Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்
Permalink  
 


சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்

யுரியனவாக முன்னைத் தமிழ்ச் சான்றோரால் வரையறுக்கப்பட்ட அகத்திணை புறத்திணை யொழுகலாறுகளாகிய வாழ்க்கை நெறி முறைகளை வரம்பாகக் கொண்டு பாடப்பெற்ற சங்கப் பனுவல்களிலே பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களது வாழ்வியலிற் காணப்படும், உள்ளத்துணர்வு மொழித்கிட்_ பம் செயற்றிறம் என்பனவும் இவற்றின் பயனாக அவர்களது உள்ளத்திலே தோன்றி நிலைபெற்ற உலகு, உயிர் பற்றிய எண்ணங்களும் நம்பிக்கை களும் அவற்றின் பயனாக அவர்களது உள்ளத்கிற் குடிகொண்ட கடவுட். கொள்கையும் அன்னோர் மேற் கொண்ட தெய்வ வழிபாட்டு நெறி முறைகளும் தத்துவக் கோட்பாடுகளும் ஆகிய இவை அகமும் புறமுமாகிய அவர்தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளுடன் பிரிவின்றிக் கலந்து காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களிற் கூறப்படும் பண்டைத் தமிழ் மக்களது குடும்ப வாழ்க்கையிலும் சமுதாய வாழ்க்கையிலும் பொதுவாக இடம்பெற்றுள்ள பல்வேறு தெய்வ வழிபாடுகளையும் அவற்றுட். சிறப்பாகத் இகழும் சிவ வழிபாட்டினையும் சிவநெறி பற்றிய மெய்யுணர்வுக் கோட் பாடுகளாகிய சைவ சமயத்துத் தத்துவ வுண்மை களையும் ஒருங்கே தொகுத்து ஆராய்தல் இன்றியமையாத தாகும்.

ஓரறிவுடைய புல் முதலாக ஆறறிவு படைத்த மக்களீறாக இவ்வுலகிற் காணப்படும் மன்னுயிர்த் தொகுதிகளில் மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறியுணர்வுடன் ஆறாவதாகிய மனவுணவர்வும் ஒருங்குபெற்றுக் கல்வியறிவொழுக்கங்களால் வாழ்க்கையில் மேன்மேலும் உயர்ச்சி பெறுதற்குரிய விழைவு அறிவு செயல் என்னும் மூவகையாற்றலும் மக்கட்குலத்தார்க்கேயுரிய சிறப்பியல்புகளாக அமைந்துள்ளன. எனவே உணர்வொழுக்கங்களால் உயர்ச்சி பெறுதற்குரிய மனவுணர்வுடைய மக்கட் குலத்தாரை உயர்தணையெனவும் அவ்வுணர்வு வாய்க்கப் பெறாத விலங்கு முதலிய உயிர்த் தொகுதிகளையும் உயிரல் பொருளாகிய உலகப் பொருள்களையும் அஃறிணையெனவும் இருகிறமாகப் பகுத்துரைத்தனர் பண்டைத் தமிழ்ச்சான்றோர். பொருள் வகை பற்றிய இவ்வுணர்வு இவற்றை யுணர்தற்குக் கருவியாகிய சொற்களிலும் இனிது புலப்படும்படி தாம் பேசும் மொழியிலமைந்த பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் உயர்திணைச் சொல், அஃறிணைச் சொல், இரு இணைக்கும் உரிய பொதுச்சொல் எனப் பகுத்துரைத் தனர். இவ்வாறு பொருள்களும் அவற்றை யுணர்தற்குக் கருவியாகிய சொற்களும் இயைந்து பொருள் இனிது புலனாகுமாறு தமது தாய்மொழியாகிய தமிழை உருவாக்கிய பெருமை தமிழ் முன்னோர்க்குரிய தனிச்சிறப்பாகும். இவ்வாறே தமிழ் எழுத்துக்களுள் தனித்தியங்கும் இயல்பினவற்றை உயிர் எனவும் அவ்வுயிரெழுத்துக்களுடடன் இயைந்தன்றி இயங்காதன வற்றை மெய் எனவும் பெயரிட்டு வழங்கிய பண்டைத் தமிழிலக்கண நூலாரது தத்துவ வுணர்வு அறிஞர்களால் வியந்து பாராட்டுதற்குரியதாகும்.

மாக்கள் எனப்படும் விலங்கினின்றும் மக்களை வேறுபடுத்து உயர்த்துவது கல்வி. கல்விப் பயிற்சிக்கு நிலைக்களமாகத் திகழ்வது மக்களாற் பேசப்படும் மொழியாகும். இத்தகைய மொழிகள் உருப்பெறாத தொன்மைக் காலத்தே வாழ்ந்த மக்கள், உண்ணுதற்கேற்ற சுவையான உணவும் உடுத்தற்கேற்ற உடையும் தங்குதற்குரிய உறையுளும் பெறாது காடுகளிலும் மலைகளிலும் புதர்களிலும் புலி முதலிய கொடிய விலங்கினங்களோடும் பாம்பு முதலிய நச்சுயிர்களோடும் உடனுறைய வேண்டிய இடர் நிலையினராய், இடி, மின்னல் மழை புயல் கடல்கோள் நில நடுக்கம் எரிமலை காட்டுத்த் முதலிய இயற்கை யிடையூறுகளாலும் மக்கள் கூட்டத்திற் பகைவர்களாலும் பெரிதும் அல்லலுற்று இடம்பெயர்ந்து அலைந்து திரிந்தனர். பின்னர்த் தமக்குரியதாக ஓரிடத்தினைத் தேர்ந்துகொண்டு அங்கு இயல்பாக வளர்ந்த தாவரங்களிலிருந்து கிடைத்த காய்கனி முதலியவற்றையும் விலங்குகளையும் பறவை களையும் வேட்டைத் தொழிலாற் கொன்று பெற்ற இறைச்சியையும் தன்று தமது ப௫யைத் தணித்துக் கொண்டனர். புயல், பெருவெள்ளம், கொள்ளை நோய் முதலிய இயற்கையிடையூறுகளில் அகப்பட்டுத் தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் வழியறியாது இகைப்புற்று வருந்இனர். ஐம்பெரும் பூதங்களால் உளவாகும் இத்தகைய இடையூறுகளுக்கு மக்களினத்துக்கு. மேற்பட்ட மறைவாக தெய்வங்களே காரணம் எனவும் தெய்வங்களின் €ற்றத்தாலேயே இத்தகைய துன்பங்கள் உலகிற் பலவிடங்களிலும் நேர்கின்றன எனவும் நம்பினர். இருளடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் பிறவிடங்களிலும் இருந்து மக்களை வருத்துவனவாகப் பேய், பூதம், சூரரமகளிர், நீரரமகளிர் முதலிய அணங்குகள் உள்ளனவாக நம்பியதனால் அவர்தம் முள்ளத்கே அச்சம் மிகுவதாயிற்று. இங்ஙனம் தொன்மை மக்களுள்ளத்துற் குடிகொண்ட. அச்சவுணர்வே பேய்பூதம் பாம்பு முதலிய எல்லாவற்றையும் தெய்வமாகக்கொண்டு அவற்றால் விளையுந் தங்கினின்றும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் அவற்றுக்குக் கள்ளும் ஊனும் படைத்து வழிபடும் சிறு தெய்வ வழிபாடுகளைத் தோற்றுவிப்பதாயிற்று.

இவ்வாறு மிகப் பழங்காலத்தே நாகரிகம்பெறாத மக்கட் குலத்தாரிடையே அச்சவுணர்வு காரணமாக நிகழ்ந்த தெய்வ வழிபாடு சிறு தெய்வ வழிபாடு எனப்படும். தமக்குப் பகையாயினார் தரும் துன்பத்தினின்றும் தம்மினமக்களைப் பாதுகாத்தல் வேண்டிப் பகைவரொடு பொருது வெற்றி தந்து மாய்ந்த தம்மினத்துத் தலைவர்களை அச்சம் நீக்கி ஆற்றல் நல்கும் தம்குல தெய்வமாகக் கொண்டு வணங்கும் வழிபாடு வீரர் வழிபாடெனப்படும். தம்மை யீன்றெடுத்து அன்பினாற் பாலூட்டி, வளர்த்த தாயையும் அறிவும் ஆண்மையும் நல்கச் சான்றோனாக்கிய தந்தையையும் உலக வாழ்க்கையில் நேரும்இடையூறுகள் இன்னவெளவும் அவற்றைக்களைந்து இன்பம் நுகர்தற்குரிய நெறி முறைகள் இவையெனவும் அறிவுறுத்தி நல்லறிவு கொளுத்திய அறிவர்களையும் தன் நாட்டுக்குடி மக்களின் பசியும்'பிணியும் பகையும் நீக்கி முறை செய்து காப்பாற்றும் வேந்தனையும் கண் கண்ட தெய்வமெனக் கருதிப் போற்றும் வழிபாடுகள் நாகரிகம் பெற்ற மக்கட். குலத்தாரிடையே அன்பு காரணமாக நிகழ்வனவாதலின் இவை அன்பு வழிபாடு எனக் கூறத்தக்கனவாகும்.

மக்களை வருத்தும் இயல்புடையனவாகக் கருதப்படும் பேய் பூதம் முதலிய சிறு தெய்வங்களை அணங்கு எனவும், தம்மை அன்பினால் வழிபடுவார்க்கு அருள் சுரந்து துன்பத்தை நீக்கி நலம் புரியும் இறைமைப் பண்புடைய பெருந்தெய்வத்தை இறை, தெய்வம் எனவும் வழங்குதல் மரபு. அறிவியல் நாகரிகம் முகிர்ந்துள்ள இக்காலத்தும் மக்களிற் பெரும்பாலோர் தமக்கும் தம் உறவினர்க்கும் இம்மையிலும் மறுமையிலும் நேரக்கூடிய துன்பங்களுக்கு அஞ்சியே தெய்வத்தை வழிபடக் காண்கின்றோம். இவ்வாறு அச்சங் காரணமாக நிகழும் வழிபாடுகள் அனைத்தும் மக்கள் தமக்கு நேரும் தீமைகளை விலக்குதலைக் குறிக்கோளாகக் கொண்டனவே என்பது உலகிற்பலரும் அறிந்த உண்மையாகும். லே ச ய் ய் ௧
அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாஞ்் சிறிது” (குறள். 1075)
எனவரும் தெய்வப் புலவர் வாய்மொழி இங்கு நினைக்கத் தக்கதாகும்

அச்சத்தினால் வழிபடுதற்குரிய சிறுதெய்வங்கள் அணங்கு எனவும் அச்சத்துடனும் அன்புடனும் வழிபடுதற்குரியவை தெய்வமெனவும் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இந் நுட்_பம்,
“அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே”
எனவும், “தெய்வம் அஞ்சல் புரையறந்தெளிதல்” எனவும் வரும் தொல்காப்பிய நூற்பாக்களால் இனிது புலனாதல் காணலாம். உலகிற் பண்டைக்காலம் முதல் இன்றுவரை நிலவி வரும் தெய்வ வழிபாடுகள் யாவும் மக்களுள்ளத்தே தோன்றிய அச்சங்காரணமாகவும் அன்பு காரணமாகவும் நிகழ்வனவேயாகும்.

“அஞ்சியாகிலும் அன்புப்பட்டாகிலும்
நெஞ்சம் வாழிநினை நின்றியூரை நீ”
எனவரும் அருளிச் செயல் தெய்வ வழிபாட்டிற்குக் காரணமாய் உடன் நிகழ்வன அச்சமும் அன்பும் என்னும் இருவகையுணர்வுகளே என்னும் உண்மையினைத் தெளிவு படுத்துதல் காணலாம்.

நாகரிகமின்றி நாடோடிகளாகத் இரிந்துஅல்லலுற்ற மக்கட். கூட்டத்தார் ஒரிடத்தே நிலையாகத் தங்கி வாழும் வாய்ப்பினைப் பெற்றபின் தமக்கு ஆதாரமாயமைந்த நிலத்தையும் வானையும் கூர்ந்து நோக்கினர். நிலத்தினைச் சூழ்ந்த விண்வெளியிலே தவழ்ந்து கதிரொளி பரப்பிக் காரிருள் கடிந்து மண்ணுலகில் வாழும் உயிர்களுக்கு ஒளி வழங்கும் ஞாயிறு திங்கள் என்னும் இருசுடர்களையும் குளிராலும் பசியாலும் வருந்தும் மக்கள் குளிர் நீங்கவும் உணவினைப் பதஞ்செய்து கொள்ளவும் உதவும் கயினையும் தெய்வமாகக் கருதப் போற்றுவாராயினர். (இருளிற் பொருள் புலனாகாது, பல்வகைத் தொல்லைகட்கும் உட் பட்ட பல்லுயிர்களும் இருள் நீங்கிப் பொருளுணரவும் வெயில் வெம்மை நீங்கித் தண்ணொளி பெறவும் குளிர் நீங்கி உணவினைத் தேடிப் பதஞ் செய்து கொள்ளவும் கதிரவனையும் துங்களையும் தயையும் தெய்வங்களாகக் கொண்டு போற்றும் வழிபாடுகள் உலகிற் பலவிடங்களிலும் பரவி வாழும் எல்லாவினத்து மக்களாலும் மேற்கொள்ளப் பெற்ற இயற்கைத் தெய்வ வழிபாடுகளாகும். உயிர்கள் யாவும் தமக்கு இன்றியமையாத உணவாகிய நல்ல நீரைப் பெற்று உயிர்வாழவும் பயிர்கள் வளர்ந்து நன்கு விளைவு பெறவும் கைம்மாறு கருதாது மழை பொழியும் முகிலையும், விண் முதில் பொழிந்த நன்னீர் பலவிடங்களிலும் நிலையாகப் பாய்ந்து நிலவளம் சுரக்கவுதவும் கங்கை காவிரி முதலிய பேராறுகளையும் உண்ணுதற்கினிய கனிகளையும் தண்ணிழலையும் தரும் தாவரங்களையும் பாற்பயளளிக்கும் ஆனினங்களையும் தெய்வத்தன்மையுடையனவாகக் கருதி வழிபடும் இயற்கைப் பொருள் வழிபாடுகள் மக்கட் குலத்தார து நுகர்ச்சி வேட்கை காரணமாகவும் அவ்வேட்கை நிறைவேறப்பெற்ற நிலையில் தோன்றும் நன்றியுணர்வு காரணமாகவும் நிகழ்வனவாம்.

தமமினத்தார் அச்சமின்றி இனிது வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குளிக்கோளுடன் பகைவரைப் பொருது வீழ்த்தி வெற்றிதந்து மாய்ந்த தறுகண் மறவர்களையும் தாம் மேற்கொண்ட மனைவாழ்க்கை மாண்புடையதாகக் கற்பென்னுந் இண்மையுடையராய்த் தம் கொழுநனையே தெய்வமெனக் கொண்டு உடனுயிர் துறந்த பத்தினிப் பெண்டிரையும் தெய்வமாக்கி வழிபடும் வழிபாடுகள் உலகில் அறமும் அன்பும் நிலை பெறத் தம் இன்னுயிர்துறந்த ஆட வரது வீரத்தையும் பெண்டிரது கற்பின் தண்மையையும் மதித்து மக்களைத் தெய்வநிலைக்கு உயர்த்தும் திறத்தினவாகும்.

மேற்குறித்த வழிபாடுகள் தாமும் தம் சுற்றத்தாரும் மையின் நீங்கி நலம் பெறுதல் வேண்டும் என்னும் தன்னலவுணர்வில் தோன்றியன. மக்கள் அறிவு முதிர்ந்து நாகரிக நிலையையடைந்த பின்னர் உருவாகியதே மன்னுயிரனைத்தும் வாழ உலக முதல்வனாகிய இறைவனை மனமொழி மெய்களாற் போற்றும் முழுமுதற் கடவுள் வழிபாடாகும். உலகுயிர்களில் நீக்கமறக் கலந்து இயக்கி யருளும் முழுமுதற் பொருளாகிய கடவுள் ஒன்றேயெளவும் அது விருப்பு வெறுப்பின்றி எல்லா உயிர்கட்கும் அருள் நல்கும் இயல்பினதெனவும் உணர்ந்து உயிர்க்குயிராய் மன்னுயிர்களின் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளிய மெய்ப்பொருளைப் புறத்தே பல்வேறு திருவுருவமைத்துத் தமை நீங்கவும் நன்மை பெருகவும் மலர் தூவி வழிபடுதல் உலக நலங்குறித்த வழிபாடாகும். அச்சங்காரணமாக நிகழும் சிறுதெய்வ வழிபாடுகளில் சற்றுயிர்களைப் பலியிட்டு ஊனையும் கள்ளையும் உணவாகப் படைத்தல் என்பது மக்கள் நாகரிகம் பெறாத காலத்தில் நிகழ்த்திய வழிபாட்டு முறையாகும். மக்கள் அறிவு முதிர்ந்து நாகரிகம் பெற்ற நிலையில் உலகிற்கு முழுமுதற் கடவுள் ஒன்றே என்னுந் தெளிவுபெற்று, வாழ்த்த வாயும் நினைக்க் நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்தருளிய ௮ம் முதற் கடவுளை மலர் தூவித் தொழும் தூய வழிபாட்டினை மேற்கொள்வாராயினர். பிறவுயிருந் தம்முயிர் போற் பேணிப் பாதுகாக்குந் தூய வழிபாட்டினை மேற்கொள்வாராயினர். பிறவுயிருந் தம்முயிர்போற் பேணிப் பாதுகாக்குந் தூய நன்னெஞ்சின ராய்த் தாவரங்கள் தரும் காய்கனிகளையும் தினை முதலிய விளை பொருளையும் இறைவனுக்குத் தஇருவமுதாகப் படைத்து நெல்லும் மலருந்தூவி வழிபடும் இவ்வழிபாடு, ஆருயிர் முதல்வனாகிய இறைவனது இனிய அருளின் நீர்மையுணர்ந்து அம்முதல்வன்பால் இடை.யறாப் பேரன்பின் பயனாக நிகழ்வதாகும். இவ்வழிபாட்டில் ஈடுபட்டோர் யாவர்க்கும் மேலாம் அளவிலாச் €ருடை இறைவனது பெருமையினையும் பாசப்பிணிப்பில் அகப்பட்ட தமது சிறுமையினையும் எண்ணியெண்ணி நெஞ்சம் நெக்குருகிக் கைகளைத் தலைமேற் குவித்துக் கண்ணீர் சொரியும் இயல்பினராவர்.

தொல்பழங்காலத்தில் அறியாமையிருளிற் சக்குண்ட மக்கள் அச்சத்தால் மேற்கொண்ட பல்வேறு சிறுதெய்வ வழிபாடுகளும் அறிவு வளர்ச்சி பெற்று நனிநாகரிக முடையராய் வாழ்ந்தகாலத்து அன்பினால் மேற்கொண்ட பெருந்தெய்வ வழிபாடுகளும் சங்க இலக்கியங்களில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. உலகெங்கும் அச்சத்தால் அரும்பி அன்பினால் மலர்ந்து அறிவினால் விரிந்து பரவிய தெய்வ வழிபாடுகளிற் பெரும்பாலான மக்கள் முதிர்ந்த நாகரிகமுடையராய்த் திகழும் இக்காலத்திலும் பலதிற மக்களால் மேற்கொள்ளப்பெறும் பரப்புடையனவாகக் காணப்படுகின்றன. அச்சத்தினைக் காரணமாகவுடைய சிறுதெய்வ வழிபாடுகளும் அன்பினைக் காரணமாகவுடைய பெருந்தெய்வ வழிபாடுகளும் ஊர்தோறும் ஒருங்கு நிகழக் காண்கின்றோம். இவ்வாறே கடைச் சங்க காலத்திலும் ஊனுங் கள்ளும் படைத்து வணங்கும் சிறு தெய்வ வழிபாடுகளும் நெல்லும் மலருந்தூவி வணங்கும் பெருந்தெய்வ வழிபாடுகளும் ஆகிய இருவகை வழிபாடுகளும் தமிழக மக்களால் மேற்கொள்ளப் பெற்றுள்ளன. எனவே இவ்வழிபாடுகள் அனைத்தும் அவ்வக்காலத்தில் அவ்வவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் பெற்றுள்ள அறிவு நிலைகட்கும் வாழ்க்கை யனுபவங்கட் கும் ஏற்ப ஆங்காங்கே நிகழ்ந்தன எனக் கொள்வதல்லது, இவ்வழிபாடுகளுள் இன்னின்னவை இன்னின்ன காலத்தில் இன்னின்ன இடத்தில் வாழ்ந்த மக்களால் மேற்கொள்ளப் பெற்றன எனக் காலம் பற்றியும் இடம் பற்றியும் இவ் வழிபாடுகளே வரையறுத்து வகைப் படுத்துரைத்தற்கு இயலவில்லை.

மக்கள் வாழும் நிலத்தியல்புக்கு ஏற்ப அவர்தம் மனத்தியல்பாகிய தெய்வங்கொள்கையும் வழிபாட்டு முறைகளும் தோன்றி நிலை பெறுவன என்பதும் தெய்வங் கொள்கையினை அவ்வந்நிலத்துக் கருப் பொருள்களும் முதற்கண் வைத்தெண்ணுதல் தமிழ்ப் பொருளிலக்கண மரபென்பதும் முன்னர் விளக்கப் பெற்றன. முல்லை நிலத் தெய்வம் மாயோன். மாயோன்மேயகாடுறையுலகம் என்றார் தொல்காப்பியர். முல்லை நிலத்துக் கோவலர், தம்மால் மேய்க்கப் பெறும் ஆனிரைகள் பாற் பயன் தருதல் வேண்டி அந்நிலத்துக் காயாம்பூவண்ணனாகிய திருமாலைப் பரவிக் குரவைக் கூத்தாடுதலும் தம் மகளிரைத் தக்கவனுக்கு மணஞ் செய்து கொடுத்தல் வேண்டிக் கொல்லுந் தன்மையனவாகிய எருதுகளை வளர்த்து அக்காளையினை வளைத்துப்பிடித்த தறுகணாளனுக்கே தம் மகளை மணஞ்செய்து தருதலும் ஆகிய ஒழுகலாறுகளையுடையராய் வாழ்ந்தனர் என்பது முல்லைக் கலிப்பாடல்களால் இனிது விளங்கும்.

மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலத்கஇுற்குச் சேயோனாகிய முருகனே தெய்வம் என்பது முன்னர்க் கூறப்பட்டது. குறிஞ்சி நிலத்துக் குறவர்கள் தெய்வ மணமாகிய வெறியினையறியுஞ் சிறப்பினையுடைய வேலன் என்னும் முருக பூசாரியை யழைத்து வெறியாடச் செய்து முருகனை வழிபட்டுப் பசியும் பிணியும் பகையும் நீங்க மழைவளஞ் சுரந்தருள்க என வாழ்த்தி வரம்பல பெற்று மகிழ்ந்தனர் என்பது சங்க இலக்கியங்களிலுள்ள குறிஞ்சித் துணைப் பாடல்களாலும் பத்துப்பாட்டின் முதற்கண் அமைந்த கிருமுருகாற்றுப்படையினாலும் பரிபாடலிற் செவ்வேளைப் போற்றிய பாடல்களாலும் நன்கு புலனாகும்.

வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகிய மருத நிலத்திற்குத் தெய்வம் மழைவளந்தரும் இந்திரனாதிய வேந்தன். மருதநிலத்து உழவர்கள் மலர்தலையுலூற்கு உயிரெனச் சிறந்த மன்னனை வாழ்த்தி வானோர்
தலைவனாகிய இந்திரனைப் பன்னிறமலர்களைத் தூவி வழிபட்டு இந்திர விழா நிகழ்த்தினர். இச்செய்தி “இந்திரவிழவிற்பூவின் அன்ன” (ஐங்குறு. 62) எனவரும் ஐங்குறுநூற்றுத் தொடராலும் சிலப்படிகாரம் இந்திர விழவூரெடுத்த காதை, மணிமேகலை விழாவறை காதை முதலிய பிற இலக்கியங்களாலும் நன்கு தெளியப்படும்.

பெருமணலுலகமெனப்படும் நெய்தல் நிலத் தெய்வம் வருணன். அந்நிலத்துப் பரதவர்கள் கடலில் மீன் பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். தமக்கு வலைவளஞ்சுரத்தல் வேண்டித்தமது மனையின்கண் சுறாமீனின் கொம்பினை நட்டுக் கடற்றெய்வமாதகிய வருணனைனை வழிபட்டனர். இச்செய்து,
“சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச் சேர்த்திய வல்லணங்கின்””
எனவரும் பட் னப்பாலையடி களாலும் நெய்தற்றிணைபற்றிய சங்கப் பாடல்களாலும் நன்கு புலனாம்.

நானிலத் தெய்வங்களாக இங்குக் குறிக்கப்பெற்ற தெய்வ வழிபாடுகளேயன்றிப் போரின் இறந்த வெற்றியினை விளைக்கும் தாய்க் கடவுளாகிய கொற்றவை வழிபாடும் தறுகண் மறவர்களால் மேற்கொள்ளப்பெற்றது. “இறந்த கொற்றவை”: எனத் தொல்காப்பியனாராற் குறிப்பிடப்பெற்ற இத்தாய்த்தெய்வம் (1114) “கானமர் செல்வி” (1268). “விறல்கெழுசூலி: எனவும் (1636) “அருந்திறன் மரபிற் கடவுள்” (படுற்று.. எனவும் சங்கவிலக்கியங்களிற் போற்றப் பெறுகின்றது. அயிரைமலையிற் கோயில் கொண்ட இத் தெய்வத்தினை “உருகெழு மரபின் அயிரை”: எனவும், இத் தெய்வம் எழுந்தருளிய காட்டினைக் “கடவுட். பெயரிய கானம்” எனவும் பெருங்குன்றூர்கிழார் குறித்துள்ளார். ஆசிரியர் தொல்காப்பியனார் கொற்றவை என்னும் தெய்வத்திற்கு நிலம் வகுத்திலர். காடும் மலையும் கூடிய நிலப்பகுதியிலே கொற்றவைவழிபாடு நிகழ்ந்தமை கடைச் சங்கச் செய்யுட்களில் குறிக்கப்பெற்றுளது. எனவே முல்லையும் குறிஞ்சியும் வேனில் வெப்பத்தால் வளம் குன்றிய வழியாகிய சுரத்திலே வாழும் மறவர்கள் தம் குலதெய்வமாகக் கொற்றவையை வழிபட் டமையால் நடுவு நிலைத் இணையாகிய பாலைக்குத் தெய்வம் கொற்றவை என்னும் பொருளி இலக்கணமரபு கடைச் சங்க காலத்தில் உருவாகியதெனக் கருத வேண்டியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
RE: சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்
Permalink  
 


காடுறையுலகம், மைவரையுலகம், கம்புனலுலகம், பெருமணலுலகம் என்னும் நானிலங்களுக்கும் அன்பின் ஐந்திணைகளுள் இருத்தல் புணர்தல் ஊடல் இரங்கல் என்னும் நால்வகை யொழுக்கங்களையும் முறையே உரிமை செய்துணர்த்திய தொல்காப்பியனார், நிலமில்லாத பாலைத்திணைக்கு
“நடுவுநிலைத்திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே'” (அகத். 11)
எனவரும் நூற்பாவில் இடமும் காலமும் வகுத்துக் கூறியுள்ளார். “முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் என எண்ணப்பெறும் ஐந்தணைகளுள் நடுவண் நிற்பதாகிய பாலைத் இணையாகிய பிரிவொழுக்கம் நண்பகலாகிய சிறுபொழுது வேனில் என்னும் பெரும்பொழுதுடன் கூடிய நிலையிற் (காதலர்) கருகஇச் செல்லும் வழியினை இடமாக வுடையது” என்பது இந்நூற்பாவின் பொருளாகும். இந்நூற்பாவின் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால் தமிழகத்திற் பாலையென்பதோர் தனிநிலம் எக்காலத்தும் இருந்ததில்லையென்பதும் வேனிற் காலத்திலே கதிரவனது வெம்மையால் வளங்குன்றிய வெவ்விய நெறியாகிய சுரமே பாலைத்திணைக்குரிய இட மென்பதும் தொல்காப்பியனார் கருத்தென்பது பெறப்படும்.
“வானமூர்ந்த வயங்கொளிமண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிரங்காட்
டிலையில மலர்ந்த முகையிலிலவம்”” (அகநா. 11)
எனவரும் அகப்பாடல் காடுறையுலகமாகிய முல்லை நிலம் வேனிற்காலத்துக் கதிரவன் கடுவெயிலால் தன்னியல்வு திரிந்து பாலையாயின செய்தியைப் புலப்படுத்துகின்றது.

முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலிற்
சீறருங்கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்
ஏறுபெற்றுதிர்வனபோல் வரைபிளந்து இயங்குநர்
ஆறுகெடவிலங்கிய அழலவிர்ஆரிடை'” (பாலைக்கலி 1)

என்பது மைவரையுலகமாகிய குறிஞ்சி நிலம் வேனிற் பொழுகிற் கதிரவன் வெம்மையால் தன்னியல்புதிரிந்து பாலையாயின செய்தியைப் புலப்படுத்துகின்றது. இவ்வாறு முல்லையுங் குறிஞ்சியும் வேனில் வெம்மையால் தம்மியல்பு திரிந்து பாலையாயினவாறுணர்ந்த இளங்கோவடிகள்,
““வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலந் திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் நிரிந்து
நல்லியல் பிழந்து நடுங்கு துய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்
காலை” (சிலப். காடுகாண். 62-7)
என வேவனிற் பருவத்தே நண்பகற் பொழுகிற் கதிரவன் வெம்மையால் இரிந்து வளங்குன்றி நடத்தற்கு இயலாத அரிய வழியாகிய சுரத்தனைப் பாலையென்ற பெயராற் குறித்துள்ளார்.

“குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலையாகும் ...... தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர். வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவஇயையும் ஆ௫த்தனையும் தெய்வம். என்று வேண்டுவர்” என்பர் இறையனார் களவியலுரையாிரியர். அவ்வாசிரியர் குறித்த வண்ணம் பகவதியாகிய கொற்றவையைப் பாலைநிலகத் தெய்வமாக இளங்கோவடிகள் சலப்பஇகார வேட்டுவ வரியிற் போற்றியுள்ளமையும், முல்லைநிலத் தெய்வமாகிய மாயோலனுக்குத் தங்கையும் குறிஞ்சிநிலத் தெய்வமாகிய சேயோனுக்குத் தாயும் ஆகிய உறவின்முறைத் தொடர்புடைய கொற்றவை முல்லையுங் குறிஞ்சியும் இரிந்து பாலையாகிய சுரத்திற்குத் தெய்வமாதல் பெரிதும் பொருத்தமுடைமையும் எண்ணிய சேக்கிழாரடிகள் பாலைநிலத் தெய்வம் கொற்றவை என்னும் இளங்கோவடிகள் கருத்தினை அடியொற்றி, “கோலமுல்லையுங் குறிஞ்சியுந் திரிந்த சில்லிடங்கள் நீலவாட்படை நீலி கோட்டங்களும் நிரந்து காலவேனிலிற் கடும் பகற் பொழுதினைப் பற்றிப்
பாலையுஞ் சொலலாவனவுள பரன்முரம்பு” எனவரும் பாடலிற் குறிப்பிட்டு விளக்கியுள்ளார். ““கஇரவன் வெம்மையினாற் கடும் பகற்பொழுதில் அழகிய முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் திரிந்து வளங்குறைந்த சல இடங்கள் நீலமேனியளாகிய கொற்றவை வீற்றிருக்கும் "கோயில்களைத் தன்னகத்தே கொண்டு பாலையென்று பெயர் சொல்லுதற்குரியனவும் தொண்டை நாட்டில் உள்ளன” என்பது மேற்குறித்த பெரியபுராணச் செய்யுலில் இடம் பெற்ற செய்தியாகும்.

உலகிற் காலந்தோறும் ஏற்படும் கடல்கோள், புயல், வெள்ளம், நிலநடுக்கம் முதலிய இயற்கை மாற்றங்களாகிய இடை. யூறுகளையும் மக்களுக்குத் தங்குபயக்கும் கொடிய உயிரினங் ளால் நேரும் இடர்களையும் எஜிர்ந்து முன்னேறும் இன்றியமையாமையுடைய மக்கட் குலத்தார் தமது வாழ்க்கை . நுகர்ச்சிகளின் பயனாகத் தமக்கு நாள்தோறும் அச்சந் தவிர்த்து தம்முள்ளத்தேயிருந்து ஆண்மையும் அறிவாற்றலும் வழங்கித் தோன்றாத் துணையாய் உடனிருந்து அருள்புரியும் பேரருளும் முற்றுணர்வும் பேராற்றலும் வாய்ந்த முழுமுதற் கடவுளாகிய தெய்வம் ஒன்று உண்டு" என்னும் உணர்வினைப் பெறுவாராயினர். யாக்கை, இளமை, செல்வம் முதலிய வற்றால் நிலை பேறில்லாத இவ்வுலக வாழ்க்கையிற் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்துவரும்' பயிற்சியினைப் பெற்ற மக்கள் அறியாமையிருளிலகப்பட்டு அணங்குபேய் முதலியவற்றால் அஞ்சி வருந்திய அச்சத்தினை 'யகற்றித் தம் உள்ளுணர்வின் தூண்டுதலஎல் ஆண்மையும் அறிவும் பெற்றுத் இகழ்ந்த காலம் தமக்கு உயிர்க்குமிராய்த்
தோன்றாத்துணையாய் உடனிருந்தருளும் தெய்வமென்பது ஒன்று உண்டு எனத் தெளிவுடைய சிந்தையினைப் பெற்ற காலமேயாகும். மக்கள்தெய்வமுண்டு என்னும் இத்தகைய தெளிவு பெறாது இருந்த காலமும் உண்டு என்பதனை,
“தேசம் உமை யறிவதற்கு முன்னோ பின்னோ
திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே”
எனவரும் இருநாவுக்கரசர் வாய்மொழியால் நன்குணரலாம்.

இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியத்தை இலக்கணமாகக் கொண்டு பாடப்பெற்றனவே சங்க விலக்கியங்கள். எனவே இவற்றின் முன்னூலகிய - தொல்காப்பியங் கூறும் தெய்வ வழிபாடுகளும் சமயத்தத்துவ வுண்மைகளும் சங்க இலக்கியங்களிலும் இடம்பெற்றிருத்தல் இயல்பேயாகும்.

இனி, அகமும் புறமுமாகிய உலகியலொழுக லாறுகளை விரித்துரைப்பனவே சங்கச் செய்யுட்கள் எனவும், இவ்விலக்கியங்களிற் கடவுட். கொள்கைக்குச் சிறப்பிட மில்லை எனவும் பத்துப்பாட்டுள் முதற் பாட் டாகிய திருமுருகாற்றுப்படையும் எட்டுத்தொகை நூல்களின் முன்னர் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்களும் கடைச் சங்க. காலத்தன அன்றிப் பிற்காலத்திற் பாடிச் சேர்க்கப் பெற்றன எனவும் கருதுவாரும் உளர். திருமுருகாற்றுப் படையில். விரித்துக் கூறப்படும் செவ்வேள் வழிபாடும் எட்டுத்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல்களில் இடம் பெற்றுள்ள. சிவபெருமான் திருமால் ஆகிய இருபெருந் தெய்வங்களின் 'வழிபாடுகளும் சங்கத் தொகைகளின் புறத்தேயுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களில் மட்டுமன்றி அத்தொகைகளின் அகத்தேயுள்ள செய்யுட்கள் பலவற்றிலும் றப்பிடம்' பெற்றுள்ளன. £ சங்கச் செய்யுட்களில் நக்&ரனாரும் சங்கப்புலவர் பிறரும் பாடியனவாக அமைந்த பாடல்களில் உள்ள தொடர்களும் கருத்துக்களும் தஇருமுருகாற்றுப்படையிலுள்ள தொடர்களும் கருத்துக் களும் தம்முள் ஒத்துக் காணப்படுகின்றன. பத்துப்பாட்டுள் முதற் பாட்டாக வைத்து எண்ணப்படும் தஇிருமுருகாற்றுட் படையைச் சங்க காலத்தது அன்று என நீக்கிவிடுவோமாயின் “பத்துப்பாட்.டு' என வழங்கும் தொகைப்பெயர் வழக்கிற்கு இடமில்லாது போய்விடும். மாறாக ஒன்பான் பாட்டு என வழங்கவேண்டிய நிலையேற்படும். எனவே திருமுருகாற்றுப் படை. கடைச் சங்கப் புலவர் நக்&ரனாராற் பாடப்பெற்ற சங்கப் பாடலே என்பது தேற்றம்.

இனி, எட்டுத்தொகையுள் ஒன்றாகிய கலித்தொகை யுள் நெய்தற்கலியை இயற்றியுள்ள நல்லந்துவனாரே கலித்தொகைக் கடவுள் வாழ்த்தினையும் பாடியுள்ளார். இனி புறனானூற்றின் முதற்கண் அமைந்த “கண்ணிகார் நறுங் கொன்றை”: என்னுங் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து எண்ணினால்தான் அத்தொகை நூல் இறையனார் களவியலுரையாசிரியர் கூறுமாறு “புறநானூறு: என்னும் பெயருக்குப் பொருத்தமுடையதாகும். எட்டுத்தொகை நூல்களில் பதிற்றுப்பத்து கலித்தொகை தவிர ஏனைய ஆறு தொகைகட் கும் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடூய பெருந்தேவனாராவர். கடைச் சங்கப் புலவராகிய இப் பெருந்தேவனார் வடமொழியிலுள்ள பாரதக் கதையினை அகவல் நடையிற் பாடனமைபற்றிப் பாரதம் பாடூய பெருந்தேவனார் என்று அழைக்கப் பெற்றார் எனத் தெரிகிற து.

வடமொழி இகிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதம் என்னும் நூல்களிற் கூறப்படும் செய்திகள் சங்க காலத்தில் தமிழ் நாட்டிற் பரவி வழங்கின என்பது சங்கச் செய்யுட்.களில் அவை எடுத்தாளப் பெற்றுள்ளமையால் இனிது விளங்கும். இரண்டாஞ் சங்கமிருந்த கபாடபுரம் கடல் கோளால் அழிவுற்றபின் பாண்டியர்கள் மதுரையில் மீண்டும் சங்கத்தினை நிறுவித் தமிழ் வளர்த்தனர். வட மொழியிலுள்ள மகாபாரதத்தைத் தமிழில் மொழி அபெயர்க்கச் செய்தனர். இச்செய்திகள் ““மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்” எனச் சின்னமனூர்ச் செப்பேட்டிீற் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இங்ஙனம் சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பாண்டியரது ஆட்சியில் மகாபாரதக் கதையை ஆ௫ரியப்பா நடையில் மொழி பெயர்த்தவர் பெருந்தேவனார் என்னும் சங்கப் புலவராவர். எனவே பாரதம் பாடூய பெருந்தேவனார் எனக் கருதுதல் பொருத்தமுடையதாகும். தொல்காப்பியப் பொருளகிகாரப் புறத்திணையியலுரையில் நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டியுள்ள பாரத நிகழ்ச்சி பற்றிய ஆசிரியப் பாக்கள்சங்கப் புலவர் பெருந்தேவனார் பாடிய பாரதத்தைச் சார்ந்தன எனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, கி.பி. எட்டாம் நூற்றாண்டினையொட்டி வாழ்ந்த பெருந்தேவனார் என்ற புலவர் வெண்பாவும் உரை நடையும் விரவிய நிலையில் பாரதக் கதையினைத் தமிழில் மொழிபெயர்த்தமைத்துள்ளார். பெயரொப்புமையாலும் பாரதத்தை மொழி பெயர்த்துப் பாடூனமையாலும் இவரையும் பாரதம் பாடிய பெருந்தேவனார் எல வழங்குதலுண்டு. பெயரொற்றுமை யொன்றேற பற்றி இவ்விருவரையும் ஒருவரேயெனக் கொள்வாருமுளர். கடைச் சங்கப் புலவர் பெருந்தேவனார் பாடிய பாரதம் அகவல் நடையால் இயன்றத. பிற்காலத்தவராகிய பெருந்தேவனார் பாடிய பாரதம் வெண்பாவும் உரை நடையும் விரவியமைந்தது. எனவே காலத்தாலும் யாப்பாலும் வேறுபட்ட இருநூற்களின் ஆசிரியர்களையும் ஒருவரெனத் 'துணிந்து கூறுதற்கு இடமில்லையென்பது இங்கு உளங்கொளத்தகுவதாகும்.

சோழன் செங்கணான் திருப்போர்ப்புறத்துச் சேரமான் கணைக்காலிரும்பொறையொடு பொருது குடவாயிற் கோட்டத்துச் இறைப்படுத்தியவன் என்பது, சேரமான் கணைக்காலிரும்பொறை பாடிய “குழவி யிறப்பினும்” என்னும் முதற் குறிப்புடைய புறப்பாடலின் அடி க்குறிப்பினாற் புலனாம். கணைக்காலிரும் பொறையைச் சிறையினின்றும் விடுவித்தற் போருட்டுப் பொய்கையார் என்னும் புலவர் சோழன் செங்கணானணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அவனது போர்க் களத்தைச் சிறப்பித்துக் “களவழி நாற்பது” என்ற பனுவலைப் பாடினார் என்ற செய்கு கலிங்கத்துப்பரணியில் இடம் பெற்றுளது. சோழன் செங்கணானுக்கு நல்லடி என்ற பெயருடைய மைந்தன் இருந்தான் என்ற செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பெற்றுளது. நல்லடி என்னும் பெயருடைய வேந்தன்,
“கடும் பகட்டியானைச் சோழர் மருகன்
நெடுங்கதில் நெல்லின் வல்லங்கிழவோன்
நல்லடியுள்ளானாகவும்'” (அகநானூறு 367)
எனப் பரணாற் பாராட்டப் பெற்றுள்ளான். இங்ஙனம் அகநானூற்றிற் பாராட்டப்பெறும் சோழன் நல்லடி என்பானுக்குத் தந்தையாகச் சோழன் செங்கணான் திருவாலங்காட்டுச் செப்பேட்டிற் குறிக்கப்பெற்றுள்ளான். இவ்வேந்தன் சோழநாட்டின் உட்பகுதிகளாகிய அக நாடுகள் தோறும் சவபெருமானுக்கு மாடக்கோயில்களைக் கட்டியுள்ளான் எனத் தேவார ஆசிரியர்களும் சிவபெருமானுக்கு எழுபது மாடக் கோயில்களைக் கட்டிய இவ் வேந்தனே இிருமாலுக்குத் ஈிருநறையூரில் மணிமாட: மாகிய இருக்கோயிலையும் கட்டினான் எனத் கஇுருமங்கை யாழ்வாரும் குறித்துப் போற்றியுள்ளார்கள். இக்குறிப்புக் களால் கடைச் சங்க காலத்திலேயே சிவபெருமான் திருமால் முதலிய தெய்வங்களுக்குப் பெருங்கோயில் கட்டும் திருப்பணிகள் தொடர்ந்து நிகழ்ந்தன என்பது உய்த் துணரப்படும்.
“பணியியரத்தை நின்குடையே, முனிவர்
முக்கட் செல்வர் நகர் வலஞ்செயற்கே”” (புறம். 6)
எனப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடிய பாடல் கடைச்சங்க காலத்திற் பாண்டி நாட்டிற் சவபெருமானுக்குத் திருக்கோயில். அமைந்திருந்த செய்தியை நன்கு “வலியுறுத்தல் காணலாம்.

தமிழ் மக்களது மெய்யுணர்வுக் கொள்கையினை உள்ளவாறு உணர்தற்கு அவர்களால் வழிபடப் பெற்ற தெய்வ அமைப்புக்களையும் வழிபாட்_டு முறைகளையும். உலக வாழ்க்கையில் தமிழ் முன்னோர் கொண்டிருந்த பல்வேறு நம்பிக்கைகளையும் அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். 

மக்களது வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் இயற்கை மாற்றங்கள் காரணமாகவும் உலக நிகழ்ச்சிகளிற் கட் புலனாகாதவண்ணம் செயற்படும். அரிய சில ஆற்றல்கள் காரணமாகவும் பல்வேறு இடையூறுகளும் இன்னல்களும் உளவாதல் இயல்பு. . அந்நிலையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களினின்றும் தப்பியுய்தற்குரிய பாதுகாப்பினைத் தேடிக் கொள்ளுதல் மனவுணர்வு படைத்த மக்களது கடமையாயிற்று. மழை தவழும் மலைப்பக்கங்களிலும் மரங்கள் செறிந்த காடுகளிலும் மக்கள் தனித்தனிக் கூட்டத்தினராகி வாழும் நிலையினராகிய பண்டைக் காலத்தில் தம்முடைய உடைமைகளையும் உயிரையும் பேணிக் கொள்ளும் பொருட்டு ஆற்றல் மிக்க ஊர்க் காவலரும் நாடாளும் தலைவர்களும் மக்கட்குழுவினரால் தேர்ந்துகொள்ளப் பெற்றனர். வெயில், மழை, பனியென்னும் பருவநிலைகளையுணர்ந்து மக்கள் தங்களுக்கு இன்றியமை யாத உணவு, உடை, உறையுள் முதலிய வாழ்க்கை வசதிகளை அமைத்துக்கொள்ளும் அறிவு திரு ஆற்றல்களால் காலந்தோறும் வளர்ச்சிபெற்று வருவாராயினர். எனினும் "உலக வாழ்க்கையில் எதிர்பாராத நிலையில் ஏற்படும் புயல், கடல்கோள், பெருவெள்ளம், நில நடுக்கம் முதலிய பேரிடையூறுகளாலும், வெப்பு (சுரம்) குரு (அம்மை) முதலாக அவ்வப்பொழுது தொடரும் நோய்களாலும் பெரிதுந் துன்புறுவாராயினர்.

இவ்வாறு உலக வாழ்க்கையில் நேரும் பலவேறு இடையூறுகளால் நலிவுற்று அஞ்சிய பண்டைக்கால மக்கள்,அவ்விடையூறுகளை யெதிர்த்து முன்னேறும் முயற்சியில் - தோல்வி கண்டவர்களாய்த் தம்முடைய முயற்சிக்கும் ஆற்றலுக்குந் தடை விளைப்பனவாகத் தம்மை அச்சுறுத்தும் அணங்குபேய் பூதம் முதலாகப் பல்வேறு தெய்வங்கள் இவ்வுலகில் இருக்கின்றன எனவும் அவற்றின் €ற்றத்தினா லேயே உலக௫ல் தமக்குப் பல்வேறு இன்னல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன எனவும் உறுதியாக நம்பினார்கள். - அச்சுறுத்துவனவாகிய அத்தெய்வங்களை எண்ணுந்தோறும் உள்ளந் துணுக்குற்று உடல் நடுக்கமுற்றனர். இவ்விடத்தில் வருத்துந் தெய்வமாகிய அணங்கு உள்ளது என்று ஐயுற்று அஞ்சு நடுங்கியவர்கள் சொல்ல, அதனைக் கேட்டவர்களுக்கும் அவ்வச்சவுணர்வே அணங்கெளனத் தோன்றி அவர்களையும் நடுக்கமுறச் செய்யும் என்பது மனவியல் புணர்ந்தோர் கண்ட உண்மையாகும். இவ்வுண்மையினை _-

“நெஞ்சுநடுக்குறக் கேட்டுக் கடுத்துந் தான் 
அஞ்சியது ஆங்கே அணங்காகும் என்னுஞ்சொல்
இன்றீங் கிளவியாய் வாய்மன்ற”” (கலித். 24)
எனவரும் பாலைக்கலித் தொடரிற் பெருங்கடுங்கோ என்னும் புலவர் பெருமான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளமை காணலாம். “நெஞ்சம் நடுக்கம் உறும்படி பலகாலும் கேட்டும், கேட்ட அதனை உண்டோ இல்லையோ என்று ஐயுற்றும் தாம் அஞ்சியிருந்த பொருள் மெய்யாய் வருத்துந் தன்மையதாகும் என்ற பழமொழி இனிய மொழியினையுடைய தோழியே நிச்சயமாக உண்மை” என்பது இத்தொடரின் பொருளாகும். “நெஞ்சுநடுக்குறக் கேட்டது: என்றது “இவ்வாலமரத்திலே பேய் உள்ளது” என்று பிறர் சொல்லக் கேட்டது. அச்சொல்லைக் கேட்டவர்கள் இவ்வாலமரத்திற் பேய் இருக்குமோ? என்று முதலில் ஐயுற்று அஞ்சியவர்கள் எதிர்பாராத நிலையில் இருளில் அவ்வாலமரத்தின் அருகே தனித்துச் சென்றபோதுஅவர்கள் உள்ளத்திற் கொண்ட. அச்சவுணர்வே பேய் வடிவிற்றோன்றி அவர்களை வருத்துதல் உறுகு' என்பதனைப் புலப்படுத்துவது “நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தான் அஞ்சிய ஆங்கே அணங்காகும்” என்னும் இப் பழமொழியாகும் சங்ககாலத்தில் வழங்கிய இப்பழமொழியினை அடியொற்றியதே “அரண்டவன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய்” என இக்காலத்து .வழங்கும் பழமொழி யாகும். இத்தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் மக்களை அச்சுறுத்துந் தன்மையதாகிய அணங்கு உண்டு என்பதும் அத்தகைய அணங்கு அவ்விடத்தில் இல்லாதிருந்தாலும் உண்டு என மற்றவர் சொல்லக் கேட்டு அஞ்சிய அச்ச வுணர்வே அணங்குருவில் தோன்றி அஞ்சியவர்களை வருத்துதலும் உண்டு என்பதும் அச்சத்இனையகற்றிய உள்ளத்துரனுடையவர்களை அணங்கு வருத்தமாட்டாாது என்பதும் சங்ககாலத்து மக்கள் உளங்கொண்ட வாழ்வியலுண்மையாதல் நன்கு புலனாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

மக்களை வருத்தும் இயல்புடையனவாகிய அணங்கு பேய் பூதம் முதலியவற்றுக்கு அவை வேண்டிய உணவாகிய பலிப்பொருள்களைக் கொடுத்து வழிபட்டால் அவற்றால் உண்டாகும் இடையூறுகளிலிருந்து தாம் தப்பி உய்தி பெறலாம் என்ற நம்பிக்கை பண்டைக்கால மக்கள் உள்ளத்தே நிலைபெறுவதாயிற்று. எனவே அவர்கள் அணங்குபேய் முதலியவற்றுக்கு ஆடு கோழி முதலிய சிற்றுயிர்களைப் பலியிட்டு அவற்றால் வரும் இன்னல்களினின்றும் தாம் நீங்கியதாக எண்ணி அவற்றைத் தெய்வமெனக் கொண்டு வழிபடுவாராயினர். இவ்வாறு பண்டைக்கால மக்கள் பேய் பூதம் முதலாக அச்சுறுத்தும் தெய்வங்கள் உள்ளன எனக் கொண்ட நம்பிக்கையின் விளைவாகவும் தம் உள்ளத்தில் இயல்பாகத் தோன்றிய அச்சத்தின் காரணமாகவும் உலகிற் பலவிடங்களிலும் சிறு தெய்வ வழிபாடுகள் பன்னெடுங்காலமாகத் தோன்றி நடைபெற்று வருகின்றன. இந்நிலவுலக முதலாகவுள்ள பலவேறு அண்டப் பரப்பினையும் உலகியற் பொருள்களையும் நுனித்துணர்ந்து தமது வாழ்க்கையினை இடர்நேராது இனிய முறையில் அமைத்துக் கொண்டு எல்லா வசதிகளும் உடையராய் நெடுநாள் வாழ்தற்கேற்ற நுண்ணறிவும் எண்ணிய எண்ணியாங்கு (இயற்றவல்ல ஆற்றலும் தொழில் நுட்பமும் ஒருங்கே கைவரப்பெற்று மக்கட் சமுதாயம் காலந்தோறும் வளர்ச்சிபெற்று வருவதனை அறிஞருலகம் நன்குணரும். இங்ஙனம் மக்கட் குலத்தார் முதிர்ந்த நாகரிக நிலையினராய் வாழும் இக்காலத்திலும் இவ்வுலகவாழ்க்கையில் எதிர்பாராதவகையில் நேநரரவிருக்கும் துன்பங்களை யெண்ணித் தாம் தாம் விரும்பிய தெய்வங்களைக் குறித்துத் தாம் உய்தி பெறுதல் வேண்டி அச்சத்தால் வழிபாடு செய்வதே பலவேறு மதங்களின் ஒழுகலாறுகளாகப் பெரும்பான்மையும் நிகழ்ந்து வருவதனைக் காண்கின்றோம். நுண்ணறிவின் பயனாக அச்சம் தீர்ந்த மக்களும் தாம் மட்டும் சிறப்பாக வாழ்ந்தாற்போ தும் என்னுந் தன்னலவுணர்வினராய் .

ஏனையோரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது தன்னலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தாம் விரும்பிய தெய்வத்தை வழிபட்டு வருவதனையும் உலகியலிற் காண்கின்றோம். தமக்கு மாறாயினார் அழிந்தொழிதல் வேண்டும் எனத் தெய்வத்தினைக் குறித்து மந்திரச் சடங்குகளைச் செய்யும் $ய எண்ணமுடையவர்களும் சிலருளர். இவ்வாறு தம்மைப் போன்று தம்மால் வழிபடப் பெறுந் தெய்வங்களும் விருப்பு வெறுப்புடையனவாய்ச் சிறுமையுடையனவாக வைத்து வழிபடப் பெறும் தெய்வங்கள் யாவும் சிறு தெய்வங்களாகவே கருதப்படுவன வாயின. .

நிலத்தின் வளத்தால் இயல்பாகத் தோன்றி வளர்ந்த தாவரங்களின் காய்கனி முதலியவற்றையும் விலங்கு பறவை முதலியவற்றை வேட்டைத் தொழிலாற் கொன்று பெற்ற இறைச்சியையும் உணவாகக் கொண்டு நாகரிகமின்றி வாழ்ந்த பண்டைக்கால மாந்தர்கள், மழை இடி மின்னல் சூறைக் காற்று க_ல்கோள் காட்டுத்த நிலநடுக்கம் முதலிய ஐம்பூத நிகழ்ச்சிகளுக்கும், புலி சங்கம் முதலிய கொடிய விலங்குகட்கும் பாம்பு தேள் முதலிய நச்சுயிர்கட்கும் இறந்தோர் ஆவிகட்கும் அச்சுறுத்துமியல்பினவாகத் தாம் நம்பிய டே:ப பூதம் முதலியவற்றிற்கும் அஞ்சிய நிலையில் அவ்வச்சத்தின் விளைவாகஅவற்றைத் தெய்வமெனக் கொண்டு நிகழ்த்திய வழிபாடுகள் இறு தெய்வ வணக்க மெனப்படும். கொல்லுந் .தன்மையவாகிய எல்லாவற்றையும் தெய்வமெனக் கொண்டு அவை தம்மை வருத்இக் கொல்லாத வாறு அவற்றுக்கு ஆடு கோழி முதலிய இற்றுயிர்களைப் பலியிட்டு ஊனும் கள்ளும் படைத்து வழிபடும் முறையில் நிகழ்த்தப்பெறும் இவ்வழிபாடுகள் இறு தெய்வ வலப்ளெனப்படும்.

எங்கும் நிறைந்துள்ள மெய்ப்பொருளாகிய கடவுள், உலகுயிர்கள்தோறும் நீக்கமற நிறைந்துள்ள நிறைவு "நிலையினையும் எல்லாப்பொருள்களையுந் தன்னகத்து அடக்கிக் கொண்டு எல்லாப் பொருட்கும் பரவியுள்ள விரிவு நிலையினையும் எண்ணி எவ்வுயிரும் நீங்காதுறையும் முழுமுதற்பொருள் ஒன்றேயென்னுந் தெளிவுடையராய் அதனை அன்பினால் வழிபடுதல் மெய்யுணர்வுடையார் மேற்கொள்ளும் பெருந்தெய்வ வழிபாடெனப்பெறும்.

தெய்வம் ஒன்றே என்னுந் தெளிவுநிலை மக்கட். சமுதாயத்தில் உருவாவதற்குமுன் அணங்கு, பேய், பூதம் முதலாக அஞ்சுதற்குரியன எல்லாவற்றையும் தெய்வமெனக் கொண்டு வழிபடும் பொதுநிலையே உலகிற் பலவிடங்களிலும் பரவியிருந்தது. இயற்கைப் பொருள்களின் வழியாகவும் ஏனையுயிர்த்தொகுதிகளின் வழியாகவும் உலகத்து நிகழும் பல்வேறு நிகழ்வுகளை மட்டும் கண்டு அந்நிகம்வுகளுக்குரியண/ உண்மையான காரணங்கள் இவையென உய்த்துணரும் உணர்வு நிரம்பப் பெறாத நிலையில், கட்புலனாக நிகழும் இயற்கையிடையூறுகளை வெவ்வேறு தெய்வங்களின் விளைவுகளாகக் கருஇத் தம் உள்ளத்தே தோன்றிய அச்சங் காரணமாகவும் அத் தெய்வங்களின் அருளால் தமைகளைப் போக்கி விரும்பிய நலங்களைப் பெறுதல் வேண்டும் என்னும் ஆசை காரணமாகவும் தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கட் குழுவினர் தாம் தாம் வாழ்ந்த இயற்கைச் சூழல்கட் கேற்பவும் - ஒளிபெறாத நள்ளிருட் காலத்துத் தாம் கொண்ட மனநிலைக் கேற்பவும் அணங்கு, பேய், பூதம், வரையரமகளிர், வானரமகளிர், நீரரமகளிர், சூர் முதலியனவாகப் பல்வேறு தெங்வங்கள் உண்டென நம்பி அவற்றுக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலையினராயினர்..

. மக்கள் மனவறிவு நிரம்பப் பெறாத தொல் பழங் காலத்தில், வேண்டுதல் வேண்டாமைல்லாத செம்பொருள் . .- ஒன்றே யென்னுந் தெளிவு பெறாது நெஞ்சம் நடுங்கும்படி தாம் கண்ட. வெளித் தோற்றங்களையும் அவற்றைக் குறித்துப் பிறர் சொல்லக் கேட்டவற்னறையும் தெய்வமென எண்ணி அவற்றால் வரும் துன்பங்களை -விலக்குதற் பொருட்டுச் திற்றுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனையும் கள்ளையும் அவற்றுக்குப் படைத்து வணங்கும் சிறுமை நிலையிற் செய்யப்படுதலின் இத்தகைய: வழிபாடுகள் “சிறு தெய்வ வணக்கம்? என வழங்கப்பெறுவனவாயின. இனி, சங்கத் தொகை நூல்களில் இடம் பெற்றுள்ள சிறு தெய்வ வழிபாடுகள் இவையெனக் காண்போம்.
அணங்கு, பேய், பூதம், சூர்
“அணங்கு” என்ற சொல், “வருத்தும் தெய்வம்” என்ற பொருளிற் சங்கச் செய்யுட்களில் ஆளப் பெற்றுளது. அணங்குதல் - வருத்துதல்.
“அணங்கே விலங்கே கள்வர் தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொல். மெய்ப். நூ. 252)
எனவரும் மெய்ப்பாட்டி.யற் சூத்திரத்தில், அச்சச் சுவைக்குரிய பொருள்களாக அணங்கு, விலங்கு, கள்வர், தம் தலைவன் என்னும் நான்கினைக் குறிப்பிடுவர் தொல்காப்பியனார். இங்கு அணங்கு என்றது, கண்டார்க்கு அச்சத்தினைத் தரும் பேய், பூதம் முதலிய சிறு தெய்வங்களை அறிவு நிரம்பாத மக்களை வருத்தும் இயல்பினவாதல் பற்றி அவற்றிற்கு அணங்கு” என்பதும் ஒரு பெயராயிற்று, அணங்கு என்னும் இச் சொல் அச்சுறுத்துவதாகிய பேய் என்ற பொருளிலும் ஆளப்பெற்றுள்ள து.
“வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற
பைம்பூட். சேஎய் பயந்த மா மோட்டுத்
துணங்கையஞ் செல்விக்கு அணங்கு நொடித்தா அங்கு” (பெரும்பாண். 457-459)
எனவரும் பெரும்பாணாற்றுப்படைத் தொடர்க்கு, “புவள்ளிய இரையினையுடைய கடலிலே சென்று கடிய சூரனைக் கொன்ற பசிய பூணினையுடைய முருகனைப் பெற்ற பெருமையையுடைய வயிற்றினையும் பேய்கள் ஆடுந் துணங்கைக் கூத்தினையும் அழகினையும் உடைய இறைவிக்குப் பேய்மகள் ல நொடி சொன்னாற் போல” என நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். இத்தொடரில் துணங்கையஞ் செல்வி என்றது, கானகம் உகந்த காளியாகிய தெய்வத்தை. அணங்கு என்றது, அத்தெய்வத்தின் கூளிச் சுற்றமாகிய பேய்மகளை. மேற்குறித்த பெரும்பாணாற்றுப் படைத் தொடரைக் கூர்ந்து நோக்குங்கால் காளிகோயிலில் அவ்விறைவிக்குப் பணிபுரியும் பேய்மகளிர் இருப்பர் என்னும் நம்பிக்கை சங்ககால மக்களுள்ளத்தே நிலை பெற்றிருந்தமை நன்கு புலனாகும். பிற்காலப் பரணி இலக்கியங்களில் வரும்' பேய் பாடியது, கோயில் பாடியது, காளிக்குக் கூளி கூறியது முதலிய செய்திகள் பண்டைக் காலத்து நிலவிய நம்பிக்கையின் தொடர்பாக வளர்ந்து வந்த இலக்கிய மரபுகளாயின. பூதங்கள் வாசலிலே காத்து நிற்றலால் புகுதற்கரிய அச்சத்தை விளைப்பது காளிகோயில் என்பதனைப் “பூதங்காக்கும் புகலருங்கடி: நகர்” (பட்டினப்.57) என்ற பட்டினப்பாலைத் தொடர் புலப்படுத்துகின்றது. போர்க்களத்து இறந்துபட்_ட. வீரர்களின் உடல்களாகிய பிணத்தினைத் இன்று வாழும் இயல்புடைய மகளிர் முற்காலத்து இருந்தனர் என்ற நம்பிக்கை சங்கத்தொகை நூல்களாற் புலனாகின்றது. அவர்கள் அழகில்லாத உருவத்தினராகவும் கண்டோரஞ்சத்தக்க தோற்றத்தினராக வும் இருந்தமையால் “பேய்” எனப்பட்டனர். தறுகண் மறவர் போர்க்களத்திற் பகைவரோடு பொருது உயிர் துறந்த நிலையிற் பிணந்தின்னுமியல்பினராகிய பேய் மகளிர் தமக்கு ஊனுணவு கிடைத்ததென்னும் பெருங்களிப்புடையராய்க் கால் பெயர்த்து ஆடுவதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இங்ஙனம் பிணந்தின்னும் பெண்ணினத்தைப் பேய் எனவும் அவ்வினத்தின் ஆணினைக் கூளி எனவும் வழங்குதல் மரபு. பேயும் கூளியும் முறையே பெண்ணும் ஆணும் ஆகிப் பிணந்தின் று வாழ்வன என்பது,
“கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்” (பட்டினப். 24,25)
எனவரும் பட்டினப்பாலைத் தொடராற் புலனாம். “இரட்இ கொண்ட ஆண்பேய்களுடனே மயிரைத் தாழ்த்து இளைத்துப் பிணத்தைத் இன்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கும்படி” என இத்தொடர்க்கு நச்சினார்க்இனியர் வரைந்துள்ள உரை பேய்களுள் ஆண் பேய்க்குக் கூளி என்பது பெயராதலை நன்கு புலப்படுத்தல் காணலாம்.
“பிணங் கோட்ட களிறு குழும்பின்
நிணம் வாய்ப் பெய்த பேய் மகளிர்” (மதுரைக். 24,25)
எனவரும் மதுரைக் காஞ்சித் தொடர் பிணந்தின் மகளிரைப் பேய் எனக் குறித்தல் இங்குக் கூர்ந்து நோக்குதற்குரியதாகும்.
எண்ணெய் தடவப் பெறாது வறண்ட மயிரினையும் - வரிசையொவ்வாது பிறழ்ச்சியுற்ற பற்களையும் பெரிய வயிற்றினையும் இனத்தாற் சுழலும் விழியினையுடைய பசிய கண்களையும் கொடுமை செய்யும் பார்வையினையும் பிதுங்கிய கண்ணையுடைய கோட்டான் என்னும் பறவையுடன் கடிய பாம்பு தன்னிடத்தே தொங்குதலால் பெரிய கொங்கையினை வருத்துகின்ற காஇனையும் சொர சொரப்புடைய பெரியவுடம்பினையும் காண்போர்க்கு நடுக்கந் தரும் நடையினையும் அச்சந்தரும் தோற்றத்தினை யும் உடைய உருவத்தினளாகிய பேய்மகள் உதிரத்தை யளைந்த கூரிய நகங்களையுடைய கொடிய விரலாலே. கண்களைத் தோண்டி உண்ணப்பட்டட மிக்க முடைநாற்றமுடைய தலையை ஒள்ளிய தொடியணிந்த பெரியகையிலே ஏந்தியவளாய்த் தோளையசைத்துத் துணங்கைக் கூத்தாட முருகப்பெருமான் அவுணரை வென்றடக்கிய செய்து.

திருமுருக ற்றுப்படையிற் கூறப்பட்ட து. "செவ்வேள் ட்
சூர்மாவைத் தடிந்த போர்க்களத்தில் துணங்கைக் கூத்தாடிய..
பேய்மகள் மக்கள் யாக்கையினும் மிகப் . பெரிய ப
வடி வினளாகக் கூறப்படுகின்றாள். ௩
மேல்நோக்கிச் சுடர்விட் டெரியும் இயல்புடைய
நெருப்புச் சாய்ந்தெரிந்தாலொத்த நாவினையும் வெள்
யாட்டுக் குட்டிகளையணிந்த காதினையும் பிளவுபட்ட...
பாதங்களையும் உடைய பேய்மகள் நிணத்தைத் இன்று - திரிக்கும் தோற்றம் இிறுபாணரீற்றுப்படையில் உவமையாகக் - குறிக்கப்பெற்றுள்ளது. வேந்தர்கள்' பகைவர்களை வென்று போர்க்களத்தின் கண்ணே வெவற்றித் தெய்வமாகிய கொற்றவையை வணங்கிப் பேய் முதலியவற்றுக்குப் . பலியிடுதல் வேண்டி மறக்களவேள்வி செய்வர். பேய்களில் :
சமைத்தற்றொழிலில் வல்லனாய்ப் பரிமாறும் 'முறைதெரிந்த.
ஆண்பேயாகிய சமையற்காரன் போரிற் புறங்கொடாது இறந்த மறவர்களின் வீரவளையினையுடையவாகிய தோளையுடைய கைகளையே துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊன் சோற்றைப் பகைவராற் கோபித்தற்கரிய கடிய வாயினையும் ரிய தொழிலினையுமுடையராய் முன்வைத்த அடி பின்னிடாதபடி போர்செய்த படை வீரர்க்கு விருந்தாகப்படைக்கும் முறையில் மறக்கள வேள்வி நடந்தது. இச்செய்தி,
“தெறலருங் கடுந்துப்பின்
விறல்விளங்கிய விழச்சூர்ப்பின்
தொடித்தோட்கை துடுப்பாக
வாடுற்ற வூன்சோறு
நெறியறிந்த கடிவாலுவன்
அடியொதுங்கிப் பிற்பெயராப்
படையோர்க்கு முருகயர”் (மதுரைக்காஞ்சி 32 - 38)
எனவரும் மதுரைக்காஞ்சித் தொடர்களாற் புலனாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

சங்கவிலக்கியப் புறத்திணைப் பாடல்களுட். பேய் மகளிர் . செயல்கள் புனைந்துரைக்கப் பெற்றுள்ளன. இவர்கள் மக்களினத்திற்றோன்றிப் பிணந்தின்னும் பழக்கமுடையராய் மக்களினத்தின் வேறுபட்டு" அழகிலாவுருவினராய்க் கண்டோர் வெருவி ஓடும்படி, அச்சந் தரும் வடிவினராதலின் பேய் என்னும் பெயர் பெற்றனர் என எண்ணத் தோன்றுகின்றது. அச்சம் என்னும் பொருளுடைய பேம் என்னும் உரிச்சொல்லின் அடியாகப் பிறந்தது பேய் என்னும் அபபராடம் ப மக்கள் வடவிந்காணங்படும் இவர்களேயன்றி இவர்கட்கு வேறாக. மக்களை” அச்சுறுத்தும் அணங்காகிய பேய்கள் உள்ளன என்பதும் அவற்றுக்குப் பலி கொடுத்துப் பரவு செய்தால் அவை அப்பலியினைப் பெற்றுத் தம்மைக் குறித்துப் பலியிட்_டவர்களுக்கு எத்தகைய இதங்குஞ் செய்யாது திரும்பி விடும் என்பதும் பண்டைக் காலத்து மக்கள் கொண்ட நம்பிக்கையாகும். இக்குறிப்பு,
772 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
“மெய்பனிகூரத அணங்கெனப் பரா வலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி” (பதிற். 71)
எனத் தகடரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறையை நோக்கி அரிசில் கிழார் பாடிய பாடலில் வரும் உவமையில் எடுத்தாளப் பெற்றுள்ளமை காணலாம். “மெய்ந்நடுக்கம் மிக்கு அணங்கெனக் கருஇப் பரவுதலால், பேயானது தன்னைப் பற்றினாருயிரை வெளவாது அவர் அஞ்சித் தரும் பலிப்பொரு ளேற்றுக்கொண்டு அவர்க்குத் கங்கு செய்யாமல் திரும்புமாறுபோல வேந்தனாகிய நீயும் நின்னையஞ்சித்
தொழும் பகைவரது உயிரை வெளவாது அவர்தந்த திறைப் பொருளையேற்றுக்கொண்டு கிரும்புகின்றாய்”” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். இத்தொடரில் வந்துள்ள பாசம் என்னும் சொல்லுக்குப் பேய் என்பது பொருள். அஞ்சினாருயிரைப் பிணித்து வருத்துதலின் பாசம் என்பது பேய்க்குப் பெயராயிற்று.
மே க ய் க ச
ஏனைப் பசாசு அருள், என்னை நலிதரின்
இவ்வூர்ப் பலிநீ பெறா அமற் கொள்வேன்”: (கலித். 65 :17-18)
எனக் கலித்தொகையிற் பார்ப்பாளனொருவன் கூறியதாகக் தோழி படைத்து மொழியும் தொடர், அச்சுறுத்தும் பேய்கள் ஊர் மக்கள் தரும் பலிப் பொருளை இரவில் எர்பார்த்து வாழும் இயல்புடையன என்பதனையும் அத்தகைய பேய்களுக்குப் பலியிடுதலை ஊர் மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதனையும் நன்கு புலப்படுத்தல் காணலாம்.

பகைவரது படையெடுப்பினாற் சிதைந்து பாழ்பட்ட மையால் மக்கள் செல்லாத பாழிடங்களிலும் இருள் செறிந்த இரவுப் பொழுகிலும் இறந்தோர் உடம்பினை யட_க்கள் செய்யும் ஈமப்புறங்களிலும் காளி கோட்_டங் களிலும் மக்களை வருத்தும் பேய்கள் அலைந்து தஇரிவன என்பது பண்டைக்கால மக்களிடையே நிலவிய நம்பிக்கையாகும்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுடைய படை வீரர்களாற் பகைவர் நாடு பாழாயின செய்தியை விரித்துரைப்பதாக அமைந்தது,
“ அவையிருந்த பெரும்பொதியிற்
கவையடிக் கடுநோக்கத்துப்
பேய்மகளிர் பெயர்பாட
அணங்குவழங்கும் அகலாங்கண்
நிலத்தாற்றுங் குழூப்புதவின்
அரந்தைப்பெண்டிர் இணைந்தனர் அகவ'' (மதுரைக். 161-6)
எனவரும் மதுரைக் காஞ்சிக் தொடராகும். “சான்றோர் இருந்த அம்பலங்களிலே இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய பேயாகிய மகளிர் அடி பெயர்த்து ஆட, இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்தே நிலத்திலுள்ளாரையெல்லாம் அனுப்பும் வாயில் காவலரையுடைய வாயிலின்்கண்ணேயிருந்து மனக்கவற்சியினையுடைய மகளிர் வருந்தி அரற்ற” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும்.

“வருத்துதல் என்னும் பொருளுடைய “அணங்கு” என்னுஞ்சொல் “வருத்துதலையுடைய தெய்வம்? என்ற பொருளிற் சங்கச் செய்யுட். களிற் பலவிடங்களிலும் ஆளப்பெற்றுள்ளது. ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் உலகத்தாரறியாது மறைந்தொழுகும் களவு வாழ்க்கையில் தலைவன் தன்னால் தலை யளிக்கப்பெறும் தலைவியை நோக்கி, “நின்னைவிட்டடு ஒரு காலத்தும் பிரிய மாட்டேன்! எனத் தான் வழிபடும் தெய்வத்தின் முன்னிலையிற் சூளுரைத்து அவளுள்ளத்தே தன்னைப் பற்றிய நம்பிக்கை தோன்றும்படி உறுதிமொழி கூறுதல் இயல்பு. இவ்வாறு தெய்வத்தின் முன்னிலையில் உறுதி கூறுதலை “முன்தேற்று் என்பர் தொல்காப்பியர். இவ்வாறு தெய்வத்தின் முன்னிலையில் உறுதி செய்தார் அவ்வுறு மொழியில் தவறுவராயின் அவர் செய்த சூளுறவே அவரை வருத்தும் என்பதும், தன் முன்னிலையிற் செய்த சூளுறவினின்றும் தவறிய கொடியோரைக் தெய்வம் வருத்தும் என்பதும் பண்டைத் தமிழர் வாழ்வியலிற் காணப்படும் நம்பிக்கையுணர்வாகும்.. எனவே தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்யப்புகுவோர் அதிலிருந்து தவறினால் தமக்கு வரும் துன்பத்தினையும் எண்ணியே சூள்செய்தல் வேண்டும். தெய்வத்தின் முன்னர்ச் செய்த சூளுறவிற் பிழைத்தோர் துன்புறுவர் என்பதனை வற்புறுத்தும் கருத்திலேயே “இன்னாத்தொல்சூள்: எனவும் “அணங்குடை யருஞ்சூள்” (நற். 386) எனவும் அடைகொடுத்தோ துவர் பண்டைத் தமிழ்ச் சான்றோர்.
ஒத்த அன்புடைய ஒருவன் ஓஒருத்தியாகிய காதலர்களது காதலுணர்வினையும் பகைவரால் நாட்டிற்கு நேரும் $மைகளைப் போக்கும் குறிக்கோளுடையராய்த் தம்முயிரைப் பொருட்படுத்தாது பகைவரோடு பொருது வெல்லும் போர் மறவர்களது வெற்றித் திறத்தையும் விரித்துரைக்கும் முறையிற் பாடப் பெற்ற சங்கச் செய்யுட்கள் காதலும் வீரமும் ஆகிய இவ்விருவகையுணர்வுகளுக்கு அரண் செய்யும் தெய்வ வழிபாட்_டினையும் சறப்பாக வலியுறுத்தியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும்.

பல பிறப்புக்களிலும் கணவனும் மனைவியுமாக அன்பினாற் கூடி வாழ்ந்த ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவர், அடுத்துவரும் பிறவியிலும் நம்பியும் நங்கையுமாய் வளர்ந்த இளம்பருவத்தே நல்லூழின் செயலால் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டு உலகத்தார் அறியாதவாறு மறைவிற் கூடி மகிழும் கேண்மை தமிழ் மக்களது அகத்திணை யொழுகலாற்றில் இயற்கைப் புணர்ச்சியெனப்படும். இவ்வாறு நல்லூழின் திறத்தால் தலைமகளை எதிர்ப்பட்டு அன்பினால் அளவளாவிய நிலையில் தலைமகன் தன்னைப் பிரிந்து சென்று விடுவானோ என்ற அச்சம் தலைமகள் உள்ளத்தே தோன்றுதல் இயல்பு. இங்ஙனம் ஐயுற்றுவருந்இய தலைமகளது அச்சவுணர்வினைப் போக்கி அவளைத் தெளிவித்தல் வேண்டித் தலைமகளை நோக்கி, “நின்னை ஒருபொழுதும் பிரியமாட்.டேன்? எனத் தலைவன் தெய்வத்தின் திருமுன் சூளுறவு (சபதம்) செய்து கொடுத்தல் முறையாகும். இவ்வாறு தெய்வத்தின் திருமுன் சூளுறவு செய்து தலைமகளைத் தேற்றும் முறை “முன்தேற்று: எனப்படும் என்பது முன்னர் விளக்கப்பெற்றது. தலைமகளைத் தேற்றுதல் வேண்டித் தலைவன் தெய்வத்தின் முன்னிலையிற் செய்யும் இச் சூளுறவு தலைவியையின்றித் தன் _ வாழ்வு நடவாது என்னும் உண்மையினைத் தலைமகள் மனங்கொள்ளும் தலைமகனைத் தெரிவிப்பதாகலின் “முன்தேற்று” என வழங்கப் பெறுவதாயிற்று.

. இயற்கைப் புணர்ச்சியில் தலைமகளைக் கூடிய தலைவன், தலைமகளது உள்ளக்கருத்து தன்னை மணந்து கொண்டு இல்லறம் நிகழ்த்துதலாக இருக்கும் என நினைந்து “பலரும் வந்து உண்ணும்படி கதவு திறந்து கிடக்கும் வாசலையுடையதும், மிடாவிற்சமைத்த சோற்றை வருவார்க்கெல்லாம் வரையாமல் இடுதலால் விழாக் கொண்டாடினாற் போன்ற செல்வத்தையுடையதும் ஆகிய வளமனை பொலிவு பெறும்படி பசுத்த நிணம் ஒழுகிய நெய்மிக்க அடிசிலைச் சுற்றத்தார்க்கும் விருந்தினர்க்கும் நீ இடுகையினாலே அவர்கள் உண்டு மிகுந்த எஞ்சிய உணவினை நீ எனக்கு இடுதலினாலேயான் நின்னுடன் இருந்து உண்ணுதலும் எனக்கு உயர்வு விளைப்பதாகும்” என்று சொல்லி இவ்வாறு திருமணஞ் செய்து கொண்டு வாழும் மனையறமே தங்களைப் பிறவிக்கடலினின்றும் இன்பக்கரையேற்றுவதாகத் தெளிவித்து, பெரியமலையில் மிகவுயர்ந்த இடத்தேயுறைகின்ற முருகப் பெருமானையும் வாழ்த்தி வணங்கி அவ்விறைவன் முன்னே தலைமகள் பாதுகாவலுறைதற்குக் காரணமாகிய வஞ்சினத்தை உண்மையாகவே தெதளிவித்து அதற்கு அடையாளமாக அம்மலையில் ஒழுகும் அழகிய இனிய தெள்ளிய நீரைக் குடித்துச் சூளுறவு செய்தனன் என்ற இச் செய்தியைக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு விரித்துரைக்கின்றது.

“குன்றுகெழுநாடன் எம் விழைதகு பெருவிறல்
உள்ளத்தன்மை உள்ளினன் கொண்டு
சாறயர்ந்தன்ன மிடாச் சொன்றி
வருநர்க்கு வரையாவளநகர் பொற்ப
மலரத்திறந்த வாயில் பலருணப்
பைந்திண மொழுகிய நெய்ம் மலியடிசில்
வசையில் வான்திணைப்புரையோர் கடும்பொரு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடுண்டலும் புரைவதென்றாங்கு
அறம்புணையாகத் தேற்றிப் பிறங்குமலை
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது
ஏமுறு வஞ்சினம் வாய்மையிற் றேற்றி
அந்தீந் தெண்ணீர் குடித்தலின்'” (குறிஞ்சிப். 199-210)
எனவரும் இப்பகுதியில், தலைவன் தலைவி இருவரும் திருமணம் செய்து கொண்டு சுற்றத்தாரையும் விருந்தினரையும் பேணி மனையறம் நிகழ்த்தும் முறைமையும் இயற்கைப் புணர்ச்சக்கண் தலைவன் தெய்வத்தை வாழ்த்தி வணங்கித் தெய்வத்தின் திரு முன்னர்த் தலைவிக்குச் சூளுறவு செய்து தண்ணீர் குடித்துத் தெளிவிக்கும் திறமும் நன்கு வற்புறுத்தப்பெற்றுள்ளமை காணலாம்.

களவு வெளிப்பட்டபிறகு தலைவியை மணஞ் செய்யாது தலைவன் பொருள் தேடப் பிரிந்த காலத்து. “இவள் ஆற்றாளாயினாள், இவளை யிழந்தேன்” எனக் கவலையுற்ற தோழி தலைமகளை நோக்கிக் கூறுவதாக அமைந்தது,
“பெருந்தோள் நெகிழ அவ்வரி வாடச்
சிறுமெல்லாகம் பெரும்பசப்பூர
இன்னேமாக எற்கண்டு நாணி
நின்னொடு தெளித்தனராயினும் என்னதூ உம்
அணங்கலோம்புமதி வாழிய நீயெனக்
கணங்கெழு கடவுட் குயர்பலி தூ உய்ப்
பரவினம் வருகஞ் சென்மோதோழி
அரும்பெறலாய் கவின்தொலையப்
பிரிந்தாண்டுறைதல் வல்லியோரே” (நற்றிணை 358)

எனவரும் நற்றிணைப் பாடலாகும். ““பெரியதோள் நெகிழவும் வனப்புடைய கோலம் வாடவும் சிறிய மெல்லிய நின் மார்பகத்தே பசலைபடரவும் யாம் இங்ஙனம் தமது பிரிவால் வருந்தவும் என்னைக் கண்டு நாணமுற்று “நின்னைப் பிரியேன்” என நின்னொடு சூளுறவு செய்து தெளிவித்தாராயினும் பொருள்தேடச் சென்ற அவர் நின்னைப் பிரிந்து வேற்று நாட்ட.கத்தே தங்கியிருக்கும் வன்மை யுடையராகவுள்ளார். ஆகவே இங்ஙனம் சூளுறவில் தவறிய அத்தலைவரை வருத்துதலைத் தவிர்வாயாக; தெய்வமாகிய நீ அத்தலைவர்க்கு அருள்சுரந்து வாழ்க' என்று வேண்டிக் கூளிச் சுற்றத்தொடு பொருந்திய கடவுளுக்கு உயர்ந்த பூப்பலியினைத் தூவிப் பரவி வழிபட்டு வருதற்குச் செல்வோமாக” என்பது இப்பாடற் பகுதியின் பொருளாகும்.இதன்கண் தலைவன் தான் தெய்வத்தின் முன்னிலையிற் - செய்த சபதத்தில் தப்பி ஒழுகுதலால் தெய்வம் அவனை ஒறுத்துவருத்தும் என்று அஞ்சிய தோழி அங்ஙனம் வருத்துதலைத் தவிர்த்தருள்க எனக் கடவுளைப் பரவி வழிபடுதற் பொருட்டுத் தலைமகளை அழைத்தாள் என்ற செய்கி இப்பாடலில் இடம் பெற்றுள்ளமை அறியத் தகுவதாகும்.

தான் தவறு செய்யவில்லை என்பதனை உறகிசெய்யும் முறையில் தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்யும் பழக்கமும் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்று வருகின்றதென்பதும் தெய்வத்தின் முன்னிலையிற் பொய் கூறுதல் அடாதென்பதனை யறிந்திருந்தும் உலக வாழ்க்கையில் தாம் செய்த தவறுகளை மறைத்தல் வேண்டித் தெய்வத்தின். முன்னிலையிற் பொய்ச் சூள் செய்பவர்கள் இந்நாட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றார்கள் என்பதனை எடுத்துக்காட்டி நகைக்கும் முறையிற் பாடப் பெற்றது அகநானூறு 166ஆம் பாடலாகும். காவிரியாற்றிற் பரத்தையொடு புனலாடி மகிழ்ந்த தலைவன், அது கேட்டுத் தன் மனைவி புலந்தாளாக, யான் பரத்தையொடு புனலாடீனேனல்லேன்' என அவட்குப் பொய்ச் சூள் செய்தான். அச்செய்தியைக் கேள்வியுற்ற பரத்தை தன் பக்கத்திலுள்ளார் கேட்ப 2 நகையாடிக் கூறுவதாக அமைந்தது அவ்வகப்பாடலாகும்.
“பழம்பன் னெல்லின் வேளூர் வாயில்
நறுவிரை தெளித்தநாறிணர் மாலைப்
. பொறிவரியினவண் டூதலகழியும்
உயர்பலி பெறூஉம் உருகெழுதெய்வம்
புனையிருங்கதுப்பின் நீகடுத்தோள்வயின்
அனையேனாயின் அணங்குக என் என
மனையோட் டேற்றும் மகிழ்ந் நனாயின்
யார் சொல் வாழி தோழி நெருநல்
தார்பூண் களிற்றின் தலைப்புணைதமீ இ
வதுவை யீரணிப் பொலிந்து நம்மொடு
புதுவது வந்தகாவிரிக்
கோடுதோய் மலிர்நிறை ஆடியோரே”” (அகம். 166)
118 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
“பழைய பல்வகை நெல்வளத்தையுடைய வேளூர் வாயிலின்கண்ணே நறுமணநீர் தெளிக்கப்பெற்ற மணம் வீசும் பூங்கொத்துக்களால் ஆகிய மாலையினைப் புள்ளிகள் நிறைந்த வரிகளோடு கூடிய வண்டு தெய்வத்திற்குரிய மாலையென்று அஞ்சித் தேனுண்ணாது ஒழிவதற்குக் காரணமான உயர்ந்த பலிகளைப் பெறும் அச்சந்தரும் தெய்வம், அணிசெய்த கரிய கூந்தலையுடையளாய் நின்னால் ஐயுறப் பெற்றாளாகிய பரத்தையுடன் புனலாடிய அத்தன்மை யுடையேனாயின் என்னை வருத்துவதாகுக என்று சூளுரைத்துத் தலைவன் தன் மனைவியைத் தெதளியக் கூறுவானாயின் நேற்று இருகரையும் பெருகப் புஇதாக வந்த காவிரியின் நீர்ப்பெருக்கிலே தாரணிந்த களிற்றினைப் போன்று புணையின் தலையிடத்தைத் தழுவியிருந்து வதுவைக்குரிய பெரிய அணியாற் பொலிவுபெற்ற நம்முடன் கூடிப் புனலாடினோர் அத்தலைவரன்றிப் பிறர் யாரோ?” என்பது மேற்குறித்த பாடற் பகுதியின் பொருளாகும்.

இங்ஙனம் அகத்தணையொழுகலாறாகிய களவிலும் கற்பிலும் தெய்வத்தின் திருமுன்னர்ச் சூளுறவு செய்தலாகிய இந்நிகழ்ச்சி, மக்களது குடும்பவாழ்வுக்கு உறுதுணையாகத் தெய்வத்தை முன்னிறுத்தி அதன் இருவருள் வழி அடங்கி யொழுகிய மக்களது தெய்வங்கொள்கையினை நன்கு வலியுறுத்தும் முறையில் அமைந்துள்ளமை இங்கு மனங்கொளற் பாலதாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இவ்வாறு தன் முன்னிலையில் அன்புடையார்க்குச் சொன்ன உறுதிமொழியிலிருந்து தவறுதல் முதலிய
கொடுமை செய்தவர்களை ஒறுத்து அடக்குதலும் அன்புடைய நல்லோர்களைப் பாதுகாத்தலும் தெய்வத்தின் இயல்பாகும் என்பதும் தவறு செய்தோரைத் தெய்வம் ஒறுத்து அடக்கும் என்பதனை உணர்ந்தவர்கள் தெய்வத்தின் முன்னர்த் தாம் செய்த சூளுறவினின்றும் தவறமாட்டார்கள் என்பதும் ஆகிய எண்ணங்கள் மக்கட் சமுதாயத்தில் வேரூன்றியிருந்தால் தெய்வத்தின் முன்னிலையில் தலைவன் முதலியோர் சூளுறவு செய்தலும் அச்சூளுறவினைத் தலைவி முதலியோர் நம்பி யொழுகுதலும் ஆகிய உலகிய லொழுகலாறுகள் செவ்வனே நிகழ்தல் கூடும். உலகில் பிறவுயிர்கட் குத் துன்பஞ் செய்யுமியல்பினராகிய கொடியோர் களை ஒறுத்து வருத்துதலும் பிறவுயிர்க்கு ஒருசிறிதும் தீங்கு எண்ணாத நல்லியல்புடையவர்களை இடர்நீக்கிக் காத்தலும் தெய்வத்தின் இயல்பு என்னும் மெய்ம்மையினைச் சங்க காலத் தமிழ் மக்கள் நன்குணர்ந்து தமது வாழ்க்கையினை நன்முறையில் அமைத்துக் கொண்டனர். தெய்வ நம்பிக்கையின் விளைவாக அமைந்த இவ்வாழ்வியல் நெறிமுறை,
“மன்ற மரா அத்த பே முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப
கொடியரல்லர் எம் குன்று கெழு நாடர்” (குறுந். 87)
எனத் தலைவியொருத்தி தன் ஆருயிர்த் தலைவனைப் பொறுத்தருளும்படி தெய்வத்தை அன்பினாற் பரவுவதாக அமைந்த குறுந்தொகைப்பாடலால் இனிது புலனாம்.

அலைகள் கிளர்ந்தெழும் கடற்றுறையிலும் வானுற வோங்கிய மலையடுக்கங்களிலும் மரங்கள் செறிந்த காடுகளிலும் நீர்த்துறைகளிலும் முஇர்ந்த பெரிய ஆல் வேம்பு கடம்பு முதலிய மரங்களின் அடிசளிலும் பலவழிகள் ஒன்று கூடும் சந்தகளிலும் தெய்வம் உறையும் என்று பண்டையோர் நம்பினார்கள். அந் நம்பிக்கையின் விளைவாகஅவ்விடங்கள் பலவும் மக்கள் அச்சத்துடன் அணுகி வழிபடுதற்குரிய தெய்வ நிையங்களாயின. இச்செய்தி, “அணங்குடைப் க அதப் (ஐங். 174), “அணங்குடை நெடுங்கோடு (புறம். 52), “அணங்குடை முருகன் கோட்டம்” (புறம். 299) எனவரும் தொடர்களாற் புலனாம். மக்கள் தமக்கென அமைத்துக் கொண்டுள்ள இல்லங்களிலும் மனைவாயில் நிலைகளிலும் தங்களை இடர் நீக்கிக் காக்கும் தெய்வம் உறைகின்றது என்னும் நம்பிக்கையுடையராய்த் தம் மனைக்கண் தெய்வத்தினை வழிபட்டு வந்தனர். இக்குறிப்பு “அணங்குடை நல்லில்” (மதுரைக். 578) எனவும், “அணங்குடை நெடுநிலை” (மதுரைக். 578) எனவும், “அணங்குடை நெடுநிலை” (மதுரைக். 535) எனவும் : வரும் மதுரைக் காஞ்சித் தொடர்களால் இனிது புலனாதல் காணலாம். இவ்வாறு மனைக்கண் உறைந்து மக்களைக் காக்கும் தெய்வத்தினை “இல்லுறை தெய்வம்' (மதுரைக். நச். உரை) “இல்லுறை கடவுள்? (அகம். 282) எனப் போற்றுதல் மரபு. வீட்டுத் தெய்வத்திற்குப் படைத்தல் என்னும் இவ்வழக்கம் தமிழகத்தில் இக்காலத்திலும் தொடர்ந்து நிலைபெற்றமை இங்கு நினைத்தற்குரியதாகும். “அணங்கு” என்னும் சொல் தெய்வத்தின் எல்லையற்ற பேருருவினையும் பேராற்றலையும் குறிக்கும் பொருளினதாக நக்கரனாரால் ஆளப்பெற்றுள்ளது. குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன் மக்களது கட் புலனுக்கு அடங்காத தனது பேரொளி வாய்ந்த பேருருவமாதிய உயர்ந்த பெருந் தோற்றம் காண்போர்க்கு அச்சந்தரும் இயல்பின தாதலின் அப்பெருந்தோற்றத்தினைத் தன்னுள் அடக்கிக் கொண்டு பண்டைக்காலத்து வள்ளியை மணத்தற் பொருட்டு எளிவந்தருளிய மணங்கமழ் தோற்றத்து இளையோனாகக் கண்முன் தோன்றி அச்சமகற்றி அருள்
புரியும் திறத்தினன் என்பதனை,
“அணங்குசால் உயர்நிலைதழீ இப் பண்டைத் தன்
மணங்கமழ் தெய்வத்து இளநலங்காட்டி”” (திருமுருகு. 289-290)
எனவரும் தொடரில் நக்கீரனார் விளக்கியுள்ளமை இங்கு அறியத்தகுவதாகும். “அணங்கு” என்னும் சொற்போன்றே “சூர் என்ற சொல்லும் “வருத்துவது என்ற பொருளிலும் “தெய்வம்' என்ற பொருளிலும் சங்கச் செய்யுட்களில் ஆளப்பெற்றுளது. “சூருறுமஞ்ஞையின் நடுங்க” (குறிஞ்சிப். 169) என்ற தொடர்க்குத் “தெய்வம் ஏறின மயில்போல நடுங்காநிற்க” எனப் பொருள் வரைந்தார் நச்சினார்க்கினியர். தெய்வம் உயிர்கள்மேல் ஆவேசித்தல் உண்டு என்பதும் அவ்வாறு தெய்வம் ஏறப்பெற்ற உயிர்களின் உடம்பு நடுக்கமுற்று ஆடாநிற்கும் என்பதும் 'சூரமை நுடக்கத்து ப்்வ்கட ஆடிூனை: (ஐங். 71) “சூர்நசைந்தனையாய் நடுங்கல் கண்டே.” (குறுந். 52) எனவரும் சங்க இலக்கியத் கொடராலும் நன்குபுலனாம்.

நிலத்தில் வாழும் மானுட மகளிரின் வேறாக வானிலும் வரையிலும் நீர்ப்பரப்பிலும் வாழும் தெய்வத்தன்மை வாய்ந்த மகளிர் உள்ளார்கள் என்பது பண்டைத் தமிழ் மக்களின் நம்பிக்கையாகும். “சூர் அரமகளிர்' (இருமுருகு. 41), “வான் அரமகளிர்' (இருமுருகு. 117), “வரையரமகளிர்” (குறிஞ்சி. 195, மலைபடு. 190, ஐங். 191, 204, அகம். 342) எனச் சங்கச் செய்யுட்களிற் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். வானுலகில் வாழும் தேவ மகளிர் 4 வானவமகளிர்: (மதுரைக். 382) எனப்பட்டனர். சூர் என்னும் தெய்வம் விரும்பிய காந்தள் மலரில் வண்டு மொய்த்தல் இல்லை. அறியாது அதன் மேல் மொய்த்த வண்டினம் தம் பறத்தல் வன்மை கெட்டுவருந்தும் என்பது,
“மலர்ந்த காந்தள் மாறாதூ திய
கடும் பறைத்தும்பி சூர் நசைத்தா அய்ப்
பறைபண்ணழியும்” (பதிற். 67)
எனவரும் தொடராற்புலனாம். “மலர்ந்த காந்தளினது மலரை இது தெய்வத்திற்கு உரியது என்று அறிந்தும் அதனை விட்டு நீங்காது ஊதிய விரைந்து பறத்தலையுடைய தும்பியென்னும் சாதுவண்டு தன் பறத்தல் வன்மை ர் கெட்டழியும். “சூர்நசைத்தாஅய்' என்றதனைச் சூர்நசைத் தாகவெனத்தஇிரித்து, சூரானது நச்சுதலையுடைத்து ஆகலானேயென வுரைக்க” என்பர் பதிற்றுப்பத்தின் பழைய உரையாசிரியர். சூர்-தெய்வம் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றது. காந்தள் மலரை விரும்பும் தெய்வம் என்றது மைவரையுலகிற்குரிய சேயோனாகிய முருகப் பெருமானை.
“சுரும்புமூசாச் சுடர்ப்பூங்காந்தட்
பெருந்தண் கண்ணிமிலைந்த சென்னியன்' (திருமுருகு 44-45)_

“வெறியறிசிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தள்” (தொல். புறத். நூ. 63)
என்பள இங்கு ஒப்பு நோக்கியுணரத்தக்கனவாகும். பண்டை நாளில் வாழ்ந்த மக்கள், காக்கை,பல்லி முதலிய அஃறிணையுயிர்களின் இயக்கங்களையும் குரல்களை யும் தமது வாழ்க்கை நிகழ்ச்சிகளில் தொடர்புடையனவாகக் கூர்ந்து உணர்ந்திருந்தனர். காக்கை கரைதல், கரிக்குருவி முதலிய அஃறிணையுயிர்களின் செயல்களைத் தமக்கு எதிர்காலத்தில் நேரவிருக்கும் நற்செயல் தச்செயல்களின்
நிமித்தமாகக் கொண்டனர். தாம் எண்ணிய செயலைத் தொடங்குதற்கும் தவிர்தற்கும் மக்கட். கூட் டத்தாரிடையே இயல்பாகத் தோன்றும் நற்சொல்லையும் தச் சொல்லையும் நிமித்தமாக எண்ணினர். முருக பூசை பண்ணும் வேலன் முதலியோரைக் கொண்டு நிகழ்த்தும் வெறியாடல், கட்டுவிச்சி யென்னும் கணிமகளைக்கொண்டு கட்டும் கழங்கும் இட்டுரைத்தல் முதலிய தெய்வக் குறிப்புக்களால் சென்ற காலத்தில் நிகழ்ந்தது, நிகழ்காலத்தில் நிகழ்வது, எதிர்காலத்தில் நிகழவிருப்பது ஆகிய முக்கால நிகழ்ச்சிகளை யறிந்துகொள்ளுதலும் வானின்கட். காணப்படும் விண் மீன்கள் கோள்கள் ஆகியவற்றால் இவ்வுலகில் நிகழவிருக்கும் இயற்கைம: 2றங்களை முன்னரே உய்த்துணர்ந்துரைத்தலும் ஆகிய ஆற்றல் படைத்தவர்களாக வாழ்ந்தார்கள். இச்செய்கு, 6
தன்னும் அவனும் அவளுஷ்் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சஞ்சார்தலென்று
அன்னபிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றொடுவிளக்கி'” (தொல். அகத். 40)
எனவும், “பக்கத்துவிரிச்சி” (தொல். புறத்.3) எனவும், “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்”, (ஷ.5) எனவும், “குடையும் வாளும் நாள்கோாள்” (ஷை. 11) எனவும், “மறுவில் செய்து மூவகைக் காலமும், நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” (ஒடி 36) எனவும், “கட்டினுங் கழங்கினும் வெறியென இருவரும், ஒட்டியதிறத்தாற் செய்திக் கண்ணும்” (ஷை களவியல் 25) எனவும் வரும் தொல்காப்பியத் தொடர்களாலும், “நாளன்று போடப் புள்ளிடை தட்ப: (புறம். 124), “புள்ளும் பொழுதும் பழித்தலல்லதை, உள்ளிச் சென்றோர்ப் பழியலர்' (ஷி.24) புட்பகைக்கு ஏவானாகலிற் சாவோம் யாம்” (ஷடி.68) என வரும் புறநானூற்றுத் தொடர்களாலும் நன்கு புலனாம்.

ப மகட் டோக்கிய செவிலித்தாய் சொல்லியதாக அமைந்த 195 ஆம் அகப்பாடலில், மே
அறுவைதோயும் ஒரு பெருங்குடுமிச்
சிறுபை நாற்றி பல்தலைக் கொடுங்கோல்
ஆகுவதறியும் முதுவாய்வேல
கூறுகமாதோ நிள்கழங்கின்திட்பம் . . . . .
எம்மனைமுந்துறத்தரு மோ
தன்மனையுய்க்குமோ யாதவன் குறிப்பே”
எனவரும் பகுஇயில் வேலன் கழங்குபார்த்து நிகழ்வனகூறும் வழக்கம் விளக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

மனைக்கண் நெடுஞ்சுவரிடத்தே பொருந்தி வாழும் பல்லியின் சொற்களைப் பலமுறை கேட்டு அதன்பின்னர்
"நிகழ்ந்த இன்பதுன்ப நிகழ்ச்சிகளுடன் இயைத்து எண்ணிய பண்டைக்காலமக்கள், பல்லிசொல்லும் சொற்களைப் பின்னர் நிகழ்வனவற்றை முன்னர்ப் புலப்படுத்தும் நிமித்தமாகக் கொண்டனர் என்பது சங்கச் செய்யுட்களால் நன்கு புலனாகின்றது. பல்லி இன்ன திசையிற் சொன்னால் நற்சொல் எனவும் இன்னஇிசையிற் சொன்னால் இச்சொல் எனவும் பல்லியின் சொல்லுக்குத் திசைவகையாற் பயன் கற்பித்துக் கொண்டார்கள் என்பது “பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி” (அகம். 9) எனவும், “பல்லியும் பாங்கொத்துசைத்தன? (கலித். 11) எனவும் வரும் தொடர்களாற் புலனாம்.

பின்வரக்கடவ இன்பதுன்ப நிகழ்ச்சிகளைப் பல்லி தன் சொற்களாற் புலப்படுத்தும் தன்மையதென்பதும், மக்கள் வாழும் மனையகத்துமட்டுமன்றி அவர்கள் செல்லும் காட்டகத்து வழிகளிலும் சோதிடரைப் போன்று நேரவிருக்கும் இடையூறுகளைத் தம் சொற்களாற் புலப்படுத்தும் திறன் பல்லியின் சொற்களுக்கு உண்டென்பதும் பண்டைக்கால மக்களது வாழ்வியலிற் காணப்படும் நம்பிக்கையாகும். . இந்நுட்-பம்,
“கள்ளிமுள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு _-
உறுவது கூறுஞ் சிறுசெந்நாவின்
மணியோர்த்தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடு” (அகம். 151)
எனவரும் அகநானூற்றுத் தொடரால் நன்கு புலனாதல் காணலாம். ப ப

ஆறலை கள்வர் வாழும் கொடிய பாலைநில வழியே: செல்வோர் யானைப்படையுடைய பெருவேந்தராயினும் போரின்கண்ணே உயிர்துறந்து புகழ்நிறுவிய வீரர்களை வமிபடுதற்கென அங்கு வரிசையாக நடப்பெற்றுள்ள நடுகற்களைப் பொருந்தியிருந்து இரை பெறாது வருந்தும் முதிய பல்லி, பின்வரும் துன்ப நிகழ்ச்சியினைப் புலப்படுத்தும் இன்னாச்சொற்களை இடையிட்டுரைப்பதாயின், அச்சொற்களைக் கேட்ட அளவிலேயே அவ்வழியில் மேலும் செல்லுதலை நறகல். தாம் வழியே விரைந்து திரும்புவர் என்பதனை, 6
நல்லிசை நிறுத்த நாணுடை. மறவர்
நிரைநிலை நடுகற் பொருந்தி இமையாது
இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவதாயிற் பெரிய
ஓடையானை உயர்ந்தோராயினும்
நின்றாங்குப் பெயரும் கானம்” (அகம். 387)
எனவரும் அகப்பாடலில் பூரூதன் இளநாகனார் புனைந்து கூறிய இறம் பல்லி சொல்லில் அக்காலமக்கள் கொண்டிருந்த நம்பிக்கையினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . ரீநித
- வருவதுணர்த்தும் பல்லியின் சொல்லைப் பகுத்துணர்வுடைய உயர்தஇணை மாந்தர் நிமித்தமாகக் கொண்டது போலவே, அஃறிணையுயிர்களாகிய பன்றி முதலிய விலங்குகளும் நிமித்தமாகக் கொண்டன என்பது,
“முதைச் சுவற்கலித்த மூரிச் செந்தினை
ஓங்குவரைப் பெருங்குரல் உணீஇய பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிபாடோர்த்துக் குறுகும்
புருவைப்பன்றி” ப (அகம். 88)   எனவும்,
“எய்ம்முள் அன்ன பரூஉமயிர் எருத்திற்
செய்ம் மேவற் சிறுகட் பன்றி
ஓங்குமனை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி
நூழை நுழையும் பொழுதிற் றாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லிபட்டென
மெல்ல மெல்ல பிறக்கே பெயர்ந்துதன் .
கல்லளைப் பள்ளி வதியும் நாடன்” -.. (நற். 98)
எனவும் வரும் சங்க விலக்கியப் பகுதிகளில் விரித்துரைக்கப் பட்டது. உயர்ந்த மலைப்பகுதியில் ஓங்கி வளர்ந்த முற்றிய செந்தினையின் பெருங்கதிர்களை உண்ணுதற்கு விரும்பிய பன்றியானது இனைப்புனங்காவலராகிய குறவர்களால் தனக்கு இடர் நேராமை கருப் பல்லியின் நற்சொல்லினை ஓர்த்துக் சேட்டு அதனையே நன்னிமித்தமாக நம்பித் தஇனைப்புனத்தை அணுகியது என்ற செய்து 88ஆம் அகப்பாடலிலும், இரவில் இனைப்புனத்இுற் குறுகித் தினைக் கஇர்களைத் இன்றழிக்கும் பன்றியைப் பிடித்தற்கெனக் குறவர்கள் புனத்தின் முகப்பில் இயந்திரப் பொறி வைத்துள்ளமை யறியாது அப்பொறி வாயிலில் நுழையும் பன்றி அப்பொழுது பக்கத்தே பல்லி சொல்லிய சொல்லினைக் கேட்டுத் தனக்கு நேரவிருக்கும் தீங்கினை யுணர்ந்து அப்பொறியினின்னும் தப்பி மெல்ல மெல்லப் பின்வாங்கித் தான் வாழும் கல் முழையில் வந்து தங்கியது என்ற செய்து நற்றிணை 98ஆம் பாடலிலும் புனைந்துரை வகையால் இடம் பெற்றுள்ளமை பல்லி சொல்லுக்குப் பயன் உண்டு என்னும் பண்டைக்கால மக்களது நம்பிக்கையினை நன்கு வற்புறுத்தல் காணலாம்.

தலைமகன் பிரிவினால் வருந்தும் தலைமகள் பகுவாய்ப் பல்லி சொல்லுந்தோறும் நல்ல சொற்களே கூறுக
என நடுங்கிப் பரவினாள் என்பது,
“மையல்கொண்ட மதனழியிருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி
நல்ல கூறெனநடுங்கி” (அகம். 289)
எனவும், 66 ட ட் ப் ச
வருந்து தோட்பூசல்களையு மருந்தென
உள்ளுதொறு படூஉம் பல்லி
புள்ளுத்தொழு துறைவி” (அகம். 351)
என வரும் தொடர்களால் புலனாம்.

வினைமுற்றி மீள்கின்ற தலைவன் தன்னைப் பிரிந்துறையும் தலைமகளது வருத்தத்தை எண்ணித் தன்னெஞ்சினை நோக்கி, நாம் கருதிய வினையினை முடித்துத் திரும்புகின்றோம். ஆதலால் நமது வருகையினை எதிர்பார்த்திருக்கும் தலைமகளது துன்பந்தீர மாலைப் பொழுதில் நம்மனையகத்தே நீண்ட சுவரிடத்தே பொருந்தி வாழும் பல்லி நற்சொற் சொல்லுமா? என வினைவுவதாக அமைந்தது,
“முன்னியது முடித்தனமாயின் நன்னுதல்
வருவம் என்னும் பருவரல் தீரப்
படுங்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி
சிறுகுடிப் பாக்கத் தெம்பெரு நகரானே” (நற். 169)
எனவரும் நற்றிணைப் பாடலாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

தலைவன் பொருளீட்டி வருதற்குப் பிரிந்தானாக, பிரிவாற்றாது வருந்தும் தலைமகளை நோக்கி ஆறுதல் கூறும் தோழி, மிகவுயர்ந்த புகழ்வாய்ந்த நல்ல மனையின் கண்ணே சுவரிடத்தே பொருந்தியிருக்கும் விரும்பத்தக்க குரலை யுடைய பல்லி அவரை நினைக்குந்தொறும் நள்ளிரவிலும் நற்சொல் சொல்லுகின்றது; எனவே, அரிய பொருள் கருகிப் பிரிந்த நின் தலைவர் நினது இழையணிந்த தோளை அணையவிரும்பி இங்குவந்து சேர்வர். எனவே நின் மனக்கவலை நீங்குவதாக எனத் தலைமகளை வற்புறுத்துவதாக அமைந்தது முற்சுட் டிய நற்றிணைப் பாடலாகும்.

தலைவன் பொருளீட்டி வருதற்குப் பிரிந்தானாக, பிரிவாற்றாது வருந்தும் தலைமகளை நோக்கி ஆறுதல் கூறும் தோழி, மிகவுயர்ந்த புகழ்வாய்ந்த நல்ல மனையின்௧ண்ணே சுவரிடத்தே பொருந்தியிருக்கும் விரும்பத்தக்க குரலை யுடைய பல்லி அவரை நினைக்குந்தொறும் நள்ளிரவிலும் நற்சொற் சொல்கின்றது; திருந்திய எனவே, அரிய பொருள் கருதப் பிரிந்த நின்தலைவர் நினது இழையணிந்த தோளை அணைய விரும்பி இங்குவந்து சேர்வர். எனவே நின் மனக் கவலை நீங்குவதாக எனத் தலைமகளை வற்பறுத்துவதாக அமைந்தது, ே
“அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து
திருந்திழைப் பணைத்தோள் பெறுநர்போலும்
நீங்குகமாதோ நின் அவலம் ஓங்குமிசை
உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி
நயவரு குரல பல்லி
நள்ளென் யாமத்துள்ளு தொறும்படுமே'” (நற். 333)
எனவரும் நற்றிணைப் பாடற் பகுதியாகும். இங்கெடுத்துக் காட்டிய குறிப்புக்களால் சங்ககாலத் தமிழ் மக்கள் பல்லி சொல்லினை நிமித்தமாகக் கொண்டிருந்தார்கள் என்பது நன்கு புலனாதல் காணலாம்.

வீட்டில் காக்கை கரைந்தால் அன்புடைய விருந்தினர் வருவர் என்பது, தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கையாகும். தன்னால் வளர்க்கப்பெற்ற தலைமகள் தான் விரும்பிய காதலனுடன் உடன் போக்கிற் சென்றாளாக அவளது பிரிவாற்றாது வருந்திய செவிலி, அவள் தன்னுடைய காதலுடன் மீண்டுவருதல் வேண்டும் எனக் காக்கைக்குப் பலிக்கடன் நேர்வதாக உரைப்பது,

மறுவில் தூவிச் சிறுகருங்காக்கை
அன்புடை மரபின் நின்கிளையொடு ஆரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
பொலம்புனை கலத்தின் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேற் காளையொடு
அஞ்சி லோதியை வரக் கரைந்தீமே” (ஐங். 391)
எனவரும் பாடலாகும். “குற்றமற்ற சறகினையுடைய சிறிய கரிய காக்கையே! வெவ்விய சினத்துடன் பொருது வெல்லும் ஆற்றல்மிக்க வேற்படையினையுடைய வீரனோடு உடன் சென்ற என்மகள் இங்கு மீண்டு வருமாறு அழைப்பாயாக! ' அவ்வாறு அழைத்தால் பசிய ஊன்பெய்த நிணத்தொடு கலந்த சோற்றினை நின் அன்புடைய சுற்றத்துடன் நீ நிறைய உண்டு மகிழும்படி பொன்னாற் செய்த உண்கலத்கிற் பலியாகத் தருவேன்” எனச் செவிலி காக்கையை நோக்கிக் கூறுவதாக அமைந்தது, மேற்காட்டிய ஐங்குறுநூற்றுப் பாடலாகும்.

தலைமகனது பிரிவினால் வருந்திய தலைவியை ஆற்றுவிக்கும் தோழி நம் வீட்டிற் காக்கை கரைதலால் தலைவர் வந்துவிடுவார் எனக் கூறித் தலைவியைத். தேற்றினாள். அந்நிலையிற் பிரிந்த தலைவனும் விரைந்து வந்தான். தனது பிரிவினால் வருந்திய தலைமகளை ஆறுதல் கூறித் தேற்றிய தோழியை நோக்கி “நீ தலைமகளை நன்கு ஆற்றுவித்தாய்' எனக் கூறிப் பாராட்டினான். அதுகேட்ட தோழி, நின்னை இங்கு வரும்படி அழைத்த காக்கையின் உதவியே பெரிதும் பாராட்டுதற்குரியது என மறுமொழி கூறுவதாக அமைந்தது,
“திண்தேர் நள்ளிகானத்து அண்டர்
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
எழுகலத் தேந்தினும் சிறிது, என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே (குறுந். 210)
எனவரும் பாடலாகும். “என்னுடைய ஆருயிர்த்தோழியாகிய

றட டப பலம் பட பதத அட அதை தணுகப க டல வமா வவ ம் அவம் அபல தனு டை அதித அ
துலைமகளுடைய தோளினை நெகிழ்வித்து வாட்ட
முறும்படி செய்த பிரிவுத் துன்பத்தினைப் போக்குதற்
பொருட்டு விருந்தாக வந்து சேரும் வண்ணம் தன் குரலால்
நின்னை அழைத்த காக்கைக்குப் பலியுணவு தருதல்
வேண்டித் இண்ணிய தேரையுடைய நள்ளியென்னும்
வள்ளலுக்குரிய கானத்திலே ஆயர்கள் மேய்க்கும் பலவாகிய பசுக்கள் தந்த பாலின் நெய்யினோடு தொண்டியென்னும் ஊர்ப்பக்க முழுவதும் விளைந்த வெண்ணெல்லால் ஆகிய வெண்சோற்றினை ஏழுகலங்களில் வைத்துப் படைத்தாலும் காக்கை செய்த நன்றியை நோக்க அது சிறிய பலியுணவாகவே கருதப்படும்” என்பது இக்குறுந்தொகைப்பாடலின் பொருளாகும். எடுத்துக்காட்டிய இருபாடல்களும், மனைப்பக்கத்துல் உறையும் காக்கை கரைந்தால் அவ் வீட்டிற்கு அன்புடையவர்கள் விருந்தாக வந்து சேர்வார்கள் எனவும் மனையறக் கடமைகளுள் ஒன்றாகிய விருந்தோம்புந் திறத்தில் விருந்தினர் வருவர் என்பதனை முன்னறிந்து அறிவிக்கும் இறம் காக்கைக்கு உண்டெனவும் தனக்குக் இடைத்த உணவினைத் தான் மட்டும் உண்ணாது, தன் இனத்தையும் அழைத்து உண்ணும் பண்புடைய காக்கைக்குத் தாம் உண்பதன் முன் பலியாக உணவு அளித்தல் வேண்டும் எனவும் தமிழ் முன்னோர் கொண்டிருந்த நம்பிக்கையினை நன்கு புலப்படுத்தல் காணலாம்...

தெய்வம் உறையும் பொதுவிடங்களில் நிகழும் வழிபாட்டில் தரப்படும் பலியுணவினையேற்று உண்ணுதற் குரியது காக்கை யென்பதும் ஊர் மக்கள் தெய்வத்திற்கெனத் தரும் பலியுணவினையுண்ணும் விருப்புடன் தெய்வம் உறையும் ஆல் முதலிய மரங்களின் கிளைகளில் தங்கிய காக்கைகள் பகற்காலத்தில் அங்கு இடப்படும் பலியுணவினையுண்டு அந்திக் காலத்தில் தத்தம் இருப்பிடங்களைச் சேர்ந்து தம் இனத்தெடடுதங்கும் என்பதும்,
“நெடுவீழிட்ட கடவுளாலத்து
உகுபலி யருந்திய தொகுவிரற் காக்கை
புன்கண் அந்திக் கிளையிற் செறியப்
படையொடுவந்த புன்கண் மாலை” (நற். 343)
எனவரும் நற்றிணைப் பாடற் றொடரால் அறியப்படும். 

கொடிய கண்ணினையும் கூரிய வாபினையும் உடைய பெண்காக்கைகள் பறக்கும் ஆற்றல் பெறாது நடுங்குகின்ற சறகினையுடைய தம் குஞ்சுகளைத் தழுவிக்கொண்டு தன் இனத்தையழைத்துக் கருங்கண்ணாகிய ஊன்கலந்த பொரிக் கறியுடன் கூடிய செந்நெல்லரிசியாற் சமைக்கப் பெற்ற வெண்ணிறச் சோற்றினைத் தெய்வத்திற்கு இடப் பெறும் பலியுணவுடன் விரும்பியுண்ணுதற் பொருட்டுக் கொழுவி உணவுவளமுடைய நல்ல மனையினருகே கூடியிருக்கும் சிறப்புடையது முதுகுடியிற் பிறந்த அருமன் என்பானுக்குரிய பெருபுகழ் வாய்ந்த சிறுகுடி, என்னும்.ஊர் என்பது,
“கொடுங்கட் காக்கைக் கூர்வாய்ப்பேடை
நடுங்குசிறைப் பிள்ளை தழீ இக்கிளை பயிர்ந்து
கருங்கட் கருனைச் செந்நெல் வெண்சோறு
சூருடைப் பலியொடு கவரிய குறுங்காற்
கூழுடை நன்மனைக் குழுவின இருக்கும்
மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி (நற். 367) எனவரும் நக்&ரனார் பாடலில் விரித்துரைக்கப் பெற்றது.

குற்றமற்ற கடவுளுறையும் மரத்தில் தங்கிப் பலியுண்டு வாழுமியல்புடைய காக்கை பெருங்காற்றால் மோதப்படும் நீண்ட சனையிடத்தே மழைத்துளி பட ஒடுங்கியுறங்கி வெல்லும் பார் வலிமிக்க சோழர்க்குரிய கழார் என்னும் ஊரிட த்தே தெய்வம் கொள்ளுதற்குரிய நல்ல கூறுபாடுடைய மிக்க பலிக் கொடையோடு சொரியப்படும் அளவில்லாத உணவாகிய அழகிய பல பலபுதுமையுடைய ஊனொடு விரவிய பெருஞ்சோற்றைப் பகற்பொழுதில் உண்ணலாம் என்னும் நினைவுடன் இருந்தன என்பது,
“மாசில் மரத்த பலியுண்காக்கை
வளிபொரு நெஞ்சினை தளியொடு தூங்கி
வெல்போர்ச் சோழர் கழார்க் கொள்ளும்
நல்வகைமிகு பலிக்கொடையொடு உருக்கும்
அடங்காச் சொன்றி யம்பல் யாணர் :
விடக்குடைப் பெருஞ்சினையுள்ளுவன விருப்ப
மழைமைந்துற்ற மாலிருள் நடுநாள்” (நற். 281)
எனவரும் பாடலிற் குறிக்கப்பெற்ற து.

பலியுணவாகிய சோற்றினை விழுங்கிய கருங்காக்கை மனையைச் சேர்ந்து வளர்ந்துள்ள நொச்சியின் நிழலிடத்தே தடந்த யாமைப்பார்ப்பினைத் தான் இன்னுதலை வெறுத்து அதனைப் பின் காலத்துத் தன்னுதற்காகப் பாதுகாத்து வைத்தது என்ற செய்தியினை,
“செஞ்சோற்ற பலிமாந்திய
கருங்காக்கை கவவு முனையின்
மனைநொச்சி நிழலாங்கண்
ஈற்றியாமைதன்பார்ப்போம்பவும்'” (பொருந. 184-6) ரந எனவரும் பகுதியில் முடத்தாமக்கண்ணியார் என்னும் புலவர் தாம் பாடிய பொருநராற்றுப்படையிற் குறித்துள்ளார்.

முரசுடைய முடிவேந்தரும் வேளிராகிய குறுநில மன்னரும் ஒருவர் துணிந்ததே காரியமாக அனைவரும் துணிந்து கடலிலுள்ளனவும் காட்டிலுள்ளனவுமாகிய தம்முடைய அரண்களாற் பாதுகாப்புப் பெறாது நடுங்கும் வண்ணம் மிக்க வலிமிக்கக் கடிய போர் ஆரவாரம் விசும்பு அதிரும்படி சனத்தையெழுப்பி முழுங்கும் மந்திரத்தாலே பொறுத்தற்கரிய பேராற்றலையுடைய அயிரையென்னும் கொற்றவையாகிய கடவுளைப் பேணி வழிபடுதற் பொருட்டு . உயர்ச்சிுடையோனாகிய பூசகன்கரிய கண்களையுடைய பேய்மகளும் கைபுடைத்து நடுங்கும்படி தன்கையில் ஏந்திய பெறுதற்கரிய சோற்றுத் இரளையும் எறும்பு மொய்க்காத வியக்கத்தக்க இயல்புடைய குருதியொடு கலந்த. நிறைந்த கள்ளொடு பொருந்திய பலியுணவையும் காக்கையும் பருந் தும்
இருந்து உண்ணும்படி போர்க்களத்திற் பெருஞ்சோறு உகுத்தற்குப் பல்யானைச் செல்கெழு குட் _டுவனது வீரமுரசு போரை விரும்பிய வீரர்களின் இடியோசை போன்ற குரலுடன் பொருந்தி முழங்கப்பெற்ற து. இச்செய்தி,
“பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
கடலவுங் காட்டவும் அரண்வலியார் நடுங்க
கடுஞ்சினங் கடா.அய் முழங்கு மந்திரத்து :
அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறற் பிண்டம்
கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க
நெய்த்தோர் தூஉய நிறைமகிழ் இரும்பலி
எறும்பு .மூசா இறும்பூது மரபிற்
கடுங்கட் காக்கையொடு பருந்திருந்து ஆர
ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்கால்
பெருஞ்சமந் ததைந்த செருப்புகல் மறவர் :
உருமு நிலனதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து
- பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும்
கடுஞ்சின வேந்தேநின் தழங்குகுரல் முரசே” (பதிற். 30)
எனப் பாலைக் கெளதமனார் பாடிய பாடலிற் குறிக்கப் . பெற்றது. வெற்றிவெல்போர்க் கொற்றவையாகிய அருந்திறற் கடவுள் தனது ஆணையால் தன் பலிகளைப் பேய் தன் கைகளால் தொடாது அஞ்சு நடுங்கும்படியும் எறும்பு 'மொய்க்காதபடியும் செய்து மேல் தன் அருளாலே போரில் வெெற்றியுண்டாவது உறுதியென்பதனை அறிவித்தற்கு நிமித்தமாகக் காக்கையும் பருந்தும் உண்ணும்படி செய்தது என்னும் குறிப்பு இப்பாடலில் இடம் பெற்றிருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் பின் விளையவிருப்பதனை முன்னரே அறிவிக்கும் நிமித்தங்களுள் காக்கையும் ஒன்றாகத் தமிழ் முன்னோர் கருதினர் என்பது நன்கு தெளியப்படும்



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

ஊர் முனையில் அமைந்த நீர்த்துறையிலே வளர்ந்து வழிப் போவார்க்குத் தடையாகவுள்ள முதிய மரமாகிய கடவுள் மரத்திலே உடன் உறைதலைப் பயின்ற கூகை) இரவுப் பொழுதிலே கூவும் கடுங்குரலோசை கேட்டார்க்கு அச்சந் தருவதாகவும் நள்ளிரவில் உறங்குவோரை நடுங்கியெழும்படி. செய்வதாகவும் களவொழுக்கம் ஒழுகும் தலைவனது வருகைக்குத் தடை செய்வதாகவும் அமைந்துள்ள செய்தியினை இரவுக் குறியில் வந்து சிறைப்புறத்தானாகவுள்ள தலைவன் கேட்குமாறு தோழி கூகையை நோக்கிக் கூறும் முறையில் அமைந்தது,
“எம்மூர் வாயில் உண்டுறைத் தடைஇய
கடவுள் முதுமரத் துடனுறை பழகிய
- தேயா வளைவாய்த் தெண்கட் கூருகிர்
- வாய்ப்பறை யசாஅம் வ்லிமுந்து கூகை
- மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல் _- ப
.. எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும் ப
“எஞ்சாக் கொள்கையெங் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாதலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே” (நற். 83)எனவரும் நற்றிணைப் பாடலாகும். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் ஊனொடு நெய்லிரவிச் சமைத்த சோற்றினை எலிக்கறியுடன் கடவுள் மரத்தில் உடனுறையும் கூகை முதலியவற்றிற்குப் பலியாக இட்டுப் படைக்கும் வழக்கம் பண்டைக்காலத்திருந்தமையம் கூகையின் குரல் நன்னிமித்தமாகக் கொள்ளப்பட: உப.பும் ட்ரு பலனாகும். ஷ்! 421

வேந்தனொ.ு ட ல்றொரு வேந்தனொடு இகல் கருதிப் போர் செய்ய ௭௭ எரிய காலத்தில் பகைவனது நாட்டில் வாழும் அந்தணர், பெண்டிர், பிணியுடையோர் முதலிய வலியற்றோரை அந்நாட்டினின்றும் அப்புறப் படுத்தல் வேண்டியும் போரால் நேரும் துன்பங்களிலிருந்து தப்பிப் புறத்தே செல்லும் உணர்வில்லாத பசு நிரைகளைத் தன் நாட்டில் கொணர்ந்து காத்தல் வேண்டியும் தன் படைத் தவைர்களைப் பகைவர் நாடுபுக்கு அந்நாட்டிலுள்ள பசுக் கூட்டங்களை இரவிற் களவிற் சுவர்ந்து வருமாறு செய்தல் அறத்தின் வழிப்பட்ட போர்த் தொடக்கமாகக் கருதப் பட்டது. அந்நிலையில் அரசனால் ஏவப்பட்ட. படை வீரர்கள் நகரத்தினின்றும் போய் ஒரு சிற்றூரில் தங்கித் தம் வேந்தனுக்கு எதிர்காலத்தில் உளவாகும் ஆக்கத்தை அறிந் துவருதற்பொருட்டு ஊர்ப்புறத்கே இயல்பாகப் பேசப்படும் நற் சொல்லினைக் கேட்டறிவர். இது விரிச்சியோர்த்தல் எனப்படும். இச்செய்தி “படையியங்கரவம் பாக்கத்து விரிச்சி” (தொல். புறத். 3) எனவரும் தெல்சாப்பியச் சூத்திரத்தில் கூறப்பட்டது. விரிச்சி யோர்த்தல் என்பது பெருமுது பெண்டிராகிய மங்கலமகளிர் நெல்லும் மலரும் தூவித் தெய்வத்தை வழிபட்டு நின்றாராக அந்நிலையில் அவ்வூர்ப் புறத்தே வாழும் மக்கள் தம்மியல்பில் உரையாடும் போது தோன்றிய நற்சொற்களைக் தங்களுடைய வினை முடித்தற்குரிய நன்னிமித்தமாகக் கேட்டறிதலாகும். மங்கல மடந்தையராகிய பெருமுது பெண்டிர் மாலைக் காலத்தே நறுமணம் வாய்ந்த முல்லையின் அரும்பவிழ்ந்த பூக்களை நாழி எனப்படும் முகத்தலளவையாகிய படியிற் கொண்ட நெல்லுடனே தூவித் தாம் வழிபடும் தெய்வத்தை வணங்கி
நற்சொல்லை எஷிர்பார்த்து நின்றனராக, அந்நிலையில் அங்கு
வாழும் ஆயர்குலப் பெண்ணொருத்தி, கறிய தாம்பிற்
கட்டப்பட்ட இளங்கன்று, மேயச் சென்ற தன் தாய்ப் பசு
வாராமையால் பாலுண்ணாது பசியாற் சுழல்கின்ற
வருத்தத்தைக் கண்டு அக்கன்றினை நோக்கி “நும்முடைய
தாயர் நிரம்பப் புல்லை மேய்ந்து கோல் தாங்கிய கோவலர்
பின்னின்று செலுத்த இப்பொழுகே வந்து சேர்வர் எனக் கூறினாள். அச்சொல்லை நற்சொல்லாகக் கேட்டோம். அதனால் நின்னைப் பிரிந்து வினைமேற் சென்ற தலைவர் பகைவரை வென்று வினைமுடித்து விரைவில் வந்து சேர்வார். ஆகவே நின் மனத்தடுமாற்றமாகிய வருத்தத்தைப் போக்குவாயாக” எனத் தலைவனது பிரிவால் இல்லின்கண் இருந்து வருந்தும் தலைமகளை ஆயத்தார் ஆற்றுவித்தனர். இச் செய்து,
ர எட ட வவ கைல் நெல்லொடு
நாழி கொள்ட. நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க்கை தொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்குசுவ லசைத்த கையள் கைய
கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனைகவர்ந்து வருதல் வாய்வது நீநின்
பருவரல் எவ்வம் களை மாயோய்” (முல்லைப். 8-21)
எனவரும் முல்லைப் பாட்டடிகளில் விரித்துரைக்கப் பெற்றது. இவ்வாறு விரிச்சி யோர்த்தலாகிய நம்பிக்கை கடைச் சங்க காலத்தில் நிலைபெற்றிருந்தது என்பது,
“திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப (நற். 40)
எனவரும் நற்றிணைத் தொடராலும் நன்கு புலனாகும்.

வானத்தில் உள்ள நாள்மீன் கோள் மீன் ஆகியவற்றின் மாறுதல்களால் நாடாள் வேந்தர்க்கும் குடிமக்களுக்கும் நேரவிருக்கும் இன்ப துன்பங்களை முன்னரே கூர்ந்துணர்ந்து இவை நல்லநாள் இவை இதய நாள் எனக் கண்டு முக்கால நிகழ்ச்சிகளையும் முன்னறிந்தறிவிக்கும் சோதிட நூலிலும் ஆந்தை முதலிய புட்.களில் குரல், இயக்கம் என்பவற்றிலும் பலகறை முதலியவற்றைக் கொண்டு வருவது உணர்த்தும் பிற நிமித்தங்களிலும் இங்ஙனம் நனவில் நிகழும் நிகழ்ச்சிகளே யன்றிக் கனவில் நிகழும் நிகழ்ச்சிகளிலும் பண்டைக் காலத் தமிழ் மக்கள் அழுந்திய நம்பிக்கை கொண்டிருந்தனர். அத்தகைய நம்பிக்கைகளின் விளைவாக நாட்டுக்கு நேர விருக்கும் இடையூறுகளை முன்னுணர்ந்த புலமைச் சான்றோர் தம் பாட்டின் திறத்தாலே விலக்க முயன்றனர்.

கூடலூர் கிழார் என்னும் புலவர், யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் பங்குனித் தங்களின் முதற் பதினைந்தில் கார்த்திகை நாளில் உத்தரம் என்னும் விண்மீன் உச்சியிலிருந்து சாய மூல மீன் எழ மிருகசீரிடம் மறைய விண்ணில் விண்மீன் ஒன்று வடக்கும் கிடக்கும் போகாமல் இடை நடுவே எரிந்து வீழ்ந்தது. அங்ஙனம் வானத்தில் ஒரு மீன் எரிந்து வீழ்தலைக் கண்ட கூடலூர் கிழார் தம் அரசனாகிய யானைக்கட் சேய் மாந்தரஞ் சோல் இரும்பொறைக்குத் தங்கு விளையும் என்று தெரிந்து உளந்கிடுக்குற்றார். புலவர் அஞ்சியதற்கேற்பவே அற்றைக்கு ஏழாம் நாளில் அவ்வேந்தன் உயிர் நீத்தான். இச் செய்தி கூடலூர் கிழார் பாடிய 226ஆம் புறப்பாடலால் புலனாகின்றது.

நாள், புள் முதலியவற்றின் இயக்கம், குரல் முதலிய நிமித்தங்களை அடிப்படையாகக் கொண்டு எிர்காலத்தில் நிகழவிருக்கும் செய்திகளை முன்னரே அறிந்து அவற்றுக்குத் தக நடந்து கொள்ளும் சோதிட. உணர்வும் அது பற்றிய நம்பிக்கையும் தொல்காப்பியனார் காலம் முதல் தமிழகத்தில் நிலைபெற்று வருகின்றதென்ப து,
“அச்சமும் உவகையும் எச்ச மின்றி
நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும்
காலங் கண்ணிய வோம்படை யுளப்பட
ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற்
கால மூன்றொடு கண்ணிய வருமே” (தொல். புறத். 30)
எனவரும் புறத்திணையியற் சூத்திரப்பகுஇயாலும்;
“புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்
விதுப்புற லறியா ஏமக்காப்பினை”” (புறம். 20)
எனப் புள்ளைக் குறித்தும்,
“திசையிரு நான்கும் உற்கம் உற்கவும்
பெருமரத், திலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனவி தற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறு நிலத்து வீழவும் எண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுழ் காழகம் நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரிய காணா நனவிற் ப
செருச் செய் முன்பநின் வருதிறன் நோக்கி
மையல் கொண்ட. ஏமமில் இருக்கையர்”” (புறம். 41)
எனக் கனவு முதலிய பிற நிமித்தங்கள் பற்றியும் வரும்
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . ர்ச்

புறப்பாடற் பகுதிகளாலும் நன்கு புலனாம். எட்டுத் இசைகளிலும் விண்மீன்கள் எரிந்து வீழ்தலும், பெரிய மரத்தின் கண்ணே இலையில்லாது கிளைகள் பட்டுப் போதலும், கதிரவன் தனக்குரிய தஇிசையியக்கத்கிற் பிறழ்ந்து தோன்றுதலும், அஞ்சத் தகுவனவாகிய பறவைகள் குரலெழுப்புதலும் நனவு நிலையிலே தோன்றும் நிமித்தங்கள் எனவும், நிலத்திற் பல் வீழவும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும், பன்றியை வாகனமாகக் கொள்ளவும், உடுத்த ஆடை. அலிழவும் படைக்கலம் தானிருந்த கட்டிலுடனே முறிந்து வீழவும் கனாக் காண்டல், கனவில் நிகழும் த நிமித்தங்கள் எனவும் மேற்காட்டிய 41ஆம் புறப்பாடலிற் கோவூர் கிழார் குறித்துள்ளமை அவர்கால மக்களது நம்பிக்கைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளமை காணலாம்.

நாம் வாழும் உலகினை நடுவாகக் கொண்டு, இதன்மேலும் &ழும் உள்ள உலகங்களைக் கூட்டி மூவகை யுலகம் என வழங்கும் மரபு சங்ககாலத்தில் நிலவியது. நாம் வாழும் நிலையில் நடுநிலைக் கண்ணதாகிய இவ்வுலகின் மேலும் &ழும் எவ்வேழுலகங்கள் உள்ளன எனவும் இவ்வுலகினைச் சேர்த்து ஏழுலகங்கள் நடுவேயுள்ளன எனவும் அக்கால மக்கள் நம்பினர். என்பது, 6ே
வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனா.அ துருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற்கட்டில்
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை யுலகத்தானும்'”” (புறம். 6)
எனவரும் புறப்பாடலாலும் “வடக்கின் கண்ணது பனிதங்கிய நெடிய இமய மலையின் வடக்கும், தெற்கின் கண்ணது உட்குந் இறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும், &ழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற, சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும், மேல் கண்ணது பழைதாய் முதிர்ந்த கடலின் மேற்கும் &ழதாகிய நிலமும் ஆகாயமும் சுவர்க்கமும் என மூன்றுங் கூடிய புணர்ச்சியாகஅவக க்க
அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற் கட்டாகிய நீர்
நிலைக்கண் ஓங்கிய நிலத்தின் &ழும், மேலதாகிய
கோலோகத்தின் கண்ணும்' எனவரும் அதன் உரையாலும்
இனிது புலனாகும். இவ்வாறு நடுவும் &ழும் மேலும்
ஒரோவென்று எழுவகைப்பட்ட மூன்றுலகம் உண்மை,
“மூவே முலகம் உலகினுள் மன்பதும்
ஆயோய்” (மூன்றாம் பரிபாடல் 9. 10 அடிகள்) எனவும்,
““இருநிழல் படாமை மூவேழுலகம்
ஒருநிழலாககிய ஏமத்தை மாதோ” (மேலது, 75, 76) எனவும்,
“நின்மருங்கின்று மூவேழுலகமும்” (பரி. 13 : 23)
எனவும் வரும் பரிபாடற் பகுதிகளால் இனிது விளங்கும்.

கூற்றம்
சங்கச் செய்யுட். களில் கூற்றுவளைக் குறிக்கும் பாடல்கள் மிகதியாக உள்ளன. காலன், மடங்கல், ஞமன், மறலி அ சய சொற்கள் கூற்றத் தக் குறித்து வழங்குகின்றன. உடம்பையம் உயிரையும் கூறுபடுத்துப் பிரித்துவைக்கும் தெய்வ ஆற்றல் கூற்றம் என்னும் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. இவ்வுலகில் உடம்பும் உயிரும் வேறு வேறு தன்மையன எனவும் ஐம்பெரும் பூதங்களாலாகிய இவ்வுலகத்துப் புல் முதல் மக்களீறாகவுள்ள பல்வேறு உயிர்த்தொகுதிகளும் யாக்கை, இளமை, நுகர்ச்சி முதலிய பல திறத்தானும் நிலையாமை உடையனவாக இவ்வுலகம் அமைந்துள்ளது எனவும் தமிழ் முன்னோர் தம் வாழ்வியல் அனுபவத்தில் கண்டுணர்ந்தனர். “பல்லாற்றானும் நில்லாவுலகம்' என்றார் தொல்காப்பியனார். அறழிதற் றன்மையும் நிலைபேறும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற உயிர்த் தொகுதியும் அவ்வுயிர்களின் நிலைக்களமாய் அறிவின்மையும் நிலையாமையும் உடையனவாகிய பல்வேறு உடம்புகஞும் தம்முள் வேறுபட்ட. இயல்பினவாகும். எல்லாக் காலத்தும் உயிர்கள்தாம் பெற்றுள்ள ஒரே உடம்புடன் தொட.ர்த் நிலைத்திருத்தல் இல்லை. உயிர்கள் தம் வாழ்க்கை நுகர்ச்சிக்கெளனப் பெற்றுள்ள உடம்புகளினின்றும் அவற்றின் நுகர்ச்சக்காலம் முடிந்த பின்னர் அவ்வுயிர்களைக் கூறுபடுத்துப் பிரிக்கும் தெய்வ ஆற்றலே கூற்றம் எனப்படும். இத்தகைய கூற்றத்தின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலுடையோர் மன்னுயிர்த் தொகுதியில் ஒருவரும் இலர். இதுபற்றியே “மாற்றருங் கூற்றம்' என அடை புணர்த்தினார் தொல்காப்பியர். மாற்றருங் கூற்றம் உயிர்கவருந்தனது தொழிலை யாவராலும் மாற்றுதற்கு அரிய ஆற்றலுடையது என்பதாம். உடம்பையும் உயிரையும் கூறு படுக் துதலால் கூற்றம் எனவும் உயிர்களது வினை நுகர்ச்சியின் முடிவாகிய காலம் அறிந்து செயல்படுதலால் காலன் எனவும் உடல் பொடு கூடி வாழ்வியலில் படரும் உயிரை அதன் ஆற்றல் ஒடுங்குமாறு உடம்பினின்றும் பிரித்துத் தொழிலின்றி மடங்கி யொடுங்கச் செய்தலால் மடங்கல் எனவும் உயிர்கள்பால் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையில் நின்று உடம்பினின்றும் உயிரைப் பிரித்தலாகிய தன் தொழிலைச் செய்தலால் ஞமன் எனவும் எத்தகைய ஆற்றல் உடையராயினும் அவர்களொடு முரண்பட்டு அவர் உயிரைப் பிரித்தலின் மறலி எனவும் சங்க இலக்கியங்காரில் கூற்றம் குறிக்கப்பெற்றுள்ளது.

உயிர் தான் பெற்றுள்ள உடம்பிலவின்றும் பிரியுங் காலத்தைச் சாதல் எனவும் மற்றோர் புது உடம்பிற் புகும் நிலையைப் பிறத்தல் எனவும் இங்ஙனம் சாறற்கும் பிறத்தற்கும் காரணமாயமைந்தது அவ்வுயிர்கள் உட.3அபாடு கூடி நின்ற காலத்துச் செய்த நல்லனவும் இயனவுமாகிய வினைத் தொகுதி எனவும் தமிழ் முன்னோர் உயிர்களின் வாழ்வியல் நுட்பங்களை நுனித்து உணர்ந் னர். அவ்வுணர்வின் பயனாக ஓர் உயிர் தான் பெற்றுன்ள உடம்போடு உலகம் உள்ளவரை நிலைத்திருத்தல் இயலாது என்பதும் வினைப்பயனுக்குத்தக அவ்வுயிரை உடம்பினின்றும் வேறுபடுத்தும் கூற்றம் உண்மை பொய்யன்று என்பதும் ஆதிய உண்மையினைத் தம் உள்ளத்துத் தெளிந்தனர். இவ்வுண்மை,
“வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.” (புறம். 363)
எனவரும் ஐயாஇிச் சிறுவெண் டேரையார் வாய்மொழியால் நன்குணரப்படும். 

இவ்வாறு உயிர்கள் செய்த வினையின் மேலிட்டு நடுநிலையில் நின்று அவ்வுயிரை உடம்பினின்றும் பிரிக்கும் கூற்றத்தின் செயலைத் தடுக்கவல்லார் எவரும் இலர் என்பது,
“மாற்றருஞ் சீற்றத்து மாயிருங் கூற்றம்” (பதிற். 51)
“கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்” (புறம். 362)
எனவரும் தொடர்களால் வலியுறுத்தப்பெற்றமை காணலாம்.

மேற்குறித்த கூற்றத்தின் செயலை மாற்றுதற்குரிய மருந்து வேறில்லை என்பது,
“மருந்தில் கூற்றத்து அருந்தொழில்” (புறம். 3)
எனவரும் தொடரால் புலனாம்.
கணிச்சி என்னும் கூரிய மழுப்படை. கொண்டு உயிர்களைக் கவரும் இறத்தல் கண்ணோட்டமோ, நயமோ காட் டுதலின்றி வெம்மை மிக்க சினத்துடன் காலம் பார்த்துத் தன் தொழிலை நிறைவேற்றுதல் கூற்றத்தின் இயல்பு. இவ்வுண்மை,
“கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்குங் காலை இரங்குவிர்”” (புறம். 195)
“காலன் என்னும் கண்ணிலி” (புறம். 240)
“நயனில் கூற்றம்” (புறம். 227)
“வெந்திறற் கூற்றம்” (புறம். 238)
“காலனும் காலம் பார்க்கும்” (புறம். 41)
எனவரும் தொடர்களால் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம்.

உட.ம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் ஆற்றலைக் கூற்றம் என்ற பெயரால் தொல்காப்பியனார் குறித்தார். அவர் குறித்த கூற்றத்தை அவருக்குப் பின் வந்த சான்றோர், காலன், மடங்கல், ஞமன், மறலி எனப் பல்வேறு காரணப் பெயரிட்டு வழங்கினர். இங்ஙனம் கூற்றுக்குப் பல பெயர்கள் வழங்கிய நிலையில் தலைமையுடையதும் அதன் ஏவல் செய்வதும் எனக் கூற்றத்தின் ஆற்றலை இருவகையாகப் பகுத்துரைக்கும் மரபு இடம் பெறுவதாயிற்று.

“தாமா இருவரும் தருமனும் மடங்கலும்' எனவரும் பரிபாடல் (3) அடியில் குறிக்கப்பெற்ற தருமன் என்பானைத் தலைமையுடைய யமன் எனவும் மடங்கல் என்பதனை அவனது ஏவல் செய்யும் கூற்றம் எனவும் கொள்வர் பரிமேலழகர்.
“மடங்கல் போற் இனைஇ மாயஞ் செய்யவுணரை” எனவரும் தொடரில் உள்ள மடங்கல் என்னும் சொல்லுக்குக் கூற்று எனப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். ஒடுக்கம் என்ற பொருளில் உள்ள மடங்கல் என்னும் இச்சொல் யமனுக்கு ஏவல் செய்யும் கூற்றம் என்ற பொருளினும் கலித்தொகையில் (150 ஆம் பாடல்) ஆளப் பெற்றுள்ளது. தருமனாகிய இயமனுக்கும் அவனது ஏவல் செய்யும் கூற்றத்திற்கும் இடையேயுள்ள இத்தொடர்பினை,
“சாற்று நாளற்றதென்று தருமராசற்காய் வந்த
கூற்றினை” (4. 49,2)
எனவரும் இருநாவுக்கரசர் இருநேரிசைத் தொடரால் இனிதுணரலாம். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலைக் கூற்று எனவும் காலத்தால் தூண்டப்பட்டுக் கூற்றுவனது ஏவல் செய்யும் துணையாற்றலைக் காலன் எனவும் கொள்ளுதல் தகும். இங்ஙனம் உடம்பினின்றும் உயிரைப் பிரித்தற்குத் துணை செய்வது, காலக் கடவுளாகிய இறைவன் கையின் கண்ணதாய் ஊழி முடிவின்௧ண் அவன் ஏவலால் உயிர்த்திறமேல் இரியும் கணிச்சியாகும். இந் நுட்_பம்,
“மடங்கலும் கணிச்சியும் காலனுங்கூற்றும்
தொடர்ந்து செல்லமையத்துத் துவன்றுயிருணீஇய
உட.ங்கு கொட்பனபோல்” (கலி. 105)
எனவரும் கலித்தொகைத் தொடராலும், “சால நிறைகின்ற பல்லுயிர்களை உண்ண வேண்டி ஊழித்தயும் கணிச்சியும் கலனும் கூற்றுவனும் ண்ட ல் விடாமற் செல்கின்ற ஊழி முடிவாகிய காலத்தே . அவை 2 ச சுழன்று திரியுமாறு போல: எனவும் “(ல் டு பவன்கையதாய் ஊழி பாடிவில்கண் அவள் எவலால் உ௰. த்திற மேற்செல்லும் கணிச்சி. காலன், கூற்றுவன் ர னரனான். எனவும் இத் . தொடர் .- ம. நக்சிவ:்க்கினியம் வ. ய உரை விளக்கத் தாலும் :; ஈகு புலன! தல் காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

உயிர்கள் வினைப்பயன்கள ய இன்ப துன்பங்களைப் டொருந்துதல் முறைமையாஒய ஊாழின்வழி புறத்தே நின்று உப்ரைக் கொணடு போதல் கூற்றத்தன் செயலாகும். இச்செய்தி,
““உறுமுறை மரபிற் புறநின்றுய்க்கும்
கூற்றத் கணையை” (புறம். 98)
எனவரு!். ( றப்பாட.ற்றொடரால் உய்த்துணரப்படும். இதன்கண் “உறுமுறை மரபு” என்றது, உயிர்கள் தாம் செய்த நன்றும் ததுமாகிய இருவினை காரணமாக இன்பமும் துன்பமுமாகிய பயன்களை நுகர்ந்து கழிக்குமாறு செய்யும் முறைமையாகிய ஊழினை. இவ்வூழின் வழி நின்றே கூற்றம் தன் தொழிலை நிகழ்த்தும் என்பது “உறுமுறை மரபிற் புறனின் றுய்க்கும் கூற்றம் என அடை கொடுத்தோதிய அதனால் இனிது புலனாதல் காணலாம்.
உடம்பொடு கூடி வாழும் உயிர் தனக்கு நிலைக்களமா யிருந்த உடம்பைவிட்டு நீங்குமாறு செய்தல் கூற்றத்தின் தொழிலாகும். இவ்வுலகில் உடம்பைவிட்டு உயிர் நீங்குதலாகிய சாதலைக் காட்டிலும் உயிர்க்குத் துன்பந்தரும் நிகழ்ச்சி பிறிதொன்றில்லையென்பது “சாதலின் இன்னாதது இல்லை” எனவரும் தெய்வப் புலவர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். அத்தகைய பெருந்துன்பத்தை விளைவிப்பது கூற்றுவனின் தொழிலாதலின் உலகில் நல்லறஞ் செய்தோரது உயிரைக் கூற்றங்கவர்ந்த நிலையில் நல்லோர் பிரிவால் அல்லலுற்ற சான்றோர்கள் தம்முள்ளத்தெழுந்த துவ்ப மிகுதியால் “அறனில் கூற்றம்” (புறம். 237), “நனிபேதையே நயனில் கூற்றம்: (புறம். 227) என்றாங்குக் கூற்றத்தின் செயலை இகழ்ந் துரைத்தலும் உண்டு.

கூற்றத்தினைக் குறித்து வழங்கும் பெயர்களுள் ஒன்றாகிய மடங்கல் என்னுஞ் சொல் புறத்தே தோன்றிய பொருள் மீண்டும் அகத்தே ஒடுங்குதல் என்ற பொருளில் இறைவன் செய்யும் ஒடுக்கம் என்னும் தொழிலைச் சுட்டிய இயற்பெயராய் அவ்வொடுக்கத்தின் ஒரு பகுதியாய் உடம்பினின்றும் உயிரைப் பிரித்தலாகிய தொழிலை நிகழ்த்தும் கூற்றத்திற்கு ஆகுபெயராயிற்று. முதலாம் பரிபாடலில்,
“ஐந்தலை யுயரிய அணங்குடை யருந்திறல்
மைந்துடை யொருவனுமடங்கலும் நீ்
எனவரும் தொடரில் “மடங்கல்' என்னும் சொல் எவபெருமான் செய்தருளும் தொழில்களுள் ஒடுக்கமாகிய அழித்தற்றொழிலைக் குறித்து நின்றது. இத்தொடரில் “ஐந்தலையுயரிய அணங்குடையருந்திறல் மைந்துடை - ஒருவன்” என்பதற்கு “ஐந்துதலையைத் தோற்றுவித்த அருந்திறலையுடைய ........-- ஈசன்” எனவும் “மடங்கல் என்பதற்கு *அவனினாகிய உலகுயிர்களின் ஒடுக்கம்” எனவும் பரிமேலழகர், விளக்கம் தந்துள்ளார். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் மடங்கல் என்னும் சொல், உலகினைத் தோற்றுவித்துப் பல்லுயிர்க்கும் ஏற்ற உடம்பினைப் படைத்தளித்த இறைவன், உலகுயிர்களாகிய அவற்றை மீளவுந் தன்கண் ஒடுங்கச் செய்தலாகிய ஒடுக்கத்தைக் குறித்து நின்றதென்பது நன்கு விளங்கும். எனவே உலகுயிர்களை முற்ற ஒடுக்குதலாகிய மகா சங்காரத் தொழிலை நிகழ்த்து பவன் ஐம்முகக் கடவுளாகிய சிவபெருமானே என்னும் கொள்கை திருமாலடியார்களாலும் ஏற்றுக் கொள்ளப் பக ப அ ப பப துவ ட அணனிதவ் ககன அண்றதம பட பபப ப அததளத்தத வை அதனை ல படத் பெற்றுத் தமிழகத்தில் நிலவிய பொதுமையுடைய தென்பது நன்கு புலனாதல் காணலாம்.

கணிச்சியென்னும் மழுப்படை சவபெருமானுக் குரியது எனவும் அப்படையினால் நிகழ்த்தப்படும் ஒடுக்கத்தின் உயிர்களது வினைநுகர்ச்சி முடிவு பெறும் காலம் வந்துழி அம்முறையின் வழி நின்று உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தெய்வ ஆற்றலைக் காலன் எனவும் முழுமுதற் கடவுளாகிய இறைவனுக்குரிய கணிச்சிப்படை காலனது தொழிற்கும் உறுதுணையாய் நிற்கும் எனவும் தமிழ் முன்னோர் கருதினர். உலகுயிர்கள் அனைத்தையும் பேரூழிக்
காலத்தில் தன்கண் ஒடுக்கிக் கொள்ளுதலால் மகா
சங்காரணன் எனப்படும் சவபெருமான் பஇற்றுப்பத்துக் -
கடவுள் வாழ்த்துப் பாடலிற் “காலக்கடவுள்” எனப் போற்றப்
பெற்றுள்ளமையும் இக்கருத்துப் பற்றியே யாகும்.

வினைக் கொள்கையும் மறுபிறப்பும்
உலகில் உடம்புடன் கூடிவாழும் உயிர்கள் கூற்றுவனால் உடம்பினின்றும் நீங்கிய நிலையில், அவ் வுயிர்கள் முன் உடம்பொடு கூடியிருந்த காலத்திற் செய்த, நன்றும் ததுமாகிய வினைகாரணமாகப் பிறிதோரு உடம்பினைப் பெற்று மீளவும் பிறக்கும் என்பது தென்குமரி வடவிமயமாகிய எல்லையுட்பட்ட பாரத நாட்டில் வாழும் அனைவரும் தொன்றுதொட்டு உடன்பட்டுத் தம் வாழ்வியலிற் கடைப்பிடித்து வரும் பொதுக் கருத்தாகும். உடம்பொடு கூடி வாழும் மக்கட். குலத்தார் தாம் பெற்ற மனவுணர்வின் பயனாக எல்லாவுயிர்க்கும் நல்லனவே - செய்தல் வேண்டும் என்பதும் எவ்வுயிர்க்குந் தங்கு செய்தல் ஆகாது என்பதும் இவ்வுலகில் நல்லன செய்தோர் அதன் பயனாக வானுலகில் இந்திரன் முதலிய இமயவர் பதங்களைப் பெற்று இன்பம் நுகர்வர் என்பதும் அல்லன செய்தோர் அதன் பயனாக மீளுதற்கரிய நரகமாகிய நிரயத்தினை யடைந்து துன்பம் நுகர்வர் என்பதும் வினைப்பயனாகிய அந்நுகர்ச்சி முடிந்தபின்னர் எஞ்சிய வினையின் காரணமாக உலகில் மீளப்பிறப்பர் என்பதும் சங்ககாலத் தமிழ் மக்கள் தெளிந்துணர்த்திய வாழ்வியற் கோட்பாடுகளாகும். உயிர்கள் இப்பிறப்பிற் செய்த நல்லதன் நலனும் தயதன் இமையும் ஆகிய வினைப் பயன்களை இப்பிறப்பில் நுகராது போனால் இனி ரும் பிறப்புக்களிலாயினும் நுகர்ந்தே கழித்தல் வேண்டும் என்னும் வினைக் கொள்கையினை அடிப்படையாகக். வெொண்டு தோன்றியதே மறுபிறப்புண்மை பென்னும் கோட்பாடாகும். இக்கொள்கை சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழக மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுக் கொள்கையாய் நிலவியது. எனினும் இக் கொள்கையினையுடன்படாது முரணிய கோட்பாடுடையார் சிலரும் அக்காலத்திருந்தனர். இங்ஙனம் மறுபிறப்புண்மையினை யுடன்படாமையிளைச் சங்ககாலச் சான்றோர்கள் ஒரு பெருங் குற்றமாகக் கருதவில்லை. ஆனால் உலக வாழ்க்கையில் ஒருவர்தாம் நல்வினைகாரணமாக இன்பத்தையும் தீவினை காரணமாகத் துன்பத்தையும் உறுதியாக நுகர்ந்தே தர்வர் என்னும் வாழ்க்கை நியதியாகிய வினைக் கொள்கையினை மறுத்துத் தம் மனம் போனவாறு விரும்பியன செய்து திரிவாராயின் அவரது ஒழுகலாற்றினால் மக்கள் வாழ்க்கையின் கட்டுக்கோப்புக் குலையும். அதனால் அரசியல் நெறிமுறையும் நாட்டு மக்களது நல்வாழ்வும் சிதைந்து கெடும். எனவே வினைக் கொள்கையாகிய வாழ்வியல் முறைமையினை மறுத்துத் தம் மனம்போனவாறு ஒழுகும் $யோராகிய இற்றிதைதாரைச் சேர்ந்தொழுகுதல் கூடாது எனவும் கதவினை புரிந்தோரை ஒறுத்தலும் நல்லறம் புரிவோரைப் பாதுகாத்தலும் ஆகிய நெறிமுறைமையிற் சோர்வுபடாது ஆட். புரிதல் வேண்டும் எனவும் சங்ககாலத் தமிழ்ச் சான்றோர் வேந்தர்க்கு அறிவுறுத்தி வந்தனர். இச்செய்தி,
“கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியாமுறைமையின் மடிவிலையாகி
நலலல் ஐலனுந் தீயதன் தீமையும்
இல்லையென் போர்க்கினனாகிலியர்.” (புறம். 29) எனச் சோழல் நலங்கிள்ளியை நோக்கி உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புறப்பாடற் பகுதியில் இடம் பெற்றுள்ளமை காண்க.

உலக வாழ்க்கையினை வெறுத்து உயர்ந்த நற்பொருளையே இந்தித்து வடக்கிருந்த வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழன் தன் வாழ்க்கையின் பயனாகத் கெளிந்துணர்ந்த நற் பொருள்களை உலக மக்களுக்கு உணர்த்துவதாக அமைந்தது,
“செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்தி சினோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனின்
மாறிப் பிறப்பினின்மையும் கூடும்
மாறிப் பிறவா ராயினும் இமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தறவத் தலையே: (புறம். 214) எனவரும் புறப்பாடலாகும்.

உலகியல் வாழ்வில் சிறியனிந்தியாது உயர்ந்த குறிக்கோளுடையராய் நல்லறம் செய்தலே மனனுணர்விற் சிறந்த உயர்திணை மாந்தர்க்குரிய வாழ்வியல் நோக்கமாக வேண்டும் என வற்புறுத்தும் நிலையில் இப்புறப்பாடல் அமைந்துள்ளமை அறியத்தகுவதாகும்.
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . 742 அழுக்குச் செறிந்த புல்லறிவு நீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாத மக்கள் அறவினையைச் செய்வோமோ அன்றிச் செய்யாது விடுவோமோ என்று கருதி அறத்தின் பயன் விளைவில் தாம் கொண்ட ஐயப்பாட்டின் நீங்காதவராய்க் குறிக்கோளின்றித் தம் வாழ்நாளை வீணாக்குவர். உயர்ந்த குறிக்கோளுடையனாய் யானை வேட்.டைக்குப் போவோன் யானையையும் எளிதாகப் பெறுவான். அங்ஙனம் வேட் டத்தில் உயர்ந்த நோக்கமின்றிக் காடை. வேட்டைக்குச் செல்வோன் அதனைப் பெறாது வறுங்கையினனாயும் திரும்புவான். அதனால் உயர்ந்த விருப்பத்தை உடைய பெரியோர்க்குத் தம்மாற் செய்யப்படும் நல்வினைப் பகுதியில் அதனை அனுபவித்தல் உண்டாயின் அவருக்கு இருவினையும் செய்யப்படாத தேவர் உலகத்தின் கண் இன்பம் நுகர்தலும் கூடும். அவ்வுலகத்தின்௧ண் நுகர வேண்டிய வினைப்பயன் தீர்ந்து இல்லாது ஒழியுமானால் அதனினும் மேலாக மீண்டும் பிறவாமையாகிய பேரின்பம் பெறுதலும் கூடும். உயிர்கள் இவ்வுலகில் எடுத்துள்ள இவ்வொரு பிறவியேயன்றி மீளப் பிறத்தல் இல்லை என மறுபிறப்பினை உடன்படாதவர் கூறினும் அன்னோர் அறத்தின்பயன் இதுவென்று நேரிற் கண்டுதெளியுமாறு இமயமலையின் சகரம் போன்ற தமது புகழை இவ்வுலகில் நிலைபெறுத்துப் பழியில்லா உடம்பொடு கூடிநின்று சாதல் மிகவும் சிறப்புடையதாகும். ஆகவே, எந்தவகையால் ஆராய்ந்து பார்ப்பினும் நல்லறங்களைச் செய்தல் ஒருவர்க்குப் .பொலிவினைத் தருதல் உறுதி என்பது துப்பறப்பாடடு பொதிந்துள்ள உண்மையாகும்.

இதனால் இவ்வுலகில் உயிர்கள் செய்த நல்வினை அவ்வுயிர்களைத் தொடர்ந்து மறபிறப்பினும் சென்று பயனளிக்கும் எனவும் மறுபிறவி இல்லையென்பார் உளராயினும் அவர்களும் அறத்தின் பயனை இப்பிறவி ஒன்றில் வைத்து அறத்தின் பயனை உணரும்படி அறவினை தன்னைச் செய்தோர்க்குப் பயன் அளிக்கும் எனவும் வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிர் துறக்குங்காலத்து உலக மக்களுக்கு அறிவுறுத்திய மெய்யுணர்வுத் திறம் சான்றோர்களால் வியந்து பாராட்டத் தகுவதாம்.

மறுபிறப்பு உண்டு என்னும் கொள்கை தமிழ் மக்களது மாறாத நம்பிக்கையாகும் என்பதனை வற்புறுத்தும்
சங்கப் பாடல்கள் பலவுள்ளன.
“இம்மைச் செய்தது மறுமைக்காம்'” (புறம். 134) எனவும்,
“சாதல் அஞ்சேன், அஞ்சுவல் சாவிற்
பிறப்புப் பிறிதாகுவதாயின்
மறக்கு வென்கொல் என் காதலன் எனவே” (நற். 397) எனவும்,
148 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

“இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியாரன். கணவனை
யானா கியர்நின் நெஞ்சநேர் பவளே” (குறு. 49) எனவும் வரும் சங்கப் பனுவற் பகுதிகள் மறுப்பிறப்பு உண்டு என்பதில் பண்டைத் தமிழ் மக்கள். கொண்டுள்ள நம்பிக்கையை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

நடுகல் வழிபாடு
தாம் வாழும் நாட்டின் அரசியல் ஆட்சி முறையினைப் பாதுகாக்கும் உயர்ந்த குறிக்கோளுடன் தமது இனியவுயிரையும் பொருட்படுத்தாமல் பகைவரொடு பொருது உயிர்துறந்த தறுகண் மறவர்களைத் தெய்வமாகப் பேணி ௮ ர்தம் பெயரையும் பெருமையையும் இல்லிற் பொறித்து, அக்கல்லினைத் தெய்வமாக நிறுத்தி வழிபடும் நடுகல் வழிபாடு ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேயே தமிழகத்திற்றந்து விளங்கியதென்பது முன்னர்க் குறிக்கப் - பெற்றது. இவ்வழிபாடு சங்கச் செய்யுட் களிற் பலவிடங்களில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. நடுகல் வழிபாடு பற்றிய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குங்கால் சங்கத் தொகை நூல்கள் இயற்றப்பெற்ற காலம், தமிழகத்திற் பலவிடங் களிலும் மிகுதியாகப் போர்கள் நிகழ்ந் காலம் எல்யது உய்த் துணரப்படும்.

தம்முடன் முரண்பட்டாமொழடு. போர்நிகழ்த்த எண்ணிய மன்னர்கள் அவர் நாட்டின் மேற் படையெடுத்துச் செல்வதற்கு முன், அந்நாட்டில் வாழும் பசுநிரை களுக்கும் பெண்டிர் பிணியாளர் அந்தணர் முதலிய எளியோர்க்கும் போரினால் இங்கு நேராத வண்ணம், அவர்களை அட்
நாட்டினை விட்டு அப்புறப்படுத்துதற்குரிய முன்னறிவிப் பாகப் பகைவர் நாட்டி லுள்ள பசுக் கூட். டங்களை நள்ளிரவிற் கவர்ந்து வரும்படி, தம் படைவீரர்களை ஏவுதல் அறத்தின் வழிப்பட்ட போர்த் தொடக்கமாகத் தமிழ் மக்களாற் கொள்ளப்பட்டது. இவ்வாறு வேந்தனால் ஏவப்பட்ட படை வீரர்கள் தமது ஒழுகலாற்றுக்கு அடையாளமாக வெட் சிப் பூவினைச் சூடிக்கொண்டு நள்ளிரவிற் பகைவர் நாட்டின் எல்லையுட். புகுந்து அங்குள்ள பசுநிரைகளைக் களவினாற் கவர்ந்துகொண்டு. வருதல் போர்த்தொடக்க மாகிய வெட்_௫த் இணையாகக் கொள்ளப்பட்ட து. இங்ஙனம் நாடாளும் வேந்தனது ஆணையின்றிச் சுரத்திடையே வாழும் ஆறலை கள்வர்கள் நள்ளிரவில் ஊருட். புகுந்து பசுநிரை களைக் கொள்ளையடித்துச் செல்லுதலும் உண்டு.

இவ்வாறு ஊர் மக்கள் சோர்வுற்று உறங்கும் நள்ளிரவிலே பகைவருடைய படை வீரர்களாலும் ஆறலை கள்வர்களாலும் தம்மூரிலுள்ள பசுநிரைகள் களவிற் கவரப்பட்_டுச் செல்லும்போது அவர்களை வழிமறித்துப் பசுநிரைகளை விரைந்து மீட்டுக் கொணர்தல் அந்நாட்டில் வாழும் தறுகண் வீரரது தலையாய கடமையாயிற்று. தம் ஊரவர் உடமையாகிய பசுக்களைப் பகைவரிடமிருந்து மீட்டுக் கொணர்தற்குச் செல்லும் வீரர்கள் கரந்தைப் பூவினை அடையாளமாகச் சூடிச்செல்வர். அதுபற்றி அவர்கள் “கரந்தை மறவர்' என அழைக்கப்பட்டனர். தம் நாட்டுப் பசுக்கூட்டத்தினை மீட்டுக் கொணர்தற் பொருட்டுப் பகைவரொடு பொருது உயிர் துறந்த மறவரது பெயரும் பீடும் பொறித்து நடப்பட்ட நடுகல்லின் மேல், அந்நாட்டு வீரர் அனைவரும் மாலையும் மயிற் பீலியும் அணிந்து தோப்பி நெல்லாற் செய்த கள்ளுடன் துருவென்னும் ஆட்்டினையும் பலிகொடுத்துத் தெய்வமாக்கி வழிபடுவர். இச்செய்தி,
“ முன்னுர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீ இய மீளி யாளர்
விடுகணை நீத்தந் துடிபணையாக
வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து .
750 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு அ அவவ...) பெட்ப்ட்ட்பயவய்வமியயமவமயலையவைவையவகைய

வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வையெயிற் றுய்ந்த மதியின் மறவர்
கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையொடு வந்த வுரைய னர்கி
உரிகளை யரவ மானத்தானே
அரிதுசெல் லுலகிற் சென்றனன்; உடம்பே
கானச் சிற்றியாற் றருங்கரை காலுற்றுக்
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே;
உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் மஞ்ஞை யணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ் செய் பந்தர்க்கள் மிசையதுே வூ ப(புறம்.260) எளவும், “நாகு முலையன்ன நறும்பூங் கரந்தை
விரகறியாளர் மரபிற் சூட்ட
நிரையிவட் டந்து நடுகல் லாகிய ப
வென்வேல் விடலை” (புறம். 261) எனவும் வரும் புறப்பாடல்களால் இனிது புலனாம்.

மிக்க அணிமையையுடைய ஊர் முன்னாகச் செய்யப் பட்ட போரின் கண்ணே தோன்றித் தன்னுடைய ஊரின்கண் மிக்க பசுநிரையைக் கவர்ந்து கொண்ட வெட்சி மறவர் எய்த அம்பு வெள்ளத்தைத் தன்னுடைய துடியே புணையாகக் கொண்டு கடந்து பகைவரைக் கொன்று அவர்கொண்ட ஆனிரையை மீட்டு, உலகம் ஒளியின்றிப் புலம்பப் பாம்பின் வாய்ப்பாட்டுப் பின்னர் அப்பாம்பின் கரிய எயிற்றினின்றும் பிழைத்துப் போந்த தங்களைப் போல வெட்சி மறவர் கையினின்றும் பிழைத்துப் போந்த கன்றையுடைய பலவாகிய பசுக் கூட் டத்துடனே மீண்ட புகழையுடையனாகிச் சட்டை கழற்றிய பாம்புபோலச் செல்லுதற்கரிய உயர்ந்த தேவருலகத்தின்கண் போயினான்; அவனது உடம்பு காட்டிலே சிறிய ஆற்றங்கரையிற் பெருங்காற்றால் நடுங்கிச் சாய்ந்த இலக்கமாகிய மரக்கம்பத்தினையொப்ப அம்புகளால் துளைக்கப்பட்_டு வீழ்ந்தது; உயர்ந்த புகழ வடிவினனாகிய அவ்வீரனது பெயரோ, புடவையாற் செய்யப்பட்ட பந்தர்க் 8ழ் மயிற்பீலி சூட்டப்பட்ட நடுகல்லின் மேலது என்பதும், “நாகினது முலையன்ன நறிய பூவினையுடைய கரந்தையை அறிவுடையோர் சூட்டும் முறையிலே சூட்டப் பசுநிரையை இவ்வூரில் மீட்டுத் தந்து நடப்பட்ட கல்லாகிய வென்றி . வேலையடைய தலைவன்” என்பதும் மேற்குறித்த புறப்பாடற் றொடர்களின் பொருளாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

இங்ஙனம் நிரை மீட் டற் பொருட்டுப் பகைவரொடு பொருது உயிர்துறந்த வீரர்களது பெயரும் பீடும் பொறித்து நடப்பட்ட. கல்லினைத் தெய்வமாகக் கொண்டு வழிபடும் வழிபாடு தமிழக மெங்கும் பரவித் தொன்றுதொட்டு நிலைபெற்று வருவதாகும். வீரர்களுக்கு நடப்படும் இந்நடுகல் பலரும் செல்லும் வழியினையொட்டி நடப் பெறும் என்பதும், அங்ஙனம் நடப்பட்ட கல்லினைப் பாணர் முதலிய வழிச் செல்வோர் பலரும் வழிபட்டுச் செல்லுதல் கடனென்பதும், அங்ஙனம் நடுகல்லைத் தொழுதுபோகவே நடத்தற்கியலாத கொடுங்கானம் மழைபெய்தலாற் குளிரும் என்பதும்,
“பெருங்களிற் றடியிற் றோன்றும் ஒருகண்
இரும்பொறை யிரவல சேறியாயின்
தொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம்படூஉம் இவ் வறநிலையாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறைமின் விலங்கியோன் கல்லே” (புறம். 263)
எனவரும் புறப்பாடலாற் புலனாம். நடுகல்லைத் தெய்வமாகக் கொண்டு தொழுதல் வேண்டும் என்னும் இப்புறப்பாடலை யடியொற்றியமைந்த து “கைவண் குருசில் கற்கை தொழூஉச் செல் பாண, தெய்வமாய் நின்றான் திசைக்கு” (பு. வெ. மா. 252) எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைக் தொடராகும்.

பருக்கைக் கற்கள் நிரம்பிய வழியிடத்தே வீரருடம்பை யடக்கஞ் செய்து அங்கே அவர்தம் பெயர் பொறித்த கல்லை நட்டு மரல் நாரால் தொடுக்கப்பட்ட சிவந்த பூவையுடைய கண்ணியுடனே அழகிய மயிலினது பீலியையும் சூட்டி. வழிபடுவர் (புறம். 264). மறக்குடியிற் பிறந்த மகளிர் தம் குடியிற்றோன்றிப் போரிற் பகைவரைப் புறங்கண்டு இறந்துபட்ட வீரர்களுக்கென நடப்பட்ட நடுகல்லினைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு விருந்தினரை ஓம்பும் நிலையில் தம்மனை வாழ்க்கை பெறவும், தம் கணவன் பகைவரை வென்று சிறக்கவும் அத்தெய்வத்தினை வேண்டிக் கொள்ளுதல் உண்டு. இச் செய்தி, 6
களிறு பொரக்கலங்கு கழன்முள் வேலி
அரிதுண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகற் கை தொழுதுபரவும் ஒடியாது
விருந்தெதிற் பெருகதில் யானே என்னையும்
வ்ரன்திவவல் கிவி அடக்கல்: வணி எஷன்பதல்ந் வேந்தனோடு
நாடுதரு விமுப்பகை யெய்துக வெனவே”” (புறம். 306)
எனவரும் புறப்பாடலில் இடம் பெற்றுள்ளமை காணலாம். போர் மறவர்கள் வாழும் சிற்றூர்களில் ஊர்ப்புறத்தே நடப்பெற்ற நடுகற்களுக்கு நாள்தோறும் நன்னீராட்டி நாட். பலியூட்டி நறும்புகை காட்டிச் செய்யும் வழிபாட்டின்௧ண் நெய்யுடன் கலந்து புகைத்து நறும்புகை வாஸிற் பாவி ஊரின் தெருக்களெல்லாம் கமழும்படி சிறப்பாக நிகழ்த்தப் பெற்றது. இச்செய்கு,
“ இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலியூட்டி
சீராட்டி நெய்ந் நறைக் கொளீ இய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
அருமுனை யிருக்கை ” (புறம்.329)
எனவரும் புறப்பாட்்டடிகளாற் புலனாகின்றது. மறக்குடியிற் பிறந்தார் அனைவரும் இத்தகைய நடுகல் வழிபாடு ஒன்றினையே தமக்குச் றந்த தெய்வ வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தனர் என்பது,
“ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவினல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலமே” (புறம். 335) எனவரும் புறப்பாட்்_டடிகளால் நன்கு தெளியப்படும்.
போரில் உயிர்கொடுத்துப் புகழ்கொண்ட தறுகண் மறவர்களின் பெயரும் பெருமையும் கல்லிற் பொறித்து அக்கல்லினை நட்டுத் தெய்வமாக நிறுத்தி அவ்வீரனுக்குரிய கிடுகினையும், வேலினையும் அக்கல்லின் பக்கத்தே ஊன்றி, நடுகல்லின் மேல் மயிற்பீலியைச் சூட்டி, துடியென்னும் திறுபறையினை முழக்கித் தோப்பி நெல்லாற் செய்த கள்ளினையும் ஆட்டுக் குட்டி,யினையும் பலியாகக் கொடுத்து அதிரல் பூக்களைத் தூ வி மறவர்கள் வழிபடுவரென்பது,
“வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூ௨ப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரம்”” (அகம். 35) எனவும்,
“கிடுகுநிரைத் தெஃகூன்றி,
நடுகல்லின் அரண்போல” (பட்டினப். 78, 78)
எனவும் வரும் தொட௫ர்களாலும் நன்கு விளங்கும்.

இக்ஙகனம் வீரர்களைத் தெய்வமாகக் குறித்த நடுகற்கள் போர்நிகம்ந்த இடங்களிலும், அிற்றூர்ப்.-புறத்தேயும், சுரங்களிலும், காடுகளிலும் பலரும் போக்கு வரவு புரியும் சிறுவழிகளிலும், பெருவழிகளிலும் வழிச் செல்வார்க்கு நிழல்தரும் நிலையில் நெடுங்கல்லாக நடப்பெற்றன என்பது,
“விழுத் தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர்
அழுத்துடை நடுகல்” (ஐந். 352) எனவும், ப
“பலர்க்கு நிழலாகி யுலகமீக் கூறூத்
தலைப் போகன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுகல்லாகிய கண்ணும்” (புறம். 223) எனவும்,
“எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும்
அருஞ்சுரக் கவலை” (அகம். 53) எனவும்,
“நடுகற் பிறங்கிய உவலிடு பறந்தலை” (புறம். 314) எளவும்,
“ பெயரும் பீடும் எழுதி யதர் தொறும்
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேலூ ன்றுபலகை வேற்றுமுனை கடுக்கும்
வெருவரு தகுந கானம்” (அகம். 131)
எனவும் வரும் சங்கச் செய்யுட் பகுதிகளால் இனிது விளங்கும்.

வீரர்களின் பெயரும் பெருமையும் பொறித்துத் தெய்வமாக நடப்பட்ட: நடுகல்லின் பெருமையுணராத ஆறலைகள்வர் தம்முடைய அம்புகளை அந்நடுகல்லின் மேல் வைத்துத் தட்டுவதால் அக்கல்லும் தேய்ந்து அதன்கண் பொறிக்கப்பட்_ட எழுத்துக்களும் தேய்ந்தொழிதல் உண்டு. அந்நிலையின் வழிச் செல்வோர் நடுகல்லிற் பொறிக்கப் பெற்ற எழுத்துக்களைப் படித்து நடுகல்லாகிய .வீரனது பெருமையை அறிய முயல்வர். அங்கு அமைதியாக நின்று படித்துணர விரும்புவோர் தாம் செல்லும் சுரத்தில் ஆறலை கள்வரால் தமக்கு நேரும் துன்பத்தையெண்ணிக் கல்லெழுத் தினைப் படித்துணரும் தம் முயற்டியைக் கைவிட்டு விரைந்து செல்லுதலும் உண்டு. இச்செய்தி,
“கடுங்கண் மறவர் பகழி மாய்ந் தென
மருங்குல் நுணுகிய பேஎமுதிர் நடுகற்
பெயர் பயம் படரத் தோன்று குயிலெழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லா தசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்
வெருவரு கானம்” (அகம். 297)
எனவரும் அகப்பாடற் பகுதியால் உய்த் துணரப்படும்.

நடுகல்லாகிய வீரர்களின் மனைவியர் தம் கணவரது பிரிவாற்றாமையால் நெஞ்சங்கலங்கிப் புலம்பி கூந்தல் களைந்து அணிகலன்களைக் கழித்துத் தம் கணவரைத் தெய்வமாகக் கொண்டு கைம்மை நோன்பு நோற்பர் என்பது,
“நிரையிவட் டந்து நடுகல்லாகிய
வெல்வேல் விடலையின்மையிற் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய -
கழிகல மகடூஉப் போல” (புறம். 261)
எனவரும் புறப்பாடற் பகுதியாற் புலனாம். காட்டில் வாழும் யானை வழியிடையே நெடிதாக நடப்பெற்ற நடுகல்லினை ஆளென மயங்கித் தன் கால்களால் உதைத்து நகங்கள் சதையுற்ற செய்தி, 8.
“அத்த நடுகல் ஆளென வுதைத்த
கான யானை கதுவாய் வள்ளுகிர்
இரும்பனை யிதக்கையின் ஒடியும் (அகம். 365) எனவரும் அகப்பாடற் பகுதியிற் குறிக்கப்பட்ட து.

நடுகல்லில் வீரனைத் தெய்வமாக நிறுத்தி நீராட்டுதலின், அந்நீர், தெய்வத்திருவுருவத்துற்கு ஆட்டிய திருமஞ்சன நீர்போலத் $ர்த்தநீராகக் கருதப்பெற்றது. இச்செய்து,
“பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன்
கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை
வான் வழங்கு நீரினுந் தூய்தே யதனாற்
கண்ணீ ரருவியுங் கழீ இத்
தெண்ணீ ராடுமின் தீர்த்தமா மதுவே” (தொல். புறத். சூ. 5)
எனவரும் நச்சினார்க்கினியர் உரை மேற்கோளால் நன்கு விரித்துரைக்கப் பெற்றமை காணலாம்.

இவ்வாறு தம்மூர்ப் பசுநிரையை மீட் டற் பொருட்டும் தம் நாடுகாத்தற் பொருட்டும் பகைவரோடு பொருது உயிர் துறந்த வீரர்களுக்கு நடுகல் அமைக்கப்பட்டமை போன்று, உலகத்து மக்கட் பண்பு நிலைபெற்று வளர்தல் வேண்டும் என்னும் உணர்ந்த குறிக்கோளுடன் உண்ணா நோன்பினை மேற்கொண்டு வடக்கிருந்து உயிர் துறந்த சான்றோர் களுக்கும் நடுகல் நிறுத்தி தெய்வமாகக் கொண்டு வழிபடும். வழக்கமும் சங்ககாலத்தில் நிலை பெற்றிருந்தது. உண்ணா நோன்பினை மேற்கொண்டு வடக்கிருந்து உயிர் துறந்த கோப்பெருஞ் சோழனுக்கு நடுகல் அமைக்கப் பெற்றிருந்தமையும், அவருடைய ஆருயிர் நண்பராகிய பொத்தியார் நடுகல்லாகி யும் தமக்கு இடங்:3காடுத்த கோப்பெருஞ்சோழனை நெஞ்சம் நெகிழ்ந்து போற்றிய செய்தியும்.
“கெடுவில் நல்லிசை சூடி
நடுகல்லாயினன் புரவலன்” (புறம். 221) எனவும்,

“பலர்க்கு நிழலாகியுலக மீக் கூறித்
தலைப் போகன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுகல்லாகியக் கண்ணும்
இடங்கொடுத்தளிப்ப மன்ற வுடம்போ
டின்னுயிர் விரும்புங் கிழமைத்
தொன்னட்புடையோர் தம்முழைச் செலினே” (புறம். 223)
எனவும் வரும் பொத்தியார் வாய்மொழிகளால் நன்கு விளங்கும். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து: தம்புகழ் நிறுவி உயிர் துறந்த சான்றோராகிய ஆட வர்க்குப் போலவே கற்புக் கடம் பூண்டு உயிர்துறந்த பத்தினிப் பெண்டிராகிய மகளிர்க்கும் நடுகல் நிறுத்தி வழிபடும் மரபு பண்டைக் காலத்தில் நிலைபெற்றிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுளது. சேரமன்னனாகிய செசங்குட்டுவன் கற்புடைத் தெய்வமாகிய கண்ணகிக்கு இமயமலையிற் கல்லெடுத்துத் கங்கையாற்றில் நீர்ப்படை, செய்து அக்கல்லிற் படிமம் அமைத்து வஞ்சி நகரத்திற் பத்தினிக் கோட்டம் அமைத்துக் கடவுள் மங்கலம் செய்தமை இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டத்தில் விரித் துரைக்கப் பெற்றது. இந்நிகழ்ச்சி வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தோர் உலக மக்களால் கல்வடிவில் தெய்வமாக நிறுத்து வழிபடப் பெறும் மெய்ம்மையினை விளக்குவதாகும்.

தொல்காப்பியனார் காலத்தில் இறந்தோர் பெயரும் பீடும் கல்லிற் பொறித்து அக்கல்லிளைக் தெய்வமாகக் கொண்டு வழிபடும் நிலையிலிருந்த நடுகல் வழிபாடு கடைச் சங்க காலத்தில் பெரும் பொருளை நினைந்து வடக்கிருந்து உயிர்துறந்த வேந்தர்க்கும் புலமைச் சான்றோர்க்கும் உரியதாயிற்று. இக்காலத்திலேயே கணவனுடன் உயிர் துறந்த கற்புடை. மகளிர்க்கும் கல்நட்டு வழிபடும் முறையும் தோன்றி நிலைபெற்றது. இவ்வாறு தறுகண் வீரர்க்குரியதாய்த் தோன்றிய நடுகல் வழிபாடு முறையே வேவந்தர்க்கும் சான்றோர்க்கும் பத்தினிப் பெண்டிர்க்கும் துறவியர்க்கும் உரியதாக வளர்ச்சி பெற்றது.

சோழ பீல்லப்களில் அரிஞ்சயன் முதலியோர்க்கு அமைக்கப்பட்டுள்ள பள்ளிப்படை க் கோயில்கள் பண்டைக் கால நடுகல் வழிபாட்டினை அடியொற்றியமைந்தனவாகவே கொள்ளத்தக்கன. இக்கோயில்களில் நிறுவப் பெற்ற தவலிங்கங்கள், வையத்துப் புகழுடன் வாழ்ந்த மனிதன் இவன் என அவனுடைய பெயரும் பெருமையும் கூறும் நடுகல் என்ற அளவில் அமையாது, மனிதனாக வாழ்ந்தவன் சிவபரம்பொருளுடன் இரண்டறக் கலந்து தெய்வமாகத் இகழ்கின்றான் என்ற சமயத்தத்துவ வுண்மையைப் புலப்படுத்தும் முறையில் வளர்ச்சி பெற்றுள்ள திறம் இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.

தமிழின மக்களிடையே இறந்தோர்க்குச் செய்யும் இறுதிச் சடங்குகளில் நெடுங்காலமாக நிலைபெற்று வருவது கரும முடிவிற் கல்நிறுத்து நீர்ப்படை. செய்யும் இறுதிச் சடங்காகும். இது தமிழ் முன்னோர் மேற்கொண்டு நிகழ்த்திய நடுகல் வழிபாட்டினைப் பின்வரும் வழிமுறை யினர்க்கும் நினைவுபடுத்தும் முறையில் தொடர்ந்து நிகழ்ந்து வருகன்றதென்பதனைத் தமிழகத்தின் தொன்மை வரலாற்றின் தொடர்புணர்ந்தோர் அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்பது திண்ணம்.

தறுகண் வீரர்களுக்குக் கல் நிறுத்தி வழிபடும் வீரர் வழிபாடு சிற்றூர்கள் தோறும் நிலைபெற்றிருந்தமை சங்க இலக்கியங்களால் நன்கு புலனாகின்றது. இவ்வீரர் வழிபாட்டினைத் தவிரப் பிற்காலத்தில் ஊர்தோறும் நிலைபெற் புள்ள சிராம தேவதையெனப்படும் சிறுதெய்வ வழிபாடுகளைப் பற்றிய குறிப்புக்கள் எவையும் சங்கச் செய்யுட் களிற் காணப்படவில்லை.

தம் சூடியில் இறந்த வீரர்களைத் தெய்வமாகக் கொண்டு கல்நிறுத்து வழிபடும் முறையிற் பொதுவாகக் குறிக்கப்படும் வீரர் வழிபாடே பிற்காலத்தில் தோன்றி அருஞ்செயல் புரிந்து ஆங்காங்கே புகழுருவில் நிலவிய மதுரைவீரன் முதலிய வீரர் பலருடைய இறப்புப் பெயர்களால் பலவாக விரிவு பெற்றது.

தமிழ் மறவர்கள் வீரம் வேண்டி வழிபட்ட தாய்த் தெய்வமாகிய கொற்றவை வழிபாடே,, தயோரை ஒறுக்கும் பேயினைச் சுற்றமாகக் கொண்ட காளி, ஊரெல்லையைக் காக்கும் பிடாரி எனப் பல்வேறு பெயர்களாற் குறிக்கப்பெறுவதாயிற்று. அருமழை தரல் வேண்டில் தரவல்ல ஆற்றல் வாய்ந்த பத்தினிப் பெண்டிர் வழிபாடு பிற்காலத்தில் எழுவர் நங்கையர் (சத்தமாதர்) வழிபாடாகவும்,மாரியம்மை முதலிய அன்னை வழிபாடாகவும் பல்வே: : வழிபாடுகளாக விரிவுபெற்ற து.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்: சிறப்பிடம் பெற்றுள்ள சாத்தன் வழிபாடு சங்கச் செய்யுட்களிற் காணப்படவில்லை. சாத்தன் என்ற சொல் முற்காலத்தில் பிறநாடுகளிற் சென்று வணிகம் புரிவார்க்கு உதவியாக வேந்தர்களால் அனுப்பப்பெற்ற வீரர்திரளின் தலைவனைக் குறித்து வழங்கும் பெயராகும். நாட்டில் வணிகர் கூட்டத்தார் மன்னனால்: நன்கு மதிக்கப்பெற்ற காலத்திலே வீரர் - வழிபட்டினையடுத்துச் சிறப்பாக வணிகச் .சாத்தின் தலைவனாகிய வீரனைப் பிடாரி முதலிய ஊர்க்காவற் றெய்வங்களுள்
ஒன்றாகக் கொண்டு கோயிலமைத்து வழிபடும் வழக்கம் நாளடைவில் தோன்றி நிலைபெறுவதாயிற்று.

தொடக்க காலத்தில் சமய வேறுபாடின்றிச் சமணர் புத்தர் முதலியோராலும் வேத வழிப் பட்டோராலும் (வழிபடப் பெற்ற சாத்தன் என்னுந் தெய்வம் வேத முதலிய மகா சாத்திரங்களை யுணர்ந்தோன் என்ற முறையில் சைவ வைணவ சமயத்கிற்குரியதாகிப் பிற்காலத்தில் திருமாலையும் சிவனையும் தாயுந் தந்தையுமாகக் கொண்டு பிறந்தருளியவன் (அரிகரபுத்திரன்) ஐயனார் என்னும் புராணக் கதையினையும் பெற்றுச் சிற்றூர்கள் தோறும் நிலைத்த இடத்தினைப் பெற்றுவிட்ட து.

“சாத்தன் என்ற தெய்வம் சங்க காலத்தில் இந்துமத தெய்வமாக இருந்திருக்கவில்லை. பிடவூரிலிருந்த அறச்சாத்தன் என்ற தெய்வம் சேக்கிழார் காலத்தில் சைவர்களின் தெய்வமாக இந்து மத தெய்வ வரிசையில் இணைக்கப்டட்டது'”' என்பாரும் உளர். 395ஆம் புறப்பாடலிற் கூறப்படும் பிடவூர் அறப் பெயர்ச் சாத்தன் என்பவன் வள்ளலாவன். . சாத்தன், கொற்றன், சாத்தி, கொற்றி என்பன, தமிழமகத்ில் பொதுப் பெயர்களாக வழங்கப் பெறுவன. இவற்றுள் சபத்தன் என்ற பெயர் ஒரு தெய்வத்தைக் குறித்த பெயராகச் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. வணிகச் சாத்தின் தலைவனாக வீரச் செயல் புரிந்து நாட்டினைக் காத்தமை யால் போரில் உயிர்துறந்த சாத்தல் என்னும் தலைவனைத் தெய்வ நிலையில் வைத்து மக்கள் வழிபடும் நிலை யேற்பட்_டது. அதனால் சாத்தன் என்னும் தெய்வம் ஊர் காவல் தெய்வங்களுள் ஒன்றாக மதிக்கப்பெற்று எல்லைத் தெய்வமாக ஆயிற்று. சாத்தன் என்னும் இப்பெயர் மக்கட் குரிய இயற்பெயராகவும், தெய்வப் பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்கும் நிலையில் அமைந்த தெய்வப் பெயராகவும் வழங்கப் பெறுவதாயிற்று. எனவே 395ஆம் பறப்பாடலிற் குறிக்கப்பட்ட பிடவூர் அறப்பெயர்ச் சாத்தனாகிய சங்ககால வள்ளலும், கி.பி. 8ஆம் நூற்றாண்டின ராஇய சேரர் காவலர் விண்ணப்பஞ்செய்த திருவுலாப்பறத்தைக் கயிலையிற் கேட்டுப் பாரில் வேஇியர் இருப்பிடவூரில் வெளிப்படப் பகர்ந்த மாசாத்தனார் ஆகிய தெய்வமும், காலத்தாலும் பிற சூழ்நிலையாலும் தம்முள் வேறு பட்_ டவர்கள் என்பது தெளிவு.
1. பி. எல். சாமி, தமிழிலக்கியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு, ப. 13.
தொன்று தொட்டு ஊர்காவற்றெய்வமாகப் போற்றப் பெறும் ஐயனாருக்குப் பொதுவாக, அமைக்கப்பட்ட
கோயிலே புறம்பணையான் வாழ்கோட்டம் எனச் சிலப்பஇுகாரத்திற் குறிக்கப்பட்டது. இனி ஊரையொட்டிய
பலூவறு தெய்வக் கோட்டங்கட்.கு இடையே புகாரில் அமைக்கப்பெற்ற சிறப்புடை..த் தனிக் 22: பாசண்டச் சாத்தன் கோயிலாகும். பாசண்டம் என்பஜற்குப் “பலகமயத் தருக்கக் கோவை” எனப் பொருளுரைப்பர் சிலப்பதிகார உரையாிரியர். பாசண்டூச் சாத்தன் மகாசாத்திரன். மகாசாத்திரலை மகா சாத்தா்' எனவும் வழங்குவர். பாசண்டம் என்பதற்குப் “பாஷாண்டம்' எனப் பொருள் - கொள்ளுதல் தவறு. சிலப்பதுிகாரத்திற் கூறப்படும் பாசண்டச் சாத்தன் மறையவர் குடியிற் பிள்ளையாய் வளர்ந்து தேவந்தி என்னும் மங்கையை மணந்து அவளால் வழிபடப் பெற்ற வைதிக சமயத் தெய்வம் எனக் 'தகொள்ளுதலே பொருத்த முடையதாகும். ஊர் காவற்றெய்வமர்கிய சாத்தன் முதலாக சிற்றூர் மக்களால் வழிபடப். பெறும் சிறு தெய்வ வழிபாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து “ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்' என்னும் : பெருந்தெய்வ வழிபாட்டினை உருவாக்கும் நிலையில், .காடு கிழான் (காடுகாள்) முதலிய தாய்த் தெய்வங்களை இறைவனுக்குச் சத்தியாகவும் சாத்தன் முதலிய காவற்றெய்வங்களை இறைவனுக்கு மக்களாகவும் இணைத்த நிலையில், அவை முழுமுதற் பொருளைச் சார்த்தி வழிபடப்பெ றும் சார்பநிலைத் தெய்வங்களாயின எனக்.கருத வேண்டியுள து.

“இன்று கிராமங்களிற் காண்ப்பெறும்' ஐயனார் வழிபாட்டில் பழங்குடி , மக்களின் சாதவாகனன் வழிபாடும் பெளத்த , 'சைனரின் சாத்தன். வழிபாடும், சைவரின்.. சிவபெருமான். -மசுனின். வழிபாடும் கலந்திருப்பதைக்' காண்கின்றோம்” என்பர். இவ்வாறு. கூறுவதை டைத. தமழநாட்டில் முற்காலத்தில் எல்லைத்: தெய்வமாக அமைக்கப் பெற்ற சாத்தன் வழிபாடு சமய. .வேறுபாடின்றிப் புத்தர் சமணர் முதலிய எல்லா மக்களா் லும் மேற்கொள்ளப்பெற்றதெனவும், அது கி.பி. 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் தமிழகத்தின் பெருந்தெய்வ. வழிபாடுகளாகிய. சிவ வழியாட்டுடனும், இருமால் வழிபாட்டுடனும். இணைணைக்கப் பெற்றதெனவும் கொள்ளுதலே ஏற்புடையதாகும்.

சிவபெருமானுக்கு மூத்த புதல்வராகிய யானைமுகப் பிள்ளையார். வழியாடு ஆங்க ச். செய்யுட்களில் இடம் பெறவில்லை. அதனைப் போன்றே எல்லைத் தெய்வமாகிய சாத்தனார் வழிபாடும். இடம்பெறவில்லை. சங்ககாலத்தில் உயிர்ப்பலியிட்டடு வணங்கும், முறையில் நிலவிய காளி யென்னும் அன்னை. வழிபாட்டையும். கற்புடைத் தெய்வ மாதிய பத்தினி வழிபாட்டையும் நடுகல், நிலையில் வழிபடப் பெற்ற வீரர்: வதரரத் கள்ளா; மூலமாகக் கொண்டே தமிழகத்தில் சிற்றூர்கள் தோறும் பிடாரி, மாரி, மாடன், வீரன் முதலிய சிறு தெய்வ வழிபாடுகள் காலந்தோறும் பலவாக விரிந்து தத்துவ வுணர்வு நிரம்பாத பொதுமக்கள் பலராலும் போற்றப்பெறும் பொதுமை நிலையினை எய்தியிருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது.
2. பி. எல். சாமி, "தமழலகசுயததல. தாயததெயவ வ பழிபாரு, பூஜித்


பத்துப்பாட்டு எட்டுத் தொகையாகிய சங்க இலக்கியங்கள் மக்கள து வாழ்வியலில் அகமும் புறமும் ஆகிய ஒழுகலாற்றைக் குறித்துப் பாடப் பெற்றன வாயினும், மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத தெய்வ உணர்வையும், வழிபாட்டு நெறிகளையும் ஆங்காங்கே குறித்துச் செல்லக் காண்கின்றோம். பத்துப்பாட்டின் முதற் கண்ணதாகிய திருமுருகாற்றுப்படை. குறிஞ்சி நிலக் கடவுளாகிய மூருகப் பொருமானிடத்து அன்பர்களை ஆற்றுப்படுத்தும் நிலையில் அமைந்தது. இதனைப் பாடிய மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் இப்பாடலில் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள் பற்றிய உண்மைகளைக் குறிப்பிற் புலப்படுத்தியுள்ளமை கூர்ந்து உணரத் தகுவதாகும். பத்துப்பாட்_ டின் ஏனைய ஒன்பது பாடல்களிலும் தெய்வ வழிபாடு பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. எட்டுத்தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகிய வற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்த பெருந்தேவனார் பாடல்களும், கலித்தொகைக் கடவுள் வாழ்த்தாக நல்லந்துவனார் பாடிய பாடலும், பகிற்றுப்பத்துக் கடவுள் வாழ்த்தாகத் தொல்காப்பிய உரையிற் காணப்படும் பாடலும் சிவன், முருகன், இருமால் ஆகிய தெய்வங்களைப் போற்றிப் பரவுவனவாக அமைந்துள்ளன. மேற்குறித்த கடவுள் வாழ்த்துப் பாடல்களையன்றி அகத்திணை, புறத்திணை ஒழுகலாறுகளை விரித்துரைக்கும் இத்தொகைநூற் - செய்யுட் களிலே பண்டைக் காலத் தமிழ் மக்கள் மேற் கொண்டொழுகிய தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புக்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.

முக்கட். செல்வனாகிய இறைவன், சேயோனாதிய முருகன், கண்ணனும் பலதேவனும் என இரு பெருந்தெய்வமாக வைத்தெண்ணப்படும் மாயோன், அவனது உந்தித் தாமரையில் தோன்றிய .நான்முகன், மாயோன் மகனாகிய காமன், ஆயிரம் கண்ணோனாகிய இந்திரன் ஆகிய தெய்வங்களின் இருமேனி வண்ணமும், அவர்தம் ஊர்்இயும், கொடியும், படையும், தாரும் முதலியன. பற்றிய குறிப்புக்கள் புறநானூறு, கலித்தொகை ஆகிய தொகை நூல்களில் உவமை வாயிலாக ' விரித்துரைக்கப்பெற்றுள்ளன.
சிவனுடைய ஆற்றலாகிய :உமை, கொற்றவை, திரூமாலின் தேவியாகிய இருமகள், முருகன் தேவியராடிய .வள்ளி, தெய்வயானை ஆகிய தெய்வங்களைப் பற்றிய குறிப்புக்களும் ப சங்கச் செய்யுட் களில். இடம் வடம் எ

எட்டுத் தொகை நூல்களுள் ர்றங்ட ப்ரிபாட்ல் “இன்னியல் மாண்தேர்ச்சி இசைப் பரிபாடல்” எனக் - குறித்தவண்ணம் இயலிசைப் பாட ல்களாகப், பாடப்பெற்று இசை வல்லோரால் பண்ணமைக்கப்பெற்ற, இசைத் தமிழ் இலக்கியமாகும். எழுபது பரிபாடல்களால். இயன்ற இத்தொகை நூலில் திருமாலைப். போற்றிப். பாடிய பாடல்கள் எட்டும், செவ்வேளைப் போற்றிப் பாடிய பாடல்கள் முப்பத்தொன்றும், காடுகிழாளாகிய கொற்றவையைப் போற்றிப் பாடிய பாடல் ஒன்றும் தமிழ் வையைப் புனலாடல் விழாவினைப் புனைந்து போற்றும். பாடல்கள். இருப்த்தாறும், ப தமிழ் நிலைபெற்ற மதுரையம். -பதுியினைப்: பமலும். பாடல்கள் நான்கும் அமைந்திருந்தன. :இச்செய்து,
“ திருமாற் கிருநான்கு' செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப ...
செய்யபரி பாடற் நிறம்"
எனவரும் பழைய வெண்பாவாற்' புலீனர்கும். தெய்வத்திறம் போற்றும் தோத்திரப் பனுவலாகக் கடைச். சங்கத்தார் தொகுத்த எழுபது. பரிபாடல்களில்.. :இக்கர்லத்தில் முழுமையாகக் இடைப்பன.. இருபத்திரண்டு . முழுப்... பாடல்களும், உறுப்புக்களாகக் கிடைத்த; இல், பாடல்களின் அர் பகுதிகளுமே யாகும். .

திருமாலிருஞ்சோலையிற் கோயில் கொண்டருளிய காத்தற் கடவுளாகிய திருமால், திருப்பரங்குன்றத்திற் கோயில் கொண்டருளிய குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமான் ஆகிய தெய்வங்களின் அருள் நலங்களை இசையுடன் பரவிப் போற்றும் பண்சுமந்த பாடல்களின் தொகுதியாக அமைந்தது பரிபாடல் என்னும் இத்தொகை நூலாகும். இயற்கை வனப்பும், இயற்கைப் பொருள்களின் வாயிலாகத் தோன்றும் தெய்வ வனப்பும் ஆகிய இருவகை வனப்புக்களே இசைப் பாடற்குரிய பொருள்வகை என்பர் சான்றோர். இவ்விருவகை வனப்புக்களையும் தன்னகத்தே கொண்டு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் வகையில் சங்ககாலத் தமிழ் மக்கள் மேற்கொண்டொழுகிய தெய்வ வழிபாட்டு முறைகளை விரித்துரைப்பது பரிபாடல் என்னும் இத்தொகை நூலாகும். கடைச் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய தேவாரம், திருவாசகம் முதலிய சைவத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருளிச் செயலாகிய நாலாயிரத் இவ்வியப் பிரபந்தம் முதலிய பத்திமைப் பனுவல்களுக்கு அடிப்படையாக விளங்குவது இப்பரிபாடல் தொகுதியே யாகும். திருமால், செவ்வேள் ஆகிய தெய்வங்களை இசையுடன் பரவிப் போற்றும் பரிபாடலாகிய இத்தொகை நூல், திருமாலடியார்கள் தெளிந்துணர்த்திய மெய்ந்நெறிக் கொள்கையினையும், சிவனடியார்கள் தெளிந்துணர்த்திய மெய்ந்நெறிக் கொள்கையிளையும் சங்க காலத்தில் தமிழகத்தில் பரவி இருந்த வைதிக நெறியையும் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. இதன்கண் இடம் பெற்றுள்ள தெய்வ வழிபாடும், தத்துவ விளக்கமும் நுணுகி ஆராயத் தக்கனவாகும்.

திருமால் வழிபாடூ :- திருவாவினன்குடியில் முருகப் பெருமானைக் காணவந்த தெய்வங்களைப் பற்றிக் கூறுமிடத்து,
“கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு சுடுந்திறற்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும்” (திருமுருகு. 148-151)
எனத் திருமால் போற்றப் பெற்றுள்ளார். நஞ்சு பொருந்திய துளைவாய்ந்த எயிற்றினையுடைய அஞ்சத்தக்க பாம்பு இறக்கும்படியாகப் புடைக்கும் சிறகுகளையுடைய கருடனைக் கொடியாகக் கொண்டோன் திருமால் என்பது இத்தொடரிற் புலப்படுத்தப்பட்_ட து.

திருமாலின் உந்தித் தாமரையில் படைத்தற் கடவுளாகிய நான்முகன் தோன்றினான் என்ற செய்தி,
“ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றித்
தாமரை பயந்த தாவில் ஊழி
நான்முக வொருவற் சுட்டி” (திருமுருகு. 163-165)
எனத் திருமுருகாற்றுப்படையிலும்,
“நீனிற உருவின் நெறியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி” (பெரும்பாண். 402-404)
எனப் பெரும்பாணாற்றுப்படையிலும் குறிக்கப்பெற்றது.

திருமகள் தங்கும் மார்பினை உடைய நெடியோனாகிய திருமால் மாவலி என்னும் அவுணன்பால் குறளனாக (வாமனனாக,)ச் சென்று மூவடி மண் வேண்டி ஈரடியால் மூவுலகும் அளந்த வரலாறு,
“இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன்” (பெரும்பாண். 29-30) எனவும்,
“ஞால மூன் றடித் தாய” (கலி. 124) எனவும்,
“நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல்” (முல்லை. 1-3)
எனவும் வரும் தொடர்களிற் குறிக்கப்பெற்ற து.

சக்கரப் படையினையும் வலம்புரிச் சங்கினையும் - தாங்கும் பெரிய கைகளை உடைய மார்பினனாகிய மாயோன் மாவலி வார்த்த நீர் தன்கையிலே சென்ற அளவிலே நெடியோனாக உயர்ந்து மூவுலகினையும் தன் ஈரடிகளால் தாவி அளந்த செய்தி மேற்குறித்த முல்லைப்பாட்டுத் தொடரில் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

“அகலத்தை இடத்தே உடைய உலகத்தை வளைத்துச் சக்கரத்தோடே வலம்புரியைத் தாங்கும் பெரிய கைகளை உடைய இிருமார்பிடத்தே இருமகளை வைத்தமால், மாவலிவார்த்த நீர் தன்கையிலே சென்றதாக உயர்ந்த திருமால்” எனப் பொருள் வரைந்த நச்சினார்க்கினியர், “இதனானே முல்லைக்குரிய தெய்வம் கூறினார்” எனக் கருத்துரைப்பர். மால் நீர் செல நிமிர்ந்தாற் போல மேகமும் நீர் பவத படு என்பதம்ம், ப

முல்லைத்திணை 'ஒழுகலாற்றைக் குறித்த இப்பட்டன் மூல்லை நிலத் தெய்வமாகிய திருமால் ஞாலமளந்த
செய்தியை முகிலொடு புணர்த்துக் கூறிய தறம் கூர்ந்து உணர்வதற்குரியகாகும்.
| -.இருமால் .பாம்பணையிற். பள்ளி கொண்டருளிய ததந்லை. உவமை-வாயிலாகப் புனைந்துரைப்ப து,
ப் ் ( ் லக், காந்தன் ஞ்சிலம்பிற் களிறு படிந்தாங்கு
பாம்பை ண்ப்ப்ள்ளி அமர்ந்தோன் ஆங்கண்” ் (பெரும்பாண். 371-373)
$ம்பர்ணாற்ங்க் கொடராகும். என்வசூம் பெ

நீண்ட பூங்கொத்துக்களை உடைய காந்தட் பூககள: மலர்ந்த. அழகிய பக்கம்லையிலே யானை 'கடந்தாற்போல, பாம்பணையாகிய படுக்கையிலே அறிதுயில் கொண்டோனாூய. இருமாலின் திருக்கோயில் காஞ்சியிலுள்ள இருவெல்காவா்கிய அவ்விடத்தின்கண் அமைந் இருந்தது”. என்பகுட் இத்: 'தொடராற் புலனாம். திருமால் அலையறியும். பாற்கடலில்: ஆதி சேடனாகிய பாம்பினை அணையாகக் கொண்டு அறிதுயில் அமர்ந்துள்ள தோற்றத்தினை, _- 
“பாடிமிழ் பரப்பகத் ததவணை அசைஇய
ஆடுகொள் நேமியாற் பரவுதும்” (கலி. 105)
எனச் சோழன் நல்லுருத்திரனார் . பரவிப் போற்றயுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.
இருமால் மார்பில் அம்முதல்வனது தேவியாகிய திருமகள் அமர்ந்திருக்கும் திறத்தை,
“ திருமறு மார்பின் முந்நீர் வண்ணன்” _ (பெரும்பாண். 29-30)
எனப் பெரும்பாணாற்றுப்படையும்,
“திருவார் மார்பன்” (மலைபடு. 355)
என மலைபடுகடாமும் குறிப்பிடும். இச்செய்௫ு, .
“மாயவன் மார்பில் திருப்போல் அவள் சேர” (கலி. 145) எனவும்,
“பொருமுரண்மேம்பட்ட பொலம்புகழ் நேமித்
திருமறு மார்பன்”. (கலி. 104) எனவும் வரும் தொடர்களிலும் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

காத்தற் கடவுளாகிய திருமால், இருவோண நாளில் அவதரித்தமையால் திருவோண நாளைத் திருமாலுக்குரிய நாளாகப் போற்றுதல் மரபு. இம்மரபு,
“கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்” (மதுரைக் காஞ்சி 590-591)
என மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

“தரட்சிுயைக் கொண்ட அவுணரை வென்ற பொன்னாற் செய்த மாலையினை உடைய இருமால் பிறந்த ஓணமாகிய நன்னாள்” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். திருமாலுக்குரிய இருவோணத் திருநாளில் மதுரை மாநகரிற் போரில் பெருவிருப்புடைய வீரர்கள் பலருங் காணத் தம்மில் தாம் மாறாய்ப் பொருது நிற்கும் சேரிப்போர் மறவரது விளையாட்டாக நிகழ்ந்தது என்ற செய்து,
“மறங்கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்” (மதுரை. 594-596) எனவரும் மதுரைக் காஞ்சியாற் புலனாம்.

திருமாலுக்குரிய துருவோணத் திருநாளில் மதுரையிற் சேரிப் போர் நிகழ்ந்தது போலவே இவனுக்குரிய திருவாதிரைத் திருநாளில் இருமயிலையில் வீரர்களது சேரிப்போர் நிகழ்ந்த இறத்தை,
“ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றம்கொள் சேரிதன்னில்
ப கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்”  என ஆளுடைய. "பிள்ளையார் குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்குதற்குரியதர்கும்:


“நிலந்தகு:திருவின் நெடியோன் போல்” (மதுரைக். 763)
எனவரும் தொடர்க்கு “எல்லாநிலங்களையும் தன்னிடத்தே காட்_டின பெருஞ்செல்வத்தை உடைய மாயோனைப்போல); என்றது கண்ணன் எப்பொருளும் தானாய் இருக்கின்ற படியைக் காட்டி ஸ்ரீ &தை அருளிச் செய்து எல்லாரையும் போஇத்தாற்போல” என நச்சினார்க்கினியர் தரும் உரையும் விளக்கமும் இங்கு நினைக்கத் தக்கனவாகும். '

முறை செய்து காப்பாற்றும் மன்னனைக் காத்தற் கடவுளாகிய திருமாலெனக் கொண்டு போற்றும் மரபு தொல்காப்பியனார் காலம் தொட்டுத் தமிழகத்தே நிலைபெற்று வருவதென்பது,
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற்
றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்”
எனவரும் தொல்காப்பியத் தொடராற் புலனாகும். இம்மரபு
“இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கிடை அந்நீர்த்
திரைதரு மரபின் உரவோன் உம்பல்”
எனவரும் பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளமை காணலாம். “பரிய நிலத்தை அளந்த தஇருவாகிய மறுவை அணிந்த மார்பினை உடைய கடல் போலும் நிறத்தை உடைய திருமாலின் வழியிற்றோன்றிய உரவோன்” என்பது இத்தொடரின் பொருளாகும்.

பெருந்தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்களுள் நற்றிணைக்குரிய கடவுள் வாழ்த்துப் பாடலாக
அமைந்தது
“மாநிலஞ் சேவடி யாகத் தூநீர்
வளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே”
என்பதாகும். மிகப் பெரிய நிலப்பரப்பு தன் சிவந்த இருவடிகளாகவும், தூயநீரையுடைய சங்குகள் முரலும் கடல் தான் உடுக்கும் ஆடையாகவும், ஆகாயம் தன் திருமேனியாகவும், திசைகள் கைகளாகவும், குளிர்ந்த கைகளை உடைய இங்கஊளோடு ஞாயிறும் தன் கண்களாகவும், பேருருக் கொண்டு இயலும் எல்லா உயிர்களிடத்திலும் தாம் உயிர்க்குயிராய்ப் ம பாருந்தி எல்லாப் பொருள்களையும் தனது விரிவிற்குள்ளே அடக்கிய வேதத்தாற் போற்றப்படும் முதற் கடவுள் குற்றமற விளங்கிய சக்கரப் படையை ஏந்திய திருமால் என்று போற்றுவர் சான்றோர் என்பது இதன் பொருளாகும்.
720 சைவசித்தாந்த சாத்திர வரலாறு வெட ய ய யய மயயயயய யய யய ய யய யயயயயவயயயயயயயயயய யவ அவையவை

இப்பாடலில் தஇிிரியோனாகிய திருமாலது உலகளாவிய பேருருவின் தோற்றமும், அம்முதல்வன் உயிர்க்குயிராய்ப் பொருள்கள் தோறும் ஊடுருவி நிற்கும் நுண்ணியல்பும், உலகுயிர்கள் எல்லாவற்றையும் தன் விரிவிற்குள்ளே அடங்கத் திகழும் விரிவுநிலையும் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.
“இயன்றவெல்லாம் பயின்றகத்தடச் கிய ச ௨239
வேத முதல்வன்
என இப்பாடலில் வந்துள்ள தொடர், திருமாலுக்குரிய நாராயணன் என்னும் திருப்பெயர்ப் பொருளைப் புலப்படுத்தி நிற்றல் நுணுகி நோக்கற் பாலதாகும்.

மேகம் தவழும் கரிய மலையையும், அம்மலை முகட்டினின்று இழியும் வெள்ளிய அருவி நீரையும் விளக்கப் போந்த கபிலர், கரிய மலைக்குக் கண்ணனையும், வெள்ளிய அருவிக்கு அவன் தமையனாகிய பலதேவனையும் உவமையாக எடுத்துக் காட்டும் நிலையில், ேே ச [] ௪ ௪ ௪
மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வ:ங்கு வெள்ளருவி” (நற். 32)
எனப் புனைந்துரைத்துள்ளார். இதனால் கரிய மலையையும் அதன் பக்கத்து வீழும் வெள்ளிய அருவியையும் காண்போர் உள்ளத்திலே கண்ணனது கரிய திருமேனியும், பலதேவனது வெளிய திருமேனியும் ஆகிய தெய்வத் தோற்றமும் திகழுமாறு சொல்லோவியம் செய்த கபிலர து புலமைத்திறம் நினைந்து போற்றத் தகுவதாகும்.,

குன்றுகளைத் தன்னிடத்தே கொண்டு கடலாற் சூழப்பட்ட. மண்ணுலகிலே வாழும் மக்கள் பலரும் ஒருங்கு கூடி உண்ணா நோன்புடையராய்த் தஇருவனந்தபுரத்திலுள்ள திருமால் கோயிலுள் திருவமர் மார்பனாகிய அலங்கற் செல்வன் திருவடிகளைப் பரவிப் பாடுகிடத்தலும், அன்னோர் கோயிலின் தெளிந்த மணி ஓசையினைக் கேட்டுத் தீர்த்தம் ஆடித் இருமாலை வழிபட்டு மனம் நிறைந்த மகிழ்ச்சி உடையராய்த் தாம் தாம் வாழும் ஊரை நோக்கி மீண்டு செல்லுதலும் சங்ககாலத்தில் நிகழ்ந்த திருமால் வழிபாட்டு நிகழ்ச்சிகளாகும். இச்செய்தி,
“குன்றுதலை மணந்து குழமூ௨க்கட லுடுத்த
மன்கெழு ஞாலத்து மாந்த ரொராங்குக்
கைசுமந் தலமரும் பூசன் மாதிரத்து
நால்வேறு நனந்தலை யொருங்கெழுந் தொலிப்பத்
தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித்துறை மண்ணி
வண்டூது பொலந்தார்த் திருஞெம ரகலத்துக்
கன்பொரு திகிரிக் கமழ்குரற் றுழா அய்
அலங்கற் செல்வன் சேவடி பரவி
நெஞ்சுமலி உவகையர் துஞ்சுபதிப் பெயர” (பதிற். 31)
எனவரும் பகதிற்றுப்பத்துப் பாடற்பகுதியில் விரித்துரைக்கப் பெற்றது. இப்பகுதியில் “அலங்கற்செல்வன் என்றது இருவனளந்தபுரத்துத் தருமாலை' என்பர் பழைய உரை ஆசிரியர். “செல்வக்கடுங்கோ வாழியாதன்' ஏத்தல் சான்ற வேள்வியினைச் செய்து அறத்துறையில் சிறந்தவனாய் மாயவண்ணனாகிய இிருமாலைத் தன் நெஞ்சிற்கொண்டு அத்தெய்வத்திற்கு வழிபாடு செய்தற்குரிய நெல்லின் விளைவை உடைய *ஓகந்தூர்” எனும் ஊரைத் திருவிடையாட் டமாகக் கொடுத்துள்ளான். இச்செய்தி,
““ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனனுறப் பெற்று அவற்கு
ஓத்திற நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்
ர்்பரசல்றைஸயக்கன் மல்லலுள்ளமொடு மாசறவிளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனை””
எனவரும் ஏழாம் பத்துப் பதிகத் தொடரால் விளக்கப் பெற்றது. .

இசைத் தமிழ்ச் தெய்வத் தோத்திரப் பனுவலாகத் தொகுக்கப்பெற்ற எழுபது பரிபாடல்களுள் இக்காலத்தில் முழுமையாகக் கிடைப்பன இருபத்திரண்டு பரிபாடல்களும்,பரிபாடலுறுப்புக்களாகக் கிடைத்த சல பகுதிகளுமேயாகும். இத்தொகை நூலில் இடம்பெற்ற தத்துவ விளக்கம் பிற்காலத்தில் இராமாநுசரது விசிட்டாத்துவிதக் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளமை காணலாம். தொல்காப்பியனார் காலத்தில் முல்லைநிலத் தெய்வமாக நிலவகையாற் போற்றப் பெற்ற திருமால் வழிபாடு அவர் காலத்திற்குப் பின் நிலங்கடந்த தெய்வ வழிபாடாக யாண்டும் பரவுவதாயிற்று.

“மாயோன் மேய மன்பெருஞ்சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்” எனவரும் தொல்காப்பியத் தொடரால் காயாம் பூவினையொத்த கரிய நிறம் வாய்ந்த தஇருமேனியையுடைய முல்லை நிலத்தெய்வமாகப் போற்றப்பட்ட இருமால், சங்கத்தொகை நூல்களில் கரிய தஇருமேனியினை உடைய கண்ணபிரான் எனவும், வெளிய இருமேனியினை உடைய பலதேவன் எனவும் இரு தெய்வமாகவும் தம்முட் பிரிவின்றியியலும் ஒருமை நிலையினராகவும் இயைத்துப் போற்றப் பெற்றுள்ளார்.
“கல்லறை கடலுங் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்
வேறுவேறுருவின் ஒருதொழி லிருவர்த்
தாங்கு நீணிலைய ஓங்கிருங் குன்றம்” (பரிபாடல் 15)
எனவரும் பரிபாடல் இருமாலிருஞ் சோலையில் எழுந்தருளிய
மாயோனைப் பெரும்பெயர் இருவராகப் பரவிப் போற்றுகின்றது.

கல்லென ஒலிக்குங் கருங்கடலும் வெண்மணற் பரப்பாகிய கடற்கானலும் போல வேறுவேறாகிய நிறத்தினையும் பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத (காத்தல்) தொழிலினையும் உடைய மாயோனையும், அவனுக்குத் தமையனாகிய பலதேவனையும் தாங்கும் நீண்ட நிலைமையினை உடைய புகழால் உயர்ந்த திருமாலிருஞ்சோலையாகுிய பெரிய குன்றம் என்பது மேற்குறித்த பரிபாடற் றொடரின் பொருளாகும். திருமாலாகிய ஒரு தெய்வமே பலதேவனும், கண்ணனும் எனத் தமையனும், தம்பியுமாக இருவேறுருவிற் சங்க காலத்தில் வழிபடப்பட்ட செய்தி மேற்குறித்த பரிபாடற் றொடரால் நன்கு தெளியப்படும். அன்றியும் முல்லை நிலத் தெய்வமாகிய திருமால் சங்க காலத்தில் வாசுதேவன் சங்கருடணன், பிரத்யும்நன், அநிருத்தன் என நால்வகை வியூகமாகவும் போற்றப் பெற்றுள்ளார்.
“செங்கட் காரி கருங்கண் வெள்ளை
பொன்கட் பச்சை பைங்கண்மால்'” (பரிபாடல் 3 : 81-82)
எனவரும் பரிபாடற்றொடரில் நால்வகை வியூகமும் குறிக்கப் பெற்றன. செங்கட். காரி - வாசுதேவன், கருங்கண் வெள்ளை- சங்கருடணன், பொன்கட். பச்சை - சவந்த உடம்பினை யுடைய காமன், பச்சை என்பது பிரத்யும்நன் என்றும் வடமொழித் தஇரிபு என்பர் பரிமேலழகர். பைங்கண்மால்-பசியவுடம்பினை யுடைய அநிருத்தன் - என இவ்வாறு திருமாலுக்குரிய நால்வகை வியூகமும் பரிபாடலிற் கூறப்பெற்றுள்ளமை அறியத் தகுவதாகும். 


ஆயிரம் முடியையுடைய ஆதிசேடன், தன் திருமுடிமேல் கவிக்கப்பெற்ற இருமால், திருமகள் தங்கும் மார்பினனாகவும் சங்கைப் போன்ற இருமேனியையும், பனைக் கொடியையும் கலப்பையாகிய படையையும் ஒற்றைக் குழையையும் உடைய பலதேவனாகவும் விளங்குகின்றான் என்பது,
“ ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலை
தீயுமிழ் திறனொடு முடிமிசை யணவர
மாயுடைய மலர்மார்பின் மையில் வால்வளைமேனிச்
சேயுயர் பனைமிசை யெழில்வேழ மேந்திய
வாய்வாங்கும் வளை நாஞ்சி லொருகுழை
யொருவனை” (பரி. 1) 
ப எனவரும் பரிபாடற்றொட ரால் விரித்துரைக்கப்பெற்ற து.

செந்தாமரை மலர்போலும் கண்ணையும் காயாம் பூவினையொத்த திருமேனியினையும், திருமகள் விரும்பி வீற்றிருக்கும் மார்பினையும், அம்மார்பில் விளங்கும் கெளத்துவ மணியினையும் பொன்னாடையாகிய யுடையிளையும், கருடச்சேவற் கொடியினையும் உடையவராக முதலாம் பரிபாட.லில் இருமால் போற்றப்படுகிறார் (பரி. 7).

மண்ணுலகமும், பசும் பொன்னுலகமும் பாழ்பட. ஒன்றற்கொன்று மாறிவருதலாகிய பழைய இயல்பினையுடைய திங்களும், ஞாயிறும் கெடுதலால். அழகிழந்த இயல்பினதாக விசும்பு அழிந்த ஊழிகள் முறை முறையாகக் கழிய, தஷ்குணமாகிய ஒலியுடனே தோன்றி உருவு காணப்படாத வளி முதலாய பூதங்களின் பரமாணுக்கள் வளருதற்கிடமாகிய விசும்பு என்னும் முதற் பூதத்தின் ஊழியும், அவ்வானத்தினின்று எல்லாப் பொருள்களையும் திரட்டுகின்ற காற்றுத் தோன்றிய ஊழியும், அக்காற்றினின்றும் குத்தோன்றிய ஊழியும், அத்தீயினின்றுந் தோன்றிய பனியும் மழையும் பெய்த ஊழிகளும், அவற்றிற்குப் பின்பு புனலினின்றும் தோன்றுதலால் மீண்டும் வெள்ளத்தினுட் கிடந்து முன் தோன்றிய நான்கு பூதங்கட்கும் உள்ளீடாகிய இருநிலத்தின் ஊழியும் என்று இவ்வூழிகளாலே நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என எண் குறித்திட்ட பெயர்களது அளவினதாகிய காலத்தின் நீட்சி கழிந்த பிறகு மீண்டும் உயிர்கள் உளவாதற்பொருட்டு அந்நிலத்தினை வெள்ளைப் பன்றியின் உருவு கொண்டு எடுத்திட்ட கேழற்'கோலத்தால் பெயர் பெற்ற வராககற்பம் எனும் இவ்வூழி, நின் அருட். செயல்களுள் ஒரு செயலின் பெயராதலை உணர்த்துதலின் அச்செயல்கள் பலவற்றையும் செய்கின்ற நின்னுடைய முதுமைக்குள்ள கற்பங்கள் யாவரானும் அறியப்படாதன. . அவ்வாறு முதுமையை உடையவனாக விளங்குகின்ற நீ தூவெள்ளை நிறத்தனாய பலதேவனுக்கு இளையன் என்று. கூறுவார்க்குப் பிறப்பு முறையால் தம்பியாகத் திகழ்கின்றாய். எல்லாப் பொருள் களையும் மறைக்கும் இருள்போலும் உடையினையணிந்த பனைக் கொடியோனாகிய அப்பலதேவனுக்கு வாசுதேவ மூர்த்தியாகிய நீ தமையனாகத் திகழ்கின்றாய்.

வழுவாத விரதங்களையுடைய ஞானிகள் ஆராய்ந்த வேதத்தால் தெரிந்துணரின், உயிர்தோறும் உயிர்தோறும் உயிர்க்குயிராய் (அந்தரியாமியாய்) நிலைபெற்றுள்ளாய். இந்நிலைமைகள் நின்னிடத்தே தோன்றும் தொன்மை நிலைபோல நினக்கேயமைந்த இறப்புக்களாகும். அழகிய மதிக்கு மறுவென்னும்படி திருமகள் தங்கிய நின் மார்பம், நீரிற் கிடந்த நிலமகளை ஆதுிவராக உருவின் மருப்பில் ஏந்திக் கொண்டு நீ மணந்தமையால் புள்ளியளவாகிய நிலனும் வெள்ளத்தால் வருந்திற்றில்லையென்று வேதப் பொருளையுட். கொண்டு கூறுவோர் கூற்றோடு மாறுபடுகின்றது. ஒருத்தியொடுமணம் புணரும் வழி பிறள் ஒருத்தியின் மார்பினைச்சேர்தல் கூடாமையின் உரையொடு பொருந்திற்றில்லை என்றார்.
.. நின்னை எதிர்த்த அவுணர் கொடிகள் அற்று இற்று,
செவி செவிடுபட்டு, முடிகள் அதிர, உலகுகள் நிலைதளர மிக்கு முழங்கும் நின்கையிற் சங்கம் இடியினை யொப்ப தாகும். நீ ஏந்திய ஆழிப்படை, நீண்ட கரிய பனைமரத்தில் பல பதினாயிரம் குலைகள் அதன் தலையினீங்கித் தரைக்கண் விழுவன போல அவுணர் தலைகள் உடல்மிசை நில்லாமல் கொத்தாக வீழ்ந்து சிதறி நிலத்தின்கண் சேர்ந்து புரளும்படி அவுணர்களின் உயிரைச் செகுக்கும். அவ்வாழிப் படையின் உடல் கூற்றுவனை ஓக்கும்; அதன் நிறம் சுடுகின்ற பொன்னோடு எழுந்து விளங்குகின்ற தீயின் நுடக்கத்தை யொக்கும். நின் இருமேனியினொளி இருண்ட நீலமணியை யொக்கும். நின் கண், தாமரை மலரிரணடினைப் பிணைத்தாற் போற் றோன்றும். நின் வாய்மை, தட்பாது வருகின்ற நாளை யொக்கும். நினது பொறை, நிலத்தை யொக்கும். நின்னருள், மேகத்தையொக்கும் என அருமறைப் பொருள் நின்னியல் பினையுணர்த்தும். மேற்சொல்லிய பொருட் களையும் பிறவற்றையும் பண்புகளாலும், தொழில் களாலும், ஒத்தும் ஒப்பின்றி. எப்பொருளினகத்திலும் நீ எழுந்தருளியுள்ளாய். வேதத்துட். சொல்லப்பட்ட வேள்வியாசானது உரையும், ஒன்றற் கொன்று உயர்ந்த பலவகை வேள்விகளுள் வேள்வித் தூணாய் அமைந்து பசுவைப் பற்றிக் கொள்ளுதலும், மந்திரங்களாலுயர்ந்த தீயினை முறையாற் கடைந்து அத்திகழ் ஒளியையுடைய எரியின் பெருக்கத்தை யுண்டாக்கிக் கொள்ளுதலும் ஆகிய இவை முறையே நின் திருவுருவும், உணவும், நின் வெளிப்பாடும் ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

“திருமாலாகிய நீ, அமரர்க்குணவாகிய அமிழ்தத்தைக் கடைந்து கொடுப்பதாக நின்மனத்தின்௧ண் நினைந்த அளவிலேயே அதன் பயனாகிய மூவாத்தன்மையும் ஒழியாவன்மையும் சாவா மரபும்போல அமரர்க்குரியவாயின. அதனால் நின் பல்புகழ் பரந்தன. அத்தன்மைத்தாகிய: இயல்பினையுடையாய் நின் அடியை யாமும் துளக்கமில்லாத நெஞ்சினேமாய்ச் சுற்றத்தோடும் வணங்கிப் பல்காலும் ஏத்தி வாழ்த்தி எம்மறிவு வளைவின்றி மெய்யுணர்வினை உடையதாகுக என வேண்டிக் கொள்கிறோம்!” எனத் இருமாலைப் போற்றும் நிலையில் &ரந்தையார் பாடிய பாடல் இரண்டாய் பரிபாடலாகும்.

இதன்கண், வேள்வியில் ஆசான் கூறும் மந்திரச் சொல்லே கடவுட்குருவாம் எனவும், வேள்வித்தூணாக அமைந்து, அங்குப் பிரிக்கப்பெறும் பசுக்களை ஏற்றலே அவனுக்குரிய உண்டி எனவும், அந்தணர்க்கு வேள்வித் தீயினும், யோகியர்க்கு உள்ளத்திலும், ஞானியர்க்கு எவ்விடத்திலும் இறைவன் வெளிப்படுதலால் (வேள்வியில் வளர்க்கப் பெறும் ஒண்சுடர்த்தோற்றமே அந்தணர் காணும் வரவு எனவும் குறிக்கப் பெற்றுள்ளமை நோக்கத்தகுவதாகும்.

மாயோயே! $. வளி, விசும்பு, நீர், நிலம் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி ஆசானும் ஆக எண்பேருருவினனாக விளங்குகின்றாய். வேட்டின்ற வடிவாகிய அறமும், கோள்கள் எழுவருள் முற்கூறிய ஞாயிறு திங்கள் அல்லாத ஏனைய ஐவரும், துதிமைந்தராய அசுரரும், விதியின் மக்களாகிய ஆதித்தர் பன்னிருவரும், வசுக்கள் எண்மரும், பதினொரு உருத்துரரும், மருத்துவராகிய இருவரும், தருமனாகிய எமனும், அவனது ஏவல் செய்யும் மடங்கலாகிய கூற்றமும், ஒரோவொன்று எழுவகைப்பட்_ட மூவகையுலகுகளும், அங்கு வாழும் உயிர்த் தொகுதியும் ஆகிய இவையெல்லாம் நின்கண் தோன்றிப் பரவியுள்ளனவாக வேதம் சொல்லுதலால் யாமும் அவ்வாறே தொடுத்துக் கூறினோம். தாமரைமலரில் தோன்றிய நான்முகனும் அவனுக்குத் தந்தையும் நீயே. என்று அந்தணரருமறை கூறும். தேவர்களிடமிருந்து அமுதத் தனைக் கொணர்ந்து தன் தாயின் (இடுக்கணைத்தவிர்த்த கருடனை ஊர்தியாக உடையாய். அக்கருடனையே கொடி யாகவுமுடையாய். மாவலிபால் மூவடிமண் வேண்டி அளக்கின்ற காலத்து மேற் சொல்லிய மூவேழுலகினுள் கழுள்ளனவாகிய ஏழுலகத்தினையும் எஞ்சாமற்பரவிய அடியினையுடையாய். எல்லாம் கருகி நீறாதற்குக் காரணமாகிய இதயும், காற்றும், எமனும், ஞாயிறு பன்னிரண்டும் ஒருங்கு கூடும் ஊழி முடிவிலே எழுகடல்களும் ஒன்றாகிய ஆழிக்கண்ணே அமிழ்கின்ற நிலமகளை அழகிய வராகமாகிப் பெயர்த்தெடுத்தாய் எனவும், புட்கலம் முதலிய மேகங்கள் பொழிய விசும்பினின்றும் வீழும் நீரை அன்னச் சேவலாகி நின் சறகினாலே வறளும்படிச் செய்தாய் எனவும் முனிவரும், தேவரும் நின்னை விரும்பிப் புகழ்வர். அம்முறையே யாமும் புகழ்கின்றோம். குதிரையுருவினனாகிய கேசி எனும் அசுரனைக் கொன்றவனே! நின் கைகள் எண்ணிறந்தமையால் நின் புகழைப் போன்றன. மோகினி யாகிய நின் வடிவினைக்கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியே அவுணர்க்கு அச்சமாய் முடிய அமரர்க்கு நல்லமிர்துனைப் பகுத்திடுதலால் நடுவு நிலைமையில் தப்பிய நலமில்லாத ஒருகையினையுடையனாயினை. 
எல்லையறியப்படாத வடிவினையுடைய நின்னை உயர்வு கூறக்கருஇன் அது நீயே உணரின் அல்லது பிறரால் உணரப்படுவாயல்லை. அநாதியாய் வருகின்ற வேததக்கிற்கு முதல்வனே! விரிந்தகன்ற ஆகமங்கள் அனைத்தாலும், அகங்காரத்தாலும், மனத்தாலும், உணர்வினாலும் மற்றும் எல்லாவற்றாலும் நினக்கு வனப்பும் எல்லையும் அறியப்படாத மரபினையுடையவன் நீ. மதியின் கலைக்கதர்களை உணவாக உடைய அமரர்க்குத் தலைவனாகிய நீ மயங்கி நினக்குப் பிழை செய்து நீ நிலவுலகினையளக்க நின் பெருமைகண்டு அஞ்சிப் போய்க் கடலிற் பாய்ந்த அவுணர்க்கும் பிழை செய்யாது நின்ற ஏனை அவுணர்க்கும் முதல்வனாக வுள்ளாய். இவ்வாறு இருகிறத்தார்க்கும் ஒத்திருத்தலால் நின் இயல்பினை யறிவார்க்கு இவர்பகைவர், இவர் நட் டோர் என்ற வேற்றுமை நின்கண் இல்லை என்பது புலனாம். ஆயிரமாகிய கிளர்ந்த தலையினை உடைய பாம்பினை வாயிற் கெளவிய நின் ஊர்துயாகிய கருடச் சேவலும் நின்னைத் தாங்கலாற்றாது வருந்து, செங்கண் மாலே! ஓ! என அலறும் கால முதல்வன் நீ. தயினுள் வெம்மையும், பூவினுள் மணமும், கல்லினுள் மணியும், சொல்லினுள் வாய்மையும் அறத்தினுள் அன்பும் (மென்மை) மறத்தினுள் மைந்தும் (வன்மை) வேதத்துள் மறையும் (உபநிடதங்களும்) ஐம்பெரும் பூதத்துள் ஆகாயமும், ஞாயிற்றுள் ஒளியும், திங்களுள் தண்மையும் ஆகத் திகழ்கின்றாய். இங்குச் சொல்லப்படாத எல்லாப் பொருளும் நீ, அவற்றிள் உட் பொருளும் நீ. அதலால் நீ ஓரிடத்து உறைதலுமில்லை. நினக்கு ஆதாரமாகக் கொண்டு நின்னைத் தாங்கும் இடத்தினையுடையையல்லை. மேற் சொல்லிய இறைமையுடையையாதலின் மறதியுடையார் மறதியில் சிறப்புப் பெறுதல் காரணமாக அவை நினக்கு உளவாம் தன்மையும் பொய். உலகில் முதலினும் இடையினும், இறுதியினும் படைத்தல், காத்தல், அழித்தல் எனும் தொழில் வேற்றுமை பற்றி நீ பிறவாத பிறப்பு எதுவுமில்லை. அவ்வாறு பிறந்து வைத்தும் நின்னைப் பிறப்பித்ேதோரையுடையையில்லை, காயாம்பூவின் நிறமுடையோய்! அருளே குடையாக, அறமே கோலாக மூவேழுலகங்களையும் இருநிழல்படாது நின் அருள் நிழலாகிய முழுநிழற்கண்ணதாகப் பொதுக் கடிந்து தனியே காக்கும் காத்தற் றொழிலையுடையாய். புருட தத்துவம் ஒன்றும், கன்மேந்திரியங்கள் ஐந்தும், ஆகாயத்தின் பண்பாகிய ஓசையும், காற்றின் பண்பாகிய ஊறும், தீயின் பண்பாகிய உருவும், நீரின் பண்பாகிய சுவையும், நிலத்தின் பண்பாகிய நாற்றமும், செவி, தோல், கண், நாக்கு, மூக்கு எனும் ஐம்பொறிகளும், மனமும் அகங்காரமும், மானும், மூலப்பகுதியும் என இருபத்தைந்து தத்துவங்களாலும் ஆராயப்படும் பெருமையை யுடையாய், வாசுதேவன், சங்கருடணன், காமன், பிரத்யும்நன், அநிருத்தன் என நால்வகை வியூகங்களிலும் மேற் கூறியவாறு கூறப்படும் சிறப்பினை யுடையாய். ஆய்ச்சியரொடு கூடிக் குரவைக் கூத்தாடும்போது அவர்க்கு இடமும், வலமும் ஆகத் திகழ்வோய். கூத்தாடுதற்கெடுத்த குடத்திளையும், பகைவரைக் கொல்லுதற்கெடுத்த அலப்படையினையுமுடையாய். அழகிய நீல மணியும், கருங்கடலும், கார் மேகமும் ஆகிய இவற்றையொக்கும் கரிய திருமேனியொடு நிறத்தால் மாறுபடும் பொன்னாடையினைப் புனைந்தாய். பகைவர் உயிரொடு முரண்பட்ட சக்கரப் படையினை யுடையாய். வெகுளியாலன்றி இயல்பாகவே வந்த கண்ணினையுடையாய். யாவராலும் அறியப்படாத இயல்பினை உடையாய். எனினும், நின் அன்பரது இடைவிடாத நினைவின்கண் நீக்கமின்றி உள்ளாய். நிறைந்த வெள்ளத்து நடுவு மாநிலம் தோற்றாத முதற்காலத்துப் பிரமனைக் கொண்டு உந்தக்கண் மலர்ந்த பொகுட்டுத் தாமரையினை உடைய நின் ஆழிப் படையே உலகிற்கு நிழல் தருவது என மூன்றாம் பரிபாடலால் கடுவனிள வெயினனார் திருமாலைப் பரவிப் போற்றுகிறார்.

“நின்பால் அன்பு செலுத்திய பிருகலாதன் வருந்தாமல் அவன் நெஞ்சிற் பொருந்தி, இரணியனது மார்பின் பகைவலிகெடத் தூணினின்றும் நீ புறப்பட்டு அவனுடைய மார்பினைப் பிளந்த நகத்தினையுடையாய். பூமியானது வெள்ளத்திலழுந்தியபோது வராகமாகி அதனைக் கழுத்தால் தாங்கி வெள்ளத்தினின்் றும் எடுத்த நினது செயல் மேருவின் தொழிலையொக்கும். நினது வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றின் கண்ணே காணப்படாநின்றன. தண்மையும் மென்மையும் திங்களிடத்தே உள்ளன. கொடுக்கக் கொடுக்கப் பொருள் வளர்தலும் கொடையும் மழையின் கண்ணேயுள்ளன. மன்னுயிர்களைத் தாங்குதலும் அவை செய்த பிழைகளைப் பொறுத்தலுமாகிய நின் தன்மைகள் நிலத்திடத்தே அமைந்தன. நின் மணமும், ஒளியும், காயாம் பூவிடத்தே யமைந்தன. நீ வெளிப்படுதலும் நினது பெருமையும் நீரின்கண்ணே காணப் படுகின்றன. ஞானக்கண்ணாற் காணப்படும் நினதுருவமும், ஒலியும் ஆகாயத்துள்ளன. நீ அவதரித்தலும் மீண்டு சென்றடங்குதலும் காற்றினிடத்தே யுள்ளன. இவ்வாறு நின்னிடத்திலிருந்து பிரிந்து நின்னால் பாதுகாக்கப் பட். டனவெல்லாம் பின்னும் நின்னொடு பொருந்துதல் அமைந்தன. செவி முதலிய பொறிகள் ஐந்தினையும் அவற்றின் செயல்களையும் மயக்கமற நீக்கி மைத்திரி, கருணை, முதிதை, மகழ்ச்சி எனும் நான்கினாலும் மனமாசு கழுவி, நொட௫ிப்பு என்னும் சமாதி நிலையிலே தம்மை நிறுத்திய நின் அன்பர்கள் நின் புகழ்த்திறங்களை யெல்லாம் விரித்துப் போற்றினர். அப்புகழ்களெல்லாம் நினக்கு இயல்பாவன அல்லது வியக்கப்படுவன அல்ல. அவற்றுட் சிலவற்றை இங்குமங்குமாக நாங்கள் மாறுபடக் கூறும் எமது அறியாமை கண்டு நீ நகைத்தலுமியல்பே. கருடச் சேவற் கொடியினையுடைய நின் உயர்கொடிகளுள் ஒன்று பனை, மற்றொன்று கலப்பை, பிறிதொன்று யானை. இவ்வாறு நினக்குப் பல கொடிகள் உளவேனும் நினது ஒருதலையாக உயர்ந்த கொடியாகிய கருடக் கொடியினை அக்கொடிகள் ஒத்தலில்லை. நஞ்சுடைய பாம்பின் விடத்தையும், உடலையும், உயிரையும் உண்ணும் கருடனாகிய அவனது வயிற்றின் மேல் உதரபந்தனமாகச் சுற்றிக் கொண்டிருப்பது பாம்பு. அப்பாம்பே அவனுக்குக் கைவளை. முடிமேல் அணியும் கண்ணிகளும் பாம்பே. கமழுத்திற் பூணும் பூணாகவும், தலைமேலணியும் சூட் டாகவும் அமைந்தன பாம்புகளே. பாம்புகளே அவன் சிறகுகளிடத்தனவுமாகும். கொடி மேலுள்ள அக்கருடன் எறிந்தெடுக்கும் இரையாக அமைந்தனவும் பாம்புகளே.

நினக்குப் பகைவரும் நண்பரும் இலராதலால் குற்றமும் மறமும் உடையாரிடத்து வெகுளியும் கோட்டமும் அவையில்லாரிடத்து இல்லையாதலும் உடையையாய், குணமாகிய அறமுடையாரிடத்து அருளும், செம்மையும் உடையையாய் அவை இல்லாரிடத்து இல்லையாதலுமல்லது நினக்குப் பகையாயினார் உயிரின்கண் அதனை மாற்றுதற்றொழிலும் நினக்கு நண்பராயினார் உயிரின்கண் அகற்கு ஏமஞ் செய்யுந் தொழிலும் உடையையல்லை. உயிர்களஇயல்பால் நினக்குப் பகையும் நட்பும் உளயபோலத் தோன்றுவதல்லது நின்னியல்பால் அவை நினக்குள்ளவை யல்ல. அன்பர் மனத்திற் கொண்ட வடிவன்றி நினக்கென வேறுவடிவு உடையையல்ல.

நீலமணி போலும் இருமேனிக்கண் நறுமணம் வீசும்
துழாய் மாலையை யணிந்தாய். திருமகளாகிய மறுவை யுடைய
மார்பனே! நின்னுந்தியிற் றோன்றிய தாமரை மலர் போலும்
கண்களையுடையாய். அளத்தற்கரியனாகிய நீ அன்பர்க்கு
வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்த நின் திருவடியினை
யுடையாய், நிறைந்த கடவுட் டன்மையினையுடையாய்.
அழல்போலும் தளிரினையும் நிழல்தரும்
இளைகளையும் உடைய, ஆலமரமும், கடப்பமர மும்,
யாற்றிடைக் குறையும், காற்று -வழங்காக்குன்றமும் பிறவு
மாகிய அவ்விடங்களைப் பொருந்திய பல தெய்வங்களாகப்
பகுத்துரைக்கப்படும் பெயர்களை யுடையோய், நின் அன்பர்
தொழுத கையினது தாழ்ச்சிக்கண் அகப்பட்_டோயும் நீயே.
அன்பர் நினைத்தன முடித்தலால் அவரவர் ஏவல்
செய்வோனும் நீயே. அவரவர் செய்த அறம்பொருட்குக்
காவலாக விளங்குவோனும் நீயே!”- எனக் கடுவனிள
வெயினனார் இருமாலைப் பரவிப் போற்றுவதாக அமைந்தது,
நான்காம் பரிபாடல் ஆகும்.

நீல மலையின்கண் பரந்த இளஞாயிற்றின் கதர் போலும் அழகமைந்த பொன்னாடையினையும், நீல மலையின் மேல் தோன்றும் இளஞாயிற்றினை ஒத்த முடியினையும் அம்மலையினின்றிழியும் அருவியின் நிறத்தோடு மாறுகொள்ளும் பக்கமாலைகளையும் கருடப் புள்ளினை எழுதிய கொடியினையும் விண்ணின்கண் தோன்றும் நிறைமதியின து குளிர்ச்சியினையும் உடையனாய், அளித்தற்றொழிலை மேற்கொண்ட தெய்வம் திருமால் எனவும், கார்ப்பருவ மேகத்தின் இரண்டு பக்கங்களிலும் ஞாயிறும், தங்களுமாகிய. இரு சுடர்கள் விளங்கித் தோன்றுமாறு போன்று விளங்கும் ஆழியையும் சங்கினையும் ஏந்திய கைகளையுடையவன் அம்முதல்வன் எனவும், சுவை முதலிய ஐம்புலன்களாகவும் அவற்றை நுகரும் பொறிகளாகவும் அவற்றாலுணரப்படும் தன்மையினை யுடைய பூதங்களாகவும் விளங்குவோன் அவ்விறைவன் எனவும் மூலப்பகுதியும் அறனும், அநாதியான் காலமும், ஆகாயமும், காற்றொடு பொருந்திய $யும் கூடிய இம்மூவேழுலகத்து உயிர்களெல்லாம் அம்முதல்வனிடத்தே உளவாயின எனவும், உயிர்களின் பொருட்டுப் பாற்கடல் நடுவே ஆயிரம் தலைகளையுடைய பாம்பணையின்கண் அறிதுயிலமர்ந்தருளிய துளவஞ்சூடிய திருமால் தானும் மிக்க ஒலியினையுடைய மறமிக்க பகைவரைக் கொல்லும் படையுடனே பகைவருயிரையகற்றும் விறல்மிகு வலியும், ஒளியும் பொருந்தி அவர் மார்பினை உழும் நாஞ்சிற்படை யுடையோனாகிய பலதேவனும் பூமியினது நடுக்கமற அதனை எடுத்து நிறுத்தற்குரிய கொம்பினையுடைய ஆதுவராகம் எனும் பன்றியும் என மூன்று திருவுருவங்களாகப் பிரிந்த ஒரு தெய்வம்” எனவும் பஇன்மூன்றாம் பரிபாடலில் நல்லைழினியார் திருமாலின் இயல்புகளை வகுத்துரைக்கின்றார்.

அறிவெல்லையால் அறியப்படாத புகழுடனே பொலிந்து நிலவெல்லையைத் தாங்கிய தம் நிலை கெடாத சக்கரவாள மலை முதலாகப் பண்டைப் புலவர் ஆராய்ந்துரைத்த நெடிய குன்றங்கீள் பலவற்றுள்ளும் நிலத்தில் வாழும் மக்களின் பசி வெம்மையை நீக்கி நிறைபயன்கள் எல்லாவற்றையும் எப்பொழுதும் மக்கள் பெற்று மகிழப் பயன்தரும் குன்றங்கள் ”லவே. அச்சிலவற்றுள்ளும் தெய்வங்கள் தாமாக விரும்பும் மலர்த்தடங்களும் மழை தவழும் சிகரங்களும் உடை யனவாகிய குலமலைகள் சில சிறந்தன. அச்சிலவற்றிலும் கல்லென ஒலிக்கும் கடலும், கடற்கரைப் பரப்பும் போல வேறு வேறாகிய நிறத்தினையும் பிரிவில்லாத சொல்லும் பொருளும் போல வேறுபடாத
தொழிலினையும் உடைய மாயோனையும் அவன் தமையனாகிய பலதேவளையும் தாங்கும் உயர்ந்த இருமாலிருங்குன்றம் சிறப்புடை.யதாகும். மணம் வீசும் கொத்துக்களையுடைய துழாய் மாலையை அணிந்த திருமால் தன்னருளால் வெளிப்பட்டுக் கொடுத்தாலல்லது அரிதிற் பெறு துறக்கத்தை எளிதிற் பெறுதற்குரிய நிலையில் விளங்கும் மாலிருங்குன்றத்தை எல்லோரும் கேட்க ஏத்தக் கடவோம்! என இளம்பெரு வழுகியார் தாம் பாடிய பதினைந்தாம்
பரிபாடலில் திருமாலிருஞ்சோலை மலையின் சிறப்பினை
முதற்கண் குறித்துப் போற்றியுள்ளார். அசையும் அருவி
மிகவும் ஆரவாரித்து விழுதலால் சிலம்பாறு அழகு செய்யும்
திரு என்னும் சொல்லோடும் சோலை எனும் சொல்லோடும்
மாலிருங்குன்றமெனும் சொல் தொடர்ந்த மொழியாகிய
திருமாலிருஞ்சோலை மலை என்னும் இத்திருப்பெயரின து
பெருந்தன்மை பூமியின்க௧கண் நன்றாகப் பரவுக.
நிலைபெற்ற குளிர்ச்சியையுடைய இளவெயில் சூழ
அதனடுவே இருள் வளர்தலை யொக்கப் பொன்னாடையை
யுடைய திருமால் தம்முன்னோனாகிய பலதேவனோடு கூடி.
அமர்ந்து நிற்கும் நிலையை மாந்தர்களே நினைந்து
போற்றுமின்! அவுணரை நேரே பொருது கொன்றானது
நிறத்தையுடைய குன்றத்தினை நும் மனைவியரோடும்
இருமுதுகுரவரோடும், குழவிகளோடும் சுற்றத்தோடும்கூடத்
தெய்வமாக மதித்துத் இசைநோக்கித் தொழுது சென்மின்.
தன் உந்தித் தாமரையினை யொக்கும் கண்களையுடையனாய்
நீரைக் கொண்ட மழை மேகமும் இருளும் நீலமணியும்
போலும் மேனியனாய் எல்லா வுலகிலும் வெளிப்பட்டுள்ள
அவ்விடத்து உயிர்த்தொகுதஇிகளின் பிறவித் துன்பத்தினைக்
களைவோன் ஆகிய திருமால் அன்புடையனாய் இருங்
குன்றத்தின்கண் எழுந்தருளியுள்ளான். ஆதலால் அம்
முதல்வனைக் கூர்மையணிந்த வளைந்த நாஞ்சிற் படையினை
யுடையவனே! கோபம் மிக்க தண்டினை ஏந்தியவனே!
வலம்புரிச் சங்குடன் சக்கரப் படையினை உடையவனே!
18.4 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு சகட டக தவத ட டதத கிய தனத ககக கன அதனை வடடல வ் ப அத கட கை அ த்ய கைல்

வில்லுடன் அம்பினை ஏந்தியவனே! சுழலும் படையாகிய பாராவளையினை (வட் டப்படை) யுடையவனே! வாட்படையினையுடையோனே! . என இவ்வாறு அழகிய ரையும், அஞ்சப்படுதலையும் உடைய வேதம் தனக்கு நன்மையை விரும்பி அவ்விரு பெருந்தெய்வப் பெருமை ஈதென்று சொல்லுதலால் யாமும் மனம் விரும்பி அச்சொற்களுள் அறிந்தவற்றைக் கூட்டி உரைத்தேமாய்ப் பெரும் புகழையுடைய அவ்விருவரையும் தொழுது எமக்கு இவ்விருங்குன்றத்தின் அடியின்க௧ண் உறைதல் எய்துக என்று வேண்டுகின்றோம்” என இளம்பெருவழுதியார் பெரும்பெயரிருவரையும் பரவிப் போற்றுகின்றார்.

மேகங்கள் மழை பொழிய அந்நீர் மலைகளினின்றும் இழிந்து மதுரையிலுள்ளார் எதிர்கொள்ளும்படி வருகின்ற துறையினிடத்தே யமைந்தது இருந்தையூர் ஆகும். இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் இருமால் இருந்தவளமுடையார் எனப் போற்றப்படுகின்றார்.
ஆயிரந்தலைகளையுடைய ஆதிசேடனைப் “பூமுடிநாகர்” எனப் பரிபாடல் போற்றுகின்றது. மதுரையின் அருகே இருந்தையூரிற் கோயில் கொண்டருளிய திருமாலின் கோயிலையடுத்து ஆதிசேடனுக்குக் கோயில் அமைந்திருந்தது. பூமூடிநாகராகிய ஆதிசேடன் கோயில் பெருங்குளத்துக்குப் புனல்புகும் வாயிலையடுத்து அமைந்திருந்தமை யால் அது *குளவாயமர்ந்தான் நகர்” எனப் பரிபாடலிற் குறிக்கப் பெறுவதாயிற்று. நிறம் வாய்ந்த புள்ளிகளையுடைய பெரிய படமாகிய எருத்தின்கண்ணே மலையினைத் தாங்கிய செல்வனாகிய ஆதிசேடனுக்கென அமைக்கப்பெற்ற அத் திருக்கோயிலே இளையோர் முதல் முதியோர் வரையுள்ள இருபாலாரும் படைத்தற்குரிய அவியாகிய உணவு, குடை, நறும்புகைப்பொருள், நறுமலர்கள் ஆகியவற்றை ஏந்தியவர் களாய் நெருங்கி இன்னியம் முழங்க இயலிசைப் பாடல் களைப் பாடியும் ஆடல்களை நிகழ்த்தியும் இடைவிடாது வழிபட்டு ம௫ழ்ந்துறைகின்றனர். அதனால் அத்திருக்கோயில் நல்வினைப் பயன்களை நுகர்ந்து மகிழ்தற்கிடனாகிய துறக்கவுலகம் போன்று விளங்கியது.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

அமுதத்தினை விரும்பித் தேவரும், அவுணரும்
கடலைக் கடைந்த காலத்தில் ஆழிப்படை.யினையுடைய
திருமால் மந்தரமலையாகிய மத்தொடு பிணித்து
இருமருங்கும் பற்றியிழுத்தற்குரிய கடை கயிறாக
அமைந்தவரும் ஆதிசேடனாகிய இவரே. இங்ஙனம் திருமால்
ஒரு தோழங்காலம் கயிறாகக் கொண்டு இருமருங்கும்
இழுத்துக் கடைந்த நிலையிலும் அறாத் வன்மை
யுடையவரும் இவரே. மலைகள் நிறைந்த நிலவுலகினைத் தம்
தலையின் அணிகலன் போற் சுமந்தாரும் இவரே. ஏற்றூர்தி
யானாகிய சிவபெருமான் அவுணர்க்குரிய மூவெயில்களை
யழித்த காலத்தில் மேருமலையாகிய வில்லுக்குரிய நாணாக
இருந்து தொன்றுதொட்டு நிலைபெற்று வரும் புகழைத்
தந்தவரும் ஆதிசேடனாகிய இவரே. பகைவரை
வருத்துதலையுடைய ஆயிரந்தலைகளை விரித்துள்ள
தேவகணங்களைச் சுற்றமாகக் கொண்ட அண்ணலாகிய
ஆதிசேடனை வணங்கி விளக்கமுடையோமாய் நின்னைப்
பிரியாதுிருத்தல் வேண்டும் என இருந்தையூரமர்ந்த
செல்வனாகிய நின் திருவடியை வணங்கிப் பரவுகின்றோம்
எனப் போற்றும் முறையில் அமைந்தது, தொல்காப்பியம் செய்யுளியல் 121ஆம் சூத்திரவுரையிற் பேராஇிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டிய பரிபாடலாகும்.

இதனால் மதுரையையடுத்துள்ள இருந்தையூரில் அமைந்த இருமால் கோயிலில் பூமுடிநாகராகிய ஆதுசேடனுக்கும் கோயில் அமைந்திருந்ததென்பதும் அங்குத் இருமாலை வழிபட வந்த மக்கள் அம்முதல்வனுக்கு அணையாய் அமைந்த பூமுடிநாகராகிய ஆதிசேடனையும் புகை, பூ, அவி என்பன கொண்டு வழிபட்டார்கள் என்பதும் பூமுடிநாகர் திருமால் கடல் கடைந்தபொழுது மந்தரமலை யாகிய மத்தோடு பிணைத்த கடைகுயிறாகவும், சிவன் திரிபுரமெரித்தபொழுது மேருமலையாகிய வில்லிற் பூட்டிய நாணாகவும் இருந்து துணைபுரிந்தமையால் பாம்பு வழிபாடு தவன், இருமால் என்னும் இருபெருந்தெய்வ வழிபாடு களுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் கொள்ளப்பெற்ற தென்பதும் நன்கு துணியப்படும்.

இருமாலின் உந்தித் தாமரையிலிருந்து தோன்றி உலகினைப் படைக்கும் படைப்புக் கடவுளாகிய நான்முகனும், உயிர்களின் உள்ளத்தே ஆணும் பெண்ணு மாய்க் கூடி, வாழும் காமவுணர்வினைத் தூண்டும் தெய்வமாய
காமனும் ஆகிய இருவரும் திருமாலின் புதல்வர் களாகப் போற்றப் பெறுகின்றனர். இச்செய்கு,
“இருவர் தாதை இலங்குபூண் மாஅல்” (பரி. 1:28)
எனவரும் பரிபாடல் தொடரால் இனிது புலனாகும்.

தொல்காப்பியனார் காலத்து மாயோன் என ஒன்றாகக் குறிக்கப்பெற்ற தெய்வம், கடைச்சங்க காலத்தில் கண்ணன், பலதேவன் என்னும் இரு திருவுருவங்களில் வைத்து ஒரு பெரும் தெய்வமாக வழிபடப்பெற்ற செய்து முன்னர்க் குறிக்கப்பெற்ற து.

வேத முதல்வன், கதற விளங்கிய தஇகிரியோன், நாவலந்தணரருமறைப் பொருள், மனத்தாலும், நூல்களாலும் அறியப்பெறாதவன், ஐம்பெரும் பூதங்களும், ஞாயிறு தங்கள் முதலிய கோள்களும் தேவர் அசுரர் முதலியோரும் மூவேழுலகவுயிர்களும் மாயோனாகிய முதல்வனிடத்தே தோன்றி, அவனிடத்தே யொடுங்குகின்றன எனவும் எல்லாப் பொருள்களினுள்ளும் அவன் உயிர்க்குயிராயுள்ளான் எனவும், படைத்தற் கடவுளாகிய நான்முகனைத் தன்னுந்திக் . கமலத்துத் தோற்றுவித்தவன் எனவும் காமனும், சாமனும் அவன் புதல்வர்கள் எனவும் பரிபாடல் திருமாலைப் போற்றிப் பரவுகின்றது.

ஆயிரந்தலையுடைய ஆதிசேடனை வாயிற் கெளவிக் கொண்டும், பாம்புகளை அணிகலனாக அணிந்து கொண்டும் உள்ள கருடனைத் தனக்கு ஊர்தியாகவும், கொடியாகவும் கொண்ட தெய்வம் திருமால். அவனது இயல்பினையறிதல் மயக்கம் நீங்கிய ஞானியர்க்கும் அரிது. அவ்வாறாகவும் அவன் இன்ன தன்மையன் என்று கூறுதல் ஏனையோர்க்கு எங்ஙனம் எளிதாகும்? இங்ஙனம் இறைவன் அறிதற்கரியனாயினும் அவனையறிதல் வேண்டுமென்ற ஆர்வம் மக்களுள்ளத்தே தோன்றலியல்பு. அந்தணர்களாற் காக்கப்படும் அறமாகவும், அடியார்களிடத்தே தோன்றும் அன்பாகவும், நெறியின் வழீஇயினாரைத் இிருத்தியாட் கொள்ளும் மறக்கருணை யாகவும் பகைவர்களிடத்தே செலுத்தும் வருத்துந் தொழிலாகவும் திகழுவோன் திருமாலே. "வானத்தில் விளங்கும் இங்களாகவும், கதிரவனாகவும் இகழ்வோன் அவன். ஐந்து இருமுகங்களையுடைய இறைவனாகவும் அவனாற் செய்யப்பெறும் உலகவுயிர்களின் ஒடுக்கமாகவும் நற்பொருட்களைத் தன்னகத்தே கொண்ட குற்றமற்ற அறிவினைத் தரும் வேதமாகவும் நான்முகனாகவும் அவளாலாகிய உலகவயிர்களின் தோற்றமாகவும் திகழ்வோன் இருமாலே. வானத்து வலமாக எழும் மேகமும், வானமும், நிலமும், இமயமலையும் என இங்ஙனம் எல்லாப் பொருள்களாகவும் தோற்ற மளிப்பவன் அவனே. அம்முதல்வன் தனக்குவமை யில்லாதவன்; அழிவற்ற புகழோன்; பொன்னாடை யணிந்தோன்; கருடக்கொடியுடையோன். சங்கு, பகைவரை யழிக்கும் சக்கரப் படையினை ஆகியவற்றை ஏந்தியவன். நீலமணி போலும் திருமேனியுடையோன். புகழினையும், அழகிய மார்பினையும் உடையவன் எனப் பரிபாடல் திருமாலைப் போற்றுகின்றது.

முழுமையாகக் கிடைத்துள்ள பரிபாடல்களில் 1, 2, 3, 4, 13, 15 ஆகிய ஆறு பாடல்கள் திருமாலைப் போற்றுவனவாக அமைந்துள்ளன. அவற்றுள் முதற்பாடலை இயற்றிய ஆசிரியர் பெயரும், இசை யமைத்தோர் பெயரும் காணப்படவில்லை. 8&ரந்தையாரால் பாடப்பெற்ற நன்னாகனாரால் இசை யமைக்கப்பெற்றது இரண்டாம் பரிபாடல். அது பாலையாழ் என்னும் பண்ணமைந்ததாகும். கடுவன் இளவெயினனாராற் பாடப்பெற்றுப் பெட்ட நாகனாரால் இசையமைக்கப் பெற்றவை மூன்றாம் பரிபாடலும், நான்காம் பரிபாடலு மாகும். இவ்விரண்டும் பாலையாழ்ப் பண்ணில் அமைந்தனவே. நல்லெழிநியாராற் பாடப்பெற்றது 13ஆம் பரிபாடல். அதற்கு இசையமைத்தோர். இன்னார் என்பது தெரியவில்லை. இதற்குப் பண் நோதிறம் எனச் சுவடிகளில் காணப்பெறுகிறது. இளம்பெருவழுதி யாராற் பாடப்பெற்று மருத்துவன் நல்லச்சுதனாரால் இசையமைக்கப்பெற்றது 15ஆம் பரிபாடலாகும். இதற்குரிய பண்ணும் சுவடிகளில் பண் நோதுறம் எனக் குறிக்கப் பெற்றுள்ளது.

““செய்யோள் சேர்ந்த நின்மாசில் அகலம்” (பரி. 2:31)
“திருவரையகலம் தொழுவோர்க்கு
உரிதமர் துறக்கமும் உரிமைநன் குடைத்து'” பரி. 13:12,13)
எனவரும் பரிபாடற் றொடர்கள், இருமாலின் தேவியாகிய திருமகளது அருள் பெற்றே இருமாலை அடைதல் வேண்டும் என்னும் வைணவ நெநெறிமுறையினைப் புலப்படுத்தும் குறிப்புடையவாதல் நுணுகி நோக்கத்தக்கது

திருமால் பாம்பணையில் பள்ளி கொண்டருளுதல் பற்றிச் சார்த்து வகையால் ஆதிசேடன் வழிபாடும் திருமால் வழிபாட் டோடும் பரிபாடலில் இணைத்துரைக்கப் பெற்றுள்ளது. மதுரையை அடுத்துள்ள குளவாய் அமைந்தான் நகரில் பூமுடிநாகராகிய ஆதிசேடனுக்காகத் தனிக்கோயில் அமைந்துள்ளமை முன்னர்க் கூறப்பட்டது. பாம்பு வழிபாடு பாரத நாட்டின் பலபகுதிகளிலும் . நெடுங்காலமாக நிலைபெற்று வருவதாகும். சிவபெருமான் பாம்புகளை . அணிகலனாக அணிந்து கொண்டமையும், திருமால் பாம்பணையில் பள்ளிகொண்டருளினமையும் நாகவழிபாட்் டின் தொன்மையினையும் அவ்வழிபாடு சிவன் வழிபாட்டோடும், இருமால் வழிபாட்டோடும் சார்புடைய தாய் இணைந்து தொடர்ந்து வருதலையும் புலப்படுத்தல் காணலாம்.

பால்போலும் மதியை (இராகு என்னும்) பாம்பு ப மறைத்ததாக, நீனிறவண்ணனாகிய திருமால் ௮ம்மறைப்பினை நீக்கி மதியை விடுவித்த செய்து, “பான்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீனிற வண்ணனும் போன்ம்” எனவரும் முல்லைக்கலித் தொடரிற் குறிக்கப் பெற்றது. யாவராலும் பெறுதற்கரிய பெரும் பொருளாகிய முறையையுடைய திருமால், அன்பர் பாடும் இசைப் பாட்டுடன் யாழிசையினையும் கேட்டுப் பள்ளி கொள்ளும் தோற்றம் “அரும்பொருள் மரபின் மால் யாழ்கேளாக் கிடந்தான் போல் பெருங்கடல் துயில் கொள்ளும் வண்டிமிர்நறுங்கானல்” என ஒலியவிந்தடங்கிய கடலுக்கு உவமையாகக் கூறப்பட்டது.

கண்ணனாகிய திருமால், தன்னை அகப்படுத்தற் பொருட்டுப் பகைவரால் அனுப்பப் பெற்ற மல்லர்களின் வீரத்தைக் கெடுத்து, அழித்துத் தன் நண்பர் குழாத்தில் கலந்து மகிழ்ந்த செய்தி,
“நீள் மருப்பு எழில் யானை
மல்லரை'மறஞ்சாயத்த மால்போல் தன்கிளை நாப்பண்
கல்லுயர் நனஞ்சாரல் கலந்தியலும் . . . .” (கலி. 52) என்ற தொடரிலும்,
“மல்லரை மறஞ்சாய்த்த மலர்த்தண்டார்'” (கலி. 134)
என்ற தொடரிலும் குறிக்கப்பட்டுள்ள து.

பண்டைக் காலத்தில் இளங்குழந்தைகட்குப் : பாதுகாப்பாகத் திருமாலுடைய வாட் படையினையும்,
சிவபெருமானுடைய மழுப்படையினையும் பொன்னாற் செய்து காப்பாகக் கட்டுதல் மரபு. இச்செய்கு,
“பொலஞ்செய் மழுவொடு வாளணி கொண்ட
நலங்கிளர் ஒண்பூண்” (கலி. 86)
எனவருந் தொடராற் புலனாகும். “பொன்னாற் செய்த மழுவோடே வாளும் அணிதலைக் கொண்ட நன்றே விளங்குகின்ற ஒள்ளிய பூண்” என்பது இத்தொடரின் பொருள். இவ்வாறு பண்டை நாளில் குழந்தைகளுக்கு நோய் முதலியன வாராது காக்கும் அணிகளாக அறிவிக்கப் பட்டவை, வெட்டாத வாளும் எறியாத மழுவும் இரு புறத்தினும் நெருங்கக் கட்டிப் பவளத்தாற் செய்த இடபத்தினையுடையதாய் விளங்குகின்ற பூண்களாகும். இச்செய்தி,
எறியா வாளும் எற்றா மழுவும்
செறியக் கட்டி யீரிடைத் தாழ்ந்த
பெய்புல மூதா ஆய்ப் புகர்நிறத் துகிரின்
மையற விளங்கிய ஆனேற் றவிர்பூண்”'
எனவரும் கலித்தொகைத் தொடரால் அறியப்படும். “பூணப்பட்டவை வெட்டாத வாளும், வெட்டாத மழுவும் நெருங்கக் கட்டி இரண்டு புறத்திலும், தங்கின மழை பெய்த புலத்து ஈயல் மூதாயின து (பட்.டுப்பூச்சி, இந்திரகோபப் பூச்சி) புகரையுடைத்தாய நிறத்தையுடைய அழுக்கறவிளங்கிய இட பத்தையுடைய விளங்குகின்ற பூண்” என்பது மேற்குறித்த தொடரின் பொருள்.

திருமாலும் சிவபெருமானுமாகிய இருபெருந் தெய்வங்கட்.குரிய வாளும், மழுவுமாகிய இருபடைகளையும் அவற்றுடன் சிவபெருமானது ஊர்தியாகிய இடபத்தினையும் பொன்னாலும், பவளத்தாலும் செய்து அமைத்த பூணினை வளருங் குழந்தைகட்கு அணிகலனாக அணியும் பழக்கம் சங்ககாலத்தில் நிலவியிருந்தமை மேற்குறித்த கலித்தொகைத் தொடராற் புலனாகும். இவ்வழக்கத்தினை அடியொற்றி யமைந்ததே காத்தற் கடவுளாகிய திருமாலுக்குரிய ஐம்படைகளைக் குழந்தைகட்கு ஐம்படைத்தாலியாக அணியும் வழக்கமெனக் கருத வேண்டியுள்ளது.

முல்லை நிலமக்களாகிய கோவலர்களால் ஏறு தழுவுதற்பொருட்டுச் செலுத்தப்பட்ட காளைகளின் நிறங்களைக் குறித்து,
“வானுற வோங்கிய வயங்கொளிர்பனைக் கொடிப்
பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளையும்
பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ் நேமித்
திருமறு மார்பன்போற் நிறல்சான்ற காரியும் . . .. (கலி. 104) எனவும்,
“வள்ளருள் நேமியான் வாய்வைத்த வளை போலத்
தெள்ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியும்
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . 797
ஒருகுழை யவன்மார்பில் ஒண்டார்போல் ஒளிமிகும்
பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும்” (கலி. 105) எனவும் வரும் முல்லைக் கலித்தொடர்களில் திருமால், பலதேவன் ஆகிய இருவரது தோற்றமும் உவமையாக எடுத்தாளப்பட்_டுள்ளமை காணலாம்.

ஆயர்களால் ஏறுதழுவுவதற்கென விடப்பட்ட எருதுகளுள் கரிய எருகிற்குத் திருமாலையும் அதன் தெளிந்த நெற்றியில் விளங்கும் சுட் டிக்குத் திருமால் கையிலுள்ள சங்கினையும் செந்நிறப்புகர் நீண்டு பொருந்திய வெள்ளை எருதிற்குச் சிவந்த மாலையினை மார்பிலணிந்த நம்பி மூத்தபிரான் ஆகிய பலதேவனையும் உவமையாக நல்லுருத்திரனார் குறிப்பிடுவர்.

முல்லைநிலத்துக் கோவலர் தம்மால் மேய்க்கப் பெறும் ஆநிரைகள் பாற்பயன் தருதல் வேண்டித் திருமாலைப் பரதவிப் போற்றுதலும், தம்மகளிரைத் தகுதியுடைய தலைவருக்கு மணம் செய்து கொடுத்தல்
வேண்டி வலிய காளைகளை வளர்த்துக் கொல்லேறு களாகிய அவற்றை அடக்கிப் பிடிக்கும் தறுகண்மை மிக்க ஆடவனுக்குத் தம் மகளை மணம் செய்து கொடுத்தலும் ஆகிய ஒழுகலாறு உடையராய் மாயோனைத் தெய்வமாக வழிபட்டு வாழ்ந்தனர். முல்லை நிலத்து மகளிராகிய ஆய்ச்சியர் குரவைக் கூத்தாடி மாயோனை வழிபடு கடவுளாகக் கொண்டு போற்றினர். இச்செய்து,
“குரவை தழீஇ யாம் மரபுளிபாடித்
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொன்னிலம்
ஆளுங் கிழமையொடு புணர்ந்த
எங்கோ வாழியரிம் மலர்தலையுலகே”” (கலி. 103) எனவும்,
“ஆங்குத்
தொல்கதிர் திகிரியாற் பரவுதும் ஒல்கா
உருமுறழ் முரசிற் றென்னவற்
கொருமொழி கொள்க விவ்வுலகுட னெனவே” (கலி. 104) எனவும்,
“பாடிமிழ் பரப்பகத் ததவணை, யசைஇய
ஆடுகொள் நேமியாற் பரவுதும் நாடுகொண்
டின்னிசை முரசிற் பொருப்பன் மன்னி
அமைவர லருவி யார்க்கும் ப
இமையத் தும்பரும் விளங்குக வெனவே'” (கலி. 105) எனவும்,
“அருந்தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச்
சுரும்பிமிர் கானம் நாம் பாடினம் பரவுதும்
ஏற்றவர் புலங்கெடத் திறை கொண்டு
மாற்றாரைக் கடக்க வெம்மறங் கெழு கோவே” (கலி, 106) எனவும்,
தம் வழிபடு தெய்வம் புறங்காப்பதாம் எனவும் நாடாள் வேந்தனாகிய பாண்டியன் வெற்றியும் புகழும் உடையனாய் நீடு வாழ்தல் வேண்டும் எனவும் வாழ்த்துதலால் இனிது விளங்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

ஆயர்மகளிர் தொழுநையாற்றில் நீராடுங்கால் தம்முடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு நீராடினர். அந்நிலையில் அங்குவந்த கண்ணபிரான் விளையாட்டாக அவர்தம் உடைகளைக் கவர்ந்து கொண்டு குருந்த மரத்தில் ஏறியமர்ந்தான். அப்பொழுது அங்குப் பலதேவன் வரக் கண்டு அவ்வாயர் மகளிர் தம் நாணினைக் காக்கவியலாது பெரிதும் வருந்தினர். அந்நிலையில் அம்மகளிர் பொருட்டுக் குருந்த மரக்கிளைகளின் தழைகளைத் தாழ்த்திக் கொடுத்து அம்மகளிர் தழை யுடையில் தம் அற்றமறைத்துத் தம் உயிரினும் சிறந்த நாணினைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு செய்தருளினன் என்பது கண்ணன் விளையாடல் பற்றிய செய்தியாகும். இது,
““வடாஅது
வன்புனல் தொழுநை வார்மண லகன்றுறை
அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல” (அகம். 59)
எனவரும் அகநானூற்றுப் பாடலிற் குறிக்கப் பெற்றது. இச்செய்தியினை,
“நீனிற வண்ணனன்று நெடுந்துகில் கவர்ந்து தம்முன்
பானிற வண்ணன் நோக்கிற் பழியுடைத் தென்றுகண்டாய்
வேனிறத் தானைவேந்தே விரிபுனற் றொழுநை யாற்றுட்
கோனிற வளையினார்க்குக் குருந்தவ ணொசித்த
தென்றான்” (சிந்தாமணி. 209)
எனவரும் பாடலில் இருத்தக்க தேவர் விரித்துரைத்துள்ளமை காணலாம். காத்தற் கடவுளாகிய திருமால், ஆழியாகிய சக்கரப் படையினை ஏந்தியமையின் ஆழி முதல்வன், ஆழியான், திகரிச் செல்வன், இகிரியோன், நேமியான், நேமியோன் எனவும், கரிய திருமேனியுடைமை பற்றி மாயோன், முந்நீர்வண்ணன், அஞ்சனவுருவன், நீல்நிற வண்ணன் எனவும், கருடனைக்-கொடியாகக் கொண்டமை பற்றிச் சேவலோங்குயர் கொடியோன், புட்கொடி விறல்வெய்யோன், புள்மிசைக் கொடியோன், புள்ளின் நீள்கொடிச் செல்வன் எனவும், கஇிருமகளை மார்பிற் கொண்டமை பற்றித் இருமறுமார்பின் இருவமர்ச் செல்வன் எனவும், துழாய் மாலையை அணிந்தமை பற்றித் துழாயோன்,துழாய்ச் செல்வன், துழாய் மார்பிலோன் எனவும், பாம்பணையில் பள்ளி கொண்டமை பற்றி அரவணை அசை(இய நேமியோன், பாம்பணைப் பள்ளியமர்ந்தோன் எனவும், பாற்கடலில் அரவணை மிசை யோகநித்திரை கொள்ளும் நிலைகுறித்து அறிதுயிலோன் எனவும், குறளனாகச் சென்று மூவடி மண்வேண்டி மூவுலகும் ஈரடியால் அளந்தமை பற்றி “ஞாலமூன்றடித்தாய முதல்வன்” எனவும், பொன்னாடையடுத்தருளல் பற்றிப் பொன்புனை யுடுக்கையோன் எனவும், வியக்கத்தக்க தோற்றமும் செயல்களுமுடைமைபற்றி மாயவன் எனவும், வேதங்களாற் டோற்றப்படும் முழுமுதற் பொருளாதல் பற்றி வேதமுதல்வன் 
வாய்மொழிப் புலவன் எனவும் சங்க இலக்கியங்களில் போற்றப் பெறுகின்றார். திருமாலின் அவதாரமாகிய இராமபிரான் தன் தேவியை வவ்விய தூர்த்தனாகிய இராவணனைக் கொல்லுதற் பொருட்டுக் கோடிக்கரையி லுள்ள ஆலமரத்தினடியில் தன் நண்பர்களுடன் அமர்ந்து போரில் வெற்றி பெறும் இறத்தினைச் சூழ்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அந்நிலையில் அம்மரத்தல் உள்ள பறவைகளின் ஆர்ப்பொலிகள் மிக்கன. அதுகண்ட இராமபிரான் தம் கையினை அமர்த்தப் பறவைகளின் ஆரவாரம் உடனே யடங்கும்படி செய்தார். இராமாயணம் பற்றிய இச்செய்தி தமிழக மக்களாற் பேசப்பட்டு வருகிறது. இது
“வென் வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிடும் பெளவ மிரங்கு முன்றுறை
வெல்போ ரிராமன் அருமறைக் கவிந்த
பல்வீ ழாலம் போல
ஒலியவிந்தன்றிவ் வழுங்க லூரே” (அகம். 70)  எனவரும் அகநானூற்றுப் பாடற் றொடரில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

திருமால் அமிசமாகிப் பிறந்த பரசுராமன் மன்னர் மரபினை வேரறக் கொன்று “செல்லூர்? எனும் ஊரிலே களவேள்வி செய்தான் என்ற செய்து,
“கெடாஅத் தீயின் உருகெழு செல்லூர்க்
கடாஅ யானைக் குழமூஉச்ச மந்ததைய
மன் மறுங் கறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன் றரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல” (அகம். 220) என்ற தொடரால் அறியப்படும்.

சிவபெருமானும், திருமாலும் சங்கரநாராயணர் என ஒருவராகத் திகழும் தோற்றம், அந்திவானும், ௧ _லும் சேர்ந்த தோற்றத்திற்கு உவமையாக அகநானூறு 360ஆம் பாடலில் எடுத்தாளப்பெற்றுள்ளது.
“வெருவரு கருந்திறல் இருபெருந் தெய்வத்து
உருவுட னியைந்த தோற்றம் போல
அந்தி வானமொடு கடலணி கெளாஅ
வந்த மாலை” (அகம். 360) என்பது அப்பாடற் பகுதியாகும்.

பிறரை வருத்தும் அச் -த்தினையுடைய அசுரர்கள் உலகத்திற்கு ஒளிவழங்கும் ஞாயிற்றைக் கவர்ந்து கொண்டு போய் மறைத்தார்களாக, வானத்தே ஒளிதரும் அஞ்ஞாயிற்றைக் காணாமையால் இருளால து உவகத்துவிள் களின் கண்களை மறைக்க, உலகம் துயருற்றது. உலகில் ஒளியின்மையால் அவ்வுயிர்கட்.கேற்பட்_ட துன்பத்தை நீக்கும் பொருட்டு, மை போலும் நிறம் வாய்ந்த திருமேனியை யுடைய திருமால், அஞ்ஞாயிற்றை மீட்.டுக் கொணர்ந்து இவ்வுலகின்௧ண் இருள் நீங்கும்படி வானகத்து நிலை நிறுத்தினார் என்பது புராண வரலாறாகும். இதனை,
“அணங்குடை யவுணர் கணக்கொண்் டொளித் தெனச்
சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங்கு . . ...” (புறம். 374)
எனவரும் புறப்பாடலில் மாறோக்கத்து நற்பசலையார் எனும் புலவர் உவமையாக எடுத்தாண்டுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும்.

திருமால் இராமபிரானாக அவதரித்துத் தாதை ஏவலால் €தையுடன் காட்டின்்௧ண் தங்கியிருந்தபோது இராவணன் வஞ்சனையால் வேற்றுருக்கொண்டு சதையைக் கவர்ந்து வான்வழி விமானத்தில் செல்லும்போது சீதா பிராட்டி தான் அயலானாற் கவரப்பட்டுச் செல்லும் வழியைத் தன்னைப் பிரிந்து வருந்தும் இராமபிரான் கண்டு கொள்ளும்படித் தான் அணிந்த அணிகலன்களைக் கழற்றி விமானம் செல்லும் வழியே நிலத்திற் போட்டுச் சென்றாள் எனவும், அவ்வணிகலன்களைக் கண்டெடுத்த கிட்கிந்தையிலுள்ள குரங்குகள் அவ்வணிகலன்களை அணியும் முறைமை யறியாது கண்டோர் நகைக்கும்படி மாறி அணிந்து கொண்டன என்ற செய்து,[14
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வவ்விய ஞான்றை
நிலஞ்சேர் மதரணிக் கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாங்கு
அராஅ அருநகை இனிது பெற்றிகுமே” (புறம். 378)
எனவரும் புறப்பாடலில் குறிக்கப்பெற்றுள்ளமை காண்க.

“கருவளர் வானத் திசையிற் றோன்றி
உருவறி வாரா வொன்ற னுழியும்
உந்துவளி கிளர்ந்த வூழூ மூழியும்
செந்தீச் சுடரிய வூழியும் பனியொடு
தண்பெய றலைஇய ஷூழியு மனைவயிற்
றுண்முறை வெள்ள மூழ்கி யார்தருபு
மீண்டும் பீடுயர் பீண்டி யவற்றிற்கும்
உள்ளீ டாகிய விருநிலத் தூழியும்'” (பரி. 2 : 5-12)
எனவரும் பரிபாடற்றொடர் உல௫ஏன் தோற்றவொடுக்கம் உரைப்பதாய் ஐம்பெரும் பூதங்களின் தோற்ற வொடுக்கத் தையும் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. . இத்தொடரில் வானத்து உருவறிவாரா ஒன்றனூழி, உந்துவளி கிளர்ந்த ஊமூமூழி, செந்தீச் சுடரியவூழி, தண்பெயல் தலை௫யவூமி, மீண்டும் வெள்ளம் மூழ்கி உள்ளீடாகிய இருநிலத்தூழி, கேழல் இகழ்வரக்கோலமொடு பெயரியவூழி என ஏமழூழிகள் குறிக்கப்பெற்றன. ஊழிகள் ஏழு வகையின என்னும் இக்குறிப்பு,
“ஊழியேழான ஒருவா போற்றி” எனவும், 
“ஏழு கொலாமவர் ஊழி படைத்தன”   எனவும் வரும் திருநாவுக்கரசர் தேவாரத்திலும் இடம் பெற்றுள்ளமை காணலாம்.
“பரம்பொருளினின்றும் ஆகாயம் தோன்றி, அதனின்றும் காற்றுத் தோன்றி, அதனின்றும் தத் தோன்றி, அதனின்றும் நீர்தோன்றி, அதனின்றும் நிலம் தோன்றிற்று என்று வேதத்துள்ளும் கூறப்பட்டது” என இத்தொடருக்கு வேதநெறி பற்றிப் பரிமேலழகர்.தரும் விளக்கம் சங்ககாலத்தில் வாழ்ந்த திருமால் நெறியினர் பின்பற்றிய தத்துவக் கொள்கையினை ஒருவாறு புலப்படுத்தல் காணலாம். வைணவ சமயத்தினர் உலகு, உயிர், கடவுள் என்னும் முப்பொருள்களை முறையே சக8வபரம் எனப் பகுத்துணரும் நிலையில் பல்பொருட். கொள்கையினராகக் காணப்படுகின்றனர் எனினும், அம்மூன்றனுள் உலகு, உயிர்களை முறையே பரம்பொருளுக்கு உடமையாகவும், அடிமையாக வும் அடக்கிய நிலையில் முடிந்த முடிபாகப் பரம்பொருள் ஒன்றே பொருள் என்னும் ஒருபொருட். கொள்கையினை உடன்படும் நிலையிலும் அவர்தம் தோத்திரப் பனுவல்கள் அமைந்துள்ளன. இறைவன் உலகுயிர்கட்கு நிமித்த காரணனார்தலேயன்றி முதற்காரணமாகவும் உள்ளான் என்பது வைணவர் தத்துவக் கொள்கையாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

மன்னுயிர்களும், உலகமும் மாயோனாகிய ் பரம்பொருளிடத்தே தோன்றி அவனிடத்திலேயே ஒடுங்குவன என்னும் இக்கொள்கை,
.... “தீவளி விசும்பு நிலனீ ரைந்து
.. ஞாயிறுந் திங்களு மறனு மைவரும்
திதியின் சிறாரும் விதியின் மக்களும்
மாசி லெண்மரும் பதினொரு கபிலரும்
தாமா விருவருந் தருமனு மடங்கலும்
மூவே முலகமு முலகினுண் மன்பதும்
"மாயோய் நின்வயிற் பரந்தவை யுரைத்தேம்
மாயா வாய்மொழி யுரைதர வலந்து'' (பரி. 3 : 4 - 11)
எனவரும் பரிபாடற்பகுதியில் இடம் பெற்றுள்ள து.

நித்தியமாகிய வேதம் தேவரும், மூவகை உலகுகளும், உயிர்ப் பன்மையும் நின்கட் டோன்றியவாறு அறிந்து கூறும். சிற்றறிவினேமாகிய யாம் அவற்றுட். சிலவற்றை முறை பிறழக் கூறுவதல்லது அவ்வாறு எல்லாம் கூறுதற்கு உரியம் அல்லம் என்பார், “வலந்துரைத்தேம் என்றார்? என இத்தொடரின் கருத்தினைப் புலப்படுத்துவர் பரிமேலழகர். எனவே சடமும், சித்துமாகிய எல்லாம் வாசுதேவன் பரிணாமமே ஆம் என்னும் பாஞ்சராதகிரர் கொள்கைக்கு மூலமாக விளங்குவது மேற்காட்டிய பரிபாடல் பகுதி என்பது நன்கு புலனாம். சாங்கியர் கூறுமாறு தத்துவங்கள் இருபத்தைந்தெனக். கொள்ளுங் கொள்கை சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளது

“பாழெனக் காலெனப் பாகென வொன்றென
இரண்டென மூன்றென நான்கென வைந்தென
ஆறென வேழென வெட்டெனத் தொண்டென,
நால்வகை யூழியெண் ணவிற்றும் சிறப்பினை”: (பரி. 39
எனவரும் தொடரில் பாழ் என்றது புருடனை. புருடத் துவம் பிறிதொரு தத்துவம் பிறத்தற்கிடனாகாது என்பது சாங்கியர் கொள்கை. அவர் மதம் பற்றிப் புருட தத்துவம் பாழ் எனப் பெயர் பெற்றது. கால் என்றது ஆகாயம் முதற் பூதங்கள் ஐந்தினையும். இவை தாம் பிறவற்றினின்றும் தோன்றுதலானும், தம்மிடத்திலி இருந்து பிற தோன்றுதற் கஉடனாத லானும் கால் எனப் பெயர் பெற்றன. காலுதல் ஒன்றினின்று வெளிப் படுதல் அன்றி, தன்னிலிருந்து ஒன்றை வெளிப் படுத்துதல் என்ற இவ்விருபொருளில் ஈண்டு வழங்கப் பெற்றது.

பாகு என்றது சொல்லல், இயங்கல், கொடுத்தல், விடுத்தல், இன்புறுதல் என்னும் தொழிலால் பாகுபாடுடைய வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் ஆகிய தொழிற் கருவி (கன்மேந்திரியம்) ஐந்தனையும் குறித்தபெயர் ஒன்று என்றது ஆகாயத்தின் பண்பாகிய ஓசையினை “எல்லாப் பண்பிற்கும் முற்றோன்றுதலால் ஓன்றெனப் பட்டது' என்பர் பரிமேலழகர்.
இரண்டு என்றது காற்றின் சிறப்புப் பண்டாகிய ஊறு,
மூன்று என்றது தீயின் சிறப்புப் பண்பாகிய
ஒளியினை. நான்கு என்றது நிலத்தின் சிறப்புப்
பண்பாகிய சுவையினை. ஐந்து என்றது நிலத்தின்
சிறட்டப் பண்பாகிய நாற்றத்தினை. ஆறு என்பன
செவி, மெய், கண், நா, மூக்கு என்னும்
ஞானேந்திரியங்கள் ஐந்தும் மனமும். ஏழு என்றது
ஆகங்காரம். எட்டு என்றது மான். அஃதாவது
புத்தி. தொண்டு என்றது மூலப் பகுதி, நால்வகை
யுகங்களிலும் இவ்வெண்களால் நவிலப்படும்
சிறட்பினையடையாய்”
என இவ்வாசிரியர் திருமாலைப் பரவியதன் கருத்து, பூதங்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள் ஐந்தும், ஞானேந்கதுரியங்கள் ஐந்தும் புலன்கள் ஐந்தும், மனம் முதலிய அந்தக்கரணங்கள் மூன்றும் மூலப்பகுதியும் எனக் கூறப்பட்ட தத்துவங்கள் இருபத்தைந்தினாலும் எக்காலத்தும் ஆராயப்படும் பெருமையையுடையோன் திருமால். என்றவாறு, ஈண்டுத் தொண்டு எனப்பட்ட மூலப்பகுகு என்றும் நிலையுடையதாய், எல்லாவற்றையும் அடக்கும் விரிவுடைய தாய், அறிவிலதாய், எல்லாப் பொருட்கும் காரணமாய், சத்துவம் இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களும் ஒப்ப நின்ற நிலையினதாய் அருவாய் உள்ளதாகும். இஃது இருபத்து நாலாம் தத்துவம். இதன்கண் தோன்றும் காரியம் புத்தி (மான்) முதல் நிலம் ஈறாக இருபத்து மூன்று தத்துவங்களாகும். இங்குக் கூறப்பட் ட தத்துவம் இருபத்து நான்கிற்கும் வேறாய், ரிலைபேறும் விரிவும் உடையதாய், அருவாய், பலவாய், அறிவதும் செய்வதுமின்றி வெறும் அறிவு மாத்திரமாய் ஒன்றற்ருக் காரணமாதலும் காரியமாதலுமின்றி நிற்கும் ஆன்மாக்கள் இருபத்தைந்தாம் தத்துவம் எனப்படும். அவ்விருபத்தைந்தாம் தத்துவமாகிய புருடன் வீட்டு 
நிலையிலும், கட்டு நிலையிலும் ஒரு தன்மையனேயாம் புருடனுக்கு மலினம் என்பது இல்லை. தாமரை இலை நீர் போல் ஒட் டற்று நிற்பன். தோற்றமில் காலமாகப் புத்தியைச் சார்ந்த அவிச்சைவயத்தால் பாசங்களாற் பிணிப்புடையோன் எனப்பட்டு இவன்பால் இன்பதுன்ப உணர்வு தோன்றா நின்றது. புத்தி என்றது மூலப்பகுதியின் பரிணாமம் (இரிபூ.
அதுவே மான் என்றும் கூறப்படும். புத்தியாகிய அது பொறிவாயிலாக ஞானமாய்ப் பரிணமித்து உலகப் பொருள்களிற் செல்லும். புருடன் ஒன்றைச் செய்வான் என்பதும் புத்தி ஒன்றை அறியும் என்பதும் இவற்றிடையே உள்ள வேற்றுமை உணராமையால் கூறப்படும் கூற்றாகும். அறிவில் பொருளாகிய மூலப்பகுதியையும் அறிவுடைய புருடனையும் பகுத்து உணரவே அவிச்சை நீங்கும். அதுவே முத்தியாகும் என்பர் சாங்கியர்.

சாங்கியர் கூறும் இருபத்து நாலாம் தத்துவமாகிய குணதத்துவத்தின்மேல் இருபத்தைந்தாம் தத்துவம் வாசுதேவன் என்று ஒருவன் உளன். அவனே பரம்பொருள். அவனிடத்தினின்றும் கண்ணனும், அநிருத்தனும், மகரத்துவசனும் இரெளகிணேயனும் என நால்வர் உலகங்களைப் படைத்தற்கெனத் தோன்றினர். இந்த நால்வகை வியூகங்களால் சடமும் சித்தும் ஆகிய எல்லா உலகமும் படைக்கப்பட்டன. ஆதலால் எல்லாப் பொருள்களும் வாசுதேவனது பரிணாமமே ஆம். ஆதலால் பரம்பொருளாகிய வாசுதேவனை வழிபட்டு வாசுதேவன் உருவில் இலயமாதலே முத்தி என்பதாம் என்பது வைணவ சமயத்தாருள் ஒருபகுதியாகிய பாஞ்சாரத்திரர் கொள்கையாகும்.
“சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு” (குறள். 27)
எனவரும் திருக்குறளுக்கு, “சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும் ஆராய்வான் அறிவின்கண்ணதே

உலகம்” என உரைவரைந்த பரிமேலழகர், “அவற்றின் கூறுபாடாவன பூதங்கட்கு முதலாகிய அவைதாம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய அப் பூதங்கள் ஐந்தும், அவற்றின் (பூதங்களின்) கூறாகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆக இருபதுமாம். வகை தெரிவான்௧கட்டு என உடம்பொடு புணர்த்ததனால், தெரிகின்ற புருடனும் அவன் தெரிதற்கருவியாகிய மான் அகங்கார மனங்களும் அவற்றிற்கு முதலாகிய மூலப்பகுகியும் பெற்றாம். . தத்துவம் இருபத்தைந்தனையும் தெரிதலாவது மூலப்பகுதி ஒன்றிற்றோன்றியது அன்மையின், பகுதியே யாவதல்லது விகுதியாகாதெனவம், அதன்கண் (மூலப்பகுதி யின்கண்) தோன்றியமானும், அதன்கண் (மானின்்௧கண்) தோன்றிய அகங்காரமும், அதன்கண் (அகங்காரத்தின்கண்) தோன்றிய தன்மாத்திரைகளும் ஆகிய ஏழும் தத்தமக்கு முதலாயதனை நோக்க விகுதியாதலும், தங்கட்டேோன்று வனவற்றை நோக்கப் பகுதியாதலும் உடையவெளவும், அவற்றின்கண் (தன்மாத்திரையின்க௧ண்) தோன்றிய மனமும் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் பூதங்களுமாகிய பதினாறும் . தங்கட். டோன்றுவன வின்மையின் விகுதியேயாவ தல்லது பகுதியாகாவெளவும், புருடன் தானொன்றிற் றோன்றாமை யானும் தன்கட். டேோன்றுவன இன்மையானும் இரண்டும் அல்லன் எனவும் சாங்கிய நூலுள் ஓதியவாற்றான் ஆராய்தல். இவ்விருபத்தைந்துமல்லது உலகெனப் பிறிதொன்றில்லையென உலகனதுண்மை யறிதலின், அவனறிவின் கண்ணதாயிற்று” எனச் சாங்கியர் கூறும் இருபத்தைந்து தத்துவங் களை வகைப்படுத்துரைக்கின்றார். அவர் கூற்றுப்படி தத்துவத் தோற்றம் பின்வருமாறு அமையும்.

மூலப்பகுதி பகுதியே புருடன் - பகுதியும் அன்று 
விகுதியும் அன்று
மான்
பகுதியும் விகுதியும் என
அகங்காரம் இரண்டுமாவன
தன்மாத்திரை
மனம்] ஞானேந்திரியம் 5 கன்மேந்திரியம் 5 பூதங்கள். 5

இலவ பதினாறும் விகுதியேயாவன.
விசும்பினின்று வளியும், வளியினின்று தீயும், தயினின்று நீரும், நீரினின்று நிலமும்தோன்றின என்னும் வேதநூற் கொள்கையை அடியொற்றிய நிலையில் ஐம்பெரும் பூதங்கள் கால் என்ற பெயரால் 3 ஆம் பரிபாடல் 77ஆம் அடியில் குறிக்கப்பெற்றன என்பது பரிமேலழகர் தரும் விளக்கமாகும். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் தன்மாத்திரையிஷவின்றும் முறையே ஐம்பெரும் பூதங்களும் தோன்றின என்னும் சாங்கியர் கொள்கையொடு இங்கு எடுத்துக் காட் ம.ய வேதநுற் கொள்கை வேறுபடுதல் காணலாம். பிரமத்தினின்று ஆகாயமும், ஆகாயத்தினின்று வளியும், வளியினின்று தீயும், தயினின்று நீரும், நீரினின்று நிலமும் தோன்றின என்னும் வேதநூற்கொள்கை சாங்கியர்க்கு உடன்பாடன்று. சாங்கியர் கூறும்
இருபத்தைந்து தத்துவப் பாகுபாடு வைகிகர்க்கு உடன் பாடன்று. சங்ககாலத்து வைணவ சமயத்தினர் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் தத் துவம் இருப்கைந் தென்றும் சாங்கியர் கொள்கையைப் பொதுவாக உடன் பட்டனர் எனினும் ஐம்பெரும் பூதங்களின் தோற்றம் பற்றிக் கூறும் பொழுது விசும்பு முதலாகிய அவை ஐந்தும் ஒன்றினொன்று தோன்றின என்னும் வைதிக நூல் கொள்கையே தழுவினர் என்பது,
(27 ச ப் க 99
பாழ்எனக் காலெனப் பாகென
எனவரும் பரிபாடற் றொடராலும் கால் என்னும் சொற்குப் பரிமேலழகர் தரும் உரைவிளக்கத்தாலும் உய்த்துணரப்படும்.
“இந்நிலைத் தெரிபொரு டேரி னிந்நிலை
நின்னிலைத் தோன்றுநின் றொன்னிலைச் சிறப்பே” (பரி. 2; 26-27)
எனவரும் பரிபாடற் றொடரில் “தெரிபொருள் என்றது உலகப் பெருள்களைத் தெரிந்துணரும் தன்மையினதாகிய உயிர்த் தொகுதியை. தெரிபொருள் என்னும் வினைத் தொகை தெரியும் பொருள் என நிகழ்காலத்தான் விரிக்கப்படும், உயிர்ப்பொருட்்கு உணர்தற் பண்பு இயற்கை யாதலின்” எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் பரிபாடலிற் காணப்படும் ஆன்மாவின் இலக்கணத்தை நன்கு புலப்படுத்தல் காணலாம். “உயிர் எத்தன்மைத் தெனின் உணர்தல் தன்மைத்து” எனவரும் சேனாவரையர் உரைத் தொடரும் இங்கு ஒப்பு நோக்கத்குவதாகும்.
“நின்னடி
தலையற வணங்கினேம் பன்மாண் யாமும்
கலியி னெஞ்சினே மேத்தினேம் வாழ்த்திஷே
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
கொடும்பா டறியற்க வெம்மறி வெனவே” (பரி. 2 : 72-76)
எனக் &ரந்தையார் என்னும் புலவர் திருமாலைப் பரவி வேண்டுகின்றார். இறைவனாகிய நின்னடியைத் துளக்க மில்லாத நெஞ்சினேமாய் வணங்கிப் பலகாலும் எம் சுற்றத்தோடும் சுற்றத்தோடும் ஏத்தி வாழ்த்தி எம் அறிவு தவறான நெறியில் வளைதலை அறியாதொழிக! என வேண்டிக் கொள்கின்றோம்” என்பது இத்தொடரின் பொருளாகும். கடும்பு : சுற்றம்; கடும்பொடும் கடும்பொடும் என்னும் அடுக்கு பன்மை குறித்து வந்தது. “எம் அறிவு தவறான நெறியில் வளையாதொழிக' எனப் புலவர் வேண்டுத லால், உயிர்களின் அறிவு பொறிவழியே கோட் டமடையும் - இறுமையுடைத்து எனவும், எம்மறிவு அங்ஙனம் கோடுதலை அறியாதொழிக! என இறைவனை வேண்டவே, அம் முதல்வனதருளால் தமக்கு வீடுபெறுதற்குச் சாதனமாகிய மெய்யுணர்வு கிடைத்தல் வேண்டும் எனவும் வேண்டினார் ஆயிற்று. எனவே, ஏசிற்றறிவுடைய உயிர்களுக்கு மெய்யுணர் வளித்துப் பிறவிப் பிணிப்பினின்றும் நீக்கி வீடுபேற்றின்பம் வழங்கவல்ல தகுதி இறைவன் ஒருவனுக்கே உரியது என்பதும் கூறினாராயிற்று. “எம்மறிவு கொடும்பாடறியற்கவென மெய்யுணர்வினையே வேண்டினார். வீடு அதனாலல்லது எய்தப்படாமையின்” எனவரும் பரிமேலழகர் உரைவிளக்கம் இங்கு மனம்கொளத்தக்கதாகும்.

சிவபெருமான் நிலம், நீர், நெருப்பு, வளி , வான், ஞாயிறு, தங்கள், வேள்வி முதல்வனாகிய ஆன்மா என
எண்பேருருவினளனாக (அட்ட மூர்த்தியாக) விளங்குகின்றான் என்பது சைவ சமயக் கோட்பாடாகும்.
“தீவளி விசும்புநிலன்நீர் ஐந்து
ஞயிறுந் திங்களு மறனும்'' (பரி. 3 வரி. 4, 5)
எனவரும் பரிபாடலடிகளில் இக்கொள்கை இடம் பெற்றிருத்தல் காணலாம்.
“மாயோயே! மாயோயே!!
மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி,
மணிதிகழ் உருவின் மாயோயே!' என அம்முதல்வனது சேவடி பெறுதற்குப் பலகாலும் 'எதிர்முகமாக்கிப் போற்றுகின்ற கடுவன் இளவெயினனார், அவன்கண் தோன்றிய பொருள்களைக் கூறத் தொடங்கி முதற்கண் ஈசற்கு (சிவனுக்கு) வடிவாகிய அட்_ட மூர்த்தங்கள் கூறுகின்றார். அவை த, வளி, விசும்பு, நிலம், நீர் என்னும் பூதங்களைந்தும் ஞாயிறும், தங்களும், வேள்வி முதல்வனும் என இவை வேட்கின்ற வடிவு தருமம் ஆதலின் அஃது அறன் எனப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் சைவ சமயக் கோட்பாட்டினை உளம் கொண்டு கூறப்பட்டதாகும்.

அனளாதியாய் வருகின்ற மரபினை உடைய வேதமுதல்வனாகிய திருமால் விரிந்து அகன்ற ஆகமங்கள் எல்லாவற்றாலும், அகங்காரத்தாலும், மனத்தாலும், புத்தியினாலும், மற்றும் எல்லாவற்றாலும் வனப்பும் எல்லையும் அறியப்படாதவன் என்பது, 66
முன்னை மரபின் முதுமொழி முதல்வ
நினக்குவிரிந் தகன்ற கேள்வி அனைத்தினும்
வலியினு மனத்தினு முணர்வினு மெல்லாம்
வனப்புவரம் பறியா மரபி னோயே””' (பரி. 3: 47-50)
எனவரும் பரிபாடலடிகளால் புலப்படுத்தப்பட்டது. வலியினும், மனத்தினும், உணர்வினும் என எண்ணப் பட்.டவை முறையே அகங்காரம், மனம், புத்தி என்னும் அந்தக்கரணங்கள் மூன்றும் ஆகும். இப்பொருளை யான் அறிவேன் எனமேற்பட்டுச் செல்லும் வன்மையுடையது அகங்கார மாதலின் அது வலி எனப்பட்டது. “வலியுடையதனை வலி என்றார்்' எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் இவ்வகக்கருவியின் இயல்பினை நன்கு புலபடுத்தல் காண்க. இங்கு உணர்வு என்றது உணருங் கருவியாகிய புத்தியினை. ஒரு பொருளைப் பற்றும் அகக்கருவி மனம் எனவும், இதனையான் அறிவேன் எனமேற்கொண்டெழும் கருவி அகங்காரம் எனவும், நிச்சயிக்கும் கருவி புத்தி எனவும் கூறுப. அகக்கருவிகளாகிய இவற்றின் இயல்பினை உய்த்துணரும் நிலையில் “வலியினும் மனத்தினும் உணர்வினும்” எனவரும் இத்தொடர் அமைந்திருத்தல் கூர்ந்து நோக்கற்பாலதாகும். மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்னும் உட்கருவிகள் நான்கு. இவை அந்தக்கரணம் எனப்படும். இவற்றுள் மனம் என்பது ஐம்பொறிகளால் அறியப்பட்ட பொருள்களில் இது யாதாகற்பாலது என நினைத்தற்கும், இதுவோ, அதுவோ என ஐயுறுதற்கும், கருவியாய் நிற்பது. ஒன்றனைப்பற்றி இஃது எத்தன்மையது என நினைக்கும் நிலையில் மனம் எனவும், இதுவோ அதுவோ என விகற்பித்துணரும் நிலையில் சித்தம் எனவும், பெயர் பெறும் என மனத்தின் விருத்தியாகிய சித்தத்தை மனத்துள் அடக்கி அந்தக்கரணம் மூன்று எனவும் எண்ணுதல் மரபு.

இறைவன து இயல்பினை உள்ளவாறு அறிவார்க்கும் இவர் பகைவர் இவர் நட்டோர் என்னும் வேறுபாடு அம் முதல்வனுக்கில்லை என்பது தெளிவாகப் புலனாகும். இந்நுட்பம்,
“பகைவ ரிவரிவர் நட்டோ ரென்னும்
வகையு முண்டோநின் மரபறி வோர்க்கே” (பரி. 3 : 57, 58)
எனவரும் பரிபாடற் றொடரால் உணர்த்தப் பெற்றமை காணலாம். இத்தொடர் “வேண்டுதல் வேண்டாமையிலான்” எனவரும் தெய்வப்புலவர் வாய்மொழியினை அடியொற்றி அமைந்துள்ளமை காணலாம். எல்லாம் வல்ல இறைவன் உயிரறிவினாற் காண்டற் கரியனாயினும் தன்னை அன்போடு தியானிக்கும் அடியார் களுடைய நெஞ்சத்தை விட்டு நீங்காத நிலைமையனாய் அவர்தம் உணர்விற்கு எழுந்தருளியுள்ளான் என்பது,
“காணாமரப, நீயாநினைவ”: (பரி. 3. 84)
எனவரும் தொடரில் இடம் பெற்றுள்ளமை காண்க. 66 ச உ க ௩ க
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
க வார்க் காற்ற வெளியன் கண்டாய்”
ருது றற எனவும், 66 ச உ உ ச ச 99
கருதுவார் இதயத்துக் கமலத்தூறும் தேனவவனை எனவும் வரும் அப்பர் அருள் மொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. ப

செவிமுதலாகிய பொறிகள் ஐந்தின்வழிச் செல்லும் அவா ஐந்தினையும் மயக்கமற நீக்கி மைத்திரி, கருணை, முதிதை, இகழ்ச்சி என்னும் நான்கினாலும் சித்தத்தை மாசறுத்துத் தம்மைச் சமாதியாகிய ஒருநெறிக் கண்ணே செலுத்திய ஆர்வலராகிய யோகிகள் இறைவனை வணங்கி அவனது பொருள்சேர் புகழ்த் தரங்களை விரித்து விளக்கும் இயல்பினர் என்பது,
“ஐந்து இருளற நீக்கி நான்கினுள் துடைத்துத்தம்
ஒன்றாற்றுப் படுத்தநின் ஆர்வலர் தொழுதேத்தி
நின்புகழ் விரித்தனர்” பேரி. 4, 1- 3) எனவரும் தொடரால் புலப்படுத்தப் பெற்றது.

உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உலகப் பொருள்களில் காணப்படும் பண்புநலன்கள் அனைத்கிற்கும் ஊற்றாக அமைந்தன உலக முதல்வனாகிய கடவுளின் இறைமைப் பண்புகள் என்பதனையும், உலகப் பொருள்க ளனைத்தும் இருமாலாகிய முதல்வனிடத்தே தோன்றி அவனிடத்தேயே ஒடுங்குவன என்பதனையும் எய்ட் விளக்கும் நிலையிலமைந்தது,
“நின், வெம்மையும் விளக்கமு ஞாயிற்றுள
நின், தண்மையும் சாயலும் திங்களுள
நின், சுரத்தலும் வண்மையு மாரியுள
நின், புரத்தலு நோன்மையு ஞாலத்துள
நின், நாற்றமு மொண்மையும் பூவையுள
நின், தோற்றமு மகலமு நீரினுள
நின் உருவமு மொலியுமா காயத்துள
நின், வருதலு மொடுக்கமு மருத்தினுள
அதனால், இவ்வு முவ்வு மவ்வும் பிறவும்
ஏம மார்ந்த நிற்பிரிந்து
மேவல் சான்றன வெல்லாம்” (பரி. 4, 25- 35)
எனவரும் பரிபாடல் பகுதியாகும். உலகுயிர்களின் தோற்றமும் நிலைபேறும் ஒடுக்கமும் இருமாலாகிய முதல்வன்கண்ணே அமைந்தன என்பது மேற்காட்டிய தொடரின் கருத்தாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

அறவாழி அந்தணனாகிய இறைவனது திருவருளை அம்முதல்வனுடைய திருவடியாக உபசரித்துக் கூறுதல் பழந்தமிழ் மரபு. இம்மரபு,
“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது” (குறள். 8) எனவும்,
“மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்” (குறள். 3)

எனவும் வரும் தமிழ் மறையால் புலனாகும். உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றும் புணையாகவும், பேரின்பமாகிய வீடு பேற்றிற்கு நிலைக்களமாகவும் விளங்குவது இறைவன் திருவருளாகிய திருவடியே யென்பது திருவள்ளுவர் துணிபு. எனவே இறைவன் திருவடியே வீடு பேறாய் இருக்கும் என்பது தமிழ் மக்களது கோட் பாடாதல் புலனாம். இக்கொள்கை,
“நின்னிற் சிறந்த நின்தா விணையவை”: (பரி. 4, 62)
எனவரும் பரிபாடல் தொடரில் இடம் பெற்றுள்ளது.
“வீடளிக்குங்கால் நின்னினும் சிறந்த நின் தாளிணையை உடையை” என இத்தொடருக்குப் பரிமேலழகர் எழுதிய உரை விளக்கம் இக்கருத்தினைப் புலப்படுத்தல் காணலாம்.
“சேவடி படரும் செம்ம லுள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும்
செலவுநீ நயந்தனை யாயின்” எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடரும், இதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை விளக்கமும் இங்கு ஒப்பு நோக்கத்தக்களன்.

சங்க காலத் தமிழ் மக்கள் மாயோன், சேயோன், சிவன் என வேறுவேறு பெயரும், வேறுவேறு உருவும் உடைய நிலையில் பல்வேறு தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனராயினும், அங்ஙனம் வழிபடப்பெறும் எல்லாத் தஇிருவுருவங்களும் முழுமுதற் பொருளாகிய ஒரு பொருளுக்குரியனவே என்னும் உண்மையினைத் தெளிந்திருந்தனர். இந் நுட்பம்,
“அழல்புனர குழைகொழு நிழறரும் பலசினை
ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவும்
கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும்
அவ்வவை மேய வேறுவேறு பெயரோய்
எவ்வயி னோயு நீயே” (பரி. 4, 66 - 70)
எனத் திருமாலை முன்னிலைப்படுத்திக் கடுவன் இளவெயினனார் போற்றிப் பரவிய பரிபாடற் பகுதியால் இனிது புலனாகும். இங்ஙனம் பல்வேறு இருவுருவங்களில் வைத்து வழிபடப் பெறும் வழிபாடுகள், எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளையே சென்று சாரும் என்பது,
“வேறு பல்லுருவில் கடவுள் பேணி”
எனவரும் குறிஞ்சிப் பாட்டடி களானும் உய்த்துணரப்படும்.
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் ,. . . 09
“சுவை முதலாகிய புலன்களும் அவற்றை நுகரும் கருவியாகிய ஐம்பொறிகளும் நீயே. ஓசை ஒன்றினால் உணரப்படும் விசும்பும், ஓசையும் ஊறுமாகிய இரண்டினால் உணரப்படும் காற்றும், ஒசை ஒளி ஊறு என மூன்றினால் உணரப்படும் தீயும், ஒசை ஒளி ஊறு சுவை என்னும் நான்கினால் உணரப்படும் நீரும், ஒசை ஒளி ஊறு சுவை நாற்றம் என ஐந்தினால் உணரப்படும் நிலமும் ஆகிய ஐம்பெரும் பூதங்களுமாக விளங்குவோன் திருமாலாகிய நீயே. ஆதலால், மூலப்பகுதியும், அறனும், அநாகியான காலமும், ஆகாயமும், காற்றோடு கனலும் கூடிய இம்மூவேழுலகத்து உயிர்களெல்லாம் நின்னிடத்தனவாயின” எனத் இருமாலை முன்னிலைப்படுத்திப் போற்றும்நிலையில் அமைந்தது, 66 ச ச ப ச
சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
அவையும் நீயே அடுபோ ரண்ணால்
அவையவை கொள்ளுங் கருவியும் நீயே
முந்தியாக். கூறிய ஐந்த னுள்ளும்
ஒன்றனிற் போற்றிய விசும்பு நீயே
இரண்டின் உணரும் நீரும் நீயே
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
அதனால, நின்மருங் கின்று மூவே முலகமும்
மூலமும் அறமும் முதன்மையி னிகந்த
காலமும் விசும்புங் காற்றொடு கனலும்” (பரி. 13 :14- 25)
எனவரும் பரிபாடற்பகுகியாகும்.
“பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி” (போற்றித் திருவகவல்)
எனவரும் திருவாசகப் பகுதி இங்கு ஒப்பு தோக்கறு பாலதாகும்.

மேற்குறித்த பரிபாடற் பகுதியில் மூலம் என்றது
“மூலப்பகுதியை. மூலப்பகுதியாவது, சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் குணங்கள் மூன்றும் தம்முள் ஒத்த நிலைமையது; ஆதலால், அது (மூலப்பகுதி) கூறவே, அறிவு அறியாமைகள் இன்பதுன்பங்கள் என்னும் உயிர்க் குணங்களும் அடங்கின. அறமாகிய சிறப்புடைக்குணம் கூறவே சிறப்பில் குணமாகிய பாவமும் அடங்கின்று. இதனால் ஈண்டு ்- எண்ணப்பட்டவற்றது கூட்டம் உயிர் என்பது உணர்த்தப் பட்டது” என இப்பகுதிக்குப் பரிமேலழகர் தரும் தத்துவ விளக்கம் சந்தனைக்குரியதாகும். சாங்கியநூலார், முக்குணங்கள் மிக்கும் குறைந்தும் நில்லாது தம்முட் சமமாய் நின்றறிலையே மூலப்பகுதியென்றும், அதுவே காரியங்கள் எல்லாவற்றிற்கும்முதற்காரணமாய் நிற்பதன்றி மூலப்பகுதி யாகிய அஃது ஒன்றன் காரியமாதல் இல்லையென்றும் கூறுவர். உணருந்தன்மையதாகிய உயிர் போகநுகர்ச்சிக்கு ஏதுவாகிய அவிச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் ஆகிய பஞ்சக்கிலேசமென்னும் பும்ஸ்த்துவ மலமுடையனாய்ப் புருடதத்துவம் எனப் பெயர் பெற்று நிற்றலின், ஈண்டு மூலப்பகுதி முதலாக எண்ணப்பட்டவற்றது கூட்டம் உயிர் என்பது உணர்த்தப்பட்டது” என்றார் பரிமேலழகர். இங்கு மூலப்பகுதியொடு “முதன்மையின் இகந்தகாலமும்” எனத் தத்துவம் இருபத்தைந்தின் மேலாகக் காலம் என்னும் தத்துவம் எண்ணப்பெற்றுள்ளமை காணலாம். இதனால் தத்துவம் இருபத்தைந்து என்னும் சாங்கியர் கொள்கைக்கு வேறாகக். காலதத்துவம் உண்டெனக் கருதும் தத்துவக் கோட்பாடும். தமிழகத்தில் நிலவினமை உய்த்துணரப்படும். “காலம் உலகம் உயிரே யுடம்பே” (தொல்-சொல்-இளவி) எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்திற் காலம் என்பது ஒருண்மைப் பொருட் கூறாகக் குறிக்கப்பெற்றுள்ளமை முன்னர் விளக்கப் பெற்றுள்ளமையும் இங்கு ஒப்பு நோக்கற் பாலதாகும். தொழில் நிகழ்ச்சியினை இறப்பு நிகழ்வு எதிர்வு என வரையறுப்பதாகிய கால தத்துவத்திற்கு அப்பாற்பட்டு எவ்வகை மாற்றமுமின்றி என்றும் ஒரு பெற்றியதாய் விளங்குவது முழுமுதற் பொருளாகிய கடவுள் என்னும் உண்மையினை
“முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
கடந்தவை யமைந்த கழனிழலவை”' (பரி. 13; 46-47)
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . ரர
எனத் திருமாலைக் குறித்து நல்லெழுநியார் போற்றுவதாக அமைந்த தொடர் நன்கு புலப்படுத்துவதாகும்.
“தோன்றியதும் தோன்றுவதும் தோன்றா நின்றதுமாகிய காலக் கூறுபாடுகளைக் கடந்து அவை தாம் பொருந்திய தாள் நிழலையுடையை” என இத்தொடர்க்குப் பொருள் வரைந்தார் பரிமேலழகர். “கடந்து அவை அமைந்த' என்புழி “அவை' என்றது, எக்காலத்தும் அழியாது நிலைபேறுடைய உயிர்த்தொகுதியினை, “இருமை வினையும் இல ஏத்தும் அவை: என அடுத்துவரும் அடிக்கு “நின்னையேத்தும் அன்பர் இருவினையும் உடையரல்லர்” எனப் பரிமேலழகர் எழுதிய உரையால் இந்நுட்் பம் இனிது புலனாதல் அறியற்பாலதாகும்.
மணங்கமமுந்துழாய் மாலையை யணிந்த மாயோனாகிய இறைவன் அருளால் வெளிப்பட்டுக் கொடுப்பினல்லது பிறிதொன்றிற்கில்லாத சிறப்பினையுடைய துறக்கவுலகம் உயிர்களது அறிவுமுயற்சியாற் சென்றடைதற் குரிய எளிமையுடையதன்று; அங்ஙனம் அரிதிற்பெறு துறக்கத்தை அன்பராயினார் எளிகிற் பெற்று இன்புறும் நிலையில் திருமால் எழுந்தருளிய மாலிருங்குன்றத்தை எல்லாருங் கேட்.க ஏத்தக்கடவோம் என்று அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

நாறிணர்த் துழாயோன் நல்கினல்லதை
ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்
அரிது பெறுதுறக்க மாலிருங் குன்றம்
எளிதிற் எத்துனை யேத்துகம் / சிலம்ப” ப (பரி, 15 15-18) எனவரும் பரிபாடற் பகுதியாகும்.
ப “அவனருளாலே அவன்தாள் வணங்கி” : (சிவபுராணம்) :
ணவ மணிவார்த்தை இங்கு ஒப்புநோக்கி யுணரத் தக்கதாகும்.

அசையும் அருவி மிக ஆரவாரித்து இழிதலாற் சிலம்பாறு அழகு செய்த வியக்கத்தக்க தன்மையது, திருவென்னுஞ் சொல்லோடும் மாலிருங்குன்றம் என்னுஞ் சொல் தொடர்ந்த மொழியாகிய திருமாலிருஞ்சோலை மலையெனவும், அதன் பெயரது பெருந்தன்மை நன்றாகப் பூமியின்கண பரக்க எனவும், நிலைபெற்ற குளிர்ச்சி,-பயுடைய இளவெயில்சூழ அதனிடையே இருள் வளர்தலையொக்கப் பொன்னாடையுடுத்தோனாகிய திருமால் தன் தமையனாகிய பலதேவனோடும் அமர்ந்து நிற்கும் நிலையை
மக்களே நினைந்து போற்றுமின் எனவும், சுனையிட மெங்கும் நீலமலர் மலர்ந்து தோன்ற அச்சுனை யினைச் சூழ்ந்த அசோகமரங்கள் மலர்தலாலும் காய்கனிகளோடு நிறம் மாறுபட வேங்கை மலர்தலாலும் மாயோனை யொத்த இனிய தெய்வத்தோற்றத்தையுடையது அம்மலை யெனளவும், அது காண மயக்கமுதலிய குற்றங்களைறுப்பதாகிய வழிபடு . தெய்வம் எனவும் திருமாலைச் சென்று தொழ மாட்டாதீர் அம்மலையினைக் கண்டு பணிமின்; அதனை நும் மனைவிய ரோடும் இருமுது குரவரோடும் குழந்தைகளோடும் சுற்றத் தாரோடும்கூட அம்மலையைத் தெய்வமாக மதஇித்துத் திசைநோக்கித் தொழுமின் எனவும் பதினைந்தாம் பரிபாடலில் இளம் பெருவழுதியார் உலக மக்களை நோக்கிக் கூறும் நிலையில் அமைந்த அறிவுரை, சங்ககாலத் தெய்வ வழி பாட்டில் மூர்த்தி தலம் $ர்த்தர் என்னும் மூவகை வழிபாடும் இடம்பெற்றிருந்தமையை இனிது புலப்படுத்தல் காணலாம்.

அவுணரை நேரே பொருது கொன்றானாகிய திருமால் வீற்றிருக்கும் அம்மலையின்கண் மரக்கிளைகளின் இடத்தவாகிய மயில்கள் அகவவும், குருக்கத்தி இலையுதிர அதன்கண் இருந்து குயிலினம் கூவவும் முழைக்கண் சிலம்புகின்ற இசை சுருதியையுணர்த்துகின்ற குழலொழியும் மிடற்றுப்பாடலும் முழவோசையும் எதிர்ந்தாற் போன்றன.
“பகர்குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நாநவில் பாடல் முழவெதிர்ந்தன்ன, சிலம்பின்” [15 : 42-4] என்று உவமை கூறினமையால் தெய்வ வழிபாட்டில் குழலொலியும் தாளமும் மிடற்றுப் பாடலும் முழவோசையும் இடம் பெறுவன என்பது பெறப்படும்.

தனது உந்தித் தாமரையொக்கும் கண்ணை யுடையனாய் நீர் கொண்ட கார்முகிலும் இருளும் நீல மணியும்போலும் திருமேனியனாய் எல்லாவுலகினும் வெளிப்பட்டு அவ்விடத்து வாழும் உயிர்த்தொகுதிகளின் மயக்கத்தைச் செய்யும் பிறவித் துன்பத்தைக் களைவோன் அன்பினால்இருங்குன்றத்தின்கண் எழுந்தருளியுள்ளான் என்பதனை விளக்குவது,
“பவத் தாமரைபுரையுங் கண்ணன்
வெளவற்காரிருள் வயங்குமணி மேனியன்
எவ்வயினுலகத்துந் தோன்றியவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பஙகளைவோன்
அன்பது மேஎய் இருங்குன்றத்தான்'” (பரி. 15 : 49 - 58)
எனவரும் பரிபாடற் பகுதியாகும். கஇிருமாலின் அர்ச்சாவதாரத்தை விரித்துரைப்பதாகிய இப்பகுகஇியில் “எவ்வயி னுலகத்தும்” எனச் சகமாகிய உலகமும் “மன்பது' எனச் சீவனாகிய உயிர்த் தொகுதியும், “மன்பது மறுக்கத் துன்பங்களைவோன்' எனப் பரமாகிய இறைவனும் ஆக முப்பொருளுண்மை குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

திருமால் முழுமுதற் பொருள் என்னும் தன் இறைமை நிலையில் இருந்து கொண்டே உலகில் முதலினும் இடையினும் இறுதியினும் படைப்பு, அளிப்பு, அழிப்பு என்னும் தொழில் வேற்றுமை பற்றி உயிர்களை உய்வித்தற் பொருட்டுப் பல்வேறு பிறப்புக்களையுடையனாக இவ்வுலகிற் பிறந்தருளுதலாகிய அவதாரங்களை 'மேற் கொள்கின்றான் என்பதும் அங்ஙனம் அருள் காரணமாக இவ்வுலகிற் பிறப்பினும் அவ் அவதாரங்கள் அனைத்தும் அவனது இச்சை வயத்தால் கொள்ளப்படுவனவேயன்றி ஏனையுயிர்களைப் போன்று தன்னைப் பிறப்பிப்பார் ஒருவருமில்லாத் தனிமுதல்வன் திருமால் என்பதும் வைணவ சமயக் கோட்பாடாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

“முதன்முறை இடைமுறை கடைமுறை உலகத்துப்
பிறவாப் பிறப்பிலை பிறப்பித் தோரிலையே” (பரி. 3 : 71, 72)
எனவரும் பரிபாடலடிகளும், “உலகில் முதலினும் இடையினும் இறுதியினும் படைப்பு அளிப்பு அழிப்பு என்னுந் தொழில் வேற்றுமைபற்றிப் பிறவாப் பிறப்புடையையல்லை; - அங்ஙனம் பிறந்து வைத்தும் பிறப்பித்தோரை உடையை யல்லை” எனவரும் பரிமேலழகருரையும் இக்கொள்கையினை விளக்குதல் அறியத்தகுவதாகும்.

உயர்வறவுயர்ந்த முழுமுதற் பொருளாற். பெறும் வீடுபேற்றினைப் பெரும்பெயர் எனவழங்குதல் தமிழ் மரபு. அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருக: (269) என்பது திருமுருகாற்றுப்படை. “பிறர்க்குப் பெறலரிய பெரும் பொருளையுடையமுருக: என்பது இவ்வடியின் பொருள். பெயர்-பொருள். பெரும் பெயர் - பெரும்பொருள். “பெரும்பொருள்” என்றது வீடுபேற்றினை என்பர் நச்சினார்க்கினியர். திருமாலிருஞ்சோலை மலையில் காத்தற் கடவுளாகிய திருமால் கண்ணனும், நம்பி மூத்தபிரான் ஆகிய பலதேவனும் என இருவராக எழுந்தருளி பெறுதற்கு அரிய வீடுபேற்றினைத் தன்னடியார்க்கு வழங்க வல்ல பேரருளாள
ராகத் திகழ்தலின் பெரும் பெயர் இருவராகிய அவ்விருவரையும் வழிபட்டு இக்குன்றத்து அடியின்க௧ண் உறைதல் எமக்கு எய்துக வென்று தொழுதுவேண்டுதும் என்பார், “இருங்குன்றத் தடியுறையியைகெனப், பெரும் பெயரிரு வரைப் பரவுதுந் தொழுதே? (பரி : 15 : 65-66) எனப் போற்றுவர் இளம் பெருவழுதியார்.

சங்கச் செய்யுட் களில் தஇருமாலைக்குறித்தனவாக
அஞ்சன உருவன், அரவணை அசைய நேமியான், ஆழி
முதல்வன், ஆழியான், ஆலமர் கடவுள், சேவலோங்கு உயர்
கொடியோன், ஞால மூன்றடித்தாய முதல்வன், இஒஇரிச்
செல்வன், இஇரியோன், இருமறுமார்பன், துழாய்ச் செல்வன்,
துழாய் மார்பினன், துழாயோன், துளபஞ்சூடிய அறிதுயி
லோன், நிலந்தரு இருவின் நொடி யோன், நீனிற வண்ணன்.
சங்கசீசெய்யபுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . தாத

நெடியோன், நேமியான், பாம்பணைப் பள்ளியமர்ந்தோன், புட்கொடி வெய்யோன், புள்மிசைக் கொடியோன், புள்ளணிநீள் கொடிச் செல்வன், பொன்புனை உடுக்கையோன், மாஅல், மால், மாயவண்ணன், மாயவன், மாயோன், மீயோன், முந்நீர்வண்ணன், வள்ளுருள் நேமியான், வாய்மொழிப்புலவன், வேதமுதல்வன் என்ற தொடர்கள் காணப்படுகின்றன.

கருமை நிறமும், நீலமணிபோலும் ஒளியும்வாய்ந்த திருமேனியை உடையவர் திருமால் என்பதும், சக்கரப் படையினையும், சங்கினையும் திருக்கைகளில் ஏந்தியவர் என்பதும், பொன்னாடை உடுத்தவர் என்பதும், துழாய் மாலை அணிந்தவர் என்பதும், இருமகள் அமர்ந்த மார்பினை உடையவர் என்பதும், துளபமாலை அணிந்தவர் என்பதும், பாம்புக்குப் பகையாகிய கருடனை ஊர்தகியாகவும் கொடியாகவும் உடையவர் என்பதும், பாற்கடலில் பாம்பணையிற் பள்ளி கொண்டுள்ளார் என்பதும் புலனாகும்.

படைத்தற் கடவுளாகிய நான்முகளைத் தன் உந்திக் கமலத்திலிருந்து தோற்றுவித்ததும், குறள் வடிவு கொண்டு மாவலிபால் மூவடி மண்வேண்டி நெடியோனாய் மூவுலகும் ஈரடியால்அளந்ததும், அவுணர்களை அழித்ததும், கேசி (கூந்தல்) என்னும் குதிரைவடிவாகிய அவுணனைக் கொன்றதும், பாம்பால் விழுங்கப்பட்ட. திங்களை விடுவித்த தும், அவுணர் ஏறிவந்த களிற்றின் நுதலில் ஆழியை அழுத்தி அதனை ஓடச் செய்ததும், அவுணர்களால் மறைக்கப்பட்_ட. ஞாயிற்றை மீண்டும் விசும்பில் நிலைநிறுத்தி மன்னுயிர்களின் துன்பம் துடைத்ததும் இருமால் பன்றி உருக்கொண்டு தோன்றி நிலமகளைத் தனது கோட்டில் ஏந்திக் காத்ததும், பிரகலாதன் பொருட்டுத் தூணில் நரசிங்க வடிவாய்த் தோன்றியதும் இராமனாக அவதரித்துத் தன் தேவியைக் கவர்ந்த இராவணனைக் கொன்றழித்தற் பொருட்டுத் தனுக்கோடியில் ஓராலமரத்தின் நிழலில் தன் நண்பர்களுடன் அமர்ந்து ஆழ்ந்து சந்தித்ததும் கண்ணனாக அவதரித்த நிலையில் கண்ணனும் அவனுடைய - தமையனாகிய பலதேவனும் என இரு பெருந் தெய்வமாகப்
போற்றப்பெற்றமையும் ஆகிய திருமாலின் அவதார நிகழ்ச்சிகள் பரிபாடலில் டம் பெற்றுள்ளன. கண்ணன் தொழுநை ஆற்றில் நீராடும் ௮1! மகளிருடைய ஆடையை. கவர்ந்து குருந்தில் மேல் ஏறி அமர்ந்தபோது அங்கே பலதேவன் வரக்கண்டு அக்குருந்தின் கிளைகளைத் தாழ்த்தி ஆயமகளிர்தழை உடையால் தம் அற்றம் மறைக்குமாறு செய்ததும், தன் ஊர்தியாகிய கருடன் செங்கண்மாலே எனக் கதறும்படி அவனைத் தன் கால் விரலாலே அழுத்தியதும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் பரசுராமனாகிய மழுவான் நெடியோன் மன்னர் மரபினரைக் குலமறக் கொன்று வேள்வி செய்ததும் ஆகிய செய்திகள் சங்கச் செய்யுட்_களில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். உலகம் எல்லாவற்றையும் தோற்றி ஒடுக்கும் முழுமுதற் பொருளாகிய சிவபெருமானும், காத்தற் கடவுளாகிய இருமாலும் ஒருவரே என உணர்த்தும் முறையில் பண்டையோரால் வழிபடப்பெற்ற சங்கர நாராயணர் திருமேனி, செந்நிற அந்தவானமும், கருநிறக் கடலும் ஒருங்குசேர்ந்த இயற்கைத் தோற்றத்திற்கு உவமையாக அகம்.. 360-ஆம் பாடலில் ஆளப்பெற்றுள்ள குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் சிவபெருமான் திருமேனியும் திருமால் திருமேனியும் அவற்றிடையே பொருளால் வேறுபாடில்லை - என்னும் ஒருமைத் தன்மை இனிது புலனாதல் காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

திருமகள்
.... இருமால் வழிபாட்டில் இருமாலின் தேவியாகிய
திருமகளும், திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய
நான்முகனும், திருமாலின் மக்களாகக் காமன், சாமன்
என்பவர்களும் சார்பு நிலைத் தெய்வங்களாக இடம்
பெற்றுள்ளனர். திருமாலின் தேவியாகிய திருமகள்
அம்முதல்வனது மார்பில் அமர்ந்துள்ளமை
“செய்யோள் சேர்ந்த நின் மார்பின் அகலம்” (பரி.) எனவும்,
“மாயவன் மார்பில் திருப் போல” (கலி.)
எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களில் குறிக்கப் பெற்றது. ருமகளாகிய தேவியைத் தன் மார்பகத்துக்
கொண்டமை பற்றித் “திருவமர் மார்பன்” எனவும் “இருமறு. மார்பன்” எனவும் திருமால் போற்றப் பெற்றுள்ளார்.
திருமகள் தன் இரு மருங்கும் இரண்டு யானைகள் நின்று பூநீர் மேற்சொரியச் செந்தாமரை மலர்மேல் எழுந்தருளியிருக்கும் தோற்றம்,
““கதிர்விரி கனை சுடர்க் கவின்கொண்ட கடுஞ்சாரல்
எதிர்எதிர் ஓங்கிய மால்வரை யடுக்கத்து
அதிர் இசை யருவிதன் அஞ்சினை மிசைவீழ
முதிரிணர் ஊழ்கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை
புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித்
_திருநயந் திருந்தன்ன தேங்கமழ் விறல் வெற்ப” ப (கலி. 44)

எனவரும் குறிஞ்சிக் கலியில் உவமையாக .: க்தாளப் பெற்றுள்ளது. “எதிரெதிரே ஓங்கிய பெருமை. .யுடைய மலையினது அகற்சியையுடைய சாரலில் இள ஞாயிற்றினது விரிகின்ற கதிர்களையுடைய அழகிய மாணிக்கப் பாறையிலே வளர்ந்து நிற்கப்பட்_டு முழங்குகின்ற ஒசையினை உடையவாய் இருபக்கத்து மலைகளினின்றும் வீழ்கின்ற அருவி தன் அழகிய களைகளிலே வீழ்தலாலே முகிர்ந்த பூங்கொத்துக்கள் அலர்தல் கொண்ட முழவு போலும் அடியினையும் நெருப்புப் போலும் பூக்களையும் உடைய வேங்ககைமரம் புள்ளி பொருந்திய மத்தகத்தினையும் அழகினையும் உடைய இரண்டு யானைகள் இரு மருங்கும் நின்று பூவொடு கூடிய நீரைச் சொரியா நிற்க, எக்காலமும் முறுக் கவிழ்ந்து மலர்ந்துள்ள செந்தாமரை மலரினது அழகிய அகவிதழிலே வீறு பெறத் திருமகள் விரும்பி எழுந்தருளியிருந்தாலொத்த தேனாரும் வெற்றியினையுடைய வெற்பனே' என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும். மாணிக்கப் பாறைக்குச் செந்தாமரை மலரும், அதன் நடுவே பொன்மலர்பூத்த தோற்றமுடைய வேங்கை மரத்துக்குத் இருமகளும், அம்மரத்தின் இருபுறத்தும் அருவி நீரைச் சொரியும் நிலையில் உயர்ந்து தோன்றும் மலைகள் இரண்டிற்கும், திருமகளின் இருமருங்கு நின்றும் பூநீர் மேற் சொரியும் இரண்டு யானைகளும் உவமையாகக் கூறப்பட்டன. இங்ஙனம் இருமலைகளினிடையே யமைந்த மாணிக்கப் பாறையின் நடுவே பொற்பூக்களுடன் தோன்றும் வேங்கை மரத்திற்கு இரு வேழங்கள் பூநீர் மேற் சொரியச் செந்தாமரை மலரில் எழுந்தருளிய வேழத்திருமகளை (கஜலட் சுமியை) உவமையாகக் கபிலர் எடுத்துக் கூறுதலால் வேழத்துருமகள் இருமேனி சங்க காலத்திற் பலராலும் வழிபடப் பெற்ற தொன்மையுடையதென்பது நன்கு துணியப்படும். செந்தாமரை மலர் தன்கண் திருமகள் வீற்றிருத்தல் பற்றித் தெய்வத்தாமரை எனச் இறப்பிக்கப் படுவதாயிற்று. இிருமகள் செந்தாமரை மலரில் வீற்றிருத்தலால் அத்தெய்வத்திற்கு மலர் மகள் என்பதும் பெயராயிற்று. தாமரையினாள் எனப் போற்றுவர் திருவள்ளுவர். இருமகளுக்குச் செந்நிறத்திருமேனி உடைமை பற்றிச் செய்யோள் எனவும் அழைத்தலுண்டு.

“செய்யோள் சேர்ந்த நின்மாசிலகலம்” என்பது பரிபாடல். பொருளுடமைக்குத் தெய்வமாக விளங்குபவள் திருமகள். எனவே திருமகளது அருள் நோக்கு மக்களுக்குத் திருவுடை ைைடயாகக் கருதப் பெற்றது.

நான்முகன்
எல்லாம்வல்ல இறைவன் துணையால் உலகைப் படைக்கும் தொழிலுடையவன் நான்முகன் ஆவான். உலகில் உயிர்கள் உடம்பொடு படைக்கப் படுவதற்கு முன்னே திருமாலுடைய உந்தித் தாமரையில்முதற்கண் தோன்றியவன் நான்முகன். இச்செய்தி,
“நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டின்”” (பெரும்பாண். 402 - 404) எனவரும் தொடரால் புலனாகும். உலகப் படைப்பிற்கு முன் தோன்றியவன் நான்முகன் ஆதலின், அத்தெய்வத்தைத்
“தொடங்கற்கண் தோன்றிய முதியவன்”' (பாலைக்கலி 1) எனவும்,
“ ஆதியந்தண ன்” (பரிபாடல் 5)
எனவும் சங்கச் செய்யுட்_கள் கூறும். இவன் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றினமையால், இத்தெய்வத்தைத் திருமாலின் மைந்தனாகப் போற்றுதல் மரபு. நான்முகனின் தந்ைத திருமால் என்னும் இம்மரபு,
“வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப்
பூவினுள் பிறந்தோனும் தாதையும்
நீ யென மொழியுமால் அந்தணர் அருமறை” (பரி, 3:12-14) எனவரும் பரிபாடற் பகுதியால் புலனாதல் காணலாம்.

தாமரைப் பூவினிற் பிறந்தமையால் “மலர் மிசை முதல்வன்: எனவும், “பூவன்' எனவும் பரிபாடல் கூறும். “புலமும் பூவனும் நாற்றமும் நீ' எனவரும் பரிபாடற் றொடரில் பூவினிற் றோன்றிய நான்முகன் பூவன் என்ற பெயரால் குறிக்கப் பெற்றுள்ளமை காண்க. நான்முகன் - என்பது நான்கு முகங்கள் உடையனாதல் பற்றிய காரணப் பெயர்.

அசுரரைத் தடிந்து அமரரைக் காத்த முருகப் பெருமான் படைத்தற் கடவுளாகிய நான்முகனை வெகுண்டு தண்டித்தானாக, அந்நிலையில் அம்முதல்வனது வெகுளியைத் தணித்து நான்முகளை மீண்டும் படைப்புத் தொழிற்கு உரியனாக்குதல் வேண்டிக் கருடக் கொடியோ னாகிய இிருமாலும், உமையொருபாகளாகிய இறைவனும், தேவர் முப்பத்துமூவரும், பதினெண்கணங்களும் முருகப் பெருமானைக் காண வான் வழியே வந்தனர் என்ற செய்தி திருமுருகாற்றுப்படையில் (இருவாவினன்குடி பற்றிய பகுதியில்) விரித்துரைக்கப்பெற்றது. முருகப்பெருமான் நான்முகனை வெகுண்டமை பற்றிய செய்கி புராணங்களில் வேறு வேறாகக் கூறப் பெற்றுள்ள து. இருக்கயிலாய மலையில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கச் செல்லும் நான்முகன் அங்கு எழுந்தருளிய இளங்குழந்தையாகிய முருகப் பெருமானை வணங்காது சென்றானாக, அந்நிலையில் முருகப் பெருமான் நான்முகனை அழைத்துப் பிரணவத்தின் பொருள் யாதென வினவ, நான்முகன் பொருள்கூற அறியாது மயங்கியநிலையில் அவனைச் சிறையிலடைத்து அவனுக்குரிய படைத்தற் றொழிலைத் தானே மேற்கொண்ட ருளினான் எனக் கந்தபுரணாம் கூறும். முருகப் பெருமான் அவுணரை அழித்துத் தேவரைக் காத்தருளிய நிலையில் விண்ணோர்க்கரசனாகிய இந்திரன் தன்மகள் தெய்வயானையாரை முருகனுக்குத் திருமணம் செய்து கொடுத்த விடத்தே, முருகன் தன் கையிலுள்ள வேலை நோக்கி நமக்கு எல்லாம் தந்தது இவ்வேல்” என்று கூறியருள, அருகே இருந்த நான்முகன் “இவ்வேலிற்கு இந்நிலை என்னால் வந்ததன்றோ?' என்றானாக, அதனைக் கேட்ட முருகன் “நம்கையில் வேலுக்கு நீ கொடுப்பதொரு சக்தி உண்டேோ?' என்று சினந்து “இவ்வாறு கூறிய நீ மண்ணிடைச் செல்வாய்: எனச் சபித்தனன் எனவும், அயனது சாபத்தை நீக்கியருள வேண்டும் என முருகப் பெருமானை வேண்டிக் கொள்ளுதற் பொருட்_டே திருமால் முதலிய தேவர்கள் ஆவினன்குடியை அடைந்தனர் எனவும் நச்சினார்க்கினியர் ஒரு கதையினைக் குறிப்பிடுகின்றார், இக்கதைக்குரிய ஆதாரம் இன்னதென்று அறிந்துகொள்ள இயலவில்லை. அது எவ்வாறாயினும் இருமால் முதலியோர் முருகப் பெருமான் எழுந்தருளிய திருவாவினன்குடிக்கு வந்ததன் நோக்கம் நான்முகனிடத்தே முருகப்பெருமான் கொண்டுள்ள வெகுளியைத் தணித்தற்பொருட்_டே என்பது “நான்முக ஒருவற் சுட்டி என்ற தொடரால் நன்கு துணியப்படும்.

சிவபெருமான் முப்புரங்களை அழித்தற்கு வையமாகிய தேரினை ஊர்ந்து புறப்பட்டபோது நான்முகன் தேர்ப்பாகனாக இருந்து அத்தேரைச் செலுத்தினான் என்ற செய்தி, 66 6 புத ந
ஆதியந்தணன் அறிந்து பரி கொளுவ
வேத மாபூண் வையத் தேர் ஊர்ந்து” (பரி. 5)
எனவரும் தொடரில் விரித்துரைக்கப்பெற்றது. படைத்தற் கடவுளாகவும் திருமாலின் மைந்தனாகவும் நான்முகன் சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட் டி ௬ுப்பினும், அத் தெய்வத்துற் கெளத் தனி வழிபாடு தமிழகத்தில் நிலவியதாகத் தெரிய வில்லை. புறநானூறு 56ஆம் பாடலில் மணிமிடற்றோனாகிய சிவனும், பனைக் கொடியோனாகிய பலதேவனும், கருடக் கொடியோனாகிய திருமாலும், செவ்வேளாகிய முருகப் பெருமானும்
“ஞாலங் காக்குங் கால முன்பிற்
றோலா நல்லிசை நால்வர்”
எனப் போற்றப் பெற்றுள்ளனர். ஒரு குழை ஒரு தேவனாகிய பலதேவன் பரிதியஞ் செல்வனாகிய ஞாயிறு, மீனேற்றுக் கொடியோனாகிய காமவேள், அவன் தம்பியாகிய சாமன், ஆனேற்றுக் கொடியோனாகிய சிவன் ஆகிய ஐந்து தெய்வங்களுடைய நிறத்தின் தன்மை போலப் பூங்கொத்துக்கள் பொருந்திய வெண்கடம்பும், அரும்புகள் அலர்ந்த செருந்தியும், ஞிமிறுகள் ஆரவாரிக்கும் காஞ்சியும், பூக்கள் நெருங்கிய ஞாழலும், பூக்கும் காலத்து எதிர் இகாண்ட. அரும்புகளை உடைய இலவமும் அழகுபெற்று விளங்க, இளவேனில் வந்த தோற்றம் பாலைக்கலி 25ஆம் பாடலில் உவமை வாயிலாக விரித்துரைக்கப்பெற்ற து. இப்பாடலில் மீனேற்றுக்கொடியோன் நிறத்தை ஓத்துப் பூப்பது காஞ்சி எனவும், அவனுடைய தம்பி சாமன் நிறத்தை ஒத்துப் பூத்தது ஞாழல் எனவும் குறிக்கப் பெற்றமையால் உடன் பிறந்தாராகிய காமன், சாமன் என்ற இருவரும் மேனியின் நிறத்தால் வேறுபடுவர் என்பது புலப்படுத்தப் பெற்றது. காமவேள் தம்பியின் பெயர் சாமன் என்பது,
“கவர்கணைச் சாமனார் தம்முள்” (கலி. 29:: 34)
எனக் காமன் குறிக்கப் பெற்றிருத்தலால் புலனாகும். காமன், சாமன் என்னும் இவ்விருவர்க்கும் தந்தையாவான் இருமால் என்ப து
“இருவர் தாதை இலங்கு பூண்மால்”
எனவரும் பரிபாடலடியினல் அறியப்படும்.மாலின் மைந்தராகிய இவ்விருவருள் கருவேளாகிய காமனுக்குச் சங்க காலத்தில் தனிக் கோயில் அமைந்திருந்தது என்பதும், மணமாகாத இளமகளிர் அக்கோயிலை அடைந்து பால்மடை கொடுத்துக் காமனை வழிபடுவர் என்பதும், 6 ய் ச ந ச உ
படையிடுவான் மற்கண்டீர் காமன்
மடையடும் பாலொடு கோட்டம்புகின்”” (முல்லைக்கலி 9)
எனவரும் கலித்தொகைத் தொடரால் அறியப்படும். “இவள் தெய்வத்திற்குப் பலியாகச் சமைக்கும் பாலோடே காமன் கோயிலிலே செல்லின், அக்காமனும் நெஞ்சழிந்து தன்கையிற் படையை மிகவும் போகடுவன்” (&ழே எறிவான்).
காமன் மாயோன் மகனாதலின் அவனும் அந்நிலத்திற்குத்
தெய்வமாதல் “அவ்வகை பிறவும்' (தொல். அகம் : 18)
என்றவழி “வகை' என்பதனாற் கொள்ளப்பட்டது” என மேற்காட்டிய தொடர்க்கு நச்ஏினார்க்கினியர் உரையும் விளக்கமும் தருவர். முல்லை நிலத்திற்குத் தெய்வமாக மாயோன் கூறப்பட்டதனை அடுத்து அவன் மகனாகிய காமன் முல்லை நிலத்தின் தெய்வ வகையாகக் கருதி வழிபடப் பெற்றனன் ன்பது நச்சினார்க்கினியர் உரை விளக்கத்தால் உய்த் துணரப்படும். இளவேனிற் காலத்திலே காமவேளுக்குத் தமிழகத்தில் விழா எடுக்கப் பெற்றது என்ற செய்து,
.. “காமவேள் விழவாயின்”” ப (லி. 22) எனவும்,
“உயர்ந்தவன் விழவினுள்”” (கலி. 30) எனவும்,
“வில்லவன் விழவினுள்” (கலி. 35)
எனவும் வரும் கலித்ததொகைத் தொடரால் இனிது புலனாகும். காமவேள் மகர மீன் எழுதிய கொடியை உடையவன் என்பது,
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . ௦ 22௮

வெண்கண்ணானைா.
“மீனேற்றுக் கொடியோன்”
எனவும்,
“சுறாக் கொடியோன்” (கலி. 144)
எனவும் வரும் தொடர்களால் குறிக்கப்பெற்றது. பிரிந்த காதலர் உள்ளத்தே காம உணர்வினைத் தோற்றுவித்து அவர்களை ஒருங்கு கூட்டுதல் காமனது தொழில். ஆதலின் காமன் கரும்பு வில்லிற் றொடுத்து எய்யும் மலரம்பு பிரிந்தாரை வருத்தும் தன்மையதாகும். இந்நுட்பம்,
“தன்னெஞ்.சொருவற் கினைவித்தல் யாவர்க்கும்
அன்னவோ காம நின் அம்பு” (கலி. 147)
எனவரும் தொடராலும் “காமா! நின்னுடைய அம்புகள் தனக்கு உரியதாகிய நெஞ்சினைத் தன்மேல் அன்பிலாதான் ஒருவன் பொருட்டு வருந்துவித்தல் சிலர்க்கேயன்றி எல்லார்க்கும் ஆம் தன்மையை உடையவோ? அல்லவோ?” எனவரும் நச்சினார்க்கினியர் உரையாலும் புலப்படுத்தப் "பெற்றது. காமனுக்கு வில் கரும்பாகும். இச்செய்தி,
“நெடுமென்றோள்
. பெய்கரும்பு ஈர்க்கவும் வல்லன்” (கலி. 142-143)
ப எனவரும் தொடராலும் “நெடிதாகிய மென்தோளிலே . காமன் சிலையாகிய எழுதுகரும்பை எழுதவும் வல்லன்” எனவரும் உரையாலும் உய்த்துணரப்படும்.

இரதி
'காமவேளின் மனைவியின் பெயர் இரதி என்பதாகும்.
"*இரதி காமன் இவள் இவன் எனா” (பரி. 19 : 48)
எனவரும் பரிபாடலடிகளில் காமனும், அவன் தேவியாகிய இரகியும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். குறிஞ்சிக் கடவுளாகிய முருகப் பெருமான் மாலின் தங்கையாகிய கொற்றவைக்கு மகனாதலின் திருமாலுக்கு மருகன் என்றும் உறவு முறையில் வைத்துப் போரு:” பெற்றுள்ளான்.
“மாஅல் மருகன்” பரி. 19 : 57)
எனவரும் பரிபாடற்றொடர் இவ்வுறவுமுறையினைப் புலப்படுத்தல் காண்க.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

முருகன் வழிபாடு
மைவரை உலகமாகிய குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகத் தொல்காப்பியம் கூறும் சேயோன் வழிபாடு முருகமர் மாமலைகள் எல்லாவற்றிலும் குன்றுதோறாடல் என்ற முறையில் பொதுவாக நிகழ்வதாயினும், கடைச் சங்ககாலத்தில் மதுரையை அடுத்துள்ள திருப்பரங்குன்றம், கடற்கரை ஊராகிய திருச்சரலைவாய், மலையைச் சார்ந்த ஊராகிய இருவாவினன்குடி, திருவேரகம், மலைப்பகுஇயாகிய பழமுதிர்சோலை என்னும் இருப்பதிகளே மிகவும் இறப்பு முறையில் நிகழ்ந்து வந்தது. இச் செய்து, பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படையிலும், எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலிலும் நன்கு விரித்துரைக்கப் பெற்றுள்ளது.

தொல்காப்பியனார் காலத்தில் வள்ளிநாச்சியார்க் குரிய கணவனாகப் போற்றப்பெற்ற முருகப் பெருமான் கடல் நடுவே இருபேருருவினனாய் எதிர்த்து நின்ற அவுணர் தலைவனாகிய சூர்மாவைத் தன் திருக்கையில் ஏந்திய வேற்படையால் தடிந்தும், குருகொடு பெயர்பெற்ற குன்றமாகிய கிரெளஞ்ச மலையைப் பிளந்தும், தேவர்களது துயரைத் துடைத்து வானோர் தவைனாகிய இந்திரன் மகள் தெய்வயானையைத் திருமணம் புரிந்து வள்ளி, தெய்வயானை என்னும் இருவர்க்கும் உரிய கணவனாகவும், ஆலின்£&ழ் அமர்ந்து முனிவர்க்கு அறம் உரைத்தருளிய சிவபெருமானுக்கும், அவ்வ ணட பிரிவின்றி இணைந்த ஆற்றலாய்
“் இழையணி சிறப்பிற் பழையோள்”
எனவும்,
“வெற்றி வெல்போர்க் கொற்றவை” எனவும், 66 ௨99 மலைமகள எனவும் போற்றப்பெறும் உமையம்மையார்க்கும் உரிய. மைந்தனாகவும் இயைத்துப் போற்றப் பெறுகின்றான். தொல்காப்பியனாரால் நிலங்கடந்த நிலையிற் பொ.துவாகக் குறிக்கப்பட்ட கொற்றவை என்னும் தாய்த் தெய்வம் கடவுள் எனப் போற்றப் பெறும் சிவபெருமானுக்குரிய சக்கியாகவும், முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனுக்குத் தங்கையாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமாகிய சேயோனுக்குத் தாயாகவும் எண்ணி வழிபடப் பெறும் உறவுநிலையைப் பெற்றுக் காடுகிழாளாகவும், முல்லையும் குறிஞ்சியும் திரிந்த பாலை நிலத் தெய்வமாகவும் வழிபடப்பெறுவதாயிற்று. கொற்றவை மைந்தனாகிய முருகன் அவள் தமையனாகிய திருமாலுக்கு மருகனாகப் போற்றப் பெறும் உறவுமுறை பரிபாடலில் இடம் பெற்றுள்ளமை முன்னர்க் குறிப்பிடப்பெற்றது. குறிஞ்சிக் கடவுளாகிய முருகப்பெருமான் சேயோன், செவ்வேள், நெடுவேள் என்ற பெயர்களால் சங்கச் செய்யுட்_களிற் குறிக்கப் பெற்றுள்ளான். செந்நிறம் வாய்ந்த இருமேனியுடைமை பற்றிச் சேயோன் என்பதும், யாவராலும் விரும்பப்படும் அழகிய நெடிய திருமேனியை உடையனாதல் பற்றிச் செவ்வேள் - நெடுவேள் என்பதும் முருகப்பெருமானுக்குரிய திருப்பெயர்களாயின. இப்பெயர்கள் எல்லாவற்றினும் தலைமை வாய்ந்ததாகவும், மக்கள் எல்லோராலும் வழங்கப்பெறும் பொதுமை யுடையதாகவும் திகழ்வது முருகன் என்னும் திருப்பெயரேயாகும். முருகு: தெய்வத்தன்மை, தெய்வத்தன்மை நிரம்பப் பெற்றவன் என்ற பொருளில் முருகன் என்ற பெயர் அம்முதல்வனுக்கு உரியதாயிற்று. முருகு என்னும் சொல் அழகு, இளமை, நறுமணம் எனப் பொருள் தரும் ஒரு சொல்லாகும். மாறாத பேரழகும், என்றும் குன்றா இளமையும், மலரின்௧ண் மணம் போன்று உயிர்க்குயிராய் உள்நின்று தோன்றும் தெய்வ மணமும் உடைய முழுமுதற் பொருளாகச் செவ்வேள் விளங்குதலால், குறிஞ்சிக் கிழவனாகிய அம்முதல்வனை முருகன் என்ற பெயரால் பண்டைத் தமிழ்ச் சான்றோர் போற்றி வழிபடுவாராயினர்.

குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகனுக்குப் பூசனை புரிவோன் அம்முதல்வனது படைக்கலமாகிய வேலினை ஏந்தி ஆடுதலின் வேலன் என்று அழைக்கப்பட்டான். வேலன் ஆடும் ஆடலில் மலரின் உள்ளிருந்து எழும் மணம் போன்று அவனது உயிருணர்வின் வாயிலாகத் தெய்வம் பவவெளிப்பட்_டுத் தோன்றுதலின், தெய்வத்தன்மை வாய்ந்த அவனது ஆடல் வெறி எனப் பெயர் பெறுவதாயிற்று. வெறி: மணம்; ஈண்டுத் தெய்வ மணத்தினைக் குறித்து நின்றது. இவ்வாறு தெய்வம் தன்மேல் ஆவேடிக்கப்பெறும் நிலையில்
முருகனை வழிபடும் முறையினை அறிந்து வெறியாடல் நிகழ்த்தும் சிறப்பு முருகபூசை செய்யும் வேலவனுக்கு உரியதாதல் பற்றி,
“வெறியறி சிறப்பின் வேலன்”
எனவும், மக்களது நோய் நீங்கத் தெய்வத்திற்குப் பலியிடுதல் வேண்டும் என உயிர்க் கொலை புரிதலின் வெம்மைதரும் வாய்மையுடை_மைபற்றி, ௬. ந. க 54
“வெவ்வாய் வேலன்


எனவும் அடைபுணர்த்து ஓகஇனார் தொல்காப்பியனார். மலைநிலமக்கள் தம் குடியில் மணமாகாத இளமகளிர் மனஞ்சோர்வுற்று உடல் வாட்டமுற்ற நிலையில், அவ்வாட்டத்கிற்குக் காரணம் தம் குல தெய்வமான முருகப்பெருமானது மணங்கமழ் தெய்வத் தோற்றத்தால் தாக்கப்பட்_டு அஞ்சினமையே எனவும், முருகபூசை செய்யும் வேலனை அழைத்து வெறியாடல் நிகழ்த்து முருகப் பெருமானை வழிபட்டால், அம்முதல்வனது திருவருளால் தம் மகளிர் வாட்டம் தீர்ந்து தெளிவு பெறுதல் திண்ணம் எனவும் எண்ணி வேலனைக் கொண்டு கட்டினாலும் கழங்கினாலும் நோயின் காரணமுணர்ந்து வெறியாடல் நிகழ்த்துவர். இந்நிகழ்ச்சி மலைநிலமக்களது அகவியல் வாழ்க்கையில் காணப்படும் மரபாகச் சங்கச் செய்யுட்களில் குறிக்கப்பெற்றுள்ளது. மூருகப்பெருமானை வழிபட்டு நிகழ்த்தும் இவ்வெறியாடலில் மணங்கமழ் தெய்வமாகிய செவ்வேள் தன்னை வழிபடும் வேலன் மேல் விரவித் தோன்றி (ஆவே௫த்து) வேலனது வாய்மொழி வழியாக முன்நிகழ்ந்த தனையும், பின்னர் நிகழ இருப்பதனையும் அறிவுறுத்தி அருள்வான் என்பது மலைவாழ்நர் வாழ்வியலிற் காணப்படும் நம்பிக்கையாகும்.

ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொண்டெொழுகும் களவொழுக்கத்துள்ளே தலைமகள் தன் ஆருயிர்த் தலைவனை அடையப் பெறாது தனிமையுற்று வருந்திய நிலையில் அவளது வாட்டத்கிற்குரிய காரணம் அறியப்பெறாது வருந்திய செவிலி இவளுக்கு நேர்ந்துள்ள வாட்டம் எதனால் ஆயிற்று என ஐயுற்றுத் தலைமகளது வாட் டத்தைத் தணித்தற்பொருட்டு முன் நிகழ்ந்ததனையும், பின் நிகழ்வதனையும் கட்டினாலும் கழங்கினாலும் எண்ணி அறிவாரை அழைத்துக் கேட்ட. பொழுது, அவர்கள் தெய்வத்தால் வந்த வருத்தம் என்று கூறினமையால், முருகபூசனை பண்ணும் வேலனை அழைத்துத் தம்மனைக்கண்வெறியாடல் நிகழ்த்துதலும், அதன்பயனாக முருகப் பெருமான் அருளால் தலைமகள் -நோய் தணியப்பெறும் என நம்புதலும் இயல்பு. கட்டினால் எண்ணி அறிபவள் கட்டுவிச்சி. கட்டு என்பது சிறு முறத்தில் பரப்பிய நெல்லைக் கொண்டு முன் நிகழ்ந்ததனையும், இனி நிகழ்வதனையும் எண்ணிப் பார்த்துச் சொல்லும் ஒருவகைக் குறி. இக்குறி பார்ப்பவர் கட்டுவித்தி என அழைக்கப்படுவாள்.

“*கட்டுவிச்சி கட்டேறி
சீரார் சுளகிற் சிலநெல் பிடித்தெறியா
வேரா விதிர்விதிரா மெய்சிலிராக் கைமோவாப்
பேரா யிரமுடையான் என்றாள்”'
எனவரும் இறிய இருமடலும், திருக்கோவையார் 285ஆம் பாடல் உரையும் கட்டுப்பார்த்தலின் இயல்பைப் புலப்படுத்தும். கழங்கு கழற்சிக்காய், கழங்கிளை எண்ணிக் குறி சொல்பவன் வேலன். தன் நோய் தணிவித்தல் காரணமாகத் தன் மனைக்கண் வெறியாட்டு நிகழ இருப்பதனை அறிந்த தலைவி தன் மெலிவிற்குக் காரணம் தன் ஆருயிர்த்தலைவனை அணுகப் பெறாமையே என்பதனை உணராது, முருகனால் ஏற்பட்ட வருத்தமெ ன்றெண்ணி இவ்வெறியாட்டினைத் தொடங்குகிறார்களே; இவ்வெறியாட்டில் முருகப்பெருமான் தோன்றி வேலன் வாயிலாக உண்மையை உணர்த்தின் நம் களவு வெளிப்படுமே எனவும், ஒருகால் தெய்வத்தின் திருவருளால் எனது மெலிவு தரப்பெறுமாயின் என் மெலிவிற்குக் காரணம் தம்முடைய பிரிவன்று எனத் தலைவர் பிறழவுணர்ந்தால் என்னாவது எனவும், அஞ்சுதல் இயல்பு. தலைமகள் உள்ளத்தே தோன்றும் இவ்வச்சம்,
“வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்” (தொல். களவு. 21)
எனவரும் தொல்காப்பியத் தொடரில் குறிக்கப் பெற்றமை காணலாம். “தலைவி வேறுபாடு எற்றினான் ஆயிற்று எனச் செவிலி வெறியாட் டுவிக்கவரும் அச்சத்தினானும் தலைவி குறிவழிச் செல்லாளாம்” என்பது இத் தொடர்க்கு இளம்பூரணர் தரும் உரையாகும். “தலைவி வேறுபாடு எற்றினான் ஆயிற்று என்று வேலனை வினாவி வெறியாட்டு எடுத்தபொழுது தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும்”- என்பது அத் தொடரின் பொருளாம். வெருவுதல் : அஞ்சுதல்; அஃதாவது முன்னமேயே தனது அயன்மையால் கடைப்பிடி இன்றி நெகிழ்ந்து களவொழுக்கத்தின் இன்பமே கருதி ஒழுகும் தலைமகன் இப்பொழுது நமது
ஆற்றாமையைத் தணித்தற்கு முருகனை வழிபட்டு வெறியாடுதலாகிய பிறிதொரு மருந்தும் உண்டு என்று அறிவானானால், அவன் நம்மைத் திருமணம் செய்து கொள்ளும் காலம் மேலும் நீளுமே என்று தலைமகள்
அஞ்சுவள். இங்ஙனம் தலைமகள் வெறியாட்டிடத்தே கொண்ட, அச்சம்,
“பனிவரை நிவந்த பயங்கெழு கவாஅற்
றுனியில் கொள்கையொடு அவர்நமக் குவந்த
இனிய வுள்ளம் இன்னா வாக
முனிதக நிறுத்த நல்க லெவ்வம்
சூருறை வெற்பன் மார்புறத் தணிதல்
அறிந்தன ளல்லள் அன்னை வார்கோற்
செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக்
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புளர்பு இரீ இ
முருகன் ஆரணங் கென்றலின் அதுசெத்து
ஓவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன பலராய் மாண்கவின்
பண்டையிற் சிறக்கஎன் மகட்கெனப் பரை இக்
கூடுகொள் இன்னியங் கறங்கக் களனிழைத்து
ஆடணி யயர்ந்த அகன்பெரும் பந்தர்
வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர்
ஐதமை பாணி யிரீ இக் கைபெயராச்
செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன்
வெறியயர் வியன்களம் பொற்ப வல்லோன்
பொறியமை பாவையின் தூங்கல் வேண்டின்
என்னாம் கொல்லோ தோழி மயங்கிய
மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக
ஆடிய பின்னும் வாடிய மேனி
பண்டையிற் சிறவா தாயின் இம்மறை
அலரா காமையோ அரிதே அஃதான்று
அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி
வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே
செறிதொடி யுற்ற செல்லலும் பிறிதெனக்
கான்கெழு நாடன் கேட்பின்
யானுயிர் வாழ்தல் அதனினு மரிதே” (அகம். 98)
எனத் தலைமகள் தோழியை நோக்கிக் கூறும் அகப்பாடலில் நன்கு புலப்படுத்தப்பெற்றுள்ளமை காணலாம். குளிர்ந்த மலைப்பக்கத்தே நம் தலைவர் நமக்கு வந்தளித்த அவரது ப இனியவுள்ளம் இன்னா வாயினமையின், அத்தலைவர் மார்பு உறுவது ஒன்றினாலேயே தணியும் என்றதனை நம் அன்னை அறியாதவளாகிச் செயலற்ற வுள்ளத்தினளாய் வினவுதலாலே முதுமை வாய்ந்த கட்டுவிச்சியராகிய பெண்டிர் பிரப்பரிசியைப் பரப்பிவைத்துக் கட்டுப்பார்த்து இது முருகனது செயலால் வந்த வருத்தம் என்று கூறுதலால், அதனை உண்மையாகக் கருதி என் மகள் வாட்டம் தவிர்ந்து முன்போல் பொலிவு பெறுவாளாக! என்று தெய்வத்தைப் பரவி மனையிலே இனிய வாத்தியங்கள் ஒலிக்க வெறியாடு களத்தே இயற்றி, அதைச் செய்த பந்தலிலே வெள்ளிய பனந்தோட்்டினைக் கடப்பமலரோடு சூடி இனிய தாளத்தோடு முருகக் கடவுளின் பெரும்புகழினைக் குறித்து வேலன் வெறியாடுதலை விரும்பினால் என்ன ஆகுமோ! அங்ஙனம் வேலன் வெறியாடிய பின்னும் எனது வாடிய மேனி வாட்டம் ர்ந்து முன்புபோற் பொலிவு பெறாதாயின் இக்களவொழுக்கம் பலரும் தூற்றுமாறு வெளிப்படா இருத்தல் அரிது. அஃதன்றியும் என்பொருட்டு அறிவுடைய பெரியோர்கள் தாம் கொண்ட துன்பத்தைக் கண்டு உளமிறங்கி மனம் கமழ் வெற்பனாகிய முருகன் ஒருகால் எனது வாட்டத்தை நீக்கி முன்னைய அழகினைத் தந்தருள்வான் ஆயின், வளையலை அணிந்த நம் தலைவி உற்ற துன்பமும் என்னான் அன்றிப் பிறிதொன்றான் எய்தியது என நம் தலைவர் கேட் டறியின், யான் உயிர்தாங்கி வாழ்தல் அவ்வலர் வேளிப்பாட்டினும் இன்னாதாகும்” என்பது இவ்வகப் பாடலின் கருத்தாகும். இதன்கண் தெய்வத்தை நினைந்து குறிசொல்லும் கட்.டுவிச்சியராகிய மகளிர் தமது குறியாற் புலப்படும் உண்மையினை வெளிப்படச் கூறாது சிலசமயம் மறைத்துப் பொய் கூறும் நிலையும் உண்டென்பது,
“முதுவாய்
பொய்வல் பெண்டிர் பிரப்புளர்பு இரீ இ
முருகன் ஆரணங் கென்றலின்”'
எனவரும் தொடரால் புலனாகும். தலைவியின் மெலிவிற்குத் தலைமகனை அடையப் பெறாமை காரணமாகவும், அவ்வுண்மையை மறைத்து முருகனது அணங்கே தலைவியின் மெலிவிற்குக் காரணம் என்றலின் “பொய்வல் பெண்டிர்” எனப்பட்டனர். களவொழுக்கத்தில்
“கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தால் செய்திக் கண்ணும்
ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்'' (தொல். கள. 25)
செவிலிக்குக் கூற்றாக நிகழும் என்றார் தொல்காப்பியனார். “தலைவியின் மெலிவிற்குரிய காரணங்களைக் கட்டு வைப்பித்தும், கழங்கு பார்த்தும் கண்டறிந்து அவளது மெலிவு ர வேலனைக் கொண்டு வெறியாடுவித்தல் வேண்டும் என இருவரும் பொருந்திய பக்கத்துச் செய்தக்கண்ணும், அவ்வாறு வெறியாட்டு நிகழ்த்தத் தொடங்கிய காலத்துத் தோழி தடுத்து நிறுத்திய நிலையிலும் செவிலிக்குரிய கூற்று நிகழும்” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இக்கூற்றுக்கள் செவிலி தானே கூறும் தன்கூற்றாகவும், தலைவியும் தோழியும் செவிலி கூற்றாகக் கொண்டெடுத்து மொழியப்படுவனவாசவும் சங்கச் செய்யுட் களில் இடம் பெzறுள்ளன.
“்“ அணங்குடை நெடுவரை” (அகம். 22) என்னும் அகப்பாட்டினுள் கட்டுப்பார்த்து வெறிஎடுத்தமை கூறப்பட்டுள்ளது.
“பணிவரை நிமிர்ந்த” ' (அகம். 98)
என்னும் அகப்பாட்டினுள் பிரப்புளர்பு இரீஇ: எனக் கட்டுவிச்சயைக் கேட்டவாறும், “என்மகட்.கு' எனச் செவிலி கூற்று நிகழ்ந்தவாறும் காணலாம். “கடவுட் கற்சுனை: (நற். 34) எனத் தொடங்கும் நற்றிணைப்பாட்டில்,
“தின்னணங் கன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோர்
கடவு ளாயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே'”'
எனத் தோழி வெறியட்டிடத்து வேலன்மேல் ஆவேசித்துத் தோன்றிய முருகப் பெருமானை நோக்கிக் கூறும் கூற்று குறிஞ்சி நிலத் தெய்வமாகிய அம்முதல்வனது முற்றுணர்வுத் தன்மையையும், எத்திறத் தோராயினும் தன்னை அன்பினால் வேண்டி வழிபடுவார் பொருட்டு எளிவந்தருளும் அவ்விறைவனது பேரருட்டிறத்தையும் ஒருங்கு புலப்படுத்துதல் உணரத்தகுவதாகும். எங்கள் தலைவிக்கு நேர்ந்த மெலிவு நினது அணங்குதலால் வந்தது அன்று என்பதனை அறிந்து வைத்தும் நின்னை அன்பினால் வழிபடும் வேலன் வேண்டிக் கொள்ளுதலால் கார்காலத்து மலரும் நறிய கடப்ப மலர் மாலையாகிய முடிமாலையை அணிந்து தலைநிமிர்ந்து வெறியாடும் மனையிடத்தே எழுந்தருளிய, முருகப்பெருமானே! நீ முற்றறிவினனாகிய கடவுளாயினும் ஆக! நிச்சயமாக அறியாமை உடையாய் ஆயினை! வாழ்வாயாக!” என வெறியாடு களத்தே வேலன் மேல் ஆவேசித்த முருகப் பெருமானை நோக்கித் தோழி கூறுவதாக அமைந்தது இந்நற்றிணைப்பாடல். இறைவனாகிய முருகன் எல்லாவற்றையும் தானே அறியும் முற்றுணர்வுடையன் என்பதனை அறிவுறுத்துவது,
[44 ௫. ௪ * ௬. ௪. 99
நின்னணங் கன்ல.ம அறிந்தும்
என்ற தொடராகும். தன்னை அன்பினால் வழிபடுவோர் பொய்மையாளராயினும் அவர்தம் வேண்டுகோளையும் பொருளென ஏற்று எளிவந்து அருள் புரிதல் அம்முதல்வனது பெருங்கருணைத் இறம் என்பதனைப் புலப்படுத் துவது,
“வலன் வேண்ட வெறிமனை வந்தோய்”
என்ற தொடராகும். பேரறிவுப் பொருளாய்ச் சந்தைக்கும் மொழிக்கும் எட்டாத கடவுளாயிருந்தும் நினது வாய்மைக்கு மாறாக வெறியாடுகளத்தில் வேலன் மேல் நீ ஆவே௫இத்துத் தோன்றியது முற்றுணர்வினன் என்னும் நின் இயல்புக்கு மாறான பேதைமைச் செயலாம் என்பாள், 66 ம 99
கடவுளாயினு மாக மடவை மன்ற என்றாள். தலைவியின் மெலிவுக்கு உண்மையான காரணம் இதுவென உணர வொண்ணாதவாறு நீ இங்கு
எழுந்தருளினமை குறித்து எங்களைப் போன்ற பேதையோரால் இகழப்படும் நிலையினை அடைந்தாலும் மன்னுயிர்த் தொகுதிகள் அனைத்தையும் வாழ்விக்கும் முழுமுதல் கடவுளாகிய நின்னை வாழ்த்துவதே என்போல் வார்க்கும் வாழ்வளிக்கும் நற்செயலாம் என்பாள், “வாழிய முருகே” என உளமுவந்து வாழ்த்தினாள். தோழியின் கூற்றாக அமைந்த இவ்வகப்பாடல் முருகக் கடவுளது முற்றுணர் வுடைமையினையும், அன்பர்க்கு எளிவந்கருளும் பேரருளுடைமை யினையும் பரவிப் போற்றும் நிலையில் அமைந்துள்ளமை காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

குறிஞ்சிநில மக்கள் தம்குல முதல்வனாகிய முருகப் பெருமான் மணங்கமழ் தோற்றத்து இளநலனுடையனாய்க் கடப்ப மலர்மாலையைச் சூடிக் கையில் வேலினை ஏந்தி வழிபடும் அன்பர்கள் முன்னே காட்சிதருதல் உண்டு என்பதனை உறுதியாக நம்பினார்கள். இவர்தம் வாழ்க்கையில் நிலைபெற்றுள்ள கடவுள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு புனைந்துரை வகையாகக் கொண்டு பாடப்பெற்ற செய்யுட் கள் சங்கத் தொகை நூல்களெனப்படுகின்றன. களவொழுக்கம் ஒழுகும் தலைவன் நறுமலர் மாலையைச் சூடிக் கையில் வேலேந்தி இரவுக் குறியில் தலைமகள் மனையை நாடிச் சொன்றானாக, அந்நிலையில் அவனைக் கண்ட செவிலி, அவனை முருகனெனப் பிறழவுணர்ந்து வரவேற்றுப் பரவுதல் செய்தாள் எனத் தோழி சறைப்புறத்தானாகிய தலைவன் கேட்கப்
படைத்து மொழிவதாக அமைந்தது 272ஆம் அகப் பாடலாகும்.
“மின்னொளிர் எஃகம் சென்னெறி விளக்கத்
தனியன் வந்து பனியலை முனியான்
நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசைவளி பகரத்
துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக்
குறியிறைக் குரம்பைநம் மனைவயிற் புகுதரும்
மெய்ம்மலி உவகையன் அந்நிலை கண்டு
முருகென உணர்ந்து முகமன் கூறி
உருவச் செந்தினை நீரொடு தூஉய்
நெடுவேட் பரவும் அன்னை” (அகம். 272)
எனவரும் இப்பாடற் பகுதியில் இரவுக் குறியில் வந்தொழுகும் தலைமகளை எகிர்ப்பட்ட செவிலி இளையோனாகிய அவனது எழில் நலத்தைக் கண்டு அவனைத் தன் தெய்வத் தோற்றத்தைப் புலப்படுத்த எழுந்தருளிய முருகப் பெருமான் எனவே பிறழவுணர்ந்து வழிபட் டாள் என்ற செய்தி தோழியாற் படைத்துக் கூறப்பட்டுள்ளமை காணலாம்.
முருகன் தன்னை வழிபடும் அன்பர்க்கு அவரவர் நினைந்த திருமேனி கொண்டு அவர்முன் காட்சி நல்குதல்,
“சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து
தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே” (அகம். 158)
என்பதனாற் புலனாகும். ஐம்புலன்கள் வழியே செல்லும் உள்ளச் சிதைவின்றி எல்லாம் வல்ல இறைவனை ஒரு நெறிய மனம் வைத்து உணர்ந்து போற்றவல்ல பேரார்வமுடைய அன்பர்கள் தம்மால் வழிபடப் பெறும் தெய்வத்தைக் கண்ணாரக் கண்டு மகிழும் பெற்றியராதல் தொன்று தொட்டு இத்தமிழகத்தே நிலை பெற்று வரும் அனுபவ உண்மையாகும். ப
“அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள் ப
வழிபடு தெய்வம் கட்கண் டாங்கு” (நற். 9)
எனவரும் நற்றிணைத் தொடர் மேற்காட்டிய உண்மையை உவமையாக எடுத்துக் காட்டியுள்ளமை பண்டைத் தமிழ் மக்கள் காண்டற்கரிய கடவுளின் தெய்வத் தோற்றத்தைக் . கண்களாற் கண்டு மகிழ்ந்த செய்தியினை நன்கு புலப்படுத்தல் காணலாம். அழகே உருவாகிய தெய்வம் முருகன். தன்னேரில்லாத் தலைமகனது எழில் நலத்தினை உவமை காட்டி விளக்கவந்த கபிலர்,

“இயல் முருகு ஒப்பினை”” (அகம். 128)
என அவனுக்கு முருகப் பெருமானை ஒப்புக் கூறுகின்றார்.
யாவராலும் எதிர்த்து நிற்கலாற்றாத பெருவன்மையும், _இயோரை அழிக்கும் தஇறத்தில் பெருஞ்சினமும், அன்பர்கள் முன்னியது முடித்தருளும் பேரருளும் படைத்த பெருந் தெய்வமாக முருகப்பெருமான் திகழ்தலால் அப் பெருமானைப் பேரழகும் பேராற்றலும் செயல் வன்மையும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற அரசர் முதலியோர்க்கு உவமையாக எடுத்தாளும் மரபு தமிழிலக்கியத்தில் தொன்றுதொட்டு நிலைபெறுவதாயிற்று.

“முருகற் சீற்றத்து உருகெழு குருசில்” (பொருந. 131)
“கடம்பமர் நெடுவே ளன்ன மீளி” (பெரும்பாண். 75)
“முருகுடன்று கறுத்த கலியழி மூதூர்” (பதிற்றுப். 26)
“முருகொத்தீயே முன்னியது முடித்தலின்” (புறம். 56)
“முருகுறழ் முன்பொடு'” (நற். 225) (அகம். 181)

“முருகற் சீற்றத் துருகெழு குருசில்” (புறம். 16)
“ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல்
போல வரும் என் உயிர்” (கலி. 81)
“முருகுறழப் பகைத் தலைச் சென்று”
(மதுரைக் காஞ்சி 181)
“முருகன் நற்போர் நெடுவேளாவி” (அகம். 1)
எனவரும் தொடர்கள் இம்மரபினை அடியொற்றியமைந்தன. தஇயோரை ஒறுத்தலில் தடுத்தற்கரிய சீற்றமுடையோன் முருகன் என்பது,
“முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும்” (அகம். 158)
எனவரும் பாடலால் அறியப்படும்.

குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகப் பெருமானது தெய்வமணம், விளையாடும் பருவத்து இளமகளிரை வருத்துதல் உண்டென்பது பண்டைத் தமிழர் வாழ்வியலிற் காணப்பட்ட நம்பிக்கையாகும். இத்தகைய நம்பிக்கை

“முருகன் ஆரணங்கு என்றலின்”(அகம்.98
“அன்னைக்கு முருகென மொழியும் வேலன்”
“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
அறியா வேலன் வெறியெனக் கூறும்” (ஐங்குறு. 243)
“நெடுவேள் அணங்குறு மகளிரின் ஆடுகளம் கடுப்ப” (குறிஞ்சிப்பாட்டு)
என உடன்பாட்ட்டானும்,

“அருந்திறல் கடவுளல்லன்
பெருந்துறைக் கண்டிவள் அணங்கியோனே”” (ஐங். 182)
“விறல்வேள் அல்லன் இவள் அணங்கியோனே” (ஐங். 250)
என எதிர்மறை முகத்தானும் வலியுறுத்தப் பெற்றுள்ளமை காண்க. அகத்திணை ஒழுகலாற்றில் தலைமகளது வருத்தம் தர முருகனை வழிபட்டு நிகழ்த்தப்பெறும் இவ்வெறியாடல் தலைவியின் மனையகத்தே நிகழும் என்பது,
“உருகெழு சிறப்பின் முருகு மனைத் தரீ இக்
கடம்பும் களிறும் பாடி நுடங்குபு
தோடும் தொடலையும் கைக் கொண்டு அல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ” (அகம். 138)
“ கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்” (நற். 34)
எனவரும் தொடர்களாற் புலனாம். தலைமகளது நோயின் காரணம் இதுவெனவுணராத செவிலி முருகபூசை பண்ணுபவனும் அம்முதல்வனதருளால் நிகழ்ந்ததனை உணர்ந்து கூறவல்ல முதுவாய்மை படைத்தவனும் ஆகிய வேலனை வினவ, அவன் அந்நோய்க்குரிய காரணத்தைக் கட் டுவைப்பித்தும், கழங்குபார்த்தும், தெரிந்து கொண்டு அந்நோய்க்குக் காரணம் முருகன் என்று அறிந்த பின்னரே அம்முதல்வனைப் போற்றி வெறியாடத் தொடங்குவான் என்பது,
வவ்விவனனவைவ கவலையை வவ வனை கவ்வை முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புளர்பிரீ இ
முருகன் ஆரணங் கென்றலின்
செல்வன் பெரும்பெயர் ஏற்றி வேலன்
வெறியயர் வியன்களம்' (அகம். 98)
“வலன் கழங்கினால் அறிகுவ தென்றான்” (ஐங். 248)
“பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்திக் கன்னந்தூக்கி
முருகென மொழியுமாயின்”” எனவருந் தொடர்களாற் புலனாகும்.

முருகப் பெருமானை வழிபட்டு வெறியாடுமிடம் பலநிற மலர்களால் அணி செய்யப் பெற்றிருக்கும். முருகனுக் குரிய வாத்தியமாகிய தொண்டகப் பறை முதலியன முழங்க தெய்வ உருவினைத் தாங்கி வேலன். வேலேந்தி ஆடுவான். இங்ஙனம் நிகழ்த்தப்பெறும் வெறியாடல் நள்ளிரவில் நிகழ்த்தப்பெறும் என்பதும், இவ்வாடலில் ஆட்டுக் குட்டி யாகிய மறியினை யறுத்துக் குருதிப்பலியும் செந்தினை யும் படைத்து வழிபடுதல் இயல்பு என்பதும் முருகனைக் குறித்து நிகழும் இவ்வெறியாடல் முருகெனவும் வழங்கும் என்பதும்,
“படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேள் பேணத் தணிகுவள் இவளென
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற
களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள் ”(அகம். 22:5-11)
2௦4 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு ப பப்ப ட்ப. வ. பபட்டபப்ப்பவ்ட ப டு அமை

எனவும்,
“அணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டி
வெறியென வுணர்ந்த வுள்ளமொடு மறியறுத்து
அன்னை அயரும் முருகுநின்
பொன்னேர் சுணங்கிற் குதவாமாறே”” நற். 47)
எனவும் வரும் தொடர்களால் அறியப்படும்.

முருகன் வழிபாட்டில் உறைத்துநின் று
அப்பெருமானருளால் உறுவது கூறும் வேலன் சில
சமயங்களில் முருகன் அருளைச் சிந்திக்காமலும், தன்
அறியாமையாலும் தலைமகளுக்குத் தலைமகனால் நேர்ந்த
மெலிவினை முருகனால் வந்ததெனப் பிறழவுணர்ந்து
வெறியாடலில் தலைப்படுதல் உண்டு.
“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
அறியா வேலன் வெறியெனக் கூறும். (ஐங். 243) எனவும்,
“மறிகொலைப் படுத்தல்வேண்டி வெறிபுரி
ஏதில் வேலன்” (அகம். 292)
எனவும் வரும் தொடர்களால் அறியப்படும்.

முருகனைப் பூசித்து அவன் அருள்வழி நின்று தான் கூறும் வாய்மொழியால் ஊர்மக்களுக்கு நலம் புரிதலையே தனது வாழ்க்கை நோக்கமாகக் கொண்டு வாழும் வேலன் கூறும் மொழிகள் மெய்ம்மை உடையனவே என ஊர்மக்கள் நம்பினர் என்பது,
“பொய்யாமரபின் ஊர் முதுவேலன்
கழங்கு மெய்ப்படுத்துக் கன்னந் தூக்கி
முருகென மொழியு மாயின்” ஸ்ஜங். 245) என்பதனால் புலனாகும்.

இங்ஙனம் மனையகத்தே வேலனைக் கொண்டு நிகழ்த்தும் வெறியாடலில் வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய்க்கு அதன் பொய்ம்மையைப் புலப்படுத்தும் ' நிலையில் அகத்துணைச் செய்யுட்கள் காணப்படுகின்றன.
“கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
அறியா வேலன் வெறியெனக் கூறும்
அதுமனங் கொள்குவை யன்னையிவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே'” (ஐங். 243)

எனவரும்பாடல் வேலன் கூற்றினை மெய்யென நம்பிய தாயை நோக்கி அவளது அறியாமை கூறி தோழி வெறி விலக்கும் வகையில் அமைந்ததாகும். வெறியாடல் துணிந்துழி அதனை விலக்க எண்ணிய தோழி செவிலி. கேட் குமாறு தலைமகட்குச் சொல்வதாக அமைந்த பாடல்களும் உள்ளன.
“அம்ம வாழி தோழி பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடா னாயின்
என்பயன் செயுமோ வேலர்க்கு வெளியே” (ஐங். 244)

எனவரும் இப்பாட.ல் முருகனைப் போற்றி வெறியாடல் நிகழும் வழி தலைமகளது மெலிவுக்குக் காரணமாகிய தலைவனது மலையையும் வேலன் இிறப்பித்துப் பாடுவாளாயின் இவ்வெறியாடலாற் பயனுண்டு என்னும் கருத்தினைப் புலப்படுத்துவதால் வெறினில்ககல் என்னும் துறைக்கு இலக்கியமாயிற்று.

“பெய்ம்மணல் வரைப்பிற் கழங்குபடுத் தன்னைக்கு
முருகென மொழியும் வேலன் மற்றவன்
வாழிய விலங்கு மருவிச்
சூர்மலை நாடனை யறியாதோனே” (ஐங். 249)
எனவரும் பாடல், வேலன் கூறிய மாற்றத்தை உண்மை என நம்பிய-தாய் கேட்கும்படித் தலைமகளுக்குத் தோழி சொல்லியதாகும். மணல் பரப்பிய மனையின் எல்லைக் கண்ணே கழங்குபார்த்து இந்நோய் முருகனால் வந்ததென்று வேலன் அன்னைக்குக் கூறுகிறான். அவன் நின் மெலிவிற்குக் காரணமாகிய தலைவனை அறியாதவனாயினான். அதனால் நினது களவொழுக்கம் அவனுக்குப் புலனாகாதாயிற்று) அத்தகைய வேலன் நீடு வாழ்வானாக என வேலனை வாழ்த்துவது போன்று வெறிவிலக்கிய குறிப்பினது ஆதல் காணலாம். இவ்வாறு வெறிவிலக்கல் என்னும் துறையிலமைந்த பாடல்கள் தலைவியின் மெலிவிற்குக் காரணம் முருகனது அணங்கன்று என வற்புறுத்தும் நிலையில் அமைந்தனவே அன்றி முருகவேளுக்குச் செய்யும் வழிபாட்டை விலக்கும் குறிப்பினவல்ல வென்பதை மனங் கொளல் வேண்டும். குறிஞ்சி நில மக்கள் தம் குல முதலாகிய முருகன் மலை மேலெழுந்தருளி நின்று தாம் படைக்கும் படைப்புப் பொருளை ஏற்றுக்கொள்வான் என அன்பு நீங்கா அச்சமுடன் அம்முதல்வனை வழிபட்டார்கள் :
“மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே'” (கலி. 52)
தலைவியின் மெலிவகற்றல் வேண்டி மனை வரைப்பில் நள்ளிரவில் நிகழும் அகத்திணை ஒழுகலாறாகிய இவ்வெறியாடலேயன்றி உலக நலங்குறித்துப் பலரும் காண நிகழும் புறத்திணை பற்றிய வெறியாடல்களும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன.
“வெறிய நி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டயர்ந்த காந்தளும்'” (தொல். புறம். 5)
“வெறியாடுதலையறியும் . சிறப்பினையுடைய செவ்விய வாயினை உடைய வேலன்' எனப் பொருள் வரைந்த இளம்பூரணர், “காந்தள் என்பதனை மடலேறுதற்குப் பெயராகக் கூறுவார் உளராகலின், வெறியட்்டயர்ந்த காந்தளென்றார். அன்றியும், காந்தளென்பது மடலேறுதலான் அத்துணை ஆற்றலாகிய பெண்பால்மாட்டடு நிகழும் வெறி “காந்தள்” எனவும் பெயராம். இதனானே காம வேட் கைகையின் ஆற்றாளாய பெண்பாற் பக்கமாகிய வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும். இவ்வெறி இந்நிலத்கிற்குச் சிறந்தமை அறிக” என விளக்குவர். காந்தள் எனபதனைத் தலைவன் மடலேறுதற்குப் பெயராக வழங்குவார் கருத்தை ஏற்று அங்ஙனம் மடலேறும் அளவிற்கும் ஆற்றாளாய தலைவி மாட்டுத் தோன்றும் வெறியும் காந்தள் எனப் பெயர்பெறும் என்பதும் இதனால் காமவேட் கையின் ஆற்றாளாகிய பெண்பாற் பக்கமாகிய அகத்திணைபற்றிய வெறியாடலும் அக்குறிஞ்சி நிலத்துள்ளார் அரசனது வெற்றியை விரும்பி நிகழ்த்தும் புறத்திணைபற்றிய வெறியாடலும் உடன்கொள்ளப்படும் என்பதும் புறத்தணைபற்றிய வெறியாடல் குறிஞ்சி நிலத்திற்குச் சிறந்ததென்பதும் இளம்பூரணர் கருத்தாதல் மேற்குறித்த அவரது உரைத்தொடராற் புலனாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

செவ்வேள் வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேலன் என்றார். காந்தள் தான் சூடுதலிற் காந்தள் என்றார். வேலனைக் கூறினமையின் கணிகாரிகையும் கொள்க. காந்தளை உடைமையானும் பனந்தோடு உடைமையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதானானும் வேலன் ஆடுதலே பெரும்பான்மை); ஒழிந்தோராடுதல் சிறுபான்மை என்றுணர்க. “இது சிறப்பறியா மகளிர் ஆடுதலிற் புறனாயிற்று. வேலன் ஆடுதல் அகத்தஇுணைக்குச் சிறந்தது என்பர் நச்சினார்க்கினியர். கணிகாரிகையாவாள் வேலன் ஆடும் வெறிக்கூத்தினை யாடுபவள். இறப்பறியா மகளிர் என்றது, வெறியறி சிறப்பின் வேலனைப் போன்று தெய்வத்திற்குச் செய்யும் கடன்களாகிய பூசை முறையினை அறியாத மகளிரை, மகளிர் ஆடும் வெறியாடல் புறனாம் என்பதும் வேலன் ஆடும் வெறியாடல் அகனாம் என்பதும் நச்சினார்க்கினியர் கருத்து. “வேலன் தைஇய வெறியயர் களனும்” (இருமுருகு. 10) என்றாற் போலச் சிறப்பறியும் வேலன் தானேயாடுதலும் சிறுபான்மை புறத்திற்கும் உரித்தெனக் கொள்வர் நச்சினார்க்கினியர்.

ப “குறிஞ்சித் இணையில் தன் களவை மறைத்துத் தனிமையாற்றாது தளரும் தலைவியின் மெலிவு கண்ட
தாயார், உண்மையுணர வேண்டிக் குறிசொல்ல விரும்பி யழைக்கும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சார்ந்தது. அதனின் வேறாய் வெட் சியில் வரும் துறையான வேலன் புவெறியாட்டு, வேலன் விரும்பிச் சூடும் பூவின் பெயரால் காந்தள் எனக் குறிக்கப்பட்டது. எனவே வேலன் வெறியாட்டு குறிஞ்சிக்கும் வெட் சிக்கும் பொதுவாயினும் வெட்.சியில் வரும் வெறியாட் டில் வேலன் காந்தள் சூடி ஆடுவன். குறிஞ்சித் இணையில் வரும் வெறியாட்டில் வேலன் குறிஞ்சிப்பூச் சூடுதல் மரபு” என்பர் நாவலர் பாரதியார். லே
அங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூ டின்னியம் கறங்க நேர்நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணி தமூப் பிணையூ௨
மன்றுதொறு நின்ற குரவை” (மதுரைக். 611-615)
என மதுரைக் காஞ்சியில் குறிக்கப்பெறும் வெறியாடல் அகத்தைச் சார்ந்தது என்பது அவர் கருத்து. இவ்வாறு அகத்திலும் புறத்திலும் வெறியாட்டு நிகழ்த்துவோன் வேலனாயினும் அகமாகிய குறிஞ்சித்திணை வெறியாட்டில் சூடும்பூ குறிஞ்சிமலர் எனவும் புறமாகிய வெட் சித்தணை வெறியாட்-._ல் சூடும்பூ காந்தள் எனவும் பகுத்துணர்த்துவர் பாரதியார். ். ௦
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி
சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல்
ஆகுவ தறியும் முதுவாய் வேல, !
கூறுக மாதோநின் கழங்கின் திட்பம்” (அகம். 195) :
எனவரும் தொடர், கட்டினாலும் கழங்கினாலும் குறி பார்த்துத் தலைமகள் மெலிவிற்குக் காரணம் முருகனது அணங்கே என்பதனைக் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னரே வேலனைக் கொண்டு வெறியாடுதல் மரபு என்பதனை வற்புறுத்தும். வெறியாடல் மலைவாணர்குடியில் மனை முகிர் மகளிரால் புறத்தேயாவரும் காண ஆடப்பெறும் பொதுவிழாவாகவும் மனையத்தே வேலனைக் கொண்டு நிகழ்த்தப்பெறும் - மனைவிழாவாகவும் நிகழும் இச்செய்தி,
மனைமுதிர் மகளிரொடு குறவை தூங்கும்
ஆர்கலி விழவுக் களங்கடுப்ப நாளும்
விரவுப்பூம் பலியொடு விரைஇ யன்னை
முருகென வேலற் றரூஉம்
பருவ மாகப் பயந்தன்றால் நமக்கே” (அகம். 232) எனவும்,
“செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்” (பட்டி. 154-155) எனவும் வரும் பாடற் பகுதிகளால் அறியலாம். இத்தகைய வெறியாட்டில் முருகப் பெருமான் தனக்குப் பூசை செய்யும் வேலன்மேல் ஆவேகசித்தல்போலக் கணிகாரிகையாகிய குறத்துமேல் ஆவேசித்தலுமுண்டு. இச் செய்கு,
“ஆடுமகள் வெறியுறு நுடக்கம் போல” (பதிற். 51). எனவரும் பகுகியாலறியலாம்.
அணங்குறு மகளிர் ஆடுகளங் கடுப்பத்
திணிநிலைக் கடம்பின் திரளரை வளை இய
துணையறை மாலையின் ' (குறிஞ்சிப். 174-177)
எனவரும் குறிஞ்சிப்பாட்டின் பகுஇ முருகனைநோக்கி நறுமலர் மாலைகளால் புனையப் பெற்றிருக்கும் என்பதனைப் புலப்படுத்தும்.
சென்றார்க் கச்சந்தரும் இன்னைய முருகனுக்குரிய
உயர்ந்த மலைகளாதலின்,
“சூருடை அடுக்கம்” (நற். 359)
எனவும்,
“சூருடைச் சிலம்பு” (நற். 373) எனவும் குறிக்கப்பெற்றுள்ளன. அங்கு மணமாகாத இளைய மகளிர் தனிமையிற் சென்றபோது அவர் மனத்தே ஏற்பட்ட அச்சத்தின் விளைவாக அன்னோர் மெலிந்து வருந்துத லியல்பு. அச்சத்தால் ஏற்பட்ட மெலிவினை அம்மலைத் தெய்வமாகிய முருகனால் ஏற்பட்டதாகக் கொண்டு அம்மெலிவதர முருகனுக்கு வெறியாடல் நிகழ்த்துதல் மலைவாணரது ஒழுகலாறு ஆயிற்று,

நெடுவேளால் அணங்குறும் இளமகளிரைப் போல அவனது உஊர்தியாகிய மயிலும் அம்முதல்வனால் ஆவேசிக்கப்பெற்று நடுங்குதல் உண்டு.
““சூருறு மஞ்ஞையின் நடுங்க” எனவரும் குறிஞ்சிப்பாட்டடி இங்கு நினைக்கத் தக்கதாகும்
“சூர் தசைந்தனையையாய் நடுங்கல் கண்டே” (52)
என்பது குறுந்தொகை. முருகனால் ஆவேூக்கப்பெற்ற கணிகாரிகை வேலனைப் போன்று வெறியாடல் நிகழ்த்துதல் உண்டென்பது,
“மூருகு மெய்ப்பட்ட புலத்திபோல
தாவுபு தெறிக்கும் மான்” (புறம். 259)
எனவரும் புறப்பாடல் அடிகளாற் புலனாகும்.
மன்னுயிர்களின் அச்சம் அகற்றி அருள் சுரக்கும் முருகப் பெருமானை வழிபடும் இறத்தில் மலைவாணர் அன்பு நீங்கா அச்சமுடன் தூய்மையுடையராய் ஒழுகிளர் என்பது,
“அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே”
எனவரும் புறப்பாடற் பகுதியால் புலனாகும்.

ஒளிதங்கிய சிவந்த திருமேனியையுடைய முருகப் பெருமானுக்குப் பிணிமுகம் என்னும் பெயருடைய
யானையும் மயிலும் ஊர்தியாகவும் கொடியாகவும் அமைந்தன வென்பது,
“மணிமயி லுயரிய மாறா வென்றி
பிணிமுக வூர்தி ஒண்செய் யோனும்'” (புறம். 56 : 7-8) எனவருந் தொடராற் புலனாம்.

முருகப் பெருமானைப் பிரியாத நிலையில் பேரொளியுடன் இகழும் தேவியாகக் குறமகளாகிய வள்ளி
நாச்சியார் போற்றப் பெற்றுள்ளார். மணங்கமழ் தெய்வத்து இளநலமாகிய இத் தெய்வப் பொலிவினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது,
“முருகு புணர்ந் தியன்ற வள்ளி போலநின்
உருவு கண் ணெறிப்ப நோக்கலாற்றலனே”” எனவரும் நற்றிணைப் பகுதியாகும்.

மலைவாணர் தம் நிலத்து விளைவு பெருக மழை பொழியவும், போதிய அளவு பெய்தபின் விளைவு கெடாதவாறு மழை நீங்கவும் முருகப் பெருமானை வேண்டி வழிபடுவர் என்பதும், முருகன் அருளால் விளைந்த இனையினை உவகையுடன் பகுத்துண்டு மகிழ்வர் என்பதும்,௦ க ச ௩ ச
மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்
மாரியான்று மழை மேக் குயர்கென
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர் சாரற்
புனத்தினை அயிலும் நாட” (புறம். 143) எனவரும் கபிலர் பாடலான் நன்குணரப்படும்.

குறவர்கள் மகப்பேறு கருதி முருகப் பெருமானை வழிபடுவர். இச்செய்தி, 6 க ச ய் ச
குன்றக் குறவன் கடவுட் பேணி
இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள்” (ஐங். 257)
ந்த குறு! 9 எனவரும் பாடலால் இனிது விளங்கும். மணமாகாத இளமகளிர் தம் இருமணம் இனிது நிறைவேறுதல் வேண்டி முருகப் பெருமானை நறுமலர்கள் தூவி வழிபடுதல் உண்டு. இச்செய்தி,
“குன்றக் குறவன் காதன் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு
மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தி
தேம்பலிச் செய்த ஈர்நறுங்கையள் (ஐங். 259)
எனவரும் தொடர்களால் இனிது விளங்கும். இங்ஙனம் தலைவியின் திருமணம் இனிது நிறைவேற தோழி முதலியோர் முருகப் பெருமானை வழிபட்டுக் குரவைக் கூத்தாடி. அம்முதல்வனது பெரும் புகழைப் பாடிப் பரவுதலு முண்டு. இச் செய்கு,
“தெரியிழாய் நீயும் நின்கேளும் புணர
அரையுறை தெயவம் உவப்ப உவந்து
குரவை தழீ இயாம் ஆட குரவையுள்
கொண்டு நிலைபாடிக்காண்”: (கலி, 39)
எனவரும் தொடர்களால் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். மலைவாழ்நர் வரையுறை தெய்வமாகிய முருகக் கடவுளைப் பேணித் தாம் வித்திய இனை நன்கு விளைதல் வேண்டுமெனப் போற்றி வழிபடுதலுண்டு. இச் செய்தி
“பலிபெறு கடவுட் பேணிக் கலி சிறந்து
நுடஙகுநிலைப் பறவை உடங்குபீள் கவரும்
தோடிடங் கோடாய்க் கிளர்ந்து
நீடினை விளைமோ வாழிய திதையே'” (நற். 2519)
எனவரும் தொடர்களால் புலனாகும். பாண்டிய நாட்டில் வாழ்ந்த மலைவாழ்நராகிய குறவர்கள் முருகப் பெருமானைப் போற்றித் தாம் வளர்த்த சந்தன மரத்தைத் தன் நாட்டு மன்னனாகிய பாண்டியனுக்கு அன்பின் கையுறையாகத் தந்தனர். இச் செய்தி
“தன் கடற்பிறந்த முத்தின் ஆரமும்
முனைதிரை கொடுக்கும் துப்பின் தன்மலைத்
திறலருமரபின் கடவுட் பேணி
குறவர் தந்த சந்தின் ஆரமும்
இருபே ராரமும் எழில் பெற வணியும்
திருவீழ் மார்பின் தென்னவன்” (அகம். 13) எனவரும் அகப்பாடற் பகுதியால் இனிது விளங்கும். ஒத்தவன்புடைய ஒருவனும் ஒருத்தியும் நல்லூழின் தூண்டுதலால் ஒருவரை ஒருவர் எகிர்ப்பட்டுக் கூடும்
இயற்கைப் புணர்ச்சியில் தலைவன் மலையுறை தெய்வமாகிய முருகப் பெருமானை வாழ்த்தி வணங்கித் தலைமகளை நோக்கி நின்னிற் பிரியேன் எனத் தண்ணீரைப் பருகச் சூளுறவு செய்தல் உண்டு. இச்செய்தி
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது
ஏமுறுவஞ்சினம் வாய்மையிற்றேற்றி
அந்தீந் தெண்ணீர் குடித்தலின் நெஞ்சமர்ந்து
அருவிடர் அமைந்த களிறுதரு புணர்ச்சி (குறிஞ்சிப்.) எனவரும் குறிஞ்சிப் பாட்டடிகளாற் புலனாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

 குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகப் பெருமான் யானையை ஊர்தியாகக் கொண்டு பகைவரை அழிக்கும் வேற்படையாலே கடல் நடுவே புக்கு இருவேறு உருவின னாகிய சூரபதுமனையும் அவன் வடிவாகிய மாமரத்தையும் பிளந்து அழித்தருளியதும் குருகொடு பெயர் பெற்ற குன்றமாகிய கிரெளஞ்சமலையைப் பிளந்தருளியதும் ஆகிய புராணச் செய்திகள் சங்கச் செய்யுட் களிற் பலவிடங்களிலும் எடுத்தாளப் பெற்றுள்ளன.

“வரைமருள் புணரி வான்பிசி ௬ுடைய
வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
அணங்குடையவுண ரேமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு” (பதிற். 11) எனவரும் பதிற்றுப்பத்தில் கடல் அவுணர்களால் சூழப்பெற்ற சூரபதுமனையும் அவனுக்குக் காவலாக இருந்த மாமரத்தையும் முருகப் பெருமான் வேற்படையால் பிளந்தழித்த செய்தி உவமையாக எடுத்தாளப் பெற்றது. “சூரூுடைமுதல்' என்றது சூரவன்மா தனக்கு அரணாகவுடைய மாவின்முதல் என்றவாறு. இனிச் சூரவன்மா தான் ஓர்மாவாய் நின்றான் என்று புராணம் உண்டாயின், சூரனாதற்றன்மையையுடைய மாவின்முதல் என்றவாறாம் என்பர் பழைய உரையாசிரியர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பகைவரது காவல் மரத்தினைத் தடிந்து யானைமேல் உலாவந்த தோற்றத்திற்கு முருகப் பெருமான் கடல் நடுவே நின்ற சூர்மாவைத் தடிந்து களிற்றின் மேல் எழுந்தருளிய தெய்வத் தோற்றத்தினைக் குமட்டூர்க் கண்ணனார் உவமையாக எடுத்தாண்ட திறம் முருகன் சூர்மாவைக் கொன்ற புராண வரலாற்றின் தொன்மையினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

மிகப் பழங்காலத்திலே மக்களினத்தார் தமக்கு இடர் விளைத்த விலங்குகளையும், பகைவர்களையும் அழித்தற் பொருட்டுப் பயன்படுத்திய படைக்கல வகைகளுள் தொன்மையுடையதும் ஆழ்ந்து அகன்று நுண்ணிதாகிய திறத்தால் அறிவின் ஒட்பத்தைப் புலப்படுத்துவதும் வேல் என்னும் படைக்கலமேயாகும். இத்தகைய வேற்படையைத் தாங்கிய இளைய வீரனாகவும், மக்களுக்கு உளதாம் பல்வகை அச்சங்களைப் போக்கி அவர்கள் நினைந்தவற்றை விரைந்து முடித்தருளும் இளைய வீரர் தலைவனாகவும், செஞ்ஞாயிற்றை ஒத்த சிவந்த திருமேனியனாய் நறுமலர் மாலையணிந்து நீல மயிலாகிய பறவைமேல் அமர்ந்து வரும் பேரழகனாகவும் மலைவாழ்நரால் வழிபடப் பெற்ற தெய்வம் சேயோனாகிய முருகப் பெருமான் என்பதனைச் சங்கச் செய்யுட் களால் நன்கு உணரலாம். எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய இறைவன் காண்டற்கரிய கடவுளாயினும் தன்னை அன்பினாற் கருகி வழிபடுவர் உள்ளத்தே மேற்குறித்தவண்ணம் கவின்பெறு தோற்றத்தினனாகத் தோன்றிப் புறத்தேயும் காட்சி நல்குவான் என்பது அம்முதல்வனதருளால் அவனைப் போற்றிப் பேரின்பம் நுகர்ந்த அருளாளர்களும் அம்முதல்வனை அன்பினால் ஒருங்கு கூடிப் போற்றும் இிறத்தார் அவன் அருளுக்கு இலக்காகிய உலகத்து ஏனைய் மக்களும் முறையே இறப்பு நிலையிலும், பொது நிலையிலும் கண்டுணர்ந்த அனுபவ உண்மையாகும். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத் திருவருளைப் பெற்றுப் பேரின்பம் உறும் பெருமக்கள்,
“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”:
என்ற நன்னோக்கு உடையராய்ப் பெரும் பெயர் முருகனாகிய முழுமுதற் கடவுளாற் பெறும் பேரின்ப நிலையினைப் பெறுதற்கு உறுதுணையாக முருகனது பொருள் சேர் புகழ்த் திறத்தைப் பலரும் ஒருங்கு கூடிப் போற்றும் முறையில் இயற்றியருளிய தெய்வப் பனுவல்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தகுவது பத்துப்பாட்டுள் முதற் பாட்டாகிய திருமூருகாற்றுப்படையாகும்.

தன்னிகரற்ற தலைவன் ஒருவன்பால் பரிசில் பெற்று வரும் கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலிய பரிசில் வாழ்நர் வழியிடையே தம்மை எகிர்ப்பட்.ட. இரவலர்கள து துயரைக் கண்டு இரங்கித் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை அவர்களும் பெற்று மகிழும்படி வழிப்படுத்துதல் ஆற்றுப்படை எனப்படும். ப ப
“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீ இ
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்” என்பது தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கணமாகும்.

ஆடுதல் தொழிலில் வல்ல கூத்தரும், பண்பொருந்தப் பாடுதலில் வல்ல பாணரும், பிறர் மனத்கிற் கொண்ட தனைக் குறிப்பால் உணர்ந்து இசை பட நடித்துக் காட்ட வல்ல பொருநரும், தன் மனக் குறிப்பு மெய்யின் கண் புலப்பட ஆடவல்ல விறலியரும் ஆகிய நால்வகையோரும் தாம் பெற்றுள்ள செல்வப் பொலிவும் தம்மை வழி இடையே எதிர்ப்பட்ட பரிசிலர்களின் வறுமைத் தோற்றமும் ஒன்றிரண்டு மாறுபட்டுத் தோன்ற, தமக்குப் பெருஞ் செல்வத்தை வழங்கியவர் இன்னார் எனவும் அவரை அடைந்து பரிசில் பெறுதற்குரிய வழிமுறைகள் இவையெனவும் தம்மை எகிர்ப்பட்ட பரி௫லர்க்கு அறிவுறுத்தி, அன்னோர் தாம் கூறியவழியே சென்று பரிசில் பெறுதற்கு ஏற்ற வழி சொல்லி அனுப்புவதாக அமைந்த பனுவல் ஆற்றுப்படை. என்னும் துறையாம் என்பது மேற்குறித்த தொல்காப்பியத் தொடரின் பொருளாகும். இத் தொடரிற் சுட்டிய இலக்கணத்தின்படி அமைந்தன கூத்தராற்றுப்படை,, பாணாற்றுப்படை, பொருநராற்றுப் படை, விறலியாற்றுப்படை' என்பன. இவற்றுக்குரிய இலக்கியங்களாகப் பத்துப் பாட்டுள் மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை,, இறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை ஆகிய பாடல்களையும், புறநானூற்றில் விறலியாற்றுப்படை என்னும் துறைகளில மைந்த பாடல்களையும் கொள்ளலாம். வாழ்க்கைத்துறையில் வளம் பெற்றோர் தம்போல் வளம் பெறாதாரை நோக்கி வளம் பெற்று வாழ்வதற்கேற்ற வழி முறைகளை அறிவுறுத்துவது ஆற்றுப்படைப் பனுவல்களின் நோக்கமாகும். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று எண்ணி விரிந்த உள்ளத்துடன் ஒருவர்க்கொருவர் தத்தம் அனுபவங்களை எடுத்துரைத்து வையத்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டி உதவும் இத்தககைய தெய்வ அருட் குறிப்பினை,
“ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறா அர்க் கறிவுறீ இ
சென்று பயனெதிரச் சொன்னபக்கமும்”'
எனவரும் தொடரால் ஆரியர் தொல்காப்பியனார் புலப்படுத்தியுள்ளார். இத்தொடர்ப்பொருளைக் கூர்ந்து நோக்குங்கால் இங்கு எடுத்து ஓதப்பட்ட கூத்தர், பாணர், இபாருநர், விறலியர் என்னும் இவர்களையேயன்மி, இவர்களைப் போன்று ஏனைக் கலைத் துறைகளில் பயிற்சி உடைய கலைஞர் பிறரும் தம் எதிர்ப்பட்ட மக்களைத் தத்தம் துறையில் மேல்மேல் வளம் பெறச் செய்தல் வேண்டும் என்னும் அருள் நோக்குட.ன் நல்வழியிற் செலுத் துதற்குரியர் என்பதும், இவ்வாறு வெவ்வேறு கலைத் துறைகளில் வல்ல சான்றோர் பலரும் தத்தம் பயிற்சி நிலையையும், வாழ்க்கை அனுபவத்தையும் எடுத்துரைத்துத் தம்மை ஒத்த மக்களை நல்வழியிற் செலுத்துதலாகிய பல்வேறு முயற்சிகளும் ஆற்றுப்படை... என்னும் இத்துறையில் அடங்கும் என்பதும் இனிது புலனாகும். எனவே இங்கு எடுத்துக் கூறப்பட்ட கூத்தர், பாணர், விறலியர், பொருநர் என்போர் கூற்றாக அமைந்த ஆற்றுப்படைகளேயன்றிப் புலவர் முதலிய பிறர் கூறுவனவாகவமைந்த ஏனைய ஆற்றுப்படைகளும் மேற் குறித்த தொல்காப்பிய இலக்கணத்தின்படி ஆற்றுப் படைகள் எனவே வழங்குதற்கு உரியன. ஆற்றுப்படை எல்லாவற்றிற்கும் உரியவாக இங்குக் கூறப்பட்ட. பொது இலக்கணத்தினைக் கூர்ந்து நோக்குங்கால் பத்துப்பாட்டுள் முதற்பாட்டடயாகத் இகழும் திருமுருகாற்றுப்படை என்ற பனுவல் தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்ததே என்னும் உண்மை நன்கு தெளியப்படும். “ஆற்றிடைக் காட்டு உறழத் தோன்றி, பெற்ற பெருவளம் பெறார்க்கறிவுறீ இச், சென்று பயனெய்தச் சொன்னபக்கம்”” எனவரும்தொல்காப்பியத் தொடர் எல்லாவகையான ஆற்றுப்படைகளுக்கும் பொது அலக்கணமாக அமைந்தது எனவே கொள்ளுதல் வேண்டும். இத் தொடர்க்கு “இல்லறத்தைவிட்டுத் துறவறமாகிய இநறியில் நிற்றல் நன்றென்றும் கண்ட காட்சி தீதென்றும் மாறுபடடத் தோன்றுகையினாலே தான் இறைவனிடத்துப் டுபற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டும் இரிந்து இபபெறாதார்க்கு இன்ன இட த்தே சென்றாற் (பெறலாம் என்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச் சென்று அக்கந்தழியினைச் இசான்ன கூறுபாடு” எனப் பொருள் வரைந்து இதெய்வத்திவிடத்து ஆற்றுப் படுத்துவதாகிய ஆற்றுப்படைக்குரிய சிறப்பிலக்கணமாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். இவ்வாறன்றி இத் தொடரை ஆற்றுப்படையின் பொது விலக்கணமாகவே கொள்ளினும் தெய்வத்தின் பால் உய்ப்ப தாகிய இத்கிருமுருகாற்றுப்படை அப்பொது விலக்கணத் தின்படி. அமைந்த ஆற்றுப்படை களுள் ஒன்றாய் அடங்குதல் காணலாம்.

“இனி முருகாற்றுப்படை. என்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஓர் இரவலனை வீடுபெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்தது என்பது பொருளாகக் கொள்க” என்பர் நச்சினார்க்கினியர். இதனைப் புலவராற்றுப்படை. என வழங்குதலுமுண்டு.
அமரர்கண் முடியும் அறுவகையானும்' எனவரும்
தொல்காப்பியத் தொடர்க்கு “அமரர் கண்முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பன வற்றினும்” எனப் பொருள் வரைந்த இளம்பூரணர் வந்தது கொண்டு வாராததுணர்த்தல்” (தொல். மரபு. 110). என்பதனால் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்தி வரும் எனவும் கொள்க. முருகாற்றுப் படையுள்,
“மாடமலிமறுகில் கூடல் குடவயின்
இருஞ்சேற்றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த
முட்டாட்டாமரைத்துஞ்சி” என்றவழி ஒருமுகத்தால் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க எனவரும் இளம்பூரணர் உரை, திருமுருகாற்றுப்படை புலவராற்றுப்படை என்ற பெயரால் இளம்பூரணர் காலத்தில் வழங்கியது என்பதனை வலியுறுத்தும். கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை என ஏனைய ஆற்றுப்படைகளெல்லாம் ஆற்றுப்படுத் துவோராகிய கூத்தர் முதலியோரது தலைமை தோன்ற அவர்களது பெயரால். வழங்குமாறு போல, முருகன்பால் முதுவாய் இரவலனாகிய புலவனை புலமைச் செல்வருள் ஒருவர் ஆற்றுப்படுத்தும் முறையில் நக்கீரர் பாடிய இவ்வாற்றுப்படையும், ஆற்றுப்படுத்துவோராகிய புலவர் பெயரால் புலவராற்றுப் படை என வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது மேற்குறித்த இளம்பூரணர் உரையால் உய்த்துணரப்படும்.

எனினும், நக்&ரரால் பாடப்பெற்ற இவ்வாற்றுப்படை ஆற்றுப்படுத்தும் புலவர் பெயரால் புலவராற்றுப்படை என வழங்கப்பெறாமல் ஆற்றுப்படுத்தப் பெறும் முருகப் பெருமான் பெயரால் முருகாற்றுப்படை எனவே இறப்பு முறையில் வழங்கப் பெற்று வருகிறது. புலவராற்றுப்படை என்ற பெயரால் இப்பாடல் நுதலிய சமய நுண்பொருள் விளங்கமாட்டாது போகவே அப்பொருள் எளிதில் 'விளங்குமாறு பாட்டுடைத் தெய்வத்தின் பெயரொடு சார்த்தி முருகாற்றுப்படை என இப்பனுவல் சிறப்பு முறையில் வழங்கப் பெறுவதாயிற்று. எனவே புலவராற்றுப்படை. என்ற பொதுப் பெயர் வழக்கு வீழ்ந்ததாதல் வேண்டும். “இதனைப்
புலவராற்றுப்படை என உய்த்துணராது பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை. என்னும் பெயரன்றி அப்பெயர்
வழங்காமையான் மறுக்க” (தொல். புறம். 36) எனவரும் நச்சினார்க்கினியர் கூற்று இவ்வுண்மையைப் புலப்படுத்தல் காணலாம்.

மெய்யுணர்வினால் உயிர்முனைப்படங்கி இறைவனது திருவடிகளை இடையறாது போற்றும் நலம்புரி கொள்கைப் புலவன் ஒருவன் தன்னை ஒத்த புலவர்களை இறைவன்பால் ஆற்றுப்படுத்தற்குரிய தகுதி உடையேன் யான் என்னும் ஆன்ம போதத்துடன் முருகப் பெருமானை அடை தற்குரிய நெறி முறையைப் புலவர்க்கு அறிவுறுத்தினான் என்றல் €வன் முத்தனாகிய அவனது உளவியல்பிற்குக் சிறிதும் ஒவ்வாது. எனவே, இவ்வாற்றுப்படை அப்புலவன து தலைமை தோன்ற புலவராற்றுப்படை என்ற பெயரால் வழங்கப் பெறாதாயிற்று. அன்றியும் சந்தைக்கும் மொழிக்கும் எட்டாத முழுமுதற் பொருளாகிய முருகப் பெருமானை அடையும் நெறியறிந்து சென்று சேர்தல் சில் வாழ் நாள் பல்பிணிச் சற்றறிவினராகிய மன்னுயிர்கட்கு இயலா தென்பதும் அரும் பெயர் மரபில் பெரும் பெயர் முருகனாகிய அம்முதல்வனே தன் அருள்
3324 சைவசித்தாத் த சாத்திர வரலாறு

காரணமாக மன்னுயிர்த் தொகுதியாகிய நம்மை நோக்கி எளிவந்து தோன்றி அருள்புரியும் வண்ணம் அவ்விறைவனை அன்பின் தஇறத்தால் நம்வழிப்படுத்தும் வழிபாட்டு முறை ளை அறிவுறுத்தும் முறையில் இப்பாடல் அமைந்தமைபற்றி இது முருகாற்றுப்படை என்னும் பெயர்த்தாயிற்று என்பதும் பண்டைச் சான்றோர் முடிபாகும். (இந்நுட் பம்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப்படுத்த உருகெழு வியனகர்”'
எனவரும் இத்திருமுருகாற்றுப்படைத் தொடரானும்,
“களநன் கிழைத்துக் கண்ணிசூட்டி
வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்
துருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்” (அகம்.)
எனவரும் அகப்பாடலாலும் நன்கு புலனாதல் காணலாம். முருகாற்றுப்படுத்த எனவரும் இத் தொடர்க்குப் “டுிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின” என்று நச்சினார்க்கினியர் கூறிய பொருள் முருகாற்றுப்படை என்னும் பெயர்க் காரணத்தை இளிது புலப்படுத்துவதாகும்.

இனி, முருகன் எழுந்தருளிய திருப்பதிகளாகிய இருப்பரங்குன்றம், இருச்சரலைவாய், திருவாவினன்குடி,திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் ஆறுபடை வீடுகளையும் பற்றிக் கூறுதலின், இப்பாடல் திருமுருகாற்றுப்படை என்னும் பெயர்த்தாயிற்று எனக் கொண்டு இவ்வொரு பாடலையே ஆறுபகுதிகளாகப் பகுத்து வழங்குவாரும் உளர். இத்திருமுருகாற்றுப்படையில் தனிப்பட... எடுத்துரைத்துச் சிறப்பிக்கப்பட்ட. திருப்பதிகள் திருப்பரங்குன்றம், இருச்சீரலைவாய், இருவாவினன்குடி, திருவேரகம் என்னும் நான்குமேயாகும். அந்நூல் ஐந்தாவதாகக் கூறும் குன்றுதோறாடல் என்பது ஒருதனித் இருப்பது அன்று. சேயோனாகிய முருகப் பெருமான் குறிஞ்சி நிலத் தெய்வம் ஆதலால் அவ்விறைவனுக்கு எல்லா மலை களும் விரும்பி விளையாடுதற்கு உரிய சிறப்புடைய திருத்தலங்களே என்னும் கருத்தினால்
“குன்று தோறாடலும் நின்றதன் பண்பே”
என்றார் முருகாற்றுப்படை ஆசிரியர். மலைகள் தோறும் சென்று விளையாடுதலும் முருகப் பெருமானுக்கு நிலை பெற்ற பண்பாம் என்பது இத்தொடரின் பொருளாகும். இவ்வாறு குறிஞ்சிக் கிழவன் என்ற பொருள்படப் பழமுகிர்சோலை மலை கிழவோன் என முருக வேளை இந்நூலாசிரியர் இருமுருகாற்றுப்படையின் இறுதி அடியில் குறிப்பிட் டுப் போற்றியுள்ளார். இங்குக் கூறப்பட்ட பழமுகுர்சோலைமலை என்பதனைச் சங்கத் தொகை நூலாகிய பரிபாடலில் திருமாலிருஞ்சோலைமலை என்ற பெயரால் போற்றப்பெறும் அழகர்மலையென வழங்கும் திருப்பதியாகக் கொள்வது முண்டு. பழமுகிர் சோலைமலை என அதனைத் தனியே எண்ணாமல் அம்மலை முருகனுக்கு உரியது என்றவளவில் பழமுதிர் சோலை மலைகிழவோன் எனத் தஇருமுருகாற்றுப்படை குறித்தலால் பழமுதிர் சோலைமலை என்ற தொடர் திருமாலிருஞ்சோலை மலையை மட்டும் குறித்தது எனக் கொள்ளாமல், அம்மலையினை ஒத்து இழுமென இழிதரும் அருவியையுடைய வளமார்ந்த எல்லா மலைகளையும் குறித்து நின்றதெனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். பழமுதிர் சோலை மலைகிழவோன் என உடம்பொடு புணர்த்துக் கூறினமையால், பழமுகிர் சோலை மலையின்கண்ணே எழுந்தருளியிருத்தலும் உரியன் எனப் பெருள் கொண்டு இம்மலையினை முருகனுக்குரிய தனித் இருப்பதியாகக் கொண்டாலும் இம்முருகாற்றுப்படையில் இறப்பிக்கப் பெற்ற இருத்தலங்கள் ஐந்தெனக் கொள்வதன்றி ஆறுபடை வீடெனக் கொள்வதற்குச் சிறிதும் இடமில்லை.

இருமுருகாற்றுப்படை என்னும் இப்பனுவலின் ஆசிரியர் சங்கப்புலவர் நக்கீரனார் ஆவார். இச்செய்தி, “குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாச நச்சினார்க்கினியர் செய்த வுரை” எனவரும் உரைத் தொடரால் நன்கு துணியப்படும். பத்துப்பாட்டுள் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படை.யினைப் பாடிய நக்&ரனாரே பத்துப்பாட்டுள் ஏழாவதாகிய நெடுநல்வாடை என்னும் படலையும் பாடியுள்ளார். இச்செய்து, “பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடை.” எனவரும் நச்சினார்க் கினியர் உரைத் தொடரால் நன்கு புலனாகும்.

இனி, திருமுருகாற்றுப்படையிலும் நெடுநல் வாடையிலும் முறையே பேரின்பமாகிய வீடுபேற்றினையும் சிற்றின்பமாகிய உலகியல் வாழ்வினையும் நாடி வாழ்ந்த இரு வேறு மனநிலை புலப்படுதலாலும் இவ்விரு பாடல் களிடையே மொழி நடை முதலியன வேறுபட்டிருத்த லானும் இவை (இரண்டும் ஒரு புலவரால் பாடப்பெற்றிருத்தல் இயலாது என்றும், நெடுநல்வாடை இயற்றிய நக்&ரனார், கடைச் சங்க காலத்திலும், கஇிருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரனார் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாம் என்றும் அறிஞர் ஒருவர் எழுதியுள்ளார் (இருமுருகாற்றுப்படை உரையாரியர் உரையுடன் கூடியது. முன்னுரை மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்ப் பிரசுரம் 68 பார்க்க). அவர்தம் கருத்து பண்டைச் சான்றோர் உரையொடு முரண்படுதலின் ஏற்புடையதாகத் தோன்றவில்லை. உலகத்து வாழ்வாங்கு வாழும்உயர்ந்த ஒழுகலாறு உடைய பெரும்புலவரது வாழ்க்கையிலே நெறிமுறைபிறழா உலகியற் செயல்களும், வீடுபேற்றிற்குக் காரணமாகிய மெய்ந்நெறிச் செயல்களும் வடிகால் முறையே ஒருங்கு நிகழ்தல் இயல்பு. அம்முறைப்படி வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த தெய்வப் புலவராகிய நக்&ரனார் உலகியல் வாழ்வில் நின்ற நிலையிலேயே எங்கும் நிறைந்த பெரும் பொருளாகிய பெரும் பெயர் முருகனை உணர்ந்து பேரின்பம் எய்தும் வழிபாட்டு முறைகளை விளக்கியுள்ளார். உலகியல் நெறியில் வள்ளல்களை நாடிச் செல்லும் பரிசிலர் வாழ்க்கையைப் பற்றியும், போக நுகர்ச்சியாகிய இல்வாழ்க்கை யைப் பற்றியும் இழித்துக் கூறும் குறிப்பெதுவும் திருமுருகாற்றுப்படையில் இடம்பெறவில்லை. பத்துப்பாட்டுள் முதலாவதாகவுள்ள திருமுருகாற்றுப்படையும் ஏழாவதாக உள்ள இநெடுநல்வாடையும் ஆகிய இவ்விரண்டும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என வழங்கும் ஒரு புலவராலேயே பாடப் பெற்றனவாக பண்டையோர் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளனர்.
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ளன தெய்வ வழிபாடும் . . . 357

கடைச்சங்க காலத்தவராகிய நல்லந்துவனாராகிய புலவர் பாடிய பாடல்கள் பரிபாடலிலும் கலித் தொகையிலும் ஏனைத் தொகைகள் சிலவற்றிலும் இடம் பெற்றுள்ளன. ஒருவர் பாடிய பாடல்களாகிய இவை பொருளமைதியிலும் மோழி நடையிலும் சிறிது சிறிது வேறுபடக் காண்கிறோம். செய்ய எடுத்துக்கொண்ட பொருள்வகை காரணமாக யாப்பியலும் மொழி நடையும் வேறுபடுதல் இயல்பேயாகும். (இவ்வாறே பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற நெடுநல்வாடையும் முருகன்பால் முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்தும் நிலையில் பாடப் பெற்ற இருமுருகாற்றுப்படையும் எடுத்துக் கொண்ட பொருள் வகையால் றிது வேறுபட் ட.னவாதலின் அவற்றிடையே சிறிது சிறிது வேறுபாடு காணப்படுதல் ஏற்புடையதேயாகும். இடைச் சங்க நூலாகிய தொல் காப்பியத்தில் சுட்டப்படாத மொழி வழக்குகள் சில . கடைச்சங்க நூல்களில் புதியன புகுதலாக ஆங்காங்கே உடன்பட்டு இருத்தலைக் காண்கிறோம். புதியன புகுதலாகிய இவ்வழக்கிற்குத் கிருமுருகாற்றுப்படையும் விலக்கானதன் று.

தருமுருகாற்றுப்படை பாடிய நக்கரனாரும், நெடுநல்வாடை பாடிய நக்&ரனாரும் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார் என ஒருவராகவே குறிக்கப்படுதலானும், இவர்பாடிய இவ்விரு பாடல்களிலும், சங்கச் செய்யுட்கள் பிறவற்றிலும் சொல்வழக்குகள் ஒத்து நிற்றலாலும், பெரும் பேராிரியர் ௨. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தாம் பதிப்பித்த பத்துப்பாட்டு இரண்டாம் பதிப்பிலே பாடினோர் வரலாறு என்னும் தலைப்பில் நக்கரனாரைக் குறித்து எழுதுங்கால் இத்தகைய ஒப்புமைப் பகுதிகளைத் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளமையாலும் திருமுருகாற்றுப்படை. ஆ௫ிரியரும் நெடுநல்வாடை ஆசிரியரும் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனாரும் ஒருவரே என்பது நன்கு துணியப்படும்.
அரை.) ரரூ.வ. 17 2௦4 சைவசித்தாந்த சாத்திர வரலாறு
“சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்”: (அகம். 50)
என மதுரை மருதன் இளநாகனாரும்
“உருவச் நெந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப்படுத்த உருகெழு நடுநாள்” (அகம். 22)
என வெறிபாடிய காமக் கண்ணியாரும் கூறும் தொடர்கள் திருமுருகாற்றுப்படையில்
“சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்”
எனவும்,
“உருவப் பல்பூத் தூஉய் வெருவர
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினர் உட்க
முருகாற்றுப்படுத்த உருகெழு வியனகர்”'
எனவும் வரும் தொடர்களோடு ஓத்து நிற்றலைக் கூர்ந்து நோக்குங்கால், இப்புலவர்கள் அனைவரும் கடைச் சங்க காலமாகிய ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது நன்கு புலனாகும்.ஆகவே மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாமோ இத்திருமுருகாற்றுப்படை யைப் பாடியவர் என்றும், இவரே பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நெடுநல்வாடையைப் பாடியவர் என்றும் பண்டையோர் கூறும் கூற்று உறுஇப் படுதல் காண்க. திருமுருகாற்றுப்படை பாடிய ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்&ரனார் எனச் சுட்டப்படுதலால் இவர் வாழ்ந்த ஊர் மதுரை என்பதும், இவருடைய தந்தையார் மதுரையில் மாணாக்கர்கட் குக் கல்விபயிற்றும் ஆசிரியராகத் திகழ்ந்தமையால் மதுரைக் கணக்காயனார் என வழங்கப் பெற்றார் என்பதும் நன்கு புலனாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

பெரும்பெயர்க் கடவுளாகிய முருகப் பெருமான் திருவருளால் ஐம்புலநெறியின் நீங்கிச் செம்புலச் செல்வராய் மதுரையில் வாழ்ந்த நக்கீரனார் என்னும் புலவர் பெருமான் முருகப் பெருமானது இிருவடிப் பேரின்பமாகிய வீடு பேற்றினை அடைய விரும்பித் தன்னை எதிர்ப்பட்ட முதுவாய் இரவலனை நோக்கித் தாம் பெற்ற பேரின்பத்தை உலகமக்கள் அனைவரும் பெறுதல் வேண்டும் என்னும் அருள் நோக்கம் உடையராய் முருகப் பெருமானது திருவருளால் அடைதற்கரிய பேரின்பத்தை எடுத்துக் கூறி அவ்விறைவன்பால் ஆற்றுப்படுத்தும் நிலையில் திருமுருகாற்றுப்படை என்னும் செந்தமிழ்ப் பனுவலைப் பாடியுள்ளார். முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள தெய்வத்துிருப்பதிகளின் சிறப்பினையும் அங்கு மக்கள் பலரும் அன்பினால் ஒருங்குகூடி முருகப் பெருமானது பொருள் சேர் புகழ்த் இறங்களைப் போற்றி உய்திபெறும் நிலையில் ஆங்காங்கே நிகழும் வழிபாட்டு முறைகளையும் அன்பினால் நிகழ்த்தப்பெறும் அவ்வழிபாடுகளில் காண்டற்கரிய கடவுளாகிய இறைவன் பண்டைத்தன் மூவா இளநல முடையோனளாகத் தோன்றிக் காட்சியளிக்கும் பெற்றி யினையும், முருகனது அருளை நிரம்பப்பெற்ற சான்றோர்கள் அம்முதல்வனதருளை நாடிவந்த இரவலனுக்கு அருள் செய்யும் பொருட் டு இறைவனைப் பணிந்து வேண்டும் வேண்டுகோளையும், அவர்தம் வேண்டுகோளைச் செவிமடுத்த இறைவன் முதுவாய் இரவலனுக்கு விழுமிய பெறலரும் பரிசிலாகிய வீடுபேற்றினை வழங்கியருளும் தறத்தினையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்தது இருமுருகாற்றுப்படையென்னும் இத் தெய்வப் பனுவலாகும்.

உலகத்துப் பல்லுயிர்களும் மகிழ நீலக் கடல்மேல் தோன்றும் காலை யிளங்கதிரவனைப் போன்று, நீலமயிலின் மேல் செம்மேனிப் பேரொளியினனாகத் திகழ்வோன் முருகப்பெருமான். தன்னைச் சேர்ந்தவர்கள து ஆணவவல் லிருளைப் போக்கி அவரைத் தாங்கிய ஆற்றல்மிக்க இருவடியினையும் அழித்தற்கரிய கொடியோரை அழித்த கையினையும் உடையவன். அறக்கற்பினையுடைய தெய்வயானையார் கணவன். செங்கடம்பின் மாலையசையும் மார்பினையுடையவன். வண்டுகள் மொய்க்காத தெய்வத் தன்மை வாய்ந்த செங்காந்தட் பூவாலாகிய கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவன். கடல்நடுவிற் குந்து சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற சுடர்விடும் நெடிய வேலாலே, அவுணரது நல்ல வன்மையெல்லாம் அழியும்படி க&ழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய மாமரத்தைப் பிளந்த குற்றமில்லாத வெற்றியினையும், ஒருவராலும் அளந்தறிய வொண்ணாத பொருள்சேர் புகழினையும் உடையவன். இவந்த வேற்படையைத் தாங்கிய சேயோ னாகிய முருகப் பெருமானுடைய இருவடியிற் செல்லுதற்குக் காரணமான நல்வினைகளைப் பல பிறப்புக்களினும் விரும்பிப் புரிந்த. தலைமைபெற்ற உள்ளத்துடனே அப் பெருமான்பாற் செல்லுதற்கு நீ விரும்பி விட்டாயாயின் நினது நல்ல நெஞ்சத்தினது இனிய விருப்பம் ஈடேற நீ கருதிய வீடு பேற்றின்பத்தை இப்பொழுதே தப்பாமற் பெறுவாய். வெற்றியாலும் செல்வத்தாலும் விளக்கமுற்ற கடல் நகரத்துக்கு மேற்றிசையிலுள்ள தும். இரவெல்லாம் தாமரை மலரில் உறங்கிய வண்டினங்கள் விடியற்காலத்தே நெய்தற் பூவையூதி ஞாயிறு தோன்றின காலத்தே கண்ணைப் போன்று மலர்ந்த சுனைப் பூக்களிலே சென்று ஆரவாரிக்கும் வளமார்ந்ததுமாகிய திருப்பரங்குன்றத்திலே இறைவனாகிய முருகன் மனம் விரும்பி எழுந்தருளியிருத்தலு முரியன். அதுவன்றி, ஆறு திருமுகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் தத்தமக்கேற்ற தொழில் செய்ய யானையின்மேல் எழுந்தருளி வான்வழியாகத் திருச்€ரலைவாய் என்ற திருப்பதியை யடைதலும் அவனுக்கு நிலைபெற்ற பண்பாகும். அதுவன்றிப் படைத்தற் கடவுளாகிய நான்முகனுக்கேற்பட்்ட சாபத்தை நீக்குதற்பொருட்டுத் இருமால் சிவபெருமான் இந்திரன் ஆகிய தெய்வங்களும், முப்பத்து முக்கோடித் தேவர்களும் பதினெண்கணங்களும் துனியில் காட்டு முனிவர் முற்புகக் கந்தருவர் யாழிசைக்க உடன் வந்து காணத் திருவாவினன்குடியில் தன் தேவியுடன் இலநாள் அமர்ந்திருத்தலும் உரியன்.

அதுவன்றி இருபிறப்பாளராகிய அந்தணர்கள் நீராடி ஈர ஆடை. உடுத்து ஆறெழுத்து மந்திரமாகிய மறையை ஓதி மலர் தூவி வணங்க அவ்வழிபாட்டை. விரும்பி ஏற்று ஏரகம் என்னும் திருப்பதியில் எழுந்தருளி யிருத்தலும் உரியன். அதுவன்றிக் குறமகளிராடும் குரவைக் கூத்திற்கு முதற்கை கொடுத்து அம்மகளிருடன் மலைகள் தோறும் விரும்பி விளையாடுதலும் அவன்பால் நிலைபெற்ற அருட் குணமாகும்.

அதுவேயுமன்றி ஊர்கள் தோறும் மக்கள் கொண்டாடும் திருவிழாக்களிலும், அன்புடைய அடியார்கள் உளமுருகிப் போற்ற அமைந்த இடங்களிலும், முருகபூசை புரியும் வேலனென்பான் வேலேந்தி வெறியாடுகளத்திலும், காடுகளிலும் இளமரச் சோலைகளிலும் ஆற்றிடைக் குறையிலும், குளங்களிலும் வேறுபல எழில்மிக்க இடங்களிலும் பல தெருக்கள் ஒன்று கூடும் சந்திகளிலும் புதுப்பூ மலருங் கடம்ப மரங்களிலும் மன்றங்களிலும் பொதுவாகிய அம்பலங்களிலும், தெய்வம் உறையும் தூண்கள் நிலைபெற்ற இடங்களிலும், குறையிரந்து வேண்டும் அன்பர்கள் தாம் விரும்பியவாறே பெற்று நின்று வழிபட அவ்வவ்விடங்களிலேயே நிலைபெற எழுந்தருளியிருத்தலும் இருவருட் பெரியோர் அறிந்து கூறிய மெய்ந்நெறியாகும்.

யான் முற்கூறிய அவ்வவ்விடங்களிலேயாயினுமாக, நீ முற்பட. அம்முருகப் பெருமானைக் கண்டபொழுது முகம் விரும்பித் துதித்துக் கைகளைத் தலைமேல் குவித்து நின்று வாழ்த்துப் பின்பு அவன் இருவடிகளிலே தலை பொருந்தும்படி. வீழ்ந்து வணங்கி,
“நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்௫னை
ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி”
என்பன முதலாக யான் அறிந்து நினக்குக் கூறிய
அளவாலேயே நீயும் நினக்குத் தெரிந்த பலவற்றையும் கூறிப் புகழ்ந்து, “நின்னோடு ஒப்பாரில்லாத மெய்ஞ்ஞானத்தையுடைய பெருமானே! நின் தன்மையெல்லாம் முழுதும் அளந்தறிதல் நிலைபெற்ற எவ்வுயிர்க்கும் அரிதாகையினாலே நின் இருவடியைப் பெறவேண்டுமென்று நினைந்து வந்தேன் ” என அவ்விறைவனை நோக்கி நினது வேட்கையினைத் தெரிவிப்பாயாக. நீ அங்ஙனம் தெரிவித்தற்கு முன்னரே முருகனைச் சேவித்து நிற்போராகிய மெய்யடியார்கள், அங்கே பொலிவுடன் வந்து தோன்றி அவ்விறைவனை நோக்கிப் “பெருமானே, அறிவு முதிர்ந்த வாய்மையுடைய இப்புலவன் நினது பொருள்சேர் புகழுரையினைக் கூற விரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதி பயப்பனவுமாக மிக்க பலவற்றை வாழ்த்தி வந்துள்ளான். இவன் நின்னால் அளிக்கத் தக்கவன்? என நின் பொருட்டுக் குறையிரந்து நிற்பர். அந்நிலையில் இழுமென இழிதரும் அருவிநீரையும், பழம் முதிர்ந்த சோலைகளையும் உடைய மலைக்கு உரியவனாகிய முருகப்பெருமான் தெய்வத்தன்மை அமைந்த பேராற்றல் விளங்கும் வடிவினையும், வானளவோங்கிய வளர்ச்சியையுமுடையனாக அவ்விடத்தே வந்து தோன்றித் தனது பேருருவம் மக்கள் கண்களால் காண்டற்கரியதாதலின் அப்பெரிய வடிவத்தை உள்ளடக்கிக் கொண்டு தனது பழைய வடிவாகிய இளமைக் கோலத்தினை நினக்குக் காட்டி “நீ வீடுபெற நினைந்துவந்த வருகையை யான் முன்னரே அறிவேன். அது நினக்கு எய்துதற்கரியதென்று அஞ்சுதலைத் தவிர்க” என்று நின்பால் அன்புடைய நல்ல வார்த்தைகளைப் பலமுறையும் அருளிச் செய்து கடல் சூழ்ந்த இவ்வுலகிலே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு . உரிமையுடை_யையாய்க் கேடின்றித் தோன்றும்படி பிறராற் பெறுதற்கரிய சிறப்பாகிய வீடுபேற்றின்பத்தை நினக்குத் தந்தருளுவான் என்பது இத் திருமுருகாற்றுப்படையின் திரண்ட. பொருளாகும்.

எல்லாப் பொருளினும் சிறந்ததாகிய வீடுபேற்றினை “விழுமிய பெறலரும் பரிசில்” என நக்&ரனார் இத்திருமுருகாற்றுப்படையிற் சிறப்பித்துள்ளார். விழுமிய பரிசில், பெறலரும் பரிசில் என இயையும். வீடு பேற்றினும் இறந்தது பிறிதொன்றின்மையின் அதனை விழுமிய பரிசில் என்றும், அவ்வீடு பேறுதானும் இறைவனது திருவருளாற் கிடைக்கப் பெறுவதன்றி உயிர்கள் தாமே தமது முயற்சியாற் பெறுதற்குரிய எளிமைத் தன்மைத்து அன்றாதலின் அதனைப் பெறலரும் பரிசில் என்றும் நக்&ரனார் குறித்த திறம் நினைந்து
மகிழத்தக்கதா கும்.

கந்தழியைப் பெற்றான் ஒருவன் அதனைப் பெறாதான் ஒருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப்படுத்துக் கூறுவான் : என்பது பற்றி நக்&ரனார் இத்திரூமுரு காற்றுப்படை_யைப் பாடியுள்ளார் என்பர் நச்சினார்ச்கினியர்.“கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; அது,
“*சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்குஞ் சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பம் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர்.என்பதாம். இதனை,
௦ ய் ச ச
உற்ற வாக்கையி னுறுபொருள் நறுமல ரெழுதரு
நாற்றம்போல்
பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்”:
என அதனை உணர்ந்தோர் கூறிய வாற்றானுணர்க என நச்சினார்க்கினியர் கூறிய விளக்கம், இத்திருமுருகாற்றுப் படையும் இருவாசகம் முதலிய இருமுறைகளும் போற்றும் முழுமுதற் கடவுள் ஒன்றே யேன்பதனை இனிது புலப்படுத்துதல் காணலாம்.

இறைவன் திருவடியே உயிர்களுக்கு வீடாயிருக்கும் என்பதனைத் “தென்னன் பெருந்துறையான், காட்டாதன வெல்லாம் காட்டிச் சவம் காட்டித், தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி” எனவரும் திருவாசகத் தொடரால் திருவாதவூரடிகள் தெளிவாக அறிவுறுத்தி யுள்ளார் என்பது நச்சினார்க்கினியரின் கருத்தாகும்.

முருகப் பெருமான் கடல் நடுவேசென்று வேவேற்படையாலே வெட்டி வீழ்த்திய மாமரம் &ழ் நோக்கின பூங்கொத்துக்களையுடையதென்பது “கவிழிணர் மாமுதல் தடிந்த” என்ற தொடரால் அறியப்படும் என்றது “அவுணர் எல்லாரும் தம்முடனே எஜிர்ந்தார் வலியிலே பாது தங்கள் வலியிலே கூடும்படி மந்திரம் கொண்டிருந்து சாதித்ததொரு மாவை வெட்டினான் என்றவாறு” எனவரும் நச்சினார்க்கினியர் உரைத்தொடர் இங்கு நோக்கத்தகுந்தது. இறைவனடி சேர்தலொன்றையே சிறந்த வீடு பேறாகப் பண்டைக் தமிழ் மக்கள் கருதி வந்துள்ளார்களென்பது திருக்குறள் கடவுள் வாழ்த்தில் இறைவனடி சேர்தல், தாள் சேர்தல் எனக் குறிக்கப்படும் சொல் வழக்குகளால் நன்கு தெளியப்படும். இங்ஙனம் இறைவனடி சேர்தலே வீடு பேறாகும் எனச் சைவத்திருமுறை ஆசிரியர்கள் தாம் பெற்ற திருவருள் அனுபவத்தால் உணர்ந்துகூறிய அடிசேச்
முத்தியினையே
“சேவடி படருஞ் செம்மலுள்ள மொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவு”
எனவருந் தொடரில் நக்கீரனார் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளார். ப
“புலம்பிரிந்துறையும் அடி”
எனவும்,
“சேவடி படரும் செம்மலுள்ளமொடு
செலவு நீ நயந் தனையாயின்””
எனவும் இயைத்துப் பொருள் வரைந்தார் நச்சினார்க்கினியர். புலம்பிரிந்து உறைதலாவது, ஐம்புல உணர்வினை நீங்கு,சிவஞானவுணர்வாகிய செம்புல உணர்வுடையராதல். திருவாதவூர் மகிழ் செழுமறைமுனிவர் “ஐம்புலன் கையிகந்து அறிவாய் அறியாச் செம்புலச் செல்வராயினர்” எனத்
தருச்சிற்றம்பலக் வையார் உரை முகத்தே பேராசிரியர் தரும் விளக்கம்,

“சேவடிபடரும் செம்மலுள்ளமொடு
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . ஓடத்
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவு”
எனவரும் இத்திருமுருகாற்றுப்படையின் வரிகளை அடியொற்றி அமைந்தனவாகும்.
“அமரர் கண் முடியும் அறுவகையானும்'”
என்ற தொகுப்பில் முதற் கண்ணவாகிய கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் பாட்டுடைத் தலைவனைச் சார்த்தி வருங்காலத்துக் கடவுள் வாழ்த்தொடு பொருந்திவரும் என இந்நூற்பாவிற் கூறப்பட்ட இலக்கணத்தை இம்மூன்றுடன் சேர்த்தெண்ணப்பட்_ட. புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்னும் ஏனை மூன்றற்கும் சேர்த்துப் புலவராற்றுப்படை முதலாகிய மூன்றும் சார்த்திவருமெனவும் கொள்க” என்றார் இளம்பூரணர். அவர் கருத்துப்படிப் பத்துப் பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப்படை என்பது புலவராற்றுப் படையாகும். முருகப் பெருமான்பால் முதுவாயிரவலனாகிய புலவனை ஆற்றுப்படுத்தும் புலவராற்றுப்படையாகிய திருமுருகாற்றுப்படையுள் மாடமலிமறுகின் கூடலாகிய மதுரையின் மேற்கே அகன்ற வயலிடத்தே மலர்ந்த தாமரை மலரின் கண்ணே இரவெல்லாம் இனிது துயில் கொண்ட வண்டினம், வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து தேன் மணம் கமழும் நெய்தல் மலரிலே இசை முரன்று ஞாயிறு தோன்றிய காலைப் பொழுதிலே திருப்பரங்குன்றத்தினை யடைந்து அங்குள்ள சுனையின்்௧ண்ணே கண்போல் மலர்ந்த விரும்பத்தக்க மலரிடத்தே பரவி ஒலிக்கும் என்னும் இக்கருப்பொருள் நிகழ்ச்சியில், மாடமலி மறுகின் கூடலம்பதியிலே வளமார்ந்த அரண்மனையிடத்தே இரவுப் பொழுதிலே இன்துயில் வடஇுந்த பாண்டியன், வைகறைப் பொழுதிலே விழித்தெழுந்து தேங்கமழும் நறுமலர்ப் பொய்கையிலே நீராடி, ஞாயிறு தோன்றும் காலைப் பொழுதிலே இிருப்பரங்குன்றத்தினையடைந்து முருகப் பெருமானுடைய திருவருள் நோக்கிற்குரியவனாகி அம்முதல்வனைப் பரவிப் போற்றும் வழிபாட்டு நிகழ்ச்சியினை,
“மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
266 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு
ப்ப ப்பட் ப ப பெ பப்ப பட்ட டப்ப வெப்ப வைய வைய பய்
இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த
முட்டாட் டாமரைத் துஞ்சி யெற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந் துறைதலும் உரியன்” (திருமுருகு. 71-77)
எனவரும் பகுதியில் நக்்&ரனார் குறிப்பிற் புலப்பட வைத்துள்ளார். இந்நுட்் பத்தினைக் கூர்ந்துணர்ந்த
இளம்பூரணவடிகள், முருகாற்றுப்படையுள்,
“மாடமலிமறகின் கூடற்குடவயின்,
இருஞ்சேற் றகல்வயல் விரிந்து வாயவிழ்ந்த
முட்டாட் டாமரைத் துஞ்சி”
என்றவழி ஒருமுகத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க” என இங்குக் குறிப்பின்விளக்கும் திறம் உய்த்துணர்ந்து போற்றத்தகுவதாகும்.




__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

“முன்னியது முடித்தலின் முருகொத்தீயே” (புறம்.)
என்றவண்ணம் தன்னை அன்பினால் வழிபடும் அடியார்கள் எண்ணியவற்றை எண்ணிய வண்ணமே முடித்தருளும் பேராற்றள் வாய்ந்த தெய்வம் முருகப் பெருமான் என்பது சங்ககாலத் தமிழ் மக்கள் உள்ளத்தே நிலைபெற்ற உறுதியான நம்பிக்கையாகும். எல்லாம் வல்ல இறைவன் நாற்றிசையிலும் மேலும் &ழுமாக இவ்வுலகில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சான்றாய் நோக்கியருளுகின்றான் என்பதனைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது முருகப் பெருமானுக்குரிய அறுமுகத்திருமேனி ஆகும். அம் முதல்வனுடைய ஆறுதிருமுகங்களுக்கும் உரிய பொது வியல்பினையும் அவற்றுள் ஒவ்வொரு இிருமுகத்திற்கும் உரிய சிறப்பியல்பினையும் வகைப்படுத்துரைப்பது., 66
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
மன்னேர் பெழுதர வாணிறமுகனே
மாயிருண் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்
ஆர்வலரேத்த அமர்ந்தினிதொழுகிக்
காதலினுவந்து வரங்கொடுத்தன்றேயொருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க்கும்மே ஒருமுகம்
எஞ்சிய பொருளை யேமுற நாடித்
திஙகள்போலத் திசை விளக்கும்மே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் :
மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்றே ”
எனவரும் பகுதியாகும். குற்றமற்ற கோட்பாட்டாலே தாம் தாம் மேற்கொண்ட தொழிலை முடிப்பவருடைய மனத்திலே எழுந்தருளியிருந்து உள்நின்று அருளும் ஒளியும் நிறமும் வாய்ந்த ஆறு முகங்களிலே ஒருமுகம் பேரிருளால் மூடப்பட்ட உலகம் குற்றமின்றி விளங்கும்படிப் பல தரணங்களையும் தோற்றுவித்தது. ஒரு முகம் தன்மேல் அன்பு செய்தவர்கள் துஇக்க அதற்குப் பொருந்தி அவருக் தினிதாக நடந்து அவர் மேற் சென்ற காதலாலே மகிழ்ந்து அவர்கள் வேண்டும் பொருள்களை முடித்துக் கொடுத்தது. ஒரு முகம் மந்திரத்தையுடைய வேதத்கிற்குரிய முறை தப்பாத அந்தணர்களுடைய வேள்வியிலே தீங்குவாராதபடி நினைந்தருளாநின்றது. ஒருமுகம் இவ்வுலகில் வழங்காத வேதங்களிலும் ஏனைய நூல்களிலும் உள்ள பொருள்களை ஆராய்ந்து முனிவர்கள் ஏமம் உறும்படி அறிவுறுத்தி கங்கள் போலத் இசைகள் எல்லாம் விளங்கச் செய்கின்றது. ஒருமுகம் எல்லா உயிர்களிடத்தும் செல்கின்ற நடுவு நிலைமையைக் கெடுத்துத் தயோரைக் கொல்ல வேண்டுமென்று சினங் கொண்ட இிருவுள்ளத்தோடே அழித்தற்குரிய அசுரர் முதலியோரைப் பொன்றக் கெடுத்துக் களவேள்வியை வேட்கின்றது. ஒருமுகம் குறவருடைய மடப்பத்தையுடைய மகளாகிய கொடி போலும் இடையையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியைப் பொருந்திற்று” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இதன்கண் முருகப் பெருமா னுடைய ஆறுதிருமுகங்களுக்கும் உரிய பொது இயல்பினை,

“தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார்
மனனேர் பெழுதரு வாணிறமுகனே”
என்னும் அடிகளில் நக்&ரர் தொகுத்துக் கூறியுள்ளார்.

“வாகைதானே ............ [வவ
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றை
பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப”
எனவரும் தொல்காப்பிய நூற்பாவை அடி யொற்றியது மேற்காட்டிய திருமுருகாற்றுப்படைத் தொடராகும். வாகைத்இணையாவது மக்கள் குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு ஆண்மை பெருமைபற்றிய தொழிற் கூறுபாடுகளை ஏனையோரினும் மிகுத்து மேம்படுதலாகிய வெற்றித் இறமாகும்.

இங்ஙனம் மக்கள் பெறுதற்குரிய வெற்றித்திறங்களுக் கெல்லாம் பற்றுக்கோடாய் உயிர்களின் உள்ளத்தில் அறுமுகச் செவ்வேளாக அமர்ந்தருளி ஊக்குவிப்போன் உயிர்க்குயி ராய இறைவனே என்பார், “தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார் மனனேர்பெழுதருவாணிறமுகனே” என அம் முதல்வனுடைய திருமுகங்கள் எல்லாவற்றுக்கும் உரிய பொதுவியல்பினைப் புலப்படுத்தியருளினார் நக்&ரர்.
“குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந்தன்று'”
என்ற தொடரில் மடவரல் என்பதனை நகைக்கு அடைமொழியாக்கி வள்ளியொடு மடவரல் நகையமர்ந்தன்று எனக் கூட்டி”, “ஒருமுகம் குறவருடைய மடப்பத்தை யுடைய மகளாகிய வல்லிபோலும் இடையினையுடைய வள்ளியுடனே தனக்கு ஓர் அறியாமை தோன்றும் தன்மையுடைத்தாகிய மகிழ்ச்சியைப் பொருந்திற்று என உரை வரைந்து நச்சினார்க்கனியர் அவளொடு நகையமர்தலின் அறியாமை கூறினார் காம நுகர்ச்சி இல்லாத இறைவன் இங்ஙனம் நகையமர்ந்தான், உலகில் இல்வாழ்க்கை நடத்தற்கென்று உணர்க.

*தென்பாலுகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்”
என்பதனுள், 
“பெண்பாலுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் ப
விண்பாலியோ கெய்தி வீடுவர்காண் சாழலோ”
என்பதனான் உணர்க” என விளக்கமும் தந்துள்ளார். இவ்விளக்கத்தினைக் ச.ர்ந்து நோக்குங்கால் முழுமுதற் கடவுளாகிய முருகப் பெருமானுடன் பிரிவின்றியியைந்த : அருட்_சத்தியே வள்ளியம்மை யென்பது அவர் கருத்தாதல் நன்கு புலனாம். மேற்குறித்த ஆறுதிருமுகங்களும் தத்தமக்குரிய தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துதலால் அவ் வாறு திருமுகங்களுக்கும் பொருந்த இரண்டிரண்டாகவமைந்த திருக்கரங்களின் 'பொதுவியல்பையும் சறப்பியல்புகளையும் பிரித்துரைக்கும் முறையிலமைந்தது திருமுருகாற்றுப்படையில் 102ஆம் அடிமுதல் 118ஆம் அடிவரை யமைந்த பகுதியாகும். பொன்னாற் செய்த ஆரந்தாங்கிய அழகிய பெருமை வாய்ந்த மார்பிற் கடந்த சிவந்த மூன்று வரியினையும் தன்னிடத்தே வந்து பொருந்தும்படி அமைந்து வண்மையினாலேயே பெரும்புகழ் நிறையப் பெற்றுச் சுடரையுடைய படைக் கலங்களை எறிந்து பகைவர் மார்பைப் பிளந்தவை முருகப் பெருமானுடைய இருக்கைகளாகும். அக்கைகளில் ஒருகை விண்ணிடத்தே செல்லும் முனிவர்களுக்குப் பாதுகாவலாக ஏந்தியகைக்கு இணைந்தகை மருங்கிலே வைத்தது என்பார்,

““*விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை,
உக்கம் சேர்த்தியது ஒருகை”
என்றார். கதரவனது வெம்மை பல்லுயிர்களும் பொறுத்துத் தாங்க வொண்ணாதது எனக் கருதித் தமது பெருங் கருணையால் அக்கதிரவனொடு திரிந்து கதிரவனது வெம்மையைத் தமது சடைக்கற்றையால் பொறுக்கின்ற முனிவர்கள்,
“விண்செலல் மரபின் ஐயர்”
எனப் பெற்றனர். உலக நலங்கருஇக் கதிரவனொடு சுழன்று திரியும் இம்முனிவர்களைக் காத்தற் பொருட்டு முருகன் ஏந்தியகை உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று. எனவே இக்கை மாயிருள் ஞாலம் மருவின்றி விளங்கப் பல்கர் விரிந்த முகத்திற்கு ஏற்ற தொழிலைச் செய்ததாயிற்று. இங்கு முருகப் பெருமானால் காக்கப்பெற்ற விண்செலல் மரபின் ஐயர் எனப்படுவார்,
“நிலமிசை வாழ்நர் அலமரல் தீர
பெறுகதிக் கனலி வெம்மைதாங்கி
காலுணவாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவர்” (புறம். 43) எனப் புறநானூற்றிற் குறிக்கப் பெற்றனர்.

முருகனது மனனும் முகனும் கையும் ஒரு தொழிலைச் செய்தலின் அதனொடு இணைந்த மற்றொருகை தொழிலின்றி மருங்கிலே கிடந்தது” என்றார்
நச்சினார்க்கினியர். உக்கம் : மருங்கு - இடை. முருகப் பெருமானுக்குரிய ஒருகை அங்குசத்தைச் செலுத்தாநிற்க, அதற்கிணையான மற்றைக்கை செந்நிறம் வாய்ந்த ஆடையை யணிந்த தொடையின் மேலே கிடந்தது என்றார்.

“நலம் பெறுகலிங்கத்துக் குறங்கின் மிசையசைஇய
தொருகை
க ப 99
அங்குசங் கடாவ வொருகை
என்றார். இத்தோற்றம் யானையின் மேற் செல்வார்க்கு உரியதாகும். முருகப் பெருமான் தன்னை வழிபடுவாரிடத்து வருங்கால் யானைமேல் வந்து அருள் செய்தல் இயல்பு ஆகலின் இக்கைகள் காதலின் உவந்து வரங் கொடுத்த முகத்திற்கு ஏற்றனவாயின. இரண்டுகைகள் வியப்பையும் கருமையையும் உடைய கேட.கத்துடனே வேலையும் வலமாகச் சுழற்றின வென்பார்.

“இருகை ஐயிருவட்டமொடு எஃகுவலந்திரிப்ப'”
என்றார். இதனானே அசுரர் வந்து வேள்வியைக் கெடாமல் அவரை ஓட்டுதற்கு இவற்றைச் சுழற்றுதலின் வேள்வி ஓர்க்கும் முகத்திற்கு இக்கைகள் ஏற்றனவாயின.

முருகப் பெருமான் முனிவர்க்குத் தத்துவங்களைக் கூறிச் சொல்லிறந்த மெய்ப் பொருளை உணர்த்தும் காலத்து ஒரு கை மார்புடன் விளங்க, மற்றொருகை மார்பின் மாலை தாழ்ந்ததனோடு சேர்ந்து அழகு பெற விளங்கியது என்பார்.
“ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
தாரொடு பொலிய”
என்றார் . என்றது முருகன் மோனமுத்திரைக் கையனாய் தானேயாய் இருந்து மெய்ப்பொருளைச் சுட்டிக் காட்டக் குவிந்தவாயமையாத குடத்தில் நீர் நிறைந்தாற்போல இன்ப மயமான பேரொளி மாணாக்கர்க்கு நிறைதலின் அதற்குரிய மோனமுத்திரை இங்கு கூறப்பெற்றது. இக்கைகள் இரண்டும் எஞ்சிய பொருள்களை விளக்கும் முகத்திற்கு ஏற்றனவாயின. முருகப் பெருமானது ஒருகை தொடியொடு மேலே சுழன்று களவேள்விக்கு முத்தரை கொடுப்ப அதனொடு இணையாய்க் &ழே தாழ்ந்த மற்றைக்கை இனிய ஓசையை யுடைய மணியை மாறி ஒலிக்கச் செய்கின்றது என்பார்

“ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை
பாடின் படுமணியிரட்ட””
என்றார். இக்கைகள் களவேள்வி வேட் கின்ற முகத்திற்கு ஏற்பவமைந்தன. முருகப் பெருமானுடைய ஒருகை நீல நிறத்தையுடைய மேகத்தாலே மிக்க மழையைப் பெய்யுமாறு செய்விக்க அதற்கிணையான மற்றைக்கை தெய்வமகளிர்க்கு மணமாலையைச் சூட்டும் நிலையிலமைந்த தென்பார்.

“ஒருகை நீல்நிறவிசும்பின் பலிதுவ்போழிப் ஒருகை
வானற மகளிர்க்கு வதுவை சூட்ட”
என்றார். “வள்ளியொடு நகையமர்ந்த முகம் உலகிற்கு இல்வாழ்க்கையை நிகழ்த்துவித்தது ஆதலின் அவ்வில் வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்வித்தது ஒருகை. ஒருகை இல்வாழ்க்கை நிகழ்த் துதற்பொருட்_டடு மணமாலை யைச் சூட்டிற்று” என்பதாம். திருஆவிநன்குடியில் முருகப் பெருமானை அன்பினால் வழிபடும் பெருந்தவச் செல்வர்களின் உள்ல வையம் திரு வேடப் பொலிவினையும் விரித்துரைக்கும் நிலையிலமைந்த து,
“சரை தைஇய உடுக்கையர் சீரொடு  எனவரும்
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற இமைக்கும் உருவினர் மானி
னுரிவை தைஇய ஊன்கெடு மார்பி
னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற்
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தின ரியாவதும்
கற்றோ ரறியா வறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவது மறிய வியல்பினர் மேவரத்
துணியில் காட்சி முனிவர்”: திருமுருகாற்றுப்படைத் தொடராகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

பெருமானுக்குரிய ஊர்தியாகிய பிணிமுகம் என்னும் பட். டத்து யானையை வாழ்த்தித் தமக்கு ஏற்ற வரங்களை இரந்து வேண்டிநிற்பாரும் முன் வேண்டியவண்ணம் வரங்களைப் பெற்றவர்களும் ஆகிய இருதிறத்தாரும் வழிபட்டுப் போற்ற அவ்வவ்விடங்களிலே உறைதலும் உரியன். முற்கூறிய அவ்விடங்களிலே ஆயினுமாக! பிறவிடங்களிலே ஆயினுமாக! (முருகனை நீ காணப் பெறுவாய்). அழகு விளங்க முருகப் பெருமானை முற்பட நீ கண்டபொழுது முகம் விரும்பித் துதித்து இருகைகளையும் தலைமேல் வைத்து வாழ்த்துப் பின்னர் அம் முதல்வன் இருவடி. நின் தலையிலே பொருந்தும்படி நிலத்தில் வீழ்ந்து வணங்கி நெடிய பெரிய இமயமலையின் உச்சியில் தருப்பை வளர்ந்த பசிய சுனையிடத்தே ஐம்பெரும் பூதங்களுக்குத் தெய்வமாகிய சதாசிவன், மயேச்சுரன், உருத்திரன், அரி, அயன் .என்னும் ஐவருள் உருத்திரனைத் தெய்வமாகவுடைய த தான் அகங்கையிலே ஏற்ப, அறுவராலே பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்திய செல்வனே! கல்லாலின் ழிருந்த கடவுளின் மகனே! மலைமகளாராகிய உமா தேவிக்கு மகனே! பகைமையுடையார்க்குக் கூற்றுவனே! கொற்றவை யின் புதல்வனே! காடுகிழாளாகிய காளியின் மைந்தனே! தேவர்கள் போற்றும் படைத்தலைவனே! இன்பத்திற்குரிய மாலையை யணிந்த மார்பனே! எல்லா நூல்களையும் அறியும் புலவனே! போர்த் தொழிலில் ஒப்பற்றவனாகி நிற்பாய்! இபொருகின்ற இவற்றியையுடைய இளையோனே! அந்தணருடைய செல்வமாய் இருப்பவனே! சான்றோர் புகழ்ந்து கூறும் சொற்களின் தொகுதியாய் விளங்குபவனே! வள்ளி நாச்சியாரும் தெய்வயானையாரும் ஆகிய மகளிருக்குக் கணவனே! வேல் பொருந்திய பரிய கையினை உடையவனே! குருகாற் பெயர் பெற்ற (கிரெளஞ்சமலை) மலையைப் பிளந்த குன்றாத வெற்றிச் செல்வனே! வானைத் உண்டும் நீண்ட சமயங்களை உடைய குறிஞ்சி நிலத்திற்குரியவனே! பலரும் புகழ்ந்து போற்றும் நன்றாகிய நூல்களை உணர்ந்த ஞானியர்க்கு ஏறுபோல்வாய். உயிர்கள் தம் முயற்சியால் சென்று பெறுதற்கரிய முறைமையினையுடைய பெரும் பொருளாகிய வீட்டினை வழங்க வல்ல முருகப் பெருமானே! அப்பெரும்பொருளை நச்சி வந்தார்க்கு வீடு பேற்றின்பத்தினை நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதல்வல்ல இறைவனே! பிறவித் துன்பங்களால் இடுக்கண்பட்டு வந்தோர்க்கு அருள் செய்யும் சேயோனே! மிக்குச் செல்கின்ற போர்களில் கொடியோர்களை வென்றடுகின்ற நினதழகிய மார்பிடத்தே பொன்னாற் செய்த பேரணிகலங்களை அணிந்தவனே! இரந்து வந்தோரை வேண்டுவன .கொடுத்துப் பாதுகாத்தலால் அவர்க்குப் பகையாயினார் அஞ்சத்தக்க நெடிய வேளே! தேவரும் முனிவரும் ஆகிய பெரியோர்கள் ஏத்தும் பெரும்பெயரை உடைய முருகனே! சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின மிகுகின்ற வன்மையுடைய மதவலி என்னும் பெயரையுடையவனே! மிக்க போர்த் தொழிலிலே வல்ல வீரர்க்கு உவமையாக உவமிக்கப்படுபவனே! தலைவனே! என்று யான் அறிந்து நினக்கு எடுத்துரைத்த அளவில் அமையாமல் நீ நினக்குத் தெரிந்த பலவற்றையும் கூறிப் புகழ்ந்து இறைவனாகிய நின் தன்மையெல்லாம் முற்ற அளவிட் டறிதல் எம்மை ஒத்த பல்லுயிருக்கும் அரியதாகையினாலே நின் இருவடியைப் பெறவேண்டுமென்று நினைந்து வந்தேன். நின்னோடு ஒப்பார் இல்லாத மெய்ஞ்ஞானத்தை யுடையவனே என்று சொல்லி நீ கருதிய வீடு பேற்றினை அம்முதல்வனுக்கு விண்ணப்பம் செய்வதற்கு .முன்னே வேறுவேறாகிய பலவடிவினையுடையராய் அவ்விறைவனை வணங்கிநிற்கும் அடியார்கள் விழாவெடுத்த களத்திலே தாங்கள் பொலிவுபெறத் தோன்றி அம்முதல்வனை நோக்கி “பெருமானே! அறிவு முதிர்ந்த வாய்மையினையுடைய புலவனாகிய இவன் நினது வளமார்ந்த புகழினைக் கூறவிரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதி பயப்பனவுமாக உள்ள மிக்க பெரும்புகழ் பலவற்றை எடுத்துக் கூறிப் போற்றி வந்துள்ளான். இவன் நின்னால் அளிக்கத் தக்கான்"” எனக் கூறிய அளவிலே பழமுகிர் சோலைமலைக்கு உரியோனாகிய அம்முருகன் தெய்வத்தன்மை வாய்ந்த ஆற்றல் விளங்கும் வடிவினையும், வாளைத் $ண்டும் வளர்ச்சியையும் உடையனாய் அவ்விடத்தே வந்தணுகிக் கண்டோர்க்கு அச்சத்தை மிகுவிக்கும் தன் தெய்வத் தோற்றத்தை உள்ளடக்கிக் கொண்டு மணம் நாறுகின்ற தெய்வத்தன்மையுடைய தொன்மைவாய்ந்த தனது இளைய இருமேனியைக் காட் ட, நின்னைநோக்கி “நீ வீடுபெற வந்த வரவை முன்பே அறிவேன். அது நினக்கு எய்தலரிதென்று அஞ்சுதலை நீக்குவாயாக என்று நின்மேல் அன்பினைப் புலப்படுத்துவதா௫ய மொழிகளைப் பலமுறையும் அருளிச் செய்து இருண்ட நிறத்தையுடைய கடல்சூழ்ந்த உலகத்தில் ' நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோன்றும்படி விழுமியதாய்ப் பிறரால் பெறுதற்கரியதாகிய வீடுபேற்றினை நல்கியருள்வான்”" என முதுவாய் இரவலனை நோக்கிச் செம்புலச் செல்வராகிய நக்கீரர் முருகப் பெருமான்பால் ஆற்றுப்படுத்துகின்றார். எல்லாம் வல்ல இறைவன் உலகியல் கல்வி அறிவாலும் உயிர் உணர்வாலும் உணர்தற்கரியவன் என்பதும், அம்முதல்வனது இருவருள் ஞானத்தாலேயே மன்னுயிர்கள். அவனை உணர்ந்து உய்தி பெறுதல் கூடும் என்பதும்,
“பாச ஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதஞானத்தாலே நேசமொடு உள்ளத்தே நாடி.” எனவரும் சவஞானசித்தியார் திருவிருத்தத்தாலே அறிவுறுத்தப்பெற்றன. தனக்குவமையில்லாத இறைவனை மன்னுயிர்கள் தம் அறிவினால் அறிதல் இயலாது எனவும் அவனருளாலே தான் அவனை உணர்ந்து வழிபட்டு உய்தி பெறுதல் கூடும் எனவும் இறைவன து இயல்பு குறித்துச் சைவ தித்தாந்த மெய்ந் நூல்களிற் கூறப்படும் இவ்வுண்மை, ப
“ின்னளந்தறிதல் மன்னுயிர்க்கருமையின்
நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு
் புரையுநர் இல்லாப் புலமை யோய்”
எனவரும் இருமுருகாற்றுப்படைத் தொடரில் தெளிவாக இடம் பெற்றுள்ளமை காணலாம்.
இயோரைச் இனந்து பொருது அழிக்கும் இறத்தில்
தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவனாக முருகப் பெருமான்
விளங்குதலால் பெருவீரர து 8ற்றத்திற்கு முருகப் பெருமானது
ஏற்றத்தை உவமையாகக் கூறுதல் மரபாம் என்பது,
ணன எனன... வெனவேல
உருவப்பஃறேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்றத்து உருகெழு குருசில்''
எனவரும் பொருநராற்றுப்படைத் தொடரால் புலனாம். வென்ற வேலினையும், அழகினையும் உடையனாய்ப் பல தேரினை உடைய இளஞ்சேட் சென்னியின்மைந்தன் முருகனது 8ற்றத்தையுடைய உட்குதல் பொருந்திய தலைவன் (கரிகாலன்) என்பது எண்று தொடரின் பொருளாகும்.

“முருகற் சீற்றத்து உருகெழு குருசில்” (புறம். 16)
என இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி போற்றப்படுதலும்
“முருகன் நற்போர் நெடுவேளாவி” (அகம். 1)
எனவும், “முருகுறழப்பகைத் தலைச் சென்று”: (மதுரைக். 181)
எனவும் போர்த்திறத்திற்கு முருகனது போர்த்திறம் உவமையாகக் கூறப்படுதலும் (இங்கு நோக்கத்தக்கன. ஒய்மா நாட்டு நல்லியக் கோடன் என்னும் வள்ளல் தன் பகை மிகுதிக்கு அஞ்சி முருகனை வமிபட்_ டானாக, அம் முதல்வன் கேணியில் பூ வொன்றிளைத் தன் வேலாகத் தோற்றுவித்து, நல்லியக் கோடன் கனவிற் றோன்றிக் கேணியிற் பூத்துள்ள பூவை வாங்கிப் பகைவரை வென்றடக்குக என அருள் செய்தான் எனவும், அது கொண்டு நல்லியக் கோடன் தன் பகையை வென்று அடக்கினான் எனவும், முருகனது வேல் கேணியிற் ,,வாகத் தோன்றினமையால் அவ்வூர் வேலூர் எனப் பெயர் பெற்றதெனவும் ஒரு கதையினைச் சிறுபாணாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் குறித்துள்ளார். இக்கதைக் குறிப்பினையுடையதாக அமைந்தது,
“திறல்வேல் நுதியில் பூத்த கேணி
விறல்வேல் வென்றி வேலூர்” (சிறு. 170-171)
எனவரும் சிறுபாணாற்றுப்படைத் தொடரால் “முருகல் கையில் வலியினையுடைத்தாகிய வேலின் நுதபோல கேணி பூக்கப்பட் ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியை யுடைய வேலும்” என்பது இத் தொடரின் பொருளாகும் என்றது : நல்லியக் கோடன் தன் பகை மிகுதிக் கஞ்சி முருகனை வழிபட் ட.வழி, அவன் இக்கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை எறி என்று கனவிற் கூறி அதிற் பூவைத் தன் வேலாக நிருமித்த தொரு கதை கூறிற்று. இதனானே வேலூர் என்று பெயர் ஆயிற்று” என இத்தொடர்ப்பொருளை விளக்குவர் நச்சினார்க்கினியர். எனவே, இத்தொடரில் துறல்வேல் எனவும் விறல்வேல் எனவும் சுட்டப்பட் டது, முருகன் கையில் உள்ள வலியினை உடைத்தாகிய வேற்படையினை என்பது மேற்குறித்த உரைவிளக்கத்தால் உய்த்துணரப்படும். இதனால் வேல் என்பது போருக்குரிய படைக்கலம் என்றமையாது முருகன் கையிலுள்ள தெய்வத் தன்மை வாய்ந்த வேற்படையினைச் சிறப்பா கக் குறித்து வழங்கும் மரபு காணலாம். தமிழகத்துச் சிற்றூர்களில் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி நாச்சியாரைப் போற்றி ஆடும் வள்ளிக் கூத்தனை ஆண் பெண் இரு இறத்தாரும் நாடு வளம்பெற ஆடிப் போற்றுதலை மரபாகக் கொண்டனர். இச்செய்தி
வாடாவள்ளி (தொல். புறம். சூத். 5) எனவரும் தொல்காப்பியத் தொடராலும்,
“வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் நாடு” (பெரும்பாண். 370-371)
எனவரும் பெரும்பாணாற்றுப்படைத் தொடராலும் அறியப்படும். பேய்களாடும் துணங்கைக் கூத்தினையும்
அழகினையுமுடைய வெற்றி வெல் போர்க் கொற்றவையாகிய இறைவி வெள்ளிய அலைகளையுடைய கடலிலே சென்று கடிய சூரனைக் கொன்ற முருகப் பெருமானைப் பெற்ற பெரிய வயிற்றினையுடையாள் எனச் இறப்பித்துப் போற்றப் பெறுகின்றாள். குறிஞ்சிக் கழவனாகிய முருகப் பெருமானைப் பாலை நிலத் தெய்வமாகிய கொற்றவைக்கு மைந்தனாகக் கொண்டு போற்றும் இவ்வுறவு முறை,
“வெற்றி வெல்போர்க்கொற்றவை சிறுவ”
எனவரும் இருமுருகாற்றுப்படைத் தொடரிலும்,
“வண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற
பைம்பூட் சேஎய் பயந்த மாமோட்டுத்
38.4 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு _ அபபட பய யயயயயயயயயயியயயயய வகைய வைகையவைவகை
துணங்கையஞ்செல்வி” (பெரும்பாண். 457-458)
எனவரும் பொரும்பாணாற்றுப்படைத் தொடரிலும் இடம் பெற்றுள்ளமை அறியத் தக்கதாகும். தெய்வத் தன்மையைக் குறித்து வழங்கும் முருகு என்னும் சொல் முழுமுதல் கடவுளாகிய முருகனைக் குறிப்பதோடு, முருகற்ற்றத்து உருகெழு வீரர்களைக் குறித்துச் செய்யப்படும் கள வேள்வியைக் குறித்த பெயராகவும் ஆளப் பெறுதல் உண்டென்பது,
“படையோர்க்கு முருகயா” (மதுரை. 38)
எனவரும் மதுரைக் காஞ்சித் தொடரால் அறியலாகும்
முருகப் பெருமான் கோயில் கொண்டருளிய இருத்தலங்களுள் முதன்மை பெற்றுத் இகழ்வது மதுரையின் மேற்கே உள்ள திருப்பரங்குன்றம் ஆகும். இக்குன்றத்திலே இனிய ஓசையினையுடைய ஒலிகளை உடைய மேகம் தங்கி மழையைப் பொழிதலும், அம்மலையிலே ஆடவரும் மகளிரும் பெருந்திரளாகக் கூடி முருகப் பெருமானுக்குத் திருவிழாக் கொண்டாடும் முறையில் ஆடல்பாடல் ஆகியவற்றை நிகழ்த்துதலின் ஆரவாரம் வானளாவ ஓங்கியிசைத்தலும்
“தளிமழை பொழியும் தண்பரங்குன்றில்
கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயன்
ததைந்த கோதை தாரொடு பொலிய
புணர்ந்துடன் ஆடும் இசையே அனைத்தும்
அகலிரு வானத் திமிழ்ந்தினி திசைப்ப”” (மதுரைக். 262-267)
எனவரும் மதுரைக் காஞ்சியடிகளாற் புலனாம்.
ஒளி வாய்ந்த பூக்களையுடைய கொன்றையின் பரந்த நிழலிடத்தே நீலமணியை ஒத்த பசிய பயிர்களினிடத்தே முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடனே வெள்ளியின் நிறம் வாய்ந்த முல்லைப் பூக்கள் உதிர்ந் துபரந் து தெளிந்த நீரையுடைத்தாகிய பள்ளத்திலே நீலமணியென மருளும் நெய்தல் பூக்கள் மலரக் காட்டினால் சூழப்பட்டு விளங்கும் நிலப்பகுதி ஓவியம் வல்லானால் அணிசெய்யப் பட்ட வெறியாடுகளத்தை ஒத்துத் தோன்றியது என்பது மதுரைக் காஞ்சி 277 முதல் 285 முடியவுள்ள வடிகளால் . விரித்துரைக்கப்பெற்றுள்ள து. இதனால் முருகனைக் குறித்த வழிபாட்டு நிலையாகிய வெறியாடல் நறுமணங்கமழும் பலவகைப் பூக்களால் அணி செய்யப் பெற்ற இடத்திலேயே நிகழும் என்பது புலனாகும்.

இளைய பிள்ளையாராகிய முருகப் பெருமானுக்குரிய வேலைத் தாங்கிய வேலனாகிய முருக பூசை பண்ணுபவன் மணமாகாத இளமகளிர்களுக்கு உண்டாகிய மெலிவுக்குரிய காரணத்தைக் கழங்கு வைத்துப் பார்த்து இவ்வருத்தம் முருகனால் வந்ததெனக் கூறித் தான் கூறிய சொல்லாலே கேட் டோர் உள்ளத்தைப் பிணித்துச் சல்லி, கரடி முதலிய வாச்சியங்கள் ஒலியாநிற்கக் கார்ப்பருவத்தில் மலர்ந்த குறிஞ்சி மலரைச் சூடிக் கடப்பமலர் மாலையை யணிந்த அழகியோனாகிய முருகளைத் தன் மெய்க்கண்ணே நிறுத்தி (ஆவே௫ிக்கும்படிச் செய்து) வழிபாடு செய்வன். அந்நிலையில் மன்றங்கள்தோறும் மகளிர்பலரும் தம்முள் கைகோத்துநின்று முருகனது புகழ் பாடிக் குரவைக் கூத்தாடுவர். (இச்செய்தி,
“அருங்கடி வேலன் முருகொடுவளைஇ
அரிக்கூட்டி இன்னியங் கறங்க நேர் நிறுத்து
கார் மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேட் பேணித்தமூ௨ப் பிணையூ௨
மன்றுதொறும் நின்ற குரவை” (மதுரைக் 610-615) எனவரும் மதுரைக் காஞ்சித் தொடரில் விரித்துரைக்கப் பெற்றமை காணலாம்.

தலையாலங்காளத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நாட். காலையில் அரசர்க்குரிய கடன்களைச் செய்து முடித்து தெய்வ வழிபாட்டோடு இருந்த தோற்றப் பொலிவினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்த து,
“வல்லோன் தைஇய வரிப்புனைபாவை
முருகியன்றன்ன உருவினையாகி” (மதுரைக். 723-724)
எனவரும் மதுரைக் காஞ்சித் தொடர். “ஓவியத் தொழில் வல்லான் ஒருவன் எழுகிக் கைசெய்த பாவையிடத்தே தெய்வத்தன்மை நிகழ்ந்தாற் போன்ற பொலிவு பெற்ற வடிவினையுடையவனே!” என மாங்குடி மருதனார் நெடுஞ்செழியனது தெய்வ வழிபாட்டுத் தோற்றத்தைப் புளைந்திருக்கின்றார். (இக் தொடரில் அமைந்த முருகு என்னும் சொல் தெய்வத் தன்மை என்ற பொருளில் ஆளப் பெற்றது என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும். தஇருமுருகாற்றுப்படை உரையிலும் முருகு என்னும் சொல்லுக்குத் தெய்வத் தன்மை எனவே உரை வரைந்துள்ளார். முருகு என்பதற்கு நறுமணம் என்னும் பொருளும் உண்டு. [3 ௪ ட ட்டி 99
முருகமர் பூமூரண் கிடக்கை
என்பது பட்டினப்பாலையாகும். மலரிடத்தே உள்ளிருந்தெழும் நறுமணம் போன்று உயிர்களின் உள்ளத்தே உள்ளிருந்தெழுவதே தெய்வ வழிபாட்டுணர்வாகும். முழுமுதற் கடவுளாகிய தெய்வம் மன்னுயிர்களின் உடம்பிலும் உயிரினும் ஒழிவின்றி நிறைந்து நிற்றலும் இங்ஙனம் உலகப் பொருள்தோறும் பிரிப்பின்றி விரவியிருப்பினும் அவற்றைத் தனக்குச் சார்பெனக் கொள்ளாது எல்லாப் பொருட்குந் தானே ' சார்வாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்றலும் ஆகிய தெய்வத் தன்மையினைப் புலப்படுத்தும் நிலையில் மணங்கமழ் தெய்வமாக. வழிபடப் பெறுபவன் முருகளாதலின் முருகு என்பதற்குத் தெய்வத் தன்மை எனப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். .. இக்கருத்திற்கு அரண் செய்யும் நிலையில் அமைந்தது,

“உற்றவாக்கையி னுறுபொருள் நறுமலரெழுதரு
நாற்றம்போல்
பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்” '
| எனவருந்இருவாசகத் தொடராகும்.

குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகப் பெருமான் தனக்குப் பூசை பண்ணும் வேலன் முதலியோர்பால் ஆவேசித்தல் போலத் தன் ஊர்தி எனப்படும் மயிலின் மேலும் ஆவேசித்தலுண்டு. இச்செய்தி,
“சூருறு மஞ்ணையின் நடுங்க'” (குறிஞ்சிப். 169)
எனவரும் குறிஞ்சிப்பாட்டடியால் புலனாகும். “தெய்வம் ஏறின மயில் போலே நடுங்காநிற்ப” என்பகுதன்
பொருளாகும். முருகனால் வருந்தலுற்ற மகளிரது வருத்தந் தர வெறியாடு களத்தில் முருகனுக்குரிய தெய்வமரமாகிய கடம்ப மரத்தினடியிலே சூழவும் மலர் மாலைகள் அணி செய்யப் பெற்றிருக்கும் என்பது,
அணங்குறு மகளி ராடுகளங் கடுப்பத்
திணிநிலைக் கடம்பின் நிரளரை வளை இய
துணையறை மாலையின்............... _ (குறிஞ்சிப். 174-177)
எனவரும் குறிஞ்சிப் பாட்டடிகளான் புலனாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

காவிரிப்பூம்பட்்டினத்தில் கட்டப்பெற்றுள்ள பல்வேறு கொடிகளுள் நெடுநிலை மாடத்துவாழும் இளமகளிர் காந்தட்பூப்போலும் இருகைகளையும் குவித்து வணங்கி முருகவேளைக் குறித்து வெறியாடல் நிகழ்த்தும் மகளிரொடு பொருந்திக் குழலும் யாழும் முதலிய இன்னியம்
இயம்பத் திருவிழா நீங்காத அகன்ற வீதியிலே தீமையை
யகற்றும் சிறப்பினையுடைய தெய்வத்தை வழிபட்டுத் தூவிய
மலர் நிறைந்த கோயில் வாயிலிலே பலருந்தொழக் கட்டிய
கொடிகள் நிழல் செய்யும் இறத்தினை,
“காந்தளந் துடுப்பிற் கமழ்குலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தா அய்க்
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து
மையறு சிறப்பிற் றெய்வம் சேர்த்திய
மலரணி வாயில் பலர் தொழு கொடியும்”
எனவரும் பட்டினப்பாலை விரித்துரைக்கின்றது. இதனால் முருகனுக்குரிய இருவிழாவில் நிகழும் கொடியேற்று விழாச் சடங்கில் வெறியாடு மகளிரொடு இளமகளிரும் கலந்து கொண்டு விழாவினைச் ிறப்பித்தல் என்பது உய்த்துணரப் படும். முருகப் பெருமானை மணந்த வள்ளி நாச்சியாரது தெய்வத்தோற்றம் மக்கள் கண்ணால் உற்று நோக்குதற் கதியலாத பேரொளி வாய்ந்தது என்பது,
கமுகு புணர்ந் தியன்ற வள்ளிபோன்று
உருவு கண்ணெரிப்ப நோக்கலாற்றலனே'” (நற். 82)

எனவரும் நற்றிணைத் தொடரால் அறியலாம். களவொழுக்கத்துத் தலைவனது பிரிவினால் ஆற்றாளாகிய
தலைமகளது மெலிவுகண்டு, இஃது தெய்வத்தானாகியது எனச் செவிலி வெறியாட்டு நிகழ்த்தக் கருதிய நிலையில் தோழி தலைவன் சிறைப்புறத் தானாகத் தலைவியை நோக்கிக் கூறியதகாகவமைந்தது நற்றிணை 173ஆம் பாடலாகும். சுனையிடத்தே பூக்களைக் கொய்தும் அவற்றை மாலையாகத் தொடுத்தும் மலையிலே படர்ந்த செங்காந்தட் பூவினை முடி. மாலையாகக் கட்டியும் தன்வழிபாட்டில் ஈடுபட்ட நம்பால் முருகப்பெருமான் அருள்கூர்ந்து தலைவியின் வேறுபாடு வெறியாடுதலால் நீங்கும் எனக் கருதி முயலும் அன்னைக்குத் தன் தெய்வத் தோற்றத்தினைக் கண்ணினால் காணும்படி நனவிலோ அன்றிக் கனவிலோ புலப்படுத்தி நின்மகளாகிய இவள் உற்ற நோய் என்னால் ஏற்பட்டது மன்றிப் பிற தெய்வங்களாலும் ஏற்பட் ட.துமன்றி அழகிய மலைக்குரியனாகிய தலைவன் ஒருவனால் ஏற்பட்டதே என்று தன் அருளால் வெளிப்படக் கூறில் நெடுவேளாகிய அம்முதல்வனுக்கு வருவதொரு குற்ற முண்டே? எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறும் முறையில் சிறைப்புறமாக நின்ற தலைவனுக்குக் களவொழுக்கந்தவிர அறிவுறுத்தும் நிலையில் இப்பாடற் பொருள் அமைந்துள்ளமை காணலாம்.

இதன்கண் மணமாகாத இளம் பருவத்தினராகிய தோழியும் தலைவியும் சுனையிலுள்ள மலர்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும் செங்காந்தள் மலர் கொய்து கண்ணியாகச் சேர்த்தியும் முருகப் பெருமானது வழிபாட்டிற்கு உதவிய திறம் நன்கு புலனாகும்.

தலைமகன் இறப்புறத்தானாகத் தோழி தலைமகட்..
குரைப்பாளாய் வெறியறிவுறுத்தி வரைவுகடாவும்
நிலையிலமைந்தது நற்றிணை 288 ஆம் பாடலாகும். உயர்ந்த
மரக்கிளையில் உள்ள மயிர் தன் தோகைகையை விரித்து
இளவெயில் காண வேண்டி நெடியமலைச் சிகரத்தின்
பக்கத்துலே தன் பெடையோடு தங்கும் மலைநாடனாகிய
தலைவன் பிரிதலினாலே நினது நுதலில் படர்ந்த பசலையை
நோக்கி அல் ன செம்முது பெண்டிருடனே தன் மனையிற்
புகுந்து கட். டுவிச்சியைக் கொண்டு நெல்லை முறத்தில் பரப்பி,
நட் டுவைத்.து நின் மெலிவுபற்றிக் குறிகேட்குமானால்,
அக்கட்டுக்குறியானது புனத்திலே தினையின் கதிர்களைக்
கொய்து கொண்டு போகும் கிளிகளை வெருட்டுவோமாகி
நாம் சென்றிருந்தும் அந்நிலையில் எதிர்ப்பட்ட தலைவனது
பிரிவினால் நினக் கேற்பட்ட மெலிவினையறியாது இவள்
முருகவேள் இருக்கும் இடத்தருகே சென்றதனால்,
முருகவேள் வருத்தியவருத்தமின்றி மாறாகக் கூறிவிடுமோ?
எனத் தோழி தலைமகளை .நோக்கி வினவும் நிலையில் சிறைப்புறத்தானாகிய தலைவனுக்குத் தலைவியின் மெலிவு குறித்து வெறியாடல் நிகழும் என்பதனை அச்சத்துடன் புலப்படுத்தும் முறையில் இப்பாடலின் பொருள் அமைந்துள்ளது. இதனால் தலைவியின் வாட்டம் கண்டு பவெறியாடல் நிகழ்த்த எண்ணிச் செவிலி கட்டுவிச்சியைக் கொண்டு குறிபார்த்து அக்குறி தெய்வத்தினான் நேர்ந்த தெனப் புலப்படுத்திய பின்ன?$ர வெறியாடல் நிகழ்த்தற்கு ஏற்பாடு செய்யும் மரபுண்மை புலனாகும். .
“தாமரை புரையும் காமர் சேவடி
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேயக்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற்
சேவலங் கொடிே யான் காப்ப
க வன் அட்ட டடத. அத 19
ஏமவைகல் டா மறக் உலகே
எனவரும் பெருந்தேவனார் பாடல் 'குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தாக வமைந்துள்ளது.. . செந்தாமரை 'மலர். போலும் அழகிய சிவந்த இருவடியினையும், பவழம் போன்ற சிவந்த நிறத்தையுடைய திருமேனியையும், . -அம்மேனியில் விளங்காநின்ற ஒளியினையும், குன்றும்ணியின். நிறம்போலும் செந்நிறம் . வாய்ந்த உடையினையும்,;' குருகுபெயர்க் குன்றத்தின் நடுவிடம் பிளக்கும்படி எறிந்த அழகிதாய்ச் சுடர்விட்டு விளங்கும் நெடிய வேற்படையினையும், கோழிச் "சேவற் கொடியினையும் உடைய. முருகப், பெருமான் பாதுகாத்தருளுதலால் இவ்வுலகத்து: மன்னுயிர்கள் ' இன்பம் நிறைந்த நாட்களைப் பெற்று வாழ்கின்றன என்பது பட ஆர் பணம டு குறிஞ்சிக் வளனும். முருகப் பெருமானது திருவடியையும், ஒளி திகழும் திருமேனியையும், அம் மேனியில் அணியப் பெற்ற செந்நிறம் வாய்ந்த உடை யினையும், அம்முதல்வன் ஏந்திய நெடிய வேற்படை யினையும், கோழிக் கொடியினையும் உவமை காட்டிப் புனைந்துரைக்கும் முகமாகக் காண்டற்கரிய அக் கடவுளை வழிபடும் அனபர்கள் கண்ணினாற் காணச் சொல்லோவியம் - செய்து காட்டும் முறையில் அமைந்த இச்செய்யுளிற் கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாகவுள்ள உள்பொருள்கள் என்னும் சைவ இத்தாந்தத் தத்துவவுண்மை நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை கூர்ந்து நோக்கற்பால்தாகும். போர்க்களம் 'குருதியாற் செந்நிறக் களமாக ஆகும்படி அவுணர்களைக் கொன்று இல்லை
'யாக்கிய நடுவு நிலையில் இறம்பாத செம்மைவாய்ந்த இரண்ட கைப்பிடியினையுடைய அம்பிளையும், குருதியாற் சிவந்த கொம்பினையுடைய யானையையும், கழல -வணிந்த வீரவளையையும் உடைய முருகனுக்குரிய மலை, குருதி போலும் செந்நிறப் பூங்கொத்துக்களையுடைய காந்தளை யுடையது என்று கூறித் தோழி தலைவன் தந்த கையுறையை மறுத்தல் என்னும் துறையில் அ மைந்தது,-:“செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
ஈகழறொடிச் சேஎய் குன்றம் ந ்
குருதிப் பூவின் குலைத்த ட்டே? -. (குறுந்.1)..
என்னும் குறுந்தொகைப் பாடலாகும். - குறிஞ்சி நிலத் தெய்வமாகிய: முருகப் பெருமானுக்கு உரிய ஊர்இகளுள் - பிணிமுகம் என்னும் பெயருடைய. யானையும் ஒன்றென்பதும் முருகப் பெருமான் அவுணர்களைப் 'பொருதழிக்கும் காலத்து -யானைமீதமர்ந்து அம்பெய் து பொருதலுமுண்டென்ப தும்,
“கடுஞ்சின விறல்வேள் களிலூர்ந்தாங்கு” (திற். ம.  எனவும், ்
“சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம ருழக்கி” (பரி. 5)
எனவும் வரும் ப்பத் க ரறியதக
ச "தலைவியின் மெலிவு முருகனால் வந்ததெனக் கருது வெறியாடத் தொடங்கிய நிலையில் அவ்வெறியினை விலக்கித் கோழி, அறத்தொடு நிற்பதாக அமைந்தது, த்த
முருகயர்ந்து வந்த முதுவாய் வேல
சினவ லோம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சிலலவிழ் மடையொடு
- சிறுமநி கொன்றிவ ணறுநுத னீவி
வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய
விண்டோய் மாமலைச் சிலம்பன்
"உண்டா ரக்லமு முண்ணுமோ பலியே” (குறுந். 962) எனவரும். பாடலாகும்.

“முருகப் ர்க் வழிபட்டு. வெறியாடல் நிகழ்த்தவந்த அறிவு: வாய்ந்தவேலனே.. யான் நின்னைக்
குறித்து வினவவுவதொன்றுடையேன். என்னைச் சினவா தொழிக. பலவாக வேறுபட்ட சிலவாகிய-: '“சோற்றையுடைய பலியுணவுடனே சிறிய அக அண்டு இத்தலைவியது நெற்றியைத் தடவி முருகப் பெருமானை வணங்கி பலியுணவைப் படைப்பாயாயின், அவ்வுணவினை வானளாவிய பெரிய மலைப் பக்கத்தையுடை ப தலைவனது ஒளி தங்கிய மாலையை யணிந்த மார்பும் நின்னாற் கொடுக்கப்பட்ட அப்பலியை உண்ணுமோ?. என்பது இப்பாடலின் பொருளாகும். தலலவியின் நோய் தீர முருகனை வழிபட்டு ப நிகழ்த்தும் இவ்வெறியாடலில் பலவேறு உருவினவாகிய சோற்றினை உணவாகப் படைத்தலும், மறியைப் பலியிட்டு, நிலத்தில் படிந்த குருதித்துளியைத் தலைவியின் நெநற்றியில் தடவுதலும் வெறியாடலில் நிகழ்த்தும் சடங்கென்பது மேற்குறித்த குறுந்தொகைப் பாடலாற் புலனாகும்.

தினைப்புனத்தில் இனை விளைவித்த குறவன் தன் தோட்டத்திலே முதன்முதல் புதிதாய் விளைந்த பெருங்கதிரைச் இறப்புணவாகக் குறிஞ்சிக் கடவளாகிய முருகனுக் குரியதென விட்டிருந்தான். அதளைத் தெய்வத்திற்கு விடப் பட் டதென அறியாது மயில் உண்டது. அந்நிலையில் அம்மயில் முருகபூசை பண்ணும் குறமகளாகிய தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல அன்ச நடுங்கியது. இச் செய்தியினை,
“புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் (குறுந். 195)
எனவரும் குறுந்தொகைப் பாடலில் நக்&ரர் குறித்துள்ளார்.
மலைவாழ்நர் தினை முதலியன விளைக்குங்கால், முதலிற்றோன்றிய பெருங்கதிரைகத் தெய்வத்திற்காக இட்டு வைத்தல் மரபென்பதும், அதளைக் தெய்வத்திற்குரிய படைப்புப் பொருளாகவே பயன்படுத்துதல் வேண்டுமென்பதும், அதளை யறியா துண் பார் தெய்வத்தாலாவேசிக்கப்பெற்று நடுக்கமுறுவர் என்பதும் இப்பாடலாற் புலனாம்.

இயலிசைத் த மிழ்ப் பனுவலாகிய பரிபாடல் என்னும் மிதாகை நூலில் இர றல், ' வ்லேள் காடுகிழாள், வையை மதுரை எல்லும் பொருள். பற்றிய பாடல்கள் இடம்  பெற்றுள்ளமையும் எழுபது பரிபாட௪ல்களுள் இருபத்கி!: 2௮ பாடல்களும், ல தொடர்களுமே கிடை.த்துள்ளன - என்பதும் முன்னர்க் குறிக்கப் பெற்றன. எழுபது பரிபாடல்களுள் முருகப் பெருமானைப் போற்றிய பாடல்கள் 'முூப்பத்தொன்றாகும். அவற்றுள் 5,8,9,14,17,18,19,21 என்னும் "எட்டுப்ப௱் _ல்களே இப்பொழுது கிடைத்துள்ளன. ஐந்தாம் பரிபாடலின்கண் குறிக்கப்பெற்ற முருகப் பெருமானது பி௰ப்புப்பற்றிய புராணச் செய்து முன்னர் விளக்கப் பெற்றது.

“பரந்த கரிய குளிர்ச்சியையுடைய கடலிடத்தே பாஃ:றகள் பிதிர்ந்து துகள் படும்படி மிகவுயர்ந்த பிணிமுக மென்னும் யானையின் மீதிவர்ந்து உட்புகுந்து தீயின் கொழுந்து ஒலிப்ப வேலினைத் திரித்து விட்டெறிந்து அச்சத்தால் நடுங்குகிஸ்ற சூர்மாவினது முதலைத் தடிந்து . வென்றியுடைமையால் நல்வினையாளர் என ஒரு கூற்றாற் பெயர் பெற்ற க$வினையினையும் கொல்லப்படும் தகைமை யினையும் உடைய வஞ்சனைத் தொழிலில் வல்ல அவுணரைக் களையறக். கொன்ற வேற் படையினாலே ந௱வலந்: &வினுள் வடபகுஇயிலுள்ள அன்றில் என்னும் குருகின் பெயரையுடைய கிரவுஞ்ச மலையினைத் துளைத்து அம்மலையினைப் பலரும் செல்லுதற்குபிய வழியாக்கிய ஆறுமென் . தலையினை உடையோனே! ஆறு திருமுகங்களுடனும், பன்னிரண்டு திருத்தோன்களுடனும் ஞாயிற்றின் எழுச்சிபோலும் திருமேனி நிற அழகுடனும், தாமரைப் பூவின்கண் பிறந்த பிறப்பினை. உடையோனே! உலகத்தை அழிக்கும் கடவுட்கு மகளே! செவ்வேலவே! இருவருட். பண்புகளின் நிறைவினையுடை_ யோனே! உலகுயிர்கட்குத் தலைவனே! என இவ்வாறு கண்டார்க்கு அச்சம் தரும் வெறியாட்டு விழவினுள் நின்னைக் கண்டு வழிபடும் வேலன் இவ்வாறு சொல்லி ஏத்தும் வெறிப்பாடல்களும் 1ல உள்ளன. இவ்வுலகிற் கெல்லாம் தலைவன் நீயே யாதலால் வெறியாடுகளத்திலே வேலன் நின்லனக் கண்டு ஏத்துகின்ற் அப்பாடலில் கூறப்பட்டவை உண்மை நிகழ்ச்சியுமல்ல. ஆயினும் அப்பாடல்களால் நின்னைப் புகழும்போது அன்பர் முன்னே நீ வெளிப்படுதலால் அப்பாடலிற் கூறப்பட்டவை நிசழாதன என ஒதுக்கத் தக்கனவுமல்ல. அப்பாடல்கள் பொய், மெய் என்னும் அவ்விரு : கூற்றுள். ஒன்றிற். பட்ட வழி அவற்றாற் புகழப்படும் தலைமைச் 'சிறப்பினையுடைய நீ கற்றார் கல்லாதார் என்னும் இரு திறத்தாராலும் புகழப்படும் தலைமைச் . சறப்பினையுடைய நீ அச்சிறப்பினின்றும் விலகுவாய். முழுமுதற் கடவுளாகிய நின்னை ஒழிந்த ஏனை உயிர்த் தொகுதிகள். நல்லறங்களால் சிறப்பாகிய வீடு பேற்றினைப் பெற்று உயர்தலும், . வினைகளால் பிறவிப் பெருங்கடலுட் பட்டு இழிவடை தலும். ஆகிய இந்நிலைமை, | நன்றும் இருவருளாகிய ஆணை வரம்பின்: உட் பட்டதாகும்” என .முருகப். பெருமானது பொருள் சேர் புகழ்த் கழுவ்களம் போற்றிப் பரவும் நிலையிலமைந்தது,
“பயிரும் பனிக்கடல் பார்துகள்' படப்புக்குச்
சேயுயர் பிணிமுக மூர்ந்தம ருழக்கித் -
தீயழ றுவைட்பத் திரியவிட் டெறிந்து
நோயுடை நுடங்குசீர் மாமுத றடிந்து
வென்றியிள் மக்களு ொருமையொடு பெயரிய
கொன்றுண லஞ்சாக் கொடுவினைக் கொஃ 'றகை
மாய வவுணர் மருங்கறத் தபுத்தவேல் .
நாவலந் தண்பொழில் வடபொழி! லாயிடைக்
குருகொடு பெயர்பெற்ற மால்வரையுடைத்து
_லையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை ... -
மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்.
ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை
காய்அய் கடவுள் 'சேஎய் செவ்வேள் ' ப
சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள்
். வேலனேத்தும் வெறியு முளவே.
அவை வாயுமல்ல பொய்யு மல்ல _
நீயே வரம்பிற்றிவ் வுலக மாதலிற்
சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குலை
.. சிறப்பினுளுயர் பாகலும் ப
பிறப்பினு ளிழி பாகலும் த
ஏனோர் நின்வலத் தினதே” [ர 8. ழு) ்
எனவரும் பரிபாடற் பகுதியாகும். இற்ன்கண்
“வேலன் ஏத்தும் வெறியு மளவே
அவை, வாயுமல்ல பொய்யு மல்ல
நீயே வரம்பிற் றிவ்வுலக மாதலின்
சிறப்போய் சிறப்பின்றிப் பெயர்குவை''
எனவரும்: நான்கடிகள் முழுமுதற் கடவுளாகிய முருகப் பெருமான. து சிறப்பிலக்கணம் ஒன்றினையே சிறந்து எடுத்துக் கூறும் முறையில் அமைந்துள்ளன. உலக முதல்வனாகிய முருகப் பெருமான், சூரபதுமன் முதலிய அவுணர்களை அழித்ததும், குருகொடு பெயர்பெற்ற மால்வரையைப் பிளந்ததும் முதலிய புராணச் 'செய்திகள் : வேண்டுதல் வேண்டாமை இலானாகிய அம்முதல்வன் தன்னருளால் உலகுயிர்களைச் சார்ந்து புரந்தருளும் பல்வேறு நிலைகளைக் குறிப்பனவாதலின் அவை, அவனது பொ துவியல்பெனப் படுவனவன்றி, அவனது சறப்பிலக்கணமாகக் கொள்ளத் தக்கன அல்ல என்பதும், தனக்குவமை இல்லாத அவன் ஒருவனே . உலகெலாம் இயக்கும் முழுமுதற் கடவுளாக அவனை யொழிந்த ஏனை மன்னுயிர்கள் யாவும் தாம் தாம் செய்யும் நல்வினைத் இறத்தால் உயர்வினைப் பெறுதலும், தவினைகளால் இழி வினையடைதலும் ' அம்முதல்வனது இருவருளாகிய ஆணையின் வரம்பின் உட்பட்டு நிகழ்வன என்பதும் தன்னிற் பிரிவிலா யென்னுந் திருவருள் வலத்தால் உலகுயிர்கள் பலவகைச் செயல்களில் ஈடுபட் டு: இயங்க, அவற்றுள் ஒன்றினும் தோய்வின்றி நிற்றலே அம் முதல்வனது சிறப்பிலக்கணம்' என்பதும் இவ்வடிகளிற் புலப்படுத்தப் பெற் றுள்ளமை காணலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

நீயே வரம்பிற்றில் வுலகமாதலின், வேலன் ஏத்தும் வெறியாயெ' அவை வாயும் அல்ல; பொய்யும் அல்ல எனவும், அவற்றுள். ஒன்றாய வழி, சிறப்போய் இறப்பின்றிப் , பெயர்குவை எனவும் வரும் இத்தொடர்கள், அம்முதல்வனது பொதுவும், சிறப்புமாகிய இயல்புகளைப் புலப்படுத் துவன. உலகப் பொருள்கள் ஒன்றிலும் தோய்வற நிற்கும் சிறப்பியல்பினனாகிய முருகப் பெருமான் படைத்தல் முதலிய தொழில்கள் .எல்லாவற்றையும் தன் தொழிலாகக் கூடி நின்று செய்யும் நிலையிலும் தான் அத்தொழில் பற்றி வெறுப்பின்றி நிற்றல் பற்றி அவன் செய்தனவாக வேலன் ஏத்தும் புராணச் செய்திகள் யாவும் ஒன்றிற் கருத்திருத்திச் செய்யும் முறையில் அவனால் செய்யப்பட்டன அல்ல என்பதும், அவையனைத்தும் அவன் அருளின் வழி நிகழ அவன் அவற்றிற்றோய்வின்றி விளங்குகின்றான் என்பதும், மேற்காட்டிய தொடரின் கருத்தாகும். “ஏனோர் சறப்பினுள் உயர்வாகலும் பிறப்பினுள் இழிவாகலும் நின் வலத்தினதே” எனவரும் தொடர், பால்வரை தெய்வம் எனத் தொல்காப்பினார் குறித்த இறை இயல்பினை அறிவுறுத்தும் நிலையிலமைந்துள்ளது. முழுமுதற் கடவுளாகிய நின்னை யொழிந்த மன்னுயிர்கள் நல்வினையாற் சிறப்பினைப் பெற்று உயர்தலும், தவினையாற் பிறப்பினை அடைந்து தாழ்தலும் ஆகிய இந்நிகழ்ச்சிகள் நினது அருளாணையின் வரம்பின் உட்பட்டு நிகழ்வனவே என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். இதனால் இவ்வுலகில் மன்னுயிர்கள் செய்யும் நன்றும் ததுமாகிய இருவினைகளால் ஆகிய இன்ப துன்பங்களாகிய பயன்களை வினை செய்த உயிர்களே நுகரும் வண்ணம் எய்துவிக்கும் ஆற்றல் முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனுக்கே உரியதென்பது, தொல்காப்பியனார் முதலிய பண்டைத் தமிழ்ச் சான்றோர் கண்டுணர்த்திய தத்துவ உண்மையாகும். (இவ்வுண்மையை மேற்காட்டிய பரிபாடற் றொடரும் வலியுறுத்துவதைக் காணலாம். “ஏனோர் நின் வலத்தினதே' என்னும் அ;:டயில் ஏனோர் என்னும் சொல் இறைவனை ஒழிந்த ஏனைய உயிர்த் தொகுதியினையும் “நின்? என்ற சொல் ஒருவன் என்னும் ஒருவனாகிய இறைவனையும், “வலம்' என்ற சொல் அம் முதல்வனது அருளாகிய ஆணை என்னும் சிற்சத்தியினையும் குறித்து நின்றன. முழுமுதற்கடவுளாகிய முருகனது அருளாணை உயிர்களின் இருவினைகளின் வழிநின்று அவற்றின் பயன்களாகிய: சிறப்பினையும் பிறப்பினையும் உயிர்கட்கு எய்துவிக்கின்றது என்னும் .இத்தத்துவக் கொள்கையினை “அவையே தானேயா யிருவினையிற், போக்குவரவு புரிய ஆணையின், நீக்க மின்றி நிற்குமன்றே” எனவரும் சிவஞானபோத இரண்டாஞ் சூத்திரத்தில் ஆசிரியர் மெய்கண்டார் ஏதுவும் எடுத்துக்காட்டும் தந்து விளக்கியுள்ளார்.

க ட் சூத்திரத்தில் எடுத்துக்கொண்ட முழுமுதற் ். கடவுளாகிய இறைவன், கலப்பினால் அவ்வுயிர்களேயாய்ப் பொருட்டன்மையால் அவ்வுயிர்களின் வேறாய் உயிர்க்குயிராதல் தன்மையால் உடனுமாய் நின்று ஆணைடு: பனப்படும்: தனது சிற்சத்தியால் வரும் இருவினைகளால் அவ்வுயிர்கள் இறத்தலையும் பிறத்தலையும் மேற்கொள்ளும்படி அவ்வாணையுடன் பிரிப்பின்றி ஒன்றாய் நிற்பன்” என்பது இச்சூத்திரப் பொருளாகும். அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகள்,
“செய்வினையும் ய்ண்யூ அதன் பயனும் சேர்ப்பானும் '
மெய்வகையால் தாச்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே
அ இலியன்வு வலு, அல்லவற்றுக் கில்லையெள
மெய்வகையால் பொருள் சிவனென் றருளாலே
உணர்ந்தெழுந்தாஈ ன்
எனவரும் பாடலில் சைவ சமயத் துக்குரிய தனிச் சிறப்புடையதாக இத்தத் துவக்கொள்கையினை எடுத் துரைத்துள்ளமை £ காணலாம்.

ம் அந்தணனாகிய இறைவனது : தருவருட்.டட உள்ளத்துட். கொண்டு தன் முனைப்பி௦( மக்கள் செய்யும் நற் செயல்களே அறச் 6 செயல்களாகும் என்பது 
“இன்குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர்” (பரி. 5,71)
எனவரும் தொடராற் புலனாகும். என்றும் அழியாது நிலைபெறும் வீடுபேற்றினை அடையும் தன்மையினர், தவப்பெருஞ் செல்வராசிய இறைவனடியார்களையடைந்து வழிபட்_டோர் என்பது
“மன்குணமுடையோர் மாதவர் வணங்கியோர்”” (பரி. 5, 72)
எனவரும் தொடராற் புலப்படுத்தப் பெற்றது. ஈண்டு மன்குணம் என்றது பிறப்பிறப்புக்களிற்பட்டு உழலா து இறைவன் திருவடியைச் சார்ந்து என்றும் மாறாத பேரின்ப நிலையில் ரிலைபெறுதலாகிய வீடுபேற்றினை. மன்குணம் நிலை. பேறாகியதன்மை. மேற்குறித்தவண்ணம் - இறைவனது . இருவருட் குணத்தினை ஏற்றுக்கொண்டோராகிய அற ப நெஞ்கத்தினரும், பெருந்தவச் செல்வர்களாகிய : அடியார். களை வணங்கி அவர் ௦ வழியொழுகும்' பேரன்பர்களும் ஆகிய இவர்களே இறைவன து திருவடி நிழலை. அடைதற்கு உரியார். - அத்தன்மையோரல்லது உயிர்களைச்: செறுகின்ற. தய 'நெஞ்சத்தையுடைய கொடியோரும்,, அறத்தின்கண் சேராத: பழி உடையோரும்,- கூடா ஒழுக்கத்தால் அழிந்த தவவிரதத்தை உடையோரும் “இப்பிறப்பின் : நுகர்ச்சியே உண்மையெனச் . கொள்ளத்தக்கது; மறுபிறப்பென்ப தொன்றில்லை” எனத் தம் . மனம் போனவாறோழுகும் மட_ வேட ரும் ஆகிய இவர்கள் இறைவன் இருவடி. நீழலைய்டைந்து இன்புறும் வீடுபேற்றிற்கு உரியரல்லர் என்பது பொறிவாயில். ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 'நெறியினைப் புலப்படுத்தும். -இக்கருத்து.
““நின்குணம் எத அகாலம் வறைக்தோனா யோர்.
நி ப அல்லதை ன்
ட் மன்குணமுடையோர் மாதவர் "வணங்கி யோரல்லதை:
செறுதீ நெஞ்சத்துச் : சினம் நீடினோரும்
சேரா. அறத்துச் சீரிலோரும் .. ப
அழிதவப்படிவத்து அறிகோரும்
மறுபிறப்பில் லெனும் மடவோரும் சேரார்.
நின்னிழல்; அன்னோரல்லது இன்னோர்.
சேர்வர்'” ் ப (பரி. த; ராஐ.
எனவரும், பகுதியில் இடம் பெற் நுள்ளமை. காணலாம்.
ட மன்னுயிர்களாகிய' தம்: இயல்பின்னையும், : உயிர்க்குயிராய் உள்நின்றியக்கும் இறை இயல்பினையும் உள்ளவா. று...உணரப் பெற்றவர்கள் இறைவன்பால் ஒன்றை வேண்டுங்கால் ப இவ்வாறு: வேண்டுதல் . வேண்டும் என அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது. 

“யாஅம் 'இரப்பவை '
டான். பொன்னும்: போ. கமுமல்ல் நின்பர்ல்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்...
உருளிணர்க்கடம்பின் ஒலி 'தாரோயே”. (பரி. 5, கமம்.
எனவரும் பரிபாடற் பகுஇமாகும். *தேருருள். பறம ப பூங்கொத்துக்களையுடைய கடப்பமலர்களால். தொடுக்கப் -: பெற்ற. தழைத்த: மாலையை யணிந்த முருகப் பெருமானே! நின்னையாம். இரந்த து வேண்டுபவை இவ்வுலக வாழ்க்கையில் . நுகரப்படும் நுகர்: பொருள்களும், : அவற்றை . உளவாக்கும் ப

்... பொன்னும், அவ்விரண்டாலும் நுகரத்தகசூம் . இன்ப - நுகர்ச்சியும் அல்ல; எமக்கு வீடு பேற்றினை .நல்கும்: நின் திருவருளும், அவ்வருளைப் பெறுதற்கு இறைவனாகிய நின்பால் ' யாம். செய்யும். பேரன்பும், . அருள் அன்பு என்னும் அவ்விரண்டினாலும் யாம். செய்தற்குரிய அறனும் ஆகிய இவை. மூன்றுமேயாகும்” எனக் கடுவன் இளவெயினனா. ராகிய புலவர்: பெருமான் ' இருப்பரங்குன்றத் . தெழுந்தருளிய.முருகப் பெருமானை நோக்கி வேண்டும் நிலையில் அமைந்த இவ்விண்ணப்பம் இறைவனது தஇருவருளே' உலகுயிர் "நிகழ்ச்சிகள் . எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதும், ப இறைவனருளால் அன்பு மீதூரப் பெற்ற மக்கட்குலத்தால் அருளும் : அன்புமாகிய இவற்றின் துணை. கொண்டு செய்யப்படும். நற்செயல்களே. நிலை பெற்ற. அறமாம் .. என்பதும் ஆகிய உண்மைகளை நன்கு புலப்படுத்தல் காணலாம். | |

“அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
. அருளே பிறப்பறுப்ப தானால் - "அருளாலே :
"மெய்ப்பெருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு” ..... (அற்புதத்)
எனவரும் கரரைக்காலம்மையார் வாய்மொழியும்
“*அவனருளே கண்ணாகக் காணினல்லால்''
எனவரும் அப்பர் மொழியும்,
அவனருளாலே ஆுன்தாள் வணங்கி”
எனவரும் இருவாதவூரடிகள் வாய்மொழியும் மேற்குறித்த பரிபாடற்றொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்பு சதக் உணரற்பாலதாகும்.
முப்பத்து மூவரும்: மற்றொழிந்த தேவரும் போற்றும் முழுமுதற் கடவுளாகப் பரங்குன்றத் தெழுந்தருளிய செவ்வேளைப் பரவிப் போற்றுவது எட்டாம் பரிபாடலாகும். மலர்ந்த துழாய் மாலையையும் அளவ 5; செல்வத்தினையு முடைய கருடக் கொடியோனாகிய திருமாலும் ஏறூர்ந்த செல்வனாகிய சிவபெருமானும் தாமரை மலரில்
வீற்றிருப்போனாகிய நான்முகனும் அவளிடத்தே தோன்றி
உலகத் இருளை நீக்கிய சூரியர் பன்னிருவரும் அசுவினி தேவர்
என்னும் மருத்துவர் இருவரும், வசுக்கள் எண்மரும் ஆதிரை
முதல்வனாகிய இறைவன் பெயராற் சொல்லப்பட்ட உருத்திரர் பபினொருவரும் ஆகத் தேவர் முப்பத்து மூவரும் நல்ல திசைகளைக் காப்போராகிய. இந்திரன் முதலிய எண்மரும் இவர் எல்லோரும் இவரொழிந்த பிறரும் ஆகிய தேவர்களும் அவுணர்களும், அறிதற்கரிய வேதத்தினை அறிந்த தவச் செல்வராகிய தெய்வ முனிவர்களும், முழு முதற் பொருளாகிய முருகளைக் காணுதல் காரணமாக நிலமிசை வந்து தங்கும் இடமாகத் இகழ்வது இருப்பரங்குன்றம். ஆகலே இருப்பரங்குன்று தேவர்கள் தங்கும் பழைய இடமாகிய இமயக் குன்றத்தை ஓக்கும். அவ்விமயக் குன்றின் கண்ணே விளங்கும் சிறப்ப: உடயதாய் முருகனை ஈன்ற தாமரை பூத்த வற்றாப் பொய்கையினை ஒத்தது. திருப்பரங்குன்றில் உள்ள அருவி தங்கும் சுனையாகும். என ஆரியர் நல்லந்துவனார் முருகப் பெருமான் எழுந்தருளிய -இருப்பரங்குன்றத்தினை : இமயக் குன்றத்தினொடும் இணைத்துப் போற்றுவதாக வமைந்தது,
“மண்மிசை யவிழ் துழாய் மலர்தரு செல்வத்துப்
புண்மிசைக் கொடி யோனும் புங்கவ மூர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்றவனிடைத் தோன்றி
உலகிரு ளகற்றிய பதின்மரு மிருவரும்
மருந்துரை இருவரும் திருந்துநூ லெண்மரும்
ஆதிரை முதல்வனிற் கிளந்த
நாதர்பன் னொருவரு நன்றிசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி லிழுத்தவ முதல்வரும்
பற்றா கின்றுநின் காரண மாகப்
பரங்குன் நிமயக் குன்ற நிகர்க்கும்
இமயக் குன்றினிற் சிறந்து
நின்னீன்ற நிரையிதழ்த் தாமரை
மின்னீன்ற விளங்கிணரூழா
ஒருநிலைப் பொய்கையோ டொக்குநின் குன்றின்
அருவிதாழ் மாலைச்சுனை”' எனவரும் பரிபாடற் பகுதியாகும்.
- இருப்பரங்குன்றத்திற்கும் அதன் கிழக்கேயமைந்த மதுரை நகருக்கும் இடையேயுள்ள வழியின் இயல்பையும், அவ்வழியே இருப்பரங்குன்றத்தையடைந்து முருகப் பெருமானை வழிபட வந்த அன்புடைய காதலர்களின் ஊடலும் கூடலுமாகிய இன்ப நிகழ்ச்சிகளையும் தலைமகள் ஊடலைத் தணிக்க எண்ணிய தலைவன் வையையின் மேலும் முருகன் எழுந்தருளிய பரங்குன்றின்மீ தும், அங்கு வழிபடவந்த பார்ப்பார் மீதும் சூளுற்றுக் கூற அது! கண்ட தோழி அவனுடைய பொய்ச் சூளால் நேரும் துன்பங்களை நீக்க அவன்பால் அன்புடைய தலைவி முருகப் பெருமான் தலைவனது பொய்ச் சூள் கருதிச் ற்றம் கொள்வதற்கு முன்னரே திருப்பரங்குன்றத்தில் முருகன் கோயிலில் தொங்கும் மணியைக் கையாலடித்துத் தலையால் வணங், தலைவனது பொய்ச்சூளால் வரும் எதத்தைத் தவிர்த்தருள்க என வேண்டிக்கோடலும் ஆகிய செய்திகள் இப்பாடலில் 22 முதல் 89 முடியவுள்ள அடிகளால் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இதனால் தெய்வம் எழுந்தருளிய திருத்தலத்தின் மேலும், அங்கு எழுந்தருளிய தெய்வத்தின் மீதும் தெய்வத்தைப் போற்றும் அடியார்கள் மீதும், தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தத்தின் மீதும் பொய்ச்சூள் செய்தல் இறைவன்பால் அன்பிலாதார் செய்யும் போலிச் சடங்கென்பதும் இதனால். அகணார்கிகுத். தெய்வத்தால் இமை நேரும். என்பதும் அத்தமை . நீங்க இறைவனை வழிபடுதலே. அவர்பால் அன்புடையார்: செயல் என்பதும் ஆ கிய உண்மைகள்: புலப்படு த்தப் பெற்ற றுள்ள்மை காணலாம்.

தன் அடியார். பொருட்டுக் "கூற்றினது மிக்க ஆணையையும். இகழும் .ஆற்றல் முருகப் பெருமானுக்கு உண்டு 9 என்பது.
“எருமை இருந்தோட்டி எள்ளீயும் காளை: ன் (பரி. 8; 86) '
. என்ற தொடரால் உணர்த்தப்பட்_ட து. மழையால் வளர்ந்த குளிர்ந்த களைகளையுடைய ரங்களடர்ந்த.பகுதிகள் பறிக்கத் தொலையாவாக நிறைந்த-மலர்களைப் பெற்று மலர, குளிர்ந்த. பொய்கைகள் நீரால் நிறைய கூடல் நகரத்திற்கும் பரங்குன்றத்திற்கும் இடையேயமைந்த வழியின் கண்ணே இருவிழாத் தோற்றம் பொலியப் பரங்குன்றத் துப் பெருமானை வழிபட எழுந்து சாந்தமும், 'நறும்புகைக்குரியனவும், நந்தா விளக்கிற்கு வேண்டுவனவும், நறுமலர்களும், இசைக் கருவியாகிய முழவமும், மணியும் கயிறும், மயிலும், மழுப்படையும், ஊர்இயாகிய பிணிமுகமும் உட்பட முருகப் பெருமான் விரும்புகின்ற வேறுபல பொருள்களையும். ஏந்திக் கொண்டு பரங்குன்றத்தை அடைந்து தொழும் அடியார் "களும்; அம்மலையின் தாழ்வரையிற் சென்று ' முருகப் பெருமானின். திருவடிகளைத் தொழுது: “யாம் எம் காதலரைக் "கனவில் தொட்டது: பொய்யாகாமல் நனவின்கண்ணும் அடைய வையைப் புதுப்புனலை அணி செய்க” என வரம் வேண்டுவோரும், “வயிறு கருவுறுக”? என - இறைவனுக்கு வேண்டும் பொருள்களை தப்புப் “எம் கணவர் .செய்பொருள் வாய்ப்பதாகுக”: என முருகப் பெருமான் 'செவியிற்பட.க் குறை இரப்போ ரும் எம்முடைய கணவர் வியக்கத்தக்க போரில்“ பகைவரை அழித்து வெற்றி பெறுவாராக” என அருச்சுிப்போருமாய். அம்மலையிற் குழுமிய நிலையில் பாடுவாரது பாணியாகிய தாளமும் ஆடுவாரது ஆடரங்கிற்குரிய தாளமும், மலையின்கண் உண்டாகும் எதஇுரொலியும் கலத்தலால் பெருமுழக்கம்
உண்டாகிய இ தன்மையினையும். ட முருகனருள் பெற்ற அம்மகளிர் - தம் கணவரொடு. துன்பம் நீங்கி மகிழ்ந்திருக்கும் ப திறத்தையும் விரித்துரைக்கும். முறையிலமைந்தது. 90 முதல் . 123 வரை -அமைந்த இப்பாடல்  பகுதியாகும். இங்ஙனம். முருகப். பெருமான் . , எழுந்தருளிய ... 'பரங்குன்றைப் புனைந்துரைக்கும் முகத்தான். அம்முதல்வனை .எதிர்முக ௬ இ மாக்கியும்,' படர்க்கையாக்கியும் அவனையே வாழ்த்தி நிறைவு பெறும் நிலையிலமைந்தது.
6 ் உடம்புணர். காதலரு- மல்லாருங் கூடிக் ்
கடம்பமர் செல்வன் கடிநகர் பேண
அ மறுமிடற் றண்ணற்கு மாசிலோ டந்த: .
் நெறிறீ ரருவி ய்சும்புறு செல்வம். ்
மண்பரிய வானம் வறப்பினும் மன்னுகமா , ப ்
ப தன்ர குன்ற ன்க்த் ம பேரி, 6, 125- ட்ட

எனவரும் பகுதியா கும். “பரங்குன்றமே!. தம்முட் பிரியாத : காதலர்களாகிய மகளிரும் மைந்த்ரும், அவர்களல்லாத வரம் வேண்டுவோர் பிறரும் கூடிக். கறை -மிடற்றிறைவனுக்குத் தூய்மையே. உருவாகிய : உமையம்மமையார் தந்த. புதல்வனா.கிய. 4 கடப்பமலரையணிந்த - செவ்வேள் எழுந்தருளிய. இருக்கோயிலை.. வழிபட்டு. மகிழ நிலவுலகம் வெயில் வெப்பத்தால் வருந்த மழை பெய்யாது போயினும் பல இடங்களிலும் அருவிநீர் . சொரியும் நிர்னள மாய் செல்வம் நினக்கு என்றும். குன்றாது நிலை பெறுவதாகுக!”

என ஆசிரியன் ' நல்லந்துவனார் முருகப் - பெருமான் எழுந்தருளிய வளமார்ந்த: இருப்பரங்குன்றத்தை வாழ்த்திப் போற்றும் நிலையிலமைந்தது மேற்காட்டிய பாடற் பகுதியாகும். இங்ஙனம். ஆசிரியன்” 'நல்லந்துவனார் பாடிய பரிபாட்லாற் சிறப்பிக்கப் பெற்றது இருப்பரங்குன்றம் என்பது,
ப ள் “அந்துவன் பாடிய சந்து கெழு நெடுவரை”
எனவரும் அகநானூற்றுத் தொடராற்புலனாகும். மறுமிடற்றண்ணற்கு 'மா௫ிலோள் தந்த கடம்பமர் செல்வன் எனவரும் பரிபாடல். அடிகளைத் தழுவி அமைந்தது “நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்” எனவரும் அப்பர் தேவாரமாகும்.

பரங்குன்றத்துச் செவ்வேளைப் பரவிப் போற்றும் நிலையிலமைந்தது குன்றம் பூதனார் பாடிய ஒன்பதாம் பரிபாடல் ஆகும். இருநிலம் துளங்காமல் வடதிசைக் கண்ணே நிலைடெற்று ஒங்கி இந்திரனாற் காக்கப்படும் இமய மலையின் சகரத்திலே தெய்வத் தன்மை வாய்ந்த முனிவர் அறுவரும் உடம்படக் கற்பின் திறத்தால் நன்கு மூக்கப்படும் கார்த்தகைப பெண்கள் அறுவரிடத்தே பெருவெள்ளமாக வந்த கங்கையைச் சடையிற் கரந்தோனும் நீலமணிபோலும் மிடற்றினை யுடையவனுமாகிய இறைவனுக்கு மகனாகத் தோன்றியவனே! இறைவனாகிய நீ களவொழுக்கம் ஒழுகி வள்ளி நாச்சியாரை மணந்தவன்று ஆயிரங்கண்ணோனாகிய இந்திரன் மகள் தெய்வ யானையின் கண்கள் மணிநிற மழையைப் பெய்தாற்போன்று . முதுவேனிற்பருவம் கார்காலத்தின் தன்மையைப் பெற்றுப் பெருமழையைப் பெய்தாலொக்கப் பரங்குன்றின் கண்ணே நீராகிய தணிந்த மழையைப் பெய்தது.

முருகப் பெருமான் அவுணர்களை அழித்து இந்திரன் மகள் தெய்வயானையை மணந்து கொண்டபின்னரே குறவர் மகளாராகிய வள்ளி நாச்சியாரைக் களவொழுக்கம் ஒழுகி மணந்து கொண்டான் என்பது மேற்காட்டிய தொடரால் நன்கு விளங்கும். குறிஞ்சிக் கழவனாகிய முருகன் குறவர் மகளாகிய வள்ளியை அன்பின் ஐந்தணைக் களவொழுக்கமாகிய தமிழியல் வழக்கப்படி மணந்து கொண்டான் என்பதும், இந்திரன் வேண்ட, அவன் மகள் தெய்வ யானையை மணந்து கொண்டது வேத நெநறி பற்றிய பொதுமை சுட்டிய உலகியல் வழக்கே என்பதும் குன்றம் பூதனால் பாடிய இப்பரிபாடலில் விரித்துரைக்கப்பெற்றன. அன்பின் ஐந்திணை ஒழுகலாற்றில் களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோளிற்கும் உரியராகிய வள்ளி நாச்சியார். தெய்வயானையார் ஆகிய தேவியர் இருவராலும் காதலிக்கப் படும் ஒரு தனித்தலைவன் முருகப் பெருமான் என்பதனை எடுத்துக் கூறி அம்முதல்வனால் களவொழுக்கம் ஒழுகி மணந்து கொள்ளப் பெற்ற வள்ளியின் இறப்பும், அம்முதல்வன் எழுந்தருளிய திருப்பரங்குன்றம் வள்ளி நாச்சியார்க்கு ஒத்தவாறும் உணர்த்துவது இப்பரிபாட_லாகும். குறிஞ்சிக் கடவுளாகிய முருகனைப் பரவிப் போற்றும் நிலையிற் பாடிய இப்பாடலின் ஆசிரியர் குன்றம் பூதனார், நான்மறைப் பொருளை விரித்து அம்மறையது நல்லிசையை விளக்கும் வடமொழிப் புலவர்களை நோக்கித் தமிழியல் வழக்கமாகிய அன்பின் ஐந்நணைக் களவொழுக்கத்தின் சிறப்பினை விரித்துரைப்பதாகவமைந்தது, ே
நான்மறை விரித்து நல்லிசை வி க்கும்
் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது
காதற் காமங் காமத்துச் சிறந்தது
விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தலிற் சிறந்தது கற்பே யதுதான்
இரத்தலு மீதலு மிவையுள் ளீடாப்
பரத்தையுள் ளதுவே பண்புறு கழறல்
தோள்புதி துண்ட பரத்தையிற் சிவப்புற
நாளணிந் துவக்குஞ் சுணங்கறை யதுவே
கேளணங் குறமனைக் கிளந்துள சுணங்கறை
சுணங்கறைப் பயனு மூடலுள் ளதுவே, அதனால்
அகற லறியா வணியிழை நல்லார்
இகறலைக் கொண்டு துனிக்குந் தவநிலரித்
தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வந்திலார்
கொள்ளாரிக் குன்று பயன்” (பரி. 9, 12-26) எனவரும் பகுதியாகும்.

நான்மறைப் பொருளை விரித்து அம்மறையின் நல்லிசையை விளக்கும் புலவர்களே! நான் கூறக்கருதிய நல்ல தொரு பொருளைக் கேண்மின். மக்கள் நுகரும் காம வின்பத்துற் சிறந்தது அன்புடைய காதலர் இருவர் தம்முட் கூடி நுகரும் இன்பமாகும். அஃதாவது, மெய்யுற்றறியாத ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவர் ஒத்த அன்பினராய் நல்லூழின் திறத்தால் தாமே மெய்யுற்றுப்புணரும் இயற்கைப் புணர்ச்சியாகும். இங்ஙனம் ஒத்த அன்பில்லாத கற்புமணம் புலந்து ஊடுதலால் சிறப்பதாகும். புலத்தலாவது, தலைமகன் தலைவியின் பிணக்கு நீக்குவார் வாயிலாக வேண்டிக் கொள்ளுதலும், தலைவி அவ்வேண்டுகோளை ஏற்றலுமாகிய இவை உட்்படத் தலைவனது புறத்தொழுக்கத்தால் வருவது. தலைவனால் நுகரப்பட்ட பரத்தை வீட்டின்கண்ணே நாட் காலையிலே ஆயமகள் ஒருத்திக்குச் செவ்வணியணிந்து தூதாகவிட்டுத் தலைமகளது பூப்பு அறிவிப்ப, பண்புடைய அக்கழற்றுரையால் தலைவன் அங்கிருந்து மீண்டுவந்து உவக்கும் புணர்ச்சி உடையது. அப்புணர்ச்சிகள்தாம்
தலைவியின் பக்கத்துள்ளார் கேட்டு வருந்த பரத்தையால் அவள் மனைக்கண் அலர் தூற்றப்படுவன. அப்புணர்ச்சி இன்பம் இயல்பாக அன்றி ஊடலால் உளதாவது. அதனால் இங்ஙனம் கற்புமணம் பெற்ற மகளிர் தவைன் பிரிய அவனொடு ஊடல் கொண்டு வருந்துமாறு போல, கணவரை விட்டு நீங்குதலறியாத களவிற் புணர்ச்சியையுடைய மகளிர், தம் கணவரொடு மாறுகொண்டு ஊடும் குற்றமுடையர் அல்லர். இவ்வாறு காதலர் பிரிந்தறியாத இப்புணர்ச்சியை விரும்புகின்ற பொருளிலக்கணத்தையுடைய தமிழியல் வழக்கமாகிய களவொழுக்கத்தின் அன்பின் திறனை ஆராய்ந்துணராத தலைவர். இத்தகைய குறிஞ்சி நிலத்தின் உரிப்பொருளாகிய புணர்ச்சியின் பயனை உள்ளவாறு உணர்ந்து பயன்கொள்ளும் ஆற்றல் இல்லாதவராவார் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்,

காதலர் இருவர் கருத்துணராது பெற்றோர் முதலியோரால் நடத்தப்படும் கற்பு மணத்கிற்கும், நல்லூழின் செயலால் ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்குியும் உலகத்தார் அறியாது தம்முள் தாமே கலந்த கேண்மையின ராய்க் களவொழுக்கம் ஒழுகப் பின்னர் வரைந்து கொள்ளும் தமிழியல் வழக்கமாகிய களவு மணத்திற்கும் இடையே அமைந்த வேறுபாட்டினை முறையே தெய்வயானை அம்மையார், வள்ளி நாச்சியார் ஆகிய இருவருடைய செயல்களிலே வைத்துப் புலப்படுத்தும் முறையிலமைந்தன, 9ஆம் பரிபாடலில் 27 முதல் 69 முடியவுள்ள அடிகளாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 


கடிய சூர்மாவினைத் தடி.ந்த வேற்படையைத் தாங்கிய முருகப் பெருமான் எழுந்தருளிய திருப்பரங்குன்றம்
கலைத்திறத்தில் வல்லார் பலரும் தம்முள் உறழ்ந் து த ற்டட் துறையில் வெற்றிபெற்றுத் தாம் பெற்ற வெற்றிக் கறிகுறியாகத் தடாகம் போலும் சுனையின் பக்கத்தே வெற்றிக் கொடியை நாட்டப் பொலிவு பெற்று விளங்கிய திறத்தை விரித் துரைப்பது, ப
“கடுஞ்சூர் மாமுத றடிந்தறுத்தவேல்
அடும்போ ராளநின் குன்றின்மிசை
ஆட னவின்றோ ரவர்போர் செறுப்பவும்
பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்
வல்லரை வல்லார் செறுப்பவும்
அல்லரை யல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்ச்
செம்மைப் புதுப்புனற்
றடாக மேற் தண்சுன்னப் பாங்கர்ப்
படாகை நின்றன்று£” (பரி. 9, 70-78)
எனவரும் பகுதியாகும். கடுந்தொழில் உடைய சூர்மாவைத் தடிந்தறுத்த வேலால் கொடியோரைக் கொன்று குவிக்கும் போர்த் தொழிலை யாள்பவனே! நீ வீற்றிருந்தருளும் பரங்குன்றின்மேலே ஆடல் பயின்றோரை ஆடலில் வல்லோர் வெற்றிகொள்ளவும் இசைபாடுதலில் வல்லாரை அத்துறையில் வல்ல பாணர் வென்றடக்கவும், வல்லுப் போரை வல்லாரை அத்தொழிலில் வல்லாற் வென்றட க்கவும் ஒழிந்த கலைத் தஇிறங்களில் வல்லாரை அவ்வத்துறையில் வல்லார் வென்றடக்கவும் இக்கல்வி வென்றிகளால் ஒப்பில்லாத புகழ் பரப்பத் தடாகம் போலும் சுனையின் பக்கத்துக் கொடி எடுத்து நின்றது என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். தாவில் கொள்கைத் தந்தொழில் முடிப்பாருடைய மனத்தின் எழுந்தருளியிருந்து, அவர் தத்தம் தொழிலில் மேம்படுதற்கேற்ற உள்ளக்கிளர்ச்சியை நல்குவோன் முருகனாதலின் அம்முதல்வன் எழுந்தருளிய திருப்பரங்குன்றத்தில் இத்தகைய கலை வென்றிச் செயல்கள் நிகழ்வனவாயின என்பது இங்குக் குறிப்பிடத் தகுவதாகும். கற்புப் பொருந்திய நெறியையுடைய தேவியர் இருவரது அன்பின் வழிப்பட்ட ஊடல் உரிமையை விரும்பும் பண்பினையுடைய முருகப் பெருமானை நோக்கி அன்பினாற் சிறந்து நின் இருவடி உறைதலாகிய இவ்வாழ்வு எமக்கு நாள்தோறும் பொலிந்து பயன்தந்து சிறப்பதாகுக! எனக் குன்றம்பூதனார் வேண்டிக் கொள்வதாகவமைந்தது,
“கற்பினை நெறியூ டற்பிணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர
வாழ்த்தினேம் பரவுதுந் தாழ்த்துத் தலை நினையா
நயத்தலிற் சிறந்தவெம் மடியுறை
பயத்தலிற் சிறக்க நாடொறும் பொலிந்தே'”” (பரி. 9, 81-85)
எனவரும் பகுதியாகும். தலைவன் பிரிந்து சென்ற நிலையில் அவன் வருவதாகக் குறித்த கார்ப்பருவத்தைக் கண்டு வருந்திய தலைமகள் கேட்பத் தோழி முருக வேளைப் பரவுவாளாய்த் தலைமகன் இப்பருவத்தே வந்துசேர்வான் என்பது பட வற்புறுத்தும் முறையிலமைந்தது கேசவனார் பாடிய 14ஆம் பரிபாடலாகும். இப்பாடலின் முதலிலுள்ள 17 அடிகள் - கார்ப்பருவத்தன் தோற்றத்தைச் சொல்லோவியஞ் செய்து காட்டுகின்றன. சூரபன்மாவைக் களையோடு அழித்த வேற்படையை உடையோனே! கார்காலத்து வெண்மேகம் கிளர்ந்து மேலெழுந்தாற் போன்ற நறிய அகில் முதலிய வற்றாற் புகைத்த நறும் புகையை மிகவிரும்பியவனே! ஆறு முகங்களையும் பன்னிரு தோள்களையும் உடையையாய் அழகினாற் பிற மகளிரை வென்ற வெற்றியையுடைய வள்ளி நாச்சியாரது நலத்தை நயந்தவனே! தம்மைப் பிரிந்த கணவர் ் வந்து புணர்ந்து பின் நீங்காமைப் பொருட்டு மகளிர் யாழை இசைத்து நின்னைப்பாடுகின்ற தோத்திரப் பாடலை விரும்பியவனே! நீ பிறந்தருளியபொழுதே நின்னை நினைந்து உளம் நடுங்கி இந்திரன் முதலிய சிறப்புடைய தேவர்களும் அஞ்சுதற்குக் காரணமாகிய இறைமைத் தன்மையை உடையோனே! முந்நூல் அணிதற்கு முன் ஒரு பிறப்பும், அணிந்தபின் ஒரு பிறப்பும் என இரண்டு பிறப்பினையும் அப்பிறப்பினால் வந்த இரண்டு பெயர்களையும் அன்பென்னும் ஈரம் வாய்ந்த நெஞ்சிளையும் ஒப்பில்லாத புகழினையும் உடைய அந்தணர்களது வைதிக அறத்தைப் பொருந்தியவனே! மேற்கூறிய அத்தன்மையை ஆதலின், நின்னை யாங்கள் விரும்பி அடுத்தடுத்து வழிபடுவதன் பயன் அவ்வழிபாடுகள் தாமே இன்னும் இன்னும் நின்புகழினும் பலவாக எங்கட்கும் பெருகுக! என்பதேயாகும்” என முருகப் பெருமானை நோக்கித் தோழி பரவிப் போற்றுவதாக வமைந்தது,
“சூர்மருங் கறுத்த சுடர்பபடை யோயே
கறையில் கார்மழை பொங்கி யன்ன
நறையி னறும்புகை நனியமர்ந் தோயே
அறுமுகத் தாறிரு தோளால் வென்றி
நறுமலர் வள்ளிப் பூநயந் தோயே
கெழீ இக் கேளிர் சுற்ற நின்னை
எழீ இப் பாடும் பாட்டமர்ந் தோயே
பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச்
சிறந்தோ ரஞ்சிய சீருடை யோயே
இருபிறப் பிருபெய ரீர நெஞ்சத்
தொருபெய ரந்தண ரறனமர்ந் தோயே
அன்னை யாகலி னமர்ந்தியா நின்னைத்
துன்னித் துன்னி வழிபடுவதன் பயம்
இன்னு மின்னுமவை யாகுக
தொன்முதிர் மரபினின் புகழினும் பலவே” (பரி. 14, 18-92)
எனவரும் பகுதியாகும். முருகப் பெருமானை அடுத்தடுத்து வழிபடுவதன் பயன், அத்தகைய வழிபாடுகள் தமக்குத் தொடர்ந்தென்றும் கிடைத்தற் பொருட்டே எனத் தோழி கூறும் இவ்வேண்டுகோள், 
“கூடும் அன்பினிற் கும்பிடலே யன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்”
என அருண்மொழித் தேவர் கூறும் அடியார் திருக்கூட்டத்தின் குறிக்கோளை நன்கு நினைவுபடுத்தல் காணலாம்.
திருப்பாங்குன்றத்துச் செவ்வேளைப் பரவிப் போற்றும் முறையில் நல்லழிசியார் பாடியது 17ஆம்பரிபாடலாகும். பரங்குன்றத்து முருகப் பெருமானை வழிபடும் அடியார்கள் சுற்றப்படும் சுடர்விளக்கும்,
இசைக்கருவிகளின் இன்னிசையும், சந்தனம் முதலிய மணப்பொருள்களும், அகிற்புகையும், கொடிகளும் ஒருங்கே வரத் தேன் நிறைந்த நறுமலர்களையும் தளிர்களையும், பூத்தொழில்களையுடைய ஆடைகளையும் தெளிந்த ஓசையிளனையுடைய மணியினையும் இலைத் தொழிலமைந்த வேற்படையினையும் சுமந்து வந்து சந்தனத்தைத் தெளித்து முருகபூசை செய்யும் வேலன் ஆட்டுக் கடாயைக் கட்டின பூசையையுடைய தெய்வமரமாகிய கடம்பமரத்தினைத் தோத்திர வுரைகளால் ஏத்தியவர்களாய் ஆளத்தியால் ஆக்கிய இசையினைப் பாடியவராய் விரிந்த மலர்களிலிருந்து சொரியும் தேனால் நனைந்த திருப்பரங்குன்றத்தின் தாழ்வரையிலே மாலை நேரந்தோறும் முருகப் பெருமானுக்கு நேரும் வழிபாட்டி லே கலந்து கொண்டு அம்மலையில் தங்கி முருகன் இருவருளில் திளைத்து மகிழும் வாய்ப்பினைப் பெற்ற மக்கள் இறைவன் கழலேத்தும் இன்பத்தையன்றி தேவருலகத்தே தங்கிய இன்பத்தைச் இறிதும் விரும்ப மாட் டார்கள் என்பதனை,
“தேம்படு மலர்குழை பூந்துகில் வடிமணி
எந்திலை சுமந்து சாந்தம் விரைஇ
விடையரை யசைத்த வேலன் கடிமரம்
பரவின ௬ரையொடு பண்ணிய விசையினர்
விரிமலர் மதுவின் மரநனை குன்றத்துக்
கோலெரி கொளைநறை புகைகொடி யொருங்கெழ
மாலைமாலை யடியுறை இயைநர்
மேலோ ருறையுளும் வேண்டுநர் யாஅர்” (பரி. 17, 1-8)
எனவரும் தொடர்களில் நல்லழிசியார் குறித்துள்ளார்.

6 தங்குபிறப்பே வீட்டினுக்கு மேலாந்தன்மை சாதித் தார்”
எனவரும் சேக்கிழார் வாய்மொழி இங்கு ஒப்பு நோக்கற் பாலதாகும். திருப்பரங்குன்றத்தின் ஒரு பக்கத்தே இசைப் பாணர்களுடைய யாழோசை எழ, அதற்கெதிராக வண்டின் இன்னிசை எழலும், ஒருபக்கத்தே வேய்ங்குழலின் ஒலி எழ அதன் எதிர் தும்பி முரலுதலும், ஒருபக்கத்தே முழவின் முழக்கம் உண்டாக அதன் எிர் அருவி ஒலித்தலும், ஒரு பக்கம். ஆடலில் வல்ல மகளிர் ஆட அவர்க்கெதுரே பூங்கொடிகள் வாடைக்காற்றால் அசைதலும், ஒரு புறத்தே , பாடினி பாடும் சுரவரிசையை யுடைய மிடற்றுப் பாடலின் கண்ணே நாலு தாக்குடைய கிழமையும், இரண்டு தாக்குடைய நிறையும் ஒரு தாக்குடைய குறையும் தோன்ற அதற்கெதிராக மற்றொருபுறம் 8€ருக்கிசைய ஆடுகின்ற மயிலினது இடை விட்டெழும் குரல் தோன்றுதலும் இவ்வாறு கலைத்திறங்களால் மாறுமாறாகிய தன்மையை உற்றனபோல ஒன்றின் ஒன்று இகலும் தன்மையை ஏற்றுக் கொள்ளுதலைப் பகைவரை இல்லை யாக்கிய முருகப் பெருமான் எழுந்தருளிய இருப்பரங்குன்றம் உடையதாகும்.



பாடுதல் அமைந்து பலபுகழும் முற்றுப்பெற்ற கூடல் நகரத்திற்கும் பரங்குன்றத்திற்கும் இடையே நின்ற நிலம் மிக அணிமையதாயினும் மகளிரும் மைந்தரும் நெருங்கி விளையாடுதலால் அவ்வழியில் இயங்குவோர்க்கு மிகச் சேய்மையுடை_யதாகத் தோன்றாநின்றது. மகழ்ச்சிமிக்க மகளிர் கூந்தலினின்றும், மைந்தர் குஞ்சியினின்றும் வீழ்ந்து அவிழ்ந்து கிடக்கும் மாலையால் தடுக்கப்பட்டு வழிச் செல்வார்க்கு இயங்கும் நெறி இல்லையாயிற்று. பழி நீங்கிய மெய்ப்பொருள் பனுவல்களாலும், வழிபாடாகிய வேள்வியினாலும் புகழினால் திசையெங்கும் பரந்த பரங்குன்றின்கண் எழுந்தருளியிருந்து உலகத்தார் பல இடங்களிலும் செய்கின்ற பூசையின்௧ண் முருகன் ஆவியாகக் கொள்ளும் அகிற்புகை அவ்விடந்தோறும் மேலே வானத்துச் செல்லுதலால் கண்ணிமையாத வானோரும் அவ்விடத்து நின்று கண்ணிமைத்துச் செல்வர். தேயாத ஞாயிற்று மண்டிலமும் புகை மிகுதியால் காணும் இயல்பினையுடையதன்று. குளிர்ந்த மாலையையணிந்த வளைக்கை இளமகளிரும் அவர்தம் மென்தோளிற்றங்கி அன்பு ஒத்தாராகிய மாலையணிந்த மார்பையுடைய மைந்தரும் மகழ்ச்சிமிக்கு ஒரு சேரச்சுனையின்கண் பாய்ந்தாடுதலால் சுனையின் மலரிடத்தே படிந்த வண்டுகள் வெருவி அம்மலர்களின் தாதினை ஊதப்பெறாவாயின. திருப்பரங்குன்றத்தின் அணிநலங்கள் அத்தன்மையனவாய் மலையிடத்தே ஒழுகும் வெள்ளிய அருவி நீங்காது பரவி உழவரது வயலின்கண் பரவிநிற்கும். மலைமேல் விளையாடும் மகளிர் இயங்குதலால் அவர்தம் அணிகலங்களிலிருந்து வீழ்ந்த நீலமணி வயலைச் சிதைக்கும்.
பிரிந்த தலைவர் வினைமுடித்து விரைவின் வந்து தம்மை அடைதற்பொருட்டு வெள்ளிய அருவியையுடைய பரங்குன்றின்கண் தலைவியர் செய்யும் தெய்வ விழாவும், அவ்வாறு அவர்கள் வந்து கூடிய நிலையில் வளங்கெழு வையையாற்றின்கண் அவரோடு புதுப் புனலாடுதலாகிய விருந்தயர்வம், வேற்படை யையுடை_ய பாண்டியனது கூடல் நகரத்தின்கண் மனைக்கண் தங்கி அம்மகளிர் செய்யும் விருந்தோம்பலும் தம்மிற் காரணகாரியங்களாய் முன்னும் பின்னுமாக மாறி மாறி நிகழ்தல் மனைவாழ்க்கை நெறி யாதலின் அவர்க்கு நல்லொழுக்கமாயிற்று எளத் திருப்பரங் குன்றத்தில் மகளிரும் மைந்தரும் நிகழ்த்தும் தெய்வ. வழிபாட்டினையும், அவ்வழிபாட்டின் பயனாக வையைப் புதுப்புனலாட்டும், மனைக்கண் விருந்தோம்புதலும் ஆக நிகழும் நற்பயன்களையும் விரித்துரைத்த நல்லழிசியார் முருகப்பெருமானை எதிர்முகமாக்கி வேண்டும் நிலையிலமைந்தது : 66
மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடிப்
பிணிமுக மூர்ந்த வெல்பே ரிறைவ
பணியொரீ இ நின்புக ழேத்தி
அணிநெடுங் குன்றம் பாடுதும் தொழுதும்
அவை, யாமுமெஞ் சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுகயா மெனவே” (பரி. 17, 48-53)
எனவரும் பாடற்பகுதியாகும். நீலமணிபோலும் நிறத்தினை யுடைய மயிலையும், உயர்ந்த கோழிக் கொடியையும், பிணிமுகம் என்னும் உயர்ந்த யானையை ஊர்ந்து செய்யப் பட்... வெல்லும் போரினையுமுடைய தலைவனே! இற்றறிவும் _-
சிறு தொழிலுமுடைய மக்கள் மாட்டுப் பணிந்துகூறும் பொய்ப்புகழை ஒழிந்து நினது பொருள் சேர்ந்த புகழையே வாழ்த்தி நின்னுடைய அழகிய நீண்ட திருப்பரங் குன்றத்தினை யாமும் எம் சுற்றமும் பாடித் தொழுதேமாய். பிறவித்துன்பம் சாராத இன்பமே நிகழும் நாளைப் பெறுக என்று வேண்டிக் கொள்சன்றேம் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். பொய்ம்மையாளரைப் புகழாதே. எம் பெருமானாகிய நின் மெய்ப்புகழையே ஏத்தப் பாடித் தொழுகின்றோம் என்பார்,

- “பணியொரீ இ நின்புகழேத்தி
அணிநெடுங் குன்றம் பாடுதும் தொழுதும்”
என்றார். “நாமார்க்கும் குடியல்லோம்” எனவரும் அப்பர் அருள் மொழியும், “பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவிர்காள்” எனவரும் நம்பி ஆரூரர் அருள் மொழியும் இங்கு நினைக்கத்தக்கன. இங்கு “ஏமவைகல்' என்றது பிறவித்துன்பம் சாராத இன்பமே நிகழும் நன்னாளை.

““சேவலங்கொடியோன் காப்ப
ஈ , ய் 399
ஏமவைகல் எய்தின்றாலுலகே
எனவரும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பகுதி இங்கு ஒப்பு நோக்கத்தக்க து.

. செவ்வேளைப் பரவிப் போற்றிய கடவுள் வாழ்த்தாக வமைந்தது, குன்றம் பூதனார் பாடிய 18ஆம் பரிபாடலாகும். நிலத்தா.ல் தாங்கப்படும் கடற்பரப்பினுள் பரந்து சுற்றிய சூர்மாவை அழித்த வேற்படையையுடைய முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள இருப்பரங்குன்றம், முருகனைப் பயந்த இமயமலையொடு மேல்நின்றருளும் பெருமை _ யுடையது. வேற்படையைத் தாங்கிய செவ்வேளே! விரைந்த மயிலின்மேல் அமர்ந்துவரும் ஞாயிறு போல்பவனே! மழை முழங்கிய சிகரமும் அதன் மேல் கொடி போன்று தோன்றும் மின்னலும் நினது முகபடாம் அணிந்த பிணிமுகம் என்னும் யானையை ஓக்கும். நின் குன்றத்தின்௧கண் பல்வேறு ஓவியங்கள் எழுதப் பெற்ற ற அம்பலம் காமவேளது படைக் கொட்_டிலை ஓக்கும். சூர்நிறைந்த பக்க மலைகளையுடைய சோலைகளும், மேகத்தால் நீர் நிறைந்து துளும்புவனவாகிய சுனைகளும், மலர்ந்த பூக்களின் செறிவால் அழகு ததும்புபவை காமவேளின் அம்பறாத் தூணியை ஓக்கும். கார்காலம் தோற்றுவிக்கும் காந்தட். குலைகள் போரில் தோற்றுக் கட்டுண்டார் கைகளை ஒப்பன. தும்பியால் கட். டவிழ்ப்பனவாகிய அழகிய காந்தள் முகைகள் கட்டுதலையுடைய யாழ் நரம்பினது முருக்கை நெகழ்ப்பார் கையை ஒத்தன. அழகிய மேகம் முன்பனிக் காலத்தின்கண் ஆரவாரித்து இந்திரனது வானவில்லை வளைத்தது. நினது மலைமேல் உள்ள மரங்கள் அவ்வில் சொரியும் கணைகளைப் போன்று மெல்லிய மலர்களைச் சொரிந்தன. நின் குன்றின்கண் கோட்டத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள இடத்திலும் மிகும் அரவம்போலத் இரளாகிய தாளம் ஒலிக்கும் ஒலியோடு சிறந்து வாத்தியங்கள் முழங்க மேகத் தொகுதியும் அவ்வாரவாரத்தே:டு ஒத்து நின்றன. மலைக்கண் சிகரங்கள் அருவி ஆரவாரித்துச் சொரிதலால் முத்துக்களை அணிந்தால் ஒத்தன. குருவிகள் ஆரவாரிக்குமாறு தினைக்ககிர்கள் விளைந்தன. கரையினின்றும் சாய்ந்தாலொத்த கொருக்கச்சியை முட் டுவனவாகிய பலநிற மலர்களால் வளையப்பட்_டு அழகு பொருந்திய சுனைகள் இந்திரவில் வளைந்துள்ள வானத்தை ஒப்பனவாகி வண்டுகள் முரலும் வனப்புடைய ஆயின. செருவில் வெல்லும் வேலைத் தாங்கிய சேனையையுடைய செல்வனே! நின் பூசைக்கண் விரிதலுள்ள யாழ் நரம்பினது ஒலியும் புலவர் பாடிய இயற்பாட்டுக்களும் பொருந்தி வேதவொலியும் அருச்க்கும் பூவும், தீபமும் கூடி எரியின்௧ண் உருகும் அகிலும், சந்தனமும் ஆகிய நறும்புகை கமழாநிற்கும் நின் திருவடியின்கண் தங்குதலை எமக்கு உரித்தாக யாம் உறையும் எம்பதியைச் சேர்ந்தாற்போல எம் சுற்றத்தோடும் கூடி யாம் பிரியாதிருப்பேமாக அருள் செய்த என வாழ்த்தி முடிப்பதாக வமைந்தது குன்றம் பூதனார் பாடிய இப்பரிபாடலாகும். இப்பாடல் திருப்பரங்குன்றத்தின் மலைவளத்தையும், இசை முதலிய கலைவளக்கையும், அம்மலைக்கண் முருகனுக்கு நிகழும் வழிபாட்டுச் சிறப்பினையும், அவ்வழிபாட்டில் சுற்றத்தாருடன் பிரியாது கலந்து கொண்டு முருகனது திருவடிக் &ழ் உறைதலே மக்கள் அடைதற்குரிய நிலைத்த பேரின்பமாம் என்பதனையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளமை மனங்கொளற் பாலதாகும்.

நப்பண்ணனார் பாடிய 19ஆம் பரிபாடல் செவ்வேளைப் பரவிப் போற்றிய கடவுள் வாழ்த்தாக வமைந்துள்ளது. . இன்பமேநுகரும் வானுலகின்்௧ண்
உரைதற்கேதுவாகிய விருப்பத்தை மண்ணுலக எல்லையிலும் கொண்டு தந்து உயிர்களின் அறிவெல்லையால் அறியப் படாத புகழுக்குரிய கடம்பமரத்தினைப் பொருந்தியிருந்து பெறுதற்கரிய இறைமைத் தன்மையால் அமர்ந்த பெரியோர்கள் நுகரும் வீடு பேற்றின்பத்தனை மண்ணுலகில் வாழும் மக்களும் எய்துக என மன்னுயிர்கட்_கு எளிவந்தருள் புரியும் அருள் நோக்குடன் முருகப் பெருமான் திருப்பரங் குன்றத்தில் எழுந்தருளிய அருமையில் எளிய அழகின் திறத்தினை முன்னிலைப்படுத்துப் போற்றும் முறையில் அமைந்தது,
“நிலவரையழுவத்தான் வானுறை புகல்தந்து
புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்து
அடுமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன்
இருநிலந்தோரும் இயைகென, ஈத்தநின்
தண்பரங்குன்றத்தியலணி” (பரி. 19 : 1-5)
எனவரும் பரிபாடற் பகுதியாகும். தேவரும் அறியா முழுமுதற் பொருளாகிய முருகப் பெருமான் இருநிலத்தோர் யாவரும் தன்னை அன்பினால் வணங்கிப் பேரின்பம் நுகர்தற்பொருட்டு மண்ணுலகத்தில் திருப்பரங்குன்றம் முதலிய பதிகளிற் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ளான் என்னும் இவ்வுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது,
“புவனியிற் போய்ப் பிறவாமையின் நாள்நாம்
போக்கு கின்றோம் அவமே யிந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்

அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்
படவுநின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ளவல்லாய்
ஆரமுதே பள்ளியெழுந்தருளாயே'””
எவரும் திருவாதவூரடிகள் வாப்மொழியாகும்.

இருப்பரங்குன்றத்தில் எழுந்தருளிய முருகப் அபருமானைகிய நீ மானிட மகளாகிய அழகிய வள்ளி நாச்சியாரைத் இருமணம் புரிந்த குறம் நின்னருகேயுள்ள வானுலக மடந்தையாகிய தெய்வயானையது திருமணத் துடன் மாறு கொள்வதுபோற் காணப்படினும் யாவரும் பெறவுறும் ஈசனாகிய நினது திருவருளின் நீர்மைக்குச் சிறிதும் மாறுபட்_டதன்று என்டார்,
“தண்பரங்குன்றத் தியலணி நின் மருங்கு
சாறுகொள் தறக்கத் தவனளொடு
மாறுகொள்வது போலும் மயிற்கொடிவதுவை”
என மூருகப் பெருமானை முன்னிலைப்படுத்துப் போற்றினார் நப்பண்ணனார். நின் மருங்கு சாறுகொள் துறக்கத் தவளொடு மயிற்கொடி வதுவை மாறுகொள்வது போலும் என இயையும். சாறு - விழா, திருமணம். துறக்கத்தவள்- வானோர்தலைவன் இந்திரன் மகளாகிய தெய்வயானை யம்மையார். மயிற்கொடி - மயில்போலும் சாயலையும் கொடிபோல் நுடங்கும் இடையிளனையும் உடையாளாகிய
வள்ளி நாச்சியார். சங்ககாலத்தில் வள்ளி நாச்சியார் தெய்வயானைை யம்மையார் என்னும் தேவியர் இருவர்க்கும் நாயகனாக வைத்து முருகப் ெபருமான் வழிபடப்பெற்றமை குன்றம் பூதனார் பாடிய ஒன்பதாம் பரிபாடலாலும் நப்பண்ணனார் பாடிய இப்பத்தொன்பதாம் பரிபாடலாலும் நன்கு விளங்கும்.




__________________


Guru

Status: Offline
Posts: 7468
Date:
Permalink  
 

அறிவினாலும் வீரத்தினாலும் பிறரைப் போர் வெல்லும் கூடல் நகரத்தின் கண்ணே மகளிரும் மைந்தரும் புணர்ச்சியொடு வந்த இரவுப் பொழுது நீங்கிய வைகறைப் பொழுதிலே இவ்வுலகத்து அறத்தை நிறையச் செய்து அதன்பயனை நுகர்தல் வேண்டி வானுலகத்துக்குச் செல்வாரைப் போலத் தமக்கேற்ற மாண்பமைந்த அணிகலன்களையும் நல்ல துகில்களையும் அணிந்துகொண்டு விரும்பிய குதிரையின்௧ண் அமர்ந்தும் நன்கு ஓடுதலமைந்த தேரின்மீது அமர்ந்தும் ஒளி விளக்கம் தெருவின்கண் இருளை நீக்கப் போந்து. நினக்குரிய இிருப்பரங்குன்றத்திற்கும் கூடல் நகரத்திற்கும் இடையேயுள்ள வழியெல்லாம் நெருங்கி நின்திரூவிழாக் காண யாத்திரை செல்கின்ற குளிர்ந்த மணலார்ந்த பெருவழி, அங்ஙனம் செல்வோருடைய மாலை யணிந்த தலைகள் இடை வெளியின்றி நிறைந்து காணப் படுதலால், ஒத்த பூக்களை நிறையவைத்துக் கட்டிப் பெரிய நிலவுலகிற்கு அணிந்த மாலையினைப் போன்று அமைந்துளது என்பதனை இப்பாடலில் எட்டு முதல் 18 முடியவுள்ள அடிகள் புலப்படுத்துகின்றன. அறிவினால் மாட்சிமையுடைய பாண்டியன் இளைய மயில்போலும் சாயலையுடைய மகளிரோடும் அரசியற் கடமையினை நன்குணர்ந்த தன் கண்ணெனத்தகும் அமைச்சர்களோடும் கூடி நாட்டு மக்களும், கூடல்நகர மாந்தரும் பழைய வரிசையாற் கூடித் தோட் புறத்தேயசையும் பரிவட்டத் துடனும், முருகன் புகழ் பாடிய நாவுடனும், பரந்த உவகையோடும் தன்னைச் சூழவந்து திருப்பரங்குன்றத்தின் மேலேறி முருகப் பெருமான் எழுந்தருளிய திருக்கோயிலைப் - பெருமையுண்டாக வலம் வந்து போற்றும் பண்பினாற் சூழ்ந்து வருதலை உவமை கூறுங்கால் நிறைமதியுடனே ஒளியுடைய விண்மீன்கள் மேருமலையின் பக்கத்த சூழ்வருதலையொத்துத் தோன்றும்.

மத நீரில் மொய்த்தற்கென வண்டுகள் தொடரும் கன்னத்தையுடைய யானைகளை வழியினின்றும் வாங்கிக் காலிற் சங்கிலியாற் பிணித்து மரங்களிற் கட்டுவோரும் அவற்றிற்கு முறித்த கரும்புத் துண்டங்களை உணவாகக் கொடுப்போரும் குதிரைகளை வழியினின்றும் வாங்கி ஓரத்தில் நிறுத்துவோரும் தேர்களை வழியினின்றும் ஒதுக்கி நிறுத்துவோரும் ஆக யானை குதிரை தேர்கள் பரவியுள்ள திருப்பரங்குன்றத்தின் &முள்ள இடைநிலம் பாண்டியனது பாசறையின் தன்மையினையுடையதாகும். 

பாண்டியனுடன் பரங்குன்றத்தை வலம் வரும் மக்கள் அம்மலையிலுள்ள குரங்குகள் உணணக்கூடிய பண்டங்களை அவற்றிற்குக் கொடுப்போரும் கரும்பினை முசுத்திரளுக்குக் கொடுப்போரும். தெய்வத் தன்மையினை யுடைய பிரம வீணையை வா௫சிப்போரும் கைவிரல்களை வேய்ங்குழலின் துளைகளின் வைத்து ஊதி இசையை அளப்போரும் யாழின்கண் இளி முதலிய சுரக்கோவை யையும் குரல் முதலிய சுரக் கோவையையும் வலியவும் மெலியவுமாகத் தாக்காது சமனாக வா௫த்து அதன்கண் இசையின் இன்பத்தை நுகர்வோரும் அங்கு முருகப் பெருமானுக்கு நிகழும் பூசையின் அழகியல்பினைக் கூறி.மகிழ்வோரும் யாழ் நரம்பின் குரல் கொம்மென ஒலித்த அள்விலே அதன் தாளத்திற்குப் பொருந்த முரசின் ஒலியை எழுப்புவோரும் ஆக மகிழ்ந்துறைவர் ஞாயிறு முதலாகவரும் கோட்களின் நிலைமையை அக் கோயிலில் வரையப் பட்_டுள்ள சுடர்ச்சக்கரத்தால் :ஆய்ந்தறிவோரும், தம்மைப் பிரியாமைக் குறிப்பினராகிய மகளிர் அங்கு எழுதப்பட்டுள்ள ஓவியத்தைக் கண்டு இவர் யார் என வினவ, அவள்தம் கணவர் “இவள் இரதி, இவன் காமவேள்” எனக் கூறுவோரும் _ “இங்குள்ள பூனை இந்திரன்; அவ்விடத்திலுள்ளவன் இரவில் வெளியே சென்ற கெளதமன், இவனது வெகுளியால் அகலிகையாகிய இவள் கல்லாகிய வரலாறு இது' என்று கணவன்பால தவறு செய்த மகளிரடைந்த தண்டனையைக் கூறுவோரும் இவ்வாறு சென்றவர் கையாற் சுட்டிக் கேட்கவும் உடன் வந்தவர் அவற்றை அறிவிக்கவும் இத்தன்மையவாய பல ஓவியங்கள் நிலைபெற்ற மண்டபங்களைச் செவ்விய மூங்கில்களையும் விரிந்த பாறைகளையுமுடைய அகன்ற இடத்திற் கொண்டிருத்த லால் திருமால் மருகனாகிய செவ்வேள் எழுந்தருளிய திருக்கோயிலின் பக்கம் படிமுறையான் அமைந்த பல நிலைகளையுடையது.

பேதைப் பருவப் பெண்ணொருத்தி மலைவளம் காணும் விருப்பினால் உடன் "வந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து அம்மலையில் வெளிப்பட்டு விளங்கும் கற்பாறைகளின் இடையிடையே புகுந்து செல்பவள் தன் சுற்றத்தாரைக் காணாது “சிறந்தவரே' எனவும் “சிறந்தவரோ் .எனவும் கூக்குரலிட்டு அவர்களை அழைத்தாளாக அவ்வழைப் பொலியினையேற்று அங்குள்ள குகைகள் அவ்வொலி யினையே எதிரொலிக்க அது கேட்டுச் சுற்றத்தார் தன்னை யழைப்பதாகக் கருஇ அங்குச் செல்பவர் தன் சுற்றத்தாரைக் காணாது மீளுமிடத்தும் மீண்டும் மீண்டும் கூவுதலை யுடையளாய் நின்றாள். இவ்வாறு அன்பரது வாழ்த்தினை உவந்து ஏற்றுக்கொள்ளும் முருகப் பெருமானது திருப்பரங்குன்றின் இடவேறுபடு இளஞ் சிறார்க்கு அறியாமை காரணமாக மயக்கஞ் செய்தலை யுடையதாகும்.

மிக விரும்பப்படும் சாய்ந்த நுனியினையுடைய இளையினைப் போழ்ந்து புறப்பட்ட இளந்தளிர்களை விளையாட்டு விருப்பால் மகளிர் கொய்து இனிய சுனைக் கண்ணே உிர்த்தனர். அத்தளிர்களுள் உதிர்க்கப்பட்ட சுனைமின்கண்ணே தூக்கிய தலையினையுடையனவாய் அலரையும் அரும்பினையும் பொருந்திக் இடந்ததனை இஃது ஒந்தலையையுடைய பாம்பென்றும், அதனருகே முகர்ந்த முகையைப் பொருந்திக் கிடந்ததனை அப்பாம்பின் மூத்தமைந்தனென்றும், இளமுகை யைப் பொருந்திக் இடந்ததனை அப்பாம்பின் இளம்பார்ப் பென்றும் பிறழ வுணர்ந்து இளமகளிர் மருண்டு நின்றனர். அதனருகே பச்ரிலையது இளங்கொழுந்து பிணியவிழ்ந்த வாயையுடைய அல்லி, கைபோற் பூத்த காந்தட்பூக்குலை கொறுக்கச்சியின் நறுந்தோட்டினையுடைய பூ, சுடர்போலும் துணர்களை யுடைய வேங்கைப்பூ, நிறம் மிகுந்த தோன்றி (செங்காந்தட்) பூ, முதிரிந்த கொத்துக்களையுடைய நறவும்பூ, காலங் குறியாது பூக்கும் கோங்கு அக்கோங்கரும்போடூ நிறத்தால் மாறுபட்ட மலரையுடைய இலவம் ஆடிய இம்மலர்க ளெல்லாம் பின்னிக் கட்டிய மாலைகள் போல மலர் நிறைந்தும் கோத்த மாலைகள் போல நிறம் வேறுபட்டூம் தொடுத்த மாலைகள் போல இடையிட்டூம் தூக்கிக் கட்டின மாலைகள்போல நெருங்டுயும் பூத்தலால் மலையெங்கும் கலந்து தோன்றுவன விடியற் காலத்துப் பலநிறத்து மேகம் சிதைந்த வானம் போலப் பொலிந்து தோன்றும்.

என இவ்வாறு இருப்பரங்குன்றத்தினை வழிபடவரும் பாண்டியனது தானைச் சிறப்பினையும் அவனுடன் வரும். அமைச்சர் முதலியோர் மன்னனாற் சிறப்புப் பெற்ற நாட்டவர் நகரத்தார் ஆகியோர் காணப் பரங்குன்றத்தில் முருகனுக்கு நிகழ்த்தப் பெறும் திருவிழாச்சிறப்பினையும் பூசை முறையினையும் அவற்றிற்கலந்துகொள்ளும் மக்கட் கூட்டத்தாரின் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் குன்றத்தின் இயற்கை எழில் நலங்களையும் மால்மருகன் கோயிலின் செயற்கை அணிநலங்களையும் விரித்துக் ' கூறிய நப்பண்ணனார், பரங்குன்றத்தில் முருகப் பெருமானுக்கு நிகழும் திருவிழாவிற் கலந்துகொள்ளுதலால் இளமகளிர் பெறுதற்குரிய மனைவாழ்க்கையின் சிறப்பினை வகுத்துரைப்பதாக அமைந்தது.

“நினயானைச் சென்னி நிறங்குங்குமத்தாற்
புனையாப் பூநீருட்டிப் புனைகவரி சார்த்தாப்
பொற்பவளப் பூங்காம்பிற் பொற்குடையேற்றி
மலிவுடை யுள்ளத்தான் வந்து செய் வேள்வியுட்
பன்மணமன்று பின்னிருங் கூந்தலர்
கன்னிமை கனிந்த காலத்தார் நின்
கொடியேற்ற வாரணங் கொள் கவழமிச்சில்
மறுவற்ற மைந்தர் தோளெய்தார் மணந்தார்
முறுவற் றலையளி யெய்தார் நின்குன்றங்
குறுகிச் சிறப்புணாக்கால்” (பரி. 19. 85-94) எனவரும் பரிபாடற் பகுதியாகும்.

“நெடுவேளாகிய இறைவனே, நீ கோயில் கொண்டெழுந்தருளிய தஇருப்பரங்குன்றினையடைந்து நினது கொடியை யேற்றப்படும் நின் யானையின் மத்தகத்தைக் குங்குமத்தால் அலங்கரித்துப் பூவோடு கூடிய நீரால் அதனை வழிபட்டு அதற்கு உணவினை இனிதாக ஊட்டி அதன் செவியின்கண் வெண்சாமரை சார்த்திப் பொலிவுடைய பவளத்தாற் செய்த நல்லகாம்பினையுடைய பொற்குடையை மேலெடுத்து உள்ளத்துவகையுடன் செய்யப்படும் பூசையின்கண்ணே அவ்யானை கவளங்கொண்டு உண்டு எஞ்சிய மிச்சிலைக் கொண்டு நறுமணங்கமழும் கூந்தலை யுடைய இளமகளிர் திருவருட். சிறப்புடைய உணவாகக் கொண்டு உண்ணா தொழியின் தம் காதலர் முறுவலோடு கூடிய தலையளியை எய்தமாட்_டார்கள்; கன்னிமை கனிந்த பருவ மகளிர் கல்விதறுகண் புகழ்கொடை என்னும் பெருமிதப் பண்புகளிற் குறைவற்ற மைந்தரைக் கணவராகப் பெற்று அவர்தம் தோளினைக் கூடப் பெறுவாரல்லர்” என்பது . இத்தொடரின் பெருகும். ஆகவே பரங்குன்றத்து நிகழும் முருகப் 2. “னது கொடியேற்று விழாவில் அக்கொடியினைத் தாங்குட் ... ' னையை வழிபட்டு அவ்வியாளையுண்டு எஞ்சிய கவளமாகிய உணவினை முருகவது இருவருட் படைப்பாக ஏற்று உட்கொண்ட. மகளிருள் மணமுடித்த மகளிர் தம் காதலரது மூ றுவலுடன் கூடிய தலையளியைப் பெற்று இன்புறுவர் என்பதும் கன்னிமைப் பருவத்தார் பெருமிதப் பண்புகளாற் குறைவற்ற மைந்தரைத் தம் கணவராகப் பெற்று மகிழ்வர் என்பதும். மேற்காட்டிய தொடராற் புலனாகும். இங்ஙனம் காதலனை மணந்து மனையறம் நிகழ்த்தும் மகளிரும் கன்னிமைப் பருவத்தினராய் நல்ல கணவரையடைய விரும்பும் இளமகளிரும் பரங்குன்றில் நிகழும் முருகப் பெருமானது வழிபாட்டிற் கலந்து கொண்டு இம்மைப் பயன்பெற் மு இன்புறும் நிலையில் பரங்குன்றில் முருகவேள் வழிபாடு சிறப்புற நிகழ்ந்த செய்தியினை உள்ளவயறு விளக்கிய நப்பண்ணனார் முருகப் பெருமானை எதிர்முகமாக்கி வாழ்த்திப் போற்றுவதாக அமைந்தது,

“குறப்பிணாக கொடியைக் கூடியோய் வாழ்த்துச்
சிறப்புணாக் கேட்டி செவி.
உடையும் ஒலியலும் செய்யை மற்றாங்கே
படையும் பவழக்கொடி நிறங்கொள்ளும்
உருவும் உருவத்தீயொத்தி முகனும்
விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி
எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து
தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேலழுத்தி
அவ்வரை யுடைத்தோய் நீ, இவ்வரை மருங்கிற்
'கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம்
உடங்கமர் ஆயமோ டேத்தினம் தொழுதே” க (பரி. 19 : 95-105)
எனவரும் இப்பரிபாடலின் நிறைவுரையாகும்.

“அன்புடைமையாற் குறக்குடியிற்

பெண்ணாகிய வள்ளியை
மணந்தோய்! அருளுடைமையால் எம்முடைய வாழ்த்தினையும் நின் செவிக்குச் சிறப்புடைய உணவாகக்
கேட்டல் வேண்டும். நின் உடையும் மாலையும் செம்மை நிறமூடையவாகப் பெற்றன. அவ்வாறே நினது வேற்படையும் (பகைவர் மார்பினைப் பிளத்தலால்) பவழக் கொடியின் நிறமாகிய செந்நிறத்தைக் கொள்வதாயிற்று. இருமேனி நிறத்தாலும் சுடர் விட்டெரிகின்ற ஒயினை ஒப்பாய் நின்முகமும் விரிகதிர் வெப்பமடையாத இள ஞாயிற்றை ஒத்துள்ளாய். உலகிற்குத் துன்பஞ் செய்தலால் நீதியில் தவறிய சூரனாகிய மாலின் முதலைத் தடிந்து பகைகமை பொருந்திய குருகு பெயர்க்குன்றத்துத் இருந்திய வேற்படையை யழுத்தி அம்மலையினைப் பிளந்தவனே! தஇருப்பரங் குன்றமென்னும் இம்மலையினிடத்தே கடம்ப மரத்தின் . நிழலிலே அமர்ந்தருளிய நினது நல்ல அருள் நிலையினை எம்முடன் பொருந்திய சுற்றத்தோடுங் கூடித் தொழுது வாழ்த்தினேம், எம்முடைய வாழ்த்து இது” என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.

திருப்பரங்குன்றத்தில் வீற்றிருந்தருளும் செவ்வேளைப் போற்றிப் பரவும் கடவுள் வாழ்த்தாக நல்லச்சுதனார் என்னும் புலவராற் பாடப்பெற்றது இருபத்தொன்றாம் பரிபாடலாகும். வென்றிக் கொடியினை யுடைய செல்வனே! நின்னால் ஊரப்பட்_ட ஊர்இ சுடரினை யொத்தொளிரும் முகபடாம் அணிந்த சென்னியையுடைய பிணிமுகம் என்னும் யானையாகும். நின் இருவடியில் தொட்டது செந்தாமரையடிக்கு இயைந்த பீலிப் போழாற் புனைந்த அடையற் செருப்பாகும். நின் .கையின் கண்ணது நின்னை மதியாத அவுணர் தமக்குத் துணையாக மதித்த சூரனாகிய மாமரத்தினைத் தடிந்து குருகுபெயர்க்
சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும் . . . 2223

குன்றத்தினைப் பிளந்த வேற்படையாகும். நின்னாற் பூணப்பட்_டது, சுருளுதலையுடைய வள்ளிப் பூவினை இடையிட்டுத் தொடுத்த கடப்பம் பூவினையடைய தாய் ஒன்றுபட்டு மலர்ந்த மாலை. நீ அமர்ந்தருளியது, உயர்ந்தோர் நாவினாற் புகழப்பெறும் நலத்தால் நிறைந்து ஏழு நிரையாக அடுக்கிய ஏழிலைப்பாலை மரத்தினை யுடையதாய்ப் பக்க மலையாகிய இலகடத்தினையும் அருவியாகிய முகபடாத்தினையும் உடையதாய்த் தரையின் கணின்று விசும்பளவும் ஓங்கிய பரங்குன்றமாகும். இத்தகைய குன்றத்து அடியின்கண் உறைதலாகிய பேறு மறுபிறப்பினும் எமக்கு இயைவதாகுக என வேண்டி நின்னைத் தொழு தன்றோம் என முருகவேளைப் போற்றித் தொடங்கிய இப்பாடல் காதல் மகளிரும் மைந்தரும் மகிழ்ந்து விளையாடும் பரங்குன்றின் சிறப்பினை விரித்துரைத்து மாற்றாரை அமரின்கண் கொன்ற வேற்படை முதலிய படைக்கலங்களை யேந்திய பன்னிருகைகளையும் ஆறு இருமுகங்களையும் உடைய செல்வனே! அறத்தையே விரும்பிய சுற்றத்தோடு கூடிநின் அடிக்கண் உறைதல் இன்றுபோல் என்றும் எமக்கு இயைக என்று பரவுகின்றோம்” என முருகனை முன்னிலைப் படுத்தி வேண்டும் முறையில் நிறைவுபெறுகின்றது. இயலிசைப்பனுவலாகிய பரிபாடலால் திருமாலும் செவ்வேளும் ஆகிய தெய்வத்தைப் பரவிப் போற்றும் புலவர் பெருமக்கள் அனைவரும் தாம் தாம் வாழ வேண்டும்
என்னும் தனி முறையிற் கடவுளை வாழ்த்தித் தத்தமக்குரிய வற்றை வேண்டிப் பெறும் தன்னலவுணர்வின்றி அன்புடைய சுற்றத்தார் அனைவரொடும் கூடி நின்று உலகம் வாழ இறைவனை இன்னிசையாற் போற்றிப் பரவும் உயர்ந்த குறிக்கோளுடையராய்த் இகழ்கின்றனர். கடைச் சங்க காலத்தில் கடவுள் வழிபாட்டிற் பாடப்பெற்ற பண் சுமந்த பாடல்களாகிய இப் பரிபாடல்களின் பொருளமைப்பினைக் கூர்ந்து நோக்குங்கால், இயற்கை வனப்பும் தெய்வ வனப்பு மாகிய இருவகை வனப்புக்களே இசைப் பாடற்குரிய பொருளாம் என்பதும் கடைச் சங்ககாலத்து மலையும் காடும் காவும் ஆற்றிடைக் குறையும் ஊர் மன்றங்களும் ஆகிய பல்வேறிடங்களிலும் வேறுவேறு பெயருடன் வேறு வேறு உருவங்களில் வைத்து வழிபடப்பெறும் எல்லாத் தெய்வங்களும் முழுமுதற் கடவுளாகிய ஒரு பொருளின் பல்வேறு கோலங்களே யென்பதும் இவ்விடங்களில் நிகழ்த்தப்பெறும் பூசையும் இருவிழாக்களும் ஆகிய நிகழ்ச்சிகள் யாவும் உலகமக்கள் எல்லோருடைய நலங்களையும் உளத்துட். கொண்டு நிகழ்த்தப்பெறும் பொ துநலச் செயல்களே என்பதும் நன்கு புலனாதல் காணலாம்.

சங்கவிலக்கியத்திற சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ வுண்மைகளும சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடுகளில் எல்லாத் தெய்வ வழிபாடுகட் கும் தலைமை யானதாகவும் குறிஞ்சி முல்லை முதலிய நில எல்லையைக் கடந்த விரிவுடையதாகவும் விளங்கும் சிறப்புடையது சிவவழிபாடு ஒன்றேயாகும். பண்டை நாளிற் போர் மறவர்களால் வழிபடப் பெற்ற கொற்றவையாகிய வனதுர்க்கையும், தயோரைச் சினந்தழிக்கும் காடுகிழாளாகிய காளியும், ஆருயிர்கட்.கெல்லாம் அப்பனாகிய இறைவனொடு பிரிவின்றி அவனது ஒரு கூறாகியமர்ந்து அருள்சுரக்கும் அம்மையாகிய மலைமகளும் என உலகமக்களால் வழிபடப் பெறும் மூவகைத் திருமேனியும் நுதல்விழிநாட்....த் திறைவனாகிய சிவபெருமானுடன் பிரிவின்றியுள் வ சவசத்தியே என்பது பண்டைத் தமிழர் துணிபாகும். இவ்வுண்மை,
“வெள்ளேறு
வலவயின் உரிய பலர்புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்” (திருமுருகு. 151-154)
எனத் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை உமையொரு பாகனாகவும்,
“நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்கணன
ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகல் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி” (திருமூருகு. 253-259)
என முருகப்பெருமானை ஆலமர் செல்வனாகிய சிவபெருமானுக்கும் அம்முதல்வனுடைய சத்திகளாகிய உமாதேவி கொற்றவை - காடுகிழாள் (காளி) என்போர்க்கும் மகனாகவும் நக்கீரனார் பரவிப் போற்றியுள்ளமையால் நன்கு புலனாகும். ஆகவே பண்டைநாளில் தனித்தனியே வேறுவேறு திருவுருவமைத்து வழிபாடு செய்யப்பெற்ற சிவசத்திகளும் சத்தியின் மைந்தனாகவும் குறிஞ்சி நிலத்தெய்வமாகவும் வழிபடப் பெற்ற முருகவேளும் செம்பொருளாகிய இவத்துடன் நெருங்கிய தொடர்புடைய தெய்வங்களாக மக்கள் மேற்கொண்ட தெய்வ வழிபாடுகளில் இணைக்கப்பட்டுச் சவபரம்பொருளே முழுமுதற்கடவுள் எனக் கருகஇப்போற்றும் ஒரு தெய்வ வழிபாட்டுமுறை தமிழகத்கிற் சங்கககாலத்கிற்குப் பன்னூ றாண்டுகட்_கு முன்னரே உருவாகி நிலைபெற்று விட்டதென்பது மேற்குறித்த திருமுருகாற்றுப்படைத் தொடர்களாலும் ஏனைய சங்கச் செய்யுட்.களிற் சத்தியைப் பற்றியும் முருகப் பெருமானைப் பற்றியும் ஆங்காங்கே காணப்படும் பல்வேறு குறிப்புக்களாலும் நன்கு விளங்கும்.

மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நிலத் தெய்வங்கட் கும், முல்லை. நிலத் தெய்வமாகிய மாயோனது அருட்பிறப்பாகிய கண்ணன், பலதேவன் ஆகிய தெய்வங்கட் கும் மாயோனுடன் தொடர்புடைய திருமகள், . நான்முகன், காமன் முதலிய தெய்வங்கட்கும், ஆகித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர் என்னும் நால்வகைப் பிரிவினராகிய முப்பத்து முக்கோடி தேவர்கட்_கும் பபனெண்கணங்கட்கும் தலைமையுடைய முழுமுதற் கடவுளாகச் சிவபெருமான் சங்கச்செய்யுட்_களிற் குறிக்கப்பெற்றுள்ளார், பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் என்னும் புலவர் பெருமான்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard