில் ஏது எடுத்துக்காட்டுக் களுடன் விரித்து விளக்கும் சைவசித்தாந்தத் தத்துவவுண்மையாகிய இக்கொள்கைக்குப் “படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ, கொடுகொட்டி ஆடுங்கால்” எனக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும் “பல்வயின் உயிரெல்லாம் படைத்தான் கட். பெயர்ப்பான்போல்'' என நெய்தற்கலியிலும் வரும் தொடர்கள் ஆதாரமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணர்தற்குரியதாகும். இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிற்கும் உரியனாயினும் ஊழிமுடிவில் யாவராலும் செய்ய இயலாத முற்றழிவாகிய மகாசங்காரத் தொழில் அவனொருவனாலேயே செய்தற்குரியதாதலின் அதுபற்றி அமீமுதல்வனைக் “காஅய் கடவுள்! (பரி.) என்றும்
“கொலைவன்” (கலி) என்றும், கூற்று (கலித்.) என்றும் சங்கச் செய்யுட்_கள் குறித்துள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

முக்கண்ணான்
ஞாயிறு, தங்கள், த என்னும் முச்சுடர்களைக் கண்களாக வுடையவன் இறைவன் ஆதலின் முக்கண்ணான் என்பது அவற்குரிய இருப்பெயராயிற்று. “முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்” (கலித். 1) எனக் கலித்தொகையிலும் “பணியிய ரத்தை நின்குடையே முனிவர், முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே” (புறம். 6) எனப் புறநானூற்றிலும் இப்பெயர் பயின்றுள்ளமை காணலாம். மூன்று கண்களுள் வலக்கண் ஞாயிறு. இடக்கண் தங்கள். நடுவேயுள்ள து தயினுருவாகிய நெற்றிக் கண்ணாகும். நெற்றிக் கண்ணாகிய இது ஏனைய இரண்டு கண்களைப் போல் நெற்றியின் &ழ் இருபக்கங்களிலும் படுத்த நிலையிலமையாது நிமிர்ந்து நின்ற நிலையில் இருத்தலால் ஏனைத்தேவர் கண்களினின்றும் வேறுபாடுடையதாய் உயர்ந்து விளங்கும் தன்மையினையுடையதாகும். இதன் இயல்பினை,
“கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண்போல
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற'' (புறம். 55)
எனவரும் தொடரில் மதுரை மருதன் இளநாகனார் உவமையாக எடுக்துக்காட்டியுள்ளார்.
240 சைவசித்தாத்த சாத்திர வரலாறு
“கறை சேர்ந்த திருமிட.ற்றையுடைய இறைவனது அழகிய திருமுடிப்
பக்கத்து அணிந்த பிறை சேர்ந்த திருநெற்றிக் கண்ணே
விளங்கும் ஓரு திருநயனம் போல (சேர சோழ பாண்டியர் ஆக: ) மூவேந்தருள்ளும் மேம்பட்டு விளங்கும் பொலிவு பெற்ற மாலையையணிந்த பாண்டியனே” எனப் பாண்டி.யன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனை முடிவேந்தர் மூவருள்ளும் முதன்மை பெற்றுபர்ந்தவனாகப் புகழ்ந்து போற்றுவதாக அமைந்தது மேற்குறித்த புறநானூற்றுத் தொடராகும். உலகினைப் படைத் களிக்கழிக்கும கடவுளர் மூவரினும் முதல்வனாகச் சிவபெருமானே உபர்ந்து விளங்கும் இறைமைத் தன்மை யினையுடையார் என்பது, மாலும் அயனும் ஆகிய ஏனை யிருவர்க்கும் இல்லாத இமையா நாட்டமாகிய நெற்றிக் கண்ணுடை மையால் உய்த்துணரப்படும். இறைவனை முக்கண்ணனாகத் கிருவுருவமைத்து வழிபடும் மரபு இந்ந.ட்.பூன் நெடுங்காலமாக நிலைபெற்றுள்ளமை அரப்பா, மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் நிகழ்ந்த அகம்வாராய்ச்சியால் நன்கு வலியுறுத்தப் பெற்றதாகும்.

ஏற்றூர்தியான், ஆனேற்றுக்கொடியோன் தூய வெள்ளை நிறம் வாய்ந்த ஆனேறு ஆகிய இட.11ம் சிவபெருமானுக்குரிய ஊர்இயாகவும் கெ: டியாகவும் தொன்றுதொட்டுப் போற்றப்பெற்று வருகின்றது. இச்செய்கு,
'ஊாதி வால்வெள்ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப: (புறம். கடவுள் )
“ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே' (அகம். கடவுள்)
“உருவ ஏற்றூர்தியான் (கலித். பரிபாடல் 6)
“புங்கவம ஊர்வோன் (பரி.)
"ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங்கணிச்சி மணிமிடற்றோனும்' (புறம். 56)
எனவரும் சங்க இலக்கியத் தொடர்களால் நன்குபுலனாம். தூயவெள்ளை நிறம் வாய்ந்த எருஇனை (இடபத்தினை) கொண்டதன் உட்கருத்து தூய்மெய்யுணர்வின்்௧ண் நிலைபெற்று விளங்குபவன் இறைவன் என்பதாகும். இந்நுட்பம், “உணர்வெனும் ஊர்வதுடையாய் போற்றி' எனவரும் தேவாரத் தொடரால் இனிது புலனாதல் காணலாம். இறைவனது ஊர்கஇயாகிய இடபத்தினை அறத்தின் வடிவாகக் கூறுதலும் உண்டு.

இறைவனுக்குரிய படைக்கலங்கள்
சிவபெருமான் தன் இருக்கைகளில் ஏந்திய படைக்கலங்களாகக் கணிச்சி - மழு, முத்தலைச்சூலம் என்பன குறிக்கப்பெற்றன. இறைவனுக்குப் படையாகக் கூறப்படும் கணிச்சியும் மழுவும் சொல்லால் வேறுபடினும் பொருளால் ஒன்றே என்பது பழையவுரையாகசிரியர் உரையாற் புலனாகின்றது. “இகலட்டுக், கையது கணிச்சியொடு மழுவே, மூவாய்வேலும் உண்டு அத்தோலாதோற்கே” எனவரும் அகநாஸூற்றுக் கடவுள் வாழ்த்தில் கணிச்சியாஒய மழுவும் மூவாய்வேலாகிய முத்தலைச்சூலமும் சிவபெருமானுக்குரிய படைக்கலங்களாகக் குறிக்கப்பெற்றன. “மழு என்பது சிறிய கோடரி போன்று அமைந்த பரசு என்னும் ஆபுதமாகும்.

ஆனேற்றவிர்பூண்
முழுமுதற் கடவுளாகிய சவபெருமானுக்குரிய உளப்இயும் கொடியும் ஆகிய ஆனேற்றினை (இட.பத்ிலை) நடுவில் வைத்து அதன் ஒருபக்கத்தில் இருமாலுக்குரிய நாந்தகம் என்னும் வாட் படையும் மற்றொரு பக்கத்தில் சிவனுக்குரிய மழுப்படையும் விளங்கப் பொன்னினாலும் பவளத்தினாலும் : செய்தமைத்த பொற்பூணினை இளங்குழந்தைகட்.குக் காப்பாக அணிவதென்பது சங்ககாலந்தொட்டுத் தமிழ் மக்களிடையே நிலவி வரும் பழக்கமாகும். இச்செய்தி,
ப “பூண்டவை,
எறியா வாளும் எற்றாமழுவும்
செறியக்கட்டி ஈரிடைத் தாழ்ந்த
பெய்புல மூதாய்ப் புகர்நிறத். துகிரின்
மையற விளங்கிய ஆனேற்று அவிர்பூண்'” (கலித். 85) எனவும்,

“பொலஞ்செய் மழுவொடு வாளணிகொண்ட
நலங்கினர் ஒண்பூண்”' (கலித். 86)
எனவும் வரும் மருதக் கலித்தொடர்களால் இனிது விளங்கும்.
“பூண்டவை, வெட்டாத வாளும் வெட்டாத
மழுவும் நெருங்கக்கட்டி, இரண்டு புறத்தினும் தங்கின
மழைபெய்த நிலத்துப் பரவிய ஈயல் மூதாயினது
(பட் டுப்பூச்சியின து) புகரையுடைத்தாகிய நிறத்தையுடைய பவளத்தாற் செய்த அழுக்கற விளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண்” என்பதும், “பொன்னாற் செய்த மழுவோடே.. வாளும் அணிதலைக்கொண்ட நன்றே விளங்குகின்ற ஒள்ளிய பூண்” என்பதும் இவ்விரு தொடர்களின் பொருளாகும்.
சிவனுக்குரிய அடையாளப்பூ கொன்றைமலர் பொன்போலும் நிறத்தினதாய்க் கொத்தாக மலரும் கொன்றைமலர் மாலை இறைவனுக்குரியதாகும்.
“கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்” (அகம். கடவுள்)
“கண்ணி கார்நறுஙகொன்றை காமர்
வண்ணமார்பில் தாரும் கொன்றை”: (புறம். கடவுள்)
“ அயந்திகழ் நறுஙகொன்றையலங்கலந் தெரியலான்”” (கலி. 150)
“மணிமிடற்று மாண்மலர்க் கொன்றையவன்”” (கலி. 143)
என்றாங்குவரும் சங்க இலக்கியத் தொடர்கள்
சிவபெருமானுக்குச் சிறந்தது கொன்றை மலர்மாலை என்பதனை அறிவுறுத்துவன, கொன்றை பொன்னார் மேனியனாகிய சிவபெருமானைப் போன்று பொன்னிறம் வாய்ந்த பூவாகும். ஐந்திதழ்களையுடைய இம்மலர் சிவபெருமானுக்குரிய மந்திரமாகிய திருவைந்தெழுத்தின் அடையாளமாகும். இவ்விதழ்களின் மேலாகத் தமிழ் ஓகாரவெழுத்தமைப்பில் திருவாசிபோல் வளைந்துள்ள முனை ஓங்காரமாகிய பிரணவத்தின் அமைப்புடையது. இவ்வாறு தாரவைந்தெழுத்தின் அமைப்பில் உருவும் நிறமும் வாய்ந்த கொன்றைமலர் ஐந்தெழுத்தின் உருவாகி நின்ற இறைவனுக்குரிய அடையாளப்பூவாயிற்று என்பர் பெரியோர்.

மாலொருபாகர் (சங்கரநாராயணர்)
அந்திவானம் போன்ற திருமேனியன் சிவபெருமானும் கடல்நிற வண்ணனாகிய திருமாலும் ஆகிய இருபெருந் . தெய்வத்திருமேனியும் ஒருருவாய் உடனியைந்து தோன்றும் திருவுருவம் சங்கரநாராயணர் (மாலொருபாகர்) திருமேனியாகும். கொடியோர் அஞ்சுதற்குக் காரணமான பேராற்றல் வாய்ந்த செம்மேனி யிறைவனாகிய சவனும்கரிய இருமேனிய னாகிய திருமாலும் ஒருருவினராய்த் திகழும் தோற்றம் போல அந்தி வானமும் கருங்கடலும் ஒருங்கியைந்து அழகுபெற்றுத் தோன்றும்படி மாலைக்காலம் வந்தது என்பார்,
“வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து
உருஉடனியைந்த தோற்றம் போல
அந்திவானமொடு கடல் அணிகொளாஅ
வந்த மாலை” (அகம். 360)
என்றார் மதுரைக் கண்ணத்தனார் என்னும் புலவர் பெருமான். சங்ககாலத்தில் உமையொருபாகர் திருமேனியைப் போன்று மாலொருபாகர் (சங்கர நாராயணர்) திருமேனியும் சிவபெருமானுக்குரிய திருமேனிகளுள் ஒன்றாகக் கருதி வழிபடப்பெற்றதென்பது இங்கெடுத்துக் காட்டிய அகநானூற்றுப் பாடற்பகுதியால் இனிது விளங்கும். இதனால் வன் திருமால் வழிபாடுகளுக்கிடையேயமைந்த ஒருமைப்பாடும் நன்கு புலனாதல் காணலாம். 

இங்ஙனம் சிவபெருமானும் திருமாலும் ஒருருவாய் உடன் இயைந்து தோன்றும் இருவுருவத் தோற்றத்திற்கு உவமை கூற எண்ணினால் பொன்மலையும் நீலமலையும் ஒருங்கியைந்து நீண்டுயர்ந்து நிற்கின்ற தோற்றத்தினை. உவமையாகக் கூறுதல் பொருந்தும் என்பார்,

“மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால்
என்போலும் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும்
பொற்குன்றும் நீலமணிக்குன்றுந தாமுடனே
நிற்கின்ற போலும் நெடிது” (அற்புத் திருவந்தாதி 83)
என்று அருளிச் செய்தார் காரைக்காலம்மையார். “மின்னலையொத்து மிளிரும் சிவந்த சடையினையுடைய சிவபெருமான் (தனது ஒருபாகத்தில் விளங்கும் காத்தற் கடவுளாகிய) திருமாலோடும் இங்கு இசைந்து எழுந்தருளினால் அத்தெய்வத் தோற்றம் காண்பார்க்கு எங்ஙனம் திகழும் எனக் கேட்பீராயில், தனக்குத் தானேயொப்பென விளங்கும் பொன்மலையும் நீலநிறம் வாய்ந்த மணிமலையும் ஒருங்கியைந்து மிகவுயர்ந்து விளங்கும் தோற்றத்தை ஒப்பதாகும்'” என்பது இதன்பொருள்.
“பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் - என்னும்
இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்
ஒருவனங்கத் தென்றும் உளன்” (இயற்பா, முதற்றிருவந்தாதி 98) எனப் பொய்கையாழ்வாரும்.
“ தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும்
சூழரவும் பொன்னாணுத் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைத்து” ப
(இயற்பா, மூன்றாந்திருவந்தாதி 63)
எனப் பேயாழ்வாரும் அருளிய அருளிச் செயல்கள் சங்கரநாராயணர் திருவுருவ அமைப்பினை. நன்கு
புலப்படுத் துவனவாகும். சி அட்டமூர்த்தி (எண்பேருருவினன்)
கண்க சிவபெருமான் நிலம், நீர், $, காற்று, ஆகாயம், ஞாயிறு, இங்கள், வேள்வித் தலைவனாகிய ஆன்மா என எண்பேருருவினனாக உலகுயிர்களோடு பிரிவின்றிக் கலந்து விளங்குகின்றான் என்பது
சிவ நெறியாளர்கள் தாம் வழிபடும் இறைவனுக்குக் கூறும் சிறப்புடைய இலக்கணமாகும்.
“மாஅயோயே மா அயோயே,
மறுபிறப்பறுக்கும் மாசில்சேவடி
மணிதிகழுருவின் மாஅயோயே'” (பரிபாடல் 3)
எனத் திருமாலை எதிர்முகமாக்கிப் போற்றத்தொடங்கிய . கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பெருமான் திருமாலும் சிவனும் ஒருமுழுமுதற்பொருளே என்னும்: ஒருமையுணர்வுடன் . சவபெருமானுக்குரிய அட்ட மூர்த்தவடிவினைத் திருமாலுக்கு ஏற்றிக் கூறுவதாக அமைந்தது,
“தீவளிவி ட ட ன் நீர் ் க
. ஞாயிறும் திங்களும் அறனும்” _ (பரி.3:4,5) எனவரும் பரிபாடற்றொடராகும். அச்சேவடி (மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி) கூறுதற்கு முகம் புகுகின்றாராதலிற் பலகாலும் எதிர்முகமாக்கினார்; ஆக்கி வாழ்த்துகின்றவர் அவன்கண் தோன்றிய பொருள்கள் கூறுவான் தொடங்கி, ஈசற்கு ர வண்டறை தவளி விக்புநில் நீர் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் தங்களும் வேள்வி முதல்வனும் என இவை, வேட்டின்ற வடிவு தருமமாதலின் அஃது அறனெனப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் உரை விளக்கம் அட்டமூர்த்தி வடிவம் சிவனுக்குச் இறந்து எடுத்துக் கூறப்படுவது என்பதனை நன்கு வலியுறுத்துவதாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

சிவபெருமானுக்குத் திருமுகங்கள் ஐந்து
சிவபெருமானுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளன என்பதும் ஐந்து திருமுகங்களையுடைய அம்முதல்வனே உலகுயிர்களைத் தன்கண் ஒடுக்கவல்ல பேராற்றல் படைத்தவன் என்பதும் அவ்விறைவன் திருமாலாகவும் திகழ்கின்றான் என்பதும்
“ஐந்தலை யுயரிய அணங்குடை. யருந்திறல் . '
மைந்துடை யொருவனும் மடங்கலும்-நீ” (பரி. 1)
எனத் இருமாலைப்போற்றும் பரிபாடற் பகுஇியாலும், “ஐந்து தலையைத் தோற்றுவித்த அணங்குடை அருந்திறலையுடைய . . . ஈசன், மடங்கல்-அவனினாகிய உலகுயிர்களின் ஒடுக்கம்” எனவரும் பரிமேலழகர் உரைக் குறிப்பானும் அறியப்படும். '

வாய்மைப் பொருள் சிவன்
சிவபெருமான், தன்னை வணங்கிக்கேட்் போர் யாவராயினும் அவர்கேட்ட வரங்களை மாறாது கொடுத்தருளுதலில் தவறாத வாய்மையுடையன் என்பது, அம்முதல்வனைக் குறித்து வழங்கும் புராணங்களால் அறியப்படும்.. அம்முதல்வன் உமாதேவியைத் திருமணம் புரிந்து கூடியிருக்கும் காலத்திலே இந்திரன் வந்து அப்பெருமானிடம் ஒருவரம் கேட்டு “உமையொடு கூடிய புணர்ச்சியால் தோன்றிய கருவை அழிப்பார்யாக” என வேண்ட மழுப்படையைத் தரித்த இறைவன் வர்ய்மையில் தவறாதவனாதலின், “அவ்விந்திரனுக்குத் தான் கொடுத்த வரத்தைச் செய்தற்கரிதென மாற்றாமல் ஏழுலகத்தவர்களும் வியக்க அதனுருவினைப் பல கண்டமாகச் சேதித்தான்” எ.ன ஐந்தாம் பரிபாடலிற் கூறிய செய்கி முன்னர் முருகளைப் பற்றிய செய்திகளில் எடுத்துக்காட்_ டப்பட்ட து. ஆலின்்&ழ் அறமுரைத்த அருந்தவமுதல்வனாகிய சிவபெருமானே யார்கண்ணும் ஐயந்தீர மெய்ப்பொருளை யறிவுறுத்தி எக்காலத்தும் பொய்கூறா வாய்மையனாகத் திகழ்கின்றான் என்பது, .
. “ஐயந்தீர்ந்தியார்கண்ணும் அருந்தவ முதல்வன்போல்
பொய்கூறாய் என நின்னைப் புகழ்வது” (கலி, 100)
எனவரும் மருதக்கலியாலும் “அரிய தவத்தையுடைய அறமுரைத்த நாயனாரைப்போல யாவரிடத்தும் 'பொய்கூறாய் என ஐயம் அற்று உலகம் நின்னைப் புகழ்கின்ற தன்மை” எனவரும் அதன் உரையாலும் அறிவுறுத்தப் பெற்றது

ஈறிலாதவன் இறைவன்
எவ்விடத்தும் எக்காலத்தும் மாறாதுள்ள நிலையை சத்து என்னும் செம்பொருளுக்கு இயல்பாகவுள்ள தன்மையாகும். செம்பொருளாகிய சிவம் எக்காலத்தும் தரிபின்றி அழியாது உள்ளது ஆதலின் அதற்குப் பிறப்பும் இல்லை இறப்புமில்லை என்பதும் அது தோற்றமும் ஈறுமில்லாத முழு முதற்பொருள் என்பதும் சிவநெறியாளர் துணிபாகும். அதியமான் நெடுமானஞ்சி என்னும் வள்ளல் சாதலைத் தடுத்து நீண்டநாள் வாழச் செய்வதும் பெறுதற்கு அரியதும் ஆகத் தான்மலையுச்சியிற் கொண்ட. நெல்லிக் கனியின் ஆக்கத்தினை வெளிப்படுத்தாமல் ஒளவையார்க் குக் கொடுத்தானாக அதனையுண்டு. அதன் விளைவினை அறிந்துகொண்ட ஒளவையார் தன்பால் அதியமான் கொண்டுள்ள பேரன்பினையும் பெருமகுப்பினையும் எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து அவனை வாழ்த்துவதாக அமைந்தது,
988 சைவ சித்தாத்த சாத்திர வரலாறு
“வலம்படுவாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித்தடக்கை
ஆர்கலிநறவின் அதியர் கோமான்
போரடுதிருவிற் பொலந்தார் அஞ்சி
பால்புரை பிறைநுதற்பொலிந்த சென்னி
"நீலமணி மிடற்றொருவன் போல
மன்னுகபெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது
ஆதல்நின்னகத்தடக்கிச
சாதல்நீங்க எமக்கீத் தனையே” (புறம். 91)
எனவரும் புறநானூற்றுப் பாடலாகும். “மாற்றாரைப் போரின்கண் கொல்லும் வீரச் செல்வத்தினையுடைய அதியர்கோமான் நெடுமானஞ்சியே, நீ பெரிய மலையின் உச்சிக்கண் கொள்ளப்பட்ட அரிய இனிய நெல்லிக் கனியைப் பெறுதற்கு அரிதென்று கருதாது அதனாற் பெறும் பேற்றினை எமக்குச் சொல்லாது நின்னுள்ளே
அடக்கி எமக்குச் சாதல் நீங்க அளித்தாய்; ஆதலால் பால்போலும்' பிறைநுதலிடத்தே பொலிவுபெற்றுத் தோன்றும் திருமுடியையும் நீலமணிபோலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒப்பற்ற முதல்வனாகிய சிவபெருமானைப் போல என்றும் நிலைபெற்று வாழ்வாயாக” என இப்பாடலால் அதியமானை வாழ்த்து: கின்றார் ஒளவையார். “நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுகபெரும் என வாழ்த்தியதன் குறிப்பு, சவபெருமான் எக்காலத்தும் அழிவின்றி நிலைபெறுமாறு போல நீயும் அழிவின்றி நிலைபெறுக என்பதாம். . “நீலமணிமிடற்றொருவன் போல”: என்ற கருத்து, சாதற்குக் காரணமான நஞ்சுண்டும் நிலை பெற்றி ருந்தாற்போல நீயும் சாவாதிருத்தல் வேண்டும் என்பதாம் எனப் புறநானூற்றின் பழைய வுரையாசிரியர் இக்குறிப்பினைப் புலப்படுத்தலால் நீலமணி மிடற்றொருவனாகிய ஈசனே என்றும் அழிவின்றியுள்ள முழு முதற் கடவுள் என்பது அதியமானை வாழ்த்திய ஒளவையார் துணிபாதல் நன்கு தெளியப்படும். ஒளவையார் பாடிய இப்பாடலை அடியொற்றியமைந்தது. “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே' (5-100-3) எனவரும் அப்பரடிகள் வாய்மொழியாகும்.
*ஆறெலாங்கங்கையே யனைய
குன்றெலாம், ஈறிலான் கயிலையே ஏய்ந்த' (கம்பர்.பால.) எனவரும் பாடலிற் கவிச்சக்கரவர்த்து கம்பர் சவபெருமானை “ஈறிலான்' என்ற பெயராற் குறித்துள்ளமையும் இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும்.
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ, , . ௮59௮

சிவநெறிக்கொள்கைகள்
அம்மையப்பனாகத் திகழும் சிவபெருமான் மன்னுயிர்களின் பொருட்டு உலகங்களைத் தோற்றுவித்துக் குறித்தகாலம் வரை அவற்றை நிலைபெறச் செய்து - ஊழிமுடிவில் மீட்டுத் தன்னிடத்து ஒடுங்கச் செய்கின்றான் என்பதும், ஊழிமுடிவில் உலகங்களை ஒடுக்கிய இறைவனே உயிர்களின் பொருட்டு உலகங்களை மீளவும் படைத்தருள் கின்றான் என்பதும் எனவே மகாசங்காரகாரணனாகிய சிவபெருமானே உலகத்திற்கு நிமித்தகாரணன் என்பதும், கலித்தொகைக் கடவுள் வாழ்த்தின் பொருளை விளக்குமிடத்து முன்னர் விளக்கப் பெற்றன. காணப்படும் உலகமாகிய காரியத்தைக் கொண்டு அதற்கு நிமித்த காரணமாயுள்ள முழுமுதற் பொருள் ஒன்று உண்டுஎனக் கருதலளவையால் கடவுளுண்மை துணிய வேண்டுதலின் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார், “ஒருவன் இருதாள் தாள்நிழற்&ழ் மூவகை யுலகழும் முறையே முகழ்த்தன' என உலகின் மேல் வைத்துக் கூறினார். ஆயினும் மூவகை யுலகங்களையும் தன்தாள் நிழற்&ழ்க் கொண்டு அவற்றை முறையே முகழ்க்கும்படி, (தோன்றும்படி) செய்தருளியவன் “நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்” என்பது ஆரியர் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும். இத்தொடரில் 'தாள்நிழல்' என்றது, இறைவன் திருவடி நீழற்கண் அடங்கிய. தூயமாயையாகிய சட ஆற்றலையெனக் கொள்ளுதல் வேண்டும், கிழங்கினின்றும் முளைத்த தாமரையை அதற்கு ஆதாரமாகிய சேற்றினின்றும் முளைத்தது என்னும் பொருளில் பங்கயம் என வழங்கினாற் போல மாயையினின்றும் தோன்றிய உலகங்களை மாயைக்கு ஆதாரமாகிய திருவடி நீழலினின்றும் முகிழ்த்தன என்றார் பெருந்தேவனார்

மூவகையுலகம் ஆவன மேல், நடு, &ழ் என முப்புணர் அடுக்கிய உலகத் தொகுதிகள். மூவகை யுலகங்களும் எவ்வேழுவகைப்பட்டுள்ளன என்பது, “மூவேமுலகமும் உலகினுள்மன்பதும்” (பரிபாடல் 9) என்பதனாற் புலனாம். “மூவேழுலகம் - ஒரோவொன்று எழுவகைப்பட்ட மூன்றுலகம். மன்பது - ஒழிந்த உயிர்ப்பன்மை” என்பர். பரிமேலழகர். இனி, “மூவகையுலகு' என்பதற்கு,“அவன் அவள் அதுவெனும் அவயவப்பகுப்புடையனவாய்ச் சுட்டியுணரப்படும் உலகத்தொகுதி' எனப் பொருளுரைத்தலும் பொருந்தும்.
“அவன் அவள் அது வெனும்
அவை மூவினைமையின்
தோற்றிய திதியே (சிவஞான போதம், சூத்திரம்) என்றார் மெய்கண்டார். ஒருவன் என்றும் ஒருத்தியென்றும் ஒன்றென்றும் கூறப்படும்.

அவயப்பகுப்புடையதாயும் பல்வேறு வகைத்தாய்ச் சடமாயும் சுட்டி.யறியப் படுவதாயும் இருத்தலின் இம்மூன்று ஏதுக்களாலும் காணப்படும் உலகம், தோன்றிநின்று அழிதலாகிய முத்தொழிற்படும் உள்பொருளேயாம் என்பது இத்தொடரின் பொருளாகும்.

சிவபெருமானைப் போற்றிப்பரவும் முறையிற் பெருந்தேவனார் பாடியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களில், “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்”, “யாழ் கெழு மணிமிடற்று அந்தணன்”, “தாழ்சடைப்பொலிந்த அருந்தவத்தோன்' எனவரும் தொடர்கள் கடவுளுண்மை யினையும், “மூவகையுலகும் முகிழ்த்தனமுறையே”, “தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே' எனவரும் தொடர்கள் உலகின் உண்மையினையும், “மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும்', “எல்லாவுயிர்க்கும்' "எனவரும்
தொடர்கள் உயிர்களின் உண்மையினையும் புலப்படுத்த நிற்றல் காணலாம். எனவே கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாக (அநாதியாக) உள்ள பொருள்களே என்னும். சைவ சித்தாந்தத். தத்துவத்துக்குரிய வேர்கள் (மூலங்கள்) சங்கச் செய்யுட். களாஇய இப்பாடல் களில் ஊன்றியிடங்கொண்டு பரவியுள்ளமை நன்கு தெளியப்படும்.

கோயில்களும் திருவிழாக்களும்
தமிழகத்திற் பேரூர்களிலும் சிற்றூர்களிலும் சிவபெருமானுக்குரிய திருக்கோயில்கள் நிலைபெற்றிருந் தன. சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழன் செங்கணான் சோணாட்டிலுள்ள அகநாடுகள் தோறும் சிவபெருமானுக்கு மாடக்கோயிலைக் கட்டினான் என்ற செய்தி திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றது. கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களிற் பல மூவரருளிய தேவாரத்திருப்பதிகங்களில் ஆங்காங்கே போற்றப்பெற்றுள்ளமை காணலாம். கோச்செங்கட் சோழன் சிவபெருமானுக்கு எழுபது மாடக்கோயில்களைக் கட்டியுள்ளான் என்பதும் சிறந்த சவனடியானாகிய அவ்வேந்தர் பெருமானே இருநறையூர் மணிமாடமாகிய திருமாலுக்குரிய தஇிருக்கோயிலையும் கட்டியுள்ளான் என்பதும், _
“இருக்கிலங்குதிருமொழி வாய் எண்தோளீசற்கு
எழில்மாடம் எழுபது செய்துலக மாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்தகோயில்
திருநறையூர்மணிமாடம் சேர்மின்களே” (பெரியதிருமொழி, 6-3-8)
எனவரும் திருமங்கையாழ்வார் அருளிச் செயலால் அறியப்படும்.

சோழநாட்டின் அகநாடுகளுள் ஒன்றாகிய புகார் நாட்டில் உலகம் முழுதும் பரவிய பொருள்சேர்புகழ்த்திறம் வாய்ந்த நான்மறைகளைத் திருவாய்மொழிந்தருளிய முக்கட் செல்வராகிய சிவபெருமானுக்குரிய இருக்கோயில் ஆலமுற்றம் என்ற இடத்தில் அழகுபெற அமைந்திருந்த தென்பதும் அக்கோயிலையடுத்துப் பொய்கையும் அதனைச் சூழச்சோலையும் அமைந்திருந்தன என்பதும்,

992 சைவ சித்தாத்த சாத்திர வரலாறு
“ஞாலம் நாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட்செல்வர்
ஆலமுற்றங் கவின்பெறத்தைஇய
பொய்கைகூழ்ந்த பொழில் .. .. .
புகாஅர் நன்னாட்டதுவே'' (அகம். 181) எனவரும் அகநானூற்றுப்பாடற்பகுதியால் அறியப்படும்.

பாண்டிநாட்டின் தலைநகராகிய மதுரையில் சிவபெருமானுக்கு ஏழு நாள் திருவிழா நடந்தது என்பதும்,
ஏழாம் நாளின் அந்திக்காலத்தில் நாட்டு மக்கள் தீவினை நீங்கத் தர்த்தமாடினர் என்பதும்,
“கழுநீர்கொண்ட எழுநாளந்தி .
ஆடுதுவன்று விழவின் நாடார்த்தன்றே'' (மதுரைக். 427-428)

எனவரும் மதுரைக் காஞ்சித் தொடராற் புலனாகும். “வினையைக் கழுவுதற்குக் காரணமான இர்த்தநீரைத் தன்னிடத்தே கொண்ட ஏழாம்நாளின் அந்திக்காலத்தே வெற்றிநெருங்கும் இருவிழாவிற்குத் திரண்ட நாட்டிலுள்ளோர் ஆர்த்த ஆரவாரம்” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். “கால்கொள்ளத் தொடங்கிய ஏழாம் நாள் அந்தியிலே $ர்த்தமாடுதல் மரபு” என்றார் நச்சினார்க்கினியர். இனி, “ஏழுநாள் அந்தி” என்பதற்கு “ஏழாம்நாளின் அந்திப்பொழுது' எனப் பொருள் கொள்ளாமல் “ஏழாம்நாளின் அந்தத்தில் (முடிவில்), அஃதாவது எட்டாம் நாளில் இர்த்தமாடுதல் மரபு எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும் இம்மரபு, ப
“தீர்த்தமாம் அட்டமிமுன்சீருடை ஏழுநாளுங்
கூத்தராய் வீதிபோந்தார் குறுக்கை வீரட்டனாரே”
எனவரும் திருநாவுக்கரசர் தேவாரத்திற் குறிக்கப் பெற்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணர்தற்குரியதாகும்.

அவிர்சடை முனிவர்
சங்கவிலக்கியத்திற் கூறப்படும் அவிர்சடைமுனிவர் என்போர் செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானை வேள்வித் த வடிவிற் போற்றி வழிபடும் விரிசடை. விரதிகள் எனக் கருதவேண்டியுள்ளது. அருந்தவ முனிவர்களாகிய இவர்கள் மலைகளிலும் காடுகளிலும் ஊர்ப்புறங்களிலும் தங்கித் தவம்புரியும் இயல்பினர். வேள்விக்குண்டத்தில் தயினைவளர்த்து நறுநெய் ஆவுதி வழங்கி அழல் வண்ண னாகிய இறைவனை வழிபடுதல் இவர்தம் இயல்பாகும். தவமுனிவராகிய இவர்கட்கு யானை முதலிய விலங்குகளும் பணி செய்தல் உண்டு.
“இன்சீர்க்
கின்னரம் முயலும் அணங்குடைச்சாரல்
மஞ்ஞை யாலும் மரம்பயிலிறும்ப"ன்
கலையாயந்துதிர்ந்த மலரவிழ்புறவின்
மந்தி சீக்கும் மாதுஞ்சுமுன்றிற்
- செந்திப்பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங்கருவிய மலைகிழவோனே” (பெரும்பாண். 493-500) எனவும்,
“கானயானை தந்த விறகின்
. கடுந்தெறற் செந்தீவேட்டுப்
புறந்தாழ்புரிசிடை புலர்த்துவோனே'”' (புறம். 251) எனவும்,
“தாழ்காவின், அவிர் சடைமுனிவர் அங்கிவேட்கும்
ஆவுதி நறும்புகை” (பட்டினப். 53, 54) எனவும்,
-““சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தியந்தணர் அருங்கடன் இறுக்கும்
பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே” (புறம். 2)
எனவும் வரும் தொடர்கள் இத்தகைய அருந்தவ முனிவர்களைக் குறிப்பன.

மிக்கதவத்தைச் செய்த பெருமக்கள் தமது உடம்பினை நிலத்தில் அழிய விடாமலே அவ்வுடம்போடு நெடுங்காலம் வாழ்ந்திருந்து தாம் செய்த தவப்பயனை நுகரும் சித்தர்களாகத் திகழ்ந்தனர். இச்செய்கு,
“தவஞ்செய்மாக்கள் தம்முடம்பு இடாது
அதன்பயம் எய்திய அளவை மான” (பொருந. 91, 92) எனவரும் பொருநராற்றுப்படைத் தொடராற் புலனாகும். “மிக்க தவத்தைச் செய்கின்ற பெருமக்கள் தம்முடைய தவத்திற்கு உறுதுணையாகிய உடம்பினை நிலத்தில் இறக்கவிடாமல் அவ்வுடம்புடன் நெடுங்காலம் உயிர்வாழ்ந்திருந்து அத்தவத்தாற் பெறுதற்குரிய பயனைப் பெற்ற தன்மையை யொப்ப” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். ப

வான்மீகியார் என்னும் புலவர்பெருமான் தவத்தின் சிறப்பினை யுணர்த்துவதாக அமைந்தது,
“பருதி சூழ்ந்த இப்பயங்கெழு மாநிலம் .
ஒருபகல் எழுவர் எய்தியற்றே
ஈ*வயமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
ஐயவியனைத்தும் ஆற்றாது ஆகலின்
கைவிட்டனரே காதலர் அதனால் .
விட்டோரை விடாள்திருவே
விடாதோர் இவள் விடப்பட்டோரே” (புறம். 358)
எனவரும் புறநானூற்றுப் பாடலாகும். இது, மனையறம் துறவறம் என்னும் இருவகையறங்களுள் துறவறத்தின் சிறப்பினை விரித்து விளக்குவதாய் வீடுபேறடைதற்கு நிமித்தமாக விளங்குவது இருவகைப் பற்றுக்களையும் நீத்த துறவறமே என வற்புறுத்துகின்றது.

சூரியனாற் சூழப்பட்ட பயன்நிரம்பிய இவ்வுலகம் ஒருநாளில் எழுவரைத் தலைவராக "எய்இயதனையொத்து நிலைமாறும் தன்மையதாகும். இவ்வுலகத்தையும் மக்கள் மேற்கொள்ளவேண்டிய தவத்தையும் இவற்றுள் எது திறந்தது எனச் சீர்தூக்கிப் பார்ப்போமானால் இவ்வுலகம் தவத்தொடு வைத்து நோக்க வெண்டிறுகடுகளவும் நிறை நிற்பதன்றாம். ஆதலால் வீட்டின்பம் பெற விரும்பியோர் மனைவாழ்க்கையைத் துறந்து தவத்இுற் புகுந்தார். அதனால் உலகப் பற்றினை விட்டோராகிய அவரைச் செல்வத்கிற்குத் தெய்வமாகிய இருமகள் கைவிடமாட்டாள். உலகப் பற்றினை விடாத ஏனையோர் இத்திருமகளாற் கைவிடப் - பட்டவர்களே” என்பது இப்பாடலின் பொருளாகும் இறைவன் திருவருளையே விரும்பி ஏனைப் பொருள்களிற் பற்று.விட்டவர்களையே எல்லாச் செல்வங்களும் விரும்பித் தொட.ரும் என்பது, ப
“நின்னையே தான்வேண்டி நீள் செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும். செல்வம்” ( திவ். பெருமாள் திருமொழி 5 : 9)
எனவரும் குலசேகரப் பெருமாள் அருளிச் செயல் உலகப் பற்றினைத்துறந்து பற்றற்றானைப் பற்றுதலால் வரும் பயனைப் புலப்படுத்தல் காணலாம்.

முக்கோலந்தணர்
"எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகும் அறவோராகிய இவர்கள் உறியிலே தங்கின கமண்டலத் தையும் மூன்று கோல்களை ஒன்றாகச் சேர்த்துக் கட்டின முக்கோலையும் முறைமைப்படத் தோளிலே சார்த்திக் கொண்டு வெயில் வெம்மையினைத் தாங்கும் குடையினை யேந்திக் கொண்டு வெம்மையுடைய காட்டின்க௧ண்டே செல்லும் துறவிகளாவர். இவர்கள் கொண்டுள்ள முக்கோல் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத் தொழிலுக்குரிய அயன் அரி அரன் என்னும் மூவரும் வடிவினாலும் தொழிலினாலும் வேறுபடினும் முழுமுதற் கடவுளாந் தன்மையில் ஒருவரே யென்பதனை யுணர்த்தும் அடையாளமாகும். இந்நுட்.பம் 'உரைசான்ற முக்கோலும்” என்ற கலித்தொகைத் தொடர்க்கு “அரிஅயன் அரன் அமைந்த முக்கோலையும்”” என நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் நன்கு புலனாதல் காணலாம். இவர்தம் இயல்பினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,
“எறித்தரு கதிர்தாங்கி யேந்தியகுடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்றமுக்கோலும்
நெறிப்படச் சுவல் அசைஇவேறேரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல் மாலைக்கொளைநடை அந்தணீர்'' (கலி, 3) எனவரும் பாலைக்கலியாகும.
“எறித்தலைச் செய்கின்ற ஞாயிற்றின் கதிர்களைத் தாங்குகையினாலே எடுக்கப்பட்ட குடைநீழலிலே உறியிலே தங்கின கமண்டலத்தையும் சொல்லுதல் அமைந்த முக்கோலையும் முறைமைப்படத் தோளிலேவைத்து (முத்தொழில் புரியும் கடவுளர் மூவரையும் ஒருவராக வல்லது) வேறாக நினையாத நெஞ்சத்தாலே (ஐம்பொறியும்) மனக்குறிப்பின்படி ஏவல் செய்யும் கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் உடைய அந்தணர்களே” என்பது மேற்காட்டிய தொடரின் பொருள். “வேறொராநெஞ்சத்து” என்பதற்கு “அரிஅயன்அரன் என்னும் மூவரையும் ஒருவனாக அல்லது வேறாக நினையாத நெஞ்சத்தாலே” எனவும், “குறிப்பு ஏவல் செய்மாலைக் கொளைநடை அந்தணீர்” என்பதற்கு 'ஐம்பொறியும் நுமக்கு ஏவல் செய்தலை இயல்பாகவுடைய கோட்பாட்டையும் ஒழுக்கத்தையும் இயல்பாகவுடையீர்' ் எனவும் நச்சினார்க்கினியர் எழுதிய உரைவிளக்கம் மிகவும் பாராட்டுதற்குரியதாகும்.

முக்கோற்பகவராகிய இவர்கள் காவிக்கல் பொடியில் தோய்த்தெடுத்த கல்லாடையினையுடுக்கும் தவக்கோலம் உடையர் என்பது,
“கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப'் (முல்லைப். 36-37) எனவரும் முல்லைப்பாட்டடிகளாற் புலனாகும்.

சிவபெருமானை வழிபடுவோராகத் தேவார ஆசிரியர்களாற் குறிக்கப்படும் அகச்சமயத்தார் அறுவருள் அவிர்சடைமுனிவர் வழியொழுகும் திருவேடமுடையார் விரிசடை விரதிகள் எனவும், முக்கோலந்தணர் வழியொழுகும் தவவேடமுடையார் அந்தணர் எனவும் அணவறகுவ் ஏற்புடையதாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

வடக்கிருத்தல்
உலகவாழ்க்கையில் தாம் செய்துமுடிக்க எண்ணிய அருஞ்செயலை இப்பிறப்பில் நிறைவேற்ற முடியாத நிலையினை அடைந்தவர்களும் ஆருயிர் நண்பரை யிழந்தவர்களும் பிறவிப்பிணிப்பினை நீத்து உயர்ந்த வுலகமாகிய வீடுபேற்றினை விரும்பி இவ்வுலக வாழ்க்கை யினைத் துறந்து உண்ணாநோன்பினை மேற்கொண்டு புண்ணியத்துசை யெனப்படும் வடஇசையினை நோக்க ஓரிடத்து அமர்ந்திருந்து ஊனினுள் உயிரைவாட்டித் தம்முள்ளத்துள்ளே மெய்ப்பொருளை இடைவிடாது நினைந்திருந்து தம் உயிரைத்துறப்பர். வடதிசையினை நோக்கி மெய்ப்பொருளை நினைந்து உண்ணா நோன்பினராய்த் தமது உயிரைத் துறந்து வீடுபெறும் இத்தவ நிலை வடக்கிருத்தல் என்ற பெயராற் புறநானூற்றிற் குறிக்கப் பெற்றுள்ளது. உண்ணாநோன்பிருந்து உயிர் துறத்தல் சமண்சமயச் சான்றோர்களால் மேற்கொள்ளப் படுவது. எனினும் வடக்கு நோக்கித் இயானத்தில் இருத்தல் வேண்டும் என்னும் நியதி அவர்கட்கு இல்லை. தமிழகத்தின் தென்பகுதி கடலாற்கொள்ளப்பட்டு அத்திசை அழிவிற்கு இடமானமையின் தென்திசை கூற்றுவன் இசையெளவும் தெற்கே குமரி கடலாற் கொள்ளப்பட்ட காலத்து வடக்கே இமயம் உயர்ந்து தோன்றி இடந்தந்தமையின் வடஇசை புண்ணிய திசையெளவும் மக்களாற் கருதப்படுவன வாயின.
அன்றியும் இமயம் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலைச் சிகரத்தைத் தன்கண் கொண்டமையாலும் அம்முதல்வன் ஆலின்&ழ் .முனிவர்கட்கு அறமுரைத்த ஞான்று தென்திசை ரக பிறந வளைவான உலகப் பற்றிளைத்துறந்து வீடெய்த விரும்பும் பெருமக்கள் வடதிசை நோக்கியிருந்து மெய்ப்பொருளை இடைவிடாது சிந்தித்திருந்து உயிர் துறத்தலைத் தமக்குரிய தவநோன்பாகக் கொண் டெொழுகினர் எனக் கருதவேண்டியுள்ளது. உண்ணா நோன்புடையராம் வடக்கிருத்தலை மேற்கொள்வோர். வெயில் வெப்பந்தாக்காது ஆற்றிடைக்குறையினளையும் சோலையினையும் வடக்கிருத்தற்குரிப் இடமாகக் கொண்டனர். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் சுடுபாறையிற் கிடத்தல் முதலாக உடம்பினை வருத்தும் முறைகளைக் கொண்ட சமணரது உண்ணாநோன்பின் வேறுபட்டது வடக்கிருத்தலாகிய இந்நோன்பென்பது நன்கு புலனாகும்.

சேரமான் பெருஞ்சேரலாதன், மன் கரிகாற் பெருவளத்தானோடு வெண்ணிப்பறந்தலையிற் ,போர் செய்த நிலையில் கரிகாற்பெருவளத்தான் எய்த அம்புத் தன்மார்பில் தைத்து ஊடுருவிப்புறத்துச் சென்றநிலையில் தன்முதுகில்புறத்து உண்டாகிய புண் புறப்புண்ணாதலை யொக்கும் என நாணி வாளொடு வடக்கிருந்து உயிர் துறந்தனன் என்ற செய்தி புறநானூறு 65, 66ஆம் பாடல்களில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. தன்மக்களொடு மாறுபட்டுப் போர்மேற் சென்ற கோப்பெருஞ் சோழன் புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் "பெருமானால் தெருட்டப்பட்டு உள்ளந் தெளிந்து வடக்கிருந்து உயிர்துறந்தான் என்பதும் அவன் நினைத்த வண்ணம் அவனுடைய ஆருயிர் நண்பர் பிிராந்தையாரும் ஆங்கு விரைந்துவந்து அவனுடன் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பதும் மன்னன் பணித்த வண்ணம் இல்லறக் கடமை முடிந்தபின் மன்னன் நடுகல்லின் அருகே வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பதும் புறநானூறு 213, 215, 216, 217, 218, 219, 223ஆம் பாடல்களாற் புலனாகும். பாரிவேள் இறந்த பின்னர் அவனுடைய ஆருயிர் நண்பராகிய கபிலர் என்னும் புலவர் பெருமான் பாரி மகளிரைப் - பார்ப்பாரிடத்தே அடைக்கலமாக ஒப்புவித்துத் இருக்கோவலூரிற் பெண்ணையாற்றின் நடுவே வடக்கிருந்து உயிர்துறந்தார் என்பது 236ஆம் புறப்பாட்டாலும் அதன் அடிக்குறிப்பாலும் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர்
திருக்கோயிலிற் பொறிக்கப்பெற்றுள்ள முதல் இராசராசசோழன் காலத்துக் கல்வெட்டாலும் நன்கு விளங்கும்.

அறஞ்செய்தலின் இன்றியமையாமை
வடக்கிருந்து உயிர்துறக்க முற்பட்ட. கோப்பெருஞ் சோழன் பாடிய 214ஆம் புறப்பாடல் இருவினைப்பயனும் மறுபிறப்புண்மையும் பற்றித் தமிழ்முன்னோர் கொண்ட நம்பிக்கையைப் புலப்படுத்துவதாகும். நல்லறஞ் செய்வோர்க்கு மறுமையில் வானுலகநுகர்ச்சியும் அந் நுகர்ச்சி யில் விருப்பில்லையெனில் மீண்டும் பிறவாமையாகிய பேறும், இம்மையில் நீண்ட புகழும் உண்டாகும் எனக் கூறுமுகத்தால் நல்லறஞ் செய்தலின் இன்றியமையாமை யினை மறுபிறப்பில் நம்பிக்கையில்லாதவர்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அறிவுறுத்துவது இப்பாடலாகும்.

பாரி வள்ளலின் பிரிவாற்றா து வடக்கிருந்த கபிலர் பாரியை நினைந்து பாடிய பாடலில்,
“இம்மைபோலக் காட்டி உம்மை
இடையில் காட்சிநின்னோடு
உடனுறைவாக்குக உயர்ந்த பாலே” (புறம். 236)
எனத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். “பெரிய வண்மையையுடைய பாரியே, இப்பிறப்பின்கண் நீயும் யானும் தோழமையாற் கூடியின்புற்றாற் போலக்காட்டி, மறு பிறப்பினும் தடைபடாது பேரறிவினையுடைய நின்னோடு கூடி வாழ்தலை உயர்ந்த நல்லூழ் கூட்டுவதாகுக” என நல்லூழின் விளைவையெண்ணி ஆறுதலடையும் நிலையில் அமைந்தது இப்பாடலாகும்.
“வாழச் செய்த நல்வினை யல்லது
ஆழுங்காலைப்-புணைபிறிதில்லை”' (புறம். 367)
எனவரும் ஒளவையார் வாய்மொழி இங்கு நினைத்தற் குரியதாகும்.

இவ்வுலக வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்னும் இருவினைப்பயன்களும் புணர்வும் பிரிவும் : என்னும் நலந்தீங்குகளும் நாள்தோறும் வரும் பகலும் இரவும் போன்று வெவ்வேறியல்பினவாய் மாறிமாறி வருவன.
இவ்வியல்பு
“இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
தண்பக லமையமும் இரவும்போல
வேநுவேறியல வாகிமாறெதிர்ந்
துளவென வுணர்ந்தனையாயின”' (அகும். 327) எனவரும் அகநானூற்றுத் தொடரால் இனிது புலனாகும்.

இப்பிறப்பில் நல்லறங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நிலையில் வினைப் பயன் தாக்குதல் இல்லையென்னும் பொதுவுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது, “இம்மை, நன்றுசெய் மருங்கில் தீதுஇல்” என்னும் தொன்றுபடு பழமொழி ஆகும்.

மக்களாற் செய்யப்பட்_ட. இருவினைமுதர்ந்து பயன் கொடுக்கும் திறத்தில் நல்வினைப்பயனாகிய இன்பமும் தீவினைப் பயனாகிய துன்பத்துடன் கலந்துவரும் என்பது, “நன்றிவிளைவும் தீதோடுவரும்"' என்ற தொடராற் புலப்படுத்தப்பட்ட. து.

இப்பிறப்பிற் செய்த அறம் மறுபிறப்பில நற்பயன் விளைக்கும் என்பது முன்னோர் கொண்ட நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் விளைவாக மறுமைப்பயன்களை எதிர்பார்த்து அறஞ்செய்வோரும் எந்தப்பயனையும் எதிர்பாராது நல்லவையெல்லாம் செய்தற்குரியவை என்ற கடமையுணர்வுடன் அறஞ்செய்வாரும் என அறஞ்.செய்வார் இருகிறப்படுவர். அவருள் மறுமைப்பபனை எதிர்நோக்கி அறஞ்செய்வோர் அறத்தினை விலைக்கு விற்கும் வணிகர் போன்று கருதப்படுவர். பயன்கருதாது சான்றோர் சென்ற நெறியிது வெனக்கொண்டு அறம் புரிதலே மெய்யுணர்ந்தோர் கடமையாகும்.

இக்கடமையினை யுணர்ந்து நல்லறம் செய்பவன் ஆய் என்னும் வள்ளல் என்பதனை,
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவினைவணிகன் ஆய் அலன்; பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப்பட்டன்று அவன் கைவண்மையே' (புறம். 134)
எனவரும் பாடலால் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாராட்_டிப் போற்றியுள்ளார். “இப்பிறப்பிற் செய்ததொன்று மறுபிறப்பிற்கு உதவும் என்று .கருகிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறங்கெள்ளும் வணிகன் ஆய் அல்லன்; குணங்களால் நிறைந்தோர் பிறரும் சென்றவழியென்று உலகத்தார் கருத அந்த நற்செய்கையிலே பொருந்தியது அவனது கைவண்மையாகும்'.என்பது இப்பாடலின் பொருளாகும்

நரிவெரூஉத்தலையார் உறுதிப்பொருள்களை உலக மக்களுக்கு அறிவுறுத்துவாக அமைந்தது,
“பல்சான்றீரே பல்சான்றீரே .
கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனில் மூப்பிற் பல்சான்றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங்காலை இரங்குவிர்மாதோ
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஒம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பதன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே” (புறம். 195)
எனவரும் புறநானூற்றுப்பாட.லாகும். தம் வாழ்நாளில் இளம் பருவத்தே பயனுடை. ய நல்லறங்களைச் செய்யாது வாழ்நாளை வீணே கழித்து முதுமைப்பருவம் எய்இய மாந்தரை நோக்கி “எத்தகைய அறங்களையும் செய்யாது வாழ்நாளை வீணே கழித்த பயனற்ற முதுமைப் பருவத்துவராகிய நீவிர் தமது உயிரைக் கூற்றுவன்கவர்ந்து கொள்ள வரும் இறுதிக்காலத்துப் பெரிதும் வருந்துவீர்கள். இப்பொழுது நல்லறங்களைச் செய்யும் ஆற்றலற்ற நிலையில் நீவிர் இருந்தாலும் பிறவுயிர்க்குத் தமை செய்தலையேனும் ஓழிப்பீராக. அங்ஙனம் எவ்வுயிர்க்கும் இமைசெய்யா திருப்பதே யாவராலும் உவந்து புகழப்படுவது மட்டுமன்றி நும்மை நன்னெறிக்கண் செலுத்தும் அறவழியும் ஆகும்” என அறிவுறுத்துவது பொருண்மை மொழிக்காஞ்சி : யென்னுந் துறையிலமைந்த இப்பாடலாகும்

அறச்செயலாகிய நல்வினையால் இன்பமும் தீவினையால் துன்பமும் ஆகிய நுகர்ச்சி வினைசெய்தார்க்கு
உண்டு என்னும் சான்றோர் துணிபினை ஏற்றுக்கொள்ளாது உலகிற் செய்யப்படும் நன்றும் தும் ஆகிய' வினைகளால் எந்தப் பயனும் விளைதல் இல்லையென்னும் இம்மைக் கொள்கையினராய்த் தம்மனம் போனவாறு செய்தொழுகும் இவினையாளராகிய சிற்றினத்தாரோடு சர்தலைகது என அறிவுறுத்துவது,
“நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென்போர்க்கு இனன் ஆகிலியர்”” (புறம். 29) எனவரும் புறநானூற்றுத் தொடராகும். “நல்வினையினது நன்மையும் தீவினையினது தமையும் இல்லையென்று சொல்லுவோர்க்கு இனமாகாது அவரைவிட்டு நீங்கு . வாயாக” என்பது இத்தொடரின் பொருளாகும்.
சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ. . . 403

வானத்திலுலவும் மேகம் பெருமழையைப் பெய்தமையால் உண்டாகிய வெள்ளப் பெருக்கு மலை முகட்டில் உள்ள கற்களையலைத்துக் கொண்டு போறராக இழியும் நிலையினையொத்தது, உலகினை இயக்கும் பேராற்றலினால் முறைப்படுத்தப்படும் ஊழாகிய நியதி என்பதும், அவ்வாற்றினால் ஈர்த்துச் செல்லப்படும் மிதவை (தெப்பம்) போன்றது மன்னுயிர்த்தொகுதி என்பதும், ஊழின்வயப்பட்்ட. உயிர்கள் உலூற் பல்வேறு நாடுகளிலும் பல்வேறினங்களிலும் பிறந்தும் இறந்தும் உழன்று இரு வினைப் பயன்களை நுகர்தலின் அவ்வுயிர்கட்்கு யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் இதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, . அவரவர் செய்த .வினைப்பயனாகத் தாமே வருவன என்பதும், உலகியலிலே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால், நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ அன்றித் வினை யால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந்தோ ராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ள மாட் டார்கள் என்பதும் ஆகியவுண்மை களைத் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்த நிலையில் உலக மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது, 66
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னாதென்றலும் இலமே, மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் .புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியிற் றெரிந்தன மாதலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்தல் அதனினுமிலமே”” (புறம். 192) எனவரும் கணியன் பூங்குன்றனார் பாட்டாகும்.

இதன்கண், “ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது, திறவோர் காட்சியின் தெரிந்தனம் ஆதலின் ' எனவரும்
தொடர் ஏதுமொழியாய் நின்று, “யாதும் ஊரே யாவரும் கேளிர், இதும் நன்றும் பிறர் தரவாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, சாதலும் புதுவதன்றே” எனவரும் கருத்துக்களை முடித்து நின்றது. இங்கு எடுத்துக்காட்டிய வினளையுணர்வின் பயனாகத் தம் வாழ்விற் கடைப்பிடித்து வரும் கொள்கைகளாக, “வாழ்தல் இனிதென மகழ்ந்தன்று மிலமே, முனிவின் இன்னாதென்றலும், .மாட்சியிற் "பெரியோரை வியத்தலுமிலமே, சிறியோரை யிகழ்தல் அதனினும் இலமே: என்பவற்றைக் கணியன் பூங்குன்றனார் தம். வாழ்வியல் அனுபவத்தில் வைத்து எடுத்துக்காட்டி யுள்ளமை காணலாம். வினையுணர்வு பற்றிய இம்முடிவுகள் " கடவுளுண்மையினையுடம் படாது உயிர்கள் உண்டெனக் கொண்ட சமணம் முதலிய பிற சமயங்களுக்கும் ஒத்தனவே யாகும். எனினும் கடவுளுண்மையினை வற்புறுத்தும்
சமயங்களுக்கு, வினையுணர்வு பற்றிய இம்முடிவுகள் மிகவும் சிறப்புரிமையுடையனவென்பது “பால்வரை. தெய்வம் வினையே பூதம்” எனவரும் தொல்காப்பியத் தொடர்ப் பொருள் பற்றி முன்னர்க்கூறிய விளக்கத்தாற் புலனாகும். படைப்புக் காலந்தொடங்கி மன்னுயிர்கள் வினைவயத்தாற் பல்வேறிடங்களிலும் பல்வேறுடம்புகளிலும் பிறந்திறந் து அலமரும் நிலையில், அவ்வுயிர்களுக்கு யாதும் ஊராகவும் யாவரும் உறவினராகவும் அமைந்துள்ள தஇுறத்தினை 6
அகில லோகமும் அனந்தயோனியும்
நிகிலமும் தோன்ற நீ நினைந்த நாள்தொடங்கி
எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித் .
தாயராகியும் தந்தையராகியும்
_ வந்திலாதவர் இல்லை யான் அவர்
தந்ைத யராகியும் தாய ராகியும்
வந்தி ராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை”
(பதினொராந்திருமுறை, திருக்கழுமல மும்மணிக் கோவை, 7)
எனத் திருவெண்காட்டடிகள் விரித்துக் கூறியுள்ளார். இங்கு எடுத்துக்காட்டிய திருக்கழுமல மும்மணிக் கோவைப் பாடற்பகுதி “யாதும் ஊரே யாவருங் கேளிர்” எனவரும் புறநானூற்று அடிக்குரிய உரை விளக்கமாகத் இகழ்தல் காணலாம். எனவே கணியன்பூங்குன்றனார் பாடலில் “யாதும் ஊரே யாவருங் கேளிர்? என்று முதற்கண் காணப்படுந் தொடர் உலகவொற்றுமை பற்றி இக்காலத்திற் கூறப்பட்ட. வெறும் உபசாரமொழி போல்வதன்று என்பதும் அத்தொடர் தமிழர் கண்ட தத்துவவுணர்வின் பயனாக உருவாகிய உண்மையினைப் புலப்படுத்தும் வாய்மொழி 'பாகும் என்பதும் இங்கு மனங் கொளத்தக்கனவாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 



உலக வாழ்க்கையில் மக்கள் அடையும் கேடும் ஆக்கமும் பிறரால் தரப்படுவன அல்ல, அவர்கள் செய்த இருவினை காரணமாக ஊழ்வயத்தால் தாமே வருவன என்னும் மெய்ம்மையினை வற்புறுத்துவது, “தும் நன்றும் பிறர்தர வாரா” என்ற தொடராகும். களவொழுக்கம் ஒழுகும் தலைவன் தலைவியை மணந்து கொள்ளுதலில் நாட்_டமின்றி அவ்வொழுக்கத்தில் நீட்டித்தொழுகியவழி அவனைத் தெருட்டும் தோழி அவன் சிறைப்புறத்தானாகத் தலைவிக்குக் கூறுவாளாய்ச் சொல்லியது, “யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை' (நற். 88) எனவரும் நற்றிணைப் பாடலாகும். “நாம் செய்த பழவினைப் பயனாகிய நாம் செய்த வினையால் நாமே தேடிக் கொண்டது எனத் தெளிந்து நாமே நுகர்வதன்றிப் பிறரைக் காரணமாக எண்ணி ஏன் மயங்குகின்றாய்” எனத் தலைவியை நோக்கி வினவும் முறையில்அமைந்த து, மேற்குறித்த நற்றிணைத் தொடராகும். “ததும் நன்றும் பிறர்தர வாரா் என்னுங் கொள்கையினை வலியுறுத்தும் முறையில் இத்தொடர் அமைந்துள்ளமை இங்கு மனங்கொளத்தகுவதாகும்.

உடம்பும் உயிரும்
காணப்படும் உருவுடையதாகிய உடம்பும் அதனை உடனிருந்து இயக்குவதாய்க் காணாத மரபினதாகிய உயிரும் பொருட்டன்மையால் வேறுபட்ட இருவேறு பொருள்கள் என்பதும் அவ்விரண்டும் ஒற்றுமைத் இறத்தால் ஒன்றெனத் தோன்றினும் அவற்றின் தன்மையால் வேறுபட்டன என்பதும், அவற்றுள் காணப்படும் உருவினதாகிய உடம்பு அறிவில் பொருளாய் அழியுமியல்பினதாம் என்பதும் காணா மரபினதாகிய உயிர் அறிவுடைப் பொருளாய் என்றும் அழிவின்றி நிலைபெற்ற உள்பொருளாம் என்பதும் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு முன்தொடங்கித் தமிழகத்தில் நிலவி வரும் மெய்யுணர்வுக் கொள்கையென்பது முன்னர் விளக்கப் பெற்றது. இத்தத்துவநுட்பத்தினைத் தமிழ் நெடுங்கணக்கினைப் பயிலும் இளஞ்சிறார்களும் எளிதில் உணர்ந்து கொள்ளும் முறையில் தானே இயங்கும் ஒலித்தற்றன்மை யுடைய அகர முதல் ஒளகாரமீறாகிய பனள்னிரண்டெழுத்துக் களையும் உயிர் எனவும் உயிர் உள்நின்று செலுத்தினாலன்றி யியங்காத உடம்பினைப் போன்று உயிரெழுத்துக்களின் துணையைப் பெற்றாலன்றி இயங்காத ககரமுதல் னகர மீறாகிய பதினெட்டெழுத்துக்களையும் மெய் எனவும் பெயரிட்டு வழங்கிய பண்டைத் தமிழிலக்கண நூலாரது மெய்யுணர்வுக் கொள்கையே தமிழர் சமயத் தத்துவக் கொள்கைகட்.கெல்லாம் வேராக அமைந்தநுட் பமும் முன்னர் எடுத்துக்காட்டி விளக்கப்பெற்ற து.

உடம்பினின்றும் உயிரைக் கவர்ந்து உடம்பையும் உயிரையும் வேறு பிரிக்கும் தெய்வ ஆற்றல் ஒன்று உண்டு என்னும் நம்பிக்கையுடையவர்கள் தமிழ் முன்னோர் என்பது கூற்று” என்னும் தலைப்பில் முன்னர்க் கூறப்பட்டது. உயிர்கள் பலவென்பதும் உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கூற்று என்னும் தெய்வ ஆற்றல் ஒன்றேயென்பதும்,
“மன்னுயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற்செழிய” (புறம். 19)
எனப் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடிய புறப்பாடலால் அறியலாம். “நிலைபெற்ற உயிரது பன்மையும் அவ்வுயிரைக் கொள்ளுங் கூற்றினது ஒருமையையும் நின்னுடனே €ர்தூக்கிக் காட்டிய வென்றிவேலையுடைய செழியனே” என்பது மேற்குறித்த புறப்பாடலடிகளின் பொருளாகும். பழையதாய் நின்று தொன்மை யுடையது உயிர் எனவும் அவ்வுயிருடன் கூடி நின்று முதிர்ந்தது உடம்பு எனவும் எனவே உயிரும் உடம்பும் வேறு எனவும் அங்ஙனம் அவை பொருளால் வேறுபட்டன வேனும் கலப்பினால் ஒன்றுபட்_ டன எனவும் உணர்த்துவது,
“தொன்று மூத்தவுயிரினும் உயிரொடு
நின்று மூத்த யாக்கையன்ன”' (புறம். 24) எனவரும் புறப்பாடற்றொடராகும். :

உயிர் உடம்பை விட்டுப் பிரியுங்காலத்துத் தன்னை மறவாது : அடுத்தவினை காட்டுங் கதிகளிற்புகும்
நினைவுடையதாய்ச் செல்லும் என்பது,
“என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
என்னியான் மறப்பின் மறக்குவென்'” (புறம். 175) என ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடிய
புறப்பாட்டாலறியலாம். “ஆதனுங்களே என்னுயிர் உடம்பை விட்டுப் போகும்போதும் யான் உன்னை மறப்பேனாயின் நின்னையும் மறப்பேன். அக்காலத்து உடம்பை விட்டுப் பிரியும் இடர் நிலையேனாகிய யான் என்னை மறவாமை போல எனக்குப் பேருதவிபுரிந்த நினையும் மறக்கமாட்டேன்” என்னுங் கருத்திற் கூறப்பட்டது இத்தொட ராகும்.

பகைவர் பற்றிச் சென்ற ஆனிரையை மீட்டுச் செருக்களத்தில் இறந்து பட்டவீரனைக் குறித்து இரங்குவதாகிய கையறு நிலைச் செய்யுளில்,
“நிரையொடு வந்த வுரையனாகி
உரிகளையரவ மானத்தானே
அரிது செல்லுலகிற் சென்றனன், உடம்பே
கானச் சிற்றியாற்றருங்கரைக் காலுற்றுக்
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்கி யாண்டுப்பட்டன்றே”” (புறம், 260) எனவரும் பகுதி உயிரும் உடம்பும் வேறென்பதைத் தெளிவுபடுத்துகின்றது. “அனிரையுடனே வந்த புகழையுடையனாய்த் தோல் உரித்த (சட்டை கழற்றிய) பாம்புபோல அரிது செல்லுலகமாகிய தேவருலகிற் போயினான். அவனது உடம்பு (வீரர்கள் அம்பு எய்து பழக) காட்டிற் சிற்றாற்றங் கரையில் நடப்பட்ட இலக்காகிய கம்பம் காற்றினாற் சாய்ந்து வீழ்ந்தாற்போன்று அம்புகள் பட்டு அவ்விடத்தே வீழ்ந்தது” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். சட்டை கழற்றிய பாம்புக்கும் அதனாற் கழற்றப்பட்ட சட்டைக்கும் சிறிதும் தொடர்பில்லாமை போலத் தேவருலகஇிற் புக்க வீரனது உயிர்க்கும் அவனது உயிர் பிரிதலால் நிலத்தில் வீழ்ந்து பட்ட உடம்புக்கும் சிறிதும் தொடர்பில்லை யென்பது இத்தொடராற் புலப்படுத்தப் பெற்றுள்ளமை அறியத் தகுவதாகும்.

“உடம்புந்தோன்றா உயிர்கெட்டன்றே” (புறம். 282) என்ற தொடரும் இக்கருத்தினதே. உயிருக்கு என்றும் அழிவில்லையென்பதும் அருவாகிய உயிர்நிலைத்தற்குரிய உருவாகிய உடம்பு அழியுந்தன்மையது என்பதும், என்றும் அழியாதுண்ட உடம்பு இல்லையென்பதும் -
“வீயாது, உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே. (புறம். 363) எனவரும் புறநானூற்றுத் தொடரால் நன்கு துணியப்படும். “நீங்காது ஒருடம்பிலேயே எக்காலத்தும் நிலைபெற்றுள்ள உயிரும் இல்லை, உயிரை உடம்பினின்றும் பிரிக்கும் கூற்று உண்டென்பது பொய்யும் அன்று” என்பது இத்தொடரின் : பொருளாகும். எனவே, மன்னுயிர், ஒருடம்பில் நிலைத்து நில்லாது அவ்வுடம்பினை விட்டிறந்தும் வெவ்வேறு உடம்பினைப் பெற்றுப் பிறந்தும் பிறவிப் பெருங்கடலிற் சிக்குண்டு வருந்தும் இயல்பினது என்பதனை உய்த்துணர வைத்தாராயிற்று.

இவ்வாறு உயிரும் உடம்பும் வேறென்பத தொல்காப்பியனார் காலத்திற்கும் முன்னிருந்து வழங்கிவரும் தமிழர் தத்துவக் கொள்கையாதலின் அக்கொள்கையே சங்கச் செய்யுட்_களிலும் பிற்காலத் தமிழ் நூல்களிலும் தொடர்ந்து நிலைபெற்று வருவதாயிற்று. உயிர் என்பதொன்று இல்லை எனக்கூறும் சூனியான்மவாதமும், தேகமே உயிர் எனக்கூறும் தேகான்மவாதமும், ஐம்பொறிகளே. உயிர் என்க்கூறும் இந்திரியான்மடவாதமும் மனமுதலிய உட் கருவிகளே உயிர் எனக்கூறும் அந்தக் கரணான்ம வாதமும், நுண்ணுடலே உயிர் எனக்கூறும் விஞ்ஞானான்மவாதமும், உடம்பு, அந்தக்கரணம் முதலிய அனைத்துங்கூடிய இரட்சியே உயிர் என்னும் சமூகான்மவாதமும் பண்டைத் தமிழ்நூல்களில் யாண்டும் இடம்பெறவில்லை. இனி “அறிவுடையோர்” (புறம்.197) எனவும் “அறிவுகெட நின்ற நல்கூர்மை” (புறம்.266) எனவும் உயிர்கள் அறிவும் அறியாமையும் ஒருங்கு உடையனவாய்ப் பிறர் அறிவிக்கக் கருவிகளால் அறிந்து வருதலின், எக்காலத்தும் இரிபின்றி அறிந்தாங்கு அறிந்து நிற்கும் முழுமுதற்பொருளாம் இறைமைத்தன்மை உயிர்கட்கு இல்லை யென்பது நன்கு விளங்கும். எனவே பிரமப் பொருளே ஆன்மா என வாதிக்கும் பிற்கால விஞ்ஞானான்மவாதத்திற்குப் பண்டைத் தமிழ் நூல்களிற் சிறிதும் இடமில்லை என்பது நன்கு தெளியப்படும்.

“உடம்பின் வேறாக உயிரென்பது உண்டு' எனப் பண்டைத்தமிழர் தெளிவாக வுணர்ந்து மேற்கொண்டெொழுகிய தத்துவக்கொள்கையானது பிற்காலத்தில் தமிழகத்தில் வந்து புகுந்த பல்வேறு சமய விகற்பங்களால் கலக்குண்ட .நிலையில் அக்கலக்கங்களைக் களைந்து நீக்கி உடலின் வேறாக உயிர் என்பது உண்டு என ஏதுக்காட்டி வற்புறுத்துவது,
“உளதில தென்றலின் எனதுடல் என்றலின்
ஐம்புலனொடுக்கம் அறிதலின், கண்படின்
உண்டி வினையின்மையின் உணர்த்தவுணர்தலின்
மாயாவியந்திர தனுவினுள் ஆன்மா”
(சிவஞானபோதம். சூத். 3) எனவரும் சிவஞானபோத மூன்றாஞ் சூத்தரமாகும்.

பத்துப்பாட்டு எட்டுத்தொகையாகிய சங்க விலக்கியங்களிலிருந்து இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் சங்க காலத் தமிழ்மக்கள் வாழ்வியலிற் காணப்பட்ட இருமால் முருகன் முதலிய தெய்வ வழிபாடுகளும் அவ்வழிபாடுகள் எல்லாவற்றுள்ளும் சிவவழிபாடு தலைமையும் இறப்பும் வாய்ந்ததாக அக்காலத்து வேந்தர்களாலும் குடிமக்களிற் பெரும்பான்மையாராலும் மேற்கொள்ளப்பெற்று வந்தமையும் தமிழகத்திற்குச் சிறப்புரிமை வாய்ந்த சைவூத்தாந்தத் தத்துவக்கொள்கைக்கு மூலமாகிய உண்மைகள் பல சங்க இலக்கியங்களில் வேரூன்றி யுள்ளமையும் ஒருவாறு புலனாதல் காணலாம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard